கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனோதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டாலும், அதை எளிதில் சரி செய்து கொள்ள முடியும். மனதில் தோன்றும் நல்லெண்ணங்கள் உங்களது புகழை உயர்த்தும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். முன்பின் தெரியாத நபர்களுக்கு பொருளுதவி செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணைவர் உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். சில நேரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புதிய வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் ரீதியாக கடுமையான போட்டியினைச் சந்திக்க நேரிடும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.