Tamil Anmegam+Kolangal @vibuthisivalingam Channel on Telegram

Tamil Anmegam+Kolangal

@vibuthisivalingam


தமிழ் ஆன்மீகம்+கோலங்கள்

Tamil Anmegam+Kolangal (Tamil)

தமிழ் ஆன்மீகம்+கோலங்கள் சேனல் ஒரு அற்புதமான தலைப்பு ஜோடியானது. இந்த சேனல் பெயரில் தெரியும் பார்வையின் மூலம், அதிமுக என்றும் அழைக்கப்படும் பயனர் vibuthisivalingam அவர்களிடம் திருப்பாவை அன்னை விபூதிசிவலிங்கம் இதை ஆட்சிப்படுத்தினார். இந்த சேனல் தமிழ் மக்கள் மற்றும் ஆன்மீக பயிற்சிகளை சரியாக வெளியிட முயற்சிக்கும். பூர்வம் மர்மம், ஆன்மீக வரலாறு, மந்திர சாஸ்திரம், ஜோதிடம் போன்ற விஷயங்கள் இதில் பெறப்படும். இந்த சேனல் ஆன்மீக உற்சாகங்கள் மற்றும் கோலங்களில் ஆராய உதவும் மூலம் ஒரு புதிய அறிமுகம் பெற அரசாங்களை உதவுகிறது. ஆசிரியர்கள் மற்றும் மர்மக் குருக்கள் இதை உட்கட்கி சேனலில் பங்கேற்று கற்கலாம். இந்த சேனல் புதிய அறிவுகளை பெற இளையர்களுக்கு அனுமதி செய்யும். தமிழ் ஆன்மீகம்+கோலங்கள் சேனல் மாணவர்கள், படைகள், தொழிலாளர்களுக்கு சிறந்த வகையில் ஆன்மீக அனுபவங்கள் வழங்குகிறது. இந்த அனுபவங்கள் தமிழ் மக்களின் உயிர்களை மேம்படுத்தும் முக்கிய செய்திகளாக இருக்கும். தமிழ் ஆன்மீகம்+கோலங்கள் சேனலில் சேருங்கள் மற்றும் எங்கேயோ தனிப்பட்ட ஆன்மீக ஆத்திசட்சங்களை பகிர்ந்து மிகவும் அன்புடன் கூட்டிக்கொண்டு உங்கள் ஆண்மாவை வளர்க்கலாம்!

Tamil Anmegam+Kolangal

08 Jan, 01:21


*🌹 என்ன வந்தாலும் உன்னை மறப்பதில்லை பெருமாள் கீதம்🙏🏻*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 01:21


*ஐந்து கரத்தினை ஆனைமுகத்தனை*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 01:19


*🌹 ஏழுமலை இறைவா 🙏🏻*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 01:18


*🌹 ஹரி நாராயணா 🙏🏻*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:57


*📻 08.01.2025 RADIO NEWS 📻*

*📩 இன்று ஒரு தகவல் 📩*

_🔔 வேதாந்தம் பேசுபவர்_

*🎙️ தென்கச்சி கோ சுவாமிநாதன்*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:54


🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:54


*காலை நேர சிந்தனை*
(08.01.25)

*முழுமையாய் வாழுங்கள்.*

    அரிதினும் அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூன்,குருடு, செவிடு பேடு நீங்கிப்  பிறத்தல் அரிது என்று அவ்வை பாட்டி அன்றே சொன்னாள்.

   உண்மையில் இந்த பிறவி என்பது மிகவும் அரிதாக கிடைத்த ஓன்று தான்.சில பேர் ஏன்டா இப்படி பிறந்து கஷ்டப் படுறோம் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

   சிலர் நாம் முன்பு செய்த தவறுகளுக்கு தண்டனையாய் இறைவன் இந்த பிறவியை நமக்கு அளித்து நம்மை கொடுமை படுத்துகிறான் என்று நம்புகிறார்கள்.

  உங்கள் தவறுகளுக்கான பலனை நீங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அதில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.

  அதை புரிந்துகொண்டு இந்த பிறவியிலாவது தவறுகள் செய்யாது உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

  அதற்காகவே இறைவன் இந்த வாய்ப்பை அளித்துள்ளான்.இந்த பிறவி என்பது அத்தனை எளிதாக கிடைத்து விடாது.

  பல உயர்ந்த ஆத்மாக்களுடன் கலந்து பேசி, உங்களால் சோதனைகளை தாங்கிக் கொள்ள இயலுமா என்று பல வழிகளில் ஆலோசித்து, உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே உங்களுக்கு பிறக்க வாய்ப்பு வழங்கப் படும்.

   எந்த மாதிரி சோதனைகளை நாம் சந்திக்க வேண்டி வரும். அதனை எப்படி எதிர் கொள்வது என்பது எல்லாம் நமக்கு சொல்லித் தரப் படும்.

  மேலும் நம்மால் தாங்க முடியவில்லை என்றால் மரணத்தை ஏற்று மேலே திரும்பி விடலாம்.அதற்கும் மூன்று வாய்ப்புகள் நமக்கு தரப் படும்.

    முதல் வாய்ப்பு முடிகின்ற நேரத்தில் நம் ஆழ்மனத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு மனித வாழ்வை தொடர விருப்பமா! இல்லை இப்போதே திரும்பி விடுகிறாயா என்ற கேள்வி முன்வைக்கப் படும்.

   நாம் இல்லை நான் சமாளித்து விடுவேன் என்றால் அந்த வாய்ப்பு நிராகரிக்கப் படும்.பின் மீண்டும் இரண்டாவது வாய்ப்பின் போதும்  நம்மிடம் அனுமதி கேட்கப்படும். மூன்றாவது முறை நாம் வேண்டாம் என்றாலும் நமது மரணம் என்பதை தள்ளிப் போட முடியாது.

   சிலரால் முதல் வாய்ப்பிலேயே சமாளிக்க முடியாது என்று திரும்பி விடுகிறார் கள்.சிலரோ இரண்டாவது முறையும் தள்ளிப் போட்டு விடுவார்கள். அப்படி பட்டவர்களே கடைசிவரை பிறவியை முழுமையாக உபயோகப் படுத்துகி றார்கள்.

   சில பேர் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பூமியில் இருக்கும் வரை இந்த உடல்(physical body ) நமக்கு இருக்கும்.

  உயிர் போன பின் சூக்கும உடல்(astral body ) நமக்கு இருக்கும். இது பூமியில் இருந்து போக விரும்பாது மீண்டும் உடலுக்குள் போய் வாழ விரும்பும்.

  பின் அந்த உடலை கடந்து நமது ஆத்ம உடலை(sprit body) அடையும்.இது தான் உண்மையான நாம்.இது ஒளிமிக்கதாய் இருக்கும்.

  நீங்கள் இறந்தவுடன் சூக்கும உடலை அடைந்து கொஞ்சம் குழம்பி போய் இருப்பீர்கள்.அப்போது உங்களை சேர்ந்தவர்கள் வந்து அதிலிருந்து ஆத்ம உடலுக்கு மாற உதவி செய்து உங்களை அழைத்து செல்வார்கள்.

  உங்களுக்கு வழங்கப் பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒன்றில் மட்டுமே நீங்கள் மரணம் அடைய முடியும்.

  அதை மீறி தற்கொலை செய்து உங்கள் உடலை மாய்த்துக் கொள்ள உங்க ளுக்கு எந்த உரிமையும் கிடையாது.

   அது மிகப் பெரிய குற்றம்.இது உங்களை ஒரு உலகம் பின் நோக்கி கொண்டு சென்று விடும்.

   தற்கொலை செய்து உடலை விட்டு வெளியில் வந்தால் சூக்கும உடலில் தான் இருக்க வேண்டும். அடுத்து ஆத்ம உடலுக்கு மாற வேண்டுமானால் உங்களுக்கு வழங்கப் பட்ட காலம் வரும்போது தான் மாற முடியும்.

    ஏற்கனவே இரண்டு வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என்றால் மீண்டும் மூன்றா வது வாய்ப்பு எப்போது கொடுக்கப் பட்டுள்ளதோ அது வரை சூக்கும உடலில் தான் திரிய வேண்டும்.

  இப்போது மனித உடம்பிற்கு திரும்பி வரவும் முடியாது.மேலே உள்ள உலகிற்கு செல்லவும் முடியாது.ஆத்ம உடலுக்கு மாறாது மேலுலகு செல்ல முடியாது.

   அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இடையில் ஆவியாய் அலைய வேண்டி யது தான்.

  அதனால் தற்கொலை பண்ணிக் கொண்டால் துன்பங்களில் இருந்து விடுதலை ஆகி விடலாம் என்று என்ன வேண்டாம்.

  மனித உடலை விட்டு வந்ததும் உங்களுக்கு உண்மை தெரிந்து விடும்.ஆஹா... ....தப்பு பண்ணீட்டோமே என்று வருத்தப் படுவீர்கள்.

  மேலும் பழைய உலகிற்கு போக முடியாது.ஒரு உலகம் கீழே போக வேண்டி வரும் என்பது அறிந்து மேலும் வருந்துவீர்கள்.

   அந்த உலகிற்கும் உடனே போக முடியாது.உங்கள் மரணத்திற்கு அனுமதி  வழங்கப் பட்ட அந்த குறிப்பிட்ட காலம் வரும் வரை காத்திருக்க வேண்டிவரும்.

  தற்கொலை என்பது பெரும் துயரத்திற்கு இட்டு செல்லும். இறைவன் கொடுத்த வாய்ப்பை முழுமையாக பயன் படுத்தி உயர்வடைவது தான் உன்னத வழி .

நன்றி கா. கணேஷ்.

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

*அன்பே🔥சிவம்*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:53


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔  *நாளும் ஒரு சிந்தனை*

உங்கள் இதயம்
மகிழ்ச்சியாக இருந்தால்
உங்கள் மனம்
கவலையற்று இருக்கும்!

🏚️  *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     இதயப் படபடப்பு உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     உலகிலேயே அதிகமாக பறவைகள் வாழும் இடம் பெரு நாட்டின் கடற்கரை ஆகும்..

🥘. *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் உடலும் உற்சாகமாக மாறும்.
                     
*-பாரதியார்*

  📆  *இன்று சனவரி 8-*
   
   ▪️ *உலக நாய்கள் நாள்.*

   ▪️ *உலக தட்டச்சு நாள்.*

          🌸 *பிறந்த நாள்* 🌸

1984- *கிம் ஜொங் உன்* (வடகொரிய 3-ஆவது அரசுத் தலைவர்)

          💐 *நினைவு நாள்* 💐

1324- *மார்க்கோபோலோ* (இத்தாலிய வணிகர்)

1941- *பேடன் பவல்* (சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த ஆங்கிலேயர்)

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
( *பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:53


*திருப்பாவை மார்கழி 24*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:52


*திருவெம்பாவை மார்கழி 24*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:52


_*தினசரி தியானம்...! மரணம்...!!! ஜனவரி-08 மார்கழி-24*_

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:47


🙏இன்றைய சிந்தனை🙏

🌷08.01.2025🌷

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

ஒரு இலை உதிர்ந்துக் கொண்டே சொல்கிறது -
இந்த வாழ்வு நிலை இல்லாதது என்று.

ஒரு பூ மலர்ந்துக் கொண்டே சொல்கிறது,
வாழ்வில் ஒரு நாளாவது கௌரவமாக வாழ வேண்டும் என்று.

ஒரு மேகம் பொழிந்துக் கொண்டே சொல்கிறது, கசப்பினை உள்வாங்கிக் கொண்டு நல்லவற்றைப் பகிர வேண்டும் என்று.

ஒரு மின்னல் உறுமிக் கொண்டே சொல்கிறது, இருப்பது ஒரு நொடியாயினும் ஒளிர வேண்டும் என்று.

ஒரு மெழுகுவர்த்தி கரைந்துக் கொண்டே சொல்கிறது, கடைசி வரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று.

ஒரு மரம் குளிர்ந்து சொல்கிறது,தன்னைப் போன்றே கஷ்டத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு நலம் தர வேண்டும் என்று.

ஒரு நதி சலசலவென்று பாய்ந்துக் கொண்டே சொல்கிறது,தன்னைப் போன்றே கஷ்டத்திற்கும் சுகத்திற்கும் அசராமல் ஓட வேண்டும் என்று.

நிலா ஒளிர்ந்துக் கொண்டே சொல்கிறது,
தன்னைப் போன்றே மற்றவர் வாழ்க்கையில் ஒளியை வீச வேண்டும் என்று.

வாழ்க வளமுடன்.

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:46


தினம் ஒரு புத்தக மொழி

08.01.2025.

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

பழி வாங்கல் என்பது ஆரம்பத்தில் இனிக்கும்.

அது சிறிது காலத்திலேயே அம்பு போன்று எய்தவனையே திரும்பி வந்துத் தாக்கும்.

--- கிங்ஸ்லி கிளாஸ்.

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:46


*வித்தியாசமான பிரசாதம் வழங்கும் காலபைரவர் கோவில்..!*🌺

இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களும், அக்கோவில்களில் நடத்தப்படும் வித்தியாசமான சடங்குகளும் நம்மை ஆச்சர்யப்படுத்த தவறியதில்லை. அத்தகைய கோவில்களில் ஒன்றுதான் இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜயினியில் அமைந்துள்ள காலபைரவர் கோவில் ஆகும். இக்கோவிலின் தனி சிறப்பே இங்குள்ள காலபைரவருக்கு பக்தர்கள் மதுபானம் வழங்குவதுதான். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

இக்கோவிலில் உள்ள காலபைரவர் பாதுகாவலராக கருதப்படுகிறார். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இங்குள்ள காலபைரவரின் உருவம் முகம் போன்ற வடிவத்தில் குங்குமம் பூசப்பட்டு காணப்படுகிறது.

இக்கோவிலில் வாசலில் அர்ச்சனை செய்யப் படுவதற்கான பொருட்களில் தேங்காய், பூ, ஊதுபத்தி மற்றும் மதுபானம் சேர்த்து விற்கப்படுகிறது. 2015ல் மாநில அரசே மதுபானக் கடைகளை கோவிலுக்கு வெளியே அமைத்து மதுபானத்தை பக்தர்களுக்கு விற்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. போலியான மதுபானங்கள் விற்கப்படுவதை தடுப்பதற்காகவே இத்தகைய முயற்சியை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இங்கே வெளிநாட்டு மதுபானம், உள்நாட்டு மதுபானம் என்று பலவகையான மதுபானங்கள் விற்கப்படுகிறது.

தினமும் இக்கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து கால பைரவருக்கு மதுபானத்தை அருந்த தருகிறார்கள். பக்தர்கள் வாங்கி வரும் மதுபானத்தை அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி காலபைரவரின் வாய்ப்பகுதியில் வைக்க சிறிது சிறிதாக மதுபானம் குறைவதைக் கண்கூடாக காணமுடிகிறது. இந்த அதிசயக் காட்சியை காண்பதற்காகவே தினமும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். மதுபானத்தில் சிறிது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

இக்கோவிலில் உள்ள அர்ச்சகரும், பக்தக்களும் காலபைரவர் சிலையில் எந்ந ஓட்டையும் இல்லை என்றும் காலபைரவரே மதுபானத்தை அருந்துவதாக நம்புகிறார்கள். எனினும், இக்கோவிலில் உள்ள அர்ச்சகர் பார்வையாளர்களை காலபைரவரிடம் நெருங்க விடுவதில்லை. அவர்களை பிரசாதம் வழங்கவும் விடுவதில்லை.

அர்ச்சகர் கொடுத்தால் மட்டுமே காலபைரவர் மது அருந்துவார் என்றும் மற்றவர்கள் முயற்சித்தால் தோற்றுப் போவதாகவும் சொல்கிறார். தினமும் நூறு லிட்டருக்கு மேல் மதுபானம் கால பைரவருக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு மதுபானமும் எங்கே செல்கிறது என்பது மர்மமாகவே உள்ளது.🍁🔥

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:45


🌴🌷🌴😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*

*(08.01.2025)*

*༺🌷༻*
*🌸🌼🌿நீ நீயாகவே இரு.*
*༺🌷༻*

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல் வெளியே வெயிலில் நடந்து சென்றார். நீண்ட நேரம் நடந்த களைப்பால் தாகமாக இருந்தது. சற்று தூரத்தில் கிராமத்துப் பெண் ஒருத்தி குடத்துடன் வருவதைக் கண்டார்.

காளிதாசர் அவளிடம்," அம்மா, தாகமாக இருக்கிறது.தண்ணீர் தருவாயா?'" எனக் கேட்டார்.
" தருகிறேன்.உங்களைப் பார்த்தால் ஊருக்குப் புதியவராக இருக்கிறீரே…. நீங்கள் யார்", எனக் கேட்டாள்.
*༺🌷༻*
மனதிற்குள் தான் பெரிய கவிஞர் என்ற மனப்பான்மை உண்டானது. இவளிடம் அதைச் சொல்ல வேண்டுமா என்ன, என எண்ணி, " நான் ஒரு பயணி அம்மா", என்றார்.

உடனே அவள்," உலகில் இரண்டு பயணிகள் தான்…. சூரியனும், சந்திரனும். இவர்கள்தான் இரவும், பகலுமாக உலகில் பயணிப்பவர்கள்", என்றாள்.

" சரி, என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்", என்றார் காளிதாசர். அதற்கு," உலகில் இரண்டு விருந்தினர் தான்.செல்வம், இளமை இரண்டும் நம் வாழ்வில் விருந்தினராக வந்து போய் விடும்", என மறுத்தாள்.
*༺🌷༻*
எரிச்சல் பட்ட காளிதாசர் " நான் ஒரு பொறுமைசாலி" என்றார்.அதற்கும் அவள்," அதுவும் இருவர் தான்.ஒன்று பூமி. யார் மிதித்தாலும், எவ்வளவு மிதித்தாலும் தாங்கும். மற்றொன்று மரம்.யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு பழங்கள் கொடுக்கும்", என்றாள்.

கோபமடைந்த காளிதாசர்," நான் ஒரு பிடிவாதக்காரன்", என்றார்.அதற்கும் அவள்,

" உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இருவரே. ஒன்று முடி. மற்றொன்று நகம். இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும்", என்றாள்.
*༺🌷༻*
காளிதாசருக்கு தாகம் அதிகமாக இருந்தது.உன்னிடம் போய் தண்ணீர் கேட்டேனே என்று நினைத்தால்," நான் ஒரு முட்டாள்", என தனக்குத்தானே மெதுவாக கூறிக் கொண்டார். ஆனாலும் அவள் விடுவதாக இல்லை.அதற்கும் பதில் கொடுத்தாள்.

" உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான். நாட்டை ஆளத் தெரியாத மன்னன் ஒருவன். அவனுக்கு துதி பாடும் அமைச்சன். மற்றொருவன்", என்றாள்.
*༺🌷༻*
மகாகவி காளிதாசர் செய்வதறியாமல் திகைத்தார்.அவளின் காலில் விழுந்து வணங்கினார்.

" மகனே! எழுந்திரு " என்றாள் அவள்.நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப் போனார். சாட்சாத் சரஸ்வதி தேவி யாக காட்சி அளித்தாள். கைகூப்பி நின்றார்.

" காளிதாசா!, எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கிறானோ அவனே மகரயாழ் பிறவியின் உச்சத்தை அடைகிறான். எப்போதும் நீ மனிதனாகவே இரு", என்று சொல்லி தண்ணீர் குடத்தை கையில் கொடுத்து மறைந்தாள்.
*༺🌷༻*
🌿நீதி:

காளிதாசரைப் போலத்தான் எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் நாம் இருக்கிறோம்.நம் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழ்வும் மட்டும் கற்றுக் கொடுக்கிறோம்.

ஆனால், மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, தாய் நாட்டிற்கு, வாழ்வளிக்கும் பூமிக்கு நம் பங்களிப்பு என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை.
*༺🌷༻*
பெற்றோரை, உறவினரை விட்டு விலகியதோடு ' ஏசி' அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை, என இளைய தலைமுறையினரை இயந்திரமாக்கிவிட்டோம்.

அவர்களை மனித நேயத்துடன் வாழச் செய்வோம். " நீ நீயாகவே இரு. அதாவது மனிதனாகவே இரு. அப்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்", என்ற நற்பண்பைக் கற்றுக் கொடுப்போம்.

✒️ ~ Sriram.jp
🌐ஞானவயல் இணையம்
sriram.jp(@)gmail(.)com
💐நன்றி🙏

*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:44


*_தன்வந்திரியின் பெருமை..._*


ஸ்ரீ ரங்கம் பெரிய பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை தெரியுமா!

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.

அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள்.

என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.

இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,

எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன் இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.

அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.

பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா ...

திருவடி சரணம் ஸ்ரீரங்கா ...


🌷🌷

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:44


*_வராஹ அவதார மகிமை !_*


திரிவிக்ரம அவதாரத்தில் உலகெல்லாம் அளந்து நின்றான் எம்பெருமான். அந்த பிரம்மாண்ட ரூபத்தை பெரிது என்று கொண்டாடுகின்றோம். ஆனால் அந்த திரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம்

உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி உலகின் மீது வைத்தான். அதே உலகத்தை வராஹ அவதாரத்தில் தன் மூக்கின் மேல் தரிக்கிறான் பகவான், ஆதலால் உலகம் பகவான் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது..

அந்த வராஹ அவதாரிதான் விஸ்வாத்மா – ஜகத்துக்கு தலைவன். திரிவிக்ரமாவதாரத்தை விட பல கோடி மடங்கு நெடிய வராஹ வடிவமானான் பகவான்.

ஹிரண்யாசுரனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறான்; கண்களை உருட்டுகிறான். பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டிருக்கி றாள்.பகவானுக்கு வருத்தம்! காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே!

தூக்கிவிட்ட பகவானை கொண்டாடி மகிழ்வதல்லவா வழக்கம். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள்..? நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று கேட்கிறார் பகவான்.அதற்கு பிராட்டி கேட்கிறாள்:

நான் கூக்குரலிட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் பார்யை, சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள்.

எத்தனை வித ரூபங்களில் பகவான் வந்தாலும், அவன் பேசுகிற பேச்சிலே மாற்றம் கிடையாது.பூமி பிராட்டிக்குப் பதில் சொன்னான்:

இந்திரியங்கள் சரியாக இயங்கும் நிலையிலே, என்னுடைய விச்வரூபத்தை எவன் உணர்கிறானோ, அர்ச்சனை பண்ணுகிறானோ, என் திருநாமத்தை வாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, என் திருவடியி லே எவன் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ, அவன் அழைக்கும் போது நான் ஓடோடி வருவேன்”.

வராக சரம ச்லோகம் சொல்கிறது.அந்திம காலம் என்பது மனிதர்களுக்கு கல் கட்டை மாதிரி விழுந்து கிடக்கும் நிலை வந்து விடும். அப்போது சரணாகதி பண்ண முடியுமா? சுற்றம் அவனைச் சூழ உட்கார்ந்து “சொல்லு, நீ பொருள் வைத்திருக்கிறாயா? ” என்று கேட்டுத் துளைக்கும். அவன் இதற்கு பதில் சொல்வானா?

இல்லை நாராயணா என்று பகவான் நாமத்தைச் சொல்லுவானா? இத்தனை நாள் ஓடி உழைத்துப் பொருள் தேடியும் அதை எங்கே வைத்தோம் என்று அவனுக்கு நினைவு வரவில்லையே… அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரை அவன் எப்படிச் சொல்வான்?

வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.

ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

“எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும் போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.

ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.

அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும்.என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.

எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.

பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.

ஓம் நமோ நாராயணாய !!!


🌷🌷

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:42


திருச்செந்தூர் பன்னிர்இலை விபூதி மகிமை வீடியோ

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:38


*ஸ்ரீராமஜயம்*

*பெருமாளே பொன்னால் கட்டிய கோயில்*🍁

சீர்காழி அருகே திருநாங்கூர் செம்பொன்செய் கோயில் என்ற திவ்ய தேசம் உள்ளது. இந்தக் கோயிலை பெருமாளே பொன்னால் கட்டினார் என்று கூறுகின்றனர். அதனால்தான் இந்த திவ்யதேசத்திற்கு பெயரே செம்பொன்செய் கோயில் என்பதாகும். திருநாங்கூர் திவ்ய தேசங்களில் இது நடுநாயகமாக விளங்கக்கூடியது என்று கருதப்படுகிறது. இங்கு பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.

இத்தலப் பெருமாளுக்கு இங்கே திருநாமம் பேரருளாளன் என்பதாகும். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் இவர் காட்சி தருகின்ற இந்தத் தலத்தில் தாயாருக்கு தனிச் சன்னிதி உள்ளது. தாயாரின் திருநாமம் அல்லிமாமலர் நாச்சியார் என்பதாகும். உத்ஸவ பெருமாளின் திருநாமம் செம்பொன் அரங்கன் என்பதாகவும். இவர் பார்க்க பேரழகு உடையவர். அருகில் பூதேவி ஸ்ரீதேவி மற்றும் தலத்தின் தாயார் அல்லிமாமலர் நாச்சியார் ஆகியோர் இவருடன் காட்சி தருகின்றனர். இந்தத் தலத்தின் தீர்த்தம் ஹேம புஷ்கரணி ஆகும்.

ஸ்ரீராமபிரானாக அவதரித்த பெருமாள் வனவாசம் செல்கின்றார். அங்கே சீதையை ராவணன் இலங்கைக்கு கவர்ந்து சென்று விட, சீதையை கண்டுபிடிக்க பல முயற்சிகளுக்குப் பின்னர் ராவணனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடுகின்றார். இதையடுத்து ஸ்ரீராமபிரான் ஓய்வு எடுக்க திருநாங்கூர் திவ்ய தேசத்திற்கு வந்தாராம். அங்கே திருடனேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தாங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசுவினை செய்து நான்கு நாட்கள் தங்கிய பின்னர் அந்தப் பசுவை ஒரு அந்தணருக்கு தானம் கொடுத்தாராம்.

ஸ்ரீராமர் கொடுத்த தங்கப் பசுவைக் கொண்டு அவர் இந்தக் கோயிலை உருவாக்கியதால் செம்பொன்செய் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ‘செம்பொன் ரங்கர்’ எனப்படுகின்ற இந்தப் பெருமாளை ஹேமரங்கர் என்றும் பேரருளாளன் என்றும் அழைக்கின்றனர்.

மிகச் சிறிய கோயிலாக அமைந்திருந்தாலும் இந்தப் பெருமாள் கோயில் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோயிலில் மூலவரின் வலது புறத்தில் நாகநாதர் கற்சிலை வடிவில் பலி பீடத்துடன் காட்சி தருகின்றார். இது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத சிறப்பு. இந்த நாகநாதரை வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து பாயசம் நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும் என்றும் திருமணத் தடை அகலும் என்றும் கூறுகிறார்கள்.

இப்பெருமான் அற்புதங்களில் மற்றொன்று, அதாவது ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காஸ்யபன் என்ற அந்தணர் மிகவும் வறுமையில் வாடினார். அவர் தவம் பல செய்தும் வறுமையைப் போக்கிட வழி தெரியவில்லை. காஸ்யபனிடம் வைஷ்ணவர்கள் சிலர், ‘‘நீ திருநாங்கூர் சென்று அரங்கனை, ‘ஓம் நமோ நாராயணா’ என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தினால் முப்பத்திரண்டாயிரம் முறை உச்சரித்து வணங்கினால் உனது வறுமை நீங்கி, செல்வம் பெறுவாய்’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட காஸ்யபன் உடனே செம்பொன்செய் கோயிலுக்கு வந்து மூன்று நாட்களில் முப்பத்திரண்டாயிரம் முறை அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லி பெருமாளை வேண்டினான். பெருமாள் அவனுக்குக் காட்சி தந்து பொன்னும் பொருளும் தந்ததாக இத்தலத்தின் பெருமை கூறப்படுகிறது. எனவே, இந்த திவ்ய தேசத்துக்கு வந்து செம்பொன் அரங்கனை தரிசித்தால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கப்பெறுவதோடு, வாழ்வில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செல்வம் பல தந்திடும் செம்பொன் அரங்கனை வணங்கிடுவோம் செல்வ செழிப்புடன் வாழ்ந்திடுவோம்.🪻

Tamil Anmegam+Kolangal

08 Jan, 00:38


நமசிவாய வாழ்க

தினம் ஒரு திருத்தலம்

🛕வில்வ மரத்தடியில் லிங்கம்.. பிரதிஷ்டை செய்த ஜமதக்னி முனிவர்.. அருள் பாலித்த
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர்,
திருக்கோயில்,அரியலூர் மாவட்டம் , தீயனூர்🛕

உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக்கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆண்ட மன்னர்கள் உலகமெங்கும் பறந்து விரிந்து காணப்பட்டனர்

போர் செய்து சென்ற இடமெல்லாம் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக அங்கு கோயில்கள் கேட்டு வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர். குடி பெயர்ந்து வாழ சென்ற மக்களும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கோயில் கட்டி வழிபாடுகள் செய்தனர்.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அந்தக் கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து நின்று வரை வரலாற்றுச் சரித்திர குறியீடாக பிரம்மாண்டமாக நின்று வருகின்றன. சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை கட்டி சென்றுள்ளனர்.

மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்கு சான்றாக திகழ்ந்து வருகிறது. மேலும் பாண்டியர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மிகப்பெரிய பக்தியின் வெளிப்பாடாக உள்ளது.

இப்படி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் அரியலூர் மாவட்டம் உடையவர் தீயனூர் அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்

🌹 தலச்சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் ஜமதக்னீஸ்வரர் எனவும் தாயார் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். கோயிலில் வில்வமரம் தல விருட்சமாக விளங்கி வருகிறது. தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

🌹சதுர வடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின் மேல் கருங்கல்லாலான லிங்கத் திருமேனியாக ஜமதக்னீஸ்வரர் காட்சி கொடுத்து வருகின்றார். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

🌹1000 வருடங்கள் வரை பழமையானதாக கருதப்படும் இந்த கோயிலுக்கு சென்றால் குழந்தையின்மை நீங்கி குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

🌹 நோய் தீர்க்கும் தலம்

உடல் நோய்களை குணப்படுத்தும் காரகனாக ஜமதக்னீஸ்வரர் விளங்கி வருகின்றார். மேலும் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

🌹தல வரலாறு

இந்த ஊரில் வெப்பம் மிகுந்து காணப்பட்ட காரணத்தினால் இது தீயனூர் என அழைக்கப்பட்டுள்ளது. புராண காலங்களில் இந்த இடம் வில்வமரம் நிறைந்த வனப்பகுதியாக காணப்பட்டுள்ளது. இந்த காட்டுப் பகுதியில் சப்த ரிஷிகளில் ஒருவராக திகழ்ந்து வந்த ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டு வந்தார்.

இங்கு இருந்த வில்வ மரத்தின் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த லிங்கமே பின்னாளில் ஜமதக்னீஸ்வரர் என்று பெயர் பெற்றது. அக்னி பகவான் வழிபட்ட காரணத்தினால் இவருக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு.

அதன் காரணமாகவே இந்த கோயிலை ஒட்டி உள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஜமதக்னி அறிவுரையின்படி பரசுராமர் தனது தாயாரான ரேணுகா தேவியை கொலை செய்தார். இதனால் தோஷம் ஏற்பட்ட பரசுராமர் பழு ஊருக்கு வடக்கே ஓடும் மருதை ஆற்றில் நாள்தோறும் தீர்த்தம் ஆடி சிவபெருமானை வழிபட்டார் என்பது வரலாறு.

🌹முகவரி :
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்,

கிளாங்காடு,

திருநெல்வேலி மாவட்டம் – 627852.


தென்னாடுடைய சிவனே போற்றி

Tamil Anmegam+Kolangal

02 Jan, 14:14


இதில் மிக முக்கிய விஷயம் சொல்ல மறந்து விட்டேன் .இதில் பதிவிடப்படும் புத்தகங்கள் உடைய படங்கள் தங்களுடைய மெமரியில் பதிவாகாது. அது எனது மொபைல்லையே ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே தைரியமாக பார்வையிடலாம். புத்தகங்கள் வாங்கலாம்

Tamil Anmegam+Kolangal

02 Jan, 14:14


குறிப்பிட்ட அளவு உறுப்பினர்கள் சேர்ந்த பிறகு புத்தகங்கள் பதிவிடப்படும்

Tamil Anmegam+Kolangal

02 Jan, 09:52


Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/CJeK64bstxdBkw5rijAZ65

Tamil Anmegam+Kolangal

02 Jan, 09:51


அன்புள்ள சகோதர சகோதரிகளே வணக்கம். நான் உங்கள் சிவானந்தம் என்கிற சம்பத் சிவம் வில்லியனூர் பாண்டிச்சேரி சேர்ந்த சம்பத் சிவம் பேசுகிறேன். ஒரு மகிழ்ச்சியான செய்தி. பழைய புதிய புத்தகங்கள் விற்பனை துவங்கியுள்ளோம். புத்தக வேட்டை என்ற பெயரில் whatsapp மூலம் செயல்படுகிறோம். அதில் தாங்கள் இணைந்து கொள்ளலாம். வேண்டும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். புத்தகம் அனுப்பும் செலவு எதுவும் கிடையாது. தங்கள் இருப்பிடம் தேடி கொரியர் மூலம் வந்து சேரும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மினி லைப்ரரி அவசியம் இருக்க வேண்டும். புத்தகம் படிப்பது போல் சுவாரஸ்யம் வேறு எதிலும் வராது. எனவே குழுவில் இணையுங்கள். புத்தகம் கேட்கும் பொழுது w என்று அதாவது வான்ட் என்பதற்காக w என்று மட்டும் போடுங்கள். அந்த புத்தகத்தை டேக் செய்து போடுங்கள். புத்தகம் உங்களுடையதாகிவிடும். தாங்கள் தொகை ஜி பே மூலம் அனுப்பிய பிறகு மறுநாள் புத்தகத்தை கொரியர் மூலம் அனுப்பிவிடுவோம். தங்கள் முகவரியை தனிப்பதிவில் அதாவது எனது போன் நம்பரில் தமிழில் தெரிவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். புத்தகம் தங்களுக்கு பாதுகாப்பாக வந்து சேரும். ஒவ்வொரு பார்சலுக்கும் ஒரு இலவச புத்தகம் ஒன்று உண்டு. எனது போன் நம்பர்.6380867371. எனது முகவரி: சம்பத் சிவம், 6,கிழக்கு சன்னதி வீதி, வில்லியனூர், பாண்டிச்சேரி. whatsapp லிங்க் கீழே தருகிறேன் இது குறித்து எந்த சந்தேகமும் இருந்தாலும் தாங்கள் எனக்கு நேரடியாக போன் செய்து பேசலாம்.

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:25


இன்று ஒரு தகவல் 💥
ஆசை அறுபது மோகம் 30 💥
தென்கச்சி கோ ஸ்வாமிநாதன் கதைகள்

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:11


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔  *நாளும் ஒரு சிந்தனை*

வருடங்கள் மாறுவதால்
வாழ்க்கை மாறாது.
விடாமுயற்சி இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மாறும்.

🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     வெந்தயம், கசகசா இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே சரியாகும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     ஆமைகளுக்கு பற்கள் இல்லை.

🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     பருப்புப் பொடி செய்யும்போது துவரம் பருப்புடன் சிறிது கொள்ளு வறுத்து சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

   உண்மையாக இருக்க அதிக வல்லமையும், உறுதியும் வேண்டும்.

                    *-ஒரேகமான்*

📆 *இன்று சனவரி 2-*
   
         💐 *நினைவு நாள்* 💐

2016- *அ.பூ.பரதன்* (குமுகாய ஆர்வலர், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மேனாள் பொதுச் செயலாளர்)

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
( *பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:11


*காலை நேர சிந்தனை*
( 02.01.2025)

நல்ல வாய்ப்புகள் வாழ்வில் ஒரு முறைதான் வரும்... அதை நழுவ விடக் கூடாது !

ஒரு அறிஞர் சொன்னார்: “நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்குக் கிடைக்கும் இனிய பழத்தைப் போலத்தான்.

அது கெட்டுப் போவ தற்கு முன் அதைப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பழம் அழுகிப் போய்விடும்; பயன் தராது.

இன்றைய தினத்தை நாளைக்கோ, நாளை மறுநாளோ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

நாளை மறுநாள் நீங்கள் செய்யும் வேலை, நாளை மறுநாள் நீங்கள் செய்யக்கூடிய வேலைதானே தவிர, இன்றைக்குச் செய்யக்கூடிய வேலை அல்ல.

இன்றைய தினமான தேதி, மாதம் - வருடம் இனி மீண்டும் வராது. இன்று கிடைப்பன இன்றே, உடனே மதிப்பிட்டு ஏற்கும் உறுதியும், மனப்பான்மையும் நமக்கு இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான்.

வாழையின் இலை, மட்டை, தண்டு, பூ, காய், கனி, சருகு அத்தனையும் மனிதன் பயன்படுத்திக் கொள் வதைப் போல்,

ஒரு நாளில் காலை, பகல், மாலை, இரவு ஒவ்வொரு பொழுது அதன் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான் பெரு மைக்குரிய மனிதர்களாக வாழ்கிறார்கள்.

வாழ்வில் வெற்றிபெற்ற மனிதர் – தோல்வி பிடித்த மனிதர் என்று தனித்தனி யாக ஒன்றும் கிடையாது. தோல்வியுற்ற – சாதாரண மனிதர்கள் என்போர் யார்? கவனித்துப் பாருங்கள். தங்கள் வாழ்வின் பெரும்பகுதி நாட்களை வீணே கழிப்பவர்கள் தான்.

ஏன், வீணே கழிக்கிறார்கள்? அவர்களுக்கென்று ஒரு லட்சியம் இல்லை. பிறருடன் வீண் பேச்சு பேசிக் கழிப்பவர்கள், குடித்துக் கழிப்பவர்கள், ஊர் சுற்றிக் கழிப்பவர்கள் என்று பலரகம் உண்டு. என்றாலும், இவர்களின் ‘செயல்’ என்று ஒன்றும் இருக்காது.

வாழ்க்கையில் துயரமானவை சம்பவங்கள், இன்பமானவை சந்தர்ப்பங்கள்.

எனவே சந்தர்ப்பம் என்பது எல்லோருக்கும் எப்போதும் வராது; வரும் போது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; நழுவவிடக்கூடாது. நழுவவிட் டால், அதே சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் அடுத்த மனிதன் அதைக் கொத்திக் கொண்டு போய் விடுவான்.

காக்கையைப் பாட்டுப் பாடச் சொல்லி, அதன் வாயில் இருந்த வடையை நழுவி விழச் செய்து, தூக்கிக் கொண்டு ஓடிவிட்ட நரியின் கதையைப் படித்திருக் கிறீர்கள் அல்லவா?

அதுபோல் நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம் என்கிற வடையை, தான் பறித்துக் கொண்டு ஓட நம் பின்னே நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.

இது போட்டி உலகம். ‘தகுதியுள்ளவன் வெற்றியடைவான்’ என்கிற அமைதி உலகம் மாறி, ‘வெற்றி யடைபவனே தகுதி உள்ளவன்’ என்று சமூகத்தின் பார்வை மாறிப் போய்விட்ட அவசர உலகம்.

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:10


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:09


இன்றைய புத்தக மொழி

02.01.2025

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

முயற்சி என்பது விதை போல...

விதைத்துக் கொண்டே இரு...
முளைத்தால் மரம் இல்லையேல்
மண்ணிற்கு உரம்.

--- நம்மாழ்வார்.

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:09


🙏இன்றைய சிந்தனை🙏

🌷02.10.2025🌷



நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்.

தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.

சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசை தான்.

மனதால் நினைக்க முடிந்ததை அடையவும் முடியும்!

இலக்கு என்பது இறுதிக் கெடுவுடன் கூடிய ஒரு கனவு!

ஒவ்வொரு தோல்வியும் அதற்குச் சமமான ஒரு வெற்றியின் விதையை உள்ளடக்கியே வருகிறது.

உங்களால் பெரிய விஷயங்களைச் செய்ய முடியவில்லை என்றால்..

சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.

எதற்காகவும் காத்திருக்க வேண்டாம்.

இந்த நிமிடமே சரியான நேரம்.

விட்டு விலகுகிறவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.

வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விட்டு விலகுவதில்லை.

நம்மால் நமது மனதிற்குள் அமைத்துக் கொள்வதே, நம்முடைய ஒரே வரம்பு.

எதை நாம் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையோ....

அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.

விருப்பமே அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.

உங்களுக்கான மிகப் பெரிய வாய்ப்பானது.....

நீங்கள் இப்பொழுது எங்கிருக்கிறீர்களோ அங்கேயே கூட இருக்கலாம்.

பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக் கூடும்.

வாழ்க வளமுடன்.


Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:08


🌹🌹🌹🌹🌹🌹🌹 *இன்றைய சிந்தனை*
(02.01.2025)
........................................................................

‘’அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!"
.................................................................................

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...

அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான நிறை குடங்களுக்கு அது வருவதில்லை...

வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள் தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்ற எண்ணம் ஒரு சிலருக்கு பிறந்து, தடுமாறி ஒரு செயலை செய்யத் தொடங்கியதும், ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, அவர்களை கூனிக் குறுகச் செய்கின்றது...

ஆணவத்தின் மூலம் வெற்றியோ, லாபமோ கிடைப்பது இல்லை; அடிதான் பலமாக விழுகிறது...

தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;

தான் அமைச்சராகி விட்ட போதையில் மக்களை அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகள்,

தான் சொன்ன ஏதோ ஒன்றை பொது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக நாளும் எதையாவது உளறிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;

இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய் விடு கின்றார்கள்...

‘எதற்கும் தான் காரணமல்ல'; என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை. ‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், பொது இடங்களில் அவமானப்படாமல் தப்பியது இல்லை.

ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; திரைப்பட நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு. ஆனால்!, அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு...

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயல் காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது...

ஆம் நண்பர்களே...!

🟡 'நம்மிடம் ஏதும் இல்லை' என்பது ஞானம். நம்மை தவிர ஏதும் இல்லை' என்பது ஆணவம்...!

🔴 ஞானம் , பணிந்து பணிந்து வெற்றி பெறுகிறது. ஆனால்!, ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது...!!

ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!!!

- உடுமலை சு. தண்டபாணி

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:07


_*தினசரி தியானம்...! தொண்டு...!!! ஜனவரி-02 (திருத்தம்) மார்கழி-17*_

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:07


02.01.2024 _ இன்றைய ராசி பலன்கள்

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:06


திருவெம்பாவை மார்கழி 18

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:06


திருப்பாவை மார்கழி 18

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:03


*📻 02.01.2025 RADIO NEWS 📻*

*📩 இன்று ஒரு தகவல் 📩*

_🔔 மின்சாரத்தை பார்த்ததுண்டா_

*🎙️ தென்கச்சி கோ சுவாமிநாதன்*

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:02


இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

🪷தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு ’சத்தியமூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.


🪷திருமெய்யம் குடைவரை

திருமயம் நகரின் தென்புறத்தில் அமைந்துள்ள சத்தியகிரி மலைச்சரிவில் அகழப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளுள் கீழ்புறத்தில் உள்ள குடைவரை திருமெய்யர் என்னும் சத்தியமூர்த்தி பெருமாளுக்கான கருவறையாகத் திகழ்கிறது.

🛕 இப்பகுதியை ஆண்டுவந்த முத்தரையர் கோமரபைச் சேர்ந்த அரசி பெருந்தேவி இந்தக் குடைவரையை விரிவாக்கி மண்டபம் கட்டியுள்ள செய்தியினை இங்குள்ள கல்வெட்டு சான்று பகர்கிறது.

🛕முத்தரையர்களைத் தொடர்ந்து பாண்டியர்கள், போசாளர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களின் ஆட்சிக் காலங்களில் இக்குடைவரைக் கோவில், திருச்சுற்று, மண்டபங்கள், திருக்குளம், என்று விரிவாக்கம் பெற்றுள்ளது.

🛕பள்ளிகொண்ட பெருமாள் கருவறை

இக்குடைவரைக் கோவிலின் மூலவரான ’திருமெய்யர்’, ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர் ஆவார்.

🛕திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆகும்.

🪷திருமெய்யம் குடைவரையின் பின்சுவரை ஒட்டி, 22 அடி நீளம் கொண்ட பள்ளிகொண்ட பெருமாள் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

🪷தலையை சற்றே உயர்த்திய நிலையில், மேற்கில் தலைவைத்து, கிழக்கில் கால்நீட்டியவாறு, ஆதிசேசன் என்ற பாம்பணையில் அரிதுயில் கொள்ளும் போகசயன நிலையில் காட்சிதருகிறார்.


🛕ஐந்துதலை சேசநாகம் பெருமாளின் தலைக்குமேலே படமெடுத்துக் குடையமைத்துள்ளது.

🪷பெருமாளின் நீட்டிய வலது கை பின்புறம் பாம்பணையை அனைத்தவாறும், இடது முழங்கை மடங்கிய நிலையில், விரல்கள் இடது மார்பைச் சுட்டியவாறும் காட்டப்பட்டுள்ளன.

🌺பெருமாளின் காலடியில் பூதேவி அமர்ந்து அஞ்சலி முத்திரை காட்டுகிறார்.

🪷பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து எழும் தாமரைத் தண்டின் உச்சியில் மலர்ந்த தாமரை மலரில் அமர்ந்த நிலையில் நான்முகன் நான்கு கரங்களுடன் காட்சிதருகிறார்.

🪷நான்முகனின் இருபுறமும் தட்சனும் அக்னியும் காட்டப்பட்டுள்ளனர்.

🛕நான்முகனின் இருபுறமும், பெருமாளின் ஆயுத-புருசர்களாகிய, பாஞ்சஜன்யன், சுதர்சனன், சாரங்கன், நந்தகன், மற்றும் கவுமோதகி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர்.

🛕சேசநாகம் அமைத்துள்ள குடையின் பின்னால் வணங்கிய நிலையில் கருடன் கமனாசனத்தில் உள்ளார்.


🛕 இப்பகுதியிலேயே மார்க்கண்டேயனும், விசுவக்சேனனும் காட்டப்பட்டுள்ளனர். சற்றே அருகில் காட்டப்பட்டுள்ள சிற்பம் பிருகு முனிவருடையதாகும்.

🪷பெருமாள் கால்நீட்டியுள்ள பகுதிக்கு மேலே சூரியனின் தலையும், சந்திரனின் தலையும், சற்று அடுத்து ரோகிணி எனக்கருதப்படும் பெண்ணின் சிற்பமும் காணப்படுகின்றன. இதனை அடுத்து நான்கு இசைக்கலைஞர்கள் (Celestial Musicianas) காட்டப்பட்டுள்ளனர்.

🛕மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது.

🛕‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.

🛕தாயார் உஜ்ஜீவனத்தாயார்

இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.

🪷இத்தாயாரை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம்; பல வாழ்க்கை நலன்களும் விளையும்; பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடனடியாக பலனளிக்கும் பரிகாரத் தலம் இத்தாயாரின் சந்நிதி.


🛕இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை.


🛕 தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும்.

🛕பழங் காலத்தில் தினமும் இரவில் தாயாருக்கு புட்டும் பாலும் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வரும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர் பண வசதி இன்மையால் இது நின்றுவிட்டது.

🛕தல வரலாறு

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர்.


🛕பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர்.

🛕பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர்.

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:02


🪷கண்விழித்த
பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.

🛕புராண வரலாறு

திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.


🛕சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.


🛕சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.

🛕சைவ வைணவ ஒற்றுமை

🪷திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன.

🛕புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.

🛕சத்திய புஷ்கரணி

இது அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாக கருதப்படுகிறது.

🛕இந்த சத்திய புஷ்கரணி திருமாலின் அஷ்டாச்சரம் போல எண் கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டியவர் காரைக்குடி *மெ.முருகப்ப செட்டியார் மகன் இராமநாதன்* செட்டியார். கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1919.

🛕கல்வெட்டுகள்
திருமெய்யம் பெருமாள் கோவில் வளாகத்தில் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 14 கல்வெட்டுகளை ப கொண்டுள்ளது.

🛕 தென்னிந்தியக் கல்வெட்டுகள் 22 ஆம் தொகுதி, பிரிவு இரண்டில் ஒரு கல்வெட்டும், நா.வள்ளி என்பவாரால் நான்கு கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

🛕குடைவரையின் காலம்
பிற்காலக் கல்வெட்டு ஒன்று, குடைவரையின் சீரமைத்தலைப் குறிப்பிடுகிறது.

🛕 இக்கல்வெட்டு திருமெய்யம் கோவிலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.


🪷 இக்கல்வெட்டு விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. முத்தரையர்கள், பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாக விளங்கினர்.


🛕விடேல் விடுகு என்பது இவர்கள் சூடிக்கொண்ட பட்டப்பெயராகும்.

🛕 சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி இக்குடைவரையின் முகப்பை ஒட்டித் தூண்கள் அமைத்து சீரமைத்துள்ள செய்தி இக்கல்வெட்டில் பதிவாகி உள்ளது.

🛕 புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் 13 ஆம் எண்ணுடன் பதிவாகியுள்ள இக்கல்வெட்டே திருமெய்யம் கோவில் கல்வெட்டுகளுள் காலத்தால் முந்தையது ஆகும். ஆகவே இக்குடைவரைக் கோவிலின் தொன்மை இக்கல்வெட்டின் காலத்திற்கும் முந்தையது ஆகும்.

🛕திரு மங்கையாழ்வார் பாடிய தலம்
ஆழ்வார்கள் பாடியருளிய (மங்களாசாசனம் செய்யப்பட்ட) 108 திவ்ய தேசங்களுள் திருமெய்யம் 106ஆவது திவ்யதேசம் ஆகும்.

🛕ஆழ்வார்களால் பாடல்பெற்ற 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன.

🛕திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

🛕திருமெய்யமும் இவற்றுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

🛕 திருமெய்யரைப் போற்றி திருமங்கை ஆழ்வார் பாடியருளிய ஒன்பது பாசுரங்கள் பெரியதிருமொழி (பாசுரம் எண்: 1090, 1206, 1524, 1660, 1760, 1852, 2016,) திருக்குறுந்தாண்டகம் (பாசுரம் எண்: 2050) மற்றும் சிறிய திருமடல் (பாசுரம் எண்: 2674) ஆகிய தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

🛕 கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

🛕சிற்பக்கலை சிறப்பு
தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை.

🛕தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.

🛕வேண்டுதல்கள்

குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்.

🛕பலன்கள் : தொன்நம்பிக்கைகள்
இத்தலம் பரிகார தலமாக பல்வேறு பிரச்சனைகளுக்குக் கூறப்படுகிறது.

🛕மனநிலை பாதிப்பு
திருமணத்தடங்கல்
கணவன் மனைவி ஒற்றுமையின்மை


🛕நேர்த்திக்கடன்
உஜ்ஜீவனத்தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல். வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல்.


🛕பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல்.


🛕திருவிழா
வைகாசி பௌர்ணமி தேரோட்டம். பத்து நாட்கள் திருவிழா.
ஆடிபூரம் திருவிழா, பத்து நாட்கள் திருவிழா.

🛕ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்கள் சிறப்பு உடையது.

Tamil Anmegam+Kolangal

02 Jan, 01:02


🛕மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.


🛕 திருக்கோயில் முகவரி

*திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள்* *கோவில்,திருமயம்,*திருமயம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு மாநிலம்.*

🙏🏻 நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻


சித்தமெல்லாம் சிவமயத்துடன் கடையேன் ஞான சிவம் என்கின்ற ஜெயம் ஶ்ரீ கா பா.ஞானசேகரன்.
9976460143


🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

Tamil Anmegam+Kolangal

07 Dec, 02:06


Very good Tamil News application
https://www.hindutamil.in/news/astrology/weekly-raasi-palangal/1342249-weekly-horoscope-for-mesham-to-meenam-for-dec-5-11.html Application for Tamil News https://play.google.com/store/apps/details?id=com.indianewsapps.tamilnews

Tamil Anmegam+Kolangal

07 Dec, 02:05


''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன்
. ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்து விடும் போது தான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.

எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

இறைவன் நம் அருகிலேயே தான் இருக்கின்றார்... ஆனால் நம் வினை மறக்கச் செய்துவிடுகிறது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

Tamil Anmegam+Kolangal

07 Dec, 02:05


"சாதாரண மனிதர்களுக்கு புரிவதில்லை"

உத்தவர் கண்ணனிடம் கேட்ட விளக்கங்கள்....

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.
உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.
அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,
எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்...

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.

தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!

நல்லவேளை துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம்...
கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:57


Very good Tamil News application
https://www.hindutamil.in/news/spirituals/1342411-panchami-theerthavari-festival-in-tiruchanur-devotees-makes-holy-dip.html Application for Tamil News https://play.google.com/store/apps/details?id=com.indianewsapps.tamilnews

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:56


*திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:41


*🦜இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன் 🦜*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:41


*🙏🛕அறிவோம் ஆலயம்🛕🙏*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:38


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔  *நாளும் ஒரு சிந்தனை*

மற்றவர்களின் இயலாமையை
தனக்கு சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்பவர்கள்
மிகப்பெரிய சந்தர்ப்பவாதிகள்..!!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     ஒரு கிண்ணம் தயிருடன்  சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசினால் பொடுகு உட்பட பல்வேறு பிரச்சனைகள் குணமாகும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் *'சிக்கிம்'* ஆகும்.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     போளி தட்டும்போது வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.

                    *-தாமஸ் புல்லர்*

📆  *இன்று டிசம்பர் 7-*
  
   ▪️ *கொடி நாள்.(இந்தியா)*

   ▪️ *1988-இல் 'யாசர் அராபத்' இஸ்ரேலை தனிநாடாக ஏற்றுக்கொண்டு அறிவித்தார்.*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
(பகிர்வு)

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:24


🌴🌷🌴😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*

*(07.12.2024)*

*༺🌷༻*
*🌸🌼🌿உடையார்; அடையார்.*
*༺🌷༻*

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இங்கிலாந்தில் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் மிகவும் கெட்டிக்காரர்; அப்போது அவர் காட்டிய துணிவை எல்லோரும் மெச்சினார்கள். ஆபத்தான காலத்தும் நம்பிக்கை தவறாமல் இருந்தார் சர்ச்சில்.
*༺🌷༻*
ஐரோப்பா மீது படை எடுப்பதாக இருந்ததால் கப்பல்கள் தங்க, மிதக்கும் ஹார்பர்கள் வேண்டியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே இங்கிலாந்தில் உள்ள சிறந்த எஞ்சினியர்களையெல்லாம் அழைத்து அந்த மாதிரி செய்து பார்க்கும்படி சொன்னார்; ஆனால் மகரயாழ் எஞ்சினியர்களோ "அது சாத்தியமில்லை" என்றார்கள்.
*༺🌷༻*
சர்ச்சில் உரத்த குரலில் "வீண் பேச்செல்லாம் வேண்டியதில்லை. செய்து பாருங்கள்; நீங்கள் மனது வைத்தால் அது நிச்சயமாக முடியும்" என்று கத்தினார்.
எஞ்சினீயர்கள் அப்படியே முயற்சிசெய்து 'மல்பெரி' என்ற ஒரு வகை மிதக்கும் ஹார்பர் செய்து முடித்தார்கள். பிரெஞ்சுக் கரையில் உள்ள நார்மண்டியின் மேல் படையெடுத்த போது அது பெரிதும் பயன்பட்டது.
*༺🌷༻*
இது பற்றி சர்ச்சில் கூறியதாவது, "நாம் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இது சாத்தியமில்லை; அது சாத்தியமில்லை என்று சொல்லுகிறோம். ஒன்று சொல்லுகிறேன் கேளுங்கள், கையில் ஒரு பென்சிலும், காகிதமும் வைத்திருங்கள்.
ஏதேனும் முடியாத காரியம் என்று தோன்றினால் உடனே அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் காகிதத்தை அடிக்கடி கண்ணில் படும் இடமாகப் பார்த்து ஒட்டி வையுங்கள். ஒவ்வொரு நாளும் அதில் எந்த அம்சங்கள் கூடியவரை சாத்தியம் என்று முயன்று பாருங்கள். நாலே நாளில் அதில் சில அம்சங்களையாவது செய்து முடிப்பீர்கள்.
இதே மாதிரி சற்று புத்தியைச் செலுத்தி முயன்று பார்த்தால் உங்களுக்கே எதுவும் சாத்தியம் என்ற உறுதி பிறக்கும்.
*༺🌷༻*
முயற்சியால் ஆகாத காரியம் எதுவும் இல்லை.

🌼முயற்சி உடையார்;
🌸இகழ்ச்சி அடையார்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
🤘 ~ திருவள்ளுவர்

✒️ ~ மனோரஞ்சிதா, ஆசிரியை
சத்தியமங்களம்
💐நன்றி🙏

*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:23


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:23


*தினசரி தியானம்...!*
*ஆணவம்...!!!*
*டிசம்பர்-07 கார்த்திகை-22*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:23


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:20


சிதமலரோ சுகமலரும்
பரிமளிக்க ஓங்கும்
திருச்சிற்றம் பலநடுவே
திருநடனம் புரியும்

பதமலரோ பதமலரில்
பாதுகையோ அவையில்
படிந்ததிருப் பொடியோஅப்
பொடிபடிந்த படியோ

இதமலரும் அப்படிமேல்
இருந்தவரோ அவர்பேர்
இசைத்தவரும் கேட்டவரும்
இலங்குமுத்தர் என்றால்

நிதமலரும் நடராசப்
பெருமான்என் கணவர்
நிலைஉரைக்க வல்லார்ஆர்
நிகழ்த்தாய் என்தோழி...!

திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய திருவடிப் பெருமை.
திருவருட்பா ஆறாம் திருமுறை.

ஐயனின் செம்பொற் சேவடிகள் போற்றி அன்பர்கட்கு நற்காலை வணக்கம்.

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:20


Pancha vaadyam.... 🕉️

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:08


*_3D Dangerous Mittai ! Don't purchase..!!!_*

_தற்போது மார்க்கெட்டில் வந்துள்ள 3 D அபாயகரமான மிட்டாய்..!!_

_குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை தவிர்க்கவும்..!!!._

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:02


*எங்கும் காண முடியாத காட்சி லிங்க வடிவில் உள்ள லிங்கோத்பவர்*

*இடம் : புனேவில் உள்ள த்ரிஷ்ருந்த கணபதி கோயில்*

*சிவாய நம 🙏*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:01


அருள் நேரம்
07=12=2024

Tamil Anmegam+Kolangal

07 Dec, 01:00


இன்றைய சிந்தனை
07-12-2024
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றனர்.

Tamil Anmegam+Kolangal

07 Dec, 00:58


🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩*

*💫07/12/2024சனிக்கிழமை*

*🟡காயத்ரி மந்திரம்*
****ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!*
*🟡விநாயகர் காயத்ரி*
****ஓம் தத்புருஷாய வித்மஹே*
***வக்ர துண்டாய தீமஹி*
*தந்நோ தந்தி ப்ரசோதயாத்*
*** *🟡ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*
*ஓம் தத்புருஷாய வித்மஹே*
**மஹா சேநாய தீமஹி*
*தந்நோ சண்முக: ப்ரசோதயாத்*
*🕉 ஓம் (குலதெய்வம்) நமஹ*
*🕉 ஓம் (இஷ்டதெய்வம்) நமஹ*
****🟡சூரிய பகவானின் காயத்ரி*
*ஓம் பாஸ்கராய வித்மஹே*
**திவாகராய தீமஹி*
*தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்*
*🕉️இன்றையகிழமை காயத்திரி*
*🟡சனி பகவான் காயத்ரி*
****ஓம் காகத்வஜாய வித்மஹே
*கட்கஹஸ்தாய தீமஹி
****தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
*🕉️இன்றைய தின நட்சத்திரம்*
*🟡 அவிட்டம் நட்சத்திரம்*
*ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்*
**🟡ஸ்ரீ ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*
*ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே*
* *ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ*

*🟡ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*
*ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*
**வாயு புத்ராய தீமஹி*
*தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்*
*‌
**🟡நவகிரக மந்திரம்,*
*ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச*
**குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:*

*🔯நோய்களை குணமாக்குவதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!*
****🔵தேவாரம்*
*மாசில் வீணையும்* *மாலை மதியமும்*
**வீசு தென்றலும்* *வீங்கிள வேனிலும்*
*மூசு வண்டறை* *பொய்கையும் போன்றதே*
**ஈச னெந்தை யிணையடி நீழலே.*

*🟢முருகப் பெருமானின் மந்திரம்*
****ஓம் பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!*
*🟣ம்ருத்யுஞ்ச மந்திரம்*
****ஓம் த்ரயம்பகம் யஜாமஹே*
***ஸீகந்திம் புஷ்டி வர்த்தகம்*
*உர்வாருகமிவ பந்தனான்*
**ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்*

*💹தன்வந்திரி மந்திரம்*
****ஓம் நமோ பகவதே வாஸுதேவாய*
***தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய*
*ஸர்வ ஆமய விநாசநாய* *த்ரைலோக்ய நாதாய*
**ஸ்ரீ மஹா விஷ்ணவே நம!:*

Tamil Anmegam+Kolangal

07 Dec, 00:56


எல்லோரும் என்ன பண்ணினார்கள்? என்று கேட்டார்.
''சொந்தக்காரங்கள் அவள் உடலை தகனம் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள் ''
மகரிஷி மெதுவாக பேசினார்:''ஆமாம் அப்படித்தான் கணபதி சாஸ்திரி மற்ற சில பேர்கள் விஷயத்திலும் நடந்தது''




''நான் எத்தனையோ தடவை சொன்னேன், எச்சம்மா, என்னுடைய ஆகார கவலை உனக்கு வேண்டாம். எனக்கு எதுவும் சமைச்சு அனுப்பாதேன்னு, கேட்கவே மாட்டா. நீங்கள் சாப்பிடலேன்னா நான் பட்டினி கிடப்பேன் னு பிடிவாதம் பிடிப்பா. நேத்திக்கு கூட அனுப்பினா, இனிமே எனக்கு எச்சம்மா சமையல் கிடையாது'' என்று எங்கோ வெறிக்க பார்த்துக் கொண்டே சொன்னார் பகவான். குரலில் விரக்தி சோகம் தெரிந்தது.



1908லிருந்து 38 வருஷம் ஒரு விரதமாக பகவானுக்கு மடி சமையல் செய்து பரிமாறியது இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.


முதல் நாள் சாயந்திரம் வேத பாராயணம் நடந்து. எல்லோரும் அந்த அறையை ப்ரதக்ஷிணம் வந்து நமஸ்கரிப் பார்கள். பகவான் பத்மாசனத்தில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். கண்களில் ஒளி பிரகாசமாக வீசியது. வழக்கத்திற்கு மாறாக இருக்க என்ன காரணம்?? மறுநாள் எச்சம்மா முக்தி அடைய ப்போகிறாள் என்று அவருக்கு ஞானதிருஷ்டியில் தெரிந்திருக்குமோ?



''நாகம்மா, அதோ பார் முதலியார் பாட்டி இருக்கிறாள் '' என்கிறார். உரிய காலத்தில் அந்த பாட்டியும் மகரிஷி அருளால் முக்தி பெறப்போகிறாள் என்று உணர்த்தி இருக்கிறார்.



Mantras and Miracles

Tamil Anmegam+Kolangal

27 Nov, 12:15


Tirumala #tirumalatirupatidevasthanam #DinakaranNews திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் https://www.dinakaran.com/tirupati_devotees_visit/

Tamil Anmegam+Kolangal

27 Nov, 11:33


மகாராஷ்டிராவின் சனி சிக்னாபூர் சனி கோயிலில் கடந்த 3 நாட்களாக பூனை ஒன்று இடைவிடாமல் மூர்த்தியை சுற்றி வருகிறது....

சாதாரணமாக பூனைகள் மனிதர்களைக் கண்டு பயந்து விலகி நிற்கும் .....ஆனால் இங்கு கடவுளுக்காக அலைகிறது.....யாருக்கும் தீங்கு செய்யாமல் சாமியார்களும் தடங்கல் இல்லாமல் கும்பிடுகிறார்கள்........ 🙏🏻

Tamil Anmegam+Kolangal

27 Nov, 07:37


*🎙️தென்கச்சி கோ.சாமிநாதன்*

*_வழங்கும்_*

*🪷 இன்று ஒரு தகவல் 🪷*

*‌📒📧📃மகிழ் தமிழ்🗞️📚📖*

*_✍🏻 27, புதன் ., நவம்பர், 2024_*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:37


திருவண்ணாமலை தத்துவம் _ வாரியார் சுவாமிகள் _ Thiruvannamalai Thathuvam _ Variyar

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:24


தென்கச்சி கோ ஸ்வாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்கள் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:23


*தினம் ஒரு திருமுறை*


*27.11.2024 - புதன்கிழமை*

*அருளியவர் :*
வேணாட்டடிகள்

*திருமுறை :*
ஒன்பதாம் திருமுறை

*நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து*

*பாடல் விளக்கம் :*
*திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! நின்ற இடத்தும் அமர்ந்த இடத்தும் கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த விடத்துத் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கின்றாய் அல்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:15


அருளாளர் பொற்பொதுவில்
அற்புதநாடகம் செய்
ஆனந்த வண்ணர்எனை
ஆளுடையார் சிறியேன்

தெருளாத பருவத்தே
தெருட்டிமணம் புரிந்த
சீராளர் அவர்பெருமைத்
திறத்தைஎவர் புகல்வார்

மருளாத ஆகமங்கள்
மாமறைகள் எல்லாம்
மருண்டனவே என்னடிஎன்
மனவாக்கின் அளவோ

இருளாமை என்றுறுமோ
அன்றுசிறி துரைப்பேன்
என்னவும்நாண் ஈர்ப்பதிதற்கு
என்புரிவேன் தோழி...!

திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய திருவடிப் பெருமை.
திருவருட்பா ஆறாம் திருமுறை.

ஐயனின் செம்பொற் சேவடிகள் போற்றி அன்பர்கட்கு நற்காலை வணக்கம்.

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:15




🤔  *நாளும் ஒரு சிந்தனை*

யாரோ ஒருவராக இருந்து
முக்கியமானவராக மாறி,
மீண்டும் யாரோவாகி போவதுதான்
இந்தக்கால உறவுகள்!

🏚️  *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     துளசி இலையை அரைத்து பூசி குளிக்க  அரிப்பு, சிரங்கு நோய்கள் குணமாகும்.

  📰  *நாளும் ஒரு செய்தி*

     சூடு ஆறிய உணவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மூட்டு வலி ஏற்படும்.   

🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     உப்பு ஜாடியில் ஈரம் கசிந்தால், ஜாடிக்குள் சிறிது அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரக்கசிவு இருக்காது.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     உழைப்பு உடலை பலப்படுத்துவதைப் போல, கஷ்டங்கள் மனதை பலப்படுத்துகிறது.
                      *-செனகா*

📆 *இன்று நவம்பர் 27-*
  
          🌸 *பிறந்த நாள்* 🌸

1930- *பி.வி.வனஜா பாய்* (இந்திய சமூக செயற்பாட்டாளர்)
  
         💐 *நினைவு நாள்* 💐

2008- *வி.பி.சிங்* (இந்தியாவின் 7-ஆவது பிரதமர்)


*(பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:14


*சிந்தனைக் களம்*
▪️▪️▪️▪️▪️▪️▪️
மன அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.

குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்னைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இல்லை என்றால் மன அழுத்தம் இருக்க வாய்ப்பு அதிகம். ஏன், அன்றாட வேலைகள் பாதிக்கப்படும்போதும் வழக்கத்திற்கு மாறாக ஒரு செயலைச் செய்யும்போதும்கூட மன அழுத்தம் ஏற்படலாம்.

குறிப்பாக தொற்றுநோய் காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த பலருக்கும் ஒருவித எரிச்சல், வெறுமை உருவாகியிருக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பர்.

மன அழுத்தம் என்பது அவ்வப்போது எல்லோரும் உணரக்கூடியதுதான். ஆனால், நீண்ட நேரம் அது தொடர்ந்தால்தான் பிரச்னை. 'இதுவும் கடந்து போகும்' என்று அந்த சூழ்நிலையைக் கடந்துவிடுங்கள்.

உங்கள் மனதை பாதிக்கக்கூடிய அந்த பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள். இல்லையெனில் அதை ஏற்றுக்கொண்டு அதனை விட்டுவிடுங்கள்.

மன அழுத்தத்தை சரிசெய்ய உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நாள் முழுவதும் உங்களை பிசியாக வைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.

பழைய நிலைக்குத் திரும்ப நண்பர்கள், குடும்பத்தினரின் உதவியை நாடலாம். அதன்மேலும், மன அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.

மனம் பாதிக்கப்பட்டால் உடல்நலமும் பாதிக்கப்படும். எனவே, இரண்டும் ஆரோக்கியமாக இருக்க மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.
👤 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:13


🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

#கோவில்கள்_பரிக்கிரமா_சுற்றி #வருவதன்_முக்கியத்துவம்_என்ன?

#பரிக்கிரமாவின்_முக்கியத்துவம்
பரிக்ரமா (சுற்றுதல்) அல்லது #பிரதக்ஷிணா என்பது இந்து மதத்திலும் மற்ற சில மதங்களிலும் உள்ள ஒரு சடங்கு, இதில் ஒருவர் ஒரு நபர் அல்லது ஒரு பொருளைச் சுற்றி கடிகார திசையில் சுற்றி வருவார். சமஸ்கிருதத்தில் '#பரி' என்றால் '#சுற்றி' என்றும், '#க்ரம' என்றால் '#போவது' என்றும் பொருள். எனவே, #பரிக்ரமா என்ற சொல்லுக்கு #சுற்றி_வருவது_என்று_பொருள். #பிரதக்ஷிணா என்பது இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது, அதாவது. '#ப்ரா' மற்றும் '#தக்ஷிணா (வலது), அதாவது '#வலது'.
நம்மில் பலர் ஆலயத்திற்கு (கோவிலுக்கு) கடவுளைதரிசனம் செய்ய (பார்க்க) செல்கிறோம்.தரிசனத்தின்அதிகபட்சபலனைப் பெற, ஒருவர் தெய்வத்தின் பிரதக்ஷிணை (சுற்றம்) செய்ய வேண்டும். பிரதக்ஷிணையைத் தொடங்க, ஒருவர்
#நமஸ்கார_முத்திரையில் (இரண்டு கைகளையும் இணைத்து, #அனாஹத்_சக்கரத்தின் மட்டத்தில் பிடித்துக் கொண்டு) #கர்ப_க்ருஹாவின் (சன்னதி கருவறை) #இடதுபக்கத்திலிருந்துசாதாரணவேகத்தில் நகரத் தொடங்கலாம். ஆன்மீக ஆற்றல் ஓட்ட அமைப்பில் நான்காவது மையம்.
சிலைகள், கோவில்கள், மரங்கள்/செடிகள், ஆறுகள், மலைகள், மனிதர்கள், புனித பீப்பல் மரம், துளசி (இந்திய துளசி செடி), மற்றும் அக்னி (புனித நெருப்பு அல்லது நெருப்பு கடவுள்) ஆகியவற்றைச் சுற்றி செய்யப்படும் பரிக்ரமா மற்றும் #அக்னி_பரிக்கிரமா இந்துக்களின் ஒரு பகுதியாகும். திருமண விழா. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு புனிதப் பொருளும் தெய்வீக சக்தியைக் கொண்டிருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த ஆற்றல் முக்கியமாக அந்த பொருளில் குவிந்திருந்தாலும், அது
#ஒருகுறிப்பிட்ட_தூரம்_வரை #நீண்டுள்ளது. எனவே, ஒரு நபர் அந்த பொருளைச் சுற்றிச் சென்றால், அவர் / அவள் அந்த புனித ஆற்றலுடன் தொடர்பு கொள்கிறார், இது ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் உதவியாகஇருக்கும்.
கடிகார திசையில் பரிக்கிரமா; வலது பக்கம் சுபமாகவும், இடது புறம் அசுபமாகவும் கருதப்படுகிறது. இந்துக்கள் இடது கையில் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதில்லை அல்லது புனிதமான பொருட்களைத் தொடுவதில்லை. நாம் கடிகார திசையில் செல்வதற்குக் காரணம், பூமியின் காந்தப்புலத்தின் திசையில்நமது #காந்தத்தருணத்தைஅதிகப்படுத்தி,அதிலிருந்து ஆற்றலைப் பெறுவதே ஆகும். பண்டைய இந்தியாவில்உள்ள பெரும்பாலானகோவில்கள்வெறும்கோவில்கள்அல்ல.அவைநேர்மறைஆற்றலின்மையங்களாகஇருந்தன.இப்பகுதியில் உள்ள காந்தப்புலத்தைஆய்வுசெய்தபிறகே கோவில்களுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. மக்கள்நம்பவில்லை,ஆனால்நம் முன்னோர்கள் இன்று நாம் அறிந்ததை விட அறிவியலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

#யானி காணி ச பாபானி ஜன்மான்தரகৃதாநிச் ।
தானி தானி வினஷ்யந்தி ப்ரதக்ஷிண படே படே ।।
சுற்றி வரும்போது சிலர் கோயிலின் சுவர்களை விரல்களால் தொட்டு, குலதெய்வத்திற்கு மரியாதை காட்டுவதற்காக விரலை மீண்டும் நெற்றியில் வைப்பார்கள். உங்கள் வலது புறத்தில் பொருளை வைத்திருந்தால் அதைச்செய்வதுஎளிது.
#நேர்மறைஆற்றலைப்_பெறுவதற்கும், #மனஅமைதியைப்_பெறுவதற்கும் கோவில்கள் இடம். கடந்த காலங்களில்நடந்த பல படையெடுப்புகளின் காரணமாக, இந்த சடங்குகளின் பின்னணியில் உள்ள உண்மைகளும் அறிவியலும் துண்டிக்கப்பட்டு, அதன் பின் வந்தவை அவற்றின் அறிவியல் விளக்கங்கள் இல்லாமல் வெற்றுசடங்குகள்மட்டுமேஎன்பதை வரலாறு வெளிப்படுத்துகிறது.
பரிக்கிரமாவின் பலன்கள்; இது அந்த நபரிடமிருந்து
#எதிர்மறையை_நீக்குகிறது/குறைக்கிறது. #எதிர்மறை_ஆற்றலை #நீக்குகிறது. இது ஒரு நல்ல உடற்பயிற்சி, குறிப்பாக நீங்கள் பல சுற்றுகள் செய்தால்.அந்த நபர் சுற்றி வரும்கடவுள்மகிழ்ச்சியடைந்துஅந்தநபரைஆசீர்வதிக்கிறார்.

🔯 பிரதக்ஷிணத்தின் வகைகள்:
~~~~~
#ஆத்ம_பிரதக்ஷிணா:

தன்னைச் சுற்றி வருவது. இது முக்கியமாக தினசரி வழிபாடு அல்லது சிறுநீர் கழிக்கும் பிரார்த்தனைக்குப் பிறகு செய்யப்படுகிறது.

#பாத_பிரதக்ஷிணா:

இது மிகவும் பொதுவான பரிக்ரமா வகை. பாதம் என்றால் பாதம். ஒரு நபர் பொருளைச் சுற்றி காலில் நடக்க வேண்டும்.

🍎தண்டா பிரதக்ஷிணா:
~~~~~~
தண்டா என்றால் ஒரு குச்சி. இது நடைபயிற்சி மற்றும் தொழுதலின் கலவையைக் கொண்டுள்ளது. நபர் ஒரு அடி எடுத்து, பின்னர் சாஷ்டாங்கமாக இருக்க வேண்டும் (தலைக்கு முன்னால் நமஸ்தே நிலையில் கைகளால் குச்சியைப் போல தரையில் படுத்துக் கொள்ள வேண்டும்). பின்னர் எழுந்து மேலே உள்ள படிகளை மீண்டும் செய்யவும். இந்தவழியில்,நபர்பொருளைச் சுற்றியுள்ள அனைத்து சுற்றுகளையும் முடிக்க வேண்டும். அதைச் செய்வது சற்று கடினமானது.

🍎 அங்க பிரதக்ஷிணா:
~~~~~~
அங்க என்றால் உடல். இவ்வகையில், ஒருவர் மேலே குறிப்பிட்டுள்ளபடி சாஷ்டாங்கமாக பணிந்து, பொருளைச் சுற்றிச் சுழற்ற வேண்டும். இது பரிக்ரமாவின் கடினமான வகைகளில் ஒன்றாகும்.

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:13


🍎 ஆதி பிரதக்ஷிணம்:
~~~~~
இது பாத பிரதக்ஷிணத்தைப் போன்றது, ஆனால் அவைகளுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் முந்தையஅடிச்சுவடுகளுக்குஅடுத்தபடியாகமிகநெருக்கமாக படிகள் எடுக்கப்படுகின்றன.

🍎 அக்னி பரிக்ரமா:
~~~
நெருப்பைச் சுற்றி வலம் வருவது இந்து திருமணத்தில் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். மணமகனும், மணமகளும் 7, 3 அல்லது 4 முறை கடிகார திசையில் நெருப்பை சுற்றி வருவார்கள். இந்த சடங்கு அக்னிபரிநயனம் அல்லது மணகல் பெரா என்று அழைக்கப்படுகிறது.
தாவரங்கள் மற்றும்/அல்லது மரங்களைச் சுற்றியுள்ள பரிக்கிரமா:

🍎 வாட் பௌர்ணிமா என்பது ஒரு இந்து பண்டிகையாகும், இது முக்கியமாக திருமணமான ஒரு இந்துப் பெண் தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடுகிறது. பண்டிகை நாளில், இந்துப் பெண்கள் ஒரு ஆலமரத்தை வலஞ்சுழியில் சுற்றி வந்து, அதைச் சுற்றி ஒரு வெள்ளை நூலை சுற்றிக் கொள்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள புனித மரங்களில் பீப்பல் ஒன்றாகும். குறிப்பிட்ட நாட்களில் பீப்பல் மரத்தைச் சுற்றி வருவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான இந்துக்களின் வீடுகளுக்கு முன்பாக துளசி பிருந்தாவனம் உள்ளது. வீட்டில் உள்ள பெண்கள்தினமும்இவளைவணங்கிசுற்றிவருவார்கள். துளசி லட்சுமி தேவியின் அவதாரம். எனவே, துளசி செடியை சுற்றி வருவது அம்மனை மகிழ்விக்கிறது.
வெவ்வேறு எண்ணிக்கைக்கான காரணம்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🔥 ஒரு தெய்வத்தைச் சுற்றிச் செய்யப்படும் பிரதக்ஷிணங்கள்;

🍁 ஆண் தெய்வங்களுக்கு, பிரதக்ஷிணங்களின் எண்ணிக்கை 'இரட்டை' எண்களிலும் (0, 2, 4, 6) மற்றும்

🔥 பெண் தெய்வங்களுக்கு ஒற்றைப்படை எண்களிலும் (1, 3, 5, 7) இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ) காரணம் பின்வருமாறு. 'பூஜ்யம்' என்பது பிரம்மனைக் குறிக்கிறது, அதாவது பிரபஞ்சத்தின் படைப்பாளரான உச்ச கடவுள். ‘பூஜ்ஜியத்தில்’ இருந்து, ‘ஒன்று’ என்ற எண், அதாவது மாயா (பெரிய மாயை), அதாவது பிரபஞ்சம் உருவானது. மாயா பெண்பால், மற்றும் 'ஒன்று' எண் ஒரு 'ஒற்றைப்படை எண்'.
எனவே, பெண் தெய்வங்களைச் சுற்றி பிரதக்ஷிணை 'ஒற்றைப்படை' எண்களில் செய்யப்பட வேண்டும். 'இரட்டை' எண்கள் 'பூஜ்ஜியத்துடன்' தொடர்புடையவை, எனவே, ஆண் தெய்வங்களைச் சுற்றி பிரதக்ஷிணை 'இரட்டை' எண்களில் செய்யப்பட வேண்டும். ஆண் தெய்வங்கள் பெரும்பாலும் ஆனந்த் அல்லது சாந்தியுடன் தொடர்புடையவை, அதேசமயம் பெண் தெய்வங்கள் பெரும்பாலும் சக்தியுடன் தொடர்புடையவை. வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளின்படி, ஒவ்வொரு தெய்வத்தைச் சுற்றி எத்தனை முறை பிரதக்ஷிணை செய்ய வேண்டும் என்பது வேறுபட்டது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில எடுத்துக்காட்டுகள் இந்த அறிக்கையை ஆதரிக்கின்றன.

🔥 பிரதக்ஷிணைகளின் எண்ணிக்கையானது சகுன் (பொருள்) & நிர்குன் (பொருள் அல்லாதது), அல்லது தாரக் (இரட்சகர்) &– மரக் (அழிப்பவர்) தெய்வத்தின் வடிவத்தின் படி அல்லது பிரதக்ஷிணை செய்யும் நபரின் நோக்கத்தின்படி மாறுகிறது. எண் கணிதத்தின் படி, தெய்வங்களின் வெவ்வேறு பெயர்களுடன் தொடர்புடைய எண்கள் வேறுபட்டவை. ‘தனிமனிதர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தந்த சுபாவங்களைப் பொறுத்தமட்டில் கடவுளை உணர்ந்து கொள்வதற்கு எத்தனையோ பாதைகள் உள்ளன’ - இது இந்து தர்மத்தின் முக்கியமான கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, பிரதக்ஷிணங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை; அவை சூழ்நிலைக்குஏற்பமாறுபடும். தெய்வத்தின் ஆற்றல் மற்றும் செயல்பாட்டின் படி:

ஏகாந்தேவ்யான்ரவௌசப்த த்ரிணிகுர்யாদ்விநாயகே ।
சத்வாரிகேஷ்வேகுர்யாத் ஷிவேசார்த்தபிரதக்ஷிணம் ।।

🌹தேவியைச் சுற்றி ஒரு பிரதக்ஷிணையும்,

🌹சூரியன் கோயிலைச் சுற்றி ஏழும்,

🌹ஸ்ரீ கணபதியைச் சுற்றி மூன்றும்,

🌹ஸ்ரீவிஷ்ணுவைச் சுற்றி நான்கு பிரதக்ஷிணையும்,

🌹 சிவன் கோயிலைச் சுற்றி ஒன்றரையும் செய்ய வேண்டும்.

🌹ஸ்ரீவிஷ்ணு: ஸ்ரீவிஷ்ணுவிற்கு நான்கு பிரதக்ஷிணங்கள் விதிக்கப்பட்டுள்ளன, ஏனென்றால் விஷ்ணு தத்துவம் நான்கு செயல்களின் தெய்வீக ஆற்றல்களைக் கொண்டுள்ளது, பிரார்த்தனை, பாராயணம், புகழ் பாடல்கள் மற்றும் பாதுகாப்பு.

🌹சிவலிங்கத்தின் பாதி பரிக்கிரமா?
பிரபஞ்சத்தின் படைப்பாளரும் மோட்சத்தின் தலைவருமான அவரது பக்தர்களால் போலேநாத் என்றும் மகாதேவ் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் அனாதி (ஆரம்பம் இல்லாமல்) மற்றும் அனந்த் (எல்லையற்ற), அவர் ஷுன்யா (பூஜ்யம்) மற்றும் ஏகயா (ஒன்று). சிவன் என்பதுஉயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் பற்றிய முழுமையான அறிவு. அவர் தாராள மனப்பான்மை உடையவர், கருணையுள்ளவர், மங்களகரமானவர்.அனைத்து சிவலிங்கங்களிலும் லிங்கத்தின் மீது ஊற்றப்படும் தண்ணீர்/பாலை எடுத்துச் செல்ல நிர்மிலி என்ற கடையடைப்பு உள்ளது. கடவுளுக்கு நாம் அளிக்கும் பொருள்கள் புனிதமானவை என்று இந்துக்கள் நம்புகிறார்கள், அதை கடக்கவோ அல்லது மிதிக்கவோ கூடாது.

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:13


இது அந்த தெய்வத்தை அவமதிப்பதாகவும், அவ்வாறு செய்பவருக்கு தீங்காகவும் கருதப்படுகிறது. எனவே, ஒரு சிவலிங்கத்தின் முழு பரிக்ரமையும் செய்யக்கூடாது.
சிவனின் சக்தி மிகவும் கடுமையானது, அதன் வரிசையில் யாரும் தலையிடவோ அல்லது வரவோ முடியாது என்று கூறப்படுகிறது. யார் செய்தாலும்சிவபெருமானின்கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

🔥 ஒரு பழைய புராணத்தின் படி, ஒருமுறை சிவபக்தரான கந்தர்வ மன்னன் பரிக்கிரமாவின் போது சிவலிங்கத்தின் மீது 'அபிஷேகம்' செய்யும் போது நிர்மிலியை மிகைப்படுத்திவிட்டான். இதன் விளைவாக அவனதுவலிமை, ஆற்றல் மற்றும் அறிவுத்திறன் அனைத்தையும் இழந்தான். நிர்மிலி சிவலிங்கத்தின் ஒரு புனிதமான பகுதியாகும்.எனவே, நிர்மிலியின் மேல் செல்வதைத் தவிர்க்க சிவலிங்கத்தின் பாதி பரிக்ரமாவை மட்டுமே செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
சிவ தத்துவம் என்பது ‘ஓம்’ என்பதன் பாதிப் பகுதியின் குறியீடாகும், இது கலைத்தல் செயல்பாட்டைக் குறிக்கிறது. எனவே, அரை பிரதக்ஷிணை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. பாதிப் பகுதியானது ‘ஆஸ்’ எனப்படும் பகுதி, அதன் செயல் பாடுகளுக்கு ‘ஓம்’ உச்சரித்த பிறகும் எஞ்சியிருக்கும். ('ஆஸ்' என்பது ஒரு பொருளை மற்றொரு பொருளின் மீது தாக்கிய பின் எஞ்சியிருக்கும் நுட்பமான ஒலி அலைகள். உதாரணமாக, ஒரு தேவாலயத்தில் மணி அடிக்கப்படும் போது சூழலில் இருக்கும் நுட்பமான ஒலி அலைகள். இந்த நுட்பமான ஒலி அலைகள் 'ஆஸ்' எனப்படும். .)
இறைவி: ‘முழு நிறுத்தம்’ என்றால் ‘ஆஸ்’ வெளிப்பட்ட உடனேயே கரைந்துவிடும் புள்ளி. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது 'முழு நிறுத்தத்தின்' செயல்பாட்டைக் குறிக்கும் வரி.

🔥 எனவே, அம்மன் கோயிலுக்கு ஒரே ஒரு பிரதக்ஷிணை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

🔥சூரியன்: தேஜ் தாரணா (சூரியனின் கதிர்வீச்சின் ஆற்றல்) சூரியனிலிருந்து பூமியின் சுற்றுப்பாதையில் வரும்போது, ​​அது ஏழு நிலைகளை இடைமறித்து, வாயு-தேஜ், தேஜ்-வாயு, தேஜ் என்ற ஊடகத்தின் மூலம் சகுன் மட்டத்தில் மாறுகிறது. , தேஜ்-அபா, அபா-தேஜ், தேஜ்-ப்ருத்வி மற்றும் ப்ருத்வி-தேஜ் கோட்பாடுகள். இதன் அடையாளமாக 7 பிரதக்ஷிணங்கள் செய்யப்படுகின்றன. (குறிப்பு: வாயு = முழுமையான காற்று, தேஜ் = முழுமையான நெருப்பு, ஆப் = முழுமையான காற்று, ப்ருத்வி = முழுமையான பூமி)

🔥 ஸ்ரீ கணபதி: ஸ்ரீ கணபதிஇச்சாசக்தியின்(விருப்பத்தின்ஆற்றல்) சின்னம்.இச்சாசக்தியின்அலைகள்குறுகியகாலத்தில்ஒருமுக்கோண உருவத்திற்குஈர்க்கப்படுகின்றனமூன்றுஓட்டங்களின் சங்கமத்தின் அடையாளமாக, ஸ்ரீ கணபதியின் மூன்று பிரதக்ஷிணங்கள் செய்யப்படுகின்றன.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:08


புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் சிறப்புக்கள்!!

இந்தியா மட்டுமின்றி உலகிலேயே மணக்குள விநாயகர் கோயிலுக்கு என்று சில சிறப்புகள் உள்ளன. அந்தக் கோயிலுக்கு எவ்வாறு செல்வது என்று பார்ப்போம்.

இந்தியா மட்டுமின்றி உலகிலேயே மணக்குள விநாயகர் கோயிலுக்கு என்று சில சிறப்புகள் உள்ளன. அந்தக் கோயிலுக்கு எவ்வாறு செல்வது என்று பார்ப்போம்.

மணக்குள விநாயகர் கோயில் சிறப்புக்கள்

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று. புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான கோயில். புதுச்சேரி மக்கள் இந்த விநாயகரை வெள்ளைக்காரன் விநாயகர் என்றுதான் அழைக்கின்றனர். இந்தக் கோயிலை இடிப்பதற்கு பல முறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை காப்பாற்றி வந்துள்ளனர்.

வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும் இந்தக் கோயில் முன்பு பவனேஸ்வர் விநாயகர் என்று அழைக்கப்பட்டு தற்போது மணக்குள விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது. இது இந்தக் கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

விநாயகர் சித்தி, புத்திகளுடன் கிழக்குப் பார்த்து அமர்ந்து இருக்கிறார். கோயிலுக்கு தங்க ரதம் உள்ளது. மரத்தினால் ஆன ரதம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ரதத்திற்கு 7.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின்போது இந்த ரதம் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். கோயிலில் நர்த்தன விநாயகரும் இடம் பெற்றுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே தொல்லைகாது சித்தர் சமாதி அடைந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதவிர பிரம்மோற்சவம், பவித்ரா உற்சவம், மாத சதுர்த்தி ஆகியவையும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் இங்கு 24 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோயில் திறந்து இருக்கும் நேரம்: காலை 5.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

புதுச்சேரி பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோயிலுக்கு வாடகைக் கார் அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும்.✍🏼🌹

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:08


_*தினசரி தியானம்...! விநயம்...!!! நவம்பர்-27 கார்த்திகை-12*_

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:06


*🌎 27.11.2024 ராசி பலன்கள்... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:05


*🪦 திருமந்திரம் - 628... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:04


*🌹 கவிஞர் கண்ணதாசனின் _ அர்த்தமுள்ள இந்து மதம்... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:04


*🦚 கந்த குரு கவசம் _ 14... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:03


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

27 Nov, 01:03


*”ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்பாலிக்கும்*
*ஸ்ரீ ரங்கநாதருக்கு (11.12.2024) அன்று சமர்ப்பிக்க உள்ள புதிய கிரீடம்”🎯💯*

*🙏ஓம் நமோ🙏*

*🙏ரங்கநாதாய🙏*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 11:38


ஏகாதசியில் கேளுங்கள் அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ வெங்கடேசம் மனசா ஸ்மராமி

Tamil Anmegam+Kolangal

26 Nov, 05:02


*🎙️தென்கச்சி கோ.சாமிநாதன்*

*_வழங்கும்_*

*🪷 இன்று ஒரு தகவல் 🪷*

*‌📒📧📃மகிழ் தமிழ்🗞️📚📖*

*_✍🏻 26, செவ்வாய் ., நவம்பர், 2024_*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:27


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:27




🤔   *நாளும் ஒரு சிந்தனை*

ஒவ்வொரு செயலுக்கும்
அதற்கு இணையான
எதிர் செயல் உண்டு என்பதை
நினைவில் கொண்டு சிந்தித்து செயல்படுவோம் ...!!!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     இளநீரை தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்கிறது.

📰  *நாளும் ஒரு செய்தி*

     சோயாபீன்ஸ் சீன நாட்டில் தோன்றியது.

🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     ஆப்பத்துக்கு மாவு கரைக்கும் போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்தால், ஆப்பம் விரைவாக காய்ந்து போகாது.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     மனிதர்கள் அன்புடன் ஒன்று சேர்ந்தால் அதன் சக்தி அளவிட இயலாது!

              *-வல்லபாய் பட்டேல்*

📆. *இன்று நவம்பர் 26-*
  
   ▪️ *அரசியல் சாசன நாள்.* (இந்தியா)

   ▪️ *1949-இல் அம்பேத்கார் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.*

         🌸 *பிறந்த நாள்* 🌸

1954- *வேலுப்பிள்ளை பிரபாகரன்* (விடுதலைப் போராளி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்)


( *பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:23


*காலை நேர சிந்தனை*
( 26.11.2024)

மூன்று_உலகம் ' என்கிறோம்.

உண்மையில் அவைகள்,
இந்த ஒரு உலகத்தின்
மூன்று உட் பிரிவுகளே.

1. இச்சை உலகம்
2. சிந்தனை உலகம்
3.வஸ்து உலகம்
( பொருட்கள் நிறைந்த உலகம் )

இந்த மூன்றுமே
ஞான வழியின் தடைகளே.

ஒரு ஜென் மாணவ துறவி,
'குரு - கண்டோ ' என்பவரிடம்,

குருவே,
மூன்று உலகங்களும் ஒன்றாக சேர்ந்து என்னை பயமுறுத்தும் போது,
அந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் ? ' என்றார்.

குரு - கண்டோ ' எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

சில நேர அமைதிக்குப் பின்,
மாணவர் மீண்டும் அதே கேள்வியை குருவிடம் கேட்டார்.

மீண்டும் அமைதிதான் பதில்.

மூன்றாம் முறை
மாணவன் அதே கேள்வியை
கேட்கும் முன் குருவே பேசினார்.

ஒரு குரு நாதர் எதை சொன்னாலும்,
அதை செய்து முடிப்பதுதான்,
ஒரு நல்ல மாணவனுக்கு அழகு.
நான் சொல்வதை செய்வாயா ? ' என்று கேட்டார்

மாணவன் அவரை வணங்கி நின்றான்

வணங்கி நிற்பதுதான்
ஜென் முறையில் சம்மதத்தை தெரிவிப்பது.

வாய் வழி உறுதி மொழியை
அவர்கள் எப்போதும்,
எவருக்கும் தருவதில்லை.

மீண்டும் ' குரு - கண்டோ ' வே
பேசினார்,

' நான் இப்போது வெளியே செல்கிறேன்.

நான் திரும்பி வருவதற்குள்,
இதோ  எதிரே தெரியும் அந்த
பெரிய மலையை பெயர்த்து
நமது ஆஸ்ரமத்திற்கு அருகில் வைக்க வேண்டும் 'என்று சொல்லி விட்டு,

அதிர்ச்சியடைந்த
தனது மாணவனை கவனிக்காதது போல் வெளியே சென்று விட்டார்.

அவர் திரும்பி வரும்போது,
மாணவன் அமைதியாக
அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.

குரு வருவதைப் பார்த்ததும்,
எழுந்து அவரை வணங்கினான்.

தன்னை வணங்கி நின்ற மாணவனை பார்த்து,

மலையை பற்றி எதுவுமே பேசாத குரு,

அவனிடம் ஏதேனும்
குற்ற உணர்வு தெரிகிறதா
என்று அவனை ஆழமாகப் பார்த்தார்.

பிறகு அவனிடம்,

'இந்த உலகம்
மூன்று பிரிவாக இருந்தாலும் சரி,
நூறு பிரிவாக இருந்தாலும் சரி,
அது அதுவாக பேசாமல் தான் இருக்கும்

அதுவாக  வந்து உன்னை
பயமுறுத்தாது

மூன்று உலகங்களும்
நல்லவையும் அல்ல,
தீயவையும் அல்ல.

சரியானவையும் அல்ல,
தவறானவையும் அல்ல.

உலகம் என்ற ஒன்று இருக்கிறது.
அவ்வளவுதான்.

அதில்,
மழை, காற்று, வெப்பம், பனி,
புயல், குளிர்ச்சி இவையெல்லாம் இயல்பாய் நடக்கும் இயற்கையின் சுழற்சி.

உயிரினங்களின்
பிறப்பு, வளர்ச்சி, இளமை, முதுமை
இறப்பு இவை அனைத்தும்
இயற்கையாக வந்து போகக்
கூடியவையே.

நான் சொன்ன இவையனைத்தும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாதவை.

மனிதன் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ள வேண்டியவை.

அவைகளை
எதிர்த்து நிற்காமல்,
அமைதியாக ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல வேண்டியவைகளே.

ஏன் இவ்வளவு வெயில் அடிக்கிறது ?

ஏன் இவ்வளவு மழை பெய்கிறது ?

ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன ?

ஏன் உலகம் இப்படி பயமுறுத்துகிறது ?

இது போன்ற மற்ற அனைத்து கேள்விகளும்
நமது சிந்தனையில் தேவையில்லாமல் தோன்றி நமக்கு நாமே பயமுறுத்தி கொள்பவை தான்.

நான் உன்னை அந்த மலையை பெயர்த்து வர சொன்னேன்.

நீ ஏன் அமைதியாக அமர்ந்திருந்தாய் ?

உனக்கும் தெரியும்,
எனக்கும் தெரியும்
அது முடியாது என்று.

அதுபோல் தான் மனது உறுதியாக நினைக்க வேண்டும்,
இயற்கையை எதிர்த்து
நிற்க முடியாது என்று.

அதனுடன் உடன்பட்டு
இயல்பாக செல்வது தான்
அதை கடந்து செல்லும்
ஒரே வழி என்றார்
குரு - கண்டோ.

இந்த ஜென் குருவின் உபதேசத்தை படித்த சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம்.

இயற்கையை எதிர்க்கக் கூடாது என்றால்,
இத்தனை இயற்கை ஆராய்ச்சி நிகழ்வுகள் எப்படி நடந்திருக்கும் ?

ஆராய்ச்சி என்பதே இயற்கையை ஏற்றுக் கொள்வதுதான்.

அதன் இயல்பை அப்படியே
ஆராய்வது தான்.

சந்திரனில் இறங்கிய மனிதர்கள்,
முதலில் இயற்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, வானிலையின்
இயற்கை இயல்புகளைதான் ஆராய்ந்தார்கள்.

இயற்கையை எதிர்த்து போரிட்டு,
நிலவுக்கு போகவில்லை.
போகவும் முடியாது.

மற்ற அனைத்து ஆராய்ச்சிகளும் அதுபோலவே தான்.

ஓஷோ

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:22


🌴🌷🌴😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*

*(26.11.2024)*

*༺🌷༻*
*🌸🌼🌿கேடது இல்லான் பாடது இல்லான்.*
*༺🌷༻*

சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்றில் பிரிட்டிஷ் சோல்ஜர்களுக்குச் சீனச் சிறுவன் ஒருவன் காப்பி தயாரித்துக்- கொண்டு வந்து சப்ளை செய்வானாம்.

அவன் தலை மழமழவென்று வழுக்கையாகயிருப்பது கண்டு பிரிட்டிஷ். சோல்ஜர்களுக்கெல்லாம் குஷி பிறந்து விடும்.
*༺🌷༻*
அவனை எப்போது கண்டாலும் ரொட்டி வெண்ணெய் முதலியவைகளை அவன் தலைமீது எறிந்து கேலிசெய்து சிரிப்பார்கள்.

அந்தச் சிறுவனோ இதையெல்லாம் பொறுமையாகச் சகித்துக் கொள்வான்.
*༺🌷༻*
பலநாள் கழித்து அந்த சோல்ஜர்களுக்கே இவனுடைய பொறுமையைக் கண்டு மகரயாழ் மனம் இளகிவிட்டது.

ஒருநாள் இவன் வரும்பொழுது சோல்ஜர்களின் தலைவன் இவனைப்பார்த்து "பையா! உனது சாந்த குணத்தை மெச்சுகிறோம். இனிமேல் நாங்கள் உன் தலைமீது எதையும் வீசுவதேயில்லை என்று முடிவு செய்திருக்கிறோம் " என்றார்.
*༺🌷༻*
சிறுவன் மிகவும் நிதானமாக "நன்றி சார்! அப்படியென்றால் நானும் இனிமேல் உங்களுக்குச அழுக்கு தண்ணீரில் காபி தயாரித்துக்கொண்டு வருவதில்லை என்று முடிவு செய்து உள்ளேன்" என்று கூறினான்...!!!
அவன் கூறியதை கேட்டு சோல்ஜர்கள் திகைத்து போய் நின்றனர்.
*༺🌷༻*
🌿நீதி: "தன் வினை தன்னைச் சுடும்".

"தீமையைச் செய்! தீமையைப் பெறு".

"கேடது இல்லான் பாடது இல்லான்".
(One free from loss, free from suffering.)

*✒️ ~ மனோரஞ்சிதா, ஆசிரியை*
*சத்தியமங்களம்*
*💐நன்றி🙏*

*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:22


_*தினசரி தியானம்...! நாராயண சேவை...!!! நவம்பர்-26 கார்த்திகை-11*_

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


*🪦 திருமந்திரம் - 627... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


*🌎 26.11.2024 ராசி பலன்கள்... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். என்ன ஒரு மன நிம்மதி. என்ன ஒரு திருப்தி.
கடவுளை நம்புவதால் இவை கிடைக்கும்போது வேறென்ன வேண்டும்.
பணத்தை வைத்து இந்த சந்தோஷத்தை பெற வாய்பே இல்லை.

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


*🦚 கந்த குரு கவசம் _ 13... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


காசி - வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவிலிருந்து - Kaasi by Variyar Swamigal

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


உன்னுயரம் உனக்குத் தெரியும் _ இன்று ஒரு தகவல் _ Thenkachi Ko Swaminathan Stories

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:19


*தினம் ஒரு திருமுறை*


*26.11.2024 - செவ்வாய்க்கிழமை*

*அருளியவர் :*
வேணாட்டடிகள்

*திருமுறை :*
ஒன்பதாம் திருமுறை

*ஆயாத சமயங்கள் அவரவர்கண்*

*பாடல் விளக்கம் :*

*திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஆராய்ச்சியில்லாத புறச்சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு முன்னே அடியேனை மனக்கவலையும் உடற்பிணியும் வருத்துமாறு அடியேன் இருக்கின்ற காரணத்தால், `இந்த அடியவனைப் பேய் என்று கருதி இவனுடைய ஆண்டானும் இகழ்ந்து புறக்கணித்து விட்டான்` என்று நாய் போன்ற அடியேனை அவர்கள் எள்ளி உரைக்குமாறு செய்துவிட்டாய்.*

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:09


ஆன்மீக சொற்பொழிவு வீடியோ

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:09


*🌙சிவ தரிசனம்🔱*
*26.11.2024*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தியாகராஜர் கோவில்*
*சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ளது தியாகராஜர் கோவில். பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலினை 11-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் புதுப்பித்து விரிவுபடுத்தியுள்ளார். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோவிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டது என்பது சிறப்புடையது.*

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

*🌙ஓம் நம சிவாய🔱*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:04


108

இந்து மதத்தில் 108 என்ற எண் ஏன் முக்கியமானது?

இந்து மதத்தில் 108 புள்ளிவிவரங்கள் அவற்றின் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது.

ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது.

பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108.

ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.

ஒவ்வொருவரது உடலும் அவரவர் விரலின் பருமனால் ,
கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது, சரியாக 96 மடங்கு இருக்கிறது.

பரம்பொருள் என்னும் பரமாத்மன் மனிதர்களின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான்.

ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத் தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவ்தைக் குறிக்கிறது!

அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது!

ருத்ராட்ச கோஷத்தில் 108 மணிகள் உள்ளன.

108 முறை இறை நாமங்களை சொல்கிறோம்..

108 என்பது சிவபெருமானின் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. தலைமை சிவலிங்கங்களின் எண்ணிக்கை 108 ஆகும்.

இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன.

உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.

சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன.

நேபாளத்தில் முக்திநாத்தில் உள்ள புனித தீர்த்தங்களின் எண்ணிக்கையும் 108 தான்!

காஷ்மீர் சைவத்தின் படி தத்துவங்கள் 108.

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108.

சிவ தாண்டவத்தின் சிவனின் தாண்டவ பேதங்கள், கரணங்கள் 108 தான்!

நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாள சாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும் இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர்.

‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108 தான்!

கௌடியா வைணவத்தின் கீழ் பிருந்தாவனில் மொத்தம் 108 கோபியர்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கோபிகளின் பெயர் 108 மணிகளால் உச்சரிக்கப்பட்டால், அது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.

ஸ்ரீ வைணவ தர்மத்தின் கீழ், விஷ்ணுவின் 108 தெய்வீக பகுதிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன,

அவை 108 திவ்யாதேஷம் எனும்
திவ்யதேசம் என்று வழங்கப்படுகிறது.

கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயிலின் செதுக்குதல் கடல் மான்ஸ்ட்ரோசிட்டி நிகழ்வை சித்தரிக்கிறது. செதுக்குதல் மந்தர் மலையில் கட்டப்பட்ட வாசுகி நாகத்தின் இருபுறமும் 54 தேவ் மற்றும் 54 பேய்களை (108) சித்தரிக்கிறது.

ஜோதிடத்தில் மொத்தம் 12 குவியல்கள் உள்ளன,
மேலும் இந்த குவியல்கள் 9 குவியல்களை சித்தரிக்கின்றன.

இந்த இரண்டு எண்களைப் பெருக்கினால் உங்களுக்கு 108 புள்ளிவிவரங்கள் கிடைக்கும்.

பௌத்த மதத்தின் பல கிளைகளில் அந்த நபருக்குள் 108 வகையான உணர்ச்சிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

லங்காவத்ரா சூத்திரத்தில் போதிசத்வா மகாமதி புத்தரிடம் 108 கேள்விகளைக் கேட்கிறார்.
மற்றொரு கண்டத்தில், புத்தர் 108 தடைகளை விவரிக்கிறார்.

பல புத்த கோவில்களிலும் 108 படிக்கட்டுகள் இருக்கிறது.

ஜப்பானிய கலாச்சாரத்தில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் முதுமைக்கு விடைபெறுவதாகவும், புத்தாண்டை வரவேற்க புத்த கோவில் மணியை 108 முறை தாக்குவதாகவும் கூறப்படுகிறது

நமது நவீன எண் முறையைக் கண்டுபிடித்த நமது ஆரம்பகால வேத முனிவர்கள் புகழ்பெற்ற கணிதவியலாளர்கள் ஆவர்.

வேத அண்டவியல் படி,
எண் 108 படைப்பின் அடிப்படை.
எண் 108 நமது பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
108 நமது இருப்பு முழுவதையும் குறிக்கிறது.
108 என்பது பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கும் எண்.

சூரியனின் விட்டம் பூமியின் விட்டம் 108.7 என்று வேத அண்டவியல் நம்புகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனை விட 108 மடங்கு அதிகம்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல 108 மடங்கு அதிகம்.

நமது கண்கள் 3 பரிமாணங்கள் வரை பார்க்க முடியும் ஆனால் முனிவர்கள் இந்த உண்மையான மனோதத்துவ பரிமாணங்களுக்கு அப்பால் தங்கள் யோக சக்திகளால் உணர முடியும்.

சக்தி 1= 1; சக்தி 2= 4; சக்தி 3= 27. மற்றும் 1x4x27 = 108. இதன் மூலம் நமது கண்கள் பொருளை உணர்கின்றன.

அறிவியலில்

மெண்டலீவ் கால அட்டவணையில், 108 தனிமங்கள் உள்ளன

108 டிகிரி பாரன்ஹீட் என்பது மனித உடலின் உள் வெப்பநிலைஇன் முக்கிய உறுப்புகள் அதிக வெப்பமடைவதால் செயலிழக்கத் தொடங்குகின்றன.

வேத அண்டவியல் கூறுகிறது

1) சூரியனின் விட்டம் பூமியை விட 108 மடங்கு

2) பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:04


3) பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.

ஆக 108 முறை நாம் இறைவனின் நாமத்தை சொல்வோம்.

நம்மை பின்பற்றி நமது தாய் மதத்தை பின்பற்றி
மற்ற மதங்களும் 108 ஐ முன்னிருத்துகின்றன.

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:04


Air Polutionnங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே, மரங்களுக்கும் உண்டு.

ஆசாரமில்லாமல், தீட்டுக் காலத்திலே மரங்களுக்குப் பக்கமா போனால். மரத்துக்குக் கெடுதல். (வில்வ மரம் பட்டுப் போன சம்பவம்)

இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா? பாஷ்யாலஜியா? - பசுபதியே அறிவார்!

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ பூஜை செய்பவர்.வீட்டுக் கொல்லையிலேயே வில்வ மரம்

பூச்சி அரிக்காத தளமாக சேகரித்து வைத்துக் கொண்டு ஆனந்தமாகப் பூஜை செய்வார்.

அந்த வில்வமரம் பட்டுப் போய்விட்டது.

லட்சம் ரூபாயை இழந்த சோகம் பக்தருக்கு.

வழக்கம்போல் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைக்க, வில்வமரம் பட்டுப் போய் விட்ட செய்தியைக் கூறினார்.

பெரியவாள், அவர் சொன்னதைச் செவியில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. வேறு யார் யாருடனோ பேசிக் கொண்டும், ஆசீர்வத்தித்துக் கொண்டும் இருந்தார்கள்.

பின்னர்,பக்தரைப் பார்த்து, "இப்போ Water Pollution, Air Pollutionனெல்லாம் சொல்றாளே,உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள்.

"ஆமாம்...குடிக்கத் தண்ணீர்,சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் மாசு அதிகமாகிவிட்டதால் உடம்புக்குக் கெடுதல் என்கிறார்கள்...."

"நம்ம சாஸ்திரங்களில்கூட Pollution பற்றிச் சொல்லியிருக்கு"-பெரியவா

பக்தருக்குப் புரியவில்லை. பெரியவாள் எங்கே போய்க்கொண்டிருக்கிறாள் என்று.

"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு. ஆசாரமில்லாமல்,தீட்டுக் காலத்தில் மரங்களுக்குப் பக்கமாகப் போனால் மரத்துக்குக் கெடுதல்.வில்வமரம் அதனால்தான் பட்டுப் போயிருக்கு..."

பக்தர் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"வில்வமரத்தின் வேர்ப்பகுதியிலே நிறையப் பசுஞ்சாணம் போட்டு, தினமும் தீர்த்தம் விடு. அதுதான் பிராயச்சித்தம்..."-பெரியவா.

சிவபக்தர் அவ்வாறே செய்தார். பதினைந்து நாள்களில் துளிர்கள் தெரியத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த பக்தர்,அதே வில்வமரத்திலிருந்து வில்வம பறித்து, பெரியவாளுக்கு வில்வ மாலைசமர்ப்பித்தார்.

பசுஞ்சாணத்தில் உயிர்ச்சத்து - உயிர் தரும் சத்து - இருக்கிறது என்பதை, எந்த பாஷ்ய பாடத்தில் படித்துத் தெரிந்து கொண்டார்கள், பெரியவாள்!.

இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா,பாஷ்யாலஜியா?

பசுபதியே அறிவார்.

Tamil Anmegam+Kolangal

26 Nov, 01:04


இன்றைய சிந்தனை
26-11-2024
உன்னை அறிந்தால் உயர்வே.

Tamil Anmegam+Kolangal

21 Nov, 15:42


இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன. வெள்ளத்தின் போதும் பாறைகள் நிலையாக நிற்கும். இது நம்பமுடியாத அதிசயமான மற்றும் அனைத்து தெய்வங்களுக்கே உரிய நேர்மறை ஆற்றலின் உயர் மட்டமாக கருதப்படுகிறது - 🙏
ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏

Tamil Anmegam+Kolangal

21 Nov, 14:13


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

21 Nov, 06:25


*🎙️தென்கச்சி கோ.சாமிநாதன்*

*_வழங்கும்_*

*🪷 இன்று ஒரு தகவல் 🪷*

*‌📒📧📃மகிழ் தமிழ்🗞️📚📖*

*_✍🏻 21, வியாழன் ., நவம்பர், 2024_*

Tamil Anmegam+Kolangal

20 Nov, 11:47


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

20 Nov, 02:50


தினம் ஒரு கதை

Tamil Anmegam+Kolangal

20 Nov, 02:48


முஞ்சி கேசர் முனிவர்

முஞ்சிகேசர் * * சென்னை, ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகே இருக்கும் ஸ்ரீ கச்சாலீஸ்வரர் எனும் பழைமையான கோயிலில் முஞ்சிகேச முனிவருக்கு சன்னிதி உள்ளது. அதேபோல் , தமிழகத்தில் சுமார் பத்திலிருந்து பதினைந்து பழைமையான சிவன் கோயில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சன்னிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையான திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோயில் அருகே இவரது ஜீவசமாதி தனிக் கோயிலாக அமைந்துள்ளது .

சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒரு நாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்க, சிவனின் சாபத்தைப் பெறுகிறது. தனது தவறை உணர்ந்து வருந்தி திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க, “சாபத்துக்கு பிராயச்சித்தமாக நீ பூலோகம் சென்று பல சிவ க்ஷேத்ரங்களை வழிபட வேண்டும். அவ்வாறு சிவ க்ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கித் தவமிருக்கும் சுனந்த முனிவர் என்பவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரது ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உனது சாபம் நீங்கும். அந்த நொடியில் நான் அங்கு தோன்றுவேன்” என்று சிவபெருமான் சொல்ல, அதன்படி கார்கோடகன் ஒரு முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ க்ஷேத்ரங்களை வழிபடுகிறார் .

கார்கோடகன் வழிபட்ட இடம்தான், ‘கோடன்பாக்கம்’ ஆகி, அதுவே பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி என்று ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீ வேங்கீஸ்வரம் கோயில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல _முனிவர்களால் வழிபடப்பட்ட மிகப் பழைமையான கோயில். நிறைவாக , திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த *முனிவரின் *ஆசி கிடைத்து அவனது *சாபமும் நீங்கியது_ .

சுனந்த முனிவர் சரி, இந்த முஞ்சிகேச முனிவர் என்பவர் யார்? சுனந்த முனிவர் கடுந்தவம் புரிய , அதனால் அவரது தலை மீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து வளர்ந்தது . இதன்* காரணமாகத்தான் அவர், ‘முஞ்சிகேசர்’ எனப் பெயர் பெற்றார். கேசம் என்றால் முடி. 20ம் நூற்றாண்டில் கூட ரமண மகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவுக்குத் தவம் செய்து ஈசனின் *தரிசனத்தைப் பெற்றிருக்கிறார்கள் .

சிவனுக்கும், காளிக்கும் நடைபெற்ற தாண்டவப் போட்டியை நேரடியாகக் கண்டவர் முஞ்சிகேச முனிவர். மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தபொழுது* அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்? இவர் திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் .
*
சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாலங்காடு. ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை* சிறிது காணிக்கையாகக் கொடுத்து சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்ய, நிச்சயம் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். இந்த ஜீவசமாதி சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியப்படுகிறது .

Tamil Anmegam+Kolangal

19 Nov, 12:02


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

18 Nov, 05:16


தன்னம்பிக்கையின் பலம் இன்று ஒரு தகவல் lllll Thenkachi Ko Swaminathan Stories

Tamil Anmegam+Kolangal

18 Nov, 05:16


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

18 Nov, 01:21


🌴🌷🌴😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*

*(18.11.2024)*

*༺🌷༻*
*🌸🌼🌿தாங்குவதில் இருக்கிறது!*
*༺🌷༻*

மன்னன் சேவல் சண்டைக்கு புதிதாக சேவல் வளர்த்து வந்தான். அதற்கு பயிற்சி கொடுத்து சண்டைக்கு தயாராக ஒரு பயிற்சியாளரை நியமித்து இருந்தார்!

புதிதாக வந்த சேவல் துள்ளியது! குதித்தது! அருகில் வந்தவர்களை கொத்தியது!

அதை பார்த்த மன்னன் பயிற்சியாளரிடம் பார் நம்ம சேவல் சண்டைக்கு தயார் ஆகி விட்டது என்று சொல்ல!

பயிற்சியாளரோ இல்லை மன்னா கொஞ்ச காலம் பொறுங்க! என்று சொல்ல ! மன்னன் சரி என்று காத்திருந்தான்.
*༺🌷༻*
கொஞ்ச நாள் ஆனது! இப்பொழுது சேவல் முன்பை விட ரொம்ப கோபமாக அனைத்து சேவல்களையும் பலம் கொண்டு கொத்த ஆரம்பித்து இருந்தது.

மிகவும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் பயிற்சியாளரை பார்த்து இப்ப சேவல் சண்டைக்கு தயார் ஆகி விட்டது இல்லையா என்று கேட்க!

அவரோ இல்லை மன்னா இன்னும் கொஞ்ச நாள் காத்து இருக்கனும்
என்று சொல்ல மன்னனும் சரி என்று ஏற்று கொண்டான்.
*༺🌷༻*
கொஞ்ச நாள் கழித்து மன்னனின் சேவல் மிகவும் அமைதியாகி விட்டது!

அருகில் யார் சென்றாலும் கொத்தாமல் அமைதியாக அமர்ந்து இருந்தது.

இப்பொழுது மகரயாழ் பயிற்சியாளர் மன்னரிடம் நம் சேவல் இப்பொழுது சண்டைக்கு தயார் என்றார்.

ஒன்றும் புரியாத மன்னன் அமைதியாக இருந்த சேவலை சண்டைக்கு எடுத்து சென்றான்.
*༺🌷༻*
அங்கே சென்று விட்டதும் எதிரில் இருந்த சேவலை பார்த்ததும் தள்ளி குதித்து பறந்து எதிரில் இருந்த சேவலை தாக்கியது!

குறைந்த நேரத்தில் போட்டியில் ஜெயித்தும் விட்டது.
*༺🌷༻*
இப்பொழுது பயிற்சியாளர் சொன்னார்! " மன்னா இவ்வளவு நாள் உங்கள் சேவல் தான் யார் தன் எதிரி யார் என்று தெரியாமல் இருந்தது!

நாளடைவில் பக்குவம் அடைந்து சண்டைக்கு தயார் ஆகி விட்டது. சண்டைக்கு தயார் ஆனவுடன் அதன் எதிரி யார் என்று தெரிந்ததும் தன் வீரத்தை காட்டியது என்றார்.

🌿வலிமை என்பது தாக்குவதில் இல்லை!
பொறுமை தாங்குவதில் இருக்கிறது!👍

*✒️ ~ SNR, Mayiladuthurai*
*💐நன்றி🙏*

*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

Tamil Anmegam+Kolangal

18 Nov, 01:18




🤔  *நாளும் ஒரு சிந்தனை*

எதையும் உன்னால்
செய்ய முடியும்.
அதற்குண்டான
அனைத்து சக்தியும்
உன்னிடம் உள்ளது என்பதை
முழுமையாக நம்பு..!

🏚️    *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     வறுத்த பட்டையை பொடி செய்து, நீரில் கலந்து பெண் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     நாட்டுச் சக்கரையை தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.

🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகளை சேர்த்துக் கொண்டால், நல்ல சுவையாக இருக்கும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

      இனிய சொற்கள்
விலையில்லாதவை!
ஆனால், அவை மதிப்பு மிக்கவை!
                          *-சர்ரோன்*

📆. *இன்று நவம்பர் 18-*
  
   ▪️ *உலக மன நோயாளிகள் நாள்.*

        💐 *நினைவு நாள்* 💐

1936- *வ.உ.சிதம்பரம் பிள்ளை*  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்)


( *பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

18 Nov, 01:18


மனைவி - இறைவன் கொடுத்த வரம் ! வாரியார் சுவாமிகள் _ Wife - God_s boon - Variyar Swamigal_s speech

Tamil Anmegam+Kolangal

18 Nov, 01:03


Video from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

18 Nov, 01:03


எல்லாம் ஈஸ்வர சொரூபம்

ரமண பகவான் வாழ்ந்த காலத்தில் திருவண்ணாமலையில் பௌர்ணமிக்கு கூட்டம் வராது. கார்த்திகை தீபத்தின் போது தான் மக்கள் நிறைய வருவார்கள்.

அதுவும் நகர மக்கள் வர மாட்டார்கள். திருவண்ணாமலையை சுற்றி இருக்கக்கூடிய சின்ன சின்ன கிராமங்களில் இருந்து கூலி வேலை செய்யக்கூடிய சாது ஜனங்கள் வருவார்கள்.

கார்த்திகை தீபம் ஏற்றிய உடன் சுற்றியுள்ள குளங்களில் மூழ்கிவிட்டு அப்படியே ரமணாஸ்ரமத்திற்கும் வருவார்கள். அழுக்கு உடையுடன் நீர் சொட்ட சொட்ட ரமண பகவானை சாமி சாமி என வந்து பேசுவார்கள்.

சில சமயங்களில் அவரை தொட்டு பேசுவார்கள். ஆசிரமம் முழுவதும் நாற்றம் வீசும் . இது ஆசிரமத்தின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை

இதனால் ஒரு முறை கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் பகவான் அமரக்கூடிய சோபாவின் முன்னே ஒரு தடுப்பு வைத்து பகவானுக்கும் வருபவர்களுக்கும் இடையே தூரத்தை அதிகப்படுத்தினார்கள். இப்போது வருபவர்கள் அவரை தொட முடியாது.

இதை பார்த்த பகவான் ஆபீஸ் அட்டெண்டர் கிருஷ்ணசாமியிடம், என்ன பண்ணி இருக்க ஏன் இந்த தடுப்பை இவ்வளவு தள்ளி வச்சிருக்க என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணசாமி, நாளைக்கு கார்த்திகை தீபம் நிறைய பேர் வருவாங்க உங்கள தொட்டு பேசி தொந்தரவு கொடுப்பாங்க. அதனால ஆபீஸ்ல இப்படி தள்ளி வைக்க சொன்னாங்க என்றார்.

அதைக் கேட்ட பகவான், ஆபீஸ்ல இப்படி சொன்னாங்களா சரி இந்த தடுப்பு அப்படியே இருக்கட்டும். ஆபீஸ்ல சொன்னபடியே இருக்கட்டும்.இப்ப இந்த சோபாவை தூக்கி தடுப்புக்கு முன்னாடி போடு என்றார்.

அதற்கு கிருஷ்ணசாமி, பகவானே! பகவானுக்கு நல்லதுனு நினைச்சு தானே அவர்கள் பண்றா... நாளைக்கு கூட்டம் கூட்டமாக வருவாங்களே நீங்களும் ஓய்வில்லாமல் தரிசனம் கொடுத்துண்டே இருப்பீர்கள் என்றார்.

அதற்கு பகவான்,ஓ! நீ அப்படி நினைக்கிறாயா? இவர்கள் எல்லாம் ஏதோ தரித்திரங்கள் வருது... இந்த சுவாமி உட்காந்து தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? அப்படி இல்ல சமாச்சாரம். இங்க வர்றவங்க எல்லாம் யாரு தெரியுமா ?சாட்சாத் அருணாச்சலம் சொரூபம். அவர்கள் தரிசனம் நமக்கு கிடைக்கணும். அதுக்கு தான் இந்த இருப்பு என்றார்.

ஸ்ரீ ரமணா 🙏🙏🙏

Tamil Anmegam+Kolangal

18 Nov, 01:00


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

18 Nov, 00:59


இன்றைய தின சிறப்புகள்

18-11-2024

கார்த்திகை 3 - திங்கட்கிழமை
🔆 திதி : அதிகாலை 12.04 வரை துவிதியை பின்பு இரவு 10.49 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

🔆 நட்சத்திரம் : இரவு 07.56 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.14 வரை சித்தயோகம் பின்பு இரவு 07.56 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 இரவு 07.56 வரை விசாகம் பின்பு அனுஷம்
பண்டிகை

🌷 ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
வழிபாடு
🙏 கோமாதாவை வழிபட முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 கரிநாள்


எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.

🌟 பற்களை சீர் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.
லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
லக்னம்நேரம் மேஷ லக்னம் 03.54 PM முதல் 05.38 PM வரை ரிஷப லக்னம் 05.39 PM முதல் 07.41 PM வரை மிதுன லக்னம் 07.42 PM முதல் 09.52 PM வரை கடக லக்னம் 09.53 PM முதல் 12.00 AM வரை சிம்ம லக்னம் 12.01 AM முதல் 02.02 AM வரை கன்னி லக்னம் 02.03 AM முதல் 04.02 AM வரை துலாம் லக்னம் 04.03 AM முதல் 06.08 AM வரை விருச்சிக லக்னம் 06.09 AM முதல் 08.23 AM வரை தனுசு லக்னம் 08.24 AM முதல் 10.31 AM வரை மகர லக்னம் 10.32 AM முதல் 12.25 PM வரை கும்ப லக்னம் 12.26 PM முதல் 02.08 PM வரை மீன லக்னம் 02.09 PM முதல் 03.49 PM வரை

Tamil Anmegam+Kolangal

18 Nov, 00:58


தஞ்சை பெரிய கோயிலை போல்
கட்டுமானம் ...
எப்படி மலையுச்சிகளில், ஆபத்தான வனப் பகுதிகளில், பள்ளத்தாக்குகளில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த இன்கா இன மக்களின் கட்டிடங்கள் காலம் கடந்து, மலை, வெள்ளம், புயல் கடந்து, ஏன் பெரும் பூகம்பங்களில் இருந்தும் தப்பி இன்றும் நிற்கின்றன?

முதலில் அங்கு போய் ஏன் கட்டிடங்கள் எனக் கேட்கும் அந்த வனாந்திரப் பகுதிகள் ஒரு காலத்தில் முழுக்க முழுக்க மக்கள் வாழ்ந்த நிலம். அவற்றில் வசித்த மக்கள் எங்கே என்னும் வினாவுக்கு வறட்சி, காலநிலை வேறுபாடு, உள்நாட்டு இனக் குழுச் சண்டைகள் மற்றும் முக்கியமாக ஐரோப்பியர் வருகை என இந்த மக்களும் மாயன் மற்றும் இன்னும் சில பூர்வ குடியினரும், கால ஓட்டத்தில் கரைந்து போனார்கள். எங்கும் முதலில் தொலைவது மண்ணின் மைந்தர்கள் தானே.

பெரு நாட்டின் இன்கா பழங்குடியினர் என்றே இவர்களை அழைத்து வந்த நம்மனைவரின் பொதுக் கருத்தும் காட்டு மிராண்டிகள் என்பதாகவே இருக்கும் நிலையில் இவர்களின் நாகரீக எச்சங்களாக மிச்சம் இருக்கும் கற் கட்டிடங்கள் இன்றும் நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களை விடச் சிறப்பாக இருக்கின்றன.

பாறைகளின் வெட்டுத் தோற்றம் வெட்டிய கருவியின் கூர்மையைக் காட்ட, சின்னப் பிசிறு கூட இல்லாமல் இந்தக் கிரானைட் கற்களின் தரம் மற்றும் வெட்டு அபாரம். இவற்றை இரும்பு உளிகள் கொண்டு உடைத்து இருக்கலாம் எனப் பார்த்தால் அந்தக் கால கட்டத்தில் இரும்பே இல்லை.

வழக்கமான செவ்வகக் கற்களுக்குப் பதிலாய் இந்தக் கற்கள் ஒரு வித ஒழுங்கில்லா ஒழுங்காய்ப் பன்முகக் கற்கள் பல்வேறு வடிவங்களில் வெட்டிக் கட்டி அடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருந்தன அந்தச் சுவர்கள். கிட்டத்தட்டக் கலைத்துப் போடப்பட்ட ஒரு புதிர் போல, சீட்டுக்கட்டு மாளிகை போல அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பெருங்கற்களை இணைக்க சுண்ணாம்போ அல்லது களி மண்ணோ இல்லாமல் அடுக்கப்பட்டு இருக்கும் பாறைகள் ஒன்றின் கனத்தால் இன்னொன்றை அழுத்திப் பிடித்து இருக்க, முதற் பார்வைக்குக் காரணம் இல்லாமல் வெவ்வேறு வடிவங்களில் வெட்டி அடுக்கப்பட்ட அந்தக் கற்களின் விளிம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்த கோணங்களின் அறிவியல் பூர்வமான பலன் புரிந்தது. இந்தப் பெரும் கற்களின் இடையே இப்போது ஒரு புல் கூடப் புகாது. நீர்க் கசிவும் இல்லை. அதே நேரம் பூகம்பத்தால் நிலம் அசைந்தால் இந்தக் கற்கள் மெல்ல ஆடி நழுவிச் சரிந்து திரும்ப பொருந்தின.

இன்று புழக்கத்தில் இருக்கும் அதி நவீன கிரானைட் வெட்டும் லேசர் கருவிகள் கூட இவ்வளவு துல்லியமாக கிரானட்டை வெட்ட முடியாது எனவும் அறியப்படுகிறது. சில கற்கள் ஒரே கல் 100 டன் அளவு. இவ்வளவு பெரிய கற்களை எப்படி கடல் மட்டத்தில் இருந்து 13,000 அடி உயர மலையுச்சிக்குக் கொண்டு வந்தார்கள்?

இதற்கும் கீழே தோண்டிய போது சுவர்களின் அடிவாரத்துக்காகப் போடப்பட்ட பள்ளங்களில் சிறு கற்கள் பரப்பி அதன் மேல் இந்தக் கற்ச் சுவர். பூகம்பத்தில் சிறு கற்கள் அதிர்ந்து அலைந்து நகர்ந்து கொடுத்துக் கொள்ள மேலிருக்கும் கற்பாறைச் சுவர் சேதம் இன்று நிற்கும்.

நம்ம ஊர்த் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டுமானம் இதே முறையில் அமைக்கப்பட்டு இருப்பதும் அதிசயம் தான்.

படித்ததில் மனம் கவர்ந்தது.

Tamil Anmegam+Kolangal

18 Nov, 00:57


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:43


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:43


*🎙️தென்கச்சி கோ.சாமிநாதன்*

*_வழங்கும்_*

*🪷 இன்று ஒரு தகவல் 🪷*

*‌📒📧📃மகிழ் தமிழ்🗞️📚📖*

*_✍🏻 12, செவ்வாய் ., நவம்பர், 2024_*

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:36


*"பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்...*

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார். வேலாயுதம்

6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்

7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும். வேலாயுதம்

9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார். வேலாயுதம்

14 கல் விநாயகர்- வெற்றி தருவார்

15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்

16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.✍🏼🌹

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:35


*நவபாஷாண முருகப்பெருமானை தெரியும்; நவபாஷாண பைரவரை தெரியுமா?*

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். இவர் சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சித்தர் போகர், பழநி தண்டாயுதபாணி சிலைக்கு முன்பு உருவாக்கிய நவபாஷாண பைரவர் பற்றி இப்பதிவில் காண்போம்.

சிவகங்கையின் கண்டரமாணிக்கம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவு ஆட்டோ பயணம்செய்தால் பெரிச்சியில் உள்ளது சுகந்தவனேஸ்வரர் கோயில். சிவகங்கை பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்தபோது பெற்ற வெற்றியின் காணிக்கையாக சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்து தகுந்த இடம் தேட, மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், பெரிச்சிக்கோயில் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கேயே ஒரு கோயில் அமைக்கும்படியும் கூற, அதன்படி அமைந்ததுதான் சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில். வாசமுள்ள மலர்கள் நிறைந்த பகுதியில் அமைந்ததால் இத்தல இறைவனுக்கு சுகந்தவனேஸ்வரர் என்ற பெயர் வந்தது. இங்கு தனிச் சன்னிதியில் உறையும் அம்பாள் சமீபவல்லி, தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பதால் இவளுக்கு இப்பெயர் என்கின்றனர்.

இக்கோயிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில், காசி பைரவர் அருள்பாலிக்கிறார். பழநி மலை தண்டாயுதபாணியை போலவே, இவரும் நவபாஷாணத்தால் ஆனவர் என்பது இவரது சிறப்பு. இச்சிலையை போகர், பழநி மலை தண்டாயுதபாணிக்கு முன்பு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நவபாஷாண பைரவர் சிலையை போகர்தான் உருவாக்கினார் என்பதற்கு சான்றாக பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழநி ஆண்டவரின் உருவத்தில் காட்சி தருவது சிறப்பு. எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தரும் இந்த நவபாஷாண பைரவரை வணங்கிய படி உள்ளனர் அருகிலுள்ள மூவர். உடன் நாய் வாகனத்தைப் பிடித்தபடி பாலதேவரும் சன்னிதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார்கள்.


இந்த நவபாஷாண காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடையது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சாத்தப்படும் வடைமாலையிலும் கூட விஷத்தன்மை ஏறுவதால் அபிஷேக நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடும் அதிசயம் இங்கு நிகழ்கிறது. இதன் காரணமாக தீர்த்தமோ, வடைமாலையோ இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவது கிடையாது.


மேலும், நவபாஷாணத்தின் சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இல்லை என்பதால் பைரவர் அணியும் மலர் மாலைகள் முதல் படைக்கப்படும் நைவேத்தியங்கள் வரை அனைத்தும் சன்னிதியின் கூரை மீது போடப்படுவது வழக்கம். குறிப்பாக வடைகளை, பறவைகளும் புறக்கணிப்பது ஆச்சரியம். அபிஷேக தீர்த்தமும் பக்தர்கள் தொட முடியாதவாறு கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பைரவரின் பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. தல விருட்சமாக இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் அந்த முகத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்தில் சனீஸ்வரரை, பைரவரின் சீடராகவே கருதி வழிபடுகிறார்கள். இவரை வழிபடுவதால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.


பிரதி மாதம் பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் மாலையில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.✍🏼🌹

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:33


*மருத்துவ குறிப்பு.*


*இளைஞர்களுக்கு ஏன் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்..? அறிகுறிகள் என்ன..? எப்படி தடுக்கலாம்..?*


ஒரு காலத்தில் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படும்..


ஆனால் தற்போது அப்படி இல்லை.. இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் வேலை செய்வது உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது.. எனவே கடந்த சில ஆண்டுகளாக அதிகமான இளைஞர்கள் பக்கவாதத்திற்கு ஆளாகிறார்கள்.


உலகம் முழுவதும் இறப்புக்கு காரணமான இரண்டாவது பெரிய காரணம் பக்கவாதம். ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆண்டுக்கு சுமார் 5.5 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது… குறிப்பாக இந்தியாவில், இந்த நிலை மிகவும் ஆபத்தான விகிதத்தில் பரவி வருகிறது, நாட்டில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதம் என்றால் என்ன..? பக்கவாதம் என்பது இரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்படும் செரிப்ரோவாஸ்குலர் விபத்து என வரையறுக்கப்படுகிறது.. இது இரத்தத்தில் இருந்து உகந்த ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மூளை பெறுவதை தடுக்கிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, மூளை செல்கள் சில நிமிடங்களில் இறக்கத் தொடங்குகின்றன, இதனால் நீடித்த மூளை பாதிப்பு, நீண்ட கால இயலாமை மற்றும் மரணம் கூட ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் ஏற்படும் இஸ்கிமிக் பக்கவாதம் மிகவும் பொதுவான வகை பக்கவாதம் ஆகும்.

பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?

திடீர் குழப்பம்
பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிக்கல்
ஒன்று அல்லது இரண்டு கண்களில் பார்ப்பதில் சிரமம்.
சமநிலை இழப்பு அல்லது ஒருங்கிணைப்பு, தலைச்சுற்றல் மற்றும் நடைபயிற்சி சிரமம்
எந்த காரணமும் இல்லாமல் திடீர் மற்றும் கடுமையான தலைவலி.
லேசான பலவீனம்
உடலின் ஒரு பக்கத்தில் முடக்கம்
ஆபத்து காரணிகள் என்ன? உட்கார்ந்த வாழ்க்கை முறையின் அதிகரிப்பு இன்று அதிக பக்கவாதம் பாதிப்புகளுக்கு முதன்மைக் காரணம். புகைபிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குடும்ப வரலாறு, ஆகிய பல காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.. மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆகியவை இளைஞர்களிடையே அதிக பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்..


பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம்? பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன.. பதப்படுத்தப்படாத ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம்.. உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.. உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க தினமும் குறைந்தது 30 நிமிடம் சீரான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எடை இழப்பு உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மற்றும் இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகளில் உள்ள அழுத்தத்தை போக்க உதவும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகம்.. எனவே புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும்.

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து, உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் சில மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகவும். உங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டிருந்தால், மற்றொரு பக்கவாதத்திலிருந்து உங்களைத் தடுக்க உதவும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:32


வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!
.
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
.
# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
.
#.. கதையைப் படித்து முடித்த நான் ,
கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
.
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
.
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..!
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் ,
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
.
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
.
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:32


#ஒரு_பாடலின்_கதை
🎼🎼🎼🎺🎺🎺🎼

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”
.
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!
ஆனால் இன்று ஏனோ....
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே ,
மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
.அப் பாடல் வரிகள்
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -
மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*
.
# பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
.
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
.
# சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
கண்ணதாசன்...!
.
சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..!
அவர் ஒரு வரி எழுதினால் ..
அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!
.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....
அது இதுதான்...!
.
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்...
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும்
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் ....
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்...

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:32


அருள் நேரம்
12=11=2024

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:30


ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டாதே -வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு -Variyar Swamigal

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:29


அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் மகிமையும் நூபுர கங்கை ஸ்நானமும்திருமாலிருஞ்சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனத்தை முடித்து விட்டு, திருமாலையாண்டான் ஸ்வாமி தமது திருமாளிகைக்குத் திரும்புவது வழக்கம்..

... காலம் செல்லச் செல்ல, அவருக்கு முதுமையின் காரணமாகக் கண்பார்வை மங்கியது..

...அதனால், ஒரு கைங்கர்யபரர்,
அவருக்குத் திருவடி பந்தம் (விளக்கு) பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னால் வழிகாட்டிக் கொண்டு செல்லுவார்..

அவரது பெயர் "திருவடிபிச்சை" என்கிற சுந்தர்ராஜன்..

...அந்தக்காலத்தில் பொதுவாகச் சோலைகளுக்குச் செல்லுகிற வழி முழுவதும் இருட்டாகத்தான் இருக்கும்..

...அதுவும், திருமாலிருஞ்சோலை வழி ஒரே வனாந்திரபகுதியாகவே இருந்தது..

தமது கண்பார்வை மங்கியதால்,
வழி காட்டுவதற்கு, இந்தத் திருவடிபிச்சனை உதவிக்கு வைத்திருந்தார் திருமாலையாண்டான்...

...இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து, அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு, தமது திருமாளிகை செல்லத் திருமாலையாண்டான் ஆயத்தமானபோது,

திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனைக் காணவில்லை..
(அக்காலத்தில் தமக்குக் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

திருமாலையாண்டான்,
திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை ஒரு முறைக்கு இருமுறை
"சுந்தரராஜா" - என்றழைத்தார்..

...உடனே,
கையில் திருவடி பந்தத்துடன் வந்த சுந்தரராஜன்,
"ஸ்வாமின்...
அடியேன் வந்துள்ளேன்..." என்று சொல்லி,
திருமாலையாண்டானுக்கு முன்னால் வழிகாட்டியபடியே சென்று,

அவரது திருமாளிகை வந்ததும் அவரிடம்,

"ஸ்வாமி...
அடியேன் திரும்பிச் செல்ல நியமனம் வாங்கிக்கிறேன்..." என்று அனுமதி பெற்றுத் திரும்பினான்..

மறுநாள் அதிகாலையில் திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சனாகிற சுந்தரராஜன், திருமாலையாண்டான் திருமாளிகைக்கு வந்து, அவரை சாஷ்டாங்கமாகச் சேவித்து,

"ஸ்வாமின்...
அடியேன் தெரியாமல் உமக்குத் திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில், நேற்று அபச்சாரம் செய்துவிட்டேன்..

...தயவுகூர்ந்து அடியேனைத் தேவரீர் மன்னித்தருள வேண்டும்..." என்று கூறவும்,

திருமாலையாண்டான்,
"என்னடா சொல்கிறாய் ?
நீ என்ன அபச்சாரம் செய்தாய்?.." என்று கேட்க,

"..ஸ்வாமி...
நேற்று மாலை உடல் அசதியால், மாலையிலிருந்து இரவு வரை நன்கு தூங்கி விட்டேன்...

...அதனால், எப்போதும் தேவரீருக்குத் "திருவடி பந்தம்" பிடித்து வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு வருகிற என்னால், நேற்று வர முடியாமல் போயிற்று...

ஸ்வாமி..
தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில், விளக்கில்லாமல் எப்படி இந்தத் திருமாளிகைக்கு எழுந்தருளினீர்?.."
..என்று சுந்தரராஜன் கேட்கவும்,

திருமாலையாண்டான்,

"..இல்லையே..
நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்குத் திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்றுப் போனாயே.." - என்று சொல்ல,

"..ஸ்வாமி...
அடியேன் நேற்று வரவேயில்லை!.." என்று சுந்தர்ராஜன் மறுக்க,

...அப்போதுதான், திருமாலையாண்டானுக்கு,
நேற்று பந்தம் பிடித்து வந்தவன் தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல.. சாக்ஷாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே.. என்று புரிந்தது..

....உடனே, திருமாலிருந்சோலை சென்று,

"ப்ரபு!..
தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து,
இந்த அடியவனுக்கு வழி காட்டினீரா?....."
என்று அழகரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கதறி அழுதார்..

...சுந்தர்ராஜனான அந்த அழகர், திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து, கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும்,

திருமாலையாண்டான் அந்த அழகரின் சௌலப்யத்தை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தார்..

...சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால், திருமாலையாண்டான் பரமபதித்ததும்,
அவருக்கான இறுதிக் காரியங்களை,
அழகர் தமது பரிவாங்களைக் கொண்டு, அர்ச்சக பரிசாரக முகேன, இன்றளவும் செய்து வருகிறார்..

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள்
ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி...

அதனால்தான், அழகர் வருஷாவருஷம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய்க் குளியல் கண்டருளுகிறார்..

அழகர் வருஷத்தில் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருகை தருவார்..

ஒன்று...
ஆடிமாதம் அழகரின் வருஷாந்திர பிரம்மோத்ஸவம்..

மற்றொன்று...
ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான, திருமாலையாண்டான் பரமபதித்த நாள்..

கலியுகத்தில் பகவான் மனுஷ ரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது!..

எனவே, அபிமானிகளே!.. ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால், அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்...
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்...

அழகர் திருவடிகளே சரணம் சரணம்.

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:29


குறிக்கோளை நோக்கி நகர்வதே வாழ்க்கையின் இலக்கு _ இன்று ஒரு தகவல் _ Thenkachi Ko Swaminathan Stories

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:26


3 திருஉத்தமர்கோவில்

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:23


இன்றைய ராசிபலன் _ 12 -11-24 _ Daily Rasipalan

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:23


"ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?

(2)ஒன்னோட ஊர்ல துக்கிரிப் பாட்டிங்கற பேர்ல ஒரு பாட்டி இருந்தது நோக்கு தெரியுமோ"-(பெரியவா கேட்ட இரண்டு கேள்விகளும் அவரே சொன்ன பதில் விளக்கமும்.)

(துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்)

கட்டுரையாளர்-நிவேதிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நன்றி-சக்தி விகடன்
06-06-2017 தேதியிட்ட இதழ்

ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட மகா பெரியவா; "ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?" என்று கேட்டார்.

பக்தருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. காரணம்,,அவருக்குத் தெரிந்து மகா பெரியவா அந்த ஊருக்கு விஜயம் செய்திருப்பதாக நினைவில்லை. ஆச்சர்யம் அடங்காமலே. "ஆமாம் பெரியவா, நீங்க சொல்றாப்போல ராம பிள்ளையார்கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு" என்று சொன்னார்.

"அந்தக்கோயில் பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?"மகானின் அடுத்த கேள்வி பெரியவாளே சொல்லட்டும் என்று அந்த பக்தர் அமைதியாக இருந்தார்.

பெரியவாளே தொடர்ந்து, "சரி,ஒன்னோட ஊர்ல துக்கிரிப் பாட்டிங்கற பேர்ல ஒரு பாட்டி இருந்தது நோக்கு தெரியுமோ" என்று அடுத்த கேள்வியையும் கேட்டார்.

அந்த பக்தர்,"அப்படி ஒரு பாட்டி இருந்ததா கேள்வி" என்றார்.

"ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையார் கோயில்லதான் அப்பல்லாம் ராம நாமப் பாராயணம் நடக்கும்.அதனாலதான்அந்தப் பிள்ளையாருக்கு ராம பிள்ளையார்ங்கற பேர் வழக்கத்துல வந்துடுத்து. இப்ப துக்கிரிப் பாட்டியைப் பத்தி சொல்றேன் கேட்டுக்கோ" என்ற பெரியவா தொடர்ந்து துக்கிரிப் பாட்டியைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

"ஒன்னோட ஊர்ல ஒரு பாட்டி இருந்தா. அவளோட சின்ன வயசுலயே புருஷன் காலகதியாயிட்டதால, ஊரெல்லாம் அவளை, 'துக்கிரி,துக்கிரி' என்று ஏசியது.கடைசியில துக்கிரிங்கற பேரே அந்தப் பொண்ணுக்கு நெலைச்சுடுத்து. அவளும் தன்னோட விதியை நொந்தபடி சதா காலமும் ராம நாம ஜபம் செய்து பகவானின் நெனைப்பாகவே'இருந்தா காலப்போக்கில அந்தப் பொண்ணுக்கும் வயசாகி. பாட்டியாகிட்டா.அப்பவும் ஊர்ல இருக்கிறவங்க அவளை துக்கிரிப் பாட்டின்னுதான் துரத்திக்கிட்டிருந்தாங்க.

இப்படி இருக்கறச்சே,ஒருநாள் அந்த ஊர்ல இருக்கிற முக்கிய பிரமுகரோட பையனுக்கு திடீர்னு வயத்து வலி வந்துடுச்சு . எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகலை அந்த பிரமுகருக்கோ ஒரே கவலையா போயிடுத்து. விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பாட்டி மத்தவங்க என்ன சொல்வாங்களேன்னெல்லாம் கவலைப்படாம, கையில் விபூதி சம்படத்தை எடுத்துண்டு நேரா அந்தப் பிரமுகரோட வீட்டுக்குப் போயிட்டா. (சம்புடம் சம்பூடம்-என்றும் வழக்கு)

அந்தப் பையனோட பக்கத்துல உட்கார்ந்துண்டு ராம நாமத்தை ஜபித்தபடி இருந்தா. ஜபம் முடிஞ்சதும், சம்புடத்துல இருந்து விபூதியை எடுத்து அந்தப் பையனோட நெத்தியிலயும், வயத்துலயும் பூசிவிட்டா. விபூதியைப் பூசிவிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பையனோட வயத்து வலி கொறைஞ்சு மெள்ளச் சிரிக்க ஆரம்பிச்சான். அந்தப் பிரமுகர் மட்டுமில்லாம,ஊர்ஜனங்க எல்லோருக்கும் ஆச்ச்ர்யமா போயிடுத்து.ராம நாமம் ஜபிக்கும் அந்தப் பாட்டியைப் போய் துக்கிரிப் பாட்டின்னு சொல்லிட்டுருந்தோ மேன்னு எல்லோரும் ரொம்பவே வருத்தப்பட்டாங்க.

அதுக்கப்புறம் ஊர்ல இருக்கிற அத்தனை பேரும் அந்தப் பாட்டியைத் தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க.புருஷங்காரன்போனதுக்கப் பறம் மனசை அலைபாயவிடாமல் ராம நாமத்தை ஜபம் செய்துண்டு இருந்ததுனாலதான், பிரமுகர் பையனோட வியாதியை சொஸ்தப்படுத்தவும், அதனால ஊர் மக்களோட மதிப்பையும் அன்பையும் பெற முடிஞ்சது."

"நீயும் தொடர்ந்து ராம நாமத்தை ஜபம் பண்ணிக்கிட்டே இரு" என்று சொல்லி ஆசீர்வதித்துப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:22


இன்றைய
கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ
தோத்தாத்திரிநாதர்
திருக்கோயில்,
நாங்குனேரி,
திருநெல்வேலி
மாவட்டம்.

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:21


இன்றைய சிந்தனை
12-11-2024
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:18


*_ விருச்சிகம் - ராசி: 🦂_*
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான செயல்களில் சற்று கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️விசாகம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️அனுஷம் : கவனம் வேண்டும்.
⭐️கேட்டை : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ தனுசு - ராசி:  🏹_*
பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உறவினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️மூலம் : மாற்றம் உண்டாகும்.
⭐️பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ மகரம் - ராசி: 🦌_*
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
⭐️திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அவிட்டம் : தயக்கங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ கும்பம் - ராசி: 🍯_*
உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிந்தனை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️சதயம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ மீனம் - ராசி: 🐟_*
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் சற்று கவனம் வேண்டும். வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். செயல்திறனில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்.

⭐️பூரட்டாதி : கவனம் வேண்டும்.
⭐️உத்திரட்டாதி : சோர்வுகள் வெளிப்படும்.
⭐️ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:18


*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
 
*🌴🌹🌴🙏🔔🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

    *_꧁‌. 🌈 ஐப்பசி:  𝟮𝟲 🇮🇳꧂_*
     *_🌼 செவ்வாய்- கிழமை_ 🦜*
            *_📆 𝟭𝟮• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* 
       *_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். ஆதாயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️அஸ்வினி : லாபகரமான நாள்.
⭐️பரணி : அறிமுகம் உண்டாகும்.
⭐️கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ ரிஷபம் - ராசி: 🐂_*
எதையும் சமாளிக்கும் பக்குவம் மனதளவில் பிறக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️கிருத்திகை : பக்குவம் பிறக்கும்.
⭐️ரோகிணி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
⭐️மிருகசீரிஷம் : தாமதங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சில அனுபவங்களால் புதிய பாதைகள் புலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அசதி மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : அனுபவங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ கடகம் - ராசி: 🦀_*
திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கவலை மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️புனர்பூசம் : சாதகமான நாள்.
⭐️பூசம் : ஒத்துழைப்பான நாள்.
⭐️ஆயில்யம் : ஈடுபாடு ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ சிம்மம் - ராசி: 🦁_*
நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் சஞ்சலங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மகம் : வாதங்களை தவிர்க்கவும்.
⭐️பூரம் : சஞ்சலமான நாள்.
⭐️உத்திரம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ கன்னி - ராசி: 👩_*
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.
⭐️அஸ்தம் : முடிவுகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ துலாம் - ராசி: _*
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் மேம்படும். கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களுக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️சித்திரை : ஆர்வமின்மையான நாள்.
⭐️சுவாதி : லாபகரமான நாள்.
⭐️விசாகம் : புரிதல்கள் அதிகரிக்கும்
*◄•━━━━━━━━━━━━━━•►*

Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:14


6-7.செவ்வா. 👈  அசுபம்
7-8.சூரியன் 👈  அசுபம்
8-9.சுக்கிரன்.💚  👈 சுபம் 
9-10.புதன்.   💚    👈சுபம்  
10-11.சந்திரன்.💚👈  சுபம் 
11-12.சனி.    👈  அசுபம்

*_🌞 பிற்பகல்: 🔔🔔_*

12-1.குரு.     💚   👈 சுபம் 
1-2.செவ்வா. 👈  அசுபம்
2-3.சூரியன். 👈  அசுபம்

*_🌠 மாலை: 🔔🔔_*

3-4.சுக்கிரன்.💚  👈 சுபம் 
4-5.புதன்.     💚   👈  சுபம் 
5-6.சந்திரன்.💚  👈  சுபம் 
6-7.சனி..       👈 அசுபம்

*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*

*🌻 ஓரை என்றால் என்ன..?*

*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*

*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*


Tamil Anmegam+Kolangal

12 Nov, 02:14


*🕉🌼🌼🌸🌸🌸🌸🌼🌼🕉*
                      
*🚩🕉️🌼ௐ நமசிவாய🌼🕉️🚩*

*꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*

🌴🌴🌴🌴           🦜🦜🦜🦜
    
    *_🛣️ திருவெற்றியூரில்_*
*அதிசயங்கள்-அற்புதங்கள்*
*நிகழ்திடும் அபிபக்தநாயகி*
  *அருளே  மஹா சக்தியான*
      *_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
       *_🛕 உடனுறை 🥥_*
*_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_*
*_🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்._🙏*

🥥🥥🥥🥥            🐘🐘🐘🐘

*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 ஐப்பசி: ~ 𝟮𝟲:~*
*🌼 【 𝟭𝟮• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 】*
*🌸 செவ்வாய்கிழமை.*

*☸️ 1】வருடம்: ஸ்ரீ குரோதி:*
*{குரோதி நாம சம்வத்ஸரம்}*

🩸 *2】அயனம்:- தக்ஷிணாயம்.*

*🪵 3】ருது:~ ஸரத் - ருது.*

*💡 4】மாதம்:~ ஐப்பசி:-*
*( துலாம் - மாஸே ).*

*🦆 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:*
*🌙 வளர் - பிறை.*

*♨️ 6】திதி:~ ஏகாதசி:-*
*மதியம்: 12.42 வரை, பின்பு துவாதசி.*

*🔥7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - துவாதசி.*

*🌻8】நேத்திரம்: 2 -ஜீவன்: 1.*

*📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.*
*{ மங்கள வாஸரம் }*
*மேல் -நோக்கு நாள்‌.*  ⬆️

*🌟 10】நக்ஷத்திரம்:*
*அதிகாலை: 04.46 வரை பூரட்டாதி, பின்பு உத்திரட்டாதி.*

*🦋 11】நாம யோகம்:*
*மாலை: 05.27 வரை ஹர்ஷணம், பின்பு வஜ்ரம்.*

*💎 12】அமிர்தாதி யோகம்:*
*அதிகாலை: 04.46 வரை யோகம் சரியில்லை, பின்பு காலை 06.11 வரை சித்தயோகம். பின்பு அமிர்தயோகம்.*

*✴️ 13】கரணம்: ~ 07.30 - 09.00.*
*பிற்பகல்: 12.42 வரை பத்திரை, பின்பு இரவு: 11.31 வரை பவம், பின்பு பாலவம்.*

*🦚 நல்ல நேரம்;-*
*காலை:~ 07.45 - 08.45 AM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*

*🧭 கௌரி- நல்ல நேரம்:-*
*காலை: ~ 10.45 - 11.45 AM.*
*இரவு    : ~ 07.30 - 08.30 PM.*

*🌐 ராகு காலம்:-*
*மாலை: ~ 03.00 - 04.30 PM.*

*🐃 எமகண்டம்:-*
*காலை: ~ 09.00 - 10.30 AM.*

*🪷 குளிகை:-*
*பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.*

* ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*

*🌅 சூரிய- உதயம்:*
*காலை: ~ 06.12 AM.*

*🌄 சூரிய-அஸ்தமனம்:*
*மாலை: ~ 05.38. PM.*

*🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
         *ஆயில்யம், - மகம்.*

*🌐 ௲லம்:  வடக்கு.*

*🥛பரிகாரம்:  பால்.*

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

*_🔔 இன்றைய நன்நாளில்:🙏🏻_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*

*🐚 ஏகாதசி விரதம்.*
*🫁 சர்வதேச நுரையீரல் அழற்சி தினம்.*

*🔅🔅🔅🔅🔅🔅*
  
🚩 *_தின- சிறப்புக்கள் :_* 🚩
*━━━━━━━ॐ━━━━━━━*

*⚜️⚜️ ஐப்பசி:  𝟮𝟲 :~  🧶🧶*
         *💦  𝟭𝟮• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 💦*
        *செவ்வாய் - கிழமை.*

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

*_🔯 சந்திராஷ்டம - ராசி:_*
*══════ॐ═══════*

*♋️ இன்றைய நாள் முழுவதும் சிம்மம் ராசி.*

🔘🔘🔘🔘

*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦*

*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.*

*🪔 திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவ சேவை.*

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥

*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*

*🐚 ஸ்ரீ பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.*

🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴

*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*

*🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.*

*🌟 சமையல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.*

*🌟 வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.*

*🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்.★★★📝_*
*━━━━━━━ॐ━━━━━━━━━━*

*🪔 இறந்த முன்னோர்களின் படங்களுக்கு கஜலட்சுமி விளக்கை ஏற்றக்கூடாது. மாகல்லினால் ஆன விளக்கினை ஏற்றுவதே பித்ரு ப்ரீதி.*

🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢

*_  லக்ன- நேரம்: ♊️_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━•

*🦢 _{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது._}.*

* துலாம் - லக்னம்:-*
*காலை: 04.27 - 06.35 AM வரை.*

*🦂 விருச்சிகம் -லக்னம்:-*
*காலை: 06.36 - 08.47 AM வரை.*

*🏹 தனுசு - லக்னம்:-*
*காலை: 08.48 - 10.54 AM வரை.*

*🐴 மகரம் - லக்னம்;-*
*பகல்: 10.55 - 12.49 PM வரை.*

* கும்பம் - லக்னம்:-*
*பகல்: 12.50 - 02.32 PM வரை.*

*🐠 மீனம் - லக்னம்:-*
*பகல்: 02.33 - 04.12 PM வரை.*

*🐐 மேஷம்- லக்னம்:*
*மாலை: 04.13 - 05.57 PM வரை.*

*🐂 ரிஷபம் - லக்னம்:-*
*மாலை: 05.58 - 08.00 PM வரை.*

*👫 மிதுனம் - லக்னம்:-*
*இரவு: 08.01 - 10.10 PM வரை.*

*🦞 கடகம் - லக்னம்:-*
*இரவு: 10.11 - 12.20 AM வரை.*

*🦁 சிம்மம் லக்னம்:-*
*இரவு: 12.21 - 02.22 AM வரை.*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*_🚩செவ்வாய் கிழமை- ஓரை_*
*_ ஓரைகளின் காலங்கள்._*



*_🌄 காலை: 🔔🔔_*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 03:18


*🪦 596 திருமந்திரம்... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:50


*🎙️தென்கச்சி கோ.சாமிநாதன்*

*_வழங்கும்_*

*🪷 இன்று ஒரு தகவல் 🪷*

*‌📒📧📃மகிழ் தமிழ்🗞️📚📖*

*_✍🏻 25, வெள்ளி., அக்டோபர், 2024_*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:40


*சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:39


*🎋 பூவால் கரகம் எடுத்து ஆடி*🙏🕉️

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:32


இன்று ஒரு தகவல்
விவசாயி அரசனுக்கு புகட்டிய பாடம் _ Thenkachi Ko Swaminathan Stories

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:22


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:13


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔  *நாளும் ஒரு சிந்தனை*

உன்கிட்ட சொன்னா
நீ சந்தோஷப்படுவ என்று
பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்,
உன்கிட்ட சொன்னா
நான் சரியாயிடுவேன் என்று
பகிரப்படும் துயரங்களிலும்
நிறைந்துள்ளது உண்மையான அன்பு!!

  🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றங்களில் ஆசிரியர்களுக்கு மட்டுமே நாற்காலியில் அமர அனுமதி உண்டு.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     முறுக்கு செய்யும் போது கடலை மாவை குறைத்து பொட்டுக்கடலை மாவை சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     தேடிப் பெறும் அன்பு நல்லதுதான். ஆனால், தேடாமலே கிடைக்கும் அன்பு அதைக் காட்டிலும் நல்லது.

                          *-ஷேக்ஸ்பியர்*

📆 *இன்று அக்டோபர் 25-*

             🌸 *பிறந்த நாள்* 🌸

*1881 – பாப்லோ பிக்காசோ, ஓவியர், சிற்பக் கலைஞர்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*(பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:10


🌴🌷🌴😇🤚🌴🌷🌴
*🌴 எல்லாம் இன்பமயம் 🌴*
*🌴🌷🌴மகரயாழ்🌴🌷🌴*

*(25.10.2024)*

*༺🌷༻*
*🌸🌼🌿முயற்சி திருவினை ஆக்கும்.*
*༺🌷༻*

முயற்சியின் முடிவு முன்னேற்றம் தான் என்பதை நீங்க உணர வேண்டும். பெர்னாட்ஷா ஒரு நாடகக் கொட்டகையில் குதிரைகளைப் பாதுகாக்கும் வேலையில் இருந்தார். நாடக ஆசிரியராக, எழுத்தாளராகத் தானும் ஆக வேண்டும் என்று விரும்பினார். இடைவிடாமல் முயற்சி செய்தார். முயற்சிகள் பலனளிக்காமல் போகுமா? இறுதியில் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்தார்.

உழைக்காமல், உயர்ந்த நிலையை எவராலும் அடைய முடியாது. இடைவிடாத முயற்சியும், கடினமான உழைப்பும் வெற்றிக்கு வழி வகுக்கும் பாதைகளாகும்.
*༺🌷༻*
*"சுறுசுறுப்பான உழைப்பு, நமக்குப் பல வசதிகளையும், நிம்மதியையும் அளிக்கின்றது"* என்கின்றார் விவேகானந்தர்.

*“நீ முயற்சி செய்யும் வரை உன்னால் என்ன செய்யமுடியும் என்பதை ஒருபோதும் நீ அறிய மாட்டாய்"* என்ற ஆங்கிலப் பழமொழியைக் கவனத்தில் கொள்க. கடினமான உழைப்பு, உங்களுக்குக் கண்ணியமான மகரயாழ் வாழ்க்கையைத் தரும். உழைத்துக் கொண்டே இருங்கள்! நீங்கள் மிகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். *"எனக்கு உற்சாகத்தைத் தருவது உழைப்பு ஒன்றே!"* என்று கூறுகிறார், ஒப்பற்ற சாதனைகளைப் படைத்த தாமஸ் ஆல்வா எடிசன்.
*༺🌷༻*
அற்புதமான சாதனைகளைப் படைத்தவர்கள், முயற்சியினால் முன்னுக்கு வந்தவர்களே ! நீங்கள் இடைவிடாது உழைப்பதன் மூலம் உற்சாகம்,நற்பண்பு,மன அமைதி, பொருளாதார உயர்வுகள், மகிழ்ச்சி வெற்றி, புகழ் ஆகியவை உங்களுக்குக் கிடைக்கின்றன.
*༺🌷༻*
''வாய்மை,பொறுமை, விடா முயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை" என்கிறார் விவேகானந்தர். முயற்சி உடைய வர்கள் எந்தக் காலத்திலும் இகழ்ச்சியை அடைய மாட்டார்கள். எனவே, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

*🌿முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை*
*🌿இன்மை புகுத்தி விடும்.*

முயற்சி செய்பவர்களுக்குச் செல்வம் வந்து சேரும். முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிகின்றவர்களுக்கு வறுமை வந்து சேரும் என்பதை வள்ளுவர் அழகாகக் குறிப்பிடுகின்றார்.

*✒️ ~ புலவர் S.செளதாமினி*
*M.A.,M.Ed.,REHP.*
*தலைமையாசிரியர்(ஓய்வு),*
*தாராபுரம்.*
*💐நன்றி🙏*

*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:10


கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய :- கந்த புராணத் தத்துவம் -

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:09


*சிந்தனைக் களம்*
▪️▪️▪️▪️▪️▪️▪️
நாம் எதிரிகளே இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறோம். அது தவறு. எதிரிகள் நமக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருவார்கள். அவைகளை நாம் கற்றுக் கொண்டால் தான் பலம் பெற முடியும்.*

கபீர்தாஸ் என்ற துறவி, ‘எதிரிகள் தான் எனக்கு ஆசான்கள். என்னை நானே திருத்திக் கொண்டு, நான் முழுமையாக மனித வாழ்க்கை வாழ அவர்கள் என்னைத் தூண்டுகிறார்கள்.*

அதனால் எதிரிகள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை’ என்றார். இந்தக் கூற்று, மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நமக்கு எதிரிகள் இல்லாவிட்டால் நமது குறைகளே நமக்குத் தெரியாது.*

எந்த நேரம் நம்மைப் பற்றி என்ன விமர்சனம் வருமோ என்று நாம் விழிப்புடன் இருக்க நமது எதிரிகள் தான் உதவுகிறார்கள்.*

அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது.*

நம்மையும் சிலர் உற்று நோக்குகிறார்கள் என்ற எண்ணம் நம்மை ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.*

அந்த வகையில் நம் திறமைகளைப் பெருக்கிக் கொள்ள எதிரிகள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை.*

நாம் எங்கேயாவது சோர்ந்து உட்கார்ந்து விடாமல் இருக்க அந்தத் தூண்டுகோல் தான் உதவுகிறது.*

எதிரிகளே இல்லாத அரசனுக்கு வெற்றி என்பது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு சரித்திரத்திலும் இடம் கிடையாது. ஒரு அரசனின் அத்தனை புகழுக்கும் காரணம் அவரது எதிரிகள் தான்.*

ஒருவரது வீரமும், விவேகமும் எதிரிகள் முன்னிலையில் தான் பறை சாற்றப்படுகிறது. அப்படியானால் எதிரிகள் மதிப்பிற்கு உரியவர்கள் தானே!*

*எதிரிகளை சந்திக்கத் தயாராக இல்லாதவர்களால் வெற்றியை எட்டவே முடியாது.*
பெரிய தொழிலதிபர்களிடம் கேட்டால் அவர்கள் எதிரிகளைப் பற்றித் தான் நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களைப் பற்றித் தான் நிறைய கதைகளைச் சொல்வார்கள்.*

நாடகக் கொட்டகையில் டிக்கெட் கிழித்துக் கொண்டு இருந்தவர் உலகம் போற்றும் நாடக எழுத்தாளரானது அவரது எதிரிகளால் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?*

அவர் ஒரு நாடகத்தை பார்த்து விட்டு சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்தார். அதனால் கடுப்பாகிப் போன பிரபல நாடக நடிகர்,*

'உனக்கு என்ன தெரியும்? நீ என்ன பெரிய நாடக எழுத்தாளரா?’ என்ற கேள்வியை எழுப்பி, அவரை குறை சொன்னார்.*

அந்த எதிரியால் தான் அவருக்குள்ளே இருந்த எழுத்தாளர் வெளிப்பட்டார். அவர் யார் தெரியுமா? அவர் தான் ஷேக்ஸ்பியர்!*

ஆனால் ஒரு உண்மையை எல்லோரும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். யாராலும் எதிரிகளை நேசிக்க முடியாது.*

அவர்களை அழைத்து, உங்களால் தான் நான் உயர்ந்தேன் என்று விருந்து வைக்கவும் முடியாது.*

அதே நேரத்தில் அவர்களை நினைத்து மன அழுத்தம் ஏற்படுவதையாவது தவிர்க்கலாம் அல்லவா!*

*ஆம் ., நண்பர்களே ..,*

*எதிரிகள் என்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.. உணர்ந்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.*

*எதிரிகளை இதுவரை உணரவில்லை என்றால் தேடுங்கள் .அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க ஆரம்பியுங்கள்...*

*எதிரிகளை நினைத்து வேதனைப்படாமல், தற்போது இருப்பதை விட சிறப்பாக அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.*

*அப்படி உறுதி எடுத்துக் கொள்ளும் போது பலவிதமான புதிய வழிகள் தோன்றும். முயற்சி நம் முன்னே வந்து நிற்கும். அதுதான் வெற்றிக்கான வழி*

*நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் அந்தக் குறைகளைக் கூறத் தயங்குவார்கள்.*

*ஆனால் எதிரிகள் அந்த குறைகளைத் தயங்காமல் கூறுவார்கள்.*

*அதை நினைத்து வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம் என்றால் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளலாம்......*

👤 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 01:06


_*தினசரி தியானம்...! பரபோதம்...!!! அக்டோபர்-25 (திருத்தம்) ஐப்பசி-08*_

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:56


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:56


34 ஆண்டுகளுக்கு பிறகு அன்னை காந்திமதி அன்னவாகனத்தில் பவனி
*எங்கள்திருநெல்வேலிநெல்லையப்பர் கோவில்....🙇‍♀️🙇‍♀️🙇‍♀️*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:53


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:48


"எனக்கே மூணு நாளா ஜுரம்-!"-பெரியவா

( போலீஸ்காரர் & பூசாரியின் கதை சொன்ன

பெரியவாளின் நகைச்சுவை.)

கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
21-12-2012 போஸ்ட்.

நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள் இவர் படுத்துக்கொண்டிருக்கும்போது கிழவர் ஒருவர் வந்தார்.

"பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை: அடிக்கடி ஜுரம் வருது: ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு!" என்று பெரிய பட்டியல் போட்டு, பெரியவாதான் காப்பத்தணும்!" என்று கும்பிட்டார்.

பெரியவா முனகிக் கொண்டே " ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார்:

"ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார். அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும்.அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர், பூசாரியின் நெருங்கிய நண்பன்.

ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய்விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார். அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார்.. "தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டதுபோல நீயே வந்துட்டியே!" என்று பூசாரி சந்தோஷப்பட்டார். "கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல நீங்க வந்துட்டிங்களே!" என்று போலீஸ்காரனும் சந்தோஷப்பட்டார்.

"என்னது, நீ என்னைத் தேடி வரயா? என்ன ஆயிற்று?" என்றார்.

பூசாரி. "என் சைக்கிளைக் காணோம்: யார் எடுத்திருப்பான்னு கொஞ்சம் குறி பார்த்துச் சொல்லணும். அதுக்குத்தான் ஓடி வரேன்!"என்றார்

அவர்!. "அட...ராமா! நானே கோயில் சாமான்களைக் காணோம்நீ கண்டு பிடித்துக் கொடுப்பாய் என்று, உன்னைத் தேடிவந்துண்டிருக்கேன். நீ இப்படிச் சொல்றயே?" என்றாராம்.

இது போலத்தான், நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. 'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!" என்று சிரித்தாராம். பெரியவா. கிழவரும் சிரித்துவிட்டார்.

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:47


பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்.." -பக்தர்

( "என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷன் கேட்க வந்திருக்கியா?" - பெரியவா)

(பெரியவாளின் அறிவுரை)

ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.

பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.

"என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷன் கேட்க வந்திருக்கியா?"

பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

"ஹி ... வந்து...எப்படி உத்திரவாகிறதோ அப்படி..." என்று இழுத்தார்.

"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்ச நஞ்சம் சாந்தியும் போயிடும். பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்... தேவைபட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்..."

பக்தர் "உத்திரவு" என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.

பகைமையை - அண்டை அயலாருடன் விரோதத்தை - வளரவிடகூடாது. இது, பெரியவாளின் தீர்மானமான கொள்கை .

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:47


இன்றைய
கோபுர தரிசனம்.
அருள்மிகு ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர்
திருக்கோயில்,
சுருட்டபள்ளி,
தித்தூர் மாவட்டம்,
ஆந்திர மாநிலம்.

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:45


*_ விருச்சிகம் - ராசி: 🦂_*
மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.

தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️விசாகம் : போட்டிகள் விலகும்.
⭐️அனுஷம் : மதிப்புகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ தனுசு - ராசி:  🏹_*
எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைப் பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
⭐️உத்திராடம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ மகரம் - ராசி: 🦌_*
கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் மறையும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். வர்த்தகத் துறையில் மேன்மை ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : அனுகூலமான நாள்.
⭐️திருவோணம் : ஆதாயகரமான நாள்.
⭐️அவிட்டம் : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ கும்பம் - ராசி: 🍯_*
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
⭐️சதயம் : அனுகூலமான நாள்.
⭐️பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ மீனம் - ராசி: 🐟_*
தாயார் வழியில் ஆதரவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைசார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பாரம்பரிய விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். காரியசித்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️பூரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐️ரேவதி : குழப்பமான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:45


*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
 
*🌴🌹🌴🙏🔔🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

    *_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟬𝟴 🇮🇳꧂_*
     *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*
            *_📆 𝟮𝟱• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 🦚_* 
       *_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஒப்பந்த செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அஸ்வினி :  கவனம் வேண்டும்.
⭐️பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ ரிஷபம் - ராசி: 🐂_*
உயர்கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மருத்துவத் துறையில் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புதுவிதமான ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : ஆதாயகரமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் மேம்படும். கணிதத் துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனை விற்றல், வாங்கலில் லாபம் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை :  லாபகரமான நாள்.
⭐️புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ கடகம் - ராசி: 🦀_*
சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பழைய பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிக்கடியான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
⭐️பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️ஆயில்யம் : செல்வாக்குகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ சிம்மம் - ராசி: 🦁_*
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதியால் செயலில் தாமதம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பலரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : புரிதல் மேம்படும்.
⭐️பூரம் : தாதமதம் ஏற்படும்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ கன்னி - ராசி: 👩_*
பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
⭐️அஸ்தம் : புரிதல் மேம்படும்.
⭐️சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_ துலாம் - ராசி: _*
மனதளவில் உத்வேகம் உண்டாகும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மறைமுக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️சித்திரை : உத்வேகமான நாள்.
⭐️சுவாதி : சூட்சமங்களை அறிவீர்கள்.
⭐️விசாகம் : ஆர்வம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

Tamil Anmegam+Kolangal

25 Oct, 00:44


*🦀 கடகம் - லக்னம்:-*
*இரவு: 11.23 - 01.31 AM வரை.*

*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 01.32 - 03.32 AM வரை.*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*🚩வெள்ளிக்கிழமை - ஓரை*
*ஓரைகளின் காலங்கள்.*



*🌄 காலை: 🔔🔔*

6-7.   சுக்கிரன்.💚  👈சுபம்
7-8. புதன்.     💚   👈சுபம் 
8-9. சந்திரன்.💚  👈சுபம் 
9-10. சனி..   👈அசுபம்
10-11. குரு.     💚   👈சுபம்  
11-12. செவ்வா. 👈அசுபம்

*🌞 பிற்பகல்: 🔔🔔*

12-1.  சூரியன். 👈அசுபம்
1-2. சுக்கிரன்.💚  👈சுபம்
2-3. புதன்.     💚   👈சுபம் 

*🎇 மாலை: 🔔🔔*

3-4. சந்திரன்.💚  👈சுபம் 
4-5. சனி..   👈அசுபம்
5-6. குரு.     💚   👈சுபம்   .
6-7. செவ்வா. 👈அசுபம்

*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*

*🌻 ஓரை என்றால் என்ன..?*

*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*

*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*


Tamil Anmegam+Kolangal

23 Oct, 03:41


*🎙️தென்கச்சி கோ.சாமிநாதன்*

*_வழங்கும்_*

*🪷 இன்று ஒரு தகவல் 🪷*

*‌📒📧📃மகிழ் தமிழ்🗞️📚📖*

*_✍🏻 23, புதன்., அக்டோபர், 2024_*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:39


தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் ஆடியோ

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:24


கள்ளிருந்த மலர்இதழிச்
சடைக்கனிநின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிதடியேன்
கண்டுகொண்ட படியே

நள்ளிருந்த வண்ணம்இன்னும்
கண்டுகண்டு களித்தே
நாடறியா திருப்பம்என்றே
நன்றுநினைந் தொருசார்

உள்ளிருந்த எனைத்தெருவில்
இழுத்து விடுத்ததுதான்
உன்செயலோ பெருமாயை
தன்செயெலோ அறியேன்

வள்ளிருந்த குணக்கடையேன்
இதைநினைக் குந்தோறும்
மனம்ஆலை பாய்வதுகாண்
மன்றில் நடத்தரசே...!

திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய தற்போத இழப்பு.
திருவருட்பா ஆறாம் திருமுறை.

ஐயனின் செம்பொற் சேவடிகள் போற்றி அன்பர்கட்கு நற்காலை வணக்கம்.

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:23




🤔  *நாளும் ஒரு சிந்தனை*

பின்னாளில் தேவைப்படும் என
பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்தது
எல்லாம்...
பின்னாளில் தேவைப்படாமலே
போய்விடுவது தான் வாழ்வின் சுவாரசியம்!!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

    செவ்வாழைப் பழத்தை நாள்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் *'பல்வலி, ஈறு வீக்கம், பல் ரத்தக் கசிவு மற்றும் பல் சொத்தை'* ஏற்படாது.

📰  *நாளும் ஒரு செய்தி*

     மின் பல்புகளில் பயன்படுத்தப்படும் உலோகம் *'டங்ஸ்டன்'* ஆகும்.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     கோதுமையை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையை சேர்த்து அரைத்தால், சப்பாத்தியோ, பூரியோ எதுவானாலும் சுவை, மணம் மற்றும் சத்து மிகுதியாக இருக்கும்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

     ஆயிரம் நல்ல நூல்களை படிப்பதை விட, ஒரு நல்ல நூலின்படி நடப்பதே மேலானது.

                *-சத்ய சாய் பாபா*

📆   *இன்று அக்டோபர் 23-*
  
   ▪️ *1917-இல் 'லெனின்' அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.*

         🌸 *பிறந்த நாள்* 🌸

1940- *பீலே* (பிரேஸில் கால்பந்து வீரர்)


( *பகிர்வு)*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:19


*இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. அதுபோல, உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள். ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள்.*

*ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை "மாடன்' என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள். இவளை வாக்தேவதை (சேடி) என்கிறார்கள்.*

*ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். அவள் தனது சேடியான (பணிப்பெண்) வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.*

*சிறப்பம்சம்:*

*50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண கிணறு, நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது.*

*மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்' என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது*

*இந்த கோயில் இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இரண்டு தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.*

*தல வரலாறு:*

*மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் என தவம் இருந்தார். சிவபெருமான் அவரிடம், ""உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள, ஆனால் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும், அறிவும் மிக்க, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா என கேட்டார்.*

*குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார். மகனும் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். பதினாறு வயதும் வந்தது. எமன் துரத்தினான். மார்க்கண்டேயர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தார். இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார்.*

*தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் உய்யக்கொண்டான் திருமலை உள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

திருச்சி

*அருகிலுள்ள விமான நிலையம்:*

திருச்சி

*தங்கும் வசதி:*

திருச்சி

*🌹 வாழ்க வளமுடன் 🌹*

*🪐 வாழ்க வையகம் 🪐*

*🔥சிவ சிவ 🌙*

*🙏 ஓம் சிவய நம ஓம் 🌷*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:19


◄•───✧ உ ✧───•►

*🙏 இன்றைய கோபுர*
*தரிசனம் 🙏*

*திருச்சி மாவட்டம் தமிழ்நாடு உய்யக்கொண்டான்மலை அருள்மிகு உஜ்ஜீவநாதர் ஆலயம்.*

*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர் : உஜ்ஜீவநாதர்*

*அம்மன்/தாயார் : அஞ்சனாட்சி*

*தல விருட்சம் : வில்வம்*

*தீர்த்தம் : பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள்.*

*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை*

*ஊர் : உய்யக்கொண்டான் மலை*

*மாவட்டம் : திருச்சி*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்*

*தேவாரப்பதிகம்*

*தண்டமர் தாமரை யானும் தாவியிம் மண்ணை யளந்து கொண்டவனும் மறிவொண்ணாக் கொள்கையர் வெள்விடை ஊர்வர் வண்டிசை யாயினபாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயில் ஆடும் கற்குடி மாமலை யாரே.*

*திருஞானசம்பந்தர்*

*தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 4வது தலம்.*

*திருவிழா:*

*பங்குனியில் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.*

*தல சிறப்பு:*

*இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 67 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில்,திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102திருச்சி மாவட்டம்.*

*போன்:*

*+91-4364 223 207 , 94431 50332, 94436 50493*

*பொது தகவல்:*

*விசேஷ நடராஜர்:*

*மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, "உயிர்கொண்டார்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.*

*ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.*

*இது தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும். சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார்.*

*பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.*

*சூரியபூஜை விசேஷம்:*

*மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.*

*தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும்.*

*பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை, இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார்.*

*இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், "திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!' என வேண்டிப் பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு.*

*கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம் நடக்கும். சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.*

*ஞானவாவி தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இக்கோயிலில் இருந்து கி.மீ., தூரத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அருள் பெற்ற வயலூர் கோயில் உள்ளது.*

*பிரார்த்தனை:*

*பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது.*

*இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*ஜேஷ்டாதேவிக்கு புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.*

*தலபெருமை:*

*இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை "மூதேவி' என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள்.*

*இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு.*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:15


_*தினசரி தியானம்...! முமு௯ஷுத்வம்...!!! அக்டோபர்-23 (திருத்தம்)ஐப்பசி-06*_

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:15


Photo from சிவானந்தம்

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:14


*🦜இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன் 🦜*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:13


*🪦 593 திருமந்திரம்... ஆர் வி ஜெ 🙏🏽*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:12


எல்லாவற்றையும் மன்னிப்பேன் - ஆனால் எதையும் மறக்க மாட்டேன் _ இன்று ஒரு தகவல் _Thenkachi KoSwaminathan

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:12


*🙏🛕அறிவோம் ஆலயம்🛕🙏*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:06


நியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும், காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால், அவரது உயிரைக் கொண்டு போக யம தூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்து வரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன். யமலோகம் செல்லும் வழியில் இரண்டு பேர் வழிமறித்து, "எங்களிடம் செருப்பு வாங்கி விட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்து விட்டுப் போக வேண்டும்"என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள், தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக் கொடுத்தார்கள். அவர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி, இரு பிரம்மச்சாரிகளும்,"நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது. நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்." என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

யமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன், அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.

ஸர்வம் ஸ்ரீராம மயம்
ஓம் நமோ நாராயணாய

யம சுலோகம்;

தர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;
தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:
யமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:
சூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே....

இதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந்து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.

மீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை, தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி, எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது, அவளுக்கு சுமங்கலியாக, திவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.

விதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா, எல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகச் திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள், சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார்.

அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.
திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, " செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. " என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப் போல் எதிரில் வந்து, "அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய். வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்" என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்." என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.

சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், " எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கி விடுகின்றன. எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். " என்றார்.

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:06


காவேரி ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த இரு வேதியர்களிடம் பாவங்கள் பல செய்த ஒரு பெண் , பேய் வடிவம் கொண்டு எதிரில் வரவே, அவளுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்ற கருணையோடு, அவ்வேதியர் இருவரும், அவளை துலா மாதத்தில் கௌரி மாயூரம் சென்று காவேரி ஸ்நானம் செய்யச் சொன்னார்கள். அவளும் அவ்வாறு செய்யவே, பேய் உருவம் நீங்கியது.

துலாகாவேரி மகிமையைக் கேட்டவாறே உயிர் நீத்த சந்திரகாந்தை என்ற மகா பாபிக்கும் விஷ்ணு லோகம் கிடைத்தது. அவளது கணவனான வேத ராசி என்ற அந்தணன் புண்ணியசாலி. துலா ஸ்நானத்தைத் தவறாது செய்து வருபவன். அதன் பலனாகத் தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லப் பட்டான். வழியில், யம கிங்கரர்கள், பாபிகளைக் கட்டி இழுத்துக்கொண்டு போவதையும் கண்டான். அவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள். அருணோதய காலத்தில் நித்திரை செய்தவர்கள். கர்மானுஷ்டானங்களைச் செய்யாதவர்கள். பசியுடன் வந்தோருக்கு அன்னம் அளிக்காதவர்கள். செய்யக்கூடாதவைகளை செய்தவர்கள். பித்ரு தர்ப்பணம் செய்யாதவர்கள். தெய்வ கதைகளைக் காது கொடுத்துக் கேட்காதவர்கள். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்யாதவர்கள். ஸ்தல யாத்திரையும் தான தர்மங்களும் செய்யாதவர்கள். பகலில் நித்திரை செய்தவர்கள். என்னைவிட மேலானவன் யாரும் இல்லை என்று பெரியவர்களை அவமதித்தவர்கள். சத்தியமே பேசாதவர்கள். சிவ பூஜை,விஷ்ணு பூஜை செய்யாதவர்கள். இவர்கள் நரகத்துக்குச் செல்வதைக் கண்டு ,வேத ராசிக்கு அவர்கள் மீது கருணை மேலிட்டது. " நரகத்தை அனுபவிக்கும் உங்களுக்கு எனது ஒரு நாள் துலா ஸ்நான பலனை அளிக்கிறேன் " என்றான். அடுத்த கணமே, நரகம்,சுவர்க்கமாக மாறியது. இதனைக் கண்ட வேத ராசி, பகவன் நாமாக்களைக் கூறிக்கொண்டே ஆனந்தக் கூத்தாடினான். இதனால் கோபத்துடன் வந்த யமனால் வேத ராசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அப்பொழுது அவன் விஷ்ணு கவசத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். யமனும்,அவனை வணங்கிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தான்.

பாரத்வாஜ மகரிஷியின் அருளால் அவரது ஆசிரமத்தில் இருந்த கிளியும் பூனையும் துலா ஸ்நானம் செய்து, சுவர்க்கத்தை அடைந்தன. அகத்திய முனிவரின் சாபத்தால் பாம்பாகிய நகுஷன் என்பவன், கிருஷ்ணனின் அருளால் துலா காவேரிக்கு சென்று ஸ்நானம் செய்து பழைய உருவம் பெற்றான். வாங்கிய கடனைத் திருப்பித்தராத பாவத்தால் குதிரையாகைப் பிறந்து, வசிஷ்டரின் உரைப்படி, கௌரி மாயூரத்தை அடைந்து, துலா ஸ்நானம் செய்து தேவலோகம் பெற்றது. முற்பிறவியில் கொலை செய்த பாவத்தினால் குள்ள நரியாகவும் , முனிவர்களின் ஆசிரமத்திலிருந்து பழங்களைத் திருடித் தின்றதால் குரங்காகவும் மாறியவர்களைக் கண்டு , காசிப முனிவர் அவர்களைத் துலா காவேரியில் ஸ்நானம் செய்யும்படி அருளினார். அதன்படி செய்ததால், அவை, தேவ உருவம் பெற்றன.

சிங்கத்துவஜன் என்ற வேடர் குல அரசன், ஓடி வரும் வழியில், பாரத்வாஜ முனிவர் மீது அவனது கால் படவே, அவனைக் கழுதையாக மாறும் படி அம்முனிவர் சாபமிட்டார். அதன்படி கழுதையாகத் திரிந்த அவனுக்கு எதிரில் பகவான் தோன்றி , காவேரி ஸ்நானம் செய்து சாபம் நீங்கப் பெறுவாய் என்று அருளினார். ஸ்ரீ ராமனிடம், வசிஷ்டர், சுதர்சனன் என்ற அந்தணன் , பாபியாக இருந்தபோதிலும் விதிவசத்தால் துலா காவேரி ஸ்நானம் செய்து, கௌரி மாயூர நாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்து, இறுதியில் சிவலோகம் பெற்றதையும், தனது தவத்தைக் கெடுத்ததால் விஸ்வாமித்திரர் ரம்பையை கல்லாக்கியதும், பிறகு அக்கல்லை வியாழ பகவான் காவேரியில் இட்டவுடன் பழைய உருவம் பெற்றதையும் விவரமாகச் சொன்னார். அதைகேட்ட ராமனும் , கௌரி மாயூரத்தை அடைந்து, பல தான தர்மங்களைச் செய்து, மாயூரனாதரையும், மயிலம்பிகையையும் வணங்கிவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார்.

மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன் என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.

நியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டவ்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, "சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்" என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, "அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்" என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:06


🥀 *காவிரி உருவான கதை*:

காவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், “உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்” என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்து கொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.
துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.
அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்;

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு பற்றிய “வீரஹத்தி’ தோஷம் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம்.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும்,
கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.
தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.
காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.

துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

“கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு”
துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை,நாதசன்மா விளக்கினார்: உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேச்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு,ஆயுள், ஆரோக்கியம், செல்வம்,கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும். "

நதி தேவதைகளிடம் பிரம்ம தேவர் மேலும் கூறுகின்றார்: "காவேரி மகிமையை கேட்டாலோ நினைத்தாலோ பாவங்கள் அகலும். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவனும் துலா மாதத்தில் கௌரி மாயூரத்தை அடைந்து காவிரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் . ஒரு சமயம் , அத்திரியின் மகனாகப் பிறந்த எனக்கும் ஊர்வசிக்கும் காவேரி மகளாகப் பிறந்தாள் அவளைத்தான் காவேர ராஜனுக்கு மகளாகக் கொடுத்தேன். அவளே இப்பொழுது நதியாக வந்துள்ளாள். நீங்கள் துலா ஸ்நானம் செய்து உங்களிடம் படிந்துள்ள பாவங்களை நீங்கப் பெறுவீர்களாக." என்று அருளினார்.

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:06


சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, "காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்." என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான - தர்மங்கள் செய்யாமலும், காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐஸ்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.

துலா மாதக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள். காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டு விடு" என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.

தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.

இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று, மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம், நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம், அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .

" கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

துலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.

நாம் எல்லோரும் இத் துலாமாத்தில் காவிரியில் தீர்த்தமாடி புண்ணியம் பெறுவோமாக.

வாழ்க வளமுடன்!

🙏

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:05


*🍃நற்றுணையாவது நமச்சிவாயவே*

சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே

வாயற்ற உயிர்களையும் வாழ்விக்கும் தெய்வம்!

*திருச்சிற்றம்பலம்🙏*

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:04


குரு யார் ?
ஸ்ரீ ரமண மகரிஷி.

குரு உங்களை வழி நடத்துகிறார்.

நீ இதுவரை அடைந்தது
முடிவு அல்ல. இன்னும்
பயணிக்க வேண்டும்
என்று உணர வைக்கிறார்.

ஒரு குடத்தில் தண்ணீர் நிரப்புகிறாய். நிறைந்து விட்டது என்று நினைக்கிறாய்.
(நம் புரிதல் போல)அதற்கு மேல் அதில் தண்ணீரை அதனுள் ஊற்ற முடியாது.

நீ குடத்தில் தண்ணீரை முழுமையாக நிரப்பி விட்டாய் என்று உறுதியாக நினைக்கிறாய். அதுதான் உன் இறுதி முடிவு என்றும் உணர்கிறாய்.

ஆனால் குரு கூர்ந்து அவருடைய நிலையில் இருந்து கவனிக்கிறார்.

இன்னும் வெற்றிடம் இருக்கிறது. மேலும் தண்ணீர் ஊற்றலாம் என்று அறிகிறார்.

நம்முடைய முடிவே இறுதியானது என்று எப்போதும் எண்ணக்கூடாது.

ஆனால் குரு இன்னும் இடம் இருக்கிறது என்று கூறினால் அதை உறுதியாக நம்ப வேண்டும்.

இன்னும் நாம் அறிய வேண்டியது இருக்கிறது என்பதில் குருவின்
ஆசியோடு மேலும் பயணிக்க வேண்டும்.

நம் முடிவே இறுதியானது என்ற
மாயையில் இருந்து வெளியே
வர வேண்டும்.

பகவான் அடிக்கடி கூறுவார் :

ஸ்தூலமாக உள்ள குரு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறி உங்களை நீங்களே அறிய ( Self )உங்களுக்கு உதவுவார்.

உங்களுக்குள் ஒரு குரு Inner Guru இருக்கிறார்.

அவர் உங்களை நீங்களே அறிய,
நான் யார் ?என்ற சூட்சுமத்திற்கு
விடை காண, உங்களை நீங்களே
உணரும் வரை பயணிக்க வைப்பார்.

ஸ்ரீ ரமணா 🙏🙏🙏

Tamil Anmegam+Kolangal

23 Oct, 01:03


"நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான், வழி சொல்லணும்"-ஒரு அடியாரின் ஏக்கம்,தவிப்பு


முடிந்தபோதெல்லாம், ருத்ரம்,ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிரு போதும்"----பெரியவா.


(பெரியவா, உபதேசம் அவருக்கு மட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?)



கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர். டி.எஸ். கோதண்டராம சர்மா.
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.


உண்மையான பக்தியுடைய அடியார், ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார்.

அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம்,தவிப்பு,கவலை.

ஒரு நாள் தட்டுத் தடுமாறி,"நான் கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாளுக்கு அந்த அன்பரைப்பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர், கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர்.

அப்படிப்பட்டவரை, 'யாத்திரை போய் வா' என்பதா? 'உபாசனை செய்' என்பதா? 'கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய்' என்பதா?...

"உனக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா?"

"தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லியிருக்கேன்.."

"ஸ்ரீருத்ர சமகம்?""புஸ்தகத்தைப் பார்த்து ஒழுங்காகச் சொல்லிடுவேன்.."

"பாதகமில்லை..முடிந்த போதெல்லாம் ருத்ரம் ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு..போதும்.."--பெரியவா.

வந்தனம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுக்கொண்டு போனார். அவர் பின்னர் அடிக்கடி மடத்துக்குக் கூட வருவதில்லை. ஆனால், பெரியவாள் அந்தக் கிராமத்து அன்பர்கள் தரிசனத்துக்கு வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.

"அவரா?...அவர் இப்போ உருத்திரங்கண்ண நாயனார் மாதிரி ஆயிட்டார்!..எப்போதும் ஸ்ரீருத்ர பாராயணம் தான்!

தினமும் பத்துத் தடவையாவது விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்.."

அவர் வெகுநாள்கள் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகம் எட்டாவது அனுவாகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உடலை உகுத்தாராம்.

பெரியவா உபதேசம் அவருக்குமட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?

Tamil Anmegam+Kolangal

23 Oct, 00:59


ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாக செய்தால் முன்ஜென்ம பாவம், தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்:

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து திஷிகள், நான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்:

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம் எனப்படும். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜபிரபா பிரதோஷம்:

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோவும் வந்தால் அது, சட்ஜபிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். பக்தர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18.அஷ்டதிக் பிரதோஷம்:

ஒரு வருடத்தில் வரும் எட்டு பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம்:

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்: இந்த பிரதோஷம் அரிதிலும் அரிது. ஒரு வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வருவது துத்த பிரதோஷம். அந்தப் பிரதோஷ வழிபாட்டை செய்தால் பிறவி குறைபாடுகள்கூட சரியாகும் என்பது ஐதீகம்.

🙏🏻🪷🙏🏻🪷🙏🏻

2,679

subscribers

1,899

photos

1,908

videos