TNPSC GROUP 4
2025
பொதுத்தமிழ்
📜 ஒரு சொல் பல பொருள்கள்:
1) உரை - சொல், தேய்
2) உறை - மேலுறை, வசி
3) உடுக்கை - ஆடை, ஒருவித இசைக்கருவி
4) ஊதை - பருத்தல், ஊது கருவி, குளிர்காற்று
5) எகினம் - அன்னம், நீர்நாய், புளியமரம்
6) ஏறு - காளை, ஆண்சிங்கம், மேலே செல்
7) ஏனம் - பாத்திரம், பன்றி
8) ஏற்றம் - நீர் இறைக்கும் கருவி, உயர்வு
9) ஐயம் - சந்தேகம், பிச்சை
10) ஓதி - கூந்தல், ஓதுபவன், ஒந்தி
11) கலை - ஆடை, கல்வி, கலைத்தல்
12) களை - நீக்கு, பயிருக்கு கேடான புல்
13) கழை - கரும்பு, மூங்கில்
14) கடி - காவல், காப்பு, கூர்மை, விரைவு
15) கலி - பாவகை, சனி, துன்பம், வறுமை
16) கல் - பாறைக்கல், படி, தோண்டு
17) கரி - யானை, சாட்சி, அடுப்புக்கரி
18) கவி - குரங்கு, கவிஞர், பாடல்
19) கம்பம் - தூண், நடுக்கம்
20) கப்பல் - கலம், நாவாய்
21) கா - காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி
22) காயம் - பெருங்காயம், புண், உடல், நிலைபேறு
23) கார் - கருமை, மேகம்
24) கிளை - மரக்கிளை, உறவு
25) குடி - குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம்
26) குழவி - குழந்தை, சேய், குழவிக்கல்
27) குடை - கைக்கூடை, தோண்டு
28) கூடு - சேர், உடம்பு, பறவைக்கூடு
29) கோள் - கிரகம், புறம் கூறுதல்
30) சங்கம் - சங்கு, கூட்டம்
31) சுரம் - வழி, வெப்பம்
32) சேனை - படை, தானை, கிழங்கு
33) சோழன் - கிள்ளி, வளவன், அபயன்
34) தாமரை - பூ, தாவுகின்ற மான்
35) தாள் - பாதம், முயற்சி, காகிதம்
36) திரை - அலை, வெற்றிலை
37) திங்கள் - மாதம், நிலவு
38) திரு - உயர்ந்த அழகு, செல்வம்
39) திரி - அறை, விளக்கு திரி
40) துணி - துண்டு செய், ஆடை
41) தை - தைத்தல், மாதம்
42) தையல் - பெண், தைத்தல்
43) நகை - சிரிப்பு, அணிகலன்
44) நாண் - கயிறு, வெட்கம், வட்டத்தின் நடுவில் வரையும் கோடு
45) நாடு - விரும்பு, தேசம்
46) உடு - உடுத்து, விண்மீன், ஓடக்கோல், அகழி
47) உரம் - எரு, ஞானம், மதில், வலிமை
48) ஈ - கொடு, பறவை, இரத்தல், அழிவு
49) இரை - ஒலிசெய், உணவு
50) இறை - கடவுள், நீர் இறைத்தல்
VELU ACADEMY
8111003036
@veluacademy