M.K.Stalin @mkstalin_official Channel on Telegram

M.K.Stalin

@mkstalin_official


Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

தமிழக முதல்வர் | திமுக தலைவர் | நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்

M.K.Stalin (English)

Are you interested in Tamil Nadu politics? Want to stay updated on the latest news and updates from the Chief Minister of Tamil Nadu himself? Look no further than the M.K.Stalin Telegram channel! Get real-time insights into the political landscape of Tamil Nadu, as well as updates from the President of the DMK party. M.K.Stalin, who belongs to the Dravidian stock, brings a unique perspective to the table. As the Chief Minister of Tamil Nadu, he is committed to serving the people and bringing positive change to the state. Join the M.K.Stalin Telegram channel today to be part of the conversation and stay informed about the political developments in Tamil Nadu. Stay connected, stay informed with M.K.Stalin!

M.K.Stalin

26 Dec, 13:01


விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.

அவரது வரலாற்றின் வழியே தமிழ்நாட்டு அரசியலின் போக்கையும் திசைமாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம். விடுதலைப் போராட்டத்தில் இராஜாஜி அவர்களின் பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்று வழங்கியும், அவருக்கு கிண்டியில் நினைவாலயம் அமைத்தும் அவரைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது, இராஜாஜி அவர்களின் 50-ஆவது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றைய தலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி அமைத்தும் முத்தமிழறிஞரின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை செய்துள்ளோம்!

M.K.Stalin

26 Dec, 09:54


ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்; 'தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!

M.K.Stalin

25 Dec, 17:08


மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகவும் - இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைப் போற்றியவருமாக விளங்கியவர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்!
அவதூறுகளைப் பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை அனைவரும் அறிந்திட திரு. கோபண்ணா அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி அவசியமானது; போற்றத்தக்கது!
மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்ளிட்டவர்கள் காண விரும்பிய முற்போக்கு இந்திய சமுதாயம் அமைந்திட நமது ஒற்றுமைப் பயணத்தைத் தொடருவோம்!

M.K.Stalin

25 Dec, 04:22


அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் #Christmas நல்வாழ்த்துகள்.

அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்!

M.K.Stalin

23 Dec, 13:02


உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்!

குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது.

சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்!

M.K.Stalin

23 Dec, 05:15


வெறுப்புணர்வும், வன்முறையும் மக்களை எந்த அளவுக்கு வதைக்கும் என்ற வலியைக் கூறி, காந்தியடிகள் காட்டிய அமைதிப்பாதையை வலியுறுத்தும் "யாத் வஷேம்" கன்னட நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெறத் தேர்வாகியுள்ள கே. நல்லதம்பி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

M.K.Stalin

22 Dec, 14:15


'காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. மு. ராஜேந்திரன் IAS (ஓய்வு) அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும்!

M.K.Stalin

17 Dec, 14:55


பள்ளிக் காலத்தை அசைபோடாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

இன்று என்னுடைய பள்ளிக்குச் சென்று தோழர்களைச் சந்தித்து மகிழ்ந்தேன்!

சில மணித்துளிகளில் பல ஆண்டு நினைவுகள் உருண்டோடி நெஞ்சை நனைத்தது!

நண்பர்கள்
ஜெயராமன் அய்யா
29C பேருந்து என ஞாபகங்களின் இதமான தாலாட்டு!

#OSAreunion

M.K.Stalin

15 Dec, 16:47


தமிழர்களின் இசை மரபு பழமையானது - செழுமையானது. அத்தகைய தமிழிசைப் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும்.

பக்தியிசையானாலும் திரையிசையானாலும் ராக் இசையானாலும் அவை தமிழிசையாக அரங்குகளில் ஒலிக்கட்டும்!

மொழியினால்தான் கலை நிலைக்கும்!