தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation @tamil_motivation Channel on Telegram

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation

@tamil_motivation


தன்னம்பிக்கை தமிழ்
(Tamil Motivation)

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation (Tamil)

தன்னம்பிக்கை தமிழ் என்ற தொகுப்பு சிறந்த மீட்டை உள்ளடக்கும் விரும்பினர்களுக்கு எந்த தொகுப்பும் அடிப்படையாக அதிந்தணியை வழங்குகிறது. இது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்த வழிகளைத் துணையாக பயன்படுத்தும். இந்தத் தொகுப்பு உங்களுக்கு மேம்பட்ட மற்றும் வெற்றியைத் தேர்ந்தெடுக்க உதவும். உங்கள் சேரத்தினை இப்படிவமோகாமல் உயர்ந்ததாக ஒழிவற்ற தொடர்பான தகவல்கள், மொழிகள், பொருட்கள், இதழ்கள் மற்றும் பாடங்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஆலோசனை செய்யலாம். தன்னம்பிக்கை தமிழ் தொகுப்பு உங்களுக்கு நீங்கள் தன்னம்பிக்கை சார்ந்த அனைத்திலும் மொழியை உயர்த்துவதற்கு உதவும் வழிகளை வழங்கும் ஒரு அருமையான தொகுப்பாகும்.

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation

25 Jun, 13:56


*வாழ்க்கையின் உண்மை*

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.

ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

*ஒருநாள்...*

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.

அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. *நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்*’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.

நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

*உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.*

*1. நான்காவது மனைவி நமது உடம்பு.*
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

*2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.*
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

*3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.*
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

*4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.*
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

*இது தான் வாழ்க்கை. . . வாழ்க்கையின் உண்மையும் இதுதான். . .*

தன்னம்பிக்கை தமிழ் - Tamil Motivation

25 Jun, 03:07


"முப்பத்தியாரு வயதினிலே" என்ற படத்தில் ஜோதிகா தன் மகளிடம் சொல்லும் ஒரு வசனம்.

உனக்காக நான் என்னல்லாம் தியாகம் செஞ்சிருக்கேன்னு தெரியுமா?

அதுக்கு அந்த பெண் உன்னை யார் செய்ய சொன்னா. நான் உன்கிட்ட கேட்டனா. நீ வாழ்க்கையில சாதிக்காததுக்கு என்னை ஒரு காரணம் காட்டாதன்னு சொல்லுவாள்.

பெண்களோட அடிமை தனம் திருமணத்துக்கு பிறகு ஆரம்பிக்கிறது. அதை அவர்கள் விரும்பியே செய்கின்றனர். கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கு போக போறதில்லை. என் குடும்பத்தை பாத்துக்குறது தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்லுவாங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட அட்ஜெஸ் பண்ணிப்பாங்க. இப்படி மற்றவர்களுக்காக வாழ்ந்துட்டு அவங்களுக்கான வாழ்க்கையை அதிலே தேடுனா ஒன்னுமிருக்காது.

ஒரு கட்டத்திலே அந்த குடும்பமே அவர்களை ஏளனம் செய்யும் போது தான் தெரியும் தன்னுடைய தியாகத்துக்கு மதிப்பில்லைன்னு. அந்த தியாகத்துக்கு இன்னொரு பெயர் அடிமைத்தனம்.

அப்படி குடும்பத்துக்காக உழைக்குற பெண்கள் தன் கணவனிடம் பணம் வேணும்னு போய் நிக்கும் போதோ இல்லை நீ என்ன வீட்டுல சும்மா தானாயிருக்கன்னு கேட்க்கும் போது தான் அந்த அடிமை தனத்தோட உண்மை முகம் வெளிப்படும்.

பெண்கள் ஒரு மனைவியாகவோ இல்லை தாயாவோ ஆகறாங்கங்குறதுக்காக அவங்களுடைய வாழ்க்கையை தூக்கிப்போட்டுடணும்னு ஏதாவது இருக்கா?

அதுக்கு தான் கையில எப்பவுமே பிளான் பி இருக்கணும். உங்களுக்கான வாழ்க்கை. உங்கள் தனித்துவத்தை மற்றவங்களுக்கு காட்டும் வாழ்க்கை. அப்படி நீங்க வாழுறதுல எந்த தப்புமேயில்லை.

கல்யாணம் ஆயிடுச்சி. கணவர், குழந்தைன்னு ஆயிடுச்சி. இனி நமக்காக வாழ்ந்து என்ன பண்ண போறோம். குடும்பத்துக்காக வாழுவோம்னு பெண் நினைக்குறாயில்லையா அது தான் அவள் அடிமை தனத்தின் ஆரம்ப புள்ளி. உங்களுக்காக நீங்க வாழலாம். அதுக்கு காரணம் தேவையில்லை.

நான் ஒரு மனைவி, அம்மான்னு பெருமையா சொல்வதை தவிர்த்து. இது தான் நான்னு ஒரு பெண் தன்னை அடையாள படுத்திக்குறதுல தான் அவளுடைய இந்த அடிமை தன்மை ஒழியும்ன்னு நினைக்குறேன். அது அவளுக்கு மதிப்பையும் தேடித் தரும்..✍️

7,739

subscribers

49

photos

370

videos