U7 News Tamil @u7news Channel on Telegram

U7 News Tamil

@u7news


🔆👀நெற்றிக்கண் திறக்காவிடினும் குற்றம் குற்றமே👀🔅

✅️தினமும் குறைவான செய்திகள்
✅️அதிகமான தகவல்
✅️உண்மையின் குரல் எப்பொழுதும் மக்களுக்காக மட்டுமே

தொடர்புக்கு: +91 9942177536
MAIL : [email protected]
WEBSITE : https://u7news.blogspot.com/?m=1

U7 News Tamil (Tamil)

உங்கள் திறன் நெற்றியில் வெளிப்படுத்தும் சமயத்தில், 'U7 News Tamil' உங்களுக்கு என்ன பார்வையிடும்? இது உண்மையான செய்தி மற்றும் தகவல்கள் அளிக்கும் ஒரு உள்ளடக்க வார்த்தைகள் தொகுப்பு சேனல். இதில் இருந்து உங்களுக்கு நினைவுவந்த, உண்மையில் உள்ள செய்திகளை அறியலாம். இந்த சேனலில் தினமும் குறைவான செய்திகள், அதிகமான தகவல்கள், உண்மையின் குரல் எப்பொழுதும் மக்களுக்காக மட்டுமே கொடுக்கப்படும். U7 News Tamil உங்கள் திறக்கடியை அழகியமாக நேரடியாக சுருக்கும் ஒரு சேனலாகும். தொடர்பு கொள்ள: +91 9942177536, அனுப்புவதற்கு மின்னஞ்சல்: [email protected], வலைத்தளம்: https://u7news.blogspot.com/?m=1

U7 News Tamil

05 Oct, 02:33


⚪️🔴10 அணிகள் உலகோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி:

உலககோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.

ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடை யிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7' அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.

இதன்படி ஆஸ்திரேலியா, நியூசி லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன.

மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது.

- @u7news

U7 News Tamil

05 Oct, 01:50


⚪️🔴இன்று முதல் தொடங்குகிறது உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

- @u7news

U7 News Tamil

05 Oct, 01:34


⚪️🔴JUST IN: போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.

- @u7news

U7 News Tamil

04 Oct, 15:51


⚪️🔴இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்..

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று வாட்ஸ் அப்பிலும் 'Username' வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்:

மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அப்டேட்:

அதன்படி, வாட்ஸ் அப்பில், 'Username' ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருப்பதுபோன்று 'Username' ஆப்ஷனை மெட்டா கொண்டு வர உள்ளது.

ஏற்கனவே, வாட்ஸ் அப்பில் நம்பர் ஆப்ஷன் மட்டும் உள்ளது. இந்நிலையில், வரக்கூடிய 'Username' ஆப்ஷன் பயனர்களின் செல்போன் எண் மற்ற பயனர்களுக்கு காட்டப்படாது.

Join Now U7news Whatsapp Channel :
https://whatsapp.com/channel/0029Va49E0w1CYoQS52kol0w

மேலும், உங்கள் மொபைலில் பதியாத எண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் கூட உங்களது வாட்ஸ் எண் காட்டப்படாது. இதன் மூலம் மொபைல் எண்கள் மூலம் நடக்கும் மோசடியை இது தடுக்கும்.

இருப்பினும், உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்ட விரும்பினால், அதற்கு ஏற்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதாவது, பயனர்களுக்கு 'Username' அல்லது 'Phone Number' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், திரையில் ஏதாவது ஒன்று தான் தோன்றும். Setting ஆப்ஷனுக்குள் சென்று profile- ஐ கிளிக் செய்து, அதற்கு வலதுபக்கத்தில் 'Create Username' என்ற ஆப்ஷன் இருக்கும்.

அங்கு, தங்களுக்கு விருப்பப்பட்ட Username-ஐ பயனர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

U7 News Tamil

04 Oct, 15:50


⚪️🔴அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,400 ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

- @u7news

U7 News Tamil

04 Oct, 14:19


⚪️🔴டெல்லி ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை கைது செய்தது அமலாக்கத்துறை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சோதனையை தொடர்ந்து கைது

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது

- @u7news

U7 News Tamil

04 Oct, 14:19


⚪️🔴தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிப்பு.

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்.

தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

- @u7news

U7 News Tamil

04 Oct, 14:17


⚪️🔴மயிலாடுதுறை: தில்லையாடி கிராமத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

- @u7news

U7 News Tamil

04 Oct, 14:16


⚪️🔴தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை.

குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்- கடலூர் நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

- @u7news

U7 News Tamil

04 Oct, 08:56


⚪️🔴அக்டோபர் 12-ஆம் தேதி கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு

கடந்த 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது

3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்திருந்த நிலையில், 12ஆம் தேதி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது

- @u7news

U7 News Tamil

04 Oct, 07:44


⚪️🔴பொதுகூட்டம் நடத்தி நீபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்'

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு அவதூறாக பேச்சு

ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நூதன நிபந்தனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

- @u7news

U7 News Tamil

04 Oct, 04:29


⚪️🔴 ராமர் பாலத்தின் அருகே தரிசனம் செய்வதற்காக சுவர் ஒன்றைக் கட்டக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய மற்றொரு மனுவையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

சுவர் கட்ட நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? இது அரசின் நிர்வாக ரீதியான முடிவு - நீதிபதிகள் கருத்து.

- @u7news

U7 News Tamil

04 Oct, 04:16


⚪️🔴BREAKING: சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்

வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை

சிக்கிம் லச்சன் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்

- @u7news

U7 News Tamil

04 Oct, 03:51


⚪️🔴சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி

துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதம்

- @u7news

U7 News Tamil

04 Oct, 03:51


⚪️🔴இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்.

ஆசிய விளையாட்டு போட்டிகள்: வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

- @u7news

U7 News Tamil

04 Oct, 02:44


⚪️🔴டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

ஆம் ஆத்மி எம்எல்ஏ மணீஷ் சிசோடியா பெயில் வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது

மதுபான கொள்கையை வகுப்பதில் ஊழல் செய்ததால் புகார் வைக்கப்பட்டு உள்ளது

இதே வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

- @u7news

U7 News Tamil

04 Oct, 02:44


⚪️🔴பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவை கூடுகிறது

காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்குவதாக தகவல்

- @u7news

U7 News Tamil

04 Oct, 01:58


⚪️🔴கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

- @u7news

U7 News Tamil

03 Oct, 15:54


⚪️🔴ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்குடன் புகார்.

15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும்; பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29 லட்சம் முன்பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் தெரிவித்தவருக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் வக்கீல் நோட்டீஸ்.

- @u7news

U7 News Tamil

03 Oct, 15:53


⚪️🔴பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும்- முதல்வர்

ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும், சாதனையும் - சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுப்பதே தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள்,எளியோர் பக்கமாகக் காவல் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், வறியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும்.

ஒரு சாமானியரின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காவல் நிலையத்திற்கு வந்தால், அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதுதான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்

அனைத்து காவல்துறை ஆணையர் / மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறைகேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் ஆணையிட்டேன். அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும்

சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து, சாதி, மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்னைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். அதனால் காவல்துறையை சேர்ந்த அனைவரும் மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்-காவல்துறை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

- @u7news