Kai Kodukkum Kai

@kaikodukkumkai


மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் தொடர்பு களம்.

Kai Kodukkum Kai

22 Oct, 15:07


TARATDAC சங்கத்தின் சார்பில் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி நாளை (23.10.24) சென்னையில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி பழனியில் இன்று மாலை நடைபெற்றது.

Kai Kodukkum Kai

22 Oct, 09:43


🧑‍🦽TARATDAC சங்கத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தல்..🧑🏾‍🦯

🌹🌱திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தொடர்ச்சியாக பாடுபட்டுவரும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க போராடிவரும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மீதும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மீதும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய்யான செய்திகளை கூறி சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (22.10.24) காலை TARATDAC சங்கத்தின் பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார், நகர பொருளாளர் அய்யனார் மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் பழனி காவல் துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

Kai Kodukkum Kai

22 Oct, 09:23


உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் TARATDAC சங்கத்தின் சார்பில் நடைபெறும் தர்ணா போராட்ட பேனர் உங்கள் பார்வைக்காக..

Kai Kodukkum Kai

21 Oct, 07:22


https://youtu.be/aoo0rSfB4Vk

Kai Kodukkum Kai

21 Oct, 02:33


🧑‍🦽ஆந்திராவைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை குறைந்தபட்சம் 6000 ஆகவும், அதிகபட்சம் 15,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறுநாள் வேலை வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைகள் அனைத்தையும் AAY கார்டுகளாக மாற்ற வலியுறுத்தியும் சென்னையில் நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி..🧑🏾‍🦯

நாள் : 22.10.24 மாலை 05.00 மணியளவில்,
இடம் : ரயில் நிலையம் முன்பாக, பழனி.

நாள் : 22.10.24 மாலை 06.30 மணியளவில்,
இடம் : ரயில் நிலையம் முன்பாக, திண்டுக்கல்.

இவண் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு. Cell – 9360804000, 8220832142

Kai Kodukkum Kai

20 Oct, 06:38


https://youtu.be/YJRaDEO9T-w

Kai Kodukkum Kai

19 Oct, 12:46


https://youtu.be/mFP1vBHQA6g

Kai Kodukkum Kai

19 Oct, 11:32


https://youtu.be/irbP4FLYR0s

Kai Kodukkum Kai

18 Oct, 04:44


https://youtu.be/HTVOx1C2qqo

Kai Kodukkum Kai

17 Oct, 12:44


😭TARATDAC ஆழ்ந்த இரங்கல்..😭

🌹💐திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் அ.கலையம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த சீதையம்மாள் என்னும் மாற்றுத்திறனாளி இன்று (17.10.24) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

Kai Kodukkum Kai

17 Oct, 06:03


தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறுநாள் வேலை வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைகள் அனைத்தையும் AAY கார்டுகளாக மாற்ற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ளது. போராட்ட அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக..

Kai Kodukkum Kai

17 Oct, 05:18


🧑‍🦽அக்டோபர் 25 உலக உயரம் தடைபட்டோர் தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியரிடம் TARATDAC சார்பில் மனு அளித்தல்..👨‍🦯

நாள் : 25.10.24, வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில்,
இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல்.

🌹🌱அன்புடையீர் வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25ம் நாளன்று உயரம் தடைபட்டோர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இதே தினத்தை உலகம் முழுவதும் உள்ள உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதங்களில் போராடவும். கொண்டாடவும் திட்டமிட்டுள்ளனர்.

🔥🪻அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் அக்டோபர் 25ம் நாளன்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள தங்களது பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவைக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர் என்கிற தகவலை இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள்..

💧🌲உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

🌻🔥கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.

🌸💦உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டிக்கொடுத்திட வேண்டும்..

💥🪻மாதாந்திர உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல் குறைந்தபட்சம் 6000 அதிகபட்சமாக 15000 என உயர்த்தி வழங்கிட வேண்டும்.

🍀🌹மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டி பாதுகாத்திட வேண்டும்.

🌿🥀கேலி, கிண்டல் செய்வதை தடுக்க மாநில அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திட வேண்டும்.

💐🌍அரசு பேருந்துகளில் மாநிலம் முழுக்க இலவச பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

📍🍂அரசுப்பேருந்துகள் அனைத்திலும் தாழ்வாக அமையும் வகையில் படிக்கட்டுகள் அமைத்திட வேண்டும்.

ஜெயந்தி - மாவட்ட தலைவர்
S. பகத்சிங் - மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு. Cell – 9360804000, 8220832142