மனித ஆயுள்நாட்களை நிர்ணயிப்பது நுரையீரல், சிறுநீரகம் அவற்றின் செயல்பாடாகும். இவற்றை கெடுப்பது - தவறான உணவு முறை, நகர வாழ்வியல், பருவகாலம், தவறான சுற்று சூழல் மற்றும் அப்பகுதியின் மண்ணும்...
கடும் நோயினால், தோல் பிரச்சனையினால், சுவாச பிரச்சனையினால், சிறுநீர் / மலம் வெளியேறா நிலையினால், பசியற்ற நிலை, உறக்கமின்மை, போன்றவற்றால் அவதியுற்றவர்களுக்கு நான் தொடுசிகிச்சை அளித்தபின் கூறும் அறிவுரை -
எளிதாக செரிமானமாகக்கூடிய உணவு மற்றும் நல்ல சுகாதாரமான தூசி மாசு இல்லாத , சாலை போக்குவரத்து குறைந்து தாவரங்கள் பறவைகள் விலங்குகள் வாழும் சரியான தட்பவெப்பமுள்ள கிராம பகுதிக்கு இடம் பெயர்ந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மாத்திரை மருந்தில்லாமல் நிரந்தரமாக குணமாக்கும் நிலையை உருவாக்கிட கூறுவேன் ...
வெளிநாட்டவர்கள் கடும் பொருளாதார செலவு செய்து சுத்தமான பகுதிக்கு தமிழகத்தையும் குறிப்பிட்ட மலைவாழ் தளங்களையும் தேர்வு செய்து 3 - 5 மாத காலம் தங்கி அப்பகுதியின் உணவுகளை உண்டு பருகி ஆரோக்கியம் பெற்று செல்கின்றனர். ஆனால் நாம்தான் இதை கவனத்தில் கொள்வதில்லை தேடுவது அனைத்தும் ரிப்போர்ட் பார்த்து சிகிச்சை / ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் யார் என தேடி அலைகிறோம்.!!!
உடல்தான் மிகச்சிறந்த " ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் " உண்ட உணவை செரிக்க வைப்பதற்கு சுவாசிக்கும் காற்றின் துனை அவசியமாகும்.! காற்றை சுத்தப்படுத்த நுரையீரலின் இயக்கம் முக்கியமானது. காற்றில் ஈரத்தின் கனம் கூடினால் அவற்றை பிரிக்கும் ஆற்றல் சிறுநீரகத்திற்கு உள்ளது ..
இவற்றை உடல்தான் செய்ய வேண்டுமே தவிர கருவிகளோ மாத்திரை மருந்தோ அல்ல..
நமது மூளையை யாரோ ஒருவர் Hack செய்கின்றனர் என்றால் எவ்வளவு தவறு சிந்திக்காமல் இருக்காதீர்கள். உடலிற்கு துரோகம் செய்தால் அதற்கான தண்டனையை உடல் கொடுத்தே தீரும் இது இயற்கை ..
இது மருந்தில்லா மருத்துவமாகும்.
#acupuncturist | #Ashifshaikh.pune | #Marundhillamaruthuvam | #naturaltreatment