நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் @ourbodyitselfadoctorebooks Telegram Kanalı

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
4,493 Abone
471 Fotoğraf
3 Video
Son Güncelleme 05.03.2025 19:47

நாமே மருத்துவர்கள்: நமது உடல் பற்றிய அறிவியல் மற்றும் புத்தகங்கள்

நாம் மருத்துவர்கள்! இந்த உரையாடல் மனிதர்களின் உடல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய உள்படுதல் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமாக புதிய பார்வைகளை வழங்குகிறது. நமது உடல், மிகச் சிலரால் மட்டுமே புரிந்துகொள்ளப்படும் ஒரு அற்புதமான இயந்திரமாகும், அதை எவ்வாறு பராமரிப்பது, நோய் மற்றும் அசௌக்கியத்தை எப்படி தடுப்பது என்பதைக் கொண்டு எமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இந்தப் புத்தகங்களின் நோக்கம் ஆகிறது. புத்தகங்கள் மனித உடலின் அகப்பார்வைகளை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மற்றும் மருத்துவ அறிவை எட்டுவதற்கு மிக முக்கியமாக இருக்கின்றன. இன்று, நான்கு முக்கியமான காரணங்களைப் பார்க்கலாம், ஏன் நமக்கு மருத்துவர்கள் என்பதற்கான விவாதத்தில் நம்மைச் சுற்றியுள்ள புத்தகங்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

நாம் மருத்துவர்களாக இருக்க வேண்டும் என்றால் என்ன காரணம்?

முதலில், நமது உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ அறிவு மிகவும் முக்கியம். நம் உடலின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு, அவர்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து நாம் தெளிவு பெறலாம். மருத்துவம் பற்றிய இந்த அறிவு நமக்கு நோய்களை அடையாளம் கண்டு பிடிக்கவும், அவற்றைச் சமாளிக்கவும் உதவுகிறது.

இரண்டாவது, மக்கள் தங்களின் உடல்தொல்லல்கள் மற்றும் உணவுப் பழக்கம் குறித்த அறிவிற்கு மேலும் சீனையாக இருக்கிறார்கள். இதனால், நாம் மருத்துவர்களாகக்கூடிய நிலையை நீக்கும் போது, நம் உடலின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களை பூர்த்தி செய்ய உதவுகிறது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன வழிகள் உள்ளன?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சரியான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, மற்றும் மன அழுத்தத்தை சரியாகக் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். ஆரோக்கியமான உணவுக்கான வழிமுறைகள் மற்றும் அமைஞ்சி பழுக்கங்களை அடையாளம் காணவும், அவர்களைப் பின்பற்றவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும், ஆரோக்கியமான உறிஞ்சல்களை அடையாளம் காணுதல் மற்றும் நல்ல உறவுகளை பராமரித்தல் ஆகியோரால் மன மற்றும் உடலுக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். புத்தகங்கள் இந்த முறைகளை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி வழிகாட்டலாம்.

எந்த புத்தகங்கள் மருத்துவ அறிவுக்கு உதவுகின்றன?

அதிகமாக பரிந்துரைக்கப்படும் மருத்துவ புத்தகங்களில் 'The Body Keeps the Score' மற்றும் 'How Not to Die' ஆகியவை உள்ளன. இந்த புத்தகங்கள் உடலின் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் வைத்துள்ள முக்கிய கருத்துக்களை வாங்குகின்றன, மேலும் எப்படி அவர்களுக்கு மதிப்பு வழங்குவது என்பதை விளக்குகின்றன.

'Being Mortal' போன்ற புத்தகங்கள், நமக்கு உயிரின் இறுதி கட்டங்களைப் பற்றிய கேள்விகளை ஆராய்ந்து, அந்த காலத்தில் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதற்கான வழிகளை வழங்குகின்றன.

உடலின் உள்நிலை மற்றும் மனநிலை ஆரோக்கியத்திற்கு என்ன முக்கியம்?

உடலின் உள்நிலை என்பது உண்மையில் மனதின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான உடல், மனதை மேலும் ஊக்குவிக்கிறது, இதனால் மன அழுத்தம் மற்றும் கவலைகளை குறைக்கலாம். ஆரோக்கியமான செலவீனங்கள் மற்றும் உடற்கூற்றை மேம்படுத்துவது மன நலத்திற்கு மிகப் பெரிய தாக்கம் செலுத்துகிறது.

இதில், யோகா மற்றும் மெதுவாக மூச்சு ஆடுகிறார் போன்ற மன அழுத்தத்திற்கு சில தீர்வுகளும் உண்டு, இது உடலின் மற்றும் மனத்தின் சமநிலையைப் பெற்றுக்கொள்ளவும், மேலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

அருகிலுள்ள மருத்துவ ஆலோசனை எப்போது தேவை?

சில நோய்கள் மற்றும் உடல்தொல்லல்கள் சொல்வதற்குள், அவற்றைக் கண்டறிய முடியாது. இதனால், உடலில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள நமது மருத்துவ ஆலோசனை மிகவும் முக்கியமாக இருக்கும். முழுமையான உடல் சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் உடலைப் பாதுகாக்க உதவுவது மட்டும் இல்லை, ஆனால் அவற்றின் சிகிச்சை முறைகளை ஆரம்பிக்கவும் ஆகிறது.

மருத்துவ ஆலோசனை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தங்களை பரிசோதிக்க வேண்டிய பொது நிபந்தனைகளுக்கு உதவும். இதில், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் Telegram Kanalı

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் என்று அழைக்கப்படும் இந்த டெலிகிராம் சேனல் புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் உள்ள உள்ளடக்கம் உள்ளது. இந்த சேனல் மருத்துவர்களுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை வழங்குகிறது. இது விரிவான மருத்துவ அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் உதவியாளர் குறிப்புகளையும் உள்ளடக்கும். சிகிச்சை முறைகள் உங்களுக்கு நல்லது அல்லது மூலிகை மருத்துவ கூட்டுப்பாடிகள் பற்றிய அறிவுத்திறனால் பொருத்தம் செய்யக்கூடிய விபரங்களை பெற உதவுகிறது. நாமே மருத்துவர்! நமக்கு மருத்துவர் என்று அழைக்கப்படும் இந்த சேனல் உங்களுக்கு மருத்துவ புத்தகங்களை தருகிறது மூலம் உங்கள் உடல் முறைகளை பரிசோதிக்க உதவுகிறது. காரணம், உங்கள் உடல் சுயவிவரங்களை அறிய உங்கள் உடலை சுரக்கமாக கொண்டுவந்து மருத்துவ பாவிகைகள் செஞ்சு வர உங்களுக்கு உதவுகிறது. இதனை குறிப்பி உங்கள் உடல் மற்றும் உள்ளது என்ன என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். நாமே மருத்துவர்! நமக்கு மருத்துவர் இத்தகைய புத்தகங்களை வாங்க மறுத்தும் மருந்துகளையும் எடுக்க வேண்டும் என்றால் இந்த சேனலை உங்கள் கையில் தருகிறது.

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் Son Gönderileri

Post image

அலாரம் தேவையில்லை

தினமும் அலாரம் செட் பண்ணி தான் எழுந்திரிக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நம் மனதில் இத்தனை மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டாலே தானாகவே அத்தனை மணிக்கு நமக்கு முழிப்பு வந்துவிடும். ஆனால் இதெல்லாம் முதல் நாளே வராது நீங்கள் தொடர்ந்து ஒரு பத்து நாள் அலாரம் வச்சு ஐந்து மணிக்கு எழுந்தீர்கள் என்றால் அடுத்த நாளிலிருந்து அலாரம் வைக்காமலே உங்களால் எழுந்திரிக்க முடியும்.

காலை உணவு

இரவு உணவு நீங்க தூங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் காலையில் சுறுசுறுப்பா இருக்க ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். நம்மில் பலர் பண்ற தப்பு காலையில் சாப்பாட்டை தவிர்ப்பதுதான். காலையில் தாமதமாக எழுந்திருப்பது தான் அதற்கான முக்கிய காரணம். அவசர அவசரமாக பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ போகின்ற காரணத்தினாலே காலையில் சாப்பிடாமல் கிளம்பிவிடுவோம். ஆனால் அது அந்த நாளையே ரொம்ப மோசமானதாக மாற்றிவிடும். நாம் மத்தியானம் கூட சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் காலையில் சாப்பாட்டை நாம் கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும். நம் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால் தான் அன்றைக்கு முழுவதும் நம்மளால ஓட முடியும். ஏனென்றால் தூங்குவது நம் உடம்பை ரீசெட் பண்றது மாதிரியான ஒரு செயல்முறை தான். அப்ப நம்ம உடம்பில் இருக்கின்ற ஆற்றல் எல்லாம் முழுமையாக குறைந்துவிடும். அப்புறம் மறுபடியும் நாள் ஆரம்பிக்கிறதுக்கு நமக்கு ஆற்றல் தேவைப்படும். நாம் காலையில் சாப்பாடு சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடும்போது நமக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கு. இதெல்லாம் கூட நம்ம ஆரோக்கியத்தை மட்டும் இல்லாம நம்ம தூக்கத்தையும் சேர்ந்து பாதிக்கும்.

புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நாம் கண்டிப்பாக இந்த விஷயங்களையெல்லாம் பின்பற்றித்தான் ஆகவேண்டும். அடுத்து என்ன நடந்தாலும் அது நம்ம நல்லதுக்கு அப்படிங்கிற மாதிரி ஒரு மனப்பக்குவத்தை வளர்த்துக்க வேண்டும்.

இன்னும் தூக்கத்தை பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை பாருங்கள் கேளுங்கள்.

தொடரும்...

"நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை" ஆடியோ தொடரின் மற்ற அத்தியாயங்களை காண

1. அடிப்படைத் தேவை
https://youtu.be/OIWHSGMzVYk

02. தூக்கத்தின் தரம்
https://youtu.be/CO59GARDEl4

03. தூக்கம் வரவில்லையா?
https://youtu.be/nwZOi4zgfRo

04. தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று
https://youtu.be/sNw-wK1pWV0

நன்றி - மீனா கணேசன்

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!


https://reghahealthcare.blogspot.com/2011/08/to-live-healthy.html

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

29 Jan, 01:53
2,225
Post image

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)

05. நம்முடைய மனநிலை

இந்தத் தொடரில் வெளியான அனைத்து அத்தியாயங்களையும் ஒருங்கிணைந்து இணையத்தளத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://reghahealthcare.blogspot.com/2025/01/blog-post.html

இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://youtu.be/DvdQnL8l1o4

பொதுவாகவே நாம் காலையில் என்ன மனநிலையோடு எழுந்திரிக்கிறோமோ அந்த நாளும் அதே மாதிரி தான் அமையும். அதனால் முடிந்த அளவுக்கு நாம் காலை பொழுதை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் ஆரம்பிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். காலையில் எழும்போதே ரொம்ப சோர்வாக உணர்ந்தால் அன்றைக்கு நாளும் ரொம்ப சோர்வாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு காலையில் நீங்கள் ஏதோ ஒரு பாட்டை கேட்டிருப்பீங்கள். அதை நீங்கள் விரும்பி கூட கேட்டிருக்க மாட்டீர்கள் ஆனாலும் உங்களுக்கே தெரியாம அந்த நாள் முழுக்க அந்த பாட்டையே மூணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள். அப்படித்தான் என்னதான் நாம் சுறுசுறுப்ப்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் நீங்கள் காலையில மட்டும் ரொம்ப சோர்வாக உணர்ந்தீர்களென்றால் கண்டிப்பாக அந்த நாள் ரொம்ப மந்தமாகத்தான் போகும். எப்படி உற்சாகமாக எழுந்திருப்பது? அதற்கு என்ன வழி? என்று நாம் பார்க்கலாம்.

அதற்கு சின்னதா ஒரு கேள்வியோட ஆரம்பிக்கலாம். நாளைக்கு உங்க வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் நடக்க போகுதுன்னு வைத்துக்கொள்ளுங்கள். எப்படா நாளைக்கு வரும்னுதான் நமது மனம் யோசிக்கும். சில சமயம் அதை நினைத்தே நம்மால் ஒழுங்காக தூங்க முடியாது. என்னதான் தூங்கினாலும் அடுத்த நாள் உங்கள் உடம்பு சோர்வா இருந்தாலும் உங்க மனசு கண்டிப்பா ஆரோக்கியமா தான் இருக்கும். இதுவே அன்றைக்கு நீங்கள் ஒழுங்காக தூங்கியிருந்தால் உங்கள் மனது சந்தோஷப்படுகிற மாதிரி உங்க உடம்பும் உங்களுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். அப்ப அடுத்த நாளைக்கான வெற்றி இன்றைக்கான தூக்கத்தில்தான் இருக்கிறது. அதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து நாளைக்கு நாம் என்னவெல்லாம் பண்ண போறோம்ன்னு நீங்க முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொண்டால் நீங்கள் எழும்போதே உங்கள் மூளை ரொம்ப சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்கும்.

அதே நேரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்தமான விஷயத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால் எப்போதுமே வேலை வேலைன்னு ஓடிக்கொண்டே இருந்தால் நம்மையும் அறியாமல் ஒரு சலிப்பு ஏற்படும். அதுவே உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யம்போது உங்கள் மனது ஒருவித சந்தோஷத்தை உணரும். எனவே உங்களுக்கு ஒரு படம் வரைய பிடிக்குமென்றால் அதற்கென ஒரு மணி நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால் அந்த ஒரு மணி நேரம் உங்களுடைய அத்தனை மன அழுத்தத்தையும் குறைத்துவிடும். காலையில் சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் அன்றைக்கான நாளில் உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்ய போறோம் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அப்படி யோசிக்கிறபோது நம் மனது தானாகவே அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும்.

நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்!

நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள காலையில் எழுந்ததும் சில நல்ல புத்தகங்களை படிக்கலாம் அல்லது நல்ல சிந்தனைகளை கொடுக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் அல்லது உங்கள் மனதை உற்சாகப்படுத்துகிற மாதிரியான பாடல்களோடடு உங்கள் நாளை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் வைத்திருக்கும் ரிங்டோனை வைத்துக்கூட நமது மனநிலையை சொல்ல முடியும். காலையில் நாம் பார்க்கிற சின்ன சின்ன விஷயங்கள் கூட அந்த நாளையே ரொம்ப அழகானதாக மாற்றலாம். எப்பவுமே வீட்டுக்குள்ளேயே இருப்பது கூட ஒருவித மணஅழுததைக் கொடுக்கும். அப்படிப்பட்ட சூழலில் காலையில் எழுந்து வாக்கிங் ஜாக்கிங் போகலாம். ஒரு நாலு பேரை பார்க்கிறபோது தானாவே சில விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அப்புறம் காலைலயே நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் கூட ஒரு மாதிரியான நல்ல விஷயம் தான். இதெல்லாம் கூட நம்ம மனநிலையை உற்சாகமாக மாற்றுவதற்கு உதவும்.

போதுமான அளவு தூக்கம்

போதுமான அளவுக்கு தூங்குறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அளவுக்கு மீறி தூங்குறதும் ரொம்ப தப்பு. அப்போ காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது ரொம்ப நல்ல பழக்கம். அந்த பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும். காலையில கிடைக்கிற சூரிய ஒளி காற்று இதெல்லாம் நம்ம மனதுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. அது போக உடற்பயிற்சி காலையில் பண்றது இன்னும் நல்லது. அது உங்கள் சோர்வை நீக்குவதற்கு உதவியா இருக்கும். நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திரிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டாலே நாம் தானாகவே இரவு சீக்கிரமாக தூங்கச் சென்றுவிடுவோம்.

29 Jan, 01:53
1,985
Post image

நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள காலையில் எழுந்ததும் சில நல்ல புத்தகங்களை படிக்கலாம் அல்லது நல்ல சிந்தனைகளை கொடுக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் அல்லது உங்கள் மனதை உற்சாகப்படுத்துகிற மாதிரியான பாடல்களோடடு உங்கள் நாளை ஆரம்பிக்கலாம்.

இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://youtu.be/DvdQnL8l1o4

29 Jan, 01:53
1,441
Post image

சிலர் இரவு நேரத்தில் அத்தியாவசிய தேவைக்காக அடிக்கடி எழுந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் முடிந்த அளவிற்கு படுக்கைக்கு போறதுக்கு முன்பே அவற்றையெல்லாம் முடித்துவிட்டு தூங்கச்செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. வெளிச்சம் குளிர் இதனால் பாதியிலேயே நீங்கள் எழுந்திருப்பீர்களென்றால் அதை சரிசெய்ய என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெலாம் தூங்குவதற்கு முன்பே செய்துவிடுங்கள். எவ்வளவு முயன்றாலும் ஐந்து மணி நேரத்துக்கு மேல் உங்களால் தூக்க முடியவில்லையென்று வருந்துகிறீர்களென்றால் முதலில் நீங்கள் பண்ண வேண்டியது தூக்கமே வரவில்லை என்றால் கூட படுக்கையைவிட்டு எழுந்திரிக்காமல் கண்ணமூடி படுத்துக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் பண்றப்ப அது உங்க உடம்புக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கும்.

நாம் பண்ணவே கூடாத விஷயம்

தூக்கம் வரவில்லை என்றால் கூட மொபைலை எடுக்கவே கூடாது. நீங்கள் பாதி தூக்கத்தில் எழுந்துவிட்டீர்கள் என்றால் முதலில் எப்படி தூங்குவது என்று தான் யோசிக்க வேண்டுமேதவிர மொபைலை எடுத்து Facebook, Whatsapp, Youtube, Instagram போன்றவற்றை பார்க்கக் கூடாது. அது உங்கள் தூக்கத்தை இன்னும் தான் கெடுக்கும். 24 மணி நேரத்தில் நீங்கள் எத்தனை மணி நேரம் தூங்கவில்லையோ அதை ஆடுத்தநாள் கூடுதலாக தூங்கவேண்டும்.

உதாரணத்திற்கு இன்றைக்கு முக்கியமான வேலை காரணமாக ஒரு ஐந்து மணிநேரம்தான் தூங்கிருக்கீறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அடுத்தநாள் நீங்கள் 11 மணி நேரம் தூங்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு போன ஆற்றல் மீண்டும் கிடைக்கும். இல்லையென்றால் உங்களால் ஆற்றல் மிக்கவராக உணரவே முடியாது. நீங்கள் தூங்கவில்லையென்றாலும் சரி உங்களால் தூங்க முடியவில்லையென்றாலும் சரி ரெண்டுமே உங்கள் ஆரோக்கியத்தை தான் கெடுக்கும்.

தூக்கத்தை தொடர்வதற்கான எளிமையான வழி

நம் கனவோட பயணிக்கிறதுதான் நம் தூக்கத்தை தொடர்வதற்கான எளிமையான வழி. ஏனென்றால் கனவு வரும்போது நாம் கனவு உலகத்தில்தான் இருப்போம். எங்கேயோ இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நம்மளால் அதை உணர முடியும். அப்படி எல்லாம் கனவு வந்துச்சுன்னா அதுகூட அப்படியே பயணியுங்கள். ஏனென்றால் பல அறிவாளிகள் அவர்களுக்கு வாழ்க்கையில் வரும் சிக்கல்களை கணவுகள் மூலமாக தீர்த்திருக்கார்கள்.

உதாரணமாக சில காணொளிகள்

கனவில் வந்த காட்சியால் தையல் மிஷினை கண்டுபிடிக்கும் போது ஏற்பட்ட சிக்கல் சரியானது! https://youtube.com/shorts/PTLHuwsCbOc

தர்க்க பூர்வமாக யோசித்தபோது கிடைக்காத விடை அரைகுறை தூக்கத்தில் எப்படி கிடைக்க முடியும்? https://youtube.com/shorts/S-3Bttk7di4

எனவே கனவுகளுடன் பயணிக்கிறபோது நம் தூக்கத்தையும் தொடர முடியும் படைப்பாற்றலையும் அதிகப்படுத்த முடியும்.

இன்னும் தூக்கத்தை பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை பாருங்கள் கேளுங்கள்.

தொடரும்...

நன்றி - மீனா கணேசன்

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!


https://reghahealthcare.blogspot.com/2011/08/to-live-healthy.html

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

25 Jan, 05:19
1,870