இந்து ஆன்மிக பாடல்கள் @hindusongs Channel on Telegram

இந்து ஆன்மிக பாடல்கள்

@hindusongs


ஜந்து ஆயிரம் ஆன்மிக பாடல்களுக்கு மேல் பதிவு செய்து உள்ளோம். தினமும் தவறாமல் ராசி பலன் பதிவு செய்யபடும்.

இந்து ஆன்மிக பாடல்கள் (Tamil)

இந்து ஆன்மிக பாடல்கள் என்பது ஒரு மாணவர்களுக்கான தொலைபேசி சேனல் ஆகும். இந்த சேனலில் தினமும் ஹிந்தி ஆராதனை பாடல்கள், பவுங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, ராசிபலன்களை பதிவு செய்து கொள்ளுகிறோம். இந்து ஆன்மிக பாடல்கள் சேனலில் எங்களை அனைவரும் இணையவும், உங்கள் வாழ்க்கையில் சாதிக்க உதவும் ஆத்வர்கள் உள்ளனர். நீங்களும் இந்த அற்புதமான அனுபவத்தைப் பெற விரும்பினால், இந்து ஆன்மிக பாடல்கள் சேனலை காண்பிக்கவும். இந்த அற்புதமான அனுபவத்தை மகிழுங்கள்!

இந்து ஆன்மிக பாடல்கள்

12 Jan, 12:04


#pongal #wish @unnalmudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

12 Jan, 12:03


#margali #december #kolam @hindusongs
பொங்கல் கோலம்.

இந்து ஆன்மிக பாடல்கள்

12 Jan, 12:01


#margali #december #kolam @hindusongs
மார்கழி 30

இந்து ஆன்மிக பாடல்கள்

10 Jan, 11:13


#margali #december #kolam @hindusongs
மார்கழி 27

இந்து ஆன்மிக பாடல்கள்

10 Jan, 11:13


#margali #december #thirupavai @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

10 Jan, 11:13


#margali #december #thirupavai #status #videos @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

10 Jan, 11:13


திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பாடல் 27) கூடாரை வெல்லும் 

ராகம்: பூர்விகல்யாணி

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: 

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்: 

கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். “கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு” என வேண்டுகிறார்கள்.

இந்து ஆன்மிக பாடல்கள்

09 Jan, 10:53


திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பாடல் 26) மாலே மணிவண்ணா 

ராகம்: குந்தல வராளி

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

விளக்கம்: 

பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷேத்திரக் களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.

இந்து ஆன்மிக பாடல்கள்

09 Jan, 10:53


#margali #december #thirupavai @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

09 Jan, 10:53


#margali #december #thirupavai #status #videos @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

09 Jan, 10:53


#margali #december #kolam @hindusongs
மார்கழி 26

இந்து ஆன்மிக பாடல்கள்

08 Jan, 11:04


#margali #december #thirupavai @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

08 Jan, 11:04


திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பாடல் 25) ஒருத்தி மகனாய் பிறந்து 

ராகம்: பெஹாக்

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: 

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்: 

பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்?” என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண்” என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

இந்து ஆன்மிக பாடல்கள்

08 Jan, 11:04


#margali #december #thirupavai #status #videos @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

08 Jan, 11:04


#margali #december #kolam @hindusongs
மார்கழி 25

இந்து ஆன்மிக பாடல்கள்

07 Jan, 11:04


திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பாடல் 24) அன்று இவ்வுலகம் 

ராகம்: சிந்துபைரவி

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்: 

மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம். பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்: 

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை “போற்றிப் பாசுரம்” என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

இந்து ஆன்மிக பாடல்கள்

07 Jan, 11:04


#margali #december #thirupavai @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

07 Jan, 11:04


#margali #december #kolam @hindusongs
மார்கழி 24

இந்து ஆன்மிக பாடல்கள்

07 Jan, 11:04


#margali #december #thirupavai #status #videos @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:24


#newyear #wish @unnalmudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:24


#newyear #wish @unnalmudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:24


#newyear #wish @unnalmudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:23


*திருவெம்பாவை பாடல் 17*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

Thiruvempavai song 17: Senkan Avan Pal | Vasanthabhairavi | Rupakam
Song: smt.Geetha Sundaresan

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:23


#margali #december #thiruvempavai #status #videos @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:23


#margali #december #thiruvenpavai @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:23


#december #thiruvenpavai #thirupavai @hindusongs

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:23


*மார்கழி 17*
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
*தினம் ஒரு திருப்பாவை மற்றும் திருவென்பாவை*

_*அம்பரமே தண்ணீரே சோறே..*_ ( _எம்.எல்.வசந்த குமாரி_
பாடலுக்கான விளக்கம் : ஸ்ரீ ரங்க ராமானுஜ மகா தேசிகன் )

_*செங்கண் அவன்பால்..*_ ( _பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா & சி.லலிதா_
பாடலுக்கான விளக்கம் : சுகி சிவம் )
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
#december #thirupavai #thiruvenpavai

இந்து ஆன்மிக பாடல்கள்

31 Dec, 10:23


#margali #december #kolam @hindusongs
மார்கழி 17

இந்து ஆன்மிக பாடல்கள்

06 Sep, 16:18


#vinayagar #chathurthi #wishes @hindusongs @UnnalMudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

06 Sep, 16:18


#vinayagar #chathurthi #wishes @hindusongs @UnnalMudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

06 Sep, 16:18


#vinayagar #chathurthi #wishes @hindusongs @UnnalMudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

06 Sep, 16:18


#vinayagar #chathurthi #wishes @hindusongs @UnnalMudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

06 Sep, 16:18


#vinayagar #chathurthi #wishes @hindusongs @UnnalMudiyum

இந்து ஆன்மிக பாடல்கள்

06 Sep, 16:18


#vinayagar #chathurthi #wishes @hindusongs @UnnalMudiyum