மறுமைக்கான தேடல் @marumaikkana_thaedal Channel on Telegram

மறுமைக்கான தேடல்

@marumaikkana_thaedal

நல்லுபதேசம் (ஜனங்களுக்குப்) பயனளிக்குமாயின் நீர் (உபதேசித்து) நினைவுபடுத்துவீராக!

#அல்குர்ஆன் : 87:9

#நபிமொழி

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

#புகாரி : 3461

மறுமைக்கான தேடல் (Tamil)

மறுமைக்கான தேடல் என்பது ஒரு தொலைநெட் வசதியில் ஜனங்களுக்கு நல்லுபதேசம் உபதேசித்து நீர் பயனளிக்கும் சேனல். இந்த சேனல் அல்குர்ஆன் மற்றும் நபிமொழி பதிவுகளை கொண்டுள்ளது. கூடிய அல்குர்ஆன் உள்ள 87:9 என்ற வசனம் ஜோஷியாஸ் தண்டாக்கும். வழுக்காட்டியில் நபிமொழி பதிவுகளைப் படிக்கும் வாசகர்களுக்கு புகாரி 3461 கூடாகவும் இந்த சேனல் பரிந்துரை செய்கிறது. மறுமைக்கான தேடல் சேனலில் மிகவும் சுயமதித்த உள்ளடக்கங்களை அனுபவிக்க வேண்டும்.

மறுமைக்கான தேடல்

21 Nov, 13:08

இன்றைய கேள்விக்கான பதில் : 587

ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் சிறந்தவை நான்கு மாதங்களாகும்.
இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச் சிறந்தவை எந்த மாதம் ஆகும் என
அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்?

இ . முஹர்ரம்

ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் சிறந்தவை இந்த நான்கு மாதங்களாகும்.
இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச் சிறந்தவை முஹர்ரம் மாதம் ஆகும்.
அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “நான் நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இரவின் எந்தப் பகுதி சிறந்தது? இன்னும்
மாதங்களில் எது சிறந்தது?” எனக் கேட்டேன். நபி (ஸல்) கூறினார்கள்: “இரவில்
சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச் சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று
அழைக்கின்ற அல்லாஹ்வுடைய மாதமாகும்.” (நசாயி:4612)

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

21 Nov, 12:47

உமர் (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி :

பொய்யுரைத்து அது என்னை உயர்த்துவதை விட உண்மையுரைத்து அது என்னைத் தாழ்த்துவது எனக்கு விருப்பமானது.

(எனினும், பொதுவாக) உண்மையுரைப்பது (ஒருவரை) தாழ்த்துவதும் பொய்யுரைப்பது (ஒருவரை) உயர்த்துவதும் அரிது.

(أدب الدنيا والدين) للماوردي (1/263)

மறுமைக்கான தேடல்

21 Nov, 09:39

#அகமகிழ்ச்சியும்_துயரமும்

புழைழ் இப்னு இயாழ் (ரஹி) கூறினார்கள் :

துயரத்தின் அடையாளங்கள் ஐந்து உள்ளன!

1. வன்னெஞ்சம்
2. கலங்காத கண்கள்
3. குறைவான வெட்கம்
4. உலக ஆசை
5. நீண்ட எண்ணங்கள்

மனமகிழ்ச்சியின் அடையாளங்கள் ஐந்து உள்ளன!

1. உள்ளத்தில் ஈமானிய உறுதி
2. மார்க்கத்தில் பேணுதல்
3. உலகத்தில் பற்றற்ற தன்மை
4. வெட்கம்
5. அறிவு ஞானம்

الزهد لابن أبي الدنيا 208

மறுமைக்கான தேடல்

21 Nov, 06:18

*ஹதீஸ் : 932*

அபு அல் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
சொல்வதை நான் கேட்டேன்.

அறிவைத் தேடி எவர் ஒரு பாதையில் செல்கிறாரோ!

அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்கான வழியை எளிதாக்குவான்!

வானவர்கள் அறிவைத் தேடுபவருக்கு பணிவுடன் தங்கள் இறக்கைகளை தாழ்த்துகிறார்கள்!

தாம் மேற்கொள்ளும் செயலுக்கு அங்கீகாரம்!

அறிஞருக்கு வழிபாடு செய்பவர்
மீதுள்ள மேன்மை!

இரவில் நட்சத்திரங்களை விட பௌர்ணமி நிலவின் மேன்மை போன்றது!

அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள்!

ஆனால், நபியவர்கள் வாரிசுக்காக செல்வத்தை விட்டுச் செல்லவில்லை!

மாறாக, அவர்கள் அறிவை விட்டுவிட்டார்கள்!

இந்த அறிவை யார் பெறுகிறாரோ!

அவர் ஏராளமான நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்.

நூல் : சுனன் அபுதாவூத் 3/317

மறுமைக்கான தேடல்

20 Nov, 13:56

இன்றைய கேள்விக்கான பதில் : 586

சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு படித்தரங்களுக்கிடையே
எவ்வளவு தூரம் இருக்கும்?

இ.வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்க இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான்.இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்' என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்:
மேலும், 'அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலைஹ்(ரஹ்), தம் தந்தையிடமிருந்து, 'அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது' என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சந்தேகத்தொனியின்றி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2789

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

20 Nov, 08:57

முஸ்லிம் சமூகத்தின் மீது எதிரிகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணிகள் :

இமாம் இப்னு தைமிய்யா (رحمه الله) கூறுவதாவது :

1. நாத்திகம்
2. நயவஞ்சகம் 
3. பித்அத்'க்கள்

போன்றவை (சமூகத்தில்) வெளிப்படுவதாகும்.

நூல் : மஜ்மூஉல் ஃபதாவா (13/180)

மறுமைக்கான தேடல்

20 Nov, 05:04

*ஹதீஸ் : 931*

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது :*

(இறைத்தூதர்களான) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம், மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரீ : 6614, ஸஹீஹ் முஸ்லிம் : 2652)

முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய் தார்கள். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம், அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச் செய்த ஆதம் நீங்கள்தாமே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள் என்று கூறினார்கள்.

அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம், அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளைத் தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூஸா நீர்தாமே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்? என்று கேட்டார்கள்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்று பதிலளித்தார்கள். அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா? எனக் கேட்டார்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், ஆம் என்றார்கள். அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நான் எதைச் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீர் பழிக்கிறீரா? என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள்.

(இந்த எதிர்வினாவின் மூலம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 2652 / 5159).

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 279)

மறுமைக்கான தேடல்

19 Nov, 14:40

ஷெய்க் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

மனைவி சண்டையிடும்போது அல்லது அவள் உங்களுக்கு அநீதி இழைத்தபோது அவளை நியாயந்தீர்க்காமல் (பழிவாங்காமல்)  இருப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறை இல்லை!

மாறாக, கடந்த காலத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ந்த அந்த நல்ல நேசத்துக்குரிய காலங்களைப் பாருங்கள்!

அதே போல் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் என்ன என்பதைப் பாருங்கள்!

இருவரும், பின்னர் நியாயமான (நீதியின்) அடிப்படையில் தீர்ப்பு வழங்குங்கள்.

நூல் : ரியாலுஸ் ஸாலிஹீன் விளக்கம் - 275

மறுமைக்கான தேடல்

19 Nov, 07:50

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் நம்மில் பெரியவருக்கு
மரியாதை செய்யாமலும்,

சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும்,

அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ,

அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.

அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) | நூல் : அஹ்மத் 21693

மறுமைக்கான தேடல்

19 Nov, 07:49

உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

எவ்வளவு குற்ற உணர்வு இருந்தாலும், கடந்த காலம் மாறாது!

நீங்கள் எவ்வளவு கவலைப்பட்டாலும் எதிர்காலம் மாறாது!

எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கட்டளையால் தீர்மானிக்கப்படுவதால் எளிதாகச் செல்லுங்கள்!

வேறொரு இடத்திற்குச் செல்ல விதிக்கப்பட்டால், அது உங்கள் வழியில் ஒருபோதும் சிக்காது!

ஆனால், விதியால் ஒன்று உங்களுடையதாக இருந்தால், அது உங்களை விட்டு ஓட முடியாது (அதை விட்டு நீங்கள் ஓடவும் முடியாது).

நூல் : இமாம் பைஹாகி  அஸ்மாவஸ் சிஃபாத், பக்கம் - 243

மறுமைக்கான தேடல்

19 Nov, 06:17

*ஹதீஸ் : 930*

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது :

(இறைத்தூதர்களான) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம், மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரீ : 6614, ஸஹீஹ் முஸ்லிம் : 2652)

முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளதாவது :

*அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :*

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய் தார்கள். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம், அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச் செய்த ஆதம் நீங்கள்தாமே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள் என்று கூறினார்கள்.

அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம், அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளைத் தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூஸா நீர்தாமே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்? என்று கேட்டார்கள்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்று பதிலளித்தார்கள். அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா? எனக் கேட்டார்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், ஆம் என்றார்கள். அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நான் எதைச் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீர் பழிக்கிறீரா? என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள்.

(இந்த எதிர்வினாவின் மூலம்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 2652 / 5159).

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 279)

மறுமைக்கான தேடல்

18 Nov, 13:50

இன்றைய கேள்விக்கான பதில் : 585

தமக்கு அருளப்பட்ட வேதத்தை இலகுவாக ஓதும் ஆற்றல் கொடுக்கப்பட்ட நபி பின்வருவோரில் யார்?

A - தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 4713.

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

18 Nov, 09:37

நற்செயல்களை செய்வதற்கு முன்பு அகீதாவை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்..!

நாங்கள் பருவ வயதை நெருங்கிய இளைஞர்களாக இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் (தங்கி) இருந்தோம்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கு முன் இறைநம்பிக்கை எனும் (ஈமானை) கற்றுத்தந்தார்கள்.

பிறகே குர்ஆனை கற்றுத்தந்தார்கள். இதன் மூலம் எங்களது ஈமானை நாங்கள் அதிகரித்துக் கொண்டோம்.

அறிவிப்பாளர் : ஜூன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : இப்னு மாஜா 64 | ஸஹீஹ்

குறிப்பு : ஈமான் என்பது நம்ப வேண்டிய அடிப்படைகளை உள்ளத்தால் நம்பி, நாவால் மொழிந்து, செயல்களால் நடைமுறைப்படுத்துவது ஆகும்!

நல்ல செயல்களை செய்வதால் ஈமான் கூடும், தீய செயல்கள் மார்க்க கல்வியை கற்காமல் அலட்சியம் காட்டுவது.

ஃபர்ளான மார்க்க கடமைகளில் குறைபாடோடு இருப்பது போன்றவைகளால் ஈமான் படிப்படியாக குறையும்.!

மறுமைக்கான தேடல்

18 Nov, 05:59

*ஹதீஸ் : 929*

மனிதன்மீது விதிக்கப்பட்டுள்ள விபச்சாரத்தின் பங்கு

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது :

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான்.

(மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும்.

மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

(ஸஹீஹ் புகாரீ : 6243)

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள இந்த ஹதீஸைவிடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 278)

மறுமைக்கான தேடல்

15 Nov, 13:44

இன்றைய கேள்விக்கான பதில் : 584

எத்தனை தடவைக்கு மேல் மது அருந்தினால் ரதஹத்தில் கபாலை(நரகவாசிகள் சீழும், சலுமும்) அல்லாஹ் கடமையாக்கின்றான்?

அ-3

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மதுவை அருந்துகிறாரோ அவருடைய நாற்பது நாட்கள் தொழுகை நிறைவேறாது. அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு திருந்துகிறார். திரும்ப அவர் மதுவை அருந்துகிறார். திரும்ப அல்லாஹ்வுடன் பாவ மன்னிப்பு கேட்கிறார். திரும்ப மூன்றாவது முறையாக மது அருந்துகிறார். திரும்ப பாவ மன்னிப்பு கேட்கிறார்.மூன்று தடவைக்கு மேல் நான்காவது முறை மது அருந்தினால் அவருக்காக அல்லாஹ் அம்மனிதருக்கு மறுமையில் ரதஹத்தில் கபால் என்ற மதுவை கடமையாக்குகின்றான். உடனே, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ரதஹத்தில் கபால் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது நரகவாசிகள் சீழும், சலுமும் தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இப்னுமாஜா - 3377

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

15 Nov, 13:26

இப்னு ரஜப்‌ (ரஹி) கூறுகிறார்கள் :

குர்ஆனில் இருந்து எத்தனை வசனங்கள் நமக்கு ஓதிக் காட்டப்பட்டாலும், நம் இதயங்கள் பாறைகளைப் போலவோ அல்லது அதைவிடக் கடினமானதாகவோ இருக்கிறது!

நூல் : லதாயிஃபுல் மஆரிஃப்