Tamil Tajweed @tamiltajweedchannel Channel on Telegram

Tamil Tajweed

@tamiltajweedchannel


This channel is all about Learning Quran with Tajweed rules and other Islamic Content

Our other telegram channel

To Get Daily Updates on Home products offers and deals Subscribe to 👇

https://t.me/homeproductoffers

Tamil Tajweed (English)

Are you looking to learn the Quran with Tajweed rules and immerse yourself in other Islamic content? Look no further than the "Tamil Tajweed" Telegram channel. This channel is dedicated to providing valuable resources and teachings to help individuals improve their recitation of the Quran while adhering to the rules of Tajweed

By joining the "Tamil Tajweed" channel, you will have access to a wealth of knowledge and guidance on how to perfect your pronunciation, articulation, and rhythm when reciting the Quran. Whether you are a beginner or looking to enhance your existing skills, this channel is the perfect place to deepen your understanding of the Quran

In addition to Quranic studies, the channel also offers other Islamic content to enrich your spiritual journey. From insightful articles to motivational quotes, the "Tamil Tajweed" channel aims to inspire and educate its members on various aspects of Islam

For those interested in exploring more content, the channel provides links to other Telegram channels that offer daily updates on home products, offers, and deals. By subscribing to these channels, you can stay informed about the latest promotions and discounts on a wide range of products

Join the "Tamil Tajweed" channel today and embark on a rewarding journey of learning, spiritual growth, and community engagement. Let us come together to deepen our connection to the Quran and strengthen our faith in the teachings of Islam. Subscribe now and start your path towards Quranic excellence and spiritual enrichment!

Tamil Tajweed

08 Feb, 03:42


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா அமாத்தனா வஇலைஹிந் நுஷுர்
எங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதிகாலை நேரத்தில் தொழ
வாய்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும்.
யா அல்லாஹ் பரக்கத்தான இவ்வேளையில் உன்னை பணிந்து
கேட்கிறேன் ,

இந்த நாளின் அனைத்து நன்மைகளையும் எங்களுக்குத் தருவாயாக !
எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!

எங்களின் ரப்பே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லதையே அளிப்பாயாக!
அல்லாஹ்வே எனது காரியங்களுக்குப் பாதுகாவலாய் அமையும் எனது தீனை செம்மைப்படுத்துவாயாக! எனது வாழ்வு கழியும் இந்த துன்யாவை எனக்கு முறைப்படித்துத் தருவாயாக நான் மீண்டு எழும்
மறுமை வாழ்வை செம்மையாக்குவாயாக நற்காரியங்களைச் செய்வதில் எனது வாழ்நாளை அதிகப்டுத்துவயாக தீய காரியத்தை விடுவதில் மரணத்தை எனக்கு சுகமாக்குவாயாக

அல்லாஹு ம்ம் ஸல்லி
வஸல்லிம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
#subscribe_tamiltajweed
#tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed@tamiltajweedChannel

Tamil Tajweed

07 Feb, 03:27


மக்காவை வெற்றிகொள்ள நபிகளார் ரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். போருக்குத் தயாராகும்படி தோழர்களிடம் கூறியபோதுதான் எங்கு செல்கிறோம்? என்று அவர்களுக்குத் தெரிந்தது.

ஆனால் ஹாதிப் இப்னு அபூ பல்தஆ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை மக்கத்து மக்களுக்கு அறிவிக்க முயன்றார். மாபெரும் குற்றச் செயல் அது. அல்லாஹ்வின் கிருபையால் அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நபிகளார் விசாரித்தார்கள். அதற்கு அவர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத உமர் (ரலி), "இறைத்தூதரே! இவர் நயவஞ்சகர். இவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள்'' என்றார்.

அப்போது நபிகளார்: "உமரே! இவர் பத்ர் போரில் கலந்துகொண்டவர். பத்ரில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, "நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள், உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்'' என்று அல்லாஹ் கூறியது உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். அதுகேட்ட உமர் (ரலி) அழுதுவிட்டார். (புகாரி)

ஒருவரிடம் ஒரு தவறைக் கண்டால் அவரது கடந்த கால நன்மைகளை உடனடியாக நாம் மறந்து போகிறோம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?

தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.

எய்யப்படும் அம்புகள் எல்லாம் இலக்கை துல்லியமாக தாக்குவதில்லையே. யானைக்கும் அடி சறுக்கத்தான் செய்யும்.

மனைவியின் ஒரு தவறு, கணவனின் ஓர் அலட்சியம், பிள்ளையின் ஒரு கவனக் குறைவு, பணியாளரின் ஒரு குற்றம், நண்பனின் ஒரு புறக்கணிப்பு என அனைத்தையும்…

"அவருக்கும் ஒரு பத்ர் இருக்கும்'' என்ற கண்ணோட்டத்தில் நோக்குவோம்.
ஒரேயொரு தவறுக்காக ஒருவரது கடந்த கால நன்மைகளை உதாசீனம் செய்ய வேண்டாம்.

மனிதர்கள் எல்லோரும் எப்போதும் மலக்குகளாகவே இருக்க வேண்டும் என்று நாம் ஏன் எதிர்பாக்கிறோம்?

✍️ நூஹ் மஹ்ழரி
#tamiltajweed@tamiltajweedChannel
#tamiltajweed
#subscribe_tamiltajweed
#follow_tamiltajweed

Tamil Tajweed

06 Feb, 03:28


உஹத் போர் முடிந்த மறுநாள். உயிர் தியாகம் செய்த நபித்தோழர்களை அடக்கம் செய்யும் பணி துவங்கியது.

அங்கே வந்த நபிகளார் தோழர்களிடம், "அம்ர் இப்னுல் ஜமூஹ் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஹிராம் (ரலி) ஆகிய இருவரையும் ஒரே மண்ணறையில் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தனர்'' என்று சொன்னார்கள். (ரஹீகுல் மக்தூம்)

பரஸ்பரம் நேசித்தவர்கள். மரணமும் மண்ணறையும் கூட அவர்களைப் பிரிக்கவில்லை. பிரிக்க வேண்டாம் என்று நபிகளாரே கூறிவிட்டார்கள். அதற்கு நபிகளார் கூறிய காரணம்தான் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயம்.

"பரஸ்பரம் நேசித்த நண்பர்கள்'' என்பது எவ்வளவு அழகான புகழ்மாலை!

நல்ல குணங்களுக்காக மக்களிடையே ஒருவர் நினைவு கூரப்படுவது எவ்வளவு அழகு!

அன்பானவர், வாரி வழங்குபவர், உன்னதமானவர், மென்மையானவர் என்றெல்லாம் அறியப்படுவது எவ்வளவு அற்புதம்!

சிலருடைய பெயர்கள் நினைவு கூரப்பட்டால் கேட்பவரின் முகத்தில் அவர்களின் உருவம் ஒருகண நேரம் மின்னி மறையும். அந்த வேளையில் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றும். அது அவ்வளவு அழகாக இருக்கும்!

தமது பாட்டனார் குறித்து ஒருவர் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்:

"அவர் அதிகாலைத் தொழுகைக்கு எங்களை எழுப்புவார். அப்போது, "ம்ம்.. எழும்புங்கள். நம்மிலிருந்து ஒருவர் கூட குறையாமல் அனைவரும் சொர்க்கத்தில் இருக்க வேண்டும்'' என்று கூறுவார்''.

இதைச் சொல்லும்போது அவரது கண்ணோரம் கண்ணீர் துளிகள் கசிவதைக் கவனித்தேன்.

தாத்தாவின் வார்த்தைகள் அவர் மனதில் அவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன.

நமது தந்தை, நமது மகன், நமது கணவன், நமது மனைவி, நமது நண்பன், நமது அண்டை வீட்டுக்காரர்...

இவர்கள் எல்லோரும் நமது பெயருக்குப் பகரமாக நமது குணங்களை மட்டும் நினைவு கூருவதாக இருந்தால் எப்படிச் சொல்வார்கள்? எதை நினைவு கூருவார்கள்? என்று ஒரு கண நேரம் யோசித்துப் பாருங்கள்.

நமது பெயர்கள் மட்டுமே நமக்கானவை!
நமது குணங்கள் மக்களுக்கானவை!

மக்களுடன் நாம் எப்படி நடக்கிறோம்? என்பதைப் பொறுத்தே அவர்கள் நமக்கு பட்டப் பெயர் சூட்டுவார்கள்.

ஒருநாள்.. நமது பெயர்கள் எல்லாம் மக்களுக்கு மறந்துவிடும். நமது குணங்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.

✍️ நூஹ் மஹ்ழரி
#subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed
#tamiltajweed@tamiltajweedChannel

Tamil Tajweed

05 Feb, 03:29


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அல்ஹம்துலில்லாஹ்!
என்னைப் படைத்த என் ரப்பே!
நேற்றைய நாளையை விட இன்றைய
நாளை சிறப்பான நாளாக ஆக்குவாயாக!

இன்றைய நாளில் எங்கள் காரியங்கள்
அனைத்தையும் இலேசாக்குவாயாக!

எனக்கு வந்தடையும் அனைத்து
நன்மைகளும் உன்னிடத்திலிருந்தே
வருகின்றன என்றே நம்புகிறேன்.

என்னுடைய தேவைகளை நிறைவேற்றுவாயாக!

கடன் பட்டு சிரமப்படுவோர்களின்
கடன்களை நிறைவேற்றுவாயாக!

உடல் நலம் குன்றியிருப்போர்களை
குணப்படுத்துவாயாக!

எங்களிடம் துஆ செய்யுங்கள்என
கேட்டுக் கொண்டவர்கள் எந்த
நல் நோக்கங்களாக உன் அருளை எதிர்பார்க்கிறார்களோ அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வாயாக!

உன்னை மட்டுமே வணங்கி வழிபடுகிறோம்
உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்.
எங்களின் வேண்டுகோளை நிராகரிக்காமல் ஏற்றுக் கொள் எங்கள் ரஹ்மானே!
ஆமீன்.
#tamiltajweed@tamiltajweedChannel
#tamiltajweed
#follow_tamiltajweed
#subscribe_tamiltajweed

Tamil Tajweed

01 Feb, 05:40


மக்காவை வெற்றிகொள்ள நபிகளார் ரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். போருக்குத் தயாராகும்படி தோழர்களிடம் கூறியபோதுதான் எங்கு செல்கிறோம்? என்று அவர்களுக்குத் தெரிந்தது.

ஆனால் ஹாதிப் இப்னு அபூ பல்தஆ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை மக்கத்து மக்களுக்கு அறிவிக்க முயன்றார். மாபெரும் குற்றச் செயல் அது. அல்லாஹ்வின் கிருபையால் அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நபிகளார் விசாரித்தார்கள். அதற்கு அவர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத உமர் (ரலி), "இறைத்தூதரே! இவர் நயவஞ்சகர். இவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள்'' என்றார்.

அப்போது நபிகளார்: "உமரே! இவர் பத்ர் போரில் கலந்துகொண்டவர். பத்ரில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, "நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள், உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்'' என்று அல்லாஹ் கூறியது உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். அதுகேட்ட உமர் (ரலி) அழுதுவிட்டார். (புகாரி)

ஒருவரிடம் ஒரு தவறைக் கண்டால் அவரது கடந்த கால நன்மைகளை உடனடியாக நாம் மறந்து போகிறோம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?

தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.

எய்யப்படும் அம்புகள் எல்லாம் இலக்கை துல்லியமாக தாக்குவதில்லையே. யானைக்கும் அடி சறுக்கத்தான் செய்யும்.

மனைவியின் ஒரு தவறு, கணவனின் ஓர் அலட்சியம், பிள்ளையின் ஒரு கவனக் குறைவு, பணியாளரின் ஒரு குற்றம், நண்பனின் ஒரு புறக்கணிப்பு என அனைத்தையும்…

"அவருக்கும் ஒரு பத்ர் இருக்கும்'' என்ற கண்ணோட்டத்தில் நோக்குவோம்.
ஒரேயொரு தவறுக்காக ஒருவரது கடந்த கால நன்மைகளை உதாசீனம் செய்ய வேண்டாம்.

மனிதர்கள் எல்லோரும் எப்போதும் மலக்குகளாகவே இருக்க வேண்டும் என்று நாம் ஏன் எதிர்பாக்கிறோம்?

✍️ நூஹ் மஹ்ழரி
#subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed
#tamiltajweed@tamiltajweedChannel

Tamil Tajweed

31 Jan, 03:38


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஅத மாஅமாதனா வ இலைஹிந் நுஷூர்

யா அல்லாஹ்!
பரக்கத்மிகு காலைநேரத்தில் எங்கள் உள்ளத்தை உன் பேரொளியால் நிரப்புவாயாக!
எங்கள் உள்ளங்களை மகிழ்ச்சியால் நிரப்புவாயாக!
சிரமமான காரியங்களை
லேசாக்குவாயாக!
எங்களுக்கு ஹலாலான ரிஜ்க் லேசாக கிடைக்க அருள் புரிவாயாக!
இன்றைய நாள் எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக!

எங்கள் ரப்பே!
அண்ணல் நபியின் அழகிய குணங்களால் எங்கள் உள்ளங்களை அழகுபடுத்துவாயாக!
கடும் துன்ப நேரத்தில் எங்களை பொறுமையாளர்களாகவும், மகிழ்வான நேரங்களில் உனக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக!
யா அல்லாஹ் ! உன்னிடம் கேட்பதற்காக கையேந்தும் போது என் உள்ளத்தில் உள்ள தேவைகளை வார்த்தையால் வெளிக் கொண்டு வர முடியவில்லை.
எனக்கென்ன தேவை என்பது உனக்குத் தெரியும் அதை நிறைவேற்றுவாயாக!
யார் யார்தங்கள் நோக்கம் நிறைவேற துஆ செய்யச் சொன்னார்களோ அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றுவாயாக!
ஆமீன்

ஆமீன்
#tamiltajweed@tamiltajweedChannel
#tamiltajweed
#follow_tamiltajweed
#subscribe_tamiltajweed

Tamil Tajweed

24 Jan, 12:04


ஜுமுஆ நாளில் இறுதி துஆ ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ள நேரம்

இன்றைய ஜுமுஆ நாளில் நல்லமல்கள் புரிய வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழனைத்தும்

இரட்சகனே எப்பொழுதும் உனக்கு நன்றியுள்ளவர்களாகவும் உனது அழைப்பிற்குப் பதிலளிக்கக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக.

எங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நீ அறிவாய் எங்கள் கவலையைப் போக்குவாயாக

உனது கருணையால் எங்களைக் காப்பாயாக, ஏனெனில் உனது கருணை அனைத்தையும் உள்ளடக்கியது

யா அல்லாஹ், உனது ஞானத்தை அறிந்த ஆரிபீன்களின் ஞானத்தை எங்களுக்குத் திறந்தருளுவாயாக.

மேலும் உமது அருளை எங்கள் மீது பரப்புவாயாக.

மாட்சிமையும் மாண்பும் கொண்ட ஏகனே, உனது வல்லமையாலும் வலிமையாலும் எங்களை வலுப்படுத்துவாயாக

அகிலஉலகங்களின் இரட்சகனே எங்கள் தலைவர் ஸய்யதில் முர்ஸலீன்முஹம்மது அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் அனைவரின் மீதும் உன் அருளைப் பொழிவாயாக
ஆமீன்
#subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed
#tamiltajweed@tamiltajweedChannel

Tamil Tajweed

24 Jan, 04:46


அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்

اللّهم إني ضعيف فقوّني ، ذليل فأعزني ، فقير فأغنني ، و انفعني اللهم بما علمتني ..
யா அல்லாஹ்!நான் உள்ளத்தாலும்
உடலாலும் பலவீனமாக இருக்கிறேன்.
என்னைப் பலப்படுத்துவாயாக!
நான் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவனாக இருக்கிறேன்
என்னைக் கண்ணியப்படுத்துவாயாக!
நான் தேவையுடையவனாக இருக்கிறேன்
என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக!

எனக்கு நீ கற்றுக் கொடுத்த கல்விஞானத்தை
யா அல்லாஹ் எனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக ஆக்குவாயாக!

நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்
எனக்கென்ன தீங்குவரப்போகிறது?
நீ எனக்கு போதுமானவனாக இருக்கும் போது.
நான் யாரிடம் கையேந்தி நிற்கப் போகிறேன்?
நீ எனக்கு பாதுகாவலானாக இருக்கும் போது

என் ரப்பே!என்னுடைய விவகாரங்கள் அனைத்தையும் உன்னிடமே ஒப்படைத்துவிட்டு
இந்நாளில் அடியெடுத்துவைக்கிறேன்.
இன்றைய நாளின் அமல்களை கடைபிடித்து உன் அருளைப் பெற அருள்வாயாக
எவ்வித எதிர்பாராத மனதை பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றுவாயாக
ஆமீன்
#tamiltajweed@tamiltajweedChannel
#subscribe_tamiltajweed
#tamiltajweed
#follow_tamiltajweed

Tamil Tajweed

19 Jan, 01:42


துன்பம் சூழ்ந்த தபூக் போருக்காக மக்களிடமிருந்து நபிகளார் நிதி திரட்டினார்கள்.

அபூபக்கர் (ரலி) முழுச் சொத்தையும் கொண்டு வந்தார். உமர் (ரலி) பாதி சொத்தைக் கொண்டு வந்தார். நபித்தோழர்கள் தங்களால் இயன்றதைக் கொண்டு வந்தனர். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைக் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருக்க...

உல்பத் இப்னு ஸைத் எனும் ஏழை நபித்தோழர் கண்கொட்டாமல் அந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பார்த்தவர் மனதில் ஏக்கப் பெருமூச்சு. இறைப் பாதையில் கொடுக்க தம்மிடம் எதுவும் இல்லையே என்று கண்ணோரம் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.

வேகமாக நபிகளாரிடம் வந்தவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் ஏழை. தர்மம் செய்ய என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் உங்களை சாட்சி வைத்துக் கூறுகிறேன். என்னை யாரெல்லாம் திட்டினார்களோ, யாரெல்லாம் கண்ணியக் குறைவாக நடத்தினார்களோ; அவர்களுக்கு என் கண்ணியம், மரியாதையை நான் தர்மம் செய்துவிட்டேன்''.

நபிகளார் அப்போது எந்த பதிலும் சொல்லவில்லை. மறுநாள் தோழர்களிடம், "அவர் எங்கே?'' என்று கேட்க, அவரும் வந்தார்.

அவரிடம் நபிகளார், "வானவர்களிடம் அல்லாஹ் உம்மைக் குறித்து பெருமையடிக்கிறான். உமது தர்மத்தை அவன் ஏற்றுக்கொண்டான்'' என்றார்கள். (அபூதாவூத், ஸஹீஹ் அல்பானி)

அடுத்தவர் தவறை மன்னிப்பதுதான் அல்லாஹ் அதிகம் விரும்பும் செயல்.

உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இடையே நடந்த சண்டையில், சத்தியம் உங்கள் பக்கம் இருந்தாலும் பரவாயில்லை..

உங்கள் கண்ணியத்தை அல்லாஹ்வுக்காக தர்மம் செய்துவிடுங்கள். அந்த தர்மத்தை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.

உங்களுடன் மோசமாக நடந்த அண்டை வீட்டாருக்கு உங்கள் கண்ணியத்தை தர்மம் செய்யுங்கள். நிச்சயம் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான்.

அல்லாஹ் ஏற்றுக்கொண்டால் வேறென்ன வேண்டும் நமக்கு?

மனிதன் ரோஷம் மிக்கவன். உபதேசம் செய்வது எளிது, செயல்படுத்துவது கடினம் என்று எனக்கும் தெரியும்.

ஆயினும் நண்பர்களைப் போன்று கட்டியணைக்காவிட்டாலும் பரவாயில்லை. எதிரிகளைப் போன்று ஏன் முகம் திருப்பிச் செல்ல வேண்டும்?

வாழ்க்கை எத்தனை நாள் நீடித்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்?

தண்ணீர் அதன் இயல்பான நிலைக்குத் திரும்பாவிட்டாலும்; மெதுவாகவேனும் ஓடட்டுமே.

ஏனெனில், தேங்கி நிற்கும் தண்ணீர் கெட்டுவிடும்.

✍️ நூஹ் மஹ்ழரி
#tamiltajweed@tamiltajweedChannel
#subscribe_tamiltajweed
#tamiltajweed
#follow_tamiltajweed

Tamil Tajweed

18 Jan, 02:53


ஜாபிர் (ரலி) கூறுகின்றார்: நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவருடைய தலையில் ஒரு கல் பட்டதால் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்குக் குளிப்பும் கடமையானது.

"எனக்கு தயம்மும் செய்ய அனுமதி இருக்கிறதா?'' என்று அவர் தம் தோழர்களிடம் கேட்டார்.

"தண்ணீர் இருக்கும்போது தயம்மும் செய்ய அனுமதி இல்லை'' என்று தோழர்கள் கூற, அதைக் கேட்ட அவர் குளித்தார். அதனால் மரணமடைந்தார்.

விபரம் அறிந்த நபிகளார், "அவரை அவர்கள் கொன்றுவிட்டார்கள். அல்லாஹ்வும் அவர்களை மரணமடையச் செய்வானாக! தெரியாவிட்டால் விசாரித்து இருக்கலாமே! கேள்விதானே அறியாமையின் மருந்து! அவர் தயம்மும் செய்யவோ, காயத்தைத் துணியால் கட்டி அதன் மீது மஸஹ் செய்து, உடலின் மீதிப் பாகங்களை கழுவினாலோ போதுமானதுதானே!'' என்றார்கள். (அபூதாவூத், இப்னுமாஜா)

இன்றும் இப்படித்தான்...

விபரம் இல்லாமல் சிலர் கொடுக்கும் தீர்ப்புகளால் மார்க்கம் படாதபாடு படுகிறது.

தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்வது அவமானம் என்று பலரும் கருதுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?!

எத்தனை எத்தனை அறிஞர்கள் தெரியாத விஷயத்தை தெரியாது என்று கூறியிருக்கிறார்கள்.

இமாம் ஷஅபி அவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு "தெரியாது'' என்று கூறியபோது, "ஈராக்கின் பேரறிஞர் நீங்கள். தெரியாது என்று கூறுகிறீர்களே. வெட்கமாக இல்லையா?'' என்று சொல்லப்பட்டது.

அதற்கு அவர், "எங்களுக்குத் தெரியாது என்று சொல்ல வானவர்களே வெட்கப்படவில்லையே'' (2:32) என்றார்.

இமாம் மாலிக் அவர்களிடம் ஈராக் மக்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அவற்றில் பாதிக்கு மேல் "தெரியாது'' என்று இமாம் பதில் கூறினார்.

அதற்கு அவர்கள், "உங்களைக் குறித்து ஈராக் மக்கள் கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது?'' என்று கேட்டனர்.

அதற்கு இமாம்: "மாலிக்குக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்று அவர்களிடம் கூறுங்கள்'' என்றார்.

இமாம் மாலிக் அவர்களுடைய காலத்தில் அறிவில் அவரை மிஞ்ச எவரும் கிடையாது. அவரே தெரியாது என்று சொல்ல வெட்கப்படவில்லை.

ஆனால் இன்று மார்க்க விவகாரங்களில் தெரியாது என்று சொல்ல பலர் வெட்கப்படுகிறார்கள்.

உலக விவகாரங்கள் என்றால் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள்.

ஆனால் மார்க்க விவகாரங்களில் எனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்பது போன்றுதான் பலரும் நடந்துகொள்கின்றனர்.

நூஹ் மஹ்ழரி
#tamiltajweed@tamiltajweedChannel
#follow_tamiltajweed
#tamiltajweed
#subscribe_tamiltajweed

Tamil Tajweed

13 Jan, 01:07


அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி:

"இந்த தீ விபத்து அல்லாஹ்வின் தண்டனையா? இது குறித்த முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?'' என்று கேட்கிறார்கள்.

நமது பதில்: மக்களுக்கு ஏற்படும் சோதனைகள் மூலம் அல்லாஹ் என்ன நாடுகிறான்? என்று நமக்குத் தெரியாது. அவை தண்டனையாகவோ, சோதனையாகவோ, பாடமாகவோ கூட இருக்கலாம்.

அல்லது கவனக்குறைவில் இருந்து மக்களை தட்டி எழுப்புவதற்காகவும் இருக்கலாம்.

உயிரினங்களின் சமநிலையை நிர்வகிப்பதில் அனைத்தையும் அறிந்த - நமது அறிவுக்கு எட்டாத - அல்லாஹ்வின் ஞானமாகவோ அல்லது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவோ கூட இருக்கலாம்.

இது அல்லாஹ்வின் தண்டனைதான் என்று உறுதியாகக் கூறுவது அனுமதிக்கப்பட்டதல்ல.

ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வஹி (வேத வெளிப்பாடு) இறங்குவது நின்றுவிட்டது.

எனவே அல்லாஹ் என்ன விரும்புகிறான் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவ்வாறு நாமே தீர்ப்பு கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: "நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதையும் அல்லாஹ் தடை செய்துள்ளான்'' (7:33)

எனவே இந்தத் தீ விபத்து அல்லாஹ்வின் தண்டனைதான் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு எதிராகப் பேசுவதாகும். நமது கொள்கை, நபிகளாரின் நெறிமுறை ஆகியவற்றுக்கு முரணாகும்.

முஸ்லிம் நாடுகளில்கூட பேரழிவுகள் நடந்துள்ளன, இப்போதும் நடக்கத்தான் செய்கின்றன. டெர்னா பெருவெள்ளம், சிரியா நிலநடுக்கம், துருக்கியின் வலிமிகுந்த பூகம்பம் போன்றவை இதற்கான உதாரணம்.

இவை எல்லாம் பாவிகளுக்கு அல்லாஹ்வின் தண்டனைதான் என்று கூறுவது எவ்வாறு கூடாதோ; அவ்வாறே அமெரிக்க தீ விபத்து குறித்தும் கூறுவது கூடாது.

அல்லாஹ்வின் தண்டனைதான் என்ற தவறான சந்தேகம் ஒருவருக்கு ஏற்பட்டால் குறைந்த பட்சம் அதை மறைத்துக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் விஷயத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உண்மையான இஸ்லாத்தின் வழிகாட்டுதல் அல்ல.

மனிதர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டு கருணை நபி (ஸல்) வேதனையடைந்துள்ளார்கள். ஏன்.. பறவைகள், கால்நடைகள், விலங்குகள் பாதித்ததைக் கண்டு கண கலங்கியுள்ளார்கள். (மக்காவில் பஞ்சம் ஏற்பட்டபோது மதீனாவிலிருந்து உதவிகளை அனுப்பியுள்ளார்கள்)

லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தைப் பொறுத்தவரை...

பூமியில் அமைதியைக் குலைத்து, குற்றவாளிகளை ஆதரித்து, அப்பாவிகளையும் பலவீனர்களையும் கொல்லும் ராணுவ, அரசியல் விவகாரங்களையும்..

அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள், இஸ்லாமிய மையங்களைக் கட்டி, மில்லியன் கணக்கான முஸ்லிம் ஆண், பெண், குழந்தைகளைப் பராமரிக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி யூத, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளையும்..

ஒரு முஸ்லிம் கட்டாயம் வேறுபடுத்திப் பார்க்கத்தான் வேண்டும்.

கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்கவும் அவற்றின் சேதத்தைக் கட்டுப்படுத்தவும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதுதான் முஸ்லிமின் மீது கடமையாகும்.

அவ்வாறு செய்ய முடியவில்லையா...?

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கருணை காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இம்மை மறுமை நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றுமாறு உளமுருகி துஆ கேட்க வேண்டும்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்!

அறிஞர் அஸ்ஸல்லாபி அவர்களின் பதிவு:
https://www.facebook.com/share/189hDWaZ2n/

#subscribe_tamiltajweed
#tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed@tamiltajweedChannel

Tamil Tajweed

03 Jan, 02:55


பரக்கத்மிகு ஜுமுஆ நாளில் மீண்டும் உயிர்தந்து அதிகாலை தொழுகையைத் தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்.

காருண்ய நபி இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக!

அருளாளனே!
இவ்வுலகில் நல்லறங்களை விதைத்து மறுமையில் அறுவடை செய்யும் நல்லோர்களின் கூட்டத்தில் எங்களை ஆக்குவாயாக!

உள்ளங்களை மாற்றுபவனே!
உன் மீதுள்ள அச்சத்தால் உனக்குப் பணியும் உள்ளத்தைத் தருவாயாக!
அச்சத்தால் கண்ணீர் விடும் கண்களைத் தருவாயாக!

உன் கொடைகளுக்காக நன்றி சொல்லும் நாக்கைத் தந்தருள்வாயாக!

என்றென்றும் நின்று உன்னை வணங்கும் உறுதியான கால்களைத் தருவாயாக!

அன்புடையோனே அல்லாஹ்வே!
எங்கள் உள்ளத்தில் அமைதியையும் உடல் சுகத்தையும் தந்து நல்லமல்களுடன் எங்கள் வாழ்நாட்களை நீட்டித்தருவாயாக!

இவ்வுலக வாழ்வின் இனிமையையும் வளத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக

வாழ்வாதாரங்களை விசாலமாக்குவாயாக!

ஆரோக்கியம் எனும் ஆடையை எங்களுக்கு அணிவிப்பாயாக!

எங்களின் இறுதியை அழகாக்கி பிரகாசமான முகத்துடன் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சுவனத்தில் சந்திக்கும் நல்வாய்ப்பை வழங்குவாயாக!
ஆமீன்
#tamiltajweed@tamiltajweedChannel
#tamiltajweed
#follow_tamiltajweed
#Subscribe_tamiltajweed

Tamil Tajweed

29 Dec, 05:21


தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் கேட்ட துஆ

யா அல்லாஹ்உன்னிடம் நான்கு நலன்களைக்கேட்கிறேன்

உன்னை திக்ரு செய்யும் நாவு.
நன்றி செலுத்தும் உள்ளம்

துன்பத்தைத் தாங்கும்
பொறுமைமிகு உடல்

எனது இம்மை வாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் உதவி செய்யும் மனைவி.

யா அல்லாஹ் நான்கு தீமை களிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

என்மீது ஆதிக்க செய்ய முயலும் மகன்.

எனக்கு நரை வரும் முன்பே கவலையினால் நரையை உண்டாக்கும் மனைவி.

எனக்கு தண்டனையாக மாறும் செல்வம்.

என்னுடைய நற்குணங்களை மறைத்து எனது குறைகளை வெளிப்படுத்தும் பக்கத்து வீட்டுக்காரன்

ஆமீன்
#tamiltajweed@tamiltajweedChannel
#Subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed

Tamil Tajweed

27 Dec, 03:02


அல்ஹம்துலில்லாஹ்!
வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!

பரக்கத்தான ஜுமுஆ நாளின் அதிகாலை நேரத்தில் உன்னை நினைப்பதற்கு தவ்fiiக் செய்த இரட்சகனே! உனக்கு நன்றி செலுத்துகிறேன்.

உன் அருள் இறங்கும் இந்த நேரத்தில் இறைஞ்சுகிறேனா

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோயுற்று இருந்த நிலையில்

“நிச்சயமாக என்னை நோயினாலானதுன்பம் தீண்டியிருக்கிறது;

இரட்சகனே!கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”

என்று பிரார்த்தித்த போது நீ,

“நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்.” என்று கூறினாய்.
அந்த பிரார்த்தனையை நாங்களும் கேட்கிறோம்.

என்னைப் படைத்தவனே! நாங்கள் அனைவருமே ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

எங்களில் யார் யாரெல்லாம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களைக் குணப்படுத்துவாயாக!

எங்களில் யார் யாரெல்லாம் இதய நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் இதயத்தை பலப்படுத்தி அவர்கள் வாழ்நாளை நீடிக்க செய்வாயாக!

எங்களில் யார் யாரெல்லாம் ரத்த அழுத்த நோயால் அவதிப்படுகிறார்களோ அந்த நோயை கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் பாதிப்பை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக!

எங்கள் சகோதரிகளில் யார் யாரெல்லாம் பெண்களுக்கு ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார்களோ அவர்களுக்குப் பூரண குணத்தை தருவாயாக!

கொடிய நோய்களில் இருந்து எங்களைக் காப்பாயாக!

யா அல்லாஹ்! எங்கள் பாவத்தை மன்னிப்பதற்காகவோ, சோதிப்பதற்காவோ எங்களுக்கு நோயைத் தந்து இருந்தால் அதைத் தாங்குகின்ற உடல் வலிமையையும் மன வலிமையையும் கொடுப்பதோடு ஸப்ரு செய்யும் மனப்பக்குவத்தையும் தந்து அருள்வாயாக!

எங்கள் இரட்சகனே! நாங்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து, பிறருக்கு சிரமம் தரும் அளவிற்கு எங்களை ஆக்கிவிடாதே!

உள்ளத்தை மாற்றும் ஆற்றல் படைத்தவனே!
“அவர்கள் உள்ளத்தில் நோய் இருக்கின்றது அவர்கள் நோயை நாம் அதிகப் படுத்தினோம்” என்று யாரை சொன்னாயோ அத்தகைய கூட்டத்தில் எங்களை ஆக்கி விடாதே!

அத்தகைய நோய் எங்கள் உள்ளத்தை தாக்காமல் எங்களைப் பாதுகாப்பாயாக!

நேர்வழி என்ன வென்று தெரிந்தும் அதைப் பின்பற்றாதோர் பாதையில் எங்களைச் செலுத்தி விடாதே!

உன்னையே வணங்குகிறோம்! உன்னிடத்திலே உதவி கேட்கிறோம்!

எங்களை நேரான பாதையில் வழி நடத்து உன்னை சரியான முறையில் வணங்குவதற்கு எங்களின் உடலிலும் உள்ளத்திலும் சக்தியைக் கொடு!ப்பாயாக

எங்கள் காரியங்களை உன்னிடத்தில் ஒப்படைக்கின்றோம்! நீ திட்டமிட்டு அதை நிறைவேற்றுவாயாக

என்றும் எப்பொழுதும் உன்னை நினைக்கின்ற மனதையும் திக்ரு செய்யும் நாவையும் கொடுப்பாயாக!

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஆமீன்
#tamiltajweed@tamiltajweedChannel
#follow_tamiltajweed
#Subscribe_tamiltajweed
#tamiltajweed

Tamil Tajweed

26 Dec, 00:46


ஒரு தந்தை தனது தனயனுக்கு வரைந்த கடிதம்

அருமை மகனே...!
ஒரு நாள் முதுமை என்னை
பதம்பார்க்கும்...
அப்போது,
என் பார்வை குறைந்துவிடும்...
உடல் கூனிப்போய்விடும்...
கேட்கும் திறன் குறைந்துவிடும்...
பேச்சுக்கள் திக்கும் முக்கும்...
நடக்க, பிடிக்க முடியாது போய்விடும்...
ஞாபக சக்தி குன்றிவிடும்...
என் கைகள் நடுங்கி, உணவு மடியில்
கொட்டிவிடும்...
ஆடைகளை அணிய திராணி
பெறமாட்டேன்...
நடக்க பிடிக்க முடியாது போய்விடும்...

அப்போது என் நடவடிக்கைகளில்
அசாதாரண நிலையை நீ காண்பாய்...
அத்தருணங்களில் நீ என்னோடு
சகிப்புடன் நடந்து கொள்...!
எனக்கு தயவு காட்டு...!

என்னால் திராணியற்றுப் போகும்
பல விடயங்களை நான் உனக்கு
சிறுவயதில் சகிப்போடு கற்றுத்
தந்ததை மனதில் வைத்துக் கொள்!

நான் வார்த்தைகளை மீட்டி மீட்டி
சொல்லும் போது நீ என்னுடன்
கோபம் கொள்ளாதே! மனக்கடுப்போடு
நடந்து கொள்ளாதே...!

உனக்காக நான் சிறுவயதில்
எத்தனை முறை கதைகளை
உன் மகிழ்ச்சிக்காக திருப்பி திருப்பி சொல்லியிருப்பேன் என்பதை மனதில்
வைத்துக் கொள்...!
நான் புரிந்துகொள்ள எனக்கு
நீ நேரம் கொடு...!
நீ புரிந்தது கொள்ள நான் உனக்கு
நேரம் தந்ததை ஞாபகத்தில்
வைத்துக் கொள்...!

நான் பார்க் அலங்கோலமான
தோற்றத்தில் இருக்க நேரிடும்...!
ஆடைகள் அழுக்காகி அசிங்கமான
தோற்றத்தில் இருக்க நேரிடும்...!

அந்நேரம் என்னை நீ அருவருப்பாக
பார்க்காதே...!
நீ குழந்தையாக இருக்கும் போது
உன்னை நான் அழகாக, நேர்த்தியாக
பார்க்க வேண்டும் என்பதற்காக நான்
எடுத்த பிரயத்தனங்களை
நீ நினைத்துப் பார்...!

என்னால் முடியாத இடங்களுக்கு
நீ என்னை அழைத்துச் செல்லும்
போது என்னுடன் கனிவாக இருந்து விடு!

சிறு வயதில் எத்தனை பல இடங்களுக்கு
உன் கை பிடித்து அழைத்துச் சென்று
உன்னை ஆனந்தப்படுத்தியிருப்பேன்...!

ஆதலால், இன்று என் கை பிடிக்க
நீ வெட்கப்படதே...!
நாளை உன் கை பிடிக்க ஒருவனை
நீயும் தேடுவாய்...!

நான் உன்னைப் போன்று வாழ
ஆரம்பிப்பவனல்ல...
வாழ்ந்து முடிந்து விடைபெற்றும்
தருவாயில் உள்ளவன்...

எனக்கு நீ செய்யும் பெரும் பணி,
என் தவறுகளை மன்னிக்க வேண்டும்...
என் குறைகளை மூடி மறைக்க வேண்டும்...
என் முதுமைக்கு கருணை காட்ட வேண்டும்...

நீ பிறக்கும் போது நான் உன்னோடு இருந்தேன் அல்லவா!
அதுபோல், நான் இறக்கும் போது நீ என்னோடு இருந்துவிடு!

இரட்சகனே...!
கருணை மிக்க ரஹ்மானே...!
துன்பகரமான வயோதிபத்தை
விட்டும் எம்மை காத்தருள்வாயாக...!
எம் பெற்றோர்களின் தவறுகளை
மன்னித்து, அவர்களுக்கு கருணை
காட்டுவாயாக...!
நித்திய சுவனத்தில் எம்மையும்
அவர்களையும் ஒன்றிணைத்து
விடுவாய் ரஹ்மானே...!

தமிழாக்கம் / Imran Farook

#tamiltajweed@tamiltajweedChannel
#Subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed

Tamil Tajweed

20 Dec, 00:59


அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்

யா அல்லாஹ் சிறப்புமிகு ஜுமுஆ நாளில் அதிகாலையில் உன்னிடம் இறைஞ்சுகிறோம்

எங்கள் உள்ளத்தை நயவஞ்சக தனத்திலிருந்தும்
எங்கள் நாவையும்
பொய் யிலிருந்தும்
எங்கள் பார்வையை
மோசடிதனத்திலிருந்தும்
எங்கள் நல்லறங்களை பாசங்குத்தனத்திலிருந்தும்
எங்கள் ஆன்மாக்களை பாவங்கள், தவறுபுரிவதிலிருந்தும் தூய்மைப்படுத்துவாயாக

உன்னுடைய சுவர்க்கப் பூந்தோட்டங் களுக்கு வாக்களிப்பட்ட
நல்லடியார்கள் கூட்டத்தில் எங்களைச் சேர்ப்பாயாக
எங்கள் வாழ்க்கையில் பரக்கத் செய்வாயாக
எங்களுக்கு ஆரோக்கியமான நல்வாழ்வை அளிப்பாயாக
எங்கள் கடன்களை நிறைவேற்றுவாயாக

நாங்கள் உன்னிடம் தூய்மையான தவ்பாவைக் கேட்கிறோம்
அந்தத் தவ்பாவின் காரணமாக எங்கள் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்
எங்கள் மீதுள்ள பாவச்சுமைகள் கழுவப்படவேண்டும்

யா அல்லாஹ், உமது மன்னிப்பு மற்றும் கருணையிலிருந்து எங்களைத் தடுக்கும் ஒரு தடையாக எங்கள் இதயங்களை ஆக்காதே. மேலும் எங்கள் பாவங்களை எங்கள் துன்பத்திற்குக் காரணமாக ஆக்கிவிடாதே

எங்களை நேரான பாதையில் செலுத்துவாயாக
இன்றைய ஜுமுஆ நாளின் பரக்கத்துகளை முழுமையாக அடைய தவ்பீக் செய்வாயாக

உன்னுடைய ஹபீப் எங்களின் உயிரினும் மேலான அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப்பொழிவாயாக
எல்லாப் புகழும் உனக்கே உரித்தானது ஆமீன்

#tamiltajweed@tamiltajweedChannel
#tamiltajweed
#follow_tamiltajweed
#Subscribe_tamiltajweed

Tamil Tajweed

18 Dec, 04:09


"உங்கள் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான்'' (17:25)

மக்கள் உங்களிடம் இல்லாதவற்றை உங்கள் விஷயத்தில் கூறலாம்.

உங்கள் நல்லெண்ணத்தை குற்றம் சாட்டலாம். உங்களைத் தவறாக நினைத்து மோசமாக நடக்கலாம். உங்களைப் பற்றி குறை கூறலாம். உங்களுக்குப் பட்டப் பெயர் சூட்டலாம்.

உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் அறிந்திருக்கும் வரை, இவை எதுவும் உங்களுக்கு எந்தத் தீங்கையும் தராது.

மக்கள் உங்களை வார்த்தைகளால் போற்றிப் புகழலாம். "உங்களைப் போன்று யார் இருக்கிறார்?'' என்று புனிதர்கள் வட்டத்தில் உங்களைச் சேர்க்கலாம்.

"நீங்கள்தான் அவதார புருஷர்.. அல்லாமா.. சமூகத்தின் விடிவெள்ளி.. கலங்கரை விளக்கம்.. உங்களைப் போன்று யார் இருக்கிறார் மெளலானா..?'' என்றெல்லாம் உயர்த்தி அவ்லியாக்கள் வட்டத்தில் உங்களை வைக்கலாம்.

"உங்களைப் போன்று உண்டா..?'' என்று தூய்மைப்படுத்தி உங்களுக்கு இறையச்ச ஆடை அணிவிக்கலாம்.

ஆனால் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் அறிந்திருக்கும் வரை, இவை எதுவும் உங்களுக்கு எந்தப் பயனையும் தராது.

நினைவில் வையுங்கள்! அல்லாஹ் உங்கள் முகங்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்.

எனவே அல்லாஹ் பார்க்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருங்கள். பின்னர் மனநிறைவுடன் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.

✍️ நூஹ் மஹ்ழரி

#tamiltajweed@tamiltajweedChannel
#Subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed

Tamil Tajweed

15 Dec, 03:18


அன்பின் கணவன்மார்களே...!

உங்கள் வீடுகள், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளாக இருந்தால், உங்கள் மனைவி மீது அதிகம் அதிகம் கருணை காட்டுங்கள்.

கண்டிக்கும் வார்த்தைகளை அதிகம் பாவிக்காதீர்கள். ((என்ன சமைத்தீர்கள் - ஏன் மதிய உணவு தாமதமாகியது - ஏன் இன்னும் வீட்டைச் சுத்தம் செய்யவில்லை - ஏன் உடைகள் இன்னும் துவைக்கவில்லை - ஏன் நீ மெலிந்து விட்டாய் - ஏன் உனது அழகும் கவர்ச்சியும் குறைந்து வருகிறது)) இப்படி உங்களுக்கே நன்கு விடைகள் தெரிந்த கேள்விகளைக் கேட்டு அவளை சங்கடப்படுத்தாதீர்கள்.

அவள் மன அழுத்தத்திலும் சோர்விலும் இருப்பதைக் கண்டால் உங்களால் முடியுமான ஆதரவுகளை வழங்குங்கள்.
உங்கள் அன்பு முத்தங்களையும் அரவணைப்பையும் வழங்குங்கள். அவள் பணிகளை நீங்கள் பொறுப்பெடுப்பதோடு அவளை சற்று நேரம் ஓய்வெடுக்க வசதிகள் செய்து கொடுங்கள்.

அவள் பணிச் சுமைளை முறையிடும் போது 'நானும் இருக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லுங்கள்.

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பார்க்க பராமரிக்க நீங்கள் பொறுப்பாக இருந்து பார்த்தால், நிச்சியமாக நீங்கள் ஒரு நிமிடம் கூட பொறுத்துக்கொண்டிருக்க மாட்டீர்கள்.

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டு, சமைத்தல், துவைத்தல் என இன்னோறன்ன வீட்டுப் பணிகளையும் தனியாக செய்யும் பெண் ஒரு சாதாரண பெண்ணல்ல. மாறாக அவள் அற்புதங்கள் செய்து காட்டும் ஒரு வீர மங்கையாகும்.

தமிழாக்கம் / imran farook
#tamiltajweed@tamiltajweedChannel
#Subscribe_tamiltajweed
#follow_tamiltajweed
#tamiltajweed

Tamil Tajweed

13 Dec, 03:32


ஜும்மா நாளில் மீண்டும் உயிர் தந்து தன்னை வணங்க நல்வாய்ப்பைத் தந்த என் இரட்சகனான அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன்

எங்கள் கண்மணி முஹம்மது நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அல்லாஹ் தன் கருணையைப் பொழிவானாக

اللهم في هذا اليوم نسألك محو الذنوب وستر العيوب ولين القلوب وتفريج الهموم وتيسير الأمور واكتب لنا يالله خير الدنيا والآخرة ..
யா அல்லாஹ்!இன்றைய நாளில் என்னுடைய பாவங்களை மன்னிக்க உன்னிடம் வேண்டுகிறேன்.

என்னுடைய குறைகளை மறைக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன்

மன அழுத்தத்திலிருந்து உள்ளத்தை லேசாக்குமாறு வேண்டுகிறேன்

துக்கங்களை மகிழ்ச்சியாக்க வேண்டுகிறேன்

இன்றைய என் காரியங்கள் அனைத்தையும் இலகுவாக முடித்துவைக்க வேண்டுகிறேன்

என் ரப்பே! இம்மை,மறுமைக்கான நன்மைகளை எங்களின் மீது விதிக்குமாறு வேண்டுகிறேன்

என்னுடைய இந்த துஆவை ஏற்றுக் கொள்ளுமாறு உன்னிடம் மன்றாடுகிறேன்.

என்றென்றும் உனக்கே புகழனைத்தும்
ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஆமீன்
#tamiltajweed@tamiltajweedChannel
#tamiltajweed
#Subscribe_tamiltajweed
#follow_tamiltajweed

Tamil Tajweed

09 Dec, 15:59


"எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது'' (திருக்குர்ஆன் 05:08)

கடும் கோபம் ஆபத்தை வரவழைக்கும்.
அளவு கடந்த அன்பும் ஆபத்தை வரவழைக்கும்.

இவ்விரண்டிலும் யூசுஃப் (அலை) சோதிக்கப்பட்டார்கள்.

அவர் மீது அவரது சகோதரர்கள் கொண்ட கடும் கோபம் அவரை பாழ் கிணற்றில் தள்ளியது.

அவர் மீது அமைச்சரின் மனைவி கொண்ட அளவு கடந்த அன்பு அவரைச் சிறையில் தள்ளியது.

நம் இதயத்தின் கடிவாளத்தை சிலபோது நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

எனவேதான் விருப்போ வெறுப்போ நீதியாக நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் ஆணை பிறப்பிக்கிறான்.

அன்புக்குரியவர் என்பதற்காக ஒருவரது பாவங்களை நன்மைகளாக ஆக்கிவிடாதீர்கள்.

வெறுப்புக்குரியவர் என்பதற்காக ஒருவரது நன்மைகளை பாவங்களாகவும் ஆக்கிவிடாதீர்கள்.

நீதியாக நடந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய இடத்தில் வையுங்கள்.

இமாம் அஹ்மத் அவர்களை அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் சந்திக்க வந்தார்.

அவரிடம், "எங்கிருந்து வருகிறீர்?'' என்று இமாம் கேட்டார்.

அப்துல்லாஹ்: "அபூ குரைபுடைய சபையிலிருந்து வருகிறேன்''.

இமாம்: "முடிந்த அளவு அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர் சிறந்த அறிஞர்''.

அப்துல்லாஹ்: "ஆனால் அவர் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்''.

இமாம்: "அவர் சிறந்த அறிஞர். ஆனால் என் விஷயத்தில் அவர் சோதிக்கப்படுகிறார்''.

இமாம் அவர்களுடைய பதில் எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!

✍️ நூஹ் மஹ்ழரி

#tamiltajweed@tamiltajweedChannel
#follow_tamiltajweed
#Subscribe_tamiltajweed
#tamiltajweed

Tamil Tajweed

16 Nov, 09:22


4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும்.

12 வயதில் உன் சாதனை என்பது
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.

18 வயதில் உன் சாதனை என்பது
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.

23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.

25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும்.

30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.

35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும்.

45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ தக்க வைத்துக் கொள்வதாகும்.

50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.

55 வயதில் உன் சாதனை என்பது
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.

60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.

65 வயதில் உன் சாதனை என்பது
நோயின்றி வாழ்வதாகும்.

70 வயதில் உன் சாதனை என்பது
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.

75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும்.

80 வயதில் உன் சாதனை என்பது
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.

இவ்வளவுதான் வாழ்க்கை...

ஆதலால் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவனுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள்!

மறு உலக நம்பிக்கை இருந்தால் அதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்!

தமிழாக்கம் / imran farook
#Tamiltajweed
#Subscribe_Tamiltajweed
#Follow_Tamiltajweed

Tamil Tajweed

07 Nov, 01:24


https://youtu.be/oF8oYl1L9pE

Tamil Tajweed

29 Oct, 01:34


Kindly share with your friends and family 👆

Tamil Tajweed

25 Oct, 02:20


:

அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்
: “ اللهم إنك تسمع كلامي ، وترى مكاني ، وتعلم سري وعلانيتي ، لا يخفى عليك شيء من أمري ، أنا البائس الفقير ، المستغيث المستجير ، الوجل المشق ، المقر المعترف بذنبي ، أسألك مسألة المسكين ، وأبتهل إليك ابتهال المذنب الذليل ، وأدعوك دعاء الخائف الضرير ، دعاء من خضعت لك رقبته ، وفاضت لك عيناه ، وذل لك جسده ، ورغم لك أنفه ، اللهم لا تجعلني بدعائك شقيا ، وكن بي رءوفا رحيما ، يا خير المسئولين ويا خير
المعطين “ . .

அல்லாஹ்வே! என் ரப்பே! நிச்சயமாக நீ என் பேச்சைக்கேட்கிறாய். நான் இருக்கும் இடத்தையும் நீ பார்க்கிறாய். என்அகத்தில் உள்ளதையும், புறத்திலுள்ளவையும் அனைத்தையும் நீ அறிந்தவன்.

எனது விடயங்கள் எதுவும் உன்னை விட்டு் மறைந்ததல்ல.
நான் வறியவன்

தேவையுடையவன்,

உன்னிடம் முறையிடுபவன்,

உனது பாதுகாப்பைத் தேடுபவன்.
அஞ்சுபவன்,நடுங்குபவன்,

தன் பாவங்களை உன் முன் சமர்பித்து ஒப்புக்கொள்பவன்

ஒன்றுமில்லாத மிஸ்கீன்
கேட்பதைப் போல் உன்னிடம் கேட்கிறேன்.

கேவலமடைந்த பாவி நடுங்குவது போல் உன் முன் நடுங்குகிறேன்.

ஆபத்துகள் சூழ அச்சம் கொண்டவன் அழைப்பதைப் போல் உன்னை அழைக்கிறேன்.

உனக்கு தலைவணங்கியோர்,உன் முன் அழுது புலம்பியோர், உனக்காக தங்கள் உடலை அற்பணித்தோர், உனக்காக தனது மூக்கை இம்மண்ணில் தேய்த்துக்கொண்டோர் ஆகியோரது வேண்டுதலைப் போன்று உன்னிடம் வேண்டுகிறேன்.

உன்னிடம் வேண்டுவதை நல்வாய்ப்பை இழந்ததாக ஆக்கிவிடாதே!
என் மீது கருணையும்,இரக்கமும் கொண்டவனாக ஆகிவிடு.
கேட்கப்படுபவரில் சிறந்தவனே!
கொடுப்பவர்களில் சிறந்தவனே!

யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களின் ஈமானை உறுதி படுத்துவாயாக!

எங்களின் வாழ்நாளை நல்ல ஆரோக்கியத்துடன் நீட்டித்தருவாயாக!

வாழ்கின்ற காலமெல்லாம் உனக்குக் கட்டுப் பட்டு நடக்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!

எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
கடனில்லா வாழ்க்கையாக எங்களின் வாழ்வை ஆக்குவாயாக!

எங்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!

எவரின் மீதும் வன்னெஞ்சமில்லாத இதயத்தைத் தருவாயாக!

ஆமீன்
#Tamil_Tajweed
#Subscribe_Tamiltajweed
#Follow_tamiltajweed