CPIM Tamilnadu @tncpim Channel on Telegram

CPIM Tamilnadu

@tncpim


Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.

CPIM Tamilnadu (English)

Are you interested in staying updated on the latest news and events related to the Communist Party of India (Marxist) in Tamil Nadu? Look no further than the official Telegram Channel of CPIM Tamilnadu - tncpim! This channel serves as the primary source of information for all party members and supporters, providing timely updates on party activities, political campaigns, and important announcements. The CPIM Tamilnadu Telegram channel is the go-to platform for individuals who are passionate about leftist politics and social justice. By joining this channel, you can connect with like-minded individuals, participate in discussions about current issues, and engage with party leaders and members. Whether you are a long-time party member or someone interested in learning more about the CPIM, this channel is the perfect place to stay informed and engaged. Stay informed about the party's initiatives and campaigns, get access to exclusive content, and participate in online events and discussions. The CPIM Tamilnadu Telegram channel is your one-stop destination for all things related to the Communist Party of India (Marxist) in Tamil Nadu. Join today and be part of a vibrant community dedicated to promoting progressive ideals and social change. Don't miss out on this opportunity to connect with fellow CPIM supporters and stay updated on the party's activities in Tamil Nadu. Join the CPIM Tamilnadu Telegram channel - tncpim - today and be part of the movement towards a more just and equitable society!

CPIM Tamilnadu

14 Jan, 08:22


ஆளுநர் - தமிழ்நாடு முதல்வர் இடையேயான மோதல் விசயத்தில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுடன் சிபிஐ(எம்) உறுதியாக நிற்கும்! - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலமைக்குழு உறுப்பினர், #CPIM #RNRAVI

CPIM Tamilnadu

13 Jan, 12:37


உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து #Pongal2025 #Pongal #PongalOPongal

CPIM Tamilnadu

13 Jan, 07:36


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவமான கூட்டாட்சி தத்துவத்தின் மீது ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்வோம் - தோழர் எம்.சின்னதுரை,எம்.எல்.ஏ., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM More: https://youtube.com/shorts/cJ83AhQHMxs

CPIM Tamilnadu

12 Jan, 15:10


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன்
இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறை துணை அமைச்சரும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தோழர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பயனாடை அணிவித்தும், நூல்களை வழங்கியும் வரவேற்றார். அமைச்சர்கள் இருவரும் மலையக பகுதியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நடைபெற்ற உரையாடலில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது முன்னெழுகிற பிரச்சனைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வாழ்விட, வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க வேண்டும். குறிப்பாக, கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாகாணத் தேர்தல்கள் நடத்துவது பற்றியும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது பற்றியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.

இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களின் பிரச்சனைகளில் உறுதியாக கவனம் செலுத்தும், மக்கள் தங்கள் மீது அதன் காரணமாகவே நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். பரஸ்பர உறவு தொடர வேண்டும் என்ற கருத்து இருத்தரப்பிலும் பிரதிபலித்தது குறிப்பிடத்தக்கது.

CPIM Tamilnadu

11 Jan, 15:57


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் சந்தித்தார் #CPIM #PShanmugam #TnPolitics More: https://youtube.com/shorts/4jJ6Ks4vykE

CPIM Tamilnadu

11 Jan, 15:19


தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோருடன் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், டி.ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு.

CPIM Tamilnadu

11 Jan, 14:41


எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு போட்டி அரசியலை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM More: https://youtube.com/shorts/TEbAZY-PlYY

CPIM Tamilnadu

11 Jan, 13:07


மாநில அரசாங்கம் எப்போதெல்லாம் மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுக்கிறதோ அப்போதெல்லாம் அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிக் கொண்டுதான் இருக்கிறது, இருக்கும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM More: https://youtube.com/shorts/hyMzJffYHiY

CPIM Tamilnadu

11 Jan, 11:29


தமிழ்நாட்டில் முதலமைச்சரைக் கூட சுலபமாகச் சந்திக்க முடிகிறது. ஆனால் தமிழகத்தின் டிஜிபி ஐ.பி.எஸ் சங்கர் ஜிவாளை சந்திக்க முடியவில்லை. எங்களைச் சந்திப்பதில் ஐ.பி.எஸ் சங்கர் ஜிவாலுக்கு என்ன பயம்? - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TNPolice #Police More: https://youtube.com/shorts/_pyESEkvRXo

CPIM Tamilnadu

11 Jan, 07:58


பாஜகவின் மாட்டிறைச்சி அரசியல் #BJPFails #Beef More: https://shorturl.at/aTD5S

CPIM Tamilnadu

10 Jan, 13:45


#CPIM 24வது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பெ.சண்முகம் அவர்களை பற்றி #CPIM24thStateConf #CPIMConference More: https://youtu.be/I1eYDqmZqyE?si=dDa2rJr2-RHIERId

CPIM Tamilnadu

10 Jan, 12:07


மக்களின் தனிப்பட்ட தரவுகளை கட்டுப்படுத்தும் புதிய விதியை கொண்டு வர ஒன்றிய மோடி அரசு திட்டம்; டிஜிட்டல் காலத்தின் புதிய சிறை #Privacy # DPDPAct #ModiGovt #BJPFailsIndia More: https://shorturl.at/i96Ok

CPIM Tamilnadu

10 Jan, 11:49


பெரியாரை இழிவாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க #CPIM வலியுறுத்தல் - #CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் #Seeman #NTK #Periyar More: https://shorturl.at/cNfOQ

CPIM Tamilnadu

10 Jan, 09:32


மாநில மற்றும் கல்வி உரிமையைப் பறிக்கும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளைக் கண்டித்து #SFI உள்ளிட்டு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. #UGCRegulation2025

CPIM Tamilnadu

10 Jan, 08:21


நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை லாப வெறி கொடுத்ததோ?

தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இதுபோன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SNSubramanyan #LarsenandToubro #WorkingHours #WorkersRights #SuVenkatesanMP

CPIM Tamilnadu

10 Jan, 07:05


துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவை ஆளுநர் நியமிப்பார் என்ற #UGC வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற #CPIM அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்! #UGCRegulation2025 https://shorturl.at/WyVYx

CPIM Tamilnadu

09 Jan, 14:24


எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் கொண்டு நசுக்கி வரும் பாஜக, தற்போது யுஜிசி அறிவிப்பின் மூலம் ஆளுநர்களே துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை உருவாக்கலாம் என்ற பரிந்துரை மூலம் கல்வியாளர்கள் அல்லாத கார்ப்பரேட்டுகளையும், இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களையும் துணை வேந்தர்களாக நியமிக்க வழிவகை செய்யும் – ஜி.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் #SFI #UGCRegulation2025 More: https://youtu.be/NxW6BQ4nMAE

CPIM Tamilnadu

09 Jan, 11:14


போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டம். #CITU மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் உள்ளிட்டு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

CPIM Tamilnadu

09 Jan, 11:14


#CPIM 24வது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பெ.சண்முகம் அவர்களை #CPIML மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். #CPIM24thStateConf #CPIMConference.

CPIM Tamilnadu

09 Jan, 10:36


மதுரையில் நடைபெற்ற டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரணியில் DYFI மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசனை மட்டும் காவல்துறை குறிவைத்து இழுத்துச் சென்றது ஏன்? #Madurai #Tungsten #SaveArittapatti #StopTungstenMining More: https://youtube.com/shorts/mI2ilkW8omo

CPIM Tamilnadu

09 Jan, 08:20


மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார் என்ற #UGC அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரியில் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. #UGCRegulation2025

CPIM Tamilnadu

04 Jan, 15:23


#CPIM 24வது மாநில மாநாட்டில் தோழர்கள் சங்கமம் #CPIM24thStateConf #CPIMConference More: https://youtu.be/RFUQ40QCbbs

CPIM Tamilnadu

04 Jan, 15:15


பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக தமிழக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தலைவரை நியமித்திட #CPIM வலியுறுத்தல்! #CPIM #CPIM24thStateConf #CPIMConference #StopVoileneceAgainstWomen More: https://shorturl.at/vfsvy

CPIM Tamilnadu

04 Jan, 15:12


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கங்களை குலைக்காமல் செம்மையாக செயல்படுத்திடுக ! #CPIM #CPIM24thStateConf #CPIMConference More: https://shorturl.at/3Umw9

CPIM Tamilnadu

04 Jan, 15:06


#CPIM 24வது மாநில மாநாட்டு‌ பேரணிக் காட்சிகள் #CPIM24thStateConf #CPIMConference

CPIM Tamilnadu

04 Jan, 15:01


#CPIM 24வது மாநில மாநாட்டில் காம்ரேட் கேங்க்ஸ்டா #CPIM24thStateConf #CPIMConference

CPIM Tamilnadu

04 Jan, 14:14


கச்சா எண்ணெய் விலை குறைந்தும் குறையாத பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை! மக்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தீர்மானம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்று சொல்லிவிட்டு கச்சா எண்ணெய் விலை 18 டாலர் குறைந்த பிறகும் சல்லிக்காசு கூட குறைக்காமல் சண்டித்தனம் செய்து வருகிறார்கள்.

சமையல் எரிவாயு உருளைக்கு மானியத்தை வங்கியில் தருவோம் என்று ஆசைக்காட்டிவிட்டு மூன்று மடங்காக விலையை உயர்த்திவிட்டு மானியம் தராமல் ஏழைகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு - #CPIM 24வது மாநில மாநாடு அறைகூவல் #CPIM24thStateConf #CrudeOilPrice #PetrolDieselPrice #PetrolPrice #DieselPrice #ModiFailed #NDAFailed

CPIM Tamilnadu

04 Jan, 14:08


அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூக தளத்திலும் விஷமாக வளர்ந்து வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மதவெறி சக்திகளை முற்றிலுமாக முறியடித்து, நம் நாட்டின் அரசியல், சமூக பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க போராடுவோம்! #CPIM 24வது மாநில மாநாடு அறைகூவல் #CPIM24thStateConf #CPIMConference

CPIM Tamilnadu

04 Jan, 13:58


விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க #CPIM 24வது மாநில மாநாடு வலியுறுத்தல்! More: https://shorturl.at/6JJgM

CPIM Tamilnadu

04 Jan, 13:28


இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும் - மாகணங்களுக்கான அதிகாரப் பரவலை உறுதி செய்திடுக…

தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இச்சுமூகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகார பரவலையும் உறுதி செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

நடத்தப்படாமல் உள்ள இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை மிக விரைவாக நடத்தி, மாகாண சபைகளுக்கான உரிய அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முன் வர வேண்டும்.

இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களின் மலையகத் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உரிய கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கத்தின் போது எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்காது, கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டு வசதி, நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். #CPIM #CPIM24thStateConf #CPIMConferenceMore: https://shorturl.at/khcuG

CPIM Tamilnadu

04 Jan, 11:40


சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும் நிலைக்கட்டணத்தையும் கைவிட வேண்டும். சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி வரி வசூல் என்ற பெயரில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரிடம் மேற்கொள்ளும் அபராதம், அதீத வசூல் உள்ளிட்ட அத்துமீறல்களை கைவிட வேண்டும்.
ஒன்றிய அரசு சிறு, குறு தொழில் சார்ந்த ஜாப் ஒர்க்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். #CPIM24thStateConf #CPIMConference More: https://shorturl.at/YIpEt

CPIM Tamilnadu

04 Jan, 11:31


#CPIM 24வது மாநில மாநாட்டு‌ பேரணிக் காட்சிகள் #CPIM24thStateConf #CPIMConference

CPIM Tamilnadu

04 Jan, 11:25


மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்துகளை இணைப்பு நடவடிக்கைகளை மக்கள் விருப்பத்திற்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் அரசு மேற்கொள்ள கூடாது!

#CPIM உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களின் கருத்துக்களை கேட்டு அதற்கு பின்புதான் கிராமப்புற பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் இணைப்பதும் நகராட்சிகளை மாநகராட்சி இணைப்பது சம்பந்தமாக முடிவு எடுக்க வேண்டும் என்று நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. மக்கள் கருத்தறியாமல் நாங்கள் இணைக்க மாட்டோம் என்று ஏற்கனவே உறுதியளித்துள்ளார். தற்போது பேரூராட்சி நகராட்சி கிராமப்புற ஊராட்சிகளை இணைப்பதும் கிராமப்புற ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றுவதும் என்று தமிழ்நாடு அரசு கருத்துருவாக்கி அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் மக்கள் விருப்பத்திற்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் இந்த இணைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கேட்டுக் கொள்கிறது. #CPIM24thStateConf #cpimconference2025 More: https://shorturl.at/X8kLB

CPIM Tamilnadu

04 Jan, 11:04


இந்தியாவில் பல்வேறு மாடல்கள் முண்மொழியப்படுகிறது... இந்துத்துவ மாடல்தான் இந்தியாவிற்கான மாடல் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம் இந்தியாவிற்கான மாடல் இடதுசாரிமாடல் மட்டும்தான் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #CPIM24thStateConf #cpimconference2025 More: https://youtu.be/FdXZq5urSD4

CPIM Tamilnadu

28 Dec, 12:18


அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவே பதவி விலகு! தமிழ்நாட்டில் 10 மாநகரங்களில் இடதுசாரி கட்சிகள் டிசம்பர் 30 அன்று ஆர்ப்பாட்டம்! #CPIM #Ambedkar #Casteist #Manuwadi #AmitShah #ResignAmitShah More: https://shorturl.at/iSuTP

CPIM Tamilnadu

28 Dec, 12:02


தடம் பதித்த தலைவர்கள்; தீரமிக்க போராட்டக்காரர் தோழர் நல்லசிவன்!

சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf⁩ #CommunistMovement #CPIM24thStateConf

CPIM Tamilnadu

28 Dec, 11:34


மலைவாழ் மக்கள் பிரச்சனைகள் மீதான தலையீடுகள்; வன உரிமைச் சட்டம் 2006ன் படி மலைவாழ் மக்கள் குடும்பத்திற்கு தலா 10 ஏக்கர் நிலம் வழங்கிட வலியுறுத்தி 9.1.2023 அன்று கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பிறகு மாவட்ட ஆட்சித் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரிய ஆவணங்கள் இருப்பின் கண்டிப்பாக பட்டா வழங்கிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி கூறினார். மேலும் மலைவாழ் மக்கள் சாகுபடி செய்யும் நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக உறுதியளித்தார். இது போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. #CPIM #PeoplesVanguard #VoiceOfPeople #CPIM24thStateConf

CPIM Tamilnadu

28 Dec, 10:48


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf #CommunistMovement #CPIM24thStateConf More: https://youtube.com/shorts/jyObytuSlDw

CPIM Tamilnadu

28 Dec, 10:19


மதவெறி / சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு நடவடிக்கைகள்; புதுக்கோட்டை வேங்கைவயல் தலையீடுகள் - வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்ததால் அந்நீரை பயன்படுத்திய சிறுவர், சிறுமி உள்ளிட்டு 30க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அக்கிராமத்தில் இரட்டைக்குவளை முறை, பட்டியலின மக்கள் ஆலய நுழைவு வழிபாடு மறுப்பு போன்ற தீண்டாமை கொடுமைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் தெரிய வந்தது. உடனடியாக நமது கட்சி தலையிட்டது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பட்டியலின மக்களை அழைத்து ஆலய பிரவேசம் செய்துள்ளனர். நமது தலையீட்டின் பிறகு புதிதாக குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #CPIM #PeoplesVanguard #VoiceOfPeople #CPIM24thStateConf

CPIM Tamilnadu

28 Dec, 08:15


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf

CPIM Tamilnadu

28 Dec, 07:33


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - அருணா ஜெகதீசன் அறிக்கை; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத பின்னணியில் இந்த கொடூரமான சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி தூத்துக்குடியில் 2022 டிசம்பர் 11 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு & சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, மதிமுக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. #CPIM #PeoplesVanguard #VoiceOfPeople #CPIM24thStateConf

CPIM Tamilnadu

28 Dec, 06:41


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf #CommunistMovement #CPIM24thStateConf More: https://youtube.com/shorts/Q_3-dWGe79o

CPIM Tamilnadu

28 Dec, 06:10


சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு நடவடிக்கைகள்; பட்டியலின - பழங்குடியினர் பாதுகாப்பு மாநாடு - விழுப்புரத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு மாநாடு எழுச்சிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி, மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுவாக, இம்மாநாடு அரசியல் கட்சி தலைவர்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. #CPIM #PeoplesVanguard #VoiceOfPeople #CPIM24thStateConf

CPIM Tamilnadu

28 Dec, 05:24


தடம் பதித்த தலைவர்கள்; தீரமிக்க போராட்டக்காரர் தோழர் உமாநாத்!

சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf⁩ #CommunistMovement #CPIM24thStateConf

CPIM Tamilnadu

27 Dec, 14:30


மதவெறி / சமூக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எதிர்ப்பு; சங்கராபுர தலித் மக்கள் வீடுகள் சூறை - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில் துறைப்பட்டு கிராமத்தில் 18.01.2023 அன்று தலித் மக்கள் குடியிருப்புகளுக்குள் 200க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதிவெறியர்கள் உள்ளே புகுந்து வன்முறை தாக்குதல். இச்சம்பவம் பெரும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து உடனே கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், தலித் மக்கள் மீது போடப்பட்டு வழக்குகளை திரும்ப பெறவும், அமைதி சூழலை ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 2.02.2023 அன்று சங்கராபுரத்தில் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆர்.பத்ரி உள்ளிட்டு மாவட்ட தலைவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். #CPIM #PeoplesVanguard #VoiceOfPeople #CPIM24thStateConf

CPIM Tamilnadu

27 Dec, 12:45


தடம் பதித்த தலைவர்கள்; தீரமிக்க போராட்டக்காரர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன்!

சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf #CommunistMovement #CPIM24thStateConf

CPIM Tamilnadu

27 Dec, 12:24


அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்புணர்வு; காவல் துறையின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #AnnaUniversity #FIR #TNpoliceoffl More: https://youtu.be/o9oI2JXPw9M

CPIM Tamilnadu

27 Dec, 12:04


அண்ணாமலை அரசியல் நடத்துகிறாரா அல்லது தமிழக மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என நினைக்கிறாரா? ஒரு கட்சியைத் தோற்கடிக்க வாக்குகள் விழ வேண்டும், அதற்கு மக்களிடம் தான் போக முடியும், அறுபடை வீடு எதற்கு? ராமன் அரசியலுக்குப் பிறகு முருகன் அரசியலா? மொத்தத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு அரோகரா! - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Annamalai #BJPFails

CPIM Tamilnadu

27 Dec, 11:34


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf⁩ #CommunistMovement #CPIM24thStateConf

CPIM Tamilnadu

27 Dec, 10:01


மதவெறி / சமூக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எதிர்ப்பு; திருவண்ணாமலையில் தலித் மக்கள் கோயில் நுழைவுப் போராட்டம் - திருவண்ணாமலை, தண்டராம்பட்டு வட்டம், தென்முடியனூர் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக தலித் மக்கள் வழிபாடு செய்து வந்தனர். அதன் பிறகு சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்தியது தொடர்பாக சிபிஐ(எம்) திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகளைச் சந்தித்து தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலித் மக்கள் ஆலய வழிபாட்டினை அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் 30.1.2023 அன்று நடைபெற்ற திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் தலித் மக்கள் சென்று வழிபாடு நடத்தினர். 60 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. #CPIM #PeoplesVanguard #VoiceOfPeople #CPIM24thStateConf

CPIM Tamilnadu

27 Dec, 07:44


விடுதலை 2 திரைப்பட இயக்குனர் தோழர் வெற்றி மாறன் அவர்களை #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். #Viduthalai2 #Vetrimaran

CPIM Tamilnadu

01 Dec, 15:08


#CPIM ஈரோடு 13வது மாநாட்டில், 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் ஆர்.ரகுராமன் தேர்வு. #CPIM24thconference #CPIMTamilnadu

CPIM Tamilnadu

01 Dec, 14:03


#CPIM சிவகங்கை 24வது மாநாட்டில், 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் ஏர்.ஆர்.மோகன் தேர்வு. #CPIM24thconference

CPIM Tamilnadu

01 Dec, 13:52


#CPIM கன்னியாகுமரி 24வது மாநாட்டில், 45 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய மாவட்டச் செயலாளராக தோழர் ஆர்.செல்லசுவாமி தேர்வு. #CPIM24thStateConf

CPIM Tamilnadu

01 Dec, 10:52


பா.ஜ.க. அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது.
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பதைக் கூறிக் கொள்கிறோம்- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SaveArittapatti #SaveTamilHistory #SaveAlagarKovil #SuVenkatesanMP

CPIM Tamilnadu

30 Nov, 12:38


தொடர் மழை, புயல்: கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்துக முதற்கட்ட நிவாரணம் அறிவித்திடுக ! #CPIM வலியுறுத்தல் #CycloneFengal #TNRains #TNGovt #NDAGovt More: https://bit.ly/41aN0h5

CPIM Tamilnadu

30 Nov, 07:45


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்!#CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு இலச்சினை! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf

CPIM Tamilnadu

30 Nov, 06:41


“சர்க்கரை விற்பனைக்கு மாதா மாதம் சர்க்கரை ஆலைகளுக்கு இலக்கு நிர்ணயித்திடும் முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளித்திட வேண்டும்” ஒன்றிய அரசு தற்போது முன்மொழிந்துள்ள சர்க்கரை கட்டுப்பாடு சட்டம் 2024 அமலானால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் 14 நாட்களில் பணம் தர வேண்டும் என்றுள்ள 1966 கரும்பு சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டுவிடும். இது நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளுக்கு எதிரானது.

தோழர் டி.ரவீந்திரன் பொதுச் செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் #AIKS #sugarcane #FarmersLivesMatter #BJPBetrayedFarmers #BJPDestroyingIndia

CPIM Tamilnadu

30 Nov, 05:04


#CPIM அரியலூர் 9வது மாநாட்டில், 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் எம்.இளங்கோவன் தேர்வு. #CPIMconference

CPIM Tamilnadu

29 Nov, 12:45


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்! #CPIM தமிழ்நாடு 24வது மாநில மாநாடு விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf

CPIM Tamilnadu

29 Nov, 12:04


அறிவியல் இயக்க முன்னோடி அ.வள்ளிநாயகம் மறைவுக்கு #CPIM இரங்கல்! #condolence More: https://bit.ly/4i39WF8

CPIM Tamilnadu

29 Nov, 11:54


நெருங்கிய உறவினர்களே பெரும்பாலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் என்பது நீண்ட காலமாக வரக்கூடிய தகவல்தான். உயர்நீதிமன்றம் அதில் அக்கறை செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் ஏற்கனவே இருக்கக்கூடிய சட்டங்கள் தண்டனைகளில் போதாமை என்பது அல்ல பிரச்சனை.சட்டங்களை அமல்படுத்துவதில், விசாரணை நடக்கும் முறையில், சமூகப் பார்வையில் உள்ள கோளாறுகள்தான் காரணம். தண்டனைகளை கடுமையாக்குவது தீர்வாகாது. Severity அல்ல, certainty of punishment என்பதே முக்கியம் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #MadrasHighCourt #SexualAssault #POCSO #StopViolenceAgainstWomen #GenderEquality

CPIM Tamilnadu

29 Nov, 10:17


வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் நீதிமன்றங்களால் வன்முறை - பதற்றம்! உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள #CPIM கோரிக்கை! #UttarPradesh #SambhalViolence #SambhalJamaMasjid More: https://bit.ly/3Zsxv2T

CPIM Tamilnadu

29 Nov, 09:29


குறு சிறு நடுத்தர தொழில் கடன் தகுதி மதிப்பீட்டை அரசு வங்கிகளே செய்து கொள்ளும்; நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில். கடன் விண்ணப்பங்கள் வேகமாக பரிசீலிக்கப்படவும், கடன் பெறுவதில் உள்ள இழுத்தடிப்புகளும், நிராகரிப்புகளும் குறைவதற்கு இப்புதிய ஏற்பாடு வழி வகுத்தால் மகிழ்ச்சிதான் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BANK #LOAN #TradersGstTax #NDAGovt #NDAFailed

CPIM Tamilnadu

29 Nov, 08:45


சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து, CBI விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி #CPIM காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.நேரு உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.#AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP

CPIM Tamilnadu

29 Nov, 08:31


சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து, #CBI விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி #CPIM தருமபுரி மாவட்டக்குழு சார்பில் BSNL அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP

CPIM Tamilnadu

27 Nov, 05:58


சுரண்டல் ஒடுக்குமுறை தகரட்டும்! சமத்துவ தமிழ்நாடு ஒளிரட்டும்! #CPIM 24வது மாநில மாநாடு லட்சிணை! விழுப்புரம் 2025 ஜனவரி 3, 4, 5 #CPIM24thStateConf

CPIM Tamilnadu

26 Nov, 14:14


வெறுப்பை மட்டுமே விதைப்பது, பொய் சொல்வது, ஆட்சியைப் பிடிக்க வேஷம் போட்டது, எதிர்க்கட்சிகளை உடைத்து ஆட்சியைப் பிடித்தது, இதுதான் அதிகாரப் பசி - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP More: https://youtube.com/shorts/llrPShlU38E

CPIM Tamilnadu

26 Nov, 13:31


அரசியலமைப்பை குறிவைக்கும் பாஜக ஆட்சியின் இரட்டை பீரங்கிகளான பெரும்பான்மைவதமும், கார்ப்பரேட் நலனும், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75வது ஆண்டில், அதனை பாதுகாக்கவும் பாஜகவை தடுக்கவும் முயல்வோர் இந்த இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம் - தோழர் பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #ModiFailed #BJPFails

CPIM Tamilnadu

26 Nov, 12:53


ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு #CPIM சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நவம்பர் 28 அன்று #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், பொருளாதார நிபுணர் தாமஸ் பிராங்கோ, COTTEE, CITU ராஜேந்திரன் நேரலையில் நம்மோடு இணைகிறார்கள்... தொடர் வர்ணனையோடு ஆர்ப்பாட்ட செய்திகளும், காட்சிகளுக்கும் இணைந்திருங்கள்! #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP

CPIM Tamilnadu

26 Nov, 12:25


குன்றத்தூர்-படப்பையில் நடைபெற்ற #CPIM காஞ்சிபுரம் 24வது மாநாட்டில், 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் கே.நேரு தேர்வு. #Kanchipuram #CPIMconference

CPIM Tamilnadu

26 Nov, 11:20


லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி #CPIM வடசென்னை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP

CPIM Tamilnadu

26 Nov, 10:40


மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000/- ஆக உயர்த்தி வழங்கிடுக! தமிழக முதலமைச்சருக்கு #CPIM கடிதம்! #PhysicallyChallenged More: https://bit.ly/3ZneIpJ

CPIM Tamilnadu

26 Nov, 10:11


வெறுப்பை மட்டுமே மக்களிடம் விதைப்பது, வெக்கமே இல்லாமல் பொய் சொல்லுவது, கோவாவில் ஆட்சியைப் பிடிக்க வேஷம் போட்டது, மணிப்பூரில் எதிர்க்கட்சிகளை உடைத்து ஆட்சியைப் பிடித்தது, ஓட்டுக்காக நீங்கள் எதிர்த்தவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொள்வது, இதுதான் அதிராகப் பசி - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP More: https://youtu.be/q5rgMZRDwyg

CPIM Tamilnadu

26 Nov, 08:32


அதானியின் ரூ. 2029 கோடி லஞ்சம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க ஒன்றிய பாஜக அரசு மறுத்து விட்டதால், முதல் நாளே நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் நாள் முழுவதும்முடங்கின. #Parliament #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP

CPIM Tamilnadu

26 Nov, 07:53


உ.பி.யில் மசூதி கணக்கெடுப்பு என்னும் பெயரில் நடைபெற்ற சம்பல் சம்பவம் திட்டமிட்ட சதி; யோகி ஆட்சியே காரணம் "உங்கள் மக்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவோம்" என்று மிரட்டிய போலீஸ் அதிகாரி.

கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களை காரணம் காட்டி மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி பாஜக ஆட்சியும் மதவெறி கும்பல்களும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

இச்சூழலில் அமைதி காக்க வேண்டும் என்று மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது - உ.பி., மாநிலக்குழு, #CPIM #UttarPradsh #yogiadityanath #Sambhal #ModiFailed

CPIM Tamilnadu

26 Nov, 07:02


#CPIM 24வது தமிழ்நாடு மாநில மாநாடு! 2025 ஜனவரி 3,4,5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது! #CPIM #CPIM24thConference #CPIMTN24thStateConf #CPIMConference More: https://youtu.be/BPLHpJxtQT8

CPIM Tamilnadu

26 Nov, 06:31


தோழர் சு.வெங்கடேசன் கோரிக்கை வெற்றி!

தமிழர் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தேதி மாற்றம்!

தமிழர் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த ICAI தேர்வுகளை மாற்ற வேண்டுமென கடிதம் எழுதியிருந்தேன்.

தற்போது பொங்கல் திருநாள் அன்று இருந்த தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #ICAI #Exam #Pongal

CPIM Tamilnadu

26 Nov, 06:21


Channel photo updated

CPIM Tamilnadu

26 Nov, 04:33


#CPIM மதுரை மாநகர் 24வது மாநாட்டில், 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் மா.கணேசன் தேர்வு. #Madurai #CPIMconference

CPIM Tamilnadu

25 Nov, 14:36


#CPIM நாமக்கல் 9வது மாநாட்டில், 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் எஸ். கந்தசாமி தேர்வு. #CPIM24thconference #CPIMTamilnadu

CPIM Tamilnadu

25 Nov, 13:39


ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு #CPIM சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நவம்பர் 28 அன்று #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், பொருளாதார நிபுணர் தாமஸ் பிராங்கோ, COTTEE, CITU ராஜேந்திரன் நேரலையில் நம்மோடு இணைகிறார்கள்... தொடர் வர்ணனையோடு ஆர்ப்பாட்ட செய்திகளும், காட்சிகளுக்கும் இணைந்திருங்கள்! #AdaniBriberyCase #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP

CPIM Tamilnadu

25 Nov, 11:02


தொடரத் தகுதியற்ற ஆதித்யநாத் அரசு #UttarPradsh #yogiadityanath #HospitalFire கேட்க: https://bit.ly/3V6oj1E

CPIM Tamilnadu

25 Nov, 09:06


நவம்பர் 25; பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு சர்வதேச தினம்!
தட்டிக் கேட்போம்!
தடுத்து நிறுத்துவோம்!
வன்முறை தகர்த்த
வாழ்வைக் கொடுக்கும்
சோஷலிச அமைப்பு பெற
சோர்வின்றி போராடுவோம்…! - தோழர் உ.வாசுகி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #InternationalDayAgainstViolence #StopViolenceAgainstWomen #GenderEquality #Women

CPIM Tamilnadu

20 Nov, 10:48


பாஜகவினர் வளர்ச்சி, வளர்ச்சி என்கிறார்களே, வளர்ச்சி யாருக்கானது? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு! #Malnutrition #ChildMalnutrition #ChildHealth #RightToFood #ModiFails More: https://shorturl.at/4vI1j

CPIM Tamilnadu

20 Nov, 10:06


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று கூறி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தாமல் அக்னிபத் திட்டத்தில் வேலை செய்யுங்கள். அக்னிபத் முடிந்ததும் பாஜக, ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் காவல்காரர்களாக வேலை செய்யுங்கள் என்கின்றனர் - தோழர் பா.செல்வசிங் ,மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Unemployment #Unemployed #ModiFailed #NDAFailed

CPIM Tamilnadu

20 Nov, 08:55


மணிப்பூருக்குச் செல்லாத இவரு பிரதமராம்... #Manipur #manipurviolence #BJPFailsIndia

CPIM Tamilnadu

20 Nov, 08:02


ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் பதில் அனுப்பியதற்கு எதிராக வழக்குத் தொடுத்தால் “அலுவலகத் தவறு”என்பதும் அரசு நிறுவனங்கள் இந்தியைத் திணிப்பதற்கு எதிராகக் கண்டனம் வந்தால் “தொழில்நுட்பத் தவறு” என்பதும் முதன்முறையல்ல. இச்செயல்களுக்கு நேர்மையோடு பொறுப்பேற்க முடியாது. ஏனென்றால் இந்தியைத் திணிக்க நேர்மையற்ற வழி மட்டுந்தான் இருக்கிறது. உங்களின் செயல்களாலேயே நீங்கள் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition #இந்தி_திணிப்பை_நிறுத்து

CPIM Tamilnadu

20 Nov, 06:37


மணிப்பூரில் நடைபெறும் கலவரத்திற்கு காரணம் மாநில முதலமைச்சரும், ஒன்றிய அரசும்தான்.

மணிப்பூரில் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் , #CPIM #Manipur #manipurviolence #BJPFailsIndia

CPIM Tamilnadu

20 Nov, 06:15


குடிநீருக்கும், விலை நிலத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #LandconsolidationAct2024

CPIM Tamilnadu

20 Nov, 05:36


#CPIM கரூர் 10வது மாநாட்டில், 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக மீண்டும் தோழர் மா. ஜோதிபாசு தேர்வு. #CPIM24thconference #CPIMTamilnadu

CPIM Tamilnadu

19 Nov, 14:48


எல்லா நாடுகளுக்கும் செல்லும் மோடி மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM More: https://youtu.be/KAhqrJymE5M

CPIM Tamilnadu

19 Nov, 14:03


மாசிலா- விஜயா அறக்கட்டளை சார்பில் ஜனநாயக பாதுகாவலர்கள் விருது 2024 வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய அரங்கில் நடைபெற்றது. இதில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், இந்து என்.ராம், எழுத்தாளர் இந்திரன் ஆகிய 5 ஆளுமைகளுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விருது வழங்கினார்.

CPIM Tamilnadu

19 Nov, 13:49


மதுரை இரட்டை தியாகிகள் மாரி - மணவாளன் 75வது நினைவு தினம் பீபிகுளம், நேதாஜி மெயின் ரோட்டில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.விஜயராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், உள்ளிட்டு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

CPIM Tamilnadu

19 Nov, 13:12


நீதி வழங்கட்டும் நிதி ஆணையம் #16thFinance_Commission #FinanceCommission More: https://shorturl.at/NG5zl

CPIM Tamilnadu

19 Nov, 12:54


ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமூக விரோத, மனித விரோத, பெண்கள் விரோத குற்றச் செயல்கள் குறித்த விசாரணையை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும் - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #AIDWA #IshaFoundation #IshaYogaCenter #JaggiVasudev More: https://youtu.be/cuR1Qd6Omto

CPIM Tamilnadu

19 Nov, 12:19


பாலின சமத்துவ இயக்கம் சட்ட மீறலா? சமூகக் குற்றமா? சென்னை பெருநகர காவல்துறையின் அராஜக நடவடிக்கைக்கு #CPIM கண்டனம் #CPIM #GenderEqualityWalk #Police More: https://shorturl.at/hmiyq

CPIM Tamilnadu

19 Nov, 10:47


மணிப்பூரில் மிகவும் மோசமான நிலைமை அரசியல் தீர்வை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயல வேண்டும்!#CPIM அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்.#Manipur #manipurviolence #BJPFailsIndia More: https://shorturl.at/ceiRW

CPIM Tamilnadu

19 Nov, 09:55


#CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்வு காட்சிகள் #equalityforall #EqualityWalk #GenderEquality More: https://youtu.be/GTSKugqnwBQ

CPIM Tamilnadu

19 Nov, 09:19


#CPIM இராணிப்பேட்டை முதல் மாநாட்டில், 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர். பி.ரகுபதி தேர்வு.#CPIM24thconference #CPIMTamilnadu

CPIM Tamilnadu

25 Oct, 15:12


98 பேருக்கு ஆயுள் தண்டனை; சாதி வெறியர்களுக்கு எதிரான #CPIM போராட்டம் மகத்தான வெற்றி!
கர்நாடகாவில் உள்ள மரகுபி கிராமத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்காக 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொப்பல் அமர்வு நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த போராட்டம் #CPIM மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் நடத்தப்பட்டது. #CPIMstruggle #socialjustice #DSMMstruggle #DalitLivesMatter More: https://youtu.be/usVtH-V2hRw

CPIM Tamilnadu

25 Oct, 14:53


கடவுள் அருளால் தீர்ப்புகள் பெறப்படுகின்றன என்றால், மோசமான தீர்ப்புகளையும் கடவுள்தான் வழங்குகிறாரா? அரசமைப்பு சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி அச்ச உணர்வின்றி ஏந்திப் பிடிப்போம் என எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நீதிபதிகள் மறந்துவிடுவதே இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம் - மேனாள் நீதிபதி கே.சந்துரு #Ayodhya #RamarTemple #SupremeCourt #DYChandrachud #JusticeChandru

CPIM Tamilnadu

25 Oct, 13:27


மோடி ஆட்சியில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி #IndianEconomy #Dollar #Rupee #ModiFailed கேட்க: https://shorturl.at/Fv29P

CPIM Tamilnadu

25 Oct, 12:22


அக். 24,25 தேதிகளில் செஞ்சியில் நடைபெற்ற #CPIM 24வது விழுப்புரம் மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செயலாளராக தோழர் என்.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார். 35 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. #CPIM24thConference #CPIMTamilNadu

CPIM Tamilnadu

25 Oct, 04:55


பாஜக ஆட்சியில் போலிகள்! #GujaratModal #FakeCourt #FakeTollGate #IshaFoundation #nithiyantha #BJPGovernment #ModiFails கேட்க: https://shorturl.at/EbeYM

CPIM Tamilnadu

25 Oct, 02:29


சிறைகளுக்கு அஞ்சாதீர்கள்! அவை விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள். விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது!

வேர், மண்ணை பிடித்திருப்பது போல், பாலஸ்தீன நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்துவிட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது. உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். வழங்குங்கள்! கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள் - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வரின் இறுதி உயிலின் சுருக்கம் #Palestine #Gaza #Freedom #Liberation #FreePalestine #EndIsraeliTerror #EndTheOccupation #StandWithPalestine #YahyaSinwar More: https://youtu.be/blpqDHl6MxE

CPIM Tamilnadu

24 Oct, 09:24


பெண்களுக்கு தேசமே இல்லையா! 2021ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 86 பாலியல் வன்கொடுமைகள், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பெண்களுக்கு எதிராக 49 குற்றச்செயல்கள் (ஆதாரம்: தேசிய குற்றப்பதிவு புள்ளியியல் நிறுவனம் - NCRB) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு ஒன்றிய மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். #StopViolenceAgainstWomen #StopViolenceAgaindChild #ModiFailed

CPIM Tamilnadu

24 Oct, 06:55


ஆர்எஸ்எஸ்-பாஜகவை வேரறுத்து, நாட்டை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவோம்.

ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் தொடர்ச்சியாகத் தாக்கப்படுகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் கருத்தியல் நீடிக்கும் வரை வர்க்க ஒற்றுமைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் பேரபாயம்.சோசலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் முன்னேற வேண்டுமானால், ஆர்எஸ்எஸ்ஸின் ஆணிவேரை அறுக்க வேண்டும் - தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், #CPIM #CPIM24thCongress #Madurai

CPIM Tamilnadu

24 Oct, 03:31


கேப்டன் லட்சுமி ஷேகால் நெஞ்சுரம் மிக்க ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1943ம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவுக்கு தலைமை பொறுப்பை வகித்தவர். அர்ப்பணிப்பு உணர்வு மிக்க மருத்துவர். #CPIM இல் உறுப்பினராக இருந்தவர். பெண் உரிமைகளுக்கான மாபெரும் போராளி. அவரது வாழ்வும், பணிகளும் இனி வரும் பல தலைமுறைகளின் இளைஞர்களை ஈர்க்கக் கூடியது. இன்று அவரது பிறந்த தினம்! #CaptainLakshmiSahgal #FreedomFighter #Communist

CPIM Tamilnadu

23 Oct, 13:45


தொழிற்சங்கப் போராட்டம் என்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம். மூலதனத்தையோ தொழிற்சாலைகள் வருவதையோ தொழிற்சங்கங்கள் எதிர்க்காது - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #SamsungWorkers #WorkersStrike #FightForRights #WorkersRights More: https://youtu.be/MQ7G8PpKaRY

CPIM Tamilnadu

23 Oct, 10:45


வேலைக்கான வாக்குறுதி என்னாச்சு பிரதமரே?
ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவதாக ஆட்சிக்கு வந்தபோது வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்திலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. மோடியே, பாஜகவே இளைஞர்களின் கேள்விக்கு பதில் சொல்? #Unemployment #Unemployed #ModiFailed #NDAFailed

CPIM Tamilnadu

23 Oct, 09:46


107 மாதங்களாக உயர்த்தப்படாத அகவிலைப்படியை உயர்த்தவும், 2022 டிசம்பர் மாதம் முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுகால பணப்பலன்கள் வழங்க வலியுறுத்தியும் சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம் #WorkersRights #PensionForWorkers More: https://youtu.be/LMhY7ZdppFk

CPIM Tamilnadu

23 Oct, 09:30


திருவள்ளுவரா,வந்தே பாரத்தா, பிஎஸ்என்எல்லா...

எல்லாத்துக்கும் காவி பெயிண்ட் அடிப்பது மட்டுந்தான் ஒன்றிய அரசின் முழுநேர தேசப்பணி!

தொலைதொடர்பு சந்தையை தனியாருக்கு தந்துவிட்டு #BSNLக்கு "புதிய லோகோ"வை தந்து மகிழ்ந்துள்ளது ஒன்றிய அரசு. காவி நிறமும், "இந்தியாவை" இணைக்கிறோம் என்பதற்குப் பதிலாக "பாரத்" ஐ இணைக்கிறோம் என்று மாற்றம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி.மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BsnlLogo #BSNL #BJPFailed

CPIM Tamilnadu

23 Oct, 08:30


ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி சென்னையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.செல்வபெருந்தகை, #CPIM எம்.பி., சச்சிதானந்தம், சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

CPIM Tamilnadu

23 Oct, 08:23


கோவை மாமன்ற கூட்டத்தில் ஈசா யோகா மையத்தின் மூன்று எரியூட்டு மயானங்களுக்கு அனுமதி தரக் கூடாது என #CPIM சார்பில் வலியுறுத்தப்பட்டது. #IshaFoundation #IshaYogaCenter #JaggiVasudev

CPIM Tamilnadu

23 Oct, 07:23


தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் தொழில் பாதிக்கப்படும் என்பது உண்மையல்ல. தி இந்து (ஆங்கிலம்) புள்ளி விவரங்களுடன் நிரூபணம்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2008-2018 காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிக வேலை நிறுத்தங்கள் நடந்த மாநிலம் தமிழ்நாடு. 26 விழுக்காட்டிற்கும் மேல். அதே காலகட்டத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் 16 விழுக்காடு தமிழ்நாட்டில்தான். அதே அளவு தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கிறது.

இதே காலகட்டத்தில் நிரந்தர மூலதன உருவாக்கமும், தொழில்மயமாக்களும் அதிக அளவில் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. மேற்கூறிய புள்ளிவிவரங்கள் மஹாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும் பொருந்தும் - ஆர்.விஜய்சங்கர் மூத்த பத்திரிகையாளர் #TheHindu #DataPoint #WorkersStrike #FightForRights #WorkersRights

CPIM Tamilnadu

23 Oct, 06:01


1 நாளில் 86 பாலியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்கள் 1 மணி நேரத்துக்கு 49 வழக்குகள். இதில் பெருவாரியான வழக்குகள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #BJPAgainstWomen #BJPFailed #StopViolenceAgainstWomen More: https://youtu.be/n7m9fRyXuyo

CPIM Tamilnadu

22 Oct, 13:44


கடந்து நான்கு மாத காலமாக எங்களுடன் பேச மாட்டேன், சங்கத்தை ஏற்க மாட்டேன், யாருக்கும் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்றெல்லாம் பேசிய சாம்சங் நிறுவனத்தில் சங்கம் அமைத்து, 37 நாள் வேலை நிறுத்தம் நடத்தி சாம்சங்கை தொழிலாளர்களுடன் பேச வைத்திருக்கிறது போராட்டம் - தோழர் இ.முத்துகுமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் #CITU #SamsungWorkers #WorkersStrike #FightForRights #WorkersRights More: https://youtu.be/96XafeVq3k8