Physics Chamber @physics_chamber Channel on Telegram

Physics Chamber

@physics_chamber


Eng. KM Mirzaan @Mirzaan_P6

Physics Chamber (English)

Welcome to the Physics Chamber, a Telegram channel curated by Eng. KM Mirzaan. As the name suggests, this channel is dedicated to the fascinating world of physics. Whether you are a student, a teacher, or simply someone with a curious mind, Physics Chamber is the perfect place for you to explore and deepen your understanding of the laws that govern our universe. Eng. KM Mirzaan, also known as @Mirzaan_P6, is a passionate physicist who is eager to share his knowledge and insights with the community. With regular updates, thought-provoking discussions, and interesting facts, this channel is sure to keep you engaged and informed about the latest developments in the world of physics. Join us in the Physics Chamber and embark on a journey of discovery and learning like never before!

Physics Chamber

19 Feb, 06:57


இலக்கை அடைய முறையான விடாத பயிற்சி மிக அவசியம்.

Physics Chamber

17 Feb, 15:07


https://t.me/Chemistry_with_Himas

Physics Chamber

02 Feb, 19:47


Don’t worry about your past

Trust, you have a best future ❤️

Physics Chamber

01 Feb, 16:41


Bio மாணவர்களுக்கு physics ஓடாது என்பதே இங்கு முதலாவதாக விதைக்கப்படும் மூடநம்பிக்கை.

வரும் வினா பாடப்பரப்பில் உள்ளடக்கப்பட்டது தான்.
இலகுவாக விடை பெறும் முறையை கற்றுக்கொள்ளவே கடந்த கால வினாக்கள்.

பெளதிகவியலில் இருக்கும் சில பகுதிகள் பிரயோக கணிதத்தில் ஆழமாக உண்டு.
அவற்றை கற்பவர்கள் இருபடிச்சமன்பாடு அமைத்தல், விரைவாக சுருக்குதல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற வல்லவர்களாக இருப்பார்கள்.

இவர்களும் உயிரியல் பிரிவு மாணவர்களும் ஒன்றாக ஒரே வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமெனில் இதற்கு வினாவை தயாரிக்கும் பேராசிரியர், எல்லாரும் விரைவாக செய்யக்கூடிய ஒரு முறையை மறைத்து வைக்காமல் இருப்பதில்லை.

கணித மாணவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நீண்ட சுருக்கல் செய்தாவது விடையை பெற்று விடுவிடுவார்கள்.

ஆனால் அது பெளதிகவியலில் எதிர்பார்கப்படுவதில்லை.

அடிப்படை தத்துவங்களை விளங்கிப் படிப்பவர் மிக விரைவாக சரியான விடையை பெறும் முறையை அறிந்திருப்பர்.

பலர் பெளதிகவியல் MCQ மற்றும் பிரயோக கணிதத்திற்கும் ஒரே முறையை பய்படுத்துவர்.

படிக்கும் காலத்தில் பெளதிகவியல் MCQ இற்கு வகையிட்டு விடை பெற்ற சந்தர்பங்களும் உண்டு.

இதன் விளைவு "கேள்வி செய்ய தெரியும், தந்த நேரம் போதாது" எனும் நிலையை இறுதி பரீட்சை உணர்த்திவிடும்.

உயர்தர கணித்தை பயன்படுத்தி அல்லது நீண்ட முறையில் நீங்கள் விடைபெறுகிறீர்கள் என்றால் அங்கே எதிர்பார்ககப்பட்ட பெளதீகவியல் முறையை நீங்கள் அறியவுமில்லை பயிற்சி பெறவுமில்லை என்பதே பொருள்.

மாணவர்களே பெளதிகவியலில் வினாக்களை அதற்குரிய முறையில் அணுக பயிற்சி எடுப்பது மிக அவசியம்.

உங்களின் நிலையறிந்து தொடர்ந்தும் முயற்சியுங்கள்.

உனக்காக உன் மேல் நீ மட்டுமே கவனமெடுக்க முடியும்

Physics Chamber

01 Feb, 08:45


MCQ செய்வதற்கான இலகு முறை என்பது மிக அவசியாமானது.
எமது எல்லா video களிலும் இதையே மையப்படுத்தி பயிற்றுவிக்கின்றோம்.
அதிகமான மாணவர்கள் essay method ஐயே MCQ இற்கும் பயன்படுத்தி வினாத்தாளுக்கு நேரம் போதாது என்று குறை கூறுவார்கள்.

எம்மிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் இலகு முறைகளில் தேர்ச்சி பெற்றிருப்பது மிக அவசியம். அவ்வாறெனில் மட்டுமே போட்டிப்பரீட்சையில் வெற்றி பெற இயலும்.

கீழுள்ள வினாவை வாசித்து 3 வது செக்கனில் சரியான விடையை பெற இயலும் என்பதை எம்மிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் நன்கறிவார்கள்.

முயற்சியுங்கள்.

ஒரு தொழிற்சாலையில் 3000 பொறிகள் வேலைசெய்யும் போது கேட்கும் ஒலிச்செறிவு மட்டம் 80dB. இதை 20 dB ஆல் குறைக்க நிறுத்த வேண்டிய பொறிகளின் எண்ணிக்கை யாது?

Physics Chamber

01 Feb, 04:38


சகல மாணவர்களுக்குமானது
📌

Physics Chamber

01 Feb, 04:36


மாணவர்களே மிகப்பெறுமதியான வளம் இலவசமாகவும் இலகுவாகவும் பயன்படுத்தும் வகையிலும் தரப்பட்டால் அதை பயன்படுத்தும் விதம் உங்கள் அறிவு சம்பந்தப்பட்டது.

1 தொடக்கம் 9 வரையான அலகுகளில்
440 MCQ
31 structure
57 Essay வினாக்களுக்கு விளக்கமான video களைக் கொண்ட Physics Manual வளத்தை முழுமையாக பாவியுங்கள்.

50,000/- இற்கும் அதிகமான கட்டணத்தை செலுத்தி நீங்கள் படக்க வேண்டியதை இலவசமாகவே வழங்கியிருக்கின்றோம்.

முழுமையாக பயனடையுங்கள்

Eng. KM Mirzaan
@Mirzaan_P6

Physics Chamber

01 Feb, 04:34


Physics manual ஐ இலவசமாக பயன்படுத்தும் முறை

https://youtu.be/mprO9SrX-So

Physics Chamber

24 Jan, 05:28


Alhamdulillah.
Thats all

Physics Chamber

22 Jan, 04:03


25 இல் பரீட்சை எழுத இருக்கும் சகல மாணவர்களுக்கும்

@Mirzaan_p6

Physics Chamber

20 Jan, 15:50


11 ம் திகதி ஆரம்பித்தோம். 10 நாட்களில் முழுமையான மீட்டல் செய்து 2000 தொடக்கம் 2023 வரையான்அலகு 1&2 இல் முழுமையான வினாக்களை time வைத்து செய்து புள்ளிகளை இட்டு முதலாவது மாணவர் நிறைவு செய்து விட்டார். (சில மாணவர்கள் 2024 வினாத்தாளை முழுமையாக செய்ய விரும்புவதால் இப்போது செய்யவில்லை)

இடையில் இரண்டு நாள் கடுமையான காய்ச்சல் என சொல்லியிருந்தார்.

அயராத முயற்சிக்கு என்றும் எனது பாராட்டுக்கள் 🫡🫡

இலக்கின் மேல் குறி வைத்தவன் இளைப்பாறுவதில்லை.

ஏனைய யாவரும் நொண்டிச்சாட்டில் தன்னை திருப்திப்படுத்தி ஏமாற்றிக்கொள்பவர்கள்.

Physics Chamber

20 Jan, 12:47


எமது Target 25 இல் பயிற்சி பெறும் மாணவர்கள் Unit 1&2 இற்கான மீட்டல் மற்றும் தொகுப்புகளை நிறைவு செய்து 2000 -2024 வரையான MCQ strctre essay களை நிறைவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ச்சியான பயிற்சி என்பது அத்தனை எளிதல்ல.

அல்ஹம்துலில்லாஹ் ❤️

Physics Chamber

12 Jan, 07:08


Target 25

Mechanics Theory

2025 batch ஒரு மாணவர் முடித்து கடந்தகால வினாக்களை ஆரம்பிக்க உள்ளார்.
உங்களுக்கு முன்னால் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கணிக்க முயலுங்கள்.
ஒவ்வொரு செக்கனும் பிரயோசனம் என்பதை உணருங்கள்.
வெற்றி என்பது உங்கள் தெரிவு. முறையான முயற்சியே அதற்கான பாதை

Mirzaan
@Mirzaan_p6

Physics Chamber

09 Jan, 13:13


வழிகாட்டல் இன் ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும்.

Admin உங்களுக்கு respond பண்ணும் வரை பொறுமையாக இருங்கள்.

Physics Chamber

09 Jan, 12:36


For both 25 batch and repeaters

Physics Chamber

09 Jan, 12:35


2025 இல் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்கள் கீழுள்ள தகவல்களை @Register_P6 அட்மினிடம் பதிவு செய்து Discussion குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

01. Full Name
02. School
03. Original Batch
04. Bio/Maths
05. Hometown
06. District

Physics Chamber

04 Jan, 16:39


Repeat, 25 & 26 Batch மாணவர்களுக்கானது.
கட்டாயம் கேளுங்கள்

@Mirzaan_P6

Physics Chamber

31 Dec, 17:55


Fresh ஆ படிக்க நினைக்கிற ஆக்களுக்கு

Physics Chamber

31 Dec, 17:54


காவிகள்
https://youtu.be/j0XkLgDyn18

காவிகள்
Worksheet
https://youtu.be/cp8ZwAEUxsk


பொறியியல்

Class 01
இடப்பெயர்ச்சியும் வேகமும்
https://youtu.be/ZwzLxLoB67c

Class 02
வளையிகள்
https://youtu.be/rNWLe46D7_k

Class 03 : Worksheet 01
https://youtu.be/9xUqGKKlDZs

Class 04:
புவியீர்பபின் கீழ் நிலைக்குது இயக்கமும் எறிபடைகளின் இயக்கமும்
https://youtu.be/0gv6papzst0

Class 05: Worksheet 02
https://youtu.be/YdO00BNLJ7I

Class 06:
சார்பு வேகம்.
https://youtu.be/_BYRDQHKVJk

Class 07 சார்பு வேகம்
Worksheet
https://youtu.be/dvgZmy4UUys

Class 08
விசைப்பிரிப்பு
விசை இணைகர விதி
விசைப்பல்கோணி
விசைத்திருப்பம்
விசையிணை
https://youtu.be/aEAO_i5uXS8

Class 09
திருப்பு திறன் தேற்றத்தின் விளைவுகள்
நிகர்த்த நிகரா விசைகளின் விளையுள்
https://youtu.be/lFiKl-pSCU4

Class 10
திணிவு மையம்
புவியீர்ப்பு மையம்
விசைச்சமனிலை
https://youtu.be/WMWEIqBrL98

Class 11
சடத்துவமும் விசையும் நியூட்டனின் 1, 2 ம் விதி
https://youtu.be/4fJpfLM_hwg

Class 12
நியூட்டனின் 3ம் விதியும் மொத்தல் கணத்தாக்கும்
https://youtu.be/qag3vXBbGUo

Class 13.
உராய்வு
https://youtu.be/YzFpIGOfLDY

Class 14.
வேலை வலு சக்தி
https://youtu.be/cHKYeG9S5lA

Class 15.
வட்ட இயக்கம்
https://youtu.be/sozVkrBWXbA

Class16.
சுழற்சி இயக்கம்
https://youtu.be/3suZMFSiqJE

Class17.
நீர் நிலையியல்
https://youtu.be/QrRdjAg6LII

Class 18.
பாயி இயக்கவியல்
https://youtu.be/WPOam3N7r4Q

Class 19.
ஆர்முடுகும் பாயி
https://youtu.be/dVI3ug0s2cg

Class 20.
பொறியியல் சகல பரிசோதனைகளும்
https://youtu.be/wEAn-mIkCyk

Class 21
2000 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/_d_iy2yGy2Y

Class 22
2001 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/hdKP0LOJVds

Class 23
2002 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/dzyBq0VD4zA

Class 24
2003 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/YORmYRUJN0A


Class 25
2004 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/9zFDf9a155M

Class 26
2005 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/m9TykwK__iQ

Class 27
2006 Mechanics
MCQ + ESSAY
https://youtu.be/tK_sNRrArS8

Class 28
2007 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/eyYxgOeB34U

Class 29
2008 Mechanics
MCQ + ESSAY
https://youtu.be/UoGJYuyXeBM

Class 30
2009 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/RmNMH-3tMqc


Class 31
2010 Mechanics
MCQ + STR + ESSAY
https://youtu.be/E4Z0zZbOsZ8

Class 32
2011 MCQ
https://youtu.be/ds_NlNwqjO0

Class 33
2011 STR and Essay
https://youtu.be/7bt2fWaUD2Q

Class 34
2012 MCQ
https://youtu.be/uod4VhP8oWI

Class 35
2012 STR and Essay
https://youtu.be/9E2fY_KgTbs

Class 36
2013 MCQ
https://youtu.be/NtpPFxze14U

Class 37
2013 STR and Essay
https://youtu.be/ZC2x3zCyPZI

Class 38
2014 MCQ
https://youtu.be/Nupi1Dsa5e4

Class 39
2014 Structure and Essay
https://youtu.be/PwtFsOkVqMw

Class 40
2015 MCQ
https://youtu.be/kFoxhtwnpMw

Class 41
2015 Essay
https://youtu.be/40lHldMYik0

Class 42
2016 Mechanics MCQ
https://youtu.be/wuk2Z68Ofmo

Class 43
2016 Mechanics STR & Essay
https://youtu.be/oVZ522y8HXA

Class 44
2017 Mechanics MCQ
https://youtu.be/9bo1q2KvJXk


Class 45
2017 Mechanics STR & Essay
https://youtu.be/WQYXNdCyB8Y

Class 46
2018 Mechanics MCQ
https://youtu.be/qbN6y132gdw

Class 47
2018 Mechanics STR & Essay
https://youtu.be/1XBQFgncAow

Class 48
2019 Mechanics MCQ
https://youtu.be/lhYH-_HmVzI

Class 49
2019 Mechanics Essay
https://youtu.be/HB1SIXx6xUY

Class 50
2020 Mechanics MCQ
https://youtu.be/2dJSxH011rY

Class 51
2020 Mechanics Essay
https://youtu.be/LAClrtg8QEk

ஏனைய அலகுகளுக்கான வீடியோக்களையும் எமது telegram மற்றும் youtube channel களில் இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

Telegram:
https://t.me/physics_chamber

Youtube:

https://youtube.com/@physicschamber3808

KM Mirzaan

Physics Chamber

31 Dec, 06:17


25 & 26 batch மாணவர்களே 2025 ஐ புதிய மனநிலையுடன் ஆரம்பியுங்கள். இது உங்களுக்கான வருடம் என நினையுங்கள்.

2024 Batch இல் மீண்டும் படிக்க இருப்பவர்கள் சற்று ஓய்வெடுத்து மனநிலையை சீராக்கி மீண்டும் படிக்க ஆரம்பியுங்கள்.

இங்கு இன்றியமையாதது முயற்சி ஒன்றே.

Physics Chamber

28 Dec, 17:53


My Last voice note to 2024 Batch
@Mirzaan_P6

Physics Chamber

27 Dec, 12:20


எந்நிலையில் நிற்கின்றோம் என்பதைக் கூட மதிப்பிட நேரம் இல்லாத நிலையில் 67% மாணவர்கள் 🤦🤦

Physics Chamber

27 Dec, 07:17


Part 2 இற்கு இனிதே தயாராகுங்கள்
😄😄

Physics Chamber

23 Dec, 08:01


25 Batch மாணவர்களே,

இந்த அட்டவணையை நிரப்பி உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

Physics Chamber

12 Dec, 16:09


Just for fun 😂

Physics Chamber

10 Dec, 11:00


25 batch ஆக்கள் இனி நீங்க தான் final year. தீயா வேல செய்ய பாருங்க

Physics Chamber

07 Dec, 16:43


13 வருட பயிற்றுவித்தல் காலத்தின் போது நான் கடந்த கால வினாத்தாளில் ஒன்றியது போல வேறு எதனோடும் ஒன்றியதும் கிடையாது. கடந்தகால வினாத்தாளை ஊக்குவித்தது போல வேறு எதையும் ஊக்கப்படுத்தியதும் கிடையாது.

அடிப்படை தத்துவங்களை விளங்கியவர்களால் ஒவ்வொரு வருட பரீட்சையின் போதும் வினாக்கள் எவ்வாறு கடந்தகால வினாக்களை தழுவி வந்துள்ளது என்பதை அறிய முடியும்.

எனக்கு கடந்தகால வினாக்களை மட்டும் தான் செய்யத் தெரியும்” என என்னை விமர்சித்து விட்டு ஆங்கிலப் புத்தகங்களையும் வேறுவேறு வினாத்தாளையும் வைத்து படம் காட்டி தொழில் செய்தவர்கள் இப்போது அவர்களே கடந்தகால வினாக்களை விளக்குவதை தொழிலாக்கியுள்ளார்கள்.

கடந்தகால கால வினாக்கள் பெறுமானத்தை மாற்றி மீண்டும் அதே வினாவாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

நான் கூறுவது idea மற்றும் pattern.

உடுப்பு கடைக்கு சென்று நீங்கள் என்ன கேட்பீர்கள்.

இதே color ல வேற design இருக்கா அல்லது இதே design ல வேற color இருக்கா என்று தானே 😂.

அதே போல இதே method ல வேற கேள்வி வரும்.

கடந்தகால வினாக்களின் தாற்பரியத்தை உணருங்கள்.

Paper எடுப்பது நம்முட sir மாரும் இல்ல நம்முட அப்பா மாரும் இல்ல.

Professor மார்.

Physics Chamber

01 Dec, 07:49


2025 batch மாணவர்களே

இன் ஷா அல்லாஹ் 24 batch இன் பரீட்சை நிறைவடைந்த பின்னர் 25 batch அடுத்து செய்ய வேண்டியது பற்றி வழிகாட்டல் வழங்கப்படும.
அது வரை முடிக்க வேண்டிய Theory மற்றும் கடந்தகால வினாக்களை தெளிவாக முடியுங்கள்.

Physics Chamber

28 Nov, 06:12


மீண்டும் சில தினங்கள் பிற்போடப்பட்டுள்ளது.

உங்கள் நிலைக்கு ஏற்றால்போல் உங்கள் பரீட்சையில் கண்ணாக இருங்கள்

Physics Chamber

26 Nov, 12:36


Good decision

Physics Chamber

26 Nov, 11:32


என் மாணவர்களே

எதிர்பாராத விதமான சீரற்ற காலநிலை.
யாராலும் எதுவுமே கூறமுடியாத நிலை.
உங்களுக்கு/ உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் முடியுமானவரை பரீட்சையை செய்யுங்கள்.
இறைவன் உதவி செய்யட்டும்.

Physics Chamber

23 Nov, 11:05


Exam Day : Exam Hall

பரீட்சை எழுதும் மாணவர்கள் நேரம் ஒதுக்கி கட்டாயம் கேளுங்கள்

https://youtu.be/jQxxHke9k-A

Physics Chamber

23 Nov, 09:33


2025 மற்றும் 2026batch மாணவர்களே

2024 batch மாணவர்களின் பரீட்சை ஆரம்பமாக இருக்கின்றது.

இக்காலப்பகுதியில் உங்களின் ஒத்துழைப்பு அவர்களுக்கு மிக அவசியமாகும்.

வழமையாக நடைபெறும் நாசகார வேலைகள்
- - - - - - - - -

🛑 பரீட்சை முடியும் வரை மண்பத்திற்கு வெளியே காத்திருந்து பரீட்சை முடிந்த உடனே வினாத்தாளை கேட்டு அவர்களை அசெளகரியப்படுத்தல்.
அவர்களுடைய விடைகள் அதிலே குறிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் வினாத்தாளை உடனே கொடுக்க விரும்புவதில்லை.

🛑 வினாத்தாள் தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவித்தல், இது லேசான கேள்வி தானே இத செய்யல்லயா போன்றவாறான உங்களை பெரிய பருப்பு மாதிரி காட்டிக்கொள்ளும் அறப்படிச்ச கேள்விகளை கேள்விகளை கேட்டல்.

🛑 நடந்த வினாத்தாளை அவசர அவசரமாக செய்து telegram குழுக்களில் அவற்றை சந்தேகமாக கேட்டு பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் 2024 batch மாணவர்களை குழப்புதல்.

🛑 2024 batch மாணவர்கள் முழுமையாக அமைதியாக பரீட்சையை எழுதவிடாமல் ஒவ்வொரு பாடமும் முடிய முடிய விடைகளை சுடச்சுட தயாரிப்பதற்கு என்று சிலர் இருக்கின்றார்கள். அவர்களின் விடைகள் telegram/ whatsap/Facebook… போன்றவற்றில் வலம் வரும். உடனடியாக அந்த விடைகளை பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அனுப்பி உங்களுக்கு எத்தனை சரி வருகிறது என கேட்டல்.

🛑 வகுப்புகளில் உங்கள் ஆசிரியர் நடந்த வினாத்தாளைப்பற்றி கலந்துரையாடுவார். அதிலும் சிலர் என்னுடை இத்தனை கேள்வி வந்துள்ளது என்று கூறுவார்கள். (அது சரியா பிழையா எனும் விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்). அவற்றை உடனே கொண்டு போய் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் பேசி மீதம் இருக்கும் பாடங்களை சரியாக செய்ய விடாமல் குழப்புதல்.

ஆர்வம் இருக்கலாம். ஆனால் ஆர்வக்கோளாறு இருக்கக் கூடாது.

தயவு செய்து பரீட்சை முடியும் வரை மேலே கூறியது போன்ற எந்த விதமான நாசகார வேலைகளிலும் ஈடுபடாமல் அவர்களை நிம்மதியாக பரீட்சை எழுத விடுங்கள்.

ஆக மொத்தம் பரீட்சைக்காலம் முழுவதும் நீங்கள் அவர்களின் கண்களில் படாமல் இருப்பதும் நல்லது தான்.

இப்பொது நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு உங்களுடைய பரீட்சையின் போது உங்களுக்கு தேவைப்படும் என்பதை மறந்திடுவிடாதீர்கள்.

KM Mirzaan
23.11.2024

Physics Chamber

23 Nov, 09:31


எமது மாதிரி வினாத்தாளை முயற்சித்தவர்களுக்கு
விடைத்தாளில் Structure 04 (f)
K3 திறக்கப்பட்டு அண்ணளவான சமநிலை நீளம் பெறப்பட்டு K3 மூடப்பட்டு திருத்தமான சமநிலை நீளம் பெறப்படும்.

Physics Chamber

10 Nov, 05:04


2024 team….

Full ஆ ready ஆ தானே இருக்கயல்?
💪💪💪

Physics Chamber

03 Nov, 10:21


பகிரங்க பரீட்சையை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களே இது உங்களுக்கானது.

Physics Chamber

03 Nov, 10:20


Theory மற்றும் கடந்தல வினாக்களை தெளிவாக விளங்கி முறையாக பயிற்சி பெற்றவன் நிதானமாக பரீட்சையை எதிர்பார்தது காத்திருப்பான்.

கோவிக்க வேண்டாம். அரைகுறையாக படித்து அரைவேக்காட்டுத்தனத்தில் இருப்பவர்களின் இறுதி நம்பிக்கை தான் இந்த expected questions.

அந்த வருடம் அவர் கூறிய அது வந்தது தானே இவர் கூறிய இது வந்தது தானே என்று கூறுவார்கள்.

வந்த expected வினா என்று நீங்கள் 10 வினாவை நீங்கள் காட்டினால் ….

expected ஐ நம்பி போய் exam hall இல் upset ஆகி simple ஆ செய்திருக்க கூடிய வினாவை கூட செய்ய முடியாமல் stress ஆகி பரீட்சை மண்டபத்தை விட்டு வெளயேறி மிகுத இருந்த பாடத்திற்கு கூட பரீட்சை மண்டபம் செல்லாத பல நூறு மாணவர்களை நாம் காணலாம்.

Syllabus மாறாமல் இருக்க Public exam இல் இத்தனையாவது வினா இந்த அலகில் என்று தொடர்ச்சியாக வந்து விட்டு ஒரு வருடத்தில் மொத்த அமைப்பே மாறிவிடுவதும் உண்டு.
அவ்வாறிருக்க நாம் எதை தான் எதிர்பார்த்து செல்லுவது.

யாராவது ஆசிரியர் அல்லது வேறுமொருவர் உங்களிடம் இன்ன வினா எதிர்பார்க்கை என்று கூறினால் அவ்வினாவை செய்யக்கூடிய மட்டத்தில் நீங்கள் உள்ளீர்களா என just ஒரு முயற்சி செய்து பாருங்கள்.
அது தான் வரப்போகிறது என முழுமையாக மனதில் பதித்து பரீட்சை மண்டபம் செல்லாதீர்கள்

பரீட்சை முடிந்த உடனே வினாக்களை photo எடுத்து என்னுடைய notes இலிருந்து இன்ன கேள்வி, என்னுடைய tute இலிருந்து இன்ன கேள்வி என்று போட்டு திரிவார்கள்.
அது Resource book இல் எங்குள்ளது கடந்தகால வினாக்களில் எங்குள்ளது என்று பலர் அறிவதில்லை.

50 வினாவில் 20 வினா அவ்வாறு வந்துள்ளது என்றால் மிகுதி 30 வினாவை எவ்வாறு செய்யலாம் என யோசியுங்கள்.
உங்களுக்கு மிகுதி 30 வினாக்களையும் செய்ய முடியும் என்றால் எல்லா 50 வினாக்களையும் உங்களால் செய்ய முடியும் தானே.
20 வினாவை expectation இல் வழங்கியவர்களால் ஏன் மிகுதி 30 வினாக்களையும் வழங்க முடியாமல் போனது என்பதையும் சேர்த்து யோசியுங்கள்.

எவ்வளவு கடினாக வினாக்கள் வந்தாலும் வினாக்களின் அமைப்பு எவ்வாறு மாறினாலும் வினாக்களின் வரிசை தலை கீழாக பிரண்டாலும் இன் ஷா அல்லாஹ் இத்தனை நாள் படித்ததைக் கொண்டு நிதானமாக சிறப்பாகவே பரீட்சையை செய்யலாம் எனும் நம்பிக்கையை மனதில் நிறுத்துங்கள் மாணவர்களே

இன் ஷா அல்லாஹ் வெற்றி உங்களதே💪

நிச்சயமாக எனதும் இன்னும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனையும் கட்டாயம் உங்களுக்கு உண்டு ❤️

KM Mirzaan
21-12-2023
@Mirzaan_P6

Physics Chamber

31 Oct, 09:36


படிக்கும் காலத்தில் கொண்ட உறுதி, செய்த தியாகம், கண்ட கனவு அனைத்தும் ஒரு நாள் பயன் தர ஆரம்பிக்கும்.
அதுவரை பொறுத்துதான் ஆக வேண்டும்.

@ Engineer’s Site office
Madinah, Saudi Arabia

Physics Chamber

30 Oct, 12:00


அதாவது exam postponed ஆகும் எண்டு நம்பின ஆக்கள அப்பிடியே நம்பிக்கி இருக்கட்டாம். மிச்ச ஆக்கள ஒழுங்கா படிக்கட்டாம். 🙏🙏🙏

Physics Chamber

30 Oct, 11:25


என்ன செல்லி இருக்காங்க.
இங்கிலிசி தெரிஞ்ச ஆக்கள் செல்லுங்கடப்பா

Physics Chamber

30 Oct, 11:23


https://www.dailymirror.lk/breaking-news/No-postponement-of-2024-AL-exam-Examination-Department/108-294860

Physics Chamber

25 Oct, 13:22


2024 batch மாணவர்களே

சாக்கு பை நிறைய அரிசியை நிரப்பி பையின் வாயை கட்டாமல் வண்டியில் ஏற்றினால் எவ்வாறு அரசி வீணாகிப் போகுமோ அதை போல தான்

இறுதிகட்டத்தில் இறுதிக்கணம் வரைக்கும் புதிய விடயங்களை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு இருந்து படித்த அனைத்தையும் வீணாக்குதல்.

உங்களை வகுப்புக்கு செல்ல வேண்டாம் என்று கூறவில்லை.

ஆனால்.

முன்னர் படித்த விடயங்களில் தெளிவில்லாமல் இருக்கும் சிறு பகுதிகளை தெளிவாக்குதல்

படித்த அலகுகளில் கடந்தகால வினாக்களில் உள்ள உங்கள் தேர்சசியை உறுதி செய்தல்.

பரீட்சை மண்டபத்தில் நேரத்திற்குள் முழுமையாக வினாத்தாள் செய்து உச்ச கட்ட புள்ளிகளை பெறுமளவிற்கு நீங்கள் உள்ளீர்களா என உறுதி செய்தல்.

சமன்பாடுகள்/ நிறுவல்கள்/ படிமுறைகள்/ தாக்கங்கள்/ நிறங்கள்/ வரைபடங்கள் ….etc போன்ற அனைத்தும் உங்களுக்கு நினைவில் உள்ளதா என சுயமதிப்பீடு செய்தல்

இவைகள் ஆக முக்கியமாக இறுதிகட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை.

நீங்கள் வகுப்பு சென்று வகுப்பில் படித்ததை மீண்டும் படித்து மேலுள்ளவற்றில் உள்ளவற்றையும் எவ்வாறு செய்வது என திட்டமிடுங்கள்.

ஒரு சிலர் உங்களை அடுத்த sy வரவைப்பதற்கான காய்நகர்ததல்களை ஆரம்பித்திரும்பார்கள். இவ்வாளவு காலமும் தராதவற்றை இருதிக்கட்டம் தந்து உங்கை தங்க வைத்தல். இது வருட வருடம் ஒரு சிலர் நடத்தும் விளையாட்டு.

ஆவ்வாறான எந்த வலையிலும் சிக்காமல் உங்கள் பகுத்தறிவை முன்னிறுத்தி இறுதிக்கட்டம் உங்களை இன்னும் ஆர்முடுக்கி நிதானதாக பரீட்சை செய்யுங்கள்.

நேரம் இறுக்கி அவசரமாக ஓடவந்து அதற பதற பரீட்சை எழுதும
போது விடையுல் அதிகளவான தவறுகள் நடக்கும் என்பதை நீங்கள் பல முறை உணருங்கள்.

இப்போதிருந்தே பரீட்சைக்கு காத்திருக்கும் மனநிலையை உங்களுக்குள் உருவாக்குங்கள்.

சிறந்த புள்ளிகளை பெற கூடிய positive vibrations ஐ உங்களுக்குள் பதியவையுங்கள்.

இன் ஷா அல்லாஹ். வெற்றி உங்களதாகட்டும். 💪💪💪

Eng. Mirzaan

Physics Chamber

23 Oct, 16:48


பரீட்சை இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மனதில் சில குழப்பங்கள் தோன்றும். அதில் மிக முக்கியமானது

நான் ஒரளவு முடித்து விட்டேன். வெளியே ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வெளியே இருந்தால் Island rank 1 எடுப்பன். மலையை பிளந்து மாமரத்தில சாத்தி விடுவன்.

இவ்வாறான எதிர் மறை எண்ணங்கள் மனதில் உருவாகும். இருக்கும் காலத்தில் வினைத்திறனாக எவ்வாறு புள்ளிகளை அதிகரிப்பது என யோசிக்காமல் இவ்வாறான எதிர் மறை யோசனையில் கூடுதலாக இறங்குபவர்கள் இரண்டு தீர்வை நாடுவார்கள்.

01. பரீட்சை பின் போடப்பட்டால் நன்றாக இருக்கும்.
02. இந்த முறை சாதரணமாக பரீட்சை செய்து விட்டு அல்லது வித்ரோ ஆகி விட்டு அடுத்த வருடம் மொத்தமா அடி மட்டம் வரைக்கும் கடுமையா இறங்கி படி படி எண்டு படிச்சி எக்சாம் பேபர் ர அடிச்சி தூள் கிளப்பி island rank 1 எடுக்குற.

ஒரு விசயத்த நல்லா விழங்குங்கோ பிள்ளையாள்.

இப்ப என்ன எதிர்மறை எண்ணம் வருகுதோ, 3 அல்லது 4 மாதம் பரீட்சை பின்போடப்பட்டால் பரீட்சைக்கு முதல் மாதம் மீண்டும் இதே மனநிலை தான் உருவாகும்.

எவ்வாறு முதலாம் தவணை முடியும் போது புள்ளி குறைவாக வந்தவுடன் இரண்டாம் தவணையில் நான் யார் என்று காட்டுவேன் என சபதம் எடுத்து மீண்டும் மூன்றாம் தவணையில், 4, 5 என்று பின்னாகி பின்னாகி சபதங்கள் மட்டுமே அநாதையாகி கிடந்ததோ அதை போல.

எனவே இருக்கும் காலத்தில் பரீட்சை உரிய திகதியில் நடக்கும் என நினைத்து உங்கள் உச்ச கட்ட திறனுடன் கூடிய புள்ளியை பெறுவதற்கான இலக்கை நோக்கி நகருங்கள்.
பரீட்சை பின்னாகினால் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும். மேலதிகமாக கிடைக்கும் நாட்களில் இன்னும் அதிகம் பயிற்சி எடுக்க முடியும்.

அதை விடுத்து பரீட்சையை பிட்படுத்தும் முயற்சியில் நீங்களே இறங்கி அதன் ஆராய்சியில் இறங்கி update தேடி திரிவீர்கள் பெறுமதியான ஒவ்வொரு நாளையும் நீங்கள் இழந்து கொண்டிருக்கின்றீர்கள்.

இது போட்டிப்பரீட்சை. நீங்கள் இழக்கும் நேரத்தில் இன்னொருவர் படித்துக் கொண்டிருப்பார்.

ஒரு சில ஆசிரியர்கள் பரீட்சை பிட்போடப்படும் எனும் நம்புக்கையில் ஆற அமர ஆறுதலாக இழுத்துக் கொண்டு வந்திருப்பார்கள். இப்போது பரீட்சையை பிட்போடப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கலாம். அது அந்த மாணவர்களின் தலையெழுத்து.

அந்த மாணவர் என்னை தாக்க வருவார்கள்.
நான் என்றும் நிராயுதபாணி்😂😂😂

உங்களுக்கும் சேர்த்தே வழிகாட்ட விரும்புகிறேன்.

எனது வழிகாட்டலை பூரணமாக பின்பற்றி பரிட்சைக்கு தயாராக இருக்கம் மாணவர்கள் எனக்கு சாட்சியாக இருப்பார்கள்.
அது போதும் ❤️

Physics Chamber

22 Oct, 08:17


09. உந்த்மாற்று வீதம் எ ஒருக்கா பாருங்க
Then try பண்ணுங்க

Physics Chamber

22 Oct, 08:16


Quick revision
By: KM Mirzaan

01 : அளவீட்டு உபகரணங்கள்
https://youtu.be/XBpAG-xiyBk

02 : அலகுகளும் பரிமாணங்களும்
https://youtu.be/RjJ6Pt9u04Y

03 : ST VT AT வரைபுகள்
https://youtu.be/Dflh-JcNiG0

04 : இயக்க சமன்பாடுகள்
https://youtu.be/TvQlWAl5L_I

05 : விளையிள் விசை, விசைப்பிரிப்பு, விசைத்திருப்பம், பல்கோணி
https://youtu.be/DSzLCyVO4yg

06 : புவியீர்ப்பு மையமும் சமனிலை வகைகளும்
https://youtu.be/EGK4YU_OXWY

07: உராய்வு
https://youtu.be/Zv3DYaPQBkc

08: உந்தம்
https://youtu.be/X8n__zhAmD8

09: உந்தமாற்று வீதம்
https://youtu.be/z3iiJz6Q5zY

10: உயர்த்தியில் இயக்கம்
https://youtu.be/7lDDKAtFoKI

11: வட்ட இயக்கம்
https://youtu.be/a9420uDSMEI

12: சுழற்சி இயக்கம்
https://youtu.be/hLFwV4g5CHY

13: நீர் நிலையியல்
https://youtu.be/YROu0ZxqO5A

14: பேணுயிலி தத்ததுவம்
https://youtu.be/EMMs2BaO5zI

15: ஆர்முடுகும் பாயி
https://youtu.be/hIVBNt-UyBM

16: waves
https://youtu.be/tO1VP0RlM8M

Physics Chamber

22 Oct, 06:21


ஒங்கள எல்லாம் பெரிய சண்டியன் என்டு நான் நினச்சிட்டு இருந்தா என்னடா நீங்க ஒரே அடியில பொசிக்கெண்டு விழுந்த?? 🤣🤣🤣

Physics Chamber

22 Oct, 06:01


நிலைக்குத்தாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தட்டில் குறுக்கு வெட்டுப்பரப்பு A ஆகவுள்ள ஒரு நீர்த்தாரை வேகம் v உடன் தட்டின் தளத்திற்கு செங்குத்தாக மோதுகின்றது. தட்டானது வேகம் u உடன் நீர்த்தாரையின் திசையிலேயே அசைகின்றது. இங்கு தட்டிற்கு உஞற்றப்பட்ட விசை யாது?

Physics Chamber

21 Oct, 15:35


For 2025 & 2026 Batch 👆👆

Physics Chamber

21 Oct, 15:35


தொகுப்பு முறைக்கற்றலும் மீட்டல் முறையும்

https://youtu.be/y82LibTKxlQ

Physics Chamber

21 Oct, 09:05


Exam hall ல MCQ paper ல சில நேரம் தொடர்ந்து 3 கேள்விக்கு 1st answer வரக்க நெஞ்சிக்க பக்கு பக்கு எங்கும். 4 வது கேள்விக்கும் 1st answer வந்தா செத்தே பெய்த்திருவம் என்ன 🤣🤣🤣

Physics Chamber

21 Oct, 08:52


Special MCQ Pen வந்திருக்கு யாருக்கு வேணும்????

எறும்புக்கு 🐜 training கொடுத்து வெச்சிருக்குற ஆக்கள் பயப்படாம அதயே use பண்ணுங்கோ 😂😂

Physics Chamber

21 Oct, 06:09


26 Batch மாணவர்களும் இதையே பின்பற்றுங்கள்

Physics Chamber

20 Oct, 18:30


24 Batch மாணவர்களே

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி ஏதும் வரை பொத்திக் கொண்டு ஏற்கனவே நீங்கள் போட்ட schedule இன்படி முடிக்க வேண்டியதை முடியுங்கள்.

Physics Chamber

20 Oct, 12:24


Correct answer
அவன் கைய எடுத்ததுக்கு பிறகும் உயரம் கூடிச்சி பாரு.
அங்க தான் இருக்கு பெளதிகவியல்.

அடுத்தடுத்த மொத்தல்லுக்கு எந்த ஊருலடா சக்தி கூடியிருக்க??

Physics Chamber

20 Oct, 12:17


கொஞ்சம் Physics எயும் வெச்சி யோசியுங்கடா

மிடியல்ல 😣😣😣

Physics Chamber

20 Oct, 12:08


இவர் உண்மையிலே இவ்வாறு செய்கிறாரா அல்லது இது ஒரு reverse செய்யப்பட்ட video வா என்பதை ஒரு பெளதிகவியல் மாணவராக உரிய காரணத்துடன் கூறுங்கள்

Physics Chamber

20 Oct, 06:27


Today lesson
மொத்தல் கணத்தாக்கும் அக்காவின் தத்தித் தாவல் பாய்ச்சலும் 😀😀

Physics Chamber

18 Oct, 18:06


கோண உந்தம் சில நேரம் இடுப்பை உடைக்கும் 🤣🤣🤣

Physics Chamber

17 Oct, 08:53


👆👆👆

Physics Chamber

17 Oct, 08:53


👆 நாம் 2012 இல் வெளியிட்ட புத்தகத்தில் அது வரையான திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

Physics Chamber

16 Oct, 17:05


நிறைய பேருக்கு Modal paper எயும் scheme எயும் வாங்கிட்டு போன speed கு marks எத்துன வந்திச்சி என்டு செல்ல ஏலாம தான் இருக்கு என????

என்ன படிப்பு இது 👎👎👎

Physics Chamber

16 Oct, 07:23


A page from my book, 2012 September.

தம்பிமார், நம்மள சும்மா நினச்சிட்டு உலாத்துறயல் என்ன 😂😂😂😂😂😂

Physics Chamber

13 Oct, 05:53


24 batch மாணவர்களே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.

மீதமிருக்கும் காலத்தில் முக்கியமாக பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

01. ஏற்கனவே படித்து தெளிவு குறைவாக இருக்கும் சிறு பகுதிகளை தெளிவாக்குதல்

02. ஒவ்வொரு அலகுக்குமான துரித மீட்டல் செய்யக்கூடிய தொகுப்பை நிறைவு செய்தல்

03. முழுமையான வினாத்தாளை நேரம் வைத்து செய்து Marking Scheme ஐ வைத்தை மதிப்பிட்டு உங்கள் சரி, பிழை, நேரப்பிரச்சனை ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து தவறுகளை குறத்து இன்னும் கூடிய புள்ளிகளை பெறுவதற்கான முறைகளை கண்டறிதல்.

எமது மாதிரி வினாத்தாளை முயற்சி செய்து அதை மதிப்பிட்டவர்கள் முழுமையான வினாத்தாள் செய்வதன் அவசியத்தை உணர்ந்திருப்பீர்கள்.

தொடர்ந்தும் முயற்சியுங்கள்.
இன் ஷா அல்லாஹ் வெற்றி உங்களுடையதாகட்டும் 💪💪

Eng. Mirzaan
@Mirzaan_P6

Physics Chamber

10 Oct, 15:26


1 to 10
https://youtu.be/FIAYcR1avtE

11 to 20
https://youtu.be/Aq0phmBd-UY

21 to 30
https://youtu.be/EzDx6TFD5K4

31 to 40
https://youtu.be/Mr4UeNgFDjE

41 to 50
https://youtu.be/-Z4nCnveAU8

Explained by
KM Mirzaan

Physics Chamber

09 Oct, 19:41


எறியத்தில் தொடங்கி நேர்கோட்டியக்கம் வழியே மொத்தல் 😀😀
@ Bowling, Saudi Arabia

Physics Chamber

09 Oct, 07:11


25 batch மாணவர்களுக்கானது

@Mirzaan_P6

Physics Chamber

09 Oct, 05:21


நீருக்கு அமுக்கம் அதிகரிக்கும் போது உருகுநிலை குறையும். பனிக்கட்டிக்குற்றி விளிம்புடன் தொடுகையில் இருக்கும் பரப்பில் அமுக்கம் அதிகமாக இருப்பதால் அப்பகுதி 0 பாகை செல்சியசை விட குறைந்த வெப்பநிலையிலேயே உருகி விடும்.

Physics Chamber

08 Oct, 16:21


பனிக்கட்டி தவாளிப்பின் விளிம்பில் மட்டும் உருகும் காரணம் என்ன?

Physics Chamber

08 Oct, 12:32


Theory மற்றும் கடந்தல வினாக்களை தெளிவாக விளங்கி முறையாக பயிற்சி பெற்றவன் நிதானமாக பரீட்சையை எதிர்பார்தது காத்திருப்பான்.

கோவிக்க வேண்டாம். அரைகுறையாக படித்து அரைவேக்காட்டுத்தனத்தில் இருப்பவர்களின் இறுதி நம்பிக்கை தான் இந்த expected questions.

அந்த வருடம் அவர் கூறிய அது வந்தது தானே இவர் கூறிய இது வந்தது தானே என்று கூறுவார்கள்.

வந்த expected வினா என்று நீங்கள் 10 வினாவை நீங்கள் காட்டினால் ….

expected ஐ நம்பி போய் exam hall இல் upset ஆகி simple ஆ செய்திருக்க கூடிய வினாவை கூட செய்ய முடியாமல் stress ஆகி பரீட்சை மண்டபத்தை விட்டு வெளயேறி மிகுத இருந்த பாடத்திற்கு கூட பரீட்சை மண்டபம் செல்லாத பல நூறு மாணவர்களை நாம் காணலாம்.

Syllabus மாறாமல் இருக்க Public exam இல் இத்தனையாவது வினா இந்த அலகில் என்று தொடர்ச்சியாக வந்து விட்டு ஒரு வருடத்தில் மொத்த அமைப்பே மாறிவிடுவதும் உண்டு.
அவ்வாறிருக்க நாம் எதை தான் எதிர்பார்த்து செல்லுவது.

யாராவது ஆசிரியர் அல்லது வேறுமொருவர் உங்களிடம் இன்ன வினா எதிர்பார்க்கை என்று கூறினால் அவ்வினாவை செய்யக்கூடிய மட்டத்தில் நீங்கள் உள்ளீர்களா என just ஒரு முயற்சி செய்து பாருங்கள்.
அது தான் வரப்போகிறது என முழுமையாக மனதில் பதித்து பரீட்சை மண்டபம் செல்லாதீர்கள்

பரீட்சை முடிந்த உடனே வினாக்களை photo எடுத்து என்னுடைய notes இலிருந்து இன்ன கேள்வி, என்னுடைய tute இலிருந்து இன்ன கேள்வி என்று போட்டு திரிவார்கள்.
அது Resource book இல் எங்குள்ளது கடந்தகால வினாக்களில் எங்குள்ளது என்று பலர் அறிவதில்லை.

50 வினாவில் 20 வினா அவ்வாறு வந்துள்ளது என்றால் மிகுதி 30 வினாவை எவ்வாறு செய்யலாம் என யோசியுங்கள்.
உங்களுக்கு மிகுதி 30 வினாக்களையும் செய்ய முடியும் என்றால் எல்லா 50 வினாக்களையும் உங்களால் செய்ய முடியும் தானே.
20 வினாவை expectation இல் வழங்கியவர்களால் ஏன் மிகுதி 30 வினாக்களையும் வழங்க முடியாமல் போனது என்பதையும் சேர்த்து யோசியுங்கள்.

எவ்வளவு கடினாக வினாக்கள் வந்தாலும் வினாக்களின் அமைப்பு எவ்வாறு மாறினாலும் வினாக்களின் வரிசை தலை கீழாக பிரண்டாலும் இன் ஷா அல்லாஹ் இத்தனை நாள் படித்ததைக் கொண்டு நிதானமாக சிறப்பாகவே பரீட்சையை செய்யலாம் எனும் நம்பிக்கையை மனதில் நிறுத்துங்கள் மாணவர்களே

இன் ஷா அல்லாஹ் வெற்றி உங்களதே💪

நிச்சயமாக எனதும் இன்னும் பல ஆசிரியர்களின் பிரார்த்தனையும் கட்டாயம் உங்களுக்கு உண்டு ❤️

KM Mirzaan
21-12-2023
@Mirzaan_P6

Physics Chamber

04 Oct, 15:43


Done என @Mirzaan_P6 id கு message அனுப்பியவர்கள் மாதிரி வினாத்தாள் கிடைத்ததை உறுதி செய்து கொள்ளுங்கள்.