Balaji Haasan Commune @balajihaasansalem Channel on Telegram

Balaji Haasan Commune

@balajihaasansalem


This channel only vision
To share my knowledge ( Astrology)
And give some useful
Auspicious Date & Timing,
And important remedy for problem

Thank u for adding this group
P. Balaji Haasan

Balaji Haasan Commune (English)

Welcome to Balaji Haasan Commune! This Telegram channel, managed under the username @balajihaasansalem, is dedicated to sharing the knowledge of astrology and providing useful information on auspicious dates and timings, as well as important remedies for various problems. The channel is led by P. Balaji Haasan, who has a wealth of experience and expertise in the field of astrology. Whether you are a novice seeking to learn more about astrology or someone looking for guidance and solutions, this channel is the perfect place for you. With regular updates and insights, Balaji Haasan Commune aims to help individuals navigate life's challenges and make informed decisions. Join us today and unlock the power of astrology in improving your life!

Balaji Haasan Commune

07 Feb, 17:57


அனைத்து ராசிக்கும் பரிகாரம் எழுதிவிட்டேன்,
கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது அதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்
பல வேலைகளை செய்வதால் தொடர்ந்து முழுமையாக எழுத ( Type ) முடியவில்லை
சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரம் இந்த வாரம் எழுதி
மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரம்
நமது காணொளியில் வெளிவரும்

நன்றி

Balaji Haasan Commune

07 Feb, 17:57


கடக ராசி பரிகாரம் - 2025
சாமானியன்:
1. குபேரர் வழிபாடு
( அமாவாசை அன்று சிவன் கோவில் சென்று வர வேண்டும். அமாவாசை அன்று பழமையான சிவன் கோவிலில் குபேரன் வந்து வழிபடுவதாக ஐதீகம் )
2. வீட்டு அருகில் உள்ள சிவன் கோவில் சென்று தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவரை வெளிப்படுவது நல்லது.

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION

1. பிரத்தியங்கிரா தேவி ஒரு முறை சென்று வழிபடுவது நல்லது.
Aiyavadi ஒருமுறை இங்கு மற்ற மாதம் அம்மாவாசை அன்று உங்கள் ஊரில் உள்ள பிரத்யங்கரா கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மை
Location - https://maps.app.goo.gl/ywV3aXaC2EzF8hFq7


2. உங்கள் ஊரில் உள்ள வராகி அம்மனை இரவு நேரத்தில் வழிபடுவது சிறப்பு.
Evening after sun set . means after 7 Pm
3. பொள்ளாச்சி சென்று மாசாணி அம்மன் கோவிலுக்கு ஒரு முறை சென்று ஒரு மாலை அணிவித்து 16 நெய் விளக்கு ஏற்றி வர வேண்டும்.

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:
பழனி - செவ்வாய்க்கிழமை அன்று சென்று ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசித்து விட்டு, தங்க தேரை பார்த்து வர வேண்டும் அது சிறப்பான பலன்களைத் தரும்.

Balaji Haasan Commune

07 Feb, 17:41


மீனம் ராசி பரிகாரம் - 2025
சாமானியன்:
1. வீட்டிற்கு அருகே உள்ள பெருமாள் கோவில் க்கு சென்று மூன்று மாதம் ஒருமுறையேனும் மலையேறி நடந்து சென்று பெருமாளை துளசி மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்று வழிபடுவது சிறப்பு.

2. வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோவிலில் பிரகாரத்தை 11 முறை சுற்றிவர வேண்டும் பௌர்ணமி தினத்தன்று.

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
1. சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வருவது நல்லது.
2. வேதாரண்யம் சிவன் , துர்க்கை வழிபாடு செய்வது மற்றும் அங்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து சாமியை வணங்குவது நன்மை பயக்கும்.

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:
1. ராமேஸ்வரம் அருகே உள்ள உத்திரகோசை மங்கை கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வருவது நல்லது.

Note ;-
ராமேஸ்வரம் சென்ற பின்பு கூட உத்திரகோசமங்கை செல்வது சிறப்பு
ஆனால் வீட்டிற்கு செல்லும் முன் இறுதியாக உத்திரகோசமங்கை கோவிலுக்கு சென்று விட்டு நேராக வீட்டிற்கு செல்லவும். உத்திரகோசை மங்கை கோவில் தரிசனத்திற்கு பின்பு வேறு கோவில் அல்லது நண்பர் உறவினர் வீட்டிற்கு செல்லவேண்டாம் நீரை உங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்

Balaji Haasan Commune

07 Feb, 17:33


கும்பம் ராசி பரிகாரம்
சாமானியன்:
1. வீட்டிற்கு அருகே உள்ள மாதம் இரண்டு முறை திங்கள் அன்று சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றுவது நல்லது.
2. வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோவிலில் வாரம் தோறும் ஏதேனும் பணி செய்வது கோவில் பண்டிகை காலத்தில் உழவார பணிசெய்வது , திருப்பதி சென்று சேவை செய்வது நலம்.
வீட்டில் தினந்தோறும் விளக்கேற்றுவது நல்ல பலனை தரும்.


தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று அபிஷேகம் மற்றும் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது. Atleast 3 month once

2. சனிக்கிழமை Morning 6-7 சனி ஹோரையில் ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசித்து வருவது நல்லது.

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

1. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள சிவன் கோவிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து துளசி பெருமாளுக்கு மாலை போட வேண்டும்
2. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் வழிபாடு வெற்றியை தரும்.
Near to kovil patti .

Balaji Haasan Commune

07 Feb, 17:28


மகர ராசி பலன்கள் -2025
சாமானியன்:
1. குலதெய்வத்தை அம்மாவாசை அன்று வழிபடுவது நல்லது. வெளி ஊரில் வசிப்பவர்கள் குறைந்தது 3 மாதம் ஒருமுறை
2. வீட்டிற்கு அருகே உள்ள பாலாம்பிகை / லலிதாம்பிகை கோவிலுக்கு சென்று வருவது நல்லது
3. ஸ்ரீ ராம ஜெயம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் ஏதேனும் ஒன்றை தினம் தோறும் பத்து முறை சொல்வது நல்லது.

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
1. குகை கோவில் திருப்பரங்குன்றம் / மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் வழிபாடு.
2. திருச்செந்தூர் கடற்கரை ஓரத்தில் ஜீவசமாதி உண்டு அங்கு சென்று வழிபாடு.
செய்து பின் கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபாடு செய்வது நல்லது

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

காலங்கிநாதர் சித்தர் கோவிலில் கிணற்றில் குளித்து காலங்கியநாதரை வழிபடுவது சிறப்பு.

Temple – near to salem – ellampilai , sithhar kovil
https://maps.app.goo.gl/7bMQrJVBuaxftGEL6

Balaji Haasan Commune

07 Feb, 17:23


தனுசு ராசி பலன்கள் -2025

சாமானியன்:

1. வீட்டிற்கு அருகே உள்ள சாஸ்தா or காவல் தெய்வம் கோவிலில் ஞாயிறு தோறும் சென்று நல்ல எண்ணெய் விளக்கு போடுவது நன்மை
2. வீட்டிற்கு அருகே உள்ள பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடம் மற்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்வது நல்லது. பெருமாளுக்கு நெய் விளக்கு போடவேண்டும்.

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
1. வைத்தீஸ்வரன் கோவில் உள்ள தன்வந்திரி க்கு புதன் அன்று சென்று துளசி மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
2. கொடுமுடி சிவன் தரிசனம் மற்றும் காவிரி ஆற்றில் உப்பு போட வேண்டும்.

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:
பஞ்சமுக ஆஞ்சநேயர் எல்லா மாவட்டத்திலும் இருக்கும்
அங்கு சென்று வழிபடுவது நல்லது மாதம் ஒருமுறை

Balaji Haasan Commune

07 Feb, 17:17


விருச்சிக ராசி பலன்கள் -2025

சாமானியன்:
1. வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோவிலில் - சிவன் / அம்பாள் சேர்ந்து உள்ள கோவிலில் பிரதோஷம் அன்று தரிசனம் செய்ய வேண்டும்.
2. ஊருக்கு உள்ளே இருக்கும் பெண் தெய்வம் மாரியம்மன் ( or )காளியம்மன் வழிபட வேண்டும். Near 3 Km from home



தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
1. திரு சக்தி முற்றம் Kumbakonam Thiru Shakthi Mutham is situated at a distance of about 8 kms from Kumbakonam on the Kumbakonam to Avoor route. From Swamimalai, it is about 3 kms and from Dharasuram, it is about 4 kms. Both Swamimalai and Darasuram have railway stations. வெள்ளிக்கிழமை அன்று ஒருமுறை தரிசனம் செய்யவேண்டும்

2. சமயபுரம் மாரியம்மன் க்கு மாலை மற்றும் சிவப்பு நிற சேலை அணிவித்து எந்த கிழமை வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

ரேணுகா தேவி ஜமத்கனி மகள் ரேணுகாதேவி வேலூர்
https://maps.app.goo.gl/d7STYQhgWL4xwTZ76
padavedu
வெள்ளிக்கிழமை அன்று ஒருமுறை தரிசனம் செய்யவேண்டும்

Balaji Haasan Commune

07 Feb, 17:10


துலாம் ராசி பலன்கள் - 2025

சாமானியன்:
1. வெள்ளிக்கிழமை தோறும் வீட்டிற்கு அருகே உள்ள துர்க்கை அம்மன் வழிபாடு
2. வீட்டிற்கு அருகே உள்ள காளியம்மன் or மாரியம்மன் வழிபடுவது சிறப்பு.



தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
1. காளகஸ்தி சென்று அங்குள்ள சிவனுக்கு அபிஷேகம் மற்றும் மலர் மாலை அணிவித்து வரவேண்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்வது சிறப்பு.

2. வீட்டிற்கு அருகே நரசிம்மர் கோவிலில் சுதர்சன ஹோமம் ஒருமுறை

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

1 . ஆறகளூர் ஆத்தூரில் உள்ள அஷ்டபைரவர் கோவிலுக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சென்று வருவது நல்லது மாதம் தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி.
ஒருமுறை ஆத்தூரில் உள்ள ஆறகழூர் மற்ற மாதம் வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோவிலில் உள்ள கால பைரவர்

Balaji Haasan Commune

07 Feb, 16:55


கன்னி ராசி பலன்கள் -2025

சாமானியன்:
1. வீட்டு அருகில் உள்ள ஆறு அல்லது ஓடையை கடந்து இருக்கும் சிவனை வழிபடுவது நல்லது. Every Sunday
2. கருப்பன் / எல்லைப்பிடாரி அம்மன் / சாஸ்தா / முனியப்பன் / அய்யனார் / அய்யனாரப்பன். போன்ற காவல் தெய்வத்தை ஞாயிறு அன்று வழிபடுவது நன்மை .
தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION

1. சுவாமிமலை ( Kumbakonam ) சென்று முருகனுக்கு அபிஷேகம் மற்றும் மலர் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.
2. மதுரை அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பன் சுவாமி வழிபாடு செய்வது நல்லது ( பழமுதிர்ச்சோலை முருகனும் அருகே இருப்பார் வரையும் சேர்த்து வழிபடலாம் )

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

1. இந்த வருடத்தில் ஒரு முறை திருத்தணி முருகனை தரிசிப்பது நல்லது.
2. மாதம் ஒருமுறை வீட்டிற்க்கு அருகே உள்ள மலை மீது இருக்கும் முருகனை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

Balaji Haasan Commune

07 Feb, 16:50


சிம்மம் ராசி பலன்கள் -2025
சாமானியன்:
1. ஊரில் ஒருசில பெருமாள் கோவில்லில் ஹயக்ரீவர் இருக்கும் அந்த கோவிலில் மாதம் ஒருமுறை ஹயக்ரீவர் வழிபாடு செய்வது சிறப்பு.
2. பெருமாள் கோவில்லில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு
3. சக்தி கணபதி இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அவரை வழிபடுவதும் சிறப்பான பலன்களை தரும்.
தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION

1.திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நடந்து சென்று மூலவரை மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
( temple in namakkal near to Sangakiri railway station )

2. குருவாயூர் சென்று வியாழக்கிழமை அன்று தரிசனம் செய்வது நல்லது .
( kerala famous temple )


ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

1. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் முருகனுக்கு பின்னால் இருக்கும் சிவனை தரிசித்து வந்தால் சிம்மத்திற்கு இந்த ஆண்டு பலன் சிறப்பான பலனாக இருக்கும்.

Balaji Haasan Commune

07 Feb, 16:19


மிதுன ராசி பலன்கள் - 2025

சாமானியன்:
1. சபரிமலை அல்லது பழனி மலை அல்லது திருப்பதி நடைபாதையில் சென்று ஒருமுறை தரிசனம் செய்வது சிறப்பு.
2. வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் கோவிலில் பால்குடம் தூக்குதல் அல்லது காவடி எடுத்தல்.
3. பெண்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வது நல்லது.

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION

1. காஞ்சிபுரம் சென்று காமாட்சி அம்மனை திங்கள் கிழமையில் வழிபடுவது சிறப்பு.
2. மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்ய வேண்டும்.



ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

1. நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும் , வெளி ஊரில் இருப்பவர்கள் ஒருமுறை நாமக்கல் சென்று வாருங்கள் பிறகு மாதம் தோறும் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபடுங்கள் சனிக்கிழமை தோறும்

Balaji Haasan Commune

07 Feb, 16:04


12 ராசிகளுக்கும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் செலவு செய்து எழுதி இருக்கிறேன் அது உங்களுக்காக மட்டுமே தவிர பொதுமக்களுக்கு கிடையாது முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் யாருக்கும் பகிர வேண்டாம்

Balaji Haasan Commune

07 Feb, 16:04


இங்கு பதியப்படும் அனைத்து பதிவுகளும் உங்களுக்காக மட்டுமே தயவுசெய்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் யாருக்கும் பகிர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

Balaji Haasan Commune

07 Feb, 15:52


ரிஷப ராசி பலன்கள்-2025


சாமானியன்:
1. வீட்டிற்கு அருகே உள்ள ராமர் மற்றும் கிருஷ்ணர் சேர்ந்து இருக்கும் கோவில் சென்று வழிபட வேண்டும். புதன் கிழமை அன்று குறைந்தது மாதம் ஒருமுறையேனும், துளசி கொடுத்து

2.வீட்டு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
புதன் தோறும் குறைந்தது மாதம் இருமுறை

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION

1.ராமேஸ்வரம் சென்று விடியற்காலை 4:00 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனம் மற்றும், கடலில் குளித்து பின் 21 கிணற்றில் குளிக்க வேண்டும் பின் ராமநாதஸ்வாமியை தரிசிக்க வேண்டும் இதை திங்கள் கிழமை அன்று செய்ய வேண்டும்.

2.ராகவேந்திரா ஸ்வாமியை ( மந்த்ராலயா ) சென்று சனிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.



ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

1.சூரியனார் கோவில் ஞாயிறு அன்று சென்று தரிசனம் செய்து மாலையில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். (சூரியனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. )

2.வீட்டு அருகில் உள்ள சிவன் கோவிலில் சென்று அங்கிருக்கும் சிவனுக்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். அணைத்து ஞாயிறு அன்றும்

3. சிவன் கோவிலில் சென்று அங்கிருக்கும் நவகிரகத்தில் உள்ள சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். அணைத்து ஞாயிறு அன்றும்

Balaji Haasan Commune

07 Feb, 15:42


மேஷம் ராசி பலன்கள்- 2025


சாமானியன்:
1.குலதெய்வ வழிபாடு முக்கியம், மாதம் ஒருமுறை வழிபாடு செயுங்கள் வெளி ஊரில் இருப்பவர்கள் குறைந்தது 1 வருடம் ஒருமுறை எனும் வழிபடுங்கள் செய்யுங்கள்,

2. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ள லட்சுமி
( தாயார் ) வழிபாடு வாரம் தோறும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்
( வெள்ளிக்கிழமை நெய் விளக்கு ஏற்ற வேண்டும். )

3. அங்காள பரமேஸ்வரி வெள்ளிக்கிழமை தோறும் வழிபட வேண்டும். குறைந்தது மாதம் ஒருமுறையேனும்

தொழிலதிபர்கள் : VIP / BIG SHOT/ SUPERIOR POSITION IN DESIGNATION
================================================================

1 .சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தங்க ஓட்டை பார்க்க வேண்டும்.


2. குலதெய்வ வழிபாடு முக்கியம். அம்மாவாசை அன்று (வெளி ஊரில் வசிப்பவர்கள் குறைந்தது 6 மாதம் ஒருமுறை )

3.திருப்பதி - திங்கள் அன்று சென்று அலிபிறி இல் இருந்து முடிந்தால் நடந்து மலை ஏறி காளி கோபுரம் வழியாக சென்று வழிபட வேண்டும்.
அங்கு இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வராக மூர்த்தி கும்பிட வேண்டும்.
அதன் பின் பெருமாளை தரிசிக்க வேண்டும்

ஒரு சுப நிகழ்வு / ஒரு முக்கிய வேலைக்காக காத்து இருப்பவர்கள்-2025:

குலதெய்வ வழிபாடு முக்கியம் (. அம்மாவாசை அன்று (வெளி ஊரில் வசிப்பவர்கள் குறைந்தது 6 மாதம் ஒருமுறை )


வெள்ளிக்கிழமை தோறும் திரௌபதி வழிபாடு செய்ய வேண்டும்.
ATLEAST ONCE IN MONTH

Balaji Haasan Commune

06 Jan, 01:05


https://www.facebook.com/share/p/15U8ye4wtG/

Balaji Haasan Commune

31 Dec, 10:30


நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை

விஜய் டிவியில்

" நீயா - நானா "

சிறப்பு நிகழ்ச்சியில்

2025 - 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்கின்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன்

வாய்ப்பு உள்ளவர்கள் பார்க்கவும்
நன்றி..

Balaji Haasan Commune

30 Dec, 09:48


நாளை இரவு
12 ராசிகளுக்கான

சாமானியர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

முக்கிய நபர்கள் , தொழிலதிபர்கள் ,உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் செய்ய வேண்டிய பரிகாரம்

2025 - ஒரு முக்கிய நிகழ்வு அல்லது ஒரு இலக்கை நோக்கி அதை அடைய முயற்சி நபர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

என மூன்றும் தெளிவாக Script
வெளிவரும்

Balaji Haasan Commune

30 Dec, 09:46


2025 - மீனம் ராசி க்கான
2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

பூரட்டாதி- 4 - உத்திரட்டாதி , ரேவதி. ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.
.
.

https://youtu.be/8nEPmPKXYBI?si=41cusr13b3izL1Fg

.

#Meenamrasi
#meenam
#மீனம்
#Pisces

Balaji Haasan Commune

30 Dec, 08:28


2025 - கும்பம் ராசி க்கான
2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

அவிட்டம் - 3,4 - சதயம் , பூரட்டாதி- 1,2,3 - ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.
.
.

https://youtu.be/t2XuRyZBRPU?si=-dyj7ShlzbDO1oIr

.

#KumbaRasi
#kumbam
#கும்பம்
#Aquarius

Balaji Haasan Commune

30 Dec, 07:07


2025 - மகரம் ராசி க்கான
2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

உத்திராடம் - 2,3,4 , திருவோணம் , அவிட்டம் - 1,2 ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.
.
.


https://youtu.be/3zH164yioJU?si=8OexJZ8-PTRIH1mu

.

#magara_rasi
#magaram
#மகரம்
#Capricorn

Balaji Haasan Commune

30 Dec, 06:01


2025 - தனுசு ராசி க்கான
2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

மூலம் , பூராடம் , உத்திராடம் -1, ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.
.
.

https://youtu.be/_PpExfj-YH4?si=oX99Z_Im0hnK-B8S

.

#dhanusu_rasi
#dhabusu
#தனுசு
#sagaritus

Balaji Haasan Commune

29 Dec, 15:14


2025 - விருச்சிகம் ராசி க்கான
2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

விசாகம்‌ 4 - பாதம் , அனுஷம் , கேட்டை ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.
.
.

https://youtu.be/kXrosYZm7T4?si=x3TumuBbMtcFsIIB


.

#thulamrasipalan
#virutchigam
#விருட்சிகம்
#scorpian

Balaji Haasan Commune

29 Dec, 14:41


2025 - துலாம் ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

சித்திரை 3,4 பாதம் , சுவாதி , விசாகம்‌ 1,2,3 - பாதம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.
.
.


https://youtu.be/MEKq6l3w34k?si=cqYOT2Dd6kJJLrEV



.

#thulamrasipalan
#thulam
#துலாம்
#Libra

Balaji Haasan Commune

29 Dec, 12:51


2025 - கன்னி ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

உத்திரம் 2,3,4 , அஸ்தம் , சித்திரை 1,2 - பாதம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.

https://youtu.be/MygdXNPRF3o?si=BOAR4aJDqprmatQC

.

#kannirasi
#Kanni_Rasi
#கன்னி‌
#Virgo

Balaji Haasan Commune

29 Dec, 10:43


2025 - சிம்மம் ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.

https://youtu.be/cmbL3q242Mg?si=JQuNNywA3tnJnBdS

.

#simam
#simmamrasi
#சிம்மம்

Balaji Haasan Commune

29 Dec, 08:54


2025 - கடகம் ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

புனர்பூசம் 4 பாதம் , பூசம் , ஆயில்யம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

.

https://youtu.be/d9xMzUAyFNg?si=bI7F6w2Bw09ppCIM

.

#kadagamrasi
#kadagam
#கடகம்

Balaji Haasan Commune

28 Dec, 13:48


2025 - மிதுனம் ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

மிருகசீரிடம் 3,4 பாதம், திருவாதுறை , புனர்பூசம் 1,2,3 பாதம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

https://youtu.be/QupG71cJONs?si=WdBJbJqJIdnmbjfx
.
.

#mithunamrasi
#mithunam
#மிதுனம்

Balaji Haasan Commune

28 Dec, 11:20


2025 - ரிஷபம் ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

கிருத்திகை இரண்டு மூன்று நான்கு - பாதம், ரோகிணி ,
மிருகசீரிடம் ஒன்று இரண்டு ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

https://youtu.be/-ee9-zcjQXU?si=RGMFtoFRhcxPx3ML

Balaji Haasan Commune

28 Dec, 05:37


2025 - மேஷ ராசி க்கான
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

நட்சத்திர ரீதியாக

அஸ்வினி பரணி கிருத்திகை ஒன்றாம் பாதம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நட்சத்திர பலன்கள்

மிகத் தெளிவான விரிவான பலன்கள் மற்றும் பரிகாரங்களுடன்

https://youtu.be/eT3dXERP4-4?si=QeRN_Rv5O3TneeTG

Balaji Haasan Commune

30 Oct, 19:43


அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு முழுக்க வெற்றியும் லாபமும் நிறைந்த ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்

லட்சுமி கடாட்சம் முழுமையாக கிடைக்க வாழ்த்துகிறேன்

Balaji Haasan Commune

30 Oct, 13:04


நாளை (தீபாவளி )
அன்று அதிகாலை எழுந்து,

நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்.

நல்லெண்ணெய் குளியல் மிக அவசியம்....

மற்ற அம்மாவாசை தினங்களில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது

ஆனால் ஐப்பசியில் வரும் அமாவாசை தீபாவளி அன்று குளிக்கலாம் காரணம் சூரியன் நீசம்

எள் என்னெய் - சனி
அமாவாசை - ( சூரியன்- சந்திரன் சேர்க்கை ஒரே ராசியில் )

நீராடுதல் சந்திரன் காரகம்.

எனவே தீபாவளியன்று நீராடுதல் என்னை தேய்த்து

சனியின் காரகம் தொழில் ஆகும்

தொழில் மேம்படும் ஒருவருக்கு

தொழில் சிறந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும்.

நல்லெண்ணெய் குளியல்.

அஷ்டம சனி ,ஏழரை சனி,கண்டக சனி தோசங்களை போக்கும்..!

ஆனால் சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் எனவே அதற்கு இன்று நேரமாக தூங்குங்கள்.

சிறந்த நேரம்

நல்லெண்ணெய் தேய்க்க

31.10.2024

4.50 Am to 5.40 Am

#Balaji_Haasan #Balaji_Hassan #Balaji_Hasan
#Balaji #Astrologer_Balaji
#balaji_jothidar #balaji_astrology #oilbath

Balaji Haasan Commune

19 Jun, 12:12


பாச்சல் கடந்தப்பட்டி
அங்காள பரமேஸ்வரி குல தொண்டர்களாக

குலதெய்வத்தின் பேரருளால்

எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மைதிலியும் , குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

உங்களின் ஆசி எங்களுக்கு பிறந்த புதிய குழந்தைக்கு வேண்டும்

ஆதித்யா பாலாஜி அண்ணன் ஆகிவிட்டான்

இந்த சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து
கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

Balaji Haasan Commune

17 Jun, 03:53


இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Wishing all my Muslim brothers and sisters a hearty Eid-al-Adha!

#Bakrid #EidMubarak

Balaji Haasan Commune

01 May, 08:10


இன்று மாலை 4.30 PM மணி முதல் 6:30 PM மணி வரை
உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில்

இன்று மாலை மேசத்திலிருந்து ரிஷபத்திற்கு மாறப்போகும் குரு பகவானின் பற்றிய சிறப்பு காணொளி நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறேன்

12 ராசிகளுக்கும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன

இந்த குரு பெயர்ச்சியால் அதிகம் பலன் அடையக் கூடிய ராசிகள் எது ??

இந்த குரு பெயர்ச்சியால் அதிகம் பாதிப்பு அடையக்கூடிய ராசிகள் எது ???

பாதிப்படையும் ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ??

என்பன பல கேள்விகளுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறேன் உங்கள் கேள்விகளை கீழ்கண்ட
தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளை கேட்கலாம் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்

Balaji Haasan Commune

28 Apr, 05:41


இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
மதியம் 12.30 மணிக்கு

" தமிழா தமிழா " என்னும் நிகழ்ச்சியில்

கலந்துகொண்டு குரு பெயர்ச்சி பற்றி பேசி இருக்கிறேன்.

எனக்கு வாய்ப்பளித்த நான்கு ராசியை பற்றி பேசி இருக்கிறேன் வாய்ப்புள்ளவர்கள்
மறக்காமல் பார்க்கவும் நன்றி

Balaji Haasan Commune

26 Apr, 20:45


வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

தமிழா தமிழா என்கின்ற நிகழ்ச்சியில் குரு பெயர்ச்சி பற்றிய 12 ராசிகளுக்குமான பலன்களில் பங்கேற்றேன் தயவு செய்து அனைவரும் பார்க்கவும் நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிறேன்

Balaji Haasan Commune

26 Apr, 20:44


Plz watch
Zee Tamil

Tamizha Thamizha Show
Tmro ( Sunday )
Noon 12.30 - 1.30 Pm

Balaji Haasan Commune

14 Apr, 06:34


அனைத்து முகநூல் உறவுகளுக்கும்
சம வயதில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும்
தாய் வயதில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும்
எனது தந்தை வயதில் உள்ள அனைத்து பெரியோர்களுக்கும்.,
வளரும் இளம் குழந்தைகளுக்கு
என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்தக் குரோதி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் வருவதால் இன்று வாய்ப்புள்ள அனைவரும் வீட்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று வருவது இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் ராஜா போல இருப்பீர்கள்

Balaji Haasan Commune

24 Mar, 04:24


நாளை சந்திர கிரகணம்
( 25.3.2024 )

சோபக்கிருது வருடம் பங்குனி மாதம் 12ஆம் தேதி ( 25. 3. 2024 ) அஸ்தம் நட்சத்திரத்தில் பௌர்ணமி
( கேது க்ரஸ்த சந்திர கிரகணம் )
இந்திய நேரப்படி திங்கட்கிழமை

காலை 10 மணி 21 நிமிடம் தொடங்கி

மதியம் 12 மணி 45 நிமிடங்கள் முழுமையான கிரகம் ஏற்பட்டு

மாலை 3 மணி‌ 6 நிமிடங்களில் கிரகணம் முடிவடைகிறது

இது இந்தியாவில் எதுவும் தெரியாது

கர்ப்ப ஸ்திரிகள் ( கர்ப்பம் அடைந்த பெண்கள் மட்டும் )

சந்திர கிரகண நேரம் காலை 10 மணி முதல் கிரகண முடியும் மதியம் மூன்று மணி வரை

எதுவும் சாப்பிடாமல் ஓய்வில் இருப்பது நல்லது

காலை 8 மணிக்கு உணவருந்தி விடுவது சாலச் சிறந்தது

முடிந்தவரை வீட்டிலேயே ஓய்வெடுப்பது உத்தமம்

மதியம் 3:20 மணிக்கு மேல் ( முழுமையான கிரகனம் முடிந்த பிறகு‌)
குளித்துவிட்டு விநாயகரை வழிபட்டு அதன் பிறகு தயார் செய்த உணவை சாப்பிடுவது நல்லது

உங்களுக்குத் தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் யாராவது கர்ப்பமுற்று இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்

என்றும்
உங்கள் நலன்‌ விரும்பி

P. Balaji Haasan

Balaji Haasan Commune

23 Mar, 17:59


Plz don't send any
Direct telegram msgs
To me

Balaji Haasan Commune

15 Mar, 04:01


Mesham

https://youtu.be/Nns0rbXPEeE?si=PoEVDtThkDr3zUEo

Rishabam

https://youtu.be/z9RMCK9jVAw?si=Tn1ya-zOE-XlbNVM

Mithunam

https://youtu.be/LhXyEDbYosw?si=9M9hlsU6PdLe1tSd

Kadagam

https://youtu.be/dyH9WU4zxSU?si=K6Vxx2AeC9QtE8rb

Balaji Haasan Commune

15 Mar, 04:00


Introduction
About thanthriga parigaram

https://youtu.be/8QaY3IJY2to?si=mSRgnXlHzvo0PWh9

Balaji Haasan Commune

14 Jan, 17:40


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

ஸ்ரீ பாலாஜி ஜோதிட நிலையம் சார்பாக

வாடிக்கையாளர்கள்,
நண்பர்கள்
மற்றும் பின் தொடர்பாளர்கள்

அனைவருக்கும் தித்திப்பான

பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் காலை :- 6.30 Am to 8.15 Am

10.45 - 11.50 Am
வரை
நல்ல நேரம்.

Balaji Haasan Commune

31 Dec, 16:09


TV program Update

1.1.2024

7.30 - 8.30 - Raj TV
8.30 - 9.30 - Puthu Yugam

10 Pm - Puthu yugam

Balaji Haasan Commune

31 Dec, 05:25


Rishabam - 2024

https://youtu.be/4ioLCvmqxMQ?si=uyLgl5v6HDBJj9Na