சட்டமெனும் சாட்டை @lawterrorist Channel on Telegram

சட்டமெனும் சாட்டை

@lawterrorist


நமக்கு நாமே வக்கீல்தான்.

போலீஸ்,கோர்ட்,கேஸ், அரசு அலுவலகங்களில் நாமே பட்டைய கிளப்பலாம்.

நீதிமன்றத்தில் வாதாடுவது அம்மா அப்பாவிடம் பேசுவது போல்தான்.

நீங்களும் சட்ட ஆலோசகர்தான்.

சட்டத்திலும் சுயசார்பு.

தமிழ் எழுத்து கூட்டி படிக்க தெரிந்தாலே போதும்.

சட்டமெனும் சாட்டை (Tamil)

சட்டமெனும் சாட்டை என்று அழைக்கப்படும் டெலிகிராம் சேனல் பற்றி அறிந்துகொள்ள எப்படி? இது சட்டத்துக்கு தொடர்பான அனைத்து கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் சேனல் ஆகும். 'lawterrorist' என்ற பயனர் பெயரில் இந்த சேனல் நிர்வகிக்கப்படுகிறது. இது நமக்கு ஒரு வக்கீலாக ஒரு சாதனையா உள்ளவர்களுக்கு ஏதோ புதிய அறிகுறிகளை அறியும் இடமாகவும், அதேபோல் சட்ட பிரச்சினைகளுக்கு நீங்களும் எதிர்காலத்தில் நிறுத்தப்படலாம். காரணம், சட்டத்திலும் சுயசார்பு கொண்டவர்களாக நாங்களே சட்டையராகக் கருதுகிறோம். போலீஸ், அரசு, நீதிமன்ற முதலியவை எங்களுக்கு நிதானமான தெரிவைச் செய்ய உதவுகின்றன. தமிழ் எழுத்து மூலம் படிக்கலாம், அறியலாம், தெரியும். சட்ட பற்றிய அறிவுரைகளை பெற, நாம் இதே இடத்தில் ஒபி உண்டு.

சட்டமெனும் சாட்டை

11 Dec, 01:41


வாரண்ட் பாலா கைது:
‼️ ‼️ ‼️ ‼️ ‼️ ‼️

🛑இந்த தகவலை கேட்ட உடனே உங்க எல்லாருக்கும், சட்டத்தை ஆராய்ச்சி பண்ணி, நோண்டி நொங்கெடுத்து,  பள்ளிப்படிப்பைக் கூட சரியாக முடிக்காதவர்களை நீதிமன்றத்தில் வாதாடவைத்து பல நிதிபதிகளை தலை தெறிக்க ஓட விட்டும், மேலும் கடமையில் தவறிய பல அயோக்கிய அரசூழியர்களையும் பின்னி பெடலெடுத்தவரையே  கைது பண்ணிட்டாங்கன்னா நாமெல்லாம் எம்மாத்திரம் என்று கருதி சிலருக்கு குழப்பம் ஏற்படுவது நியாயம்தானே...!

🛑இன்னும் சில வக்கீழ் புண்ணாக்கு பொய்யர்கள், வாரண்ட்பாலா கைதானதை காரணம் காட்டி, வக்கீழ் இல்லாம கோர்ட்டுக்கு போனீங்கன்னா உங்களுக்கும் இதுதான் கதி என்று பொதுமக்களை பயமுறுத்துகிறார்கள்.

🛑ஆனால், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியுடன், பேராசிரியர் சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள் எழுதி, கேர்சொசைட்டி வெளியீட்டில் வந்த ஏழு நூல்களையும் சொந்தமாக வாங்கியோ அல்லது அரசு பொது நூலகத்தில் எடுத்தோ அல்லது அதன் நகல்களை(xerox copy) பயன்படுத்தியோ அல்லது சிறை நூலகத்தை பயன்படுத்தியோ முழுவதுமாக படித்த நீதியைத்தேடி வாசகர்களுக்கு வாரண்ட் பாலா கைது என்பது மிகப்பெரிய  கொண்டாட்டம்தான்.

🛑அவர் சிறைக்கு சென்று வந்தால் வாசகர்களாகிய எங்களுக்கு மிக மிக அதிகமான சட்ட விழிப்புணர்வு குறித்த நகைச்சுவையான  தகவல்கள் கிடைக்கும்.

🛑அவர் சிறை செல்லும் போது அங்கே சிறையில் இருப்பவர்கள் புண்ணியவான்கள். ஏனெனில் அங்கேயும் அவர் தனது சட்ட விழிப்புணர்வு பணியையும் தனது ஆராய்ச்சியையும் செய்து கொண்டே இருப்பார்.

🛑வாரண்ட் பாலா அவர்களை சட்டத்திற்கு உட்பட்டு எதுவுமே செய்ய முடியாது. சிறையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அது சட்ட விரோதமாகத்தான் இருக்குமே தவிர உண்மையாக இருக்காது.

🛑பின்குறிப்பு: நேர்மையான நீதிபதி யாரேனும் இருந்தால், தன்னிடம் விசாரணைக்கு வந்த வழக்கை, தன் மனதிற்கு நியாயமாக சட்டத்திற்குட்பட்டு விசாரணை செய்து,  தீர்ப்பு வழங்கிய ஏதேனும் ஐந்து வழக்குகளின் நகல்களை சான்று நகலாக கோரியதில் இதுவரை ஒரு நிதிபதி கூட அவ்வாறு கொடுக்கவில்லை என்பதும், அதுபோலவே வக்கீழ்களும், காவல்துறை ஊழியர்களும், அரசூழியர்களும் கொடுக்கவில்லை.

🛑அவ்வாறு கொடுக்கப்படும் ஆவணங்களை, சட்டத்திற்குட்பட்டு அலசி ஆராய்ந்து, அவர் நேர்மையானவராக இருந்தால் நீதியைத் தேடி நூல்களில் அவரது புகைப்படத்துடன் நேர்மையானவர் என்று பதிவிடுவதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

🛑மேலும், நம் நாட்டில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை செக்கிழுக்க வைத்தும்,  துப்பாக்கியால் சுட்டும், அடித்தும், துன்புறுத்தையும், தூக்கிலிட்டும் சித்திரவதை செய்துள்ளனர். அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்ற காரணத்தால் நாம் சுதந்திர காற்றை அனுபவிக்காமல் விட்டு விட்டோமா..? எனவே அவரைப் பற்றி வருந்துவதை விட்டுவிட்டு அவரது ஏழு நூல்களை, அடிப்படை சட்ட நூல்கள் ஐந்துடன் ஒப்பிட்டு  வாசிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஒவ்வொரு விதமான புரிதல் கிடைக்கும். அதுவே நீங்கள் சாதிப்பதற்கான உத்வேகம். அதுவே நீதிக்கு கிடைத்த உண்மையான வெற்றி.

🛑எனவே, அவரது நூல்கள் விதைகளாகவும், அவருடைய வாசகர்களாகிய நீங்கள் மரங்களாகவும் முளைத்திருப்பதால் வக்கீழ் புண்ணாக்கு பொய்யர்களை நம்பி ஏமாறாமல் தன் வழக்கில் தானே வாதாடி நியாயத்தைப்பெறும் அளவிற்கு, நீதியைத்தேடி நூல்களின் மூலம் அனைவருக்கும் சட்டக் கல்வி என்பது இன்னும் சில வருடங்களிலேயே நிறைவேறிவிடும்.

🛑மேலும், அவரது நூல்கள் பொதுவுடமை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், எவர் ஒருவரோ அல்லது எந்த ஒரு இயக்கமோ, சங்கமோ உண்மையாகவே பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினால் அவரது நூல்களில் எவ்வித திருத்தங்களும் செய்யாமல் உங்கள் சங்கத்தின் பெயரையோ உங்கள் இயக்கத்தின் பெயரையோ தனி நபரின் பெயரையோ உங்கள் நிறுவனத்தின் பெயரையோ பதிவிட்டு அல்லது நீங்கள் விரும்பும் பெயரிலோ நூல்களை வெளியிட்டு, பெயரளவிளோ இலாபத்திற்கோ விற்பனை செய்து பொதுமக்களுக்கு உண்மையான சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். குறைந்த பட்சம் முதல் நூலை மட்டுமாவது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்களை படிக்க வைத்தால் போதும். மிக எளிதாக தெளிந்துவிடுவார்கள்.

🛑பேராசிரியர் சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களின் கைது குறித்து வருந்துவோருக்கு அவரது இரண்டாவது நூலான (ஜாமீன்) பிணை எடுப்பது எப்படி..? என்னும் நூலில் இருந்து, அவரை 2003ல் கைது செய்த உண்மைசம்பவம் குறித்த, பக்கம் 32 முதல் 55 வரை மட்டும் படித்துப்பாருங்கள். இன்று 24 பக்கத்தை படித்தவர்கள் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், நிதிபதியே பயந்து தப்பித்து, ஆட்டோவில் ஏறி தலைதெறிக்க ஓடவைத்த சம்பவமாகும்.

நீ வாழ நீயே வாதாடு
வக்கீழ் பொய்யனை நம்பாதே

Click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

11 Dec, 01:31


சட்ட ஆராய்ச்சியாளர், சட்டத்தை பொதுமக்கள் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டியவர், எழுத்துக்கூட்டி எழுத படிக்க தெரிந்தாலே போதும், நம்பக்கம் நியாயம் இருந்தால் போதும், வக்கீழை நம்பாமல் தன் வழக்கில் தானே வாதாடலாம் என்று பல பேரை வாதாட வைத்தவர் வாரண்ட்பாலா அவர்கள் கைது:
ஏன்..?

சட்டமெனும் சாட்டை

04 Dec, 01:20


பதிவு:62
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி?
👊👊👊👊👊👊
🌹 பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள்.

🌹ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி மாதிரி,
ஒருவர் மீது ஒருவரின் புகார் வந்தால் காவலர்களுக்கு கொண்டாட்டம்தான். புகார் அளித்த இரு தரப்பினருக்குமே திண்டாட்டம்தான்.
ஏனென்றால், ஒவ்வொருவரின் புகாரை ஆதாரமாக வைத்தே மற்ற புகார்தாரரை மிரட்டி இருவரிடம் இருந்தும் ஒட்டு மொத்தமாக லட்சக் கணக்கில் கூட லஞ்சம் வாங்கி விடுவார்கள். எனவே புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல.

🌹பொய் வழக்கில் சிக்கி கொண்டவர்கள் பெரும்பாலும், வழக்கு அல்லது குற்றச்சாற்று பொய் என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அலைய வேண்டியிருக்கிறது என்று கூறி ஆதங்கப்படுவார்கள்.
ஆதங்கப்படுவதால் எந்த ஆதாயமும் இல்லை.

🌹கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி. இதேபோல் எந்த ஒரு வழக்கிலும் தீர விசாரிப்பது என்பது, குறுக்கு விசாரணைதான். எனவே, உங்களிடம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ள ஆவணம் அல்லது ஆதாரம் அல்லது சாட்சிதான் மிகச்சரியானது என்பதை இந்திய சாட்சிய சட்டம் 1872இன் உறுபு 145இன் கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணையில் சாட்சியை முரண்படுத்தி உங்கள் தரப்பு என்னவோ அதை நிலை நிறுத்த வேண்டும். இது ரொம்ப சுலபமான வேலைங்க.

🌹அப்போது மட்டும்தான் வழக்கிலிருந்து வாழ்வு கிடைக்கும். அவ்வாழ்வு மறுவாழ்வாக இருக்கும். ஒருவேளை அப்படி முரண்படுத்தவில்லை என்றால், சிறைவாழ்வு அல்லது சில்லரை வாழ்வு என்பது நிச்சயம்.

🌹 எந்த வகையான பொய் வழக்கு வருவதாக இருந்தாலும் அவ்வழக்கில் மிக, மிகத்துல்லியமான உண்மை நிலையை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கூறி விட்டு, இதில் சொல்லி உள்ள சங்கதிகளை மெய்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் பொய்ப்பிக்க தயாராக இருந்தால் வழக்கை தொடருங்கள் என தார்மீக அனுமதி அளிக்கலாம். இந்த வகையில் எழுதப்படும் ஒரு கடிதம் எவர் ஒருவரையும் கண்டிப்பாக சிந்திக்க வைக்கும் என்பது எனது கடந்த கால அனுபவங்கள்.

🌹ஆம்! முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் செயலாளரான பி.எம். நாயர் மற்றும் ஒரு சில நீதிபதிகள் உட்பட பலருக்கும் கூட இப்படி கடிதம் எழுதி அவர்களின் மிரட்டலான மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை தவிர்த்துள்ளேன்.

🌹  உண்மை நிலையை எடுத்துக்கூறும் போது, அது மிக மிக துல்லியமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் எதிர் தரப்பினரும், உங்களின் துல்லியமான உண்மையை எடைப்போட்டு பார்த்து அதற்கு மதிப்பளித்து பொய்யான நடவடிக்கையைத் தவிர்ப்பார்கள். ஏதோ ஒரு சில பொய்தானே சொல்கிறோம் என்று எதிர்தரப்புக்கு பொய் என்று நன்றாகவே தெரிந்த ஒரு சங்கதியை சொன்னீர்கள் என்றால், பொய் சொல்பவனிடம் பொய் சொல்வதில் தப்பில்லை எனக்கருதி அதற்கு பதிலாக அவர் கூடுதலாக பொய்யைச் சொல்லுவார். இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் நீங்கள் மீண்டும் கூடுதலாக பொய் சொல்ல நேரிடும். இப்படி பொய் சொல்வதால் பிரச்சினை பெரிதாகி கொண்டு போகுமே தவிர தீர்வு எதுவும் கிடைக்காது.

🌹எல்லாம் சரிதான். நான் உண்மையே சொல்லியும் கூட பொய்யாக வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது..? வக்கீழ நம்பாம நாமலே வாதாடுறப்போ, வெட்டியா வாய்தா வாங்கி அலையவைத்தால் என்ன செய்வது என்பதுதானே உங்களின் அடுத்த கேள்வி? இதற்கான பதிலும் நமது நீதியைத்தேடி நூல்களில் இருந்தாலும் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.

🌹 நூலக உதவிக்கு பதிவு 28 மற்றும் 36ஐ படிக்கவும்.

நீ வாழ நீயே வாதாடு
வக்கீழை நம்பாதே

கீழ்க்கண்ட இணைப்பைத் தொட்டு நமது சேனலில் இணைந்து இன்னும் அதிக விழிப்புணர்வு பெறுங்கள்.
💎💎💎💎💎💎
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

04 Dec, 01:19


மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் வாரண்ட் பாலா எழுதிய நீதியைத் தேடி வரிசையில்
சட்ட அறிவுக்களஞ்சியம்
என்னும் மூன்றாவது நூலிலிருந்து உங்களின் புரிதலுக்காக சில வரிகள்.

இவரது ஏழு நூல்களும் சட்ட நூல்கள் அல்ல. சட்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவுரை.

திருக்குறளை நேரடியாக படித்தால் யாருக்கும் புரியாது. ஆனால், அதன் தெளிவுரை அனைவருக்கும் புரியும் அல்லவா..!

அதுபோல, இவரது ஏழு நூல்களையும் படிக்கும் பொழுது, அடிப்படை சட்ட நூல்கள் ஐந்தையும் துணை கொண்டு ஒப்பிட்டு படித்தால், முதல் முறையிலேயே தெளிவாக புரிவதோடு, உங்கள் எதிர் தரப்பையும் எதிர் தரப்பு வக்கீழையும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட விடலாம்.

அதற்கான ஒரே தகுதி உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் அவ்வளவே..

அடிப்படை சட்ட நூல்கள் ஐந்து. அது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன்.
👇👇👇👇👇👇

சட்டமெனும் சாட்டை

20 Nov, 01:16


பதிவு:61
பொய்யான உரிமையியல் பிரச்சினையில் சுளுக்கெடுப்பது எப்படி?

இரண்டு நபர்கள் ஓர் இடத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்கள் எனில் அவர்களில் யார் பெயரில் அந்த இடத்திற்குரிய பத்திரம் அல்லது பட்டா போன்ற ஆவணங்கள் இருக்கிறது என்பதை சரி பார்த்தாலே வழக்கு பிரச்சினை முடிந்து விட்டது.

ஒரு வேளை இரண்டு நபர்களும் அவரவர்கள் பெயரில் சான்றாவணம் வைத்திருந்தால் அது ஒன்று அவர்களில் ஒருவரால் போலியாக தயாரிக்கப்பட்டது அல்லது அவர்களில் ஒருவரால் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து போலியாக பெறப்பட்டது என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது.

போலியானதா என்பதைக் கண்டு பிடிக்க ஒன்று தடைய அறிவியல் துறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது இது தொடர்பாக அரசின் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களைக் கொண்டு வரச்செய்து ஆய்வு செய்தால் தெரிந்து விட போகிறது. இதை கண்டுபிடிக்க எதுக்கு பல ஆண்டுகள். இப்படி கண்டு பிடிக்கப்பட்ட பின் யாருக்கு உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்புச் செய்வதோடு சரி.

போலியான ஆவணத்தை தயாரித்ததன் மூலம் அல்லது லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு போலியான ஆவணத்தை உருவாக்கி தந்த அரசு ஊழியரை போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாற்றுகளுக்காக சுளுக்கெடுக்க வேண்டாமா? அப்படி எடுத்தால் தானே தவறான உரிமை வழக்கை கொண்டு வருபவர்களுக்கு பயம் வரும்?

ஆனால், இதை இதுவரை இந்தியாவில் எந்த நீதிபதிகளாவது செய்திருக்கிறார்களா? அல்லது எந்த வக்கீழ் பொய்யர்களாவது கேட்டிருக்கிறார்களா..? இல்லியே! ஏன்? சுளுக்கெடுக்க சட்டம் தெரியவில்லையா அல்லது விரும்பவில்லையா?

இதையெல்லாம் வக்கீழ் பொய்யர்களை நம்பாமல் உங்கள் வழக்கில் நீங்களே வாதாடும் போது மட்டும்தான் கேட்க முடியும், சாத்தியப்படுத்த முடியும். இதனைச் செய்யாமல் எங்கள் வக்கீழ் நல்லவரு என்று கூறிக்கொண்டு, வக்கீழ் பொய்யர்களை நம்பினால் உங்கள் பணமும், காலமும் விரையமாவது உறுதி. இதையெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. உங்களின் கடந்தகால அனுபவத்திலேயே உணர்ந்திருக்கலாம்.

மேற்கண்ட தகவல் மிகவும் சிறியதாக சாதாரணமாக தெரிந்தாலும் வருடக் கணக்கில் வழக்கோடு வாழ்ந்தவர்களுக்கே இதன் அருமை புரியும்.

இதை எல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலும். வக்கீழ் பொய்யர்களுக்கு தெரிந்தாலும் செய்துதரமாட்டார்கள். செய்து கொடுத்தால் வழக்கு முடிந்துவிடும். வருமானம் போய்விடும். அது உங்கள் உற்ற உறவாகவே இருந்தாலும் அப்படித்தான்.

இன்னும் ஒரு சில வக்கீழ் பொய்யர்கள் தன் உறவுகளிடம் ஒரு படி மேலே சென்று, எனக்கு பீஸ் எதுவும் வேண்டாம், கோர்ட் செலவுக்கு மட்டும் ஐந்தாயிரம் குடுங்க, ஐம்பதாயிரம் குடுங்க என்று சூழ்நிலைக்கேற்ப உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். மொத்தத்தில் காலங்கடத்துவதும், உங்கள் தலையில் மிளகாய் அரைப்பதும் மட்டுமே இவர்கள் வேலை.

இப்ப சொல்லுங்க உங்க வக்கீழ் நல்லவரா..?

நீ வாழ நீயே வாதாடு..!!
வக்கீழை நம்பாதே..!

இன்னும் விளக்கமாக எழுதலாம் என்றாலும் ஒரே மெசேஜில் அவ்வளவையும் சொல்ல முடியாது அல்லவா..!

அதிக தகவலுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நம்பாமல், கீழ்க்கண்ட இணைப்பைத் தொட்டு தொடர்ந்து நமது சேனலில் இணைந்திருங்கள்.
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

20 Nov, 01:15


மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் பேராசிரியர் வாரண்ட் பாலா அவர்கள் எழுதிய நீதியைத் தேடி வரிசையில் இரண்டாவதாக வெளிவந்த
பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?
என்ற நூலில் இருந்து சில வரிகள்..
உங்களின் புரிதலுக்காக..

சட்டமெனும் சாட்டை

17 Nov, 00:42


32 வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளிவந்த நளினி குறித்து நீதியை தேடி இரண்டாவது நூலான பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி என்ற நூலில்  எழுதப்பட்டிருந்த தகவல்கள் இது:

ஆயுள் தண்டனையும் அதன் அற்பங்களும்

மரண தண்டனைக்கு அடுத்து மிகக்கடுமையான தண்டனையாக கருதப்படுவது ஆயுள் தண்டனையாகும்.

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது என்பதல்ல. 14வருடங்கள் மட்டுமே சிறையில் வைத்திருப்பதாகும்.

ஆனால், இதில் பல குழப்பங்களை உச்சநீதிமன்றமே செய்து, பல பேரை 14 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாக சிறை நிருவாகமும், அரசும் சிறையில் வைத்துள்ளதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.

குற்ற விசாரணை முறை விதி 31(2)(அ) மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 55-இன் படி எவர் ஒருவரையும் 14ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்க முடியாது என்று சட்டவிதி தெளிவாக இருந்தாலும் அதை செயலாக்கம் செய்ய வேண்டியவர்கள் தெளிவாக இல்லை.

இந்த தெளிவின்மைக்கு காரணமாக நான் கருதுவது நீதிபதிகள் தங்களின் பெயர் பத்திரிகைகளில் பரப்பரப்பாக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு அறிவிக்கும் பரபரப்பு தீர்ப்புதான். அந்த அளவிற்க்கு தீர்ப்பு என்ற பெயரில் குண்டக்க மண்டக்க எட்டு ஆயுள்,நூற்று பதினேழு வருடங்கள் என தண்டனையை வழங்கி பல நபர்களை பீதிக்கும் பேதிக்கும் ஆளாக்கி தங்களை வெளிப்படுத்தி கொள்கின்றனர்.

பதினான்கு வருட சிறை தண்டனை முடிந்து பல பேர் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் உங்களுக்கு தெரிந்த நபர்களாக சொல்ல வேண்டும் என்றால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் சோனியா காந்தியின் பரிந்துரையை ஏற்று ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட மொட்டை தலை முருகன் மற்றும் அவரின் மனைவி நளினி ஆகியோர் 1991ஆம் ஆண்டு முதல் இது வரையிலும் கூட சிறையில்தான் இருந்து வருகிறார்கள். இது குறித்து தினசரிகளில் செய்தி வெளியாகி இருந்தது கண்டு, சிறைத்துறை இயக்குநருக்கு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டத்தின் உறுபு 76-இன் கீழ், எந்த அதிகாரத்தின் கீழ் 14வருடங்கள் முடிந்தும் சிறையில் வைத்துள்ளீர்கள் என சான்று நகல் கோரி நான் அனுப்பிய மனுவிற்கு இதுவரை பதில் இல்லை.

பதில் இல்லை என்றால் என்ன அர்த்தம். சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சிறையில் வைத்திருக்கவில்லை என்பதுதானே.

மன்னிப்பு என்ற பெயரில் தண்டனையை சட்டப்படி குறைத்து விட்டு சட்டத்துக்கு புறம்பாக அவர்களை சிறையில் வைத்திருப்பதற்கு பதிலாக மரண தண்டனையையே அவர்களுக்கு நிறைவேற்றி இருக்கலாம்.

இவர்களை அரசும், உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் கூட கண்டு கொள்ளவில்லை. சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதில் சட்டத்தை இயற்றியவர்களும், செயல்படுத்துபவர்களும், இவை சரியா என சரி பார்த்து நீதி வழங்க வேண்டியவர்களும்தான் என்பதற்கு இப்படி பல ஆதாரச்சான்றுகள் உள்ளன.

வட மாநிலத்தை சேர்ந்த தனஞ்செய் சட்டர்ஜி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் மீது சிறுமி ஒருத்தியை பாலியல் பலாத்தகாரம் செய்து கொலை செய்ததற்கான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சுமார் பதினான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது இந்திய அரசமைப்பு கோட்பாடு 20(1)-க்கு புறம்பானது. இக்கோட்பாட்டின் படி ,சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒரு தண்டனையை மட்டும்தான் வழங்க வேண்டும். இதன்படி அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குள் ஆயுள் தண்டனையை முடிக்கும் காலத்தை நெருங்கி விட்டார். இந்த கணக்கீடுகளை எல்லாம் யாரும் பார்ப்பது கிடையாது.

மரணதண்டனையை மிக குறைந்த சிறைக்காவலில் இருக்கும் போதே நிறைவேற்றும் அளவிற்க்கு உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை விசாரணையை துரிதப்படுத்தியும், இதேபோல் கருணை மனுக்களை விரைவாக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மிக விரைவில் பரிசீலனை செய்து முடிவெடுக்க தேவையான சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டியது ஜனநாாகத்தின் கடமை.

பின்குறிப்பு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காக கடிதம் எழுதுகிறேன் போராடுகிறேன் என்றும் இன்னும் சிலர் பெருமைக்கு எருமை மேய்க்கும் விதமாக மைக்கை பிடித்து தொண்டை கிழிய கத்தியோ என்ன பயன்..?

மேற்கண்ட சட்ட விதிகளையும், விளக்கத்தை குறிப்பிட்டு குரல் கொடுத்திருந்தாலோ, சட்டப்படி போராடி இருந்தாலோ,  எப்பொழுதோ இவர்களது விடுதலை நிறைவேறி இருக்கும்.

நாம் நினைப்பதற்கு மேலாகவே சட்டம் சிறப்பாகத்தான் உள்ளது. நாம் தான் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

எந்த ஒரு
அரசியல் வியாதிக்கும்,
எந்த ஒரு நிதிபதிக்கும்,
எந்த ஒரு வக்கீழுக்கும்,
எந்த ஒரு அரசூழியருக்கும்
சட்டம் தெரியாது
என்று நீதியைத் தேடி நூல்களில் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப மேற்கண்ட சம்பவமும் மிகச்சிறந்த அத்தாட்சி.
Click and join
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

11 Nov, 16:14


வாசகர்களுக்கான முக்கிய அ(ற,றி)வுரைகள்!

சட்டங் குறித்த பல்வேறு விதமான கற்பனைகளுடனும், அறிவுடனும், இந்தநூல்களை வாசிக்க முற்படும் முன், உங்களுக்கு சட்டங்குறித்து, ஏற்கெனவே இருக்கும் கருத்துக்களை எல்லாம் சற்றே புறந்தள்ளி விட்டு வாசிக்கவும். அப்போதுதான் சரியான சட்டப்புரிதலைப் பெற முடியும் என்பதை சொல்ல வேண்டியது என் கடமை என்பதால், வாசிக்க ஆரம்பிக்கும் முன்பே சொல்கிறேன்.

நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் நோக்கம், நம் சமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று, எந்தவொரு பிரச்சினையும் இல்லாத வாழ்க்கையை வாழவேண்டுமென வழிகாட்டுவதும் இப்படி வாழும்போது வரும் சட்டப் பிரச்சினைகளை தக்க வழியில் எதிர் கொள்வதுமே ஆகும்.

ஆகையால், இதனை உங்களின் வாரிசுகளுக்குத் தவறாமல் சொல்லிக் கொடுங்கள். ஏனெனில், ஓர் அரசூழியர் ஓய்வு பெற்றுவிட்டால், பின் அந்த ஊழியத்தைப் பார்க்க வேறொரு ஊழியர் நியமிக்கப்படுவதைப்போல, நம் வழக்கு களைக்கவனிக்க, நம் குடும்பங்களில் அடுத்தடுத்துவாரிசுகள் இருப்பதில்லை.

அப்படியே வாரிசுகள் இருந்தாலுங்கூட, அவர்களுக்குக் பெற்றோர்கள் நடத்தும் வழக்குகளைப் பற்றித் தெரிவதும் இல்லை. ஆகையால், அம்போவென விட்டு விடுகிறார்கள். இதனாலும், நாசமாகி நடுத்தெருவுக்குப் போன குடும்பங்கள் ஏராளம்.

ஆகையால், உங்களுக்கு அடுத்தபடியாக அந்த வழக்கை யார் நடத்த வேண்டுமோ, அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் சொத்துக்காக கொலை செய்தால், இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி வாரிசு உரிமையே பறிபோய்விடும் என்பன உள்ளிட்ட பல சட்டப் புரிதல்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும். இதனால், அவர்களும் குற்றம் புரிய மாட்டார்கள். நீங்களும்
உயிர் தப்பலாம்!
👁👁👁👁👁👁

நியாயந்தான் சட்டம்!

🫵உங்களில் பலருக்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற கோபம் இருக்கலாம்.

உங்களுக்கு சட்டத்தின் மீது என்ன மாதிரியான கோபம் இருந்தாலும், அதெல்லாம் உங்களின் சட்ட அறியாமையைப் பயன்படுத்தி,சட்டத்தை கையாள்பவர்கள் தங்களிடம் செய்த கையாடல்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

ஏனெனில்,சட்டத்தின் உண்மை நிலையே வேறு என்பது உங்களுக்குதெரியவில்லை.

அதாவது, நீங்கள் நியாயப்படி சட்டம் இப்படித்தானே இருக்க வேண்டுமென நினைத்தால், நிச்சயமாக சட்டம் அப்படியேதான் இருக்கிறது என்று சொல்வதைவிட நாம் நினைப்பதற்கு மாறாக ஒருபடி மேலாகவே இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.
(ஆனால், நாம்தான் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை.)

இதனை ஒவ்வொரு நூலைப்படிக்கும்போதும், நீங்களும் நிச்சயம் உணர்வீர்கள்.

ஆமாம், என்னுடைய பதினெட்டு வருட சட்ட ஆராய்ச்சி அனுபவத்தில் ஒவ்வொரு சட்ட விதியையும் படித்து, அது பற்றி ஆராய்ந்த போது வியந்து இருக்கிறேன்.இந்த வியப்புகள், இன்றுங்கூட என்னை விட்டு விலகவில்லை..

🫵நீங்களும் குறைந்தபட்சம் முதல்நூலை ஒருமுறையாவது வாசித்தால்தான் முழுவதுமாக புரியும்..
Click and join
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

11 Nov, 16:13


நீங்கள் படிக்க வேண்டிய நீதியைத்தேடி நூல்கள் வரிசையில் வாரண்ட் பாலாவின் முதல்நூல்
குற்றவிசாரணைகள்..
அதிலிருந்து சில வரிகள் உங்களுக்காக...
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

06 Nov, 00:30


பதிவு:60
part:2
மனிதவுரிமைமீறலா..?

மனிதவுரிமை மீறல்கள் குறித்து புகாரளித்து, நிவாரணம் பெற்றவரைப் பார்ப்பது, அரிதிலும் அரிது.

ஆனால், விழுப்புரத்தைச் சேர்ந்த, மனிதவுரிமை ஆர்வலர் தமிழ்வேங்கை என்பவர், காவலூழியர் மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை, எங்களது ஊழியர் மீது, எங்களிடமே புகார் அளிக்கிறாயா எனப் புகாரை பதிவுசெய்ய மறுத்து வசைபாடியதால், அவ்வுயர்மட்ட ஊழியர்கள் மீது, மனிதவுரிமை வழக்கைத் தொடுத்து ரூபாய் ஐம்பதாயிரத்தை நஷ்ட ஈடாக, அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.

இத்தொகையை, அவ்வூழியர்களின் ஊதியத்தில் இருந்தும் பிடிக்கவேண்டுமென்பதும், மனிதவுரிமை ஆணையத்தின் பரிந்துரை.

உண்மையான புகாரைப் பதிவுசெய்ய மறுத்து, வாய்மொழி மிரட்டல் விடுத்த மனிதவுரிமை மீறலுக்கே ரூபாய் ஐம்பதாயிரம் இழப்பீடு என்றால், அற்பப்பணத்துக்காக அல்லது தனது அதிகாரப் பலத்தைக் காட்டுவதற்காக, உரிமையைத் தவறாகப் பயன்படுத்திப் பொய் வழக்குப்போட்டு, அடித்தும் துன்புறுத்தியும், தேவைப்பட்டால் கொலையுங்கூடச் செய்யும் காவலூழியர்கள் எவ்வளவு இழப்பீட்டைக் கொடுக்க வேண்டியிருக்கும் என கணக்கிட்டுப் பாருங்கள்.

மேலும், தங்களின் சுய நலனுக்காக அயோக்கிய அரசூழியர்கள், பல்வேறு விதங்களில் சட்டத்தை மீறிச் செயல்பட்டு, மனித உரிமைமீறலை ஏற்படுத்தும் தன்மைக்கேற்ப, எவ்வளவு இழப்பீடுகளை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் கணக்கிட்டுப்பாருங்கள்.


மனிதவுரிமை மீறலுக்கான மநு!

மனிதவுரிமை பாதுகாப்புச் சட்டம் 1993இன் பிரிவு 36(2), தேசிய மனிதவுரிமை ஆணைய விதிகள் 1994 இன்விதி 8(1)(அ) மற்றும் தமிழ்நாடு மாநில மனிதவுரிமை ஆணைய ஒழுங்கு முறை விதிகள் 1997இன் விதி 9(3) இன்படி, மனிதவுரிமை மீறல் சம்பவம் நடந்ததிலிருந்து ஓராண்டுக்குள், அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கோரும் மநுவைத் தாக்கல் செய்துவிட வேண்டும்.

உரிமை மீறல் குறித்த புகாரை வேறு எங்கும் புகார் செய்திருக்கக் கூடாது அப்படி செய்திருந்தால் மனித உரிமைகள் ஆணையம் புகாரை ஏற்காமல் நிராகரித்து விடும். எச்சரிக்கை...

இதனை மனிதவுரிமை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யலாம். மனிதவுரிமை நீதிமன்றம் என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தையே குறிக்கும். அதாவது DISTRICT SESSIONS COURT.

நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா இந்த மனுவை எப்படி எழுதுவதென்று கேட்கிறீர்களா..? அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்கோ. நேரா
அரசு பொது நூலகத்துக்கு போயி மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியோட வாரண்ட்பாலா எழுதின ஏழாவது நூலான மநுவரையுங்கலை அப்படிங்கற நூலை எடுத்து படிச்சு பாருங்க.
கேடுகெட்ட வக்கீல் பொய்யர்களையும், தறுதலைச்சட்டமாம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் நம்பாமல் எல்லாவிதமான வழக்குலேயும் பின்னி பெடலெடுக்குற அளவுக்கு நீங்களே டான் ஆயிடுவீங்க.

ஒரு வழக்கை திறமையாக எதிர்கொள்ள 30விதிகூட தேவைப்படாது. ஆனாலும் ஏழு நூல்களையும் வரிசையாக படித்தால்தான் தெளிவான புரிதல் கிடைக்கும் என்பது எங்கள் ப(பு)ரிந்துரை.

தற்சமயம் இக்கட்டான சூழ்நிலையில் நூல்கள் விலைக்கு கிடைக்காவிட்டால் நகல் எடுத்தாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நூலக உதவிக்காக நமது பதிவு 28,36ஐ பயன்படுத்திக்கோங்க.

சட்டம் சொல்லித்தறுகிறேன், சட்ட விழிப்புணர்வு என்கிற பெயரில் கண்ட குப்பைகளை அனுப்பி உங்கள் நேரத்தை விரயமாக்காமல், நமது டெலகிராம் சேனலில் வாரம் ஒரு தகவல் மட்டுமே வரும்.

கீழ்கண்ட இணைப்பைத் தொட்டு நமது டெலகிராம் சேனலில் இணைந்து இன்னும் அதிக விழிப்புணர்வு பெறுங்கள்..
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

06 Nov, 00:29


ஹீலர் பாஸ்கர் பரிந்துரைத்த, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட்பாலா அவர்கள் எழுதி, நாட்டிற்கு பொதுவுடைமையாக அறிவிக்கப்பட்ட ஏழாவது நூலான மநு வரையுங்கலை என்னும் நூலிலிருந்து பக்கம் 518லிருந்து தேவைக்கேற்ப சுருக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இவரது நூல்களை யார் வேண்டுமானாலும் எழுத்துரு மாறாமல் மறுபதிப்பு செய்து விற்றுக்கொள்ளலாம்.
👇👇👇👇👇👇

சட்டமெனும் சாட்டை

28 Oct, 11:29


பதிவு:60/Part-1
இது ஒரு குஷியான விளையாட்டு..

இந்த மாதிரி ஒரு கே(கா)வலன் உங்ககிட்ட வம்புக்கு வந்தா என்ன பண்ணுவீங்க.. உடனே ஒரு வக்கீழ் பொய்யன் கிட்ட  போவீங்க..

ஆனா, மத்திய சட்ட அமைச்சகத்தின் உதவியோட வந்த நீதியை தேடி ஏழுநூல்களையும்  அரசு பொது நூலகத்துல படிச்ச நமது வாசகர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியுமா..? சூழ்நிலைக்கு தகுந்தவாறு தெளிவா சட்டம் பேச தெரிஞ்சா சட்டம் பேசியே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட விடுவாங்க..

நல்லா பேச தெரிஞ்சவங்களுக்கு ஓகே.. பேச வரலைன்னா என்ன பண்றதா..?
பேசத் தெரியாதவங்க இந்த மாதிரியான கேவலனுக்கு பயத்தை ஏற்படுத்தி பீதியில பேதிய கொடுக்கறதுல கில்லாடிங்க..!
எப்படின்னு கேக்குறீங்களா..?

சரி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சுருக்கமா சொல்றேன்...

அந்த கேவலன் வந்ததும் ஐயா சாமி தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லி எத்தனை பேப்பர்ல கையெழுத்து கேட்டாலும் போட்டு கொடுக்கணும். ஏன்னா நீங்க போட்ட கையெழுத்து இந்திய சாட்சிய சட்டம் 1872ன் உருபு 25,26இன்படி மற்றும் CRPC 1973/162 படி காவல் நிலையத்தில் கேவலரிடம் போட்டுக் கொடுக்கும் கையெழுத்துசெல்லாது. அதனால ஓராயிரம் கையெழுத்துகூட போடலாம் இல்லையா.!

அடுத்தது அந்த கேவலன் சந்தோசமா போனதுக்கப்புறம், இந்திய சாட்சிய சட்டம் 1872ன் உருபு 74ன் படி அவங்கிட்ட இருக்குற ஆவணம் எல்லாமே பொது ஆவணம். இதே சட்டத்தின் உருபு 76ன் கீழ் யார் வேணும்னாலும் சான்று நகல் கோரி பெறலாம்.

இதன்படி, உரிமையியல் வழக்கில் கேவலன் தலையிட எந்த சட்ட விதி அனுமதிக்கிறது என்ற கேள்வி கேட்டும், தங்களிடம் கையெழுத்து வாங்கிச் சென்ற காகிதத்தின் நகல் கேட்டும், மேலும் உங்களை ஏதேனும்  திட்டி இருந்தால், எந்த விதிப்படி திட்டுன என கேட்டு வரிசையாக எழுதி மனு அனுப்பி, அதன் நகலை உயரிய சட்ட நடவடிக்கைக்காக என்று எழுதி அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும்,  மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கும் சமர்ப்பித்தால் போதும். இந்த விபரத்தையும் அந்த மனுவிலேயே குறிப்பிட வேண்டும். குறிப்பாக பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும். அவ்வளவுதான் கேவலனுக்கு பீதியில் பேதியாக விடும். பதில் வராது.

அப்படியே விளையாட்டின் அடுத்த கட்டம் தொடங்கலாம். அது எப்பிடி..?
அது ரொம்ப ஈஸிதான். நான் கொடுத்த மனுவுக்கு பதில் கொடுக்காம இருக்கியே பதில குடுங்கொய்யா என்று கேட்டு சாட்சிய சட்டம் 1872ன் உருபு 159ன் கீழ் நினைவூட்டல் மனு அனுப்பலாம். இதனையும் அனைவருக்கும் நகல் அனுப்ப வேண்டும். அப்பவும் பதில் வராது.

அடுத்த விளையாட்டு, அதுவும் ரொம்ப ரொம்ப ஈஸிதான். இந்திய சாட்சிய சட்டம் 1872ன் உருபு 101இன் கீழ் பதில் கொடுக்க பயமாக இருக்கிறதா.? என்று கேட்டும், பதில் கொடுக்காமல் இருக்க என்ன காரணம் என்று கேட்டும் தன்னிலை விளக்கம் கோரலாம். இப்பவும் பதில் வராது. எப்பிடி வரும். அதுக எல்லாம் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம இஞ்சி தின்ன குரங்குமாதிரி உக்காந்திருக்கும். இதே மனுவோடு அல்லது தனி மனுவாகவோ இந்திய தண்டனைச் சட்டம் 1860இன் பிரிவு 499இன் கீழ் வஞ்சப்புகழ்ச்சி அணியிலோ அல்லது சூழ்நிலைக்கேற்ப நேரடியான வார்த்தைகளாலோ காரித்துப்பி வசைபாடி அர்ச்சனை செய்யலாம்.

மேற்கொண்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், உரிமையியல் விசாரணை முறைச்சட்ட 1908இன் விதி 80(2)இன் கீழ் நீங்களே அந்த கேவலனுக்கு 60நாள் அவகாசம் கொடுத்து, வக்கீழை நம்பாமல்  நீங்களே அறிவிப்பு அனுப்பி, தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே கடமையில் தவறியதை நிரூபித்து நஷ்ட ஈடு கோரலாம். இது கேவலனுக்கு மட்டுமல்ல அனைத்து அயோக்கிய அரசூழியர்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் பொழுதுபோக்காகவும், குஷியாகவும்  விளையாடுவதற்காக இத்தனை சட்டப்பிரிவுகளில் மனு வரைவது குறித்து தெரிவித்தேன். ஆனால், இவ்வளவும் தேவையில்லை.

மேற்கண்ட சூழ்நிலைகளில் எந்த சூழ்நிலையிலும் எந்த  அரசூழியனும் தங்களை சமாதானம் செய்ய காலில்கூட விழலாம்.

அல்லது கிறுக்குத்தனமாக மிரட்டுவதற்கு முயற்சிக்கலாம். அப்பொழுது மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மரணவாக்குமூலம் எழுதி அனுப்பி அதன் நகலை அந்த ஊழியனுக்கு அனுப்பலாம்.

இதனை செய்வதற்கு பதிவுத்தபால் செலவு மட்டும்தானே எழுத்து கூட உங்களுடையதே.

நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டே செய்ய வேண்டும்.

இதை செய்வதற்கு வக்கீழ் பொய்யர்களை நம்பக்கூடாது. நம்பினால் உங்கள் நியாயமும் உங்கள் பணமும் திருடப்படும்.

வக்கீல் என்றாலே திருடர்கள்தான்.

நீ வாழ நீயே வாதாடு
வக்கீழ் பொய்யனை நம்பாதே.

இது போன்ற அறிய பொக்கிஷங்களை நீதியைத் தேடி நூல்களை வரிசையாக மட்டுமே படித்து புரிந்து கொள்ள முடியும். அதற்கு நமது சேனலின் பதிவு 28,36ஐ படிக்க வேண்டும்.

கீழ்கண்ட இணைப்பைத் தொட்டு நமது சேனலில் இணைந்து இன்னும் அதிக விழிப்புணர்வு பெறலாம்.
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

28 Oct, 11:28


பதிவு:60
இது ஒரு குஷியான விளையாட்டு..!

போலீஸ்காரன் சேட்டை பண்ற வீடியோவ போட்டு இது ஒரு குஷியான விளையாட்டுன்னு சொல்றீங்களேன்னு என் மேல கோவப்படாதீங்க..
கீழ இருக்குற  தகவல படிங்க.. நீங்களும் குஷி ஆயிடுவீங்க....

கீழ இருக்குற  தகவல் மட்டும் இல்லீங்க.. இன்னும் நிறைய தகவல் இருக்கு.  அதுல ஒன்னு மட்டும் அடுத்த பதிவுல அதாவது part:2ல சொல்றேன்..

ஆனா, ஒன்னு மட்டும் உண்மை. நம்ம சேனல்ல வர தகவல பத்தி நீங்க எந்த வக்கீழ் பொய்யன் கிட்ட  வேணாலும் கேளுங்க. இது இல்ல, அது இல்ல, அது எப்புடி? இது இப்புடி.? அது சரியா வராது..! நீங்க போனா மாட்டிக்குவிங்க..  அப்படி, இப்படின்னு உங்களை குழப்புவாய்ங்க..

சந்தேகம் இருந்தா நீங்க கடவுளா மதிக்கிற வக்கீழ் பொய்யன்கிட்ட கேட்டுப்பாருங்க...

சட்டமெனும் சாட்டை

23 Oct, 16:41


தீபாவளி சமயத்துல இத பாக்கும் போது உங்களுக்கு என்ன தோணுது..?

சாதாரண ஒரு கூலித் தொழிலாளியை விட சுமார் ஐந்து மடங்குக்கு மேல சம்பளம் வாங்குற அயோக்கிய அரசூழியன், நம்ம வரிப்பணத்துல அரசாங்கம் கொடுத்த அந்தப்படி, இந்தப்படி, அப்பிடி, இப்பிடின்னு எல்லாப்படியும் பத்தாம ஈவு இரக்கம் பாக்காம
சாதாரண பொதுமக்கள்கிட்ட கைய நீட்டுறது எவ்ளோ பிச்சக்காரத்தனம்.
மறைமுகமான மிரட்டல்னுகூட சொல்லலாமே..

மத்திய அரசு ஊழியன் தபால்காரன் முதல் மாநில அரசு ஊழியன் துப்புரவாளன், தண்ணீர் விடுபவன், மின்சாரவாரிய ஊழியன், காவல்துறை வரை, இன்னும் ஏதேதோ துறைகளெல்லாம் தீபாவளி வந்துட்டாலே வீடு வீடா, கடை கடையா வந்து கையை நீட்டுறாய்ங்களே, இவிங்கள சட்டப்படியோ, சம்பிரதாயப்படியோ, நியாயப்படியோ, தர்மப்படியோ,
கேடுகெட்ட பிச்சைக்கார அரசூழியன் என்று ஏன் சொல்லக்கூடாது..?
Click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

16 Oct, 01:33


பதிவு:59
பொய்யர்களை தெறிக்கவிடலாமா..?
😜😜😜😜😜😜
வக்கீழ்களுக்கெல்லாம், நாமெல்லாம் பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம்.

இவர்களால் ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது என்பது நமக்குத்தானே நன்றாகத் தெரியும்!

சட்டம் தெரியாவர்களிடம் லாடுலபக்கு தாசு போலப் பேசும், வக்கீழ் புளுகர்கள், நம்மைப் போன்று சட்ட விழிப்பறிவுணர்வு உள்ளவர்களிடம் பயந்து கழிவார்கள் என்பதற்கு நம் வாசகர் ஒருவர் வழக்கு நடத்தி நமக்கனுப்பிய நல்லதொரு உண்மைச் செய்தியை சொல்லலாம்👇.

அரசுத்துறைகளில் அச்சத்தையும்,
காவல்துறைக்கு கலக்கத்தையும்,
நீதித்துறைக்கு நிலநடுக்கத்தையும் இதுவரை கொடுத்துக் கொண்டிருந்தும் கூட அவர்கள் என்னை எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்த முடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?

மத்திய நீதி அமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் ஒப்புதலின்படி
நீதியைத்தேடி..
நீங்களும்  நீதிமன்றத்தில் வாதாடலாம்
என்ற ஏழுநூல்களை எழுதி நூலகங்கள், சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களுக்கு வழங்கி சட்டப் புரட்சி செய்து கொண்டிருக்கும் சட்டஆராய்ச்சியாளர் திரு.வாரண்ட்பாலா அவர்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய சட்ட புத்தகத்தின் மூலம் சட்டத்தில் சம நோக்குடைய சட்டம் எது என ஆராய்ந்து அவர் பயன்படுத்தியதை  போன்று சட்டத்தை எப்படி எல்லாம் நியாயமாக பயன்படுத்த முடியுமோ அப்படியே  நானும்  பயன்படுத்தினேன்.
அதன் விளைவு?

எனக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்  நானே ஆஜராகியதால் எனக்கு எதிரான ஆறு விபச்சார வக்கீழ் பொய்யர்களை எனது வழக்கிலிருந்து ஓடஓட விரட்டி இறுதியில்  வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தேன்.

ஆமாம், எனக்கு எதிரான ஜீவனாம்ச வழக்கு எண் M.C.No:31 / 2017. குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இராமநாதபுரம் மாவட்டம்.

அண்ணன் திரு.வாரண்ட்பாலா அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்!!! சுருளிகுமார். ராமநாதபுரம்.

இவரது மனைவி இராதா ஜீவனாம்சம் கேட்டு வக்கீழ் பொய்யர்களை வைத்து வழக்கு தாக்கல் செய்கிறாள். பொய்யர்கள் என்றால், நான்கு பொய்யர்கள். இவர்கள் தாக்கல் செய்த வக்காலத்து நாமா அல்ல, இவரது மனைவி ராதாவுக்கு, நான்கு வக்கீழ் பொய்யர்களும் சேர்ந்துப் போட்ட பட்டை நாமம்.

அந்த வக்காலத்தில் உள்ள நாமத்தை வார்த்தைக்கு வார்த்தை படித்தால், வக்கீழ்களுக்கு கூலியோடு வழக்கை கொடுத்த முதலாளி, வக்கீழின்  பேச்சைக் கேட்டுக் கொண்டும், அவன் எது செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டும் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று அமலில் உள்ள அனைத்து சட்ட விதிகளுக்கும் விரோதமாக எழுதப்பட்டிருப்பது விளங்கும்.

இதனை வக்கீழ்களுக்கு வழக்காளிகள் எழுதித்தரும் கொத்தடிமை சாசனம் என்று சொல்லுவதே மிகச் சரியானதாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம்,
சிங்கம் சிங்கிலாகத்தான் போகும், பன்றிகள் பத்தாகவேத்தான் போகும்
என்பதுபோல, ஒரு வழக்காளிக்காக ஒரு வழக்கில் ஆஜராக ஒன்றுக்கும் மேற்பட்ட வக்கீழ் பொய்யர்கள் சேர்ந்தே வக்காலத்து என்னும் நாமத்தைப் போடுவார்கள்.

ஏனெனில், நாம் ஒன்றுக்கும் உதவாத வெளங்கா வெட்டி தறுதலைகள்  என்பது, அவர்கள் அத்தனை பேருக்குமே நன்றாகத் தெரியும். அப்பொய்யர்களுக்கு கூலி கொடுக்கும் உங்களுக்குத்தான் தெரியாது.

நமது நூல்களை படித்த சுருளிகுமார், அத்தனை விசாரணை தேதிகளிலும் தானே முன்னிலையாகி வாதாடி, பல்வேறு மனுக்களையும் தாக்கல் செய்தார்.

பொய்யர்களின் பிழைப்பை காலி செய்யும் வகையில் மனுவை தாக்கல் செய்ததால், வக்காலத்து நாமத்தை தாக்கல் செய்த நான்குப் பொய்யர்கள் இரண்டு கூட்டாளி பொய்யர்கள் என மொத்தம் ஆறு பொய்யர்களும் பயந்து கழிந்து வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

நம் நூல்களில் இருந்து படித்து தாக்கல் செய்த சங்கதிகளின் சுருக்கமிதுவே!👇

குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13இன்படி, குடும்ப நீதிமன்ற  வழக்குகளில் இந்திய குடும்பங்களின் நலன் கருதி அப்போது இந்திய குடியரசு தலைவர் ஜெயில் சிங் அவர்கள் தடை விதித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சட்டம்1961இன் பிரிவு 49 உட்பிரிவு(1,3)இன்படி,   இந்திய வழக்கறிஞர் அவை ஏற்றியுள்ள விதி 37இன்படி, தனது பெயரை பயன்படுத்தி மற்றவர்களை தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதற்கு எதிராக நான்கு பேரின் பெயரை வக்காலத்தில் போடுவதற்கு அவர்களுக்கு எந்த சட்டம் அனுமதித்தது?

நீதிமன்றம் எந்த  சட்ட விதியின் கீழ் இவர்களை வாதாட அனுமதித்தது?

ஏன் இவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது??
என்று கேள்வி கேட்டு மனுவை தாக்கல் செய்த மறு வாய்தாவில்  பொய்யர்கள் ஆஜராகாமல், முன்பே சொன்னபடி நாமம் போட்டு விட்டார்கள்.மனுதாரரான இவரது மனைவி இராதாவும் ஆஜராகவில்லை.

பொய்யர்களுக்கு ஆதரவாக நடந்தால் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் நிதிபதியும் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.
Click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

16 Oct, 01:33


பதிவு:59
பொய்யர்களை தெறிக்கவிடலாமா..?
🙈🙈🙈🙈🙈🙈
பார்த்து பழகின வீடியோதான் இருந்தாலும் கீழ இருக்குற தகவல படிச்சிட்டு அப்புறமா இந்த வீடியோவ பாருங்க..
உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி....

சட்டமெனும் சாட்டை

09 Oct, 00:40


பதிவு:58
குற்றம் நடைபெறுவதை தடுக்காத அரசு ஊழியருக்கு, நடைபெற்ற குற்றத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையில் பாதி தண்டனையாமே.!
உங்களுக்கு தெரியுமா.?

👊👊👊👊👊👊
நமக்கொரு பிரச்சினை என்றால், முதலில் காவல்நிலையத்திற்கே ஓடுகிறோம். இது முற்றிலுந்தவறு, நமக்குக் குற்றவியல் மற்றும் உரிமையியல் தொடர்பான எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், முதலில் நாம் அணுக வேண்டியது, தத்தமது கிராமத்தில் எந்நேரமும் வசிக்க வேண்டிய கிராமநிர்வாக ஊழியரைத்தானே தவிர, எங்கோ உள்ள காவலூழியர்களையன்று.

ஆமாம், குற்ற விசாரணை முறை விதி 36 இன்படி, காவல்  ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும், தான் ஊழியம் செய்யும் வட்டாரத்தில் குற்றம் எதுவும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு கிராமத்திலும் எந்த விதமான குற்றமும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய ஊழியப் பொறுப்பு அக்கிராம நிர்வாக ஊழியருடையது என, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் அத்தியாயம் 3, பிரிவு 2இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்கிராமத்தில் வசிக்கும் குடிமக்களுக்கும், இதில் பொறுப்புண்டு என்பதால்தான்,
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடை முறைநூல்
என பெயரிடப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இப்படிக் குற்றம் நடைபெறாமல் தடுக்கவேண்டிய அரசூழியர்கள், அதனைத் தடுக்காததன் விளைவாக இந்தியத் தண்டனைச் சட்டப்படி அல்லது வேறு தண்டனைச் சட்டப்படி நடந்துள்ள குற்றத்திற்காகக் குற்றமிழைத்த நபரைத் தண்டிக்கும் போது, இந்தியத் தண்டனைச் சட்டம் 1860இன் பிரிவு 119இன்படி, அக்குற்றத்தைத் தடுக்காது கடமை தவறிய அரசூழியருக்குக், குற்றவாளிக்கு விதிக்கும் அதிகபட்சத் தண்டனையில், பாதித் தண்டனையை கட்டாயம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.

அரசூழியர்களுக்கும், நிதிபதிகளுக்கும் இதனை எடுத்துச் சொன்னாலே, நமக்கெதற்கு வீண்வம்பு என அவரவர்களும் சட்டப்படிச் செய்யவேண்டிய வேலையைச் செய்து விடுவார்கள். இப்படியும் பற்பல ஊழியர்களை, வேலையைச் செய்ய வைத்திருக்கிறேன்.

ஆனால், எனக்குத் தெரிய இச்சட்டப்பிரிவின்படி, ஓர் அரசூழியருக்குக் கூடத் தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பதற்கு விபச்சாரத் தொழில் செய்யும் வக்கீழ் பொய்யர்களே மூலக்காரணம், எப்படி?

பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசூழியர்களை வழக்கில் சேர்த்துத் தண்டிக்க ஆரம்பித்து விட்டால், பின் பிரச்சினையே இல்லாமல் தமக்கு வருமானம் போய் விடுமே. பின் நம் நாறிய பிழைப்புக்கு எங்கே போவது என்பதற்காகவேதான், திட்டமிட்டு அரசூழியர்களை வழக்கு நடவடிக்கையில் சேர்க்காமலும், தீர்வு காணாமலும் வழக்கை வாழ்நாள் முழுவதும் இழுத்தடித்து, பெரியார் கூறிய ஈனப்பிறவிகள் தங்கள் நாறியப் பிழைப்பை நடத்துகிறார்கள்.


அரசூழியர்கள், வக்கீழ் பொய்யர்கள் மற்றும் நிதிபதிகள் என்றாலே, அசுரபலம் வாய்ந்தவர்கள் என்கிற அற்ப எண்ணம் சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத ஒவ்வொரு மக்களிடமும் நிறைந்திருக்கிறது.

இதனால், சட்டமென்பது நமக்குக் கட்டாயமன்று மக்களுக்கு மட்டுமே கட்டாயமென்று நினைக்கும் வக்கீழ் பொய்யர்கள், அரசு மற்றும் பொது ஊழியர்களைப் போல, மக்களாகிய நீங்களும் நினைக்கிறீர்கள்.

உங்களது பிரச்சினையைத் தூண்டி விட்டு, குற்றத்தைத் தடுக்க முயலாத மற்றும் பிரச்சினையைத் தீர்த்து வைக்காத ஊழியர்களை வழக்கு நடவடிக்கையில் சேர்க்காமலும், சிறையில் தள்ளி வேலையை இழக்கச் செய்யாமலும் விடுவதே மடத்தனம் என்றால்,

ஊழியத்தில் கடமை தவறி அரசூழியர்கள் செய்யும் குற்றங்களுக்கு, அவர்கள் மீது உயரிய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல், அயோக்கிய ஊழியர்களைக் காக்க,  கண்துடைப்புக்காகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோராமல், இவ்வெற்றுச் சம்பிரதாய நடவடிக்கையைத் துவக்குவதற்கு முன்பாகவே, தற்காலிகப் பணிநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டுமென்று, சமூக ஆர்வலர் என்கிற பெயரில் வெத்துவேட்டு ஆர்வக்கோளாருகள் ஆதரவுக்குரல் எழுப்புவது மடத்தனத்தின் உச்சகட்டம்.
நீங்க எப்படி?

இதையெல்லாம் உங்க சங்கமோ, வக்கீழ் போய்யரோ சொல்லித்தரவும் மாட்டாங்க, செஞ்சித்தரவும் மாட்டாங்க.. நீங்க கேட்டாலும் அது அப்படி, இது இப்படின்னு உங்களையே குழப்புவாங்க. சந்தேகமிருந்தா முயற்ச்சிபண்ணி பாருங்க. உதாரணத்துக்கு நம்ம சேனல்ல பதிவு 55ல இருக்குற இரண்டு பதிவையும் நல்லாபாருங்க.

நிறைய விளக்கம் வேணும்னா மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோட வெளிவந்த
நீ வாழ நீயே வாதாடு
நீதியைத்தேடி
ஏழு நூல்களையும் உங்க ஊர்
அரசு பொது நூலகத்துல
எடுத்து படிச்சி பாருங்க.  நூல் இல்லைன்னா மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுங்க. நம்ம நூல் உடனே கிடைச்சிடும். நூலக உதவிக்கு நமது சேனலின் பதிவு 28,36ஐ பயன்படுத்துங்கள்.

கீழ் கண்ட இணைப்பைத் தொட்டு நமது சேனலில் இணைந்து இன்னும் அதிக விழிப்புணர்வு பெறலாம்.
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

04 Oct, 07:15


தடுப்பூசி குறித்து திரும்ப திரும்ப  வலியுறுத்திய தாங்கள் தினமும் பார்க்கும், படிக்கும், கேட்கும் எந்த ஊடகமாவது இந்த தகவலை உங்களுக்கு பகிர்ந்ததா..?
👊👊👊👊👊👊

https://cowin-safevac.nhp.gov.in/home.html#beneficiary

கொரனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவுகளை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்ய முடியும்.

02.05.2022 தேதியிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ஒன்றிய அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளது.  இதனை பெரும்பான்மையான மக்கள் அறியும் படி விளம்பரப்படுத்தாமல், கயமைத்தனத்துடன் நடந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://cowin-safevac.nhp.gov.in/home.html#beneficiary

Vaccinated people can now report their side effects from the Corona vaccine through the link provided above.

The Union Government has made this change after the Supreme Court judgment dated 02.05.2022.  It is also noteworthy that this has been carried out with carelessness without publicizing it to the knowledge of the majority of people.

Click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

02 Oct, 07:30


பதிவு:57
எந்த அரசூழியர் கூப்பிட்டாலும் உடனே போலாமா..?
😳😳😳😳😳😳
எந்தவோர் அரசூழியர் நம்மை விசாரணைக்கு அழைத்தாலும், அதற்கு  சட்டப்படியான அழைப்பாணையை (சம்மன்) நமக்கு கொடுக்க வேண்டும்.

ஆனால், அழைப்பாணை கொடுத்து விசாரணைக்கு அழைத்தால், அரசூழிய அய்யோக்கியர்களுக்கு பிரச்சினை என்பதால், இப்படி தராமலேயே அழைப்பார்கள்.

குற்ற விசாரணை முறை விதியில் (crpc) குறிப்பிடப்பட்டுள்ள செயல்துறை நடுவர்கள் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப வட்டாச்சியர், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே குறிக்கும்.

இவர்கள் இப்படி நீர், நிலம் தொடர்பான விசாரணைக்கு நம்மை அழைத்தால், கு.வி.மு.வி 145 (9)இன்படி அழைப்பாணையும், அப்பிரச்சினைக்கு உரிய விளக்கத்தை 145(3)இன்படியும் நமக்கு வழங்கியே ஆகவேண்டும்.

இதையே கேவலர்கள் அழைத்தால் 160 இன் கீழும், நீங்கள் குடியிருக்கும் எல்லைக்கு வெளியில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்தால், 160(2) இன்படி, போய் வருவதற்கான கட்டணச் செலவையும் கூடவே வழங்க வேண்டும்.

இதுபோன்ற அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு சங்கதிகளை ஆர்வம் உள்ளவர்கள் வீடியோக மாற்றி யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம்.

எங்களுக்கு அனுப்பினால், நாங்களும் பதிவிடுவோம்.

மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் பேராசிரியர் வாரண்ட் பாலா அவர்கள் எழுதிய ஏழு நூல்களிலும் ஏராளமான பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன.

பொதுவுடமையாக அறிவிக்கப்பட்ட இந்த நூல்களை வாய்ப்பிருந்தால் நூலகத்தில் எடுத்து படியுங்கள். வசதி உள்ளவர்கள் நீங்களே இந்த நூல்களை உங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே வெளியிடலாம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை..

நீ வாழ நீயே வாதாடு
வக்கீழை நம்பாதே
வாழ்வை தொலைக்காதே..!

இது போன்ற மறைக்கப்பட்ட சங்கதிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது சட்டமெனும் சாட்டை என்ற சேனலுடன் இணைந்திருங்கள்.
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist

சட்டமெனும் சாட்டை

02 Oct, 06:48


பதிவு:57
எந்த அரசூழியர் கூப்பிட்டாலும் உடனே போலாமா..?