Able Arrows (share market) @ablearrows Channel on Telegram

Able Arrows (share market)

@ablearrows


Share market education in Tamil

Able Arrows (share market) (English)

Welcome to Able Arrows, your go-to Telegram channel for all things related to the share market! If you're looking to stay informed about the latest trends, investment opportunities, and market analysis, then this is the channel for you. With a team of experienced professionals and experts in the field, Able Arrows aims to provide valuable insights and recommendations to help you navigate the world of share trading with confidence. Whether you're a seasoned investor or just starting out, our channel offers something for everyone. Join us today at @ablearrows and take your share market knowledge to the next level. Stay ahead of the game and make informed decisions with Able Arrows!

Able Arrows (share market)

15 Jan, 03:03


திருவிழாவுக்கு கூட்டிட்டுப் போயிட்டு, கேட்ட பொம்மை வாங்கிக் கொடுக்காவிட்டால், வீட்டுக்கு வராமல் பிடித்திருந்த கையை விட்டுட்டு பொம்மைக் கடை பக்கமே ஓடும் அடமெண்ட் குழந்தை மாதிரி மேலே போனாலும் விடாமல், 23050 ஐத் தொட்டுட்டு தான் மேலே போவேன்னு வந்து தொட்டுட்டார்.

கீழே இருக்கும் எல்லா டார்கெட்டையும் முடிச்சுட்டாரு நிஃப்டி. திங்கட்கிழமை இண்ட்ராடே டார்கெட் மட்டும் கொஞ்சம் இருக்கு. ஆனால், அது அவசியம் முடிக்கணும்னு இல்லை)

இன்னொரு விசயம், இப்ப ஃபார்ம் ஆயிருக்கும் பேட்டர்ன் ஏற்கனவே ரெண்டு தடவை ஆயிருக்கு. அதாவது ஒரு பெரிய செல்லிங் அடுத்த நாள் ஓப்பன் அப் - ஹால்ட். இந்த முறை அதிகபட்சமாக 23050 ஐ ரீ டெஸ்ட் பண்ணலாம்.

யூட்யூப் ஜோதிடர்கள் ஸ்டைலில் சொல்லணும்னா, காளை ராசி ட்ரேடர்களே... இனி உங்கள் காட்டில் பண மழைதான். ஒரே விசயம். இறங்கும் போது காட்டிய பொறுமையை ஏறும் போதும் காட்டி, முழு லாபத்தையும் அனுபவியுங்கள்.

பொங்கல் நல்வாழ்த்துகள்.

15-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

13 Jan, 02:49


இன்றைக்கு Gap down open தான். 23240 நிச்சியம் என்று தெரிகிறது. அப்புறம் என்ன...? வந்தது தான் வந்துட்டோம் பக்கத்திலிருக்கும் 23050 டார்கெட்டையும் முடிச்சுட்டு போயிடலாம்னு அதையும் தொட்டுட்டு கிளம்பலாம்.

விசயம் என்னன்னா பொதுவாகவே நம்முடைய பொறுமையை இழக்க வைக்கும் இடம் இது தான். இந்த வலியைப் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக் கொண்டால் மார்கெட்டில் ஜெயித்து விடலாம். காரணம், இந்த மாதிரியான இடத்தில் பொறுமை தாங்காமல் சரி விற்று விட்டு கீழே வாங்கிக் கொள்வோம் என்று விற்றவுடன் தான் மார்கெட் மேலே போயிடும். அதுக்கப்புறம் தான் அந்த ஃபேமஸ் டயலாக்....
“நான் வாங்கினா மட்ட்ட்டும் இறங்கிடுது. நான் வித்தவுடன் ஏறிடுது”.

இன்னும் நான்கு நாட்கள் மார்கெட் லீவ்னு நினைச்சுக்குங்க.... ஏனெனில் இது ஸ்விங் ட்ரேடர்கள் ஷார்ட் போகும் நேரமில்லை. போய் பொங்கலைக் கொண்டாடிட்டு வாங்க மார்கெட் இனிப்பா இருக்கும்.

அனைவருக்கும் போகித் திருநாள் நல்வாழ்த்துகள்.

13-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

10 Jan, 02:57


மூணு மாசமா தொடர்ந்து செல்லிங் நடந்திருக்கு. இது போன்ற நேரத்தில் பட்ஜெட் டைம்ல ஒரு சின்ன ரெக்கவரி கொடுத்து, ந்யுட்ரலா நின்று அப்புறம் ஏறுவது தான் வழக்கம்.

அதன் படி, இன்றைக்கு 24000 பக்கம் நிஃப்டி க்ளோஸாகணும். இல்லைனா 23300 - 23050 வரை போயிட்டு பிறகு இந்த மாதக் க்ளோஸ் 23600-700 பக்கம் க்ளோஸாகணும். இந்த ரெண்டு வாய்ப்பைத் தவிர பெரிய வாய்ப்பு ஏதும் இல்லை.

ஏனெனில் பேங்க் நிஃப்டி அதன் டார்கெட்டை முடித்திருக்கிறது. ( டிசம்பர் மாதம் போட்ட வீடியோவில் பேங்க் நிஃப்டி டார்கெட் 49250 என்று சொல்லியிருந்தோம்) எனவே இன்றைக்கு ஐ.டி செக்டாரும் பேங்க் செக்டாரும் தான் மார்கெட்டின் திசையை முடிவு செய்யப் போகிறது.

இன்றைய சப்போர்ட் 23310 ரெஸிஸ்டன் 24050.
ரெண்டும் பக்கத்தில் இல்லை. அதனால் பெரிய வாலட்டைலை எதிர்பார்க்கலாம்.

10-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

09 Jan, 02:57


ஸ்மார்ட் ரெக்கவரி. இது போன்ற ரெக்கவரி நல்ல புல்லிஷ்க்கு அடையாளம். நேற்றைய பேட்டர்னும் 24000க்கு போவதாகவே காட்டுகிறது.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் சப்போர்ட் நேற்று சொன்னதே தான். 23800க்கு மேலே போனால், 24050, 23550க்கு கீழே க்ளோஸானால், 23300.

09-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

08 Jan, 02:15


நேற்றைய இண்ட்ரா டே சார்ட் படி நிஃப்டி 24930 வரை போயிருந்திருக்கணும். இடையில் 23820 என்ற ரெஸிஸ்டன்ஸ் நிஃப்டியைக் கீழே தள்ளி விட்டுடுச்சு. சரி பரவாயில்லை மன்னித்து விடுவோம். டார்கெட் வைச்சுட்டார்ல முடிச்சுடுவார் என்று நம்புவோம்.

இன்றைய மார்கெட் சிம்பிள்.
23800க்கு மேலே நின்றால் 24000 ஐ தாண்டிடும்.
23550க்கு கீழே நின்றால் 23320 ஐத் தொட்டு விடும்.

08-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

07 Jan, 04:10


இன்றைக்கு நிஃப்டி 23930 தொட பெரிய வாய்ப்பிருக்கிறது. இதுவரை காளைகளுக்கு மிகச் சாதகமான சார்ட் அமைந்துள்ளது.

இன்றைய நிலைமையில் 23710க்கு கீழே நின்றால் மட்டுமே செல்லிங் வரலாம்.

Able Arrows (share market)

07 Jan, 02:58


சோதிக்கிறாய்ங்களே....பரமா! என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இது போன்ற சூழலில் தான் பொறுமை அவசியம் தேவைப் படுகிறது. அதாவது, லாங்கும் போக முடியாமல் ஷார்டும் போக முடியாமல் அலைக்கழிக்கப்படும் சூழல்.

ஆனால், நான் இப்பொழுது பக்கா புல் ஆக இருக்கிறேன். அதாவது, இந்த வாலட்டைல் 23450 மற்றும் 23350 என்ற அளவில் இப்பொழுது திரும்ப அதிக வாய்ப்பிருக்கிறது. பேங்க் நிஃப்டி கொடுக்கும் பேனிக்கால் தான் மற்ற ஸ்டாக்குகளும் அதிகமாக விழுகிறது. நண்பர் ராம்கி கோயம்புத்தூர் கமெண்ட்டில் குறிப்பிட்டது போல, என்ன அதிகபட்சம் 23100 வருவியா... வாடா பார்த்துக்கலாம்... 😂😂😂

ஆனால், ஒன்று மக்களே... இந்த மாசம் மார்கெட் பாஸிடிவாகத் தான் முடியும். இப்பொழுது நடக்கும் வாலட்டைலுக்கு பயந்து லாங் பொசிஸனைக் க்ளோஸ் செய்பவர்கள் எல்லாம் மாசக் கடைசியில் வருத்தப்படுவார்கள். 27000 என்பது நிச்சியம் 29000 என்பது இப்பொழுதைய லட்சியம்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 23820 - 24000
சப்போர்ட் - 23452 -23350
அதுக்கும் கீழே போனால்... அதான் உங்களுக்கே தெரியும் தானே?

07-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

06 Jan, 03:00


நிஃப்டி மேல் நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சின்ன ப்ராஃபிட் புக்கிங். மார்கெட் மேலே ஏறுவதற்கு சாதகமான விசயம் தான். பேங்க் இண்டெக்ஸ் தான் கொஞ்சம் வீக்காக இருக்கிறது. ( ஹெச்டிஎஃப்சி & ஐசிஐசிஐ ஆகிய இரண்டு ஸ்டாக்குகள் தான் கீழே இழுக்கின்றன).

மற்றபடி சின்னச் சின்ன வாலட்டைல்களுடன் நிஃப்டி மேலே செல்லத் தான் வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 24190 - 24400
சப்போர்ட் 23960 - 23750.

03-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

03 Jan, 03:03


நேற்று நடந்த ஷார்ட் கவரிங் போன மாசக் கடைசியில் நடந்திருக்க வேண்டியது. அப்படி நடக்காமல் போனதற்கு நிஃப்டி ஒரு காரணம் வைத்திருக்கிறார். பிறகு சொல்கிறேன்.

ஷார்ட் கவரிங்குடன் கொஞ்சம் ஃப்ரெஷ் பையும் நடந்திருப்பது நல்ல செய்தி தான். இன்றைய க்ளோஸ் 24050க்கு மேல் க்ளோஸானால் கூட போதும், இந்த ரேலி தொடரும். ஒருவேளை 23980க்கு கீழ் க்ளோஸானால் காளைகளுக்கு இன்னும் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.

நேற்று ஓடிய ஓட்டத்திற்கு இன்றைக்கு காலையில் ஒரு சின்ன ப்ராஃபிட் புக்கிங் வாலட்டைல் இருக்கலாம்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 24220 - 24400
சப்போர்ட் 24050 - 23880

03-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

02 Jan, 02:45


சரியா ரெஸிஸ்டன்ஸ்க்கு கீழே வந்து உட்கார்ந்துட்டார் நிஃப்டி. 23760 ஐ நேற்றைக்கு மட்டும் இரண்டு முறை உடைத்தும் கீழே வந்து செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும், நிஃப்டி மெதுவாக பாசிடிவ் பக்கமாக திரும்பத் தொடங்கியிருக்கிறது.

மார்கெட் திரும்பும் முன் இந்த மாதிரியான வாலட்டைல்கள் சகஜம் தான். நல்ல ஓவர் சோல்ட் ஏரியாவில் இருப்பதால் குறைந்தபட்சம் 24750 வரையாவது நிஃப்டி சென்றே ஆக வேண்டியிருக்கிறது.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 23840 - 23940 (இந்த 23940த் தாண்டிவிட்டால் நல்ல ஷார்ட் கவரிங் வரும்)
சப்போர்ட் - 23640 - 23560 - 23450

02-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

01 Jan, 02:43


நல்ல காலம் பிறக்கிறது காளைகளுக்கு...

2024ம் ஆண்டின் க்ளோஸ் காளைகளுக்குச் சாதகமாகவே முடிந்திருக்கிறது. அத்துடன் 27060 என்ற டார்கெட்டை ஃபிக்ஸ் செய்திருக்கிறது. FMCG இண்டெக்ஸ் தவிர மற்ற எல்லா ஸ்டாக்குகளும் பாசிடிவாகவே இருக்கிறது.

டிசம்பர் மாத க்ளோஸ் மட்டும் கொஞ்சம் நெகடிவாக இருப்பதால் இன்னுமொரு சின்ன வாலட்டைல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபி மற்றும் ஹெச்டிஎஃப்சி ஸ்டாக்குகள் ரொம்ப நன்றாக ஏறுவதற்கான சார்ட் பேட்டர்ன் அமைந்திருக்கிறது. (இதைப் படித்து விட்டு நாளை காலை வந்து நீங்க சொன்ன மாதிரி 27000 இன்னும் வரலைனு கமெண்ட் போடாதீர்கள்). இப்பொழுதைக்கு நிஃப்டி 24720 ஐக் கடந்து நிற்க வேண்டும். அது வரை மார்கெட் சற்றே வாலட்டைலுடன் இருக்கும்.

அதுவும் குறிப்பாக 23450க்கு கீழே க்ளோஸானால் மட்டும் 23300 வரை செல்லும். அப்படி செல்ல நேரந்தால் பழைய டார்கெட்டான 23100 ஐத் தொட பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி, இப்பொழுதைக்கு மார்கெட்டில் பெரிய கரெக்‌ஷன் வருவதற்கான வாய்ப்பு தெரியவில்லை. இது வாங்கும் நேரம்.

நேற்றைய க்ளோஸ் 23453 வரை வந்திருக்க வேண்டும் ஆனால், 23460டன் திரும்பி இருக்கிறது.
இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 23760 - 23920
சப்போர்ட் 23450 - 23350

நண்பர்கள் அனைவருக்கும் 2025ம் ஆண்டு நல்லாண்டாகவும் செல்வங்கள் அனைத்தும் நிறைய சேர இறைவனைப் பிரார்தித்துக் கொள்கிறேன். Happy New Year 2025.

01-1-25
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

31 Dec, 00:47


இன்றைக்கு 23900க்கு மேல் க்ளோஸாகும் என்ற நம்பிக்கை குறைந்திருக்கிறது. அதே நேரம் நேற்றைய க்ளோஸின் கணக்குபடி 23450 என்ற இலக்கை செட் பண்ணியிருக்கிறது நிஃப்டி.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 23750. 23900
சப்போர்ட் - 23540, 23450

31-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

30 Dec, 00:10


இன்னும் ரெண்டே நாள் 24140 - 24200 ல் இந்த மாதம் க்ளோஸ் ஆகும்.

ரெஸிஸ்டன்ஸ் அதே 24860. அதைத் தாண்டினால், 24950 சப்போர்ட் அதே 23650. - அதற்கு கீழே 23580.

கடைசி ரெண்டு நாளில் ஷார்ட் கவரிங் ரேலிக்கு அதிக வாய்ப்பு.

30-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

27 Dec, 02:51


இன்றைக்கும் அதே 23740-50ல் க்ளோஸாகத்தான் அதிக வாய்ப்புள்ளது.

ரெஸிஸ்டன்ஸ் அதே 23870 சப்போர்ட் அதே 23650.

எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் தான் போல.

27-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

24 Dec, 02:44


ஒருவகையான 2Bullish harami ஃபார்ம் ஆகியிருக்கு. இது காளைகளுக்கு சாதகமான விஷயம்.

இனி நிஃப்டி 23870க்கு மேல் க்ளோஸானால், 24200 நிச்சியம். ஒரு ஷார்ட் கவரிங் வந்தால் கூட போதும். இந்த மாத க்ளோஸிங் 24200 அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 23870. சப்போர்ட் 23650.

24-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

23 Dec, 02:47


உலக பங்குச் சந்தைகள் எல்லாம் கொஞ்சம் பச்சையாக சிரித்திருக்கிறார்கள். அதனால், நம்ம நிஃப்டியும் ஒரு கேப் அப்பாக ஓப்பன் ஆவார். ஒரு ஷார்ட் கவரிங் கான வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் ஆறு ட்ரேடிங் நாட்கள் இருக்கின்றன இந்த மாதம் க்ளோஸிங்கிற்கு. அதற்குள் குறைந்தபட்சம் 23900க்கு மேலே க்ளோஸாக வேண்டும். 24150 பக்கமாக க்ளோஸாக பெரிய வாய்ப்பு இருக்கிறது.

இன்றைக்கு காலையில் கேப் அப்-ஆக ஓப்பன் ஆகியதும் ஒரு சின்ன ப்ராஃபிட் புக்கிங் வந்து மீண்டும் மேலே போகலாம். அது நார்மல்.
ஒருவேளை ப்ராஃபிட் புக்கிங்கே இடம் கொடுக்காமல் மேலே போயிட்டே இருந்தால் அது பியர் ரிலீஃப் ரேலி.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 23800 & 23950 ; சப்போர்ட் - 23530 - 450 - 350.

23-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

20 Dec, 04:47


ஒரு ஷார்ட் கவரிங். அடுத்து ஒரு ஹால்ட் அதற்கடுத்த ஸ்டிக் 200 பாய்ண்ட்ஸ் டவுன். அந்த ஸ்டிக்கில் நடந்ததற்குப் பெயர் தான் பாஸ்கெட் செல்லிங்.

பெரிய HNI யாரோ அவரோட போர்ட்ஃபோலியோவை ஸ்கொயர் ஆஃப் பண்ணியிருக்கார் என்று அர்த்தம்.

Able Arrows (share market)

20 Dec, 02:53


இன்றைக்கு நிஃப்டி 24180க்கு மேல் க்ளோஸ் ஆகிவிட்டால் போதும், அடுத்த வாரத்திலிருந்து நிஃப்டி மேலே பறக்க ஆரம்பித்து விடுவார்.

ஒரே பிரச்சினை மார்கெட்டில் வால்யூமே இல்லை. ஒன்று அல்லது இரண்டு ஷார்ட் கவரிங் நடக்க வேண்டியிருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது எக்ஸ்பைரி நாளுக்கு.

ஆனால் இந்த மாதக் க்ளோஸிங் 24550க்கு மேல் இருந்தால், நிஃப்டி 27000 நோக்கி பறக்க ஆரம்பிக்கும்.

இன்றைய சப்போர்ட் 23850 ரெஸிஸ்டன் 24180.

20-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

19 Dec, 07:44


பயபுள்ளைக 24000 கால்ஸ் ஐ நிறைய ரைட் பண்ணியிருக்கானுக போல. அதைத் தாண்ட விட மாட்ரானுக.

டிசிஎஸ் காலைல நல்லா பெர்ஃபாம் பண்ணிட்டிருந்தது. ஓ... நீ தான் மார்கெட்டை தூக்கிட்டிருக்கியான்னு சொல்லிட்டு டிசிஎஸ் பக்கம் திரும்பி துவை துவைனு துவைச்சுட்டிருக்கானுவ.

காலைல இருந்து ரிலையன்ஸ் / ஐசிஐசி/இன்ஃபி மூன்றையும் கண்ட்ரோலிலேயே வைத்திருக்கிறார்கள். 2 மணிக்கு மேலே கரடிகள் ரிலாக்ஸ் ஆகலாம். க்ளோஸிங் 24150க்கு மேலேயா கீழேயா என்பது தான் இப்ப மேட்டர்.

பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

Able Arrows (share market)

19 Dec, 02:50


இன்னிக்கு gap down ஓப்பன் தான் என்பது நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனால், அங்கே இருந்து நிஃப்டி ரெக்கவர் ஆக பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பது கித்னா பேருக்கு மாலும் ஹை?

மார்கெட் கேப் அப் / கேப் டவுன் ஆகும் போதெல்லாம் நம் மக்கள் நிறைய லாஸ் பண்ணுவார்கள். காரணம் Panic தான். டெக்னிகல் தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. முதலில் எமோஷன் ஆகாமல் மார்கெட் செட்டில் ஆகும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்க. உங்க எல்லாருக்குக்குமே தெரியும். மார்கெட் எகிறி குதிச்சாலும் பள்ளத்தில் பாய்ந்தாலும், சம்பவம் நடந்த இடத்திற்கும் மீண்டும் வந்துட்டு தான் போகும் என்று.

ஏற்கனவே மார்கெட் இரண்டு நாட்களாக விழுந்திருப்பதால், இன்றைய கேப் டவுன்க்குப் பிறகு நிதானமாக மேலே எழும்ப பெரிய வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். பணம் நட்டமாகக் கூடாது என்றால், கொஞ்சம் டைம் நட்டம் ஆனால் பரவாயில்லை.

இன்றைய சப்போர்ட்கள் 23950 - 850
ரெஸிஸ்டன்ஸ்.... 24160

19-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

18 Dec, 02:55


கரணம் தப்பினால் மரணம் எனும் ரீதியில் தான் நேற்றைய கடைசி ஒரு மணி நேர காளை&கரடி சண்டை நடந்தது. ஆனால், ஆக்ரோஷமாக இல்லாமல், கல்வான்ல சீன-இந்திய வீரர்கள் போல கையால் அடிச்சுக்கிட்டாங்க.

ஆனால், கடைசி அரை மணி நேரத்தில் காளைகள் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்தனர். 24320க்கு மேல் க்ளோஸாகி தப்பித்தது. இன்றைக்கும் மார்கெட்டில் வாலட்டைல் இருக்கும். க்ளோஸிங் 24360க்கு மேல் இருந்தால் போதும்.

இன்றைய சப்போர்ட் 24360 -ரெஸிஸ்டன்ஸ் 24500- 630.

18-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

17 Dec, 08:54


நல்ல வால்யூம் இல்லாமல் மார்கெட் நகர்ந்து கொண்டிருக்கிறது. மிகவும் முக்கியமான சப்போர்ட் அருகே ட்ரேட் நடந்து கொண்டிருப்பதால் க்ளோஸிங் வைத்து தான் அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்ய முடியும்.

வால்யூம் இல்லாத செல்லிங்கோ / பையிங்கோ மார்கெட் டைரக்‌ஷனை முடிவு செய்யாது.

24295க்கு கீழே க்ளோஸ் ஆனால் மட்டுமே காளைகளுக்கு கொஞ்சம் சிக்கல்.

நாளைக்கே கூட மார்கெட் மீண்டும் மேலே செல்லலாம். இந்த மாதத்தின் கடைசி வாரம் தான் நிஜமான மார்கெட் டைரக்‌ஷனை சொல்லும். அதுவரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

Able Arrows (share market)

17 Dec, 02:35


என்னதான் செல்லிங் வந்தாலும் நேற்று சரியா சப்போர்ட்க்கு மேலே வந்து உட்கார்ந்துட்டா நிஃப்டி.

இன்றைய சப்போர்ட் அதே தான் 24630 ஆனால், ரெஸிஸ்டன்ஸ் மட்டும் மாறியிருக்கு 24950.

இருந்தாலும் 24860ஐக் கடக்க கொஞ்சம் சிரமப்படத்தான் செய்யும். என்ன தான் டிசம்பர் மாதம் வால்யூம் குறைவா தான் இருக்கும் என்று சுயசமாதானம் சொல்லிக்கிட்டாலும், நிஜமாகவே மார்கெட் செம்ம போரிங்கா தான் இருக்கு.

இதுவும்(டிசம்பர்) கடந்து போகும்.

17-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

16 Dec, 02:54


எவ்வளவு பேர் கவனிச்சீங்க?

முதல் வாரம் வியாழக்கிழமை 24540ல் தொடங்கி, 24295 வரை வீழ்ந்து, அன்றைக்கே 24857 வரை எகிறியது.

இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை 24561ல் தொடங்கி, 24180 வரை வீழ்ந்து 24798 வரை எகிறியது. (24880 வரை சென்றிருக்க வேண்டும் ஆனால், குறுக்க ஒரு கௌசிக் வந்துட்டான்)

அதாவது இது ஒரு வகை பேட்டர்ன். வேட்டை மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் முயல் மான் போன்ற விலங்குகள் கிழக்கில் தப்பித்து ஓடி சட்டென மேற்கில் திரும்பி ஓடிவிடும். இந்த வாரம் என்ன செய்கிறது மார்கெட் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 24880, சப்போர்ட் - 24630

16-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

13 Dec, 02:45


மீண்டும் ஒரு அரவை வாரம். இன்றைக்கும் ஒரு சின்ன ஆட்டம் போட்டு விட்டு 24630 பக்கமாக க்ளோஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

இன்றைய நிலையில் 24800க்கும் மேல் க்ளோஸானால் தான் காளைகளுக்கு நல்லது. அதே நேரம் 24450 வரை கீழே வரவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ( அதனால் தான் கன்ஸாலிடேஷன் மார்கெட் என்கிறோம்).

மார்கெட் டைரக்‌ஷன் க்ளியர் ஆகும் வரை வழக்கம் போல தேவுடா காத்து நிற்கணும்.

ரெஸிஸ்டன்ஸ் - 24800 சப்போர்ட் - 24450.

13-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Dec, 02:51


நிஃப்டி மேலே தான் போகப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இடையில் நடக்கும் கன்ஸாலிடேஷனைப் புரிந்து பொறுமை காக்க வேண்டும். இந்த சூழலில் நீங்கள் எங்கே ஸ்டாப் லாஸ் போட்டாலும் நிச்சியம் ட்ரிக்கர் ஆகும்.

கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட ப்ரேக் அவுட்க்குப் பிறகான டைம் கரெக்‌ஷன் இது. இப்படி கன்ஸாலிடேஷன் செய்து ஏறுவது மார்கெட் ஸ்ட்ராங்காக ஏறுகிறது என்று அர்த்தம். நேற்று ஒருத்தர் கேட்டார் சார், நிஃப்டி 27000 போகும்னு சொன்னீங்க ஆனால், கீழ வந்துட்டிருக்குனு. இப்படியான மனிதர்கள் தான் அவசரப்பட்டு ட்ரேட் பண்ணி நஷ்டம் அடைந்து சில நாட்கள் கழித்து மார்கெட் ஒரு சூதாட்டம்னு சோஷியல் மீடியால தத்துவம் பேசிட்டு திரிபவர்கள்.

இந்த மாதிரியான மனிதர்கள் முன்னால், அடுத்த வருடம் முதல் காலாண்டுக்குள் ஒரு பெரிய உலகப் பொருளாதார சீரழிவு/மாற்றத்திற்கான செய்தி வரப் போகிறது என்று விளக்கி வீடியோ போட பயமாக இருக்கிறது. ஆமாம் உலக நாடுகளின் சார்டுகள் எல்லாம் விழத் தயாராக இருக்கிறது. அதற்கான செய்திகள் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சின்ன உதாரணம்,

ரஷ்யாவும் சீனாவும் எவ்வளவு நெருங்கிய நட்பு நாடுகள் என்று நமக்குத் தெரியும். அமெரிக்கா சீனப் பொருட்கள் மீது இறக்குமதி வரியைப் போடப் போவதாக மிரட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால், ரெண்டு நாட்களுக்கு முன்னால், ரஷ்யா சீனப் பொருட்கள் சிலவற்றின் மீது 50%க்கும் மேல் இறக்குமதி வரியைப் போட்டு தாக்கியிருக்கிறது. ( ஒட்டு மொத்த ரஷ்யாவிற்கும் இல்லை வ்ளாடிவொஸ்தோக் ப்ராவின்ஸியில் மட்டும்).

முதல்ல யார் பூனைக்கு மணியைக் கட்டுவது என்பது தான் பிரச்சினை. ஒருத்தன் கட்டிட்டா அப்புறம் வரிசையா வந்து அடிப்பார்கள். சீனா மீது இப்படியான வரிகள் போடுவதால், உலகப் பொருளாதாரம் எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என்று ஒரு வீடியோவா போடலாமா? கமெண்ட்ல சொல்லுங்க.

இன்றைக்கும் நேற்றைய லெவல்ஸ் தான். (தினமும் அதையே எழுத போரடிக்குது.)

11-12-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

24 Nov, 06:21


கண் முன்னாடி இருக்கும் அற்புதங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம் என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இன்று உணர்ந்த தருணம்.

CANYAN பார்க்க அமெரிக்கா வரை சென்றவர்களைச் சந்தித்திருக்கிறேன். நம்ம நாட்டில் கேன்யான் பார்க்க கண்டிகோட்டா செல்ல வேண்டும் என்றும் ரொம்ப நாளா ஆசை. ஆனால், அடிக்கடி போன ஒரு இடத்தில் கேன்யான் இருக்கிறது என்பதைக் கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று நிஜமாகவே வெட்கப்பட்டேன்.

படத்தில் இருக்கும் படங்களைப் பாருங்கள். ஏற்கனவே பார்த்தவர்கள் எந்த இடம் என்பதைக் கமெண்டில் சொல்லுங்கள். பார்க்காதவர்களுக்கு முதல் கமெண்ட்டில் க்ளூ கொடுத்திருக்கிறேன்.

Able Arrows (share market)

24 Nov, 06:21


Slia thoranam

Able Arrows (share market)

23 Nov, 15:56


Future call initiated on last thursday.
Last week only one call has given a short call in TCS.
Unfortunately the call has SL triggered . And the loss is around 11K.

Just FYI.

Able Arrows (share market)

22 Nov, 09:03


Bear relief Rally நடந்துட்டிருக்கிறது.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கரெக்‌ஷன் முடியவில்லை. காலையில் சொன்னது போல, 23100 ஐத் தொடாமல் மேலே க்ளோஸானால், காளைகளால் மீண்டும் ஆல் டைம் ஹை போக முடியாது.

இந்த மாதம் க்ளோஸிங் 23900 க்கு மேல் முடிந்தாலும், மீண்டும் 23100ஐத் தொடாமல் மேலே போக முடியாது. ஒருவேளை 23900க்கு மேல் க்ளோஸாகவில்லை என்றால், நிச்சியம் 22650 வரை நிஃப்டி வந்தே தீரும்.

நடந்து முடியும் வரை பெரும்பாலானவர்கள் நம்ப மாட்டார்கள்.

22-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

22 Nov, 03:05


நேற்றைய நிஃப்டியின் க்ளோஸ் மீண்டும் ஒருமுறை 23150 ஐ உறுதி செய்துள்ளது. பாட்டம் பக்கம் இருப்பதால், ஒரு ஸிக்ஜாக் வாலட்டைல் அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே சொன்னது தான் 23100 ஐத் தொட்டு விட்டு 23900க்கு மேல் இந்த மாசம் க்ளோஸாகணும். இந்த ரெண்டில் எது நடக்கா விட்டாலும் கரடிகள் ஆதிக்கம் குறையவில்லைனு அர்த்தம்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 23890, 23500
சப்போர்ட் - 23170

22-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

21 Nov, 02:57


செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டு மணி ஆகப் போகுதே இன்னும் இறங்கலையே....னு நினைச்சுட்டிருக்கிறப்ப ஒரு நோஸ் டைவிங் கொடுத்தாரு பாருங்க....ஃபீல் ஹாப்பி அண்ணாச்சி!

நேற்றைய சார்ட் 23150ஐ மீண்டும் உறுதி செய்தது.

இன்றுடன் சேர்ந்து இன்னும் ஏழு ட்ரேடிங் நாட்கள் இருக்கின்றன. அதற்குள் 23100 ஐத் தொட்டு விட்டு 23900க்கு மேலே க்ளோஸாகணும். முக்கியமான விசயம் என்னவெனில், மேலே சொன்ன இரண்டில் எது நடக்கவில்லை என்றாலும் கரடிகள் மீண்டும் கதகளி ஆடத் தொடங்கி விடும். இந்த வாரத்திற்குள் காளைகள் பலத்தை மீட்டெடுத்தால் நன்றாக இருக்கும்.

ரெஸிஸ்டன்ஸ் - 23605 , 23680
சப்போர்ட் - 23350

21-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

19 Nov, 04:15


23750 வரை கூட நீளலாம்.

Able Arrows (share market)

19 Nov, 02:43


காளைகள் மெல்ல மெல்ல பலத்தைக் கூட்டிட்டே இருக்காங்க போல. நேற்று கடைசி அரை மணி நேரத்தில் உடம்பில் தெம்பு இல்லாமல் போராடியது. மதியம் ஒரு மணியிலிருந்தே காளைகள் எழுந்து 23500 ஐக் கடந்து நிற்க முயன்றது. ஆனால், வால்யூம் என்ற இம்யூனிடி இல்லாததால், கரடி அடிச்சு படுக்க வைத்து விட்டது.

நேற்று மாலை போட்ட பதிவின் படி நிஃப்டி நிச்சியம் 23300 ஐத் தொட்டே ஆகவேண்டும். 23100 ஐ ஒரே நாளில் தொட்டு திரும்பும் சூழல் தான் நடக்கும்.

Bottom fishing க்கு தயாராக இருங்க மக்களே!

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 23540 & 23675
சப்போர்ட் 23300 தான்.

19-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

18 Nov, 02:44


ஒரு பெரிய Gap down எதிர்பார்த்தேன். பெரிதாக இருக்காது போல. அதே போல இன்றைக்கு குறைந்தது ஒரு சதவீதமாவது மார்கெட் இறங்க ஆசைப்படுகிறேன். காரணம் இருக்கு. அப்ப தான் நாளைக்கு பாட்டம் போட்டு எழ வசதியாக இருக்கும்.

ரெடியா இருங்க மக்களே! நாளைக்கு பல ஸ்டாக்குகள் பாட்டம் பார்க்கப் போகிறது. அதனால், நிஃப்டியும் 23100 - 23065 ல் பாட்டம் எடுக்கும்.

இன்றைய சப்போர்ட் 23480 அப்புறம் 23300
ரெஸிஸ்டன்ஸ் 23680.

18-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

17 Nov, 13:57


வணக்கம் மக்களே!
ஒரு சின்ன அறிவிப்பு.

Future callsக்கு சப்ஸ்க்ரைப் செய்பவர்கள் நாளைக்குள் செய்து கொள்ளவும். கால்ஸ் நாளை மறுநாளிலிருந்து கால்ஸ் கொடுக்கத் தொடங்க இருக்கிறோம்.

ஒரு பேட்ஜ் / ஒரு சைக்கிள் கால்ஸ் முடியும் வரை புது சப்ஸ்க்ரைபர்களை சேர்த்துக் கொள்ள இயலாது. நாளைக்குள் சப்ஸ்க்ரைப் செய்ய இயலாதவர்கள் அடுத்த புது பேட்ஜ் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் 9677386773க்கு வாட்ஸ் அப்பில் ப்ளான் 1 அல்லது ப்ளான் 2 ல் எது வேண்டுமோ அதைக் குறிப்பிட்டு மெஸேஜ் செய்யவும் நாங்களே திரும்ப அழைக்கிறோம்.

Able Arrows (share market)

17 Nov, 13:33


https://youtu.be/8ymgV83KeK8

நேயர் விருப்பம் -1
நீங்கள் கமெண்ட்களில் கேட்ட ஸ்டாக்ஸ் சிலவற்றைப் பற்றிய ஒரு மின்னல் வேக அனலைஸிஸ். எல்லா ஸ்டாக்கையும் ஒரே நேரத்தில் அனலைஸ் பண்ண முடியவில்லை. அதனால்,

அதில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு 12 ஸ்டாக்ஸ் பற்றி மட்டும் இதில் பதிந்திருக்கிறேன்.

மற்ற ஸ்டாக்ஸ் பற்றிய பதிவை கூடிய விரைவில் பதிகிறேன். முடிந்தளவு ஸ்மால் கேப் ஸ்டாக்ஸை தவிர்க்கவும்.

Able Arrows (share market)

16 Nov, 13:18


https://youtu.be/ykdIPU5nVQ4

வரும் வாரம் வசந்த காலம்...
நவம்பர் 18-22க்கான வாராந்திர டெக்னிகல் அனலைஸ் வீடியோ.

இதைத் தொடர்ந்து நண்பர்கள் கமெண்ட்டில் கேட்ட ஸ்டாக்குகளில் ஒரு 12 ஸ்டாக்குகளை அனலைஸ் பண்ணி அடுத்த வீடியோ வெளிவர இருக்கிறது.

இந்த வீடியோவில் இண்டைஸஸ் பற்றிய கேள்விகள் இருந்தால் கமெண்ட்டில் கேளுங்கள் அடுத்த வீடியோவில் பதில் சொல்ல முயல்கிறேன்.

Able Arrows (share market)

12 Nov, 09:58


நாளை Future Tradeக்கான கால்ஸ் கொடுப்பதைப் பற்றி முடிவு நமது டெலிக்ராம் சானலில் அறிவிக்கப்படும்.

Able Arrows (share market)

12 Nov, 09:34


12-11-24

Able Arrows (share market)

12 Nov, 04:49


https://t.me/AbleArrows/307

Able Arrows (share market)

12 Nov, 04:48


இரண்டரை வருடத்திற்கு முன் இறங்கத் தொடங்கியது ஸ்டாக் இது.

முழு கரெக்‌ஷனையும் முடித்த பின் மேல் நோக்கி ஒரு நல்ல ரேலியாக 770 வரை போனது. இருந்தாலும் பழைய சப்போர்ட்டுக்கே கீழே இறங்கியிருக்கிறது. இங்கே சில நாட்கள் கன்ஸாலிடேஷன் நடக்கலாம் அல்லது உடனே கூட எகிறலாம்.

இந்த ஸ்டாக்கோட நல்ல விசயமும் கெட்ட விசயமும் ஒன்னே தான். அது, ஏறினால், ஏறிட்டே இருக்கும். இறங்கினால் இறங்கிட்டே இருக்கும்.

இதன் மிட் டேர்ம் டார்கெட் 800/- இது அடுத்த நான்கு ஐந்து மாதத்தில் 800 ஐத் தொட்டாலும் ஆச்சர்யப்பட மாட்டேன். ஏன்னா இதன் கேரக்டர் அப்படி.

வீக்லி க்ளோஸ் 440க்கு கீழே க்ளோஸானால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது. அதே போல இந்த மாதம் க்ளோஸ் 480க்கு கீழே என்றாலும் மேலே போக கொஞ்சம் சிரமப்படும். மேலே சொன்ன 440 அல்லது மந்த்லி க்ளோஸிங் 480க்கு மேல் என்பதை ஸ்டாப்லாஸாக வைத்துக் கொண்டு இப்ப வாங்குவது சிறப்பு.

ஃப்யூச்சரில் வாங்கி ரெண்டு மூணு மாதம் ஹோல்ட் பண்ணினால் நல்ல ப்ராஃபிட். லாட் சைஸ் 1000/ - சாதாரணமாக ஒரு மூணு லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த ஸ்டாக் பெருசா இறங்கப் போகிறது என்று 2022ல் ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். லிங்க் முதல் கமெண்ட்டில் இருக்கிறது. சும்மா ஒரு தடவை அதையும் பாருங்க அப்ப தான் ஒரு கான்ஃபிடண்ட் கிடைக்கும்.

12-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

12 Nov, 03:07


நேற்று நாம போட்ட ரெண்டு பௌண்ட்ரியைத் தாண்டியும் க்ளோஸாகவில்லை.

இன்னும் 3 ட்ரேடிங் டேஸ் தான் இருக்கிறது இந்த வாரம் க்ளோஸாக. எனக்கென்னவோ இந்த வாரம் கன்ஸாலிடேசன் வாரமாகவே முடிஞ்சுடும்னு தோணுது.

நேற்று சொன்ன அதே லெவெல் தான் இன்றைக்கும்.

அப்புறம் ஒரு முக்கியமான விசயம் :
ஒருத்தன்(ஒரு ஸ்டாக்) சிக்கியிருக்கான் ஃப்ரெண்ட்ஸ். குறைந்த பட்சம் இந்த மாதத்திற்குள் 10% ஏறுவான்னு எதிர்பார்க்கிறேன். ஒரு 4-5 மாதங்களில் கிட்டத்தட்ட டபுள் ஆகுற மாதிரி ஒருத்தன் சிக்கியிருக்கான். அவன் யாருனு அப்புறமா ஒரு டீட்டெய்ல் போஸ்ட் போடுறேன்.

12-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Nov, 07:03


INOX Wind பற்றிய டெக்னிகல் அனலைஸ் கேட்டிருந்தார் ஒரு ஃபாலோயர்.

இந்த ஸ்டாக் அதன் லாங் டேர்ம் டார்கெட்டான 244 என்பதைத் தொட்டு விட்டு அதிகபட்சமாக 262 வரை சென்று திரும்பிக் கொண்டிருக்கிறது.

எப்பொழுதுமே ஒரு லாங் டேர்ம் டார்கெட்டை முடித்தால் ஒரு நல்ல கரெக்‌ஷனைச் சந்தித்தே ஆக வேண்டும். அல்லது ஒரு நீண்ட கன்ஸாலிடேஷனை சந்திக்க வேண்டும். அந்த வகையில், ஐனாக்ஸ் விண்ட் இப்பொழுது இறங்கிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் சப்போர்ட் 175. அதன் பிறகு ஒரு பௌன்ஸ் பேக் இருக்கலாம்.

ஆனால், அதன் கரெக்‌ஷனை முடிக்க நிச்சியம் 125 வரை கீழே வரும். அந்த ஏரியாவில் இந்த ஸ்டாக்கை மீண்டும் நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கலாம். அடுத்த பெரிய டார்கெட்டான 400 ஐ எதிர்பார்த்து.

இது போன்ற அனலைஸிஸ் வேண்டுமென்றால் கமெண்ட்டில் குறிப்பிடவும். ( நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக அனலைஸ் பண்ணி எழுதுகிறேன்)


11-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Nov, 06:35


கடந்த வெள்ளிக்கிழமை. Boga Strategy கற்ற நண்பர் நிஃப்டியின் இண்ட்ரா டே டார்கெட்டாக 24332 போகும் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்.

ஆனால், அன்று நிஃப்டியின் டார்கெட்டைத் தொடாமல் கீழே வந்து விட்டது.
அந்த டார்கெட்டை இன்று தொட்டு விட்டது.

மார்கெட் மேலே போகும் போது எல்லா நம்பரையும் தொட்டுட்டு தானே போகும் என்று நினைக்கலாம். ஆனால், இவ்வளவு ஏறிய நிஃப்டி சரியாக 24336-ஐத் தொட்டு விட்டு கீழே இறங்குகிறது என்றால், அங்கே டார்கெட் இருக்கிறது என்று தானே அர்த்தம்.

இண்ட்ராடேக்கே உள்ள குணமான வாலட்டைலில் அன்றே தொடாவிட்டாலும் அடுத்த நாளாவது கட்டாயம் தொடும். இது தான் போகா ஸ்ட்ராடஜி கால்குலேஷன்.

#PowerofBOGASTRATEGY.

11-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Nov, 03:05


வரும் வாரம் மார்கெட் எப்படி இருக்கும் என்பதற்கு இன்றைய நிஃப்டியின் க்ளோஸ் மிக முக்கியமாக இருக்கும்.

24060க்கு கீழ் முடிந்தாலோ, 24280க்கு மேல் முடிந்தாலோ முறையே கீழேயும் மேலேயும் நகரும்.

இந்த வாரம் பேங்க் நிஃப்டி / நிஃப்டி / நிஃப்டி ஐடி எஃப்.எம்.சி.ஜி களின் போக்கு எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ பதிந்திருக்கிறேன்.


11-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Nov, 02:23


NIFTY& Bank Nifty for 2nd week of Nov '24 | Able Arrows| BOGA Strategy
https://youtube.com/watch?v=BICuOgQ5oeY&si=XMlMMft0SrmT7LwM

Able Arrows (share market)

08 Nov, 04:52


இன்றைக்கு நிஃப்டி 24332 -ஐத் தொடும் என்று BOGA Strategy படித்த நண்பர் சொல்கிறார்.

கணக்கு சரியா என்று செக் பண்ணிடலாம்.

Able Arrows (share market)

08 Nov, 02:56


புதன் கிழமை ஸ்டிக்கை வியாழக்கிழமை கரடி முழுங்கிடுச்சு. புரியலையா? இருங்க தமிழ்ல சொல்றேன்.
நேற்று Bearish Engulfing ஃபார்ம் ஆயிடுச்சு. (படத்தில் வட்டமிட்டிருப்பதை பாருங்க).

நேற்றைய சம்பவத்திற்கு தான் செவ்வாய்க்கிழமை Bear Relief Rally பற்றி எழுதியிருந்தேன். சரி இந்த பியரிஷ் என்கல்ஃபிங் என்ன செய்யும் என்றால், “நீயெல்லாம் ஒரு ஆளா...? என்று ஒரே அடியில் காளையை அடித்து வீழ்த்தி கெத்து காட்டுவது”. கரடி ரொம்ப ஸ்ட்ராங் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது காளை படு வீக் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்றைய நிலையில்,
நிஃப்டி 24300-200க்குள் க்ளோஸ் ஆகலாம்.
அப்படி ஆகும் பட்சத்தில், காளைக்கு அடுத்த வாரம் ஒரு சின்ன வாய்ப்பு கொடுக்கப்படும். முடிஞ்சா 24500க்கு மேல ஓடிப் போய் தப்பிச்சுக்க என்று.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் - 24400
சப்போர்ட் - 23950.

8-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

07 Nov, 10:13


Option class details.

Able Arrows (share market)

07 Nov, 04:11


GAIL Target Follow up.

220 Swing tradersக்கான டார்கெட்டாகச் சொல்லியிருந்தோம். இன்றைய டார்கெட்டாக 216 (ஈக்விடி/ஸ்பாட்) டார்கெட் ஃபிக்ஸ் ஆகி இருக்கிறது.

சேஃப்டி ட்ரேடர்ஸ் ப்ராஃபிட்டை புக் பண்ணிக் கொள்ளவும்.

மிட் டேர்ம் டார்கெட்க்காக வெய்ட் பண்ணுபவர்கள் ஹோல்ட் செய்யவும்.

ஸ்விங் ட்ரேடர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் ப்ராஃபிட்.

7-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

07 Nov, 03:53


Option Trading Strategy

Able Arrows (share market)

07 Nov, 03:02


நேற்றைய ஏற்றம் நிஃப்டிக்கு இன்னொரு பியர் ரிலீஃப் ரேலியா இல்லையா என்று இன்று தெரிந்து விடும். 24500க்கு மேல் இன்றைய க்ளோஸ் அமைந்தால் மட்டுமே நிஃப்டி தொடர்ந்து மேலே ஏறும்.

அதெல்லாம் சூப்பராக மேலே போகும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு சின்ன விசயம். ட்ரம்ப் ஜெயிச்சுட்டா மார்கெட்டுக்கு நல்லது என்பதால் தான் பல நாடுகளின் இண்டைஸ்கள் நேற்று எகிறியது. அதில் 60-70% ஷார்ட் கவரிங் தான். ஃப்ரெஷ் பையிங் வந்தால் தான் மார்கெட் மேலே போகும்.

Market always prevails it's own trend. ட்ரெண்ட் மாறும் போது நான் மாறப் போகிறேன் என்று க்ளியராகச் சொல்லிவிட்டு தான் மாறுவார்.

இன்றைய சப்போர்ட் 24375 - 24200.

வரும் சனி ஞாயிறு (9&10 - 11-24) க்ளாஸ் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஆப்ஷன் பற்றிய அடிப்படை புரிதல் மற்றும் அது செயல்படும் மெக்கானிஸம் என்னவென்றும்,
ஒரு உறுதியான லாபம் தரக்கூடிய ட்ரேடிங் முறையும் ( 90% Risk free option strategy) க்ளாஸாக எடுக்கலாம் என்றும் விருப்பம் இருக்கிறது.

அல்லது ஜாலியா போகா ஸ்ட்ராடஜியே (#boga_strategy) எடுக்கலாமா? என்று யோசனை சொல்லுங்க மக்களே!

7-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

06 Nov, 15:39


தங்கம் விலை விழப் போகிறது என்று சில நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு விழத் தொடங்கியிருக்கிறது.

ஏன் இறங்குகிறது...? எதுவரை இறங்கும் என்பது பற்றி சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.
முழுமையாகப் பார்த்து சொல்லுங்கள்.

Able Arrows (share market)

06 Nov, 15:39


https://youtu.be/23pPdhSEfpk

Able Arrows (share market)

05 Nov, 05:15


வாழ்க்கையில் முதன்முறையாக யூட்யூபில் ஒரு ஷார்ட்ஸ் போட்டிருக்கிறேன் மக்களே...

GAIL ஸ்டாக் பத்தி போட்டிருக்கிறேன். பார்த்துட்டு சொல்லுங்க. லிங்க் கீழே....

Able Arrows (share market)

05 Nov, 03:06


கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்காய்யா உமக்கு? மாசம் பொறந்த உடனேயே இந்த அடி அடிச்சா எப்படி? கொஞ்சம் ஸ்டாப்லாஸ் கூட போட விடாம கோட்டச்சாமி மாதிரி தலை கீழா குதிச்சா எப்படினு பலரும் நிஃப்டியைப் பார்த்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவருக்கு மட்டும் கீழேயே சரிஞ்சுட்டுப் போகணும்னு ஆசையா என்ன? எஃப் & ஓ ட்ரேடுக்கு செபி போட்ட கிடுக்கிப் பிடியால் எரிச்சலான இன்ஸ்டிட்யூஷனல் ஃபண்ட் மேனேஜர்கள், இனி ஆப்ஷனில் பழைய மாதிரி சம்பாதிக்க முடியாதுன்னு பணத்தை வெளியே எடுத்துட்டிருக்கிறார்கள்.

மார்கெட் சரிஞ்சா சரிஞ்சுட்டுப் போகுது, திரும்ப எழுந்து வந்திடும். ஆனால், செபி ஏற்படுத்திய சட்டத் திருத்தத்தால் பல அப்பிராணி குடும்பங்கள் தப்பிக்கும். நாலு நாட்களுக்கு முன்பு கூட ஒரு புது உத்தரவை செபி போட்டிருக்கிறது. அதன்படி,

எஃப் & ஓ வில், ஒரே ஆர்டரில் நிஃப்டியில் 1800 Qty அதாவது 72 Lots Buy/Sell ஆர்டர் போட்டால் எக்ஸ்சேஞ்சிலிருந்து ரிஜெக்சன் நடந்து விடும்.

அதே போல் தான் பேங்க் நிஃப்டியில், 60 Lots மேல் ஆர்டர் போட முடியாது (இதெல்லாம் ஒரே ஆர்டரில்).

இந்த உத்தரவு Institutional Investor களுக்கு எவ்வளவு எரிச்சலைக் கொடுத்திருக்கும் என்பதைத் தான் நேற்றைய செல்லிங்கில் பார்த்தோம். அதனால், இப்பொழுதைக்கு(ம்) செல்லிங் நல்லது. கீழே வரும் போது வாங்குவதற்குத் தயாராக இருப்போம்.

வேற என்ன மக்களே? சப்போர்ட் ரெஸிஸ்டன்ஸா?
அடுத்த சப்போர்ட் 23770, ரெஸிஸ்டன்ஸ் 24080 & 24140.


அப்புறம் ஒரு குறிப்பு : சமீபத்திலும் அடிக்கடி ஒரு கோரிக்கை வருகிறது. Future Trade calls (tips) நீங்க ஏன் கொடுக்கக் கூடாதுனு கேட்கிறார்கள். என்ன செய்யலாம் என்று கமெண்டிலோ இன்பாக்ஸிலோ ஆலோசனை சொல்லுங்க.

5-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

04 Nov, 02:54


இந்த மாதம் எந்தெந்த செக்டார் எப்படி செயல்படும் என்று ஒரு வீடியோ போட்டிருக்கிறேன். பார்க்காதவர்கள் பார்த்து விடவும். ஏனெனில், தினமும் சொல்லும் மார்கெட் லெவலை மேலும் சிறப்பாக பயன்படுத்த அந்த வீடியோ உதவும்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 24500 (அதே தான் போன வாரம் போட்டு வைத்த அதே தடைக்கல் தான்) 24500க்கு மேல் க்ளோஸானால், இன்னும் கொஞ்சம் (24700 & 24850) வரை கூட போக ஒரு வாய்ப்பிருக்கிறது. (வாய்ப்பு மட்டும் தான்)

சப்போர்ட் - 24120. (இதற்கு கீழே க்ளோஸானால், 23200 ஐ நோக்கி பயணம் தொடங்கி விட்டதாக அர்த்தம்.

தங்கம் சர்வதேச சந்தையில் விலை இறங்கக் காத்திருக்கிறது. அது பற்றி ஒரு வீடியோவை விரைவில் பதிகிறேன்.

4-11-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

03 Nov, 15:15


நவம்பர் மாத மார்கெட் , ட்ரேடர்களுக்கு மிகவும் சவாலான மாதமாக அமையும். கடந்த மாதம் க்ளோஸிங்க் கீழே டார்கெட்டை செட் பண்ணி விட்டது. எந்தெந்த செக்டார் என்னென்ன டார்கெட்டை நோக்கி நகர்கிறது என்பதை சுருக்கமாக விளக்கியுள்ளேன்.

https://www.facebook.com/AbleArrowsTamil/videos/430282976526317

Able Arrows (share market)

31 Oct, 02:50


நல்லாத்தான்யா போயிட்டிருந்தார்... ஆஹா! அருமையாக உடைத்து மேலே ஒரு 120 பாய்ண்ட் ஏறி க்ளோஸாயிட்டா நாளைக்கு இன்னும் ஈஸியா மிச்சத்தையும் கடந்து 24750க்கு மேலே க்ளோஸாயிடுவார்னு சந்தோசப்பட்டு ஒரு போஸ்ட்டா போட்டேன். ஆனாலும் ஒரு சின்ன டவுட்டு அதனால எச்சரிக்கையா இருக்கட்டும்னு "Watch & Enter" என்று ஒரு டிஸ்கியை (Disclaimer ) போட்டு விட்டேன்.

அப்புறம் தான் தெரிந்தது பிரச்சினை 24470ல் இல்லை. நாம ரெண்டு மூணு நாளா சொல்லிட்டிருந்த 24500ல் இருக்குனு. (மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டேனே). ரெஸிஸ்டன்ஸை தொட்டதுமே , ட்ராஃபிச் கேமெராவைப் பார்த்த ஸ்பீடா மீட்டர் மாதிரி சொய்ங்ங்னு இறங்கிடுச்சு. ( இணைத்திருக்கும் சார்ட்டை பாருங்கள்)

இன்றைக்கு 24750க்கு மேல் க்ளோஸ் என்ற மேஜிக் நடக்குமா என்பது பில்லியன் ப்ரிக்ஸ் கரென்ஸி கேள்வி.

எதுவாக இருந்தாலும் இன்றைய க்ளோஸிங் பார்த்துட்டு நாளை முடிவு செய்து கொள்ளலாம். 24750க்கு கீழ் இன்றைக்கு க்ளோஸானாலும், அப்படியே மார்கெட் கீழே வந்துடாது. ஒரு பௌன்ஸ் பேக்கிற்குப் பிறகு தான் வரும். அதனால், இன்றைக்கு பொறுமையாக வேடிக்கை பாருங்கள்.

எல்லாரும் சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

31-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

30 Oct, 07:32


30-10-2024, 1.00 PM

Able Arrows (share market)

30 Oct, 03:05


ரொம்ப கஷ்டப்பட்டு, போனாப் போகுது என்பது போல நிஃப்டி 24450க்கு மேல் நின்றிருக்கிறது. ஆனால், It was a good come back of Bulls.

நாளைக்குள் இன்னும் 300 பாய்ண்ட்கள் மேலே ஏறவேண்டும். 300 பாய்ண்ட்கள் ஏறுவது என்பது பெரிய விசயமில்லை.. அதற்கு மேல் க்ளோஸாகணும். நாளைக்கு எக்ஸ்பைரி டே-வும் கூட. ஷார்ட் கவரிங்க்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பு :
SBIN ஸ்டாக்-ஐ 790ல் call reinitiate கொடுத்திருந்தோம். அதன் டார்கெட்டான 842-847 க்கு பக்கம் போய்ட்டு உடனே கூட திரும்பலாம். அதனால், அதிக படபடபடப்பு கொண்ட ட்ரேடர்கள் 840 பக்கமே விற்று விடலாம். (ரூ 35,000/- ப்ராஃபிட்).

பஜாஜ் ஃபினான்ஸ் வாங்கியவர்கள் ஹோல்ட் பண்ணவும். ( இதுவரை 20000 + ப்ராஃபிடில் இருக்கிறது. டார்கெட்டான 7430 ஐத் தொடும் போது 60,000 ப்ராஃபிட்டாக இருக்கும்.)

30-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

29 Oct, 02:48


ஓப்பனிங்லாம் நல்லாத்தேன் இருக்கு... பினிச்சிங் சரியில்லையேப்பானு ஒரு படத்தில் வடிவேலு சொல்வார். அது மாதிரி நேத்து ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருந்தது ஃபினிஷிங் சரியில்லாம போச்சு.

நம்ம கணக்குபடி இந்த வாரம் இன்னும் ஒரு 410 பாய்ண்ட்கள் தான் நிஃப்டி ஏறணும். ஏறிட்டா காளைகள் தப்பிச்சுடும்.

நேற்றைய ரெஸிஸ்டன்ஸ் 24480 என்று சொல்லியிருந்தோம். 24490 வரை சென்றவர் அதற்கு மேல் நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பேலன்ஸ் இல்லாம சறுக்கி கீழே வந்துட்டார்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 24450. ஆனால், 24500க்கு மேல் க்ளோஸானால் கூடுதல் சிறப்பு. வேறொன்றுமில்லை 24500க்கு மேல் க்ளோஸானால், அடுத்த ஸ்டாப் 24850 என்பதை பெரும்பாலும் லக்ஷ்மி பூஜை (முகூர்த்த ட்ரேடிங்) அன்று தொட்டு விடும் என்று நம்புகிறேன்.

முடிந்தால், மிட் டே மார்கெட் அப்டேட் செய்கிறேன்.

25-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

28 Oct, 02:58


கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 24050 மற்றும் 24012(இண்ட்ராடே டார்கெட்) இரண்டையும் தொட்டிருக்க வேண்டும். நேரமிருந்தும் தொடவில்லை. அதனால், அதைத் தொட ஒரு 10-15% வாய்ப்பிருக்கிறது.

வரும் நான்கு நாட்களில், 24750க்கு மேல் க்ளோஸாக வேண்டும். அப்படி க்ளோஸாகவில்லை என்றால் 23200 வரை வரும் வாரங்களில் வரக் கூடும். ( ஒரு பௌன்ஸ் பேக்கிற்குப் பிறகு).

அதனால், இந்த வாரம் ஒன்று தீவிர புல்லிஷ்-ஆக இருக்க பெரிய வாய்ப்பிருக்கிறது. 31ம் தேதி வரை ரிஸல்டிற்கு காத்திருக்க வேண்டும்.

சப்போர்ட் 24000 ரெஸிஸ்டன் 24480

25-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

25 Oct, 02:49


காளைகளுக்கு நேற்றைக்கும் சக்தி இல்லை. அதனால், இன்றைய நிலைமையில் நிஃப்டிக்கு இரண்டே ஆப்ஷன்ஸ் தான் இருக்கின்றன.

ஒன்று 24050 வரை இறங்குவது. (இப்படி இறங்குவதால், அடுத்த நான்கு நாட்களில் 700 பாய்ண்ட்கள் ரெக்கவர் ஆக முடியுமா என்பது சந்தேகம். அப்படி ரெக்கவர் ஆகவில்லை என்றால், 23200 ஐ நோக்கி நிஃப்டி நகர வேண்டியிருக்கும்.

இரண்டு இன்றைக்கே 300 பாய்ண்ட் ஏறி 24700க்கு மேல் க்ளோஸாக வேண்டும்.

நேற்றே ரெக்கவர் நடக்கும் என்று எதிர்பார்த்த பொழுது நண்பர் ஒருவர் சொன்னார். இன்றைக்கு ஏறாது நாளை (வெள்ளிக்கிழமை) மதியத்திற்கு மேல் ஒரு நல்ல ஷார்ட் கவரிங்க வரும் என்றார். அவர் கால்குலேஷன் சரியாக இருக்க வேண்டுமென ப்ரார்த்திப்போம்.

25-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

24 Oct, 06:10


வீக்லி ஆப்ஷன் மீது ஏன் அவ்வளவு காண்டாக இருக்கிறேன் என்றால், கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள். இன்றைய நிஃப்டியின் 5 நிமிட சார்ட்.

ஃபண்ட் மேனேஜர்கள் 24400 கால் ஆப்ஷனை ரைட் (விற்று) பண்ணியிருக்கிறார்கள். இன்றைக்கு வீக்லி எக்ஸ்பைரி . காலையில் வேண்டுமென்றே ஹெவி வெய்டேஜ்களை விற்று மார்கெட்டை தற்காலிகமாக இறக்கி, ஆப்ஷன் ஷார்டை எல்லாம் கவர் பண்ணுயிருக்கிறார்கள் (வழக்கமாக நடப்பது தான்).

12 மணிக்குள் இந்த கவரிங் வேலையை எல்லாம் முடித்து விட்டு அடுத்த வாரத்திற்கான ரைட்டிங் வேலையைத் தொடங்குவார்கள்.

இதனால், ஆப்ஷன் பற்றி தெரியாத அப்பிராணி ட்ரேடர்கள் இந்தா இப்ப மேலே போகும் இப்ப கீழே போகும் என்று காத்திருந்து காத்திருந்து டைம் எரோஸனில் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது போட்டிருக்கு கிடுக்கிப் பிடியெல்லாம் பத்தாது, செபி வீக்லி ஆப்ஷனை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அப்பிராணி ஆப்ஷன் ட்ரேடர்களின் பணம் ஃபண்ட் மேனேஜர்களால் களவாடப்படுவதைத் தடுக்க வேண்டும்.

இந்த சின்ன ட்ரேடர்களும் அப்படித் தான் செய்கிறார்கள். வாரவாரம் பல பத்தாயிரங்களை மார்கெட்டில் இழந்தாலும் இழப்பார்களே ஒழிய... முறையாக எங்கும் சென்று பங்குச் சந்தை ட்ரேடிங் பற்றி படித்து தொழி செய்வதில்லை.

24-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

24 Oct, 02:42


நல்ல செய்தி என்னவென்றால், நிஃப்டி, நேற்று டெக்னிகலாக ஒரு ஹால்ட் போட்டிருக்கிறது.

இன்று நடக்க வேண்டிய நல்ல விசயம் என்னவெனில், நிஃப்டி 24610க்கு மேல் க்ளோஸாக வேண்டும். அப்படி நடந்தால் சமீபத்திய கரெக்‌ஷன் முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்.
ஒருவேளை 24380க்கு கீழ் நின்றால் / க்ளோஸானால் அடுத்த ஸ்டாப் 24140 தான்.

ஃபாலோ அப் -
ஸ்டேட் பேங்க் கால் கொடுத்திருந்தோம். க்ளோஸிங் ஸ்டாப்லாஸாக 810 என்று சொல்லியிருந்தோம். ஒருவேளை அப்படி வாங்கி நட்டமேற்பட்டவர்கள், இன்று நிஃப்டி பாஸிடிவாக க்ளோஸாகும் பட்சத்தில் மீண்டும் வாங்கலாம். டார்கெட் அதே தான். ஸ்டாப் லாஸ் நாளை சொல்லப்படும்.

பஜாஜ் ஃபினான்ஸ் கால் 6850ல் வாங்கச் சொல்லியிருந்தோம். இப்பொழுது 7000ல் இருக்கிறது. ஒருவேளை வாங்கியிருந்தால், அதன் டார்கெடான 7450 வரை ஹோல்ட் பண்ணவும்.

24-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

23 Oct, 03:00


கடந்த அக்டோபர் 3ம் தேதிக்குப் பிறகு ஸ்ட்ராங் செல்லிங் நேற்று தான் நடந்திருக்கிறது. நான் வழக்கமாக ஒரு சதவீத, ஒண்ணரை சதவீதம் இறக்கத்தை எல்லாம் பெரிய செல்லிங் என்று எடுத்துக் கொள்வதில்லை. மார்கெட் என்றாலே ஏற்றமும் இறக்கமும் இருந்தே தான் ஆகணும். ஆனால், நேற்று நடந்த செல்லிங் பெரிய சண்டையுடன் நடந்தது.

படத்தில் குறிப்பிட்டிருக்கும் எண்களை கவனிக்கவும்.
1, மார்கெட் ஆரம்பித்தவுடன், சின்ன கன்ஸாலிடேஷன் நடந்த பின் காளைகள் நிதானமாக ஏறத் தொடங்கியது.
2, ஸ்ட்ராங்காக அடித்து இழுத்து வந்தது கரடி.
3, சுதாரித்துக் கொண்டு ஸ்ட்ராங்காகத் தான் எழுந்தது காளை
4, இந்த முறை கரடி வீக்காக இறங்கியது.

இந்த நாலு Phase-ம் வழக்கமான Pull & Pushஆக இல்லாமல், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன எல்லைப்படைகளின் உக்கிரம் போல் இருந்தன.

அந்த சப்போர்ட் லைனை உடைத்த பின் காளைகள் தோல்வியை ஒப்புக் கொண்டன.

இனி என்ன நடக்கும்?

பையிங்கோ செல்லிங்கோ தொடர்ந்து நடக்க முடியாது. நிஃப்டியும் ஓவர் சோல்ட் ஏரியாவிற்குள் வந்து விட்டது. இனியும் செல்லிங் தீவிரமாக இருக்குமானால், நிஃப்டி 23300 வரை வரவேண்டியதாக இருக்கும் ( ஒரு புல் பேக்- நடந்த பின்)

இன்றைய ஃபைனல் சப்போர் 24360. அதையும் உடைத்தால் 23300 தான் அடுத்த டார்கெட்.. உடைக்காமல் இந்த மாதத்திற்குள் 24750க்கு மேல் க்ளோஸாகிவிட்டால் கரெக்‌ஷன் முடிந்தது.

23-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

22 Oct, 02:59


இப்ப இருக்கிற வெய்ட்டேஜ்க்கு ஹெச்டிஎஃப்சி பேங்க் & ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ரெண்டு ஸ்க்ரிப்டை மட்டும் வைத்து மார்கெட்டை தூக்கிடவோ இறக்கிடவோ முடியும்னு சிலர் சொல்வாங்க. அப்படியெல்லாம் யாரும் மார்கெட்டை மேனுபுலேட் பண்ணிட முடியாது என்பதற்கு நேற்றைய சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.

ஹச்டிஎஃப்சி பேங்க் 2.5 % ஏறியிருக்கு ரிலையன்ஸ் 0.75% ஏறியிருக்கு. ஆனால், மார்கெட் இறங்கியிருக்கு. அதனால, மார்கெட்டை ஆப்ரேட் பண்றாங்க, நான் வாங்கினதை மொஸாட் கண்டு பிடிச்சு ஃபண்ட் மேனேஜர்களுக்குச் சொல்லிட்டாங்க அதனால விற்கிறார்கள் என்றெல்லாம் அங்கலாய்க்காமல் டெக்னிகல் அனலைஸ் பண்ணி மார்கெட்டில் பணம் பார்ப்போம்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 24980 சப்போர்ட் -24660
பேங்க் நிஃப்டி மற்றும் ஆட்டோ இண்டெக்ஸ் காளைகளுக்கு சாதகமாக இருக்கிறது.

22-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

21 Oct, 02:37


டெக்னிகலா 24930க்கு மேல் நிஃப்டி படுவேகமாக ஏறுமென்றால், லாஜிக்கலாகவும் ஒரு காரணம் இருக்கிறது. அடுத்த மாதம் 20ம் தேதியிலிருந்து நிஃப்டியின் லாட் சைஸ் 25லிருந்து 75ஆக உயர்கிறது. எனவே ஒரு பெரிய ஷார்ட் கவரிங்கிற்கு வாய்ப்பும் இருக்கிறது.

அத்துடன் பேங்க் நிஃப்டி வேறு மேலே திரும்பத் தயாராக இருக்கிறது. All the roads lead to the Rome என்று சொல்வதைப் போல, இரண்டு மூன்று டெக்னிகல் காரணங்கள் 25800 ஐயே காட்டுகிறது. எனவே, இந்த மாத இறுதிக்குள் நிஃப்டி 25800 ஐ நிச்சியம் தொடும் என்று தெரிகிறது.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 24930, சப்போர்ட் -24570

SBIN: (cmp-820) வாங்குவதற்கு நல்ல இடம் இது.
Target 842-847 , closing SL 810/- லாட் சைஸ் 750 தான். ஒரு பதினைந்தாயிரம் ஈஸியாகக் கிடைக்கும்.

21-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

18 Oct, 04:07


நல்ல வாய்ப்பு .

BAJFINANCE (Bajaj Finance; CMP 6850)
வாங்கி ஹோல்ட் பண்ணினால், 7430 மற்றும் 7800 என்பது ஷார்ட் டேர்ம் டார்கெட். மிட் டேர்ம் டார்கெட்டாக 8450 வரை செல்லும்.

பண மற்றும் மன பலம் இருப்பவர்கள் ஃப்யூட்சரில் வாங்கி ஹோல்ட் பண்ணவும் ஒண்ணரை லட்சத்திற்கு மேல் லாபம் கிடைக்கும்.

18-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

18 Oct, 02:57


அவ்வளவு இறங்கிய நிஃப்டி நேற்று இன்னும் 6 பாய்ண்ட்கள் சேர்ந்து இறங்கியிருந்தால் நேற்றே ஒரு புல்பேக் வந்திருக்கும். நேற்று மிச்சம் வைத்ததால், இன்றைக்கும் ஒரு சின்ன செல்லிங் எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே சொன்னது போல 24700க்கு கீழே இன்று க்ளோஸானால், 24200 வரை நிஃப்டி கீழே வர வாய்ப்பிருக்கிறது. அதனால் 24700க்கு கீழே ட்ரேட் நடந்தாலே பேனிக் ஆகத் தேவையில்லை. 24600 வரை வந்து கூட ரெக்கவர் ஆகலாம். 24700க்கு கீழே இன்று க்ளோஸ் ஆனால் மட்டுமே கரடிகள் கை ஓங்கும்.

ரெஸிஸ்டன்ஸ்...? அது எங்கேயோ உசிலம்பட்டி பக்கமோ குடியாத்தம் பக்கமோ இருக்கு. 😂😂😂

18-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

17 Oct, 03:04


ஐடி இண்டெக்ஸ் மற்றும் ஆட்டோ இண்டெக்ஸ் கீழே இழுத்ததால் நேற்று நிஃப்டியால் எழ முடியவில்லை. இத்தனைக்கும் ஹச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் சப்போர்ட் பண்ணியும். (கவனித்தீர்களா நேற்றே ரிலையன்ஸ் 2720 ஐத் தொட்டு விட்டதை)

இன்றைய சூழலில் சப்போர்ட் பக்கமாகவும் ரெஸிஸ்டன்ஸ் தூரமாகவும் இருக்கிறது. இந்த சப்போர்ட் மிகவும் முக்கியமான சப்போர்ட் 24900க்கு கீழே இருக்கக் கூடாது. நாளைய க்ளோஸா 24700க்கு கீழே இருக்கக் கூடாது. இவை இரண்டும் காளைகளுக்கு காய்ச்சல் வர வைத்து விடும்.

இன்றைக்கு 25100க்கு மேல் நிஃப்டி க்ளோஸானால், 25300 ஐக் கடந்து சமீபத்திய டவுன் ட்ரெண்ட் முடிவுக்கு வரும்.

இந்த வாரம் சனி ஞாயிறில் 19,20-10-2024 #boga_strategy வகுப்புகள் நடைபெறவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழேயுள்ள வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்து கொள்ளவும். வகுப்பு விபரம் சனிக்கிழமை காலை 10-1 & மாலை 4-6 மற்றும் ஞாயிறு காலை 10-1.

17-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

16 Oct, 02:51


ஒரு சுவராஸ்யமான சம்பவம்.

வழக்கமா, சார் எந்த ஸ்டாக் வாங்கட்டும் என்றோ அல்லது, இந்த ஸ்டாக்கிற்கு என்ன டார்கெட் என்பதாகவோ தான் பெரும்பாலானவர்கள் கேட்பார்கள்.

சமீபத்தில் BOGA Strategy க்ளாஸ் முடித்தவர் ( சீனியர் சிடிசன்) அவர் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தில் கொடுக்கும் ரெகமெண்டேஷன் ஸ்டாக்குகள் பெயரைச் சொல்லி அதை வாங்கட்டுமா என்று கேட்டுட்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் கால் பண்ணி ஒரு ஸ்டாக் பெயரைச் சொன்னதுமே அந்த ஸ்டாக் சார்ட்டை திறந்து அவர் டார்கெட் சொல்லும் முன்பே அவருக்கு டார்கெட்டைச் சொல்லத் தொடங்கினேன்.

அத்துடன், அவர்கள் ஏன் அந்த ஸ்டாக்கை ரெகமெண்ட் பண்ணினார்கள் என்று BOGA ஸ்ட்ராடெஜியில் அவருக்குக் கற்றுக் கொடுத்ததை திரும்ப நினைவூட்டினேன். அவருக்கு ஆச்சர்யத்துடன் சந்தோசமும் சேர்ந்து கொண்டது.

ஹெச்டிஎஃப்சி போன்ற பெரிய நிறுவனங்களில் அனலிஸ்ட் டீம் பெரிதாக இருக்கும். பெரிய எக்ஸ்பெர்ட்ஸ் , அட்வான்ஸ் சாஃப்ட்வேர் உட்பட ஒரு நல்ல Analysation Infrastructure வைத்திருப்பார்கள். அப்படி ஒரு டீம் சொல்லும் ரெகமெண்டேஷனை நம்ம BOGA Strategy வைத்து சில நிமிடங்களில் சொல்லி விட முடிகிறது என்பது தான் அவரது ஆச்சர்யத்திற்கு காரணம்.

இப்ப எங்க வாட்ஸ் அப் குரூப்பிலும், இப்படியான க்விஸ் டைப் ஸ்டாக்கைக் கொடுத்து அவர்களை அனலைஸ் பண்ணத் தொடங்கியிருக்கிறேன். நாம கத்துக் கொடுக்கிறவங்கட்ட இருந்தும் நாம இப்படியான பயனுள்ள விசயங்களைக் கத்துக்க முடியுது.

சரி நாம இன்றைய டெக்னிகல் விசயத்திற்கு வருவோம்.
நேற்று நிஃப்டியின் ரெஸிஸ்டன்ஸ் 25200 என்று சொல்லியிருந்தோம் 25212 வரை சென்று கீழே இறங்கிவிட்டது. அதே போல 25060க்கு கீழ் க்ளோஸாகக் கூடாது என்று சொல்லியிருந்தோம். நேற்றைய க்ளோஸ் 25057. இன்னும் சேஃப் சைடில் தான் காளைகள் இருக்கின்றன.

இன்றைய சப்போர்ட் 24830. ரெஸிஸ்டன்ஸ் 25240. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2720க்கு மேல் இந்த வாரம் க்ளோஸ் ஆகவேண்டி இருப்பதால், ரிலையன்ஸ் ஸ்டாக் மார்கெட்டை மேலே தூக்க பெரிய காரணமாக இருக்கலாம்.

16-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

15 Oct, 03:27


நிஃப்டி சார் இன்னும் ரெஸிஸ்டன்ஸ்க்குள்ளே தான் இருக்கார். 25200 ஐத் தாண்டினால் தான் சூப்பர் மூவ் கிடைக்கும். அதிலும் 25240 ஐத் தாண்டும் போது நாம் எதிர்பார்த்த அந்த ஷார்ட் கவரிங்கும் சேர்ந்து வரும்.

நேற்று ஹெச்டிஎஃப்சி பேங்க் என்ற ஒற்றை ஸ்டாக் மட்டுமே மார்கெட்டை ஏற்றி வைத்தது. ஊர் கூடி தேர் இழுத்தா தான் நல்லா இருக்கும்.

இன்றைய ரெஸிஸ்டன்ஸ் 25200-240
சப்போர்ட் - 25060.

15-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

14 Oct, 02:48


உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் தன் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன. இன்னும் நம்ம ஊரில் மட்டும் சில இஸ்ரேல்-ஈரான் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். மார்கெட்னா ஏறும் அப்புறம் இறங்கத் தான் செய்யும். சப்போர்ட் லெவல் ரெஸிஸ்டன்ஸ் லெவெல் பார்த்து ட்ரேட் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும். அதான் ஒரு தொழிலதிபருக்கு அழகு. (அட... நீங்க தாங்க அந்த தொழிலதிபர்)

கீழே 24700க்கு கீழே க்ளோஸானால், நெகடிவ் ட்ரெண்ட் தொடரும். கீழே க்ளோஸாகலையா... அப்ப மார்கெட் 27800 ஐ நோக்கி நகரத் தொடங்கிடும். ( ஆமாங்க 27100 அல்ல..27800 என டார்கெட் மாறி இருக்கிறது.)

தைரியமா வாங்கிட்டு 24700க்கு கீழே க்ளோஸிங் ஸ்டாப்லாஸ் வச்சுட்டு லாபம் பாருங்க.

14-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Oct, 12:58


ஷேர் ட்ரேடர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

Able Arrows (share market)

11 Oct, 05:54


சில நாட்களுக்கு முன் மொபைல் மாற்ற வேண்டிய சூழல் வந்து விட்டது. அப்படி மாற்றும் போது பழைய மொபைலுக்கும் Synchronize ஆவதில் பிரச்சினையாகி, கடந்த 4ம் தேதிக்கு முன் ஒரு வாரத்திற்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெஸேஜ் எல்லாம் அழிந்து விட்டன.

எனவே வாட்ஸ் அப்பில் அதற்கு முன் அனுப்பிய மெஸேஜ்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

யாருக்காவது மெஸேஜ் ரிப்ளை வரவில்லை என்றால், மீண்டும் அந்த மெஸேஜை அனுப்பவும். மொபைல் பிரச்சினையால் ரிப்ளை செய்ய முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Able Arrows (share market)

11 Oct, 02:51


இன்றைக்கும் நேற்று மாதிரியே கன்ஸாலிடேஷன் தான். 24980க்கு 20 பாய்ண்ட் அதிகமாகவோ குறைவாகவோ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேங்க் நிஃப்டிக்கும் இதே நிலை தான்.

அப்படி க்ளோஸானால், அடுத்த வாரம் நிஃப்டி 25800 ஐத் தொடும்.

11-10-24
வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773