விண்ணியலும் வாழ்வியலும் @vinniyalum_valviyalum Channel on Telegram

விண்ணியலும் வாழ்வியலும்

@vinniyalum_valviyalum


விண்ணியலும் வாழ்வியலும் (Tamil)

விண்ணியலும் வாழ்வியலும் என்பது ஒரு தமிழ் டெலிகிராம் சேனல் ஆகும். இந்த சேனல் மூலம் நீங்கள் விண்ணியக் கூறும் அனைத்து சமஸ்யைகளும் வாழ்வியல் கேட்கலடாது. இது ஒரு மகிழ்ச்சியும் அறிவும் பொருளியலும் கொண்ட சேனல். இது ஒரு பயனுக்கு அரிப்படை வகையில் உள்ளது, எனவே விண்ணியலை பேசுவது முக்கியமாக இருக்கும். இந்த சேனலில் அனைத்து உதவியாளர்களும் பங்கேற்கவும், பகிரவும். உங்கள் விண்ணத் தொடர்புக்கு இந்த சேனலை பயன்படுத்துக. விண்ணியலும் வாழ்வியலும் சேனலில் உள்ள தகவல்கள் உங்கள் வாழ்த்தியதை மேம்படுத்தும்.

விண்ணியலும் வாழ்வியலும்

04 Jan, 23:48


கோள்கள் பயணம் செய்யும் பாதையில் உள்ள விண்மீன்களை அடையாளப்படுத்தி, 30 திகிரியில் உள்ள விண்மீன்களை இணைத்து ராசிகளாக்கினர். சந்திரன் பயணம் செய்யும் வட்டப் பாதையை 13.33 என்று 27 பாகங்களாக்கி 27 நட்சத்திரங்களாக பிரித்து வானத்தை புரிந்து அதை பால் வெளியாக (Galaxy) அறிந்து வைத்திருந்தனர் நம் முன்னோரகள்.

ஆனால் அந்த 12 ராசிகள், மற்றும் 27 நட்சத்திரங்களிலும் நம் பூமி, சூரியன் நிலா , மற்றும் 5 கோள்களும் பயணிக்கும் பொழுது நம் பூமியில் ஏற்படும் தாக்கத்தை குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வந்ததில் பல கருத்துக்களை உருவாக்கினார்கள்.
நம் பூமி சில ராசிகளில் பயணிக்கும் பொழுது வெயில் காலமாகவும், சில ராசிகளில் பயணிக்கும் பொழுது குளிர்காலமாகவும் , இப்படி நம் பூமியில் அந்த ராசிகளில் , மற்றும் நட்சத்திரங்களில் பயணிக்கும் பொழுது , மாற்றங்கள் ஏற்படுவதை அவதானித்து, அந்த ராசிகளுக்கு மற்றும் நட்சந்திரங்களுக்கு நம் பூமியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய குணங்கள் இல்லாவிட்டாலும், அந்த ராசியில் அல்லது நட்சத்திரத்தில் மற்ற கோள்கள் பயணிக்கும் போது நம் பூமியில் தாக்கம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அந்தந்த குணங்கள் இல்லாத ராசிகளுக்கும், நட்சந்திரங்களுக்கும் , குணங்கள் கொண்ட கோள்களின் குணங்களை ராசிகளுக்கும், நட்சந்திரங்களுக்கும் கொடுத்தனர். உதாரணமாக மேச ராசிக்கு , செவ்வாய்யை அதிபதி ஆக்கினார்கள். கார்த்திகைக்கு சூரியன் என்று பொருத்தினார்கள்.
இப்படி இந்த ராசிக்கு இந்த அதிபதி என்று, கோள்களின் குணங்களை கொடுத்து அதை கண்காணித்து புரிந்து கொண்டனர்.
அதே போல் இந்த மிகப்பெரிய அண்டம், பிரமாண்டம், எண்களின் குணத்தைக் கொண்டு அதன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என புரிந்து கொண்டனர். உதாரணமாக 12 மாதங்களில் நமது பூமி சூரியனை 360 திகிரி சாய்ந்த வட்டத்தில் சுற்றி வருகிறது என்றும் இப்படி எண்களின் கணக்குகளில் அனைத்தையும் அறிந்து கொள்ளாலாம் எனவும் அறிந்து வைத்து இருந்தனர்.

இதைத்தான் வள்ளுவர்
கோளில் பொறியில் குணம் இலவே,
எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.
என்று கூறி உள்ளார்.
இந்த குறளின் பொருள்.
இந்த மிகப்பெரிய இறைவனின் (இயற்கை) தாளை பணிந்து வணங்காதவர்களுக்கு, அதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்குத் தான் கோளிகளிலும், (பொறி என்றால் சக்தி) பெறிகளிலும் குணம் இலவே! என்கிறார். இந்த பிரமாண்டமான இயற்கை எண்களின் குணத்தைக் கொண்டு உள்ளது. அது புரியாத தலைகளுக்கு கோள்களிலும், பொறிகளிலும் உள்ள குணங்கள் புரியாது என்கிறார்.
அந்த எண் (number) குணத்தானை புரிந்தவர்களுக்குத் தெரியும் கோள்களிலும், பொறிகளிலும் குணம் இருப்பது.
அதாவது. சூரியனுக்கு வெப்பம் கொடுக்கக் கூடிய குணம் இருக்கிறது என்றும், நிலவுக்கு நம் மணங்களை (மதியை) ஆட்டுவிக்கும் குணம் உள்ளது என்றும், புதன் (அறிவன்) வியாழன் (குரு) கோள்களுக்கும் நம், புத்திக்கும், அறிவுக்கும் உள்ள குணங்கள் உண்டு என்றும், வெள்ளி, நிலா, செவ்வாய், சனி கோள்களுக்கும், நம் பூமியில் மழை பெய்வதற்கும், உள்ள தொடர்பு உள்ளது என்றும் அந்த எண் குணத்தான் தாளை வணங்குபவர்களுக்குப் புரியும் என்கிறார் வள்ளுவர்.

விண்ணியலும் வாழ்வியலும்

03 Jan, 15:01


இதுவரை திருத்தப்பட்டது.

விண்ணியலும் வாழ்வியலும்

03 Jan, 15:01


நாட்காட்டி 2025_01 .pdf

விண்ணியலும் வாழ்வியலும்

03 Jan, 02:00


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

02 Jan, 08:56


இந்த 2025 - 26 நாட்காட்டி தயாரிக்கப் பட்டுள்ளது. இன்னும் print அடிக்கவில்லை.
இதை பார்த்து தவறுகளை சுட்டிக் காட்டினால் , சரி செய்து Print அடிக்கலாம்.
ஏதவாது திருத்தங்கள் தேவை எனில் சரி செய்யப்படும்.
நாங்களும், சரி பார்த்துக் கொண்டு உள்ளோம்.

விண்ணியலும் வாழ்வியலும்

02 Jan, 08:56


Document from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

02 Jan, 07:12


கதிரவன் திரும்புகிறது எனும் மாயயையிலிருந்து பூமி திரும்பியுள்ளது எனும் உண்மையை புரிந்துகொள்வோம்.

இதனால் புவியில் மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்குவதால் வெப்ப தாவரங்கள் இலைகள் உதிர்க்ககின்றன. பித்த உடல்கள் மேலும் வெப்பம் அடைகின்றன. கப உடல்கள் மேலும் நீர் சேர்கிறது.

மூலிகையை நம்பி வாழ்ந்த காலத்தில் இச்சூழல் தொடங்குவதற்கு முன்பே பொங்கலுக்கு முன்பு கதிர்த்திருப்ப நாளான போகிப்பண்டிகை அன்று மூலிகைகளை பிடுங்கி அவசர தேவைகளுக்கு வீடுகளில் பயன்படுத்த காற்றில் நுண்ணுயிரி பெருக்கத்தை தவிர்க்க மூலிகை காப்பு (வேப்பிலை, துளசி இலை. மா இலை ,சிறுபீளைப்பூ ,ஆவாரம்பூ )கட்டப்படுகிறது.

நோய்களை வருமுன் காக்க நாங்கள் வீடு சுத்தம் செய்து போகி கொண்டாடி மூலிகை காப்பு கட்டி பொங்கலும் வைத்துக்கொண்டோம்

நேற்று நல்ல வெய்யில் அடித்து இரவும் நல்ல குளிர் இருந்தது. தற்போது நல்ல வெய்யில் அடிக்கிறது. உடல் வெப்பம் அதிகமடைகிறது குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் பிடித்து அடுத்த சூழலுக்கு உடலை தகவமைக்கிறது.

விண்ணியலும் வாழ்வியலும்

30 Dec, 06:45


பொள்ளாச்சி திருவிழாவில்
29. 12. 2024. நிலா பயிற்சி மையம்.
சக்தி குழுவினருடன்.

விண்ணியலும் வாழ்வியலும்

29 Dec, 17:50


https://youtu.be/u43RMHCuoqI?si=jgZU9idKimnRBGrP

விண்ணியலும் வாழ்வியலும்

26 Dec, 01:30


பொங்கல் விழாவின் ஒரு பகுதி.

விண்ணியலும் வாழ்வியலும்

25 Dec, 16:47


https://youtu.be/Gy1sHW1ExLY?si=SaapA1op_ID19Xwh

விண்ணியலும் வாழ்வியலும்

25 Dec, 05:06


[12/25, 8:46 AM] Elango: ஆங்கிலப்புத்தாண்டு டிசம்பர் 22 லேயே தொடங்கியிருக்க வேண்டும் போல
[12/25, 9:42 AM] ravi2251964: ஆங்கில புத்தாண்டு ஜனவரி - 1 - ல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது.
12, 800 ஆண்டுகளுக்கு முன்னால் நீரூழியில் குமரிக் கண்டம் மூழ்கிய போது கதிர் திருப்ப நாள். ஜனவரி - 1 -ல் தான் இருந்தது.
ஒவ்வொரு 1330 வருடங்களுக்கு ஒரு முறை கதிர் திருப்ப நாள் Dec-31 Dec-30 Dec-29 என மாறி மாறி இன்று Dec-22- ல் உள்ளது.
இதற்கு காரணம் கருமைய (சக்தி மைய ) பின் சுழற்சி ஒரு திகிரி நகர ஆகும். காலம் 1330 ஆண்டுகள் ஆகும்.

இதை கொடி மரத்தை கருவறையிலிருந்து வான் பார்த்தால் மற்றும் நிழல் குறித்தால் புரிந்து கொள்ள முடியும்.
500 வருடங்களுக்கு முன்பு வரை பூமி உருண்டை என தெரியாதவர்களுக்கு இந்த கணக்குகள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
நம் சித்தர்கள் தான் யாராவது அவர்களுக்கு இந்த நாட்காட்டியை உருவாக்கித் தந்து இருக்க வேண்டும்.
எப்பொழுது கதிர் திருப்ப நாள் Dec-25-ல் இருந்ததோ? அப்பொழுது இந்த உலகம் கலியுக கட்டுப்பாட்டில் வந்ததைத்தான் அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

இப்பொழுது மீனராசியில் நம் சூரியன் (சோதி) சம நாளில் தெரிவதால் முதலாம் நீ௹ழியில் 6 ராசிக்கு முன்னால் சிம்ம ராசியில் இருந்து இருக்கிறது.

சூரியன் ஒரு திகிரி நகர இப்பொழுது 60 சுழல் ஆண்டுகளாக இருக்கிறது.
சூரியனின் ஒரு சுற்றுக்கு சராசரியாக சக்திமைய பின் சுழற்சி ஒரு திகிரி நகர 72 ஆண்டுகளாக இருக்கிறது.
அப்படி 12,800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமநாள் ஏப்ரல் - 1 -ல் இருந்தது.
இப்பொழுது அது march - 20 வரை வந்து விட்டது.

இதை கருத்தில் கொண்டு தான் ஏப்ரல் -1 ஐ முட்டாள்கள் தினமாக்கி இருக்கிறார்கள்.

இனி வரும் காலங்களில் இனி கதிர் திருப்ப நாள் Dec-23 Dec-24 Dec-25 என ஒவ்வொரு 1330 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்.

விண்ணியலும் வாழ்வியலும்

24 Dec, 16:09


Video from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

24 Dec, 16:08


மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் 🩷

விண்ணியலும் வாழ்வியலும்

24 Dec, 14:33


https://youtu.be/mGli1joryvY?si=mnIGuKt33-m-sqfa

விண்ணியலும் வாழ்வியலும்

24 Dec, 04:50


காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். Dec-24-2024 செவ்வாய். தை - 3.

விண்ணியலும் வாழ்வியலும்

23 Dec, 06:52


https://youtu.be/_-JGlNBtwZI?si=mHOClizPyfGMMQa-

விண்ணியலும் வாழ்வியலும்

23 Dec, 05:04


Dec-23-2024. தை - 2 மாட்டுப் பொங்கல்.

விண்ணியலும் வாழ்வியலும்

23 Dec, 00:14


Video from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

23 Dec, 00:05


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

01 Dec, 17:51


பூமிக்கு மேலே உள்ள
செவ்வாய் = 7 ,
ராகு = 18,
வியாழன் = 16,
சனி = 19
7 + 18 + 16 + 19 = 60
பூமிக்கு கீழே உள்ள
புதன் = 17,
கேது = 7,
வெள்ளி = 20,
சந்திரன் = 10,
சூரியன் = 6,
17 + 7 + 20 + 10 + 6 = 60
தசாபுத்தியின் கணக்கு இப்படித்தான் இருக்கிறது.
மனிதனாக பிறந்து 120 சுழல் ஆண்டுகள் வாழ்ந்தால் 60 வருடம் எப்படி இருக்கிறதோ , அதற்கு நேர்மாறாக 60 வருடங்கள் கழிந்து அனைத்தும் சமமாக்கப்படும்.
அனைவரும் இதற்கு விதி விலக்கல்ல!

விண்ணியலும் வாழ்வியலும்

01 Dec, 17:40


309. இருத்தி வைத்த சற்குருவை சீர் பெற வணங்கிலீர்.
உரு கொடுக்கும் பித்தரே ! கொண்டு நீந்த வல்லீரோ!
உருக்கொடுக்கும் பித்தரும்! உருக்குள் வந்த சீடனும்,
பருத்தி பட்ட பாடுதான் பண்ணிரண்டும் பட்டதே!.

பண்ணிரண்டும் பட்டதே! என்பது 12 ராசிகளைத்தான் கூறுகிறார். இருத்தி வைத்த சற்குரு என்றால் , வலுக்கட்டாயமாக வைப்பது தான் இருத்தி வைத்தல். நமக்குள் சற்குரு வலுக்கட்டாயமாகத் தான் இருக்கிறார். நாம் அறியாவிட்டாலும் அவர் நமக்குள் இருக்கிறார்.
அவரை சீர்பட வணங்க வேண்டும்.. அதை செய்யாமல் அவருக்கு உரு கொடுக்க முற்படுகிறார்கள்.
அவர் இறை . உருக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
நம்முடன் வாழ்ந்து இறையை உணர்ந்தவர்களுக்கு உரு கொடுக்கலாம். அவர்கள் கடவுளர்கள் . இறை வேறு கடவுளர்கள் வேறு . இறைக்கு உரு கொடுக்க முடியாது.
அவர் எங்கும் பரந்து விரிந்த பரம்.
சீர்பட வணங்கத் தான் முடியும்.
அந்த இறைக்கு உருக்கொடுக்க முற்பட்டால் பருத்தி பட்ட பாடுதான் பட வேண்டும் என்கிறார்.
பருத்தி காய் வெடித்து பஞ்சை எடுத்து, அடித்து , திரித்து, நூல் ஆக்கி, துணியாக நெய்வது வரை பருத்தி பட்ட பாடு பெரும் பாடுதான். ஆனால் அது துணியாக , மானம் காக்கும் போதும், சூழ்நிலை காக்கும் போதும் அதன் பட்ட பாடு மறந்து பெருமிதம் அடையும்.
அது போல 12 ராசிகளுக்கு உரு கொடுத்து ஆழ்வார்களாக, அதன் குணாதிசயங்களாக , உண்மைகளை சொன்னாலும், அதன் உண்மை மக்களுக்குச் சென்றடையாமல் பட்டபாடு பருத்தி பட்ட பாடுதான்.
துணி போல ஒரு நாள் அனைவருக்கும் கண்டிப்பாக விளங்கி உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்.
இந்த மாதிரி உருக் கொடுத்தவர்களும், அதை நம்பி வந்த சீடனும், பருத்தி அடி வாங்கி நூல் ஆவது போல் பட்டு உணர்வார்கள் என்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

01 Dec, 14:01


மார்கழி கர்ப்போட்டம் 2024 கலந்தாய்வு இரவு ..
Dec 1 • 8:00 – 8:30 PM • https://us05web.zoom.us/j/81427810294?pwd=NAhxhciatmE0dbIZNKDXzFDbcLq73t.1 • View details & RSVP https://calendar.app.google/2CBtwkb1NcNBsu16A

விண்ணியலும் வாழ்வியலும்

30 Nov, 12:42


Tamilar Vinniyalum Vazhviyalum is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மார்கழி கர்ப்போட்டம் 2024 கலந்தாய்வு இரவு ..
Time: Nov 30, 2024 08:00 PM India
Every day, until Dec 12, 2024, 13 occurrence(s)
Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.
Daily: https://us05web.zoom.us/meeting/tZUpde6grzsoE9BiRM25qvMp7QhUjL7Jye6f/ics?icsToken=98tyKuGpqjktEtWVshCDRpwcBojoKPzzmGJBj_p_lS3IUXVCdC7mYdNKB7hTR_LJ&meetingMasterEventId=M7sKy3p6R92oZxLI0hUeVA

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/81427810294?pwd=NAhxhciatmE0dbIZNKDXzFDbcLq73t.1

Meeting ID: 814 2781 0294
Passcode: 7HuDZa

விண்ணியலும் வாழ்வியலும்

30 Nov, 06:20


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 16:14


Tamilar Vinniyalum Vazhviyalum is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மார்கழி கர்ப்போட்டம் 2024 கலந்தாய்வு ....
Time: Nov 30, 2024 09:00 AM India
Every day, until Dec 12, 2024, 13 occurrence(s)
Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.
Daily: https://us05web.zoom.us/meeting/tZAodOmprTstHtCYUASK_L-U-Fe4xSTvnlRz/ics?icsToken=98tyKuGsqzgqG9eVtx2DRpwIGYjCc-vztmJagrd-pSrEMAtsTk7De8RHZqpMJM7e&meetingMasterEventId=9aFl1doeRSuMgWfpHwZsmg

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/84530130744?pwd=XQsOSHQopYBV5wnEa47Ngs8dUw5E4o.1

Meeting ID: 845 3013 0744
Passcode: 0n6wzB

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 16:13


நாளை 30/11 /20 24 சனிக்கிழமை மார்கழி - 9 முதல் நாம் தினமும் zoom metting-ல் இணைந்து கர்ப்போட்டம் குறித்து உரையாடலாம்.
தினமும் காலை 9 முதல் 9.30 வரையும்.
இரவு - 8 முதல் - 8.30 வரையும் zoom metting -ல் இணைவோம்.
சந்தேகங்களை தீர்த்துக் கொள்வோம்.

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 16:01


Document from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:59


நாம் கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு நேர் மேலே உள்ள மேக குறிப்புகளை அந்த XL Sheet -ல் Drop down செய்ய வேண்டும்.
சாரல், தூரல், மழை, கனமழை எல்லாம் உங்களுக்கே தெரியும்.
அதே போல் காற்று வடகிழக்கிலிருந்து வீசுகிறதா.
மேற்கிலிருந்து வீசினால் கொண்டல்.
தெற்கிலிருந்து வீசினால் தென்றல்.
வடக்கிலிருந்து வீசினால் வாடை காற்று.
தென்மேற்கு பருவகாற்று அதையும் Drop down செய்து குறிப்புகள் எடுக்க வேண்டும்.

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:55


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:54


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:54


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:54


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:54


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 15:53


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

29 Nov, 09:58


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

28 Nov, 22:37


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

27 Nov, 23:08


கார்த்திகை மாதம் முடிந்து இன்று மார்கழி - 7. நடந்து கொண்டு உள்ளது.
இப்பொழுது சூரியன் தென் செலவில் இருக்கிறது.
வரும் Dec-21 (மார்கழி - 30) வரை தெற்கு நோக்கி நகர்ந்து Dec-22 (தை -1) -ம் தேதியில் திரும்பி வடசெலவு ஆரம்பிக்கும்.
Dec-21 போகி பண்டிகையாகவும்.
தை - 1 - Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம்.
வரும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம் முடித்து வீட்டை சுத்தம் செய்து , கண்ணாம்பு பூசி மார்கழி - 30 Dec-21 காப்புக் கட்டி Dec-22 தைப் பொங்கல் வைத்து, Dec-23- தை - 2 மாட்டுப் பொங்கல் கொண்டாட உள்ளோம்.

விண்ணியலும் வாழ்வியலும்

16 Nov, 05:18


Video from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

15 Nov, 13:28


Video from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

15 Nov, 12:32


இன்றைய தீப திருநாள் கொண்டாட்டம் ஆரம்பம்.

விண்ணியலும் வாழ்வியலும்

15 Nov, 10:52


Photo from ravi2251964

விண்ணியலும் வாழ்வியலும்

14 Nov, 05:55


https://www.sidhariyal.com/?p=2504

விண்ணியலும் வாழ்வியலும்

14 Nov, 05:16


வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24.
திருக்கார்த்திகை தீபத் திருநாள்.
வெள்ளிக் கிழமை மாலை நேரம் , வீட்டிற்கு முன்புறம் தீபம் வைத்து, தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை வைத்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
காற்று திரும்பவில்லை என்றால், சுடர் ஆடாமல் அசையாமல் நின்றால், தினமும் வைக்க வேண்டும். நான்கு, ஐந்து நாட்களில் காற்று திரும்பி விடும். சுடர் அனைந்து விடும்.
இதைப் பார்க்கத்தான் வீட்டின் வெளியே தீபம் பற்ற வைப்பது.
காற்று திசை மாறுவதை வேளாண் பெருமக்கள் அறிந்து கொள்ளத் தான் இந்த
பண்டிகைகள்.
அதே போல் வடகிழக்கு பருவக் காற்று தென்மேற்காக மாறுவது வைகாசி பௌர்ணமியில்.
அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

விண்ணியலும் வாழ்வியலும்

12 Nov, 05:40


https://www.facebook.com/share/p/13sPqXmjKG/

விண்ணியலும் வாழ்வியலும்

10 Nov, 04:30


https://youtu.be/xE8oJArKGIo?si=ItM8u1EdaOxVBrq9

விண்ணியலும் வாழ்வியலும்

10 Nov, 04:08


https://youtu.be/bTv4cEfA5Ls?si=fPVHZNW0QOYIX7O_

விண்ணியலும் வாழ்வியலும்

08 Nov, 23:50


60 சுழல் ஆண்டுகளின் கணக்கே சூரியன் ஓட்டத்தை கணக்கிடுவதுதான்.
சூரியன் ஓட்டத்தைக் கணக்கிட்டால் ஊழிகளை முன்கூட்டியே அறிய முடியும்.
தமிழ் எழுத்துக்கள் 247 - க்கும் திருக்குறள் எண்கள் 1330 க்கும் உள்ள தொடர்பு. மேலே உள்ள link-ல்

விண்ணியலும் வாழ்வியலும்

08 Nov, 23:47


https://www.sidhariyal.com/?p=2502

விண்ணியலும் வாழ்வியலும்

08 Nov, 16:01


https://www.sidhariyal.com/?p=2500

விண்ணியலும் வாழ்வியலும்

08 Nov, 05:43


- சிறப்பு அழைப்பாளர்களாக :
பட்டியல் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் இயற்கை விவசாயிகள் இயற்கை விவசாய வல்லுநர்கள் மற்றும் சூழலியல் செயல்பாட்டாளர்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது . அவை இணையவழி சந்திப்பில் பகிரப்பட்டு ஆலோசித்து மாநாட்டு மையக் குழு கலந்தாலோசித்து உறுதி செய்யப்பட உள்ளது.
- 16-2-25 ஞாயிறு மாலை மாநாட்டு குழு சார்பாக அனைத்து இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் மாநாட்டு பிரகடனம் அறிவிக்கப்படும் .

- கடந்த கூட்டங்களில் உறுதிசெய்யபட்ட "தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கம்" என மாநாட்டு குழுவை பதிவு செய்யப்பட்ட அமைப்பாக பதிவு செய்திட தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டிற்கான அடுத்த கட்ட செயல்பாட்டு வடிவமாக தனித்தனி குழுக்கள் பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் பொறுப்புகள் குறித்து Nov-9 சனிக்கிழமை 7.00pm இணையவழி கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

விண்ணியலும் வாழ்வியலும்

08 Nov, 05:43


தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அடுத்தகட்ட கலந்த ஆலோசனைக் கூட்டம்,06-11-24 அன்று கோவை, கொடிசியா வளாகத்தில் காலை 11.10 மணியளவில் தமிழ்நாடு இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்புக்கான மாநாட்டு கலந்தாலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 28பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் பேசுபொருள் :
- மாநாட்டு நோக்கம்
- இடம் , நாள்,
- மாநாட்டிற்கான குழு கட்டமைப்பு.
- நிதி நிர்வாகம் ,
- மாநாட்டிற்கான ஆலோசனைக் குழு, செயல்பாட்டு குழு வடிவமைப்பு .,
- மாநாட்டு நிகழ்வரங்கின் வடிவமைப்பு , நிகழ்ச்சி நிரல் மாதிரி வடிவமைப்பு .,
- அடுத்த கட்ட செயல்பாட்டிற்கான ஆன்லைன் கூட்டம் மற்றும் அதற்கான பேசுபொருள் .
அனைவராலும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

✓ மாநாட்டு தேதி பிப்ரவரி 15 , 16 தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள Hall-D , Hall-F தேர்ந்தெடுப்பது என்று உறுதி செய்யப்பட்டது . ( இது குறித்து மாநாட்டு குழு சார்பாக கொடிசியா நிர்வாகத்திடம் பேசி Hall-D , Hall-F உறுதி செய்ய அனுமதி கோரப்பட உள்ளது )

✓ மாநாட்டு முதன்மை நோக்கமாக "*இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு மாநாடு*"

( *இயற்கை உழவிற்கும் உணவிற்கும் நுகர்விற்க்கும் மக்களின் உரிமைக்கான பாலம்* )

மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அனைத்து இயற்கை விவசாயிகளையும் இயற்கை விவசாய அமைப்புகளையும் ஒன்றிணைத்து அனைவரின் பங்கேற்புடன் பலமாக செயல்படுவதுவும் , மாநாட்டுப் பிரகடனம் வாயிலாக அரசுக்கு வலுவான கோரிக்கைகளை முன் வைப்பதுவும் , இயற்கை வேளாண்மை இயற்கை உணவு குறித்த நுகர்வோருக்கான ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் , இயற்கை விவசாயத்தில் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் , இயற்கை விவசாயத்தின் அடிப்படை தத்துவத்தையும் நுட்பங்களையும் முன்னோடி இயற்கை விவசாயிகள் வல்லுனர்கள் வாயிலாக சிந்தனையை செழுமை செய்யதக்க பயிற்சிகளை உருவாக்குவது என அடிப்படை நோக்கமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது .

✓ மாநாட்டிற்கான ஆலோசனைக் குழு செயல்பாட்டு குழு என மண்டல வாரியாக வட்டார வாரியாக மாநாட்டு குழுவை அமைப்பாய் கட்டமைப்பது மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது .
✓ மாநாட்டிற்கான நிதி நிர்வாகம் முன் திட்டமிட்டபடி அகவெளி கணக்கில் தொடரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வரும் காலத்தில் இயக்கத்தின் பெயரில் பதிவு மற்றும் தனி கணக்கு தொடங்கும் வரை - இது குறித்து மாநாட்டு நிதி குழு ஆவணப்பூர்வமாக உடன்படிக்கை செய்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
✓ மாநாட்டிற்கான ஆலோசனை குழு, செயல்பாட்டு குழு உருவாக்கப்பட்டு வேலை திட்டத்திற்கு ஏற்ப தனித்தனி குழுக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது . ( முன்திட்டமிட்ட மாநாட்டுக்கான குறிப்பிட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில் கூடுதலாக சில பொறுப்பாளர்களையும் இணைத்து மாநாட்டிற்கான வேலை திட்டங்களை சீராய் துவங்குவதற்காகவும் , வரும் 09-11-24 சனிக்கிழமை இணைய வழி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று கலந்தாலோசித்து உறுதி செய்யப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

✓ மாநாட்டு நிகழ்வின் நிகழ்வரங்க வடிவமைப்பு , மாதிரி நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட்டுள்ளது கீழ்வருமாறு :
மாநாட்டு அரங்க வடிவமைப்பு : Hall-D 5000sq meterல் 1500sq meter மாநாட்டு மேடை இருக்கை பேச்சரங்கமாகவும் (1000 நபர்கள் அமரும் வகையில்) .
மீதமுள்ள 3500sq mtr இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை அங்காடிக்காகவும் வடிவமைப்பதெனவும்
நிகழ்வரங்கின் நுழைவுப் பகுதியில் இயற்கை வேளாண் கண்காட்சிக்கான அரங்கங்கள் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
✓Hall-D அரங்கின் மேல் தளத்தில் அமைந்துள்ள 250 நபர்கள் அமரும் வகையில் உள்ள அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி பெற்றார்கள், முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் வல்லுனர்களால் நிகழ்த்தப்பட்டு கொள்கை முடிவுகள் வரையறை செய்யபடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
✓Hall - F உணவரங்கமாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டு மாதிரி நிகழ்ச்சி நிரல் :
15-2-2025 சனிக்கிழமை
*காலை 9.30 நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள் , செயற்பாட்டாளர்கள் கொண்டு மாநாடு குத்து விளக்கு ஏற்றுதல் மூத்த இயற்கை விவசாயிகள். செயல்பாட்டாளர்களின் பட திறப்பு ஆகியவற்றுடன் துவக்க உரையாக மாநாட்டு குழு சார்பாக மாநாட்டு நோக்கங்கள் அறிவிக்கப்பட்டு‌ சிறப்பு விருந்தினரின் கருத்துரை வாயிலாக நிகழ்ச்சி தொடரும் .
கருத்துரைகள் , கலை நிகழ்ச்சிகள் , இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண் விற்பனை அரங்கங்களை கொடிசியா நிர்வாகத்தார் திரு.இளங்கோ துவக்கி வைக்கிறார் .

விண்ணியலும் வாழ்வியலும்

05 Nov, 16:03


72 ஆண்டுகள் என்பது, சூரியன் ஒரு திகிரி நகர 360 திகிரி வட்டப் பாதையில். 360 x 72 = 25, 920 வருசங்கள் ஆகும் என்றால், வானில் எதுவுமே சரியான வட்டப்பாதையில் சுழல்வதில்லை. அனைத்தும் நீள் வட்டப்பாதையில் Spiral வடிவில் தான் சுற்றி வருகிறது.
நீள் வட்டப் பாதையில் வருவதை கணிக்கத் தான் 60 சுழல் ஆண்டுகள் எனும் ராசி கட்ட வடிவமைப்பை உருவாக்கினார்கள் தமிழ் மூதாதையர்கள்.
அதில் 360 நாட்களை ஒரு சுழல் ஆண்டாக ராசி கட்டத்தில் வைத்தார்கள்.
60 சுழல் ஆண்டை ஒரு கரணமாக்கினார்கள். அதை படிப்படியாக பார்ப்போம்.

விண்ணியலும் வாழ்வியலும்

05 Nov, 16:01


நம் தமிழ் மரபின் ராசி கட்டம், உண்மையில் 360 நாட்களைக் கொண்டதா?
365.25 நாட்களை காட்டும் கட்டமா?
ஒவ்வொரு கட்டமும் 30 திகிரிகளைக் (நாட்களை) கொண்டதா?
31, 32, 29, 30 நாட்களைக் கொண்டதா?
அல்லது அனைத்தும் 30 நாட்களைக் கொண்டதா?
30 திதிகளை கொண்டதா?
27 நட்சத்திரங்கள் 360 நாட்களைக் குறிக்கிறதா?
370.37 திதிகளை அல்லது 365.25 என்ற வருசத்தைக் குறிக்கிறதா?..

360 நாட்கள் கொண்டதுதான் நம் ராசிக் கட்டம்.
அதில் நிலா ஒரு சுற்று வர 27 நட்சத்திரங்களை உள் அடக்கிய 360 திகிரி வட்டப் பாதையில் , நிலா 27 நாட்களில் கடந்து விடுகிறது. 360 நாட்களில் பூமி சூரியன் சுற்றாமல் இருந்தால் 360 நாட்கள் ஆகும் சூரியனை சுற்றி வர.

நம் தமிழ் மரபின் 60 சுழல் ஆண்டுகள் கணக்கு இந்த 360 நாட்களை மையப் படுத்தி தான் இருக்க வேண்டும், இருக்க முடியும்.

கொடி மரத்தின், நிழல் வரைந்து , கணக்கிட்டால் புரியும், 360 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் பூமி சூரியனை வலம் வரும் போது, 60 சுழல் ஆண்டுகள் கணக்கு நீள் வட்டப் பாதையை கணக்கிட அருமையான கட்டமைப்பு. தமிழர்களின் , அசைக்க முடியாத கணிப்பு.

விண்ணியலும் வாழ்வியலும்

05 Nov, 08:59


அவன் தொடர்ந்தான்.
"நான் ஒரு திருடன் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய குலத்தொழிலே திருடுவதுதான். அந்தத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாது. ஆனால் அக்கிரமமான முறையில் நான் திருடுவதேயில்லை. எனக்கென்று ஒரு தர்மம் வைத்திருக்கிறேன். நிறைய
தானமும் செய்வேன். இது என்னுடைய வாழ்க்கை முறை".

அப்போதும் தயங்கினேன்.

"நீங்கள் ஒரு துறவி. உங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரே மாதிரிதான். திருடனோ, வேந்தனோ, துறவியோ அனவரும் உங்கள் கண்ணுக்கு ஒன்றாகத்தான் தெரியவேண்டும். யாரையும் நீங்கள் ஒதுக்கமுடியாது. அது உங்கள் தர்மம். நான் திருடன். உங்களைப் பாரமாக நினைக்கவில்லை. என் வீட்டுக்கு உங்களை மனப்பூர்வமாக அழைக்கிறேன். நீங்கள் துறவி. என்னைப் புறம்பாக நினையாது நீங்கள் வரவேண்டும்".

நான் உள்ளே நுழைந்தேன்.

எனக்குச் செய்யவேண்டியவற்¨றை அவன் செவ்வனே செய்தான். பின்னர் அன்றிரவு அவன் வெளியில் புறப்பட்டான்.
"தொழிலைப் பார்க்க நான் செல்கிறேன். பத்திரமாக இருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

காலையில் திரும்பினான்.

"இன்று ஒன்றுமே கிடைக்கவில்லை. பரவாயில்லை. இரவு ஏதாவது கிடைக்கும்", என்று சிரித்தமுகத்தோடு சொன்னான்.

அன்றிரவும் சென்றான்.

காலையில் வெறுங்கையோடு திரும்பினான். ஆனால் சிரித்த முகத்தோடு, "அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்" என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கச்சென்றான்.

நான் அவனுடன் ஒரு மாதம் இருந்தேன்.

அத்தனை நாட்களிலும் அவன் எனக்கு வைத்தியமும் செய்து, உணவும் கொடுத்து, கவனமாக என்னைப் பார்த்துக்கொண்டான். அத்தனை நாட்களிலும் அவன் திருடச் சென்றுவிட்டு வெறுங்கையுடனேயே திரும்பினான்.

ஆனாலும் அவனுடைய சிரித்தமுகம் மட்டும் மாறியதே இல்லை.
"அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்", என்பதை அவன் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தான்.

பிறகு நான் தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கினேன். தியான யோகத்தில் மிக ஆழமாக ஈடுபட்டேன். ஆனால் ரொம்பநாட்களுக்கு மனம் ஒடுங்கவேயில்லை. பல எண்ணங்கள் தோன்றி அலைக்கழித்தன. சித்திரவதையாக இருந்தது. பலசமயங்களில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் என்று தோன்றும்.

'எப்போது மனது ஒடுங்கும். எப்போது சமாதிநிலை கைகூடும்?
எப்போது நம் ஆன்மீகப்பயணத்தில் ஒரு நிறைவெய்துவோம்?' இந்த வேட்கைச் சுட்டெரித்தது. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உலக வாழ்க்கைக்கே திரும்பிவிடுவோமா என்றும் தோன்றும். அப்போதெல்லாம் அந்தத் திருடனின் மலர்ந்த முகமே தோன்றும். "அடுத்தமுறை கிட்டும்" என்னும் அவனுடைய சொற்கள் என் காதுகளில் ஒலிக்கும். ஆகவே விடாப்பிடியாக ஆத்மசாதனையில் ஈடுபட்டேன்.
ஒருநாள் சமாதிநிலையை எய்தினேன். அதனுடன் சேர்ந்து கிட்டும் ஆற்றல்களும் தலைப்பட்டன".
"அந்தத் திருடன், 'துறவி' என்னும் என்னுடைய சுயதர்மத்தை எனக்கு போதித்தான். விடாமுயற்சியுடன் ஆத்மசாதனையைப் புரிய தூண்டலாக விளங்கினான். என்னுடைய வழியைக் காட்டினான்.

அந்தத் திருடன்தான் என்னுடைய இரண்டாவது குரு".

பல ஆண்டுகள் கழிந்தன.

யோக சாதனைகளைப் புரிந்தும் என்னுடைய சாதனையில், என்னுடைய அறிவில் ஏதோ குறையிருப்பதாகவே தோன்றியது. ஒரு திருப்தியில்லை. என்ன குறையென்று சரிவரப் புரியவுமில்லை.
ஒருநாள் இரவு. மண்டபத்தில் இருந்த விளக்கை ஒரு சிறுவன் அணைத்தான்.
நான் அவனிடம் விளையாட்டாகக் கேட்டேன்:
"அந்த வெளிச்சம், சுடர் எங்கே போயிற்று?"
அவன் சொன்னான்:
"இது தெரியாதா? அது எங்கிருந்து வந்ததோ, அங்கு போய்விட்டது".

அப்போதுதான் இந்த உலகம், பிரபஞ்சம், தோற்றம், என் பிறவி - அனைத்தின் ரகசியமும் புரிந்தது. அதையும் உணர்ந்துதான் கொண்டேன். சொல்லில் வடிக்க இயலாது.

அத்துடன் என் தேடலும் முடிந்தது. என் வேட்கையிம் தீர்ந்தது. தாபமும் மறைந்தது. அதுவரை இல்லாத பரிபூரண திருப்தி என் மனதை ஆட்கொண்டது. திருப்தி வந்தவுடன் ஒரு சாந்தி குடிகொண்டது. சாந்தத்துடன் ஒரு பூரணத்துவமும் ஏற்பட்டுவிட்டது.

இப்போது நானும் எங்கிருந்து வந்தேனோ அங்கு போகப்போகிறேன்.
இதற்கு வழி காட்டியவன் அந்தச் சிறுவன்தான்.
அவன்தான் என்னுடைய மூன்றாவது குரு".

விண்ணியலும் வாழ்வியலும்

05 Nov, 08:59


பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார். உண்மையிலேயே பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தவர்.
அவருக்கு யார் குரு, அவருடைய பூர்வாசிரமம் என்ன, துறவியான பின்னர் எங்கெல்லாம் சென்றார், என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்ற விபரமெல்லாம் யாருக்கும் தெரியாது. அவருக்கென்று எதுவுமே வைத்துக்கொண்டதில்லை. ஒரு பிச்சைப்பாத்திரம், ஓடு போல் எதுவுமே கிடையாது. ஒரு கோயில் மண்டபம். அதில் இருப்பார். அல்லது அதன் அருகில் உள்ள அரசமரத்தின் மேடை.

உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!

என்று பட்டினத்தார் சொன்னது போல் வாழ்ந்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த வேட்டியையும்கூட அவர் மற்றவர்களுக்காகத்தான் கட்டியிருந்தார். பசிக்கும்போது ஏதாவது
ஒரு வீட்டின் முன்னால் நிற்பார்.
அந்த வீட்டுக்காரர் உணவு கொண்டுவந்து நீட்டும்போது இருகைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஏந்துவார். அது கொள்ளுமளவுக்கு பிச்சையைப் போடுவார்கள். அப்படியே அதனைக் கையில் வைத்துக்கொண்டே உண்பார். அதன் பின் நீரருந்துவார். பிறகு போய்விடுவார். 'அம்மா பிச்சை' என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்களாகவே போட்டால்தான் உண்டு. சிலர் அவர் இருப்பிடத்துக்கு வந்து உணவை வைத்துவிட்டுப்போவார்கள். பசித்தால் உண்பார்.

அவருடைய அறிவையும் ஆற்றலையும் பற்றி வியந்து பேசிக்கொள்வார்கள்.
அவராகக் கூட்டமேதும் திரட்டாமலேயே அவருக்குச் சீடர் கூட்டமொன்று இருந்தது. அவர்கள்தாம் தம்மைத்தாமே அவருடைய சீடர்களாகக் கூறிக்கொள்வார்கள். அவர் ஏதும் கண்டுகொள்வதில்லை.

ஓர் இளைஞன் அவரிடம் மிகுந்த பக்தியும் பிடிப்பும் வைத்திருந்தான்.

துறவி மகாசமாதி அடையும்தருவாயில் அந்த இளைஞன் அவரிடம் வந்தான்.

அவருடைய குரு பரம்பரையைப் பற்றி அறிந்துகொள்ள அவனுக்கு ஆசை.

ஆகவே உபநிஷத்தில் உத்தாலக ஆருணி முனிவரிடம் சுவேதகேது கேள்வி கேட்டது
போல் கேட்டான்.
"சுவாமி! இப்போதாவது சொல்லுங்கள். உங்களுடைய குரு யார்? உங்கள் குரு
பரம்பரை என்ன?

லேசாகக் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு, அவனை மிக அருகில் வைத்துக்கொண்டு சொல்லலானார்:

"என்னுடைய வாழ்க்கையில் மூன்று பேர் என்னுடைய குருமார்களாக விளங்கினார்கள்".

"நான் துறவியாகிய ஆரம்பகாலத்தில் நானும் ஏனைய பல சாமியார்களைப்போலவே
ஆசார நுஷ்டானங்களைக் கடைப்பிடித்து வந்தேன்".
ஆனால் என்னுள் ஒரு வெட்கை - ஓர் ஆன்மதாபம் - இருந்துகொண்டேயிருந்தது. ஒரு தேடல். அதனைத் தீர்ப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. என்னுடைய உடமைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊரூராகத் திரிந்தேன்".

குருபரம்பரை#2

ஒருநாள் ஒரு குளக்கரையில் நின்றுகொண்டு கையில் இருந்த குவளையால் தண்ணீரைச் சேந்திக ்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாய் வந்தது. கடும் தாகம் அதற்கு. வேகமாக வந்த நாய் அந்தக் குளத்தில் குதித்தது. பின்னர் தண்ணீரை ஆசைதீருமட்டும் ஆனந்தமாகக் குடித்தது.

அந்த நாயைப் பார்த்ததும் எனக்குப் பொறிதட்டியது.
உடனே கையில் இருந்த குவளையைத் தூர எரிந்தேன். கரையில் இருந்த என் உடமைகளை எடுத்தேன் அவற்றையும் குளத்தில் வீசி எரிந்தேன்.
எந்த உடமையுமே இல்லாமல் அந்த நாய் இந்த உலகில் வாழவில்லையா?
என்னைப் படைத்த இறைவன் இருக்கிறான்.
பற்றற்றதன்மையையும் சரணாகதித் தத்துவத்தையும் நான் அப்போது உணர்ந்துகொண்டேன்.
அதை உணர்த்தியது அந்த நாய்.
அந்த நாய்தான் என்னுடைய முதல் குரு.

அதன்பின்னர் நான் ஊர் ஊராகச் சுற்றும்போது உடல்நலிவு ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் மயங்கிப்போய் ஒரு மரத்தடியில் நான் கிடந்தேன். அப்போது அங்கே வந்த ஓர் ஆள் என்னைக் கைத்தாங்கலாகத் தாங்கிச் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டுக்குள் நுழையப்போகும்போது அவன் சொன்னான்.
"ஐயா சாமியாரே! நான் ஒரு திருடன். என் வீடு இது. உள்ளே வருவதற்கு உங்களுக்கு மனச் சமாதானம்தானே?"

நான் சற்றுத் தயங்கினேன்.

விண்ணியலும் வாழ்வியலும்

05 Nov, 08:59


இதனைச்சொல்லியவாறு, துறவி கண்களை மூடினார்.
ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டார். மீண்டும் வெளியில் விடவேயில்லை.!

விண்ணியலும் வாழ்வியலும்

30 Oct, 22:30


306. மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாரு எங்கனில்?
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும்,
அண்ணலோடு சக்தியும், அஞ்சு பஞ்ச பூதமும்,
பண்ணினோடு கொடுத்து அழிப்பாரோடு ஏழும் இன்றுமே!.

மண்ணில் , இந்த உலகில் வாழும் மனிதர்களும், மீண்டும் பிறப்பெடுக்கக் காத்திருப்போரும், பிறவா வரம் பெற்று விண்ணோடு கலந்தவர்களும், இந்த உலகில் எப்படி வந்தார்கள் என்பதனை சொல்கிறார்.
நம்முடைய கண்களைத் திறந்தால் ஒளி தெரிவது போல், கண்ணும் சோதியும் கலந்து இருப்பது போல், நாதமும் விந்துவும் கலந்து , ஏழாவது சக்கரமான (நீர் வண்ணம்) அண்ணலும் (சிவமும்), முதல் சக்கரமான சக்தியும் (கருப்பு வண்ணம்) மற்றும், ஐந்து (நீர், மண், நெருப்பு, காற்று, ஆகாயம்)| பூதங்களையும் , ஒரு இசையை உருவாக்க பண் எழுதுவது போல, நம் உடல் அமைப்பை உருவாக்கி, அதை வளர்த்து அழித்து, இந்த பாரில் ஏழு சக்கரங்களாக மீண்டும் மீண்டும் இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது. இனியும் இதுதான் நடக்கும் என்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

29 Oct, 23:09


305. பொங்கியே தரித்த அவ் அச்சு புண்டரீக வெளியிலே,
தங்கியே தரித்தபோது தாது மாது உலையதாம்.
அங்கியுட் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவு கொண்டு குருவிருந்த கோலமே!.

புண்டரீகம் என்றால் தாமரை. கருப்பை இருக்கும் , கருமுட்டை இருக்கும் வெளியை , தாமரை மொட்டுப் போன்ற இதழ்களைத் திறந்து கொண்டு , ஆணின் விறைப் பையிலிடுந்து , பொங்கி எழுந்து, அச்சின் வழியாக , கருமுட்டையில் தரித்த போது, அந்த கருப்பை, தாது நிறைந்த அந்த (மாது) பெண்ணின் உலை அது என்கிறார். அந்த உலையில் அந்த ஒளி பொருந்திய அந்த உயிர் அணுக்களில் ஒன்றுதான் அந்த கருமுட்டையில் தரித்து வளரும். அங்கி என்றால் முழுதும் தாமரை இதழ்களால் மூடி இருந்த அறைக்குள் , அந்த ஒளி பொருந்திய வடிவுகளாய், உயிர் அணுக்களை சரித்த போது, அந்த உயிர் அணுக்கள் , கொம்பு வடிவாக , முருகன் கையில் உள்ள வேலாக, வேலின் முனையில் உள்ள , தலையாக, குருவிருந்த கோலமே! என நமக்குள் சிவாயம் குடி கொண்டு இருக்கும் கோலத்தை உணரச் சொல்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

23 Oct, 21:50


https://www.sidhariyal.com/?p=2479

விண்ணியலும் வாழ்வியலும்

23 Oct, 21:45


https://www.sidhariyal.com/?p=2472

விண்ணியலும் வாழ்வியலும்

20 Oct, 19:05


301. இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்ற தேதடா? பட்டநாத பட்டரே ?.

இட்ட குண்டம் என்றால், இருக்கு வேதம் என்றால் என்னவென்று கேட்கிறார் என்றால், அதன் உண்மையான அர்த்தம் பட்ட நாத பட்டருக்கு தெரியவில்லை என்று தான் கேட்கிறார்.
குண்டம் வளர்த்து பூசைகள் செய்த காரணம், அதில் உருக்கிப் பிரித்தல் எனும் வேதியல், வெப்பத்தால் ஏற்படும் வேதியல் மாற்றங்கள், ஒரு தனிமம், வேறு தனிமமாக, திடப்பொருள், திரவப் பொருளாகவும், திரவப் பொருள், காற்றாகவும் வேதியல் மாற்றம் பெறுவதைத்தான், உருக்கு வேதம் கூறுகிறது. நம் உடலும் சுக்கிலிருந்து, அதாவது விதைப்பையில், காய்ந்த விதையாக, சுக்காக இருந்த சிவாயம், வெப்பத்தில், இலகி சுக்கிலமாவதைத்தான் , இட்ட குண்டத்தில் உருக்கி இலகி, நடக்கும் வேதியவைக் கூறுவது தான் அந்த சடங்குகள்.
அந்த சுட்ட மட்கலத்தில் சுற்றும் நூல்கள் எனும் சடங்கு, அந்த சுக்கில், நாடி, நரம்புகள் உருவாகி, சதை, எலும்பு, ரத்தம், என உடலாக மாறுவதைத்தான் சுட்ட மட்கலத்தில் சுற்றப்படும் நூல்கள் குறிக்கின்றன என்கிறார்.
ஆண் பெண் இணையும் பொழுது, முட்டி நின்ற தூணில் , சுக்கு இலகி சுக்கிலமாக, முளைத்து எழுந்த சோதியை பற்றி நின்றது சுக்கிலம் எனும் நீர் தான் என்கிறார்.
இதை பட்ட நாத பட்டர் அறிவாரா? அதை அறியாமல் அதை சடங்குகளாக்கி, அதன் உண்மையான தத்துவங்களை மறைத்து , அல்லது தெரியாமல் அறிவியலைப் புறந்தள்ளுகிறார்கள் என்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பட்ட நாத பட்டர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது புரிகிறது.

விண்ணியலும் வாழ்வியலும்

17 Oct, 04:00


தயவு செய்து இந்த காணொளி தவறாது பாருங்கள் *மறைக்கப்பட்ட உண்மைகள் இன்னும் எவ்ளோ இருக்கோ?*. (Please watch this video without fail! Wonder, how many more such hidden truths are there?)🙏

விண்ணியலும் வாழ்வியலும்

14 Oct, 04:57


https://www.sidhariyal.com/?p=2459 |

விண்ணியலும் வாழ்வியலும்

13 Oct, 21:15


ஐப்பசி மாத அடை மழை என்பது, காற்று திசை மாறும் , ( அதாவது தென்மேற்கு பருவகாற்றிலிருந்து, வடகிழக்கு பருவகாற்றாக மாறும் ) காலமான ஐப்பசியில், காற்று சுழன்று அடிக்காமல், நின்று, நிதானமாக இரண்டு மணி நேரம் ,மூன்று மணி நேரம் மழை பெய்வதை நாம் பார்க்கிறோம். வானில் மழை இல்லாத நேரங்களில், மேகங்கள் நிதானமாக, நகராமல், மெல்ல, மெல்ல, கும்பமாசிகளாக, ஆங்காங்கே, திரண்டு நிற்பதை பார்க்கலாம். வரும் கார்த்திகை பௌர்ணமி, அதாவது அடுத்த பௌர்ணமி வரை வானம் இது போல், மேகங்கள் நகராமல், மெதுவாக சுழன்று கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

விண்ணியலும் வாழ்வியலும்

13 Oct, 20:51


300. மன விகாரமற்று நீர் மதித்திருக்க வல்லீரேல் !
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும்.
அனைவரோதும் வேதமும், அகம் பிதற்ற வேணுமேல்,
கனவு கண்டது உண்மை நீர், தெளிந்ததே சிவாயமே!

மன விகார மற்று நீர். என்றால் நம் மனதில் விருப்பு வெறுப்பு இன்றி இந்த உலக வாழ்க்கையை நாம் அனுகினால் , நமக்கு உண்மைத் தன்மை விளங்கும். மெய்ப் பொருளை அறிவோம். அந்த உண்மைகளை மதித்து அதன் படி வாழ்வியலோடு, அறம் சார்ந்த வாழ்வை மதித்து வாழ்ந்தோம் என்றால், அந்த நினைவே இல்லாத , சமாதி நித்தமும் நமக்கு கை கூடும். அதை மணி விளக்கு என்கிறார். மணி என்றால் காலம். நமக்கே நாம் விழித்து இருக்கும் போது, நாம் எங்கே இருக்கிறோம் என்ற நினைவின்றி, காலம் பறந்து , நொடிகளாக , நாட்கள் பறக்கும் என்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள அனைவரும், நம் வாழ்வியலில் இது சரி, அது தப்பு , வாழும் விதிகளை வகுத்து ஓதும் வேதமும், நாமும் இது சரியா? அது சரியா? என மனதால், அறியாமல் பிதற்றிக் கொண்டு, தடுமாறி கனவுகளை கண்டு, வழி தேடி ஓடி கொண்டு இருக்கையில், சமாதியாக நினைவில்லாத நினைவில், கலங்கிய நீர் தெளிந்தது போல சிவாயம், என்றால் என்னவென்று, தெளிந்து விடும் என்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

13 Oct, 20:28


https://youtu.be/kfRZ4P3g2JY?si=9GBWLWydcY_CzFnl

விண்ணியலும் வாழ்வியலும்

10 Oct, 01:34


299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய்,
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய்
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை,
சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே.

நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி , ஒற்றி, வருடி வார்த்தைகளாக்குபவன் தான் நாதன்.
அவன் அந்தரத்தில் ஒன்றுமாய் என்றால் , நாம் மனதால் , எண்ணங்களாக, கருத்தாக நினைப்பதைத்தான் அப்படி கூறுகிறார்.
அசைவுகால் இரண்டுமாய் என்றால் , நம் உடல் இயங்க காற்று மிகவும் முக்கியம். அதை உள் மூச்சாகவும், வெளி மூச்சாகவும் இரண்டு விதமாக இயங்குவதைத் தான் சொல்கிறார்.
செந்தழலில் மூன்றுமாய் என்றால் இடகலை, பிங்கலை , சுழுமுனை எனும், சந்திரன் எனும் குளிர்ச்சி, சூரியன் எனும் சூடு அக்னி எனும் பசி. அக்னி எனும் பசி நம் உணவை சத்தாக மாற்றி, கண்களில் ஒளியாக அறிவது சந்திரகலை, சூரிய கலை.
சிறந்த அப்பு நான்கு மாய் என்றால் ரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என நீர் தத்துவமாக நம் உடலில் அனைத்து செல்களையும் சென்று சேர்ந்து, கழிவுகளாக நீராக வெளியே, நம் உடலை இயக்கக் காரணமாக இருக்கும் அப்பு.
பாரில் என்றால் நிலம், ஐந்தாவது பூதமான தாதுக்களால், எலும்பு, சதை, நரம்பு, முடி, தோல் என ஐந்துமாய் அந்த நாதன் தான் நம் உடலாக இருப்பதை சிந்தையில் தெரிந்து , தெளிந்து , அந்த மாயையை புரிந்து கொள்பவர்களே வல்லவர்கள் என்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

10 Oct, 01:32


சிவவாக்கியர் பாடல் 398
பூவிலாய ஐந்துமாய்

விண்ணியலும் வாழ்வியலும்

10 Oct, 01:31


https://www.sidhariyal.com/?p=2453

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 16:11


சிவவாக்கியர். பாடல் 397 உம்ப்ர் வாகைத்தினும்.

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 16:10


https://www.sidhariyal.com/?p=2450

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 04:36


அன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வணக்கம்
இறைவனையும் குருவினையும் குலதெய்வத்தினையும் வணங்கி பெற்ற ஞானத்தை போற்றி இப்பதிவினை வெளியிடுகிறேன்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

அன்பு நண்பர்களே....

தமிழர்களின் விண்ணியல் (தொடர்ச்சி)


இராசி மண்டலங்களை 12 ஆக பிரித்து ஒவ்வொரு ராசிக்கும் பெயர் வைப்பது பற்றி விவாதிக்கும் பொழுது முதல் ராசி ரிதபம், அடுத்தது எந்த ராசியை இரண்டாவது வைப்பது என விவாதித்ததில், இரண்டாவதாக சூரிய சுற்றில் இருக்கும் ராசியை அமைத்தார்கள். ஏனென்றால் சூரிய சுற்றையும் பாமர மக்களுக்கும் விளங்க வேண்டுமென்பதற்காக அமைத்தார்கள். ஆகவே முதலில் அதாவது முருகன் நினைவாக கிருத்திகை நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்த ராசிக்கு ஆதி யோகி சிவன் நினைவாக ரிதபம் எனும் காளையை சித்திரமாக வரைந்து கொண்டனர். (Taures)

அடுத்த மிகப் பெரிய ஆளுமை, முருகன் நினைவாக மேசம் எனும் ஆடு வரைந்தார்கள். (Aries )

அதன் பின் இராவணன் இந்திரன் நினைவாக இரட்டை மீண்களும், ( Pisces )

கும்பகர்ணன் நினைவாக கும்பராசியையும், ( Aquarius )

அடுத்து மகாபாரத ஆளுமைகளை கொண்டு கிருட்டிணன் நினைவாக மகரமும், ( Capricorn )

அர்ச்சுனன் நினைவாக தனுசுவும்,( Sagittarius )

பீமன் நினைவாக (தேளும்), விருச்சகம் (Scorpio )

சகாதேவன் நினைவாக தராசுவும்,(Libra)

திரௌபதியின் நினைவாக கன்னியும், Virgo)

தருமன் நினைவாக புலியும் (அதை களப்பிரர் காலத்திற்குப் பின் சிம்மமாக மாற்றி விட்டார்கள்),(leo)

நகுலன் நினைவாக கடகம், ( Cancer )பின் திருத்திராட்டினன்- சகுனி நினைவாக மிதுன ராசியாகவும் ( Gemini ) விவாதித்து அமைத்தனர்.

ராசி என்பதும் ராசித்திரம் தான், அதாவது இரவு சித்திரம். ஆனால் அவர்கள் அமைத்த ராசி வரிசைகள் பூமியின் சுற்றுப் பாதையில் எதிர் புறமாக தெரியும். அதாவது மாலை பொழுதில் வானத்தை கவனித்தோம் என்றால் உதாரணமாக முதலில் மீன ராசி எழுகிறது என்றால் அடுத்த 2 மணி நேரத்தில் மேச ராசி எழும் அடுத்த 2 மணி நேரத்தில் ரிதபம் எழும். இப்படி எதிர் திசையில் தெரியும், ஏன் என்றால் பூமி சுற்றும் திசையை வைத்துதான் நமக்கு தெரிகிறது. பூமியானது சூரிய சுற்றுக்கு எதிர் புறத்தில் தான் சுற்றுகிறது. இந்த பூமி சுற்றின் வரிசைப்படி தான் பஞ்சாங்க கட்டங்களில் முதல் கட்டத்தில் மேசமும், இரண்டாவது ரிதபம், மூன்றாவது மிதுனம், நான்கில் கடகம் இப்படி 12-வது கட்டத்தில் மீனம் இருக்கும்.

மீனம் மேஷம் இடபம் மிதுனம் கும்பம் கடகம் இராசி கட்டம் மகரம் சிம்மம் தனுசு விருச்சிகம் துலாம் கன்னி இப்படி மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்கள் இருந்தன. அவற்றை அடுத்த பதிவில் விளக்குகிறேன்

விண்ணியல் தொடரும்....
Dr V.Senthilkumar, BNYS

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 04:20


இளங்கோ - இதய வனம் - இரும்பொறை.

காட்சி : விளக்கு ஒளியில் மண் வீடு
பொழுது: 12 மணி யாமம் கூதிர்காலம்
திணை : புறவு இதயவனம்

நேற்று இரவு வான் பார்க்கும் மேடையில் தூங்கிக்கொண்டிருந்த போது சடசட வென இரைச்சலுடன் மழை வந்ததால் உடனடியாக பாய் தலையணையை எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றேன்.

சட்டென வீட்டினுள் இருந்த அமைதி பரபரப்பாக நுழைந்த என்னை நிதானப்படுத்தியது. ஒத்தை விளக்கின் மூலம் மொத்த வீடும் தியானத்தில் இருப்பதுபோல் இருந்தது. குதிர், ஊஞ்சல், பனைமர விட்டம், ஒடுகள், நடைவண்டி, மரக்குதிரை என அனைத்து பொருட்களும் தீப ஒளியில் குளிர்ந்திருந்தன. விளக்கெண்ணை தீப வாசணையை நுகர்ந்த போது இதமாக இருந்தது. உடல் கதகதப்பாக இருந்தது.

ஊஞ்சலின் தியானத்தை தொந்தரவு செய்ய வேண்டாமென, நாட்டு மாட்டு சாணி போட்டு மெழுவிய மண் தரையில் சத்தமில்லாமல் கோரைப்பாயை விரித்து படுத்துக்கொண்டேன். தீப ஒளியே போர்வையாக இருந்தது

சற்றுநேரத்தில் வீட்டின் முன்கூரை வாசலில் படுத்திருந்த குடும்பத்தினரும் உள்ளே வந்து அமைதியாக படுத்து கொண்டிருந்தனர். மனைவி மட்டும் அளவான குரலில் கூரை மழைநீர் சரியாக தொட்டியினுள் செல்கிறாதா என கேட்க "ம்ம்" என்ற எனது சுருக்கமான பதில் கேட்டு உறங்கிவிட, வீட்டினுள் தீபத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரமாண்டமான சூழலை அனுபவித்து கொண்டிருந்தேன்.

இவ்வேளையில் முக்கால் உழவுக்கு பக்கம் சீரான மழை பெய்திருந்தது.
தேதி: 15 ஐப்பசி | 07 OCT 2024

விண்ணியலும் வாழ்வியலும்

07 Oct, 22:17


சிவவாக்கியம் மூன்று பத்து மூன்றாம்.

விண்ணியலும் வாழ்வியலும்

07 Oct, 22:16


https://www.sidhariyal.com/?p=2447

விண்ணியலும் வாழ்வியலும்

05 Oct, 18:21


🩷🙃🩷

விண்ணியலும் வாழ்வியலும்

05 Oct, 02:33


294. மூலமென்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே!
நாலுவேதம் நாவுளே நவின்ற ஞானம் மெய்யுளே!
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்.
ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லையே.

ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் மூலம் என்ற  மந்திரம் அ உ ம் என்ற எழுத்துக்கள் நமசிவாய எனும் ஐந்து எழுத்துக்களில் முளைத்தது என்கிறார். நான்கு வேதங்கள் வாய் வழியாக சொற்கள் மூலமாக கடத்தப்பட்டவைதான். அந்த ஞானம் உடல் எனும் மெய் உருவாகி அதில் நாக்கு சுழன்று உருவான சொற்களால் உருவானவைதான்.  இந்த நான்கு வேதங்களையும் உருவாக்கியவர்கள் மூன்று தமிழ்ச்சங்கங்கள்.
முதல் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி வழி நடத்தியவர் சிவன். அவரைத் தான் ஆலமுண்ட கண்டன் என்கிறார். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை வழி நடத்தியவர் அரி எனும் திருமால். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை வழிநடத்தியவர் அய்யன் எனும் முருகன்.  நான்கு வேதங்களையும் நவின்ற ஞானம் உடலைப் பற்றி அறிந்த கொண்டதால் தான் என்கிறார்.
இதில் ஓம் எனும் ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லை என்கிறார்.
அ உ ம் எனும் எழுத்துக்கள் சிவாயத்தைத் குறிக்கின்றது . ஓம் எனும் எழுத்து சிவாயத்தைக் குறிக்காமல் அந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேறு எதையோ குறிப்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.

11,867

subscribers

984

photos

503

videos