விண்ணியலும் வாழ்வியலும்

@vinniyalum_valviyalum


விண்ணியலும் வாழ்வியலும்

20 Oct, 19:05


301. இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்ற தேதடா? பட்டநாத பட்டரே ?.

இட்ட குண்டம் என்றால், இருக்கு வேதம் என்றால் என்னவென்று கேட்கிறார் என்றால், அதன் உண்மையான அர்த்தம் பட்ட நாத பட்டருக்கு தெரியவில்லை என்று தான் கேட்கிறார்.
குண்டம் வளர்த்து பூசைகள் செய்த காரணம், அதில் உருக்கிப் பிரித்தல் எனும் வேதியல், வெப்பத்தால் ஏற்படும் வேதியல் மாற்றங்கள், ஒரு தனிமம், வேறு தனிமமாக, திடப்பொருள், திரவப் பொருளாகவும், திரவப் பொருள், காற்றாகவும் வேதியல் மாற்றம் பெறுவதைத்தான், உருக்கு வேதம் கூறுகிறது. நம் உடலும் சுக்கிலிருந்து, அதாவது விதைப்பையில், காய்ந்த விதையாக, சுக்காக இருந்த சிவாயம், வெப்பத்தில், இலகி சுக்கிலமாவதைத்தான் , இட்ட குண்டத்தில் உருக்கி இலகி, நடக்கும் வேதியவைக் கூறுவது தான் அந்த சடங்குகள்.
அந்த சுட்ட மட்கலத்தில் சுற்றும் நூல்கள் எனும் சடங்கு, அந்த சுக்கில், நாடி, நரம்புகள் உருவாகி, சதை, எலும்பு, ரத்தம், என உடலாக மாறுவதைத்தான் சுட்ட மட்கலத்தில் சுற்றப்படும் நூல்கள் குறிக்கின்றன என்கிறார்.
ஆண் பெண் இணையும் பொழுது, முட்டி நின்ற தூணில் , சுக்கு இலகி சுக்கிலமாக, முளைத்து எழுந்த சோதியை பற்றி நின்றது சுக்கிலம் எனும் நீர் தான் என்கிறார்.
இதை பட்ட நாத பட்டர் அறிவாரா? அதை அறியாமல் அதை சடங்குகளாக்கி, அதன் உண்மையான தத்துவங்களை மறைத்து , அல்லது தெரியாமல் அறிவியலைப் புறந்தள்ளுகிறார்கள் என்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பட்ட நாத பட்டர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது புரிகிறது.

விண்ணியலும் வாழ்வியலும்

17 Oct, 04:00


தயவு செய்து இந்த காணொளி தவறாது பாருங்கள் *மறைக்கப்பட்ட உண்மைகள் இன்னும் எவ்ளோ இருக்கோ?*. (Please watch this video without fail! Wonder, how many more such hidden truths are there?)🙏

விண்ணியலும் வாழ்வியலும்

14 Oct, 04:57


https://www.sidhariyal.com/?p=2459 |

விண்ணியலும் வாழ்வியலும்

13 Oct, 21:15


ஐப்பசி மாத அடை மழை என்பது, காற்று திசை மாறும் , ( அதாவது தென்மேற்கு பருவகாற்றிலிருந்து, வடகிழக்கு பருவகாற்றாக மாறும் ) காலமான ஐப்பசியில், காற்று சுழன்று அடிக்காமல், நின்று, நிதானமாக இரண்டு மணி நேரம் ,மூன்று மணி நேரம் மழை பெய்வதை நாம் பார்க்கிறோம். வானில் மழை இல்லாத நேரங்களில், மேகங்கள் நிதானமாக, நகராமல், மெல்ல, மெல்ல, கும்பமாசிகளாக, ஆங்காங்கே, திரண்டு நிற்பதை பார்க்கலாம். வரும் கார்த்திகை பௌர்ணமி, அதாவது அடுத்த பௌர்ணமி வரை வானம் இது போல், மேகங்கள் நகராமல், மெதுவாக சுழன்று கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

விண்ணியலும் வாழ்வியலும்

13 Oct, 20:51


300. மன விகாரமற்று நீர் மதித்திருக்க வல்லீரேல் !
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும்.
அனைவரோதும் வேதமும், அகம் பிதற்ற வேணுமேல்,
கனவு கண்டது உண்மை நீர், தெளிந்ததே சிவாயமே!

மன விகார மற்று நீர். என்றால் நம் மனதில் விருப்பு வெறுப்பு இன்றி இந்த உலக வாழ்க்கையை நாம் அனுகினால் , நமக்கு உண்மைத் தன்மை விளங்கும். மெய்ப் பொருளை அறிவோம். அந்த உண்மைகளை மதித்து அதன் படி வாழ்வியலோடு, அறம் சார்ந்த வாழ்வை மதித்து வாழ்ந்தோம் என்றால், அந்த நினைவே இல்லாத , சமாதி நித்தமும் நமக்கு கை கூடும். அதை மணி விளக்கு என்கிறார். மணி என்றால் காலம். நமக்கே நாம் விழித்து இருக்கும் போது, நாம் எங்கே இருக்கிறோம் என்ற நினைவின்றி, காலம் பறந்து , நொடிகளாக , நாட்கள் பறக்கும் என்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள அனைவரும், நம் வாழ்வியலில் இது சரி, அது தப்பு , வாழும் விதிகளை வகுத்து ஓதும் வேதமும், நாமும் இது சரியா? அது சரியா? என மனதால், அறியாமல் பிதற்றிக் கொண்டு, தடுமாறி கனவுகளை கண்டு, வழி தேடி ஓடி கொண்டு இருக்கையில், சமாதியாக நினைவில்லாத நினைவில், கலங்கிய நீர் தெளிந்தது போல சிவாயம், என்றால் என்னவென்று, தெளிந்து விடும் என்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

13 Oct, 20:28


https://youtu.be/kfRZ4P3g2JY?si=9GBWLWydcY_CzFnl

விண்ணியலும் வாழ்வியலும்

10 Oct, 01:34


299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய்,
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய்
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை,
சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே.

நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி , ஒற்றி, வருடி வார்த்தைகளாக்குபவன் தான் நாதன்.
அவன் அந்தரத்தில் ஒன்றுமாய் என்றால் , நாம் மனதால் , எண்ணங்களாக, கருத்தாக நினைப்பதைத்தான் அப்படி கூறுகிறார்.
அசைவுகால் இரண்டுமாய் என்றால் , நம் உடல் இயங்க காற்று மிகவும் முக்கியம். அதை உள் மூச்சாகவும், வெளி மூச்சாகவும் இரண்டு விதமாக இயங்குவதைத் தான் சொல்கிறார்.
செந்தழலில் மூன்றுமாய் என்றால் இடகலை, பிங்கலை , சுழுமுனை எனும், சந்திரன் எனும் குளிர்ச்சி, சூரியன் எனும் சூடு அக்னி எனும் பசி. அக்னி எனும் பசி நம் உணவை சத்தாக மாற்றி, கண்களில் ஒளியாக அறிவது சந்திரகலை, சூரிய கலை.
சிறந்த அப்பு நான்கு மாய் என்றால் ரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என நீர் தத்துவமாக நம் உடலில் அனைத்து செல்களையும் சென்று சேர்ந்து, கழிவுகளாக நீராக வெளியே, நம் உடலை இயக்கக் காரணமாக இருக்கும் அப்பு.
பாரில் என்றால் நிலம், ஐந்தாவது பூதமான தாதுக்களால், எலும்பு, சதை, நரம்பு, முடி, தோல் என ஐந்துமாய் அந்த நாதன் தான் நம் உடலாக இருப்பதை சிந்தையில் தெரிந்து , தெளிந்து , அந்த மாயையை புரிந்து கொள்பவர்களே வல்லவர்கள் என்கிறார்.

விண்ணியலும் வாழ்வியலும்

10 Oct, 01:32


சிவவாக்கியர் பாடல் 398
பூவிலாய ஐந்துமாய்

விண்ணியலும் வாழ்வியலும்

10 Oct, 01:31


https://www.sidhariyal.com/?p=2453

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 16:11


சிவவாக்கியர். பாடல் 397 உம்ப்ர் வாகைத்தினும்.

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 16:10


https://www.sidhariyal.com/?p=2450

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 04:36


அன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வணக்கம்
இறைவனையும் குருவினையும் குலதெய்வத்தினையும் வணங்கி பெற்ற ஞானத்தை போற்றி இப்பதிவினை வெளியிடுகிறேன்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

அன்பு நண்பர்களே....

தமிழர்களின் விண்ணியல் (தொடர்ச்சி)


இராசி மண்டலங்களை 12 ஆக பிரித்து ஒவ்வொரு ராசிக்கும் பெயர் வைப்பது பற்றி விவாதிக்கும் பொழுது முதல் ராசி ரிதபம், அடுத்தது எந்த ராசியை இரண்டாவது வைப்பது என விவாதித்ததில், இரண்டாவதாக சூரிய சுற்றில் இருக்கும் ராசியை அமைத்தார்கள். ஏனென்றால் சூரிய சுற்றையும் பாமர மக்களுக்கும் விளங்க வேண்டுமென்பதற்காக அமைத்தார்கள். ஆகவே முதலில் அதாவது முருகன் நினைவாக கிருத்திகை நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்த ராசிக்கு ஆதி யோகி சிவன் நினைவாக ரிதபம் எனும் காளையை சித்திரமாக வரைந்து கொண்டனர். (Taures)

அடுத்த மிகப் பெரிய ஆளுமை, முருகன் நினைவாக மேசம் எனும் ஆடு வரைந்தார்கள். (Aries )

அதன் பின் இராவணன் இந்திரன் நினைவாக இரட்டை மீண்களும், ( Pisces )

கும்பகர்ணன் நினைவாக கும்பராசியையும், ( Aquarius )

அடுத்து மகாபாரத ஆளுமைகளை கொண்டு கிருட்டிணன் நினைவாக மகரமும், ( Capricorn )

அர்ச்சுனன் நினைவாக தனுசுவும்,( Sagittarius )

பீமன் நினைவாக (தேளும்), விருச்சகம் (Scorpio )

சகாதேவன் நினைவாக தராசுவும்,(Libra)

திரௌபதியின் நினைவாக கன்னியும், Virgo)

தருமன் நினைவாக புலியும் (அதை களப்பிரர் காலத்திற்குப் பின் சிம்மமாக மாற்றி விட்டார்கள்),(leo)

நகுலன் நினைவாக கடகம், ( Cancer )பின் திருத்திராட்டினன்- சகுனி நினைவாக மிதுன ராசியாகவும் ( Gemini ) விவாதித்து அமைத்தனர்.

ராசி என்பதும் ராசித்திரம் தான், அதாவது இரவு சித்திரம். ஆனால் அவர்கள் அமைத்த ராசி வரிசைகள் பூமியின் சுற்றுப் பாதையில் எதிர் புறமாக தெரியும். அதாவது மாலை பொழுதில் வானத்தை கவனித்தோம் என்றால் உதாரணமாக முதலில் மீன ராசி எழுகிறது என்றால் அடுத்த 2 மணி நேரத்தில் மேச ராசி எழும் அடுத்த 2 மணி நேரத்தில் ரிதபம் எழும். இப்படி எதிர் திசையில் தெரியும், ஏன் என்றால் பூமி சுற்றும் திசையை வைத்துதான் நமக்கு தெரிகிறது. பூமியானது சூரிய சுற்றுக்கு எதிர் புறத்தில் தான் சுற்றுகிறது. இந்த பூமி சுற்றின் வரிசைப்படி தான் பஞ்சாங்க கட்டங்களில் முதல் கட்டத்தில் மேசமும், இரண்டாவது ரிதபம், மூன்றாவது மிதுனம், நான்கில் கடகம் இப்படி 12-வது கட்டத்தில் மீனம் இருக்கும்.

மீனம் மேஷம் இடபம் மிதுனம் கும்பம் கடகம் இராசி கட்டம் மகரம் சிம்மம் தனுசு விருச்சிகம் துலாம் கன்னி இப்படி மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் உருவாக்கிய பஞ்சாங்கத்தில் ஐந்து அங்கங்கள் இருந்தன. அவற்றை அடுத்த பதிவில் விளக்குகிறேன்

விண்ணியல் தொடரும்....
Dr V.Senthilkumar, BNYS

விண்ணியலும் வாழ்வியலும்

08 Oct, 04:20


இளங்கோ - இதய வனம் - இரும்பொறை.

காட்சி : விளக்கு ஒளியில் மண் வீடு
பொழுது: 12 மணி யாமம் கூதிர்காலம்
திணை : புறவு இதயவனம்

நேற்று இரவு வான் பார்க்கும் மேடையில் தூங்கிக்கொண்டிருந்த போது சடசட வென இரைச்சலுடன் மழை வந்ததால் உடனடியாக பாய் தலையணையை எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றேன்.

சட்டென வீட்டினுள் இருந்த அமைதி பரபரப்பாக நுழைந்த என்னை நிதானப்படுத்தியது. ஒத்தை விளக்கின் மூலம் மொத்த வீடும் தியானத்தில் இருப்பதுபோல் இருந்தது. குதிர், ஊஞ்சல், பனைமர விட்டம், ஒடுகள், நடைவண்டி, மரக்குதிரை என அனைத்து பொருட்களும் தீப ஒளியில் குளிர்ந்திருந்தன. விளக்கெண்ணை தீப வாசணையை நுகர்ந்த போது இதமாக இருந்தது. உடல் கதகதப்பாக இருந்தது.

ஊஞ்சலின் தியானத்தை தொந்தரவு செய்ய வேண்டாமென, நாட்டு மாட்டு சாணி போட்டு மெழுவிய மண் தரையில் சத்தமில்லாமல் கோரைப்பாயை விரித்து படுத்துக்கொண்டேன். தீப ஒளியே போர்வையாக இருந்தது

சற்றுநேரத்தில் வீட்டின் முன்கூரை வாசலில் படுத்திருந்த குடும்பத்தினரும் உள்ளே வந்து அமைதியாக படுத்து கொண்டிருந்தனர். மனைவி மட்டும் அளவான குரலில் கூரை மழைநீர் சரியாக தொட்டியினுள் செல்கிறாதா என கேட்க "ம்ம்" என்ற எனது சுருக்கமான பதில் கேட்டு உறங்கிவிட, வீட்டினுள் தீபத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரமாண்டமான சூழலை அனுபவித்து கொண்டிருந்தேன்.

இவ்வேளையில் முக்கால் உழவுக்கு பக்கம் சீரான மழை பெய்திருந்தது.
தேதி: 15 ஐப்பசி | 07 OCT 2024

விண்ணியலும் வாழ்வியலும்

07 Oct, 22:17


சிவவாக்கியம் மூன்று பத்து மூன்றாம்.

விண்ணியலும் வாழ்வியலும்

07 Oct, 22:16


https://www.sidhariyal.com/?p=2447

விண்ணியலும் வாழ்வியலும்

05 Oct, 18:21


🩷🙃🩷

விண்ணியலும் வாழ்வியலும்

05 Oct, 02:33


294. மூலமென்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே!
நாலுவேதம் நாவுளே நவின்ற ஞானம் மெய்யுளே!
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்.
ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லையே.

ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் மூலம் என்ற  மந்திரம் அ உ ம் என்ற எழுத்துக்கள் நமசிவாய எனும் ஐந்து எழுத்துக்களில் முளைத்தது என்கிறார். நான்கு வேதங்கள் வாய் வழியாக சொற்கள் மூலமாக கடத்தப்பட்டவைதான். அந்த ஞானம் உடல் எனும் மெய் உருவாகி அதில் நாக்கு சுழன்று உருவான சொற்களால் உருவானவைதான்.  இந்த நான்கு வேதங்களையும் உருவாக்கியவர்கள் மூன்று தமிழ்ச்சங்கங்கள்.
முதல் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி வழி நடத்தியவர் சிவன். அவரைத் தான் ஆலமுண்ட கண்டன் என்கிறார். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை வழி நடத்தியவர் அரி எனும் திருமால். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை வழிநடத்தியவர் அய்யன் எனும் முருகன்.  நான்கு வேதங்களையும் நவின்ற ஞானம் உடலைப் பற்றி அறிந்த கொண்டதால் தான் என்கிறார்.
இதில் ஓம் எனும் ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லை என்கிறார்.
அ உ ம் எனும் எழுத்துக்கள் சிவாயத்தைத் குறிக்கின்றது . ஓம் எனும் எழுத்து சிவாயத்தைக் குறிக்காமல் அந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேறு எதையோ குறிப்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.

11,811

subscribers

960

photos

474

videos