Naushin_Binth_Sha @naushin_binth_sha Channel on Telegram

Naushin_Binth_Sha

@naushin_binth_sha


அல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக!...

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

நௌஷின் பிந்த் ஷா (Tamil)

நௌஷின் பிந்த் ஷா என்றும், அல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக! என்றும் அழகிய தமிழ் உள்ளடக்கம் ஒளிப்பதற்காக ஒரு டெலிகிராம் சேனல். இந்த சேனல் பல்லார்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகள், அதன் அர்த்தங்கள், இஸ்லாமிய அறிவுகள் மற்றும் இஸ்லாமிய தந்தைகள் பற்றிய செய்திகளை மற்றும் பகிர்ந்துகொள்வதுண்டு. நௌஷின் பிந்த் ஷா சேனல் உங்கள் அறிக்கைகளை வளர்க்க உதவும் மூன்று வடிவங்களைக் கொண்டுள்ளது: பலத்த வாக்குகள், புனித குர்ஆன் வசனங்கள், உங்களின் கடைசிவாக்குகள் மற்றும் குர்ஆன் முஹம்மத் சல்லல்லாஹு அலை வாஸல்லம் பற்றிய உள்ளடக்கம். நௌஷின் பிந்த் ஷா சேனல் உங்களுக்கு உதவுவதற்கான வாரியாகும் மேலும் உங்கள் ஆன்மீக மேலான பங்குகளை விளக்கும் நேரம் மற்றும் கணக்குகளைப் பற்றி உதவும் விளக்கம் உள்ளது. இந்த சேனல் நௌஷின் பிந்த் ஷா எனப்படுகிறது. இது உங்களை இஸ்லாமிய அறிவுகள் மற்றும் புனித குர்ஆன் வசனங்களைப் பற்றி அனுபவிக்க உதவும் மூன்று வடிவங்கள் கொண்டுள்ளது. நௌஷின் பிந்த் ஷா சேனல் உங்கள் ஆன்மிகத்தை வளர்க்கும் மற்றும் உயர்ந்த வாழ்க்கையைக் குறிப்பிடும் மூன்று வடிவங்களை கொண்டுள்ளது. இது ஒரு மனதமைந்த குர்ஆன் ஒளி ஒன்றாகும்! அதன் அர்த்தம், அமைப்புகள், அறிவுகளை அரசு செய்வது அல்லாஹ் மக்களுக்கு ஒரு திருப்பு ஒலிகள் ஆகும்!

Naushin_Binth_Sha

21 Nov, 03:22


இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒருவர் தனக்கு அதிகமான குழந்தைகள் இருப்பதாக (தனது சிரமத்தை) முறையிட்டார்.

அதற்கு இமாமவர்கள்..

அவர்களில் யாருக்கு அல்லாஹ் ரிஸ்க் அளிக்கமாட்டான் என நீ நினைக்கிறாயோ அவர்களை என்னிடம் அனுப்பிவை என்றார்கள்.

உடனே அம்மனிதர் மௌனித்துப் போனார்.

என இமாம் இப்னு கதீர் அத்திமிஷ்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது
அல் பிதாயா வந்திஹாயா - 13/510 ல் பதிவு செய்துள்ளார்கள்.

Naushin_Binth_Sha

20 Nov, 12:45


இறைவேதம் 📌

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

(அல்குர்ஆன் 107:4)

الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

(அல்குர்ஆன் 107:5)

الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

(அல்குர்ஆன் 107:6)

Naushin_Binth_Sha

19 Nov, 04:32


நபிமொழி 📌

மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும்.

அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! மைல் என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா.?! அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக்கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5497.

Naushin_Binth_Sha

19 Nov, 04:08


நபிமொழி 📌

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமாத அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.

அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும்.

அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.

மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும் என்றே இடம் பெற்றுள்ளது.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 990.

Naushin_Binth_Sha

19 Nov, 00:15


ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது :

பெரும்பாலான பித்அத்வாதிகள் இது ஸஹீஹான ஹதீஸ் இது பலவீன ஹதீஸ் என்று பிரித்து நோக்க மாட்டார்கள்.

மாற்றமாக அவர்களின் புத்தி மற்றும் மனசு சொல்வதே அவர்களிடம் சரியானதாக இருக்கும்!

நூல் : அல் பர்கு பைன இபாதாத் 150

Naushin_Binth_Sha

18 Nov, 15:27


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.

சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும்.

தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும்.

பொறுமை ஒரு வெளிச்சமாகும்.

குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும்.

மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர்.

சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர்.

வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 381

Naushin_Binth_Sha

18 Nov, 00:59


இமாம் அஸ்மஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

உன்னிடம் கேள்வி கேட்காதவனிடம் நீயே சென்று பதில் அளிப்பதும்!

அல்லது உனக்கு பதில் அளிக்காதவனிடம் சென்று நீ கேள்வி கேட்பதும்!

அல்லது உனக்கு செவிமடுக்காதவனிடம் சென்று நீ பேசுவதும் ஒழுக்கம் அல்ல!

நூல் : ஸியர் அஃலாமுன் நுபலா 6/408

Naushin_Binth_Sha

18 Nov, 00:57


ஸலஃபுகளிடமிருந்து 📌

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹி) கூறினார்கள் :

மக்களை ஏமாற்ற அல்லது வழிகெடுக்க இப்லீஸ் (ஷைத்தான்) கையாளும் முதல் ஆயுதம், அவர்களை அறிவை தேடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவதே ஆகும்.

ஏனென்றால், அறிவு என்பது (நேர்வழியின்) ஒளியாகும். இப்லீஸ் (ஷைத்தான்) அந்த (ஒளியால் ஆன) விளக்குகளை அணைப்பதன் மூலம் அவன் அவர்களை இருளில் வழிதவறச் செய்து அந்த இருளிலேயே அவர்களை விட்டு விடுகிறான்.

பின்பு அவர்களை அவன் விரும்பிய வழியில் தாக்குவான்.

நூல் : தல்பீஸ் இப்லீஸ் 1/289

Naushin_Binth_Sha

17 Nov, 14:45


பொறுமை 📌

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு அடியானுக்கு கிடைக்கும் (பாக்கியங்களில்) மிகச் சிறந்ததும், விசாலமானதும் பொறுமையைத் தவிர வேறு ஏதும் கிடையாது.

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 5626

Naushin_Binth_Sha

16 Nov, 13:04


ஷெய்க் அல் அல்பானி (ரஹி) அவர்கள் கூறினார்கள் :

பெண்ணின் அழகை மறைக்க ஜில்பாப் (ஹிஜாப்) சட்டம் இயற்றப்பட்டது;

எனவே, ஸ்டைலான ஒன்றை அணிவது அர்த்தமற்றது.

நூல் : ஜில்பாப் அல் மராத்துல் முஸ்லிமா 120

இமாம் இப்னு பாஸ் (ரஹி) கூறினார்கள் :

பெண்களே நீங்கள் ஹிஜாப்பில்
டிஸைன் மற்றும் கண்னை கவரும்
பாகங்கள் மற்றும் மினு மினுக்கும் படங்கள் போன்ற ஹிஜாப் அணிவதை தவிர்க்க வேண்டும்!

நூல் : மராத்துல் முஸ்லிமா | பக்கம் 119

Naushin_Binth_Sha

15 Nov, 14:32


மூன்று பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் 📌


1. பிரச்சினை

மன இச்சையை பின்பற்றும் சோதனையில் நீங்கள் தள்ளப்பட்டால்.

தீர்வு : 1

உங்களது தொழுகையை சற்று சரி செய்து கொள்ளுங்கள்.

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ மன இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டவர்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள்.

(அல்குர்ஆன் 19:59)


2. பிரச்சினை

துன்பங்களையும், பாக்கியமின்மையும் நீங்கள் உணர்ந்தால்.

தீர்வு : 2

உங்களது தாயுடன் நீங்கள் புரியும் தவறுகளை சரி செய்து கொள்ளுங்கள்.

وَّبَرًّابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا‏

என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து, நான் முரடனாகவும் வழி தப்பியவனாகவும் ஆகாதபடியும் செய்வான்.

(அல்குர்ஆன் 19:32)

جَاءَ رَجُلٌ إلى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، فَقالَ: مَن أَحَقُّ النَّاسِ بحُسْنِ صَحَابَتِي؟ قالَ: أُمُّكَ قالَ: ثُمَّ مَنْ؟ قالَ: ثُمَّ أُمُّكَ قالَ: ثُمَّ مَنْ؟ قالَ: ثُمَّ أُمُّكَ قالَ: ثُمَّ مَنْ؟ قالَ: ثُمَّ أَبُوكَ. وفي حَديثِ قُتَيْبَةَ: مَن أَحَقُّ بحُسْنِ صَحَابَتي وَلَمْ يَذْكُرِ النَّاسَ.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2548 | خلاصة حكم المحدث : [صحيح] | التخريج : أخرجه البخاري (5971)، ومسلم (2548).

3. பிரச்சினை

மன இறுக்கத்தையும் அழுத்தத்தையும் உணர்ந்தால்.

தீர்வு : 3

திருக்குர்ஆனுடன் உங்களின் தொடர்பை சரி செய்து கொள்ளுங்கள்.

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏

எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.

(அல்குர்ஆன் 20:124)

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உங்கள்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை பாதுகாத்துக் கொள்வோம்.

(அல்குர்ஆன் 15:9)


நூல் : இழாஆத் ஈமானிய்யா 232

Naushin_Binth_Sha

15 Nov, 14:29


அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள் :

மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் அவர்களிடத்தில் வந்தால்

الحمد لله الذي بنعمته تتم الصالحات

அல்ஹம்துலில்லாஹில்லதீ பி நிஃமதிஹி ததிம்முஸ் ஸாலிஹாது

பொருள் :

யாருடைய அருளால் நற்செயல்கள் நிறைவேறுகிறதோ, அந்த இறைவனுக்கே புகழனைத்தும் என்று கூறுவார்கள்.

அவர்கள் வெறுக்கும் ஒரு விஷயம் அவர்களிடத்தில் வந்தால்,

الحمد لله على كل حال

அல்ஹம்துலில்லாஹீ அலா குல்லி ஹால் என்று சொல்வார்கள்.

பொருள் :

எல்லா நிலையிலும் அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

நூல் : ஸஹீஹ் அல் ஜாமி 4640
தரம் : ஸஹீஹ்

Naushin_Binth_Sha

15 Nov, 03:26


ஜும்ஆ நினைவூட்டல் 📌

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.

அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்கள்.

நூல் : ஸஹீஹ் புகாரி 935.

Naushin_Binth_Sha

14 Nov, 14:01


இறைவேதம்‌ 📌

وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

(நம்பிக்கையாளர்களே!)

நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம்.
கவலைப்படவும் வேண்டாம்.

(உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.

(அல்குர்ஆன் 3:139)

Naushin_Binth_Sha

14 Nov, 03:30


مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى‏

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

(அல்குர்ஆன் : 93:3)

Naushin_Binth_Sha

12 Nov, 03:03


சாபத்தை பெற்று தரும் செயல்கள்!

ملعونٌ من سبَّ أباهُ ملعونٌ من سبَّ أُمَّهُ ملعونٌ من ذبح لغيرِ اللهِ ملعونٌ من غيَّرَ تُخُومَ الأرضِ ملعونٌ من كَمَهَ أعمى عن طريقٍ ملعونٌ من وقع على بهيمةٍ ملعونٌ من عمل بعملِ قومِ لوطٍ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/266 | خلاصة حكم المحدث : إسناده صحيح

நபி (ஸல்) கூறினார்கள் கூறினார்கள் :

1. தன் தந்தையைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

2. தன் தாயைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

3. அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணிகளை ) அறுத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

4. பூமியின் ( எல்லைக் கல்,மைல் கல்,வரப்பு உள்ளிட்ட ) அடையாளங்களை மாற்றியமைத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

5. கண்பார்வை அற்றவரைத் தவறான வழியில் செலுத்தியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

6. விலங்கைப் புணர்ந்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

7. இறைத்தூதர் லூத் ( அலை) சமூகத்தாரின் ஈனச் செயலைச் ( தன்பாலுறவு) செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்னத் அஹ்மத் 3/266
தரம் : ஸஹீஹ்

Naushin_Binth_Sha

11 Nov, 04:38


A New Fragrance Is Arriving Soon, That We Know You'll Love It.

Spread The Fragrance Of Love 💕

All kinds of Imported Attar, Oud Varieties, Body Spray, Soaps..

Shipping All Over India 🇮🇳
(Order Now @Al_Aqsa_Perfumes)


Narrated Aisha (radhi) :

بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ‏.‏

I used to perfume Allah's Messenger (ﷺ) with the best scent available till I saw the shine of the scent on his head and shine beard.

Sahih al-Bukhari : 5923
.
.

Al Aqsa Perfumes 🤍