மருந்தில்லா மருத்துவம்🩺

@marundhillamarutuvam


நோயில்லா வாழ்வியலை நோக்கி - உணவை மருந்தாக்கி ~ வாழ்வியலை நிரந்தரமாக்கி வாழ வழிகாட்டும் சேனல்

Acupuncturist | Ashif shaikh - t.me/Ashifshaik

மருந்தில்லா மருத்துவம்🩺

20 Oct, 07:48


ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ....

ஸ்டாக் மார்கெட்டின் அதிபதி, 13000 கோடியில் இருந்த அவரது சொத்துகளின் மதிப்பு நிலை , பணத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத கோடீஸ்வரர்.

எத்தனை கோடிகள் இருந்தாலும், தினமும் உண்பது சிறிதளவு உணவு, சிறிதளவு நீர், இதற்கு ஏன் நான் பிரமாண்டமாக சம்பாதித்தேன்.! என கேட்டவர், மருத்துவர்களிடம் கூறிய வார்த்தை பிரபலமாக பேசப்பட்டது. .

ஆம் .., " எனது வலிகளை குணமாக்கி விடுங்கள் கோடியில் உங்களுக்கு பீஸ் தருகிறேன் " ..! என்றார். ஆனால் அவரது வலிகளை யாராலும் எந்த மருந்தாலும் மருத்துவத்தாலும் குணமாக்க முடியவில்லை..! தோற்றனர்.

ஆரோக்கியத்தை கவனிக்காமல் சம்பாதித்த அனைத்தும் சில காலங்கள் பிரமாண்டமாக பார்க்கப்பட்டாலும் நோய் நொடி வந்தபின் அவைகள் பிரயோஜனமற்றதாக போகின்றன. " ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கின்றேன்", என்ற வரி மிக அற்புதமானவை .. இவர்களை சந்தித்து அவர்களின் மனதுடன் ஒருங்கிணைந்து பாருங்கள் ஆனந்த கண்ணீரில் உங்களது கனத்த உடலும் மனமும் லேசாகி நோய் அகலும் ..

உடலும் மனமும் உன்மையானது. பணம் பொருளாதாரம் தேவைக்கு அதிகமாக மாறினால் உடலையும் மனதையும் கனத்து போகச்செய்யும்.!

இது மருந்தில்லா மருத்துவமாகும்...

#Marundhillamaruthuvam | #naturaltreatment | #Ashifshaikh.pune

மருந்தில்லா மருத்துவம்🩺

19 Oct, 01:51


தானியங்களில் நச்சுகள் எப்படி கலக்கின்றன ...!!

ஆம் உலர்ந்த தானியங்களில் ஈரத்திற்கு பின் உலர்தல் செய்யப்படும் போது ..அதில் சில தானியங்கள் கூடுதல் சேர்க்கை மூலமாக பூஞ்சை உருவாகிறது. அந்த பூஞ்சை வெளிவிடும் நச்சுகள் கல்லீரலில் பாதிப்பை உருவாக்கும்.!!

ஆம் பாலிதீன் பையில் அடைத்து விற்கும் மாவு பொருள் வாங்கி பயன்படுத்துவது அல்லது உணவகத்தில் சாப்பிடுபவர்களா.!? கவனம் இல்லையேல் ஆபத்து கண்டிப்பாக ஏற்படும். இது நுகர்வு காலம் ( வணிக நோக்கம் அதிகமுள்ள காலம்) பழூப்பு நிற மிளகாய் போன்றவற்றில் நச்சுகள் அதிகமாகவே உள்ளன. வீட்டில் சமைத்து உண்பதும், வீட்டில் மிளகாய், மாவு அரைத்து சேமிப்பதும், அக்காலம் முதலே இருந்து வருகிறது.

மாநகரங்களில் இது சாத்தியமற்றதாக இருக்கிறது. எனவே கிராம மக்களிடம் அல்லது அரவை மிஷின்களில் தானியங்கள் கொடுத்து அரைத்து வைத்து பயன்படுத்துவது சிறந்தது....

தடிமனான அரிசி பயன்படுத்தி சமைப்பவராக இருந்தால் அரிசியை ஊறவைத்து சமைத்து பொங்கி வடித்து சாப்பிடுவது சிறந்தது. உங்களது கவனக்குறைவுதான் நோயௌ தொற்றுக்கு காரணமாகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கிறது.!!

இது மருந்தில்லா மருத்துவமாகும்.

#foodsupplement | #Marundhillamaruthuvam | #Ashifshaikh.pune

மருந்தில்லா மருத்துவம்🩺

17 Oct, 07:18


40 வயதை தாண்டினால் முதிர்வு இயலாமை பயம் என அமைதியாகின்றனர்...! இந்த வயதில் ஓங்கி சத்தமாக பேச முடியாமல் மெதுவாக பேசுகின்றனர். காரணம் கேட்டால் டாக்டர் கத்தி பேசவேண்டாம் என சொன்னார்கள்... அதனால் இருதய பிரச்சனை அதிகரிக்கும் இருதயம் சோர்வடையும் துடிப்பை குறைத்துக்கொள்ளும் என பல அச்சுறுத்தல்களை போட்டுவிட்டனர்...!!

எனது பேஷண்ட்டை பொதுவாக நான் கண்காணிப்பது வழக்கம். தொடர்ந்து எனது தொடர்பில் ஆலோசனை பெறுவார்கள். இதுவரை தொடர் ஆலோசனையில் இருதய பிரச்சனை உள்ளோரது உடல் இயக்கத்தை மேலோங்க செய்துள்ளபடி அமைத்துள்ளேன்.!!

இருதய தசைக்கும் அதன் பலத்திற்குமான உணவு, இரத்தம் அதன் நாளங்கள் ஆரோக்கியத்துடன் தெம்பாக இயங்க தட்பவெப்ப சூழல், முறையான ஆறுதலான பயிற்சி என அனைத்தையும் மென்மையாக கொடுத்து அவர்களை பயத்திலிருந்து மீட்டுள்ளேன்.

பேஷண்டுடன் இருந்தபோது அவர்களை தண்ணீரில் குதித்து விளையாடவும், நீந்தவும், உடலை நீரில் மிதக்க வைத்தும், குளித்தபின் ஓய்வாகி உடல் தட்பவெப்பம் சமன்செய்தபின் கிடைக்கும் உணவை பசியுடன் சாப்பிட்டு குட்டி உறக்கம் கொடுத்து அழகுப்படுத்தியுள்ளேன்.

ஒரு பயம்தான் உங்களை செயழிலக்க செய்கிறது. அந்த பயத்தை நீக்க முறையான மனப்பயிற்சி - உடற் பயிற்சி - மூச்சு பயிற்சி - உள் இயக்க பயிற்சி என ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள் அவசியமாகும்.

ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள் / நோய் அறிகுறி அதுவாக அகலும்..!

இது மருந்தில்லா மருத்துவமாகும்.
#Ashifshaikh.pune | #Marundhillamaruthuvam | #Lifestyle | #changelife | #foodsupplement

மருந்தில்லா மருத்துவம்🩺

16 Oct, 06:37


உலக உணவுதினம் இன்று 16 அக்டோபர் 2024,

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை உணவு கடைகள் இருந்ததில்லை ..! பட்டினியுடன் இருந்தோரது எண்ணிக்கையின் சதவீதம் அதிகரித்தே இருந்தது. தற்போதைய 2024 ல் பசியுடன் உறங்குவோரது எண்ணிக்கை இருக்கவே செய்கிறது.!!

காரணம், விலையேற்றம் நகரமயமாதல், உணவை வீணாக்குதல், எல்லா உணவுப்பொருளும் அதிக விலை கொடுத்து வாங்க தயாரான பெருவாரியான மக்கள், ஆடாம்பர பிரமாண்ட உணவு ரகங்கள், இலவச தானியங்களை விலைக்கொடுத்து வியாபாரமாக செய்யும் ஒரு கூட்டம் என பல வகைகளில் உணவுகள் சிதறி செல்கிறது.

உணவுப்பொருளை வியாபாரமாக கொண்டு சென்றுள்ள இந்த தருணத்தில் இரவு பசியுடனே உறங்கும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.

என்னுடைய தேவையறிந்து அன்றைக்கு பயன்படுத்தும் காய்கறி உணவு தானியங்களை ஒரு வாரத்திற்கு சேமிப்பதில் தவறில்லை. ஆனால் விலையேற்றம் எனக்கூறி மொத்தமாக அள்ளிச்சென்றால் தட்டுப்பாடு ஏற்படுகிறது...!! வசதி உள்ளோர்களுக்கு உணவு என்பது எளிதாகி, அன்றாடங்காய்ச்சிக்கு உணவின் விலையேற்றம் பெரும் சுமையாகிறது..!

விருந்தோம்பலில் ஏக ரக உணவுகளை சமைத்து "ஆடம்பரத்தை" காண்பிக்கும் நோக்கில் செயல்படுவது அதனால் உணவை விரையமாக்கி குப்பைக்கு செல்வது போன்றவை குறைய வேண்டும். ஒரு குடும்பத்தில் 5 நபர்கள் ஹோட்டல் சென்றால் அங்கு குடும்ப பேக் உணவு வாங்கி அதில் எத்தனை ரகங்கள் சாப்பிட்டு மீதமாகிறது என்பதையும் .. சுவையற்ற கெட்டுப்போன உணவு என எத்தனை ரகங்களை வெளியில் கொட்டுகிறோம் என்பதை யோசித்து பாருங்கள்.

எனவே தேவையறிந்து உணவு சமைத்து சாப்பிடுங்கள். மிச்சமாகும் அளவிற்கு உணவை சமைத்து குப்பையில் கொட்டிவிடாதீர்கள்.!

எல்லோராலும் பால் வாங்கிட முடியும், எல்லோராலும் தானியங்களை வாங்கிட முடிகிறது., எல்லோராலும் சமைத்து சாப்பிடக்கூடிய அளவிற்கு எளிதாக உள்ளது. என்பதை நாம் உருவாக்குவோம், நம்மை பக்குவப்படுத்துவோம்.

#Marundhillamaruthuvam | #Ashifshaikh.pune

மருந்தில்லா மருத்துவம்🩺

14 Oct, 15:29


மழைகால உணவு திட்டங்கள் / உடல் ஆரோக்கிய குறிப்புகள் :

பருவ மழை தமிழகத்தில் பெய்ய தொடங்கியுள்ளது. மழையை எதிர்கொள்ள உடலை தயார்படுத்தும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். பருவ மழை என்றதும் சுவாசித்த காற்று ஈரத்துடன் இருக்கும், அதனால் தும்மல், தலைகனம், சளி, காய்ச்சல், உடல் நடுக்கம், போன்றவை நிகழ்ந்தால்... அல்லது வரும்முன் காப்பது ...

வறுத்த மிளகு, வறுத்த கொத்தமல்லி, கருப்பட்டி, கொஞ்சமாக சோம்பு போன்றவைகளை அரைத்து எடுத்து நீரில் விட்டு காய்ச்சி வடிகட்டி பருகலாம்...

இது உடலை உஷ்ணமாக்கும்.

டீ பருகுபவர்கள் சுக்கு அரைத்து டீயில் போட்டு உஷ்ணமாக பருகலாம்...

உணவில் சுட்ட உணவான வறுத்த வேர்கடலை, சுட்ட மக்காசோளம், வறுத்த இறைச்சி, இஞ்சி, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு சமைத்த குழம்பு அல்லது கிரேவி - சூடான சோறு போன்றவை சூடாகவே பரிமாறலாம்.

வெளிப்புற சூழலில் உடலை உஷ்ணமாக்க - கற்பூரம் அல்லது விறகு, தீ கரி போன்றவை பயன்படுத்தி தீ மூட்டி அதனை சுற்றி அமர்ந்து கொள்வது. கால் கைகளை காண்பித்து உஷ்ணமாக்கிக்கொள்வது.

காய்ச்சல் ஏற்பட்டால் மேற்கண்ட பானங்கள் ( கசாயமாக செய்து) பருகுவது..

சுடுநீரில் குளிப்பது, குடிப்பது, போன்றவை செய்துகொள்ளலாம்.
இது மருந்தில்லா மருத்துவமாகும்.

#Marundhillamaruthuvam | #Lifestyle | #Ashifshaikh.pune

மருந்தில்லா மருத்துவம்🩺

13 Oct, 01:50


சக்தி (குளிர்ந்தது..) ஆன்மீக வரிகள்...

மருந்தில்லா மருத்துவம்🩺

12 Oct, 00:57


விஜயதசமியின் இந்த அதிகாலையில் பேஷண்ட் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.. இவ்வளவு அதிகாலை ஏன் போன் செய்தீர்கள் என்ன அவசரம் என கேட்டபோது..,

இரவில் கடும் கெட்ட கனவு அந்த கனவில் எனது இருதய துடிப்பு மிக மோசமாக இருப்பதை உணர்ந்தேன். அப்போது "பிரஸர்" அதிகரித்திருக்குமா என்றார்..! மூச்சிரைப்பு குறையாமல், அந்த பதட்டம் ஓயவில்லை என்றார்..! மன குழப்பமாக உள்ளது என்றார்.!!

கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் போன் செய்க எனக்கூறினேன். அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் என்பதால் "எதிர்மறையான விசயங்களை" பேசக்கூடாது. பிறகு ஒரு மணிநேரத்திற்கு பின் அமைதியாகி போன் செய்தார்.!

இப்போது அந்த பதட்டமில்லை., அமைதியாக உள்ளது என்றார்., குடும்பத்தினர் அனைவரும் பதட்டமாகவே இருந்துள்ளனர். அப்போதுதான் குவளையில் நீர் பிடித்து வைத்து அமரக்கூறி - வாசனை பூக்களை வைத்து மனதை அமைதியாக்கும் கலையை செய்யக் கூறினேன்.

நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றனர்., நிச்சயம் நீங்கள் முதலில் பேசியபோது பிரார்த்தனையில்தான் இருந்தேன் பயம் வேண்டாம். அனைத்தும் "நலவுகளாக" அமையும் எனக்கூறி வைத்தேன். ஆழ்மனதிலிந்து வருவதுதான் கனவு - அது சிலருக்கு பலித்தும் விடும், சிலருக்கு பொய்யாகிவிடும். இதனை நீர் நெருப்பு தன்மை வைத்து கரைக்க முடியும்.!!

நமது எண்ணங்கள் அனைத்தும் நீர் மற்றும் நெருப்பில் எளிதாக பதிவாகும். நேர்மறை எண்ணங்கள் உள்ளோரிடம் அமரக்கூடாது...அப்படியே அமர்ந்தாலும் நமது ஆராக்கள் அவரது எண்ணங்களை தூய்மையாக்க தயாராக வேண்டும்.! மனித இயக்கத்தோடு மறைவான விசயங்கள் உள்ளது. மனதைத்தான் அனைத்தும் குறிவைக்கும்.

மனதை அமைதிப்படுத்தி ஆரோக்கியமாக்குங்கள்.
"கவலைகளை பகிர்வோம் அது பாதியாகட்டும், மகிழ்ச்சியை பகிர்வோம் அது இரட்டிப்பாகட்டும்"

#Marundhillamaruthuvam | #Lifestyle

மருந்தில்லா மருத்துவம்🩺

11 Oct, 12:58


காய்ச்சல் வந்தால்.....!!!

காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்
1)பருவகால சூழல்,
2)உணவில் ஏற்பட்ட குழறுபடி,
3)உடல் உறுப்பில் ஏற்பட்ட சில மாற்றங்கள் ..!!

இவைகளில் எதாவது ஒன்றின் காரணத்தால் மட்டுமே காய்ச்சல் உருவாகும். பருவ கால மாற்றத்தால் சளிப்பிடிப்பது, தொன்டையில் நமநமப்பு ஏற்பட்டு கை கால் வலி போன்றவைகளை வெளிப்படுத்தி காய்ச்சல் வரும் இவற்றை கை வைத்தியமாக பத்தியத்துடன் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

உணவின் மூலம் ஏற்பட்ட காய்ச்சலையும் குணமாக்கிக்கொள்ள முடியும்.!

உடல் உறுப்பின் பிரச்சனைகளை காய்ச்சலாக வெளிப்படுத்தினால் மிக கவனத்துடன் நிதானமாக கையாள வேண்டும். காய்ச்சல் எந்த வடிவில் வந்தாலும் அவற்றின் உஷ்ணத்தை முதலில் குறைக்க வேண்டும். ஏனெனில் அதீத உஷ்ணம் மனித மூளையின் செயல்பாட்டை மாற்றிவிடும்.! மட்டுமல்ல ஊட்டச்சத்துக்களை எளிதில் ஆவியாக்கிவிடுகிறது. நீர் பற்றாகுறை ஏற்பட்டு பல தொந்தரவுகளை வெளிப்படுத்தும்.!!

எனவே காய்ச்சல் வந்தவுடன் கழிவு நீங்குகிறது என பலர் என்னிடமே கூறுகின்றனர். அவர்களாகவே இதனை கழிவுதான் வெளியேறுகிறது என அசால்டாக கூறுகின்றனர். நெருப்பு என்பது மிக லேசானது அது கீழிருந்து மேல் நோக்கி எழும் அப்போது இவற்றை முறையாக இயற்கை மருத்துவரின் ஆலோசனையுடன் சரிசெய்வதே சிறந்தது.

Heat ற்கும் Hot ற்கும் வித்தியாசங்கள் உள்ளது. ஒன்றை தொடக்கூட முடியாது. இன்னொன்றை தொட்டு பார்க்க முடியும்.

இது மருந்தில்லா மருத்துவமாகும்.

#Ashifshaikh.pune | #naturaltreatment

மருந்தில்லா மருத்துவம்🩺

09 Oct, 13:59


நீரில் உடல் மிதக்கும் அப்போது உடலின் கனம் லேசாக அமையும். அப்போது உடலின் ஆற்றல் , வேதியியல் கலவைகளின் கூட்டு சேர்மங்கள் நீரில் கரைந்து உடலை லேசாக அமைக்கும்...

ஓடும் நீர், அருவி நீர், கிணற்று நீர்(ஊற்று நீர்) இவை மனிதனின் வாத பித்த கபத்தை போக்க மிக சரியானதாகும். இவைகள் உடலின் உஷ்ண சமநிலைக்கு ஏற்பாடு செய்கிறது.

தண்ணீர் கனமானது, உடலில் நீர் வாத நிராக கோர்த்தால் மூச்சிரைப்பு, தூக்கமின்மை, பசியின்மை, செரிமான குறைபாடு, பாக்டீரியா தொற்று (புதிய உயிரி உருவாதல்) போன்றவை நிகழும்.!! உருவான இவைகள் உறுப்பை கெட்டுப்போக ஏற்பாடு செய்யும்.. அப்போதான் துர்நாற்றம் போன்றவை உடலிலிருந்து வெளிப்படும்.

எனவே உடலின் தட்பவெப்பத்தை பாதிக்காத உணவு மற்றும் வாழ்வியலை மேற்கொள்வது அவசியமாகும்.

#Marundhillamaruthuvam | #acupuncturist | #naturaltreatment | #foodsupplement | #Ashifshaikh.pune

மருந்தில்லா மருத்துவம்🩺

05 Oct, 01:40


உணவிற்கு பின் சிறு ஓய்வு அவசியம்., ஆம் உணவு உண்டபின் அவ்விடத்திலோ அல்லது நிழல் பகுதியிலோ சிறு அமர்தல் அவசியமாகும். வெப்பத்தில் வெளியில் செல்வது ஓடுவது வேகமாக செயல்படுவது போன்றவை தவிர்க்க வேண்டும்...

உணவுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் இணைந்து சில வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தும் போது. உடலின் தட்ப வெப்ப முரண்பாடு நிகழும். அப்போது உடலை இயக்கும் போது உடலின் ஒரு தன்மை கூடி ஒரு தன்மை குறைகிறது. அப்போது இரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு மூச்சை பாதித்து இக்கட்டான பிரச்சனையை நிகழ்த்தி நிதானமின்மை, ஒரு மாதிரியான மயக்கம், பேச இயலாமை, இயலாமை, கண் பார்வை மக்குதல் போன்றவை நிகழ்ந்து உயிர் ஆபத்தான சூழலுக்குள் கொண்டு செல்லும்.

அப்போதுதான் Golden hours. என்ற வரிகளை மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். அதற்கான தூண்டுதல் புள்ளியை அகுபங்சர் மிக சரியாக கூறியுள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள் : உணவு உண்டபின்னான மாற்றங்களுக்கு அவைகளை சமமாக மாற்றியமைக்க ST 45 ~ SI 19

உணவில்லாத நேரத்தில் திடீர் மார்பில் கனம், மூச்சுவிட இயலாமை, மயக்கம், தன்னிச்சை அற்ற நிலை இவைகளுக்கு : K 1 ~ HT 9 ~ GV 26 ~LU 4

இவைகளை பதிவிட்டு வைத்துக் கொள்ளுங்கள். இது மருந்தில்லா மருத்துவமாகும்

#foodsupplement #naturaltreatment #Marundhillamaruthuvam #acupuncturist #Ashifshaikh.pune

மருந்தில்லா மருத்துவம்🩺

25 Sep, 04:01


கல்லீரலில் கை வைத்தால் - ஒவ்வொரு உறுப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி செயழிலக்க செய்து விடும். வயிற்றில் நீர் சுரந்து அதனை வெளியேற்றினால் அது கல்லீரலின் சுவற்றை பாதித்து சேதராமாக்கி கல்லீரலை சிறுது சிறிதாக மடிய செய்யும்.

நீர் கோர்க்காமல் இருக்கவே சரியான அவருக்கு அறிமுகமான உடலுக்கு உகந்த நன்மை செய்யக்கூடிய உணவுகளை சரிவிகிதத்துடன் எடுப்பது மட்டுமே கல்லீரல் பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரே வழி ...

மஞ்சள் காமாலை போன்ற தொற்றுகள் அதீத உஷ்ணத்தால் ஏற்படுவதாகும். அந்த உஷ்ணத்தை சமநிலையில் வைப்பது உடல் உயிர் உணவு புரிதலுடன் தொடர்புள்ளதாகும்.

2,113

subscribers

276

photos

9

videos