🙏திருச்செந்தூர் முருகன்🙏 @thiruchendurmurugan Channel on Telegram

🙏திருச்செந்தூர் முருகன்🙏

@thiruchendurmurugan


🕉️ஆன்மீக தகவல்கள்
🔔ஆலய வரலாறுகள்
🌄கோபுர தரிசனம்
🔱தெய்வ ஸ்துதி
📿திருமந்திரம்
🔥பக்தி பாடல்கள்
📆தினசரி நாள்காட்டி
📖பஞ்சாங்கம் - ஹோரை
✡️ராசிபலன்கள்
🐓நற்சிந்தனைகள்
🍄பொன்மொழிகள்
💊மருத்துவ குறிப்புகள்

மற்ற தளத்தின் லிங்க் யூடியூப் லிங்க் அனுமதி இல்லை

🕉️ஆன்மீக தகவல்கள் (Tamil)

🕉️ஆன்மீக தகவல்கள் என்பது ஒரு தமிழ் மொழியில் உள்ள டெலிகிராம் சேனல். இந்த சேனல் அனைத்து ஆன்மீக சாதனைகளும் மற்றும் ஆலய வரலாறுகளுக்கு உட்பட்ட தகவல்களை உள்ளடக்கும். இது ஒரு அருள் தீபம், பதிவுசீட்டும் என்று வாய்ப்புக்கு அர்த்தம் கொண்டது. இந்த சேனலில் கோபுர தரிசனம், தெய்வ ஸ்துதி, திருமந்திரம், பக்தி பாடல்கள், தினசரி நாள்காட்டி, பஞ்சாங்கம் - ஹோரை, ராசிபலன்கள், நற்சிந்தனைகள், பொன்மொழிகள், மருத்துவ குறிப்புகள் முதலியன ஏனைய தகவல்கள் உள்ளன. இந்த சேனலை உங்கள் ஆன்மீக பயணத்திற்கு உதவுகின்றது. உங்கள் உடலுக்கு மற்றும் ஆன்மீக சமயத்திற்கு பயன்படும் மிகவும் அருளாளர் உள்ள உத்தம டெலிகிராம் சேனலை மறக்காதீர்கள். இதை உற்பத்தி செய்வதற்கு சென்று சேருங்கள் மற்றும் பகிருங்கள்!

🙏திருச்செந்தூர் முருகன்🙏

29 Jan, 02:53


் நாழிக்கிணற்றிலும், கடலிலும் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விளமல்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தலம் விளமல் என்ற ஸ்தலம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி பின் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

குற்றாலம், பாபநாசம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது

திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீபம்/ இலட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும்

திருவள்ளூர்

வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள்.

தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.

ஆனைமலை

இங்கு மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம்.

இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.

திருஇந்தளூர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது.

தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.

திருக்கடையூர்

அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடத்திக் காண்பிக்கப்படும்.

தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவோம்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

29 Jan, 02:53


தை அமாவாசை கோயில்கள்

இராமேஸ்வரம்

இராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று இராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும்.

குறிப்பாக தை அமாவாசை தினத்தில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் அக்னி தீர்த்தமாடி, பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கட்டங்களில் தீர்த்தமாடிய பின இராமநாதர் திருக்கோயிலில் வழிபடுவது சிறப்பு.

இன்று இங்குள்ள தீர்த்தக்கட்டத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் தீர்த்தக்கட்டத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

சதுரகிரி

பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா சிறப்பாக நடக்கும்.

முதல்நாள் பரிசுத்த பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு வழிபாடும், சங்கொலி பூஜைகளும் நடக்கும்.

சிதம்பரம்

தை அமாவாசையை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர்.

தை அமாவாசை நாளில் தில்லைக் காளியை வழிபட்டால் நம் முன் ஜென்ம வினைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாளில் தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும்.

யாகத்தில், அபூர்வ மூலிகைகளுடன் மிளகாய்வற்றலும் போடப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை  ஒழியும் குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சகோதரச் சண்டைகள் யாவும் தீர்ந்துவிடும்; தீய சக்திகள் விலகி ஓடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமூர்த்தி மலை 

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

ஆண்டு தோறும்  தை அமாவாசை தினம் சிறப்பு நாளாகும்.  தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகளை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு, சாகுபடி பணிகளை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அய்யாவாடி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இதில் தைஅமாவாசையன்று இந்த யாக்த்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிரி தொந்தரவுகள் இருக்காது.

திருச்சி உறையூர்

குங்குமவல்லி அம்மன் திருக்கோயிலில், அமாவாசை யாகம் சிறப்பாக நடக்கும். இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானம்

இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது  சகல தீர்த்தமுடையவர் கோயில் இங்கு அம்மன்  பெரியநாயகி.

இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர்.

இந்தத் தலத்தில் திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களின் ஆத்மாவும் அமைதிபெறும். பிறகு சர்வதீர்த்தேஸ்வரரை வழிபட்டால். சகல ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம்

வேதரண்யம்

ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

திலதர்ப்பணபுரி

இத்தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய வந்த இராமபிரான், இங்கே எள்ளும், நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால் இத்தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு சூரியனும், சந்திரனும் அருகருகில் இருப்பதால் இதற்கு நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் உண்டு.

ஈரோடு மாவட்டம் பவானி

கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர் சங்கமேஸ்வரர். இத்தலம் பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகவும், இங்கு நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு அம்மன், நதி, தலம் மூன்றும் பார்வதியின் திருநாமங்கள் பெற்றும் அமைந்துள்ளதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூர்

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் திருத்தலம் திருச்செந்தூர். இங்கும் கந்த புஷ்கரணி எனப்படும

🙏திருச்செந்தூர் முருகன்🙏

29 Jan, 02:52


*ஸ்லோகம்:*

*பெருமாள் போற்றி:*
♾️♾️♾️♾️♾️
🪷🪷🪷🪷🪷

வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி

தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி

குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி

உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி

சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி

மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி

பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி

தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி!!

🔳🟣🔳🟣🔳🟣🔳🟣🔳🟣🔳🟣

🙏திருச்செந்தூர் முருகன்🙏

29 Jan, 02:52


*மந்திரம்*

*பெருமாள் காயத்ரி மந்திரம்:*

ஓம் நிரஞ்சனாய வித்மஹே!

நிராபாஸாய தீமஹி!

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!

🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫

🙏திருச்செந்தூர் முருகன்🙏

28 Jan, 15:28


*🌺ஸ்ரீ இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளிய..!*

🟡🔴🟡🔴🟡🔴🟡🔴🟡🔴🟡🔴

*திருவொற்றியூர்,*

*🙏வடிவுடை மாணிக்கூ மாலை🙏*

🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸


*பாடல்:74...!*


மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.


*குறிப்புரை:*


வடிவுடை அம்பிகையே ! என் அருமை அன்னையே ! திருவொற்றியூரில் அமர்ந்து, அனைத்து உயிர்களையும் தான் பெற்ற குழந்தைகளாகக் கருதி, அவற்றைக் கண் போல் பாது காப்பவளே. அகில சராசரங்களில் உள்ள உயிர்களுக்கு இன்ப வாழ்வு தருபவளே. என்னை மட்டும் துன்பக் கடலில் மூழ்கி வருந்த விடுவது, அருள் வடிவான உனக்குத் தகுதி அல்லவே? என்னை கரை ஏற்றுவாய்.



*🌷ஸ்ரீ வடிவுடையம்மன் திருவடிகளில் சரணம்..!🌷*

*மலரும்...!*

🔲🔷🔲🔷🔲🔷🔲🔷🔲🔷🔲🔷

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁

🙏திருச்செந்தூர் முருகன்🙏

28 Jan, 15:28


*🌹மகிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்🙏...!*
〰️〰️〰️〰️〰️〰️
🪷🪷🪷🪷🪷🪷


*பாடல்:03...!*


*தேவியின் நலன்களையும் அசுர சம்ஹாரத்தையும் (அசுரர்களை அழிப்பது) விவரிக்கும் பாடல்:*

ஆயி ஜகதம்பா மடம்ப கதம்ப வன ப்ரிய வாசின ஹாசரதே
ஸிகரி சிரோமணி துங்கா ஹிமாலய ஸ்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மது கைதப கஞ்சனி கைடப பன்ஜினி ராசரதே
ஜெய ஜெய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யகபர்தினி சைலசுதே


*பொருள்:*


ஓ தேவி ஜகதம்பா (பிரபஞ்சத்தின் தாய்), சிரிப்பு அல்லது நகைச்சுவையால் மகிழ்ந்த கடம்ப வனத்தில் (கடம்ப மரத்தின் காடுகள்) வாழ விரும்புகிறாள் மற்றும் விரும்புகிறாள்.
இமயமலையின் உச்சியில் உள்ள கோவிலின் நடுவில் வசிப்பவர் - மலைகளுக்கு இடையே உள்ள க்ரெஸ்ட் மாணிக்கம்,
அவரது வார்த்தைகள் தேன் போன்ற இனிமையானது, மது மற்றும் கைடபனின் பெருமையை அடக்கியவன், காமகாலத்தால் மகிழ்ந்த கைடபனைக் கொன்றவன்.
மகிஷாசுரனை அழிப்பவனே, அழகிய சடை முடியை உடையவளே, மலை மகளே உனக்கு வெற்றி, உனக்கு வெற்றி.



🌷அயிகிரி நந்தினி நந்தித மேதினி🌷

🌷விச்வ வினோதினி நந்தநுதே🌷

🌷கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி🌷

🌷விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே🌷

🌷பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி🌷

🌷பூரிகுடும்பினி பூரிக்ருதே🌷

🌷ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி🌷

🌷ரம்ய கபர்தினி சைலஸுதே🌷

*மலரும்...!*

🔳🟡🔳🟡🔳🟡🔳🟡🔳🟡🔳🟡

🙏திருச்செந்தூர் முருகன்🙏

28 Jan, 06:40


*சிறப்புகள் நிறைந்த தை அமாவாசை.. பித்ரு தோஷங்கள் நீங்க.. முன்னோர்களை வழிபட தவறாதீர்கள்..!!*

🍃🪷🍃🪷🍃🪷

அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கான நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நம் நன்றியை செலுத்த உகந்த நாட்கள் என கருதப்படும் மூன்று முக்கிய நாட்களில் (மகாளய, தை மற்றும் ஆடி) தை அமாவாசையும் ஒன்றாகும். வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசை தினத்தன்று பித்ரு பூஜை முடித்த பின்னரே வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன், எண்ணற்ற நன்மைகளும் நமக்கு கிடைக்கும். அந்நாளில் தர்ப்பணம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்கும்போது செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் எவ்வாறு கொடுப்பது?

நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

பித்ரு தோஷங்கள் நீங்கவும், அவர்களின் ஆசி பெற்று சிறப்பாக வாழவும், நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்...!!

சூரிய உதயத்திற்கு பின்பு அமாவாசை திதி முடிவதற்குள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும்?

ஒருவன் தன் பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்காவிட்டால், மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை.

அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இந்த அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

தை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவது வழக்கம்.

அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.

தானம் அளித்தல் :

இந்த தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவற்றை நாம் தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

அமாவாசை விரதம் இருப்பது எப்படி?

அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.

முன்னோர்களுக்கு படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.

முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

இந்த தவறை செய்து விடாதீர்கள்...!

அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவது, மணி அடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் நம் முன்னோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

தர்ப்பணம் கொடுக்கும்போது கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். மேலும் தர்ப்பணம் கொடுக்கும்போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.

அதேபோல் கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம் :

தை அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

28 Jan, 06:40


துளசி மாலை :

முன்னோர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம்.

எனவே தை அமாவாசையன்று வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். நமக்கு விஷ்ணு மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

பலன்கள் :

தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமல்லாமல்... நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

தை அமாவாசையில் முன்னோர்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்!!

❇️🔶❇️🔶❇️🔶❇️🔶❇️🔶❇️🔶

✧༺༻∞ DEVENDRA CHANDRA Bose, CHENNAI. ˚*∞༺༻✧

🙏திருச்செந்தூர் முருகன்🙏

28 Jan, 02:17


🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭

*🦚வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்🦚*

1.ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2.குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3.குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4.முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5.குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6.காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7.கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8.கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9.கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10.சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11.ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12.சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.

13.செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14.சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15.சேயோன் : சேய் -
குழந்தை, குழந்தை வடிவானவன்.

16.விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17.வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18.முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19.சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20.சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21.வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22.ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23.மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

24.தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18-மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

*கந்தனுக்கு அரோகரா !* *முருகனுக்கு அரோகரா !*

🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭

🙏திருச்செந்தூர் முருகன்🙏

28 Jan, 02:16


🌹💠🌹💠🌹💠🌹💠🌹💠🌹💠

*🙏முருகன் வித்தியாசமான வடிவத்தில் காட்சி தரும் ஸ்தலங்கள்*

முருகப்பெருமாள் பல்வேறு ஸ்தலங்களில் பல்வேறு விதமான திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஸ்தங்களை பற்றி விரிவாக# பார்க்கலாம்.

*திருவக்கரை முருகன் :*

திருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம்.

*திருவிடைக்கழி குமரன் :*

தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம். இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. தாயாருக்கு அருகில் முருகப்பெருமானின் ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ என்ற இறை வடிவத்தை வைத்துள்ளனர். இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

*தங்கக் குடங்கள் :*

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். இந்தக் கோவிலின் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ‘ஓம்’ என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்திருப்பதை அறிய முடியும். இந்த ஆலயத்தில் தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன் படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன் படுத்தப்படுகின்றது.

இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருக்கும். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.

*கல்யாண முருகர் :*

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில் சென்னையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிறுவாபுரி என்ற திருத்தலம். இங்கு சிறுவாபுரி முருகன் அருள்பாலித்து வருகிறார். இத்தல இறைவனின் பெயர் ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்பதாகும். இவர் கல்யாண முருகராக இருப்பது விசேஷமான ஒன்றாகும். இதுவும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப் பெற்ற தலம் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை வழிபாடு செய்தால், சொந்த வீடு கனவு நனவாகும் என்கிறார்கள்.

*ஆண்டார்குப்பம் முருகன் :*

ஆண்டார்குப்பம் என்ற இடத்தில் அதிகாரத் தோரணை கொண்ட வடிவத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு மட்டுமின்றி, அவரது படைப்புத் தொழிலையும் எடுத்துக் கொண்டார். அதிகாரத்தைக் கையில் எடுத்த ஆண்டார்குப்பம் முருகன், தம் அடியவர்களுக்கும் அதிகாரம் நிறைந்த பதவிகளை வழங்குவதாக ஐதீகம். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம்.

*ஓம் சரவணபவ*

🌹💠🌹💠🌹💠🌹💠🌹💠🌹💠

🙏திருச்செந்தூர் முருகன்🙏

27 Jan, 16:38


சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

*59.கோச்செங்கட் சோழர்:*

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய் பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் கட்டினார்.

*60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்:*

ஞான சம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்.

*61.சடையனார் நாயனார்:*

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

*62.இசைஞானியார்:*

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

*63.சுந்தரமூர்த்தி நாயனார்:*

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத் தொகை பாடியருளியது என பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

*"நாயன்மார்கள் திருவடிகளே சரணம்"*

*” இறைவனை அடைய நாயன்மார்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்"*

*சிவாய நம சிவாய நம*

*திருச்சிற்றம்பலம்*


🟥⚛️🟥⚛️🟥⚛️🟥⚛️🟥⚛️🟥⚛️

🙏திருச்செந்தூர் முருகன்🙏

27 Jan, 16:38


🟥⚛️🟥⚛️🟥⚛️🟥⚛️🟥⚛️🟥⚛️

*🙏அறுபத்து மூன்று (63) நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்...!*

*1.திருநீலகண்ட நாயனார்:*

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமை காலத்தில், மனைவியருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவபெருமான் அருளால் மீண்டும் இளமையை பெற்றார்.

*2.இயற்பகை நாயனார்:*

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழு நம்பிகையுடன் அனுப்பியவர்.

*3.இளையான்குடிமாற நாயனார்:*

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர். தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

*4.மெய்ப்பொருளார்:*

தன்னுடைய பகைவன், போலியாக சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும் தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.

*5.விறல்மிண்டர்:*

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

*6.அமர்நீதியார்:*

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

*7.எறிபத்தர்:*

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின் தவறு செய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத் துணிந்தவர்.

*8.ஏனாதிநாதர்:*

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததை அறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

*9.கண்ணப்பர்:*

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

*10.குங்கி வியக்கலயர்:*

சாய்ந்த லிங்கத்தை தன் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

*11.மானக்கஞ்சறார்:*

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

*12.அரிவாட்டாயர்:*

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத் துணிந்தவர்.

*13.ஆனாயர்:*

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

*14.மூர்த்தி நாயனார்:*

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.

*15.முருக நாயனார்:*

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக் கொண்டேயிருப்பார்.



*16.உருத்திர பசுபதி:*

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

*17.திருநாளைப் போவார்:*

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல் கொண்டவர்.

*18.திருக்குறிப்புத் தொண்டர்:*

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்த நேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

*19.சண்டேசுர நாயனார்:*

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

*20.திருநாவுக்கரசர் சுவாமிகள்:*

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

*21.குலச்சிறையார்:*

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

*22.பெருமிழலைக் குறும்பர்:*

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

*23.காரைக்கால் அம்மையார்:*

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின் இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப் பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

*24.அப்பூதி அடிகள்:*

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை திருநாவுக்கரசு பாடல் மூலம் சிவன்அருளால் உயிர் பெறச் செய்தவர்.

*25.திருநீலநக்கர்:*

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்.

*26.நமிநந்தி அடிகள்:*

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

*27.திருஞான சம்பந்தர்:*

🙏திருச்செந்தூர் முருகன்🙏

27 Jan, 16:38


ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

*28.ஏயர்கோன் கலிக்காமர்:*

இறைவனை தூதுவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

*29.திருமூலர்:*

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர். விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

*30.தண்டி அடிகள்:*

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

*31.மூர்க்கர்:*

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

*32.சோமாசிமாறர்:*

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர். லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

*33.சாக்கியர்:*

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

*34.சிறப்புலி:*

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

*35.சிறுத்தொண்டர்:*

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.



*36.சேரமான் பெருமாள்:*

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

*37.கணநாதர்:*

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

*38.கூற்றுவர்:*

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன் சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

*39.புகழ்ச்சோழ நாயனார்:*

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர். சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

*40.நரசிங்க முனையரையர்:*

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பலர் பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

*41.அதிபத்தர்:*

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

*42.கலிக்கம்பர்:*

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.

*43.கலியர்:*

வறுமையில் தன் மனைவியையே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசு இல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

*44.சத்தி:*

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

*45.ஐயடிகள் காடவர்கோன்:*

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

*46.கணம்புல்லர்:*

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்.

*47.காரி:*

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

*48.நின்றசீர் நெடுமாறனார்:*

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப் பெற்று சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

*49.வாயிலார்:*

இறைவனை எப்போதும் நினைக்கக் கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வு என்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும் திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.

*50.முனையடுவார்:*

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனடியார்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.



*51.கழற்சிங்க நாயனார்:*

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

*52.இடங்கழி:*

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

*53.செருத்துணை நாயனார்:*

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

*54.புகழ்த்துணை:*

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

*55.கோட்புலி:*

சிவ பூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

*56.பூசலார்:*

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற்கோயிலை விட்டு இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

*57.மங்கையர்க் கரசியார்சை:*

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

*58.நேசர்:*

🙏திருச்செந்தூர் முருகன்🙏

27 Jan, 15:28


*🙏🙏★·.·´ உ `·.·★🙏🙏*

*🚩அன்பே சிவம்🚩*
*═━━━━✥◈✥━━━━═*
*🔥 தினமும் ஒரு ஆலய தரிசனம்||🔥*
*▩━━━━━━◈━━━━━━▩*

*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*
*★·.·´ பகிர்வு:·.·★*
*❀அன்பேசிவம்❀*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


*★━━━━━━ D. C. H. ━━━━━━★*

*அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில், பொய்யாத நல்லு}ர், அரியலு}ர்:*

வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகிக்கு கோயில் நிலங்கள் ஏராளம். புவனத்துக்கேம சொந்தகாரியான அம்மனுக்கு 95 வேலி நிலம் உடைமையாக இருந்தது. ஒருமுறை கபிஸ்தலம் பண்ணையார் அம்மனை வழிபட வந்தார். நு}று வேலி நிலத்துக்குச் சொந்தகாரரான பண்ணையார் தையல்நாயகியை விடவும் தன்னிடம் கூடுதல் நிலம் இருப்பது கூடாது என்ற எண்ணத்தில் அம்மனுக்கு ஐந்து வேலி நிலத்தை எழுதி வைத்தார். இத்தகைய உயர்ந்த உள்ளம் படைத்த பக்தர்களைப் பெற்றதால் வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி பேரும் புகழும் பெற்றாள். அதேபோல பொய்யாத நல்லு}ர் தையல்நாயகிக்கும் பேருக்கும் புகழுக்கும் குறைவில்லை. பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் இவ்வூர் பொய்யாத நல்லு}ர் என பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.

சிறப்பம்சங்கள் :
★ வைத்தீசுவரன் கோயில் தையல்நாயகியின் மூத்த சகோதரியே இங்குள்ள தையல்நாயகி என்பது சிறப்பு.


முகவரி
அருள்மிகு தையல்நாயகி திருக்கோயில்,
பொய்யாத நல்லூர்,
அரியலூர்.


கோயில்களின் வரலாறு
பதிவு-36
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Jan, 14:30


🙏 ஆலயம் அறிவோம் 🙏

அம்பாசமுத்திரம் - வீரமார்த்தாண்டேஸ்வரர் ஆலயம்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Jan, 14:30


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ பாகவத புராணம் 🙏

பாகம்_04

கண்ணன் கருணை, பீஷ்மர் மறைவு..!!

உறவினர் பலரும் பாரதப் போரில் மடிந்து போனதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார் யுதிஷ்டிரர் எனப்படும் தருமபுத்திரன். வியாசமுனிவரும் கிருஷ்ண பகவானும் பலவிதமாக ஆறுதல் கூறியும் யுதிஷ்டிரர் மனம் தெளிவடையவில்லை.

இவ்வாறு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க யுதிஷ்டிரர் குரு÷க்ஷத்திரத்தில் விழுந்து கிடந்த பிதாமகர் பீஷ்மரைக் காணச் சென்றார் கிருஷ்ணனுடன்.

அப்போது பீஷ்மரைக் காண அனைவரும் கூடி இருந்தனர். பீஷ்மர் எல்லோரையும் அன்புடன் வரவேற்றார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இதய பீடத்தில் அமரச் செய்து பக்தியுடன் வணங்கிப் பூஜித்தார்.

பிறகு பாண்டவர்களையும், குந்தியையும் நோக்கி சிறு குழந்தைகளான உங்களை வைத்துக் கொண்டு இளவயதுள்ள குந்தி தேவி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து விட்டாள். தர்மன் அறனாகவும், வீரன் பீமனும், வில்லில் சிறந்த விசயனும், உற்ற துணையாக ஸ்ரீகிருஷ்ணனே இருந்தும் வரும் விபத்துக்களைத் தடுக்க இயலாமல் போய் விட்டது.

இந்தக் கிருஷ்ணனுடைய எண்ணத்தை யாராலும் அறிய முடியாது. எனவே, யுதிஷ்டிரா! மனம் வருந்தாதே, எல்லாம் தெய்வச் செயல் என எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு பிரஜைகளை ரக்ஷித்து, ஆட்சி புரிந்து பரதகுல சிரேஷ்டனாக விளங்குவாயாக.
பிறகு எல்லோருக்கும் கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறார் பீஷ்மர்.

ஸ்ரீகிருஷ்ணன் சாக்ஷாத் பரமாத்மாவே; ஆதிநாராயண மூர்த்தி. இணையற்ற பெருமைகள் கொண்ட இவரை உற்ற நண்பனாக, சாரதியாக, மதிமந்திரியாகக் கொண்டு பழகி வந்தீர்கள். இடையறாத பக்தி பூண்டவர்களிடம், அளவில்லாதக் கருணை உடையவர்.

உயிரை இழக்கும் தருணத்திலும் எனக்கு திவ்ய தரிசனம் தர இங்கு வந்திருக்கிறார் அவருடைய கிருபையே கிருபை. பகவானுடைய நினைவிலேயே ஆழ்ந்து மரணமடைபவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

சிவந்த தாமரை நயனங்களில் கருணை பொங்க, புன் சிரிப்பினால் ஒளிரும், மலர்ந்த முகத்துடன் விளங்கும் தேவதேவனைத் தியானத்திற்கு உகந்த சகல சதுர்புஜங்களுடன் என் எதிரில் தரிசன அளிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்றார் பீஷ்மர்.

தர்மபுத்திரர் கேட்டுக் கொண்டபடி சகல தரும சாஸ்திரங்களையும் நீதிகளையும் எடுத்துக் கூறினார். பீஷ்மர் எதிர்பார்த்த உத்தராயண புண்ணியகாலம் வந்தது. அவர் மனத்தை பகவானிடம் நிலைநாட்டி கண்களை மூடாமலே தியானம் செய்தார்.

பீதாம்பர தாரியாய், சதுர்புஜ மூர்த்தியாய் காட்சி அளிக்கும் அந்த ஆதி புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை கண்ணிமைக்காமல் தியானம் செய்த வண்ணம் இருந்தார்.

எல்லாக் கஷ்டங்களும் மறைய இந்திரியங்களெல்லாம் வெளிநாட்டமற்று பகவானிடமே லயித்தன. சரீரத்தை விடப்போகின்ற அச்சமயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணனைப் பலவிதமாக துதி செய்யலானார்.

பிறகு மெல்ல மெல்ல மூச்சை அடக்கி, மவுனமாகி மனதைக் கிருஷ்ணனிடமே ஒன்றுபடச் செய்து கண்களை மூடி பரம்பொருளிடத்திலே ஐக்கியமாகி விட்டார். மறைந்த மகானுக்கு தருமபுத்திரர் உத்தரகிரியைகளைச் செய்தார்.

கிருஷ்ண பரமாத்மாவுடன் அஸ்தினாபுரம் வந்த யுதிஷ்டிரர் பெரிய தகப்பனாருக்கும் காந்தாரிக்கும் விஷயத்தைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

திருதராஷ்டிரனிடமும் அனுமதி பெற்றுத் தர்மநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தார். தருமபுத்திரர் ஆட்சியில் எங்கும் அமைதியும், ஆனந்தமும் சுபிக்ஷமும் நிரம்பி இருந்தன.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Jan, 14:30


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அம்பாசமுத்திரம் அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் ஆலயம்.

மூலவர் : வீரமார்த்தாண்டேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : நித்யகல்யாணி

தீர்த்தம் : ஹரிஹரதீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : அம்பாசமுத்திரம்

மாவட்டம் : திருநெல்வேலி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

கார்த்திகையில் திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, நவராத்திரி.

திறக்கும் நேரம்:

காலை6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

நிர்வாக அதிகாரி,அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்,அம்பாசமுத்திரம்- 627 401. திருநெல்வேலி மாவட்டம்.

போன்:

+91- 99525 01968.

பொது தகவல்:

பிரகாரத்தில் சூரியன், ஜூரதேவர், நால்வர், கன்னிவிநாயகர், பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் சந்திரனுக்கு சன்னதிகள் உள்ளது.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கடன் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது.

சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சிவனும், அம்பிகையும் "சிவசக்திசொரூபமாக' இருப்பதாக ஐதீகம்.

எனவே இருவரது சன்னதியையும் சேர்ந்து சுற்றி வரும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்க சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், இங்கு வேண்டிக்கொள்ள அவர்களது வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண விழா நடக்கிறது.
கால பைரவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கடன் பிரச்னை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:

முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.

சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்கு தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவதென தெரியவில்லை.

ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.

அதன்பின் மன்னன் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவன் மன்னனின் பெயரால், "வீரமார்த்தாண்டேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்:

மதுரை, திருவனந்தபுரம்

தங்கும் வசதி:

திருநெல்வேலி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Jan, 06:20


*🙏சிவ புஜங்கம்🙏...!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷


*பாடல்:38...!*


கிரீடே நிசேசோ லலாடே ஹ§தாசோ

புஜே போகிராஜோ கலே காலிமா ச!

தநௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்

ந ஜானே ந ஜானே நஜானே ந ஜானே II


*பொருள் விளக்கம்:*


எவருடைய கிரீடத்தில் சந்திரபிறையும், நெற்றியில், அக்னியும், கைகளில் ஸர்ப்பராஜனும், கழுத்தில் காலகூடக் கறுமையும், உடம்பில் பிரியையும், உறைகிறார்களோ அப்படிப்பட்ட கடவுளை சிவனன்றி அறியேன். அறியேன். அறியேன். அறியேன்.


*🌷ஓம் சிவாய போற்றி🌷*

*🌷ஓம் மஹேஸ்வராய போற்றி🌷*

*🌷ஓம் சம்பவே போற்றி🌷*

*🌷ஓம் பினாகினே போற்றி🌷*

*🌷ஓம் சசிசேகராய போற்றி🌷*


*மலரும்...!*


💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️

▁▂▃▄☾ ♛ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. ♛ ☽▄▃▂▁

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Jan, 06:20


*🙏🌷பகவத் கீதை🌷🙏...!*


🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠🔴🟠

*கீதை – இரண்டாவது அத்தியாயம்:*


*ஸாங்கிய யோகம்:*


*வரிசை எண் :02/36...!*


அவாச்யவாதன்ஶ்ச பஹூன்வதிஷ்யன்தி தவாஹிதா: |

நிந்தன்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து கதரம் நு கிம் ||


*பொருள் :*


அர்ஜுனன் போரில் இருந்து தப்பி ஓட விரும்பினால், வலிமைமிக்க வீரர்களின் கூட்டத்தில் அர்ஜுனனின் மதிப்பீடு குறைவது மட்டுமல்லாமல், அவர் அவமதிக்கப்படுவார். ஸ்ரீ கிருஷ்ணர் நிந்ததஹ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதாவது 'அவதூறு செய்வது'; அவாச்1ய வாதா3ன்'என்பது ஆண்மை இழந்தவர் போன்ற ‘இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்’. அர்ஜுனனின் எதிரிகள், துரியோதனன் போன்றவர்கள், அவரைப் பற்றி பல பொருத்தமற்ற விஷயங்களை சொல்வார்கள், 'அந்த வலிமையற்ற அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஒரு நாய் தனது கால்களுக்கு இடையில் வாலைப் சுருட்டிக்கொண்டு கொண்டு ஓடுவதைப் பாருங்கள்.’ இவ்வாறு எதிரிகளால் ஏளனபடுத்தப்படுவது அர்ஜுனனுக்கு மிகவும் வேதனையாக இருக்கும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் நினைவுபடுத்துகிறார்.



*🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏*

*🙏ஓம் நமோ🙏*

*🙏நாராயணா🙏*

*தொடரும்...*


🟫🟣🟫🟣🟫🟣🟫🟣🟫🟣🟫🟣

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Jan, 15:07


🙏 ஆலயம் அறிவோம் 🙏

அம்பாசமுத்திரம் - லட்சுமிநாராயணர் ஆலயம்

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Jan, 15:07


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அம்பாசமுத்திரம் அருள்மிகு லட்சுமி நாராயணர் ஆலயம்

மூலவர் : லட்சுமிநாராயணர்

உற்சவர் : சீனிவாசர்

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : கிணறு தீர்த்தம்

ஆகமம்/பூஜை : வைகானஸம்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் : அம்பாசமுத்திரம்

மாவட்டம் : திருநெல்வேலி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

வைகாசியில் வருஷாபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமைகள், வேதாந்த தேசிகர் உற்ஸவம்.

தல சிறப்பு:

புதன், சுக்ரன் பரிகார தலம்.

திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில்,அம்பாசமுத்திரம் - 627 401.திருநெல்வேலி மாவட்டம்.

போன்:

+91- 94420 64803.

பொது தகவல்:

நம்மாழ்வார், ராமானுஜர், வேதாந்ததேசிகர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது.

பிரார்த்தனை:

தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.

மனக்குழப்பம், பயப்படும் குணம் உள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

தலபெருமை:

மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், "புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு புதன்கிழமைகளில், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.

திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

நரசிம்மர் சிறப்பு:

முற்காலத்தில் இக்கோயில் சிவனுக்குரியதாக இருந்ததால், அவருக்குரிய வில்வம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது. முன்மண்டபத்தில் பதினாறு கைகளுடன் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். இவருக்கு பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கராயுதத்துடன் யோக நரசிம்மர் இருக்கிறார்.

இவருக்கு இருபுறமும் சிவன், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர். இவரது பீடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷன் இருக்கிறார்.

இத்தகைய அமைப்பில் நரசிம்மரை காண்பது அபூர்வம்.நரசிம்மர், ஒரு மாலை வேளையில் (பிரதோஷ காலம்) உக்கிரத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்தார்.

எனவே, இவரை சாந்தப்படுத்தும் விதமாக தினமும் மாலையில் சுக்கு, வெல்லம், ஏலம், நீர், எலுமிச்சை சாறு சேர்ந்த கலவையை நைவேத்யமாக படைத்து, பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள், சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு பானகம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இத்தலத்திலுள்ள அஞ்சலி ஆஞ்சநேயர், தனது தலைக்கு மேலே மிகச்சிறிய லிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

தல வரலாறு:

முற்காலத்தில் இக்கோயிலில் சிவன், லிங்கரூபமாக எழுந்தருளியிருந்தார்.

ஒரு சமயம் பொதிகை மலைக்கு அகத்தியரை சந்திக்கச் சென்ற சனகாதி முனிவர்கள், இங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் சிவன், திருமால் இருவரும் ஒன்றா? என்ற சந்தேகம் வந்தது.

தங்கள் குழப்பத்தை தீர்க்கும்படி சிவனிடம் முறையிட்டனர். உடன் இங்கிருந்த லிங்கத்தில் பெருமாள், மகாலட்சுமியிடம் காட்சி கொடுத்தார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு, லட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

புதன், சுக்ரன் பரிகார தலம்.

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. அகத்தீஸ்வரர் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்:

மதுரை, திருவனந்தபுரம்

தங்கும் வசதி:

திருநெல்வேலி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Jan, 15:07


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ பாகவத புராணம் 🙏

பாகம்_03

பகவானின் அவதார மகிமைகள்..!!

சூதமா முனிவர் பகவானின் அவதார மகிமைகளை முனிவர்களுக்குக் கூறலானார். ஆதியில் பகவான் உலகைச் சிருஷ்டி செய்ய எண்ணி உடனே பதினாறு கலைகள் கொண்ட புருஷ ரூபத்தைக் கொண்டார்.

அந்த விராட் புருஷனின் உடலிலிருந்தே தேவர்கள், மனிதர்கள் தோன்றினர். உலகம் விரிவடைந்தது. அவர் சொரூபம் அழிவற்றது. ஸத்வ குணம் நிறைந்தது. மகிமை பொருந்தியது. அவருடைய அமிசத்தினாலேயே தேவதைகள், பசு, பக்ஷிகள், பிராணி வர்க்கங்கள் தோன்றின.

அந்த ஆதிநாராயண சொரூபமே சகல அவதாரங்களுக்கும் மூல காரணமாயிற்று. ஸ்ரீஹரி எடுத்த அவதாரங்கள் எண்ணில் அடங்கா. ஆனால் அவற்றுள் இருபத்து நான்கு மிக்க மகிமை பெற்றவை.

அசுரர்களால் உலகத்திற்குத் துன்பம் உண்டாகும் போது அவர்களை அடக்கி நன்மக்களைக் காப்பதற்காகவே பகவான் பலவித உருவங்களில் தோன்றுகிறார்.

தர்மம், ஞானம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணன் தனது திவ்யலோகத்துக்குச் சென்ற பிறகு உலகினர் அஞ்ஞானத்தில் சிக்கி ஞான சூனியர்களாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பாகவத புராணம் உதயமாகி ஒளிவீசத் தொடங்கியது. துவாபர யுக முடிவில் வியாசர் பராசர முனிவரின் மகனாக அவதரித்தார். மகாவிஷ்ணுவின் கலாவதாரமாகத் திகழ்ந்த அவர் வேதங்களை வகுத்தார். இதிகாச புராணங்களை இயற்றினார்.

எனினும், அவருக்கு திருப்தியும், மனஅமைதியும் ஏற்படவில்லை. இத்தகைய சிந்தையுடன் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து வருந்திக் கொண்டிருக்கும்போது நாரத முனிவர் வந்தார். அவரிடம் வியாசர் தன் மனக்குறையைக் கூறி அதனை நிவர்த்திக்க வேண்டினார்.

அப்போது நாரதர், உலகத்திற்கு க்ஷமம் தரும் பகவானுடைய புனிதமான குண வைபவங்களை நீர் பாடவில்லை. ஸ்ரீஹரியின் குணங்களை வர்ணிக்கும் நூல்களையே சாதுக்கள் விரும்புவர்.

அனந்தனின் திவ்ய நாமங்களின் மகிமையைக் கூறும் நூலே மக்கள் பாபங்களைப் போக்கக் கூடியது. ஹரியின் குணங்களைப் பாடி, கேட்பதிலேயே சாதுக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுங்கள்; பக்தியின் பெருமையைக் கூறுங்கள்.

சமாதியில் அமர்ந்து பகவானுடைய லீலைகளைத் தியானித்து எழுதுங்கள்; பரமானந்தம் பெறுவீர். உலக நன்மை ஏற்படும்; பந்தங்களிலிருந்து விடுபட்டு அமைதியைப் பெறுவீர் என்றார் நாரதர்.

மேலும் எவன் ஒருவன் தனது ஸ்வதர்மத்தையும் விட்டு பகவானுடைய சரணகமலங்களில் பக்தியுடன் சேவித்து வருகிறானோ அவன் அதன் பயனை அடைவதற்கு முன்பே மரணமடைந்தாலும் அவனுக்கு நற்பேறே கிட்டும் என்றார். எடுத்துக்காட்டாக, தனது பூர்வ ஜன்ம வரலாற்றைக் கூறினார்.

அவர் முற்பிறவியில் வேதவித்துக்களிடம் வேலைக்காரியின் மகனாகத் தோன்றினதாகவும், அவர்களுக்குப் பக்தி சிரத்தையுடன் அவர் பணிவிடை செய்து வந்ததாகவும், அதனால் அவர்களிடம் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்றதாகவும், தான் எதையும் பகவதார்ப்பணமாகவே செய்து வந்ததாகவும் அதனால் பக்தி, ஞானம் வளர்ந்ததாகவும் கூறினார்.

தாயார் இறந்தபோது அவ்விடம் விட்டு வடக்கே புறப்பட்டுச் செல்ல பசி தாகத்தினால் சோர்வு ஏற்பட்டது.

ஆங்குள்ள நதியில் நீராடி நீரருந்தி அரச மரத்தனடியில் அமர்ந்து உபதேச மந்திரத்தை ஜபித்து இதயத்திலே பரமாத்மாவைத் தியானித்து வந்ததாகவும் முனிவர் கூறினார்.

அப்போது அவர் உள்ளக் கோயிலில் பகவான் ஆவிர்பவித்து, மறைந்துவிட தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அப்போது அசரீரி வாக்கு இப்பிறவியில் தன்னைக் காண தகுதி ஏற்படவில்லை என்றார். ஸ்ரீகிருஷ்ணனிடமே உள்ளத்தை இருத்தி, பற்றின்றி இருந்ததால் சித்த சுத்தி ஏற்பட்டது.

பஞ்சபூத சரீரம் விழுந்துவிட புண்ணிய பார்ஷத சரீரம் கிடைத்தது என்றார். பல யுகங்கள் கழிந்த பிறகு உலக சிருஷ்டி ஏற்பட அப்போது பிரம்ம புத்திரனாகப் பிறந்ததாகக் கூறினார். பிறகு நாரதர் சென்று விட்டார்.

பின்னர் வியாசர் தியானத்தில் ஆழ்ந்து பரமபுருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணனிடம் இணையற்ற பக்தியைத் தரக்கூடிய பாகவத கிரந்தத்தை இயற்றினார்.

அநீதியின் உருவமாகிய கவுரவர்களும், நீதிக்கு இருப்பிடமாகிய பாண்டவர்களும் வாழ்ந்த கால வரலாறே மகாபாரதம்.

இதை எழுதியவரும் வியாசரே. பாரதப் போரில் இரு தரப்பினிலும் பலர் போர்க்களத்தில் அடிபட்டு வீர சுவர்க்கம் அடைந்தனர்.

அப்போது துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் திரவுபதியின் புத்திரர்களை, தூங்கிக் கொண்டிருக்கும் போது குரூரமாகக் கொன்றுவிட்டான். இதைக் கண்டு தாயான திரவுபதி கதறி அழுது பரிதவித்துப் போனாள்.

அருச்சுனன் கோபம் கொண்டு அசுவத்தாமன் தலையைக் கொண்டு வருவதாகக் கூறி அசுவத்தாமனைப் பின் தொடர்ந்தான்.

பயந்து ஓடிக்கொண்டிருந்த அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அருச்சுனனும் அதையே பிரயோகிக்க இரண்டும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

பிறகு கிருஷ்ணனின் ஆணைப்படி அருச்சுனன் பிரம்ம அஸ்திரத்தை தன்னிடமே இழுத்துக் கொண்டான்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Jan, 15:07


பிறகு அசுவத்தாமாவைப் பிடித்துக் கட்டி, யாக பசுவைப் போல் இழுத்து வந்தான். அப்போது கிருஷ்ணன் அருச்சுனனிடம் அவனுக்குத் தயவு காட்டாதே என்றார்.

பிறகு அருச்சுனனும், கிருஷ்ணனும் திரவுபதியிடம் சென்று அசுவத்தாமாவை தண்டிக்கப் போவதாகக் கூற, திரவுபதி மனமிரங்கி குரு புத்திரனான அசுவத்தாமாவை வணங்கி, அருச்சுனனிடம் அவனை விட்டு விடுமாறு வேண்டினாள்.

அப்போது அருச்சுனன் அசுவத்தாமனுடைய சிகையை அறுத்து, தலையிலுள்ள சிரோரத்தினத்தையும் அபகரித்தான். பின்னர், அவனை கட்டவிழ்த்து விட்டு கூடாரத்திலிருந்து விரட்டி விட்டான்.

போரில் உற்றார், உறவினர்களை இழந்து வருந்தும் திருதராஷ்டிரன், காந்தாரி, தர்மபுத்திரர் அவரது சகோதரர்களையும் , குந்தி தேவியையும் ஆறுதல் மொழிகளைக் கூறிச் சமாதானம் செய்தார் கிருஷ்ணன்.

அப்போது கிருஷ்ணா, காப்பாற்று என்று கூவிக் கொண்டே அபிமன்யுவின் மனைவி உத்திரை கிருஷ்ணனிடம் ஓடிவர கிருஷ்ணன் நடந்தது அறிந்து அசுவத்தாமன் ஏவிய அஸ்திரத்திலிருந்து உத்தரையின் சிசுவைக் காப்பாற்றினார்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Jan, 07:19


*🌺ஸ்ரீ இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளிய..!*

🟡🔴🟡🔴🟡🔴🟡🔴🟡🔴🟡🔴

*திருவொற்றியூர்,*

*🙏வடிவுடை மாணிக்கூ மாலை🙏*

🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸


*பாடல்:73...!*


கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.



*குறிப்புரை:*



விகற்பம்-மன வேறுபாடு; பொற்பு-பொலிவு; போதம்-ஞானம்;
சுயஞ்சுடர்-இயற்கை ஒளி; மல்-பெருமை; கடியும்-ஒழிக்கும்.

வளம் நிறைந்த திருவொற்றியூரில் விளங்கும் வடிவுடை அன்னையே ! நிறை கற்பின் வடிவமே ! குற்றங்கள் ஏதும் இல்லா தனிப் பொருளே ! எம் கண்களும் உள்ளமும் நிறைக்கும் அழகே ! உண்மை ஞானத்தினால் விளையும் இன்பமே. ஞானிகளின் மனத்தில் விளங்கும் அறிவொளியே. தொண்டர்களின் தவப் பயனே. எல்லை இல்லா பெரும் ஞானச் சுடரே. பணிகிறேன். எமக்கு அருள் செய்க.



*🌷ஸ்ரீ வடிவுடையம்மன் திருவடிகளில் சரணம்..!🌷*

*மலரும்...!*


🟦🩷🟦🩷🟦🩷🟦🩷🟦🩷🟦🩷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Jan, 07:19


*🌷ஸ்ரீ ஆதிசங்கரர்🌷*

🟢🔴🟢🔴🟢🔴🟢🟢🔴🟢🔴

*🌷அருளிய,🌷*

*🙏சுப்ரமண்ய புஜங்கம...!🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁

*பாடல்:22...!*

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா ...


*பொருள் :*


அபயம் கிட்டும்

கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.


*🌹ஓம்‌ ஆறுமுகனே போற்றி🌹*

*🌹ஓம்‌ ஆண்டியே போற்றி🌹*

*🌹ஓம்‌ அரன்‌ மகனே போற்றி🌹
.ள*

*🌹ஓம்‌ அபிஷேகப்‌ பிரியனே போற்றி🌹*


*மலரும்...*


🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲


┏━━━━━°❀•°:🎀 DEVENDRA CHANDRA Bose, CHENNAI. 🎀:°•❀°━━━━━┓

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Jan, 17:48


*🌹மகிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்🙏...!*
〰️〰️〰️〰️〰️〰️
🪷🪷🪷🪷🪷🪷


*பாடல்:02...!*


தேவியின் தெய்வீக செயல்களை விவரிக்கும் பாடல்

ஸுர-வர வர்ஷினி துர்தரா தர்ஷினி துர்முக மர்ஷினி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷினி சங்கர தோஷினி கல்மஷ மோஷினி கோஷரதே
தனுஜ நிரோஷினி திதிசுத ரோஷிணி துர்மத சோஷினி சிந்துசுதே
ஜெய ஜெய ஹே மஹிஷாசுர மர்தினி ரம்யகபர்தினி


*பொருள்:*


தேவர்கள் மீது வரங்களைப் பொழிபவர், துர்முகனை அழிப்பவர், துர்தாரா என்ற அரக்கனை வென்றவர், (அவளால் அல்லது பிறரால்) மகிழ்ச்சியால் மகிழ்ச்சியடைபவர்,
மூன்று உலகங்களையும் (அவளின் பார்வையால்) போஷிப்பவர், சங்கர கடவுளை மகிழ்விப்பவர். , கெட்ட எண்ணங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர், பேய்களின் சத்தத்தால் மகிழ்ந்தவர் (உலகங்களைக் காக்கும் அவளது செயல்களால் போர் அழுகிறது)
கோபம் கொண்டவர் யார்? தனுவின் மகன்கள் (தனவாஸ்), துர்மதா என்ற அரக்கனை அழித்த திதியின் (தைத்தியர்) மகன்கள் மீது கோபம் கொண்டவர், ஓ சமுத்திர மகளே,
உனக்கு வெற்றி, மகிஷாசுரனை அழிப்பவனே, அழகான பின்னல் கொண்டவனே, உனக்கு வெற்றி! முடி, மலை மகள்.


🌷அயிகிரி நந்தினி நந்தித மேதினி🌷

🌷விச்வ வினோதினி நந்தநுதே🌷

🌷கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி🌷

🌷விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே🌷

🌷பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி🌷

🌷பூரிகுடும்பினி பூரிக்ருதே🌷

🌷ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி🌷

🌷ரம்ய கபர்தினி சைலஸுதே🌷

*மலரும்...!*

💢🔻💢🔻💢🔻💢🔻💢🔻💢🔻

ʕ•̫͡•ʔ❤️ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. ❤️ʕ•̫͡•ʔ

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Jan, 13:47


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ பாகவத புராணம் 🙏

பாகம்_02

ஸ்ரீ பாகவத புராணம்..!!

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும்.

பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது.

அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது?  கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப் படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார்.

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும்.

பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம்.

தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது. அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது? கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார்.

ஸ்ரீமந் நாராயணனையும், புருஷ ச்ரேஷ்டரரான நரனையும், சரசுவதியையும், ஸ்ரீவியாச பகவானையும் வணங்கி வெற்றியை அளிக்கும் இந்தப் புராணத்தைக் கூறுகிறேன்.

பகவானுடைய அருட்கடாக்ஷம் உங்களுக்குப் பூரணமாக கிடைக்கட்டும். ஸ்ரீஹரியை ஆராதித்துப் பக்தி செய்வதே மனித குலத்தின் முக்கியமான தர்மமாகும்.

ஸ்ரீவாசுதேவனிடத்தில் மனதைச் செலுத்தி, பக்தி யோகத்தைச் செய்வதினாலேயே உண்மையான ஞானமும், வைராக்கியமும் ஏற்பட்டு விடும். அதனால் பகவான் மகிழ்ச்சி அடைகிறான்.

அறிவில் சிறந்த பெரியோர்கள் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உணர்ந்து, தமது உள்ளக் கோயிலிலே பரமாத்மாவைக் கண்டு ஆனந்த பரவசம் அடைகின்றனர். சர்வ வியாபியாக விளங்குகின்ற ஸ்ரீஹரியே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர்.

முழு கலையுடன் ஒளிர்கின்ற ஸ்ரீகிருஷ்ணாவதாரமே மிகச்சிறந்தது. அவருடைய லீலா வைபவங்களையும், அவதாரக் கதையையும் கேட்கிறவன் இன்ப வெள்ளத்தில் திளைப்பான். அவரை அடைவதற்கு அவரே காரணமாவார்.

ஸ்ரீகிருஷ்ண பகவானை உபாசிப்பவர்கள் ஸத்வ குணமும், சாந்தியும் அடைந்து ஆனந்தமாக வாழ்கின்றனர் என்று சூதமா முனிவர் கூறினார்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Jan, 13:47


இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இங்குள்ள புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.

அமைவிடம்:

மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் 120 கி.மீ., தூரத்தில் வாசுதேவநல்லூர் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது

அருகிலுள்ள ரயில் நிலையம்:

சங்கரன்கோவில்

அருகிலுள்ள விமான நிலையம்:

மதுரை, திருவனந்தபுரம்

தங்கும் வசதி:

ராஜபாளையம்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Jan, 13:47


🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏

வாசுதேவநல்லூர் - அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Jan, 13:47


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு வாசுதேவநல்லூர் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர் : சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்)

அம்மன்/தாயார் : இடபாகவல்லி

தல விருட்சம் : புளி

தீர்த்தம் : கருப்பை நதி

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : வாசவனூர்

ஊர் : வாசுதேவநல்லூர்

மாவட்டம் : திருநெல்வேலி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

ஆனியில் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, மார்கழி திருவாதிரை, தை அமாவாசை.

தல சிறப்பு:

இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார்.இங்குள்ள புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

நிர்வாகி,அருள்மிகு சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) திருக்கோயில், வாசுதேவநல்லூர்,திருநெல்வேலி - 627 758.

போன்:

+91- 94423 29420.

பொது தகவல்:

சந்தன நடராஜர், நாய் வாகனம் இல்லாத பைரவர், கைகூப்பிய நிலையில் யோக சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இவையனைத்தும் வித்தியாசமான சிற்ப அமைப்புகளாகும்.

சூரியன், யோக தெட்சிணாமூர்த்தி, ஜூரதேவர், சப்தமாதர், வீரபத்திரர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, சாஸ்தா, சித்தி விநாயகர், சனீஸ்வரர், நாகராஜா, நாகராணி ஆகியோரும் இங்குள்ளனர்.

பிரார்த்தனை:

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

சுவாமி அமைப்பு:

அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை இருக்கிறாள்.

சிவனுக்குரிய வலப்பாகத்தில் சந்திரனும், அம்பாளுக்கு பின்புறம் ஜடையும் உள்ளது. சிவப்பகுதி கரங்களில் சூலம், கபாலமும், காதில் தாடங்கமும் இருக்கிறது. அம்பாள் பகுதியிலுள்ள கைகளில் பாசம், அங்குசம், பூச்செண்டும், காதில் தோடும் உள்ளன.

சுவாமி பகுதி காலில் தண்டம், சதங்கையும், அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பாள் பகுதியை "இடபாகவல்லி' என்கின்றனர்.

அன்னாபிஷேக சிறப்பு:

பிருங்கி மகரிஷி, இங்கு உற்சவராக இருக்கிறார். ஆனி பிரம்மோற்ஸவத்தின்போது சிவனையும் அம்பாளையும் அருகருகில் வைப்பார்கள். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் வகையில் பாவனை செய்வார்கள்.

இதனால், பார்வதி கோபமடைவது போலவும், சிவன் அர்த்தநாரியாக அம்பாளை ஏற்பதுமான சடங்குகள் செய்யப்படும். பின்னர், பிருங்கி மனம் திருந்தி அர்த்தநாரியை வழிபடுவார். இந்த வைபவம் மிக விசேஷமாக நடக்கும்.

புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி, "கருப்பை ஆறு' (கருப்பாநதி)என்று அழைக்கப்படுகிறது.

சிவராத்திரியன்று விசேஷ பூஜை நடக்கிறது. இவருக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, சித்திரைப்பிறப்பன்று காலையில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், "சிந்தாமணிநாதர்' என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு "சிந்தை மரம்' என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும்.

இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார்.

பார்வதி, சிவனிடம் பிருங்கிக்கு உண்மையை உணர்த்தும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. எனவே அவள், சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளிய மரத்தின் அடியில் தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அர்த்தநாரீஸ்வரரை "சிந்தாமணிநாதர்' என்று அழைக்கின்றனர்.

இப்பகுதியில் சிவபக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன்.

ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது. பின்பு மன்னன் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோயில் கட்டினான்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Dec, 14:39


🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏

பேட்டைவாய்த்தலை - மத்தியார்ஜுனேஸ்வரர் ஆலயம்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Dec, 14:39


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு பேட்டைவாய்த்தலை அருள்மிகு மத்தியார்ஜீனேஸ்வரர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர் : மத்தியார்ஜுனேஸ்வரர்

அம்மன்/தாயார் : பாலாம்பிகை

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் : பேட்டைவாய்த்தலை

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி

தல சிறப்பு:

உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டும் வித்தியாசமான வழக்கம் உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மத்தியார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்பேட்டைவாய்த்தலை,திருச்சி மாவட்டம்.

போன்:

+91 431- 261 2442, 97880 66312

பொது தகவல்:

வடக்கே ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜுனமான ஸ்ரீசைலம், தெற்கே நெல்லை மாவட்டத்தில் உள்ள திருப்புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் ஆகியவற்றுக்கு இடையே இத்தலம் இருப்பதால் மத்தியார்ஜூனேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகியதால் கோயில் மண்டபத்தூணில் பிரம்மஹத்தி சிற்பம் பொறிக்கப்பட்டது.

பெண்களுக்கு சித்த வைத்தியம் செய்த பொற்றாளம் பூவாய் சித்தர் வடிவம் ஒரு தூணில் இருக்கிறது. இந்த இரண்டு சிற்பங்களுக்கும் தினமும் பூஜை செய்யப்படுகிறது.

பிரார்த்தனை:

மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறு உள்ள பெண்கள் தங்கள் பிரச்னை தீர இங்குள்ள மத்தியார்ஜுனேஸ்வரரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சீட்டு எழுதி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

சித்தருக்கு பிரார்த்தனை சீட்டு:ஒரு சமயம், பொற்றாளம் பூவாய் சித்தர் வைத்தியம் பார்த்தும் பெண்களுக்கு உடல் உபாதை நீங்கவில்லை. இதனால் அவர் பாலாம்பிகையிடம் வேண்டினார்.

அம்பாளின் கருணையால் நோய்கள் நீங்கின. பூப்படைதல் பிரச்னை, மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க பாலாம்பிகையை எண்ணி விரதம் இருக்க வேண்டும், என்று சித்தர் அருள்வாக்கு கூறினார்.

பெண்களும் விரதம் இருந்து நோய்களை தீர்த்துக் கொண்டனர்.

தற்போது, உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டுகின்றனர். இவ்வாறு செய்பவர்களுக்கு,

பாலாம்பிகேச வைத்யேச
பவரோக ஹரேதிச!
ஜபேந் நாமத்ரயம் நித்யம்
மஹாரோக நிவாரணம்!!

என்ற மந்திரம் 11 வாரங்கள் வீட்டில் திருவிளக்கு முன்பு படிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கான பிரச்னைகள் நிவர்த்தியாவதாக நம்பிக்கையுள்ளது.

தல வரலாறு:

சோழ மன்னர்கள் நடத்திய போரில் ஏற்பட்ட உயிர் சேதத்தால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதுநீங்க தஞ்சாவூர் அருகிலுள்ள திருவிடைமருதூரில் சிவாலயம் கட்டினர்.

ஆனால், தோஷம் முழுமையாக நீங்கவில்லை. ஒருமுறை மூன்றாம் குலோத்துங்க சோழனின் கனவில் தோன்றிய சிவன், ஆறு (தீர்த்தம்) வெட்டி, அதன் கரையில் சிவாலயம் கட்டினால் தோஷம் விலகும், என்றார்.

மன்னனும், காவிரியின் கிளை ஆறாக, உய்யக்கொண்டான் ஆற்றை வெட்டி அதன் தென்கரையில் சிவாலயம் கட்டினான். தன்னுடைய முன்னோர் திருவிடைமருதூர் கோயில் தெய்வங்களுக்கு சூட்டிய பெயர்களை இங்கேயும் சூட்டினார்.

சுவாமிக்கு மத்யார்ஜூனேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாலாம்பிகை என்றும் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து தோஷம் நீங்கியதுடன், நீண்ட நாளாக குழந்தை இல்லாத அவனுக்கு புத்திரபாக்கியமும் கிடைத்தது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

உடல்உபாதை உள்ள பெண்கள் பொற்றாளம் பூவாய் சித்தர் திருமேனியில் பிரார்த்தனை சீட்டுகளை எழுதி கட்டும் வித்தியாசமான வழக்கம் உள்ளது.

அமைவிடம்:

திருச்சி- கரூர் சாலையில் 25கி.மீ., தூரத்தில் பேட்டைவாய்த்தலை உள்ளது.

சத்திரம் பஸ் ஸ்டாண்டில்இருந்து டவுன் பஸ்களும், ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிலிருந்து கரூர், கோவை, திருப்பூர் மார்க்க பஸ்களும் உள்ளன.

பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Dec, 14:39


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ நாரதர் புராணம் 🙏

பாகம்_15

கிருஷ்ணாவதாரத்தில் இராமன்..!!

ஒரு சமயம் நாரதர் துவாரகைக்குச் சென்றார்.

நாராயணா நாராயணா என்று உச்சரித்தபடி, கிருஷ்ணன் மாளிகைக்குள் நுழைந்தார். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த கிருஷ்ணன் நாரதரை வரவேற்றார்.

நாரதர் கிருஷ்ணனிடம் அவர் மனதில் உள்ள சிந்தனையைப் பற்றிக் கேட்க கிருஷ்ணன் அண்ணன் பலராமன், சத்தியபாமா இருவரைப் பற்றியதே என்றார்.

மேலும் பலராமன் தன்னை யாராலும் வெல்லமுடியாதென்றும், சத்தியபாமா தனக்கு மிஞ்சிய இளமை, அழகு உடையவர் யாருமில்லை என்றும் கர்வம் கொண்டுள்ளனர். மேலும் கருடனுடைய கொட்டத்தையும் அடக்க வேண்டும் என்றார்.

அதற்காக உங்கள் ஒத்துழைப்புத் தேவை என்றார் கிருஷ்ணன்.

பரந்தாமா, ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன் என்றார் நாரதர். பகவான் சொன்னார், நான் முன்னம் அனுமனிடம் துவாபர யுகத்தில் கிருஷ்ணவதாரத்திலும் அவனுக்கு இராமனாகக் காட்சி தருவதாக வாக்களித்துள்ளேன்.

அதை நிறைவேற்ற உன் உதவி தேவை என்று கூறி, உடனே கருடனை அழைத்து வரச் சொன்னார்.

நாரதர் கருடனுடன் வர, கருடனிடம் கிருஷ்ணன், வைனதேயா! இவ்வூர் எல்லையில் ஒரு குரங்கு வந்துள்ளது. அதன் தொல்லை தாங்க முடியவில்லை. நீ சென்று அதனைப் பிடித்து வா என்றார்.

கருடன், ஒரு குரங்கைப் பிடிக்க நான் செல்ல வேண்டுமா? என்று சிறிது மமதையுடன் கேட்க, வீரர்கள் சென்று அதைப் பிடிக்க முடியாமல் திரும்பி விட்டதால் தான் உன்னை அனுப்புகிறேன் என்றார் கிருஷ்ணன்.

பின்னர் நாரதரிடம், கருடனை அந்தக் குரங்கிடம் கூட்டிச் சென்று வாரும் என்றார்.

கருடன் அனுமாரிடம் சென்று வீரவசனம் பேசி, ராமநாம ஜபத்தில் இருந்த அவனைப் பற்ற முயற்சிக்கையில் அனுமார் கருடன் கன்னத்தில் ஓர் அறை விட அவன் மூர்ச்சித்து விழுந்தான். கருடன் சிறிது நேரம் கழித்து மெதுவாக எழுந்துத் திரும்பிப் பார்க்காமல் கிருஷ்ணனிடம் வந்து சரணாகதி செய்தான்.

அப்போது கிருஷ்ணன், கருடா! பயப்படாதே! நீ சென்று இராமன் படாடாபிஷேகக் காட்சி தருகிறார். உங்களை அழைத்து வருமாறு சொன்னார் என்று கூறி அழைத்து வா என்றார்.

அய்யோ திரும்பவும் நான் சென்று மற்றொரு அறை வாங்கினால் என் உயிர் போய்விடும் என, அனுமார் உன்னை ஒன்றும் செய்யமாட்டார் என்றார்.

ஏற்கனவே பலராமர் சேனையுடன் சென்று அனுமான் முன் நிற்க முடியாமல் தோற்று வந்தவர், அனுமார் வருகிறார் என்றறிந்து மிகுந்த அச்சம் கொண்டு கிருஷ்ணனிடம் தெரிவிக்க, கிருஷ்ணன் தான் அளிக்கப்போகும் இராமவதார காட்சி பற்றிக் கூறி அவரை லக்ஷ்மணனாக மாற்றினார்.

பலராமனில் பல நீக்குமாறு கூறினான் அனுமான்.
இனி சீதைக்கு ஏற்பாடு செய்ய நாரதரிடம் சொல்லி அனுப்பினார்.

அவர் சத்தியபாமாவிடம் சென்று அவளை சீதையாக வருமாறு கூறிட அவள் தன்னை மிக்க அழகியாக, பட்டத்து ராணியாகப் புறப்பட்டு வந்தாள்.

அதைக் கண்ட கிருஷ்ணன், இராமன் சீதையை இந்த அலங்காரத்திலா கண்டான் என்று கூற, அவள் வெட்கி திரும்பவும் அசோகவனத்துச் சீதையாக அலங்கோலமாக வந்தாள்.

இதைக் கண்டும் அதிருப்தியைக் காட்டி கிருஷ்ணன் நாரதரிடம் ருக்மிணியைச் சீதையாக வரச்சொல்லி நாரதரை அனுப்ப, அவள் நாரதரிடம் தான் இருந்த நிலையிலேயே புறப்பட்டாள். மேலும் பகவானே தன்னை எப்படி வேண்டுமோ அப்படிச் செய்யட்டும் என்றாள்.

ருக்மிணி வந்தவுடன் அவளைச் சீதையாக்கி, பலராமனை லக்ஷ்மணனாக்கி, தான் இராமனாக மாறி அனுமானுக்கு இராமவதாரக் காட்சி தந்தார் பகவான்.

இதற்குள் அனுமார் இச்செய்தி அறிந்து கருடனையும் நாரதரையும் தன் தோள் மீது சுமந்து கொண்டு வேகமாய் வந்து இராமர் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி உற்றார்.

இதன் மூலம் கிருஷ்ணர் கருடன், பலராமன் ஆகிய இருவருடைய பலவான் என்ற ஆணவத்தையும், சத்தியபாமாவின் கர்வத்தையும் அடக்கினார். பாமாவும் ருக்மிணியை சீதையாகக் கண்டு மகிழ்ந்தாள்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Dec, 08:31


*🌷ரமணா மகரிஷி அருளிய🌷....!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"*

*🌹"உபதேச நூன்மாலை🌹...!*

*மாலை என் : 02/30...!*


கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும்
வன்மத்த ராயின ருந்தீபற
வஞ்சச் செருக்கினா லுந்தீபற.


*பொருள்:*


கர்மமே அல்லாமல், பலனைத் தரும் கடவுள் இல்லை என்று கூறி மூடர்களாகி வஞ்சச் செருக்குற்று இருந்தனர்.




*🌷சிவாய நம🌷*

*🌷ஓம் நமசிவாய🙏*

*🌷அன்பே சிவம்🙏*

*🌷திருச்சிற்றம்பலம்🙏*


*தொடரும்...!*


🔶🔶🔶🔶🔶🔶

💢🚀🚀💢 DEVENDRA CHANDRA Bose, CHENNAI. 💢🚀🚀💢

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Dec, 08:30


*🌹சித்தர் சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

*🙏சிவவாக்கியம்..!*


💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚


*நூல்: 164...!*


பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலாச் சிவமதாம்
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையு மிகந்துநீர்
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே.


*பொருள் விளக்கம்:*


எல்லாவற்றையும் பார்த்தது எது என்பதை அறிந்து, அதையே பார்த்து தியானிக்க பார்வை ஒடுங்கி, அகக்கண் திறந்திடும். அதையே குறியாகக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து சுழுமுனையில் கூர்மையான நினைவை குவித்திருந்தால் சோதியைக் காணலாம். அதுவே சிவம் ஆகும். ஆகவே தியானம் செய்யும் போதெல்லாம் பார்ப்பானையே பார்த்திரு. அதை விடுத்து நினைவை பல இடங்களில் வைத்து, பார்வையை பலவிதங்களில் செலுத்தி தியானத்தை இகழ்ந்து மறந்தால் நீங்கள் மீண்டும் பூத்த பூவும் காயுமாய் பிறப்பிறப்பில் உழலுவீர்.


*🌷நமசிவய ௐ🌷*

*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!*

*🙏சிவாய நம🙏*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

*வளரும்...*


🟫❤️🟫❤️🟫❤️🟫❤️🟫❤️🟫❤️

᯽🄳🄴🅅🄴🄽🄳🅁🄰 🄲🄷🄰🄽🄳🅁🄰 🄱🄾🅂🄴 🄲🄷🄴🄽🄽🄰🄸

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Dec, 14:54


🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருச்சி - காவேரிஅம்மன் ஆலயம்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Dec, 14:54


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு திருச்சி அருள்மிகு காவேரி அம்மன் ஆலயம்.

மூலவர்:காவேரிஅம்மன்

பழமை:500 வருடங்களுக்குள்

ஊர்:திருச்சி

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:

ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா, ஆடிமாத செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தல சிறப்பு:

இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது.

அம்மன் கோயிலில் நந்தி அமைந்திருப்பது அபூர்வமானது. இக்கோயிலில் அமைந்துள்ள நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல் சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்:

காலை மணி 6 முதல் மணி 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில்மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கு, திருச்சி.

பொது தகவல்:

கோயிலின் உள்ளே கருவறையில் நந்தியும், அம்மனின் இடப்புறம் நாகர், வலப்புறம் விநாயகரும் எழுந்தருளி உள்ளார்கள்.

பிரார்த்தனை:

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள அம்மனை வேண்டிச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

இங்கு எழுந்தருளியிருக்கும் காவேரி அம்மனின் தனிச்சிறப்பு நீர் வளம் தான்.

இப்பகுதியில் கோடைக்காலத்தில் நீர் வளம் குறைந்துவிட்டால் இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்து வேண்டிட, நல்ல மழை பெய்து வீட்டின் கிணற்றில் நீர்வளம் நிறைந்து காணப்படும் என்கிறார்கள்.

மேலும், ஆழ்குழாய்க் கிணறு, குளம் வெட்டுவதற்கு முன் காவேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை எந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டுமோ, அந்த இடத்தில் தெளித்து, பூஜை செய்து கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு அமைத்தால் நீர்வளம் நிறைந்து காணப்படுகிறது என்று அப்பகுதியில் வாழும் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் இன்றும் விவரம் அறிந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வீட்டிற்கும், வயல் பகுதியிலும் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டு நல்ல பலன் பெறுகிறார்கள்.

காவேரிக் கரையோரங்களில் வருடந்தோறும் கொண்டாடப்படும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகச் சிறப்பாக இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் காலை ஏழு மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் இரண்டு கால பூஜைகள் நிகழ்கின்றன.

தல வரலாறு:

சுமார் பலநூறு வருடங்களுக்கு முன் காவேரி நதியானது பரந்து, விரிந்து தன் விருப்பப்படி ஓடியதாக வரலாறு சொல்கிறது.

மழைக் காலத்தில் ஊருக்குள் காவேரி பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்டு.

அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாய்க்கால் வெட்டி சீர் செய்த பெருமையை சோழன் கரிகாலன் பெற்றான்.

அந்தக் காலகட்டத்தில் காவேரி நதியில் வெள்ளம் வந்த போது ஓர் அம்மன் சிலை கரை ஒதுங்கியதாம்.

அந்த அம்மன் சிலையை எடுத்து கரையோரமாக வைத்து வழிபட்டு வந்தார்கள் அந்தப் பகுதி மக்கள்.

அந்தச் சிலை தெய்வாம்சமாக இருந்ததாலும், காவேரி நதியில் வெள்ளம் வந்த போது கரை ஒதுங்கியதாலும் அந்த அம்மன் சிலைக்கு காவேரி அம்மன் என்று பெயர் சூட்டி ஒரு சிறிய கோயிலையும் கட்டினார்கள் என்று புராண தகவல் கூறுகின்றது.

கால ஓட்டத்தில் காவேரி நதிக்கு என்று வாய்க்காலை கரிகாலன் வெட்டியதால் காவேரிக் கரையோரம் வயல்வெளிகளுடன் நகர்புறங்கள் தோன்ற ஆரம்பித்தன. மேலும், அந்தப் பகுதிகளும் செழிப்புற்று திகழ்ந்தன.

இன்று பரபரப்பான சூழ்நிலையில், பல கட்டடங்கள் எழுந்துள்ள நிலையில் திருச்சியில் கோயில் கொண்டுள்ள காவேரி அம்மன்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது. அம்மன் கோயிலில் நந்தி அமைந்திருப்பது அபூர்வமானது.

இக்கோயிலில் அமைந்துள்ள நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல் சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது.

அமைவிடம்:

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கில் அம்மன் கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் சக்தி ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Dec, 14:54


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ நாரதர் புராணம் 🙏

பாகம்_14

பாரிஜாத மரமும், மலரும்..!!

ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்த நாரதருக்கு தேவேந்திரன் ஒரு பாரிஜாத மலரைக் கொடுக்க, அதை அவர் எடுத்து வந்து கிருஷ்ணனிடம் தர, அதனைக் கிருஷ்ணன் தன் கையாலேயே ருக்மிணிக்குத் தலையில் சூட்டினார்.

அடுத்து சத்தியபாமையின் இல்லாம் சேர்ந்த நாரதர் பாமாவிடம் நடந்தவற்றைக் கூறி அவள் மனதில் அசூயையை உண்டாக்கினார்.

சற்று நேரம் கழித்து பாமாவின் இல்லம் வந்த கிருஷ்ணனை பாமா தக்கமுறையில் வரவேற்காமல் அழுதவண்ணம் கோபமாகப் படுத்திருந்தாள்.

அவளைச் சமாதானப்படுத்தி எழுப்பி காரணத்தை அறிந்துகொண்டு பாமாவின் இல்லத்திற்கு பாரிஜாத மரத்தையை கொண்டு வந்து தருவதாக வாக்களித்தார்.

நரகாசூரன் வதத்திற்குப் பின் இந்திரனுக்கு உதவிய கிருஷ்ணன் இந்திரனிடம் பாரிஜாத மரத்தைக் கேட்டுப் பெற்றுவர நாரதரை அனுப்ப, அவன் மறுத்திட இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் மரத்துக்காக போர் நிகழ்ந்தது. காசிப முனிவர் அறிவுரைப்படி பாரிஜாத மரத்தைத் துவாரகைக்கு அனுப்பி வைத்தான் இந்திரன்.

மரம் பாமாவிற்குக் கிடைத்தது பற்றி மனமகிழ்ந்த அவள் மலர்கள் அருகே உள்ள ருக்மிணி வீட்டில் குவிவது பற்றி திரும்பவும் கோபம் கொண்டாள்.

ருக்மணி மீது பொறாமையும் ஏற்பட்டது.
மறுநாள் கிருஷ்ணன் பாமாவுடன் ருக்மிணியின் வீட்டிற்குச் சென்றார். ருக்மிணி அகமகிழ்ந்து வரவேற்றாள்.

ருக்மணி உள்ளே சென்று தொடுத்து வைத்திருந்த பாரிஜாத மலர் மாலையை எடுத்து வந்து கிருஷ்ணனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். அப்போது கிருஷ்ணன் ருக்மிணியிடம் எல்லா மலர்களையும் எனக்கே சூட்டிவிட்டாயே? உனக்கு எங்கே? என்று கேட்டார்.

அதற்கு ருக்மிணி என்னையே பகவானுக்கு அர்ப்பணித்தவிட்ட பிறகு எனக்கென்று வேறு எதற்கு? பகவான் மகிழ்ச்சியே எனக்கு நிறைவைத் தருகிறது என்றாள்.

இதைக் கேட்டு சத்தியபாமா வெட்கித் தலை குனிந்தாள். பாமா மலரைத் தானே சூடி மகிழ நினைத்தாள். மலர் கிடைப்பது அரிதாயிற்று. அதனை பகவானுக்கே அர்ப்பித்தாள் ருக்மிணி.

எனவே தான் முயற்சி இல்லாமலேயே மலர் ருக்மிணிக்குக் கிடைத்தது. பாமா முயன்றும் அவளால் பெற முடியவில்லை.

அப்போது சத்தியபாமா தன்னை மன்னித்து விடுமாறு வேண்டி கிருஷ்ணன் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பாமாவின் மனத்தில் இருந்த துவேஷம் நீங்கியது பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கண்ணன்.

அன்று முதல் தன் வீட்டில் விழும் பாரிஜாத மலர்களைப் பறித்து ருக்மிணிக்குக் கொடுத்து வந்தாள்.

ஒருநாள் நாரதர் சத்தியபாமாவின் இல்லத்திற்கு வர பாமா அவரை வரவேற்று, வணங்கி கண்ணனின் அன்பு காரணமாக பாரிஜாத மரம் கிடைத்தது என்று கூறி மலர்களைக் கொண்டு அவர் பாதங்களில் அர்ச்சித்தாள். அப்போது நாரதர் பாமாவை பாக்கியவதி என்றும் அவள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் கிருஷ்ணனைப் பெற்று இருப்பதாகவும் கூறினார்.

பாமா முற்பிறவியில் கார்த்திகை ஏகாதசி விரதம் இருந்து, துளசிச் செடியை வைத்து வளர்த்து வழிபட்டு வந்ததன் பலனாகவே இப்பிறவியில் பகவானை அடைந்திருப்பதாகவும் கூறினார்.

பாரிஜாத மரமும் அதனாலேயே கிடைத்தது. கணவன் அன்பு நிலைத்திருக்க துலாபாரம் போட்டுத் தானம் செய்வாயாக என்று நாரதர் பாமாவுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது பாமா அந்தத் துலாபார தான விவரம் பற்றி கேட்க, நாரதர் அது பற்றி தெரிவித்தார்.

கிருஷ்ணனை ஒரு தராசுத் தட்டில் அமர்த்தி அவர் எடைக்குப் பொன் வைத்து அதனைத் தானம் செய்தால் அப்படி செய்பவரை விட்டுப் பிரியாமல் கிருஷ்ணன் இருப்பார் என்று கூற, சத்தியபாமா அதற்கான முயற்சியில் ஈடுபட்டாள். மேலும் அந்தத் தானத்தைப் பெரும் தகுதி நாரதருக்கே எனவும் பிரார்த்தித்தாள். இதில் நாரதர் சூழ்ச்சியை அவள் அறியவில்லை.

குறிப்பிட்ட நாளில் தராசுத் தட்டில் பகவானை அமர வைத்து, அவர் எடைக்கு பொன்னை மற்றொரு தட்டில் வைக்குமாறு தனது பணிப்பெண்களுக்கு ஆணை இட்டாள்.

அவள் மனதில் கிருஷ்ணன் எடைக்கு மேல் பொருள் இருப்பதாகக் கர்வம் இருந்தது. அப்போது நாரதர் சூழ்ச்சியால் எவ்வளவு பொன்னை வைத்தும் கிருஷ்ணன் எடைக்கு அவை சரியாக இல்லை.

என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க, மற்ற கிருஷ்ண பத்தினிகள் அவளையும், அவள் துலாபாரம் செய்ய முற்பட்டதையும் பற்றி ஏசலாயினர்.

கடைசியில் ருக்மிணியால் ஏதாவது செய்ய முடியுமா என்று எல்லாரும் எண்ணி சத்தியபாமாவை ருக்மிணியிடம் சென்று வேண்டிக்கொள்ளுமாறு சொல்ல வேறு வழியின்றி சத்தியபாமா ருக்மிணியைப் பிரார்த்தித்தாள்.

உடனே ருக்மிணி அங்கு வந்து தட்டில் உள்ள பொருள்களை எல்லாம் அகற்றுமாறு கூறி கிருஷ்ணனை முழு மனதுடன் தியானித்து அவன் அருள் வேண்டி துளசி தளங்களை அத்தட்டில் வைக்க தட்டிரண்டும் சமமாயிற்று.

தவறை உணர்ந்த பாமா தலை குனிந்தாள்.

அப்போது நாரதர், எந்தப் பக்தையின் பக்தியினாலும், செயலினாலும் துலாபாரம் நிறைவேறியதோ அவருக்கே கிருஷ்ணன் சொந்தம் என்றார்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Dec, 14:59


🙏 ஆலயம் அறிவோம் 🙏

பீமநகர் - வேணுகோபாலகிருஷ்ணன் ஆலயம்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Dec, 14:59


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு பீமநகர் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் ஆலயம்.

மூலவர் : வேணுகோபால கிருஷ்ணன்

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : பீம நகர்

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, நவராத்திரி

தல சிறப்பு:

அண்ணன் கிருஷ்ணர், தங்கை காளி இருவரும் ஒரே தலத்தில், சம அந்தஸ்த்தில் வணங்கப்படுவது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில் ஹீபர் ரோடு, பீம நகர்திருச்சி மாவட்டம்.

பொது தகவல்:

இங்கு ராஜகணபதி, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார ஸ்வாமி, விஷ்ணு துர்கை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் கிடைக்க, வியாபாரம் செழிக்க, மனவளர்ச்சி குன்றியவர்கள் குணமாக என பக்தர்கள் இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டுச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

கிருஷ்ணருக்கு வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

தலபெருமை:

ஸ்ரீகிருஷ்ணனின் சாந்நித்தியத்தை அறிந்து சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் மட்டுமின்றி, இலங்கையில் இருந்தும்கூட பக்தர்கள் வந்து, ஸ்வாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். குழந்தை கண்ணனுக்கு பால் பாயசம் என்றால் கொள்ளைப் பிரியம்.

எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், வியாபாரம் சிறக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோரும் பால் பாயசம் நைவேத்தியம் செய்து, ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் ஸ்ரீகண்ணன் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

மாதந்தோறும் ரோகிணி நட்சத்திர நாளில், வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இதில் கலந்துகொண்டு, வெண்ணெய் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மனவளர்ச்சி குன்றியவர்கள், விரைவில் நலம் பெறுவார்கள்; பூரண குணம் பெறுவார்கள் என்பது திருச்சி வாழ் மக்களின் நம்பிக்கை.

இங்கு, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாள், மூன்று நாள் விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அன்றைய நாளில் சிறப்பு ஹோமங்கள், உறியடி உத்ஸவம், புஷ்பாஞ்சலி என அமர்க்களப்படும்.

தல வரலாறு:

இப்போது கோயில் உள்ள பகுதி, ஆங்கிலேயர் காலத்தில் பட்டாலியன்களின் மிகப் பெரிய முகாமாக இருந்ததாம்.

அந்த இடத்தில் சுயம்புமூர்த்தமாகத் தோன்றி, அருட்காட்சி தந்தாள் காளிதேவி. எனவே, அந்த இடத்தில் காளியம்மன் கோயில் உருவானது.

பின்னாளில், இந்தப் பகுதியில் உள்ள யாதவ மக்களில் ஒருவர், எங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே எங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர்தான்.

எனவே, இந்தக் கோயிலில் கண்ணபரமாத்மாவுக்கு சன்னதி அமைத்து வழிபட விரும்புகிறோம் எனத் தெரிவிக்க, காளிதேவியும் சம்மதித்தாள்.

அதையடுத்து, கையில் புல்லாங்குழலும் அருகில் பசுமாடுமாக, அழகு கொஞ்சும் வேணுகோபால கிருஷ்ணரின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள்.

காலப்போக்கில், காளியம்மன் கோயில் என்று சொல்வது மாறி, தற்போது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என்றழைக்கும் அளவுக்கு, அனைவருக்கும் கேட்ட வரங்களை தந்தருளிக் கொண்டிருக்கிறார் வேணுகோபால கிருஷ்ணன்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

அண்ணன் கிருஷ்ணர், தங்கை காளி இருவரும் ஒரே தலத்தில், சம அந்தஸ்த்தில் வணங்கப்படுவது சிறப்பு.

அமைவிடம்:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீம நகர். இங்கே, ஹீபர் ரோட்டில் உள்ளது வேணுகோபால கிருஷ்ணன் கோயில்.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Dec, 14:59


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ நாரதர் புராணம் 🙏

பாகம்_13

வால்மீகி ராமாயணம் இயற்றுதல்..!!

வல்மீகம் என்ற புற்றிலிருந்து வெளிவந்த வால்மீகி முனிவர் சிறந்த ரிஷியானார்.

அவருடைய மனம் ஒருநாள் அமைதி இழந்து கிடந்தது. உலகில் மக்களின் அவல நிலையினால் அவர் பாதிக்கப்பட்டார். அவ்வமயம் நாரதர் அவர் முன் தோன்ற, முனிவர் நாரதரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

எனினும் அவர் அகத்தின் வேதனையை முகத்தில் கண்ட நாரதர், அதற்கான காரணம் என்ன என்று கேட்டார். வால்மீகி தன் மனவேதனையை விவரித்தார்.

அப்போது நாரதர், உலகில் குணநலன்கள் ஒருங்கே அமைந்த ஒரு புருஷன் இருக்கிறான். அவனே தசரத குமாரன் இராமன் என்றார்.

வால்மீகி அந்த இராமனின் வரலாற்றைக் கூறுமாறு வேண்டிட, நாரதர் இராமன் கதைச் சுருக்கத்தைக் கூறி வால்மீகியை மகிழ்வித்தார். நாரதர் வால்மீகியிடம் இராமர் வரலாற்றை ஒரு காவியமாகப் பாடுமாறு கூறிச் சென்றார்.

அதுவே இராமாயணம் என்னும் காவியம். அதனைப் பாடிய வால்மீகியே ஆதிகவி எனப்படுகிறார்.

இராமாயணத் தோற்றம்..!!

ஒருநாள் வால்மீகி தமசாநதியில் நீராடச் சென்றார். அங்கு மரக்கிளையில் இரண்டு கிரவுஞ்சப் பறவைகள் கொஞ்சி குலாவி மகிழ்ந்து இருந்தன.

அச்சமயம் அங்கு வந்த ஒரு வேடன் அவற்றின் மீது அம்பு எய்ய அது ஆண் பறவை மீது தைக்க, அது துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. பெண் பறவை ஆண் பறவையின் பிரிவைத் தாங்காது கூவிக் கொண்டிருந்தது.

அந்த வேடன் மீது கோபம் கொண்ட வால்மீகி அவனைக் கடுஞ்சொற்களால் தூற்றினார். அச்சொற்கள் ஓர் இனிமையானக் கவிதையாக வெளிப்பட்டது. அச்சமயம் அங்கு பிரம்மதேவர் தோன்றிட முனிவர் அவரை வணங்கினார்.

அப்போது பிரமன், வால்மீகி, தாங்கள் வேடனைச் சாடி கூறியவை அனைத்தும் ஒரு சுலோகம்.

அதைத் தொடர்ந்து இராமாயணத்தைப் பாடி முடியுங்கள் என்று ஆசி கூறி மறைந்தார். வால்மீகி இராமாயணத்தைப் பாடி முடித்தார்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Dec, 03:06


*ஓம் நமசிவாய..*

" *சிவனை மறந்தவர்* *எவர் வாழ்ந்தார்* .
*சிவனை நினைந்தவர்* எவர் *தாழ்ந்தார்.."*

என்று நாம் பாடுகிறோம். சிவன் முழுமுதற் கடவுள். அவனை நெக்குருகி பாடிய ஞானிகள் சிலரின் பாடல்களிலிருந்து பக்தி பாவபூர்வ சிறந்த பொருட் செறிவு, சொற் செறிவுடைய சில வரிகளை படிப்போம், ஆனந்திப்போம், அருள் வேண்டி சிவானுபவத்தில் கரைவோம்.

ஓம் என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும். நம சிவாய என்ற அஞ்செ ழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோச னமும் உள்ளது.

"அஞ்சுகோடி மந்திரமு நெஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும் முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே"

நமசிவாய என்று சொல்லும் அக்ஷரம் சிவனே இருக்கும் இடம். சகல அபாயத்திலிருந்து தப்ப உதவும் உபாயம். பிராணனை பாபத்திலிருந்து மீட்டு நற்கதி தர உதவும் மந்திரம் நமசிவாயம்

"சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே.."

அப்பனே, பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து ஹர ஹரா ஓம் நமசிவா யா என்று கண்ணில் நீர் பெருக நெஞ்சுருக உனை நினைத்து கூப்பிடுவது ஒன்று தானே.

"பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா
கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே.."

பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும் மலம கற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான் அது தான் என்னுள்ளே யே நிலையாக நிற்கிறதே.

"ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே."

கடைசியாக ஒன்று சொல்கிறேன். சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல?

"ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய்
ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய்
ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும்
ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே..."

மேலே சொன்னது அத்தனையும் கூறியது சிவவாக்கியர் எனும் மஹான். பெரிய சித்தர் பிரான்.

இப்படிப்பட்ட பிறவி, மனிதப்பிறவி நமக்கு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது தெரியுமா? அதெல்லாம் கடந்து உன் நாமம் பற்றி கடைத்தேற வழி வகுத்த விமலா, சிவபெருமானே, உன்னையே நான் ''சிக்'' க்கெனப்பிடித்தேன். என்கிறார் மணிவாசகர். நாமும் பிடித்து கொள்வோமா? .

ஓம் நமசிவாய...
🙏

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Dec, 14:42


ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு.

அமைவிடம்:

திருச்சி சிந்தாமணி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு ஆண்டார் வீதியில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் ஶ்ரீ மகா கணபதியே நமஹ🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Dec, 14:42


◄•───✧ உ ✧───•►

🙏 ஶ்ரீ நாரதர் புராணம் 🙏

பாகம்_12

வால்மீகி என்ற வேடன்..!!

ஒரு சமயம் நாரதர் ஒரு காட்டு வழியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு முரட்டு வேடன் அவரை வழிமறித்து அவரிடமுள்ள பணம், பொருள் ஆகியவற்றைக் கொடுத்துவிடுமாறு மிரட்டினான்.

நாரதர் தான் திரிலோக சஞ்சாரி. பிரம்மச்சாரி. தன்னிடம் உள்ளது வீணை ஒன்றுதான் என்று கூற, வேடன் அவரை நம்பி விடுவதாக இல்லை. நாரதர் அவனை எவ்வாறு மடக்கலாம் என்று யோசித்தார். வேடனிடம் மெதுவாய் பேச்சு கொடுத்தார்.

அவன் யார்? அவன் எத்தனை நாட்களாகக் கொள்ளை அடிக்கிறான்? ஏன்? மற்றும் அவன் கொலை செய்வதும் உண்டா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். வேடனும் சளைக்காமல் பதில் கூறினான்.

வேட்டையில் மிருகங்கள், பறவைகள் கிடைக்காதபோது வழிப்போக்கர்களிடம் கொள்ளை அடிப்பதாகவும், பொருள் கொடுக்காமல் வம்பு செய்தால் சில சமயம் கொலை செய்வதும் உண்டு என்றான்.

அப்போது இத்தனையும் பாவச் செயல்கள்-இவற்றை ஏன் செய்கிறாய்? என்று கேட்க, வேடன் தன் மனைவி, மக்களுக்காகவே இக்காரியங்களைச் செய்வதாகக் கூறினான்.

அப்படியானால் இப்பாவச் செயல்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு அல்லவா! என்று கேட்ட நாரதர்க்கு அவர்களும் ஏற்றுத்தானே ஆக வேண்டும் என்று கூற நாரதர், அதனை நீ சொன்னால் போதாது.

மனைவி மக்களிடம் கேட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து வா என்று கூற, அவனும் வீடு சேர்ந்தான்.

அப்போது வேடன் மனைவி, என்னையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. அது பாவத்தினால் வந்தது என்றால் அதன் பலாபலன்களை நீயே அனுபவிக்க வேண்டும் என்று கூறினாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற வேடன் நாரதரிடம், திரும்பி வந்து நடந்தவற்றைக் கூற, நாரதர் வேடா, பாவத்தின் பலாபலன்களை அவரவர்தான் அனுபவிக்க வேண்டும்.

எனவே யாருக்காகவும் பாவம் செய்யக் கூடாது. செய்தால் பாதிப்பு செய்தவருக்கே என்று கூறி அவன் கண்களைத் திறந்து விட்டார்.

பின்னர் நாரதன் வேடனிடம், ராமநாமத்தை உச்சரித்து வந்தால் பாவம் விலகி எல்லா நலனும் உண்டாகும் என்றார்.

வேடன் அவரை விடுவித்து அவர் சொல்லியபடி அருகிருந்த மாமரத்தின் அடியில் அமர்ந்து கண் மூடியபடி பல காலம் ராமநாமத்தை ஜபித்து வந்தான். அவன் மீது புற்று மூடியது.

அந்தப் புற்றிலிருந்து ராமநாம ஜபப் பலனாக அவன் வால்மீகி ரிஷி ஆனான்.  (வல்மீகம்-புற்று, எனவே வால்மீகி என்று பெயர்)

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

24 Nov, 18:38


விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!

விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.

தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.

மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.
மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

24 Nov, 18:38


தீமைக்கும் நன்மை செய்!

சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.

ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.

தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.

என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.

அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!

பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு

🙏திருச்செந்தூர் முருகன்🙏

24 Nov, 18:38


விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.

ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.
கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.

உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.

‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.

‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.

‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான்

🙏திருச்செந்தூர் முருகன்🙏

24 Nov, 15:55


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு ஆங்கரை அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் ஆலயம்.

மூலவர் : மருதாந்தநாதேஸ்வரர்

அம்மன்/தாயார் : சுந்தர காஞ்சனி

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர் : ஆங்கரை

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.

தல சிறப்பு:

அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில்,லால்குடி, ஆங்கரைதிருச்சி மாவட்டம்.

பொது தகவல்:

இங்கு தட்சிணாமூர்த்தி, விநாயகர், தண்டபாணி, சுப்ரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. ஒரே பிரகாரம் கொண்ட இக்கோயிலில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரக சன்னதியும் உள்ளது. 1968ல் கும்பாபிஷேகம் நடந்தது.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இக்கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் தெற்கு நோக்கிய வாசலே பயன்படுத்தப்படுகிறது. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும், சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அமைக்கப்பட்டு, ஒரே மண்டபமாக கட்டப்பட்டுள்ளது.

அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.

தல வரலாறு:

மருதாந்தன் என்பவன் சுஹோலர் என்ற முனிவரின் மகன். முனிவரின் மனைவி தறிகெட்டு நடந்தாள். எனவே முனிவர் அவளை ஒதுக்கிவிட்டார்.

விலகிப்போன மனைவியோ பாவத்தொழிலை செய்துவந்தாள். மருதாந்தன் வாலிபனானான். அந்நாட்டு இளவரசனின் நட்பு அவனுக்கு கிடைத்தது. இளவரசன் பெண்பித்தனாக இருந்தான்.

அவனோடு சேர்ந்த மருதாந்தனும் அவனைப்போலவே ஆனான். ஒருமுறை அவர்கள் தங்களைவிட வயதில் கூடிய ஒரு பெண் வீட்டிற்கு சென்றனர்.

அந்த பெண்ணிற்கோ இளவரசனுடன் வந்திருந்த வாலிபனைப் பார்த்ததும் சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகே அந்த பெண் வந்த வாலிபன் தனது மகன் என்பதை தெரிந்துகொண்டாள். அந்த வாலிபனோ எப்பேர்ப்பட்ட பாவத்தை செய்துவிட்டோம் என புலம்பித் தீர்த்தான்.

அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. காட்டில் போய் தியானத்தில் அமர்ந்துவிட்டான். இறைவனைக் காணாதவரை எதுவுமே சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்தான். அறியாமல் பெரும்பிழை செய்த அந்த வாலிபனின் முன் சிவபெருமான் தோன்றினார். அவன் செய்த பிழைக்கு மன்னிப்பு வழங்கினார்.

""எந்த ஒரு வாலிபனும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனது தாயாகவே கருதவேண்டும். இதை உலகிற்கு உணர்த்தவே இந்த கொடும் நாடகம் ஆடினேன். கலியுகத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழலாம். அவர்கள் எல்லாம் திருந்தவே இவ்வாறு செய்தேன்,'' என்றார். இருப்பினும் அந்த வாலிபனின் மனது படாதபாடு பட்டது. இந்த தோஷத்திற்கு விமோசனம் என்ன என கேட்டான்.

அதற்கு இறைவன் தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டால் பாவம் தீரும் என்றார். அதன்பின் தனது சொந்த உழைப்பில் மருதாந்தன் சிவனுக்கு கோயில் அமைத்தான். அவனுக்கு அம்பாள் ஆறுதல் கூறினாள். சுந்தர காஞ்சனி அம்பாள் என இவள் அழைக்கப்படுகிறாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.

அமைவிடம்:

திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் ரோட்டில் லால்குடிக்கு முன்னதாக 2 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

24 Nov, 15:55


◄•───✧ உ ✧───•►

🙏 கருட புராணம் 🙏

பாகம்_18

புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்..!!

குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு, மூன்று வயது வரையில் பாலகன், ஆறு வயது வரையில் குமரன், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும்.

பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான். மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும். 24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும்.

ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும். 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விரு÷ஷாற்சனம் செய்ய வேண்டும்.

ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது.
புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும்.

பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான்.

பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர். தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும்.

ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான்.

மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான்.

மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர்.

ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான்.

பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம். சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Nov, 23:21


சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :

திருச்சிற்றம்பலம்
அவனருளாலே
எல்லாம் சிவன் செயல்

**திருச்சிற்றம்பலம்**
🙌🏾அவனருளாலே👐🏻

**சிவமே தவம் **
**தவமே சிவம் **

அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே

அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே

உம் பேரருளோடு
உம் திருவடியை பணிகிறேன்

🌼எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

🌼பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

🌼கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

🌼சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

🌼ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

🌼பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

🌼எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

🌼காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

🌼 முக்கியமான விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.

🌼எந்த ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார் என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது என்கிறார்கள்....

🌼அப்படிப்பட்ட சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு அந்த ஈசன் தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது

**ஈசன் அடி தேடி பின்பற்றி**
பழமையான சிவனார் ஆலயங்களில்

மாதம் ஒருமுறை உழவாரப்பணி,

திருவாசகமுற்றோதுதல்,

கோபூசை,

மண்ணுக்கேற்ற மரக்கன்று நடுதல்,

திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி உலா,

மற்றும்

சிறப்புவாய்ந்த நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது
அனைவரும் வருக சிவனருள் பெறுக

🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏

🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Nov, 18:50


🚩 *சிவாயநம*🚩

*நவம்பர் (24-11-2024) கார்த்திகை 9 ஞாயிற்றுக்கிழமை இன்று*
*48வது பிறவித்திருநாள்*
*╔════•| ✿ |•════╗*
*பிறந்தநாள்*
*வாழ்த்துக்கள்*
*╚════•| ✿ |•════╝*
*நமது குழு அட்மின்*
*◆━━━━━━◆❃◆━━━━━━◆*
*╔════ ≪ •❈• ≫ ════╗*
*அன்பே சிவம்🔥 திரு.R.கார்திகேயன் என்ற கார்த்திக் ராஜா அவர்களுக்கு*
*╚════ ≪ •❈• ≫ ════╝*
*(24-11-2024) இன்று  பிறவித்திருநாள்*
*◆━━━━━━◆❃◆━━━━━━◆*
*எல்லாம் வல்ல ஈசன்* *கருணையினால் எல்லா வளமும்* *மேன்மேலும் பெற்று மண்ணில் நல்ல* *வண்ணம்*
*பெண்ணில்* *நல்லாளொடும் வாழ்க பல்லாண்டு என*
*▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃*
*எல்லாம் வல்ல இறைவன் திருவருளால்*
❃❃❃❃❃❃❃❃❃❃❃❃❃❃❃
*அவர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்கிறோம்*

🍓🍎🍏🍐🍊🍋🍌🍒🍑
🍍🥥🥭🍑🍇🍅🍎🍉
🎂🎂🍬🍬🍬🍮🍮🎂🎂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

* [‌H‌][‌A‌][‌P‌][‌P‌][‌Y‌] [‌B‌][‌I‌][‌R‌][‌T‌][‌H‌][‌D‌][‌A‌][‌Y‌]*

*என் நண்பனே !*
*இன்று பிறந்த நாள் காணும்*
*குறிஞ்சிப் பூவே !*

*உன்னை ஈன்றெடுத்த*
*தாய் தந்தைக்கு சிரம்* *தாழ்ந்த வணக்கங்கள் பல!*
*நன்றியுடன் வாழ்த்துகிறேன்*
*என் நண்பனே!*
*_(✪)_*
*அவதாரம்பத்து நீ...!*
*ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!*
*⊱⋅ ──────────── ⋅⊰*
*பெண்களுக்கெல்லாம்*
*முத்து நீ ...!*
*உலக* *அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!*

*நீ என்னை நட்பில்*
*பித்தாக்கிவிட்டாய்...!*
*அதை நான்*
*பூங்கொத்தாக்கிவிட்டேன்..!*
*பிறந்த நாள் வாழ்த்து கூற...!*
*◆━━━━━━◆❃◆━━━━━━◆*
*ஒவ்வொரு ஆண்டும்*
*புதுபுது சொந்தங்கள்*,
*புதுபுது கனவுகளுடன்*
*உன்னை* *விரும்புவோரெல்லாம்*
*உன்னை சுற்றி நின்று*
*வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்*
*நீ பிறந்த இந்த நாள்*.
*இன்று உன் வயது* *மட்டுமல்ல*,
*உன் கனவுகள்*, *ஆசைகள்*,
*போன்றவையும்* *கூடுகிறது...,*
*அவைகளெல்லாம்*
*உனக்கு இந்த ஆண்டு*
*மட்டுமல்லாமல்*
*இனி வரும்*
*அனைத்து* *ஆண்டுகளும்*
*நிறைவேறிட*

*வாழ்த்துகிறேன்*

*வாழ்க வளமுடன்*

*நமச்சிவாய வாழ்க*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க வையகம்*
*திருச்சிற்றம்பலம்*

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Nov, 15:28


சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

வித்தியாசமான அமைப்பு:

குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''

என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

முருகன் வணங்கிய சிவன்:

முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம்.

இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

எல்லாமே மஞ்சள் நிறம்:

பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.

யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.

உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது.

ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும்.

விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான்.

நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

நரசிம்மர் மண்டபம்:

நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.

நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

எலும்பு நோய்க்கு பூஜை:

பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.

வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

பதஞ்சலியின் ஜீவசமாதி:

ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று.

பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார்.

அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Nov, 15:28


பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

தல வரலாறு:

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.

படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.

படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.

என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

அமைவிடம்:

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Nov, 15:28


◄•───✧ உ ✧───•►

🙏 கருட புராணம் 🙏

பாகம்_17

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்..!!

யமலோகக் கணக்கன் சித்திரகுப்தன், ஜீவனின் பாப புண்ணியங்களைச், சிரவணர்கள் மூலம் அறிந்து, யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவன் ஆணைப்படி யம கிங்கரர்களைக் கொண்டு அவர்களுக்கான தண்டனைகளை அவ்வப்போது நிறைவேற்றுவான்.

ஜீவன், வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான்.

புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர்.

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும்.

ஜீவன் யமபுரிக்குச் செல்லும்போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும்.

மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷ்ணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்தி அடைவர்.

மாசிகம், வருஷாப் திகம் முதலியவற்றால் ஜீவனும், யமகிங்கரர்களும் திருப்தி அடைவர்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

23 Nov, 15:28


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு சிறுகனூர்,திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர்:பிரம்மபுரீஸ்வரர்

அம்மன்/தாயார்:பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)

தல விருட்சம்:மகிழமரம்

தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை:காரண ஆகமம்

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்:திருப்பிடவூர், திருப்படையூர்

ஊர்:சிறுகனூர், திருப்பட்டூர்

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:

இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.

தல சிறப்பு:

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

திறக்கும் நேரம்:

காலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை காலை 6- மதியம் 12.30 மணி.

முகவரி:

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,சிறுகனூர், திருப்பட்டூர்-621 105,திருச்சி மாவட்டம்.போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 - மாலை 6 மணி)

போன்:

+91- 431 2909 599

பொது தகவல்:

இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

குரு பரிகார தலம்:

அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.

மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு:

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.

அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

ஞானஉலா அரங்கேற்றம்:

சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார்.

ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

ஏழாம் தேதி பிறந்தவரா?ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.

சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

பிரார்த்தனை:

குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

நேர்த்திக்கடன்:

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Nov, 14:29


*ஐயப்பனின் தவக்கோல தரிசனம் மற்றும் தர்மசாஸ்தா என அழைக்கப்படுவதன் காரணம்..!*
♾️♾️♾️♾️♾️♾️
❤️💜❤️💜❤️💜

*சுவாமி சரணம்..! ஐயப்ப சரணம்..!*

🙏 கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் ஒரே சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்மசாஸ்தாவாக விளங்கக்கூடிய ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். அப்படி என்றால் ஐயப்பனின் தவக்கோல தரிசனம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்வோம் வாங்க..!

தவக்கோல தரிசனம்:

🙏 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

🙏 ஐயப்பன் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார். தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின் முத்திரை காட்டுகிறார். "சித்" என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி "சின்" என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த "சின்" முத்திரையாகும்.

🙏 "சின்" முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்குளிர தரிசிப்பதால் பிறவி பயனை அடைந்த சந்தோஷம் கிடைக்கும்.

🙏 ஒவ்வொரு மாதமும் நடை மூடப்படும்போது ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, "தவக்கோல விபூதி" என்று அழைக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை.

🙏 அத்துடன் ஐயப்பனின் "சின்" முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர்.

🙏 அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும். இந்த அதிசயம் தவறாமல் சபரிமலையில் அரங்கேறுகிறது. கோயில் கதவு திறந்து உலகத்தின் பார்வை அந்த கோயிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.

🙏 அடுத்த நிமிடமே அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. "சின்" முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்ராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தை காண கண்கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்தை உரத்த குரலில் எழுப்புவது ஏன்?

🙏 ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும். இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனமும் ஐயப்பனை பற்றிய எண்ணத்தில் திரும்பும்.

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்?

🙏 புலியை வாகனமாக கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல் தான் ஐயப்பன். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவனும் ஐயப்பன் தான். 

🙏 மற்ற கடவுள்களுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதை விட, ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது கடினம் என்றாலும், ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஐயப்பனுக்கு உள்ள மற்றொரு பெயரான தர்மசாஸ்தா என்ற பெயரின் பொருள் அறியலாம் வாங்க..!

🙏 சாஸ்தா என்ற வார்த்தைக்கு உன்னத ஆட்சியாளர், கட்டளை இடுபவர், ஆள்பவர் மற்றும் தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம். முருகப்பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்கு கட்டளை இட்டவர். வீரபத்திரரை தக்ஷ சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தவர்.

🙏 ஹரிஹர புத்திரனை தர்மசாஸ்தா என்று அழைக்கப்பட காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார். தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மம் சர (உண்மையை பேசு) என்று வேதம் கூறுகிறது. இந்த தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.

🙏 ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது நல்ல செயல்கள் அனைத்தும் தானாக நடக்கும். கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில் இதை தான் சொல்கிறார். எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்றும், இந்த தர்மத்தால் தான் இன்று அகிலம் தழைத்து நிற்கிறது என்றும் கூறுகிறார்.

🙏 ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது. நாளடைவில் இந்த தர்மம், அவனை தெய்வீகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால் இவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

22 Nov, 14:29


🙏 சாஸ்தா யோக நிலையில் அமர்ந்திருக்கும் குரு ஆவார். இவர் சாஸ்திரங்களை எடுத்து உபதேசிப்பவர் மற்றும் அதன்படி வாழ்பவர். இதை உணர்த்தவே சபரிமலை ஐயப்பன் சன்னதியில் 18ஆம் படி ஏறியவுடன் மோட்சத்தைத் தரும் "தத்வமஸி" என்ற மகாவாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த 18 படிகளும் 18 தர்ம தத்துவ நூல்களை குறிக்கின்றன.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

இதம் ஆஜ்யம், கமமண்டல

கால மகரகால பரஹமசியவ்ர

தேன ஹரிஹர புத்ர தர்ம

சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள் :

🙏 ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து, பதினெட்டு படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை கொடுக்க வேண்டும்.

சாமியே சரணம் ஐயப்பா..!


🔳💛💚🔳💛💚🔳💛💚🔳💛💚

✧༺༻∞ DEVENDRA CHANDRA Bose, CHENNAI. ˚*∞༺༻✧

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 15:37


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு மாகாளிக்குடி அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் ஆலயம்.

மூலவர்:காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி

உற்சவர்:அழகம்மை

தல விருட்சம்:மகிழ மரம்

பழமை:500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:மாகாளிக்குடி

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:

நவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரவிழா 21 நாட்கள் நடக்கிறது.

பவுர்ணமி , அமாவாசை, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருவிழா, அஷ்டமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

தல சிறப்பு:

விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார்.ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன.

பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில்மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம்.

போன்:

+91-431 267 0860, 267 0460, 98424 02999

பொது தகவல்:

சுற்றுப்பிரகாரத்தில் பின்னை மரத்தில் கட்டிய கிருஷ்ணனின் தவழும் நிலையிலுள்ள சிற்பம் தனி சன்னதியில் உள்ளது. இந்த கிருஷ்ணனுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சன்னதியில் பூர்ண புஷ்கலையுடன் யானை வாகனம் முன் நிற்க, அய்யனார் அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன், இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியோர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர்களில் சிலை வடிவில் உள்ளனர்.

சீனிவாச பெருமாள் லட்சுமி தாயாருடன் எழுந்தருளி உள்ளார். மதுரையின் காவல் தெய்வமான மதுரை வீரன் இங்கும் பொம்மி, வெள்ளையம்மாளுடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

சிவபெருமானே உமையாளை இடப்பாகத்தில் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவார். ஆனால் அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருவதை திருச்சி மாவட்டம் மாகாளிக்குடி ஆனந்த சவுபாக்கிய சுந்தரி கோயிலில் மட்டுமே காணமுடியும்.

இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான களுவனும் இங்கு வந்துள்ளனர்.

வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும். "கழுவன் சாதனை' என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது.

இதற்கு "தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல் என்று பொருள். மூலஸ்தான விமானம் மாறுபட்ட தோற்றத்துடன், நான்கு மூலைகளிலும் அம்பாளுக்குரிய சிம்மத்திற்குப் பதிலாக ரிஷபத்துடன் காணப்படுகிறது.

வாயுமூலையில் சுதை வடிவில் முருகப்பெருமானும், அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீனதேசத்து மனித உருவமும் உள்ளது. இவர் பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் என்கின்றனர்.

போகர் சீன தேசத்தில் சஞ்சாரம் செய்தவர் என்பது அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. தர்மசாஸ்தா எங்கும் காண இயலாதவாறு மனைவி, குழந்தை, யானை வாகனம் சகிதமாக அய்யனராக வீற்றிருக்கிறார்.

மூலஸ்தானத்திலுள்ள அம்பாளை ஆனந்த சவுபாக்ய சுந்தரி என்கின்றனர். புடைப்புச் சிற்பமாக, தாண்டவ கோலத்தில் சாந்தபாவனையில், விரித்த சடைகளோடு அசுர சம்காரம் செய்யும் நிலையில் காணப்படுகிறாள்.

மேலும், அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில், வழக்கமான தோற்றத்துக்கு மாறாக, அம்பாள் வலப்புறமும், இறைவன் இடப்புறமுமாக உள்ளனர்.

இங்கு காஞ்சி மகா பெரியவர் அளித்த ஐம்பொன்னால் ஆன நர்த்தன விநாயகர் சிலையும், பஞ்சலோக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.

நோய் தீர்க்கும் தீர்த்தம்:

திருநந்தவனத்தில் சக்தி தீர்த்த கிணறு உள்ளது. இங்கு சிவபெருமான் தவம் செய்வதாகவும், அவரது சடைமுடியின் கங்கையே இந்த தீர்த்தம் என்றும் நம்பப்படுகிறது. இந்தக் கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல், கிணற்றின் பக்கவாட்டு ஊற்று மூலம் தீர்த்தம் பெறப்படுகிறது.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 15:37


இந்த தீர்த்தத்தை தெளித்தால் தோல் நோய், சித்த பிரமை தீர்வதாக நம்பிக்கையுள்ளது. பெண்கள் இந்த தீர்த்தத்தில் நீர் இறைக்க கூடாது ஆண்கள் இறைத்து பெண்களுக்கு வழங்கலாம்.

பெருமாள் சன்னதி:

அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் வெங்கடேசனாக இருந்தாலும் கையில் கதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை "கதாதரர்' என்றும் அழைக்கின்றனர். மரணபயம் நீக்குபவராக இவர் அருள்கிறார். இவரை வணங்கி வருவதால் அகாலமரணம் ஏற்படாது என்பதும், பூர்ண ஆயுள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

வெண்ணெய் அபிஷேகம்:

குழந்தை ரூபத்தில் சந்தான கோபாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம், இளமை, செல்வம், ஆயுள் போன்ற நற்பலன்களை வழங்கும் கருணாமூர்த்தியாகவும் இவர் திகழ்கிறார்.

இவருக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்குவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

விலங்குத்துறையான்:

காவல் தெய்வமான விலங்குத் துறையான் என்ற கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்தால், பாதுகாப்பான நீண்டகால வாழ்வு கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. இவர் திருமாலின் அம்சமாக விளங்குகிறார். சங்கிலி கருப்பு என்றும் அழைப்பர்.

பொம்மியம்மை, வெள்ளையம்மை சமேத மதுரை வீரசுவாமியும் அருள்பாலிக்கிறார். அம்பிகையின் தேரோட்டம் நடக்கும்போது அவளுக்கு பாதுகாப்பாக இவர் வருவதாக ஐதீகம். தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் இவரை கட்டிவிடுவார்கள்.

அதற்கு அடையாளமாக விலங்கு மீண்டும் பூட்டப்பட்டுவிடும். நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் காட்சி தருகின்றனர்.

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும்.

அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது. அம்மன் கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இருப்பதே வாடிக்கை.

இதிலிருந்து சிவனே இங்கு சக்திக்குள் அடங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

விநாயகர் எல்லா கோயில்களிலுள் நுழைவுப்பகுதியில் இடது வாயிலிலும், வலதுபுறம் சுப்பிரமணியரும் காட்சிதருவர்.

ஆனால் இங்கு வலது புறத்தில் வலம்புரி விநாயகரும், இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

உற்சவர் அழகம்மை நான்கு கைகளுடன் நின்ற திருக் கோலத்தில் உள்ளார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும்.

ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும்

கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை "ஆனந்த சவுபாக்கிய சுந்தரி' என்கிறார்கள்.

அசுரனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அடிப்படையில் இப்படி இருப்பதாக ஐதீகம். இத்தல விநாயரின் திருநாமம் வலம்புரி விநாயகர்.

தல வரலாறு:

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் "உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கி பூஜை செய்து கொண்டிருந்தார்.

அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீஸ்வர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப் போலவே பூஜைகள் நடக்கவேண்டும் என கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாக சொல்வர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன.

பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 15:37


வேதாளத்திற்கு களுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது.

அமைவிடம்:

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 23 கி.மீ., தூரத்தில் சமயபுரம். இங்கிருந்து அரை கி.மீ., தூரத்தில் மாகாளிகுடி உள்ளது. மினி பஸ்கள், ஆட்டோக்கள் செல்கின்றன.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் சக்தி ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 15:37


◄•───✧ உ ✧───•►

🙏 கருட புராணம் 🙏

பாகம்_15

ஜீவன் செல்லும் பாதையில்....!!

யம தூதர்களால் பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் உதைப்பட்டுச் செல்லும் ஜீவன் தான் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும்.

தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும். தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது கூட வரவில்லையே. மற்றவர்கள் வயிறெரிய பொருள் சேர்த்தோம். இப்போது நம் வயிறு பற்றி எரிகிறதே என்று அலறித் துடிக்கும்.

அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து மனைவி மக்களே நித்தியம் என்று அறம் செய்யாமல் நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம், (அ) துன்பத்தைத் தரவல்லது.

பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா? என்று பலவாறு இடித்துக் கூறி, பாசத்தால் நையப்புடைத்து முசலத்தால் புடைபுடை என்று புடைப்பார்கள்.

சேதனன் காற்று நிறைந்த வழியில் கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, புதல்வனால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு, முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவான்.

அங்குப் பிரேதக் கூட்டங்கள் இருக்கும். மற்றும் பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன. சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நகரில் தங்கி, இரண்டாவது மாசிய பிண்டத்தை உண்டு, தொடர்ந்து யமகிங்கரர்களால் ஆரணியத்தின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு துன்புற்று, திரைபக்ஷக மாமிச பிண்டத்தை வேண்டி அரசன் சங்கமனின் கௌரி நகரைச் சார்ந்து மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று வழியில் கடுங்குளிரால் வருந்துவான்.

யமகிங்கரர்கள் எறியும் கல் மழையால் வருத்தமுற்று குரூரன் என்ற அரசனின் குரூரபுரம் அடைந்து ஐந்தாவது பிண்டத்தைப் பெறுவான்.

அடுத்து கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து ஆறாவது மாசிகப் பிண்டத்தை உண்பான்.

அங்கு அரை முகூர்த்த காலம் சிரமபரிகாரம் செய்து கொண்டு பயங்கரப் பாதையில் செல்கையில் பூவுலக வாழ்வை எண்ணி புலம்ப, யம கிங்கரர்கள் அந்த வாய் மீதே புடைப்பார்கள்.

அடுத்து இரத்தம், சீழ், சிறுநீர், மலங்கள் நிறைந்த வைதாரணி ஆறு வரும். கோதானம் செய்திருந்தால் அது வந்து படகோட்டிகள் அருகில் உன்னை நதிக்கு அப்புறம் சேர உதவும்.

கோதானம் செய்யாதவர் அந்த ஆற்றில் நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும்.

எனவே பாரதத்தில் பிறந்து வாழும் ஒவ்வொரு ஜீவனும் வைதரணி கோதானம் செய்ய வேண்டும்.

அல்லது அவன் மரித்த பிறகு அவனுடைய புத்திரனாவது செய்ய வேண்டும்.

அடுத்த நமனுக்கு இளையோனான விசித்திரனது நகரை அடைந்து ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு, பிறகு அவ்விடம் விட்டுப் புறப்படுகையில், ஏழாம் மாதம் பிண்டத்தை உண்ணும்போது பிசாசுகள் தோன்றி நம்பினவரைக் கெடுத்த ஜீவன் அந்த அன்னத்தை உண்ணத் தகுதியற்றவன் என்று கூறி பலவந்தமாக பறித்துக் கொண்டு போகும். ஈத்துவக்கும் இன்பம் பெறாத ஜீவன், தன் புத்திரனால் அவனுக்காகக் கொடுக்கப்படும் மாசிகப் பிண்டம் அவனுக்குச் சேராமல் பைசாசங்களைச் சேரும் சாக்காடு நிச்சயம் என்று உணராமல் பிறர் பசிதீர அன்னதானம் செய்யாமல் வாழ்ந்த நான் படுந்தொல்லையை யாரிடம் சொல்வேன்? என்று துயருறும்.

மானிடப் பிறவி அடைந்த ஜீவன் தான, தரும, பூசை முதலியவற்றால் புண்ணியங்களைச் சேர்க்கவேண்டும்.

அப்பிறவியில் செய்யப்படும் நல்வினைத் தீவினைப் பயன்களையே அது அடையும். ஜீவன் உதககும்பதானம் செய்திருப்பின் அந்த உதக கும்ப நீரைப்பருகி தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் மீண்டும் பயணத்தைத் தொடரும்.

யமபுரிக்கான பாதையில் பாதி தூரம் கடந்து விட்டதால் அவனுக்குரியவர் பூவுலகில் அப்போது அன்னதானம் செய்யவேண்டும்.

பிறகு பக்குவப்பதம் என்ற நகரில் எட்டாவது மாசிகப் பிண்டத்தையும், துக்கதம் என்ற ஊரில் ஒன்பதாவது மாத பிண்டத்தையும், நாதாக்கிராந்தம் என்ற நகரில் பத்தாம் மாசிக பிண்டத்தையும் உண்பான்.

அதபதம் என்ற ஊரை அடைந்து பதினொன்றாம் மாத பிண்டத்தை உண்டு, அடுத்த சீதாபரம் என்ற ஊரை அடைந்து சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாம் மாத வருஷாப்தி பிண்டத்தை உண்டு, அடுத்து வைவஸ்வத பட்டணம் சேரும் முன்பே ஊனாப்திக பிண்டத்தை உண்டு யமபுரியாகிய அப்பட்டணத்தை ஜீவன் அடையும்.

பன்னிரண்டு சிரவணர்கள் அங்குதான் இருப்பர்.

ஜீவன்கள் அந்தப் பன்னிரெண்டு சிரவணர்களையும் ஆராதித்தால், அவர்கள் ஜீவன் செய்த புண்ணியங்களை மட்டும் யமனுக்கு எடுத்துரைப்பர்.

எனவே அந்தப் பன்னிரு சிரவணர்களை ஆராதித்தல் மறுமையில் நன்மை பயக்கும். இவ்வாறு ஜீவன் செல்லும் பாதையில் அது பரிதவிக்கும் நிலைகள் கூறப்பட்டன.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 15:19


*🌷ஆதிசங்கரர் அருளிய
🌷...!*

🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️🟤🔴🟠

*🌷கனகதாரா ஸ்தோத்திரம்🌷...!*

❤️💚❤️💚❤️💚❤️💚❤️

*பாடல்:20...!*


கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா:


*பொருள் விளக்கம்:*

🛕 தாமரை மலரில் இருப்பவளே! கமலக் கண்ணனாம் ஸ்ரீ விஷ்ணுவின் காதலியே! கருணை வெள்ளமே! உன் கடைக் கண் பார்வை வேண்டி உன்னை துதிக்கும் இந்த வறியவனின் பிழை பொறுத்து தரித்திரத்தை நீக்க வழியைக் காட்டியருள வேண்டும்.



*🌹சௌபாக்கிய லட்சுமியே போற்றி🌹*

*🌹சந்தான லட்சுமியே போற்றி🌹*

*🌹ஆதிலட்சுமியே போற்றி🌹*

*🌹 தனலட்சுமியே போற்றி, போற்றி🌹*

*🌹தைரிய லட்சுமியே போற்றி🌹*

*மலரும்...!*

🟫◼️🟫◼️🟫◼️🟫◼️🟫◼️🟫◼️

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 15:19


*🌹திரு அருணகிரிநாதர்🌹*

*🌷அருளிய🌷,*

*கந்தர் அநுபூதி🦚...!*
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
🍃🪷🍃🪷🍃🪷🍃🪷🍃🪷🍃


*பாடல்:24...!*


கூர்வேல் விழி

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல் புரந்தர பூ பதியே


*......... பதவுரை .........*


கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கொங்கையிலே சேரும் விருப்பத்தை உடைய அடியேனின் மனம் தேவரீரின் திருவருள் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் நற்பேற்றினைப் பெறுமோ? மாமரமாகவும் கிரவுஞ்ச மலையாகவும் உருவெடுத்திருந்த அசுரன் சூரபன்மனை அழிப்பதற்கென்று அவற்றை வேரொடு தொளைத்து அழித்த பெரும் போர் செய்யவல்ல வேலாயுத்தை ஏந்தியவாறு உலகத்தைக் காக்கும் கடவுளே!



*🌷ஓம் முருகா சரணம்🌷*

*🌷ஓம் கதிர்வேலா சரணம்🌷*

*🌷 ஓம் ஞான பண்டிதா சரணம்🌷*


*மலரும்...!*


🟦🩵🟦🩵🟦🩵🟦🩵🟦🩵🟦🩵

ʕ•̫͡•ʔ❤️ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. ❤️ʕ•̫͡•ʔ

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 14:51


🙏🛕🍁 🐘🐘🍁🛕🙏*
*🚩இன்றையஆன்மீகம்🚩*
*🕉🚩அன்பேசிவம்🔥🚩*
*🙏சிவசிவசிவாயநம🙏*
*🔔🔱ஓம்நமசிவாய🔱🔔*

*•࿐• ❀ ❀ •࿐••࿐• ❀ ❀ •࿐•*

*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே ||*

*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*
*★·.·´பகிர்வு:·.·★*
*❀அன்பேசிவம்🔥❀*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

*♤♤♤♤♤♤D.C.H.♤♤♤♤♤♤...!*

*மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் திருக்கோயில்:*

மூலவர்:
கொளஞ்சிநாதர் (முருகன்)

தீர்த்தம்:
மணிமுத்தாறு நதி
சிறப்பு

திருவிழாக்கள்:
பங்குனி
உத்தரம், கந்த சஷ்டி,
சித்ரா பௌர்ணமி

அமைவு:
மணவாளநல்லூர்

மாவட்டம்:
கடலூர்

மாநிலம்:
தமிழ்நாடு

நாடு:
இந்தியா.


🔲🟢🔲🟢🔲🟢🔲🟢🔲🟢🔲🟢

᯽🄳🄴🅅🄴🄽🄳🅁🄰 🄲🄷🄰🄽🄳🅁🄰 🄱🄾🅂🄴 🄲🄷🄴🄽🄽🄰🄸

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Nov, 14:50


*🙏🙏★·.·´ உ `·.·★🙏🙏*

*🚩அன்பே சிவம்🚩*
*═━━━━✥◈✥━━━━═*
*🔥 தினமும் ஒரு ஆலய தரிசனம்||🔥*
*▩━━━━━━◈━━━━━━▩*

*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*
*★·.·´ பகிர்வு:·.·★*
*❀அன்பேசிவம்❀*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


*★━━━━━━ D. C. H. ━━━━━━★*

*அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில்:*

கோயில் அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் [Arulmigu sukrivar Temple]
கோயில் வகை சுக்ரீவர் கோயில்
மூலவர் சுக்ரீவர்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
முகவரி அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்- 623 526 ராமநாதபுரம் மாவட்டம்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 526
மாநிலம் தமிழ்நாடு.


*கோயில் சிறப்பு:*


சுக்ரீவர் தோஷ நிவர்த்தி தலம். சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது.வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
சுக்ரீவர் தோஷ நிவர்த்தி தலம். சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது. வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான்.

பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

🟥🔶🟥🔶🟥🔶🟥🔶🟥🔶🟥🔶

✧༺༻∞ DEVENDRA CHANDRA Bose, CHENNAI. ˚*∞༺༻✧

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Nov, 14:40


*தைப்பூசம்... முருகனை வழிபடுங்கள்...!!*
♾️♾️♾️♾️♾️♾️
🌹💚🌹💚🌹💚

தைப்பூச விழா தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.தைப்பூச வரலாறு :தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார்.சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே முருகன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார்.அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.சிறப்புகள் :தைப்பூசத்திருநாளில் முருகக்கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும்.வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்.முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.தைப்பூசத்தில் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.மிக சிறப்பு வாய்ந்த இந்நாளில் எல்லாம் வல்ல முருகப்பெருமானிடம் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்க பிரார்த்திப்போம்...!

🟦🟤🟦🟤🟦🟤🟦🟤🟦🟤🟦🟤

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Nov, 04:54


*இருமுடி கட்டும்.. ஐயப்பனின் வேறு பெயர்களும்.. பக்தர்கள் அறிய வேண்டியவை..!*
〰️〰️〰️〰️〰️〰️
💐🌿💐🌿💐🌿


*சுவாமி சரணம்..! ஐயப்ப சரணம்..!*


🔥 ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.


🔥 வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும். 


🔥 இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்பன் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள். 


🔥 இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.


🔥 நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.


🔥 அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.


🔥 முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.


🔥 வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.


🔥 தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.


🔥 இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.


🔥 பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... யாரைக் காண.. சுவாமியைக் காண... என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்!.. வாழ்வில் வளம் பெறுவோம்!


ஐயப்பனின் வேறு பெயர்கள்:


💫 ஐயப்ப சுவாமிக்கு சரண கோஷமிட்டு சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.


💫 18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்கள் என்னவென்றால்,


💫 மணிகண்டன்


💫 பூதநாதன்


💫 பூலோகநாதன்


💫 தர்மசாஸ்தா 


💫 ஹரிஹரசுதன்


💫 ஹரிஹரன்


💫 கலியுகவரதன்


💫 கருணாசாகர்


💫 லக்ஷ்மண பிராணதத்தா


💫 பந்தளவாசன்


💫 பம்பாவாசன்


💫 ராஜசேகரன்


💫 எருமேலிவாசன்


💫 சபரி


💫 சபரீஷ்


💫 சபரீஷ்வரன்


💫 சபரி கிரீஷ்


💫 சாஸ்தா


💫 வீரமணி


🔥 இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும். கூப்பிட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரிநாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.


*சாமியே சரணம் ஐயப்பா..!*

🔲🌹🔲🌹🔲🌹🔲🌹🔲🌹🔲🌹

᯽🄳🄴🅅🄴🄽🄳🅁🄰 🄲🄷🄰🄽🄳🅁🄰 🄱🄾🅂🄴 🄲🄷🄴🄽🄽🄰🄸

🙏திருச்செந்தூர் முருகன்🙏

18 Nov, 15:16


*ஐயப்பன் விரத விதிமுறைகள் மற்றும் 18 படிகளின் சிறப்பு..!*
♾️♾️♾️♾️♾️♾️
🔴🟢🔴🟢🔴🟢

*சுவாமி சரணம்..! ஐயப்ப சரணம்..!*

சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு மண்டல விரதம் இருந்து பலபேர் இருமுடி கட்டி கோவிலுக்கு செல்லும் வேண்டுதல் உடையவர்களாக இருப்பார்கள். பலபேர் புதியதாக மாலை போடுபவர்களாகவும் இருப்பார்கள்.

சபரிமலை செல்ல ஐயப்பன் விரத விதிமுறைகள் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க..!

விதிமுறைகள் :

ஐயப்பன் சுவாமிக்கு முதல்முறையாக மாலை அணியும் பக்தர்களை கன்னி சுவாமி என அழைப்பார்கள்.

ஐந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்ற ஒருவரை குரு சுவாமியாய் ஏற்று தாய், தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறுதல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாய் ஆனாலும் குரு, ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கார்த்திகை முதல்நாள் மாலை அணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம்.

விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்கக்கூடாது. திருமணமானவர்கள் தாம்பத்திய வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதத்தை சரணடைய வேண்டும்.

ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

விரதகாலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.

விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல், கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.

விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்ற கூடாது. 

நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.

விரதகாலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை என்பனவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். 

18 படிகளின் சிறப்பு:

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. அந்த படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.

இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.

மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.

நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.

ஆறில் இருந்து பதிமூன்று வரை உள்ள எட்டு படிகளும் அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதினைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினாறாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும். இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது இந்த மூன்று படிகள்.

பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.

பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.

சுவாமியே சரணம் ஐயப்பா..!


🟥🟤🟥🟤🟥🟤🟥🟤🟥🟤🟥🟤

✧༺༻∞ DEVENDRA CHANDRA Bose, CHENNAI. ˚*∞༺༻✧

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 16:16


மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரே சன்னதியில் மூன்று தாயார்:

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர்.

இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயகப்படுகின்றன.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.

(1) நாழிகேட்டான் கோபுரம்
(2) ஆர்யபடால் கோபுரம்
(3) கார்த்திகை கோபுரம்
(4) ரெங்கா ரெங்கா கோபுரம்
(5) தெற்கு கட்டை கோபுரம்-
(6) தெற்கு கட்டை கோபுரம்-
(7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

(1) வசந்த உத்சவம்
(2) சங்கராந்தி
(3) பாரிவேட்டை
(4) அத்யயநோத்சவம்
(5) பவித்ர உத்சவம்
(6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

(1) பூச்சாண்டி சேவை
(2) கற்பூர படியேற்ற சேவை
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
(6) தாயார் திருவடி சேவை
(7) ஜாலி சாலி அலங்காரம்

தல வரலாறு:

இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.

ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர்.

விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை.

அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.

விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.

பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று

விஞ்ஞானம் அடிப்படையில்:

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 16:16


◄•───✧ உ ✧───•►

🙏 கருட புராணம் 🙏

பாகம்_14

ஜீவன் யமலோகம் செல்லுதல்..!!

மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம் இடைவெளி உள்ளது. யமதர்ம ராஜன் ஒவ்வொருவர் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படி யம தூதர்கள் மூவகையினரை அனுப்பி வைப்பான்.

அந்த யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டிப்பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைந்து யமலோகம் கொண்டு செல்வர். அங்கு யமனுக்கு எதிரில் ஆவியுருவச் சீவர்களை அவிழ்த்து நிறுத்தி அவர்கள் ஆணைப்படி நடக்கச் சித்தமாக இருப்பதாகக் கூறுவர்.

அப்போது கூற்றுவன் யமகிங்கரர்களிடம் அச்சீவன்களை மீண்டும் கொண்டு போய் அவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டு பன்னிரண்டு நாட்கள் கழித்த பிறகு, முறைப்படி மீண்டும் கொண்டு வருமாறு ஆணையிடுவான்.

இதனால்தான் இறந்தவன் உடலை உடனே எரிப்பதோ, புதைப்பதோ கூடாது.

யமகிங்கரர்களால் அவிழ்த்து விடப்பட்ட வாயு வடிவுடைய ஜீவன் சுடுகாட்டில் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று திரும்பவும் புகமுடியாதவாறு தீப்பற்றி எரியும் உடலைப் பார்த்து ஓலமிட்டு அழும்.

புண்ணியம் செய்த ஜீவன் இவ்வுடல் எரிந்து ஒழிந்ததே நல்லது என்று மகிழ்ச்சி அடையும். தேகம் முழுவதும் எரிந்து சாம்பலான உடனே ஜீவனுக்குப் பிண்டத்தாலான சரீரம் உண்டாகும்.

இறந்தவனின் புத்திரன் முதல் நாள் போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் கழுத்தும் தோள்களும், மூன்றாம் நாள் மார்பும், நான்காம் நாள் வயிறும், ஐந்தாம் நாள் உந்தியும், ஆறாம் நாள் பிருஷ்டமும், ஏழாம் நாள் குய்யமும், எட்டாம் நாள் தொடைகளும், ஒன்பதாம் நாள் கால்களும், பத்தாள் நாள் சரீரம் முழுவதும் உண்டாகும்.

ஜீவன் உடலை விட்டுப் பிரியும் முன்பேயே உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று கதறிக்கொண்டு நிற்கும்.

பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் பிராமண முகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் இழுத்துச் செல்ல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே யமலோகத்தை அடையும்.

பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், வறுத்த மணல் இருக்கும் வழியில் செல்ல வேண்டும். இவ்வழியில் செல்லும் ஜீவன் படும் துன்பம் சொல்லத் தரமன்று.

சர்வேசுரன் ஒருவன் உண்டென்றும் சுவர்க்கம், நரகர் அடைய நன்னெறி, தீய நெறி உண்டென்றும், பிறப்புக்கு அப்பால் உள்ள வாழ்வுக்கு இதமானவற்றைச் சொல்லுபவர்களோடு முரண்பட்டு சாதுக்களை ஏசித்திருந்தேனே, அவற்றின் பயனை இப்போது உணர்கிறேன் என்றும் ஏகாதசியில் உபவாசம் இருக்கவில்லை.

நற்செயல், நல்வினை ஏதும் செய்யவில்லை, என்றெல்லாம் கூறிப் புலம்பும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 16:16


(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபறி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.

(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்.

(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

பிரார்த்தனை:

மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம்.

பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை:

ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

மோட்ச ராமானுஜர்:

இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

பெருமாளுக்கு 365 போர்வை:

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 16:16


கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர்.

கார்த்திகை, மார்கழி குளிர்
மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

காவிரி நீர் அபிஷேகம்!:

ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும்.

மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆடிப்பெருக்கு திருவிழா:

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது.

சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது.

அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

கம்பருக்கு அருளிய நரசிம்மர்:

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.

அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார்.

கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

மூன்று பிரம்மோற்ஸவம்:

சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர்.

இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.

அமுத கலச கருடாழ்வார்:

கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.

பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி!:

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்:

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 16:16


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு ஶ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதபெருமாள் ஆலயம்

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர் : ரங்கநாதர்

உற்சவர் : நம்பெருமாள்

அம்மன்/தாயார் : ரங்கநாயகி

தல விருட்சம் : புன்னை

தீர்த்தம் : சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவரங்கம்

ஊர் : ஸ்ரீரங்கம்

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள் : மங்களாசாசனம்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும்.

பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.

தல சிறப்பு:

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம்.

புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.

மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.

முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.

திறக்கும் நேரம்:

காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006,திருச்சி மாவட்டம்.

போன்:

+91 - 431- 223 0257, 243 2246.

பொது தகவல்:

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.

ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும்.

இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

2. பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும்

3. ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்

(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

திருவிழா:

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 14:50


*உ*
*ஓம் சக்தி பராசக்தி 🔱*

*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 190*

*இன்று நாம் அறிந்து* *கொள்ளும் திருநாமம்*
*...துர்கா..*

துர்கா - दुर्गा – 

எல்லா உயிர்களையும் பாதுகாப்பைத் தருபவள்..


*விளக்கம்🙏*
""""""""""""""""""""""

துர்கா பரமேஸ்வரி என்றே சொல்வதுண்டு.மலைமகளாக இருக்கக்கூடிய பரமேசுவரியின் நாமம் துர்கா.

துர்கா என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

அம்பிகை என்பது ஓர் அர்த்தம்.பழங்காலத்துக் கோட்டைகளை துர்கம் என்று குறிப்பிடுவார்கள் - அந்த ஊர்களின் பெயர்கள் 'துர்கம்' "துர்கம்" என்று முடியும்.ஆந்திராவில் நிறைய துர்கம் இருக்கும்.

சங்ககிரி துர்கம் - என்பது அங்கிருக்கும் கோட்டையினால் ஏற்பட்ட பெயர்.ஆக,துர்கம் என்றால் பாதுகாப்பு; பாதுகாப்பைத் தரக்கூடிய இடம்.ஆகவே, துர்கா பாதுகாப்பைத் தரக்கூடியவள்.


துர்காவாக இருக்கக் கூடியவள், இங்கே இருக்கிற ஜீவன்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடியவள்.என்னவெல்லாம் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றிலிருந்து ஜீவன்களைக் காப்பாற்றி மேலே ஏற்றக்கூடியவள் அன்னை எனவே அன்னை துர்கா என்று அழைக்கப்படுகிறாள்.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 190 வது திருநாமம் ஆகும்...

*🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹*

*🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏*

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

🟦🔶🟦🔶🟦🔶🟦🔶🟦🔶🟦🔶

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Nov, 14:50


*🌷ரமணா மகரிஷி அருளிய🌷....!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"*

*"🌹அருணாசல* *பஞ்சரத்னம்*
*(வெண்பா))*"🌹...!

*மாலை என் : 01/06...!*


அருணிறை வான வமுதக் கடலே
விரிகதிரால் யாவும் விழுங்கு மருண
கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்
விரிபரிதி யாக விளங்கு.


*பொருள்:*


அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே! எனது இதயத் தாமரை நன்கு விரிந்து மலரும் வண்ணம், ஞான சூரியனாக எழுந்து அருள்வாயாக.


*🌷சிவாய நம🌷*

*🌷ஓம் நமசிவாய🙏*

*🌷அன்பே சிவம்🙏*

*🌷திருச்சிற்றம்பலம்🙏*


*தொடரும்...!*


🟥◼️🟥◼️🟥◼️🟥◼️🟥◼️🟥◼️

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁

🙏திருச்செந்தூர் முருகன்🙏

16 Nov, 14:36


◄•───✧ உ ✧───•►

🙏 ஆலயம் அறிவோம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு எஸ்.கண்ணணூர் அருள்மிகு ஆதிமாரியம்மன் ஆலயம்.

மூலவர்:ஆதிமாரியம்மன்

பழமை:500 வருடங்களுக்குள்

ஊர்:எஸ்.கண்ணனூர்

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:

இங்கு ஆண்டுதோறும் தைமாதம் பூச்சொரிதல் விழாவும், மாசிதிருவிழாவும், விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆதிமாரியம்மன் கொள்ளிடம் காவிரிக்கு அழைத்து சென்றதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் எஸ்.கண்ணனூர் மாரியம்மன் சித்திரை திருவிழாவின் போது சித்திரை முதல் ஞாயிறு அன்று சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்து வரப்பட்டு தங்கி விட்டு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.

தல சிறப்பு:

எஸ்.கண்ணனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த இடமே சமயபுரத்தாள் பிறந்த தலமாகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில்,எஸ்.கண்ணனூர்,திருச்சி மாவட்டம்.

பொது தகவல்:

சமயபுரம் மாரியம்மன் பிறந்த இடம் சமயபுரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் இருக்கிறது. இங்கும் மாரியம்மன் குடி கொண்டு இருக்கிறாள். இவளை ஆதி மாரியம்மன் என அழைக்கிறார்கள்.

திருச்சி அருகே உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தனது பக்தர்களுக்கு சமயம் அறிந்து உதவுவதால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள். இவ்விடத்தை எஸ்.கண்ணனூர் என்று அழைப்பர்.

எஸ்.கண்ணனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த இடமே சமயபுரத்தாள் பிறந்த தலமாகும்.

பிரார்த்தனை:

திருமணம் நடக்காதவர்கள் நாககன்னி அம்மனை வணங்கி பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறை கோயில் வேப்ப மரத்தில் கட்டி சென்றால் திருமண தடைகள் நீங்கும்.

குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆதி மாரியம்மனை வணங்கி நாககன்னியம்மன் முன்புள்ள வேப்ப மரத்தில் மரதொட்டில் கட்டி சென்றால் குழந்தை பேறு கிடைக்கும்.

அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனை வேண்டி வழிபட்டு இரவில் தங்கியிருந்தால் நினைத்தது நடக்கும்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

ஆதிமாரியம்மன் நான்கு கரத்தோடு காட்சியளிக்கிறாள். எஸ்.கண்ணனூரை நோக்கி, (தென் திசை) மூலஸ்தானம் அமையப்பெற்று இருப்பது இந்த கோயிலின் தனி சிறப்பாகும்.

தல வரலாறு:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்தி செடிகள் சூழ வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல் செய்து வந்த ஒருவர் இந்த பகுதியை கடக்கும் போது, குழந்தை ஒன்று தான் இங்கு இருப்பதாக கூறும் குரல் மட்டும் கேட்டது. மக்கள் குரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த பகுதியில் புற்று தெரிந்தது. உடனே சக்திதான் குழந்தை வடிவில் வந்து தான் அங்கு குடி கொண்டிருப்பதை தெரிவித்துள்ளாள் என்பதை அறிந்த மக்கள் அங்கே அம்மனுக்கு திறந்த வெளியில் கோயில் அமைத்து வழிபட துவங்கினர். ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வந்தனர்.

தைப்பூசத் திருவிழாவின் போது அம்மனை கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்து வருவார்கள். ஒரு முறை அம்மனை கொள்ளிடத்திற்கு அழைத்து வந்து பின்னர் கோயிலுக்கு அழைத்து சென்றனர். இடையில் ஒரு வேப்ப மரத்தடியில் அம்மனை வைத்து விட்டு, சற்று நேரம் இளைப்பாறினர்.

பின்னர் மீண்டும் அம்மனை கோயிலுக்கு அழைத்து செல்ல அம்மனை பல்லக்கில் தூக்கிய போது அந்த இடத்தை விட்டு அம்மனை எடுக்க முடியவில்லை. ஒரு சிறுமியின் மேல் அருள் வந்து, தான் காவிரி கரையில் இருக்க விரும்புவதாக கூறினாள்.

இதனால் பக்தர்கள் அம்மனை வழிபட்டு காவிரி கரையில் அம்மனை விட்டு சென்றனர். பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் ஆதிமாரியம்மன் கோயிலில் இருந்து பிடி மண் கொண்டு வரப்பட்டு எஸ்.கண்ணனூரில் கோயில் எழுப்பப்பட்டது. இதையே கண்ணபுரம் மாரியம்மன் என்பர்.

கண்ணனூரில் அம்மன் குடிகொண்டாலும், தன் பிறப்பிடமான சமயபுரத்தின் பெயரால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்பட்டாள். தற்போது கண்ணனூரில் இருக்கும் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தவறாமல் அம்மன் பிறப்பிடமான ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் வந்து தரிசனம் செய்கின்றனர். ஆதிமாரியம்மன் நான்கு கரத்தோடு காட்சியளிக்கிறாள்.

எஸ்.கண்ணனூரை நோக்கி, (தென் திசை) மூலஸ்தானம் அமையப்பெற்று இருப்பது இந்த கோயிலின் தனி சிறப்பாகும். இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வரும் ஆதிசக்தி நாக கன்னியாகவும் காட்சி தருகிறாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

எஸ்.கண்ணனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த இடமே சமயபுரத்தாள் பிறந்த தலமாகும்.

அமைவிடம்:

🙏திருச்செந்தூர் முருகன்🙏

16 Nov, 14:36


சமயபுரத்தில் இருந்து 3 கி.மீ.தொலைவில் எஸ்.கண்ணனூர் இருக்கிறது. எஸ்.கண்ணனூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் சக்தி ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

16 Nov, 14:36


◄•───✧ உ ✧───•►

🙏 கருட புராணம் 🙏

பாகம்_13

பாவ புண்ணியங்களை ஆராயும் பன்னிரு சிரவணர்கள்..!!

சிருஷ்டி தொடங்கி நடைபெற்று வரும்போது எல்லோரும் அவரவர் தொழிலைச் செய்யத் தொடங்கினர்.

யமனது சங்கடம்:

ஆற்றல் மிக்க யமதர்மராஜன் ஜைமினி நகரில் அரியாசனத்தில் அமர்ந்து ஜீவர்களின் பாவபுண்ணியங்கள் பற்றி ஆராயத் தொடங்கினான்.

ஆனால், சேதனர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. யமன் நான்முகனை அடைந்து பாவ புண்ணியங்களை அறிந்து கொண்டு, அதற்குத் தக நடக்கவும் தனக்கு அருள் புரியுமாறு வேண்டினான்.

சிரவணர்கள் தோற்றம்:

அதைக் கேட்ட பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு நீண்ட கண்கள், அழகு, அகக்கண் கொண்டு புண்ணிய பாவங்களை அறிந்து இயமனுக்கு உதவ பன்னிருவரைத் தோற்றுவித்தார். அவர்களே பன்னிரண்டு சிரவணர்கள்.

இயமன் அவர்களுடன் தென்புலம் அடைந்து சேதனர்களின் பாவபுண்ணியங்களை அறிந்து அதற்கேற்ப காத்தும், தண்டனை அளித்தும் வரலானான்.

உலகில் ஒரு ஜீவனின் இறுதிக்காலம் முடிந்தவுடன் அங்குஷ்ட அளவில் வாயு வடிவிலான ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

தர்மவான்கள் கர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

சான்றோர்க்குப் பொன், பொருள் வழங்கியோர் விமானங்களில் ஏறிச் செல்வர். பெரியோர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே அளித்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வர்.

வீடுபேற்றை விரும்பி வேத சாஸ்திர புராணங்களை அறிந்த பக்தர்கள் தேவ விமானம் ஏறி தேவருலகம் செல்வர். இவற்றில் சேராத பாவிகள் கால்களால் நடந்தே செல்வர்.

அவ்வழியில் கூர்மையான இலைகள் கொண்ட செடி, கொடிகளும், வறுத்துக் கொட்டிய மணல்களும் நிறைந்திருக்கும்.
அவ்வழியில் போகும் போது மிகவும் வருத்தம் ஏற்படும்.

ஜீவன் வாழும்போது சிரவணரைப் பூசித்து இருந்தால் அவர்கள் அந்த ஜீவனின் பாவங்களைப் பொருட்படுத்தாமல், புண்ணியங்களை மட்டுமே யமனிடம் சொல்வார்கள்.

சிரவணரைப் பூசிப்பவர்களுக்குப் பாவம் செய்ய மனமே இடம் தராது. பன்னிரண்டு கலசங்களில் நீர் நிரப்பி, அன்னம் தயாரித்து அக்கலசங்களைச் சிரவணர்களாகவே எண்ணி அந்தணர்க்குத் தானம் செய்ய வேண்டும்.

அந்த ஜீவன்களுக்குச் சிரவணர்கள் யமலோகத்தில் எல்லா நன்மைகளையும் செய்வர்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 16:54


🌹மிக, மிக, அரிதான அர்த்தநாரீஸ்வர தெய்வத்திருமேனி.

திருக்கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர்_மாவட்டம்.

🌿🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 16:16


*🌷ரமணா மகரிஷி அருளிய🌷....!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"*

*"🌹அருணாசல அஷ்டகம்
(எண்சீர் விருத்தம்)

"🌹...!*

*மாலை என் : 03/08
...!*


நின்னையா னுருவென வெண்ணியே நண்ண
நிலமிசை மலையெனு நிலையினை நீதா
னுன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக்
குறவுல கலைதரு மொருவனை யொக்கு
முன்னுரு வுனலற வுன்னிட முந்நீ
ருறுசருக் கரையுரு வெனவுரு வோயு
மென்னையா னறிவுற வென்னுரு வேறே
திருந்தனை யருணவான் கிரியென விருந்தோய்.


*பொருள்:*


அருணாசலா! என்னைப்போலவே உன்னையும் உருவமுள்ளவனாக நினைந்து உன்னை அடைய நான் அணுகவும், நீயோ இப்பிரபஞ்சத்தில் அருணாசலம் என்னும் மலைவடிவமாக இருக்கின்றாய். உனது சொரூபம் உருவமற்றது என்று தியானிப்பது, எங்கும் நீக்கமற நிறைந்த ஆகாசத்தைக் காண்பதற்கு, உலகு எங்கும் அலைந்து திரிகின்ற ஒருவனுடைய முயற்சிக்கு நிகராகும். உனது உண்மை சொரூபத்தை எண்ணமற்று உள்ளபடி உணரும்போது, சமுத்திரத்தை ஆழம் காண கடலில் மூழ்கிய சர்க்கரை பொம்மையின் உருவம் கரைவது போல மனம் தன் உருவத்தை இழக்கும். எனது ஆத்ம சொரூபத்தை நான் விசாரித்து அறியும்போது எனக்கென்று தனி உருவம் எது இருக்கிறது? அருணாசலம் என்னும் வானோர் புகழ் மலையாக என்றும் நீயே விளங்குகின்றாய்.



*🌷சிவாய நம🌷*

*🌷ஓம் நமசிவாய🙏*

*🌷அன்பே சிவம்🙏*

*🌷திருச்சிற்றம்பலம்🙏*


*தொடரும்...!*


🔲🔺🔲🔺🔲🔺🔲🔺🔲🔺🔲🔺

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 16:16


*🌹சித்தர் சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

*🙏சிவவாக்கியம்..!*


💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚


*நூல்: 161...!*


ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்ஙனே
செய்யதெங்க ளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே.


*பொருள் விளக்கம்:*


ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.




*🌷நமசிவய ௐ🌷*

*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!*

*🙏சிவாய நம🙏*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

*வளரும்...*


🌷🟩🌷🟩🌷🟩🌷🟩🌷🟩🌷🟩


💢🚀🚀💢 DEVENDRA CHANDRA Bose, CHENNAI. 💢🚀🚀💢

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 15:12


*திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை*

01.12.2024 அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்

02.12.2024 அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்

03.12.2024 அருள்மிகு விநாயகர்,சந்திரசேகர் உற்சவம்

04.12.2024 கொடியேற்றம்-வெள்ளி வாகனம்,சிம்ம வாகனம்

05.12.2024 தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானங்கள்

06.12.2024 சிம்ம வாகனம், வெள்ளி வாகனம்

07.12.2024 வெள்ளி காமதேனு வாகனம்

08.12.2024 வெள்ளி ரிஷப வாகனம்

09.12.2024 வெள்ளி ரதம்

10.12.2024 மகா ரதம்

11.12.2024 பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்

12.12.2024 கைலாச வாகனம், காமதேனு வாகனம்

*13.12.2024 பரணி தீபம் மற்றும் மகா தீபம்*

14.12.2024 தெப்பல் உற்சவம்-சந்திரசேகர்

15.12.2024 தெப்பல் உற்சவம்-அண்ணாமலை

16.12.2024 தெப்பல் உற்சவம்-சுப்பிரமணியர்

17.12.2024 சந்திரசேகர் உற்சவம்

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 15:10


வடபழனி முருகன் கோவில் லட்சார்ச்சனை 🙏

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 15:08


Video from Ruthran Narbavi.Jeyakumar

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 15:04


*உடம்பை சிலிக்க வைக்கும்* *காட்சி.....* அயோத்தியில், தினமும் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் குரங்கு வந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்து வந்தது.ஒரு நாள் இரவு, அந்த கோவிலின் அர்ச்சகர் ஒருவர், இந்த சம்பவத்தை கண்டு ஆச்சரியமடைந்தார்.மறுநாள், குரங்கு மீண்டும் வந்தது. அதே சமயம், இந்தக் குரங்கின் ராம பக்தியைக் கண்டு வியந்தான். இது மொபைலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் கடவுள் பக்தி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். *நம் கண் எதிரே பக்தியின் பக்திக்கு நேரடியான எடுத்துக்காட்டாக மிகவும் அரிதான தர்ஸனம் - ஸ்ரீ ராம் பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமி* 🙏🙏🙏🙏

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 14:25


◄•───✧ உ ✧───•►

🙏 கருட புராணம் 🙏

பாகம்_06

தான தருமங்கள் விருஷாற்சனப் பலன்கள்..!!

ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் க்ஷத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும்.

எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும். ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும்.

சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான்.

சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான்.

அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

விருஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும்.

யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விருஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும்.

எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விருஷாற்சனமே. இந்த விருஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விருஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

காமிய விருஷாற்சன சர்க்கம்:

முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர்.

இதற்கு காமிய விருஷாற்சன சர்க்கம் என்று பெயர். பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விருஷாற்சனம் பற்றியும் கூறுகிறார்.

ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும்.

பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும்.

வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான்.

அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.

தானங்கள் நான்கு வகைப்படும்.

அவையாவன :

1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.

2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.

3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்

4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏 ஓம் நமோ நாராயணா 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 14:25


🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 14:25


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு திருநெடுங்குளம் அருள்மிகு திருநெடுங்களநாதர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர்:திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.

அம்மன்/தாயார்:மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

தல விருட்சம்:வில்வம்,. கஸ்தூரி,அரளி,

தீர்த்தம்:அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்:திருநெடுங்களம்

ஊர்:திருநெடுங்குளம்

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம் மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 8வது தலம்.

திருவிழா:

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. நால்வருக்கும் அவரவர்க்குரிய திருநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 71 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,திருநெடுங்களம்-620015திருச்சி மாவட்டம்.

போன்:

+91- 431-252 0126.,2510241 9965045666

பொது தகவல்:

கோயில் இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது.

இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது.

இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது.

வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது.

காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார்.

இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி பூஜை சிறப்பாக நடக்கும்.

தல வரலாறு:

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம் என்றால் "சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்:

திருச்சி தஞ்சை ரோட்டில் 18 கி.மீ. தூரத்தில் துவாக்குடி என்ற ஊரில் இறங்கி 3 கி.மீ. சென்றால் திருநெடுங்களத்தை அடையலாம். திருச்சியிலிருந்து இந்த ஊருக்கு செல்லும் டவுன்பஸ்களும் உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 03:04


திருச்செந்தூர் சண்முக அர்ச்சனை ஏன் சிறப்பானது தெரியுமா? | Shanmuga Archanai | Thiruchendur

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 01:41


🙏திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

🟦❤️🟦❤️🟦❤️🟦❤️🟦❤️🟦❤️

🙏திருச்செந்தூர் முருகன்🙏

07 Nov, 01:41


*திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்..!!*
〰️〰️〰️〰️〰️〰️
🟣🟤🟣🟤🟣🟤


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிபட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

கந்தசஷ்டி சூரசம்ஹாரம் :

🙏திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

🙏கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார்.

🙏அங்கு முதலில் சுவாமி ஜெயந்திநாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகன், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்திநாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஐக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

🙏கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சணம் செய்தும், கந்தசஷ்டி கவசம் பாடல்கள் பாடியும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

திருக்கோவில் வரலாறு :

🙏தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழன் பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.

🙏வியாழன் பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழன் பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் 'செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே 'செந்தில்நாதர்' என மருவியது. தலமும் 'திருஜெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.

கோவில் அமைப்பு :

🙏150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களை கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.

🙏தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

🙏இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

🙏பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூல ஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

திருக்கோவில் சிறப்புகள் :

🙏முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.

🙏திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

06 Nov, 17:35


*வசந்த பஞ்சமி:*
♾️♾️♾️♾️
🪷🪷🪷🪷

வசந்த பஞ்சமிவேதங்களில் உள்ள தெய்வங்களில் முக்கிய தெய்வமாக புகழப்படுவது சரஸ்வதி தேவி ஆகும். அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் விளங்குகிறாள். சரஸ்வதி தேவியின் அவதார நாளான இந்நாளில் தான் பிரம்மா, சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் பேசும் சக்தியை அளித்ததாகப் புராணம் கூறுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி என்று போற்றப்படுகின்ற, ஸ்ரீசரஸ்வதி தேவி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி நாளாகக் கொண்டாடப்படுகிறது.இந்த வசந்த பஞ்சமி ஒவ்வொரு வருடமும் தை மாதம் வரும் பஞ்சமியாகும். இந்த வசந்த பஞ்சமியானது இன்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீபிரம்மாவின் மனதிலிருந்து சரஸ்வதி அவதரித்ததாகவும் புராணத்தகவல் உண்டு. சப்தமாதா வரிசையில் ஆறாவதாகவும், வாக்குக்கு அதிபதியாகவும் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, நம் உடலில் வௌ;வேறு பெயர்களுடன் வியாபித்திருக்கிறாள் என்று சாக்த தந்திர நூல்கள் கூறுகின்றன. நீல சரஸ்வதி, உக்ரதாரா, சகவதாரா, நீலதாரா என்பவை சரஸ்வதியின் அம்சங்களாகும்.வேதங்களில் இன்னொரு சரஸ்வதியும் உண்டு என்றும், அவள் வேதசரஸ்வதி ஆவாள். ஜடாமகுடம் தரித்து, அபயமுத்திரையோடு பத்மாசனத்தில் காட்சி தரும் இந்த வேத சரஸ்வதி, நதி. நீர்ப் பறவையை வாகனமாகக் கொண்டவள். அம்பிகையின் ஜனனமான வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பானதாகும். ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இந்நாளில் தான். வட மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வசந்த பஞ்சமி, வசந்த ருதுவின் ஆரம்ப தினமாகக் கொண்டாடபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்று தான் வித்யாரம்பம் செய்கிறார்கள். இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது. வசந்த பஞ்சமி தினத்தில் அன்னை சரஸ்வதியை வழிபடுவதால் கலைகளில் முன்னேற்றம் பெறுவதோடு மட்டுமில்லாமல் ஆன்மிகத்திலும் உயர்நிலை பெற்று, ஞானம் பெறலாம். நமது உள்ளங்களில் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளி பெருகி, வாழ்வில் வசந்தம் வீசிட சரஸ்வதி தேவியை வணங்குவோம்.

🔲🍁🔲🍁🔲🍁🔲🍁🔲🍁🔲🍁

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Oct, 15:03


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு உய்யக்கொண்டான்மலை அருள்மிகு உஜ்ஜீவநாதர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர் : உஜ்ஜீவநாதர்

அம்மன்/தாயார் : அஞ்சனாட்சி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள்.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை

ஊர் : உய்யக்கொண்டான் மலை

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

தண்டமர் தாமரை யானும் தாவியிம் மண்ணை யளந்து கொண்டவனும் மறிவொண்ணாக் கொள்கையர் வெள்விடை ஊர்வர் வண்டிசை யாயினபாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயில் ஆடும் கற்குடி மாமலை யாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 4வது தலம்.

திருவிழா:

பங்குனியில் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தைப்பூசம்.

தல சிறப்பு:

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 67 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில்,திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102திருச்சி மாவட்டம்.

போன்:

+91-4364 223 207 , 94431 50332, 94436 50493

பொது தகவல்:

விசேஷ நடராஜர்:

மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, "உயிர்கொண்டார்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

இது தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார்.

பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

சூரியபூஜை விசேஷம்:

மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும்.

பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை, இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார்.

இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், "திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!' என வேண்டிப் பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு.

கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம் நடக்கும். சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.

ஞானவாவி தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இக்கோயிலில் இருந்து கி.மீ., தூரத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அருள் பெற்ற வயலூர் கோயில் உள்ளது.

பிரார்த்தனை:

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது.

இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

ஜேஷ்டாதேவிக்கு புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை "மூதேவி' என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள்.

இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Oct, 15:03


இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. அதுபோல, உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள். ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள்.

ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை "மாடன்' என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள். இவளை வாக்தேவதை (சேடி) என்கிறார்கள்.

ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். அவள் தனது சேடியான (பணிப்பெண்) வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

சிறப்பம்சம்:

50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண கிணறு, நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது.

மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்' என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது

இந்த கோயில் இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இரண்டு தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

தல வரலாறு:

மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் என தவம் இருந்தார். சிவபெருமான் அவரிடம், ""உனக்கு ஞானமற்ற அங்கஹீனம் உள்ள, ஆனால் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும், அறிவும் மிக்க, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா என கேட்டார்.

குழம்பிப்போன மிருகண்டு தனக்கு ஞானபுத்திரனே வேண்டும் என்றார். மகனும் பிறந்தான். அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். பதினாறு வயதும் வந்தது. எமன் துரத்தினான். மார்க்கண்டேயர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தார். இறுதியாக உய்யக்கொண்டான் திருமலைக்கு வந்தார்.

தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்:

திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் உய்யக்கொண்டான் திருமலை உள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

21 Oct, 15:03


◄•───✧ உ ✧───•►

🙏 லிங்க புராணம் 🙏

பாகம்-41

ஈசன் சான்னியத்தியம்..!!

ஈசன் இல்லாத இடம் ஏது? அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதன். எனவே அனைத்திலும் ஈசன் சான்னித்தியம் உள்ளது.

இருப்பினும் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி, சூரியன், சந்திரன், யாகம் செய்பவர் என்னும் எட்டிலும் ஈசன் அஷ்டமூர்த்திகளாய் உறைகின்றார்.

1. வெப்பத்தைக் கொடுத்து ஒளியைப் பரப்பும் சூரியன் சிவசொரூபமே. சூரியனுடைய கதிர்களில் அமுதம் மழையையும் சந்திரன் பனியையும், சுக்கிலம் வெய்யிலையும், சுழுமுனை சந்திரனுக்கு ஒளியையும், அரிகேசம் பிரகாசத்தையும் அளிக்கின்றன.

மேலும், விசுவகர்மா எனும் கதிர்கள் புதனுக்கு ஒளியையும், சத்துவிகம் - செவ்வாய்க்கும், சருவாவசு - வியாழனுக்கும், விச்சு - சுக்கிரனுக்கும் ஒளியைத் தருகின்றன.

2. தேவியின் அமிசமான சந்திரன் தனது கலைகளுடன் விண்ணவரையும், தென் புலத்தாரையும் அமுதத்தால் நிறைவிக்கிறார்.

3. யாகம் செய்யும் வேதியர்கள் இறை அமிசமாய் விளங்கி யாகத்தையும், மற்ற கர்மாக்களையும் செய்து வானவர்க்கும் மற்றோர்க்கும் உணவு அளிக்கின்றனர்.

4. நீர் உடலின் உள்ளும் புறமும் இருந்து வளர்ச்சிக்கு உதவுகிறது. பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் உணவைப் பெற்றுத் தருகிறது.

5. காற்று அதாவது வாயு எங்கும் பரந்திருந்து, உடலில் உள்ளும் புறமும் இருந்து இயங்குகின்றது.

6-7. மேற்படி நீர் நிறைந்த சாகரமும், தீயும், காற்றும், நிறைந்த ஆகாயமும் வெளியில் பூமியும் தங்குகின்றன.

1. பவன் என்பது பூமியின் சொரூபமாய் விளங்கும் ஈசனின் மூர்த்தம் தரும்.

2. சர்வன் என்பது நீருருவாகி உலகெலாம் பரந்து மருவும் ஈசன் மூர்த்தம்.

3. பசுபதி என்பது தீயாகி அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கும் மூர்த்தம்.

4. ஈசானன் என்பது வாயு சொரூபமான ஈசன் மூர்த்தம்.

5. பீமன் என்பது ஆகாய சொரூபமாக விளங்கும் இறைவன் மூர்த்தம்.

6. ருத்திரன் என்பது சூரியன் சொரூபமாக விளங்கும் மூர்த்தம்.

7. மகாதேவன் என்பது சந்திரனாய் விளங்கும் ஈசுவரமூர்த்தம்.

8. உக்கிரன் என்பது வானவருக்கும் தென்புலத்தார்க்கும் உணவளிக்கும் யாகம் செய்யும் மறைவராக விளங்கும் ஈசுவா மூர்த்தம்.

1. வாயு மனைவி சிவை. அவள் யுரோசவானைப் பெற்றாள்.

2. பீமன் மனைவி திக்கு - அவள் சக்கரனைப் பெற்றாள்.

3. ருத்திரன் (அ) சூரியன் மனைவி சுவர்ச்சலை. அவனது மகன் சனீஸ்வரன்.

4. மகாதேவன் (சந்திரன்) மனைவி ரோகிணி. அவனது மகன் புதன்.

5. அந்தணன் அமிசம் உக்கிரன் மனைவி தீக்ஷõபத்தினி அவள் மகன் சந்திரன்.

6. பவன் (பூமி) உயிர்களுக்குத் திண்மையான தேகத்தைத் தருகின்றார். பவன் மனைவி மகாதேவி சுக்கிரனை ஈன்றாள்.

7. சர்வன் பத்தினி விகோசி - அங்காரகனை ஈன்றாள்.

இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இறைவன் விளங்குவதால் அவரது திருஉருவை பக்தியுடன் மனத்திலே தியானித்து வழிபட்டு அவர் அருளைப் பெற பாடுபடவேண்டும் என்று நந்திகேசுவரர் சனத்குமாரருக்கு அஷ்ட மூர்த்திகளின் மகிமையை எடுத்துக் கூறினார்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Oct, 14:47


◄•───✧ உ ✧───•►

🙏 லிங்க புராணம் 🙏

பாகம்-40

சிவசக்தி விபூதி..!!

ஒவ்வோர் ஆணும் பெண்ணும் சிவசக்தி வடிவேயாகும்.

பரம்பொருள் சிவன்-மாயை பார்வதி; ஆதிபுருஷன்-சிவன்; பிரகிருதி-உமை; பெண்ணே கௌரி, பொருள் இறைவன்; சொல்-அம்மை; பகல்-பரமன், இரவு-தேவி; யஜ்ஞமே-சிவன்; யாகதக்ஷிணை-கௌரி. கடன்-வேணியன், கரை-உமாதேவி, ருத்திரன்-ஈசன், அவன் ஒளி-கௌரி, வாயு-சிவன், அவன் மனைவி-மனோரமா தேவி, வருணன்-கைலாசநாதன், அவர் மனைவி நித்தி-அம்மை, சூரியன்-பரமன், அவன் மனைவி-சுவர்க்கலை உமையாள், இறைவன்-சந்திரன், சதிதேவி-ரோகிணி.

இவ்வாறு ஆண் சொரூபம் அனைத்தும் ஈசனே. பெண் பாலர் அனைவரும் தேவியின் திருவுருவம், பிரபஞ்சத்தில் அனைத்தும் இறைவன்-இறைவி சொரூபம். தன் முதலாக விளங்கும் ஈசனே எங்கும் வியாபித்து இருக்கிறார்.

எனவே உமாமகேசுவரனைப் பார்வதி பரமேச்வரனை சேர்த்தே வழிபட வேண்டும். அதுவும் உய்யும் வகையாகும்.

எனவே, ஈசனைத் தனியாக வழிபடுவது தக்க பலனைத் தராது. அர்த்தநாரியாக வழிபட வேண்டும்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Oct, 14:47


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு உறையூர் அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர்:பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

அம்மன்/தாயார்:காந்திமதியம்மை.

தல விருட்சம்:வில்வம்.

தீர்த்தம்:சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்:முக்கீச்சுரம்

ஊர்:உறையூர்

மாவட்டம்:திருச்சி

மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அப்பர்

தேவாரப்பதிகம்

நீருளாரும் மலர் மேலுறை வான்நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பின் வில்லவன் சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர்செம்மையே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 5வது தலம்.

திருவிழா:

சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.

ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்,உறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.

போன்:

+91- 431-276 8546, 94439-19091, 97918 06457

பொது தகவல்:

வழிபட்டோர்:

கருடன், காசிபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன்கார்கோடன்வழிபட்டுள்ளனர்.

பிரார்த்தனை:

கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

தலபெருமை:

ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான்.

இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம்:

உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார்.

பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார்.

நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உ<ள்ளடக்கி இங்கே <உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.

"நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது.

உதங்க முனிவர்:

இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது.

வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Oct, 14:47


மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார்.

இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார்.

ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

தோஷ நிவர்த்தி:

பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது.

<<<உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார்.

இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

தல வரலாறு:

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர்.

அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது.

யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான்.

பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்' என்று பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.

ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.

அமைவிடம்:

திருச்சி ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து உறையூர் செல்ல பஸ்கள் உள்ளன. கடைவீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

உறையூர்

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Oct, 14:35


*🌷ஆதிசங்கரர் அருளிய
🌷...!*

🔴🟠🟡🟢🔵🟣⚫️⚪️🟤🔴🟠

*🌷கனகதாரா ஸ்தோத்திரம்🌷...!*

❤️💚❤️💚❤️💚❤️💚❤️

*பாடல்:17...!*


யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே:


*பொருள் விளக்கம்:*


🛕 உந்தன் கடைக் கண் பார்வை வேண்டி நித்தமும் உன்னை தொழுது பூஜை புரிபவர்க்கு தங்கு தடையில்லாமல் செல்வ வளம் தருபவளே! மடை திறந்த வெள்ளமென பெருகும் வகையில் நல்வரங்களை நல்கும் முராரியின் இதயம் கவர்ந்த நாயகியே| தன்னை வழிபடும் பக்தர்கள் மீது கடைக்கண் பார்வையால் கருணையை பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.



*🌹சௌபாக்கிய லட்சுமியே போற்றி🌹*

*🌹சந்தான லட்சுமியே போற்றி🌹*

*🌹ஆதிலட்சுமியே போற்றி🌹*

*🌹 தனலட்சுமியே போற்றி, போற்றி🌹*

*🌹தைரிய லட்சுமியே போற்றி🌹*

*மலரும்...!*


💢🌷💢🌷💢🌷💢🌷💢🌷💢🌷


᯽🅓🅔🅥🅔🅝🅓🅡🅐 🅒🅗🅐🅝🅓🅡🅐 🅑🅞🅢🅔 🅒🅗🅔🅝🅝🅐🅘

🙏திருச்செந்தூர் முருகன்🙏

20 Oct, 14:24


*உ*
*ஓம் சக்தி பராசக்தி 🔱*

*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 187*

*இன்று நாம் அறிந்து* *கொள்ளும் திருநாமம்*
*...நிரத்யாய....*


*நிரத்யயா - निरत्यया –*

*வரம்பு மீறாதவள்*


*நிர்গதঃ அத்யாயঃ யஸ்யாঃ ச*

அன்னை மீறுதல் இல்லாதவள்
அத்யாயா என்றால் தடை என்று பொருள் கொள்ளலாம்
அன்னை தன் வரம்புகளை மீறுவதில்லை. அன்னை கர்மங்களின் விதியின்படி, இறைவனின் சட்டத்தின்படி செயல்படுகிறாள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். கர்மாவின் சட்டம் அவளால் இயற்றப்பட்டது, அன்னை தன் சொந்த சட்டங்களை மீறுவதில்லை. வகுக்கப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவர் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் இதுவே அன்னையின் பெருமையை கூறும் 187 வது திருநாமம் ஆகும்..


*🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா🌹🌹*


*🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏*


🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

🟫🌹🟫🌹🟫🌹🟫🌹🟫🌹🟫🌹

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Oct, 15:50


◄•───✧ உ ✧───•►

🙏 லிங்க புராணம் 🙏

பாகம்-39

ஒட்டகமான சனத்குமாரர்..!!

ஒருநாள் சனத்குமாரர் சிவத்தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

அப்போது ஈசன், உமையோடும் கணங்களோடும், நந்தி முன் செல்ல அவ்வழியே சென்று கொண்டு இருந்தார்.

இதனால் சனத்குமாரன் யோகநிலை கலைந்தது. மனம் ஐம்புலன்கள் சலனம் பெற்றன. அவர் கண் விழிக்காமல் தியானத்திலிருந்தார். பரமன் அருகில் சென்றும் அவரை வணங்கவில்லை.

உமாதேவியார் ஈசனிடம் அவன் அருகிலிருப்பதை விட்டு விட்டு எங்கோ தேடுகிறார் சனத்குமாரர் என்றாள். கோபம் அடைந்த நந்திகேசுவரர் ஒட்டகத்தைப் போல் ஈசனை வணங்காதிருக்கும் இவன் ஒட்டகமாக மாறட்டும் என்று சபித்தார்.

கண்களைத் திறந்து பார்த்த சனத்குமாரர் தான் ஒட்டகமாயிருப்பதை உணர்ந்து தந்தையாகிய பிரம்மனை அடைந்து முறையிட்டார்.

பிரம்மன் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, ஈசனைப் பக்தியோடு தியானிக்க அவர் முன் தோன்றிய பரமனிடம் சனத்குமாரர் சிவ தியானத்தில் இருந்தாரே அன்றி தவறிழைக்கவில்லை. அவன் மீண்டும் சுயஉருபெற அருளுமாறு வேண்டினார்.

அப்போது பரமன் தன் பக்தன் நந்தியின் சாப பலன் இது. எனவே அவரிடமே அருள்பெற உபாசிக்குமாறு கூறினார்.

அவ்வாறே சனத்குமாரர் நந்தியை உபாசித்து வழிபட அவரும் மனமகிழ்ந்து சனத்குமாரருக்கு சுயஉரு பெற அருளினார்.

சுயஉருபெற்ற சனத்குமாரர் ஈசனைப் பணிந்து தொழ கயிலைக்குச் சென்றார். அங்கே அவர் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார்.

உலகனைத்தும் பசுவாகி, மாயையாகிய கயிற்றால், பதியாகிய பரமனுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

அதன் பொருளை நந்தி அவருக்கு உரைக்க அவர் வியாசருக்கு அதனை உபதேசித்தார்.

👉 தொடரும்

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Oct, 15:50


சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.

கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

தல வரலாறு:

தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர்.

அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.

சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.

பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். "எறும்பீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது.

பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. திருச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

திருவரம்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

திருச்சி

🌹 வாழ்க வளமுடன் 🌹

🪐 வாழ்க வையகம் 🪐

🔥 சிவ சிவ 🌙

🙏 ஓம் சிவய நம ஓம் 🌷

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Oct, 15:50


◄•───✧ உ ✧───•►

🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயம்.

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்

மூலவர் : எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவெறும்பியூர், திருவெறும்பூர்

ஊர் : திருவெறும்பூர்

மாவட்டம் : திருச்சி

மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள் : திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

பன்னிய செந்தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய தன்னையும் தன்திறத்து அறியாப் பொறியிலேனைத் தன்திறமும் அறிவித்து நெறியும் காட்டி அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக் கொண்ட தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக்கத்தைச் செழும்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 7வது தலம்.

திருவிழா:

வைகாசியில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 70 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்,திருவெறும்பூர்- 620 013.திருச்சி மாவட்டம்.

போன்:

+91-431 - 6574 738, 2510241, 98429 57568 ,9965045666

பொது தகவல்:

நவக்கிரக சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா, பிரதியூஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இக்கோயிலுக்கு இடது புறத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார்.

இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளது.

ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம்.

கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார்.

இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.

பிரார்த்தனை:

சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர்.

லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது.

பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர்.

இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.

மன்மதனின் மனைவி ரதி, அழகு மீது தனக்கு ஆணவம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள்.

பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Oct, 06:35


*🙏🙏★·.·´ உ `·.·★🙏🙏*

*🚩அன்பே சிவம்🚩*
*═━━━━✥◈✥━━━━═*
*🔥 தினமும் ஒரு ஆலய தரிசனம்||🔥*
*▩━━━━━━◈━━━━━━▩*

*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*
*★·.·´ பகிர்வு:·.·★*
*❀அன்பேசிவம்❀*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*


*★━━━━━━ D. C. H. ━━━━━━★*


*அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்:*

கோயில் அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் [Arulmigu subramaniar Temple]
கோயில் வகை முருகன் கோயில்
மூலவர் சுப்பிரமணியர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
முகவரி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
ஊர் மருங்கூர்
மாவட்டம் கன்னியாகுமரி [ Kanniyakumari ] -
மாநிலம் தமிழ்நாடு .



*கோயில் சிறப்பு:*


மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது. இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர்.
மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது. விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார்.

தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது. பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது.

இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர்.


🟩🔳🟩🔳🟩🔳🟩🔳🟩🔳🟩🔳

ʕ•̫͡•ʔ❤️ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. ❤️ʕ•̫͡•ʔ

🙏திருச்செந்தூர் முருகன்🙏

19 Oct, 05:13


*விரும்பிய அனைத்தும் கிடைக்க வைக்கும் கிருத்திகை விரதம்!*
〰️〰️〰️〰️〰️〰️
🌿🍁🌿🍁🌿🍁

கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது கிருத்திகை விரதம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார். இந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் 6 பேர் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.

முருகனை கார்த்திகை பெண்கள் வளர்த்த காரணத்தால் அவர்களின் பெயரிலேயே கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், அவர்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு வரம் அளித்தார்.

விரதம் இருக்கும் முறை :

முருகனின் அருளாற்றல் கிடைக்கும் கிருத்திகை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்களை சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.

கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

மேற்கண்ட முறையில் முருகனை கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு.

மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் ஏழை மக்களுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் மேன்மை ஏற்படும். பின்னர் வீட்டிற்கு சென்று பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க கிருத்திகை விரதத்தை பின்பற்றுங்கள்.

கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள் :

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம் அனைத்தும் நீங்கும். கடன் தொல்லை அடியோடு நீங்கும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நலன்களையும் பெறலாம்.

மேலும், இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.

முருகனின் துதியை போற்றுவோம்... துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.

🟨🪷🟨🪷🟨🪷🟨🪷🟨🪷🟨🪷

💢🚀🚀💢 DEVENDRA CHANDRA Bose, CHENNAI. 💢🚀🚀💢

🙏திருச்செந்தூர் முருகன்🙏

18 Oct, 03:04


*🌷ரமணா மகரிஷி அருளிய🌷....!*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"*

*"🌹அருணாசல பதிகம்
(எண்சீர் விருத்தம்)

"🌹...!*

*மாலை என் : 01/08
...!*


அறிவறு கிரியென வமர்தரு மம்மா
வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு
மறிவறு சிறுவய ததுமுத லருணா
சலமிகப் பெரிதென வறிவினி லங்க
வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா
மலையென வொருவரா லறிவுறப் பெற்று
மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க
வருகுறு மமயமி தசலமாக் கண்டேன்.


*பொருள்:*


அம்மா என்ன அதிசயம்! ஊனக் கண்ணுக்கு ஜடமான கல்மலைபோல் இந்த அருணாசலம் அமர்ந்திருக்கிறது. இதன் அருட்செயல்களோ எவராலும் அறிய முடியாதவை. அறிவு தெரியாத குழந்தைப் பருவத்திலிருந்தே, அருணாசலம் என்றால் எல்லாவற்றையும் விட மிகப் பெரியதென்று என் புத்தியில் தோன்றிக் கொண்டிருந்தது. அது திருவண்ணாமலையேயாகும் என்று உறவினர் ஒருவரால் அறிவிக்கப்பட்டும், அதன் உண்மைப் பொருளை உள்ளபடி நான் அறியவில்லை. பிறகு என் அறிவை மயக்குவித்து அது என்னைத் தன்னிடத்திற்குக் கவர்ந்து கொள்ளவும், அதனருகில் வந்தடைந்தபோது இந்த அருணாசலம் சலனமற்ற மலைவடிவாக இருப்பதைக் கண்டேன்.



*🌷சிவாய நம🌷*

*🌷ஓம் நமசிவாய🙏*

*🌷அன்பே சிவம்🙏*

*🌷திருச்சிற்றம்பலம்🙏*


*தொடரும்...!*


🟨🪷🟨🪷🟨🪷🟨🪷🟨🪷🟨🪷


┏━━━━━°❀•°:🎀 DEVENDRA CHANDRA Bose, CHENNAI. 🎀:°•❀°━━━━━┓

🙏திருச்செந்தூர் முருகன்🙏

18 Oct, 03:04


*🌹சித்தர் சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

*🙏சிவவாக்கியம்..!*


💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚


*நூல்: 159...!*


பருத்திநூல் முறுக்கியிட்டுப் பஞ்சியோது மாந்தரே
துருத்திநூல் முறுக்கியிட்டு துன்பநீங்க வல்லீரேல்
கருத்திநூல் கலைப்படுங் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயவஞ் செழுத்துமே.



*பொருள் விளக்கம்:"



நைந்துபோன பருத்தி நூலினால் நெய்த ஆடைகளை உடுத்தி பஞ்சப்பாட்டு பாடி வாழும் மனிதர்களே! உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வாசியோகத்தால் துருத்திக் கொண்டு ஊதுவதுபோல ஊத்தி விழிப்புறச் செய்து மேலேற்றினால் துன்பங்கள் யாவும் தானே நீங்கும். இந்த யோகத்தால் தியானிப்பவர் சிந்தையில் கருத்துள்ள நல்ல நூல்களும் உதிக்கும். பல கலை ஞானத்திலும் சிறந்து விளங்குவர். காலன் எனும் எமன் அணுகான். வாழ்நாள் காலங்கள் திருத்தி ஆயுள் அமையும். கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே ‘சிவயநம’ என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள்.



*🌷நமசிவய ௐ🌷*

*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!*

*🙏சிவாய நம🙏*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

*வளரும்...*


🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫🟩🟫


▁▂▃▄☾ ♛ தேவேந்திர சந்திரபோஸ் சென்னை. ♛☽▄▃▂▁

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Oct, 22:42


பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

நாங்கள் இவரின் ஜீவ சமாதியை தரிசித்தது இவரின் கருணையே என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் மாலை நேரத்தில் ஆலயம் திறக்கும் முன்னரே சென்று விட்டோம்.. சங்கரன்கோயில் ஆலயம் திறக்க நேரமாகும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருந்த வேலையில் அங்கே பூ விற்பவர்களிடல் கேட்டோம் இங்கு வேறு ஆலயம் உள்ளதா என்று? அவர்கள் மூலம் எங்களுக்கு வழிகாட்டியதே அந்த சங்கரந்தானே என்று என்னும்போது மனம் கொன்ட மகிழ்ச்சிகு எல்லை இல்லை.

சங்கரன் கோயில் ஆலயத்தின் மேற்கு கோபுர வாசல் வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவரின் ஜீவ சமாதி. ஆட்டோவிலும் செல்லலாம்..ஆனால் ஆட்டோகாரரிடம் சித்தர் சமாதி என்று சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆலயத்தின் வாசலில் பூ பழம் விற்பவர்களிடம் வழி கேட்டாலும் சரியாக சொல்வார்கள்.

சங்கரன் கோவிலில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.

சங்கரன் கோயில் ஆலயத்தை அடைந்து சங்கரனாராயனரை தரிசனம் செய்யுங்கள். தரிசனம் முடிந்ததும் ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும் ஆலயத்தின் பின்புறமாக நடந்து செல்லுங்கள். ஒரு சாலை வரும் அந்த சாலையில் வலது புறமாக வலந்து சுமார் 1 கிலோ மிட்டார் தூரம் நடந்ததும் சாலையை ஒட்டி ஒரு குளம் இருக்கும் அதே இடத்தில் ஒரு தகவல்பலகையும் இருக்கும் அதுதான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.

சாலையில் இடது புறமாக அல்லது வலது புறமாக வலைவதில் குழப்பம் இருந்தால் அருகில் இருக்கும் சிலரிடம் விசாரித்து செல்லுங்கள்.

பாம்பாட்டி சித்தரின் தரிசனம் பெருக ஈசன் அருள் அடைக

மருத மலையிலும் அவரது ஜீவ சமாதி இருக்கிறது. சித்தர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடையும் திறன் படைத்தவர்கள்

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Oct, 22:40


குங்குமப்பூ பற்று.
காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம்
கொடுத்து, ""சுவாமி! கொஞ்சம் இந்த பற்று போட்டுக் கொள்ளுங்கள்,'' என்றார்.அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.
அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது. தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, ""வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன்,'' என்றார்.
அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார்.
அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத் தரிசிக்க உள்ளே வந்தார்.
பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் பெரியவரிடம்,"சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்க வழியில்லே! சாமி தூண்ணுறு(திருநீறு) கொடுக்கணும்,'' என்று கண்களில் நீர் மல்க கேட்டார்.
பெரியவர் அவசர அவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார். "இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு,'' என்றார். அத்துடன், "ரோட்டிலே போகும் போது தூசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ,'' என்று எச்சரிக்கை வேறு! அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.
இதற்குள் காமாட்சியைத் தரிசிக்க சென்ற குங்குமப்பூ அம்மையார் திரும்பினார். பெரியவர் நெற்றில் பற்று போட்டிருந்தது கண்டு, தான் கொடுத்த மருந்தைத் தான் இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப்பட்டார்.
மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார். "உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது' என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார். "உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்த ஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா !
அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.
இது தான் மகாபெரியவாளின் கருணா கடாட்சம் !
ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்
லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Oct, 22:40


🔥இன்று திருவண்ணாமலை சூரியன் ஒளிபட்டு
தங்கம் மலையாக காட்சி தந்தார் 🔥பல " லட்சம் " ஆண்டுகளுக்கு முன் " திருவண்ணாமலை " வைரமா மாலையாக இருந்ததாக " புராணங்கள் " சொல்லுகிண்றன " 🔥🔥🔥🔥" நெருப்பே ", கடவுள் " 🙏

🙏திருச்செந்தூர் முருகன்🙏

17 Oct, 22:40


கைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.*

*கரும்புத் தொட்டில் :*

*குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் கட்டுவதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.*

*பிரார்த்தனை தலம் :*

*பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனைத் தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்” என்ற விரதத்தை அனுசரிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிசேக தீர்த்தத்தைக் கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.*

*பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியின் மிகப்பெரிய சிறப்பு.*

*அழகிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் மாரி அருளாட்சி செய்கிறாள். கர்ப்பகிரத்தை ஒட்டி அர்த்த மண்டபமும், அதனையடுத்து மகா மண்டபமும் இருக்கின்றன. மகாமண்டபத்தின் முன் நந்தீசுவரரும், கொடி மரமும், பலி பீடமும் வரிசையாக அமைந்துள்ளது.*

*கோயிலில் விநாயகர் அரசமரத்தடியில் இருக்க அருகே வாழவந்தம்மனும் அதற்கு மேற்கே ராக்காச்சி அம்மனும் இருக்கின்றனர். வடமேற்குப் பகுதியில் பேச்சியம்மனும், முப்பிடாரி அம்மனும் தனித்தனி சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். அதற்கு கிழக்கே காத்தவராயனும், வயிரவமுர்த்தியும் எழுந்தருளியிருக்கின்றனர்.*

*அத்துடன் கருப்பசாமி தென்கிழக்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். மேலும் இவர்களை எல்லாம் வணங்கி விட்டு அருகில் உள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.*
*🌹அன்புடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
*திருவிழா:*

*ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளிக்கிழமைகள்.*

*கோரிக்கை:*

*கண் சம்பந்தப்பட்ட நோய், வயிற்றில் தீராத வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் நோய் தீரும்.*

*நேர்த்திக்கடன்:*

*தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்பாளுக்குத் திருமுழுக்காட்டு, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.*

*வழிகாட்டி:*

*விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து கிழக்கே 8 கி.மீ., தூரத்தில் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது இருக்கன்குடி. இந்த ஊருக்கு சாத்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.*

1,257

subscribers

38,950

photos

4,322

videos