கவிதை அழகு @kavidhaiazhagu Channel on Telegram

கவிதை அழகு

@kavidhaiazhagu


கவிதைகள் உணர்வை வெளிப்படுத்தும்

கவிதை அழகு (Tamil)

கவிதை அழகு என்று அழைக்கப்படும் இந்த தொடர் உங்கள் கவிதைகளை உணர்வை வெளிப்படுத்த மதிப்பீடு செய்யும் ஒரு தொடர். இந்த சேனல் கவிதைகள், பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்ட கவிதைகள், மென்பொருள் கவிதைகள் மற்றும் அனைத்தும் உங்கள் மனதை முன்னேற்றிக் கொள்கின்றது. உங்கள் விருப்பம் என்ன? இந்த தொடர் உங்களுக்கு உதவ அல்லது உங்கள் கவிதைகளை பகிரும் ஒரு இடமாக இருக்கவேண்டுமா? அப்போது இந்த சேனலை உங்கள் முன்னோடிக்கு அணுகுங்கள் மற்றும் கவிதை அழகுடக்கத்தை உங்கள் உலகத்தின் மூல்முடிப்பற்ற மேல் எடுத்துக்கொள்வதைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளவும்.

கவிதை அழகு

08 Nov, 02:52


பிரிவை உணர வைக்க
தெரிந்தவர்கள்
கொடுத்து வைத்தவர்களே...!!
அவர்களை பற்றி எந்த நேரமும்
ஒரு ஜீவனாவது நினைத்துக்
கொண்டே இருக்கும்..!!



🌹🌷🌹

கவிதை அழகு

08 Nov, 02:40


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
அன்பை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்றால்...


யாரோ ஒருத்தர் தோற்றுக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும் உறவில்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

07 Nov, 02:32


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொண்டு செல்வதால்...


வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
நட்பும் இல்லை
பகையும் இல்லை
எதிரியும் இல்லை
விரோதியும் இல்லை.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

06 Nov, 23:29


நான்கு பக்கங்களும்
வலிந்து சாத்தப் பட்ட
கதவுகளை....
யார் யாரோ
தட்டிக் கொண்டிருக்கிறார்கள்

அன்பெனச் சொல்லி
உறவெனச்சொல்லி
நட்பெனச் சொல்லி
காதலெனச் சொல்லி...

இப்படி தட்டிடும்
சப்தங்களுக்கு
அவர்களாகவே ஒரு
பெயரையும் வைத்து
கொண்டாடித் தீர்க்கிறார்கள்...

திறந்திடாத கதவுகளுக்கு பின்னால்
யாரோ ஏமாற்றிச் சென்றதின் வலி
எதையோ நிரந்தரமாய் இழந்ததின் வலி
நம்பிக்கை வைத்து தோற்றதின் வலி
இப்படி எத்தனையோ
காரணங்களை சுமந்து கொண்டு
அந்த கதவுகள் அறைந்து
சாத்தப்பட்டதோ யாரரிவார்....

இருந்தும் (இதய) கதவுகளை
தட்டும் ஓசை
இன்னும் கேட்டுக் கொண்டே தான்
இருக்கிறது.....

யார் அவர்கள் அன்பின்
தூதுவர்களா .... ?
யாரோவாக இருந்துவிட்டு போகட்டும்.

தற்செயலாக உங்கள்
சத்தம் கேட்டு
அந்த கதவுகள் திறந்து கொண்டால்
மீண்டும் அது சாத்தப் படுவதற்கு
நீங்கள் காரணமாக மட்டும்
இருந்து விடாதீர்கள்.....

நேசத்தின் கதவுகள் மிகவும்
மென்மையானவை....


🌹🌷🌹

கவிதை அழகு

06 Nov, 23:24


நான்கு பக்கங்களும்
வலிந்து சாத்தப் பட்ட
கதவுகளை....
யார் யாரோ
தட்டிக் கொண்டிருக்கிறார்கள்

அன்பெனச் சொல்லி
உறவெனச்சொல்லி
நட்பெனச் சொல்லி
காதலெனச் சொல்லி...

இப்படி தட்டிடும்
சப்தங்களுக்கு
அவர்களாகவே ஒரு
பெயரையும் வைத்து
கொண்டாடித் தீர்க்கிறார்கள்...

திறந்திடாத கதவுகளுக்கு பின்னால்
யாரோ ஏமாற்றிச் சென்றதின் வலி
எதையோ நிரந்தரமாய் இழந்ததின் வலி
நம்பிக்கை வைத்து தோற்றதின் வலி
இப்படி எத்தனையோ
காரணங்களை சுமந்து கொண்டு
அந்த கதவுகள் அறைந்து
சாத்தப்பட்டதோ யாரரிவார்....

இருந்தும் (இதய) கதவுகளை
தட்டும் ஓசை
இன்னும் கேட்டுக் கொண்டே தான்
இருக்கிறது.....

யார் அவர்கள் அன்பின்
தூதுவர்களா .... ?
யாரோவாக இருந்துவிட்டு போகட்டும்.

தற்செயலாக உங்கள்
சத்தம் கேட்டு
அந்த கதவுகள் திறந்து கொண்டால்
மீண்டும் அது சாத்தப் படுவதற்கு
நீங்கள் காரணமாக மட்டும்
இருந்து விடாதீர்கள்.....

நேசத்தின் கதவுகள் மிகவும்
மென்மையானவை.... 🌹🌹🌹

காற்றின் மொழி


🌷🌹🌷

கவிதை அழகு

06 Nov, 02:10


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
பொறுப்புகள் வந்ததும்...

பொழுதுபோக்குகள் மறந்து விடுகின்றன.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

05 Nov, 02:40


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
யோசிக்காமல் நாம செய்யும் சின்ன விசயமும்...

ஒரு நாள் நம்மை யோசிக்க வைத்து விடுகிறது இதை ஏன் யோசிக்காமல் செய்தோம் என்று.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

04 Nov, 22:42


நல்லவர்களுக்கு ஏதேனும்
கெட்டது நடந்தால்...

அது
அவர்களை செதுக்குமே தவிர
ஒரு நாளும் சிதைக்காது.



🌹🌷🌹🌷🌹

கவிதை அழகு

04 Nov, 22:42


நம்பிக்கை தரும் சிந்தனைகளை
வளர்த்துக் கொள்ளுங்கள்.....

பயம் தரும் கற்பனைகள்
தானாகவே விலகிவிடும்....!!!!!


🌹🌷🌹🌷🌹

கவிதை அழகு

04 Nov, 02:41


பெரும்பாலும்
மன உளைச்சல் தன்னைப் பற்றி யோசிப்பதை விட...


பிறரைப் பற்றி யோசிப்பதினாலே ஏற்படுகிறது.




கவிதை அழகு

04 Nov, 02:32


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
தட்டுவதை முதலில் நிறுத்துங்கள்...

பிடிக்காமல் தானே தாழிட்டிருக்கிறார்கள்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

04 Nov, 00:02


நான் யாரென்றே தெரியாத போது
உங்கள் நேசத்தின்
கரங்கள் ஈரம் காயாது
என்னை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது

இப்போது என்னைப்பற்றி
முழுமையும் அறிந்து கொண்டதும்
சட்டென உலரத் தொடங்கிவிட்டது
உங்களது அன்பும் சரி ஆர்வமும் சரி..

உங்கள் நேசமெனும் அகராதியில்
அன்பென எதை எழுதுகிறீர்கள்
எனக்கு கொஞ்சம் விளக்கம்
தாருங்கள்....

சில நேரங்களில் முகங்களற்று
முகவரியற்று இருப்பதும் கூட
நிம்மதியை தருகின்றது..

இங்கே இப்போது நான் நானாக
இல்லை என்பதே எனக்கு மிகவும்
வருத்தமாக இருக்கிறது...

என் நிஜத்தை வெளிப்படுத்தாத
வரையில் நான் நானாக இருந்தேன்
இப்போது இங்கே
இருப்பது நானென்றபோதிலும்
என்னில் நானில்லை என்பதே உண்மை...

காற்றின் மொழி



🌷🌷🌷🌷

கவிதை அழகு

03 Nov, 16:39


கோபம் ஏற்படும்
போதெல்லாம்
அதை அடக்கி ஆள
கற்றுக் கொள்ளுங்கள்...

கோபம் பிறரால் ஏற்படும்
குணம் தானே தவிர
உங்களின்
பிறவிக் குணமல்ல.


🌹🌷🌹

கவிதை அழகு

03 Nov, 16:38


ஆராய்ந்தால் அதிசயம் ....

விட்டு விட்டால் ரகசியம்.......

" பெண் "..


🌷🌹🌷

கவிதை அழகு

03 Nov, 02:25


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
உத்திரவாதங்கள் பெரும்பாலும்...

சமாதானத்திற்காகவே சொல்லப்படுகிறது.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

02 Nov, 02:40


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
போகும்போது என்னத்த கொண்டு போகிறோம் என்று சொல்கிறவர்கள் தான்...

பாகப்பிரிவினையின் போது ஒரு சதுர அடியை கூட விட்டு தர மாட்டார்கள்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

01 Nov, 02:29


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  

சொற்கள் பலம் வாய்ந்தவைதான் அதை விட அளவிட முடியா பலம் பெற்றவை

தக்க தருணத்திலான செயல்கள்.
                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

31 Oct, 02:34


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
நம் நாட்டில் அணுகுண்டு வெடித்தால் புகை...

அண்டை நாடுகளில் வெடித்தால் பகை.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

30 Oct, 23:27


கல்வி கல்லாவிட்டாலும் பரவாயில்லை...

கல்வி கற்றவர் பின் நிற்கவாவது கற்றுக் கொள்...!!


🌹🌷🌹

கவிதை அழகு

30 Oct, 23:25


இனம் என்னவோ ஒன்று தான்...

நிறங்கள் தான் வேறு வேறு...

மனிதர்களும் இவ்வாறு தான்...!!


🌹🌷🌹

கவிதை அழகு

30 Oct, 02:42


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
சிறப்பானவற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்...

மோசமானவை ஒரு போதும் நிகழாது.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

29 Oct, 02:28


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
தட்டுத் தடுமாறி தவிக்கும் தைரியத்திற்கு தனிமையை அறிமுகப்படுத்தி வையுங்கள்...

தடுமாற்றத்திற்கான காரணம் தெரிந்து விடும்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

28 Oct, 02:39


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  

புத்திக்கு காது கேட்கும் கண்கள் தெரியாது மனசுக்கு கண்கள் தெரியும் காது கேட்காது...

அதனால் தான் புத்தி சொல்வதை மனம் கேட்பதே இல்லை காண்பதெல்லாம் உண்மை என நம்பும்.
                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

27 Oct, 15:23


அமர்ந்து பேச....
நேரமில்லாமல்

அலைப்பேசியோடு....
இத்தலைமுறைகள்.



🌷🌹🌷🌹🌷

கவிதை அழகு

27 Oct, 15:22


குறுஞ்செய்தியால்
நிறைந்த நம் அன்பு....

இப்பொழுதெல்லாம்
பேசிப் பேசியே
கரைந்து போகிறது.


🌹🌷🌹🌷🌹

கவிதை அழகு

27 Oct, 02:42


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
பொருந்தாத ஒன்றை சுமந்து கொண்டிருக்கும் வரை...

உங்கள் பலத்தை நீங்களே அறிய மாட்டீர்கள்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

26 Oct, 02:41


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
விளக்கேற்றி ஊதுபத்தி கொளுத்தி பூவும் மாலையும் சாத்தி ஆரத்தி காண்பிப்பது எல்லாம்...

உங்கள் நம்பிக்கைக்குத்தானே தவிர நீங்கள் வணங்கும் இறைவனுக்கு அல்ல.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

26 Oct, 00:20


உங்களை விட அழகில் குறைந்த ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா?

40 வயதாகிவிட்டால் இதே அழகு என்ன கூடாவேவா வர போகிறது?

35யை தாண்டினால் ஆணுக்கு முடிகொட்டுவதும் பெண் என்றால் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதும் தானே நியதி?

இயற்கையை நம்மால் கட்டுப்படுத்தவா முடியும்?

வயதானவர்களின் அழகே அவர்கள் நரை முடி தானே?

பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகாக தான் தெரியும். வயது அப்படி.

அழகை வைத்து தான் வாழ்கிறோம் என்று ஒருவர் கூற முடியுமா இப்பிரபஞ்சத்தில்?

வாலிபமும் இளவயதும் மாயையே.

நம் கண்ணில் அழகிருந்தால் பார்ப்பது அனைத்தும் அழகாகவே தெரியும். பிடித்தவர்கள் தான் உலகின் பேரழகிகளாக, பேரழகன்களாக தெரிவார்.

அழகு அகத்தில் இருப்பது என்பதை நம்புவதே இல்லை. அழகு மனதில் இருக்கிறது.

திருமணத்திற்கும் அழகிற்கும் ஏன் முடிச்சி போடுகிறீர்கள்?

திருமணத்தின் தேவை ஆண் என்ற ஒரு மனமும், பெண் என்ற ஒரு மனமும் தான்.

அழகை வைத்து வாழ முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அன்பை வைத்து வாழலாம்.

உங்களை விட அழகில் குறைந்த ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா?

கண்டிப்பாக இல்லை. மனதில் அழகில்லாத ஒருவரை ஏற்றுக்கொள்ளவே முடியாது.



கவிதை அழகு

25 Oct, 02:36


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
தன்னம்பிக்கை குறைந்த வெற்றிடங்களில்...

மூட நம்பிக்கை வந்து நிறைந்து கொள்கிறது.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

24 Oct, 02:48


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
யாரை விமர்சித்தாலும் சற்று நாவடக்கம் கொள்...

கர்மம் காத்திருந்து கருவறுக்கும் என்பதை நினைவில் வைத்து.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

23 Oct, 02:29


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
ஒரே சம்பவத்தை மறுபடி மறுபடி நினைத்துகொண்டிருந்தால்...

உள்மனம் அதை செயல் வடிவத்துக்கு கொண்டுவந்து செயல்பட வைத்துவிடும்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

22 Oct, 02:42


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
பொய் இருக்கும் இடத்தில்...

தடுமாற்றமும் கூடவே கொஞ்சம் பயமும் இருக்கும்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

22 Oct, 01:23


அவள் விழியில்
அவள் காதோரமாய் கூந்தலை
ஒதுக்கும் போது
என் நெஞ்சோரமா ஒதுங்கினாள்.

அவள் சிரிப்பில்
நான் சிறகாய் பறக்கிறேன்.

அவள் விழியில் நான்
மூழ்கி போகின்றேன்.

அவள் கன்னத்தில்
என் எண்ணத்தை புதைக்கிறேன்..

அவள் கைகள் அசைக்க
நான் கவிதை வாசிக்க..

அவள் பாதங்கள்
என் கவிதைக்கு
இசையாக...

கவிதையும் முடிந்தது
என் கனவும் முடிந்தது....


🌷🌹🌷🌹🌷

கவிதை அழகு

21 Oct, 02:35


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
உங்களை ஒருவர் குறைத்துப் பேசும் போது அடக்கமாய் இருங்கள் அது உங்கள் வீரம்....

உங்களை ஒருவர் புகழ்ந்து பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள் அது உங்கள் விவேகம்.

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

21 Oct, 01:33


ஒரு முறை ஏமாந்து பாருங்கள்.........

உலகமே உங்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருக்கும்.......................!!



கவிதை அழகு

21 Oct, 01:33


உங்கள் மகிழ்ச்சியை மட்டும் அடுத்தவரிடம் கொடுத்து விடாதீர்கள்.............

அவர்கள் தொலைத்து விடுவார்கள்.................!!




கவிதை அழகு

20 Oct, 02:36


என்னறைக்குள் நீ வந்து சென்றாய்
அறை முழுதும் உன் வாசனை..

உன் போர்வைக்குள் புகுந்து கொள்கிறேன்.. உன் வாசனை பிடிக்க..

பூக்களின் வாசம் செடியினும் மேலாய் உன் முடியிலிருக்கையில்..



🌷🌹🌷🌹🌷

கவிதை அழகு

20 Oct, 02:27


★━━★━━★━━★━━★━━★━━★


🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀


𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
  
கடன் கேட்டுப்பாருங்கள் இருந்தாலும் இல்லை என்று தான் சொல்வார்கள்...

" கடவுளைப்போல "

                                 
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


  ★━━★━━★━━★━━★━━★━━★

கவிதை அழகு

19 Oct, 22:53


★ *உங்களை பார்த்து யாராவது எப்படி இருக்கீங்க சௌக்கியமான்னு கேட்டா நீங்க என்ன பதில்களை சொல்றீங்க?*

★ ஏதோ இருக்கேன், என்னமோ வண்டி ஓடுது, என்னத்த சொல்ல எல்லாம் என் தலையெழுத்து. ஏண்டா பிறந்தம்னு இருக்கு, நமக்கு மட்டும் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு இது தான் உங்க பதில்களாக இருக்கும்.

★ *இது மாதிரி நீங்க விரக்தியான பதிலைத் தான் சொல்றீங்க, இதெல்லாம் உங்க ஆழ்மனசுல இருந்து வர்ற வார்த்தைகள் , இந்த வார்த்தைகள் தான் உங்களோட வாழ்க்கைய தீர்மானம் பண்ணுது.*

★ஒரு இரகசியம் சொல்லட்டுங்களா? ஒரு வார்த்தைய ஒரு லட்சம் தடவ சொல்லிட்டிங்கன்னா அதுக்கு சக்தி கிடைச்சுடும். உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுடும், உங்க சொல் படியே நடக்கும், இது உண்மை.

★ *அதனால நீங்க சொல்லக் கூடிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா இருக்கட்டும்,*

★இனிமே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி யாராவது உங்களை பார்த்து எப்படி இருக்கீங்க சௌக்கியமான்னு கேட்டா?*

★ *நல்லா இருக்கேன் வேலை நல்ல படியா இருக்கு. நாங்க சந்தோசமா இருக்கிறோம். கடவுள் எங்களை நல்ல படியா வெச்சுருக்காரு.*

★இது மாதிரி வார்த்தைகளை சொல்ல சொல்ல உண்மையிலயே உங்க வாழ்க்கை மாறி நீங்க சொன்ன மாதிரியே மாற்றம் வரும்.




கவிதை அழகு

19 Oct, 22:52


மகிழ்ச்சியோடு சுமந்தால்........

எந்த பாரமும் குறைவாக தான் தெரியும்..........!!




கவிதை அழகு

19 Oct, 22:51


வேறு வழியின்றி சகித்துக் கொள்வதை...........

புரிதல் என சொல்லி கொள்கிறோம்......!!




கவிதை அழகு

19 Oct, 22:51


வேண்டாம் என எண்ணினாலும் வராமல் இருக்க போவதில்லை துன்பம் ................

வேண்டும் என எண்ணினாலும் எளிதில் கிடைத்த போவதில்லை இன்பம் .................

நமக்கானது மட்டுமே நம்மிடம் வந்து சேரும்..............!!




கவிதை அழகு

19 Oct, 22:51


கடந்து போவது................

கற்றுத் தராமல் போகாது..............!!




3,183

subscribers

22,712

photos

23

videos