The Secret Thoughts @thesecretthoughts Channel on Telegram

The Secret Thoughts

@thesecretthoughts


The Secret பன்னாட்டு குழுமத்தின் quote அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் நண்பர்களே.
www.thesecret.tv

The Secret Thoughts (English)

Are you ready to delve into the innermost musings of the mind? Look no further than 'The Secret Thoughts' Telegram channel, where you will find a sanctuary for those who enjoy exploring the depths of their consciousness. This channel, created by the enigmatic username '@thesecretthoughts', is a haven for individuals seeking thought-provoking discussions, introspective quotes, and reflective prompts. Whether you're an avid thinker or simply curious about the mysteries of the mind, 'The Secret Thoughts' offers a unique space to contemplate and connect with like-minded individuals. Join us on this journey of self-discovery and unlock the hidden treasures of your own consciousness. Welcome to 'The Secret Thoughts' - where the mind is the ultimate playground.

The Secret Thoughts

29 Dec, 17:00


BELIEVE THAT EVERYTHING IS POSSIBLE

The Secret Thoughts

27 Dec, 07:19


What are you focused on Today?

The Secret Thoughts

24 Dec, 06:05


YOU LEARN FROM MISTAKE

The Secret Thoughts

21 Dec, 11:23


*THINK THOUGHTS OF WHAT TO YOU WANT*

The Secret Thoughts

13 Dec, 15:41


ரகசியம் - ஆவணப் படம் | The secret - Documentory movie in Tamil

The Secret Thoughts

13 Dec, 13:47


💞UNLOCK YOUR POTENTIAL 💞

The Secret Thoughts

11 Dec, 02:37


There's no trick to the law of attraction. If you want something, you can have it. You don't have to sacrifice anything or give up anything; you just have to focus your thoughts on it.-- Rhonda Byrne

The Secret Thoughts

09 Dec, 07:10


The moment you believe and know any problem is not serious - you have killed 99 percent of the problem. --Rhonda Byrne

The Secret Thoughts

08 Dec, 07:27


You have the power that creates Universes in your hands, so why not create your life the way you want it? - Rhonda Byrne

The Secret Thoughts

19 Nov, 14:32


For more useful telegram channels and groups <click here>

The Secret Thoughts

18 Sep, 13:33


Our karma our hand 👏 கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்...

தேசிய நெடுஞ்சாலையில்...!

நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது...

பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது!

ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்.

ஒரு விலையுயர்ந்த காரில்...

இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!

அது உங்களுக்குப் பிடிக்கவில்லை!

வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள்.

அவரும் உயர்த்தியிருப்பார் போல...!

இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...!

சளைத்தவரா நீங்கள்...?

வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள்.

அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.

நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள்.

இப்படியே போனால்.....

முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இந்நிலையில்....

உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!!

இப்போது.....

உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!

நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி...

பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்...

இப்போதோ...

ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்...

கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!

காரணம்.... வேறு யாரோ.. எவரோ..?

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்!

தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி...

அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து...

தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு...

பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!

உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்!

நாமே ஓட்ட வேண்டும்!

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்!

அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை...

நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது...

நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...

எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!👍👍👍


உன்னால் மட்டுமே முடியும்

The Secret Thoughts

09 Sep, 15:03


நம் வாழ்க்கையை மாற்றும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை!

Queen of Katwe (A best Motivational Movie. Tamil Voiceover by Film Roll)

The Secret Thoughts

19 Aug, 16:23


நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ
அந்த இடம் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால் அமைதியாக இருந்து கற்றுக் கொள்.

உங்கள் பிரச்சனை மற்றும் சவால்கள் எதுவாக இருந்தாலும் சரி சற்று விலக்கி வை, ஓய்வெடு, நிதானமாக யோசி,பின் செயல்படு எல்லாம் சுலபமாக முடியும்.

பொறுமை ஒன்றே உன்னை வெற்றிக்கான நல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

நீங்கள் ஒவ்வொரு தடவையும் தோற்கும் போது நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

முன்னாடி தோல்வி அடைந்துட்டோம்னு தரையைப் பார்த்தலும், பின்னாடி வெற்றி பெற்று விட்டோம்னு வானத்தைப் பார்த்தலும்
வாழ்க்கைக்கு சிறந்ததல்ல.


கர்வம் அற்ற வெற்றியே மேன்மேலும் சிகரம் தொட வழி வகுக்கும்.

The Secret Thoughts

28 Jul, 05:37


ஒருவர் பொறுமையாக இருக்கிறார் என்றால் அவர் கோழை என்று பொருள் அல்ல.
தமக்குள் இருக்கும் கடினமான சொற்களையும், சூழலையும் கட்டுப்படுத்த தெரிந்த பக்குவமானவர் என்று பொருள்.
நாமும் பொறுமை காப்போம் கோபம் தவிர்ப்போம்

The Secret Thoughts

13 Jul, 11:07


உங்கள் குழந்தைகளை பாராட்டாதீர்கள் அவர்களுக்கு தான் என்ற தலைக்கனம் வரும்

அவர்கள் செய்த செயல்களை பாராட்டுங்கள் அவர்கள் செய்யும் செயல்களில் இன்னும் சிறப்பாக செய்வார்கள்...

எப்போதும் இது நான் செய்யவில்லை இது இறைவனின் கருணையால் இந்த செயல் என்மூலமாக நடைபெற்றது.
நான் ஒரு கருவி

என்று கூற சொல்லி இறைவனுக்கு நன்றி சொல்ல சொல்லுங்கள்...அங்கே இறைவனின் அருட்கொடையும் கிடைக்கும் தான் தனது என்ற அகங்காரமும் மறைக்கும்

🪷சந்தோசம்🪷

The Secret Thoughts

12 Jul, 06:50


Change Your Perspective

The Secret Thoughts

03 Jul, 04:15


வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டுமே தவிர தேவையற்ற குழப்பங்களை மனதில் சுமந்து கொண்டு தேவையில்லாமல் யோசித்து கொண்டு இருப்பதை தவிர்த்திடுங்கள்

வாழ்க்கையில் வரும் மேடு பள்ளத்தை கடந்து எப்படி மீண்டு வருவது, என யோசியுங்கள்
வாழ்க்கையில் வரும் இன்னல்களை எதிர்த்து வாழ பழகுங்கள்


எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடாதீர்கள்

உன்னை வீழ்த்தி பார்க்க நினைப்பவர் மத்தியில் வெற்றி பெற்று வாழ்ந்து காட்டு.

The Secret Thoughts

14 Jun, 15:49


யார் ஏழை

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..

இதில் யார்_பணக்காரர்...

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை என்று சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...
பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......

அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....

நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....

தொடக்கம் நாமாக இருப்போமே...

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

சுயநலம் என்பது கால்பந்து போன்றது.

இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.


சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

The Secret Thoughts

09 Jun, 15:03


ரகசியம் - ஆவணப் படம் | The secret - Documentory movie in Tamil

The Secret Thoughts

06 Jun, 02:23


ஜப்பானில் பத்து வயது சிறுவன் ஒருவனுக்கு . ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது.

ஆனால், அவன் ஒரு மாற்றுத்திறனாளி.
அவனுக்கு இடது கை கிடையாது.

கைகளும், கால்களும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது என்பது பெரும் சவால்.

ஒரு கையில்லாத சிறுவன் என்ன செய்வான் ?

பல பயிற்சியார்களிடம் சென்றான்.

எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பினார்கள்.

சிறுவன் மனம்தளரவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தான்.

இறுதியில் ஒரு பயிற்சியாளர் அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி வகுப்பு தொடங்கியது. பயிற்சியாளர் ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல ஓடின. பயிற்சியாளர் வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. சிறுவன் சோர்ந்து போனான்.

பயிற்சியாளரே.. "நான் ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் கற்றுத் தருவீர்களா?” என்றான்.

"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் பயிற்சியாளர்.

பயிற்சியாளர் சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ?

சிறுவனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.

ஒரே ஒரு தாக்குதில் மட்டும் நன்றாக கற்று தேர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது.!

முதல்_போட்டி:- அனைத்தும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தச் சிறுவன்.

போட்டி ஆரம்பமானது. பார்வையாளர்கள் எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக சிறுவன் வெற்றிப் பெற்றான்.

இரண்டாவது_போட்டி:- அதிலும் அவனுக்கே வெற்றி.

அப்படியே முன்னேறி அரை_இறுதிப்போட்டி வரை சென்றான்.

அதிலும் கொஞ்சம் போராடி வென்று விட்டான்.

தற்போது இறுதிப்போட்டி.

எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும் சிறுவன் சளைக்கவில்லை.

போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் சிறுவனை அடித்து வீழ்த்தினான் எதிராளி.

சிறுவனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா..? என்கின்றனர் போட்டியை நடத்துபவர்கள்.

“வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் பயிற்சியாளர்.

இந்தச் சிறுவனோடு சன்டையிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.

சிறுவன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான்.

சிறுவன் சாம்பியன் ஆனான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கோ ஆச்சரியம்.

அந்தப் சிறுவனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.

அன்று மாலை பயிற்சியாளரிடம் கேட்டான்.

பயிற்சியாளரே..!

"நான் எப்படி இந்த போட்டியில் வெற்றிப் பெற்றேன் ?"

"ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்.

புன்னகைத்தபடியே பயிற்சியாளர் சொன்னார்

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள்."

ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே..!

"உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!”

பயிற்சியாளர் சொல்லச் சொல்ல சிறுவன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து மகிழ்சியடைந்தான்.

நாம் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் திறமைகளின் கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பதும், நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது.


ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருப்பான். அதை கண்டுபிடித்து செயல் படுத்துவதில் நமது வெற்றி உள்ளது..


✔️

The Secret Thoughts

31 May, 03:46


என்றைக்கும் நேர்மைக்கு மதிப்புண்டு 👍

The Secret Thoughts

25 May, 01:02


Updated information of our all telegram groups and channels link >>>click here<<<

The Secret Thoughts

19 May, 02:31


இந்த உலகம்
ஆயிரம் சொன்னாலும்

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்

உனக்கான தகுதி என்னவென்று

நீ அறிந்து அதன் வழியே சென்று

வெற்றி காண்பதே

உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்...!!!

The Secret Thoughts

06 May, 08:08


ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.

🍁

அன்புள்ள மகனுக்கு,

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ,

மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.

தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.

சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.

இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே.

உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.

உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும்.

அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.

மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.

ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.

உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை.

நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.

அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.

உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.

இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.

இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.

வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.

காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது.

உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.

காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும்.

இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே.

அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை.

நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை.

என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.

ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.

அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது.

உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்.

நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.

நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.

நீ அனைவருக்கும் நல்லவனாக இரு.

ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.

நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.

ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.

நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

இலவசமாக உணவு கிடைக்காது.

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல.

நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.

The Secret Thoughts

06 May, 08:08


நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

அன்புடன் ,

உன் அப்பா.


இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.

இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.


அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.


நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

The Secret Thoughts

01 May, 06:39


செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பதல்ல
உனக்குள் இருக்கும் திறமையே..


அதை நீ வளர்த்துக்கொண்டால்
அதுவே மிகப்பெரிய செல்வம்..!


🌷🌷

1,304

subscribers

96

photos

10

videos