தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS @sammayaltips Channel on Telegram

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

@sammayaltips


வணக்கம் நண்பர்களே நமது சமையல் குறிப்பு சேனலில்
Best YouTube Cooking & Review சேனல் வீடியோ பதிவுகள் தினமும் அப்லோடு செய்யப்படும்
🔰சைவ&அசைவ சமையல்
🔰ஆரோக்கியமான சமையல்
🔰நோயை குணப்படுத்தும் சமையல்
🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS (Tamil)

வணக்கம் நண்பர்களே! இது 'தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS' சேனல் ஆகும் 'sammayaltips' என்ற சேனல். இந்த சேனல் இனி நமது அறையில் அருகிலுள்ள சமையல் முகங்களில் மிகவும் சிறந்த YouTube சமையல் மற்றும் மதிப்பீடு சேனல்களில் உள்ள வீடியோகளை தமிழில் பதிவு செய்யும். இந்த சேனலில் சைவம் மற்றும் அசைவ சமையல், ஆரோக்கியமான சமையல், நோயை குணப்படுத்தும் சமையல் பற்றிய அறிகுறிகள் உள்ளன. இந்த சேனலில் சேர்க்க, பகிர்க, ஆதரிக்க என்ன செய்ய என்பதை பற்றிய மேலதிக தகவல்களையும் பெற இந்த சேனலை மற்றவர்களுக்கு பரிசளாக பரிசீந்தி செய்யவும். இந்தச் சேனலின் புகழை அதிகரிக்க, நல்ல உணவு சமையல் குறிப்புகளை அனுப்புவது வரத்துக்காக அவசியம்!

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 04:23


*கரிசலாங்கண்ணி 🥬கீரை தோசை*

*கீரை🥬சமையல்*

பொருள் - அளவு
கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு
அரிசி மாவு1 கப்
தக்காளி1
சாமை மாவு1 கப்
சீரகம்அரை டீஸ்பூன்
தோசை மாவு1 கப்
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

🥬கரிசலாங்கண்ணி கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

🥬ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, சாமை மாவு, தோசை மாவு போட்டு நன்றாக கலந்து ஊற வைக்க வேண்டும்.

🥬ஊறவைத்தவற்றை நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும். அதில் சீரகம், கீரை, தேவையான அளவு உப்பு, தக்காளி சேர்த்து அரைத்துக் கரைக்க வேண்டும்.

🥬தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய்ந்ததும் மாவை தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும்.

🥬 இந்த தோசை மிகவும் சத்தானது.

🥬இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி, சாம்பார், குருமா

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 04:23


*கீரை🥬ஸ்பெஷல்*

*முடக்கத்தான்🥬கீரை*

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 04:23


*கீரை சமையல்*

*கீரை🥬கடைசல்*

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 04:23


*கீரை🥬சமையல்*

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


நண்டு புளிக்குழம்பு!


தேவையான பொருட்கள்:

நண்டு – 1/2 கிலோ
புளி – எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
தனியாத் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:


நண்டை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றை வதக்கவும்.

பிறகு புளிக்கரைசல், மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்.

மேற்கண்ட கலவை கொதித்ததும் நண்டை சேர்த்து குழம்பு கெட்டியாக வந்ததும், இறக்கி விடவும்.

ருசிக்க சுவையான நண்டு புளிக் குழம்பு தயார்.

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


நெத்திலி மீன் கூட்டு!

மீன்களில் நெத்திலி தனிச்சுவை. குழம்பு வைத்தாலும் பொரித்தாலும் அதன் அற்புதச்சுவை நாவிலேயே இருந்து கொண்டிருக்கும். சுவையான நெத்திலி மீன் கூட்டு வைப்பதை தெரிந்து கொண்டால் அடிக்கடி அதை வீட்டின் முக்கிய உணவுப்பட்டியலில் சேர்த்து விடுவீர்கள். அத்தனை அற்புதச்சுவை இதன் சிறப்பு. செய்து பார்த்து சுவைப்போமா......


தேவையான பொருட்கள்:


நெத்திலி மீன் -1/2 கிலோ

சாம்பார் வெங்காயம் – 200 கிராம்

தக்காளி -100 கிராம்(நறுக்கியது)

பச்சை மிளகாய் -4 (கீறியது)

புளி – கோலியளவு

உப்பு, எண்ணைய் -தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய் -1/4 மூடி

இஞ்சி -சிறு துண்டு

பூண்டு -4 பல்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

தாளிக்க:
சோம்பு -1 டீஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு


செய்முறை:


மீனை சுத்தம்செய்து கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

அரைத்த மிளகாய், புளிக்கரைசல், மற்றும் போதுமான உப்பு சேர்த்து கிளறவும்.

இந்த கலவை கொதித்ததும் நெத்திலி மீனை சேர்க்கவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து நன்கு திக்காகி கூட்டு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும். சாதத்தில் ஊற்றி சாப்பிடும்போது சூப்பர் சுவையை உணர்வீர்கள்...

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


பிரெட் ஆனியன் பொடிமாஸ்....!

தேவையானவை:

பிரெட் - 10
நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


மிளகுக் குழம்பு.....!

தேவையானவை:

புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு

அரைக்க:
எண்ணெய் - சிறிதளவு
மிளகு - 2 டீஸ்பூன்
மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெயில் நன்றாக மணம் வரும் வரை வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது முதலியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு:

இந்தக் குழம்பு ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும். தேவையென்றால், தாளிக்கும்போது தோலுரித்த
10 பூண்டுப் பல் சேர்த்துக் கொள்ளலாம்...

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


கறிவேப்பிலை இட்லி.


தேவையானவை:

மீதமான இட்லி - 3 (துண்டுகளாக நறுக்கவும்) கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு கறிவேப்பிலை பொடி, எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்.



செய்முறை:


வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்த கறிவேப்பிலை இட்லி, அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


Diet உணவு.

வெங்காயத்தாள் சப்பாத்தி!


தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப் வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் ஓமம் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி கவனமாக மசாலா பிரிந்து வராதவாறு மெதுவாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரம் இருமுறை இந்த வெங்காயத்தாள் சப்பாத்தியை முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் சுவைக்கவும்.

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


மாங்காய் தால்.



தேவையானவை:


மாங்காய்த் துருவல் - ஒரு கப் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்த்து) - அரை கப் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து எடுத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் பருப்புக் கடைசல் சேர்த்துக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி, நாண் வகைகளுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். மாங்காய் நார்சத்து உள்ள காயாகும். பசியைத் தூண்டும்.

தமிழ் சமையல் குறிப்புகள் HEALTHY FOOD TIPS

23 Nov, 01:57


Diet உணவு.

பாகற்காய் - கோதுமை புலாவ்


தேவையானவை:


விதை நீக்கி, பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப் கோதுமை ரவை - ஒரு கப் சிறிய பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு கடுகு - ஒரு டீஸ்பூன் கிராம்பு, ஏலக்காய் - தலா 2 பிரியாணி இலை - ஒன்று இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி (சேர்த்து) - கால் கப் உப்பு, நெய், எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

வாணலியில் நெய், எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து புலாவில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்த புலாவ் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

1,237

subscribers

2,291

photos

1,278

videos