🐚ஜீவநாடி~உண்மைகள்💎 @jeevanaadi Channel on Telegram

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

@jeevanaadi


சித்தர்களின்..
ஒளிநிலை
இறையாளர்களின்..
ஒரு ஊடகமாக..உள்ள
ஜீவநாடி பற்றிய
உண்மைகளையும்,
அனுபவ பலன்களையும்..
பகிரும் தளம்.

🐚ஜீவநாடி~உண்மைகள்💎 (Tamil)

ஜீவநாடி என்பது சித்தர்களின் ஒளிநிலையை இறையாளர்களின் ஒரு ஊடகமாக உள்ள தளம். அவர்கள் உண்மைகளையும், அனுபவ பலன்களையும் பகிருகின்றனர். இந்த டெலிகிராம் சேனல் 'ஜீவநாடி~உண்மைகள்' ஆகும். இது சித்தர்களின் அற்புதம் உண்மைகளையும், அவர்கள் அனுபவம் செய்யும் அதிசயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இணையத்தளம். இந்த சேனல் 'ஜீவநாடி~உண்மைகள்' உங்களுக்கு சித்தர்களின் அற்புதம் உண்மைகளை அறிய உதவும் மற்றும் சித்தர்கள் அனுபவிக்க அனைத்து வகையான பல்லாயிரங்களையும் உங்களுக்கு வழங்கும். இதனை மற்றும் அதன் பல்வேறு அறிகுறிகளை அறிய, 'ஜீவநாடி~உண்மைகள்' சேனலில் இணைந்து கொள்ளவும். நீங்கள் சித்தர்களின் அற்புதம் உண்மைகளை அறிய விரும்பும் அல்லது அவைக்கு அனுபவம் செய்ய விரும்பும் ஆனால், இந்த சேனலை மறக்காதீர்கள்.

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

19 Nov, 11:52


நந்தி ரகசியம்
மின்னூல்
(சித்தர் நாவல்)

எழுத்தாளர்:
இந்திரா சௌந்தரராஜன்

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

19 Nov, 11:50


அகத்தியர் ஜீவநாடி
பொது அருள்வாக்கு 2

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

19 Nov, 11:50


அகத்தியர் ஜீவநாடி
பொது அருள்வாக்கு 1

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

17 Nov, 08:14


அருமையான பகிர்வு ..

ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை
நாய்க்கு போடக்கூடாது
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால்,
பசி தாங்க முடியாமல்,

கோயிலின்
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி,

இராமேஸ்வர
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ??

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ??

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து,

திருவிழா
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும்
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம்
வேறு இருப்பதால்,

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள்,

நாயும் இராமேஸ்வரம் புறப்படத்
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே,

ஒரு வீட்டின் பின் பக்கத்தில்
*"பொத்"* என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப்
பார்த்தால்,

ஆஹா !!
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி
விருந்தாக
இருக்கும் போலிருக்கிறதே !!

நிறைய வேறு
மிச்சம் வைத்து
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான்
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !!

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ??

வாழ்க்கையை
எப்பத் தான்
அனுபவிக்கிறது
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்,

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும்,

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்,

இது தான்
நம்மில் பெரும்பாலரது செயற்கையான கடவுள் வழிபாடும் !!

துன்பம் வரும்
போது கடவுளைப் பற்றி நினைப்போம், உருகுவோம்,

சிக்கலின்றி
நன்றாக
வாழும் போது,

கடவுள் வழிபாட்டுக்கு இன்னும் நமக்கு
வயது இருக்கிறது என்று நினைப்பதோடு அல்லாமல்,

இளமையில்
சாமி கும்பிடுபவர்
களையும் கெடுப்போம் !! கிண்டலடிப்போம் !!

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

12 Nov, 03:13


அதாவது, மூன்று ஸரீரங்கள், ஐந்து கோஷங்கள், மற்றும் மூன்று அவஸ்தைகள் என பதினொன்று தத்துவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவைகள் முற்றிலும் ஆத்மாவிடமிருந்து வேறானவைகள் என்பதை இனி விளக்கமாக கூற உள்ளது.

இதில் ஆத்மா என்பதற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதனை "சத் சித் ஆனந்தம்" (சத் – இருத்தல், சித் – அறிவு, ஆனந்தம் – நிறைவு) என்று கூறப்படுகின்றது. அதாவது இதில் மூன்று தன்மைகளை அறிமுகப்படுத்தப்படுகின்றது.

~ தத்வ போதம் நூலிலிருந்து..
[தமிழாக்கமும் விளக்கவுரையும் &
Thanks to🙏 www.paraparam.in ]

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

12 Nov, 03:13


"ஆத்மா" என்றால் என்ன?

“நான்”, “நான்” என்று சொல்கின்ற வார்த்தையையே “ஆத்மா” என்று பாரத சாஸ்திரம் கூறுகின்றது.

ஆக “நான்” 🤷🏻‍♂️ என்பது இந்த உடல் என்பதாக நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த “நான்” 🤷🏻‍♂️ என்பதை நாம் பயன் படுத்துகின்ற இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.

அதாவது, “நான்” என்பது சில நேரங்களில் உடலைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் மனதைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் புத்தியைக் குறிப்பிட்டும், இன்னும் சில நேரங்களில் அறிவைக் குறிப்பிட்டும் பல அர்த்தங்களுடன் கையாளப்படுகின்றது.

ஆனால், இங்கு “நான்” 🤷🏻‍♂️ என்பதை நாம் எந்த அர்த்தத்தில் உண்மையில் புரிந்து கொண்டுள்ளோம் என்று பார்த்தால், தவறாகவே அதை புரிந்து கொண்டு கையாண்டு வருகின்றோம்.

இந்த “நான்” 🤷🏻‍♂️ என்பது உண்மையிலேயே அந்த சத்திய வஸ்துவான “ஆத்மா” என்பதை வேதாந்தம் மட்டுமே நமக்கு சாஸ்திரத்தின் வாயிலாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கின்றது.

வேதாந்தம் உண்மையில் எங்கு தொடங்குகின்றது என்பதை அறிய முற்பட்டால், இந்த “நான்” என்பதற்கு உண்மையான வஸ்து ஒன்று உள்ளது. ஆனால், நாம் “நான்” என்ற சொல்லுக்கு உண்மையல்லாத ஒன்றையும் கலந்து புரிந்து கொண்டு உள்ளோம் என்பதை நமக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகின்றது.

இதை எப்படி அறிவது என்றால்,

எது என்னுடையது என்று கூறுகின்றோமோ, அது நிச்சயமாக “நான்” ஆக இருக்க முடியாது. எதை “நான்” என்று கூறுகின்றோமோ நிச்சயமாக அது என்னுடையதாக இருக்க முடியாது.

அப்பொழுது “நான்” என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு வேறாக ஒன்று என்னிடம் உள்ளதால்தான் நாம் அதை இது என்னுடைய பொருள் என்று கூறுகின்றோம்.

இந்த உடலை சில நேரங்களில் “நான்” என்று அழைக்கின்றோம். சில நேரங்களில் என்னுடையது என்றும் அழைக்கின்றோம். இதிலிருந்து “நான்” என்ற சொல்லில் நாம் புரிந்து கொண்டுள்ளதில் குழப்பம் உள்ளது.

இப்பொழுது விசாரம் செய்து பார்த்தால் எது உண்மையான “நான்” என்று அறிய முற்பட்டால், “ஆத்மா” என்ற ஒன்று மட்டுமே “நான்” என்பதற்கு உண்மையான அர்த்தம்.

ஆத்மா = நான்.

அனாத்மா = நான் அல்லாதது.

ஆக, நான் அல்லாதவற்றை “நான்” என்று தவறாக கலந்து புரிந்து கொண்டு உள்ளோம்.

எனவே, நாம் ஆத்மா என்ற தத்துவத்தில் அனாத்மாவை கலந்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளதால், தவறானவற்றை நீக்கி சரியானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.

இதற்காக குரு என்பவர் ஆத்மாவுடன் கலந்து உள்ள சிலவற்றை நமக்கு சுட்டிக் காட்டி, இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க முயற்சிக்கின்றார்.

அனாத்மாவில் நம்மிடையே “நான்” என்ற புத்தி உள்ளதை இங்கு சுட்டிக் காட்ட உள்ளார்.


ஆத்மாவினுள் உள்ளவைகள் என்னென்ன?

அனாத்மாவிடமிருந்து வேறான தன்மை உள்ளது "ஆத்மா" எனப்படும்.
ஆத்மா என்பது சத்தியம், அனாத்மா என்பது அசத்தியம்.
இதில் ஆத்மா என்பது “நான்”, ஆத்மா அல்லாத அனாத்மாவான எதுவும் நானல்ல என்பதை இனி ஒவ்வொன்றாக விளக்க உள்ளார்.
எந்தெந்த அனாத்மாக்களை “நான்” என்று தவறாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை இனி ஒவ்வொன்றாக புரிய வைக்க உள்ளார்.
முதலில் “நான்“ 🤷🏻‍♂️ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஸரீரம் (உடல்) மூன்று வகைகளில் உள்ளது என்றும் அவைகள் முறையே,

1. ஸ்தூல ஸரீரம்
2. சூக்ஷும ஸரீரம்
3. காரண ஸரீரம் என்பனவாகும்.

ஸ்தூல ஸரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்.

சூக்ஷும ஸரீரம் என்பது மனம்.

காரண ஸரீரம் என்பது ஸ்தூல ஸரீரமும் (உடல்), சூக்ஷும ஸரீரமும் (மனம்) இரண்டும் தோன்ற காரணமாக எது இருந்ததோ அதுவே காரண ஸரீரம் ஆகும்.

அடுத்து ஐந்து கோஷங்கள் உள்ளன என்றும், அவைகள் முறையே,

1. அன்னமய கோஷம்
2. பிராணமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விஞ்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம் என்பனவாகும்.

கோஷம் என்பது உறை என்று அழைக்கலாம். "பஞ்ச கோஷங்கள்" என்றால் ஐந்து உறைகள் என்று பொருள். மேற்கண்ட இந்த மூன்று ஸரீரங்களும் சேர்ந்ததே ஐந்து கோஷங்கள் ஆகின்றன.

ஸ்தூல ஸரீரம் என்பதை அன்னமய கோஷம் என்றும்,

சூக்ஷும ஸரீரம் என்பதை பிராணமய கோஷம், மனோமய கோஷம், மற்றும் விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்தது என்றும்,

காரண ஸரீரம் என்பது ஆனந்தமய கோஷம் என்றும் ஆகின்றன.

அடுத்தது மூன்று விதமான அவஸ்தைகள் உண்டு என்றும் அவைகள் முறையே,

1. ஜாக்கிரதா அவஸ்தை – விழிப்பு நிலை
2. ஸ்வப்ன அவஸ்தை. – கனவு நிலை
3. சுஷுப்தி அவஸ்தை – ஆழ்ந்த உறக்க நிலை என்பனவாகும்

இந்த மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்காமல் சாட்சியாக இருந்துக் கொண்டு இருப்பதுவே ஆத்மா ஆகும்.

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

09 Nov, 05:25


#தர்ப்பணம்_செய்வதின் #அறிவியல்_காரணங்கள்

🌼7 தலைமுறைகள் !

🌼ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் .

சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .

🌼அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .

🌼தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்;

🌼பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்;

🌼முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் --

🌼ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .

🌼நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்;

🌼ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்;

🌼ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன .

🌼எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன .

🌼எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .

🌼நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் --

🌼இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம்🌼🌹

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

05 Nov, 10:42


https://paraparam.in/purusartha/

👆 A U D I O L I N K 🎧

புருஷார்த்தம் =
அறம், பொருள், இன்பம்,வீடுபேறு

விளக்கவுரை :
சுவாமி.
பிரபஞ்சநாதன்,
பொள்ளாச்சி

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

04 Nov, 01:10


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவராசிகளின் உருவவேறுபாடுகளும் அவற்றின் உண்மையும் சிறப்பும்*

*நவம்பர் 4*

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

04 Nov, 01:10


Words for Wisdom #7
Agathiyar Gnana Saathanam, அகத்தியர் ஞானசாதனம் - உபதேசம்

சித்தர் சுருதி #:
அகத்தியர் சித்தரின் பெருமானாரின் ஞானசாதனம் 113 RARE WISDOM POETIC SCRIPTS
(For WhatsApp Status)
https://youtu.be/w0bnOjZR7gA

My Youtube Channel
Playlist :
https://youtube.com/playlist?list=PLDOUCtAoF3aleDok_C3uWPwiS8EsS31L5

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

27 Oct, 07:21


https://youtu.be/qUow1gdHWcE?si=kofHYdmAujDrDQLr

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

22 Oct, 10:54


Video from R•J•N_$ G

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

16 Oct, 11:48


Video from R•J•N_$ G

1,415

subscribers

1,732

photos

224

videos