📚 நூல் அரங்கம் @noolarangam Channel on Telegram

📚 நூல் அரங்கம்

@noolarangam


தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam

📚 நூல் அரங்கம் (Tamil)

📚 நூல் அரங்கம் சேனல், தமிழ் மொழியில் நாவல்கள், கதைகள், புதிய இதழ்கள் மற்றும் இலவச நூல்கள் பற்றிய அற்புதமான அறிக்கைகள் அடங்கும் இடம். இதன் மூலம், நூல் உற்பொருளங்களை அடிப்படையாகக் கண்களில் கொண்டுகொள்ள முடியும். நூல் அரங்கம் சேனலில், புதிய நாவல்கள் மற்றும் கதைகளை உங்கள் மகிழ்ச்சிக்கு உட்கார்ந்து நீங்கள் பிடித்துக் கொள்ளலாம். இது எப்படி உங்கள் அனைத்து நூல்களையும் ஒரு இடத்தில் கொண்டுவைக்கும் ஆக்கம். @NoolArangam சேனலை உங்கள் நண்பர்களுடன் பகிரவும், உங்கள் அனுபவங்களை பகிரவும், மற்றும் நூல்களின் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளவும். நூல் அரங்கம் சேனல் உங்களை நல்ல அறிக்கையை நீங்கள் பெற உதவும்!

📚 நூல் அரங்கம்

21 Nov, 02:45


மாயா விநோதப் பரதேசி - வடுவூர் கே துரைசாமி ஐயங்கார்

3 பாகங்களுடன்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_69.html

இந்த நூல் வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார் எழுதிய மாயா விநோத பரதேசி என்னும் துப்பரியும் நாவல்

📚 நூல் அரங்கம்

20 Nov, 22:24


வாக்கப்பட்ட பூமி - சுசி கணேசன்

இன்று கிராமங்களின் உண்மையான உணர்வையும், இனிமையையும் கலந்து அதன் பழைமையை இன்னும் கட்டிக்காத்துக் கொண்டிருப்பது கிராமத்துப் 'பெரிசுகள்' தான்!! இந்த மூத்த தலைமுறை முடிந்து போனால் நிஜமான கிராமத்து வாசனையும், நடந்து கொண்டிருக்கும் நாகரீகப் புரட்சியினால் மறைந்து போகும். அதற்குள் அந்தத் தூய மனத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்கிற நூல்தான் வாக்கப்பட்ட பூமி.....

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_15.html

📚 நூல் அரங்கம்

20 Nov, 22:17


கண்ணா ஆங்கிலம் பேச ஆசையா

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_26.html

📚 நூல் அரங்கம்

15 Nov, 05:56


மாயம்

பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_90.html

📚 நூல் அரங்கம்

14 Nov, 02:27


ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன்

பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம், பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_13.html

📚 நூல் அரங்கம்

14 Nov, 02:20


சோமசுந்தரத்தின் காதல் கதை

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்களை ஒரு காதலால் இழக்கிறான். வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாரெல்லாம் அவன் வாழ்க்கையில் வந்தார்கள்? வாழப்பழகிக்கொண்டானா இல்லையா? மதத்திலும், சாதியிலும், கலாச்சாரத்திலும் உழலும் மக்களுக்கு சாதாரணமான வாழ்க்கை கூட ஏன் கடினமாக இருக்கிறது? என பல கேள்விகளுக்கு விடை தேடுகிறான். வழியில் தினுஷா, ராஜபாண்டி, இழவு மாமா, கோவிந்தி அம்மாள் என பலரும் அவனுடன் பயணிக்கிறார்கள். எல்லோரைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லுவான். கூடவே அவன் காதல் கதையையும்.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_65.html

📚 நூல் அரங்கம்

11 Nov, 15:55


மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுசாமி

தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம். 'மின்சாரப்பூ' ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது. 'நீரில்லாமீன்' கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_49.html

📚 நூல் அரங்கம்

11 Nov, 15:42


பாண்டிச்சி (நாவல்)

அழகிய இயற்கைச் சூழலை தங்கள் உயிரென பாதுகாக்கும் ஆதிமக்களின் பேரன்பு, மன ஒழுக்கம் ததும்பும் காதல்,வியப்பூட்டும் அரசியல், இவைகளுக்குள் ஊடுருவி நிற்கும் மலைமக்களின் கொண்டாட்டங்கள் நம்பிக்கைகள் இவைகளைச் சொல்லிச்செல்கிறது. இந்நாவல்.கேரளதமிழக எல்லையின் இயற்கைப் பேரெழிலின்பின்னணியில் பாண்டிச்சியின் ஆளுமையில் விரிகிறது இக்கதை.!

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_57.html

📚 நூல் அரங்கம்

11 Nov, 14:38


ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் - அம்பை

மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் நான்கு நீண்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_96.html

📚 நூல் அரங்கம்

10 Nov, 12:00


மணிபல்லவம் - நா பார்த்தசாரதி

இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது. இந்த நாவல் பொழுதுபொக்கிற்கு மட்டுமன்று ,சிந்தனைக்கும் சேர்த்துதான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும். -நா.பார்த்தசாரதி

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_47.html

📚 நூல் அரங்கம்

10 Nov, 05:33


கி.மு. கி.பி. - மதன்

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_12.html

📚 நூல் அரங்கம்

10 Nov, 05:13


மனிதனுக்குள் ஒரு மிருகம் - மதன்

மனிதனுக்குள்ளாக இருக்கும் மிருகத்தைப் பற்றியும், சீரியல் கொலைகாரன் தொடங்கி, தனிமனித சர்வாதிகார கொலை வெறியர்களின் வாழ்க்கை பற்றியும், மனிதன் என்பவன் எத்தனை பெரிய வளர்ச்சி அடைந்த நாகரீகமுடையவனாக இருந்தாலும், வராலாறு முழுதும் அவனுடைய கொலைவெறி, தனது இனத்தையே அழிக்கும் கீழ்த்தரமான ஒரு நிலைக்கு மனம், அனுபவங்கள் அவனை இட்டுச் செல்கிறது என்பதையும் புத்தகம் வாசித்து முடித்த பின் உணர்ந்து கொண்டேன், பல தகவல்கள் கிடைக்கிறது. இலகுவான எழுத்து நடை

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_27.html

📚 நூல் அரங்கம்

08 Nov, 18:04


தமிழ் மதுரா நாவல்கள்

https://tamilbookspdff.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE?&max-results=25

📚 நூல் அரங்கம்

06 Nov, 02:29


சித்தம் உனதானேன் ராகவி


பரம்பரைத் தொழிலை காப்பாற்ற தந்தையால் தேந்தெடுக்கப்பட்ட பெண் ஒரு புறம். புகழ் பெற்ற மாடலோடு ஓடிக்கொண்டிருக்கும் உறவு ஒரு புறம். மூழ்கிக்கொண்டிருக்கும் தொழில் ஒரு புறம்.

ஆடு, புலி புல்லுக்கட்டு என்று மூன்றையும் சமாளித்து கரையேறுவானா அரவிந்த் ? அப்படியே வந்தாலும் அவன் மனமும் மூளையும் ஒருங்கே சொல்லப்போகும் செய்தி என்ன ?

A woman wronged.... என்பதன் முழுப் பரிணாமமும் உணரும்போது அவன் நிலை....

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_97.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 16:07


அகந்தை அழிந்ததடி பூந்தளிரே - பிரியா மெகன்

அகந்தை பிடித்த திமிராளன் பூந்தளிர் போன்ற பெண்ணை பாடாய் படுத்துகிறான்.

பக்கா ஆன்டிஹீரோ ஸ்டோரி.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_99.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 15:18


விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்

தலைமுறை தலைமுறையாகத் தமிழகத்தின் தனிப்பெரும் நாடோடிக் கதையாக விளங்கிவரும் விக்கிரமாதித்தன் கதைகள் இந்தியாவின் பல மொழிகளிலும் பல்வேறு வடிவங்களுடன் வழங்கி வருகின்றன.

வெகு காலமாகவே ஜனரஞ்சகமாய் தமிழில் வழங்கி வரும் விக்கிரமாதித்தன் கதைகள் அனைத்தும் இந்நூலின் உணர்ச்சியோட்டம் மிக்க புதுமை தமிழில் விரிவாகத்தரப்பட்டுள்ளன அத்துடன் வடமொழி மூலங்களைப் பரிசோதித்து, இதுவரை தமிழில் வெளிவராத பல புதிய கதைகளும் சேர்க்கபட்டுள்ளன

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_80.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 14:33


ரம்மி & ஜோக்கர் - பட்டுக்கோட்டை பிரபாகர்

பரத் சுசிலா வரிசை-5

ஆறு நாவல்கள்....

ஒரு திரைப்படம் போல் ஆறு நாவலும் அவ்வளவு விறுவிறுப்பு. பிரபல கற்பனை கதாபாத்திரங்கள் ஆன கணேஷ் & வசந்த், கிரண்&ராவ்&அலெக்ஸ், விவேக் & விஷ்ணு, நந்தினி & வந்தியத்தேவன், சேட்டை கோபி, அப்புசாமி என இவ்வரிசையில் பரத் & சுசீலாவும் உண்டு இவர்கள் அனைவரும் எனக்கு பிடித்தவர்களும் கூட. இந்நாவலில் வரும் அனைத்து கதையும் கால்பந்து போட்டி போல் அவ்வளவு வேகம். பி.கே.பி மற்றும் பரத் & சுசீலா என இருவரும் நம்மை ஆட்கொள்கிறார்கள்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/and.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 14:27


இதயம் விழித்தேன் - நித்யா ஆர்

இதயத்துக்கு காதலை பிடிக்குமா, இல்லை காதலுக்கு இதயத்தை பிடிக்குமா, இப்படி பிரித்தே பார்க்க முடியாத படி, காதலுக்கான சின்னமாக இதயம் விளங்குகிறது.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_64.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 13:45


படிகள்_கமலா சடகோபன்

இவரது 'படிகள்' என்ற புதினத்திற்காக 1978 ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை அந்த ஆண்டுக்கான சிறந்த புதின எழுத்தாளராகப் பெற்றார்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_68.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 13:34


நிவேதிதா - யத்தனபூடி சுலோசனா

நிவேதிதா! கதையின் நாயகி! வாழ்க்கையில் பல பிரச்னைகளை அவள் சந்திக்கிறாள். இளமையிலேயே கணவர் விபத்தில் இறந்து போனபின் குழந்தைகளுடன் தனித்து விடப்படுகிறாள். வாழ்க்கையுடன் போராடி, வெற்றி பெறுகிறாள். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருகிறாள். இதற்கு நேரமாறான வாழ்க்கை ஹேமாவுடையது. எல்லா வசதிகள் இருந்தும் தவறான பாதையை தேர்ந்து எடுத்த காரணத்தினால் அவளுடைய வாழ்க்கை சீரழிந்து போகிறது. பெண்கள் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டால் எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் புதினம்

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_5.html