தமிழ் கடவுள் முருகன்🦚 @gkbala Channel on Telegram

தமிழ் கடவுள் முருகன்🦚

@gkbala


வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை...

தமிழ் கடவுள் முருகன்🦚 (Tamil)

தமிழ் கடவுள் முருகன்🦚 என்பது ஒரு தமிழ் சேன்டினாவுக்கு உருவாக்கப்பட்ட டெலிகிராம் சேனல். இந்த சேனலில் தமிழ் கடவுள் முருகன் பற்றி அறிய முடியும் எல்லா தகவல்களும் உள்ளன

இது gkbala என்ற பயனர் பெயரைக் கொண்டுள்ளது. இந்த சேனல் வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்ற சிறுகதைகள், கதைகள், பாடல்கள் போன்ற உணர்ச்சிகளை நீக்கிய பகுதிகளையும் கடவுள் முருகனுடன் கொண்டுள்ளது

அதாவது, இந்த சேனல் தமிழ் பகுதிகளில் கடவுள் முருகன் சாதனைகளை அறிய உதவுகிறது மற்றும் அவருக்கு மகிமையும் ஆராதிகளும் எந்த மூலகம் புகுந்து செல்கிறது பற்றி மேலும் மொழிபெயராத இன்வேஸ்டிகேஷன் இன்ப்ரியர்களுக்கும் பயன்படுத்தபடும்

பெரும்பாக், வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை சேனல் அனைத்து வயதிலும் பகிர்கப்படுகிறது, எனவே அது அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கும் வேலந்தனம் தரும் சேனல் ஆகும் மற்றும் தமிழ் பகுதிகளில் கடவுள் முருகனுடன் கிளப்பிட வேலை செய்யும் வயதில் உள்ள தமிழன்கள் மற்றும் ஆராதிகளுக்கு சிறந்த தகவல்களை வழங்குகின்றது.

தமிழ் கடவுள் முருகன்🦚

09 Aug, 14:25


முத்து குமரன் 🦚

#Muruga #Vel #God
#TamilKadavul
#Murugan #Kandha
#VelMurugan

@Spiritual_Official

தமிழ் கடவுள் முருகன்🦚

26 Feb, 17:00


🌹 🌿 குழந்தை வரம் தரும் வளர்பிறை சஷ்டி விரதம் -🌿🌹

🌹 🌿 சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் கவலைகள் நீங்கும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌹 🌿 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பார்கள். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கின்றனர். முருகனுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் முதன்மையானது. இன்று தேய்பிறை சஷ்டி முழுநாள் உள்ளது. இன்று சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிங்க கவலைகள் காணாமல் போகும்.

🌹 🌿 ஐப்பசி மாதம் வளர்பிறையில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த விழா திருச்செந்தூரில் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும் திருமண பாக்கியம் கைகூடும், பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌹 🌿 கந்தன் நம் கவலைகளை தீர்ப்பவன். கந்தனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகள் பறந்தோடும். முருகனுக்கு உரிய விரதம் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். இந்த விரதங்களில் முதன்மையானது கந்த சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும்.

🌹 🌿 சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் செய்ய வேண்டும்.

🌹 🌿 காலையிலிருந்து சாப்பிடலாமல் பூஜையறையில் சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம். இந்த விரதம் இருப்பவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது. நல்லதை நினைத்து நல்லதையே பேச வேண்டும்.

🌹 🌿 நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள் முடிந்தால் மூன்று வேளை சாப்பிடாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் ஓன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு கந்த சஷ்டி கவசம் சொல்லி இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

🌹 🌿 இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் குழந்தை வரம் கிடைக்கும். இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும். இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

🌹🌿உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. கந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் கவலைகள் தீரும். இன்று சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிங்க கவலைகள் காணாமல் போகும்.

தமிழ் கடவுள் முருகன்🦚

14 Feb, 09:54


முருகா என்று உணர்ந்(து) ஓதுகையில்
மும்மலங்களை அவன் அகற்றுகின்றான்
கந்தா கடம்பா கதிர்வேலா என்றவுடன்
கருணை மழை பொழிந்து காக்கின்றான் வேலும் மயிலும் நினைக்கையில்
வெற்றிவேலன் வருகின்றான்
வேண்டுதல் பேரில் அணுகுகையில் வினவிய அனைத்தும் தருகின்றான்

தமிழ் கடவுள் முருகன்🦚

14 Feb, 09:48


முருகனுக்கு வேல் வழங்கிய #வெயிலுகந்தம்மன்🌺🌿🌹🌷
🌺🌿சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகன் அம்மன் திருக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜைசெய்து அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம்.
🌺🌿சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமானுக்கு வெயிலுகந்தம்மன் வேல் கொடுத்து ஆசீர்வதித்தாள். இந்த வெயிலுக்கந்தம்மனுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஆலயத்துக்கு செல்லும் வழியில் கோவில் உள்ளது. இந்த தலம் கந்தனுக்கு பராசக்தி, பலவடிவம் கொண்டு கைகொடுத்த திருத்தலம் ஆகும்.
🌺🌿அசுரனை அழிக்க உதவிய அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்னதாக வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாள் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் அம்மன் திருக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜைசெய்து அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம்.
🌺🌿அம்மன் திருத்தலத்தில் உள்ள திருச்செந்தூரின் பிரசித்திபெற்ற தீர்த்தமான வதனாரம்பத் தீர்த்தத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. 1200 ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாது கவலையுற்றான். திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
🌺🌿ஆனால், அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனதொடிந்தான்.
🌺🌿கந்தனிடம் தன் குறையையெண்ணி நெக்குருக வேண்டி நின்றான் மன்னன். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.
🌺🌿அவனது வேண்டுதலுக்கு இறங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது.
🌺🌿குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ என்று பெயரானது. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.
🌺🌿“இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான்.
🌺🌿இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
🌺🌿திருச்செந்தூரின் வடபுலத்தில் வீற்றிருக்கும் வெயிலு கந்தம்மனுக்கு ஆவணி, மாசி மாதங்களில் பத்து நாள் திருவிழா களைகட்டுகிறது. அப்போது அன்னை சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருவாள். இரண்டு திருவிழாக்களிலும் பத்தாம் நாள் உற்சவத்தின்போது அன்னைக்குக் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பிறகு, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எதிரே உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, புதல்வனுக்கு அருளாசி வழங்குகிறாள் அன்னை🌺

தமிழ் கடவுள் முருகன்🦚

14 Feb, 09:37


நன்றி நன்றி அனைவருக்கும் ஆயிரத்து இருநூறு அன்பு சொந்தங்களே இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள்...

2,111

subscribers

240

photos

38

videos