தன்னம்பிக்கை 👍 @anandckm123 Channel on Telegram

தன்னம்பிக்கை 👍

@anandckm123


நல்ல சிந்தனைகளை மக்களின் மனதில் விதைப்பதே எனது நோக்கம்.

தன்னம்பிக்கை 👍 (Tamil)

தன்னம்பிக்கை 👍 என்கின்று இந்த சேனல், தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் மற்றும் அதன் அப்படியே ஆட்சிக்காலங்கள் பற்றிய குறிப்புகளை பகிர்ந்துள்ளது. இந்த சேனல் தன்னம்பிக்கை என்பது உண்மையில் நல்லது என்று உறுதியாகவும் உறுதிப்படுத்தத் தேவையானது என்றும் வாக்கியம். சேனல் அனைத்து வயது மக்களுக்கும் உச்சமான ஊக்கம் உண்டு, இதன் மூலம் புதிய உண்மைகளைக் கண்டு மகிழுவது என்பதையும் விழிக்க அந்தச் சேனலை பார்த்தால் அறியலாம். இது கிடைத்த மிகப் புதிதான அப்டேட்டுக்களையும் செய்திகளையும் வளர்ந்து வாய்ந்தது என்னும் ஒரு உண்மையை பேசியிருப்பது. சேனல் நேரடி பயனர்கள் உண்டு மற்றும் அவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் அனுபாதனங்களிடம் எதிர்காலத்தில் ஒருவர் உத்தரவு அதிரடி என்பதையும் செய்வதில் நுழைவைக் கொண்டது. அத்தகுதியையும் வாய்ந்தது மற்றும் அந்தச் சேனலை பார்த்தால் விசாரிக்கலாம் மற்றும் கொண்டாடலாம்!

தன்னம்பிக்கை 👍

24 Apr, 16:04


🌙 இரவு சிந்தனை 🌙

     🌹 24.04.2024🌹

🍁ஒன்றை அடைவதற்கு                  ஆசைப்பட்டால், முயற்சி செய் பேராசைப்பட்டால்,                    பெருமுயற்சி செய்🍁

🍁உன் முயற்சியைப் பொறுத்தே உன் இலக்கும் உன்னை                  நிர்ணயிக்கும்🍁

🍁ஆகவே தோல்விகள் தொடர்ந்து உன்னைத் துரத்துகிறதா அயராமல் ஓடு. உனக்குச் சற்று முன் தொலைவில் தான் வெற்றி ஓடிக் கொண்டிருக்கிறது🍁

🍁யாரும் வந்து காயப்படுத்தும் வரை உங்களின் வலிமை உங்களுக்குத் தெரியாது🍁

🍁சோதனைகளையும் வேதனைககளையும் கடந்து தான் நேர்மை புகழப்படும்.

🍁அதாவது விபத்துப் போல் வருவதில்லை வெற்றி. வியர்வையால் திறமையால் வருவதுவே வெற்றி🍁

🍁துவண்டு போவதே ஒரு மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி தோல்வி அடைந்த பிறகும் இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது🍁
                
🍁ஆகையால் உன் எண்ணமும் செயலும் நேர்மையாக இருந்தால்🍁

🍁நீ வைக்கும் குறி யார் தடுத்தாலும் தப்பாது👍

🤲முருகா இன்றைய 
24-04-2024🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲

🙏நாளைய பொழுது 25-04-2024 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏

🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏

⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️                                                         
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌

🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏

👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏

🙏ஓம் சரவணா பவ 🙏

தன்னம்பிக்கை 👍

24 Apr, 16:03


*இரவு நேர சிந்தனை*
24.04.2024

நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் உறுதியாக அந்த இலக்கை அடைந்து விடுவர்.

ஏனெனில் அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உந்துதலும் ஆற்றலும் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும்.

நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்.

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது.

வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால்தான் சாத்தியப்படும்.

வெற்றி பெறவேண்டும் என்னும் தாகம் உங்கள் மனதில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

நம்பிக்கை நிறைந்தவர்  ஒரு நாளும் யார் முன்னேயும் மண்டியிட்டது இல்லை.

எந்த ஒரு காரியத்தையும்  நம்பிக்கையோடு செய்தால் யார் உதவியும் தேவையில்லை.

நம்பிக்கை தான் வாழ்க்கை
முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா
                   
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.

*இனிய இரவு வணக்கம்*

தன்னம்பிக்கை 👍

23 Apr, 02:24


*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
*𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 23, 𝐀𝐩𝐫. 2024*
*★🄲🅁🄺★ 🌹✍️*

*🔹🔸இன்றைய சிந்தனை..*

*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️*

*🧿‘’பதற்றம்..’’*

*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️*

*♻️மனப்பதற்றத்தோடு வாழ்வது மிகவும் சிக்கலானது. வாழ்க்கைக்கு மிக முக்கியமான தேவையான செயல்களை செயல்படுத்த முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.*

*♻️இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான வேதனை மிகுந்த வேலைகளில் என்ன செய்யலாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்துப் படிக்கலாம்.*

*♻️மூச்சுப் பயிற்சியும் மனப்பதற்றம் இருக்கும் சமயங்களில் மிகவும் உபயோகமளிக்கும்*
.
*♻️மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து கட்டுப்பாட்டில் சில நொடிகள் வைத்து பின்னர் நிதானமாக விடுங்கள்.*

*♻️இது போலச் செய்வது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தைப் போக்கி தளர்வடையச் செய்யும்.*

*♻️மற்றும் அத்தனைப் பிரச்சனைகளையும் மறந்து உங்கள் கண் முன்னே உங்களுக்கு பிடித்தது போல் ஒரு மகிழ்ச்சியான சுற்றுபுறச் சூழ்நிலையைக் கொண்டு வாருங்கள்.*

*♻️இது உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களைத் தரும். உங்களால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்.*

*♻️உங்கள் செயல்களுக்கு தீர்வு காணப்பட்டது போல் கண் முன்னே நினைத்துப் பாருங்கள். நல்ல மாற்றத்தைத் தரும்.*

*♻️நீங்கள் மனப் பதட்டத்தில் இருக்கும் போது, உங்கள் அட்ரினல் ஹார்மோன் அதிக அளவு சுரக்கும். இது உங்கள் உடலை பாதிக்கும்.*

*♻️அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் உடல் பயிற்சி செய்யலாம்.அப்படி செய்யும் போது, அட்ரினல் சுரப்பி குறைவாக சுரக்கும்.*

*இதனால் நீங்கள் புத்துணர்வு பெறுவது போல் உணர்வீர்கள்.*

*♻️அதீத குழப்பங்கள், மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் போது நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் மனதை திசை திருப்புவது தான்.*

*♻️உடனடியாக விளையாட்டிலோ, வெளியில் செல்வதில் அல்லது, உங்களுக்கு பிடித்தமானவர்களீடம் பேசுவதையோ செய்ய வேண்டும்.*

*♻️இதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு சற்று ஆசுவாசம் கிடைக்கும். பெரும்பாலோனோர் மனப் பதட்டத்தில் ஆளாவதற்குக் காரணம் பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதால் தான்.*

*♻️எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளுங்கள். இதுதான் உண்மை என நம்பி அவற்றை எப்படி எதிர்கொள்வது என யோசியுங்கள்.*

*♻️பிரச்சனைகளிலிருந்து முழுவதும் விடுபட ஆலோசிக்க வேண்டுமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கப் பார்க்கக் கூடாது.*

*♻️யாருக்கும் பிரச்சனைகளும், மனப்பதட்டங்களும் வராமல் இருக்காது.*

*♻️அதீத மனப்பதட்டம் உங்கள் மீது உள்ள உங்கள் அவநம்பிக்கையைக் காட்டுகிறது.*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️''பதறாத காரியம் சிதறாது'' என்பது பழமொழி...*

*ஆதலால் எந்த சூழ்நிலைகளிலும் பதற்றம் அடையாமல் சிறப்பாகச் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள்.*

*🏵️▬▬▬C®️K▬▬▬🏵️*
*𝟐𝟑 | 𝟎𝟒 | 𝟐𝟎𝟐𝟒*
. *🌹✍️

தன்னம்பிக்கை 👍

23 Apr, 02:22


வாழும் நாட்கள் சில காலம்-இதில்
வந்துபோகும் பல சோகம்....!

உன்னால் முடியாதென்று நினைத்து
முடங்கிவிடாதே மூலையிலே....!

எல்லாம் தொட்டுவிடும் தூரமே
துவண்டுவிடாதே வாழ்க்கையிலே....!!

எலும்பில்லா எறும்புகூட தன்
எல்லையை மீறி ஓடும்போது....

எல்லாம் கொண்ட நீ மட்டும்
தடம்புரண்டு நிற்கிறாய் ஏனோ....?

ஏழை ஜாதி நீயென்று
எண்ணிவிடாதே ஒருபோதும்....!

எரிமலையாய் பொங்கியெழு
உயர்வு உண்டு எப்போதும்.....!!

தொடர் முயற்ச்சி உனக்கிருந்தால்......

தொலைதூர வெண்ணிலவும் உன்
தோல்சாய ஆசை கொள்ளும்.....!

தோல்வியும் ஒப்புக்கொள்ளும் ஒரு நாள்..........

நான் உன்னிடம் தோற்றுவிட்டேனென்று....!!

தன்னம்பிக்கை 👍

23 Apr, 02:21


நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
இன்று அழகர்
வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா

மதுரைக்காரனைப்
பொறுத்தவரையில்
இது மதுரை மக்கள் திருவிழா

சைவ வைணவ
ஒருங்கிணைப்புத் திருவிழா

வண்ணமயமான
மதுரை மண் சார்ந்த திருவிழா

சாதி மத பேதம் பாராமல்
ஏழை பணக்காரன் வித்தியாசம் பாராமல்
தோளாடு தோள் சேர்ந்து மக்கள்
கள்ளழகனைக் கொண்டாடும் நாள்

வயது வித்தியாசம் பாராமல்
ஆண்களும் பெண்களும்
வயதானவர்களும் குழந்தைகளும் கொண்டாடும் திருவிழா

காணுமிடமெல்லாம் தண்ணீர் பந்தல்கள்
பசித்த மக்களுக்கு அன்புடன்
இலவசமாக உணவு வழங்கும் சேவை மையங்கள்

பலூன் குளிர் பானம் மிட்டாய் வகைகள்
வியாபாரிகளுக்கு கொண்டாட்டமான நாள்

சித்திரைத் திருவிழா
மதுரை மண்ணின் முத்தாய்ப்பான கலாச்சாரத் திருவிழா

🌹🌹🌹

தன்னம்பிக்கை 👍

23 Apr, 02:20


பிடிவாதம் எப்போதும்...

பெருந்தன்மையை தன்னுள்...

அடக்கியாள முனைகிறது.

ஆனால்..?

அதை விடுத்து பெருந்தன்மையிடம்...

பாடம் கற்றுக் கொள்ள முனைய வேண்டும்.

*🔥JEE 🕸️ BOOMBA🔥*

1,717

subscribers

21,587

photos

43

videos