Naushin_Binth_Sha

@naushin_binth_sha


அல்குர்ஆன் அஸ் ஸுன்னாஹ் ஒளியில் உங்களுக்காக!...

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

Naushin_Binth_Sha

23 Oct, 02:18


இமாம் இப்னு‌ உஸைமீன் (ரஹி) கூறுகிறார்கள்:

உலகம் நீண்ட நாட்களுக்கு இல்லை!

பின்னர் அவை கடந்து(போய்)விடும்!

எனவே, அல்லாஹ் தன் கட்டளையை கொண்டு வரும் வரை பொறுமையாக இருங்கள்!

நூல் : ஷரஹ் ரியாலுஸ் ஸாலிஹீன் 104

Naushin_Binth_Sha

23 Oct, 02:18


#இறைவேதம் 📌

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்.

மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன.

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

(அல்குர்ஆன் 13:28)

Naushin_Binth_Sha

23 Oct, 02:17


நபிமொழி 📌

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்‌ :

சொர்க்கத்திலுள்ள அருட்கொடைகளில் ஒரு நகம் சுமக்கும் அளவிலான (மிகச் சிறிய) ஒன்று (இவ்வுலகில்) வெளிப்பட்டால்கூட,

அதனால் வானங்களுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள பகுதிகள் எழிலாகிவிடும்.

(அவ்வாறே,) சொர்க்கவாசிகளுள் ஒருவர் (பூமியை) எட்டிப்பார்க்க, அவருடைய அணிகலன்கள் தென்படுமானால்,

விண்மீன்களின் ஒளியைச் சூரியன் மங்கச்செய்வதைப் போன்று.

சூரிய ஒளியையே அவை மங்கச் செய்துவிடும்.

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) | திர்மிதீ 2461 | 2538.

இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த
ஹதீஸ் ஆகும்.

Naushin_Binth_Sha

22 Oct, 15:54


*அதிகமாக கவலை கொள்ளாதீர்கள்!*

இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

கவலையாக இருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள்.

அப்போது நபியவர்கள் கூறினார்கள் :

அதிகமாக கவலை கொள்ளாதீர்!

உனக்கு விதிக்கப்பட்டது திட்டமாக நிகழும்.

உனக்கு வழங்கப்பட்ட ரிஸ்க் உன்னை வந்தடையும்.

நூல் : ஷஅபுல் ஈமான் 1188

Naushin_Binth_Sha

22 Oct, 15:52


قَالَ إِنَّمَآ أَشۡكُواْ بَثِّي وَحُزۡنِيٓ إِلَى ٱللَّهِ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ

என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்;

அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்.

(அல்குர்ஆன் 12:86)

Naushin_Binth_Sha

19 Oct, 00:52


தஹஜ்ஜத் தொழுகை!

اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ‏

நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.

(அல்குர்ஆன் 73:6)

Naushin_Binth_Sha

19 Oct, 00:52


இறைவேதம் 📌

فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏

நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே!

அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!

(அல்குர்ஆன் : 10:85)

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏

(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து
உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!

(அல்குர்ஆன் : 10:86)

Naushin_Binth_Sha

19 Oct, 00:52


இறைவேதம் 📌

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآٮِٕكُمْ‌ وَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا
وَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا‏

மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்;

(உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.

(அல்குர்ஆன் : 4:45)

Naushin_Binth_Sha

19 Oct, 00:52


மார்க்க அறிஞர், தஃவா செய்பவர், தவறை சுட்டி காட்டுப்பவர் உனக்கு பிடிக்கவில்லையா.?!

நீ தவறான பாதையில் செல்கிறாய், தவறான செயல்களை செய்கிறாய் என்றே பொருள்!

ஷைத்தானின் சூழ்ச்சி புரியாமல் அவர்களை வெறுத்துக்கொண்டு இருக்கிறாய்!

Naushin_Binth_Sha

19 Oct, 00:51


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

வயிற்றை நிரப்புவதே ஒருவரின்
முக்கியக் கவலையாக இருக்கும்!

ஒரு காலம் மக்கள் மீது வரும்!

தீன் (மார்க்கம்) ஒரு
பொழுதுபோக்காக மாறும்!

நாக்கு அவரது வாளாக மாறும்!

நூல் : அஸ் ஸுஹ்த் இப்னு முபாரக்

Naushin_Binth_Sha

18 Oct, 14:41


பாத்திமா (ரலி) கூறினார்கள் :

எந்த அந்நிய ஆண்களைப் பார்க்காதவரும்.

எந்த அந்நிய ஆண்களால்
பார்க்கப்படாதவர்களுமே .

சிறந்த பெண்கள் ஆவாா்கள்!

நூல் : அஹ்காம் அன்னிஸா | பக்கம் 219

Naushin_Binth_Sha

18 Oct, 14:31


இமாம் இப்னு பாஸ் (ரஹி) கூறினார்கள் :

பெண்களே நீங்கள் ஹிஜாப்பில்
டிஸைன் மற்றும் கண்னை கவரும்
பாகங்கள் மற்றும் மினு மினுக்கும் படங்கள் போன்ற ஹிஜாப் அணிவதை தவிர்க்க வேண்டும்!

நூல் : மரத்துல் முஸ்லிமா பக்கம் 119

Naushin_Binth_Sha

18 Oct, 13:55


மாலிக் பின் தீனார் رحمه الله கூறினார் :

இந்த உலகத்தின் அன்புதான் ஒவ்வொரு தவறுக்கும் தலையாயது (அதாவது மனிதகுலம் தவறு செய்வதற்கு முக்கிய காரணம்).

பெண்கள் ஷைத்தானின் பொறிகள் மற்றும் மது ஒவ்வொரு பாவத்திற்கும் அழைப்பாளர்!

கிதாப் அஸ்-ஜுஹ்த், இபின் அபி அத்-துன்யா, 1/212

Naushin_Binth_Sha

18 Oct, 02:30


இப்னுல் கைய்யிம் (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் :

மார்க்கம் என்பது முழுவதும் நற்குணங்கள் நிறைந்த ஒன்று!

உன்னிடத்தில் யார் நற்குணத்தில் உயர்ந்தவராக இருப்பாரோ அவரே மார்க்கத்தில் உயர்ந்தவராக இருப்பார்!

நூல் : மதாரிஜுஸ் ஸாலிகீன் 2/294

Naushin_Binth_Sha

17 Oct, 03:14


அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி

இதன் மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும் நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால்

என்னைக் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன் என்றார்கள்.

நூல் : التأصيل في طلب العلم

Naushin_Binth_Sha

17 Oct, 03:09


நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக எனக்கு பின்பு உங்களில் வாழ்பவர் அநேக கருத்து முரண்பாடுகளைக் காண்பார்.

எனவே, என்னுடைய ஸுன்னத்தையும், அல்குலஃபாஉர் ராஷீதீன் அல்மஹ்தீயீன் (நேர்வழிப்பெற்ற அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு,உமர் ரலியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு,அலி ரலியல்லாஹு அன்ஹு ஆகிய நான்கு கஃலீபாக்களுடைய) ஸுன்னத்தையும் பற்றிப் பிடிப்பது உங்கள் மீது கடமையாக இருக்கின்றது.

அதனை உங்களுடைய கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடியுங்கள்.

அறிவிப்பாளர் : அல்இர்பாத் பின் சாரியஹ் (ரலி)

நூல் : சுனன் அபூதாவூத் 460
தரம் : ஸஹீஹ்.

Naushin_Binth_Sha

17 Oct, 03:01


உமர் இப்னு அல் கத்தாப் (رضي الله عنه) அவர்கள் கூறினார்கள் :

அடிக்கடி மனந்திரும்புபவர்களுடன் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

அவர்கள் மென்மையான இதயங்களைக் கொண்டுள்ளனர்.

நூல் : ஹிலியாதுல் அவ்லியா 1/51

Naushin_Binth_Sha

15 Oct, 15:50


இறைவேதம் 📌

رَّبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ
وَاصْطَبِرْ لِـعِبَادَتِهٖ‌ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا‏

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான்.

ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக!

மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக!

(பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா.?!

(அல்குர்ஆன் 19:65)