கவிதைகள் OLBN ™ @kavithaigalolbn Channel on Telegram

கவிதைகள் OLBN

@kavithaigalolbn


கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

கவிதைகள் OLBN (Tamil)

கவிதைகள் OLBN தொகுப்பு அந்நியத் திருப்பிய கருத்துக்களை அனுமதிக்கும் ஒரு மூலம் ஆதரி சோலைகள் மற்றும் கவிப்பூக்கள் சைவாதான சோம்பியர்கள் தான் சிரமம் செய்யும். கவிச்சோலை உங்கள் மனதில் அமைந்தது, அதை இதில் பகிர்ந்து மெனுறுங்கள். இந்த சேனல் கவிதைகள், கவிதைகள், கவிதை மழை, கவிதை பூங்களை உங்களுக்கு பருவத்தக்கது. ஆரம்பத்தில் இயல்புபடுத்துவது முக்கியம், ஆனால் உடனே அசைவு செலுத்தினால், உம் நெஞ்சைச் சொல்லும் பகைவனுக்கும் உங்கள் கவிதைகளை பகிர்ந்து செய்யலாம். இந்த சேனலில் உள்ள கவிதைகள் இன்னும் உயர்ந்த மட்டங்களில் உள்ளன. அதிக மன்றம் கவிதைகள் உள்ளன, இவற்றை தாமினான்கள் சில நி஠ி அலையக் கூடியவர்கள்.

கவிதைகள் OLBN

19 Feb, 16:38


நிறைவான காதல் என்பது..

உங்களை எப்போதும் நலம்
விசாரித்துக் கொண்டிருக்காது..

என்னேரமும் உங்களை
தொடர்ந்து கொண்டாடாது..

எனக்காக இதை செய் என்று
உங்களை அழுத்தத்தில் தள்ளாது..

முக்கியமாக உங்களை தனிமையில்
தள்ளி வேடிக்கை பார்க்காது..

எப்போதேனும் உங்கள் சிரிப்பில் குறையிருந்தால் உங்களை தாங்கிக் கொள்ளவும் தயங்காது..

எந்த சூழ்நிலையிலும் தனிமை என்ற
ஒரு கடினமான சூழலில் தனியே விடாது..

உங்கள் அருகில் வந்து அமர்ந்து
கொள்ளும் உங்களின் நிழலை போல..

நிறைவான காதல்
ஒரு போதும் சலிப்பதில்லை!!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

18 Feb, 12:33


🧡💛💚

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

18 Feb, 05:03


உன் மீது நான்
வைத்திருக்கும்
உன்னதமான
இந்த அன்பை
யாரிடமும் சொல்ல
வேண்டாம்..

பலரும் இங்கு தவறான
அர்த்தத்தையே
புரிந்து
வைத்துள்ளார்கள்..

அது நமக்குள்
ரகசியமாகவே
இருக்கட்டும்..

அப்போதுதான் அது
புனிதமாக இருக்கும்!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

18 Feb, 02:31


ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் அவள் விழி தான்..

மறு மொழி பேசாமல்
தரலாம் மனதை அவளிடம்..

நட்சத்திர ஒளி போலே
கண்களை பார்த்ததும்
கண் கூசும்..

விசித்திர பார்வைகளில்
மனம் கவரும் விழிகள்
அது தானே..

ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் அவள் விழி தான்..

விழியோரம் விழியோரம்
வின்மினிகள் கசிந்திட நான் கண்டேன்
இதழோரம் இதழோரம்
தேன் துளிகள் முத்தமிட நான் கண்டேன்..

சுவாசம் தருகின்ற காற்றாய்
அவளும் உருவெடுக்க..

தேகம் குளிர்ந்துவிடும்
அவளை சுவாசம் செய்த உடன்..

போர்வைகள் கொண்டு வா
தேகத்தை போர்த்திட..

குளிர் தரும் காற்றில்
இருந்ததை மீட்டிட..

ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் அவள் விழி தான்..

இவள் விழி போல் உலகத்திலே
விழிகளை எங்கும் பார்த்ததில்லை..

விழி திறந்து பார்த்துடன்
பாறைகளில் கூட நீர் ஊரும்..

பேசும் வார்த்தை எல்லாம்
இசையை கேட்கும் காதுகளில்..

சிரிக்கும் பொழுதினிலே
இருளும் அகன்றே ஒளி பிறக்கும்..

வர்ணங்கள் இல்லா
வானவில்லும் அவளே
அந்த வானில்..

ஒரு முறை பார்த்தாலே
மயக்கம் தரும் அவள் விழி தான்!!

😍😍😍

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

17 Feb, 14:12


காரணம் தேடவில்லை
இன்னும் இன்னும்
காதலிக்கிறேன்..

அடர்ந்த உன் நேசக்காட்டில்
என்னோடு இன்னும்
உறவாடிக்கொண்டிருக்கிறது
வெயில் படாத உன் நினைவுகள்..

இது பகலா இரவா
என்றே தெரியாதபோது
என் பாதையை
யார் வழிமறித்தால் என்ன..

என் கற்பனைகளுக்கு
சிறகு விரிக்கும்
என் கவிதை இருக்கும்போது
என்னிடமிருந்து உன்னை பிரிக்க
உன் புறக்கணிப்புகளால்
முடியுமா என்ன..

என் உயிரை சுருட்டி
ஈரம் உலராத உன் பார்வைக்குள்
வைத்திருக்கிறேன்..

என் இதயத்திற்கு மலர் வளையம் வைக்க
உன் நிராகரிப்புகளால் எப்படி முடியும்?

என் தன்மானத்தை
தின்று தீர்த்து விட்டது
உன் பெருங் காதல்..

செரிமானமாவதற்கு
உன் உதாசினங்களை விரட்ட
காத்திருக்கவும் செய்கிறது..

பரிசோதனை முயற்சி
தோல்வி என்று
உன் சந்தேகத்தின் கதவடைத்து வா..

உனக்காக நான்
சேகரித்து வைத்திருக்கும்
கன்னிச் சொற்கள் தூவி
உன் கோபத்தோடு சல்லாபிக்க
காத்திருக்கிறது என் கவிதை!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 16:34


எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே
நீ வேண்டும்..

சில சமயம்
விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்!

❤️♻️🧸

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 14:32


நிஜமாய்..

நினைவாய்..

நீ அங்கே,

நான் இங்கே..

ஆனால்
அலைபேசி மட்டும்
காதலித்து கொண்டு
இருக்கிறது..

ஓசையால்!!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 13:30


காதலுக்கு பின்
காமம் என்றால்..

காமம் தீர்ந்ததும்
காதலும் தீர்ந்துவிடும்..

காமத்துக்கு பின்
காதல் கொள்..

ஆயுள் உள்ளவரை
ஆசையும் தீராது
காதலும் மாறாது!

❤️❤️❤️

இனிய காதலர் தின வாழ்த்துகள்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 06:31


நான் உன் சிரிப்பை பார்க்கவில்லை;
உன் கண்களை தேடவில்லை;
உன் அழகை ரசிக்கவில்லை..

இவை எதுவும் இதுவும் இன்றியும்
உன்னை காதலித்தேன் என் கற்பனையில்..

சொட்ட சொட்ட நனைகின்றேன்
மழைத் துளிகளால் அல்ல
கண்ணீர் துளிகளால்..

உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க முடியாது அந்த அன்புக்கு உரியவர்களால் மட்டுமே உணர முடியும்..

மறக்க முடியாத நினைவும் நீ தான்
வெறுக்க முடியாத உறவும் நீ தான்..

என்றுமே உன்னிடம் தோற்றுக் கொண்டுதான் இருக்கின்றேன்
அன்று உன்னை மறக்க தெரியாமல்
இன்று உன்னை வெறுக்க தெரியாமல்..

உன் முகம் பார்க்க முடியவில்லை
உன் குரல் கேட்க முடியவில்லை
மனம் மட்டும் உன்னை தேடுகிறது..

உன்னை பார்க்காமல் உன்னுடன் பேசாமல்
இருந்து விட முடிகின்றது ஆனால்
உன்னை நினைக்காமல் மட்டும் இருந்து விட முடியவில்லை..

நீ எங்கு இருக்கின்றாய் என்று தெரியவில்லை
ஆனால் உன்னை நினைக்கும் போதெல்லாம்
வந்து விடுகிறாய் கண்களின் வழியாய் கண்ணீராக..

உனக்காக எல்லோரையும் வெறுத்தேன்
நீ என்னை வெறுப்பாய் என்று தெரியாமல்..

இன்று நீ என்னை பிரிந்தாலும் மறந்தாலும்
என்றாவது ஒரு நாள் நீ என்னை
நினைக்கும் போது நான் உன் கண்களில் இருப்பேன்
கனவாக அல்ல கண்ணீர் துளிகளாக..

உண்மையான காதல் இருந்தால்
வார்த்தை தேவையில்லை
நினைவுகள் கூட பேசும்..

உயிராக அவளை நினைத்தேன் அப்போது
எனக்கு புரியவில்லை உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியும் என்று..

நீ இல்லாத கடந்த காலத்தைப் பற்றி
எனக்கு தெரியாது..

ஆனால்
நீ இல்லாத எதிர்காலம் இனி எனக்கு கிடையாது..

இந்த உலகில் இது வரை நேசித்த அனைத்தையும் விட
உன்னை நான் அதிகமாக நேசித்தேன்..

கண்களை மூடி தவம் இருக்கின்றேன்
நீ என் கனவில் வருவாய் என்று..

ஒரு நாள் நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்
அன்று புரியும் உனக்கு நான் படும் வேதனை..

அடிக்கடி பார்க்கிற எல்லோரையும் நேசிக்க முடியாது
ஆனால் நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடியாது..

உன்னோடு நான் இருந்த நாட்களை விட
உன் நினைவுகளோடு வாழும் வாழ்க்கை சுகமானது..

ஆயிரம் பேர் பல மணி நேரம் பேசினாலும்
நீ பேசும் அந்த சில நிமிடங்களுக்கு தான்
என் மனம் எங்கித் தவிக்கிறது..

அன்பு நிறைந்த உள்ளம் தான்
அதிகம் சண்டை போடும் பிரிவதற்கு அல்ல
பிரிய கூடாது என்பதற்காக..

உயிர் விட்டு போகும் உடலுக்காக விடும்
கண்ணீரை விட கொடுமை
உயிராய் காதலித்தவர் விட்டுப் பிரியும் போது
கண்களில் இருந்து வடியும் சிறு சிறு கண்ணீர்..

நீர் இல்லாமல்
வாடும் செடி
மழை இல்லாமல்
வாடும் பூமி
நீ இல்லாமல்
வாடும் நான்..

வருவாயா அன்பே என்னைக் காண?

🌺🌕❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 05:32


எப்பொழுதுமே
உன்னை
தூரத்தில் வைத்தும்
உன் நினைவுகளை
என்னருகில் வைத்துவிடுகிறது
இந்த காதல்..

அன்புக் காதலா!

🦋❤️🦋

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 04:09


காதலை காதலாக காதலிக்கும் காதலர்களுக்கு..

காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Feb, 01:12


பெருசு / இளசு
மன்மத ராசாக்கள்
அனைவருக்கும்..

“வாலட்டைன்ஸ் டே”
வாழ்த்துகள்!

💖💘💖

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

09 Feb, 05:09


என்னில் பாதி
எனக்குள் மிகுதி
அவள்..

அழகில்லை அழிவில்லை
ஆழமான அன்பு ஒன்றே
எங்கள் எல்லை!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

08 Feb, 14:58


டாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM

🔞 https://t.me/DocAntharangam

பாலியல் மருத்துவம்
♀ ஆலோசனைகள்
♂ குடும்பநல தகவல்கள்
♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள்
♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்

பாலியல் கல்வி

டாக்டர் அந்தரங்கம்:
🔞 https://t.me/DocAntharangam

Top Links: @TGLinksOLBN

கவிதைகள் OLBN

08 Feb, 11:33


அவகிட்ட எதை ரொம்ப miss பண்ணுற..? 🤔

அவளோட முத்தம்.. 😘

அப்ப அவளோட காதல்..? 😧

அந்த காதல்-னாலதான் அந்த முத்தத்துக்கு அவ்வளோ ஏக்கம்.. ❤️

இல்லனா வெறும் எச்சினு கடந்து போயிருப்பேன்ல..(!) 😡

💜💙💜

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

08 Feb, 04:19


பூக்களை
வாங்கினால்
புன்னகை இலவசம்
என்கிறாள்
இந்த குட்டி தேவதை..

உன் புன்னகைக்காக
இந்த பூக்களை
வாங்கிக் கொள்கிறேன்
என்றேன்..

புன்னகைத்தது
முட்கள் இல்லாத
அந்த
ரோஜா பூ!

🌹🌹🌹

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

05 Feb, 03:16


எத்தனை கனவுகள்,
எத்தனை அபிலாசைகள்,
எத்தனை அனுபவங்கள்,
எத்தனை வலிகள்,
எல்லாம் கடந்து போயிற்று,
அவ்வளவுதான் வாழ்வு..

ஆனாலும் -
பறவைகள் பிரியாமல் பறந்தன,
விடைபெறும் வேளை மிக சமீபமே..

இறைவனிடம்
ஒரு வேண்டுகோள் மட்டுமே..

இணையை
வலிக்காமல் பிரித்து எடு
என்று மட்டுமே..!!

😢😢😢

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

02 Feb, 01:00


மனதின் தோற்றங்கள்
முகத்தில் தெரிவதில்லை..

எது பிழையென
எவரும் உணர்ந்ததில்லை..

அவரவர் தேவைக்காய்
அவரவர் பயணம்..

உயரந்தவன்
திளைக்கிறான்
தாழ்ந்தவன் தவிக்கிறான்..

நடுநிலை என்பெதெல்லாம்
நா கூசா பொய்கள்..

உன்னையே நீ கேட்டுக்கொள்
நீ சரிதானா என்று..

வாய்ப்புகள் கிட்டாவரை எவரும் ராமனே..

வாசல்கள் திறந்த பின்னும்
வாய்ப்புகள் தவறவிட்டால்..

பிழையென்றே சொல்லும்
குற்றம் கண்ட பின்
குறை சொல்லும்..

இதே ஊர் சனம்!



ஞாயிறு வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

26 Jan, 01:30


ஒரு நாளின் தொடக்கமே
இனிப்பும் கசப்புமென
உருவகப்படித்தினால்..

எங்குமே
வெற்றியும் தோல்வியும்
பாதிப்பதில்லை..

எனதருமை குளம்பியே!

☕️🫖

ஞாயிறு வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

25 Jan, 09:21


டாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM

🔞 https://t.me/DocAntharangam

பாலியல் மருத்துவம்
♀ ஆலோசனைகள்
♂ குடும்பநல தகவல்கள்
♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள்
♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்

பாலியல் கல்வி

டாக்டர் அந்தரங்கம்:
🔞 https://t.me/DocAntharangam

Top Links: @TGLinksOLBN

கவிதைகள் OLBN

25 Jan, 02:43


எந்த பக்கம் பிடித்தாலும் ‌
மேல்நோக்கி எறியும்
தீபம் போல்..

எந்த நிலை வந்தாலும்
ஒரே நிலையில் இருங்கள்..

அது உங்கள் மதிப்பை‌ உயர்த்தும்!



இனிய காலை ‌வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

21 Jan, 00:31


உங்கள் அனைத்து பிரச்சினைகளையும்
தீர்க்கும் ஒருவரைத்
தேட வேண்டாம்..

உங்கள் பிரச்சினைகளை நீங்கள் ஒருவராக எதிர்கொள்ளவிடாத
ஒருவரைத் தேடுங்கள்!

🌸🌼

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

20 Jan, 01:11


எத்தனை
விலை கொடுத்தும்
எந்த அன்பையும்
வாங்க முடியாது..

அது
தன்னியல்பில்
தானாய் மலர்வது!

🧡💛💚

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

18 Jan, 00:32


நினைப்பவர்கள்
அல்ல..

உன்னை
புரிந்தவர்கள் மட்டுமே
உன் மனதை
அழகாக்க முடியும்!



இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

17 Jan, 02:08


பேச்சையும், உணவையும்
அவை சுவையாக
இருக்கும்போதே..

போதும்.. என்று
நிறுத்திக்கொள்ள
வேண்டும்!



இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

16 Jan, 01:47


நீ நலமாயிருத்தல்
காண்பதில் தான்..

நான் மகிழ்வுறுவேன்!

🩵🩶🤍

இனிய காணும் பொங்கல் நல்வாழ்துக்கள்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

15 Jan, 06:31


டாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM

🔞 https://t.me/DocAntharangam

பாலியல் மருத்துவம்
♀ ஆலோசனைகள்
♂ குடும்பநல தகவல்கள்
♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள்
♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்

பாலியல் கல்வி

டாக்டர் அந்தரங்கம்:
🔞 https://t.me/DocAntharangam

Top Links: @TGLinksOLBN

கவிதைகள் OLBN

14 Jan, 02:32


இல்லங்களைத்
தூய்மைபடுத்தி,
அரிசி மாவில்
கோலம் போட்டு..

மாவிலை தோரணமிட்டு, புத்தாடை உடுத்தி..

காய்கறி, பழம்,
கரும்பு, இஞ்சி மஞ்சள் கொத்துடன் கதிரவனுக்கு
நன்றி செலுத்துவோம்!

🧡💛💚

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Jan, 00:34


தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்..

உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்..

உறங்கும் பெண்களை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்..

மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்..

பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்..

என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!

🌺🌸🌼

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Jan, 07:27


ஒருவர்
பார்வையில்
நீங்கள்
தவறானவர்
என்று
சித்தரிக்கப்பட்டால்..

ஆம் !!
நான் அப்படி தான்
என்று கூறி
அந்த இடத்தை
விட்டு நகர்ந்து
விடுங்கள்..!

Dont explain yourself
to toxic people

🌷🤍💗🏵

இனிய நாள்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

09 Jan, 17:53


💜💞💙

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

01 Jan, 06:04


கொஞ்சம் கவிதை
கொஞ்சும் கவிதை
கொஞ்சம் எழுதவா
கொஞ்சும் இதழ்களில்..

கொஞ்சம் எழுதியே
கொஞ்சி எழுதியே
கொஞ்சம் நகர்கிறது
கொஞ்சா நினைவுகள்..

கொஞ்சம் நீ ஒதுங்கினால்
கொஞ்சும் உறக்கம் என் கண்களில்!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

01 Jan, 04:04


இன்பம் பொங்கும் இனிய ஆண்டாக அமையட்டும்..

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க!!

அன்புடன்..

🌺🌸🌼

Happy New Year 2025

🌺🌸🌼

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

31 Dec, 11:47


விரும்பிய அனைத்தையும் அடைவது
மட்டுமே வெற்றியல்ல..

விரும்பிய ஏதோ ஒன்றை இழக்காமல் இருப்பதும் தோல்வியாகாது!

😇🍭🥰

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

28 Dec, 04:51


உலகை காப்பது நமது வேலையல்ல..

முதலில் நாம் அதை உருவாக்கவில்லை..

அது எங்கு செல்கிறது என்ன நடக்கிறது என்பது நமது பொறுப்பல்ல..

உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்..

அந்த மாற்றத்திலேயே உலகின் ஒரு பகுதியை மாற்றி விட்டீர்கள்!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

27 Dec, 11:32


பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை..

சாப்பிட்டாயா எனக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை..

தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை..

நோய் வந்தால் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை..

குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை..

போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என
வழியனுப்ப
ஒருவர் இருக்கும் வரை..

வீட்டைக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை..

தோற்றுப் போய் திரும்புகையில்
தோள் சாய்த்துக் கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..

போ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை..

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை..

எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை..

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை..

தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரை..

துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
ஒருவர் இருக்கும் வரை..

மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை
மட்டுமே..

வாழ்வு வசந்தமானது!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

27 Dec, 00:30


உனக்கு பிடிக்கும்
என்பதால் அல்ல;
எனக்கு பிடிக்கும்
என்பதால்
மல்லிகை சூடி
கொள்வாய்..

காலைப்பொழுது
விடியும் முன்பே
கசங்கிடும் என
தெரிந்தும்!

😘😘😘

மார்கழி கவிதை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

26 Dec, 12:05


இயற்பியல் படிக்கவந்த என்னை இதழியல்
படிக்க வைத்தாய்..

விந்தை புரியும்
விழிகளால் வேதியியல்
மாற்றங்கள் நிகழ்த்தினாய்..

சிரித்து பேசி சிலாகித்து
செந்தமிழை ஊற்றினாய்..

ஐ லவ் யூக்கு மட்டும்
ஆங்கிலம் தொட்டாய்..

கன்னத்து மச்சங்கள்
காட்சியளிக்கிறது
கணித குறியீடுகளாய்..

உன் ஐவிரல் பூமியில்
விளையும்
நகங்கள் சொன்னது
புவியியல் தன்மையை..

தலையில் பூச்சூடி
தாவரவியலையும்
தன்பக்கம் இழுத்தாய்..

கூடி வாழ்ந்து
குடிமையியலை
கொண்டாடினாய்..

பொன் ஆபரணங்களால்
பொருளியல்
உன் வசம் ஆனது..

வா ஒரு முத்தம்
என்றால்
வணிகவியல் பேசுகிறாய்..

அதனால்தான்
என்னவோ
பள்ளியறைக்குச்
செல்லாமல் உன்
பக்கத்திலேயே.. நான்

இத்தனையும் சொல்லித்தந்து
இதயம் கவர்ந்தவளே..

உயிரியலுக்கும்
ஒரு நேரம் ஒதுக்கு..

நாளைய வரலாறு
நமதாகட்டும்!

💜💕💙

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

24 Dec, 06:30


கணவனும் அறிந்திடப் போவதில்லை அவள் கத்தலுக்கான காரணத்தை..

"தேடுவதே வேலையா"வென
முறைக்கும் மகனறிவானா
அவனை படித்ததால்
மூளை மழுங்கியதென்று..

"கீழே தவறவிட்டுக் கொண்டே" இருப்பிங்களா?..
வருந்தும் மகளறிவாளா
உறவுகளை இறுக்கப் பற்றியதில் தளர்ந்த நரம்புகளைப்பற்றி..

உச்சந்தலையில்
பரவிய அனல்..
உள்ளங்கையையும் பாதத்தையும்
பற்றிக் கொள்ள..

உச்சியில் ஆரம்பித்த கங்கை
முதுகின் வழி தரையிறங்க
வார்த்தைகளானது ரணம்..

மடி தேடி
குழந்தையாய் தவிக்கிறது
அவளின் "ஏழாம் பருவநிலை"..

காலநேரமறியாத உதிரப்போக்கும்..

கழிந்திடாத கழிவுகளும்
உடலெங்கும் நர்த்தனத்திலிருக்க..

மடிகள்
தரவேண்டாம்..

ஊற்றும் வேர்வைக்கு
சிறு துண்டுத் துணியாக இருங்கள்..

அவளின் இறுதிக் கால உதிரப்போக்கை வழியனுப்ப..

மென்மையான சிறு தலைகோதல் போதுமானது அவளுக்கு!

🌺🌸🌼

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

24 Dec, 02:40


ஆயிரம் உதடுகள்
ஆறுதல் கூறினாலும்..

10 நிமிடம் தனிமையில்
நமக்கு நாமே கொடுக்கும்
தைரியம் மட்டுமே..

நம்மை அடுத்த
கட்டத்தை நோக்கி
பயணிக்க வைக்கிறது!

🖤🖤🖤

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

22 Dec, 01:34


கற்பனையை கலைத்து;
யதார்த்ததை உணர்ந்து..

பொறுப்புகளை சுமந்து;
நிறை குறைகளை ஏற்று..

இணையும் மனங்கள்
ஏறுவதில்லை..

நீதி மன்றங்களுக்கு!

❤️❤️❤️

ஞாயிறு காலை வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

19 Dec, 03:08


மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத்
தேடியபோதுதான்
மண்டபத்தில் தாய்மாமனைக்
காணவில்லையென்று அறிந்தது மணமேடை..

பத்திரிக்கையில்
தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற
கோபத்தை
கல்யாணத்தை புறக்கணித்தலால்
ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன்..

மண்டப வாசலில்
முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்..

கையைப் பற்றிய
மச்சானின் அழைப்பை உதறிவிட்டு;
தங்கையின் அழுகையை
தரையில் எறிந்தார்..

பங்காளிகள் பஞ்சாயத்தை
சொம்போடு வீசினார்..

யார் பேச்சுக்கும் மசியாமல்
வீராப்பு காட்டியவரை..

மாமா... என்றழைப்பில்

கண்ணீர் கசியச் செய்த மணப்பெண்
மணமேடை இறங்கியிருந்தாள்..

நீ எதுக்கும்மா மேடைய விட்டு வந்த என்று,
துண்டு கீழே விழுந்தது தெரியாமல்
உருகியோடியவர்..

பெண்ணை மணமேடையில்
நிறுத்தியபோது
நல்ல நேரம் துவங்கியிருந்தது..

நான் கோபப்படும் உரிமையை
நீதானம்மா கொடுத்த என்றபடி..

தாய்மாமன் சீர் செய்தவரின்
காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில்..

அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார்..

ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம்!

மண்டப வாசலில்
துண்டாகிக் கிடந்தது வீராப்பு!!

தாய் மாமானும் தாய்க்கு நிகர்
என உணர்த்தியது!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Dec, 03:31


கோபம் அதிகம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டு வீடாதீர்கள்..

விழும் அடிகள் தரும்
வலியை விட
உதிரும் வார்த்தைகள்
தரும் வலிகள் மிக
அதிகம்..

மரணம் வரை
வலியை சுமக்க மனம்
ஒன்றும் மண் அல்ல!

🚶🏻🖤

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

14 Dec, 00:30


நம்மை
நேசிப்பவரைவிட
ஒரு படி அதிகமாக
அவர்களை நேசித்துவிட வேண்டும்..

அவ்வளவு தான்
வாழ்க்கை!

🥰🥰🥰

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

13 Dec, 12:21


பெண் என்பவள்
போதை அல்ல;
நாம் கண்டோ,
உண்டோ களிப்புற..

பெண் என்பவள்
ஆடை அல்ல;
நாம் உடுத்தி, கிழித்து சேதப்படுத்த..

பெண் என்பவள்
கண்ணாடி அல்ல;
நம்மையே நாம் அங்கு காண..

பெண் என்பவள் கொடி
கம்பம் அல்ல;
நம்மை கொடியாய் உயர்த்த..

பெண் என்பவள்
கனவு அல்ல;
நம் ஆசைகளை மட்டும் காண..

பெண் என்பவள்
வர்ணம் அல்ல;
நம் கொண்டாட்டங்களுக்கு பூசி மகிழ..

அப்படியெனில் பெண் என்பவள் யார் தான்??

பெண் ஒரு மருந்து;
நாம் அன்பிற்கு ஏங்குகையில்..

பெண் ஒரு ஊசி;
நம் கிழிசல்களை தைத்து அழகாக்கும்..

பெண் ஒரு கூரிய கத்தி;
நம் தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்..

பெண் ஒரு கொடி;
உயரே பறந்து நம்மை
பார்க்க வைப்பாள்..

பெண் ஒரு காட்சி;
நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்..

பெண் ஒரு தூரிகை;
நம் வெற்று வாழ்க்கையில், வர்ணம் பூசி,
பின் வர்ணமாகி, நம் கறைபட்டு கரைந்தே போகிறாள்!!

🌄

தீப ஒளி வாழ்துக்கள்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Dec, 00:30


உங்களை நீங்கள்
நேசியுங்கள்..

உலகமே உங்களை
நேசிக்கும்!



காலை வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Dec, 15:30


உங்கள்
வாழ்க்கையில்
தவறான
நிகழ்வுகள் நேரும்
போது புத்தகத்தை
மூடாதீர்கள்..

அடுத்த பக்கம்
திருப்பி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள்!

🌃

இனிய இரவு!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Dec, 01:30


பொக்கிஷத்தை
எனக்குள் புதைத்து
கொண்ட பேரழகி அவள்..

என்னவள்!

💜💞💙

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

10 Dec, 18:36


திருமணமானவர்கள் முத்தமிடுவதை நிறுத்தினால் அவர்களின் உறவில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

🔞
@DocAntharangam

கவிதைகள் OLBN

07 Dec, 11:41


நிபந்தனையற்ற
அன்புக்கு..

வயது ஒரு
பொருட்டல்ல!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

05 Dec, 02:19


முத்தம் என்ற
சொல் மட்டும் போதாது,
அதில் பொதிந்துள்ள
உணர்வுகளை சொல்ல..

ஒரு சொட்டு
மழைத்துளி போல,
இதயத்தில் இறங்கி குளிர்ச்சியை தரும்..

ஒரு பூவின் மணம் போல,
மனதை மயக்கும்,
மனதை ஈர்க்கும்..

ஒரு தாய் தழுவும் போது
குழந்தைக்கு கிடைக்கும்
அந்த அமைதி..

ஒரு காதலன்
தன் காதலியை
கண்களில் பார்த்து
சொல்லும் வார்த்தைகள்..

ஒரு நண்பன் தன் நண்பனை
பிரிந்த பின் நினைத்து
வருந்தும் தருணம்..

முத்தம் என்பது
வெறும் தொடுதல் அல்ல..

அது ஒரு உணர்வு..

ஒரு உறவு..

அது மன்னிப்பை கேட்கும் வழி..

அது நன்றி சொல்லும் வழி..

அது ஒரு வாக்குறுதி
என்றென்றும் இருப்போம் என்று!

அது ஒரு ஆறுதல்..

கண்ணீரை துடைக்கும் துணிச்சல்!

முத்தம் என்பது வாழ்க்கை..

அதுவே நம்மை முழுமைப்படுத்தும்!

ஒரு முத்தம் தருவதால்
உலகம் இன்னும் அழகாகிறது!!

😘😘😘

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

26 Nov, 05:57


பாதத்திற்கும் உன் உதட்டிற்கும்..

அறுபத்தியிரண்டு
முத்தத் தொலைவு!

😘😘😘

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

21 Nov, 04:00


உன் கண்ணால்
ஈற்கப்பட்டு மறைந்த
என் கவிதைகள் எல்லாம்..

உயிர் பெற்று எழுத
தோணியது!

💗💗💗

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

21 Nov, 02:06


போராடி தோற்றுப்
பார்..

ஜெயித்தவனும்
உன்னை
மறக்கமாட்டான்!



இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

18 Nov, 03:12


நீயாக வந்து
சரி செய்யும்வரை
ஆறுவதில்லை..

நீ தந்த காயங்கள்!

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

16 Nov, 23:56


எப்போதும்
உங்கள் இதயம்
அதிகம்
புன்னகைக்கும்
இடத்தில் இருங்கள்!

🧡💛💚

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

15 Nov, 00:54


மனதிலிருந்து எண்ணமும்
எண்ணத்திலிருந்து
செயலும்
செயலில் இருந்து
வாழ்க்கையும்
தொடங்குகிறதது..

அந்த மனதை
எப்பொழுதும்
வாட விடாமல்
புத்துணர்சியோடு
பார்த்துக் கொண்டாலே
போதும்..

அன்றாட சந்தோசங்கள்
யாவும் நம்மோடு
நிலைத்திருக்கும்!



இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Nov, 01:00


இப்போதெல்லாம்
நீயென்னை விட
நன்கு
கைத்தேர்ந்து
விட்டாய்
என்கிறாய்..

ஆம் சரியே..

கற்றுக்
கொடுப்பதாய்
என்னிடம் வாங்கிய
முத்தங்களை
எப்போது நீ
திருப்பி அளிப்பாய்?

🥰🥰🥰

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Nov, 16:33


உரிமை உள்ள உறவும்
உண்மை உள்ள அன்பும்..

நேர்மை உள்ள நட்பும்
நம்பிக்கை உள்ள வாழ்வும்..

என்றும் விட்டுப் போவதுமில்லை;
தோற்றுப் போவதுமில்லை!



இனிய இரவு!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Nov, 01:52


பிடிவாதமும்
கர்வமும்
பறந்து தான்
போகிறது..

நம் இதயத்தில்
இடம் பிடித்தவர்களுக்காக!

❤️❤️

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

07 Nov, 13:00


உங்களை
புரிந்தவர்களுக்கு
மட்டும் நல்ல
புத்தகமாக இருந்தால்
போதும்..

புரியாதவர்களுக்கு புதிராகவே
இருந்துவிடுங்கள்!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

06 Nov, 02:44


காட்டை பிரித்து;
காமம் விலக்கி;
காலில் சங்கிலியிட்டு;
மண்டியிடப் பழக்கிய
யானை..

ஆசீர்வதிக்கும் என்று
எப்படி நம்புகிறீர்கள்?

💔🐘💔

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

02 Nov, 07:01


பார்க்கும் கோணம்
பிழை என்றால்..

தோன்றும்
காட்சிகளும்
பிழையாகத்தான்
இருக்கும்!

💔💔💔

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

02 Nov, 04:30


அன்புக்கும், புரிதலுக்கும்
சம்பந்தம் இல்லை..

அதீத அன்பு இருக்கும்
இடத்தில் கூட
புரிதல் இல்லாமல்
இருக்கலாம்!

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

02 Nov, 01:52


புதிய நாள்,
புதிய நம்பிக்கை,
புதிய மகிழ்ச்சி!

A new day,
New hope,
New happiness!

🌻🌻

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

01 Nov, 14:30


கண்ணுக்கு முன்னாடி
களவாடி போகுதே..

ஒரு மின்மினி
ராப்போது
ராகங்கள் சூடி..

உன் நியாபக
ஆசைகள் கோடி!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

01 Nov, 11:30


மழை வந்தா குடை
பிடிக்குறோம்..

மழை போனா டீ
குடிக்குறோம்..

ஹி.. ஹி.. ஹி..

😄😄😄

மாலை வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

01 Nov, 04:30


முதல் உயிர் மொழியும்
கடைசி மெய் விழியும்
நீ தான் மனதில்..

என் மஞ்சள் நிலவே!

💛💛💛

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

01 Nov, 01:33


பூ பூத்த நந்தவனம்
அதில் புதிதான தூவானம்..

சிறு பார்வையோடு
உன் புன்னகை!

🩷🩷🩷

இனிய நாள்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

30 Oct, 02:46


எத்தனை
பேசித்தீர்த்தாலும்
போதவில்லை..

உன் குரலை
நாளெல்லாம்
கேட்டாலும்
ஆசை தீரவில்லை..

நீ, நான் நிதமும்
கேட்க விரும்பும்
இனிமையான
பாடல்போல்..

நிதமும்
அருகிலிருந்தாலும்
திகட்டாத காதல்!

💙💞💜

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

23 Oct, 01:21


ஒரு ஆணை
அளவிற்கு அதிகமாக
கொஞ்ச வைக்கவும்;
அதிகமாக கெஞ்ச வைக்கவும்..

அவனை உண்மையாக
நேசிக்கும் பெண்ணால்
மட்டுமே முடிகிறது!

♥️♥️♥️

காலை வணக்கம்!

#GoodMorning #HaveANiceDay #WednesdayThought

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

13 Oct, 16:31


மாலை மயங்கும் பொழுதை
மயக்க வரும் நிலவை
காவலாக்கி..

நட்சத்திரங்களை சோளியாக்கி
விளையாடும் வானத்தை..

தோட்டப் பூக்கள்
வாசம் நுகர்ந்து
உன் மருதாணி வாசக் கூந்தலில்
செருகி..

மருகும் புது வாசனையில்
உருகிடும் மந்தகாச பொழுதோடு..

உன் விழியோடு விளக்கேத்தி
என் மொழியோடு உணர்வை
உயிர்ப்பாக உணவாக
இதழோடு இதமாக பரிமாறியே..

இயந்திரமயமாகிய உலகில்
இதயங்களின் ஸ்பரிசத்தில்..

இரவுக்கு விடுப்பு கொடுத்து
நமக்கு வேலைநாளாக
அறிவித்து
முத்தக்காட்டில் மொத்தம்
தாரைவார்த்து..

எனக்கொரு நாளும்,
உனக்கு ஒருநாளும்,
நமக்கு ஒரு நாளும்
விருப்பப்படி
கொண்டாடி தீர்ப்போம்
வாடி!

ஆதாமுக்கும், ஏவாளுக்கும்
சவாலிடும்
பெருங்காதலால்
தோதுவான கணங்கள் செய்து..

நம்மை தேடி கண்டெடுத்திடுவோம்
என் பிரியசகியே!

🧡💛❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

13 Oct, 02:30


என் "மெளனத்துக்கு"
திமிரென்றோ
ஏமாற்றுக் காரியென்றோ
தயவு செய்து பெயரிட்டு விடாதே..

என் "மௌனம்" பல
வலிகளைச் சுமந்து நிற்கிறது..

என் மௌனம் பல
நிராசைகளை ஏற்று நிற்கிறது..

என்னுள் எழும்
கேள்விகளுக்கெல்லாம்
என்னிடம் பதில் இல்லாத போது..

நான் தனிமையைத் தேடி
மௌனத்தை அணைத்துக்
கொள்கிறேன் அவ்வளவு தான்..

இதற்கு திமிரென்றோ
ஏமாற்றுக் காரியென்றோ
தயவு செய்து பெயரிட்டு விடாதே..

நான் உன்மேல் கொண்டுள்ள
அன்பும் நேசமும் மாசற்றது..

அதனால் தான் சொல்கிறேன்..

தயவு செய்து
என் மௌன நிலை இனிமேலும்
கலையாவிடினும்
அதற்கு பெயரிட்டு விடாதே..

அதற்கு "மௌனம்" என்ற பெயரே
இருந்து விட்டு போகட்டும்!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

13 Oct, 00:30


நீ என்னை சுடும் பட்சத்திலும்..

நான் உன்னை முத்தம் இடுகிறேன்!

😍😍😍

இனிய காலை!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Oct, 16:30


இவ்வுளவு தானென
கணக்கிடமுடியா
இத்தனை காதலையும்
அத்தனை உணர்ச்சி
வெடிப்புகளையும்
கவனச்சிதறல்
இல்லாமல்
கொட்டித் தீர்த்தான்
நாளை விடுமுறை
என்பதால்..

முப்பொழுதும்
தீர்த்த மழையில்
போதையாகி
மட்டையாகும் வரை..

காலையில் அடியே..
விடியாமூஞ்சி..
தேநீர் கொண்டுவா..
விலக்கப் போனோம்
பல்லையென்று..

நக்கலாய் இளித்தது
வெறுப்பை உமிழென்று..

மோகவலை போதையில்
அறுத்த காதல்
வலி பொறுக்காது!

🙈🙈🙈

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Oct, 12:31


உனக்கென என மட்டும் வாழும் இதயமடி..

உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி!

♥️😍🍫

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Oct, 03:30


என்
இதயத்தின்
நரம்பை
அன்பால்
கிழிக்கும்
மெல்லிசை
அவள்..

என்னவள்!

💕💞💕

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

12 Oct, 00:59


அழகென்ற
வார்த்தைக்கும்
அழகான
வார்த்தைக்கும்
இடைப்பட்ட
எழுத்துத்தான்..

உணர்வென்ற உயிர்!

நீ என்னுள் பூக்க..
நான் உன்னுள் மலர..

என் கண்மணி!

🧡💛💚

மகிழ் காலை வணக்கம்!

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Oct, 13:00


சிரிக்க மறந்த
இடங்களில்..

என் நிழல்..
எனக்கே நடித்து
காட்டியது..

எந்தன் வலியை!

💔💔💔

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Oct, 10:58


கனவை ஒருபோதும்
தள்ளிப் போடாதீர்கள்..

பணம் ஒரு நாள்
வரும்..

அப்பொழுது
அதை அனுபவிக்க
வயதோ, உடலோ
ஒத்துழைக்காமல்
போகலாம்!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

11 Oct, 07:00


எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்தாலும்;
பலவீனமாக உணராதீர்கள்..

தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

10 Oct, 03:31


பெண்களால் கள்ளம், கபடமில்லாமல் நேசிக்கப்படும் ஆண்களே..

கடவுளால் நிபந்தனை இன்றி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

பெண்கள் நேசிக்கக் கூடிய ஆண்களாக மாறுங்கள்..

அதுவே வாழ்வின் உத்தமம்!!

❤️❤️❤️

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

10 Oct, 01:33


மாற்றம் மட்டுமே
வாழ்வில்
நிலையானது..

அந்த மாற்றங்களுக்கு
ஏற்ப நம்மை நாம்
மாற்றிக்கொள்ளும்
திறனே நமது
வெற்றியை
தீர்மானிக்கிறது!

☔️☔️☔️

இனிய காலை !

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

09 Oct, 11:15


நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்..

என் அம்மா!

என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண்..

என் சகோதரி!

நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண்..

என் ஆசிரியை!

நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண்..

என் தோழி!

எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண்..

என் மனைவி!

நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண்..

என் மகள்!

நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண்..

என் தாய்நாடு!

ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள்..

நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு!

நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு!!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

07 Oct, 02:57


ஆண் - பெண் நட்பு..

தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்..

பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்..

அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ? என்று யோசித்து, யோசித்து
பேசும் தருணங்கள்..

காதல், கீதல் என
உளறுவானோ? என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்ப காலங்கள்..

புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்..

புரிந்து கொண்ட பின்,
ஆண் - பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்..

தோல்விகண்டு
துவளுகையில்
புதுத்தெம்பூட்டி,
அடுத்த முயற்சிக்கு
அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி..

ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்
பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்..

முடிவில்லா முடிவில் - நட்பு
வளர்ந்து நிற்கும்..

என்னை வேறு யாரும் புரிந்து இருக்கமாட்டார்கள்
என் தோழியை/நண்பனை
விட நன்றாக
என்னும் ரீதியில்..

வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண் - பெண் நட்பு..

நண்பர்கள் தினம் முடிந்தது..
நட்புக்கு முடிவேது?

அன்பும் நட்பும் தொடரட்டும்!!

💜💙

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

03 Oct, 00:30


இனிய தேநீர் காலை!

☕️☕️🫖

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

02 Oct, 12:10


மழை வந்துவிட்டால் போதும் துள்ளிக்குதிக்கும் மழலை போல் ஆகிவிடுவாள்..

என்னவள்
அப்படித்தான்!

☔️🤌🏻

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

27 Sep, 02:52


புரிதல் மட்டும்
இருந்து விட்டால்..

எந்த விளக்கமும்
தேவை இல்லை!



@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

23 Sep, 11:37


ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ.. 🤩🤩😍😍🤙🤙🫰

Cute Evening 💘💫💫🤗

@KavithaigalOLBN

கவிதைகள் OLBN

23 Sep, 00:30


முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே..

ஆயிரம் முறை
தோற்றாலும் வெற்றி
நிச்சயம்!



இனிய காலை வணக்கம்!

@KavithaigalOLBN

11,952

subscribers

9,998

photos

278

videos