Tamil News Paper - தமிழ் செய்திகள் @tamil_news_paper Channel on Telegram

Tamil News Paper - தமிழ் செய்திகள்

@tamil_news_paper


செய்திகளை விரும்பி படிப்பவரா நீங்கள்? அப்பொழுது எங்கள் செய்திகள் சேனல் இல் இணையவும்.

https://t.me/tamil_news_paper

Tamil News Paper - தமிழ் செய்திகள் (Tamil)

தமிழ் செய்திகள் சேனல் என்றால் என்ன? அது தமிழ் பக்கச் செய்திகளை அனைத்திலும் உள்ளடக்கிய ஒரு செய்திகள் சேனல். இங்கு உங்களுடைய தமிழ் செய்திகள், இன்றைய செய்திகள், அரசியல், உலக சமீபத்திய செயல்கள், மற்றும் பல உண்மையான அறிக்கைகளைப் பெறலாம். இது உங்களுக்கு தமிழ் மொழியில் உள்ள அதிசயமான சேனல் மட்டுமல்ல, அப்பொழுது எங்கள் செய்திகள் சேனல் இல் இணையவும். உங்கள் தமிழ் மொழி அதிசயமாக நேற்றுக்குரிய, இன்றைய மற்றும் நாளைய சமீபத்திய செய்திகளைப் படித்து, அறிய, பகிர். உங்கள் விருப்பம் என்ன? செய்திகளை ஆராய, அறிய, படித்துக்கொள் - தமிழ் செய்திகள் சேனல்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 19:33


Oneindia - thatsTamil
தேதி குறிச்சாச்சு! வெள்ளை மாளிகைக்கு கிளம்பும் டிரம்ப்.. ஜோ பைடனுடன் சந்திப்பு! ஆனா 2020ல் நடக்கலயே!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் சந்திக்க வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், வரும் புதன்கிழமையன்று ஜோ பைடனை சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் செல்ல இருக்கிறார் டிரம்ப். அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 19:33


Oneindia - thatsTamil
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. அனுர முன்பிருக்கும் மிகப்பெரிய சவால்! மேஜிக் நம்பர் கிடைக்காவிட்டால்?

கொழும்பு: வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கு இருக்கும் சவால் என்ன? மெஜாரிட்டி இடங்களை வெல்ல முடியாவிட்டால் என்ன நடக்கும்? இலங்கையில் ஒன் இந்தியா நடத்திய நேர்காணல் இங்கே! கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 19:33


Oneindia - thatsTamil
நசுங்கிய உடல்.. இன்ஜின் - ரயில் பெட்டி இடையே சிக்கிய ரயில்வே ஊழியர்.. உயிரே போச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் லக்னோ - பரானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் பிரித்து கொண்டிருந்தார். அப்போது முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி வந்த இன்ஜின் அவர் மீது மோதியது. இதனால் ரயில்வே பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ரயிலில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 15:32


Oneindia - thatsTamil
ராணுவத்தின் டார்ச்சர்.. போராளி ஆக முடிவு.. ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ வாழ்வில் நடந்த அந்த ட்விஸ்ட்

ஜம்மு காஷ்மீர்: அமரன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தை போலவே அங்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் தன் இளமை பருவத்தில் ராணுவத்தால் சில கொடுமைகளை அனுபவித்து போராளி ஆகும் முடிவில் இருந்துள்ளார். ராணுவ உயரதிகாரி ஒருவரின் செயல்பாட்டால் எம்எல்ஏ அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 15:32


Oneindia - thatsTamil
அதிர்ச்சி கொடுத்த கனடா அரசு! வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா திட்டம் திடீரென நிறுத்தம்!

ஒட்டாவா: கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவில் SDS என்ற ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்' திட்டம் கடந்த 2018-ஆம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 11:31


Oneindia - thatsTamil
நெருங்கிய தேர்தல்.. ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை.. யார் இந்த சுனில்?

ராஞ்சி: ஜார்கண்ட்டில் நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி உதவியாளர் சுனில் ஸ்ரீவத்சவா வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர். ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 11:31


Oneindia - thatsTamil
செக்ஸ் அமைச்சகத்தை உருவாக்குகிறது ரஷ்யா! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய முயற்சி!

மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது. இப்படி இருக்கையில், இதனை அதிகரிக்க 'பாலியல் அமைச்சகத்தை' (ministry of sex) உருவாக்க அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என மிரர் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக சரிய தொடங்கியுள்ளது. மக்கள் குழந்கைளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே உலக நாடுகள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 11:31


Oneindia - thatsTamil
சிறுவர்களின் சிறுநீரை உணவில் கலந்து சாப்பிடும் சீனர்கள்.. இது என்ன புது 'டிஷ்' ஆக இருக்கு!.. உவ்வே!

பீஜிங்: சீன மக்களிடையே விசித்திரமான உணவு பழக்க வழக்கம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வித விதமான உயிரினங்களை பிடித்து சாப்பிடுவது மட்டும் இன்றி.. இப்படியெல்லாம் உணவை சாப்பிட முடியுமா? என யோசிக்கும் அளவுக்கு சில உணவுகளை சீனர்கள் சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அந்த வகையில், சில சீனர்கள் இடையே உணவில் சிறுநீரில் கலந்து சாப்பிடும் பழக்கம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு..20க்கும் மேற்பட்டோர் பலி! நாங்கதான் காரணம்.. பொறுப்பேற்ற அமைப்பு

லாகூர்: பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
குஜராத்தில் ஆசையோடு வாங்கிய ராசியான காரை 4 லட்சம் செலவு செய்து அடக்கம் செய்த உரிமையாளர்

அஹமதாபாத்: தான் ஆசையோடு வாங்கிய ராசியான காரை விற்க மனம் இல்லாத அதன் உரிமையாளர், அந்த காரை சுமார் 4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்துள்ளார். 15 அடி பள்ளம் தோண்டி காரை புதைத்து அதில் மரக்கன்று நட்டுள்ளார். அந்த நிகழ்வில் சுமார் 1500 பேர் வரை கலந்து கொண்டனர். இதனிடையே பழைய காருக்கு இறுதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்.. வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சதத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் ரயில் நிலையம் ஒரு நிமிடம் குலுங்கியது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 42 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானினின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலோசிஸ்தான் மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரன குவெட்டா அந்த நாட்டின் பரபரப்பான நகரங்களில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் ரயில் தடம் புரண்டு விபத்து.. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. செகந்திரபாத்தில் இருந்து ஷாலிமார் சென்ற பயணிகள் ரயில் நல்பூர் அருகே விபத்துக்குள்ளானது. 3 பெட்டிகள் தடம்புரண்டது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஷாலிமாருக்கு வாராந்திர

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
குஜராத் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு.. சொந்த கிராம குழந்தைகளின் கல்விக்காக செய்த தரமான சம்பவம்

அகமதாபாத்: அமெரிக்காவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஒருவர் குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் இலவச கல்வி பெற வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வி ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு தலைமுறையையே மாற்றிவிடும். அந்த வகையில், அமெரிக்காவில் தொழில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர்.. ஒப்புக் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ.. மோடி குறித்தும் பேச்சு

டொரண்டோ: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் மோடி குறித்தும் பேசினார். ஜஸ்டின் ட்ரூடோ கூறும் போது, கனடாவில் மோடிக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டு மொத்த இந்துக்களும் அவருக்கு ஆதரவாளர்கள் இல்லை என்றார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
இதுல என்ன தப்பு? கருணாநிதி பேரன், முதல்வரின் மகன்! அதனால உதயநிதி துணை முதல்வர்! மதுரை ஆதீனம் ஆஹா ஓஹோ

மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதில் எந்த தவறும் இல்லை என மதுரை ஆதீனம் 293 ஆவது மகா சன்னிதானம் தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்றத்திற்கு செங்கோல் வழங்கிய மதுரை ஆதீனம் தற்போது திமுக அரசுக்கு ஆதரவாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை அருகே உள்ள சின்னநாகங்குடியில் நேற்று ஒரு திருமண நிகழ்வில் மதுரை ஆதீனம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 03:29


Oneindia - thatsTamil
\"அடுத்த 2, 3 மாதம் தங்கம் விலை குறையும்.. ஆனால் அதன் பிறகு..\" ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற பிறகு தங்கம் விலை குறைந்தது. இந்த வீழ்ச்சி எவ்வளவு நாட்கள் தொடரும்.. இல்லை இப்போதே தங்கத்தை வாங்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம். நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 19:28


Oneindia - thatsTamil
இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது சரமாரியாக தாக்குதல்.. உடனடியாக நெதர்லாந்துக்கு விரைந்த விமானங்கள்

ஆம்ஸ்டர்டாம்: அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவு வேளையில் கடுமையான தாக்கப்பட்ட இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானங்கள் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு விரைந்துள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இது திடீரென நடத்தப்பட்ட ஹிட் அண்ட் ரன் தாக்குதல்கள் என்று இஸ்ரேல் அதிகாரிகள் விமர்சித்தனர் இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 19:04


Oneindia.in - thatsTamil
நைட்டு தோசைக்கும் தொட்டுக்க முறுக்கு தானா? டேய் இன்னுமாடா அந்த தீபாவளி முறுக்கெல்லாம் தீர்ந்து போகல?

சென்னை : தீபாவளிக்குச் சுட்ட முறுக்கையும், அதிரசத்தையும் தான் இன்னமும் பல வீடுகளில் சாப்பிட தருகின்றனர் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். சமீபகாலமாக மக்களுக்கு விதவிதமாக உணவு சாப்பிடும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தெருவுக்கு நாலு விதவிதமான உணவகங்கள் கண்ணில் படுகின்றன. இப்படி காலையில் ஒரு மெனு, மதியம் வேறு மெனு, இரவிற்கு புதிதாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 19:04


Oneindia.in - thatsTamil
பயபுள்ள அமரன் படம் பார்த்துடுச்சு போல.. அதான் நாமளும் ராணுவத்துல சேரலாமாடானு மெசேஜ் பண்ணுது!

சென்னை : அமரன் படத்தைப் பார்த்து மக்கள் உருகி வரும் வேளையில், அதை தங்களது நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். புதிதாக எந்தப் படம் வந்தாலும் அதைக் கொண்டாடவும் சரி, திட்டித் தீர்க்கவும் சரி அல்லது விமர்சிக்கவும் சரி, சமீபகாலமாக மீம்ஸ்களைத் தான் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 15:27


Oneindia - thatsTamil
இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்ளே வரும் ஈராக்? இப்படியே வரிசையாக அரபு நாடுகள் உள்ளே வந்தால் உலக போர் தான்!

தெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டிற்கும் ஈரான் நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஈராக்கும் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்.. நிச்சயம் அதுவே பிராந்திய போரின் தொடக்கமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பதற்றமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Nov, 03:04


Oneindia - thatsTamil
இஸ்ரேலின் கொடூர தாக்குதல்! பாலஸ்தீனத்தை தொடர்ந்து.. லெபனானில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

பெய்ரூட்: பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளது. பாலஸ்தீனத்தின் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக கூறி ஹமாஸ் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஹமாஸ் ஒரு தீவிரவா அமைப்பு, எனவே இதுபோன்ற அமைப்புகளிலிருந்து எங்களை காப்பாற்றவே ராணுவ கட்டமைப்புகளை நாங்கள் பலப்படுத்தி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Nov, 03:04


Oneindia - thatsTamil
சிதம்பரம் கோவிலில் புது கொடிமரம்.. உள்ளே புகுந்த அறநிலையத்துறை அதிகாரிகள்.. தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கொடி மரத்தை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Nov, 03:04


Oneindia - thatsTamil
இஸ்ரேலுக்கு செக்! புது ஆயுதம், ராட்சச கருவிகளை களமிறக்க போகிறோம்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் மெசேஜ்

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக நவீன ராட்சச ஆயுதங்கள், பயங்கர கருவிகளை களமிறக்க போகிறோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம். புதிய நவீன ஆயுதங்களை இடம்மாற்றி வருகிறோம். எங்களுடைய தாக்குதல் இந்த முறை பயங்கரமாக இருக்கும். நவீன ராட்சச கருவிகள் தாக்குதலுக்கு தேவையான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். இந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சுனாமி போல ஸ்பெயினை அடித்து காலி செய்த வெள்ளம்.. 200+ உயிரிழப்பு, பலர் மாயம்.. என்ன தான் நடந்தது!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல ஆயிரம் பேர் மாயமடைந்துள்ளனர். சுனாமி போல ஸ்பெயினை அடித்து காலி செய்த இந்த வெள்ளம் அங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள மிக முக்கிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
காங்கிரஸின் அடுத்த வாரிசு இவரா? ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவை கவனிச்சீங்களா? யார் இந்த ரைஹான்?

காங்கிரஸ்.. நம் நாட்டின் பழமையான கட்சி. மத்தியில் பல முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி அதிகாரத்தை 2வது முறையாக இழந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 3 இலக்கத்தை தொடவில்லை. ராகுல் காந்தி 2 தொகுதிகளில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சீமானுக்கு வாக்கு வங்கி இல்லை! அதனால் விஜய்யை பார்த்து பயம்! கார்த்தி சிதம்பரம் சாடல்

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதால் விஜய்யின் வருகை அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவரது இலக்கு தமிழக சட்டசபை தேர்தல் 2026

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சைக்கிள் ஓட்டும்போது.. ஃபோன் பேசினால்.. 6 மாசம் ஜெயில்.. எந்த நாட்டில் தெரியுமா?

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நண்பர்கள், உறவினர்களிடம் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவது, ஹெட்போன்களில் பாட்டு கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது, சிலர் இன்னும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
பெண்களுக்கு மாதம் ரூ. 2100, இலவச சிலிண்டர்கள்.. ஜார்கண்ட் தேர்தலுக்கு பாஜக அள்ளி வீசிய வாக்குறுதிகள்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ. 2100, இலவச கேஸ் சிலிண்டர் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்-

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
நிலைமை கைமீறுகிறது! இந்திய தூதர்களை கண்காணிக்கும் கனடா.. தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு? பகீர்

ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மிக மோசமான உறவு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பதாகவும் அவர்களின் தொலைப்பேசி உரையாடல்களையும் அரசு கண்காணிப்பதாகவும் மத்திய அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியா கனடா இடையேயான உறவு கடந்த சில மாதங்களில் மிக மோசமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
650 அடிக்கு சுனாமி.. 9 நாட்கள் விடாமல் தொடர்ந்த நிலநடுக்கம்.. மிரண்ட ஆய்வாளர்கள்.. எங்கு தெரியுமா?

நூக்: கிரீன்லாந்து நாட்டில் கடந்தாண்டு மிகப் பெரியளவில் சுனாமி ஒன்று ஏற்பட்டுள்ளது. பெருங்கடலில் இருந்து தனித்து, செங்குத்தான பாறைகள் சூழ்ந்த இடத்தில் இந்த சுனாமி ஏற்பட்டதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், அப்போது ஏற்பட்ட சுனாமி சுமார் 9 நாட்கள் நீட்டித்ததாகவும் அலைகள் சுமார் 650 அடி வரை உயர்ந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உலகில் நம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்! ஞாயிறு சந்தையில் கையெறி குண்டு வீச்சு- 10 பேர் படுகாயம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஶ்ரீநகரில் சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
\"அணுகுண்டு.. துளியும் தயங்க மாட்டோம்..\" இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல்? ஈரான் எச்சரிக்கை! பதற்றம்

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும் அது வலி மிகுந்த ஒன்றாக இருக்கும் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி அமேனி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் வடக்கு எல்லையிலும் நிலைமை மோசமாகி இருக்கும் சூழலில், அங்குப் பிராந்திய போர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சந்திரபாபு நாயுடுவை நெருங்கிய பெண்! திடீரென செய்த காரியம்.. ஒரு நொடி ஸ்டன் ஆன காவலர்கள்.. கலகல

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்போது அனகப்பள்ளி நகருக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை பெண் தொண்டர் ஒருவர் திடீரென நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாயுடுவுக்கு அருகே இருந்த காவலர்கள் அனைவரும் பதறிய நிலையில், கடைசியில் நடந்த சம்பவம் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நம்ம ஊரில் சினிமா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
13 வயது வளர்ப்பு மகள்களை தந்தையே திருமணம் செய்யலாம்.. ஈரான் சட்டத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு

டெஹ்ரான்: இஸ்லாமிய நாடாக ஈரான் உள்ளது. இந்த நாட்டில் 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை, அவரது தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஈரானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஈரான்.. எண்ணெய் வளமிக்க இஸ்லாமிய நாடுகளில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
பயங்கரவாதிகளை கொல்லக் கூடாது.. வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா.. கிளம்பியது சர்ச்சை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை கொலை செய்யக்கூடாது எனவும் அவர்களை உயிருடன் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. புலம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
முடிச்சிட்டாங்க.. ஜார்கண்ட்டில் ‛இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு.. யாருக்கு எத்தனை சீட்?

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு கடும் இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால் அங்கு தனித்தனியாக போட்டியிடுகின்றனர். ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
ஹிஸ்புல்லா மூத்த உறுப்பினர் கைது.. லெபனானில் நுழைந்து இஸ்ரேல் சிறப்பு படை அதிரடி.. பரபரப்பு சம்பவம்

பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் லெபனானுக்குள் புகுந்த இஸ்ரேல் சிறப்பு கமாண்டோக்கள் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினரை கைது செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
இவ்வளவு கோடியா? ஒரு தேர்தல் வியூகத்துக்கான சம்பளம் இதுதான்! வாயை பிளக்க வைத்த பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக வலம் வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது சொந்தமாக கட்சி தொடங்கி உள்ளார். ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரை மையப்படுத்தி அரசியல் கட்சி தொடங்கி தற்போது செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஒரு கட்சியிடம் இருந்து அவர் வாங்கும் கட்டணம் குறித்து முதல் முறையாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
பலமுனைகளில் இருந்து வரும் தாக்குதலுக்கு நடுவே.. இஸ்ரேல் இறக்கும் புதிய லேசர் ஆயுதம்.. போச்சு

டெல் அவிவ்: இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பில் அயர்ன் பீம் எனப்படும் புதிய லேசர்  தொழில் நுட்பம் கொண்ட ஏவுகணை தடுப்பு அமைப்பை விரைவில் இணைக்க திட்டமிட்டுள்ளது. ஒளியின் வேகத்தில் லேசர் ஒளிக்கதிர்களை வீசி, எதிரி நாடுகளின் எறிகணைகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டதாக இந்த புதிய தளவாடம் உள்ளது. நாலாபுறமும் நெருக்கடிகளை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
மாநில மொழிகள் உயிருடன் இருக்க காரணமே திராவிட இயக்கம் தான்.. கேரளாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி!

கோழிக்கோடு: தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் முற்போக்கு சிந்தனை பரந்து விரிந்துள்ளது. பாஜகவின் ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டங்களை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

22 Oct, 00:07


Oneindia - thatsTamil
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்? உக்ரைன் போருக்கு நடுவே எகிறும் டென்ஷன்.. என்ன நடந்தது?

வாஷிங்டன்: சூடானில் உள்நாட்டு பிரச்சினை நடந்து வரும் நிலையில், அங்குள்ள துணை ராணுவ படையால் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 20:07


Oneindia - thatsTamil
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. இரவோடு இரவாக காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் லிஸ்ட்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதி நடைபெற

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 16:06


Oneindia - thatsTamil
இஸ்ரேலை விடுங்க.. சத்தமே இல்லாமல் வடகொரியாவை வைத்து ரஷ்யா போடும் பிளான்! உக்ரைனில் பதற்றம்

கீவ்: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் மோதல் தொடரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையேயான சண்டையும் மீண்டும் உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவுக்காக உக்ரைன் நாட்டில் சண்டையிட ஆயுதங்கள் மட்டுமின்றி வீரர்களையும் வடகொரியா அனுப்புகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக உள்ளது. இப்போது உலகமே மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 16:06


Oneindia - thatsTamil
தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநரின் சர்சசையும்.. பெரிசுபடுத்தாதீங்க.. சொன்னது யார் தெரியுமா?

ஆம்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்,தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது என்றும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை வெள்ளம் ஒருநாள் தான் வந்தது. ஆனால், அந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
தவறு நடக்க போகிறது.. அணு உலைக்கு குறி வைக்கிறாங்க.. பதறி ஓடிய ஈரான்.. இஸ்ரேல் மீது பரபர புகார்

டெஹ்ரான்: சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது.  அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது. இது தொடர்பாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
\"போரை நிறுத்த நாங்க தயார், ஆனால்..\" இஸ்ரேல் போட்ட கண்டிஷன்கள்! அமெரிக்காவுக்கு போன சீக்ரெட் ஆவணம்

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே லெபனானில் போரை நிறுத்த இஸ்ரேல் இரண்டு கண்டிஷன்களை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆவணத்தையும் அமெரிக்காவிடம் இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஹிஸ்புல்லா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
காஷ்மீரில் கொடூர தாக்குதல்! 6 பேர் கொலைக்கு பொறுப்பேற்றது லக்ஷர் முன்னணி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, முதல்வராக வெற்றி பெற்றிருக்கிறார்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
கட்டுக்கட்டாக பணம், குளியலறை.. பதுங்கு குழியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சின்வார்! இஸ்ரேல் பகீர்

டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆப்ரேஷனில் ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான் யூனிஸ் என்ற பகுதியில் சின்வார் ஒளிந்து இருந்த பதுங்கு குழியின் வீடியோவை இப்போது இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் குளியலறை, பணம் எனச் சொகுசு வசதிகளுடன் அவர் வாழ்ந்ததாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
வேலையை காட்டிய இஸ்ரேல்.. ஓடி பதுங்கிய ஹிஸ்பொல்லாவின் டாப் தலை.. சீக்ரெட் விமானத்தில் திக் பயணம்

டெஹ்ரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இயங்கும் எரெம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவிற்கு அரசுமுறைப் பயணமாக ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பயன்படுத்திய விமானத்தில் காசிம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 08:04


Oneindia - thatsTamil
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்.. 12 வருடத்துக்கு பிறகு நடந்தது என்ன?

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அப்பெண்ணின் வயிற்றில் 2 கத்தரிக்கோல்கள் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கூடுதல் அதிர்ச்சியாக 12 ஆண்டுகளாக இரண்டு கத்தரிக்கோல்கள் அப்பெண்ணின் வயிற்றில் இருப்பது தெரியவந்துள்ளது. சிக்கிம் மாநிலம், காங்டாக்கைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கத்தக்க

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 08:04


Oneindia - thatsTamil
ஜார்க்கண்ட் தேர்தல்: தொகுதி பங்கீட்டால் இந்தியா கூட்டணியில் பிளவு! ஆர்ஜேடி, இடதுசாரிகள் செம்ம கோபம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு சொற்பமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததால் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அதே நேரத்தில் பாஜக கூட்டணி சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 04:03


Oneindia - thatsTamil
இஸ்ரேல் களமிறக்கிய புது சக்தி! எல்லையில் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் \"THAAD\" சிஸ்டம்! ஈரானுக்கு செக்

டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தில் THAAD அமைப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் எல்லையில் இந்த THAAD அமைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மேலும் இதே போன்ற THAAD அமைப்பு அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 04:03


Oneindia - thatsTamil
ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்! என்கவுண்ட்டரில் தீவிரவாதி கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 பேர் பலியாகியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 04:03


Oneindia - thatsTamil
காதலியிடம் பேசிட்டேயிருந்த இளைஞர்.. அடுத்த நொடியே ஹைவேஸில் கதறிய பிளஸ் 2 மாணவி.. கலங்கிப்போன கடப்பா

திருமலை: வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.. கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 00:03


Oneindia - thatsTamil
நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. வடக்கு காசாவில் 87-க்கும் மேற்பட்டவர்கள் பலி

டெல் அவிவ்: வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், அருகில் இருந்த சில வீடுகளும் தரைமட்டமாகின. இதில் சிக்கி 87 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஒராண்டுக்கும் மேலாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 21:11


Oneindia.in - thatsTamil
புதுக்கோட்டை அப்பத்தா எப்படா ப்ரைடு ரைஸ் கிண்டுச்சு.. உங்க அலம்பலுக்கு அளவே இல்லையாடா?

ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் அசைவ உணவு மீம்ஸ்களுக்குப் பதிலாக, உப்புமா, புளிசாதம் என சைவ உணவு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.சென்னை : ஒருவழியாக புரட்டாசி மாதம் முடிந்து விட்டது, விதவிதமான அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதுபோல் சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக பகிர்வார்கள் என எதிர்பார்த்தால் ஏமாற்றி விட்டார்கள் நம் நெட்டிசன்கள். புளிசாதம், உப்புமா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 20:02


Oneindia - thatsTamil
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் பலி! உமர் அப்துல்லா ஆவேசம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர், 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 16:01


Oneindia - thatsTamil
கண்கள் சிவந்த இஸ்ரேல் பிரதமர்.. உடனே பாய்ந்த ஏவுகணைகள்.. ஆடிப்போன ஹிஸ்புல்லா.. என்ன நடந்தது?

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இப்போது இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீதும், காசாவில் உள்ள ஹமாஸ் படை மீதும் இஸ்ரேல் இப்போது தாக்குதலை நடத்தி இருக்கிறது. மத்திய கிழக்கில் இப்போது நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. ஒரு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 12:00


Oneindia - thatsTamil
கோழிக்கோட்டை அதிரவைத்த கொள்ளை.. காரை சேஸ் செய்து.. மிளகாய்ப் பொடியை தூவி.. திக் திக் நிமிடம்

கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவரின் மீது மிளகாய்ப் பொடியை வீசியடித்து 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள 3 எஸ்பிஐ ஏடிஎம்களில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 12:00


Oneindia - thatsTamil
இஸ்ரேல் பிரதமர் மீது கொலை முயற்சி.. உடனே ஈரான் கொடுத்த பதில்.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது?

தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இல்லத்தைக் குறிவைத்து நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு காரணம் என கூறப்படும் நிலையில், ஈரானுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நாளுக்கு நாள்