Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗 @kitchenolbn Channel on Telegram

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

@kitchenolbn

🍱 சமையல் குறிப்புகள்
🥗 பாரம்பரிய சமையல்
🫕 ஆரோக்கிய சமையல்
🍗 சைவம் & அசைவம்
🍔 செய்முறை & குறிப்புகள்
🧆 வீட்டு சமையல்
🧄 மருத்துவ சமையல்

🍳 Fast Food
🍟 Street Food
🍧 Healthy Food & Tips

🫕 @KitchenOLBN

Kitchen OLBN ™🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗 (Tamil)

பாலச்செல்வன் மற்றும் அப்துல் சலாம் நிர்வாகிகளாக உள்ள 'Kitchen OLBN' எனும் டெலிகிராம் சேனல் ஒரு அருமையான அனுபவம் உள்ளது. இந்த சேனல் மூலம் உணவு செய்வதும், சேர்க்கையை கருதுவதும் எளிதாகும். 'Kitchen OLBN' சேனலில் சமையல் பாரம்பரிய உணவுகள், ஆரோக்கிய சமையல், சைவம், அசைவம், செய்முறைகள், வீட்டு சமையல், மருத்துவ சமையல், விரைவான உணவுகள், விரைவான உணவுகள், ஆரோக்கிய உணவுகள் போன்றவைகளை தெரிவிக்கின்றன. அதன் போது, அந்த சேனல் வினையகமாகவும் பயனுக்காகவும் செயல்படுகிறது. இந்த சேனலில் பெரும் சமையல் அறைக்கு சேர்ந்து, உணவு செய்வது ஒரு சூதாட்டம் ஆகும். மேலும், நீங்கள் வீட்டில் பணம் சேமிக்க வேண்டுமா? அப்படியான கொடுக்களம் ஏற்களும் இங்கே உள்ளன!

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

23 Sep, 06:34

முருங்கை கீரை இருந்தால் இந்த மாதிரி பக்கோடா செஞ்சு சாப்பிடுங்க. ரொம்ப அருமையா இருக்கும். 😋😋🥰

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

22 Sep, 06:30

வீட்டில் "வெஜ் லட்டு" செய்வது எப்படி?
😍😋🏃‍♂️🏃

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

22 Sep, 03:45

கோவைப்பழம் சாப்பிட்டிருக்கிறேன் ..!

@KitchenOLBN

கோவைக்கா.. நன்மைகள்  உண்மையா ??

@DoctorOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

10 Aug, 02:44

சாம்பார் தூள் கடையில வாங்கி சமைப்பவர்களுக்கு இந்த காணொளி!

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

09 Aug, 14:15

வாங்க அப்பளம் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்!

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

06 Aug, 01:27

ஆறு சுவை உணவுகளின் பயன்கள்! 🔥

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

02 Aug, 06:25

ஆரோக்கியம் மிகுந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சி! 👍

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

31 Jul, 01:45

இன்று காலை டிஃபன் சேமியா புலாவ் (Vermicelli Pulav) ... நீங்களும் செஞ்சு சாப்பிட்டு சொல்லுங்க, எப்படி இருக்குன்னு.

அருமையான சுவை. 🤤🤤🤤

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

29 Jul, 03:14

உளுந்தோதரை (Ulundhodarai) (Lentil Rice) செஞ்சு சாப்பிடுங்க.. மிகவும் சத்தானது!

நாளை லஞ்சுக்கு இதைத்தான் செய்ய சொல்லிருக்கேன் எங்க வீட்டில்.

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

29 Jul, 02:08

சூடான உளுந்து பால்.. செய்முறை!

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

27 Jul, 03:30

கடுகு பொடி சாதம் (Mustard Rice) செஞ்சு சாப்பிடுங்க.. 🤤🤤🤤

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

26 Jul, 04:30

காரப்பொரி (Murmura) செஞ்சு சாப்பிடுங்க... ஸ்நாக்ஸ்! 😋😋😋

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

24 Jul, 09:05

கருவேப்பிலை பொடி சாதம் செஞ்சு சாப்பிடுங்க.. 🤤🤤🤤

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

18 Jul, 07:30

லஞ்ச் டைம்.. 😍😍

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

18 Jul, 02:30

Breakfast Special 🫕

இட்லில்ல சுட சுட சாம்பார ஊற்றி அதன் மேலே நெய் விட்டு இரண்டு வடைய பிச்சு போட்டு கொஞ்ச நேரம் ஊற வச்சு சாப்பிட்டா... சொர்க்கம் !!

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

17 Jul, 11:31

வாங்க நாவல் பழ
அல்வா சாப்பிடலாம்! 😋😋

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

17 Jul, 05:30

Desserts Special - Kitchen OLBN

Salted Caramel Bites செஞ்சு சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு குடுங்க, ரொம்ப சத்தானது.

பேரீச்சை பழத்துடன் ஊற வைத்த அத்திப்பழம் கூட சேர்த்து செய்யலாம்.

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

17 Jul, 03:35

வீட்டுல காய் இல்லாத நேரத்துல வெறும் அப்பளம் வெச்சு இப்படி குழம்பு செய்யுங்க.. ருசி சும்மா அள்ளும்! - KITCHEN OLBN

மதிய வேளையில் வீட்டில் சமைக்க காய்கறிகள் எதுவும் இல்லையா? வெளியே சென்று காய்கறி வாங்கி வந்து சமைக்க சோம்பேறித்தனமாக இருக்குதா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள்.

இந்த அப்பள குழம்பு சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

• நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
• கடுகு - 1 டீஸ்பூன்
• வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
• சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
• கறிவேப்பிலை - 1 கொத்து
• பூண்டு - 10 பல் (நறுக்கியது)
• தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
• உப்பு - 1 டீஸ்பூன்
• மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
• மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
• மல்லித் தூள் - 3 1/2 டீஸ்பூன்
• சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
• மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
• தண்ணீர் - 1 கப்
• புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
• தேங்காய் பால் - 1/2 கப்
• வெல்லம் - 1/2 டீஸ்பூன்
• அப்பளம்
• கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் அப்பளத்தைப் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் புளியை நீரில் ஊற வைத்து, அதையும் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.

பின் அதில் 1 கப் நீரை ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அதில் புளிச்சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.

இறுதியாக அப்பளத்தை நொறுக்கி குழம்புடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் ஊற வைத்தால், சுவையான அப்பள குழம்பு தயார்.

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

17 Jul, 03:30

வீட்டுல காய் இல்லாத நேரத்துல வெறும் அப்பளம் வெச்சு இப்படி குழம்பு செய்யுங்க.. ருசி சும்மா அள்ளும்!

🫕 @KitchenOLBN

Kitchen OLBN 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

16 Jul, 11:56

சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி.? - Kitchen OLBN

இன்று நம் பதிவில் ஆட்டினுடைய சுவரொட்டி (மண்ணீரல்) சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆட்டின் ஈரல்  போலவே ஆட்டின் சுவரொட்டில் அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. இந்த  மண்ணீரல் சாப்பிடுவதால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும். இது பொதுவாக குழந்தை பெற்றவர்களுக்கும், வயதிற்கு வந்த பெண்களுக்கும் அதிகம் கொடுப்பார்கள். இரத்தசோகை உள்ளவர்களுக்கு இந்த மண்ணீரல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதை சுவையாக எப்படி செய்வது என்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க.

சுவரொட்டி (மண்ணீரல்) செய்வதற்கு தேவையான பொருள்கள்:

சுவரொட்டி- 3
சின்ன வெங்காயம் -10
எண்ணெய்- 4 ஸ்புன்
கருவேப்பிலை – 1கொத்து
சீரகம் -1/2 ஸ்புன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சத்தூள் -1 ஸ்புன்
சீரகத்தூள் -1/2 ஸ்புன்
மிளகுத்தூள்- 1 ஸ்புன்

சுவரொட்டி சுத்தம் செய்யும் முறை:

ஒரு கடாயில் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பிறகு சுவரொட்டியை தண்ணீரில் கழுவி விட்டு, கொதிக்கிற தண்ணீரில் அந்த சுவரொட்டியை போடவும். 10 நிமிடம் கழித்து அந்த சுவரொட்டில் மேல் இருக்கும் வெள்ளை தோள்களை நீக்கவும்.  அதன் பிறகு அதை சிறு துண்டாக கட் செய்யவும். இப்படி சுடுதண்ணீரில் போடுவதன் மூலம் சுவரொட்டில் உள்ள இரத்தம்  சுவரொட்டியை கட் செய்யும் பொழுது வராது.

சுவரொட்டி வறுவல் செய்முறை:

செய்முறை: 1

முதலில் அடுப்பை பத்த வைக்க வேண்டும். அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் சேர்க்கவும். சீரகம் சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

செய்முறை: 2

வெங்காயம் வதங்கிய பிறகு அதில் கருவேப்பிலை மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு வெட்டி வைத்த சுவரொட்டியை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

செய்முறை: 3

சுவரொட்டி நன்றாக வதங்கிய  பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சுவரொட்டி வேகுவதற்கு தண்ணீர் தேவையில்லை. மூன்று நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

செய்முறை: 4

மூன்று நிமிடம் கழித்து மூடியை திறக்கவும்.  அதில் சீரகத்தூள் மற்றும் காரத்திற்கு தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்துக் வதக்கி விடவும். இப்பொழுது சுவரொட்டி தயார்.

🫕 @KitchenOLBN

1,666

subscribers

222

photos

87

videos