போக்குவரத்து காவலர்களுக்கு போக்கு காட்டுவது எப்படி?
அந்த காவலர்களிலும் பெரிய திருடர்கள், போக்குவரத்து காவலர்கள் என்ற அளவிற்கு அவர்களுக்கு தன் வாழ்நாளில் லஞ்சம் கொடுக்காத வாகன ஓட்டி என யாருமே இருக்கமுடியாது.
வாகன ஓட்டிகள் பெரும்பாலும் லஞ்சம் கொடுப்பதற்கு காரணம் ஓட்டுநர் உரிமம், வண்டிக்கான பதிவுச்சான்று, காப்பீடு போன்ற ஆவணங்கள் இருந்தும் தற்சமயம் கையிருப்பில் இல்லாததுதான்.
உண்மையில் இதெல்லாம் கையில் கூடவே எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பத்திரமாக வைத்திருந்தால் போதும். காவல் சோதனையின் போது கையில் இல்லை என்பதற்காக கவலைப்பட வேண்டாம். கையில் ஆவணங்கள் முறையாக இல்லாத போது சட்டப்படி அந்த ஆவணங்களை தமது உயர் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் காட்டி இந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் அறிவிப்புதான் கொடுக்கப்பட வேண்டும்.
அந்த அறிவிப்பை வாகன ஒட்டி பெற்றுக் கொண்டு அதில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள், குறிப்பிட்ட அதிகாரியிடம் கொண்டுச் சென்று காண்பித்தால் சரி பார்த்து விட்டு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள்.
ஆனால், பல சமயங்களில் இதைச் செய்யாமல் உடனே அபராதம் செலுத்த வேண்டும் என்பார்கள். அபராதம் செலுத்தவில்லை என்றால் வாகனத்தை எடுத்துச் செல்ல முடியாது என்பார்கள். தடுத்து வைப்பதற்கு சட்டவிரோதமாக எங்களுக்கு உரிமை இருக்கிறது என்பார்கள்.
ஒரு வாகனத்தை சோதனைக்கு, தேவையான கால அளவிற்கு மட்டுமே நிறுத்தி வைக்க இயலும். சோதனைக்கு என்று எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக பத்து நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாது. மேலும் ஒரு வாகனத்தை, வாகன ஒட்டுநரிடம் இருந்தோ அல்லது அதன் உரிமையாளரிடம் இருந்தோ பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் அந்த வாகனம் திருடப்பட்டதாக இருக்க வேண்டும்; அல்லது குற்றம் இழைத்து விட்டு தப்பிக்க நினைக்கும் வாகனமாக இருக்க வேண்டும்.
இந்த இரண்டு சூழ்நிலைகளைத் தவிர மற்றபடி வாகனத்தை பறிமுதல் செய்தால் அவர்கள் போலீஸ் என்று கருதாமல் போலியான போலீஸ் வேடமிட்டவர்கள் எனக் கணக்கில் எடுத்துக் கொண்டு உடனே அவசர போலீஸ் எண் 100 இல் உலாபேசி வாயிலாகவே புகார் பதிவு செய்யலாம்.
என்னது? அப்போதும் உங்க வாகனத்த புடிங்கிட்டு போயிட்டா என்ன பண்றதா?
கொஞ்சம் சட்டம் தெரிஞ்சாலும், நாம அடுத்த கட்டத்துக்கு போலாம் ஆனால், நமக்கு சட்டம் தெரியனுமே..!
நீ (தி) வாழ நீயே வாதாடு
வாழ்க வளமுடன் நீதிமான்
வாரண்ட்பாலா
Below click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist2