மீன் குளத்தோடு கோவித்தால் மீனின் நிலை என்னாகும்
Marks வராத கற்றலும், நிம்மதி இல்லாத மனோ நிலையும்.
யாரும் மறுக்க முடியாத ஓர் தலை வலி இந்த Alevel.
ஏன் இப்படி ஒரு பதிவு,
கேள்!
ஒரு ஆசிரியனாய் நான் இந்த பதிவை இடுவதை விட ஓர் சகோதரனாய் சில புத்திமதிகளை கூறுகிறேன் கேள்.
சிலர் Science Group இனை ஆரம்பித்து, doubt Clear எனும் போரில் அழிகிறார்கள்.
இன்னும் சிலர் Online Studies எனும் பேரில் Late night, online சகவாசம்.
இது அவர்களை நிச்சயம் அழித்துவிடும்.
ஆனால் இந்த நிம்மதி இல்லா கற்றலும் குழப்பமான மனோ நிலைக்கு காரணம் என்ன.
சூரிய உதயத்தை காணாத தூக்கமும், இறைபக்தி கொஞ்சமும் இல்லை.
உதாரணமாக: ஒரு பிள்ளையிடம் நான் மகன், நீங்கள் Science இனை இழுக்க மாட்டயல், வேறு Stream மாறினால் நல்லம் என அவனின் நலவுக்கு கூறினால் அவன் என்னை விட்டு வேறு எங்கோ போய், என்னை ஓர் விரோதியாய் பார்த்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் காணாமல் போவான், எங்களுக்கு என்ன தேவை நாங்கள் ஏன் உங்களுக்கு அப்படி கூறுகிறோம் யோசித்து பாருங்கள். உங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் எங்கள் கட்டணமும் அதிகரிக்கும் தானே.
Olevel வரை குறுகிய வட்டத்தில் இயங்கிய பிள்ளை Alevel வந்தவுடன் ஒரு பெரிய உலகை பார்த்து அதில் உள்ள நலவை பெறாமல் தீயதை மட்டுமே பாடமாக பெறுகிறது.
வீட்டில் இருந்து கற்ற பிள்ளை, சில ஆசிரியர்களின், சில நண்பர்களின் கதைகளை கேட்டு பாடசாலையை விட்டு Private ஆக Exam எழுத போகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி வெளி இடம் போய், அங்கு போதை, தீய நட்பில் அழிவதை நாம் அறியாமல் இல்லை.
நிறைய பிள்ளைகள் இப்போது ஒரு விடயத்தை Smart என்று நினைத்து செய்து வருகிறது.
ஆசிரியர்களை ஏமாற்றுவது.
நான் வெளிஊர் பயணம் செய்வது அதிகம் அந்த நாட்களில் காலி பஸ் இல் இடையில் ஒரு 19 வயது இருக்கும் ஒரு பையன் ஏறுவான் நிறைய நாட்கள் கண்டுள்ளேன் ஆனால் அவன் Ticket எடுக்கவே மாட்டான், நிறைய பாசங்கு செய்து Conductor இனை ஏமாற்றுவன் நான் சிரித்து கொண்டே கடந்து செல்வேன்.
அதே நிலை தானே இந்த பிள்ளைகளும் இப்போது செய்கிறது, ஆசிரியர்களை ஏமாற்றுவது.
இந்த 5 வருட online வகுப்புகளில் இந்த நாட்களில் தான் இந்த, மாணவர் ஒழுக்க சீர்கேடு நடக்கிறது,
நாகரீகம் வளரும் போது, ஒழுக்கம் ஏன் குறைகிறது, கொஞ்சம் கவனத்தில் கொள்க.
வகுப்புகளில் Bubble Gum சாப்பிடாதீர்கள்,
Mobile Phone பாவிக்காதீர்கள்,
உங்கள் வாழ்க்கை துணைகளை வகுப்பில் தேடாதீர்கள்,
பெற்றோரின் பணத்தை வகுப்பு, வகுப்பு என்று வீணாக்காதீர்கள்,
Sir, கற்றுத்தருவதை இருந்து 2,3 தடவைகள் கற்றாலே போதும் பாடம் விளங்கிவிடும் ஆனால் நீங்களோ One Shot இல் விளங்க வேண்டும் என்று நேரடி வகுப்பு போதாதென்று online, Group Class என்று அலைகிறீர்கள்.
என் அனுபவத்தில் இருந்து, ஒரு Tutory இற்கு கற்பிக்க போனேன் 2021 இல் முதல் நாள் Lunch Time ஒரு மாணவன் ஏதோ ஒரு Model கேள்வியை எழுதி எடுத்து வந்து Idea கேட்டான், நானும் நிறைய மெனெகெட்டு பார்த்தேன் ஏதோ ஒரு பிழை கேள்வியில்,
சாப்பிடும் போது என்னோடு இருந்த Sir கூறினார், இவன் இப்படி தான் sir எங்கயாவது online இல் படித்து விட்டு வந்து, நம்மல குழப்புவான், Results யே எடுக்க மாட்டான் என்றார், அடுத்த நாள் அவன் வகுப்பு வரவில்லை எங்கே ஆள் என்றேன் சில பிள்ளைகள் கூறியது அவன் இங்கே Time pass இற்கு தான் வார Online இல் gases படிக்கான் நாம இப்பதான் unit 2 என்று உண்மையில், அவன் வராமல் விட்டது வேறு காரணம், நானும் அதற்கு பின் அவனுக்கு முகம் கொடுக்காமல் இருந்து விட்டேன், Exam நெருங்கும் போதே கூறினான் அவன் நான் வந்ததன் பின் online வகுப்பை விட்டுவிட்டு இங்கே வருவதாக, முதலில் ஒளிக்கும் குரல் பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை, சப்தமாக இருந்தால் சரி எல்லோரும் ஏற்றுக்கொள்வோம்.
நீங்கள் Chemistry இனை பிழையாக கற்கிறீர்கள் என்று பல தடவைகள் கூறி இருக்கிறேன் ஆனால் என் சப்தத்தை விட இங்கு பலரின் சத்தம் உர்த்தது,
என்ன பிழை.
2026 காரன் கட கட என கற்க வேண்டும் என்று Theory இனை மட்டும் படிக்கிறான், உங்களிடம் என் கேள்விக்கு பதில் இருக்காது.
2025 காரன் Past paper இல் உள்ள ஆகவும் இலகுவான Alevel பரீட்சைக்கு ஒரு போதும் வராத கேள்விகளை செய்ய கற்கிறான்.
என்னிடம் நேரடி வகுப்பிற்கு வராத ஒரு மாணவன், என் வகுப்பு மாணவனுடன் சேர்ந்து night Study செய்கிறான் 2 பேரும் Inorganic கேள்விகள் செய்யும் போது எனது Tute இல் உள்ள கேள்வியை செய்யும் போது அது Past Paper உம் சில Mora Paper உம் சேர்ந்த தொகுப்பு, செய்யும் போது இவன் Notes இனை பார்த்து விடையை பெற்று இருக்கான் அதற்கு என் மாணவன் டேய், இப்படி செய்வதை விட செய்யாமல் இருக்கலாம், final இல் நாம Self ஆ தானே செய்ய வேண்டும் என்று கூற, அந்த Einstein கூறி இருக்கான், எனக்கு இவர் ட படிப்பு set ஆகுற இல்லை, இவர்ட கேள்வி செய்ய புடிக்கிற இல்லை என்று கூறி இருக்கான்...