மறுமைக்கான தேடல்

@marumaikkana_thaedal


நல்லுபதேசம் (ஜனங்களுக்குப்) பயனளிக்குமாயின் நீர் (உபதேசித்து) நினைவுபடுத்துவீராக!

#அல்குர்ஆன் : 87:9

#நபிமொழி

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

#புகாரி : 3461

மறுமைக்கான தேடல்

23 Oct, 06:13


அலி (ரலி) கூறினார்கள் :

தவ்பா கோருவதில் ஆறு விஷயங்கள் இணைந்திருக்க வேண்டும்.

1. தன்னிடமிருந்து நிகழ்ந்துவிட்ட பாவத்திற்காக வருந்த வேண்டும்.

2. தான் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

3. பிறர் உரிமையை அவர் அபகரித்து இருந்தால் திரும்ப கொடுக்க வேண்டும்.

4. தம்மால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .

5. மீண்டும் அந்த பாவத்தை செய்யாமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும்.

6. இதற்கு முன்னர் நீ உன் மனதை பாவங்களின் அடிமையாக வைத்திருந்த அதைப்போன்று அதை இனி இறைவனுக்கு கீழ்ப்படியும் படி அடிமையாய் இருக்கும் படி செய்திட வேண்டும்.

இதற்கு முன்னர் நீ உன் மனதுக்கு பாவங்களின் சுவையூட்டி வளர்த்ததை போன்று இனி அதற்கு இறைவனுக்கு கீழ்ப்படிவதன் சுவையை ஊட்டி வளர்க்க வேண்டும்.

நூல் : தஃப்ஹீமுல் குர்ஆன்

மறுமைக்கான தேடல்

23 Oct, 06:13


இன்றைய கேள்விக்கான பதில் : 567

ஜனாஸாத் தொழுகையில் நபர்கள் குறைவாக இருந்தாலும் 3 வரிசையில் நிற்பது கட்டாயமா?

இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள்

அறிவிப்பவர் :  அபூ உமாமா (ரலி)
நூல் : தப்ரானி 190/8

இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹ்யஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என இமாம்கள் விமர்சிக்கின்றனர்.

‘யாருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்துகிறார்களோ அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

நூல்கள்: திர்மிதி 949, அபூ தாவூத் 2753,
இப்னு மாஜா 1479

இவ்விரண்டு அறிவிப்புகளிலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தொழுகையில் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப வரிசைகளை அமைத்துக் கொள்ளலாம்.

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

23 Oct, 05:04


*ஹதீஸ் : 908*

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற)l உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்.?! என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5232.

மறுமைக்கான தேடல்

22 Oct, 13:51


இன்றைய கேள்விக்கான பதில் : 566

பிரசவத்தின் போது மரணிக்கும் பெண் ஷஹீத் ஆவார்.
இக்கூற்று?

சரி

ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

22 Oct, 12:44


#ஒரு_மார்க்க_அறிஞரிடம் #கேட்கப்பட்டது :

உலகில் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு கொடுக்கும் மிக பெரிய தண்டனை எது என்று கேட்டார்கள்?

அதற்கு மார்க்க அறிஞர் கூறினார்கள் :

ஒரு மனிதன் பாவம் செய்வான் அது அவனுக்கு எளிதாக இருக்கும் அவன் பாவம் செய்ய அனைத்து சூழ்நிலைகளும் எளிதாக அமையும்!

அவன் செய்யும் செயல் தவறு என்று அவனுக்கு விளக்காது நாம் சரியாக தான் உள்ளோம் என்று கூறி அதிலேயே உறுதியாக இருப்பான்.

அவனுக்கு தவ்பா செய்யும் எண்ணமே ஏற்படாது! கடைசி வரை அவன் அந்த பாவத்தில் இருந்தே மரணிப்பான் என்று கூறினார்கள்!

எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

(அல்குர்ஆன் 43:36,37)

அல்லாஹ் மிகவும் கிருபையாளன் ஒரு மனிதன் என்னத்தான் பாவம் செய்தாலும் அவன் தவ்பா செய்தால் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான்!

அதனால் தான் அல்லாஹ் அந்த மனிதனுக்கு தவ்பா செய்யும் எண்ணத்தை உள்ளத்தில் இருந்து நீக்கி விடுகிறான் என்று அந்த அறிஞர் கூறினார்கள்!

அல்லாஹ் போதுமானவன்!

மறுமைக்கான தேடல்

22 Oct, 10:06


அல்குர்ஆனைப் படி; அது உனது உள்ளத்தை அனைத்துத் தவறான சிந்தனைகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயம்!

இமாம் இப்னுல் கையிம் (ரஹிஹ்) கூறினார்கள் : 

உள்ளங்கள் நிவாரணம் பெற அல்குர்ஆனை விடப் பயன் தரும் மருந்தில்லை.

நிச்சயமாக அதுவே உள்ளங்களில் எந்த நோயையும் விட்டுவைக்காமல் குணப்படுத்துகின்ற  உள்ளங்களுக்கான பரிபூரண நிவாரணமாகும்.

அது அவற்றின் முழுமையான ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும்.

மேலும், அது அவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்துலிருந்தும் முழுமையாக பாதுகாப்பைக் கொடுக்கும்.

நூல் :
‏زاد المعاد ( ٤ / ٩٣ )



மறுமைக்கான தேடல்

22 Oct, 05:54


ஹசனுல் பஸரி (ரஹி) கூறுகிறார்கள் :

ஒரு அறிஞருக்கான தண்டனை என்பது அவருடைய உள்ளம் இறந்து போவதின் ஊடாக இருக்கும் என்று சொன்ன பொழுது!

உள்ளம் இறந்து போவது என்றால் என்ன கேட்கப்பட்டது.?!

மறுமையின் அமல்களை வைத்து உலகத்தை சம்பாதிப்பது என்று சொன்னார்கள்.

நூல் :  ஜாமிஃபயானில் இல்மி 1/191

மறுமைக்கான தேடல்

22 Oct, 03:18


*ஹதீஸ் : 907*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வை நினைவு கூறாத ஒரு 
சபையிலிருந்து விடைபெற்றுச் செல்பவர்கள் நாற்றம் வீசும் ஒரு கழுதைப் பிணத்தைச் சுற்றி இருந்து விட்டு பிரிந்து செல்வோரைப் போலன்றி அவர்கள் செல்லவில்லை.

அது அவர்களுக்கு கைசேதமாகவே அமையும்.

இதே நபிமொழியின் திர்மிதி அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது :

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தமது நபியின் மீது ஸலவாத் சொல்லாமல் விடைபெறும் எந்த சபையினருக்கும் அது குறையாகவே அன்றி இருக்கமாட்டாது.

(அல்லாஹ்) நாடினால் அதற்காக அவர்களைத் தண்டிப்பான். நாடினால் மன்னிப்பான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மத் (9843), அபூ தாவூத் (4855), திர்மிதி (3380)

மற்றும் அஷ்ஷேக் அல்பானி தனது ஸஹீஹுல் ஜாமிஃ என்ற நூலில் (5607, 5750) இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளனர்.

மறுமைக்கான தேடல்

21 Oct, 15:02


நமக்கு ஏற்படுகின்ற சோதனையில் பொறுமைக் காத்துக் கொண்டால், இறுதியில் இதற்கான பலனை மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளலாம்!

அல்ஹம்துலில்லாஹ்!💜

மறுமைக்கான தேடல்

21 Oct, 13:42


*ஹதீஸ் : 906*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :

தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.

பின்பு அவர், அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்.

பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால், நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள்.

பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால், நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள்.

பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால், நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள்.

பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால், நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.

பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால், நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள்.

உங்களில் இவ்வாறு கூறுபவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

[ஸஹீஹ் முஸ்லிம் : 876]

மறுமைக்கான தேடல்

20 Oct, 13:32


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கவ்ஸர் சுவர்கத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும்.

அதன் ஓரங்கள் தங்கத்திலானவை.

அது முத்துக்களும் அதன் போக்கு (அதாவது படுகை) முத்துக்களாலாலும் மாணிக்கங்களாலும் ஆனவை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : திர்மிதீ 3287

மறுமைக்கான தேடல்

20 Oct, 09:58


இன்றைய கேள்விக்கான பதில் : 565

கடுமை மிகுந்த  வெப்பமான நேரங்களில் தொழுகும் போது தரையில் எந்த உறுப்பை வைக்க இயலாவிட்டால் அவர் தமது ஆடையை விரித்து சஜ்தா செய்து கொள்ளட்டும்?

C. நெற்றி

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கடுமையான வெப்ப நேரத்தில் தொழுவோம். அப்போது எங்களில் ஒருவர் பூமியில் தமது நெற்றியை வைக்க இயலா விட்டால் அவர் தமது ஆடையை விரித்து அதன்மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1093

பதில் அளித்த உங்கள் அனைவருக்கும்
அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக....
வாழ்த்துக்கள் 🍃🍂

ماشاء الله
جزاك الله خيرا
الله يعطيك العافية

மறுமைக்கான தேடல்

20 Oct, 09:53


ஸஹாபாக்கள்

தனது மரணித்திற்குப்‌ பிறகு ஸஹாபாக்கள்‌ மத்தியில்‌ ஏற்படவிருந்த குழப்பங்கள்‌ பற்றி நபி (ஸல்‌) அவர்களுக்குத்‌ தெரிந்திருந்தும்‌ கூட, அவர்களின் ‌(ஸஹாபாக்களின்) நன்மைகளை மாத்திரமே நபியவர்கள்‌ சொல்லிக்‌ காட்டினார்கள்‌.

மேலும்‌,

நபி (ஸல்‌) அவர்கள்‌ (பின்வருமாறு) கூறினார்கள்‌ :

எனது தோழர்களைக்‌ (குறை கூறுவதை) விட்டுவிடுங்கள்‌.

(நூல்‌ : அல்‌-பஸ்ஸார்‌ | கஷ்புல்‌ அஸ்தார்‌ 3-290).

மேலும்,

அவர்களது நல்ல விஷயங்களை
மாத்திரமே பேசுங்கள்‌.

அறிவிப்பவர்‌ : கைஸமா பின்‌ ஸுலைமான்‌ நூல்‌ : பழாஇலுஸ்‌ ஸஹாபா

மறுமைக்கான தேடல்

20 Oct, 09:53


●இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

●அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன.

●இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை.

●அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார்.

●அது அவருக்கு நன்மையாக அமைகிறது.

●அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார்.

●அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.

நூல் : முஸ்லிம் 5726

மறுமைக்கான தேடல்

20 Oct, 05:39


●நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே!

● மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கேட்டேன்.

●அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) "நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்.

●ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.

● அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.

●ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி 2322

மறுமைக்கான தேடல்

20 Oct, 05:39


#ஸஹாபாக்கள் ✨️

யார் ஸஹாபாக்களை பற்றி தவறாகப் பேசுகிறாரோ அவர் சரியான பாதையில் இல்லை!

- இமாம் இப்னு தைமிய்யா (ரஹி)

மறுமைக்கான தேடல்

20 Oct, 04:14


*ஹதீஸ் : 905*

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா.?! என்று கேட்டார்கள்.

மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்!

(அவை:)

சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும்.

பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும்.

ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும்.

இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 421.

மறுமைக்கான தேடல்

18 Oct, 11:36


உங்கள் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ள அல்லாஹ்விடம் இவ்வாறு  பிரார்த்தியுங்கள் :

اَللَّهُمَّ جَدِّدِ الْإِيْمَانَ فِيْ قُلُوْبِنَا

அல்லாஹும்ம ஜத்திதில் ஈமான ஃபீகுலூபினா.

இறைவா! எமது உள்ளங்களில் ஈமானைப் புதுப்பிப்பாயாக!

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இம்ரு (ரலி).
நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 1590.