4321 basic acupuncture

@basicacupuncture


4321 basic acupuncture

06 Sep, 11:43


👆
தாகமின்மை,
அதிக தாகம்,
பசியின்மை,
அதிக பசி,
குறிப்பிட்ட ஒரு உணவை
அல்லது குறிப்பிட்ட ஒரு சுவையை அதிகம் உண்ணுதல்,
உடல் எடை குறைய,
தீய பழக்கங்களை ( புகைப்பழக்கம்/ மதுப்பழக்கம் ) குறைத்துக் கொள்ள
உதவக்கூடிய அக்குபஞ்சர் புள்ளி பற்றிய காணொளி இது,

4321 basic acupuncture

06 Sep, 11:43


Video from Mohan

4321 basic acupuncture

06 Sep, 07:45


*point number 21 thirst :-*

*Point number 23 hunger :-*

பசியும் / தாகமும் மனித இயல்பே,

ஆனால் பசியே எடுப்பதில்லை/ தாகம் அதாவது தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உந்துதலே இல்லை என்பவர்களுக்கும்

அல்லது

அதிகப்பசி, எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தி இல்லை / தீராத தாகம்,
வயிறு முட்ட தண்ணீர் குடித்தாலும் தாகம் தீரவில்லை என்பவர்களுக்கும்
இந்த புள்ளிகளை பயன்படுத்தலாம்.

உடல் எடை குறைக்கவும் /
போதை பழக்கத்தை கைவிடவும் கூட,
இந்த புள்ளிகள் பயன்படுத்தப்படுகிறது.

4321 basic acupuncture

05 Sep, 02:31


Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LY6sXHRsXAN0OTbhCgd0Pv

*விளம்பரங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது*

*இறையருளால் வரும் ஞாயிறு அன்று வகுப்பு தொடங்கப்படும்*

*Head Office :-*

எத்தனையோ கிளை அலுவலகம் இருந்தாலும்,
அவை அனைத்தும்
ஒரு தலைமை அலுவலகத்திற்கு கட்டுப்பட்டு செயல்படும்.

அதுபோலத்தான்

நம் உடம்பிலும் ஏகப்பட்ட உறுப்புகள் செயல்பட்டாலும்,
இவை முக்கியமாக
ஒரு தலைமை உறுப்புக்கு கட்டுப்படுகிறது,
அதுதான் மூளை.

இந்த வகுப்பில்

மூளை சார்ந்த
👉 Anatomy
👉 Physiology
👉 Pathology

அதாவது

_மூளையின்
வடிவமைப்பு

_மூளையின் இயங்கு விதம்

_மூளை பாதிப்பால் ஏற்படும் நோய்கள்

சார்ந்த பாடங்கள் இடம் பெறும்.

Disclaimer :-

இந்த வகுப்பில் சிகிச்சை முறைகள் எதுவும் இடம்பெறாது.

☯️

வகுப்பில் இடம் பெறுபவைகள் :-

🎯 தலைமை அலுவலகம் போல செயல்படும் மூளை சார்ந்த பாடங்கள்.

🎯 மூளை பாதிப்பால் ஏற்படும்
உளவியல் சார்ந்த பாதிப்புகள்

🎯 மூளைக்கு புத்துணர்வு தரும் பயிற்சிகள்

🎯 மூளைக்கு ஊட்டம் தரும் உணவுகள்

🎯 மூளை சார்ந்த சுவாரசியமான தகவல்கள்

போன்றவை இடம் பெறும்.

☯️

மரபுமுறை மருத்துவர்களுக்கு இந்த வகுப்பு
உபயோகமாக இருக்கும்.

எளிய தமிழில் தெளிவான விளக்கங்களுடன் வகுப்பு நடைபெறும்.

இது ஒரு நன்கொடை வகுப்பு
நன்கொடை ரூபாய் 500 மட்டுமே

மிக்க அன்புடன்
ஹீலர் மோஹன்
https://wa.me/919092705455

💐

4321 basic acupuncture

05 Sep, 02:31


Head Office
( Class about Brain )

ஒரு தேசத்தை காக்க வேண்டியது மன்னரின் பொறுப்பு.

ஆனால் மன்னர்y
தெரு தெருவாக அலைந்து திரிய இயலாது.

பல்வேறு ஒற்றன்'கள் தேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருப்பார்கள்.

ஆங்காங்கே நடக்கும் முக்கிய நிகழ்வுகளை
மன்னரிடம் வந்து தெரிவிப்பார்கள்.

மன்னர் அந்த பிரச்சனைக்கு ஏற்றவாறு தீர்வுகளை தருவார்.

அதுபோலவே தான்,

உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து
வலி சமிக்ஞை அனுப்பும் நரம்பு
( Nociceptive Nerve )
உள்ளது.

இவை மூளைக்கு வலி சார்ந்த செய்தி அனுப்பும்.

வலி சமிக்ஞை அனுப்பும் நரம்பு = ஒற்றன்

மூளை = மன்னர்

☯️

வலி கடத்தும் நரம்புகள் இரண்டு வகை உள்ளது,
அதை
Type C Fibres
Type A Fibres
என அழைப்பார்கள்.

இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்.

Type C Fibres = மிகவும் மெல்லியது

Type A Fibres = மெல்லியது
_

Type C Fibres = மேல் உறை அற்ற நரம்பு

Type A Fibres = மேல் உறை உள்ள நரம்பு
_

Type C Fibres = A Fibres உடன் ஒப்பிடுகையில் குறைந்த வேகத்தில் வலிகளை கடத்தும்.

Type A Fibres = C Fibres உடன் ஒப்பிடுகையில் அதிக வேகத்தில் வலிகளை கடத்தும்.
_

Type C Fibres = மந்தமான வலி / எரிச்சலான வலி உண்டாகும்.

Type A Fibres = குத்தும் வலி /
உஷ்ணமான வலி உண்டாகும்.
_

Type C Fibres = துல்லியமாக வலி உள்ள இடம் தெரியாது.

Type A Fibres = துல்லியமாக வலி உள்ள இடம் தெரியும்.

☯️

*Hyperalgesia :-*

சிறு பாதிப்பிற்கு கூட அதிக அளவில் வலி உணர்தல்.

இரண்டு நபர்களுக்கு ஒரே மாதிரி அடிபடுகிறது

உதாரணம்

ஒரு கல் / சிறு துண்டு செங்கல் காலில் விழுகிறது

A என்கிற நபர்
காலில் விழுந்த துண்டு செங்கலை தூக்கி எறிந்து விட்டு
அடிபட்ட இடத்தை நன்கு தேய்த்து விட்டு சென்று விடுகிறார்.

Hyperalgesia
உள்ள
B என்கிற நபர்
துண்டு செங்கல் காலில் விழுந்ததும்
ஐயோ அம்மா எனக்கு கத்தி
துள்ளி துடிக்கிறார்,
கண்ணீர் விட்டு அழுகிறார்.

☯️

*Allodynia :-*

பொய் வலி,

உதாரணம்
தலைவலி என்பது
கண்களில் ஏற்படும் பாதிப்பு / நரம்பு கோளாறு
etc
காரணங்களால் தலைவலி உண்டாகும்.

ஆனால்

உண்மையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல்
வலியை உணர்வார்கள்.

அணிந்திருக்கும் ஆடை தோலை உரசுதல். குளிர்ந்த நீர் தோலை தொட்டு சொல்லுதல்
போன்றவை கூட
பொய் வலியை தூண்டும்.

☯️

*Dysesthesia :-*

Unpleasant / Abnormal Sensation
தோலில் விரும்பத்தகாத உணர்வுகள் உண்டாகுதல்.

_தோல் எரிச்சல்
_தோல் அரிப்பு
_தோலில் ஷாக் அடித்தது போன்ற விர்ரென்று உணர்வு உண்டாகுதல்
_தோல் தானாக துடித்தல்

குறிப்பிட்ட ஒரு பாகம் என்று இல்லாமல்
உடலில் பல்வேறு இடங்களில் இது உண்டாகும்.

☯️

*Paraesthesia :-*

இது சற்று கடினமான பாதிப்பு,

இதை pins & needles
என அழைப்பார்கள்.

அதாவது ஸ்டாப்ளர் பின் / குண்டூசி
இவை தனித்தனியாக இருக்கும் இரண்டு காகிதங்களை இணைக்க பயன்படுத்துவார்கள்.

அதற்கு பதிலாக

ஸ்டாப்ளர் பின்னை உடலில் அடித்தால் எப்படி இருக்குமோ?

குண்டூசியை உடலில் குச்சி குச்சி எடுத்தால் எப்படி இருக்குமோ

அதுபோன்ற வலியை இது உண்டாக்கும்

இது உடலின் பல பாகங்களில் ஏற்படும் என்றாலும்
குறிப்பாக கை மற்றும் கால்களில் இது அதிகமாக உண்டாகும்.

இதுபோன்ற வலிகளுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் உள்ளது
அது என்னவென்றால்.....

4321 basic acupuncture

05 Sep, 02:30


Photo from Mohan

4321 basic acupuncture

04 Sep, 14:04


*Head Office :-*
*( Class about Brain )*

1️⃣ *மூளை பத்து சதவீதம் தான் பயன்படுத்தப்படுகிறதா ?*

நீண்டகாலமாக ஒரு கூற்று உள்ளது,
மூளை மிகத் திறமையான உறுப்பு ஆனால் நாம் அதில் பத்து சதவீதம் மட்டும் தான் பயன்படுத்துகிறோம் என்று,

பத்து ரூபாய் காயின் செல்லாது என யாரோ வதந்தி கிளப்பியது போலத்தான்
இந்த 10% மூளை வேலை செய்கிறது என்பதும்.

நாம் 100% மூளையை பயன்படுத்துகிறோமோ இல்லையோ,
மூளை தன் 100% பரிபூரணமாக வேலை செய்கிறது.

நாம் உறங்கும்போது கூட
மூளை உறங்காமல் தொடர்ந்து பணி செய்து கொண்டே தான் உள்ளது.

மூளை பத்து சதவீதம் வேலை செய்கிறது என்பது ஒரு பொய் கருத்து.

2️⃣ *மூளை முழுமை பெறும் வயது :-*

நாம் பிறக்கும் போதே முழுமையான மூளை'யுடன்தான் பிறக்கிறது.

குழந்தை
சிறுவன்
இளைஞன்
என பருவம் மாற மாற
மூளையின் உட்கட்டமைப்பும் அட்ஜஸ்ட் செய்யப்படும்.

நம்முடைய பழக்க வழக்கங்களை அனுசரித்து
அதில்
Neural pathway
கட்டமைக்கப்படும்.

அந்த வகையில் மூளை முழுமை பெறும் வயது 25 .

3️⃣ *மூளையும்_வலியும்*

நம் உடலில் ஒரு வலி உண்டானால் அதை நாம் உணர்வதற்கு மூளையின் சிக்னல் தேவை.

நம் உடலில் எங்கு வலி உண்டானாலும்,
வலி உள்ள இடத்திலிருந்து நரம்பு மூலம் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும்.

மூளை அதை பெற்றுக்கொண்டு
மறு சிக்னல் அனுப்பும்.

அப்போதுதான் அந்த வலியை நாம் உணர்கிறோம்.

இது மின்னல் வேகத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பம்.
அதாவது
உங்களுக்கு அடிப்பட்ட அடுத்த வினாடி நீங்கள் வலியை உணர்கிறீர்கள் என்றால்
அதற்குள் இந்த தகவல் பரிமாற்றம் நடந்து முடிந்து உள்ளது.

நம் உடலில் எங்கு அடிபட்டாலும் அதை உணர்வதற்கு நமக்கு மூளை தேவை.

ஆனால் மூளையில் அடிபட்டால் அதை நம்மால் உணரவே இயலாது

காரணம்

வலியை உணரும்
Nociceptors
எனும்
Sensory fibre
மூளையில் இல்லை.

4️⃣ *மூளையின் எடை :-*

முழுதாக வளர்ந்த மனிதனின்
( Adult )
மூளை என்பது
ஒரு கிலோ 200 கிராம்
தொடங்கி
ஒரு கிலோ 400 கிராம் வரை இருக்கும்.

இதில் ஆண் பெண் வேறுபாடு உண்டு.

ஒரு வளர்ந்த பெண்ணின் மூளை என்பது தோராயமாக ஒரு கிலோ 200 கிராம் இருக்கும்.

ஒரு வளர்ந்த ஆண் மூளை என்பது தோராயமாக
ஒரு கிலோ 400 கிராம் இருக்கும்.

பெண்ணின் மூளையை விட
ஆணின் மூளை 10 சதவீதம் பெரியது

இந்த எடை வேறுபாடு என்பது குழந்தை பருவத்தில் தொடங்கி விடும்

பெண் குழந்தையை விட × ஆண் குழந்தையின் மூளை எடை அதிகம்

சிறுமியின் மூளையை விட ×
சிறுவனின் மூளை எடை அதிகம்

இந்த ஆண் / பெண் வேறுபாடு என்பது,
மூளையில் மட்டுமல்ல
எலும்பின் அடர்த்தி &
தசையின் வலிமை தொடங்கி
பல்வேறு இடங்களில் பாலின வேறுபாடு உண்டு.

மூளையின் அளவிற்கும் மூளையின் ஆற்றலுக்கும் தொடர்பில்லை.

5️⃣ *மூளை_Memory :-*

நம் அனைவரின் கையிலும் செல்போன் உள்ளது.

இதில் ஆரம்பத்தில்
1 GB
2 GB
என
Memory card
பயன்படுத்தினோம்.

பிறகு அது
4 GB
8 GB
16 GB
என அதிகரித்து தற்போது
1 Terabyte ( 1024 GB )
வரை நாம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.

நமது மூளையை நினைவு அட்டையுடன்
( Memory card )
ஒப்பிட்டுப் பார்த்தால்.

நம் மூளையில் தோராயமாக
25 லட்சம் GB
( 25,00,000 Gigabytes )
உள்ளது.

இதன் நீளத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்.

இன்று காலை டிவியை நீங்கள் ஆன் செய்து,
ஒரு சேனலை ஓட விட்டால்,

அந்த டிவி தொடர்ந்து
300 வருடங்கள் நிற்காமல் ஓடினால் தான்,
25 லட்சம் GB
செலவாகும்.

ஒரு நாளிற்க்கு
தோராயமாக
நாம் 75 GB
வரை மூளைக்கு input
அளிக்கிறோம்.

இரவு உறக்கத்தின் போது
பகலில் நாம் consume செய்த தேவையற்ற பதிவுகள் அழிக்கப்படும்.

6️⃣ *Neuro Anatomy :-*

Structure of brain

நியூரோ-அனாடமி என்றால் மூளையின் வடிவம் பற்றிய படிப்பு.

அதாவது மூளையின் என்னென்ன பாகங்கள் உள்ளது

அது எவ்வாறு உள்ளது என்கிற
உறுப்பின் அமைப்பு சார்ந்த குறிப்புகள்.

7️⃣ *Neuro Science :-*

Functions of brain

மூளையின் செயல்பாடுகள் பற்றிய படிப்பு

மூளையில் உள்ள பல்வேறு பாகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்கிற குறிப்புகள்.

8️⃣ *Neuro Pathology :-*

Disease of brain

மூளை சார்ந்த நோய்கள் /
நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள்

மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பால்
ஏற்படும் நோய்கள்
பற்றிய குறிப்புகள்.

https://chat.whatsapp.com/LY6sXHRsXAN0OTbhCgd0Pv

4321 basic acupuncture

04 Sep, 11:46


வாதம் , பித்தம் , கபம்

*வாதம்*
ஒருவர் உடம்பில் வாதம் அதிகமாக இருந்தால் அவரது நகம் உலர்ந்து இருக்கும் ( dry nails )
நகம் எளிதில் உடைந்துவிடும்

*பித்தம்*
ஒருவர் உடம்பில் பித்தம் அதிகமாக இருந்தால்..
அவருடைய நகம் எளிதில் வளைய கூடியதாகவும்.. மெல்லியதாகவும்.. இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்

*கபம்*
ஒருவர் உடம்பில் கபம் அதிகமாக இருந்தால்.. அவருடைய நகம் மொத்தமாகவும்.. கடினமாகவும் இருக்கும்..
எண்ணெய் பூசியது போல் பளபளவென்று இருக்கும்

4321 basic acupuncture

04 Sep, 11:45


Nail diagnosis

நகத்தின் பிறை

ஜீரணம் சரியாக நடப்பதை குறிக்கிறது

💅

நகத்தின் பிறை மிகச் சிறியதாக இருந்தால்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதைக் குறிக்கிறது

💅

நகத்தில் பிறை இல்லாமல் இருந்தால்

மனம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளது என்று அர்த்தம்

💅

ஊதா நிற நகம்

ரத்த தேக்கத்தை குறிக்கிறது

💅

நகத்தில் வெள்ளை புள்ளிகள்

ஊட்டச்சத்து குறைபாட்டை குறிக்கிறது

💅

வெளிறிய நகம்

இரத்தப் பற்றாக்குறையை குறிக்கிறது

💅

நகத்தில் குறுக்கு கோடுகள்

தோல் நோய் , சர்க்கரை நோயை குறைக்கிறது

💅

நகத்தில் நீளமான கோடுகள்

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் முதுமையின் தொடக்கத்தை குறிக்கிறது

💅

மஞ்சள் நிற நகம்

உடல் உஷ்ணம் , புகைப்பழக்கம் , நுரையீரல் பிரச்சனைகளை குறிக்கிறது

💅

எளிதில் உடையும் நகங்கள்

கல்லீரல் குறைபாட்டை குறிக்கிறது

💅

நகத்தில் கருப்பு கோடு

புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்பதை குறிக்கிறது

4321 basic acupuncture

03 Sep, 02:49


Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LY6sXHRsXAN0OTbhCgd0Pv

*Head Office :-*

எத்தனையோ கிளை அலுவலகம் இருந்தாலும்,
அவை அனைத்தும்
ஒரு தலைமை அலுவலகத்திற்கு கட்டுப்பட்டு செயல்படும்.

அதுபோலத்தான்

நம் உடம்பிலும் ஏகப்பட்ட உறுப்புகள் செயல்பட்டாலும்,
இவை முக்கியமாக
ஒரு தலைமை உறுப்புக்கு கட்டுப்படுகிறது,
அதுதான் மூளை.

இந்த வகுப்பில்

மூளை சார்ந்த
👉 Anatomy
👉 Physiology
👉 Pathology

அதாவது

_மூளையின்
வடிவமைப்பு

_மூளையின் இயங்கு விதம்

_மூளை பாதிப்பால் ஏற்படும் நோய்கள்

சார்ந்த பாடங்கள் இடம் பெறும்.

Disclaimer :-

இந்த வகுப்பில் சிகிச்சை முறைகள் எதுவும் இடம்பெறாது.

☯️

வகுப்பில் இடம் பெறுபவைகள் :-

🎯 தலைமை அலுவலகம் போல செயல்படும் மூளை சார்ந்த பாடங்கள்.

🎯 மூளை பாதிப்பால் ஏற்படும்
உளவியல் சார்ந்த பாதிப்புகள்

🎯 மூளைக்கு புத்துணர்வு தரும் பயிற்சிகள்

🎯 மூளைக்கு ஊட்டம் தரும் உணவுகள்

🎯 மூளை சார்ந்த சுவாரசியமான தகவல்கள்

போன்றவை இடம் பெறும்.

☯️

மரபுமுறை மருத்துவர்களுக்கு இந்த வகுப்பு
உபயோகமாக இருக்கும்.

எளிய தமிழில் தெளிவான விளக்கங்களுடன் வகுப்பு நடைபெறும்.

இது ஒரு நன்கொடை வகுப்பு
நன்கொடை ரூபாய் 500 மட்டுமே

மிக்க அன்புடன்
ஹீலர் மோஹன்
https://wa.me/919092705455

💐

4321 basic acupuncture

03 Sep, 02:49


*Head Office :-*
*( Class about Brain )*

*Depression :-*

இன்றைய தேதியில்
டிப்ரஷன் என்கிற வார்த்தை என்பது பலராலும் எளிதாக சொல்லப்படுகிற வார்த்தையாக உள்ளது.

பெரியவர்கள் தொடங்கி
இளைஞர்
சிறுவர் சிறுமி வரை கூட
" ஏற்கனவே நான் Depression'ல இருக்கேன்,
இதுல நீ வேற "
என சொல்லும் அளவிற்கு
அனைவரும்
Depression வார்த்தையை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

ஆனால் உண்மையில்
Head Office படி
Depression
என்றால் என்னவென்று பார்ப்போம்.

☯️

*Depression ஏற்பட காரணங்கள் :-*

👉 Family history :-

குடும்ப உறுப்பினர் மது பழக்கத்திற்கு ஆளாகுதல்.

குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்தல்

குடும்ப வன்முறை

👉 Childhood Experience :-

ஒற்றைப் பெற்றோருடன் வசித்தல்,( single parent )

அதாவது

பெற்றோர் விவாகரத்து செய்தல்
அல்லது
பெற்றோரில் இருவரில் ஒருவர் இறந்துவிடுதல்.

குழந்தை பருவத்தில் ஏற்படும்
பாலியல் சீண்டல் / வன்புணர்வு

குழந்தை பருவத்தில் ஏற்பட்ட வறுமை.

👉 Personality :-

_Neuroticism = நரம்பியல் வாதம் / நரம்பு சார்ந்த பாதிப்புகள்

_Insecure = பாதுகாப்பற்ற மனநிலை

_Dependent = சுயமாக தனித்து இயங்காமல், பிறரை சார்ந்தே இருத்தல்

_Obsessional = விடாப்பிடியாக எண்ணங்கள் மனதில் உற்பத்தியாகி கொண்டே இருத்தல்

👉 Recent Stressors :-

நீண்டகால உடல்நிலை பாதிப்பு

பொருளாதார சார்ந்த பாதிப்புகள்

குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்படும் சிக்கல்கள்

கல்வி சார்ந்த இடர்பாடுகள்

👉 Extra :-

தனிநபர் / குடும்பம் என்று இல்லாமல்
சுற்றியுள்ள சமுதாயத்தால் ஏற்படும் பாதிப்புகள்.

☯️

👉 குறைந்த கால மன அழுத்தத்தின் அறிகுறிகள் :-

🎯 எந்த ஒரு காரணமும் இல்லாமல்
சோர்வாக உணர்தல்

🎯 ஒரு வித பதட்டமாக இருத்தல்

🎯 அவநம்பிக்கையாக உணர்தல்

🎯 தன்னைத்தானே வெறுத்தல்

🎯 மன அமைதியின்மை / படபடப்பு

🎯 காரணம் இன்றி முகத்தை சோகமாக வைத்திருத்தல்.

☯️

👉 நீண்ட கால மன அழுத்தத்தின் அறிகுறிகள் :-

🎯 Depression எனப்படும் மன அழுத்தம் என்பது எப்போதாவது ஏற்படாமல்
தினமும் ஏற்படுதல்.

🎯 மகிழ்ச்சி தரும் செயல்களில்
( கேளிக்கை / பொழுதுபோக்கு )
எதுவும் ஈடுபடாமல் எப்போதும் வெறுப்பாக உணர்தல்

🎯 அளவிற்கு அதிகமாக பசி உண்டாகுதல்
அல்லது
பசி என்கிற உணர்வு தோன்றாமை

🎯 உடல் எடை கணிசமாக அதிகரித்தல்
அல்லது
உடல் எடை கணிசமாக குறைதல்

🎯 தூக்கமின்மை
அல்லது
அதீத தூக்கம்
உண்டாகுதல்.
( அதாவது சமச்சீரான அளவு இல்லாமல்
செயல்பாடுகள்
ஒன்று
மிகையாக தென்படுதல்
அல்லது
குறைவாக தென்படுதல் )

🎯 பரபரவென அலைபாயுதல்.
உடல் அசைத்து கொண்டே இருத்தல்
அல்லது
உடல் இயக்கம் இல்லாமல் சிலை போல இருத்தல்

🎯 சக்தி குறைவாக சோர்வாக உணர்தல்

🎯 சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகுதல் /
தன்னுடைய பிழை இல்லாமல்
பிறருடைய பிழைக்கும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகுதல்

🎯 குறிப்பிட்டு ஒரு விஷயத்தில் கவனத்தை குவிக்க இயலாமல்,
அதிகமாக கவன சிதறல் ஏற்படுதல்.

4321 basic acupuncture

03 Sep, 02:49


Photo from Mohan

4321 basic acupuncture

02 Sep, 08:06


👆Oral Diagnosis பதிவை முதலில் இருந்து படிக்க வேண்டும் என நினைக்கும் நபர்கள்,
நான் Tag
செய்த இடத்திலிருந்து படிக்கத் தொடங்கவும்.

💐

4321 basic acupuncture

02 Sep, 08:03


Oral Diagnosis :-

கடந்த சில நாட்களாக
Oral Diagnosis
மூலம்
நோய் அறிதல் பற்றிய பதிவுகளை பார்த்து வந்தோம்.

அதாவது நாடியை பார்க்காமல்
ஒரு நபரிடம்
தீர விசாரித்து நோய்களை கண்டறியும் முறை.

பெரும்பாலும் ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த முறையை பின்பற்றுவார்கள்.

இதை அக்குபஞ்சர் மருத்துவத்திலும் எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி பார்த்தோம்.

இன்று சிகிச்சை முறையை பார்க்கலாம்.

👉 நோயாளி பேசும் விதம்

👉 உடல் திரவங்கள்

👉 பிடிக்கும் சுவைகள் / வெறுக்கும் சுவைகள்

👉 பிடிக்கும் நிறங்கள் / வெறுக்கும் நிறங்கள்

👉 ஒத்துக் கொள்ளும் பருவ நிலை மாற்றம் /
உடலுக்கு எதிர்வினை ஆற்றும் பருவநிலை மாற்றம்

போன்ற விஷயங்களை கேட்டறிந்து
குறிப்பிட்ட நபருக்கு
எந்த மூலகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து
பின் வரும் புள்ளிகளில் ஊசி செலுத்த வேண்டும்.

1, Source Point

2, Luo Connecting point

3, Xi Cleft point

4, Front Alarm Point

5, Back Alarm Point



உதாரணத்திற்கு
ஒரு நோயாளிக்கு
தொடர்புடைய மூலகம் என்பது
காற்று என கண்டறிந்தால்,
காற்று சார்ந்த Yin உறுப்பான
நுரையீரல் புள்ளிகள்

1, Source Point = Lu-9

2, Luo Connecting point = Li-6

3, Xi Cleft point = Lu-6

4, Front Alarm Point = Lu-1

5, Back Alarm Point = Ub-13

பயன்படுத்த வேண்டும்.

💐

2,418

subscribers

395

photos

35

videos