தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal @nellaitamil Channel on Telegram

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

@nellaitamil


┏━━━━•❅•°--°•❅•━━━━┓
வாழ்க வளமுடன்
┗━━━━•❅•°--°•❅•━━━━┛

எண்ணங்களை மேம்படுத்துங்கள்... வாழ்க்கை அழகாகிவிடும்..!

#tamilponmozhigal #lifetamilponmozhigal
#tamilponmozhigallyrics #tamilponmozhigaltext
#positivetamilponmozhigal #tamilproverbs

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள் (Tamil)

தமிழ் பொன்மொழிகள் டெலிகிராம் சேனல் உங்கள் வாழ்க்கையில் ப்ரீத்தியான மற்றும் சந்தோஷமான மாற்றங்களை உருவாக்குகிறது. நேற்றுக்குச் சுற்றி, இன்றைக்குச் சுற்றி, உங்கள் நாளம் முழுவதும் சிறப்புக்காரம். உங்கள் உயிரின் முதல் இயல்பு என்ன? பாடல் பொன்மொழிகள், சிறப்பு உரைகள், போஸிடிவ் நோக்குடன் உரைகளை கொண்ட இந்த சேனலில் உள்ள உள்ளடக்கம் உங்கள் சிறப்பை உயர்வைக் கொண்டுவரும். இந்த மனத்தாரம் சேனலில் உள்ள பொன்மொழிகள் வாழ்க்கையை அழகாக்கும். அதேபோல, இந்த சேனல் உங்கள் நடப்புகளையும் வெற்றியையும் அப்பிற்குச் சேர்ப்பதாகும். இது உங்கள் உயிரின் முதல் இயல்புக்கு சந்தோஷமாக உங்கள்கள் நாளை பூஜ்யமாக்கும். பொய்வெற்றி தமிழ் பொன்மொழிகள் சேனலில் உள்ள பொன்மொழிகள் உங்கள் நடப்பின் வாழ்க்கையை மற்றும் உங்கள் மனதை திரும்ப வெற்றியாக மாற்றும். இந்த உயிர்க் குரல்கள் உங்கள் நான்கும் உறுதி செய்து மாற்றுக்கை உறுதிப்படுத்துகின்றன. தமிழ் பொன்மொழிகள் சேனல் உங்கள் நடப்புக்களை சுற்றி உங்கள் நாளம் பூஜை அடைகிறது. தமிழ் பொன்மொழிகள் சேனல் மூலம் உங்கள் நம்பிக்கையை வளர்க்க அனைத்து தேவைகளையும் காண்பிக்கின்றது. விரும்புவதை ஏற்காதே இதைப் பார்க்கவேண்டும். தமிழ் பொன்மொழிகள் சேனல் உங்கள் வாழ்க்கை முழுவதும் இந்தியாவை நோக்கி உங்கள் மார்க்கவை நிஜமாக்கும். தமிழ் பொன்மொழிகள் சேனலில் உள்ள பொன்மொழிகள் உங்கள் நடப்பின் வாழ்க்கையை மற்றும்... படிக்கும்!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Feb, 06:58


கொக்கு தனக்கான இரை வரும் வரை,
ஒற்றைக் காலில் நின்று கூடக் காத்து நிற்கும்...

கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும்,
தனக்கான இரையைத் தீர்மானித்து தரைக்கு வருகிறது....

அன்னப்பறவை கூட,
தனக்கான இரையைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது...

சிந்திக்கத் தெரிந்தவன் நீ!

இலக்கை தீர்மானித்துக் கொள்...!!

வெற்றி நிச்சயம்!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

12 Feb, 05:06


பொய் என்பது பெயின் கில்லர் மாத்திரை மாதிரி.

உடனடி நிவாரணம் தரும்.

ஆனா சைட் எபக்ட் ஜாஸ்தி..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

12 Feb, 04:38


கவலையும் குப்பையும் ஒன்றுதான் நம்மை கேட்காமலேயே வந்து சேர்ந்துவிடும்...

ஆனால் நாமாக அகற்றாமல் அவை வெளியேறாது.....!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

11 Feb, 03:23


இன்றைய புத்தக மொழி
11/02/25
📚📚📚🌹📚📚📚

என்னை வேறு ஒருவருக்கு
நிரூபிப்பதற்கான அவசியம்
எனக்கு இல்லை.
தேவையும் இல்லை.

- ரொனால்டோ -

📚📚📚🌹📚📚📚

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

11 Feb, 03:10


தன்னை மட்டும் உயர்வாக நினைத்துக் கொள்பவன் உயர்ந்த குணம் கொண்டவரை உயர்வாக
பார்க்க மாட்டான்.......
பணத்தால் உயர்ந்தவர்கள் மனதால் உயர்வதில்லை, கொடுக்கும் குணம் யாரிடம் உள்ளதோ அவர்களே உயர்ந்தவர்கள்.....

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

11 Feb, 03:10


அழிக்கவே முடியாத
சூரியனையும், சந்திரனையும் கூட,
கிரகணங்களால் மறைக்க முடிகிறது....

பழிக்குப் பயப்படாத
சிலரின் செயலால்,
உண்மைகளை மறைக்க மட்டுமே முடியும்...

கண்ணிமைக்கும் நேரத்தில் ,உண்மை வெல்லும்...

நீ நீயாகவே‌ இரு!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Feb, 03:36


நேர்மையாக இருந்தால் என்ன நடக்கும்...

நிராசையோடு வயதாகி வாழ்க்கை முடிந்து விடும்..

நல்லவன் என்ற பெயர் மட்டுமே மிஞ்சும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Feb, 03:03


சைக்கிள் ஓட்ட கஷ்டமா இருக்கேன்னு பைக்க வாங்கி, பைக்க விட கார் சௌகர்யமா இருக்குமேன்னு கார வாங்கி அதனால் தொப்பைய வாங்கி இப்ப அதை குறைக்க ஜிம்முக்கு போனா

அங்க ஓடாத சைக்கிள ஓட்டசொல்றாங்க... வாழ்க்க ஒரு வட்டம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Feb, 16:31


வாழ்க்கையில் தடு மாறும் போதும் தடம் மாறும் போதும் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள்.. "எல்லாம் சில காலம்தான். எதுவும் நிலை இல்லை. இதுவும் கடந்து போகும்................!!!
தரம் தாழ்ந்து யாரிடமும்
கெஞ்சாதே! நடப்பதெல்லாம் நன்மைக்கே!
இழப்பவன் ஒரு நாள் பெறுவான்,பெருபவன் ஒரு நாள் இழப்பான்.
இது படைப்பின் விதி.............!!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Feb, 16:30


துன்பத்தை சந்திக்கும் போது தான், பொறுமையை உணர முடியும்....

அவமானத்தை சந்திக்கும் போது தான்,
மன தைரியத்தை அளவிட முடியும்....

வாட்டும் பசியை சந்திக்கும் போது தான்,
உழவின் பெருமையை உணர முடியும்...

தோல்வியை சந்திக்கும் போது தான்,
வெற்றிக்கான கதவைத் திறக்க முடியும்...

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

07 Feb, 04:44


பலவீனமானவர்கள், பழிவாங்குகிறார்கள்...
வலிமையானவர்கள், மன்னிக்கிறார்கள்...
புத்திசாலிகள், பொருட்படுத்தாமல் விட்டு விடுகிறார்கள்..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

07 Feb, 02:38


பேசி விட்டு
யோசிப்பதை விட
யோசித்து விட்டுப் பேசுங்கள்

வாழ்க்கையில் ஏற்படும்
எல்லா பிரச்சனைகளுக்கும்
அதுவே தீர்வாய் அமையும்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

04 Feb, 04:43


தான் செய்யும் தவறை
ஒருவர்
உணர்ந்தும் திருத்தாமல் விட்டால்

அவரது வீழ்ச்சியை
யாராலும்
தடுக்க முடியாது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

04 Feb, 04:42


நம்மில் தோல்வி எங்கே
ஒளிந்துள்ளது தெரியுமா?

பிரச்சினைகள் வரும் போது அல்ல;

பிரச்சினைகளைக் கண்டு
பயந்து விலகும் போது…

மின்தடையில் மெழுகுவர்த்தி தேடுவது போல் தான்.

பிரச்சினைகளின் போது
தீர்வின் விளக்காய்
நண்பனைத் தேடுகின்றோம்.

தனிமை இருளிலிருந்து
மெழுகுவர்த்தியாக
நட்பின் வெளிச்சம் நாளும் நம்மில் பரவட்டும்…..

நட்பின் புத்துணர்வைப் பெற்று
நானிலம் சிறக்க பயணிப்போம்!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Feb, 05:37


தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்பதில்லை.
தன் மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயிப்பதில்லை..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Feb, 04:11


புத்தகங்களை துணைகொள்..
உடலுழைப்பை அதிகரி
குளிர் நீரில் குளி
கொஞ்சமாய் சாப்பிடு.
இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
ஆத்திரம் அகற்று..
கேலிக்கு புன்னகை தா.
உணவில் கீரையை சேர்த்துக்கொள்
எத்தனை வலித்தாலும் அழாதே.. சிரி.
கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
அலட்சியப்படுத்தினால் விலகி நில்
அன்பு செய்தால் நன்றி சொல்.
இதமாகப் பேசு..
வெற்றியும் அமைதியும் உனக்கே

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Feb, 14:51


பாதை இலகுவானதா கடினமானதா என்று பார்க்காதே செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பார்... போகும் இடத்தை அடைந்து விடலாம்..!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 15:22


நீங்கள்
முதலில்
உங்களை
நம்புங்கள்
நன்றாக
கவனித்து
கொள்ளுங்கள்
வாழ்க்கை
சிறக்கும் ....

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 15:20


பக்குவப்படுதல்
என்பது
யாருக்கும்
தொந்தரவு
இல்லாமல்
தொலைந்து
போவதாக
கூட இருக்கலாம்...!
—-மதி

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 04:29


விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால் தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 04:29


சாமர்த்தியம் இருந்தால்
எதையும் சமாளிக்கலாம்
தைரியம் இருந்தால்
எப்படியும் சாதிக்கலாம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 04:29


தயக்கம் மிகப்பெரிய
தடை அது எத்தனை
திறமையையும் தன்
சிறிய நூலில் கட்டிவிடும்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 04:29


வருங்காலத்தைப் பற்றி
கவலைப் படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்ல
விதமாக செயல்பட்டால்
வருங்காலம் தன்னால் மலரும்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 04:29


சிலநேரம் உடைந்து
போவது கூட புதிய
மாற்றத்திற்காக தான்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Jan, 04:28


சோதனை எந்த அளவு
கடினமாக இருக்குமோ
அதற்குரிய கூலியும்
அதே போன்று
அதிகமாக இருக்கும்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:07


புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும்..!
புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:02


எடுத்து வைப்பதுசிறிய அடியாக
இருந்தாலும்எட்டுவது சிகரமாக
இருக்க வேண்டும்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:02


கூராக தீட்டப்படாத ஆயுதமும் அறிவும்எதையும் வெட்டப் போவதில்லை

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:01


எதுவாக இருந்தாலும் சரிமூழ்கிவிடாதே
மிதக்க கற்றுக்கொள்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:01


சவால்கள் இல்லை என்றால்வாழ்க்கையில் நீங்கள்
முன்னேறவில்லைஎன்று தான்
அர்த்தம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:00


நாளைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவது,
இன்றைய எண்ணங்களும் செயல்களும் தான்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Jan, 02:00


பணிந்து போ
உன் தகுதியை உயர்த்தும்
துணிந்து போ
உன் திறமையை
உயர்த்தும்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

28 Jan, 07:27


பத்து திங்கள் தாய் பட்ட வேதனையைதாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்ஓரே உயிர் அப்பா!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

28 Jan, 07:27


அப்பாவுக்கும் அன்புகாட்ட தெரியும் என்பதை
அவர் தாத்தாவானபின்பு தான் பார்த்தேன்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Jan, 04:18


ஆயிரம் கவலைகள் வந்தாலும், அதை கண்டுகொள்ளாதவரின் வாழ்க்கை எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும்..!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Jan, 03:35


ஏழைக்கு உணவுக்கு தட்டுப்பாடு.
பணக்காரனுக்கு உணவுக்கு கட்டுப்பாடு.

நவீன உலகில் மனிதன் படும் பாடு

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Jan, 03:34


அவசரத்துக்கு நூறு ரூபாய் இல்லாதபோது தான்,
அவசியம் இல்லாமல் செலவழித்த ஆயிரங்கள் நினைவுக்கு வரும்.

யாரிடமும் யாசிக்க கூடாது என்றால், இனியாவது யோசித்து செலவழி.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Jan, 03:32


வாசனை என்பது

சில நிமிடம் வரை

வறுமை என்பது

சில காலம் வரை

அழகு என்பது

வயது உள்ளவரை

நல்ல உறவு என்பது

உயிர் உள்ள வரை

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Jan, 03:31


தனக்கு கஷ்டம் வந்தா.. நல்லவங்கள ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதிக்கிரானோன்னு அழுவுறான்....

அதே மத்தவனுக்கு வந்தா செஞ்ச பாவத்துக்கு தண்டணைன்னு சிரிக்கிறான்...

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Jan, 03:30


எல்லா எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றம் என்ற பரிசும், எல்லா ஏமாற்றத்திற்கு பிறகும் பக்குவம் என்ற பரிசும், கிடைப்பதற்கு பெயர் தான் வாழ்க்கை...!!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

17 Jan, 10:59


இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்போதுதான் போராடும் குணம் இரட்டிப்பாகிறது!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 15:19


மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்று தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இல்லையெனில் தலைக்கனம் அதிகமாகும். இரண்டுமே வாழ்க்கையில் தேவையில்லாதவைகள். நாம் நாமாக இருப்பதே சிறப்பு

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:04


ஒருவரைப் பற்றி ஒருவர் பேசுவதற்கு பதிலாக
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டால்
உலகில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:03


கண்ணிற்கு எட்டும் தூரம்வரை
எதிரி புலப்படவில்லை என்றால்
அருகில் இருப்பவர்களைத்தான்
ஆராயவேண்டும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:03


சிலருக்கு
நாம் மகிழ்ச்சியாக
இல்லைன்னு தெரியக்கூடாது;
சிலருக்கு
நாம் மகிழ்ச்சியாக
இருக்கோம்னு தெரியக்கூடாது.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:03


பார்க்கும் கோணம் பிழை என்றால்
தோன்றும் காட்சிகளும் பிழையாகத்தான் இருக்கும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:03


அழுக்காற்றில் ஒரு தூயவன் இறங்கினால்
ஆறு தூய்மையாவதை விட
இறங்கியவன் அழுக்காவது உறுதி.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:02


நாம சரியா இருந்தா கோபப்பட வேண்டியதில்லை;
நாம தப்பா இருந்தா கோபப்பட தகுதி இல்லை.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:02


தொல்லை என நினைத்து சில நல்ல மனிதர்களை
தொலைத்து விடாதீர்கள்.
பின் தொட முடியா தொலை தூரத்திற்கு
சென்று விடுவார்கள்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:02


நிம்மதியாக வாழ ரெண்டே வழி தான்
ஒண்ணு நம்ம ராஜாவா இருக்கனும்
இல்லன்னா யார் ராஜாவா இருந்தா
நமக்கென்னன்னு வாழனும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Jan, 03:02


தேவைக்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?
சோத்துக்கும் சொத்துக்கும் உள்ள வித்தியாசம் தான்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

15 Jan, 03:29


அழுகையை நிறுத்தி சிரிக்க வைக்க முடியுமென்றால், அது உண்மையாய் நேசிப்பவர்களால் மட்டுமே சாத்தியமாகும்..!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:56


“சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதை செயல்படுத்தும்போது, அது குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள்!” - நெப்போலியன்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:55


“கட்டளையிட விரும்புபவர்கள், முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்." அரிஸ்டாட்டில்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:55


“பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டும்தான்." விவேகானந்தர்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:55


“ஒன்றைச் சிறப்பாகச் செய்ய நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதைக் கடைசிவரை கொடுக்க வேண்டும்." ஆபிரஹாம் லிங்கன்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:54


“குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. குறிக்கோளில் இல்லை." மகாத்மா காந்தி,

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:54


“நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக்கொண்டிருந்தால், மக்கள் உங்களைப் புறக்கணித்துவிடுவார்கள்." ஸ்டீஃபன் ஹாக்கிங்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:54


“என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம்மட்டுமே!” ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:54


"மூன்று விஷயங்களை நீண்டகாலத்துக்கு மறைக்க முடியாது; சூரியன், சந்திரன் மற்றும் உண்மை" புத்தர்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:53


அதிகாலையில் எழுந்துவிட்டாலே, தோல்விகள் உங்களைவிட்டுத் தாமாக ஒதுங்கிப் போய்விடும்." அப்துல் கலாம்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

10 Jan, 08:52


புத்தகம்
தொட்டுத் தொட்டுப் பார்த்தால் அது வெறும் காகிதம்
தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Jan, 04:19


யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதே, உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும் உண்மையாக பழகு, உண்மை நேர்மை எல்லாம் அழியாத சொத்து காலம் செல்ல செல்லத்தான் அதன் மகத்துவம் தெரியும்..........!!!
🌺🌺🌺🌺🌺🌺
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
அ சந்தியாகு ஸ்டீபன்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Jan, 03:42


சிந்தனைக்கு


சாராயக் கடையில் சாராயம் குடித்துவிட்டு பேசுகிறான் உண்மை. நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்லி சொல்வது "பொய்மை"

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Jan, 03:38


ஆணி நேரா இருந்தா சுத்தியலுக்கு பிடிக்காது. மனிதர்கள் நேர்மையா இருந்தால் சுத்தி இருப்பவர்களுக்கு பிடிக்காது.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Jan, 02:41


நீ சொல்வதை வேண்டுமானால் மக்கள் சந்தேகப்படலாம். ஆனால் நீ செய்கிறதை அவர்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

09 Jan, 02:40


நான்
என்கிற அகம்பாவம்...
அவனா
என்கிற பொறாமை...
எனக்கு
என்கிற பேராசை...

இவை எப்போதும்
ஒரு மனிதனை
நிம்மதியாக
வாழவிடாது...!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

08 Jan, 17:11


இல்லாததை தேடுங்கள் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்.!!

இழந்ததை மட்டும் தேடாதீர்கள்.!!

அது நிச்சயம் வேறொருவர் கைகளில் கிடைத்திருக்கும்.!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

08 Jan, 17:06


மனிதர்கள் எல்லாம் மனம் மாறிப் போகிறார்கள் அன்பு அங்கேயே தனித்து இருக்கிறது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

08 Jan, 04:09


விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றி கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும்.
விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல்
விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள்.
வாழ்க்கை வரமாகும்!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

08 Jan, 01:49


திரும்பி பார்க்க வைக்கும் முகம் எல்லாரிடமும் இருக்கும்...

திரும்ப திரும்ப நினைக்க வைக்கும் குணம் சில அன்பான உறவுகளிடம் மட்டும்தான் இருக்கும்...

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

08 Jan, 01:49


ஒரு செடியைப் பாதுகாப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் தான் நம் வேலை. அதிலே என்ன காய்க்கவேண்டும் எப்படிக் காய்க்கவேண்டும் என்பது நம்முடைய தீர்மானம் இல்லை

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 15:31


நீங்கள் பேசுவதற்கு முன், உங்கள் வார்த்தைகள் மூன்று வாயில்களைக் கடந்து செல்லட்டும்:
இது உண்மையா?
இது அவசியமா?
இது நாகரீகமா?
- புத்தர்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 05:00


நிறைய அனுபவம் வாழ்க்கையில் கடந்து வந்த பிறகே.. மிகச் சிறந்த ஒரு அன்பை உணர முடியும்💕💕

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 04:28


அதுல பாருங்க சம்பந்தி, ஒரு 500 ரூவா நோட்டுக்கு இருக்குற மரியாதை, அதை சில்லறையா மாத்துன 5 நூறு ரூவா நோட்டுக்கு வர்றதில்ல...😑

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 04:26


ராஜதந்திரம் என்பது,
கையில் கல் கிடைக்கும் வரை
நாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது!!

😂😂
~யாரோ

@itz_radhi3

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 04:26


ராஜதந்திரம் என்பது,
கையில் கல் கிடைக்கும் வரை
நாயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது!!

😂😂
~யாரோ

@itz_radhi3

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 04:25


கண்மணியே
இன்னொரு பாதியே

கல்லறை செல்லும் வரை கடவுளே பொறாமைபடும் அளவு காதல் செய்வோம்
🤌🫂

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Jan, 04:22


அடியே படாமல் வலிக்க செய்வதும் வார்த்தைதான்..!

மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவது வார்த்தைதான்...!

வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்...!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Dec, 19:35


புது வருடம் என்ன செய்கிறோமோ அதையே அந்த வருடம் முழுவதும் செய்வோம் என்பது மூடத்தனத்தின் உச்சம்!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Dec, 19:25


எதுவும் தாமதமாகி விடவில்லை.
இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்.
- கல்யாண்ஜி

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

31 Dec, 04:04


பேசுவதை கேட்கவே
நேரமில்லை என்றபின்
அங்கு கொஞ்சினாலும்
கெஞ்சினாலும் எந்த
பயனும் இல்லை ..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

30 Dec, 15:40


யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும்..!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

30 Dec, 15:09


உனக்கு ஒருத்தன் மேல பொறாமை வர்றதுக்கு காரணமே, அவன் ஏதோ ஒரு வகையில உன்னை விட சிறந்தவனா இருக்கிறது தான்... 😑

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

30 Dec, 08:02


வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்.

வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்.

வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

30 Dec, 04:07


ஆயிரம் புத்தகங்கள் படிப்பதை விட ஒரு அனுபவசாலியிடம் பேசிக் கொண்டிருப்பது உத்தமம்...!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Dec, 15:29


எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது, அது மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளிவிடும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

29 Dec, 14:29


சிந்தனையும்
செயலும்
பழக்க வழக்கமும் மாறாவிட்டால்
வருவது
புது வருடம்
அல்ல
இன்னொரு வருடம்...!
அவ்வளவே..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Dec, 03:03


தூக்கி எறியப்படும் தருணங்களில்தான்
சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது❤️

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Dec, 02:26


ங்கள் அறிந்து வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நீங்கள் அறியாத ஒரு மனிதர் இருக்கிறார்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Dec, 02:24


தவறாகிவிடுமோ என்ற எண்ணம் தான் பல வாய்ப்புகளை தவறவிடுகிறது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Dec, 02:24


புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு; இகழ்வதோ அதைவிட பெரிய தப்பு.
- Leonardo da Vinci

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Dec, 02:24


தேவை இல்லாத எண்ணங்களில் இருந்து, தன்னை தானே காத்துக் கொள்பவனுக்கு மட்டுமே மகிழ்ச்சி எப்போதும் சொந்தம்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Dec, 02:23


பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம்.

பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றி கொள்ள முடியும் என்பது இந்த காலம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 15:31


நல்லவர் கெட்டவர் அனைவரிடமும் பழகுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நல்லவர்களிடமும் எப்படி இருக்க கூடாது என்று கெட்டவர்களிடமும் கற்றுக் கொள்ளுங்கள்..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 14:32


எங்கு அதிக அன்பு வைக்கிறோமோ அங்கு நம் சுயத்தையே இழக்கிறோம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 14:32


யாரிடம் நாம் அதிக அன்பு வைக்கிறோமோ அவர்களிடம் தான் நாம் அதிக அவமானப்படுவோம்😭

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 13:40


எப்போதும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றால் தனியாக போராட கற்றுக்கொள்...

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 13:40


மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது மனக்கவலை.
மரணம் ஒருமுறைதான் கொல்லும்;
மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 13:39


எளிய வாழ்வைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்குவதில்லை
எழுதுவதற்கும் தயங்குவதில்லை.
வாழ்வதற்கு மட்டும் தயங்குகிறோம்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 13:39


உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

22 Dec, 10:53


தப்பே பண்ணலேன்னு சொல்றவனு கூட நம்பிறலாம் ..

ஆனால் ஆதாரம் இருக்கான்னு கேக்குறவனை மட்டும் நம்பவே கூடாது..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

21 Dec, 15:45


ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலில் இரண்டு விதமான பார்வைகள் உண்டு

ஆண் காதலிப்பதை விரும்புகிறான்
பெண் காதலிக்கப்படுவதை விரும்புகிறாள்..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

21 Dec, 06:50


வாழ்வில் தானாக
தவறி விழும்
போதெல்லாம்
எழுந்து விடுகிறார்கள்

பிறரால் தள்ளி
விடப்படும் போது தான்
சிரமப்படுகிறார்கள்
எழுவதற்கு

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

21 Dec, 03:57


முதுகில் குத்தும் பலரை விட
முகத்துக்கு முன் சண்டை போடுபவர்கள்
உலகில் சிறந்தவர்கள்..😍😍

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

21 Dec, 03:57


அன்பு என்பது நம்மால் அவங்க மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைப்பது.
பற்றுதல் என்பது அவர்களால் நாம் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைப்பது.
இரண்டும் வேறு வேறு!!

- புத்தர்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

21 Dec, 03:55


மணிக்கணக்கில் போதனை செய்வதை விட, ஒரு கணப்பொழுது உதவி புரிதலே நலம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

04 Dec, 02:49


இன்றைய தரமான கேள்வி

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

04 Dec, 02:24


தன்னந்தனியாய் பெரும் புயலை, கனமழை தருணங்களைக் கடப்பதென்பது தன்னந்தனியாய் வாழ்வைக் கடப்பது தான்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

04 Dec, 02:21


பேச நேரமில்லை என்பதெல்லாம்
தேவைக்கள் முடிந்துவிட்டன
என்பதன் வெளிபாடு தான்..😊😊😊

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Dec, 02:41


அழகு இளமையோடு
நின்று விடுகிறது..
உண்மையான அன்பு
மட்டுமே இதயம் வரை
நுழைகிறது..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Dec, 02:35


விளைவுகளுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாமல், முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Dec, 02:31


புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள் புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.

புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது நாடகம் நடத்தி செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள்
#உணர்வின்_ஈரம்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Dec, 02:30


என் மழையாய் இரு.
அடை மழையோ
சிறு தூரலோ
உன் விருப்பம் போல் இரு
ஆனால் என் மழையாய் இரு.

நிலா.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

03 Dec, 02:15


ஒரு பெண்ணின் கோபத்திற்கு பின்னால் ஆசையும் ஏக்கமும் மறைந்து இருக்கும்..!
அதை புரிந்து கொள்ளும் ஆணுக்கு அவள் தேவதை..!
புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அவள் வேதனை..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 16:29


மற்றவர்கள் அனைவரும் நம்மை விட சிறப்பாக வாழ்கிறார்கள் என்னும் மாயையை இந்த சமூக வலைதளம் நமக்கு இலகுவாக தந்து விடுகிறது!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 16:22


இழந்து நிற்பது கூட முட்டாள்தனம் அல்ல.... இழந்ததை எண்ணி இருப்பதையும் இழப்பது தான் முட்டாள்தனம்....

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 16:13


நம்மை பற்றி நாம் சுமக்கும் பழைய நினைவுகளே மிகவும் கணமானவை

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 03:48


உன் ஒவ்வொரு செயலுக்கும் பதில் வினை உண்டு

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 03:47


உன் அந்தஸ்தை விட மனிதாபிமானம் சிறந்தது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 03:47


வாழ்க்கையின் மூன்று சிறந்த ஆசிரியர்கள்
1. மனமுடைந்த காதல்
2. ஏழ்மை
3. அவமானம் தரும் தோல்வி

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 03:45


கடைசியில் உனக்கு நீ மட்டும் தான் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 03:45


கோபத்தில் எடுக்கும் முடிவுகளை மாற்ற முடியாது .. கவனம் தேவை

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

02 Dec, 03:37


போவதற்கு வழி விடாமல் பூனையை மறித்து பார்
அப்போது புலியை காண்பாய் 🎈

-இன்குலாப்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 03:41


★━━★━━★━━★━━★━━★━━★

  
சரித்திரம் படைக்க ஜாம்பவனாக இருக்க தேவையில்லை...

அவமானத்தை சேகரித்தாலே போதுமானது.



  ★━━★━━★━━★━━★━━★━━★

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 01:02


கவலைகளை நோக்கி போனால்...

அது நம்மை துரத்தும்.

சந்தோஷத்தை நோக்கி சென்றால்...

அது நம் கவலைகளை துரத்தும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:12


வீரம் உன்னை மட்டுமே காப்பாற்றும்.
ஆனால், நீ செய்யும் தர்மம் உன் வம்சத்தையே காப்பாற்றும்!!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:11


உனக்கு எதிரில் இருப்பவனை விட

உனக்கு அருகினில் இருப்பவனிடம்

கொஞ்சம் கவனமாக இரு

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:11


"பொய்"க்கு தெரியாது
நாம் போகும் "போக்கில்" போய் விடுவோம் என்று....!

"உண்மை"க்கு தெரியும்
நாம் காலம் முழுக்க "வாக்கில்" வாழ்வோம் என்று....!!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:11


வாழ்க்கையில்
மாற்றம் என்பது
நினைத்தால் மட்டும்
வராது...

அதற்காக உழைத்தால் மட்டுமே
வரும்...!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:10


சினம் தணிந்து, மனம் குளிர்ந்து
பின்பு செய்யும் எந்த செயலும் உனக்கு எதிர்மறையை உண்டாக்காது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:07


பெரும்பாலானவர்கள் இரண்டே வகை தான், தன்னை அமைதியானவர்களாக காட்டிக்கொள்பவர்கள், இல்லை கோபக்காரர்களாக காட்டிக்கொள்பவர்கள்..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:05


மாற்றம் முதலில் கடினமாக இருக்கும்.
நடுவில் குழப்பமாக இருக்கும்.
இறுதியில் மிக அழகாக இருக்கும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

27 Nov, 00:03


விட்டு குடுப்பது ஒன்றும் தவறில்லை...
உங்கள் தன்மானத்தையும் , சுய மரியாதையும் தவிற....

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

24 Nov, 05:40


பெத்தவங்களுக்குப் பயந்து நடந்த கடைசித் தலைமுறையும் நாமதான்,

பெத்தப் பிள்ளைகளுக்குப் பயந்து நடக்கும் முதல் தலைமுறையும் நாமதான்!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Nov, 23:44


🔸=»><«=●-✳️✴️--●=»><«=🔸
அடுத்தவரின் எண்ணங்களைப்பற்றி கவலை கொள்ளாதீர்கள்...
ஏனெனில்..ஒரு மூடனுக்கு ஒரு புத்திசாலி
பைத்தியக்காரனைப் போலவேதோன்றும்..
🔸=»><«=●-✳️✴️--●=»><«=🔸

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

23 Nov, 23:43


செய்யும் வேலையைமனசுக்கு புடிச்சு
ரசிச்சு செஞ்சாஅலுப்பே தெரியாது.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Nov, 11:11


தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட சரியான பாதையில் மெதுவாகச் செல்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

20 Nov, 11:10


தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விசயம்
வேறு எதுவுமில்லை.
- ஜாக்சன் பிரவுன் ஜீனியர் -

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 13:02


வண்டுக்
காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….

பனித்துளிகள்
-----நவின்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 13:00


விடிந்ததும்
இருண்டு
விடுகிறது
தெருவிளக்கின்
வாழ்க்கை...!!!
-விநா-

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:59


சொந்தமண்ணிலிருந்து!
துரத்தப்பட்ட அகதி!
துடுப்பற்ற பரிசல்!
பிறைநிலா

சென்னை - நவின், இர்வைன்

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:59


எப்படி
சொன்னாலும்
புரிய மறுக்கிறது
நாய்.
நன்றி கெட்டவர்கள்
நாங்களென.
-----ரவி

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:55


தனியாக இருங்கள், அது தான் கண்டுபிடிப்பின் ரகசியம் நீங்கள் தனியாக இருக்கும் போது தான் கருத்துக்கள் பிறக்கின்றன
- Nikola Tesla

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:55


வலுக்கட்டாயமாக
உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து
அவர்களின் போலியான
அன்பைப் பெறுவதைக் காட்டிலும்
தனிமை எவ்வளவோ மேல்..

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:54


எதையும் நீ தேடிப் போகாதே உனக்கு தகுதி இருந்தால் அது உன்னை தேடி வரும்...!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:53


தவறாகிவிடுமோ ???
என்ற எண்ணம் தான்
பல வாய்ப்புகளை தவறவிடுகிறது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

19 Nov, 12:53


தவறு செய்தால் ஒத்துக்கொள்ளுங்கள். விரைவில் சரி செய்து கொள்ளலாம். ஆனால், செய்த தவறை இல்லை என்று சாதிக்காதீர்கள். என்றுமே சரி செய்ய முடியாது.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

17 Nov, 04:18


காலம் ஒவ்வொரு துன்பத்திற்கு பிறகும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும்.

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

17 Nov, 04:17


குறைகளை நாம் குறைக்கத் துவங்கினாலே போதும். தானாகவே நம்முடைய நிறைகள் நிறைந்து கொண்டே போகும்...!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

17 Nov, 04:16


தவறான வழியில் செல்பவனை வாழ்த்தியும்,
நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும்
பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்..!

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

17 Nov, 04:14


வாழ்வின் முதல் இன்பம்
உடல் நோயற்று இருப்பது
இரண்டாவது இன்பம்
மனம் கவலையற்று இருப்பது
மூன்றாவது இன்பம்
பிறருக்கு உதவியாக வாழ்வது

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Nov, 08:14


படித்து வியந்தது.

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்....

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன்
இசையை ஏழாகக் கொடுத்தான்...

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன்
சுவையை ஆறாக பிரித்தான்...

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன்
நிலத்தை ஐந்தாக பிரித்தான்...

குறிஞ்சி (மலைப்பகுதி)
முல்லை ( வனப்பகுதி)
நெய்தல் ( கடல் பகுதி)
மருதம் ( நீர் மற்றும் நிலம்)
பாலை ( வறண்ட பகுதி)

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்...

தென்றல்
வாடை
கோடை
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல்

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்...

இயல் ( இயற் தமிழ் )
இசை ( இசைத்தமிழ்)
நாடகம் ( நாடகத்தமிழ்)

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது...

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்...

அகம்
புறம்

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை...

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம்
புற வாழ்க்கை...

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்...
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்...

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்
அதை...
உயிரினும் மேலாக வைத்தான்...

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Nov, 04:20


Channel name was changed to «தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal»

தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal

16 Nov, 04:16


இன்று போல்
நாளையில்லை
முன்பு போல்
நாமும் இல்லை

மாறும் காலத்தோடு
மாறு வேடம்
போட்டுக் கொண்டு
மாறிப் போகிறோம் ...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

15 Nov, 16:57


நீங்கள் கடந்து சென்ற துயரத்தையெல்லாம் சவால்களையெல்லாம் துரோங்களையெல்லாம் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் என்றேனும் ஒரு நாள் அதனைப் படிக்கையில் உங்களை நீங்களே காதலிக்க நேரலாம்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

15 Nov, 03:59


தேவையற்ற விவாதங்களில் நமக்கு வெற்றி கிடைக்கலாம்,

ஆனால்,

தேவையானவர்களை இழக்க நேரிடும்…!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

15 Nov, 03:47


நோய் மிகப் பெரிய வேதனைதான், தொந்தரவுதான், செலவுதான், வீட்டில் உள்ளோருக்குக்கூட கஷ்டங்கள்தான். ஆனாலும் சாபமாக வந்த இந்த நோயில் ஒரு வரம் அடங்கியிருக்கிறது.

நோய்ப்பட்ட அநேகம் பேருக்கு கர்வம் ஒழிந்துவிடும். 'அடடே என்னைப் பெரிய கொம்பு என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. இவ்வளவுதானா நான்' என்று மிக எளிதில் என்னுடைய வலிமை, முகத்தின் அழகு, முகத்தின் பொலிவு எல்லாம் பிடுங்கிக் கொண்டு போவதை அறிந்து கொள்ள முடியும்.

வாழ்வினுடைய நிலையாமை முகத்துக்கு நேரே வந்து அறையும். நோயுற்றபோது நான் கற்றுக்கொண்டவை அநேகம்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

15 Nov, 03:43


ஏதுவும் இல்லாதவர்களுக்கு அன்பான வார்த்தைகள் கூட பொக்கிஷம் தான்.
அன்பு தான் இவ்வுலகில் உயர்ந்தது

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

14 Nov, 04:21


வேகமாக கிடைக்கும் எதுவும்...
வேகமாக நம்மை விட்டு சென்று விடும்...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

13 Nov, 16:52


மலையில் அமர்ந்து தவம் செய்வது எளிது ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் வாழ்ந்து பொறுமை காப்பது கடினம் இதுவே தவம். - ஓஷோ

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

13 Nov, 03:40


எவை மருந்து
1. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது மருந்து.

2. காலையில் இறைவனை நினைப்பது மருந்து.

3. யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்து.

4. காலை, மாலை நடைப்பயிற்சியும் மருந்தாகும்.

5. நோன்பு அனைத்து நோய்களுக்கும் மருந்து.

6. சூரிய ஒளியும் மருந்துதான்.

7. மட்கா தண்ணீர் குடிப்பதும் ஒரு மருந்து.

8. கைதட்டலும் மருந்துதான்.

9. அதிகம் மெல்லுவதும் மருந்துதான்.

10. உணவைப் போலவே, மெல்லும் நீர் மற்றும் குடிநீரும் ஒரு மருந்து.

11. உணவுக்குப் பின் வஜ்ராசனத்தில் அமர்வது மருந்தாகும்.

12. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவும் மருந்தாகும்.

13. சில சமயங்களில் மௌனமும் மருந்தாகும்.

14. சிரிப்பும் கேலியும் மருந்து.

15. மனநிறைவும் மருந்துதான்.

16. மனமும் உடலும் அமைதியே மருந்து.

17. நேர்மையும் நேர்மறையும் மருந்து.

18. தன்னலமற்ற அன்பும் உணர்ச்சியும் கூட மருந்து.

19. அனைவருக்கும் நல்லது செய்வதும் மருந்தாகும்.

20. ஒருவருக்கு புண்ணியம் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.

21. எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதே மருந்து.

22. உண்பதும் குடிப்பதும் குடும்பத்துடன் பழகுவதும் மருந்தாகும்.

23. உங்களின் ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத ஒரு முழுமையான மருத்துவக் கடை.

24. குளிர்ச்சியாக இருங்கள், பிஸியாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், உற்சாகமாக இருங்கள், இதுவும் மருந்துதான்.

25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்தாகும்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

12 Nov, 20:28


ஆரம்பத்தில் கடவுள் டெய்லியும்
மனுசனுக்கு பிரச்சனை கொடுத்திட்டு இருந்தாரு.

அப்புறம் டைம் இல்லைனு
வீட்ல மனைவியையும்
ஆபிஸ்ல மேனேஜரையும் நியமிச்சு
இதே வேலையை செய்ய சொல்லிட்டாரு

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

11 Nov, 03:41


கவிதை எழுதுதல் என்பது தப்பித்தலுக்கான ஒரு எளிய வழி... யாரிடமாவது சொல்லத்துடிக்கும் வார்த்தைகளை GAL யாரிடமோ சிந்திச்சென்று ஆறுதலடையும் பாசாங்கற்ற வழி...! -பாலா

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

11 Nov, 03:25


போதும் என்கிற மனசுதான் வசதி..!!

வேணும் என்கிற எண்ணம்தான் வறுமை..!!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

11 Nov, 02:47


இன்றைய புத்தக மொழி
11/11/24
📚📚📚🌹📚📚📚

இயன்றவரை
குறைவாக பேச வேண்டும்.
செயல்களில்
அதிகமாக ஈடுபடவேண்டும்.

- பவுரின் -
நன்றி யாழினி
📚📚📚🌹📚📚📚

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

11 Nov, 02:43


ஓரிரு வார்த்தைகளே
ஓராயிரம் வருத்தங்களுக்கு
காரணமாகும்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 17:46


வாழ்க்கையில எல்லாமே
லேட்டா தான் புரியும்ன்றதே
லேட்டா தான் புரியுது. 🥹🥹🥹

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 17:42


பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில்
பொக்கிஷம் வேண்டுமென்றால்,
கடலுக்குள் செல்.

-சூஃபி

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 17:42


தேவைக்கு தகுந்த வருமானம் இல்லாத போதுதான் ஒரு ஆண் தன்னை பலவீனமாக உணர்கிறான்😌

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 17:41


எவ்வளவு படித்திருந்தாலும் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே தேர்வு.

எவ்வளவு தெரிந்திருந்தாலும் எப்படி செயல் படுத்துகிறோம் என்பதே வாழ்க்கை.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 17:41


சிரிப்பை இயல்பாக்கிக் கொள்ளுங்கள்,

மனதில் கவலை இருந்தாலும்,
அகம் போல, முகமும் அழகு பெறும்..!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 15:55


https://t.me/audio_book_tamil

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 12:46


மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்

~ ஜி. நாகராஜன்

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 10:08


🐒🤔 சொல்வதைத் தெளிவாகவும் , கேட்பதைச் சரியாகவும் செய்தாலே நிறையப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பதை அழகாக , அருமையாக , அற்புதமாக விளக்கும் புகைப்படம் |🤫📚🦧

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 05:11


வயது அதிகமாக அதிகமாக

கற்றுக் கொள்ள வேண்டியதை விட

ஏற்றுக்கொள்ள வேண்டியது

அதிகமாகிறது...

அவசியமாகிறது....

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 05:10


இந்த அழகான உலகத்தை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் நாம்... ஒரு நாள் திரும்பிச் செல்ல தான் போகிறோம்...

தேதிகள் மட்டும் ரகசியம்...!!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 05:09


பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை,
பொய்யான உறவுகள்
,

இம் மூன்றும் கற்று தரும் பாடத்தை, யாராலும் கற்றுத் தர முடியாது...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 05:07


மௌனமும்
சிரிப்பும்
மிக மிக சக்தி வாய்ந்தவை

மௌனம் நிறைய பிரச்சனைகளை இல்லாமல் செய்து விடும்..!

சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்து விடும்...!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

10 Nov, 05:06


எதைப் பேச வேண்டும் என்பது ஞானம்.

எப்போது பேச வேண்டும் என்பது புத்திசாலித்தனம்...!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

04 Nov, 19:33


முடியாது என்று சொல்ல வேண்டிய இடங்களில் முடியாது என்று உடனே சொல்லிவிடுங்கள்... இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்..

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

04 Nov, 14:19


அவமானங்களால்
வாழ்க்கையில் அதிக
தெளிவு கிடைக்கிறது...
சிலரை புரிந்து
கொள்ளவும் முடிகிறது...!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

04 Nov, 14:16


பொய்யை கிளறாமல் விட்டு விடு; அது தானே மெல்ல மெல்ல வலுவிழந்து அழிந்து விடும்..!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

04 Nov, 06:06


உறவுகள்
இரண்டே வகை
🫷✌️🫸
ஒன்று
அன்பைத் தரும்..,
💛
மற்றொன்று
அனுபவத்தை தரும்...
அன்பைத்தரும் உறவை
மனதில் வை !!
🛐☸️🛐
அனுபவத்தை தரும்
உறவை
நினைவில் வை !!
🌺🌺🌺🌺🌺🌺

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 09:08


அறுந்து போனதென்னவோ மின்சாரம் தான்
அழுதது மெழுகுவர்த்தி

வெட்டுப்பட்டது வெங்காயம் தான்
கண்ணீர் வடித்ததென்னவோ கண்கள்

தொலைந்து போனதென்னவோ சாவி தான்
அடிவாங்கி அழுதது பூட்டு

வாழ்க்கையும் அதுபோலதான்...சிலநேரங்களில்

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 09:07


பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும். கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்.. துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும் வியாதியில் நம்மை விசாரித்தவர்களையும்..
ஒருநாளும் மறவாதிருங்கள்..

அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள், நண்பர்கள்...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 08:34


பசுவை போல சாந்தமாக இருந்து விட்டுபோகத் தான் ஆசை ஆனால்...
நரிகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணரும் போது...
கர்ஜனை செய்யாமல் கடந்து விட முடிவதில்லை..!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 05:23


மனதைப் பக்குவப்படுத்த வேண்டுமானால்..., யாரிடத்திலும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருங்கள். இந்த நடைமுறை உங்களது மனதிற்கு வலிமை சேர்க்கும்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 05:22


மரணத்தை பற்றி கவலைப்படதே,
நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை...
அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை....
பிறகு எதற்கு கவலை?

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 05:21


உத்திரவாதங்கள் பெரும்பாலும்... சமாதானத்திற்காகவே சொல்லப்படுகிறது.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 05:16


மனநிலைக்கு தகுந்தார் போல் பேசி விடாதீர்கள். ஏனென்றால் மனநிலை மாறலாம். ஆனால் பேசிய வார்த்தைகள் ஒருபோதும் மாறாது.!

-புத்தர்

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 04:31


பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமல்...

வேண்டாத விஷயத்தை கவனம் செலுத்தாமால்...

தேவையற்ற கேள்விக்கு பதில் சொல்லாமலும் இருந்தால்...

நம் மனம் ஆரோக்கியமாக இருக்கும்...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 04:02


எப்போதும் இப்படித்தான்
எதையாவது உடைத்து விடுகிறாய்
எவ்வளவு கவனத்தோடு நிமிடங்களை நகர்த்தினாலும் ததும்பும் கண்ணாடிக் குவளையிலிருந்து தவறி விழும் மிகை நீர்த்துளி போல்

எப்படியாவது சிந்திவிடுகின்றன. சில சொற்கள்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 03:59


ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் கண்களுக்கு தெரிய வேண்டியது காரணங்களோ விளக்கங்களோ அல்ல இலக்கு மட்டுமே...!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 03:59


முள் குத்திவிட்டது என்று முள்ளை குறை கூறாமல் தவறான இடத்தில் காலை வைத்துவிட்டோம் என பாதையை மாற்றுபவர்களே புத்திசாலிகள்...!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 03:59


அழகு என்பது அடுத்தவரைக் கவர்வதில் இல்லை. அடுத்தவரைக் காயப்படுத்தாமல் பழகுவதில் தான் இருக்கிறது.......

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

03 Nov, 03:57


குழப்பமான
இடத்தில்
தெளிவாக
பேசுங்கள்.........

பிரட்சினையான
நேரத்தில்
தீர்வு பற்றி
பேசுங்கள்.......

வருத்தமான
சூழலில்
ஆறுதலாய்
பேசுங்கள் ........

மனஅழுத்தம்
உள்ளவர்களிடம் ..........
உற்சாகமாய்
பேசுங்கள் !!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

02 Nov, 03:17


இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான்..
அது என்ன நினைக்கிறதோ,
அதற்காக முயற்சி செய்ய வைத்து
அதை நோக்கியே உன் வாழ்க்கை பயணத்தை அமைக்கிறது..

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

02 Nov, 03:16


சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால்,
வாழ்க்கையில் மிகப் பெரிய
மாற்றம் அடையலாம்
எண்ணம் போல் வாழ்க்கை

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

02 Nov, 03:15


மற்றவர்களை பற்றி புறம் பேசும் கூட்டத்தில் நிற்காதீர்கள்...
அங்கிருந்து நீங்கள் நகர்ந்த பிறகு
அடுத்த தலைப்பு நீங்களாக தான் இருப்பிர்கள்...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

01 Nov, 04:07


வேலையில்லாதவனின் பகலும்
நோயாளியின் இரவும்
நீளமானவை. இருவரின்
கடிகாரத்திலும்
இடம் வலமாக ஆடும்
பெண்டுலத்தில்
ஒரு பக்கம் விரக்தியும், இன்னொரு பக்கம் வலியும்
காலத்தை நகர விடாமல்
தடுக்கின்றன.

- நா. முத்துக்குமார் -

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

01 Nov, 04:00


நல்லவராய் இருப்பது நல்லது தான்
ஆனால் நல்லது கெட்டது தெரியாத
நல்லவராய் இருப்பது நல்லது அல்ல..!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

01 Nov, 03:50


அடுத்தவர்களால் நாம் கவனிக்கப்படும் இடத்தில் இருப்பதை விட கவனிக்கப்படாத இடத்தில் இருப்பது சில சமயம் நிம்மதியை தரும்!.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 05:59


நீங்கள் தாமதமாக கற்றுக்கொண்டதை உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கற்றுக்கொடுங்கள்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 05:59


நல்லது மெதுவாகத்தான் நடக்கும்... கெட்டது உடனே நடக்கும்... அதனால், எதிலும் பொறுமை அவசியம்...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 04:09


அன்பை வெளிப்படுத்த
எந்த காரணமும் தேவைப்படுவதில்லை நிராகரிக்கத்தான்
நிறைய காரணங்கள் தேவைப்படுகிறது..!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 04:04


மனிதனின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் இரண்டு... ஒன்று ஒழுக்கம், மற்றொன்று உயிர். அதில் எந்த ஒன்றை இழந்தாலும் மீண்டும் பெற முடியாது..!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 04:00


யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 03:58


திறமையினால் சாதிப்பதை விட,
பொறுமையினால் அதிகமாக சாதிக்கலாம்...
பொறுமை மிகப்பெரியது!!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

30 Oct, 03:53


நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள
எதுவும் இல்லாத போது தான்
மற்றவர்கள் பேசும் வார்த்தை
நாம் யார் என்பதை புரிய வைக்கிறது..!

#வலி

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

29 Oct, 10:38


நீங்கள்
எப்போதாவது வாழ்க்கையில் ஒரு மோசமான நேரத்தை எதிர்கொண்டால் அமைதியாக இருங்கள்.

சலசலப்பு தான் நெருப்பை அதிகம் எரிய வைக்கும் அமைதி கொண்டால்
தானாகவே அது

அணைந்து விடும்...

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

29 Oct, 10:38


மன்னிக்குறவன் மனுஷன்...

மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன்....

மன்னிக்கப் பழகுங்கள்,
மன்னிப்பு கேட்கவும் பழகிக் கொள்ளுங்கள்.


இதயம் கனமற்று நிம்மதியாக இருக்கும்...!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

29 Oct, 08:55


விவரம் தெரிஞ்ச பிறகு தான் தெரியும்..

விவரம் தெரியாத வயசுல வாழ்ந்த வாழ்க்கை தான்,

சொர்க்கம் என்று.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

28 Oct, 04:32


மனசு கஷ்டமாருந்தது..
உங்க கூட கொஞ்சநேரம் பேசுனா ஆறுதலாருக்கும்னு தோணுச்சு...
அதான் பேசலாம்னு கால் பண்ணேன்னு

நம்மள நம்பி சொல்றதுக்கு சிலபேரையும்.,
அப்டி நம்ம போயி நம்பி
சொல்றதுக்கு சிலபேரையும் சம்பாதிச்சிட்டா போதும் ..!!!

வாழ்வுவசப்படும்

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

28 Oct, 04:19


உனது உண்மையான நண்பன் யார் என்று தெரிய வேண்டுமா?

பணம் இல்லாத ஏழையாக வாழ்ந்து பார்.

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 04:45


தந்தை இல்லாத போது தான் தெரியும்
உலகிலேயே எல்லா சொந்தமும்
அவர் இருந்தால் தான் நிலைக்கும்
இல்லாவிட்டால் நடிக்கும்

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 04:06


அனுபவமே அறிவின் பிறப்பிடம்!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 04:03


கோழிக்குஞ்சு கலர் கலரா இருக்குன்னு விரும்பி வாங்குவோம்
அப்புறம் அது வளரும்போது வெள்ளையா மாறிடும்
காதலும் அப்படித்தான்..!!!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:43


✿.。🍁*☆*🌼*.☆*🍁。.✿
எதுவாக இருந்தாலுமே
அதை உபயோகித்துக் கொண்டு
இருக்கும் போது தொலைந்தால் தான்
அதன் மதிப்பு தெரிகிறது!
உபயோகிக்காமல் ஒதுக்கிய பிறகு தொலைந்தால்....
அது தொலைந்தது கூடதெரியாமல் போகலாம்
கால ஓட்டத்தில்!
உறவுகள் விதிவிலக்கல்ல!!!
✿.。🍁*☆*🌼*.☆*🍁。.✿

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:41


🌹பச்சோந்தியின்
பகல் வேஷம்
இரவிடம் தோற்று போகிறது....
உணர்ந்து
வாழாத வாழ்க்கையும்
இதற்கு ஒப்பானவையே....

✿.。🍁*☆*🌼*.☆*🍁。.✿

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:41


🌹கண் தெரியாதவன்
உதவி கேட்டு
பாடியபோதுதான் தெரிந்தது
இங்கு காது கேளாதவர்கள்
அதிகம் என்று...!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:39


✿.。🍁*☆*🌼*.☆*🍁。.✿
எப்பொழுதும் மிகக்கூர்மையாக இருக்காதீர்கள்,
தங்களையே குத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.....!!
✿.。🍁*☆*🌼*.☆*🍁。.✿

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:36


*••◕◕════🔥════◕◕••*
எந்த சிறுமை குறித்தும் வெட்கமுற
ஒன்றும் இல்லை...
வாழ்க்கை என்பது
அந்தந்தநேரத்து நியாயமே தவிர
வேறொன்றுமில்லை...
*••◕◕════🔥════◕◕••*

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:35


*••◕◕════🔥════◕◕••*
ஓர் எறும்புக்கு முன்னால்
எந்தத்தடைகளை நீங்கள் வைத்தாலும்
அது அடியில் சென்றோ
அல்லது மேலாக சென்றோ,
அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்..!
நன்றாக கவனித்துப்பாருங்கள்,
தடைகளை உடைப்பதற்கு எறும்புகள்
காலத்தை விரயம் செய்து அழியவில்லை..!
தடைகளை அங்கேயேவிட்டு அவை முன்னேறுகின்றன.
வெல்பவர்கள் தளர்வதில்லை!
தளர்பவர்கள் வெல்வதில்லை!
*••◕◕════🔥════◕◕••*

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:33


*••◕◕════🔥════◕◕••*
ஆடுகிற ஆட்டமும்,
ஓடுகிற ஒட்டமும்
ஒருநாள் ஓயும்போது...
கூடுகிற கூட்டம்தான்
சொல்லும்

நீங்கள் யார் என்பதை..!!
*••◕◕════🔥════◕◕••*

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:32


*••◕◕════🔥════◕◕••*
வாழ்க்கை
எவ்வளவு பெரிதென்று நினைக்கிறோமோ அவ்வளவு சிறியது..!
எவ்வளவு சிறிதென்று நினைக்கிறோமோ அவ்வளவு பெரியது..!!
ஏனெனில்,வாழ்க்கை நம் எதிர்ப்பார்ப்புக்குள் அடங்காது..!
அது என்றுமே எதார்த்தத்திற்குள்மட்டுமே அடங்கும்..!!
*••◕◕════🔥════◕◕••*

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:30


«------•}I|[🌼]|I{•------»
நான் யாரைப் போலவும் இல்லை
என் இயல்பு இது தான்
என மாறாமல் வாழ்வதும்
ஒருவகையில்
வாழ்நாள் சாதனைதான்...
!«------•}I|[🌼]|I{•------»

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

23 Oct, 02:29


«------•}I|[🌼]|I{•------»
உங்களின் திறமையைக்கூடபலர் திமிராய்
பார்க்கலாம்மாற்றிக் கொள்ளவேன்டியது
அவர்களது பார்வையைதான்உங்களின் திறமையை அல்ல...!
«------•}I|[🌼]|I{•------»

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 13:46


நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லோரிடமும் பழகு. எப்படி இருக்க வேண்டும் என்று நல்லவர்களிடம் கற்றுக் கொள். எப்படி இருக்க கூடாது என்பதை கெட்டவர்களிடம் கற்றுக் கொள்.!

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 02:33


●✿¯°º¤¤º°¯✿●

நிம்மதியும்,
ஆரோக்கியமும்,
மகிழ்ச்சியும்
வாழ்வில் பொங்கட்டும்

காலை வணக்கங்கள்.
●✿¯°º¤¤º°¯✿●

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 02:31


🛑•]•·✦º✦·»«·✦º✦·•[•🛑

நாம் அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்..

கப்பலில்,கடல்நடுவே பயனப்படும்போது
கிடைப்பது இல்லை..!

நமக்கு பேரின்பம் எல்லாம் வேண்டாம்..

சிறு சிறு சந்தோஷங்களே போதும்,
வாழ்வை கடப்பதற்கு..!

அதை அனுபவித்து வாழுங்கள்..
வாழ்வின்கடைசி நிமிடம்வரை..!!

🛑•]•·✦º✦·»«·✦º✦·•[•🛑

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 02:30


【★】[►🌹◄]【★】

நிலைமை மாறினால்
மகிழ்ச்சியாய் இருக்கலாம்
என்பது பொய்...

மகிழ்ச்சியாய் இருந்தாலே
நிலைமை மாறிவிடும்
என்பதே நிதர்சனமான உண்மை...!!

【★】[►🌹◄]【★】

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 02:30


【★】[►🌹◄]【★】

வாழ்வில்
ஒவ்வொரு
மனிதனுக்கும்
இருக்கவேண்டிய
அடிப்படை
நற்குணம்
தனக்குத்தானே
உண்மையாக
இருப்பதுதான்...!

【★】[►🌹◄]【★】

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 02:30


【★】[►🌹◄]【★】

குற்றம் புரிந்தவனும் நியாயம் கேட்கிறான்...
குற்றதிற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான்.
யாருக்கு அதை வழங்குவது என்பதை
இக்காலத்தில்
பணம் முடிவுசெய்கிறது...!

【★】[►🌹◄]【★】

Tamil Ponmozhigal தமிழ் பொன்மொழிகள்

22 Oct, 02:29


【★】[►🌹◄]【★】

நாக்கு ஒரு கொடிய மிருகம்
அதை ஒரு முறை அவிழ்த்துவிட்டால்
மீண்டும் கட்டுவது மிகக்கடினம்

【★】[►🌹◄]【★】

1,489

subscribers

305

photos

9

videos