ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு (@welovehealerbaskar) Kanalının Son Gönderileri

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு Telegram Gönderileri

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"

சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.

வாழ்க வையகம் 🙏.
4,928 Abone
271 Fotoğraf
315 Video
Son Güncelleme 01.03.2025 16:46

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு tarafından Telegram'da paylaşılan en son içerikler


இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

ஒன்றுகூடி படியுங்கள்!

ஒன்றுகூடி விளையாடுங்கள்!

ஒன்றுகூடி பேசுங்கள்!

ஒன்றுகூடி விவாதியுங்கள்!

ஒன்றுகூடி மகிழுங்கள்!

ஒன்றுகூடி நல்ல முடிவுகளை எடுங்கள்!

ஒன்றுகூடி நல்ல செயல்களைச் செய்யுங்கள்!

எப்போதும் எல்லோரும்
ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையை வாழுங்கள்!

பஞ்ச பூதத்தின் ஒற்றுமையே மனிதனின் உடலும் உயிரும்!

ஒன்றுகூடி ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வதே மனிதகுலத்திற்கு மிகப்பெரிய வலிமை, பலம், பாதுகாப்பும்கூட!

🐉🦅🐢🌴எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙎‍♀️🌾🪳🐟

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

அனைவரின்
சிந்தனை எண்ணம்
வாக்கு செயல் நல்லதாகுகிறது

மக்களின்
தன்னடக்கம் விழிப்புணர்வு ஒற்றுமை கருணை ஆரோக்கியம் மேலோங்குகிறது

அனைவரின்
வலிமை நிம்மதி பேரானந்தம் மேன்மை நன்றியுணர்வு இறைபக்தி பெருகுகிறது

மக்களின்
முயற்சி உண்மை நம்பிக்கை உழைப்பு வெற்றி பெறுகிறது

அனைவரின் அன்பு ஒழுக்கம் எளிமை
இயற்கை அரவணைப்பு உலகெங்கும் பரவுகிறது

🪰🪲🪴🌵எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🐳🐉🦉👭

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

மக்கள் அனைவரும்

🌷மேன்மையாக

🌷சந்தோஷமாக

🌷அன்பாக

🌷மகிழ்ச்சியாக.

🌷ஒற்றுமையாக

🌷 பாசமாக

🌷 இன்பமாக

🌷 ஆனந்தமாக

🌷அற்புதமாக

🌷 செழுமையாக.

🌷 அழகாக

🌷 இனிமையாக

🌷 உற்சாகமாக

🌷 மனநிறைவுடன்
வாழ்கிறார்கள்

🦌🐘🌳🦉எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🐞🦡🦨👬

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

நிதானத்தை கடைபிடியுங்கள்

யோசித்து
முடிவெடுங்கள்

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்

சத்தியத்தை
நம்புங்கள்

நேர்மைக்கு ஆதரவு கொடுங்கள்

நல்லவற்றிற்கு
அங்கீகாரம் கொடுங்கள்

பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றுங்கள்

ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கையை நோக்கி பயணியுங்கள்

எப்போதும் இயல்பாக எளிமையாக இருங்கள்

அனைவருக்கும் பயன் தரக்கூடிய செயல்களை செய்யுங்கள்

மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்

🦦🦇🌵🕷எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🦗🪱🦋👬

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டு பிரார்த்தனை
🙏🏼 நன்றி பிரார்த்தனை🙏🏻

அன்னைக்கு நன்றி!

தந்தைக்கு நன்றி!

ஆசானுக்கு நன்றி!

இறைவனுக்கு நன்றி!

பூமிக்கு நன்றி!

நீருக்கு நன்றி!

சூரியனுக்கு நன்றி!

காற்றுக்கு நன்றி!

ஆகாயத்திற்கு நன்றி!

இயற்கைக்கு நன்றி!

பசுமைக்கு நன்றி!

என்னைக் காக்கும்
அனைத்திற்கும் நன்றி!

பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி!

எங்கும் நிறைந்த
சர்வசக்தி வாய்ந்த இறையாற்றலுக்கு
நன்றி! நன்றி! நன்றி!

🦋🌾🦂🪱எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 👨‍👩‍👦🌴🦦🐅

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

உடலை மனதை தூய்மை படுத்துவோம்!

கண்களை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
கல்லீரல் சுறுசுறுப்பாகும்!

நாசிகளை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
நுரையீரல் சுறுசுறுப்பாகும்!

உதடுகளை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
மண்ணீரல் சுறுசுறுப்பாகும்!

நாவினை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
இதயம் சுறுசுறுப்பாகும்!

காதுகளை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
சிறுநீரகம் சுறுசுறுப்பாகும்!

உடலை
தூய்மை செய்து சுறுசுறுப்பாக்கினால்
மனம் உற்சாகமாகும்!

உடலும் மனமும் தூய்மையாக வலிமையாக இருந்தால், வாழ்வு மிக சிறப்பாக இருக்கும்!

🌴🐈‍⬛எல்லா உயிர்களும்🐅🐋 👬🌳இன்புற்று வாழ்க🦗🦇

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

" பல்லுயிர்களுக்கு நன்றி "

உலக மக்கள் அனைவரும்

ஏர் உழும் எருதுகளிடம் பரிவு காட்டுவோம்!

பிரதான உணவைத் தரும் பசுக்களிடம்
அன்பு செலுத்துவோம்!

வயல்வெளிகளை வட்டமிடும் ஆடுகளை நேசிப்போம்!

தெருவோரம்
சுற்றித்திரியும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வோம்!

குளங்களில் துள்ளிக்குதிக்கும் மீன்களுடன் நாமும் துள்ளி குதித்து விளையாடுவோம்!

ஊர்க்குருவிகளை
காகங்களை கருணையோடு நோக்குவோம்!

எட்டு திக்கிலும் அன்பை வெளிப்படுத்துவோம்!

பிரபஞ்சத்தோடு
நல் உணர்வுகளை பரிமாறுவோம்!

அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பை கொடுப்போம்!

அனைவரும் ஒன்றிணைந்து அன்பு நிறைந்த உலகத்தை உருவாக்குவோம்!

🌴🦇🐅🦗எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 👨‍👩‍👦🐈‍⬛🕷🦨

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

அனைவருக்கும்
அன்பு

அரவணைப்பு

ஆனந்தம்

இன்பம்

நன்மை

உயர்வு

பொறுமை

தன்னடக்கம்

நம்பிக்கை

அமைதி

நிம்மதி

மன தைரியம்

உடல் வலிமை

மகிழ்ச்சி

கல்வி

மேன்மை

செல்வ செழிப்பு

வெற்றி

நலம்

வளம்

நிறை செல்வம்

உயர் புகழ்

மெய்ஞானம்

வழங்கிய
பிரபஞ்சபேராற்றலுக்கு நன்றி! நன்றி! நன்றி!

🕵‍♀🦟🐌🐘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🐈‍⬛🌴🦗🐜

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

சும்மா இருப்போம்
சுகமாய் இருப்போம்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓய்வெடுப்போம்

ஓய்வெடுக்கும் போதெல்லாம்
அமைதியாக இருப்போம்

அமைதியாக இருக்கும் போதெல்லாம் மெளனமொழி பேசுவோம்

மௌனித்து இருக்கும்போதெல்லாம் எண்ணங்களை நிகழ்காலத்தில் வைப்போம்

நிகழ்காலத்தில் இருக்கும் போதெல்லாம் எதிரில் உள்ளவைகளை கவனிப்போம்

இந்த உலகம்
நமக்கானது என உணர்வோம்

சுற்றியுள்ளவைகளை நிதானமாக பார்ப்போம்

நேரம் கிடைக்கும் போதெல்லாம்
சும்மா இருப்போம்
சுகமாய் இருப்போம்

🤾🐎🐒எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🐕🪳🪱🌵

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

செல்வ பிரார்த்தனை

நலம்தரும் செல்வங்களை

வளமான செல்வங்களை

மகிழ்ச்சி தரும் செல்வங்களை

நம்பிக்கையான செல்வங்களை

இனிமையான செல்வங்களை

வலிமையான செல்வங்களை

இயற்கை செல்வங்களை

உயர்வான செல்வங்களை

நிறைவான செல்வங்களை

நிலைத்த செல்வங்களை அள்ளித்தந்த
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

🌏🌏வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்🌏🌏