இஸ்லாமிய கல்வி @islamtamilchennal Channel on Telegram

இஸ்லாமிய கல்வி

@islamtamilchennal


அஸ்ஸலாமு அலைக்கும்,

‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்: அபுதாவூத்

இஸ்லாமிய கல்வி (Tamil)

அஸ்ஸலாமு அலைக்கும்!
'இஸ்லாமிய கல்வி' என்ற டெலிகிராம் சேனல், இஸ்லாமிய கல்வியை பற்றிய மொழியாகப் பேசும் பயனர்களுக்கு மேலும் அறிவுப் பரிமாணம் வவசிக்கும் திரைச் சேர்க்குஞர் மற்றும் வர்த்தக திரைக்காரர். பயனர்கள் 'இஸ்லாமிய கல்வி' சேனல் மூலம் அறிந்தால், அவர்கள் குறிப்பிட்ட பொது கேட்களுக்கு விளக்கங்களைப் பெறலாம் மற்றும் இதைத் 'இஸ்லாமிய கல்வி' சேனலில் பகிர்ந்து கொள்ளலாம். இஸ்லாம் முழுவதும் உண்மையான அறிவும் அன்பும் செய்வதாக அறிவிப்பவர்களுக்கு உத்தமமான அரபுதாரர்கள் நடத்துகின்றனர்.

'இஸ்லாமிய கல்வி' சேனலில் உள்ள அறிவுப்பர்கள், தொடர்புகளை மேலும் வெளியில் அறிந்து கொள்ள வேண்டுமா? கல்வியை மேம்படுத்த வேண்டுமா? என்பது உங்கள் விசயமா? இருப்பும் மெய்ப்புத்தொகைகளை 'இஸ்லாமிய கல்வி' சேனலில் பகிர்ந்து கொள்ளலாம். இது உங்களை வெற்றியாகவும் உயர்ந்த அறிவுமும் அறிவிப்பவமுமான இஸ்லாமிய கல்வி உள்ளது! அதிகம் அறிய, அதிகம் முழுவதும் கொள்ள!
'இஸ்லாமிய கல்வி' சேனலில் இணைந்துள்ள பயனர்கள் அனைவரும் கொடிய அறிவு பங்களிப்புக்கள் மூலம் அறிந்து கொள்ள முன்வந்து அனுபவிக்க இசுவிப்பவர்கள்! அறிவுப் பரிமாணம் பஞ்சா஬் மதுர மத்திய கல்விப் பயணம் செய்து, உத்தம மட்டங்களில் ஆதரவு வழங்கும் நிலையான அறிவிப்பவர்களின் வரம்புகளை பெற வண்ணம் திரைக்காரர் மற்றும் பெற்றோம் ஆவணசகர் நடத்தல் மூலம் ஒரு நிலையான அனுபவத்தைப் பெறப்பெறப்படுகிறீர்கள். உங்கள் அறிவு விருதுகளை நீங்கள் எப்போதும் மேற்கொள்ள்வது நல்லது. உங்கள் அறிவுப் பரிமாணத்தை உயர்த்த வாயில்மொழிக்கு இளைஞர்களை கல்! அவர்கள் உங்ககாக உச்சம் கூறிக்கொண்டு வழிகாட்டுவார்கள்.

'இஸ்லாமிய கல்வி' சேனல் மூலம் நிறைய அறிவுத்தகங்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் அறிவுகளை விருதுப்படுத்தும் பல பயன்படுத்துவதன் மூலம் உங்கள் அறிவுப்பர்களை அதிகரிப்பது முக்கியம். அதிகம் அறிய, அதிகம் முழுவதும் கொள்ள! இஸ்லாமிய கல்வி சேனலில் இணைந்து கொள்ளுங்கள் மற்றும் அறியவும் உறுதி செய்யுங்கள்!

இஸ்லாமிய கல்வி

11 Feb, 06:01


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் ‘லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க) இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2014
In-book reference: Book 32, Hadith 1

இஸ்லாமிய கல்வி

11 Feb, 06:00


பிரார்த்தனை

என் இறைவனே.. என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு! (நான் செய்ய வேண்டிய) காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை! என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு! என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள்.

தாஹா 20:25-28

இஸ்லாமிய கல்வி

10 Feb, 09:24


முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிக மாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், “அவனால் உமக்கென்ன தீங்கு?” என்று கேட்டார்கள். நான், “(அச்சம்தான்.) ஏனெனில், தஜ்ஜாலு டன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “இது என்ன (பிரமாதம்)? (அவன்மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கின்றானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 7122
In-book reference: Book 92, Hadith 69

இஸ்லாமிய கல்வி

10 Feb, 09:23


பிரார்த்தனை

உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு எவரும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். (என்னை மன்னித்து அருள்புரி!)

அல்அன்பியா 21:87

இஸ்லாமிய கல்வி

09 Feb, 13:59


அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மக்கா வுக்கும் மதீனாவுக்குமிடையே (‘அல்காஹா’ எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்தார்கள். நான் ‘இஹ்ராம்’ கட்டாமல் குதிரைமீது (பயணம் செய்து கொண்டு) இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன். இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன். நானும் கூர்ந்து கவனிக்கலானேன். அப்போது அங்கு ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. நான் மக்களிடம், ‘‘என்ன இது?” என்று கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த காரணத்தால்) ‘‘எங்களுக்குத் தெரியாது” என்றனர். நான், ‘‘இது ஒரு காட்டுக் கழுதை” என்று சொன்னேன். அப்போது மக்கள், ‘‘நீங்கள் பார்த்தது அதுதான்” என்று கூறினார்கள். நான் என்னுடைய சாட்டையை மறந்துவிட்டிருந்தேன். ஆகவே, அவர்களிடம் ‘‘என் சாட்டையை எடுத்து என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவமாட்டோம்” என்றனர். உடனே நானே இறங்கி அதை எடுத்தேன். பிறகு காட்டுக் கழுதையைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினேன். சிறிது நேரத்திற்குள் அதன் கால் நரம்புகளை வெட்டி (வீழ்த்தி)விட்டேன். பிறகு மக்களிடம் சென்று, ‘‘(இப்போது) எழுந்து, கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைத் தொட மாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நானே அதைச் சுமந்து அவர்களிடம் கொண்டுசென்றேன். அவர்களில் சிலர் (அதை உண்ண) மறுத்துவிட்டனர். வேறு சிலர் உண்டனர். நான் ‘‘உங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் (இதன் சட்டம் என்ன என்று) கேட்டுத் தெரிந்து வருகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்து செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், ‘‘அதிலிருந்து உங்களிடம் ஏதேனும் எஞ்சியுள்ளதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (எஞ்சியுள்ளது)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணுங்கள்; அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக்கொடுத்த உணவாகும்” என்று சொன்னார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5492
In-book reference: Book 72, Hadith 18

இஸ்லாமிய கல்வி

09 Feb, 13:28


பிரார்த்தனை

என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசுதாரர்களில் மிக்க மேலானவன்.

அல்அன்பியா 21:89

இஸ்லாமிய கல்வி

08 Feb, 03:46


அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கல்லெறியும் இடமான) ‘ஜம்ரா’வில் இருந்தபோது, கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிந்துவிடுக” என்றார்கள். மற்றொருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்ற மில்லை; (இப்போது) குர்பானி கொடுத்து விடுக!” என்றார்கள். (அன்றைய தினம் பிந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முந்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிந்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் “குற்றமில்லை; (விடுபட் டதை) செய்வீராக!” என்றே சொன் னார்கள்.30 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 124
In-book reference: Book 3, Hadith 66

இஸ்லாமிய கல்வி

08 Feb, 03:45


பிரார்த்தனை

என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கு நல்ல சந்ததியை அளித்திடு! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவியேற்பவனாக இருக்கின்றாய்!

ஆலு இம்ரான் 3:38

இஸ்லாமிய கல்வி

07 Feb, 13:57


இஸ்லாத்தின் பெயரால் நுழைந்த நூதனங்களும் அதன் எதிர் வாதங்களும்

இஸ்லாமிய கல்வி

07 Feb, 05:07


ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும்போது (அவர் அம்பெய்தால்) அம்பு விழும் இடத்தை அவரால் பார்க்க முடியும் (அந்த அளவு வெளிச்சம் இருக்கும்போதே மஃக்ரிப் தொழுவோம்). - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும் "நாங்கள் மஃக்ரிப் தொழுவோம்..." எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 637.01
In-book reference: Book 5, Hadith 274

இஸ்லாமிய கல்வி

07 Feb, 05:05


பிரார்த்தனை

என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள்புரி! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க் கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடு!

அன்னம்லு 27:19

இஸ்லாமிய கல்வி

06 Feb, 09:55


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவதற்கு நிகரான அறச்செயல் எது?" என்று கேட்கப்பட்டது. "அதற்கு நிகரான அறத்தைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். முன்பு போன்றே மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை (மக்கள்) கேட்டனர். ஒவ்வொரு முறையும் "அதைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்றே நபியவர்கள் பதிலளித்தார்கள். மூன்றாவது முறை, "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றவரின் நிலை, (இடைவிடாது) நோன்பு நோற்று, (இடைவிடாது) நின்று வணங்கி, அல்லாஹ்வின் வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வழியில் அறப்போரில் ஈடுபட்டவர் திரும்பி வருகின்றவரை (இதே நிலையில் உள்ளார்)" என்று கூறினார்கள. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1878.01
In-book reference: Book 33, Hadith 165

இஸ்லாமிய கல்வி

06 Feb, 09:52


பிரார்த்தனை

எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னித்திடு! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்

அல்மும்தஹினா 60:5

இஸ்லாமிய கல்வி

04 Feb, 05:25


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2753.03
In-book reference: Book 50, Hadith 25

இஸ்லாமிய கல்வி

04 Feb, 05:21


பிரார்த்தனை

எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன் பக்கமே நாங்கள் திரும்பிவிட்டோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கின்றது.

அல்மும்தஹினா 60:4

இஸ்லாமிய கல்வி

03 Feb, 07:36


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு” என்று பதிலளித்தார்கள்.37 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 6020
In-book reference: Book 78, Hadith 51

இஸ்லாமிய கல்வி

03 Feb, 07:29


பிரார்த்தனை

என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கு!

அஸ்ஸாஃப்ஃபாத் 37:100

இஸ்லாமிய கல்வி

02 Feb, 04:52


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 233.01
In-book reference: Book 2, Hadith 17

இஸ்லாமிய கல்வி

02 Feb, 04:50


பிரார்த்தனை

என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தைத் தா! மேலும் நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வை! பிற்காலத்தில் தோன்றுவோருக்கிடையில் எனக்கு நற்பெயரையும் சிறப்பையும் தா! இன்பச் சுகத்தையுடைய சுவனபதியை சொந்தம் கொள்பவர்களிலும் என்னை நீ ஆக்கி வை! (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!

அஷ்ஷுஅறா 26:83-87

இஸ்லாமிய கல்வி

01 Feb, 14:05


நூல்:

"குர்ஆன், ஹதீஸ் கூறும் பிராத்தனைகள்"

ஆசிரியர்:

அஷ்ஷைக் ஸயீது இப்னு அலீ அல்கஹ்தானி

வெளியீடு:

தாருல் ஹுதா

இஸ்லாமிய கல்வி

01 Feb, 07:49


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, "இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1071.02
In-book reference: Book 12, Hadith 216

இஸ்லாமிய கல்வி

01 Feb, 06:16


பிரார்த்தனை

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பு அளித்திடு!

இப்ராஹீம் 14:41

இஸ்லாமிய கல்வி

31 Jan, 03:45


எனக்கு வஸிய்யத்து செய்யுங்கள் _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

31 Jan, 02:52


அற்புதம் நிறைந்த மிஃராஜ் பயணம்_ வரலாறும் படிப்பினைகளும் _ Isra wal Mi_raj_ History _ Lessons

இஸ்லாமிய கல்வி

30 Jan, 13:22


நல்ல அல்லது கெட்ட கனவுகளை கண்டால் என்ன செய்ய வேண்டும்_ _ Assheikh Ramzan Faris Madani

இஸ்லாமிய கல்வி

30 Jan, 03:10


மிஃராஜ் தினத்தில் நோன்பு நோற்கலாமா_ _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

28 Jan, 06:40


இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்துக் கொண்ட பின்னால் அதற்கு மாறிவிட்டார் கள். ஆகவே, (நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப் பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன்மீது தமது கையை வைத்து (பரிவுடன்) வருடிக்கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 3583
In-book reference: Book 61, Hadith 92

இஸ்லாமிய கல்வி

28 Jan, 06:38


பிரார்த்தனை

என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பு வழங்கு!

நூஹ் 71:28

இஸ்லாமிய கல்வி

27 Jan, 04:46


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக்கொள்ள வேண்டாம். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2100.02
In-book reference: Book 37, Hadith 120

இஸ்லாமிய கல்வி

27 Jan, 04:44


பிரார்த்தனை

என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காதபடி என்னைப் பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்.

ஹூது 11:47

இஸ்லாமிய கல்வி

26 Jan, 07:46


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும் குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2013.01
In-book reference: Book 36, Hadith 127

இஸ்லாமிய கல்வி

26 Jan, 07:45


இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவோம்.

அல் அஃராஃப் 7:23

இஸ்லாமிய கல்வி

25 Jan, 07:02


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ் வாறு மரணத்தை விரும்பித்தான் ஆக வேண்டும் என்றிருந்தால், “இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மை யாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.38 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 6351
In-book reference: Book 80, Hadith 48

இஸ்லாமிய கல்வி

24 Jan, 12:04


இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது, அவர்கள் சஜ்தா வசனத்தை ஓதுவார்கள். அப்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சஜ்தா செய்வாம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு சஜ்தாவில் நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1076
In-book reference: Book 17, Hadith 10

இஸ்லாமிய கல்வி

24 Jan, 12:02


பிரார்த்தனை

اَللّٰهُمَّ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاٰخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

البخاري، برقم ٤٥۲۲، ورقم ٦۳۸۹، ومسلم، برقم ۲٦۹۰.

அல்லாஹ்வே இவ்வுலகத்திலும் எங்களுக்கு அழகியதைக் கொடு! மறுமையிலும் அழகியதைக் கொடு. நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைப் பாதுகாத்துக் கொள்!

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

23 Jan, 00:57


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட ‘நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்களைக் கிராமவாசி யொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, ‘‘முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத் திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட் டார்கள்.31 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5809
In-book reference: Book 77, Hadith 27

இஸ்லாமிய கல்வி

23 Jan, 00:51


அல்லாஹ்வே! நரக நெருப்பின் சோதனையை விட்டும். நரக நெருப்பின் வேதனையை விட்டும். கப்ரின் சோதனையை விட்டும். கப்ரின் வேதனையை விட்டும். செல்வத்தால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கை விட்டும். வறுமையால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கை விட்டும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! மஸீஹ் தஜ்ஜால் மூலம் ஏற்படும் குழப்பத்தின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே பனிக்கட்டியைக் கொண்டும் ஆலங்கட்டியைக் கொண்டும் எனது உள்ளத்தைக் கழுவிவிடு! வெண்மையான ஆடையை அழுக்கை விட்டு நீ சுத்தப்படுத்தியது போன்று குற்றங்களை விட்டு என் உள்ளத்தைச் சுத்தப்படுத்திவிடு! கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையில் நீ தூரத்தை ஏற்படுத்தியதைப் போன்று எனக்கும் எனது குற்றங்களுக்குமிடையில் தூரத்தை ஏற்படுத்திவிடு! அல்லாஹ்வே! சோம்பேறித்தனம், பாவம், கடன் ஆகிய அனைத்தை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

22 Jan, 06:50


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (இஷாத் தொழுகைக்காக எதிர்)பார்த்து பாதி இரவு நெருங்கும்வரைக் காத்திருந்தோம். பிறகு அவர்கள் வந்து எங்களுக்கு (இஷாத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களுடைய கரத்தில் வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 640.02
In-book reference: Book 5, Hadith 282

இஸ்லாமிய கல்வி

22 Jan, 06:32


அல்லாஹ்வே! பலவீனம், சோம்பேறித்தனம், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம் ஆகிய அனைத்தை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கப்ரின் வேதனையை விட்டும். வாழ்க்கை மற்றும் மரணத்தில் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

21 Jan, 13:35


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்” என்று சொன்னார்கள்.27 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 6335
In-book reference: Book 80, Hadith 32

இஸ்லாமிய கல்வி

21 Jan, 13:32


பிரார்த்தனை

அல்லாஹ்வே! கடினமான சோதனையை விட்டும். கெடுதிகள் பீடிப்பதை விட்டும். விதிக்கப்பட்டதின் தீமையை விட்டும். எதிரிகளின் நகைப்பை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

20 Jan, 04:42


பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதற்காக குர்ஆன் கற்றுத்தரும் அழகிய துஆ

இஸ்லாமிய கல்வி

20 Jan, 04:34


பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம் (அன்சாரிகளான) எங்கள் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் ஹஜ் செய்(ய இஹ்ராம் கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் (முன்பக்க) வாசல் வழியாக நுழையமாட்டார்கள். மாறாக, பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள். இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இதனால் அவரைப் பற்றி குறைசொல்லப்பட்டது. அப்போதுதான், “நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று. மாறாக, (இறைவனுக்கு) அஞ்சி நடப்பவரே புண்ணியவான் ஆவார். ஆகவே, வீடுகளுக்குள் அவற் றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்” (2:189) எனும் வசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1803
In-book reference: Book 26, Hadith 28

இஸ்லாமிய கல்வி

20 Jan, 04:32


பிரார்த்தனை

அல்லாஹ்வே எனது காரியத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும் மார்க்கத்தை எனக்கு நீ சீர்ப்படுத்தித் தா! நான் வாழும் உலகத்தை எனக்கு சீர்ப்படுத்தித் தா! நான் மீள இருக்கும் மறுமையை எனக்குச் சீர்ப்படுத்தித் தா! வாழ்க்கையை, நான் நன்மைகளை அதிகரித்துக் கொள்ள ஏற்றதாக ஆக்கு! மரணத்தை எனக்கு தீமையை விட்டு ஓய்வாக ஆக்கு!

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

19 Jan, 12:13


சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்"என்று கேட்டேன். நபியவர்கள் "அதை வைத்துவிடு" என்றார்கள். பிறகு நான் (அதை அன்பளிப்பாகத் தருமாறு கேட்டு) எழுந்து நின்றேன். நபியவர்கள் "எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு" என்று சொன்னார்கள். பிறகு மீண்டும் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "(இல்லை) அதை வைத்துவிடு" என்றார்கள். பிறகும் நான் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடுங்கள். போதுமென்ற மனமில்லாத ஒருவனாக நான் கருதப்படுகிறேனா?" என்று கூறினேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு" என்று கூறினார்கள். அப்போதுதான் "(நபியே!) போர்க் களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது எனறு கூறுவீராக!" (8:1) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1748.02
In-book reference: Book 32, Hadith 38

இஸ்லாமிய கல்வி

19 Jan, 12:09


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நேர்வழி, உனது பயம், பத்தினித்தனம், செல்வம் ஆகிய அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடமே கேட்கிறேன்

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

18 Jan, 07:23


கண்ணியமிகு ரஜப் மாதம் _ Assheikh Ammar Yasir (Salafi)

இஸ்லாமிய கல்வி

18 Jan, 06:11


பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது ருகூஉவும், சஜ்தாவும், ருகூஉவி-ருந்து அவர்கள் எழுந்தா(ல் நிலை கொள்ளுத)லும், இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 801
In-book reference: Book 10, Hadith 196

இஸ்லாமிய கல்வி

18 Jan, 06:06


பிரார்த்தனை

அல்லாஹ்வே! பலவீனம், சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிகம், கப்ரின் வேதனை ஆகிய அனைத்தையும் விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! என் உள்ளத்திற்கு அதற்குரிய பயத்தைக் கொடு! அதை நீ தூய்மைப்படுத்து! நீயே அதை மிகச் சிறந்த முறையில் தூய்மைப்படுத்துபவன். நீயே அதன் பாதுகாவலன். அதன் எஜமானன். அல்லாஹ்வே! பயனற்றக் கல்வியை விட்டும். பயமற்ற உள்ளத்தை விட்டும். திருப்தி கொள்ளா ஆன்மாவை விட்டும். ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

18 Jan, 06:03


இஸ்லாமிய பார்வையில் அகீதா _ Assheikh Noohu Althafi _

இஸ்லாமிய கல்வி

17 Jan, 13:31


உம்மத்தின் மீது நபியின் நேசம் _ Assheikh Ansar Hussain Firdousi

இஸ்லாமிய கல்வி

17 Jan, 08:13


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.38 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 7108
In-book reference: Book 92, Hadith 55

இஸ்லாமிய கல்வி

17 Jan, 08:12


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனக்கு நேர்வழி காட்டு! என்னை நேர்மையாளனாக ஆக்கு! அல்லாஹ்வே நிச்சயமாக நான் நேர்வழியையும் நேர்மையையும் உன்னிடமே கேட்கிறேன்

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

16 Jan, 06:49


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று சொன்னார். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2312.01
In-book reference: Book 43, Hadith 78

இஸ்லாமிய கல்வி

16 Jan, 06:44


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நீ (எனக்குச்) செய்த அருள் (என்னிடமிருந்து) நீங்குவதை விட்டும். நீ வழங்கிய பரிபூரண சுகம் அகன்று விடுவதை விட்டும். திடீரென நீ தண்டிப்பதை விட்டும். உனது எல்லா விதமான கோபத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

15 Jan, 08:47


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில (கூடுதலான) வழிபாடுகளைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட, அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவது உண்டு. (எங்கே தாம் செய்வதைப் போன்று) மக்களும் அவற்றைச் செய்ய, அவர்கள்மீது அவை கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நான் ‘ளுஹா’ தொழுகை தொழுதுவரு கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹா தொழு(து நான் பார்த்)ததில்லை.5 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1128
In-book reference: Book 19, Hadith 8

இஸ்லாமிய கல்வி

15 Jan, 07:46


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நான் செய்த செயல்களால் ஏற்படும் தீங்கை விட்டும், நான் செய்யாத செயல்களால் ஏற்படும் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

14 Jan, 14:54


அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன் _ கேள்வி - பதில்

இஸ்லாமிய கல்வி

14 Jan, 13:11


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1134.01
In-book reference: Book 13, Hadith 172

இஸ்லாமிய கல்வி

14 Jan, 13:09


பிரார்த்தனை

அல்லாஹ்வே! என் செல்வத்தையும் என் சந்ததியையும் அதிகப்படுத்து! நீ எனக்கு கொடுத்தவற்றில் பரக்கத்தை ஏற்படுத்து! உனது வணக்க வழிபாட்டில் எனக்கு நீண்ட வாழ்க்கையைத் தா! என் அமல்களை அழகுபடுத்து! என்னை மன்னித்துவிடு!

ஸஹீஹுல் புகாரி, அல் அதபுல் முஃப்ரத்

இஸ்லாமிய கல்வி

13 Jan, 04:34


நபியவர்கள் பொக்கிஷமெனக் கூறிய பிரார்த்தனை மனனமிட்டு ஓதி வருவோம்

இஸ்லாமிய கல்வி

13 Jan, 01:27


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தான் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 6624
In-book reference: Book 83, Hadith 4

இஸ்லாமிய கல்வி

13 Jan, 01:24


பிரார்த்தனை

மகத்துவமிக்க, சகிப்புத்தன்மை உடைய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. மகத்தான அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வானங்களின் இறைவன். பூமியின் இறைவன். சங்கைமிகுந்த அர்ஷின் இறைவனான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

12 Jan, 12:41


வரலாற்று ரீதியாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் யார்_ _ Asshiek Ahmad Ashraf

இஸ்லாமிய கல்வி

12 Jan, 04:50


அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.17 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5363
In-book reference: Book 69, Hadith 13

இஸ்லாமிய கல்வி

12 Jan, 04:45


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உன் அருளை ஆதரவு வைக்கிறேன். கண் சிமிட்டும் நேரமளவு கூட என்னை என் பக்கம் பொறுப்பு ஒப்படைத்து விடாதே! எனது எல்லாக் காரியத்தையும் எனக்கு சீர்ப்படுத்தித் தா! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை

ஸுனன் அபூதாவூது

இஸ்லாமிய கல்வி

11 Jan, 12:14


உம்மத்தின் ஒற்றுமையில் அஹ்லுஸ் ஸுன்னாவின் மன்ஹஜ் _ பாகம் - 4 _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

11 Jan, 11:33


உம்மத்தின் ஒற்றுமையில் அஹ்லுஸ் ஸுன்னாவின் மன்ஹஜ் _ பாகம் - 3 _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

11 Jan, 11:09


உம்மத்தின் ஒற்றுமையில் அஹ்லுஸ் ஸுன்னாவின் மன்ஹஜ் _ பாகம் - 2 _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

11 Jan, 06:37


உம்மத்தின் ஒற்றுமையில் அஹ்லுஸ் ஸுன்னாவின் மன்ஹஜ் _ பாகம் - 1 _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

11 Jan, 05:25


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியவை இயற்கை மரபு களில் அடங்கும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5890
In-book reference: Book 77, Hadith 107

இஸ்லாமிய கல்வி

11 Jan, 05:23


பிரார்த்தனை

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நிச்சயமாக நான் அநீதி இழைத்துக் கொண்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன்

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

10 Jan, 14:32


உலக கஷ்டங்களிலிருந்து அல்லாஹ் உங்களை பாதுகாக்கவேண்டுமா __ᴴᴰ ┇ Dr Mubarak Madani

இஸ்லாமிய கல்வி

10 Jan, 12:10


ஈமானின் உயர்வு _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

10 Jan, 06:28


இப்ராஹிம் நபியின் ஈமானிய உறுதி _ ஜும்ஆ தமிழாக்கம் _ Assheikh Muhammad Riflan Uwais

இஸ்லாமிய கல்வி

10 Jan, 06:08


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில், ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ் வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல் களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப் படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற் றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்” எனக் கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கூடாது; அது தடை செய்யப் பட்டதுதான்” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘‘யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2236
In-book reference: Book 34, Hadith 182

இஸ்லாமிய கல்வி

10 Jan, 06:06


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உனது அடிமை. உன் அடிமையின் மகன். உனது அடிமைப் பெண்ணின் மகன். என் உச்சி முடி உன் கையில்தான் இருக்கிறது. என்னில் உன் தீர்ப்பு நிறைவேறியே தீரும். என் விஷயத்தில் உனது தீர்ப்பு மிக நீதமானது. உனக்கென நீ வைத்துக் கொண்ட அல்லது உனது நூலில் கூறியிருக்கும் அல்லது உனது படைப்பினங்களில் ஒருவருக்கு நீ கற்றுக் கொடுத்திருக்கும் அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான அறிவில் நீ மட்டும் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து பெயர்களைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன். குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக என் இதயத்திற்குப் பிரகாசமாக. என் கவலையை அகற்றக் கூடியதாக என் துக்கத்தை நீக்கக் கூடியதாக ஆக்கிவிடு!

முஸ்னது அஹ்மது

இஸ்லாமிய கல்வி

07 Jan, 07:33


நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டு தமது தலையை (வீட்டிலுள்ள) என்னிடம் நீட்டுவார்கள்; நான் அதை வாரிவிடுவேன். இஃதிகாஃப் இருக்கும்போது (அவசியத்) தேவைக்காகத் தவிர (வேறு காரணங் களுக்காக) வீட்டிற்குள் வரமாட்டார்கள்.2 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2029
In-book reference: Book 33, Hadith 5

இஸ்லாமிய கல்வி

07 Jan, 07:31


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எல்லாக் காரியங்களிலும் எங்களது முடிவை அழகாக்கி வை! இவ்வுலகத்தின் இழிவை விட்டும், மறுவுலகத்தின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்துக் கொள்!

முஸ்னது அஹ்மது

இஸ்லாமிய கல்வி

05 Jan, 14:35


நேர்வழியில் நிலைத்திருக்க நேர்த்தியான வழிமுறைகள்.

இஸ்லாமிய கல்வி

05 Jan, 07:21


நஷ்டமடையாத வியாபாரம் _ Assheikh Abu Salih Al Hakami

இஸ்லாமிய கல்வி

05 Jan, 04:33


நரகிலிருந்து உங்களைக் காக்கும் ஒரு பிரார்த்தனை _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

05 Jan, 04:06


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹ் தொழுகை யில்) குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதும்போது, ‘‘இறைவா! சலமா பின் ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆ வைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக!77 இறைவா! யிமுளர்’ குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக!78 இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2932
In-book reference: Book 56, Hadith 145

இஸ்லாமிய கல்வி

05 Jan, 04:03


பிரார்த்தனை

என் இறைவா... (என் எதிரிகள் விஷயத்தில்) எனக்குச் சாதகமாக உதவி செய்! எனக்கு எதிராக உதவி செய்து விடாதே! (நன்மைகளைச் செய்வதற்கு) எனக்கு உதவி செய்! எனக்கெதிராக உதவி செய்து விடாதே! எனக்குச் சாதகமாக சூழ்ச்சி செய்! எனக்கெதிராக சூழ்ச்சி செய்து விடாதே! எனக்கு நேர்வழி காட்டு! நேர்வழியை எனக்கு இலகுவாக்கிக் கொடு! என் மீது அநியாயம் செய்பவருக்கு எதிராக எனக்கு உதவி செய்! என் இறைவா... உனக்கு அதிகம் நன்றி செலுத்துபவனாக, உன்னை அதிகம் நினைப்பவனாக, உனக்கு அதிகம் பயந்தவனாக, உனக்கு அதிகம் கீழ்ப்படிந்தவனாக, அதிகம் அச்சமுடையவனாக, உன் பக்கமே நிம்மதி கொண்டவனாக, முற்றிலும் திரும்பியவனாக என்னை ஆக்கிவிடு! என் இறைவா... எனது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்! எனது பாவத்தைக் கழுவிவிடு! என் அழைப்புக்குப் பதில் கொடு! என் ஆதாரத்தை உறுதிப்படுத்து! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டு! எனது நாவை நேர்மைப்படுத்து! என் உள்ளத்திலுள்ள குரோதத்தை நீக்கிவிடு!

ஸுனன் அபூதாவூது

இஸ்லாமிய கல்வி

04 Jan, 05:23


ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் உங்களில் ஒருவரது குறைந்தபட்சத் தகுதி என்னவென்றால், "நீ (இன்னதை) ஆசைப்படு" என்று அவரிடம் (இறைவன்) சொல்வதாகும். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், "ஆசைப்பட்டு (முடித்து)விட்டாயா?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், "நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 182.03
In-book reference: Book 1, Hadith 358

இஸ்லாமிய கல்வி

04 Jan, 05:21


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உன்னுடைய நபி முஹம்மது صلى الله عليه وسلم உன்னிடம் கேட்ட நன்மையை நாங்களும் உன்னிடம் கேட்கிறோம். உன்னுடைய நபி முஹம்மது صلى الله عليه وسلم உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமைகளை விட்டு நாங்களும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் . உன்னிடமே உதவி தேடப்படுகிறது. உன்னிடமே எடுத்துச் சொல்லப்படுகிறது. பாவத்தை விட்டு மீளவோ நன்மை செய்ய சக்தி பெறவோ முடியாது. அல்லாஹ்வைக் கொண்டே தவிர!

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

03 Jan, 14:17


சிறந்த ஒரு பிரார்த்தனை _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

03 Jan, 08:06


حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ عُمَرَ، قَالَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَفَلْنَا مِنْ حُنَيْنٍ سَأَلَ عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ نَذْرٍ كَانَ نَذَرَهُ فِي الْجَاهِلِيَّةِ اعْتِكَافٍ، فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِوَفَائِهِ‏.‏ وَقَالَ بَعْضُهُمْ حَمَّادٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ‏.‏ وَرَوَاهُ جَرِيرُ بْنُ حَازِمٍ وَحَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள், தாம் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஓர் “இஃதிகாஃப்' தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.349 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 4320
In-book reference: Book 64, Hadith 350

இஸ்லாமிய கல்வி

03 Jan, 08:04


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனது செவியின் தீமையை விட்டும், எனது பார்வையின் தீமையை விட்டும், எனது நாவின் தீமையை விட்டும், எனது உள்ளத்தின் தீமையை விட்டும், எனது இந்திரியத்தின் தீமையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

01 Jan, 12:34


அல்லாஹ்வின்மீது ஒரு அடியான் எவ்வாறு நல்லெண்ணம் கொள்வது_ _ ஜும்ஆ தமிழாக

இஸ்லாமிய கல்வி

01 Jan, 12:00


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர். 5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்" என்று கூறியவர். 6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1031.02
In-book reference: Book 12, Hadith 118

இஸ்லாமிய கல்வி

01 Jan, 11:57


பிரார்த்தனை

அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், சொறி மற்றும் எல்லா கெட்ட நோய்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

31 Dec, 06:03


நேரத்தின் முக்கியத்துவம் _ Asshiek Haneefa

இஸ்லாமிய கல்வி

31 Dec, 04:48


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1036
In-book reference: Book 12, Hadith 125

இஸ்லாமிய கல்வி

31 Dec, 04:47


பிரார்த்தனை

அல்லாஹ்வே! கெட்ட குணங்கள் கெட்ட செயல்கள் கெட்ட ஆசைகள் அனைத்தையும் விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஜாமிவுத் திர்மித

இஸ்லாமிய கல்வி

30 Dec, 04:47


919- இக்லாஸிலே வாழ்க்கையின் இன்பம் காண்போம் (தாருல் ஹுதா

இஸ்லாமிய கல்வி

30 Dec, 04:28


அல்லாஹ்வை நெருங்க மிக நெருக்கமான வழி __ அஷ்ஷேக் முர்ஷித் அப்பாஸி

இஸ்லாமிய கல்வி

24 Dec, 06:04


இந்த சந்தர்பங்களில் கூற வேண்டிய வார்த்தைகள் என்ன_ _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

24 Dec, 05:38


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1437.01
In-book reference: Book 16, Hadith 144

இஸ்லாமிய கல்வி

24 Dec, 05:36


பிரார்த்தனை

அல்லாஹ்வே! கஞ்சத்தனத்தை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கோழைத்தனத்தை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். பலவீனமான வயதை அடைவதை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உலகத்தின் குழப்பத்தை விட்டும் கப்ரின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

22 Dec, 05:17


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு, அவருடைய தந்தையையும் அவருடைய பிள்ளையையும்விட நான் மிகவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை உள்ளவர் ஆகமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 14
In-book reference: Book 2, Hadith 7

இஸ்லாமிய கல்வி

22 Dec, 05:14


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனது குற்றத்தை, என் அறியாமையை, எனது காரியத்தில் நான் வரம்பு மீறியதை என்னை விட அதிகமாக நீ அறிந்திருக்கும் என் குறைகளை எனக்கு மன்னித்தருள்! அல்லாஹ்வே! எனது விளையாட்டையும் எனது வினையத்தையும் எனது தவறையும் நான் நாடி செய்ததையும் எனக்கு மன்னித்தருள்! இவை அனைத்தும் என்னிடம் இருக்கத்தான் செய்கின்றன.

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

21 Dec, 13:04


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவரிடமிருந்து தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். (இவ்வாறு) அவர் தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் அளித்தபோது, “உனக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “இவரை (பள்ளிவாசலில் இருந்து வெளியே) கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.29 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 7167
In-book reference: Book 93, Hadith 31

இஸ்லாமிய கல்வி

21 Dec, 13:01


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் என் ஆத்மாவிற்கு பெரும் அநியாயம் செய்து கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் இல்லை. உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பை வழங்கு. எனக்குக் கருணை காட்டு. நிச்சயமாக நீ தான் மகா மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன்.

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

20 Dec, 14:46


650 ஹதீஸ் நூல்கள் உலகத்தில் உள்ளன?

இஸ்லாமிய கல்வி

20 Dec, 02:27


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டு விட்டன” என்று சொன்னார். பிறகு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன” என்று சொன்னார். மீண்டும் ஒருவர் வந்து, ‘‘கழுதை இறைச்சி (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மக்களிடையே அறிவிப்புச் செய்யும்படி) கட்டளையிட, அவரும் மக்களிடையே, ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களை நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவை யாகும்” என்று பொது அறிவிப்புச் செய்தார். உடனே இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்த பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டு (அதிலிருந்த இறைச்சி கொட்டப்பட்டு)விட்டது.45 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5528
In-book reference: Book 72, Hadith 53

இஸ்லாமிய கல்வி

20 Dec, 02:25


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உனக்கே பணிந்தேன். உன்னைக் கொண்டே நம்பிக்கை கொண்டேன். உன்னிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். உன் பக்கமே திரும்பினேன். உன்னைக் கொண்டே வாதிடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அல்லாஹ்வே! உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். என்னை நீ வழிதவறச் செய்து விடாதே! நீ என்றும் மரணிக்காது உயிரோடு இருப்பவன். ஜின்களும் மனிதர்களும் மரணித்து விடுவார்கள்.

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

19 Dec, 05:58


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது கருவூலம் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 4659
In-book reference: Book 65, Hadith 181

இஸ்லாமிய கல்வி

19 Dec, 05:48


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உனது கருணைக்குக் காரணமானவற்றை, உனது மன்னிப்பைத் தரும் அமல்களை அனைத்துப் பாவத்திலிருந்தும் விடுதலையை எல்லா நன்மைகளின் பாக்கியத்தை சொர்க்கத்தின் வெற்றியை நரகத்தின் விடுதலையை நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கிறோம்.

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

18 Dec, 05:27


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்படுவதைப் போன்று கண்டேன். அதில் பால் இருந்தது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தணியும் அளவுக்கு) அருந்தினேன். எந்த அளவுக்கென்றால், (வயிறு நிறைந்து) அது என் நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்" என்று கூறினார்கள். மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, அதற்கு அவர்கள், "அறிவு" என்று பதிலளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2391.01
In-book reference: Book 44, Hadith 21

இஸ்லாமிய கல்வி

18 Dec, 05:23


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனது வயோதிகத்திலும் எனது ஆயுளின் இறுதியிலும் எனக்கு விசாலமான வாழ்க்கை வசதியைத் தா!

முஃஜமுத் தப்ரானி

இஸ்லாமிய கல்வி

17 Dec, 05:46


உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வியார் ஸைனப் (ரலி) அவர்கள் இறந்தபோது "இவரை மூன்று முறை,அல்லது ஐந்து முறை ஒற்றை எண்ணிக்கையில் நீராட்டுங்கள். ஐந்தாவது முறையில் "கற்பூரத்தை" அல்லது "சிறிது கற்பூரத்தை"ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் (அவ்வாறே செய்து முடித்ததும்) அவர்களுக்கு அதுபற்றி அறிவித்தோம். அவர்கள் தமது கீழாடையை எங்களிடம் தந்து "இதை அவருக்குப் போர்த்துங்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 939.06
In-book reference: Book 11, Hadith 51

இஸ்லாமிய கல்வி

17 Dec, 05:44


பிரார்த்தனை

அல்லாஹ்வே! என் பாவங்களை எனக்கு மன்னித்தருள்! எனக்கு என் வீட்டில் வசதியை ஏற்படுத்து! எனது வாழ்க்கைத் தரத்தில் பரக்கத் செய்!

முஸ்னது அஹ்மது

இஸ்லாமிய கல்வி

16 Dec, 04:29


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (தாய் வழிப்)பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு, "எழுங்கள், உங்களுக்காக நான் (நஃபில் தொழுகை) தொழுவிக்கிறேன்" என்று கூறினார்கள். நான் எங்கள் பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரிக்கப்பட்டிருந்ததால் கறுப்பாகிவிட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீர் தெளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) அதில் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் (ளுமைர் பின் சஅத்) அவர்களுக்குப் பின்னால் அணியில் நின்றோம். அந்த மூதாட்டி (உம்மு சுலைம்) எங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து விட்டுத் திரும்பிச்சென்றார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 658
In-book reference: Book 5, Hadith 332

இஸ்லாமிய கல்வி

16 Dec, 04:07


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உனது கிருபையையும் உனது கருணையையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு உரிமையாளன் வேறு யாரும் இல்லை.

முஃஜமுத் தப்ரானி

இஸ்லாமிய கல்வி

13 Dec, 06:18


கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அறப்போருக்கு(த் தலைமையேற்று)ச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். தொலைதூரப் பயணத்தையும் வனப் பகுதியையும் அவர்கள் எதிர்நோக்கினார் கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரி களைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தமது எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பும் இலக்கை முஸ்லிம்களுக்கு அறிவித்து விட்டார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2948
In-book reference: Book 56, Hadith 160

இஸ்லாமிய கல்வி

13 Dec, 06:16


பிரார்த்தனை

அல்லாஹ்வே! கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி நீரில் மூழ்கி நெருப்பில் எரிந்து சாவதை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவதை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உனது பாதையில் பின்வாங்கியவனாக நான் மரணிப்பதை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டு சாவதை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஸீனன் அபூதாவூது

இஸ்லாமிய கல்வி

08 Dec, 06:02


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்" என்று சொன்னார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இஸ்லாத்தில் இணைந்தபிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தாலும், அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2458
In-book reference: Book 44, Hadith 154

இஸ்லாமிய கல்வி

08 Dec, 06:00


பிரார்த்தனை

அல்லாஹ்வே! பயமற்ற உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும், திருப்தி கொள்ளாத ஆன்மாவை விட்டும் பயனற்றக் கல்வியை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இந்த நான்கை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

07 Dec, 03:21


சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆ தொழுகை தொழுவோம். அதன் பிறகே மதிய ஓய்வு நிகழும். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 941
In-book reference: Book 11, Hadith 65

இஸ்லாமிய கல்வி

07 Dec, 03:19


பிரார்த்தனை

அல்லாஹ்வே! தீய நாளை விட்டும், தீய இரவை விட்டும், தீய நேரத்தை விட்டும், தீய நண்பரை விட்டும், தங்கும் ஊரில் தீய அண்டை வீட்டார் அமைவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

முஃஜமுத் தப்ரானி

இஸ்லாமிய கல்வி

06 Dec, 07:54


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் யூதப்பெண் ஒருவர் "உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக்குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்" என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் "யூதர்கள்தாம் (சவக்குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்" என்றார்கள். சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீ அறிவாயா: சவக்குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 584
In-book reference: Book 5, Hadith 157

இஸ்லாமிய கல்வி

06 Dec, 07:51


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன். நரகத்தை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

05 Dec, 05:38


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவருடைய குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும், நான் இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சரி! அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார். பின்னர் (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிட மிருந்து பிரிந்துவிட்டார். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5276
In-book reference: Book 68, Hadith 25

இஸ்லாமிய கல்வி

05 Dec, 05:36


பிரார்த்தனை

அல்லாஹ்வே! மார்க்கத்தில் எனக்கு ஞானத்தைக் கொடு!

ஸஹீஹூல் புகாரி

இஸ்லாமிய கல்வி

04 Dec, 03:34


ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர. நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும். பல்லோ எலும்பாகும். (நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்திருந்த) ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதை ஒருவர் (அம்பெய்து) தடுத்து நிறுத்தினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வன விலங்குகளுக்கிடையே கட்டுக்கடங் காதவை சில இருப்பதைப் போன்றே, இந்த ஒட்டகங்களுக்கு இடையேயும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.26 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5503
In-book reference: Book 72, Hadith 29

இஸ்லாமிய கல்வி

04 Dec, 03:30


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நான் அறிந்த நிலையில் உனக்கு இணை வைப்பதை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நான் அறியாதவற்றிற்கு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்

முஸ்னது அஹ்மது

இஸ்லாமிய கல்வி

03 Dec, 06:19


புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு "ஸாஉ" தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தம் அடிமையிடம் கொடுத்து, "இதை விற்றுவிட்டு அந்தக் காசைக் கொண்டு தொலி நீக்கப்படாத கோதுமை வாங்கி வா" என்று அனுப்பினார்கள். அந்த அடிமை சென்று, அதைக் கொடுத்து ஒரு "ஸாஉ" கோதுமையும் சற்று கூடுதலாகவும் பெற்றுவந்தார். அவர் மஅமர் (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அதற்கு மஅமர் (ரலி) அவர்கள், "ஏன் அவ்வாறு செய்தாய்? நீ சென்று அதைத் திருப்பிக் கொடுத்துவிடு. சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் உணவுப் பொருளை) வாங்காதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரிக்குச் சரியாகவே உணவுப் பொருளை உணவுப் பொருளுக்கு (விற்கப்படும்)" என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள். மேலும் மஅமர் (ரலி) அவர்கள், "அன்றைய நாளில் தொலி நீக்கப்படாத கோதுமையே எங்கள் உணவாக இருந்தது"என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் "இது (தொலி நீக்கப்படாத கோதுமை), அதைப் போன்று (தொலி நீக்கப்பட்ட கோது மையைப் போன்று ஒரே இனமாக) இல்லையே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது ஒன்றுக்கொன்று ஒப்பானதாக இருக்குமோ என நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1592
In-book reference: Book 22, Hadith 119

இஸ்லாமிய கல்வி

03 Dec, 06:12


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனக்கு நீ கற்றுக் கொடுத்தக் கல்வியைக் கொண்டு எனக்குப் பலன் தா! எனக்குப் பலன் தருவதை எனக்குக் கற்றுக் கொடு! கல்வியை எனக்கு அதிகரித்துக் கொடு

ஸீனன் இப்னுமாஜா

இஸ்லாமிய கல்வி

02 Dec, 06:14


புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 277
In-book reference: Book 2, Hadith 108

இஸ்லாமிய கல்வி

02 Dec, 06:13


பிரார்த்தனை

அல்லாஹ்வே! பலன் தரும் கல்வியை, தூய்மையான உணவை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

ஸீனன் இப்னுமாஜா

இஸ்லாமிய கல்வி

01 Dec, 07:37


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடக்கத் தலம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு” என்றார்கள். அதற்கு அப்பெண், “என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துயரம் உமக்கு ஏற்படவில்லை” என்று -நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல்- கூறினார். அ(வரிடம் உரையாடிய)வர் நபி (ஸல்) அவர்கள் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தார். -அங்கே நபியவர் களுக்குக் காவலாளிகள் யாரும் இருக்கவில்லை- நான் உங்களை (யாரென) அறியவில்லை” என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அப்போது “பொறுமை என்பது, துன்பம் தாக்கிய ஆரம்பத்தில் (கை கொள்வது)தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.15 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1283
In-book reference: Book 23, Hadith 43

இஸ்லாமிய கல்வி

01 Dec, 07:34


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து உன்னிடம் கேட்கிறேன். உனக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (நீ தனித்தவன்; உனக்கு இணை, துணை இல்லை; நீ) மாபெரும் உபகாரி; வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! சங்கைமிக்கவனே! கண்ணியமிக்கவனே! என்றும் உயிரோடு இருப்பவனே! நிர்வகிப்பவனே! நிச்சயமாக நான் உன்னிடம் (சொர்க்கத்தைக்) கேட்கிறேன். (நரகத்தை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.)

ஸுனன் அபூதாவூது

இஸ்லாமிய கல்வி

30 Nov, 05:59


அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கும்போது, (பெரும்பாலும்) நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். (ஆனால்) ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது ஐந்து தக்பீர்கள் கூறினார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டதற்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) ஐந்து தக்பீர்கள் கூறுபவர்களாய் இருந்தார்கள்" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 957
In-book reference: Book 11, Hadith 94

இஸ்லாமிய கல்வி

30 Nov, 05:56


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நிச்சயமாக நீதான் அல்லாஹ்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தனித்தவன்; தேவையற்றவன்; யாரையும் பெற்றெடுக்காதவன்; யாருக்கும் பிறக்காதவன்; தன்னிகரற்றவன் என்று நான் சாட்சி கூறி உன்னிடம் கேட்கிறேன்.

ஸுனன் அபூதாவூது

இஸ்லாமிய கல்வி

29 Nov, 11:12


நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக விதண்டாவாதம் புரிபவன்தான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2457
In-book reference: Book 46, Hadith 18

இஸ்லாமிய கல்வி

29 Nov, 11:09


பிரார்த்தனை

என் இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்கு! என் பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்! நிச்சயமாக நீதான் பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்பவன்; மகா மன்னிப்பாளன்.

ஸுனன் அபூதாவூது

இஸ்லாமிய கல்வி

28 Nov, 06:29


அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது: (நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக் கவ்விக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் உண்ணலாம். (அந்தப் பிராணியை) நாய் தின்றிருக்குமானால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அது (அப்பிராணியை) தனக்காகவே (கவ்வி) வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள். நான், “எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் நாயைத்தான் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி அனுப்பினீர்களே தவிர, மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பவில்லை; எனவே, (அதை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 175
In-book reference: Book 4, Hadith 41

இஸ்லாமிய கல்வி

28 Nov, 06:25


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நீ மறைவான அனைத்தையும் அறிந்திருக்கிறாய், படைப்பினங்கள் அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கிறாய். ஆகவே, வாழ்க்கை எனக்கு சிறப்பாக அமையும் என்று நீ அறிந்திருக்கும் வரை என்னை உயிர் வாழச்செய்! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் எனக்கு மரணத்தைத் தா! அல்லாஹ்வே! தனிமையிலும் வெளிப்படையிலும் உனது அச்சத்தை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மகிழ்ச்சியிலும் கோபத்திலும் உண்மையை உரைப்பதை உன்னிடம் கேட்கிறேன். செல்வத்திலும் வறுமையிலும் நடுநிலையுடன் நடந்து கொள்வதை உன்னிடம் கேட்கிறேன். முடிந்துவிடாத அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். நீங்கி விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் கேட்கிறேன். உனது விதிக்குப் பின் பொருத்தத்தை உன்னிடம் கேட்கிறேன். மரணத்திற்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கையை உன்னிடம் கேட்கிறேன். உனது முகத்தைப் பார்க்கும் இன்பத்தை உன்னிடம் கேட்கிறேன். உன்னைச் சந்திக்கும் ஆசையை உன்னிடம் கேட்கிறேன். இவை அனைத்தையும் இடையூறு தரும் சிரமமின்றி, வழிகெடுக்கும் குழப்பமின்றி எனக்கு வழங்கியருள்! அல்லாஹ்வே! ஈமானின் அலங்காரத்தால் எங்களை அலங்கரித்து விடு! நேர்வழி காட்டுபவர்களாகவும் நேர்வழி பெற்றவர்களாகவும் எங்களை ஆக்கியருள்!

ஸுனனுன் நஸாயி

இஸ்லாமிய கல்வி

27 Nov, 12:52


அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் துல்ஹஜ் எட்டாம் நாள் மினாவுக் குப் புறப்பட்டேன். அப்போது கழுதையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நான் அவர்களிடம், “இன்றைய (துல்ஹஜ் எட்டாம்) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கவனியுங்கள்! உம்முடைய தலைவர்கள் எந்த இடத்தில் தொழுகின்றார்களோ அந்த இடத்தில் தொழுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1654
In-book reference: Book 25, Hadith 135

இஸ்லாமிய கல்வி

27 Nov, 12:49


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உன்னுடைய அன்பையும் யாருடைய அன்பு உன்னிடம் எனக்குப் பலன் தருமோ அவருடைய அன்பையும் நீ எனக்கு வழங்கு! அல்லாஹ்வே! நான் விரும்பியவற்றிலிருந்து நீ எனக்கு வழங்கியதை நீ விரும்புவதைச் செய்வதற்கு எனக்கு ஆற்றலாக ஆக்கி வை! அல்லாஹ்வே! நான் விரும்பியவற்றிலிருந்து எனக்கு நீ கொடுக்காததை நீ விரும்பியவற்றை நான் செய்வதற்கு வாய்ப்பாக ஆக்கி வை!

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

26 Nov, 06:42


சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்களும்) அம்பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள்.45 நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று சொன்னார்கள். அப்போது அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரு சாராரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்திக்கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம் பெய்யாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.46 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 3373
In-book reference: Book 60, Hadith 47

இஸ்லாமிய கல்வி

26 Nov, 06:39


பிரார்த்தனை

அல்லாஹ்வே! பாவங்களை விட்டும், குற்றங்களை விட்டும் என்னை நீ தூய்மைப்படுத்து! அல்லாஹ்வே! வெண்மையான ஆடை அழுக்கை விட்டு தூய்மையாக்கப்படுவதுபோல் அவற்றை விட்டு என்னை நீ தூய்மைப்படுத்து! அல்லாஹ்வே! பனிக்கட்டியைக் கொண்டும் ஆலங்கட்டியைக் கொண்டும் குளிர்ந்த நீரைக் கொண்டும் என்னை நீ தூய்மைப்படுத்து!

ஸுனனுன் நஸாயி

இஸ்லாமிய கல்வி

25 Nov, 04:23


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாத காலம் ‘குனூத்’ (எனும் இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். (அதில் இணைவைப்பாளர்களான) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1003
In-book reference: Book 14, Hadith 14

இஸ்லாமிய கல்வி

25 Nov, 04:19


பிரார்த்தனை

அல்லாஹ்வே! கஞ்சத்தனம், தீய வாழ்க்கை, இதயத்தின் குழப்பம், கப்ரின் வேதனை ஆகிய அனைத்தையும் விட்டு நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஸுனனுன் நஸாயி

இஸ்லாமிய கல்வி

24 Nov, 12:24


நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். இஸ்ரவேலர் களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை யும் அறிவியுங்கள். அதனால் குற்ற மில்லை. யார் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 3461
In-book reference: Book 60, Hadith 128

இஸ்லாமிய கல்வி

24 Nov, 12:23


பிரார்த்தனை

அல்லாஹ்வே! ஜிப்ராயீல் மற்றும் மீக்காயீலுடைய இறைவனே! இஸ்ராஃபீலுடைய இறைவனே! நரகத்தின் உஷ்ணத்தை விட்டும், கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஸுனனுன் நஸாயி

இஸ்லாமிய கல்வி

23 Nov, 06:02


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறாரோ அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு; அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கீராத்’கள் நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு கீராத்கள் என்றால் என்ன?” என வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1325
In-book reference: Book 23, Hadith 81

இஸ்லாமிய கல்வி

23 Nov, 06:00


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனக்கு நல்வழியை (என் உள்ளத்தில்) உதிக்க வை! என் ஆத்மாவின் தீங்கை விட்டு என்னைப் பாதுகாத்துக் கொள்!

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

22 Nov, 07:53


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக்கொண்டு) அவர்களில் ஒருவர், "நான் பெண்களை மணமுடிக்கமாட்டேன்" என்று சொன்னார். மற்றொருவர் "நான் புலால் உண்ண மாட்டேன்" என்றார். இன்னொருவர், "நான் படுக்கையில் உறங்கமாட்டேன்" என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டு விடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்றார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1401
In-book reference: Book 16, Hadith 6

இஸ்லாமிய கல்வி

22 Nov, 07:51


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் பலன் தரும் கல்வியை உன்னிடம் கேட்கிறேன். பலன் தராத கல்வியை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

ஸீனன் இப்னுமாஜா

இஸ்லாமிய கல்வி

20 Nov, 09:16


அல்குர்ஆன் கூறும் இவ்வுயரிய பண்புகளுக்குரியவரா நீங்கள் _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

20 Nov, 04:12


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களைப்போல் (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் (தலை)முடி அலையலை யானதாக இருந்தது. படிந்ததாகவும் இல்லை; சுருள் முடியாகவும் இல்லை. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5906
In-book reference: Book 77, Hadith 123

இஸ்லாமிய கல்வி

20 Nov, 04:11


பிரார்த்தனை

அல்லாஹ்வே! (ஏழு) வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! அனைத்துப் பொருட்களின் இறைவனே! விதைகளையும் வித்துகளையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கானை இறக்கியவனே! உச்சி முடியை நீ பிடித்திருக்கும் அனைத்துப் பொருட்களின் தீங்கை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! நீயே முந்தியவன்; உனக்கு முன் எதுவும் இல்லை. நீயே பிந்தியவன்; உனக்குப் பிறகு எதுவுமில்லை. நீயே வெளிப்படையானவன்; உனக்கு மேல் எதுவும் இல்லை. நீ மறைவானவன்; உனக்கு மறைந்தது எதுவும் இல்லை. எங்களை விட்டும் கடனை அடைத்து விடு; ஏழ்மையை விட்டும் எங்களை (தூரமாக்கி) செல்வத்தை வழங்கு!

ஸஹீஹ் முஸ்லிம்

இஸ்லாமிய கல்வி

19 Nov, 03:19


காலையிலும்_ மாலையிலும் ஓத வேண்டியவை _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

19 Nov, 02:42


அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். "நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்), "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் போற்றுபவர்), "முகஃப்பீ" (இறுதியானவர்), "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்), "நபிய்யுத் தவ்பா" (பாவமன்னிப்புடன் வந்த தூதர்), "நபிய்யுர் ரஹ்மத்" (இரக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு போதிக்க வந்த தூதர்) ஆவேன்" என்று கூறினார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2355
In-book reference: Book 43, Hadith 166

இஸ்லாமிய கல்வி

19 Nov, 02:39


பிரார்த்தனை

யா‌ அல்லாஹ் எங்களது செவிகளில், எங்கள் பார்வைகளில். எங்கள் உள்ளங்களில். எங்கள் மனைவியர்களில். எங்களது சந்ததிகளில் எங்களுக்கு மிக பரக்கத் செய்! எங்களது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள். நிச்சயமாக நீயே பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்பவன்! நிகரற்ற அன்புடையவன். உனது அருட்கொடைக்கு நன்றி செலுத்துபவர்களாக, அவற்றைக் கொண்டு உன்னைப் புகழ்ந்தவர்களாக, அவற்றை ஏற்றுக் கொண்டவர்களாக எங்களை ஆக்கி வை! அவற்றை எங்களுக்கு முழுமையாக்கி வை!

இஸ்லாமிய கல்வி

18 Nov, 03:45


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 971.01
In-book reference: Book 11, Hadith 124

இஸ்லாமிய கல்வி

18 Nov, 02:55


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எங்கள் உள்ளங்களுக் கிடையில் அன்பை ஏற்படுத்து. எங்களுக்குக் கிடையில் சீர்திருத்தம் செய். ஈடேற்றத்தின் பாதைகளுக்கு எங்களுக்கு வழிகாட்டு! இருள்களை விட்டும் வெளிச்சத்தின் பக்கம் எங்களைப் பாதுகாத்துச் சேர்த்து வை! வெளிப்படையான மறைவான எல்லா மானக்கேடான விஷயங்களை விட்டும் எங்களைத் தூரமாக்கு!

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

17 Nov, 05:23


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே செல்வங்களை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளானில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் ஒவ்வோர் இரவும் லிஅம்மாதம் முடியும்வரைலி நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது (மழைக்)காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் செல்வங்களை வாரி வழங்கு வார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1902
In-book reference: Book 30, Hadith 12

இஸ்லாமிய கல்வி

17 Nov, 05:20


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நான் எதைச் செய்ய செல்கிறேனோ அதன் நன்மையையும் எதைச் செய்கிறேனோ அதன் நன்மையையும் மறைந்திருப்பவற்றின் நன்மையையும் வெளிப்படையாக தெரிபவற்றின் நன்மையையும் சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளையும் உன்னிடம் கேட்கிறேன். ஆமீன்! அல்லாஹ்வே! எனது (சிறப்பை) நற்பெயரை உயர்வடையச் செய்! எனது பாவத்தை அகற்றிவிடு! எனது காரியத்தைச் சீர்திருத்திவிடு! எனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்து! எனது கற்பைப் பாதுகாத்துக் கொள்! என் உள்ளத்தை ஒளிமயமாக்கு! என் குற்றத்தை எனக்கு மன்னித்துவிடு! சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை உன்னிடம் கேட்கிறேன்! ஆமீன்! அல்லாஹ்வே! எனது ஆத்மாவில், எனது செவியில், எனது பார்வையில், எனது உயிரில், எனது படைப்பில், எனது குணத்தில், எனது குடும்பத்தில், எனது வாழ்க்கையில், எனது மரணத்தில், எனது செயலில் நீ பரக்கத் செய்ய வேண்டுமென உன்னிடம் கேட்கிறேன். எனது நன்மைகளை அங்கீகரித்துக் கொள்! சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை உன்னிடம் கேட்கிறேன். ஆமீன்!

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

16 Nov, 07:06


இந்த சிறந்தப் பிரார்த்தனையை உங்கள் வாழ்வில் செய்துள்ளீர்களா_ _ Assheikh Azhar

இஸ்லாமிய கல்வி

16 Nov, 06:12


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமான வன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.43 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 7179
In-book reference: Book 93, Hadith 42

இஸ்லாமிய கல்வி

16 Nov, 06:11


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நன்மையின் தொடக்கங்களையும் அதன் முடிவுகளையும் அதன் அனைத்து வகைகளையும் அதில் முந்தியதையும் அதில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் சொர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துகளையும் உன்னிடம் கேட்கிறேன். ஆமீன்!

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

15 Nov, 05:25


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவு மில்லை. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், “ஹஜ்ஜு செய்பவர் செய்வதைப் போன்றே நீயும் செய்! ஆயினும் நீ தூய்மையடையாத வரை இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யாதே” என்று கூறினார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1650
In-book reference: Book 25, Hadith 131

இஸ்லாமிய கல்வி

15 Nov, 05:15


பிரார்த்தனை

யா அல்லாஹ் என்னை உறுதிப்படுத்து! எனது தராசுகளைக் கனக்க வை! எனது ஈமானை உண்மையாக்கி வை! எனது அந்தஸ்துகளை உயர்த்து! என் தொழுகையை ஏற்றுக் கொள்! என் குற்றத்தை மன்னித்துவிடு! சொர்க்கத்தில் மிக உயர்ந்த அந்தஸ்துகளை உன்னிடம் கேட்கிறேன்.

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

14 Nov, 05:26


நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அந்த இடத்திலிருந்து) பிரியாத வரை முறித்துக்கொள்ளும் உரிமை பெறுகின்றனர். விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வணிகத்தில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். அவர்கள் பொய் சொல்லி (குறைகளை) மறைத்தால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம். ஆனாலும், வணிகத்தின் வளம் (பரக்கத்) அழிக்கப் பட்டுவிடும். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘நான் பதிவு செய்த ஏட்டில், இவ்வாறு மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2114
In-book reference: Book 34, Hadith 67

இஸ்லாமிய கல்வி

14 Nov, 05:24


பிரார்த்தனை

அல்லாஹ்வே! சிறந்த யாசகத்தை, சிறந்த பிரார்த்தனையை, சிறந்த வெற்றியை, சிறந்த அமலை, சிறந்த நன்மையை, சிறந்த வாழ்க்கையை, சிறந்த மரணத்தை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

13 Nov, 11:47


அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு "தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம்" என்று கூறினோம்" என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் செய்தது "நன்று" அல்லது "சரி" என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். -(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.- பிறகு, "நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2531
In-book reference: Book 44, Hadith 295

இஸ்லாமிய கல்வி

13 Nov, 11:46


பிரார்த்தனை

அல்லாஹ்வே! கெட்ட குணங்கள், கெட்ட ஆசைகள், கடும் நோய்கள் ஆகிய அனைத்தையும் விட்டு என்னைத் தூரமாக்கி வை!

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

11 Nov, 05:33


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1922
In-book reference: Book 33, Hadith 248

இஸ்லாமிய கல்வி

11 Nov, 05:27


பிரார்த்தனை

அல்லாஹ்வே! நீ எனக்குக் கொடுத்ததைக் கொண்டு என்னைத் திருப்தியுறச் செய்! அதில் எனக்கு நீ பரக்கத் செய்! என்னுடைய உடைமைகளில் எது என்னிடமிருந்து தவறிவிட்டதோ அதற்கானப் பகரமாக எனக்குச் சிறந்ததை வழங்கு!

முஸ்தத்ரகுல் ஹாகிம்

இஸ்லாமிய கல்வி

02 Nov, 02:12


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயத்தின் இன்ன இன்ன வசனங்களை எனக்கு அவர் நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள் ‘‘இன்ன அத்தியாயத்தில் நான் மறந் திருந்த இன்ன இன்ன வசனங்களை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் ஹிஷாம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.50 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 5037
In-book reference: Book 66, Hadith 60

இஸ்லாமிய கல்வி

02 Nov, 02:09


பிரார்த்தனை

அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும் உரியது. அல்லாஹ்வே! நீ விரித்ததை யாராலும் மடக்க முடியாது. நீ மடக்கியதை யாராலும் விரிக்க முடியாது. நீ வழிக்கெடுத்தவரை நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிக்கெடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தூரமாக்கியதைச் சமீபமாக்குபவர் யாருமில்லை. நீ சமீபமாக்கியதைத் தூரமாக்குபவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உன்னுடைய பரக்கத்துகள் , உன்னுடைய கருணை, உன்னுடைய கிருபை, உன்னுடைய வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் எங்களுக்கு வாரி வழங்கு! அல்லாஹ்வே! நீங்காத, அழியாத, நிரந்தரமான அருட்கொடையை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! மறுமை நாளில் அருட்கொடைகளையும், அச்ச நாளில் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்குக் கொடுத்ததின் தீங்கை விட்டும், எங்களுக்குக் கொடுக்காததின் தீமையை விட்டும், நிச்சயமாக உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை நேசமாக்கி வை! அதை எங்களுடைய உள்ளங்களிலே அலங்கரித்து வை! நிராகரிப்பையும் உனது கட்டளைகளை மீறுவதையும் பாவங்கள் செய்வதையும் எங்களுக்கு வெறுப்பாக்கி வை! எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி வை! அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிம்களாக மீண்டும் எழுப்பு! இழிவின்றி, குழப்பமின்றி எங்களைப் பாதுகாத்து நல்லோர்களுடன் எங்களைச் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்ப்பிக்கும், உன் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கும் காஃபிர்களைக் கொன்றுவிடு! உனது தண்டனையையும் வேதனையையும் அவர்கள் மீது இறக்கிவிடு! அல்லாஹ்வே! கிதாப் கொடுக்கப்பட்ட காஃபிர்களைக் கொன்றுவிடு! உண்மையான இறைவனே.. ஆமீன்!

அல் அதபுல் முஃப்ரத்

இஸ்லாமிய கல்வி

01 Nov, 05:30


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னால் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச்செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டு தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 505.01
In-book reference: Book 4, Hadith 290

இஸ்லாமிய கல்வி

01 Nov, 05:29


பிரார்த்தனை

அல்லாஹ்வே எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்குக் கருணை காட்டு! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு நற்சுகத்தைத் தா! எனக்கு உணவளி! எனக்கு ஆறுதல் வழங்கு! எனக்கு உயர்வைக் கொடு!

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

31 Oct, 13:37


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஏதேனும் பிரச்சினையில் பங்கெடுத்தால் ஒன்று, நல்லதையே பேசட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும். பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே,பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 715.12
In-book reference: Book 17, Hadith 77

இஸ்லாமிய கல்வி

31 Oct, 13:33


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எங்களுக்கு (உன் அருட்கொடைகளை) அதிகப்படுத்து! எங்களுக்குக் குறைத்து விடாதே! எங்களை கண்ணியப்படுத்து! எங்களை இழிவுபடுத்தி விடாதே! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு கொடு! எங்களை இழக்க வைத்துவிடாதே! எங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்! எங்களை விட்டுவிடாதே! எங்களைத் திருப்திகொள்ள செய்! நீயும் எங்களைக் கொண்டு திருப்திகொள்

ஜாமிவுத் திர்மிதி

இஸ்லாமிய கல்வி

30 Oct, 11:24


கண்ணேறிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான பிரார்த்தனை _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

30 Oct, 04:57


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும்; உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராகமாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றார்கள். அதற்கு ‘‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1979
In-book reference: Book 30, Hadith 86

இஸ்லாமிய கல்வி

30 Oct, 04:55


பிரார்த்தனை

அல்லாஹ்வே! எனது உருவத்தை அழகுபடுத்தினாய்; எனது குணத்தையும் அழகுபடுத்து!

முஸ்னது அஹ்மது

இஸ்லாமிய கல்வி

29 Oct, 17:02





📍 தமிழில் தப்ஸீர் செயலி


அல் முக்தஸர் ஃபீ தப்ஸீர் - குர்ஆன் விரிவுறையின் சுருக்கம் சவூதி உலமாக்கள் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

"المختصر في التفسير AlMukhtasar"
என்ற பெயரில் ஆப் ஸ்டோரில் வெளியாகி உள்ளது!



📱Android App Link
https://play.google.com/store/apps/details?id=online.smartech.mukhtasar

📲 IOS App Link
https://apps.apple.com/us/app/%D8%A7%D9%84%D9%85%D8%AE%D8%AA%D8%B5%D8%B1-%D9%81%D9%8A-%D8%AA%D9%81%D8%B3%D9%8A%D8%B1-%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A2%D9%86-%D8%A7%D9%84%D9%83%D8%B1%D9%8A%D9%85/id6464696535

இஸ்லாமிய கல்வி

29 Oct, 07:05


தொடர்_43 - வலீமா திருமண விருந்தின் நேரம் __ இஸ்லாம் கூறும் குடும்பவியல்

இஸ்லாமிய கல்வி

29 Oct, 06:16


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜுக்கு ‘இஹ்ராம்’ கட்டியவர்களாக (மக்காவுக்கு) வந்து சேர்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “தம்முடன் குர்பானி பிராணியைக் கொண்டுவந்திருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை ‘உம்ரா’விற் குரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் கட்டளையிட்டார்கள்.5 இந்த ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1085
In-book reference: Book 18, Hadith 6

இஸ்லாமிய கல்வி

29 Oct, 06:11


பிரார்த்தனை

அல்லாஹ்வே! என்னை உறுதிப் படுத்து; நேர்வழி காட்டுபவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும் என்னை ஆக்கி வை!

ஸஹீஹுல் புகாரி

இஸ்லாமிய கல்வி

28 Oct, 13:08


நபி ஸல் அவர்களை நேசிப்பது எப்படி_ அஷ்ஷெய்க்_- ரமீஸ் (ரியாதி)

இஸ்லாமிய கல்வி

28 Oct, 04:34


நபியவர்களின் பிரார்தனை உங்களுக்கு வேண்டுமா_ _ Assheikh Azhar Yousuf Seelani

இஸ்லாமிய கல்வி

28 Oct, 03:06


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகைவிட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட் படுத்தமாட்டான். இதை மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.26 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (‘மட்டம்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘ஹுஃபாலத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘ஹுஸாலத்’ என்றும் கூறப்படும். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 6434
In-book reference: Book 81, Hadith 23

இஸ்லாமிய கல்வி

28 Oct, 03:04


யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி)?

இஸ்லாமிய கல்வி

28 Oct, 03:02


🛑 *இஜ்திமா பாணகமுவ*

தலைப்பு:- *தெளஹீத் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள்*

🎙️அஷ்ஷெய்க்:- *அப்துல் வதூத் (ஜிப்ரி)*

🕌 இடம்:- *மக்கா மஸ்ஜித்-பாணகமுவ குருநாகல்*

இஸ்லாமிய கல்வி

27 Oct, 04:18


அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 2627
In-book reference: Book 45, Hadith 188

இஸ்லாமிய கல்வி

27 Oct, 04:15


யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (திர்மிதி, ஹாகிம்)

இஸ்லாமிய கல்வி

26 Oct, 12:04


அல்லாஹ்வை வணங்குவதால் ஏற்படும் நலவுகள் _ ஜும்ஆ தமிழாக்கம் _ Assheikh Rizwan Ismail

இஸ்லாமிய கல்வி

26 Oct, 08:05


சோதனையும் பொறுமையும் _ ஜும்ஆ தமிழாக்கம் _ Assheikh Mafhoom Bahji

இஸ்லாமிய கல்வி

26 Oct, 07:29


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய் விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கருமித்தனம் உருவாக்கப்பட்டுவிடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன (ஹர்ஜ்)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 7061
In-book reference: Book 92, Hadith 13

இஸ்லாமிய கல்வி

26 Oct, 07:25


யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (அஹமத், அபூதாவூத்)

இஸ்லாமிய கல்வி

25 Oct, 04:18


தொடர் _03 - குழந்தை_ குடும்பத்திற்கான பிரார்த்தனைகள் __ குழந்தை வளர்ப்பு

இஸ்லாமிய கல்வி

25 Oct, 03:40


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போகிறேன்" என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா? ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை)உள்ளது"என்றார்கள். அதற்கு அந்த மனிதர், "அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்" என்றார். "எவ்வளவு மணக்கொடையில் (மஹ்ர்) அவளை மணக்கப்போகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான்கு ஊக்கியாக்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "(ஓ!) நான்கு ஊக்கியாக்களா? வெள்ளியை நீங்கள் இந்த மலைப்பகுதியிலிருந்து குடைந்தெடுக்கிறீர்கள் போலும். உமக்கு (உதவித் தொகையாக)க் கொடுப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை. ஆயினும், நாம் உம்மை ஒரு படைப்பிரிவுக்கு அனுப்புவோம். அப்போது, நீர் போர்ச் செல்வத்திலிருந்து அதைப் பெற்றுக்கொள்ளக்கூடும்" என்றார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் "பனூ அப்ஸ்" குலத்தாரை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பியபோது அவர்களுடன் அந்த மனிதரையும் அனுப்பிவைத்தார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Muslim 1424.02
In-book reference: Book 16, Hadith 88

இஸ்லாமிய கல்வி

25 Oct, 03:37


யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கைவிட்டும் உள்ளத்தின் தீங்கைவிட்டும் எண்ணத்தின் தீங்கைவிட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (திர்மிதி, அபூதாவூத்)

இஸ்லாமிய கல்வி

24 Oct, 08:15


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் புறப்பட்டுவிட்டால், லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்துவார்கள். பிறகு (வாகனத்திலிருந்து) இறங்கி, லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் லுஹ்ர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.16 அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1112
In-book reference: Book 18, Hadith 32

இஸ்லாமிய கல்வி

24 Oct, 08:12


யாஅல்லாஹ்! உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட அனைத்து நல்லவற்றையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய அனைத்து தீமைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உதவி செய்பவனும் நீயே! வழிகாட்டுபவனும் நீயே! அல்லாஹ் (விதித்தவற்றிலிருந்து) விலகவோ, (விதிக்காதவற்றை செய்ய) சக்தி பெறவோ அவன் துணையின்றி முடியாது. (திர்மிதி, இப்னுமாஜா)

இஸ்லாமிய கல்வி

23 Oct, 14:13


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப் பட்டார்கள்.27 அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக்கொண்டி ருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக் காகச் செய்திட அவர்களிடம் அப்போது அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவாமறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடலில்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ‘‘நாங்கள்முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்உயிரோடு இருக்கும்வரைஇஸ்லாத்தில் நிலைப்போம்” என்று (பாடியபடி) கூறினார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 2834
In-book reference: Book 56, Hadith 50

இஸ்லாமிய கல்வி

23 Oct, 07:15


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனாவாசிகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்து போவார்கள். இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

Grades:

Reference: Sahih Bukhari 1877
In-book reference: Book 29, Hadith 11

இஸ்லாமிய கல்வி

23 Oct, 07:12


யா அல்லாஹ் எனது பாமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக! (திர்மிதி, அபூதாவூத்)