பிரிடோ ராஜ்
நெல் பயிர் இயற்கை முறையில் வளர்ப்பதற்கான அட்டவணை வயது : 105 லிருந்து 110 நாள் வரை
1. விதை சான்று பெற்ற தரமான விதை நெல் வாங்கலாம். பாரம்பரிய நெல் என்றால் ஏற்கனவே அறுவடை செய்ததிலிருந்து 90 நாள் ஆன தரமான விதைநெல் பயன்படுத்தவும்.
2. நெல்லை விதை நேர்த்தி செய்த பின்பு மட்டுமே நாற்றங்களில் இடலாம்.
3. நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(14 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
4. நாற்றங்கால், தூர் வெடிக்கும் பருவம், பூக்கள் எடுக்கும் பருவம், கதிர் முற்றும் பருவம் போன்ற நேரங்களில் நிலத்தில் ஈரம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும். எந்த நேரத்திலும் நிலத்தில் வெடிப்பு விழும் அளவுக்கு காய விடக்கூடாது.
பூ எடுத்த பின்பு 2 சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் பாசன நீரை தேக்கி வைக்கலாம்.
5. பின்வரும் குறிப்புகளில் உள்ள திரவங்களை முன்கூட்டியே தயாரித்து அல்லது வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
6. நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 லிட் சூடோமோனாஸ், 2 லிட் அசோஸ்பைரில்லம், 1 லிட் பாசவோ பாக்டீரியா, 1 லிட் பொட்டாஷ் பாக்டீரியா பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
நாற்றுக்களை 24 நாளாம் நாட்களுக்குள் நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.
நாற்றங்கால் பராமரிப்பு:
3 ம் நாள்
பாசன நீரில் ஜீவாமிர்தம் 100 லிட் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மீன் அமிலம் கலந்து கொடுக்கலாம்.
10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது ஈயம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
10 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி நாற்றங்காலுக்கு 2 லிட்டர் தரை வழியும் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா தெளித்தும் கொடுக்கலாம்.
16வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு நாற்றங்காலுக்கு 2 லிட்டர் தரைவழி மற்றும் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாம்.
நாற்றுக்களை பிடுங்கும் முந்தைய தினம் நாற்றங்காளில் 100 லிட்டர் தண்ணீருடன் 1 லிட் மீன் அமிலம் கலந்து வேர்களில் படுமாறு ஊற்றி விடலாம்.
16-18 ஆம் நாள் நடவு.
20 வது நாள் -- பஞ்சகாவியா அல்லது இ .எம் கரைசல்10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் இஎம் கரைசல் அல்லது மீனமிலம் தரைவழி 3 லிட் + பாஸ்போ பாக்டீரியா 1 லிட் + டிரைக்கோ டேர்மா விரிடி 1 லிட் + 1 லிட் பேசிலோமசிஸ் கலந்து கொடுக்கலாம்.
28 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
35 வது நாள் -- கோனோவீடர் (கோனோவீடர் வாய்ப்பு இல்லை என்றால் ஆட்களை வைத்து கைக்களை எடுக்க வேண்டும் அல்லது காலில் மிதித்து விடலாம்) 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி வேப்ப எண்ணெய் அல்லது100 மில்லி பேசலஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து தெளிக்கவும். தரை வழியாக 3 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.
38 வது நாள
பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
42 வது நாள் -- கோனோ வீடர் பயன்படுத்தலாம். பின்பு ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
இ.எம் கரைசல் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம்.
48 வது நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து மூலிகை பூச்சிவிரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் தெளிக்கலாம்.
56 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் + 1 lit வாம் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
65 வது நாள் --
10 லிட்டருக்கு 100 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் மீன் அமிலம் தரைவழி 2 லிட்டர் கொடுக்கலாம்.
70 வது நாள் --
10 லிட்டருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி இ.எம் கரைசல்+ 100 மில்லி சூடோமோனஸ் உடன் கலந்து தெளிக்கலாம்.
மீன் அமிலம் 200 லிட்டரில் 3 லிட்டர் கலந்து பாசனத்தின் வழி கொடுக்கலாம்.
78 வது நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி ஈயம் கரைசல்+ 100 மில்லி பேசிலெஸ் குறிஞ்சி என் சி எஸ் கலந்து தெளிக்கலாம்.
83 வது நாள் --
10 லிட்டருக்கு 120 மில்லி கற்பூர கரைசல் அல்லது 100 மில்லி மெட்டாரைசியம்+100 மில்லி பேஸிலர்ஸ் குறிஞ்சி என்சிஎஸ் கலந்து தெளிக்கலாம்.
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட்+1 லிட்டர் மெட்டாரைசி யம் பாசனத்துடன் கொடுக்கலாம்.
88 வது நாள் --
மீன் அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட். கொடுக்கலாம்.