வரலாற்றில் 🏹 இன்று @varalatril_intru Channel on Telegram

வரலாற்றில் 🏹 இன்று

@varalatril_intru


வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று (Tamil)

வரலாற்றில் இன்று என்பது ஒரு செய்தி தொலைபேசி சேனல் ஆகும். இது தமிழ் மொழியில் அனைத்தும் அழகான வரலாற்று செய்திகளையும், குறிப்புகளையும் உங்களுக்கு வழங்குகிறது. இந்த சேனலில் புதியதாக உள்ள வரலாற்று நிகழ்வுகள், வேட்பாளர்கள், மற்றும் குறிப்புகளைப் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் அவசரமாக இந்த சேனலை சேருங்கள். வரலாற்றில் இன்று சேனல் உங்கள் அறிகுறிகளை பெற மறக்காது!

வரலாற்றில் 🏹 இன்று

23 Nov, 04:19


*நவம்பர் 23*

*சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்*

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப் படுத்திய இந்திய அறிவியலாளர்.

போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

By Covai women ICT_போதிமரம்

வரலாற்றில் 🏹 இன்று

23 Nov, 04:19


*நவம்பர் 23*

*கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்*

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை  சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.

இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

By Covai women ICT_போதிமரம்

வரலாற்றில் 🏹 இன்று

23 Nov, 00:18


*நவம்பர் 23,*
*சுரதா*

கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.

பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.

செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்துக்கு 1944ம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்பது போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 84-வது வயதில் (2006) மறைந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

23 Nov, 00:17


வரலாற்றில் இன்று.

23 நவம்பர் 2024-சனி.


1174 : சலாகுதீன் சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினார்.

1554 : பெண்கள் தங்கிப் படிப்பதற்கான பள்ளிக் கூடம் முதன் முதல் லண்டனில் துவக்கப் பட்டது.

1848 : பாஸ்டனில் முதல் பெண்கள் மருத்துவக் கழகம்
ஆரம்பிக்கப்பட்டது.

1890 : நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தார்.
அவரது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.

1910 : ஸ்வீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1914 : மெக்சிகோ புரட்சி :- கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிகோவின் வெர்குரூஸ் நகரில் இருந்து வெளியேறியது.

1919 : டில்லியில் கிலாபாத் மாநாடு துவங்கியது.

1936 : முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.

1939 : இரண்டாம் உலக போர் :- ராவல்பிண்டி என்ற பிரிட்டன் கப்பல் ஜெர்மனிப் போர்க்கப்பல்களால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப் பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர் :- டரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.

1946 : வியட்நாம், ஆய் பொங் நகர் மீது பிரெஞ்சு கடற்படைகள் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1952 : கொடைக்கானலில் முதன் முதல் ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது.

1955 : கொக்கோஸ் தீவுகள் பிரிட்டனிடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1956 : அரியலூரில் சென்னை- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பாலம் இடிந்து 7 பெட்டிகள் ஆற்றில் விழுந்த விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்.

1974 : எத்தியோப்பியாவில் அரசியல்வாதிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 60 பேர் இடைக்கால ராணுவ அரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1978 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1980 : தெற்கு இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்
4,800 பேர் உயிரிழந்தனர்.

1985 : எகிப்தின் பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும் போது கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்துப் படைகள் விமானத்தை சுற்றி வளைத்தன.
முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1990 : விடுதலைப் புலிகள் மாங்குளம் ராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1992 : முதலாவது திறன்பேசி ஐபிஎம் சைமன், லாஸ்வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1996 : எத்தியோப்பியா விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்துமாக் கடலில் கொமொரோஸ் அருகே விழுந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

2001 : கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில்
கையெழுத்திடப்பட்டது.

2003 : வாரக் கணக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜார்ஜியா ஜனாதிபதி எட்வர்ட் செவர்ட் நாட்சே பதவி விலகினார்.

2005 : லைபீரியாவின் தலைவராக ஹெலன் ஜான்சன் சர்லீப் தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்ரிக்க நாடுகளில் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2006 : ஈராக், சாதிர் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 125 பேர் உயிரிழந்தனர்.

2007 : அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அர்ஜென்டினாவுக்குத் தெற்கே எக்ஸ்புளோரர் என்ற பயணிகள் கப்பல் பனி மலையில் மோதி மூழ்கியதில் 154 பேர் உயிரிழந்தனர்.

2009 : பிலிப்பைன்ஸில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2011 : ஏமனில் 11 மாதங்கள் எதிர்ப்பு போராட்டங்களை அடுத்து ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:36


வரலாற்றில் இன்று நவம்பர் 22

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம்.ஜி.கே. மேனன் நினைவு தினம் இன்று (நவம்பர் 22, 2016).

எம்.ஜி.கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றார். 1942ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் கொண்டார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். நிறமாலையியலில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.


டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமிபாபாவின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்தார். விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதுவே விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டம். 1953ல் நோபல் பரிசு பெற்ற சிசில் எஃப். பவலின் வழிகாட்டுதலின் கீழ், காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். காஸ்மிக் கதிர்கள், துகள் இயற்பியல் துறையில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.

ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், சிறந்த தலைமைப் பண்பும் கொண்டிருந்ததால், மிக குறுகிய காலத்தில் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தார். இவரது அயராத முயற்சியால் உயிரி அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் டாடா நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. மனித உழைப்பு என்கின்ற விசாலமான ஸ்பெக்ட்ரத்தை, விஞ்ஞான ரீதியாகப் பயன் படுத்தினால் எவ்வளவு அழகாக எதையும் படைக்க முடியும் என்பதை பௌலினிடம் கற்றார். அதுபோல் சரியான திட்டமிடல், ஒரே கருத்துடையவர்களின் ஒத்துழைப்பு, குறிப்பிட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சரியான இடம் போன்றவற்றின் உதவியால் வெற்றிகரமான ஆராய்ச்சியை இந்தியாவில் சாத்தியமாக்கலாம் என்பதை ஹோமி பாபாவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.



நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உலக அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. 1966ல் ஹோமிபாபா இறந்த பிறகு, அவர் வகித்த பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். ஹோமிபாபா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றினார். 1972ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரானார். அங்கு 9 மாதங்களே பணியாற்றினாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். மத்திய திட்டக்குழுவில் பிரதமரின் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டார். நான்கு தசாப்தங்களாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.

பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968), பத்மவிபூஷன் (1985), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் விருது என பல விருதுகளைப் பெற்றார். 2008ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. சக விஞ்ஞானிகளால் ‘கோகு’ என நேசத்தோடு அழைக்கப்பட்டார். 1989-90ல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித் துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 1990-96ல் தில்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.ஜி.கே. மேனன் நவம்பர் 22, 2016ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 2008ம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:35


வரலாற்றில் இன்று இன்று நவம்பர்-22.

மருத்துவ வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய
இந்திய பெண் வேதியியலாளர்- அசீமா சாட்டர்ஜி (Asima Chatterjee) நினைவு தினம்.

#பிறப்பு:-

செப்டம்பர் -23, 1917 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.
அங்கே தனது பள்ளிக்கல்வியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்து பயின்றார். பின்னார் கொல்கத்தா பல்கலைக்கழக இசுகாட்டிழ்சு கல்லூரியில் சேர்ந்து வேதியியல் பாடம் பயின்று 1936 இல் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் 1938 இல் வேதியியல் முதுநிலை பட்டம் பெற்றார்.1944 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாவரப் பொருள்களிலும் செயற்கைக் கரிம வேதியியலிலும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மேலும் இந்திய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.
மேலும் கூடுதலாக இவர் மடிசனில் உள்ள வில்கான்சின் பல்கலைக்கழகத்திலும் கால்டெக்கிலும் ஆய்வுப் பட்டறிவும் பெற்றார்.

#பணிகள்:-

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சீமாட்டி பிரபவுர்ன் கல்லூரியில் 1940 இல் வேதியியல் துறையின் நிறுவனத் தலைவராகச் பணிபுரிந்தார்.

1940 இல் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றால் முதன்முதலாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற பெண்மணியானார்.

1954 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக தூய வேதியியல் துறையில் பணியாற்றினார்.

1962 இல் அப்பல்கலைக்கழகத்தின் தகைமைசான்ற கைரா வேதியியல் பேராசிரியர் பதவி வகித்தார். இப்பதவியில் இவர் 1982 வரைதொடர்ந்து இருந்தார்.

#ஆய்வுகள்:-

இவர் கரிம வேதியியலிலும், நிலைத்திணைசார் தாவர மருந்தியலிலும் முக்கிய பங்களிப்பு ஆற்றினார். இவரின் குறிப்பிட்த்தகு பணி வின்சா ஆல்கலாயிடுகளிலும் கைகால் வலிப்புத் தடுப்பு, மலேரியக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஆகும்.

மேலும் கால்-கை வலிப்பு மருந்து என்ற ஆயுஷ்-56(ayush-56) மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பு செய்தார்.

இவர் இந்தியத் துணைக்கண்ட மூலிகைகள் ஆய்வில் பெரும்பணி ஆற்றியுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் மூலம்
400 க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதி வெளியிட்டு உள்ளார்.

#விருதுகள்:-

1961 இல் வேதியியலுக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருதைப் பெற்றார். இவரே இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணியாவார்.
1975 இல் பத்மப் பூசன் விருதைப் பெற்றார்.

பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தை வழங்கின.

1982 பிப்ரவரி முதல் 1990 மே வரை இந்தியக் குடியரசுத் தலைவரால் இராச்சியச் சபையின் உறுப்பினராக அமரத்தப்பட்டார்.

#மறைவு:-

நவம்பர்-22, 2006 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:35


வரலாற்றில் இன்று நவம்பர் 22

புகழ்பெற்ற சுதந்தரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான கல்கி தி.சதாசிவம் (T.Sadasivam) அவர்களின் நினைவு தினம்.

தியாகராஜன் சதாசிவம் (செப்டம்பர் 4, 1902 - நவம்பர் 22, 1997)

சக்கரவர்த்தி இராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் தி.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்தரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி வெளியேறி வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் இருந்தமையால் அதில் பணிபுரிந்தார். சதாசிவம் அவர்கள் பள்ளி இறுதி வரை படித்தவர். 1921ஆம் ஆண்டில் ஒரு மகாமகம் வந்தது. அதற்கு சாரணர் தொண்டராகச் சென்றவர் சதாசிவம். அப்படி கும்பகோணம் போன இடத்தில் தேசபக்தர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவருடைய சிம்ம கர்ஜனை சதாசிவத்தை ஒரு தேசபக்தனாக ஆக்கியது.

அதுமுதல் சுப்பிரமணிய சிவாவின் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சதாசிவம். சிவா அவர்கள் பாரதமாதாவுக்கு ஓர் ஆலயம் கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலம். அதற்காகப் பாப்பாரப்பட்டியில் இருந்த நிலத்தில் ஓர் அடிக்கல்லை அப்போதைய பெருந்தலைவர் வங்கத்துச் சிங்கம் சி.ஆர்.தாஸ் அவர்களைக் கொண்டு நாட்டியிருந்தார். பாரதமாதா ஆலயப் பணிக்காக பாரதாஸ்ரமம் அமைக்கப்பட்டது. அதில் சேர்ந்த சதாசிவம் தேசத் தொண்டில் முழு மூச்சாக இறங்கினார்.

பாரதமாதா ஆலயம் அமைப்பதற்காக ஊர் ஊராக பஜனை செய்துகொண்டு செல்லும் தேசபக்தர் கூட்டத்தில் உண்டியல் எடுத்து வசூல் செய்தார். நிதி சேர்ப்பதில் சமர்த்தர் எனும் பெயரை அப்போதே அவர் பெற்றார். 1922 இல் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 1923 இல் மறியல் போராட்டம், அன்னிய துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் இப்படிப்பட்ட காந்திய நெறியில் போராடி 15 மாத சிறை தண்டனை பெற்று சிறை சென்றார்.

கதர் இயக்கத்திலும் இவர் பெரும் பங்கு வகித்தார். ஊர் ஊராகச் சென்று கதர் துணி மூட்டைகளை எடுத்துச் சென்று கதர் என்பது தேசியத்தின் அடையாளம் சுதந்திரம் வேண்டுவோர் கதர் அணிவதன் மூலம் கிராமியத் தொழிலுக்கு ஆதரவு தருவதோடு, சுதந்திரத்துக்கும் பாடுபடுபவர்களாக ஆகமுடியும் என்று சொல்லி பெருமளவு கதர் துணிகளை விற்பனை செய்தார். ஆங்காங்கு போய் மக்கள் மத்தியில் சாங்கோபாங்கமாகப் பேசி கதர் துணி விற்பார், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ப்பார், இப்படி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றார் சதாசிவம்.

இவர் இரக்க குணம் உடையவர். தன் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்படுவது கண்டால் உடனே தன் கையில் இருப்பதைக் கொடுத்து அவர்களது கஷ்டத்தை நீக்க உதவி செய்வார். 1930 சுதந்திரப் போர் வரிசையில் மிக முக்கியமான ஆண்டு. இராஜாஜி உப்பு சத்தியாக்கிரகம் துவங்கிய ஆண்டு. திருச்சியில் நடந்த மறியலில் கலந்து கொண்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். மாநில காங்கிரஸ் அலுவலகம் திருச்சியில் இருந்தமையால் அவர் அங்கு மறியலில் ஈடுபட்டு சிறை புகுந்தார்.

சதாசிவம், இராஜாஜியையும், அவர் மூலமாக மகாத்மா காந்தியடிகளையும் நன்கு அறிந்திருந்தார். இவர் சிறை சென்று மீண்ட சமயம் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி புதிய பத்திரிகை தொடங்க முயன்று கொண்டிருந்தார். சதாசிவம் அவரோடு இணைந்து “கல்கி” எனும் பத்திரிகையைத் தொடங்க ஆலோசனைகளைக் கூறி வேலைகளை ஆரம்பித்தார். எழுத கல்கியும், நிர்வாகம் சதாசிவம் என்றும் அன்று தொடங்கிய கல்கி ராஜநடை போட்டு பயணத்தைத் தொடங்கியது. அடடா! கல்கி படைத்த இலக்கியங்கள்தான் எத்தனை எத்தனை? அத்தனையும் சதாசிவம் அளித்த ஊக்கம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கல்கியும், சதாசிவமும் இணைபிரியாத இராஜாஜி தொண்டர்களாக விளங்கினார்கள். இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள ஆங்கரை எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் பெயர் தியாகராஜன். தியாகராஜனுடைய 16 குழந்தைகளில் இவர் 3ஆவது குழந்தை. 4-9-1902இல் இவர் பிறந்தார். 1936 இல் இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைச் சந்தித்தார். 10-7-1940க்ஷஇல் இவர்களது திருமணம் நடந்தேறியது. அதே ஆண்டில்தான் கல்கி பத்திரிகையும் தொடங்கப்பட்டது. இவர் தனது 95ஆம் வயதில் 22-11-1997இல் அமரத்துவம் அடைந்தார்.

இயற்கை அளித்த கொடையுடன் இசையால் இவ்வுலகை அசைத்தவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார். இவரைப் பற்றி நமக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், இவரின் இந்த இனிய குரலை ஊக்குவித்து உலகறியச் செய்த பெருமை அவர்தம் கணவரையே சாரும் என்பது அவரின் கருத்து.

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:35


ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பார் என்று கூறுவர். ஆனால், ஒரு பெண் வெற்றி பெறுவதற்கு இச்சமூகத்தில் போராட வேண்டும். அதுவே அவருடைய கணவன் துணையாக இருந்தால் எட்டாக் கனியாய் இருக்கும் வெற்றி, எளிதாக அவரின் கைகளில் வந்து சேரும்.

கர்நாடக இசை உலகின் முடிசூடா இராணியாக திகழ்ந்தவர் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி. ஐ.நா.சபையில் பாடி நம் தாய்த்திருநாட்டைப் பெருமைப்படுத்தியவர்.

அவருக்குப் பக்கபலமாக இருந்தது அவரது கணவர் கல்கி தியாகராஜன் சதாசிவம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்,பாடகர்,பத்திரிகையாளர், படத் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். தமிழ்ப் பத்திரிகை "கல்கி'யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர்.

இரயில் பயணம் ஒன்றில் பயணித்தபோது எம்.எஸ் ஐக் கண்ட அவர் பிடித்துப் போய் தமது துணைவியாக்கிக் கொண்டார்.பின் அவரின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்தவர். "எனக்கு எதுவும் தெரியாது, தன் கணவரே எல்லாமுமாகி இருக்கிறார்' என நெகிழ்ந்து போய் கூறுவார் எம்.எஸ்.

என் அம்மாவுக்குப் பிறகு என் நலம் பற்றி சிந்திப்பவர் தன் பதியே என்று உருகியவர், கணவர் சதாசிவத்தின் மரணத்திற்குப் பிறகு வெளியில் எங்கும்

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:35


வரலாற்றில் இன்று நவம்பர் 22

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜான் எஃப் கென்னடி (John F Kennedy) இறந்த தினம் இன்று

ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 - நவம்பர் 22, 1963)

l அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத் தில் ப்ரூக்ளின் என்ற நகரில் பிறந்தவர் (1917). தந்தை ஒரு தொழிலதிபர். தன் பிள்ளைகள் அனைத்துத் திறன்களை யும் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

l அதோடு, ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் முதலாவதாக வரவேண்டும் என்றும் அவர்களை உற்சாகப்படுத்துவாராம். தந்தை யைப் போலவே பிள்ளையும் அனைத்தும் வெற்றியில்தான் அடங்கியுள்ளது என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.

l இளமைப் பருவத்தில் இவருக்குப் பல முறை உடல்நிலை சரியில்லா மல் போவதுண்டு. 1940-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த சமயத்தில் இவர் பொறுப்பிலிருந்த கடற்படைக் கப்பலை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

l காயம் பட்ட நிலையிலும் கடலில் நீந்தி தன் வீரர்களைக் காப்பாற்றினார். ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இந்த துணிகரமான செயலுக்காக அவருக்கு ‘பர்பிள் ஹார்ட்’ என்ற வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

l 1947 முதல் 1953 வரை ஜனநாயகக் கட்சி சார்பாக அமெரிக்க கீழவை உறுப்பினராகவும் 1953 முதல் 1961 வரை செனட் உறுப்பினராகவும் இருந்தார். சிறிது காலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சைப் பெற்று வந்த காலத்தில் ‘Profiles in courage’ என்ற நூலை எழுதினார்.

l இந்த நூலுக்காக இவருக்கு 1957-ல் ‘புலிட்சர் பரிசு’ வழங்கப் பட்டது. 1960-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்கா வின் 35-வது அதிபராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 43. இவரது பதவி ஏற்பு விழா உரை உலகப் புகழ் பெற்றது. அதில், ‘நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே. நீ நாட் டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்’ என்று முழங்கினார்.

l அதிபரான பின் இவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை களால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதிக பொருளா தார வளத்தை அமெரிக்கா கண்டது. இவரது தலைமையின் கீழ், 1963-ல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டனும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

l இவரது ஆட்சிக் காலத்தில் கியூபா ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் பிரச்சினை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம், வியட்நாம் போர் ஆரம்பம் ஆகிய பல முக்கிய நிகழ்வுகள் உலகில் நடந்தன. அவை எழுப்பிய சவால்களை இவர் தீர்க்கமாக எதிர்கொண்டார்.

l கம்பீரமான தோற்றமும் நல்ல பேச்சாற்றலும் கொண்டவர். அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். போரை வென்றதற்காக அல்லாமல் போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டவர்.

l அமெரிக்காவில் இன்றும் அன்போடு நினைவுகூரப்படும் அதிபர்களுள் இவர் மிகவும் முக்கியமானவர். அமெரிக்காவில் பல முக்கிய இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1963-ல் திறந்த காரில் தன் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த சமயத்தில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இறந்தபோது இவரது வயது வெறும் 46தான்.

#மேற்கோள்கள்

உலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் ? நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.
இது இடர்சூழ்ந்த உலகம் ; நிலையற்ற உலகம். இவ்வுலகில் எளிதாக வாழ்ந்துவிடலாம் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.

எளியவர்கள் பாதுகாப்போடும், வலியவர்கள் நேர்மை யோடும் வாழத்தக்க அமைதியான புத்துலகம் ஒன்றைச் சமைக்க நம்மாலான பணியைச் செய்வோம்.

இன்று நடப்பது ஒரு கட்சியின் வெற்றிவிழாவன்று. மக்களின் உரிமை விழாவாகும். ஒன்றின் முடிவையும் மற்றென்றின் துவக்கத்தையும் குறிப்பிடும் விழாவாகும். மாறுதலேயும் புதுமையையும் வரவேற்கும் விழாவாகும்.

அதிகாரம் ஒருவனை அத்துமீறிய செயல்களில் ஈடு படுத்தும்போது, கவிதை அவனுடைய எல்லை எதுவென்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் ஒருவனைக் குறுகிய புத்திக்காரனுக்கும் போது, கவிதை அவன் உள்ளத்தை விரிவடையச் செய்கிறது.

நான் கூறும் சமாதானம் மனித உரிமை பற்றிய சமாதானம் ; நான் குறிப்பிடும் உரிமை, போரினல் விளையும் அழிவைப் பற்றிய அச்சம் இல்லாமல் மக்களினம் வாழும் உரிமை.

உயிரினங்கள் இயற்கை வழங்கியபடிகாற்றை உயிர்க்கும் உரிமை ; எதிர்கால மக்களினம் முழு உடல் நலத் தோடு வாழும் உரிமை.

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:35


மனித உரிமை அழியாமல் நிலைத்து நிற்க நாம் எந்தக் கடமையையும் ஏற்போம். எந்தத் துன்பத்தையும் பொறுத்துக்கொள்வோம். எந்த நண்பரையும் எதிர்ப்போம்.
முடிவை எதிர்பாராமல், எதிர்ப்புகளுக் கஞ்சாமல், இடர்களுக்கு உள்ளங் கலங்காமல் தன்னால் இயன்ற அளவு நேர்மைக்காகப் பாடுபடவேண்டும். அதுதான் மக்களினத்தின் அடிப்படை ஒழுக்கம்.

நாம் ஏன் சந்திரனுக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். சந்திரன் அல்ல நமது குறி, விண்வெளியை நான் ஒரு முக்கியமான கடலாகக் கருதுகிறேன்.—

உங்கள் எதிரிகளை மன்னியுங்கள், ஆனால் அவர்களின் பெயர்களை மறக்காதீர்கள்.

--ஜான் எஃப். கென்னடி

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:35


வரலாற்றில் இன்று நவம்பர் 22

தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான அ. சிதம்பரநாதன் செட்டியார் இறந்த தினம்.

(ஏப்ரல் 3, 1907 – நவம்பர் 22, 1967)

வாழ்க்கைச் சுருக்கம்

குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமிர்தலிங்கம் - பார்வதி என்பவருக்குப் பிறந்தார். அங்குள்ள நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928-ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று. "டாக்டர் ஜி. யு. போப் நினைவு" தங்கப் பதக்கத்தை வாங்கினார். அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் தந்து கெளரவித்தது. தமிழிலும்,ஆங்கிலத்திலும் புலமை பெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 1943-ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரிய தமிழறிஞர் ஆவார்.

சென்னை புதுக்கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கலைக்கல்லூரியிலும் விரிவுரையாளராகவும், 1946 முதல் 1958 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது தமிழ்த்துறைப் பணிகளைப் பாராட்டி பெரியார் 27.7.46 அன்றைய குடியரசு இதழில் பாராட்டுரை வழங்கியுள்ளர். 1948ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராக ஐந்து மாதங்கள் பணியாற்றியுள்ளார். துணைவேந்தராகப் பணியாற்றிய, முதல் தமிழ் பேராசிரியர் இவர் தான். பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழக மேலவைக்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து, அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே ஆகும். சாகித்திய ஆக்காதமியின் உறுப்பினராகவும், மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று, தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தினார்.1960ஆம் ஆண்டு, உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார்.

1961ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். 1964ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது.

எத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும், தம் இறுதிக்காலத்தில், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வராக 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே, தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார்.

ஏ. சி. செட்டியார் என்று அழைக்கப்பட்ட இவர் மதுரையில் 1967 நவம்பர் 22 அன்று காலமானார்.

இவர் எழுதிய நூல்களில் பின்வருவன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

தமிழோசை

முன்பனிக்காலம்

இளங்கோவின் இன்கவி

தமிழ் காட்டும் உலகு

செங்கோல் வேந்தர்

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கட்டுரைக்கொத்து

An Introduction To Tamil Poetry' -தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்டிய நூலை, சிலப்பதிகாரத்தினையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, "ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்" எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்பட, 1959 ஆம் ஆண்டு முதல் 1965 வரைப் பணியாற்றினார்.

Advance Study of Tamil Prosody

CILAPPADIKARAM THE EARLIEST TAMIL EPIC

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

பெரியார் மன்றோ

மன்னுயிர்க்கு அன்பர்

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:34


எல்லாமும் சேர்ந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. பிரிட்டனில் எம்பிக்கள் பலரை விலைக்கு வாங்கினார் இவர் . இவரே எம்.பி ஆனார். வங்கத்தில் இவர்கள் அடித்த கொள்ளையின் விளைவு வளம் கொழித்த பூமியாக இருந்த வங்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் இறந்து போனார்கள். அவரின் ஊழல்களை நாடாளுமன்றத்தில் விசாரித்தார்கள். நான் நல்லவன் என்று
நாடகமாடியும்,கொடுக்க வேண்டியதை கொடுத்தும் தப்பித்தார் அவர். மனசாட்சி விடவில்லை. அவரின் கடிதங்களில் அந்த வலி தெரிகிறது.

பித்தப்பை கோளாறு,தூக்கமின்மை ,ரத்த கொதிப்பு ஆகியன துரத்தின. மனச்சிதைவு ஏற்பட்டு போதை மருந்துகள் எடுத்துகொண்டார் கிளைவ். கழுத்தை அறுத்துக்கொண்டு இதே தினத்தில் 49 வது வயதில் இறந்து போனார் அவர். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு தேவலாய சடங்குகள் இல்லை ; அவர்களைப்பற்றி குறிக்கும் கல்லும் பொறிக்கமாட்டார்கள். அதுதான் கிளைவுக்கும் நடந்தது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வங்கத்தின் பொன்னில் புரண்ட ஆளுநர் அன்றோ
பெற்றது அனாதை சவக்குழி. வரலாறு விசித்திரமானது !

நவம்பர் 22: ராபர்ட் கிளைவ் நினைவு தினம் இன்று (1774)

வரலாற்றில் 🏹 இன்று

22 Nov, 05:34


வரலாற்றில் இன்று நவம்பர் 22

நவம்பர் 22: ராபர்ட் கிளைவ் நினைவு தினம்

நவீன இந்தியாவில் ஊழல்,லஞ்சம்,கட்சித்தாவல் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்திய ராபர்ட் கிளைவ் மறைந்த நாள் இன்று.

ஒரு எழுத்தராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி கோடிகளில் புரண்டு, பற்பல மாளிகைகள்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கப்பாளங்கள்,ஒளிரும் வைரங்கள்
என்று கொள்ளையின் உச்சமாக இருந்தவர் இவர். இவரின் வாழ்க்கைப்பக்கம் சுவாரசியமானது

வெறும் போக்கிரியாக திரிந்து கொண்டிருந்த இவர் ஆங்காங்கே இருக்கும் கடைகளில் நண்பர்களோடு சேர்ந்து மாமுல் வசூல் செய்வார். அப்படி தராமல் போன கடைகளை உடைப்பது,சேறு எறிவது,வீணாக வம்புக்கு இழுப்பது என்று இவர் இருந்தது இவரின் அப்பாவின் காதுக்கு போனது. ஒற்றை இலக்க பவுன் சம்பளத்துக்கு இந்திய கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்கு சேரச்சொல்லி
இவரை அனுப்பினார் தந்தை. இந்தியாவின் வெப்பம்,கடுமையான பணிச்சூழல்,குறைந்த சம்பளம் அவரை திருத்தும் என்று நினைத்தார் அவரின் தந்தை. ஒன்றரை வருடப்பயணத்தில் இந்தியா வந்தார்.சில போர்களில் பங்கு பெற்றும்,அதிகாரிகளை கவனித்தும் முன்னேறிக்கொண்டு இருந்தார். கர்நாடக சூழல் அவருக்கு அருமையான வாய்ப்பை தந்தது

கர்நாடகம் எனப்பட்ட தென்னாட்டின் பகுதியில் பிரான்ஸ் கலக்கிக்கொண்டு இருந்தது. அவர்களின் கவர்னர் தூப்ளே முக்கிய காரணம் ,அங்கே நவாப் பதவிக்கு சந்தா சாகிப் ஆசைப்பட்டார். அப்போதைய நவாப் அன்வரூதின் இத்தனைக்கும் அவரன் உறவினர். ஆந்திர நவாப் பதவிக்கு முஸாபர் ஜங் மற்றும் நாஸிர் ஜங் அடித்துக்கொண்டார்கள். சாந்தா சாகிப்,பிரெஞ்சு படைகள் மற்றும்
முஸாபர் ஜங் கூட்டணி போட்டு அன்வரூதினை கொன்றார்கள். அடுத்து நாஸிர் ஜங்கையும் கொன்று ஹைதராபாத் நவாபாக முஸாபாரை ஆக்கினார் தூப்ளே. ஆங்கிலேயப்படைகளும் எதிர்ப்பக்கத்தில் இருந்து கொண்டு தான் இருந்தது. ஒரே தோல்வி முகம்.

அப்பொழுது தான் இப்பொழுது இங்கே நிலைமையை தான் சரி செய்வதாக கிளைவ் இறங்கினார். அன்வரூதின் மகன் முகமது அலியின் பின் பிரிட்டன் படைகளை அணிவகுத்தார். முகமது அலியை தாக்கிக்கொன்று விட திருச்சியில் எதிரிப்படைகள் நின்றுகொண்டு இருந்தன. கர்நாடகத்தின் தலைநகரான ஆர்க்காடு ஆளில்லாமல் இருந்தது ,“அங்கே போனால் என்ன ?” என்று கேட்ட கிளைவ் வெறும் ஐநூறு வீரர்களோடு அங்கே போய் வென்றார். போரின் போக்கு மாறியது. தெற்கு
ஆங்கிலேயர் வசம் வந்தது

அடுத்தது வங்கம் பக்கம் பார்வை திரும்பியது. அங்கே வியாபாரம் செய்கிறேன் என்கிற பெயரில் வழங்கப்பட்ட பாஸ்களை முறைகேடாக ஆங்கிலேய அதிகாரிகள் பயன்படுத்திகொண்டு இருந்தார்கள். வங்கத்துக்குள் வந்த பொருட்களுக்கு எக்கச்சக்க வரி போட்டு இந்திய வியாபாரிகளுக்கு தொல்லை கொடுத்தார்கள். இவற்றை பார்த்து அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்தார் வங்கத்தின்
நவாப் சிராஜ் உத் தவுலா. போருக்கு அவரை அழைத்தது கிழக்கிந்திய கம்பெனி.நவாபின் படைகளை லஞ்சத்தால் ஏற்கனவே வாங்கி இருந்தா கிளைவ். மிர் ஜாபர்,ஜகன் சேத்,அமிசந்த்,காதிம் கான் என்று பெரிய க்யூவில் நின்று நவாபுக்கு துரோகம் செய்தார்கள். லஞ்சம்,பதவி,கட்சித்தாவல் என்று திட்டம் போட்டு சாதித்தது தளபதி கிளைவ். ஆமாம் ! அவரின் வீரத்துக்கு கலோனல் பதவி
கொடுத்தது கம்பெனி

போரில் வெறும் இருபத்தி ஒன்பது பேர் ஆங்கிலேயர் பக்கமும்,நவாபின் பக்கம் ஐநூறு பேரும் இறந்து போனார்கள். சொன்னபடிய மிர் ஜாபர் மற்றும் குழுவினர் கட்சி தாவி நவாபை மாட்டிவிட்டார்கள். போரில் வென்றதும் பணமெல்லாம் எனக்கு,ஆட்சியின் பொறுப்பு உனக்கு என்று கிளைவ் செயல்பட்டார். அடுத்தடுத்து ஆட்சி மாற்றங்கள் செய்தார்கள். வங்கத்தை உறிஞ்சி கிளைவுக்கு கொஞ்சம்,கம்பெனிக்கு கொஞ்சம் என்று பல கோடிகளை சுருட்டினார்கள். இந்த
எண்ணிக்கை ஒரு புரிதலை தரலாம். அந்தப்போரின் முடிவில் கிளைவுக்கு மட்டும்
இருபது லட்சம் தரப்பட்டது. ஆங்கிலேய கம்பெனிக்கு 1,77,00,000.

இது போதாது என்று தங்கங்கள்,வைரங்கள் மற்ற லஞ்சங்கள் வேறு. பின்னர் மிர் ஜாபர் கொடுத்த பணம் போதாது என்று அவரை பதவியில் இருந்து எறிந்து அவரின் மருமகன் மிர் காசிமை கொண்டு வந்தார்கள். அவரும் கப்பம் தர முடியாமல் சுயாட்சி விரும்பி போர் தொடுத்து தோற்றுப்போனார். அப்பொழுது மீண்டும் மிர் ஜபாரை கொண்டு வந்தார்கள். இன்னுமொரு பதினைந்து லட்சம். கூடவே
கிளைவுக்கு கவர்னர் பதவி. அப்பொழுதைய வங்கத்தில் வருமானம் 1 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 152 ரூபாய். அதில் இவருக்கு மட்டும் இரண்டரை லட்சம்.

இந்தியாவில் ஆட்சியைப்பிடிக்க முடியும் என்றெல்லாம் நம்பிக்கொண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வரவில்லை. மொத்தமாக கம்பெனியை மூடிவிட்டு வந்து விடுங்கள் என்றெல்லாம் பாராளுமன்றம் சொல்லிக்கொண்டு இருந்தது. லஞ்சம் கொடுத்து சரிக்கட்டி இருந்தார்கள். கிளைவ் தான் அந்த போக்கை மாற்றி ஆங்கிலேய சாம்ராஜ்யத்துக்கு அடிகோலினார்

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:37


வரலாற்றில் இன்று நவம்பர் 13

பூமியைத் தவிர மற்ற கிரகத்தை முதன் முதலில் சுற்றிய மரைனர் 9:

13-11

ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 என்ற விண்கலம் முதன் முலாக செவ்வாய் கோளை சுற்றி வந்தது. இதற்குமுன் எந்த விண்கலமும் பூமியைத் தவிர வேறு எந்த கோளையும் சுற்றி வரவில்லை.

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:37


வரலாற்றில் இன்று நவம்பர் 13 , 1938 -

திராவிடர் கழக கட்சித் தலைவர் ஈ.வே . இராமசாமி அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்ட நாள்.

அன்றைய தினம் சென்னை ஒற்றைவாடைத் திரை யரங்கத்தில் இந்தி எதிர்ப்புப் பெண்கள் மாநாடு நடைபெற்றது அம்மாநாட்டைமீனாம்பாள், பண்டித நாராயணி, வா. பா தாமரைக் கண்ணி, பா. நீலாம்பிகை, மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் உட்பட்ட பெண்கள் குழு முன்னின்று நடத்தியது. இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற்போன சேவைகளை தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென அந்த மாநாடு தீர்மானம் இயற்றியது. அது முதல் ஈரோடு வேங்கடப்ப இராமசாமி அவர்கள் பெரியார் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்அழைக்கப்படலானார்.

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:36


வரலாற்றில் இன்று நவம்பர் 13

1665ஆம் ஆண்டு கணித மாமேதையான சர் ஐசக் நியூட்டன் கணிதத்தின் முக்கியக் கூறான நுண்கணிதம் (Calculus) பற்றிய முதன்மை விதிமுறைகளைத் தொகுத்தளித்த நாள்..

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:36


வரலாற்றில் இன்று ் நவம்பர் 13

1789 - 'இந்த உலகத்தில் மரணத்தையும், வரியையும் தவிர வேறெதுவும் நிச்சயமில்லை', என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை, இந்நாளில்தான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஃப்ரான்சிலிருந்த நண்பர் ஜீன் பாப்ட்டைஸ் லீ ராய்-க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட நாள்

அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஃப்ராங்க்ளின், அரசியல்வாதி மட்டுமின்றி, எழுத்தாளர், செய்தித்தாள் வெளியீட்டாளர், (அமெரிக்காவின் முதல் தலைமை) போஸ்ட்மாஸ்ட்டர், அரசியல் தத்துவ அறிஞர், அறிவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர், (ஃப்ரான்ஸ், ஸ்வீடன் நாடுகளுக்கான அமெரிக்காவின்) தூதர், சமூச் செயற்பாட்டாளர் என்று தொடரும் நீண்ட பட்டியலான திறன்களைக் கொண்டவர். இடி தாங்கி, பைஃபோக்கல் கண்ணாடி, ப்ராங்க்ளின் ஸ்டவ் உள்ளிட்ட பல பொருட்களைக் கண்டுபிடித்தவரான ப்ராங்க்ளினின் எழுத்துகளிலும், 'சேமிக்கப்பட்ட பென்னி(காசு!), ஈட்டப்பட்ட பென்னிக்குச் சமம்', 'நேரமே பணம்', 'நல்ல போரென்று ஒன்றோ, தீய அமைதியென்று ஒன்றோ இருந்ததில்லை', 'உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் என்பதால் எதிரிகளை நேசியுங்கள்', 'நன்றாகச் சொல்வதைவிட, நன்றாகச் செய்வது சிறந்தது', 'கால் பிறழலாம், நா பிறழக்கூடாது' என்று ஏராளமான பொன்மொழிகள் இன்றுவரை புகழ்பெற்று விளங்குகின்றன. ஃப்ரெஞ்சுப் புரட்சி உருவாகியிருந்த சூழலில், அங்கிருக்கும் நிலவரத்தைக் கேட்டு எழுதிய இந்தக் கடிதத்தில், அமெரிக்காவில் அப்போதுதான் உருவாகியிருந்த அரசமைப்புச் சட்டம், நிரந்தரமானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அது உண்மையாக இருக்க முடியாது என்ற பொருளில்தான் இந்த வரிகளை அவர் எழுதியிருந்தார். உண்மையில் (நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்காமல்)இங்கிலாந்து விதித்த வரிகளை எதிர்த்துத்தான் அமெரிக்க விடுதலைப்போர் தொடங்கியது என்பதால், வரிகளே இல்லையென்று தீர்மானித்து, விடுதலைப் பெற்றதும் படைகளைக்கூட கலைத்துவிட்ட அமெரிக்காவின் கூட்டரசு, ஆறாண்டுகளுக்குள், இறக்குமதிக்கான வரிகளை, டேரிஃப் என்ற பெயரில் 1789 ஜூலையில்தான் அறிமுகப்படுத்தியிருந்தது. அடுத்த ஆண்டிலேயே உள்நாட்டு உற்பத்திக்கும் வரி விதிக்கப்பட்டு, விஸ்கி கலகம் வெடித்தது. அரசு என்பது உருவான காலத்திலேயே உருவாகிவிட்ட வரிகள் குறித்து, கிறித்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள்கூட கிடைத்துள்ள நிலையில், விதிவிலக்காக இருக்க முடியாத அமெரிக்கா, விடுதலைப் பெற்று 137 ஆண்டுகள் கழித்து 1913இல் வருமான வரியையும் விதித்தது! உண்மையில், 'மரணமும், வரியும்போல நிச்சயமான...' என்பதை, ஆங்கிலேய வணிகரும் எழுத்தாளருமான டேனியல் டீஃபோ, 1726இல் எழுதிய 'சாத்தானின் அரசியல் வரலாறு' என்ற நூலிலேயே குறிப்பிட்டுவிட்டாலும், அது ஃப்ராங்க்கிளினால்தான் உலகப் புகழ்பெற்றது!

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:36


வரலாற்றில் இன்று நவம்பர் 13

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஸ்வீடன்
மக்கள் முடிவு செய்த நாள்(1994)

Sweden decided to join the European Union (1994)

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:36


வரலாற்றில் இன்று நவம்பர் 13-1841

நவீன ஹிப்னாட்டிசத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஜெண்ட்ல்மேன் சயிண்ட்டிஸ்ட்' ஜேம்ஸ் ப்ரெய்ட், 'அனிமல் மேக்னெட்டிசம்' என்பதன் செயல்முறை விளக்கத்தை தன்முறையாகக் கண்ட நாள்

பல்கலைக்கழகங்கள், அரசுத் துறை அல்லது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிதியுதவி போன்றவையின்றி, யாரையும் சாராமல் ஆய்வுகள் மேற்கொண்ட சுதந்திரமான ஆய்வாளர்கள், ஜெண்ட்ல்மேன் சயிண்ட்டிஸ்ட் என்றழைக்கப்பட்டனர். எல்லா உயிரினங்களிலும் உணர முடியாத ஓர் நேர்மறை சக்தி இருப்பதாகவும், அதை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்றும் நம்பிய ஜெர்மானிய மருத்துவர் ஃப்ரேன்ஸ் மெஸ்மெர், அதற்கு 'அனிமல் மேக்னெட்டிசம்' என்று பெயரிட்டார். இவர், 1774இல் ஒரு பெண் ஹிஸ்டீரியா நோயாளியை இரும்பு கலந்த கலவையொன்றைக் குடிக்கச்செய்து, அவரது உடலில் பல காந்தங்களை வைத்து ஒரு செயற்கை அலையை உருவாக்கினார். உடலில் இனம்புரியாத ஏதோ பாய்ந்ததாகவும், பல மணி நேரத்துக்கு அவரது நோயிலிருந்து விடுவித்ததாகவும் அந்த நோயாளி குறிப்பிட்டாலும், காந்தங்களால் அது நிகழ்ந்ததாக மெஸ்மெர் நம்பவில்லை. விரைவிலேயே இந்தச் சிகிச்சையில் காந்தங்களைப் பயன்படுத்துவதை அவர் நிறுத்திவிட்டாலும், அனிமல் மேக்னெட்டிசம் என்றே அவர் அழைத்த பண்புதான் அவர் பெயராலேயே மெஸ்மெரிசம்(மெஸ்மெர்+இசம்) என்றழைக்கப்படுகிறது. இதைக்கொண்டு சிசிச்சையளிப்பவர்கள் மேக்னெட்டைசர் என்றும், இதைப்பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்கள் மேக்னெட்டிஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஃப்ரெஞ்ச் மேக்னெட்டைசர் சார்லஸ் லாஃபோன்ட்டைனின் செயல்முறை விளக்கத்தைக்காண அழைக்கப்படடபோதுதான் ப்ரெய்ட் இதைக் கண்டார். லாஃபோன்ட்டைனின் மேலும் இரு செயல்முறை விளக்கங்களின்போது மேக்னெட்டைஸ் செய்யப்பட்டவர்களின் கண், கண்ணிமை ஆகியவற்றைச் சோதித்த ப்ரெய்ட், அவர்கள் வேறொரு நிலையிலிருப்பதை உணர்ந்தார். தன்னையே செல்ஃப் அல்லது ஆட்டோ-ஹிப்னாட்டைஸ் செய்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட ப்ரெய்ட், அந்த விளைவுகளுக்கும் காந்தத்திற்கும் தொடர்பில்லை என்றும், அது உளம் சார்ந்த உடலியல் என்பதையும் கண்டறிந்தார். ஹிப்னாட்டிசம், ஹிப்னோசிஸ் ஆகிய சொற்கள் ஃப்ரெஞ்ச் மேக்னெட்டைசரான கியூவில்லர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், ப்ரெய்டாலேயே அவை புழக்கத்துக்கு வந்தன. தூக்கம் என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச்சொல்லான ஹிப்னோஸ் என்பது, ஓசிஸ் சேர்க்கப்பட்டு ஹிப்னோசிஸ் என்றாகும்போது தூங்கச்செய்தல் என்ற பொருளைத்தருவதால் அதிலிருந்தே இச்சொற்கள் உருவாயின. சிகிச்சைக்காக ஹிப்னாட்டிசத்தைப் பயன்படுத்தும் ஹிப்னோதெரபி என்பதை முதன்முதலில் செய்தவரும் ப்ரெய்ட்தான்!

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:35


வரலாற்றில் இன்று நவம்பர் 13

சங்கரதாசு சுவாமிகள் (தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம்.

(செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் நாடக உலகில் முதன்மையான ஆளுமை. 'நாடகத் தமிழின் தலைமையாசிரியர்’ என்று குறிப்பிடப்படுபவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வந்த நாடகக் கலையில் அரங்க மரபிற்கு ஏற்ப முறைமைகளை உருவாக்கியதில் சங்கரதாஸ் சுவாமிகள் முக்கியமானவர். தமிழ் நாடக வரலாற்றில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றிய நாடக ஆசிரியர், ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப் பயிற்சி அளித்த நாடகப் பயிற்சியாளர் என்ற இரண்டு கூறுகளில் இவரது முக்கிய பங்களிப்பு குறிப்பிடப்படுக்கிறது.

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சில காலம் கணக்கராக வேலை பார்த்தார். அந்த பணியை துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார். சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சங்கரதாஸ் ஆசிரியராக இருந்தார்.

சாமி நாயுடு நாடகக் குழுவில் பணியாற்றும்பொழுது உலகியலில் வெறுப்புற்ற சங்கரதாஸ் முருகனின் அருள்வேண்டி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இடுப்பில் மட்டும் உடையுடுத்தி யாத்திரை மேற்கொண்ட சங்கரதாஸரை சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்று அறியப்படலானார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையிடம் இசை கற்கத் தொடங்கினார். அவர் சங்கரதாஸை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.

நாடகக் கலை
சங்கரதாஸ் இருபத்து நான்காவது வயதில்,1891ல் நாடக உலகில் நுழைந்தார். நடிகராகவும், நாடக ஆசிரியராகவும், நாடகப் பயிற்றுநராகவும், நாடகக்குழு உரிமையாளராகவும் இருந்தார்.

நாடக நடிகர்
முதன் முதலில் சங்கரதாஸ் ராமுடு அய்யர், கல்யாணராமய்யர் என்னும் இருவர் நடத்திய நாடக சபையில் நடிகராக சேர்ந்தார். எமதர்மன், இரணியன், ராவணன், சனீஸ்வரன், கடோத்கஜன் போன்ற கதாபாத்திரங்களில் அங்கு நடித்தார். பின்னர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சங்கரதாஸ் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.

சங்கரதாஸ் நடிப்பைக் கைவிட்டதற்கு காரணமாக சில சம்பவங்கள் கூறப்படுகின்றன. சாவித்திரி நாடகத்தில் அவர் எமனாக நடித்தபோது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்ததும் நளதமயந்தி நாடகத்தில் சனீஸ்வரன் வேடமிட்டிருந்த சங்கரதாஸ் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்ததும் என தொடர்ந்து நடந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதைக் கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார் என்று சொல்லப்படுகிறது.

நாடக ஆசிரியர்

சங்கரதாஸ் சுவாமிகள்
சிறிதுகாலம் நாடகத்தில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கரதாஸ் மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் நாடகங்களில் ஈடுபட்டார். வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடக சபை, பி.எஸ். வேலு நாயரின் ஷண்முகானந்த சபை ஆகியவற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

ஒரே இரவில் ஒரு நாடகத்தை முழுமையாக எழுதி முடிக்கும் திறன் இவருக்கு இருந்தது. அவ்வை சண்முகம் கதாநாயகனாக நடிக்கவிருந்த அபிமன்யு சுந்தரி நாடகத்தை ஒரே நாளிரவில் விளக்கை வைத்துக்கொண்டு எழுதி முடித்துவிட்டார். நான்கு மணிநேரம் நடிக்க வேண்டிய நாடகத்துக்குத் தேவையான நூற்றுக்கும் அதிகமான பாடல்கள், உரையாடல்கள் அனைத்தையும் முழுவதுமாக கற்பனையில் இருந்து எந்தத் திருத்தங்களும் இல்லாமல் மங்களப் பாடல் வரை எழுதி முடித்துவிட்டிருந்தார் என்று அவ்வை சண்முகம் குறிப்பிடுகிறார்.

சங்கரதாஸ் சுவாமிகள் 31 ஆண்டுகால நாடகப்பணி வாழ்க்கையில் ஏராளமான நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். அவர்களுள் புகழ்பெற்ற சிலர்:

வேலு நாயர், ஜி.எஸ். முனுசாமி நாயுடு, ஜெகந்நாத நாயுடு, சாமிநாத முதலியார், சீனிவாச ஆழ்வார், நடேச பத்தர், ராஜா வி.எம். கோவிந்தசாமிபிள்ளை, எம்.ஆர். கோவிந்தசாமிபிள்ளை, சி. கன்னையா, சி.எஸ். சாமண்ணா ஐயர், மகாதேவய்யர், சூரிய நாராயண பாகவதர், சுந்தரராவ், கே.எஸ். அனந்தநாராயண ஐயர், கே.எஸ். செல்லப்ப ஐயர், பைரவ சுந்தரம் பிள்ளை, சீனிவாச பிள்ளை, பி.யு. சின்னப்பா, டி.எஸ். துரைராஜ், தி.ச. கண்ணுசாமிபிள்ளை, டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி.கே. பகவதி, பாலாம்மாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி.டி. தாயம்மாள்.

நாடகக்கலை மதிப்பீடு
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக செயல்பாடு புதுமையை முன்னிறுத்தியது அல்ல. ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் வங்காளம் போன்ற மொழிகளில் வாழ்க்கை முறையின் மாறுதல்கள் நாடகத்திலும் இடம்பெற்றன. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் இந்திய மற்றும் தமிழ் தொன்மங்களை, மரபான கதைகளை ஒட்டியவை; பொழுதுபோக்கோடு நீதிகளை பேசுபவை என்று வரையறுக்கலாம்.

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:35


சங்கரதாஸ் நாடகத்தில் இடம்பெறும் செய்யுள்கள் எல்லாம் இலக்கணம் பிறழாது இருக்கும். உரைநடைகள் நீண்ட வாக்கியங்களால் ஆனவை.

மறைவு
1921-ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சங்கரதாஸ் சுவாமிகளுக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கி வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே நவம்பர் 13, 1922 திங்கட்கிழமை அன்று இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார். இவரது சமாதி புதுச்சேரியில் அமைந்துள்ளது.

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:35


வரலாற்றில் இன்று நவம்பர் 13

1970 பாகிஸ்தானில் (தற்போது பங்களாதேஷ்) ஏற்பட்ட போலா புயல் ஒரே இரவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலிகொண்ட நாள் நவம்பர் 13.

மனிதகுல வரலாற்றிலேயே மிக அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட புயல் இதுதான். 222 கி.மீ. வேகத்தில் வீசிய இப்புயலில், சிட்டகாங்குக்கு அருகிலிருந்த 13 தீவுகளில் ஒருவர்கூடத் தப்பவில்லை. போலா, ஹாதியா ஆகிய பெரிய தீவுகளிலும் மிகப்பெரும்பகுதி அழிந்தது. புயலால் நிலச்சரிவு ஏற்பட்டு விழுந்ததில், கங்கையில் 30 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு அலைகள் ஏற்பட்டன. சிட்டகாங், காக்ஸ் பஜார் ஆகிய விமான நிலையங்களில் சுமார் நான்கடி உயரத்திற்கு நீர் நின்றது. சுமார் 36 லட்சம் பேர் நேரடியாக பாதிப்புற்ற இந்தப் புயலால், (தற்போதைய மதிப்பில்) ரூ.4,100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைகளைத் தாண்டிச் செல்லவேண்டியதைக் காரணமாக்கி, மீட்புப் பணிகளில், தளபதி யாஹ்யா கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு காட்டிய மெத்தனம், பன்னாட்டு ஊடகங்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள், அதாவது டிசம்பர் 7 அன்று நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 80 இடங்கள் கிடைத்த நிலையில், முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் 161 இடங்களுடன் மாபெரும் வெற்றிபெற உதவி, பங்களாதேஷ் என்ற தனிநாடு உருவாவதிலும் முக்கியக் காரணியாக இது மாறியது. இந்தியாவிலும் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பெரும் சேதத்தை இப்புயல் ஏற்படுத்தியது. இப்புயல் உருவான நவம்பர் 8 அன்று அந்தமானின் போர்ட் பிளேரில் ஒரே நாளில் 130 மி.மீ. மழை கொட்டியது. கல்கத்தாவிலிருந்து குவைத்துக்குச் சென்றுகொண்டிருந்த மகாஜக்மித்ரா என்ற 5,500 டன் சரக்குக் கப்பல் மூழ்கிப்போனது. 1991இல் பங்களாதேஷில் ஏற்பட்ட புயலில் 260 கி.மீ. வேகத்துக்குக் காற்று வீசினாலும்கூட, உயிரிழப்புகள் 2 லட்சத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:35


வரலாற்றில் இன்று நவம்பர் 13

அணு ஆற்றலை விட புதுப்பிக்கத்தக்க சூரிய மற்றும் காற்று ஆற்றல் சிறந்தது என்று விளக்கிய இயற்பியலாளர் அமோரி லோவின்ஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 13, 1947).

அமோரி லோவின்ஸ் (Amory Bloch Lovins) நவம்பர் 13, 1947ல் அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் பிறந்தார். தனது இளமைக்காலத்தை மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங், மாசசூசெட்ஸின் அம்ஹெர்ஸ்ட் மற்றும் நியூ ஜெர்சியிலுள்ள மாண்ட்க்ளேர் ஆகிய இடங்களில் கழித்தார். 1964ல், லோவின்ஸ் ஹார்வர்ட் கல்லூரியில் நுழைந்தார். அங்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 1967ல் ஆக்ஸ்போர்டில் உள்ள மாக்டலென் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் இயற்பியல் மற்றும் பிற பாடங்களைப் படித்தார். 1969 ஆம் ஆண்டில் அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் கல்லூரியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ ஆனார். அங்கு அவர் பல்கலைக்கழக டான் ஆனதன் விளைவாக தற்காலிக ஆக்ஸ்போர்டு மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அந்தஸ்தைப் பெற்றார். அவர் பட்டம் பெறவில்லை, ஏனென்றால் 1973 ஆம் ஆண்டு எண்ணெய் தடை மற்றும் ஆற்றல் இன்னும் ஒரு கல்வி விஷயமாக கருதப்படாததால், பல்கலைக்கழகம் அவரை ஆற்றலில் முனைவர் பட்டம் பெற அனுமதிக்காது. லோவின்ஸ் தனது பெல்லோஷிப்பை ராஜினாமா செய்தார். அவரது ஆற்றல் வேலைகளைத் தொடர லண்டனுக்குச் சென்றார். அவர் 1981 இல் மீண்டும் யு.எஸ். க்குச் சென்று 1982 இல் மேற்கு கொலராடோவில் குடியேறினார்.

ஒவ்வொரு கோடைகாலத்திலும் சுமார் 1965 முதல் 1981 வரை, லோவின்ஸ் மலையேறும் பயணங்களுக்கு வழிகாட்டினார். நியூ ஹாம்ப்ஷயரின் வெள்ளை மலைகள் புகைப்படம் எடுத்தார். 1971 ஆம் ஆண்டில், வேல்ஸின் ஆபத்தான ஸ்னோடோனியா தேசியப் பூங்காவைப் பற்றி அவர் எழுதினார். எர்ரி, மவுண்டன்ஸ் ஆஃப் லாங்கிங், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் தலைவரான டேவிட் ப்ரோவர் நியமித்தார். எழுபதுகளின் முற்பகுதியில், லோவின்ஸ் வளக் கொள்கையில், குறிப்பாக எரிசக்தி கொள்கையில் ஆர்வம் காட்டினார். 1973 ஆம் ஆண்டின் எரிசக்தி நெருக்கடி அவரது எழுத்துக்கு பார்வையாளர்களை உருவாக்க உதவியது. ஒரு யு.என். காகிதமாக முதலில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை அவரது முதல் புத்தகமான எரிசக்தி, உலக எரிசக்தி உத்திகள் 1973ல் வளர்ந்தது. அவரது அடுத்த புத்தகம் ஜான் எச். பிரைஸுடன் இணைந்து எழுதிய அணுசக்தி எதிர்காலங்கள்: ஒரு நெறிமுறை ஆற்றல் வியூகம் (1975). லோவின்ஸ் 10,000 வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

1976 ஆம் ஆண்டில் வெளிநாட்டு விவகாரங்களில் "எரிசக்தி வியூகம்” என்ற கட்டுரையை வெளியிட்டபோது அமோரி லோவின்ஸ் முக்கியத்துவம் பெற்றார். அமெரிக்கா ஒரு முக்கியமான குறுக்கு வழியில் வந்துவிட்டதாகவும், இரண்டு பாதைகளில் ஒன்றை எடுக்கலாம் என்றும் லோவின்ஸ் வாதிட்டார். முதலாவது, யு.எஸ். கொள்கையால் ஆதரிக்கப்பட்டது. புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் அணுக்கரு பிளவு ஆகியவற்றின் மீதான நம்பகத்தன்மையை சீராக அதிகரிக்கும் எதிர்காலத்திற்கு உறுதியளித்தது. மேலும் கடுமையான சுற்றுச்சூழல் அபாயங்களைக் கொண்டிருந்தது. லோவின்ஸ் "மென்மையான பாதை" என்று அழைத்த மாற்று, காற்றாலை சக்தி மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் "தீங்கற்ற" ஆதாரங்களை ஆதரித்தது, அதோடு ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றில் உயர்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தது.

அமோரி லோவின்ஸ் திறமையான ஆற்றல் பயன்பாடு, மாறுபட்ட மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் "மென்மையான ஆற்றல் தொழில்நுட்பங்கள்" மீது சிறப்பு நம்பகத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய "மென்மையான ஆற்றல் பாதைகளை" ஆதரிக்கிறார். மென்மையான ஆற்றல் தொழில்நுட்பங்கள் சூரிய, காற்று, உயிரி எரிபொருள்கள், புவிவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை, அவை அவற்றின் பணிக்கு அளவிலும் தரத்திலும் பொருந்துகின்றன. குடியிருப்பு சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்கள் மென்மையான ஆற்றல் தொழில்நுட்பங்களின் பிரதான எடுத்துக்காட்டுகள் மற்றும் எளிமையான, எரிசக்தி பாதுகாப்பை விரைவாக பயன்படுத்துதல், குடியிருப்பு சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்கள் மென்மையான ஆற்றல் மூலோபாயத்திற்கு அடிப்படை. திறமையற்ற ஆற்றல் பயன்பாடு மற்றும் புதைபடிவ எரிபொருள்கள் போன்ற மையப்படுத்தப்பட்ட, புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களை உள்ளடக்கியதாக "கடின ஆற்றல் பாதை" லோவின்ஸ் விவரித்தார். கடினமான பாதை தாக்கங்களை விட மென்மையான பாதை தாக்கங்கள் "மென்மையான, இனிமையான மற்றும் நிர்வகிக்கக்கூடியவை" என்று அவர் நம்புகிறார்.

அணு மின் நிலையங்கள் இடைப்பட்டவை என்று லோவின்ஸ் எழுதினார். அவை பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு, சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தோல்வியடையும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், 132 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டன. மேலும் 21% நம்பகத்தன்மை அல்லது செலவு சிக்கல்கள் காரணமாக நிரந்தரமாக மற்றும் முன்கூட்டியே மூடப்பட்டன.

வரலாற்றில் 🏹 இன்று

13 Nov, 03:35


மேலும் 27% குறைந்தது ஒரு முறையாவது ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. மீதமுள்ள யு.எஸ். அணுசக்தி ஆலைகள் அவற்றின் முழுநேர முழு-சுமை திறனில் சுமார் 90% ஐ உற்பத்தி செய்கின்றன. ஆனால் அவை திட்டமிடப்பட்ட எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பிற்காக ஒவ்வொரு 18 மாதங்களில் 1 சராசரியாக மூடப்பட வேண்டும். அணுசக்தி ஆலைகளுக்கு கூடுதல் குறைபாடு இருப்பதாகவும் லோவின்ஸ் வாதிடுகிறார். பாதுகாப்பிற்காக, அவை உடனடியாக மின் செயலிழப்பில் மூடப்பட வேண்டும். ஆனால் அமைப்புகளின் உள்ளார்ந்த அணு-இயற்பியல் காரணமாக அவற்றை விரைவாக மறுதொடக்கம் செய்ய முடியாது.

எடுத்துக்காட்டாக, 2003 ஆம் ஆண்டின் வடகிழக்கு இருட்டடிப்பின் போது, ​​ஒன்பது இயங்கும் யு.எஸ். அணுசக்தி அலகுகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருந்தது. மறுதொடக்கம் செய்யப்பட்ட முதல் மூன்று நாட்களில், அவற்றின் வெளியீடு இயல்பான 3% க்கும் குறைவாக இருந்தது. மறுதொடக்கம் செய்யப்பட்ட பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, அவற்றின் சராசரி திறன் இழப்பு 50 சதவீதத்தை தாண்டியது. புதிய அணுசக்தி நிலையங்களுக்கான பிரிட்டனின் திட்டம் நம்பமுடியாதது. இது பொருளாதார ரீதியாக திறமையானது. உத்தரவாத அமெரிக்காவில் புதிய காற்றின் ஆதாரமற்ற விலையை விட ஏழு மடங்கு அதிகமாகும். இது அமெரிக்காவில் புதிய சூரிய சக்தியின் ஆதாரமற்ற விலையை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகம். அணு விலைகள் மட்டுமே உயரும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விலைகள் குறைகின்றன. அணுசக்திக்கு முற்றிலும் வணிக வழக்கு இல்லை. பிரிட்டிஷ் கொள்கைக்கு முடிவெடுப்பதற்கான பொருளாதார அல்லது வேறு எந்த பகுத்தறிவு தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஒரு நெகாவாட் என்பது சேமிக்கப்பட்ட ஆற்றலின் ஒரு அலகு. இது அடிப்படையில் ஒரு வாட்டிற்கு எதிரானது. அமோரி லோவின்ஸ் ஒரு "நெகாவாட் புரட்சியை" ஆதரித்தார். பயன்பாட்டு வாடிக்கையாளர்கள் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை விரும்பவில்லை என்று வாதிடுகின்றனர். சூடான மழை, குளிர் பீர், லைட் அறைகள் மற்றும் நூற்பு தண்டுகள் போன்ற எரிசக்தி சேவைகளை அவர்கள் விரும்புகிறார்கள். மின்சாரம் மிகவும் திறமையாக பயன்படுத்தப்பட்டால் அவை மலிவாக வரக்கூடும். லோவின்ஸின் கூற்றுப்படி, எரிசக்தி செயல்திறன் ஒரு இலாபகரமான உலகளாவிய சந்தையை குறிக்கிறது மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வழியிலேயே தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வழிநடத்துகின்றன. அவர்கள் "தங்கள் ஆலைகளையும் அலுவலக கட்டிடங்களையும் மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நெகாவாட் சந்தைகளை உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும். லோவின்ஸ் நெகாவாட் சந்தைகளை பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஒரு வெற்றி-வெற்றி தீர்வாக பார்க்கிறார். ஏனெனில் எரிபொருளை எரிப்பதை விட இப்போது சேமிப்பது பொதுவாக மலிவானது. புவி வெப்பமடைதல், அமில மழை மற்றும் நகர்ப்புற புகை போன்றவற்றை ஒரு செலவில் அல்ல, லாபத்தில் குறைக்க முடியும்.

பல நிறுவனங்கள் ஏற்கனவே மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் கிடைக்கும் நிதி மற்றும் பிற வெகுமதிகளை அனுபவித்து வருவதாக லோவின்ஸ் விளக்குகிறார். இன்னும் சில பயன்பாடுகளின் அலட்சியம் அல்லது வெளிப்படையான எதிர்ப்பால் மின்சார சேமிப்பு தொழில்நுட்பங்களுக்கு மாற்றுவதில் முன்னேற்றம் குறைந்துவிட்டது. செயல்திறனுக்கான இரண்டாவது தடையாக, பல மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதனங்கள் தங்கள் இயங்கும் செலவுகளைச் செலுத்தாத மக்களால் வாங்கப்படுகின்றன. இதனால் செயல்திறனைக் கருத்தில் கொள்ள சிறிய ஊக்கமும் இல்லை. பல வாடிக்கையாளர்கள் "சிறந்த செயல்திறன் என்ன, எங்கே கிடைக்கும், அல்லது அவர்களுக்கு எப்படி ஷாப்பிங் செய்வது என்று தெரியவில்லை" என்றும் லோவின்ஸ் நம்புகிறார். இவர் 40 வருடங்களாக சக்தி கொள்கை(energy policy) வகுப்பாளராக ஆய்வுகள் செய்து வருகிறார். உலகின் செல்வாக்கான மனிதர்களுள் இவரும் ஒருவர் என டைம் பத்திரிகை இவரது பெயரை 2009 ஆம் ஆண்டு குறிப்பிட்டிருந்தது. இவர் பல்வேறு கெளரவ முனைவர் (honorary doctorates) பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 19 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 8 நாடுகளுக்கு 'சக்தி கொள்கை(energy policy) தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:19


வரலாற்றில் இன்று நவம்பர் 8

சக்தி டி. கே. கிருஷ்ணசாமி நினைவு தினம் (மார்ச் 11, 1913 - நவம்பர் 8, 1987)

ஒரு தமிழ் எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர். 1950களில் தொடங்கி 70கள் வரை பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். தமிழ்த் திரையுலகின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.

கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் பொன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர்.[1] 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன.[3] படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே வரவேற்பைப்பெற்றது.[4][5][6][7] அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. இதைத் தவிர பலத் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:18


வரலாற்றில் இன்று நவம்பர்.8

தமிழறிஞர் பேராசிரியர்
மா.நன்னன் நினைவுதினம் இன்று.-

தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை எளியமுறையில் நடத்தி மக்களிடம் தமிழறிவை பரப்பி வந்தவருமான பேராசிரியர் மா.நன்னன் (94) சென்னையில் காலமானார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற அவர் தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார்.

கல்லூரியில் பயின்றபோது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார்.

பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். 1942 முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியன குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார்.

அதில் ‘உங்களுக்காக’ என்ற தொடரில் 60-க்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கியதோடு நடித்தும் உள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என நிறைய எழுதியுள்ளார். 1990 - 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதினார்.

‘உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘திருக்குறள் மூலமும் விளக்க உரையும்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக் கழகு கசடற எழுதுதல்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றில் ‘பெரியாரைக் கேளுங்கள்’ என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. தமிழக அரசின் சமூக சீர்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும் வாக்கியங்களை முறையாக அமைப்பதற்குமான சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு, தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் அந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:18


வரலாற்றில் இன்று நவம்பர் 8

உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் (John Milton) இறந்த தினம் இன்று (நவம்பர் 8).

l இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1608) பிறந்தார். தந்தை பத்திரம் எழுதுபவர், கவிஞர். படிக்கும்போதே மில்டனும் கவிதைகள் எழுதி வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
முதுகலைப் பட்டம் பெற்றார். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றார். ஷேக்ஸ்பியர் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார்.

l கிறிஸ்தவ மதம், பைபிளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். அவரது ஆழமான இந்த அறிவுதான் பின்னாளில் உலகமே போற்றிக் கொண்டாடும் பல படைப்புகளை உருவாக்க இவருக்கு உதவியது. படித்து முடித்த பிறகு பாதிரியாராக வேண்டும் என்பது இவரது ஆசை. படித்து முடித்தவர், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். நூல்கள் வாசிப்பதில் அதிக நாட்டம் இருந்ததால், ஏராளமான அரிய நூல்களை வாசித்தார்.

l பிரான்ஸ், இத்தாலி உட்பட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். இப்பயணத்தில் விஞ்ஞானி கலிலியோவை சந்தித்தார். இதை தனது வாழ்நாளின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதினார். இதுகுறித்து ‘பாரடைஸ் லாஸ்ட்’ அமர காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

l 1639-ல் நாடு திரும்பியதும், பன்மொழிப் புலமை பெற்றவராக, அற்புதக் கவிஞராக அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார். ஏராளமான கவிதைகளை எழுதினார். ‘ஆன் தி மார்னிங் ஆஃப் கிறைஸ்ட்ஸ் நேடிவிட்டி’, ‘ஆன் ஷேக்ஸ்பியர்’ போன்ற கவிதைகள் இவரது ஆரம்பகாலப் படைப்புகள்.

l உரைநடையிலும் முத்திரை பதித்தார். ‘தி டாக்ட்ரின் அண்ட் டிசிப்ளின் ஆஃப் டிவோர்ஸ்’, ‘ஆஃப் எஜுகேஷன்’, ‘பிலாசபி அண்ட் பாலிடிக்ஸ்’, ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டன்’ என பல படைப்புகள் இவரது கற்பனையில் வடிவம் பெற்றன.

l மறைந்த நண்பர் எட்வர்ட் கிங் நினைவாக ‘லிசிடஸ்’ என்ற இரங்கற் பா எழுதினார். அது ஆங்கில இலக்கிய இரங்கற் பாக்களிலேயே தலைசிறந்ததாக கருதப்படுகிறது. இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட.

l இங்கிலாந்தில் 1640-ல் புரட்சி வெடித்தது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் எழுந்தன. மன்னர் ஆட்சிக்கு எதிராக பல கட்டுரைகள் எழுதினார். முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அப்போது, இவரது பார்வை பாதிக்கப்பட்டது. கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் பார்வை முற்றிலுமாக பறிபோனது.

l தன் பிள்ளைகள், உதவியாளர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கேட்பார். படைப்பு பணியையும் நிறுத்தவில்லை. அதன் பிறகுதான் இவரது ‘மாஸ்டர்பீஸ்’ எனப்படும் படைப்பான ‘பாரடைஸ் லாஸ்ட்’ காவியத்தை படைத்தார். உலகத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இக்காவியம் அந்த நாளில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.

l ‘சாம்சன் அகானிஸ்ட்’ என்ற நாடக நூல் இவரது இறுதிப் படைப்பு. ஆங்கிலக் கவிஞர்களில் அதிகம் உவமைகளைப் பயன்படுத்தியவர் இவரே எனக் கருதப்படுகிறது.

l இவரை வழிகாட்டியாகவும் ஆதர்ச கவிஞராகவும் உலகம் முழுவதும் பலர் ஏற்றனர். அதில் வில்லியம் வேர்ட்ஸ்வர்த், வில்லியம் பிளேக், ஜான் கீட்ஸ் குறிப்பிடத்தக்கவர்கள். உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் படைப்பாளியான ஜான் மில்டன் 66-வது வயதில் (1674) மறைந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:18


வரலாற்றில் இன்று.நவம்பர் 8

ரஷ்ய இயற்பியலாளர் வித்தாலி கீன்ஸ்புர்க் நினைவு தினம் இன்று.

வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (அக்டோபர் 4, 1916 – நவம்பர் 8, 2009) என்பவர் ரஷியாவைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானியற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் சோவியத்தின் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவர் ஈகர் தம்மை அடுத்து இயற்பியல் கழகத்தின் (லேபெடெவ் இயற்பியல் கழகம்) கொள்கை இயற்பியல் துறையின் தலைவராக இருந்தவர்.

வித்தாலி கீன்ஸ்புர்க் 1916 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1938 ஆம் ஆண்டில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்று1940 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தையும் பின்னர் 1942 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் இருந்து மாஸ்கோவில் உள்ள லேபெடெவ் இயற்பியல் கல்லூரியில் பணியாற்றினார்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


வரலாற்றில் இன்று – நவம்பர் 8

உலக நகர திட்டமிடல் தினம்

08.11. உலக நகர திட்டமிடல் தினம்

உலக நகர திட்டமிடல் தினம் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போது, எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் Carlos Maria della Paolera என்பவரால் நிறுவப்பட்டது.

திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது, என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம்; அது போல, ஒரு நகரத்தை உருவாக்கும் போது, எதிர்காலத்துக்கு ஏற்ப, திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவ., 8ம் தேதி, "உலக நகர திட்டமிடல் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

என்ன வித்தியாசம்:

திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது. ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய விரிவாக்கம், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பது, ஆக்கிரமிப்பு போன்றவை, நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. மக்களும், நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

திட்டமிட்ட தலைநகரங்கள்:

உலக நாடுகளின் தலைநகரங்களில், கான்பெரா (ஆஸ்திரேலியா), வாஷிங்டன் (அமெரிக்கா), பிரேசில்லா (பிரேசில்), புதுடில்லி (இந்தியா), அபுஜா (நைஜீரியா), அஸ்டானா (கஜகஸ்தான்), இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) ஆகியவை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை.

இந்தியாவில்...:

இந்தியாவில் முதன் முதலில் திட்டமிடப்பட்ட நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு பொது தலைநகர். உலகின் பெரிய திட்டமிடப்பட்ட நகரம் நவி மும்பை. இது 1972ம் ஆண்டு, மும்பை மாநகர் விரிவாக்கத் திட்டத்தின் படிஉருவாக்கப்பட்டது. நொய்டா, ஜெய்ப்பூர், காந்திநகர் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்ட நகரங்கள்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


மேலும் உடனொளிர் திரையிலும் (fluorescent Screen) வலுவூட்டும் திரையிலும் (Intensifying Screen) பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. எக்சு கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன. ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும்.

X-கதிர்கள் மற்றும் காமா கதிர்களுக்கு இடையே ஒரு வரையறை வேறுபடுத்தி உலகளவில் ஒருமித்த கருத்து இல்லை. அவற்றின் மூலத்தை வைத்துக்கொண்டே இக் கதிர்வீச்சுக்களை இருவகையாக வேறுபடுத்துகின்றனர். X-கதிர்கள் எலக்ட்ரான்களில் இருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. ஆனால் காமா கதிர்கள் அணுக்கருவிலிருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும், சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக அலைநீளத்தின் அடிப்படையில் X-கதிர் மற்றும் காமாக் கதிர்வீச்சுக்கள் வேறுபடுத்தப்படுகின்றன. 10−11 m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு காமாக் கதிர்கள் எனப்படுகின்றது.

X-கதிர்கள் அதிக சக்தியுடைய மின்காந்தக் கதிர்களாகும். இவற்றின் அயனாக்கும் ஆற்றல் புற-ஊதாக் கதிர்களின் ஆற்றலை விட மிக அதிகமாகும். எனவே பொருட்களை அயனாக்கி இரசாயன பிணைப்புகளை உடைக்கும் ஆற்றலை இவை கொண்டுள்ளன. இப்பண்பு காரணமாகவே எக்ஸ்-கதிர்கள் உயிரிகளுக்கு மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படுகின்றன. மென்மையான X-கதிகளையும் உரிய பாதுகாப்பின்றி நீண்ட காலம் கையாண்டால் டி.என்.ஏ மூலக்கூறுகளின் ஒழுங்கு குலைந்து புற்று நோய்க்கு உள்ளாகலாம். அதிக சக்தியுள்ள X-கதிர்களினால் புற்று நோய்க் கலங்களை அயனாக்கி அழிக்கவும் இயலும். எனினும் இதன் போது ஆரோக்கியமான கலங்களுக்கு X-கதிர்கள் செலுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவத்தில் X-கதிரைப் பயன்படுத்துவதால் வரும் நன்மை அதனால் வரும் ஆபத்தை விட அதிகமாக இருந்தால் மாத்திரமே அவை பயன்படுத்தப்படுகின்றன.

வலிமையான X-கதிர்களால் பொருட்களை ஊடுருவ முடியும். இப்பண்பே மருத்துவத் துறையில் X-கதிர்ப் படங்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையின் போதும் இத்தொழிற்பாடே பயன்படுத்தப்படுகின்றது. X-கதிர்கள் கட்புலனாகும் ஒளி, புற-ஊதாக் கதிர்களை விட மிகக் குறைவான அலை நீளமுடையவை. எனவே எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தும் நுணுக்குக்காட்டிகள் ஒளி நுணுக்குக் காட்டிகளை விட அதிக தெளிவுடையனவாக உள்ளன.



X-கதிர்கள் எலக்ட்ரான்களில் இருந்து உமிழப்பட்டாலும், அவை வெப்ப எதிர்மின்வாயினால் வெளியிடப்படும் எலக்ட்ரான்களை அதிக மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி வேகத்தினைக் கூட்டும் வெற்றிடக் குழாயகிய எக்ஸ்-கதிர்க் குழாயிலிருந்தும் தயாரிக்கப்படலாம். கதிர்க் குழாயின் எதிர்மின் (கேத்தோடு) வாயிலிருந்து எலக்ட்ரான்கள் குறைந்த அமுக்கமுடைய குழாயினுள் செலுத்தப்படுகின்றன. அதிவேகத்தில் செல்லும் எலக்ட்ரான்கள் உலோக இலக்காகிய நேர்மின்வாயுடன் (ஆனோட்டுடன்) மோதி X-கதிர்களை உருவாக்குகின்றன. மருத்துவத்துறையில் டங்க்ஸ்டன் அல்லது சிறிதளவு ரீனியம் கலக்கப்பட்ட டங்க்ஸ்டன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுலோகம் அதிக ஊடுருவும் ஆற்றலுடைய X-கதிர்களை உருவாக்குகின்றது. குறைந்த ஊடுருவும் ஆற்றலுடைய X-கதிர்கள் தேவைப்பட்டால் மொலிப்டினம் பயன்படுத்தப்படும். மேலும் ஆற்றல் குறைந்த கதிர்கள் தேவைப்பட்டால் செம்பு ஆனோட்டாகப் பயன்படுத்தப்படும். கேத்தோட்டின் மின்னழுத்த வேறுபாட்டிலேயே உருவாக்கப்படும் X-கதிர்களின் சக்தி தங்கியுள்ளது. உதாரணமாக 75 kV மின்னழுத்தம் உடைய கேத்தோட்டால் 75 keV சக்தியிலும் குறைவான சக்தியுடைய X-கதிரையே உருவாக்க முடியும்.

X-கதிர்கள் பிரதானமாக இரு குவாண்டம் முறைகளால் உருவாக்கப்படுகின்றன:

1. X-கதிர் உடனொளிர்வு- வேகமாக வரும் புற இலத்திரன்கள் உலோக அணுவின் எலக்ட்ரான்களோடு மோதி இவற்றின் வினையால் X-கதிர்கள் உருவாகின்றன. இத்தொழிற்பாட்டால் தோற்றுவிக்கப்படும் X-கதிர்களின் நிறமாலை பயன்படுத்தப்படும் உலோகத்துக்கேற்றபடி வேறுபடும்.



2. பிரம்ஸ்ட்ரிலங்க் - வலிமையான மின் புலம் காரணமாக அதிர்வடையும் எலக்ட்ரான்களிலிருந்து வெளியேற்றப்படும் எக்ஸ்-கதிர்களாகும். இத்தொழிற்பாடு தொடர்ச்சியான நிறமாலையைக் கொடுக்கும்.

X-கதிர்களைப் பெற பல்லாயிரக்கணக்கான வோல்ட்டு மின்னழுத்தம் தேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் மின்சாரமின்றி X-கதிர்கள் (X-rays without electricity) பெறுவதற்கு கதிர் ஐசோடோப்புகள் உதவுகிறன. X-கதிர் குழாயில் ஆற்றல் மிக்க எலக்ட்ரான்கள், டங்ஸ்டன் இலக்கை மோதும் நிலையில் X-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்ஸ்டன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது. 2010ல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் X-கதிர்கள் பயன்படுத்தப்பட்டன.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


வரலாற்றில் இன்று நவம்பர் 8

சர்வதேச கதிரியக்கவியல் தினம்

இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேச கதிரியக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவர் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்த தினத்தின் நினைவாக 2012ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வரலாற்றில் இன்று நவம்பர் 8

உலக கதிரியக்க நாள் - வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895).

உலக கதிரியக்க நாள் (International Day of Radiology) என்பது இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். X -கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின. வில்லெம் கோன்ராடு இராண்ஜன் (Wilhelm Conrad Rontgen ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895ல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் X-கதிர் (ஊடுகதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901ல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வில்லெம் இராண்ஜன் மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். 1865ல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869ல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. இராண்ஜனும் இவ்வாய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்கு எக்சு கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார்.

ரோண்ட்கென் மூலக் கட்டுரையான ஒரு புது வகை கதிர்கள் என்ற தலைப்பில் டிசம்பர் 28, 1895 அன்று வெளியிட்டார். ஜனவரி 5, 1896 இல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகை இராண்ஜன் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று இராண்ஜன் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார். இராண்ஜன் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை. மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார்.

X-கதிர்கள் (எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும். மின்காந்த புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.

X-கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும். இக்கதிர்கள் கேட்மியம் சல்பைடு (CdS), சிங்கேட்மியம் சல்பைடு (ZnCdS), போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் (Fluorescence) தோற்றுவிக்கின்றன. இப்பண்பே எக்சு கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


வீரமாமுனிவரின் இறப்பு :

வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்.

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச் சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணி புரிந்த பின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம்.

வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் “வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்” எனக் குறிப்பிடுகிறார்.

இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.
மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்து கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.
இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.
அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.
உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.
இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப் போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.
தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


வரலாற்றில் இன்று நவம்பர் 8

வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று

வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு!

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1742) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்

இந்தியாவில் :

இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில் :

கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம் சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.

அவரது தமிழக வாழ்க்கை முறை ;

1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்த நாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக் கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப் பாகையும், இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற்றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து :

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கை முறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் . முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார் :

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்று கூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவ போதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில் போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள் இயற்றியது, இவை போன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது.

பெயர் மாற்றம் :

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

தமிழ்ப் பணி :

இவர் தமிழகம் வந்த பின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; “சுவடி தேடும் சாமியார்” எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் – போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று “ர” சேர்த்தேழுதுவது வழக்கம். “ஆ” என எழுத “அர” என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி “ஆ, ஏ” என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
பிற தமிழ் படைப்புகள் :

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே என வேண்டும்.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். 1728-இல் புதுவையில் இவரின் “பரமார்த்த குருவின் கதை” என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் (Jean de la Fontaine 1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழி பெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம், விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.

வரலாற்றில் 🏹 இன்று

08 Nov, 04:17


வரலாற்றில் இன்று நவம்பர் 8

முகலாய மன்னர் ஜஹாங்கீர் பிறந்த தினம்!

நான்காவது பேரரசராக ஆட்சி செய்த அரசர் ஜஹாங்கீர் பிறந்த தினம் இன்று.

நூருத்தீன் சலீம் ஜஹாங்கிர் (முழுப்பெயர்: அல்-சுல்தான் அல்-'அசாம் வல் காகன் அல்-முக்கரம், குஷுரு-ஐ-கிட்டி பனாஹ், அபூ'ல்-ஃபாத் நூர்-உத்-தின் முகம்மது ஜஹாங்கிர் பாத்ஷா காஜி ஜன்னத்-மக்கானி ) (செப்டம்பர் 20, 1569 – நவம்பர் 8, 1627) (OS ஆகஸ்ட் 31, 1569 – NS நவம்பர் 8, 1627) 1605 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை முகலாயப் பேரரசராக இருந்தார். ஜஹாங்கிர் என்ற பெயர் பெர்சிய மொழியில் جہانگير இருந்து வந்ததாகும். இதற்கு "உலகத்தின் வெற்றியாளர்" எனப்பொருளாகும். நூர்-உத்-தின் அல்லது நூர் அல்-தின் என்பது அரேபியப் பெயராகும். இதற்கு "நம்பிக்கையின் ஒலி" எனப்பொருளாகும்.

ஜஹாங்கீர் என்றால் பெர்சிய மொழியில் “உலகத்தின் வெற்றியாளர்” என்று பொருள்
1615ஆம் ஆண்டில் சர்தாமஸ் ரோ சூரத் நகரில் வணிகம் செய்வதற்கு அனுமதி அளித்தார்
இவரது சுயசரிதை “துசுக்-இ-ஜஹாங்கிரி” அல்லது “ஜஹாங்கீர்நாமா” என்று அழைக்கப்பட்டது

டெல்லியை ஆட்சி புரிந்த கடைசி சுல்தானான இப்ராஹிம் லோடியை தோற்கடித்து முகலாய அரசை தோற்றுவித்தவர் துருக்கிய பாரசீகத் தலைவரான பாபர். ‘முகல்’ என்பது பாரசீகச் சொல் ஆகும். இதன் பொருள் ‘மங்கோலியர்’. இப்பேரரசை ’தைமூர் பேரரசு’ என்றும், ’இந்துஸ்தான்’ என்றும் அழைத்துள்ளனர். இப்பேரரசை ஒவ்வொருவரின் வாரிசும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அவ்வாறு ஆட்சி புரிந்ததில் நான்காவது பேரரசராக ஆட்சி செய்த அரசர் ஜஹாங்கீர் பிறந்த தினம் இன்று.

ஜஹாங்கீர், பாபரின் பேரரான அக்பருக்கும், ஜோதாபாய்க்கும் பிறந்த மகனாவார். இவர் 1569ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பிறந்தார். இவரின் முழுப்பெயர் நூருத்தீன் சலீம் ஜஹாங்கீர். ஜஹாங்கீர் என்றால் பெர்சிய மொழியில் “உலகத்தின் வெற்றியாளர்” என்று பொருள். அக்பருக்கு பிறந்த மகன்களில் உயிருடன் இருந்த மூத்த மகனாவார். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்கள் மன்பாவதீ பாய், இளவரசி மன்மதி மற்றும் நூர்ஜஹான் ஆவார்.

1605ஆம் ஆண்டு அரியணை ஏறினார் ஜஹாங்கீர். ஒரு சில மாதங்களில் இவரின் மூத்த மகனான குஸ்ரூ தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சியின் ஈடுபட்டார். குஸ்ரூக்கு 5ஆம் சீக்கிய குரு அர்ஜூன்தேவ் ஆதரவு அளித்தார். இதனை அறிந்தவுடன், குஸ்ரூவின் கண்கள் பறிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 5ஆம் சீக்கிய குருவும் கொல்லப்பட்டார். இவரின் ஆட்சியில் தான் வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ ஆங்கில வணிகக்குழு சார்பாக வருகை தந்தனர். 1615ஆம் ஆண்டில் சர்தாமஸ் ரோ சூரத் நகரில் வணிகம் செய்வதற்கு அனுமதி பெற்றார்.

இவரது சுயசரிதை “துசுக்-இ-ஜஹாங்கிரி” அல்லது “ஜஹாங்கீர்நாமா” என்று அழைக்கப்பட்டது. இவர் நீதித்துறையில் ’நீதிச் சங்கிலி மணி’ என்ற முறையை உருவாக்கினார். இந்த மணியானது ‘ஷபர்ஜ்’ அரண்மனையில் இருந்து யமுனை ஆற்றங்கரை வரை கட்டப்பட்டது. ஷெர் ஆப்கன், மெகருன்னிஷா என்பவரை மணந்திருப்பார். இவர் மிர்சா கியாஸ் பெக்கின் என்பவரின் மகளாவார். ஷெர் ஆப்கன் மறைவிற்கு பிறகு மெகருன்னிஷாவை ஜஹாங்கீர் ஏற்றுக்கொண்டு 1611ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு இவர் பெயர் ’நூர்ஜஹான்’ என்று மாற்றப்பட்டது. நூர்ஜஹான் என்றால் ‘உலகின் ஒலி’ என்று பொருள். இதற்கு முன்பு ’நூர்மஹால்’ (அரண்மனையின் ஒலி) என்று அழைக்கப்பட்டார். இவர்களிடம் அதிகாரம் முழுவதும் கொடுக்கப்பட்டது. இவர் 1645ஆம் ஆண்டில் காலமானார். 1611 – 1626ஆம் ஆண்டு வரை நூர்ஜஹானின் காலம் என்று வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

ஜஹாங்கீர், ஸ்ரீநகரில் ’ஷாலிமர் மற்றும் நிஷாத்’ என்ற பூந்தோட்டத்தை உருவாக்கினார். மேலும் சிக்கந்தராவில் தன் தந்தையான அக்பரின் கல்லறையை கட்டினார். ஆக்ராவில் நூர்ஜஹானின் தந்தைக்கு இதி-மத்-தௌலா என்று கல்லறை எழுப்பினார். லாகூரில் பெரிய மசூதி ஒன்றையும் கட்டியுள்ளார்.

இவரின் உடல்நிலை அதிகமான மதுப்பழக்கத்தால் சீரிழந்தது. இதனால் 1627ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். இவரின் உடல் பஞ்சாப்பில் உள்ள ஷாதராவில் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் சமாதி ஒன்றும் இவரின் மகனான ஷாஜஹானால் எழுப்பப்பட்டுள்ளது.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:07


வரலாற்றில் இன்று நவம்பர் 6

அடோல்ப் சக்ஸ் பிறந்தநாள் நவம்பர் 6

அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார்.

அடோல்ப் சக்ஸ்

பிறப்பு
6 நவம்பர் 1814
Dinant
இறப்பு
4 பெப்ரவரி 1894, 7 பெப்ரவரி 1894 (அகவை 79)
பாரிஸ்
படித்த இடங்கள்
Royal Conservatory of Brussels
பணி
Musical instrument maker, புத்தாக்குனர், இசைக் கலைஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
Conservatoire national supérieur de musique et de danse
விருதுகள்
Knight of the Legion of Honour

இளம் வாழ்க்கை

அந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் தம்பதியருக்குப் பிறந்தார். இவரது பெயர் 'அந்தோணி' என்றிருப்பதால் சிறுவயதில் 'அடோல்ப்' என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர் இhjhgjgjgjgjgjgjgjvfhgfவருவருமே இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். 'அடோல்ப்' அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:07


வரலாற்றில் இன்று நவம்பர் 6

சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்:

சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் நவம்பர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள் தண்ணீர் விஷமாதல் காடுகள் எரிதல் காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா.சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:07


வரலாற்றில் இன்று நவம்பர் 6

புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்ட நாள், 1944 , நவம்பர் 06

புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது (நவ.6 -1944)
1940-ம் ஆண்டில் பெர்கெலி, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' உதவியின் மூலம் புளூடோனியத்தை உருவாக்கினார்.

யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி புளூட்டோனியம் உருவாக்கப்படுகிறது. புளூடோனியத்தின் அணு எண் 94 ஆகும். 1940-ம் ஆண்டில் பெர்கெலி, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' உதவியின் மூலம் புளூடோனியத்தை உருவாக்கினார். புளூடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, ஜப்பானை ஒடுக்க ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி இரண்டு அணு குண்டுகளை வீச முடிவு செய்தது. இதற்கு பயன்படுத்த புளூட்டோனியத்தை 1944-ம் ஆண்டு நவ.6-ந்தேதி அமெரிக்கா உருவாக்கியது.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:06


வரலாற்றில் இன்று நவம்பர் 6

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் - நவம்பர் - 6- 1860

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள். குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இவர்.

அடிமைத்தனத்தையும் இனவெறிக் கொடுமையையும் தனது நேர்மையான செயல்பாடுகளாலும் நெஞ்சுரத்தாலும் ஒழித்துக்கட்டிய வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று

# அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின் என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் (1809). தந்தை செருப்பு தைத்தல், தச்சுத் தொழில், உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

# சிறிய வயதில் இந்தச் சிறுவன் புத்தகங்களை சத்தமாக வாசிப்பதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிசயப்படுவார்கள். பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் யாரிடமாவது ஏதாவது புத்தகம் இருந்தால், எப்படியாவது கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து படித்து முடித்துவிடுவான், சிறுவன்.

# ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்றார். அந்த ஆசிரியர் தேர்வு நாளன்று ஒரு புத்தகத்தைக் கொடுத்து சில பக்கங்களை வாசிக்கச் சொன்னார். இந்தச் சிறுவனைவிட வயதில் மூத்த பையன்கள் வாசிக்க முடியாமல் திணறினார்கள். ஆபிரகாமோ மேடையில் சொற்பொழிவாற்றுவது போல கட கடவென வாசித்துக் காட்டினான்.

# கரித்துண்டால் சுவரிலும் தரையிலும் எழுதிப் பழகினான். கட்டுரைகள் எழுதினான். குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்தான். 14 வயதில் ஒரு விவசாயியிடமிருந்த ‘தி லைஃப் ஆஃப் வாஷிங்டன்’ என்ற ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வாங்குவதற்காக 12 மைல் தூரம் நடந்து சென்றான். இந்த நூலை திரும்பத் திரும்ப படித்தான்.

# நேர்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுதல் ஆகிய குணாம்சங்களைக் கொண்டிருந்தான். நியு ஆர்லியன்சில் இவர்கள் வசித்தபோது, கறுப்பினத்தவர் விலைக்கு வாங்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும், சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு மனவேதனை அடைந்தார்.

# இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டபோது இவருக்கு வயது 15. தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது.

# அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அரசியலின் முதல் அஸ்திரமான பேச்சாற்றல் இவருக்கு கைவந்த கலை. ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்த பல தோல்விகளை அடுத்து, 25-வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

# அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். இது மற்றவர்களிட மிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது. 1860-ல் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863-ல் வெளியிட்டார்.

# இதை எதிர்த்தும் ஆதரித்தும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. 4 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசியது ‘கெஸ்டிஸ்பர்க் உரை’ என்று உலகப்புகழ் பெற்றுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 1864-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

# 1865-ம் ஆண்டு புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் பார்க்கச் சென்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள், ஏப்ரல் 15-ல் மரணமடைந்தார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், மனித குல வரலாற்றில் ஈடிணையற்ற சகாப்தமாக விளங்கிய லிங்கன் உயிரிழந்தபோது அவருக்கு வயது 56.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:06


வரலாற்றில் இன்று நவம்பர் 6

ஜேம்ஸ் நெய்ஸ்மித் பிறந்தநாள் நவம்பர் 6

டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.

கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.

இவர் கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ஆம் ஆண்டு இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்;. இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

இவர் 1891ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு கொண்டுவரப்பட்டது.

1898ஆம் ஆண்டு நெய்ஸ்மித், கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், முதல் கூடைப்பந்து பயிற்றுனராகவும் பணியாற்றினார். இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி தனது 78வது வயதில் மறைந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:05


வரலாற்றில் இன்று நவம்பர் - 6

புல்லாங்குழல் இசைக்கலைஞர் .டி .ஆர் .மகாலிங்கம் பிறந்தநாள்

கருநாடக இசைத் துறையில் *மாலி* என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் திருவிடைமருதூர் ராமசாமி மகாலிங்கம் அவர்கள், ராமசாமி அய்யருக்கும் பிரகதாம்பாள் அம்மையாருக்கு மகனாக நவம்பர் 6, 1926ஆம் ஆண்டு பிறந்தார்.டி ஆர் மகாலிங்கம். தனது தாய் மாமன் கோபாலய்யரிடம் முறையாக இசை கற்கத் தொடங்கினார். தனது ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசிக்க துவங்கினார். நாளடைவில் கேட்கும் அனைத்து பாடல்களையும் புல்லாங்குழல் வாசிக்கும் திறன் பெற்றார் .தனது ஏழாம் வயதில் முதல் கச்சேரியை மயிலாப்பூரில் தியாகராஜர் திருவிழாவில் 1933ம் ஆண்டு அரங்கேற்றினார்.புகழ்வாய்ந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை உமையாள்புரம் கோதண்டராமன் பழனி சுப்பிரமணிய பிள்ளை மைசூர் சௌடையா பாப்பா, வெங்கட்ராமன், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை ,வேலூர் ராமபத்ரன், பாலக்காடு மணி ஐயர், ருக்மணி, துவாரம் டி என் கிருஷ்ணன், மங ஆகியோருக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில் நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தியவர் டி ஆர் மகாலிங்கம் அவர்கள் ஒன்றிணைந்த விட்டுவிட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்தது அந்த புல்லாங்குழல் வாய்ப்பாட்டு பகுதியாக மாறியது.வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார். '1986 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது இவருக்கு வழங்கியது அவ்விருதினை அவர் பெற்றுக் கொள்ளவில்லை.இசைத்துறையில் புகழின் உச்சிக்கு சென்ற டி. ஆர். மகாலிங்கம் அவர்கள் 1986 மே 31 ஆம் தேதி காலமானார்.இசையின் மூலமாக தமிழ் வளர்த்த டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் பணியை போற்றுவோம்...

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:05


வரலாற்றில் இன்று நவம்பர் 6-1947

தொலைக்காட்சி வரலாற்றில் மிகநீண்டகாலமாக(72 ஆண்டுகளாக) ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியான 'மீட் த ப்ரஸ்' முதன்முறையாக ஒளிபரப்பான நாள் நவம்பர் 6.

தொலைக்காட்சி நிலையத்திற்கு முக்கிய மனிதர்களை அழைத்து நடத்தப்படும் 'காஃபி வித்...' போன்ற நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள், செய்தியறிக்கையின்போது முக்கியச் செய்திக்குத் தொடர்புடையவர்களை அழைத்து கருத்துக் கேட்பது உள்ளிட்ட இன்றைய பல நிகழ்ச்சிகளுக்கு இதுவே முன்னோடி என்று கூறமுடியும். என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இது உண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியாகும். (நேஷனல் ப்ராட்காஸ்ட்டிங் கம்ப்பெனி என்னும் என்பிசி என்பது நமக்கு அறிமுகமான சிஎன்பிசி-யின் தாய் நிறுவனம்! சிஎன்பிசி என்பது கன்ஸ்யூமர் நியூஸ் அண்ட் பிசினஸ் சேனல் என்பதன் சுருக்கம்!) த அமெரிக்கன் மெர்க்குரி என்ற இதழை 1935இல் வாங்கிய லாரன்ஸ் ஸ்பைவேக் என்பவர், அதன் விற்பனையை மேம்படுத்துவதற்காக, 'அமெரிக்கன் மெர்க்குரி ப்ரசண்ட்ஸ்: மீட் த ப்ரஸ்' என்ற நிகழ்ச்சியை, ம்யூச்சுவல் ப்ராட்காஸ்ட்டிங் சிஸ்ட்டம் என்ற வானொலியில் 1945இலிருந்து ஒலிபரப்பிவந்தார். அதனால் இந்நிகழ்ச்சியை உருவாக்கியவராக அவர் குறிப்பிடப்பட்டாலும், உண்மையில், அந்த வானொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மார்த்தா ரவுண்ட்ரீ என்ற பெண்மணியே இந்நிகழ்ச்சியை வடிவமைத்தார். வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தபோதே, 1947இல் இந்நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி உரிமையை ஜெனரல் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் வாங்கி, 'மீட் த ப்ரஸ்' என்று பெயரைச் சுருக்கி, என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து, வானொலி நிலையம், தங்கள் நிகழ்ச்சிக்கு வேறு பெயர் சூட்டிக்கொண்டது. தொடக்கத்தில் 30 நிமிட பேட்டியாக இருந்த இந்நிகழ்ச்சிக்கு முதல் அழைப்பாளராக, முன்னாள் போஸ்ட் மாஸ்ட்டர் ஜெனரலும், குடியரசுத்தலைவர் ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் பரப்புரை மேலாளருமான ஜெம்ஸ் ஃபேர்லி அழைக்கப்பட்டார். அடிப்படையில், ஒருவரை மட்டும் பேட்டிகாணும் நிகழ்ச்சியான இதில், பின்னாளில் இருவர் அல்லது, பலரின் நேரடி விவாதங்களும் இடம்பெற்றன. 1980களில், பிற தொலைக்காட்சிகளின் இத்தகைய நிகழ்ச்சிகளின்(குறிப்பாக ஏபிசி தொiலைக்காட்சியின் திஸ் வீக் வித் டேவிட் ப்ரிங்க்லி) போட்டியால் பாதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, அதுவரை ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்திலிருந்து, காலை 9 மணிக்கு மாற்றப்பட்டதுடன், 1992இல் 60 நிமிடங்களாவும் நீட்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் குடியரசுத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் அனைவரும் ஒருமுறையாவது இந்நிகழ்ச்சியில் தோன்றிவிடுவார்கள் எனுமளவுக்கு முக்கித்துவத்துடன், இன்றுவரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:05


வரலாற்றில் இன்று நவம்பர் 6

நெற்கட்டாஞ் செவ்வல் கோட்டையை கும்பினியர்களின்
யூசுப்கான் (மருதநாயகம்) படைகளின் தாக்குதலிலிருந்து பாளையக்காரர் பூலித்தேவர் போரிட்டு காத்த தினம்.
(06 நவம்பர் 1759)

நெல்கட்டாஞ் செவல்லை ஆட்சி செய்த பூலித்தேவர் என்றழைக்கப்படும் "காத்தப்ப பூலித்தேவர்" ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலாக போர் தொடுத்தவர்.

கடந்த 1998ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியால் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் நெல்கட்டும் செவலில் பூலித்தேவரின் நினைவு மண்டபமும், பூலித்தேவரின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

கும்பினியர் என்பது ஆங்கிலேயக் கம்பெனிக்காரர்கள் என்பதன் சுருக்கமாகும்.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:05


வரலாற்றில் இன்று நவம்பர்.6

நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்த ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் பிறந்த தினம் இன்று.

ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை ஒரு நாடக நடிகர். மூனிச் நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்வி உதவித் தொகை பெற்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1791ல் அப்பா காலமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிகரானார். நாடகங்களையும் எழுதினார்.

இவர் எழுதிய பல நாடகங்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றன. தான் எழுதிய இரு நாடகங்களின் கையெழுத் துப் பிரதியை எடுத்துக்கொண்டுபோய் ஒரு அச்சகத்தில் கொடுத்தார். அவர்கள் சொன்ன தேதியில் அச்சடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

ஒரு அச்சகத்தில் சேர்ந்து அச்சுக்கலையைக் கற்றார். ஒரு சிறிய அச்சகத்தை விலைக்கு வாங்கினார். தான் எழுதிய நாடகங்களை தானே பிரின்ட் செய்து வெளியிடலாம் என்று விரும்பினார். பிரின்டிங் ப்ளேட்டுகளில் பிரின்ட் செய்வது மிகவும் செலவு பிடிப்பதாக இருந்தது. அதைத் தானாகவே செய்ய முயற்சி செய்தார்.

ஒருநாள் சுண்ணாம்பு பலகை ஒன்றை பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளுப்பவருக்கு கொடுக்க வேண்டிய துணிகளின் பட்டியலை அம்மா எழுதச் சொன்னார். கையில் காகிதம் கிடைக்கவில்லை என்பதால், ஒரு கிரீஸ் பென்சிலால் பலகையில் எழுதி னார். பிறகு அதில் ஆசிட் ஊற்றியபோது எழுதாத பகுதி கரைந்து, எழுதிய பகுதிகள் சற்றே மேடாக எழும்பி நின்றன. அதில் மையை ஊற்றி திருப்திகரமாக பிரின்ட் செய்ய முடிந்தது.

சுண்ணாம்புக்கல் பலகை, மையை இயந்திரம் மூலம் எடுத்துக்கொள்ளாமல், ரசாயன ரீதியில் எடுத்துக் கொள்ளும்படி வடிவமைக்க விரும்பினார். பின் மெல்ல மெல்ல சம தளத்தில் பிரின்டிங் செய்யும் நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்தார்.ஆரம்பத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள நில அளவை அலுவலகங்களில் லித்தோகிராபி அறிமுகப்படுத்தப்பட்டு, பிரபலமடைந்தது.

இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து 1796ல் லித்தோ கிராபி முறையில் அச்சிடும் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது மேற்பார்வையில் மூனிச், பெர் லின், பாரிஸ், லண்டன், வியன்னா ஆகிய இடங்களில் லித்தோகிராபி பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அலோய்ஸ் ‘தி இன்வென்ஷன் ஆஃப் லித்தோகிராஃபி’ என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை, இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டது, இதைத் திறனுள்ள வகையில் எப்படி பயன்படுத்துவது என்பன பற்றி எல்லாம் விரிவாக, விளக்கியுள்ளார்.

இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, அந்த நாட்டு மன்னர், ஸோல்ஹோஃபென் என்ற இடத்தில் இவரது உருவச்சிலையை நிறுவி கவுரவித்தார். இவருக்கு பென்ஷன் தொகையையும் அவர் வழங்கினார்.

கிரேக்க மொழியில் லித்தோகிராஃபி என்றால் கல் அச்சு என்று பொருள். 1834ல் இவர் இறப்பதற்கு முன்பாகவே, படங்கள், இசை வடிவங்கள் ஆகியவற்றைப் புத்தகங் களில் அச்சிடுவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் முறையாக இந்த லித்தோகிரஃபி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.

அச்சுத் துறைக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இந்த அச்சுக்கலை புரட்சி நாயகன், 63-ஆவது வயதில் காலமானார்.

வரலாற்றில் 🏹 இன்று

06 Nov, 02:04


வரலாற்றில் இன்று நவம்பர் 6

1936 - எஃப்எம் ரேடியோ பயன்பாட்டுக்கு வந்ததற்குக் காரணமான ஆய்வறிக்கையை, எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், நியூயார்க்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரேடியோ என்ஜினியர்ஸ் என்ற அமைப்பில் சமர்ப்பித்த நாள்

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஏஎம் ரேடியோ வீச்சுப் பண்பேற்றம் (Amplitude Modulation) என்ற முறையில் செயல்பட்டு வந்தது. இதன் ஒளிபரப்பில், இடி முதலானவற்றால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பது குறித்து ஏராளமானவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர். 1922இல் ஜான் ரென்ஷா கார்சன் என்பவர் தன் ஆய்வறிக்கையில், எஃப்எம் குறித்த தன் ஆய்வுகளைக் குறிப்பிட்டு, அது ஏஎம் ஒலிபரப்பைவிட எவ்விதத்திலும் மேம்பட்டதாக இருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். அவர் ஆய்வில் பயன்படுத்தியது குறுகிய அலை எஃப்எம் ஆகும். ஆனாலும், எஃப்எம் ஒலிபரப்பில் கார்சன் அலைவரிசை விதி முக்கியமான ஒன்றாக இன்றும் விளங்குகிறது. எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், அகண்ட அலை அதிர்வெண் பண்பேற்றம் (Frequency Modulation) என்ற எஃப்எம் ஒலிபரப்பு முறையைக் கண்டுபிடித்தார். 1933இலேயே இதை இவர் கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றுவிட்டாலும், இது நடைமுறையில் சாத்தியமற்றது என்ற கருத்து நிலவி வந்தது. மே 1934 முதல் அக்டோபர் 1935 வரை, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 85ஆவது மாடியிலிருந்து இவர் மேற்கொண்ட ஆய்வுகளில், 130 கிமீ தூரத்துக்கு எஃப்எம் ஒலிபரப்பு சென்றடைந்தது. ஆனாலும், இவருக்கு நிதி உதவி செய்து வந்த ரேடியோ கார்ப்பரேசன் ஆஃப் அமெரிக்கா நிறுவனம், தொலைக்காட்சிக்கு முன்னுரிமை அளித்து, இவரது ஆய்வுகளை நிறுத்தச் சொல்லிவிட்டது. (1940இல் இதே நிறுவனம் இவரது எஃப்எம் காப்புரிமைக்கு 10 லட்சம் டாலர் தருவதாகக் கேட்டதும், அதை ஆர்ம்ஸ்ட்ராங் மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.) இந்த நிலையிலேயே, இன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை எஃப்எம் ரேடியோவின் மேம்பட்ட தன்மையை விளக்கி, பயன்பாட்டைத் துவக்கி வைத்தது. இதைத் தொடர்ந்து 1937 ஜனவரி 1இலேயே தொடர் எஃப்எம் ரேடியோ ஒலிபரப்பு துவங்கிவிட்டது.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:43


வரலாற்றில் இன்று நவம்பர் 1

உலக சைவ தினம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந்தேதி உலக சைவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்கள் உலக சைவ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த சைவ தினம், இறைச்சி, முட்டை அல்லது பிற விலங்கு பொருட்களை மட்டும் தவிர்க்கும் சைவர்களுக்கு (Vegetarian) இல்லை. பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களையும் தவிர்த்து முழு பச்சை உணவை மட்டும் சாப்பிடும் சைவர்களுக்கானது (Vegan).

1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட சைவ சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா 1994-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இங்கிலாந்தில் வைத்து நடந்தது. இந்த பொன்விழாவைக் குறிக்கும் வகையிலேயே நவம்பர் 1-ந்தேதி உலக சைவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சைவ உணவினை எடுத்துக்கொள்வதால் மேம்படும் ஆரோக்கியம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை மேம்படுத்தவும் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைவ உணவு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் புரிந்துகொள்ளும் போது சைவ உணவை பின்பற்ற அது உதவியாக இருக்கும்.

உலக சைவ தினம் சிறிய அளவிலான திருவிழாக்கள், சமையல் திருவிழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் என உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சைவ வாழ்க்கை முறை மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, விலங்குகளின் வாழ்வைப் பாதுகாக்கிறது மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:43


வரலாற்றில் இன்று நவம்பர் 1

வரலாற்றில் இன்று – 01.11.2020 ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த நாள் நவம்பர் 1

கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் (Alfred Wegener) 1880ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிறந்தார்.

இவர் வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டினார். துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகாலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார்.

கண்டங்களின் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் ‘கண்டப் பெயர்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டது. தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915ஆம் ஆண்டு வெளியிட்டார். கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார்.

வாழ்நாளின் இறுதிக்காலம் வரை பல கோட்பாடுகளை கண்டறிந்த இவர் 1930ஆம் ஆண்டு மறைந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:42


வரலாற்றில் இன்று நவம்பர் 1,

எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் பிறந்த தினம் இன்று.

நரேந்திர தபோல்கர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார்.

கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா தபோல்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.

இவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார். காலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமியார்களையும் தந்திரக்காரர்களையும் இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மராத்தி இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.
20 ஆகத்து 2013 அன்று, தபோல்கர் தனது காலை நடைக்கா வெளியே சென்று இருந்தார். அப்பொழுது ஒரு அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் Omkareshwar கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் சுட்டுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.
மூட
நம்பிக்கைக்கெதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கரின் மகளும் தன் தந்தையின் மரணத்திற்குப் பின் பல மடங்கு வீரியத்துடன் மூடநம்பிக்கைகு எதிராய் மும்பையில் போராடி வரும் முக்தா தபோல்கர்
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.

எந்த மூடநம்பிக்கைக்கெதிராய் 25 ஆண்டு காலம் போராடி என் தந்தை உயிரிழந்தாரோ அந்த மூடநம்பிக்கைக் கெதிரான சட்டம் அவரது படுகொலைக்குப் பின்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டம் வந்த பின் சாதி மதம் சார்ந்த 300 வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கெதிரான போராட்டங்களை அனைவரும் முன்னெடுப்போம் என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், பெற்ற சிசுவையே பலி கொடுக்குமளவுக்கு மூடநம்பிக்கை பழக்கங்கள் இன்னமும்கூட நீடிக்கின்றன. ஏவல் , பில்லி, சூனியம் உள்ளிட்ட பகுத்தறிவுக்கு சவால்விடும் சமாச்சாரங்களை எதிர்த்து அங்கேயும் ஒரு பெரியார் குரல் கொடுத்தார். அவர்தான் நரேந்திர தபோல்கர்.

மூடநம்பிக்கைகளை வேரறுக்க கடுமையான சட்டம் தேவை என தபோல்கர் 15 ஆண்டுகளாக போராடினார். அவர் காலத்தில் அது நடக்கவில்லை. அவரது படுகொலைக்குப் பிறகு அத்தகையச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அவசரச் சட்டம், பில்லி சூனியம், நரபலி மற்றும் பிற மனிதநேயமற்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 768 பேர் மூடநம்பிக்கைகளுக்கு தங்களின் இன்னுயிரை இழந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு கள ஆய்வு!.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:42


வரலாற்றில் இன்று.நவம்பர். 1

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரும் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை முறையை மேம்படுத்தியவருமான ஜான் ஜோலி (John Joly) பிறந்த தினம் இன்று.

* அயர்லாந்தின் பிராக்நாக் மாவட்டத்தில் பிறந்தார் (1857). தந்தை, மதகுரு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் டப்ளினுக்கு இடம் பெயர்ந்தது. ராத்மைன்ஸ் பள்ளியில் பயின்றார். அப்போதே சோதனைக் கூட சாதனங்கள், கருவிகளை பழுதுநீக்குவதில் வல்லவராக இருந்தார். 1875-ல் டப்ளினில் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.

* பொறியியல், சோதனை இயற்பியல், கனிமவியல், வேதியியல் பாடங்கள் பயின்று 1882-ல் பட்டம் பெற்றார். அதே சமயத்தில் நவீன இலக்கியத்திலும் முதல் வகுப்பில் தேறினார். மாணவப் பருவத்திலேயே 1881-ல் ராயல் டப்ளின் சொசைட்டியில் இணைந்தார். அப்போது ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதி வந்தார்.

* தன் நண்பர் ஹென்றி டிக்சனுடன் இணைந்து ஒட்டும்தன்மை-இழுவிசை (cohesion-tension) கோட்பாடு குறித்து விளக்கினார். இதன் மூலம், மரம், செடிகளில் வேரிலிருந்து திரவம், கனிமங்கள் ஏறிச் செல்வதை (ascent of sap) குறித்து முதல் முறையாக விளக்கினார். டிரினிட்டி கல்லூரியில் ஆசிரியராகவும் ஆராய்ச்சிப் பொறியாளர் ஒருவரின் உதவியாளராகவும் சேர்ந்தார்.

* தனியாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒளியின் அடர்த்தியைக் கண்டறியும் ஃபோட்டோமீட்டர் என்ற கருவி, கனிமங்களின் உருகுநிலையைக் கணக்கிடும் மெல்டோமீட்டர் சாதனம், கனிமங்களின் குறிப்பிட்ட வெப்பநிலையை அளவிடும் கலோரிமீட்டர் ஆகியவற்றை கண்டுபிடித்து தமது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்.

* ட்ரினிட்டி கல்லூரியில் 1897-ல் புவி அமைப்பியல் மற்றும் கனிமப் பொருளியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இயற்கை வண்ணங்களில் போட்டோகிராபிக் இமேஜ்களை உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார். இது ‘ஜோலி பிராசஸ் ஆஃப் கலர் ஃபோட்டோகிராஃபி’ எனக் குறிப்பிடப்பட்டது. 1899-ல் ‘பூமியின் புவியியல் வயது குறித்த தனது புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரையை ராயல் டப்ளின் சொசைட்டியில் சமர்ப்பித்தார்.

* கடல் நீரில் உள்ள சோடியம் உப்பின் அடிப்படையில் பூமியின் வயதைக் கண்டறியலாம் என்று இதில் கூறியுள்ளார். பின்னர் இது துல்லியமானது இல்லை எனக் கருதப்பட்டாலும் இதைப் போன்ற ஆராய்ச்சிகளின் போக்கை சீரமைத்தது. ‘பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மன்ட் ஆஃப் சயின்ஸ்’ அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். ராயல் டப்ளின் சொசைட்டியில் டாக்டர் வால்டர் ஸ்டீவன்சனுடன் இணைந்து ரேடியம் இன்ஸ்டிடியூட்டை தொடங்கினார்.

* கதிரியக்கத்தைப் பிரித்தெடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு அதைப் பயன்படுத்தும் கதிரியக்க தெரபி முறையைக் கண்டறிந்தார். இதற்காக ஆழமாக-வேரூன்றிய தேடியோதெரபிக்காக உள்ளீடற்ற ஊசியைக் கண்டறிந்தார். இந்த சிகிச்சை முறை ‘டப்ளின் மெத்தட்’ என்று குறிப்பிடப்பட்டது. இது பின்னர் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது.

* ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனிமங்களில் காணப்படும் கதிரியக்க அம்சங்களைக் கொண்டு, புவியியல் காலகட்டத்தைக் கணக்கிடும் முறையையும் வகுத்தார். 1903-ல் இது தொடர்பாக மற்றொரு கட்டுரையை வெளியிட்டார்.

* ஏறக்குறைய 300 கட்டுரைகளையும் ‘ஆன் தி ஸ்பெசிஃபிக் ஹீட்ஸ் ஆஃப் காசஸ் அட் கான்ஸ்டன்ட் வால்யூம்’, ‘தி பர்த் டைம் ஆஃப் தி வேல்ட் அன்ட் அதர் சயின்டிஃபிக் எஸேஸ்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். பாய்லி பதக்கம், ராயல் சொசைட்டியின் ராயல் பதக்கம், லண்டன் ஜியாலஜிகல் சொசைட்டியின் மர்ச்சிசன் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றார்.

* அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மிச்சிகன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. ஜான் ஜோலி, 1933 டிசம்பர் 8ஆம் தேதி தமது 76ஆவது வயதில் காலமானார்.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:42


வரலாற்றில் இன்று நவம்பர் 1

பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கான மாற்று அண்டத்தின் நிலைத்த, நிலை கோட்பாட்டைக் கண்டுபிடித்த சர் எர்மன் போண்டி பிறந்த தினம் இன்று (நவம்பர் 1, 1919).

சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) நவம்பர் 1, 1919ல் வியன்னா, ஆஸ்திரியாவில் ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியைப் வியன்னாவில் பெற்றுள்ளார். இவர் இளமையிலேயே கணிதத்தில் வல்லமை பெற்றிருந்துள்ளார். ஆபிரகாம் பிரேங்க்லால் ஆர்த்தர் எடிங்டனுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிரேங்கல் இவருக்குச் சற்றே விலகிய சுற்றத்தினர். மேலும் போண்டியின் சுற்ற வலயத்தில் இவர் ஒருவரே கணிதவியலாளராக இருந்தவர். இவர்து தாயார் தன் இளைய மகனை பிரேங்கலுக்கு அறிமுகப்படுத்துவதில் அரிய பங்காற்றியுள்ளார். இது இவருக்கு சொந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் கணிதவியல் தடத்தில் செல்லவும் உதவும் என இவரது தாயார் எண்ணினார். எடிங்டன், போண்டி இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் கணிதம் பயில ஆர்வம் ஊட்டினார். எனவே இவர் 1937ல் கேம்பிரிட்ஜ் வந்துள்ளார். இது இவருக்கு ஆத்திரியச் செமித்திய எதிர்ப்பில் இருந்து தப்பிக்க உதவியுள்ளது. 1938ல் தம் பெற்றோரின் அவலமான கதியறிந்த இவர் அவர்களை உடனே ஆத்திரியாவை விட்டு கிளம்பும்படி தொலைவரிச் செய்தி அனுப்பியுள்ளார். அதன்படி, அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்து பின் நியூயார்க்கில் வாழத் தொடங்கியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் கனடாவில் உள்ள ஐல் ஆப் மேன் தீவில் அகதியாகச் சென்றார். இவருடன் அங்கே அகதியாகத் தாமசு கோல்டும் மேக்சு பெருட்சும் இருந்துள்ளனர். போண்டியும் கோல்டும் 1941ல் விடுவிக்கப்பட்டு, ஆயிலுடன் இராடாரில் அரசு ஆட்சிக் குறிகை நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர் 1946ல் பிரித்தானியக் குடிமகன் ஆனார். போண்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945 முதல் 1954 வரை கணிதவியல் விரிவுரையாளராகப் பணியாற்ரினார். இவர் டிரினிடியின் ஆய்வுறுப்பினராக 1943-9, 1952-4 ஆகிய ஆண்டுகளில் இருந்தார். போண்டி 1948ல் பிரெடு ஆயில், தாமசு கோல்டு ஆகியோருடன் இணைந்து அண்ட்டத்தின் நிலைத்தநிலைக் கோட்பாட்டை உருவாக்கினார். இக்கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும் அதேநேரத்தில் புதிய விண்மீன்களையும் பால்வெளிகளையும் உருவாக்க தொடர்ந்து நிலையான அடர்த்தியைப் பேண, பொருண்மமும் உருவாகிறது.

அண்மையில் பெருவெடிப்புக் கோட்பாட்டின்படியான அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சுப் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டதால் இக்கோட்பாடு சற்றே பின்வாங்கியுள்ளது. ஈர்ப்புக்க் கதிர்வீச்சின் தன்மையைச் சரியாக உணர்ந்தவர்களில் போண்டியும் ஒருவராவார். இவர் போண்டி கதிர்வீச்சு ஆயங்களையும், போண்டி K கலனத்தையும். போண்டி பொருண்மை விளக்கங்களையும், போண்டி செய்தியையும் அறிமுகப்படுத்தினார். சார்பியல் குறித்துப் பல மீள்பார்வைக் கட்டுரைகளையும் எழுதினார். போண்டி விவாதத்தை மக்களிடையே பரப்பினார். இது ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த்து. இதன்படி, பொது சார்பியல் கோட்பாடு பொருள்பொதிந்த புறநிலையாக நிலவும் ஈர்ப்புக் கதிர்வீச்சை முன்கணித்தது. இந்த உறுதிப்பாடு 1955 வரை விவாத்த்திலேயே இருந்தது. 1947ல் ஒரு ஆய்வுக் கட்டுறை இலெமைத்ரே-டோல்மன் பதின்வெளியில் ஆர்வத்தைப் புத்துயிர்ப்புறச் செய்தது. இது இலெமைத்ரே-டோல்மந்போண்டி பதின்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வெளி ஒருபடித்தற்ற கோலச் சீரொருமை வாய்ந்த்தூசுத் தீர்வாகும்.

போண்டி மேலும் வளிம முகிலில் இருந்து விண்மீன் அல்லது கருந்துளை உருவாகும் அகந்திரளுதல் கோட்பாட்டிற்கும் இரேம்மண்டு இலிட்டில்டனுடன் இணைந்து பங்களிப்பு செய்துள்ளார். இதற்கு போண்டி அகந்திரளுதல் கோட்பாடு அல்லது போண்டி ஆரக் கோட்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. 1954ல் இலண்டன் கிங்சு கல்லூரியில் பேராசிரியரானார். மேலும் 1985ல் தகைமைப் பேராசிரியராகவும் அழைக்கப்பட்டார். இவர் 1956 முதல் 1964 வரை அரசு வானியல் கழகத்தின் செயலராக இருந்துள்ளார். இவர் வாழ்நாள் முழுவதும் சிறந்த மாந்தநேயராக விளங்கினார். இவர் 1982 முதல் 1999 வரை பிரித்தானிய மாந்தநேயக் கழகத்தின் தலைவராகவும் விளங்கினார். இவர் 1982ல் இருந்து பகுத்தறிவு ஊடகக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மாந்தநேயக் கொள்கை அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

போண்டி பிரெடு ஆயிலுடனும் தாமசு கோல்டுடனும் இணைந்து அண்டத்தின் நிலைத்த நிலை கோட்பாட்டைக் கண்டுபிடித்தமைக்காகப் பெயர்பெற்றவர். இது பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கான மாற்றுக் கோட்பாடு ஆகும். இவர் பொது சார்பியல் கோட்பாட்டுக்குப் பங்களிப்பு செய்துள்ளார். அண்டத்தின் நிலைத்த, நிலை கோட்பாட்டைக் கண்டுபிடித்த சர் எர்மன் போண்டி செப்டம்பர் 10, 2005ல் தனது 85வது அகவையில் இங்கிலாந்து, கேம்பிரிச்ஜில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:41


வரலாற்றில் இன்று நவம்பர் 1

இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்
ஆ. வேலுப்பிள்ளை இறந்த தினம்

(நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015) இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர். இளமைக்காலமும், கல்வியும் வேலுப்பிள்ளை இலங்கையின் வடக்கே தென்புலோலியில் உபயகதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை, உமையாத்தைப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலை, புலோலி ஆங்கிலப்பாடசாலை ஆகியவற்றில் கற்று, உயர்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று 1955-1959 இல் இளங்கலை படித்து முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார்....

வேலுப்பிள்ளை இலங்கையின் வடக்கே தென்புலோலியில் உபயகதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை, உமையாத்தைப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலை, புலோலி ஆங்கிலப்பாடசாலை ஆகியவற்றில் கற்று, உயர்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று 1955-1959 இல் இளங்கலை படித்து முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார். இதற்காக ஆறுமுக நாவலர் பரிசும், கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் பெற்றார். பேராசிரியர். க. கணபதிப்பிள்ளையின் நெறிப்படுத்தலிற் தமிழிற் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

மீனாட்சி என்பவரைத் திருமணம் புரிந்த வேலுப்பிள்ளைக்கு சிவப்பிரியை, அருளாளன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆ. வேலுப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டில் விரிவுரையாளராகப் பதவியில் அமர்ந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் 1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர். 1973-1974 இல் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது கேரளப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1981-1982 இல் பொதுநல நாடுகள்(காமன்வெல்த் நாடுகள்) கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணிசெய்தவர். 1990-2000இல் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

இவர் 1959-1962 இல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 AD) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர். இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1962-1964 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு (D.Phil)பட்டம் பெற்றவர். கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி.800 - 920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. பின்னாளில் இவரது ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவரது ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவரது பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

நூல்கள்

இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை

ஈழத்து அறிஞர் ஆளுமைகள்

கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும் (ஆங்கிலத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது)

கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு (ஆங்கிலத்தில், திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டது)

சாசனமும் தமிழும்

சேர் பொன். இராமநாதன் நினைவுப் பேருரை

தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்

தமிழ் வரலாற்றிலக்கிணம்

நினைவுப் பேருரை பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம்

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

தமிழர் சமய வரலாறு

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:36


1925

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் முக்கிய வானவியல் பேராசிரியர்கள் அந்த பி.எச்.டி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் அரங்கில் கூடியிருந்தனர். சிசிலியா பேய்ன்-கபோஷ்கின் (Cecilia Payne-Gaposchkin) எனும் ப்ரிட்டிஷ் பெண் விஞ்ஞானி அன்று ஆய்வறிக்கை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெறவிருந்தார். வானியல் ஆராய்ச்சியாளர் ஹார்லோ ஷாப்ப்லி (Harlow Shapley) அவர்களின் கீழ் ஆய்வு செய்தார். அவரது வயது 25 மட்டுமே. பெண்கள் டாக்டர் பட்டம் பெறுவது அரிதான காலகட்டத்தில் இந்த இளம் வயதில், ஒரு பெண் பட்டம் பெறுகிறார் என்றால் சும்மாவா? கூட்டம் ஆர்வத்துடன் காத்திருந்தது.

சிசிலியா உரையாற்ற துவங்கியதும், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை., ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு "இது என்ன இப்படி ஆகிவிட்டது?" என வருத்தத்துடன் சொன்னார்கள். ஹார்லோ ஷாப்ப்லி எப்படி இதை அனுமதித்தார்?

சிசிலியா பேசி முடித்ததும் ஹார்வர்டின் தலைசிறந்த வானவியல் பேராசிரியர் ஹென்றி ரஸ்ஸல் (Henry Norris Russell) எழுந்தார்..."சூரியன் என்பது நட்சத்திரம் தான் என்றாலும் பூமியில் உள்ளதை போல அதிலும் நிலம், நீர், ஆகாயம், காற்று எல்லாம் உள்ளது என்பது அறிவியல் கூறும் உண்மை. சூரியனுக்குள் இருக்கும் கருப்பு புள்ளிகளுக்குள் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவி, நிலத்தடியில் மனிதர்கள், பறவைகள், செடிகொடிகள் எல்லாம் வாழ்கின்றன என விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷெல் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். நீங்கள் என்னடாவென்றால் சூரியன் ஒரு வெறும் ஹைட்ரஜனும், ஹீலியமும் நிரம்பிய வாயுக்கோளம் மட்டுமே என்கிறீர்கள். இப்படி பிழையான ஆய்வை ஒரு 25 வயது மாணவி ஆர்வகோளாறில் செய்தாலும், அதை பேராசிரியர் ஹார்லோ ஷாப்ப்லி எப்படி அனுமதித்தார் என வியப்பாக இருக்கிறது" என்றார்

"இது தவறான கருத்தாக்கம்" என்றார் சிசிலியா. "இந்திய வானியலாளர் மெகநாத் சாஹா (Meghnad Saha) அவர்களின் அயனைசேஷன் (Saha ionization equation) கோட்பாட்டின்படி இது நான் கண்டறிந்த உண்மை. முதலில் பேராசிரியர் ஹார்லோ ஷாப்லி இதை ஒப்புக்கொள்ளவில்லை எனினும் நான் சமர்ப்பித்த ஸ்பெக்ட்ரோமீட்டர் அடிப்படையில் அவர் இதை ஏற்றுக்கொண்டார்"

"உலகின் தலைசிறந்த அறிஞர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கோ இந்தியாவில் இருக்கும் மெகநாத் சாஹாவை மேற்கோள் காட்டி என்ன பயன்? அவரை எங்கள் யாருக்கும் தெரியாது. ஒட்டுமொத்த அறிவியலும் தவறு. நானும் ஒரு இந்திய விஞ்ஞானியும் சொல்வதுதான் சரி என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? 25 வயதில் பிஎச்டி செய்ய யாரையும் அனுமதிக்க கூடாது என்பதுதான் இந்த நிகழ்ச்சி காட்டும் பாடம். இந்த அறிக்கை தவறானது என அறிவித்து உங்களை பெயில் ஆக்குகிறோம். உங்களுக்கு பி.எச்.டி பட்டம் வழங்கபடாது" என சொல்லி கமிட்டி அவரை பெயில் ஆக்கியது

அதன்பின் பேராசிரியர் ஹார்லோ ஷாப்ப்லி கெஞ்சிகூத்தாடி பல இடங்களில் சென்று வாதிட்டு, அவரை பாஸ் செய்ய வைத்தார். பாஸ் செய்தாலும் பேராசிரியர் ரஸ்ஸல் சிசிலியாவை விஞ்ஞானியாக ஒப்புக்கொள்ளவில்லை. அந்த தீசை பதிப்பிக்க யாரும் முன்வரவில்லை. ஹசர்லோ ஷாப்பிலியின் தொடர் வற்புறுத்தலால், பிஎச்டி பட்டம் கொடுத்து, லேபில் குறைந்த சம்பளத்தில் அவரை ஒரு கீழ்மட்ட பணியில் நியமித்தார்கள். சிபாரிசு மூலம் டிகிரி பெற்றவர் என்ற அவப்பெயரும் சேர்ந்தது. ஆனாலும் மனம் தளராமல் அங்கிருந்து அவர் வானவியலில் உலகை புரட்டி போட்ட ஆய்வுகள் பலவற்றை செய்தார்.

பேராசிரியர் ரஸ்ஸல் துவக்கத்தில் இதை மறுத்தாலும், அவருக்கு இந்த மாணவி சொல்வது சரியாக இருக்கலாமா என்ற கண்ணோட்டமும் இருந்தது. அவரே ஆய்வுகள் சிலவற்றை செய்து சிசிலியா சொன்னது உண்மைதான் என அறிந்தார். 1930ம் ஆண்டில் "சூரியன் என்பது வெறும் ஹைட்ரஜனும், ஹீலியமும் நிரம்பிய கோளம் தான்" என சிசிலியாவின் கண்டுபிடிப்பை அவரே தன் பெயரில் பெரிய அறிவியல் ஜர்னல்களில் பதிப்பித்தார். சூரியன் ஹைட்ரஜனால் ஆனது என்ற உண்மையை கண்டுபிடித்தவராக வரலாற்றில் இடம்பெற்றார்

24 ஆண்டுகள் கழித்து, சிசிலியாவுடன் ஒரே லேபில் பணியாற்றிய டொனால்டு மென்செல் (Donald Menzel ) என்பவர் ஹார்வர்ட் அப்சர்வேட்டரியின் டைரக்டர் ஆனார். அவர் தான் சிசிலியாவை பற்றி எடுத்து சொல்லி, வாதாடி அவரை பேராசிரியர் ஆக்கினார். ரஸ்ஸல் அப்போது ஓய்வு பெற்றிருந்தார். ஆனால் சிசிலியாவின் பெயர் அப்போது தான் வெளியே வந்து சூரியனின் வாயுக்கோள அறிவியலை கண்டுபிடித்த விசயம் எல்லாம் வெளியே வந்து, அங்கீகாரம் பெற்றார். உலகின் மிகப்பெரும் விஞ்ஞானிகள் பலர் அவரது மாணவர்களாக இருந்தார்கள். அறிவியலில் பல சாதனைகளை செய்து மிகப்பெரும் புகழுடன் மறைந்தார் சிசிலியா

அதேபோல் மேகநாத் சாகா இந்தியாவில் மிகப்பெரும் சாதனைகளை செய்தார். அவர்தான் இந்திய அணுசக்தியின் தந்தை என அழைக்கபடுகிறார். இந்திய நியூக்ளியர் சயன்ஸ் அமைப்பை நிறுவினார். அது இன்று சாஹா இன்ஸ்டிட்யூட் ஆப் நியூக்ளியர் சயன்ஸ் ( Saha Institute of Nuclear Physics) என அழைக்கபடுகிறது.

பூமியும்_வானமும்

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:36


~ நியாண்டர் செல்வன்

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:34


இன்று நவம்பர் 1, இந்தியத் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்த தினம்.

ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை ஒரு பொறியாளர் உள்ளார்.ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.

சொந்த வாழ்க்கை

ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்து பேசியிருந்தார்.

2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

திரைப்பட வாழ்க்கை

இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன்இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:33


வரலாற்றில் இன்று - நவம்பர் 1, 1986

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மேலவை கலைக்கப்பட்ட நாள் நவம்பர் 1

அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வைகித்தபோது சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் கேட்டார். இதனால் கோபம் கொண்ட எம்ஜியார் மேலவையைக் கலைக்க உத்தரவிட்டார். சட்டமன்ற மேலவையை கலைக்க மே 14 ஆம் தேதி கீழவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1986 இல் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நவம்பர் 1, 1986 இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது.

வரலாற்றில் 🏹 இன்று

01 Nov, 17:32


வரலாற்றில் இன்று நவம்பர் 1

2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்ட நாள் நவம்பர் 1

பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதல்முதல் குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாய் இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் யுத்தம் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-உரு, அதாவது ஹலெகன்னடாவில் (பழைய கன்னடம்) "காவலர்களின் நகரம்" என்று அழைக்கப்பட்டது.[5] தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:[6]

கிபி 890 காலத்தியதாக இருக்கும் ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 வருடங்களுக்கும் பழமையானது என்று காண்பிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பெகுரில் பார்வதி நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது...ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர்.நரசிம்மச்சார் தனது கர்நாடிகா கல்லெழுத்துவியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவு கூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழை கிழவியை அவர் சந்தித்தார். அந்த கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பென்ட-கால்-உரு" (கன்னடம்: ಬೆಂದಕಾಳೂರು) (வார்த்தை அர்த்தத்தில், "அவித்த பீன்ஸ்களின் நகரம்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.[7][8]

11, டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ.ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது.[9] 27, செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது.[10] கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:08


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

சடாகோ சசாகி இறந்த தினம்

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான்.

ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி. பதறிப்போன அவளது அம்மா, ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால், அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.

அவளுக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே அவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. அவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி. அவளைக் காண வந்த அவளது தோழிகளில் ஒருத்தியான சிசுக்கோ ஹமாமாட்டோ, தங்க நிறத் தாள் ஒன்றை மடித்து, (ஜப்பானின் பண்டைய கலையான ஓரிகாமி முறையில்) கொக்கு ஒன்றை உருவாக்கினாள்.

1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. அதன்படி, நோய் பாதிப்புக்கு இடையிலும், 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கும் வேலையில் இறங்கினாள் சசாகி. எனினும், அவளால் 644 கொக்குகளைத்தான் உருவாக்க முடிந்தது. 1955 அக்டோபர் 25-ல் ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி. அதன்பின்னர், அவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன. அவளது நினைவாக, 1958-ல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவை:

இதுதான் எங்கள் கூப்பாடு,

இதுதான் எங்கள் பிரார்த்தனை,

உலகில் அமைதி வேண்டும்.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:08


வரலாற்றில் இன்று - அக்டோபர் 25, 1924

இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட நாள் அக்டோபர் 25.

தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவது 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அவரது ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டார். அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்....

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:08


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

1971 - ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராகச் சீனா அனுமதிக்கப்பட்ட நாள்

1949இலேயே மக்கள் சீனக் குடியரசு உருவாகிவிட்டாலும், சீனாவிலிருந்து தப்போயோடிய சியாங் கை-ஷேக், தைவானிலிருந்துகொண்டு, அதனை சீனக் குடியரசு என்று அழைத்துக்கொண்டார். ஐநாவில் இணைவதற்கான மக்கள் சீனத்தின் முயற்சிகள், ஒற்றைச் சீனக் கொள்கையின்படி தோற்கடிக்கப்பட்டன. ஒற்றைச் சீனக் கொள்கை என்பது சீனா என்ற பெயரில் இறையாண்மைகொண்ட ஒரேயொரு நாடுதான் இருக்க முடியும் என்துதான் என்றாலும்கூட, பல்வேறு நாடுகளாலும் மாறுபட்ட விதங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் சீனக்குடியரசு, சீனக்குடியரசு(தைவான்) ஆகிய இரண்டுமே ஏற்றுக்கொண்டுள்ள ஒற்றைச் சீனக் கருத்தாக்கம் என்பது, தைவானும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சீனா என்பதாகும். தைவானிலிருந்துகொண்டு, சியாங் கை-ஷேக் சீனக்குடியரசு என்று அழைத்துக்கொண்டதாலேயே, 'சீனாவின் முதன்மை நிலப்பரப்பு(மெயின்லேண்ட் சைனா)' என்ற சொற்றொடர் உருவாகி, 1990களுக்குப்பின், மக்கள்சீனத்தைக் குறிப்பதாக நிலைபெற்றுவிட்டது. ஒற்றைச் சீனாவாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்டவை தைவானையும், இடதுசாரி அரசுகளைக்கொண்ட நாடுகள் மக்கள்சீனத்தையும் ஒப்புக்கொண்டன. இதனால், உலகில் மக்கள்தொகையில் முதலிடமும், பரப்பளவில் மூன்றாமிடமும் வகித்த மிகப்பெரிய நாடான சீனா, ஐநாவின் அங்கமாக ஆகமுடியவில்லை. எதிர்த்த நாடுகளில் பல 1960களில் மக்கள்சீனத்தை ஆதரிக்கத் தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பினைத் திரட்டி முறியடித்தது அமெரிக்கா. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் சில ஆகியவை ஆதரவாக மாறி (பாதிக்கும் அதிமான)பெரும்பான்மை உருவானபோதும், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு தேவை என்று, சீனக்குடியரசுக்கு(தைவான்) பதிலாக மக்கள்சீனத்தை இணைக்கும் அல்பேனியாவின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 1971 ஃபிப்ரவரியில், ஐநா பாதுகாப்பு அவையில் சீனக்குடியரசு(தைவான்) இருப்பது முறையற்றது என்று சோமாலியா கண்டித்தது. 1971 அக்டோபர் 25இல் அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைத்ததுடன், ஐநாவில் சட்டவிரோதமாக அங்கம் வகிக்கும் சியாங் கை-ஷேக்கின் பிரதிநிதிகள் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்காவும் ஆதரித்தது. ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின், வீட்டோ உரிமையுடன் கூடிய பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடம் மக்கள்சீனத்திற்கு மாற்றப்பட, சீனக்குடியரசு என்று அழைத்துக்கொள்ளும் தைவான், இன்றுவரை ஐநாவில் உறுப்பினராகவே இல்லை. ஒலிம்ப்பிக் உள்ளிட்ட பன்னாட்டு நிகழ்வுகளிலும், அமைப்புகளிலும் வேறுபடுத்திக்காட்ட, சைனீஸ் தாய்ப்பேய் என்று தைவான் குறிப்பிடப்படுகிறது.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:07


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

1944 - இரண்டாம் உலகப் போரின்போது, டேங் என்னும் அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், தான் ஏவிய டார்ப்பீடோ-வாலேயே தாக்கப்பட்டு மூழ்கிய நாள்

1943 அக்டோபர் 15 அன்றுதான் கடற்படைப் பணிக்கு வந்த இந்தக் கப்பல், குறுகிய காலத்திலேயே 33 எதிரிக் கப்பல்களை மூழ்கடித்தது. இதற்காக, இதன் தளபதி ரிச்சர்ட் ஓ-கேன்-னுக்கு, அமெரிக்கப் படைகளின் மிக உயரிய விருதான 'மெடல் ஆஃப் ஆனர்' வழங்கப்பட்டது. 1944 அக்டோபர் 25 அன்று அதிகாலை 2.30 மணியளில், எதிரிகளை நோக்கி இந்த நீர்மூழ்கி ஏவிய டார்ப்பீடோ ஒன்று திரும்பி வந்து, இதனைத் தாக்கியது. இதில் 78 வீரர்கள் பலியாயினர். மாம்சென் நுரையீரல் என்னும், நீருக்கடியில் சுவாசிக்க உதவும் கருவியைக் கொண்டு 13 வீரர்கள் தப்பினர். 1962 வரை பயன்படுத்தப்பட்டுவந்த, சுண்ணாம்பு நீரைக்கொண்டு, சுவாசிக்கும் காற்றிலிருக்கும் கரியமில வாயுவை நீக்கி மறுசுழற்சி செய்யக்கூடியதான இக்கருவியைப் பயன்படுத்திய ஒரே நிகழ்வு இதுதான். 8 மணி நேரத்துக்கும் அதிமாக நீந்தியபின் 4 பேர் காப்பற்றப்பட்டனர். தளபதி ஓ-கேன் உட்பட மீதமிருந்த 9 பேர், ஜப்பானியக் கப்பல் ஒன்றால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஏற்கெனவே டேங் நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களிலிருந்து தப்பிய பலரும், அக்கப்பலில் இருந்ததால், 9 பேரும் மோசமாகத் தாக்கப்பட்டு, போர்க் கைதிகளாக்கப்பட்டனர். இந்த நீர்மூழ்கி மட்டுமின்றி, அமெரிக்கக் கடற்படையின் துல்லிபீ, ஜெர்மென் கடற்படையின் யு-869, யு-377, யு-972 ஆகிய நீர்மூழ்கிகளும், இங்கிலாந்துக் கடற்படையின் ட்ரினிடாட் என்ற கப்பலும் தாங்கள் ஏவிய டார்ப்பீடோக்களாலேயே தாக்கப்பட்டு மூழ்கிப் போயின. இலக்கைத் தொடருவதற்கு அக்காலத்திய டார்ப்பீடோக்களில் ஒலியியல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கிலிருந்து வரும் ஒலி அல்லது, டார்ப்பீடோ எழுப்பும் ஒலி இலக்கில் பட்டு எதிரொலிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கிய இவை, இலக்கைத் தவறவிடும்போது, தங்களை ஏவிய கலத்தின் ஒலியால் திசைதிரும்பி தாக்கிவிட்டதாக அமெரிக்கா விளக்கமளித்தது.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:07


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவரும் மனநல சிகிச்சைகளில் மனிதாபிமான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்துக்கு வழிகாட்டியவருமான பிலிப் பீனல் (Philippe Pinel) இறந்த தினம் இன்று (1745).

பிலிப் பினெல் ( பிரெஞ்சு: [pinɛl] ; 20 ஏப்ரல் 1745 - 25 அக்டோபர் 1826) ஒரு பிரெஞ்சு மருத்துவர், மனநல மருத்துவத்தின் முன்னோடி மற்றும் தற்செயலாக ஒரு விலங்கியல் நிபுணர். இன்று தார்மீக சிகிச்சை என்று குறிப்பிடப்படும் மனநோயாளிகளின் காவலில் மற்றும் பராமரிப்பில் மிகவும் மனிதாபிமான உளவியல் அணுகுமுறையை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் .

l பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் (1745) பிறந்தார். தந்தை போலவே இவரும் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். மான்ட்பெல்லியர் மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகள் மருத்துவ மேற்படிப்பு படித்தார். 1778-ல் பாரீஸ் வந்தார்.

l சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத பீனல் சுமார் 15 ஆண்டுகாலம் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பல்வேறு வேலைகளைப் பார்த்தார். கணிதம் பயின்றார். மருத்துவக் கட்டுரைகளை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்தார்.

l மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் நோய் முற்றி தற்கொலை செய்துகொண்டது இவரை வெகுவாக பாதித்தது. மன நோய் குறித்த ஆய்வில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது.

l மனநோய் விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைபாடுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று கருதினார். பாரீஸில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது மனநோயின் இயல்புகள், சிகிச்சை குறித்த தனது கருத்துகளை முறைப்படுத்தத் தொடங்கினார்.

l பழம்பெரும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸை முன்மாதிரியாகக் கொண்டார். பிரெஞ்சு புரட்சி முடிவுக்கு வந்த பிறகு, இவரது நண்பர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். பீஸெட் மருத்துவமனையில் மருத்துவராக 1793-ல் நியமிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை 2 ஆண்டுகள் தொடர்ந்து தினமும் பலமுறை சந்தித்தார். அவர்களைப் பற்றிய குறிப்புகளை தொகுத்தார்.

l ‘மெமோர் ஆன் மேட்னஸ்’ என்ற கட்டுரையை 1794-ல் வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப் புத்தகமாக உள்ளது.

l ஹாஸ்பிக் டி லா சல்பேட்ரயர் என்ற மருத்துவமனையில் தலைமை மருத்துவராக 1795-ல் நியமிக்கப்பட்டார். இறுதி வரை அங்கு பணிபுரிந்தார். மனநோய் குறித்த ஒரு அதிகாரப்பூர்வமான வகைப்பாடு புத்தகத்தை 1798-ல் வெளியிட்டார்.

l மனநோய் என்பது தொடர்ச்சியான நோய் அல்ல. மனநோயாளிகளை குணப்படுத்த மனிதநேயம்தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். கட்டப்பட்டிருந்த சங்கிலிகளில் இருந்து மன நோயாளிகளை விடுவித்தார். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு, சிகிச்சையில் மனிதாபிமான, மனோதத்துவ அணுகுமுறையை மேம்படுத்தினார்.

l எல்லா மன நோய்களும் ஒன்றல்ல. மனச்சோர்வு, பித்து, புத்தி மாறாட்டம், பாமரத்தனம் என்று அதில் 4 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக கையாளப்பட வேண்டியவை என்று விளக்கினார். 1801-ல் எழுதிய ட்ரீட்டஸ் ஆன் இன்சானிட்டி என்ற நூலில் தனது உளவியல் ரீதியான அணுகுமுறை பற்றி விவரித்துள்ளார்.

l 19-ம் நூற்றாண்டின் பிரெஞ்ச், ஆங்கிலோ, அமெரிக்க மனநல நிபுணர்களிடம் இந்த நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘நவீன மனநல மருத்துவத்தின் தந்தை’ என போற்றப்படும் பிலிப் பீனல் 81ஆவது வயதில் (1826) காலமானார்.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:06


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

தகவல் அறியும் உரிமை சட்ட தினம் அக்டோபர் 25

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் பார்லிமென்ட்டில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறலாம்:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. பார்லிமென்ட், சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

நடவடிக்கை:

குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:06


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ பிறந்த தினம்: 1881 அக்டோபர் 25-ந்தேதி

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாப்லோ பிக்காசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார்.

பாப்லோ பிக்காசோ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20-ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக ‘கியூபிசம்’ என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உலகின் தலை சிறந்த ஓவியர்கள் ஆவார்கள். ஓவியம், சிற்பம், அச்செடுத்தல் மற்றும் செராமிக் ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள். அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் பிக்காசோ ஆவார். இவர் தனது 93-வது வயதில் காலமானார்.


1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில் ஜோச் ரூயிசு பால்சுகா - மரியா பிக்காசோ தம்பதியருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.

பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார்.

1891-ல் பிக்காசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தை அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.

பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.

நீலக் காலம் (1901-1904): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. ஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.

ரோஜா நிறக் காலப்பகுதி (1904-1906): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோஜா நிறச் (pink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.

ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909): ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.

பிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் ‘த மிஸ்டரி ஆஃப் பிக்காசோ’ ஆகும். இது 1955-ம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது.

1996-ல் சுர்வைவிங் பிக்காசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார். ‘த மான் அண்ட் ஹிஸ் வோர்க்’ என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது.
பப்லோ பிக்காசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை. அந்த 90-வது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்த எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினாராம் பிகாசோ. தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:06


அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.

இவர் தனது 93-வது வயதில் காலமானார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குவர்னிகா: இது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இது வரையப்பட்டது. கொலாச் சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்திருந்தார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:06


வரலாற்றில் இன்று அக்டோபர் 25-

டாம் & ஜெரி முதலாம் கார்ட்டூன் படம் வெளியானது இன்று

- 1940 ம் ஆண்டு அக்டோபர் 25 ம் நாள் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பரா என்ற இரண்டு அமெரிக்கர்களால் உருவாக்கப் பட்டு வெளியிடப்பட்டது. வால்ட் டிஸ்னி தயாரித்த மிக்கி மவுஸ் கார்டூன் படத்துடன் போட்டியிட்டு இப்படம் கார்டூன் படத்துக்கான ஆஸ்கார் பரிசினை வென்றது. இன்றளவும் உலகம் முழுவதும் குழந்தைகளும் மற்றும் குழந்தை உள்ளம் கொண்ட பெரியவர்களும் பார்த்து சிரித்து மகிழ்வது இந்த கார்டூன் படங்களைத்தான்.

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:05


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

ஸேடி ஸ்மித் (Zadie Smith) பிறந்த நாள்

(அக்டோபர் 25 பிறப்பு: 1975)

ஸேடி ஸ்மித் என்பவர் ஒரு ஆங்கில பெண் எழுத்தாளர் ஆவார்.

இவரது 24ம் வயதில் வெளிவந்த இவரது முதல் நாவலான வைட் டீத்' (White Teeth, 2000) பரவலான வாசக கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டையும், சல்மான் ருஷ்டி போன்ற மூத்த எழுத்தாளர்களின் வரவேற்பையும் பெற்றது. அதிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள், புனைவு கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது மூன்றாம் புதினமான 'ஆன் பியூட்டி' (On Beauty, 2005) புக்கர் பரிசு இறுதிப் பட்டியலுக்கு தேர்வானது. பல கலாச்சாரங்கள் புழங்கும் தொட்டிலான லண்டன் மாநகரத்தை தொடர்ந்து தன்னுடைய புனைவுகளின் களமாக கொள்ளும் இவர், ஜமைக்காவைச் சேர்ந்த தாய்க்கும், இங்கிலாந்து தந்தைக்கும் லண்டனில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது சமீபத்திய புதினம் ஸ்விங் டைம் (Swing Time, 2006) என்பதாகும்.

#விருதுகள்

ஸேடி ஸ்மித் 2002 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி ஆப் லிட்டரிச்சரின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு பிபிசி கலாச்சார ஆராய்ச்சியாளர்களின் கருத்துக் கணிப்பில் பிரித்தானிய கலாச்சாரத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க முதல் இருபது நபர்களில் இடம் பிடித்தார். 2003, 2013 ஆண்டிகளில் கிராண்டாவின் 20 சிறந்த இளம் ஆசிரியர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்து திட்டத்தில் பணிபுரிந்தார். புனைக்கதைக்கான ஆரஞ்சு பரிசு மற்றும் 2006 ஆம் ஆண்டில் அனிஸ்பீல்ட்- வுல்வ் புக் விருதுகளை பெற்றார். டைம் பத்திரிகையில் இவரது புதினமாகிய வைட் டீத் 1923 முதல் 2005 வரையிலான சிறந்த ஆங்கில புதினங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

வைட் டீத் - விட்பிரட் முதல் புதின விருது, கார்டியன் முதல் புத்தக விருது, ஜேம்ஸ் டைட் கருப்பு நினைவு பரிசு, காமன்வெல்த் எழுத்தாளர்களின் முதல் புத்தக விருது ஆகியவற்றை வென்றது.
தி ஆட்டோகிராப் மேன் - ஜூவிஸ் கார்டர்லி விங்கேட் இலக்கிய பரிசு
ஒன் பியூட்டி - காமன்வெல்த் எழுத்தாளர்களின் சிறந்த புத்தக விருது (யூரேசியா பிரிவு), புனைகதைக்கான ஆரஞ்சு பரிசையும் வென்றது. மேன் புக்கர் பரிசிற்கு பட்டியலிடப்பட்டது.
ஸ்விங் டைம் - மேன் புக்கர் பரிசிற்கு இறுதி பட்டியலுக்கு தேர்வானது.
என்.டபிள்யூ - ராயல் சொசைட்டி ஆப் லிட்டரிச்சர் ஒண்டாட்சி பரிசு, புனைக்கதைக்கான பெண்கள் பரிசு
2003, 2013 - கிரண்டாவின் சிறந்த பிரித்தானிய நாவலாசிரியர்
2016 - வெல்ட் லிடெரடூர்பிரைஸ்
2017 - லாங்ஸ்டன் ஹியூஸ் பதக்கம்
2019 - முடிவிலி விருது

வரலாற்றில் 🏹 இன்று

25 Oct, 02:05


வரலாற்றில் இன்று.அக்டோபர் 25

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பிறந்த தினம் இன்று(1955).

சுப்ரபாரதிமணியன் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல தளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடாத்திவருபவர். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:13


பெலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 23 அக்டோபர் 1940 – 29 திசம்பர் 2022) பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பெலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார். அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர். காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பெலெ 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.

திடல் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, கண கச்சிதமாக பந்தை தள்ளும் முறை, லாவகமாக இரண்டு மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தும் மந்திரம், குறி தவறாமல் பந்தை வலை சேர்க்கும் தந்திரம் என இவற்றால் காற்பந்து ரசிகர்களை கிறங்கச் செய்தார் பெலே. 1970 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அபரிமிதமான திறன் காட்டி 4:1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை பெற உதவினார் பெலே. அந்த ஆட்டத்தில் அவர் தலையால் முட்டிப் போட்ட கோல்தான் மறக்க முடியாதது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பெலே.

#சிறந்த ஆட்டங்கள்

பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற மறுநாள் 'தி சண்டே டைம்ஸ்' இந்த தலையங்கத்தை வெளியிட்டது. How do u Spell Pele?? G-O-D. பிரேசிலுக்கு மூன்று உலகக் கிண்ணங்களைப் பெற்றுத் தந்த பெலே 1970 ஆம் ஆண்டு தேசியக் குழுவிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சாண்டோஸ் குழுவுக்கு ஆடினார். 1974 ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி காஸ்மாஸ் காற்பந்துக் குழுவின் தலைவர் தனது குழுவுக்காக விளையாடும்படி கேட்டுக்கொண்டார். பெலே தன் குழுவுக்கு ஆடினால் அமெரிக்காவில் காற்பந்தாட்ட மோகம் ஏற்படும் என்று அவர் நம்பினார். பெலேயும் இரண்டு ஆண்டுகள் அமெரிக்கர்களுக்கு தன் காற்பந்தாட்டாத் திறமையைக் காட்டி 1978 ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்திய பெருமை பெலேயையேச் சாரும். அவரது ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில் 25 நாடுகளைச் சேர்ந்த 761 பத்திரிக்கையாளர்களும், சில நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டு அவருக்குப் பிரியா விடை அளித்தனர்.

சாதனைகள்
தொகு

22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தினார் பெலே.[32][33] ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் மொத்த ஹாட்ரிக்குகள் 92. காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராக கருதப்படும் அவரை 'கருப்பு முத்து' என்றும் பத்திரிக்கையாளர்கள் அழைத்தனர். எங்கே வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை அவர் ஏற்றுக்கொண்டு விடுவாரோ? என்று அஞ்சிய பிரேசில் பெலேயைத் தேசியப் புதையலாக அறிவித்தது.[34] 1978 ஆம் ஆண்டு அவருக்கு அனைத்துலக அமைதி பரிசு வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு முடிவதற்கு இருபது ஆண்டுகள் இருந்தபோதே பெலேவை அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்தது அனைத்துலக ஒலிம்பிக் குழு.

1970 ல் லாகோஸில் பெலேவின் ஆட்டத்தை காண்பதற்காக அப்போது நைஜீரியாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்கள் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்தன.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:12


பிரபல திரைப்பட நடிகர் பிரபாஸ் அவர்களுக்கு இன்று 45 வது பிறந்தநாள்.


இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். இவர் தமிழில் நடித்த பாகுபலி, மற்றும் பாகுபலி 2 படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:11


சமையல் செய்வேன். ஏதாச்சும் வீட்டு வேலைகள் இருந்தா செஞ்சுட்டு, டி.வி பார்ப்பேன். வீடியோ கேம் விளையாடுவேன். தோட்டத்துக்குத் தண்ணி ஊத்துறது, இயற்கையை ரசிக்கிறதுனு அப்படியே என் பொழுது கழியுது. ஆனா, பகல்ல தூங்கமாட்டேன். நடிக்க விருப்பமில்லாம வந்து, 500 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். 'ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது'னு சொல்லுவாங்க. அப்படி சும்மா இருக்க கஷ்டமா இருக்கிறதால, நல்ல கதையம்சம் கொண்ட சினிமா அல்லது சீரியல்ல நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்" எனப் புன்னகைக்கிறார் கமலா காமேஷ்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு நம் குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:11


பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

பிரபல திரைப்பட குணச்சித்திர நடிகை
கமலா காமேஷ் அவர்களுக்கு இன்று 72 வது பிறந்த நாள்.

மூத்த நடிகையான இவர், 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர்.

நான் இடுப்புல ஆபரேஷன் பண்ணிக்கிட்டதால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் நல்லாவே குணமாகிட்டேன். ஆனா, சினிமா வாய்ப்புதான் வரலை. இப்பவே வாய்ப்பு வந்தாலும் உடனே கேமரா முன்னாடி நிற்க நான் தயார்."

“சினிமா பத்தி எந்தப் புரிதலும் இல்லாத ஆள் நான். இசையமைப்பாளர் காமேஷ் என் கணவர். கணவரின் பள்ளிக் கால நண்பரான டைரக்டர் ஜெயபாரதி, தன் புதிய படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப் பாங்கான பெண்ணைத் தீவிரமா தேடிட்டிருந்தார். அச்சமயம் ஒரு ஸ்டேஜ் டிராமா பார்த்துட்டு நானும் கணவரும் வந்துட்டிருந்தோம். அப்போ வழியில வந்த ஜெயபாரதி என்னைப் பார்த்திருக்கார். அடுத்த நாளே எங்க வீட்டுக்கு வந்தவர், தன் எதிர்பாப்புகளைச் சொல்லி, என்னை நடிக்கச் சொல்லி கணவர்கிட்ட கேட்டார். 'என்ன விளையாடுறியா. நூறு பேருக்குனாலும் ஒரே நேரத்துல சமைச்சுப்போட்டு அசத்துவா. இவளைப் போய் நடிக்கக் கேட்கிறியே. நடிப்பெல்லாம் இவளுக்குத் தெரியாது'னு கணவர் சொன்னார். ஆனா, அவர் விடாப்பிடியா என்னைப் படத்துக்கு கமிட் பண்ணிட்டுப்போயிட்டார். இப்படி விதியின் விளையாட்டால், 'குடிசை' படத்துல ஹீரோயினா நடிச்சேன். என் கணவர்தான் அந்தப் படத்துக்கு இசையமைச்சார்."

“ ‘குடிசை’க்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. ஆனா, 1981-ல் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்துச்சு. அந்தப் படத்துல நடிக்க டைரக்டர் பாரதிராஜா முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை கொடுத்துட்டுப்போயிட்டார். ஆனா, அதுக்குப் பிறகுதான் அம்மா ரோல்னு தெரிஞ்சுது. 'அம்மாவா நடிக்க மாட்டேன்'னு அடம்பிடிச்சேன். 'பாரதிராஜா படத்துல நடிக்கிறதே பெரிய விஷயம். வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதே'னு கணவர் சொல்ல, நானும் நடிச்சேன். அதுக்குப் பிறகுதான் பல மொழிகள்லயும் நிறைய வாய்ப்புகள் வரிசையா வந்துட்டே இருந்துச்சு."

“ஃபேமஸான இசையமைப்பாளரா இருந்த கணவரின் ஊக்கத்துல நடிச்சேன். ஆனா, அப்போ பணம் எனக்கு இரண்டாம் பட்சமாதான் இருந்துச்சு. அதேசமயம் திடீர்னு கணவர் இறந்துட்டதால, அடுத்து சிங்கிள் மதரா குடும்பத்தை நடத்தவும், கைக்குழந்தையான மகளை வளர்க்கவும் நடிப்புதான் எனக்கான ஒரே வழியா இருந்துச்சு. அப்போதான், `காரணமில்லாம எதுவும் நடக்காது. அதனாலதான் நான் நடிக்க வந்திருக்கேன்' என்பதும் புரிஞ்சுது. ஆனால், நடிச்சே ஆகணும்ங்கிற நிலையில் நான் இருந்தப்போ, சப்போர்ட் பண்ண கணவர் இல்லாததால், 'கமலா நடிக்க மாட்டாங்க'னு வதந்தி கிளம்பி ஒரு வருஷமா படவாய்ப்பே வரலை. அதுக்குப் பிறகு ஒரு மலையாளப் படத்துல கமிட் ஆனேன். அடுத்து 'நான் பாடும் பாடல்' தமிழ் படத்துலேருந்து அப்படியே தென்னிந்திய நாலு மொழிகள்லயும் பிஸியானேன்.”

பாவமான அம்மா ரோல்னா, அப்போதைய டைரக்டர்ஸுக்கு நான்தான் நினைவுக்கு வருவேன். யதார்த்தமான, கிராமத்து அம்மாவா என் ரோல் இருக்கும். அதனால என் இயல்பான நிறத்தைக் குறைக்க, டல் மேக்கப் போடுவாங்க. ஓய்வில்லாம இரவு பகல் பார்க்காம பல மொழிகள்லயும் நடிச்சேன். ரொம்பவே கஷ்டப்பட்ட அந்தக் காலங்களை நினைச்சா இப்போக்கூட கண்கலங்கும்."

" 'குடிசை' படம் பாதி எடுத்திருந்த நிலையில, என் நடிப்பைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டார் விசு. மேலும், 'உனக்குள்ள இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கியே'னு சொல்லி, என்னை மேடை நாடகங்கள்ல நடிக்கச் சொன்னார். அதன்படி சினிமாவுல நடிச்சுக்கிட்டே, மேடை நாடகங்கள்லயும் பிஸியா நடிச்சேன். தன் இயக்கத்தில் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்துல என்னை நடிக்க வெச்ச விசு, தொடர்ந்து 'மணல் கயிறு', 'சம்சாரம் அது மின்சாரம்' உள்ளிட்ட அவரின் ஆறு படங்கள்ல நடிக்க வெச்சார்."

"ஷூட்டிங் சமயத்துல இடுப்புல அடிபட்டதால, 1996-ல் ஆபரேஷன் செய்துகிட்டேன். அதுக்குப் பிறகும் வலி குறையலை. ஆனாலும் நடிச்சுகிட்டே இருந்த நிலையில, ஏழு ஆபரேஷன் செஞ்சுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. அதனால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் எடுத்தேன். கடைசியா நடிச்சது, 'விஷ்வதுளசி' தமிழ்ப் படம். ரெஸ்ட் எடுத்துட்டு நடிக்கலாம்னு உறுதியா இருந்த நிலையில, அடுத்து வாய்ப்பு வரலை.

“என் மகள் உமா ரியாஸ்கான் கூடத் தான் வசிக்கிறேன். மகளும், மாப்பிள்ளையும் என்னை சந்தோஷமா பார்த்துக்கிறாங்க. அவங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமேனு நானும் என் வேலையைப் பார்த்துகிட்டு அமைதியா இருக்கேன்."

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:09


பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சென்சி அவர்களுக்கு இன்று 63 வது பிறந்தநாள் 🌹
திரைத்துறையில் நடிகர் நடிகைகளின் மார்க்கெட்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பாடகர்கள் மற்றும் பாடகிகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று. அவர்களின் குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். அப்படி இருந்தாலும் ஒரு சில பாடகர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் சில வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள்.

இந்த வரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் பாடகி ஜென்சி. பிரபல பின்னனி பாடகர் ஜேசுதாஸ் அவர்களால் மலையாள திரையுலகில் பாடகியாக அறிமுகம் செய்யப்பட்ட ஜென்சிக்கு தமிழில் அறிமுகம் கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜென்சிக்கு இளையராஜா தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதேபோல் அவரது குரலுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து நீ சென்னையில் தங்கிவிடு என்றும் இளையராஜா பாடகி ஜென்சியிடம் கூறியிருக்கிறார். ஆனால் பாடகியாக இருப்பதற்கு ஜென்சியின் குடும்பத்தில் அவரது அப்பாவுக்கு விருப்பம் இல்லை என்பதால் பாடுவதையே நிறுத்திவிடலாம் என்று எண்ணியிருந்த ஜென்சி, இளையராஜாவின் பேச்சை கேட்க மறுத்துள்ளார்.

தொடர்ந்து, கேரளாவில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், அத்துடன் தனது திரை பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஜென்சி குறித்து பேசிய பிரபல இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் கூறுகையில், 80 காலக்கட்டத்தில் கேரளாவில் தமிழ் படங்கள் திரையிடப்படாத காரணத்தினால் தான் ஜென்சி கேரளாவில் பெரியதாக பிரபலமாகவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜென்சி இனிமேல் பாடப்போவதில்லை என்று முடிவு செய்தபோது அவரை எந்த இசையமைப்பாளரும் கேட்கவில்லை. பக்கத்தில் இருக்கும் கேரளா மாநிலம் கொச்சியில் வசித்து வந்த ஜென்சியை அவரின் வளர்ச்சியை பார்த்து ஓரம்கட்டியிருக்கலாம். இது ஜென்சிக்கு புரியாமலும் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1978-ம் ஆண்டு திரிபுர சுந்திரி படம் தொடங்கி, முள்ளும் மலரும், வட்டத்துக்குள் சதுரம், பிரியா, புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜென்சி கடைசியாக கடந்த 1982-ம் ஆண்டு வெளியான எச்சில் இரவுகள் படத்தில் பூத்து நிக்குது காடு என்ற பாடலை பாடகர் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடியிருந்தார்.

இந்த பிறந்தநாளில் இவர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துவோம் .

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:09


வரலாற்றில் இன்று அக்டோபர் 23

1964 - ஒளியியல் ஓவியம் என்ற பொருளில் ஆப் ஆர்ட்(Op Art - Optical Art) என்ற சொற்றொடரை அமெரிக்காவின் டைம் வார இதழ் உருவாக்கி, முதன்முறையாகப் பயன்படுத்திய நாள்

ஜூலியன் ஸ்டேன்க்சாக் என்ற ஓவியர் நியூயார்க்கில் நடத்திய ஓவியக் கண்காட்சியைப் பற்றிய கட்டுரையில் இதைப் பயன்படுத்தியிருந்தது டைம். அந்தக் கண்காட்சியில் கண்களை ஏமாற்றி தோற்றப்பிழையைத் தோற்றுவிக்கும் ஓவியங்களை அவர் காட்சிப்படுத்தியிருந்தார். உண்மையில் வரையப்பட்டிருப்பதற்கு மாறான மாயத்தோற்றங்களையோ, அசைவது போன்ற தோற்றங்களையோ கண்களுக்குத் தோன்றச் செய்யும் ஓவியங்கள் இன்றும் ஆப் ஆர்ட் என்றே அழைக்கப்படுகின்றன. கண்கள் செயல்படும் முறையை ஒட்டி, அசைவற்ற ஓவியங்களை அசைவதாகவோ, இல்லாத உருவங்களை இருப்பதாகவோ இந்த ஒளியியல் ஓவியங்கள் தோன்றச் செய்கின்றன. நொடிக்கு 24 படங்கள் என்ற வீதத்தில் ஓடச்செய்தால், அசையும் படமாகவே கண்கள் உணரும் என்ற கார்ட்டூன் திரைப்படங்களின் தத்துவத்தைப் போன்றதுதான் இதுவும். ஆனால், ஒரே படத்தில் அந்த விளைவுகளைக் காட்டும் படங்களாக இருக்கும். பொதுவாகக் கருப்பு வெள்ளையில், ஒரே மாதிரியான வடிவங்களை வெ வ்வேறு அளவுகளில் பயன்படுத்தி இப்படங்கள் உருவாக்கப்பட்டாலும் வண்ணத்திலும் உருவாக்கப்படுகின்றன. வண்ணத்தில் உருவாக்கும் படங்களில், படத்தைச் சற்றுநேரம் தொடர்ச்சியாக நோக்கியபின், அல்லது, படத்திலிருந்து பார்வையை அகற்றியபின் வேறொரு உருவத்தைத் தோன்றச்செய்யுமாறும் இப்படங்கள் வரையப்படுகின்றன. உண்மையில், 1964க்கு முன்பே இத்தகைய படங்களைப் பலர் வரைந்திருந்தனர். 1960ல் ஜூரிச்-சில் உள்ள ஜெஸ்டால்டங் அருங்காட்சியகம், 'இயங்கும் ஓவியம்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியது. 1938ல் விக்டர் வாசரேலி வரைந்த வரிக்குதிரைகள், 1956ல் ஜான் மெக்ஹேல் காட்சிப்படுத்திய ஓவியங்கள் போன்றவை இத்தகையவை என்றாலும், டைம் இதழ் இந்தச் சொல்லை உருவாக்கியபின்னரே இவ்வகை ஓவியங்கள், தனிப்பிரிவாக வகைப்படுத்தப்பட்டன. இந்த ஓவியங்கள் ஜெஸ்டால்ட் கருத்தாக்கத்தின் அடிப்படையிலான உளவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:09


வரலாற்றில் இன்று அக்டோபர் 23

கி.மு.42 - சீசரைக் கொல்லும் சதியில் முக்கியப் பங்காற்றிய ப்ரூட்டஸ் தற்கொலை செய்துகொள்ளக் காரணமான ஃபிலிப்பி யுத்தத் தோல்வி ஏற்பட்ட நாள்

எளிய மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களைச் சீசர் மேற்கொண்டிருந்ததால், அவர் கொல்லப்பட்டதும், மிகச் சிலரான உயர்குடிச் செல்வந்தர்கள், தங்கள் தலைவரைக் கொன்றுவிட்டதாக மக்கள் வெகுண்டெழுந்தது உள்நாட்டுப் போராக வெடித்தது. சீசர் கொலையின் முக்கியச் சதிகாரர்களான ப்ரூட்டசும், கேஷியசும் ரோமிலிருந்து வெளியேறி, கிரேக்கம், மாசிடோனியாவிலிருந்து சிரியா வரையான பகுதிகள் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சீசருடன் இன்னொரு கான்சலாக இருந்தவரான மார்க்கஸ் ஆண்ட்டனியஸ்(மார்க் ஆண்ட்டனி), சீசரின் தத்துப்பிள்ளை கையஸ் ஆக்டேவியஸ்(பின்னாளில் அகஸ்ட்டஸ் சீசர்), சீசரின் முக்கியத் தளபதியான மார்க்கஸ் லெப்பிடஸ் மூவரும் மேற்குப் பகுதியின் ராணுவம் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, செனட்டின் எதிர்ப்புகளை முறியடித்து, இரண்டாவது முக்கூட்டணியை உருவாக்கினர். ஏற்கெனவே, கி.மு.50களில், ஜூலியஸ் சீசர், பொம்ப்பெயஸ் மேக்னஸ், லிசினியஸ் கிராசஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டது முக்கூட்டணி என்று அழைக்கப்பட்டிருந்ததால், இது இரண்டாவது முக்கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது. படைகளின் மிகச்சிறந்த பெரும்பகுதி, 28 லீஜியன்கள் அளவுக்கு முக்கூட்டணியிடம் இருந்த நிலையில், தங்களிடமிருந்த படைகளுடன், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோரைக்கொண்டு 19 லீஜியன்கள் படையை ப்ரூட்டஸ் தரப்பினரும் திரட்டினர். அக்காலத்திய ரோமானிய லீஜியன் என்பது, சுமார் 5,000 வீரர்கள் அடங்கிய அணியைக் குறிக்கும். அக்காலத்திய மரபின்படி, சீசருக்கு தெய்வீக நிலையை(டிவஸ் லூலியஸ்) முக்கூட்டணி அறிவித்ததுடன், சீசரால் தத்தெடுக்கப்பட்டிருந்த வாரிசான ஆக்டேவியசையும், தெய்வ மகன்(டிவி ஃபிலியஸ்) என்று அழைக்கத் தொடங்கியிருந்தது. ப்ரூட்டசிடமிருந்த படையினரின் சீசரின்மீதான விசுவாசத்தை எவ்வளவு முயற்சித்தும் ப்ரூட்டசால் மாற்ற முடியாததால், சீசரின் வாரிசின் படையை எதிர்த்து அவர்களால் தீவிரமாகப் போரிட முடியவில்லை. நிலத்திலும், நீரிலும் நடைபெற்ற போர்களின் இறுதியாக அக்டோபர் 23இல் ஃபிலிப்பியில் நடைபெற்ற யுத்தத்தில், ஆக்டேவியசின் படைகள் தீர்மானகரமான வெற்றியைப்பெற்றன. சிறு படையுடன் தப்பிச்சென்ற ப்ரூட்டஸ், சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தற்கொலை செய்துகொண்டார். வாரிசாக ஆக்டேவியசை சீசர் அறிவிப்பார் என்று எதிர்பாத்திராத, சீசருக்குப்பின் ஆட்சியதிகாரத்தை எதிர்பார்த்திருந்த ஆண்ட்டனி, பின்னர் க்ளியோபாட்ரா உதவியுடன் ஆக்டேவியசுடன் போரிட்டதே, ரோம் முடியரசாகவும், அகஸ்ட்டஸ் சீசர் பேரரசராகவும் காரணமானதை இன்னொரு நாள் விபரமாகக் காணலாம்!

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:08


வரலாற்றில் இன்று அக்டோபர் 23

1911 - லிபியாவைச் சொந்தம் கொண்டாடி இத்தாலி ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இத்தாலி-துருக்கியப் போரில், உலகில் முதன்முறையாக, விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்ட நாள்

துருக்கிய எல்லைகளுக்குள் இத்தாலி விமானங்கள் குண்டு வீச, விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாத துருக்கியப் படைகள், (ரைஃபில்) துப்பாக்கிகளால் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, அவ்வாறு வீழ்த்தப்பட்ட முதல் போராகவும் இது ஆனது. ஆனால், வான்வழி போர் என்பதன் வரலாறு இதற்குப் பன்னெடுங்காலம் முன்பே தொடங்கிவிட்டது. கி.மு. 2000ங்கள் கால பண்டைய சீனாவில், மனிதர்களைச் சுமக்கும் பட்டங்கள் போர்களில் வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளன. பட்டங்களில் மணி, குழல் போன்றவற்றைப் பொருத்தி, எதிரிப் பகுதிக்குள் பறக்கச்செய்து, காற்றினால் அவற்றில் ஏற்படும் ஒலிகளால் எதிரிகளைச் சீனர்கள் பயமுறுத்தியிருக்கிறார்கள்! சமிக்ஞைகளைப் பரிமாற்றிக்கொள்ளவும் சீனர்கள் பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்! 18ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் பறக்க உருவாக்கிய வெப்பக்காற்று பலூன்களைப் போன்று, விளக்கைத் தூக்குமளவுக்கு சிறிய அளவில், கி.மு.3ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கி, சமிக்ஞைக் கருவியாகச் சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். பலூன்களில் மனிதன் பறக்கத் தொடங்கியதையடுத்து, 1794இல் ஃப்ளூரஸ் போரில், 'ஃப்ரெஞ்சு ஏரோஸ்டேட்டிக் வீரர்கள்' படையின்மூலம் கயிற்றால் பிணைக்கப்பட்ட பலூனைப் பயன்படுத்தி, போர் நிகழ்வுகளைக் கண்காணித்து ஃப்ரான்ஸ் வெற்றிபெற்றது. 1860களில் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, 'கூட்டணிப் படை பலூன் வீரர்கள்' என்ற படைப்பிரிவையே அமெரிக்க அரசு உருவாக்கியது. 1911 ஜனவரி 18இல் அமெரிக்க விமானி யூஜின் எலி, ஒரு கப்பலில் விமானத்தை இறக்கிக் காட்டி, விமானந்தாங்கிக் கப்பலுக்கான தொடக்கத்தை உருவாக்கினார். முதல் உலகப்போரில் விமானங்களின் பயன்பாடு பரவலாகியது. உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பறக்கும் தொழில்நுட்பங்கள் மிகவேகமாக வளர்ச்சியடைந்தன. 'இனி வீரர்கள் பலியாகும் இரத்த நிகழ்வுகளாகப் போர் இருக்காது, குறிப்பிட்ட இலக்குகளின்மீது வானிலிருந்து வியூகத் தாக்குதல்கள்மூலம்தான் போர் நடக்கும்' என்று இத்தாலிய கருத்தியலாளர் கியூலியோ டவுஹட் 1921இல் எழுதியது, பின்னாளில் உண்மையானது!

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:08


வரலாற்றில் இன்று அக்டோபர் 23

முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் - அக்டோபர் - 23- 1911

1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:08


வரலாற்றில் இன்று அக்டோபர் 23

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்ட நாள் அக்டோபர் 23

ஐ-பாட் என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க மியூசிக் பிளேயர் ஆகும். இதை அக்டோபர் 23, 2001-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார்.

ஐ-பாட் என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க மியூசிக் பிளேயர் ஆகும். இதை அக்டோபர் 23, 2001-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். 2008-ல் பிளாஷ் மற்றும் ஹார்டிஸ்க் கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐப்பாடுகளை யு.எஸ்.பி ஸ்டோரேஜாகவும் பயன்படுத்த முடியும். அதன் கொள்ளளவு வெவ்வேறு வகைகளுக்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது. ஐ- டியூன்ஸ் மென்பொருள் மூலம் பாடல்கள், படங்களைப் பதியலாம்.

வரலாற்றில் 🏹 இன்று

23 Oct, 03:07


இசை உலகில் டி.ஆர்.எஸ் என வழங்கப்படும் சுப்பிரமணியம் இவரது மாணவர்[1] ஜஸ்டிஸ் மகராஜன், தமிழகச் சட்டசபை முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் எஸ் கந்தசாமி(துறைவன்), எழுத்தாளார்கள் சுந்தா, மீ.ப சோமு, கவிமாணி இலந்தை சு இராமசாமி , கவிஞர் தொ.மு. சி. இரகுநாதன் ஆகியோர் இவருடைய மாணவர்களில் சிலர்.

இரசிகமணி டி.கே.சி நடத்திய வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் பங்கேற்றிருக்கிறார்.

ஆன்மிகச் சொற்பொழிவாளர்

கம்ப இராமாயணம், திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவாசகம் ஆகியவற்றில் தொடர் சொற்பொழிவாற்றியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக்கத்தில் நினைவுச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில்தான் நிகழ்த்த வேண்டும் என்னும் நிலையை மாற்றி முதன் முதல் கல்கி நினைவுச்சொற்பொழிவை” ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.தரும புரம் ஆதீன மகா சந்நிதானம் அவருக்குச் செந்தமிழ்ச் செம்மல் என்னும் பட்டமளித்துக் கௌரவித்தார். அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பெற்றிருந்த அவர் கோலாலம்பூரில் நடந்த முதல் தமிழ் மாநாட்டில் பங்குபெற்றார்.

இவர் எழுதியுள்ள நூல்கள்

மேல்காற்று
இலக்கிய மலர்கள்
புது மெருகு
ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
வெள்ளைப்பறவை
காவிய அரங்கில்.
உதய கன்னி(நாடகம்)
மனப்பேய்(நாடகம்)
கவியரசர் கண்ட கவிதை
குருதேவரின் குரல்
நம்மாழ்வார்
தாருதத் பாடல்கள்(மொழியாக்கம்)
அவன் அமரன்(நாடகம்)
எல்லையிலே(நாடகம்)
விஸ்வரூபம்
இவரது நூற்றாண்டு விழாச் சமயத்தில் இவரது எழுத்துகள் அனைத்தும் அ/சீ.ரா எழுத்துகள் என்னும் தலைப்பில் ஏழு தொகுதிகளாக அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது

இவர் 1974ம் வருட இறுதியில் சாகித்ய அகாதமிக்காக நம்மாழ்வார் பற்றி ஒரு நூல் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் பல ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நம்மாழ்வாரை எழுதிய கை இனி வேறு எதையும் எழுதாது என்றார். அவர் சொன்னாற்போலவே வேறு எதுவும் எழுதாமல் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் அமரரானார்.

விருதுகள்

1968 இல் இவரது வெள்ளைப் பறவை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[2][3][4]. 2005 இல் இவரது அனைத்து படைப்புகளும் ஒரே தொகுப்பில் வெளியிடப்பட்டன[5][6].

1,726

subscribers

16,274

photos

71

videos