*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*
*நூல் ஆசிரியர்:✍🏻*
*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*
*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*
*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*
*பாடம் 2️⃣9️⃣ 📖 : வியாதியுற்று பிறகு குணமடைந்து விடுபட்ட நோன்பைக் கள செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தும் களா செய்யாமலேயே மரணித்துவிட்டார் குறித்த சட்டம்*
யார் வியாதியுற்று பிறகு குணமடைந்து விடுபட்ட நோன்பைக் கள செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தும் களா செய்யாமலேயே மரணித்துவிட்டாரோ அவருடைய பொருளாதாரத்திலிருந்து ஒவ்வொரு நோன்பிற்காகவும் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
அல்லது அவருடைய உறவினர்களில் யாரேனும் அவர் சார்பாக நோன்பு நோற்றால் அதுவும் சரியே!
ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
*"யார் தம் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணமாகிவிட்டாரோ அவர் சார்பாக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்."* என்று கூறியுள்ளார்கள்.
📚 ஸஹீஹுல் புஹாரி 1952 & ஸஹீஹ் முஸ்லிம் 2112
📚 - ஃபதாவா அல்லஜ்னத்துத் தாயிமா மஜல்லா அத்தஃவா 806