பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள் @tamilpuzzle Channel on Telegram

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

@tamilpuzzle


பாடல் பதிர்கள்

பொது அறிவு வினா விடைகள்

கணிதப்பதிர்கள்

சொல் விளையாட்டு

பழமொழி புதிர்கள்

விடுகதைகள்

தமிழ் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான தமிழில் புதிர்கள் (Tamil)

தமிழ் புதிர்கள் அறியப்பட்டது! 'tamilpuzzle' எனும் டெலிகிராம் சேனல் உங்கள் விளம்பரங்களை அதிக உயர்ந்த நிலையில் எடுக்க உதவுகிறது. இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருக்க மூன்று முக்கிய காரணங்களை வெளிப்படுத்துகிறது - ஒரு, அதிக உள்ளமையில் அறிவுக்குரிய புதிர்கள்; இரண்டு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான ஒரு அருமையான மகான் கிழங்கு; மூன்றாவது, உள்ளமை மற்றும் ஹை லெவல் வினாடி. 'பாடல் பதிர்கள், பொது அறிவு வினா விடைகள், கணிதப்பதிர்கள், சொல் விளையாட்டு, பழமொழி புதிர்கள், விடுகதைகள்' என்று மிகவும் ஊடகமான விளக்கங்களை நீங்கள் உள்ளிடலாம். இந்த சேனலில் உள்ள புதிர்கள் உங்கள் மனம் மற்றும் உளளமையை மேம்படுத்தும் அழகாக உள்ளன. அது உங்களுக்கு அசத்தல் மற்றும் அறிவுக்கு மீட்பு செய்து உள்ளமையை உயர்வு செய்யும்!

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 15:01


*இன்றைய புதிர் - 01*

4 எழுத்து சொல்

1, 2, 3 இணைந்தால் ஒரு தமிழ் படம்

1, 4  இணைந்தால் சிங்கத்தையும் குறிக்கும்.

3, 4  இணைந்தால் மலையைக் குறிக்கும்

*நேற்றைய புதிரின் விடை*
        
1. *க* ப்பலூர்

2. தெ *ன்* காசி

3. பவா *னி*

4. பிள்ளை *யா* ர்பட்டி

5. புளியங் *கு* டி      

6. திருவண்ணா *ம* லை

7. சிங்கம்புண *ரி*

*கன்னியாகுமரி*

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


பிரபல ஹிந்தி திரைப்பட நடிகை
Anu Agarwal
பிறந்த தினம் இன்று
( 11 ஜனவரி 1969 )

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


தேசிய விருது பெற்ற
பிரபல நடிகர், இயக்குனர், கதாசிரியர்
“கேரளாவின் பாக்யராஜ்”
“பத்மஶ்ரீ”
பாலசந்திரமேனன்
பிறந்த தினம் இன்று
( 11 ஜனவரி 1954 )

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


போதை மருந்து கலவைகளை
(psychedelic effects of lysergic acid diethylamide (LSD)
உட்கொண்ட பண்பை கண்டுபிடிக்கும்
முறைகளை கண்டுபிடித்த
Switzerland ஐ சேர்ந்த அறிவியலாளர்
Albert Hofmann
பிறந்த தினம் இன்று
( 11 ஜனவரி 1906 )

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ளார் . இவற்றில் LSD: My Problem Child என்ற நூல் முதன்மையானதாகும்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


நுண்ணோக்கி உருப்பெருக்கியை
(optical microscope)
உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த
பிரபல இயற்பியலாளர்
Joseph Jackson Lister
பிறந்த தினம் இன்று
( 11 ஜனவரி 1786 )

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


பிரிட்டிஷ் இந்தியாவின் (1899 – 1905 )
Viceroy and Governor-General of India,
இந்து முஸ்லிம் பிரிவினையில்
வங்காள மாகாணத்தை இரண்டாக ( தற்கால இந்திய மேற்கு வங்காளம்
மற்றும் பங்களாதேஷ் ) பிரித்தவரும்,
1899 – 1900 பிரிட்டிஷ் இந்திய பஞ்சத்தை தடுக்கத்தவறியவருமான
Lord Curzon
பிறந்த தினம் இன்று
( 11 ஜனவரி 1859 )

வரைபடம் மாறுதலுக்கு உட்பட்டது.

இவர் பதவியேற்றது முதல் இந்தியாவில் பஞ்சத்தினால் சுமார் 10 லட்சம் முதல் 45 லட்சம் மக்கள், கால்நடைகள் பலியானதாலும், இந்து முஸ்லிம் பிரிவினைப்போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியதாலும் , விடுதலைப்போர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கத்தவறியதாலும், 1905 நவம்பரில் இங்கிலாந்துக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதிகளில்
மணப்பாடு முதல் கல்லாமொழி வரை
உள்ள கடற்கரைப்பகுதிகளில்
சுமார் 95 திமிங்கலங்கள் இறந்தும்
உயிருக்குப்போராடியும் கரை ஒதுங்கிய தினம் இன்று.
( 11 ஜனவரி 2016 )

இவற்றின் எடை 1 டன் வரையும், குட்டிகள் 150 முதல் 200 கிலோ வரையும் இருந்தன. சுமார் 2.6 மீட்டர் முதல் 4.6 மீட்டர் வரை நீளம் கொண்டவையாகவும் இருந்தன.

இதற்கு முன்னர் 1973 ம் ஆண்டு ஜனவரியில் சுமார் 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. சில நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்துவிட்டன.

காயங்கள் ஏதும் இல்லாமல் கரை ஒதுங்கி இறப்பதால், இவை Globicephala Macrorhynchus இனத்தை சேர்ந்தவை என்றும், ஒன்றுக்கொன்று சமிக்ஞை கொடுப்பதில் தவறுதலாகவும், அல்லது கடற்கோளின் மாற்றங்களினாலோ திசை மாறி வந்து இறக்கின்றது எனவும் கூறப்படுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


முதன்முதலாக அமெரிக்கா
Pennsylvania – Pittsburgh ல் உள்ள
KDKA-TV
வட அட்லாண்டிக் மற்றும்
வட மத்திய அமெரிக்க பகுதிகளுக்கு
கம்பியில்லா தொலைக்காட்சி சேவையை
வழங்கிய தினம் இன்று.
( 11 ஜனவரி 1949 )

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


கிழக்கு பாகிஸ்தான் (East Pakistan)
பங்களாதேஷ் (Bangladesh)
என பெயர்மாற்றம்
செய்யப்பட்ட தினம் இன்று
( 11 ஜனவரி 1972 )

பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போரிட்டு வெற்றிக்குப்பின்னர் கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் பிரிவினைத்தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானிடம் ஒப்படைத்தார்.

இந்தியப்பிரிவினைக்குப்பின் பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், வங்காளப்பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


இரண்டாம் (World War II) உலகப்போரில்
பிரிட்டிஷார் வசமிருந்த
மலேசியா தலைநகர் Kuala Lumpur ஐ
Battle of Kuala Lumpur போரில்
ஜப்பான் கைப்பற்றிய தினம் இன்று.
( 11 ஜனவரி 1942 )

1945 செப்டம்பர் வரை கோலாலம்பூர் ஜப்பானியரின் பிடியில் இருந்தது, 1945 ஆகஸ்ட் ல் அமெரிக்காவின் ஹிரோசிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலுக்குப்பின் ஜப்பானியர் படைகளின் சில பிரிவினர் கோலாலம்பூரில் இருந்து ஜப்பான் சென்றபின், மீண்டும் பிரிட்டிஷார் கோலாலம்பூரை மீண்டும் கைப்பற்றினர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


நீரிழிவுக்கு மருந்தாக insulin மருந்து
முதன்முதலாக வட அமெரிக்க நாடான
Canada ஐ சேர்ந்த
நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட
Leonard Thompson என்ற 14 வயது சிறுவனுக்கு
மருத்துவர் James Bertram Collip ல்
செலுத்தப்பட்ட தினம் இன்று
( 11 ஜனவரி 1922 )

பின்னர் Leonard Thompson 27 வயது வரை வாழ்ந்துள்ளார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


செயற்கைக்கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை
(Chinese anti-satellite missile test) முதன்முதலாக
China
நிகழ்த்திய தினம் இன்று.
( 11 ஜனவரி 2007 )

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


பனிச்சறுக்கு விரைவோட்டத்தில்
(Speed skating) Netherlands ஐ சேர்ந்த
Jaap Eden,
1500 மீட்டரை 2.35 நிமிடங்களில் கடந்து
முதன்முதலாக உலக சாதனை
செய்த தினம் இன்று.
( 11 ஜனவரி 1893 )

சர்வதேச அளவில் நடைபெற்ற இப்போட்டி நெதர்லாந்து Groningen ல் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுவதிலும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இணைப்பில் உள்ள படம் “நான் வைத்துள்ள சைக்கிள்களில் Whitworth சைக்கிள் மிகவும் உயர்ந்த தரம்” என்ற அன்றைய விளம்பரம்.

இவர் சுமார் ஐந்து உலக சாதனைகள் செய்துள்ளார், ஐந்தாவதான சாதனை நார்வே Hamar ல் 1895 ல் 10,000 மீட்டரை 17.56 நிமிடங்களில் கடந்தது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


அமெரிக்காவைச் சேர்ந்த
Samuel Morse
மின்னியல் தொலைத்தந்தியை
(Electric telegraph) ஐ
வெற்றிகரமாக சோதனை செய்த தினம் இன்று
( 11 ஜனவரி 1838 )

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


முதன்முதலாக அன்னாசிப்பழம்
(Pineapple ) Brazil – Paraguay வழியாக
ஓடிக்கொண்டிருக்கும் Paraguay River
நதிக்கரைகளில் இருந்து தற்கால
அமெரிக்காவின் பிரபல சுற்றுலாத்தலமான
Hawaii ல் பயிரிடப்பட்ட தினம் இன்று.
( 11 ஜனவரி 1813 )

Hawaii மன்னரின் Spanish ஆலோசகர் Don Francisco de Paula y Marin, Hawaiian Islands மன்னர் Kamehameha I விடம் Paraguay River பகுதியில் இருந்து அன்னாசிப்பழத்தை கொண்டுவந்து கொடுத்து மன்னரின் ஆணைப்படி பயிரிடப்பட்டது. இவரே காஃபி உள்பட பல பயிரினங்களை பல நாடுகளில் இருந்து கொண்டுவந்து Hawaii ல் அறிமுகம் செய்தவர்.

இதன்பின்னரே Pineapple உலகம் முழுவதும் பரவியது என கூறப்படுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


முதன்முதலாக அதிகாரப்பூர்வமான
World Chess Championship போட்டி
அமெரிக்கா New York ல்
Austria-Hungary ஐ சேர்ந்த
William Steinitz க்கும்,
இங்கிலாந்தைச் சேர்ந்த
Johannes Zukertort க்குமிடையில்
நடைபெற்ற தினம் இன்று.
( 11 ஜனவரி 1886 )

இதில் 10–5 என்ற கணக்கில் Austria-Hungary ஐ சேர்ந்த William Steinitz வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் பல போட்டிகள் நடைபெற்றுள்ளது, World Chess Championship அமைப்பு உருவானபின் நடைபெற்ற முதல் போட்டி இதுவாகும்.

பின்னர் 1924 ல் அனைத்து நாடுகளும் இணைந்து பிரான்ஸ் தலைநகர் Paris ல் World Chess Federation (FIDE) துவங்கப்பட்டது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


Uranus கோளின் துணைக்கோள்களான
Titania மற்றும் Oberon ஐ
இங்கிலாந்தைச் சேர்ந்த வானியிலாளர்
William Herschel
கண்டுபிடித்த தினம் இன்று.
( 11 ஜனவரி 1787 )

Uranus சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் Uranus ன் நினைவாக பெயரிடப்பட்டது.

இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியஸ். இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். யுரேனசின் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


ராச லீலை நடனத்தை அறிமுகம்
செய்தவரும், தொன்மவியல் அறிஞருமான
Manipur ன் மன்னர் Ching-Thang Khomba,
Bishenpur நகரை Manipur ன் தலைநகராக்கி
அங்குவைத்து முடி சூடிக்கொண்ட தினம் இன்று.
( 11 ஜனவரி 1779 )

வரைபடம் மாறுதலுக்கு உட்பட்டது.

ராச லீலை நடனமென்பது ஸ்ரீகிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்த போது கோபியர் மற்றும் ராதையுடன் ஆடிய நடனங்கள் ராச லீலை எனப்படும்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


உலகின் முதலாவது லாட்டரி
இங்கிலாந்து மகாராணி
Queen Elizabeth I ல்
நடத்தப்பட்ட தினம் இன்று
( 11 ஜனவரி 1569 )

1566 தொடங்கி குலுக்கல் இன்றைய தினம் நடைபெற்றது, லாட்டரி சீட்டு வாங்கிய அனைவருக்கும் சமமான பரிசு வழங்கப்பட்டது. லாட்டரி நடத்தியதின் நோக்கம் பொதுநலசேவையில் தன்னலம் கருதாது உழைத்த சேவையாளர்களுக்கு, லாட்டரியில் பெற்ற நிதியைக்கொண்டு உதவி செய்தனர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

11 Jan, 06:07


இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது நபி
தலைமையிலான இஸ்லாமியப் படைகள்
Abu Sufyan தலைமையிலான
குரைஷிகளின் படைகளை வென்று
(conquest of Mecca)
புனித மெக்கா நகரை
கைப்பற்றிய தினம் இன்று
( 11 ஜனவரி 630 )

ஹிஜ்ரி கணக்கின்படி, ஹிஜ்ரி 08 ரமலான் நோன்புப்பிறை 20 ல் கைப்பற்றினர்.

இக்காலகட்டத்திலிருந்து புனித மெக்கா நகரில் உருவவழிபாட்டுமுறை ஒழிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் புனித மெக்கா நகரில், விலங்குகள், பறவையினங்கள், நீரினங்கள், மரங்கள், பூக்கள், சூரியன், சந்திரன் மற்றும் பெண் தெய்வங்களான Al-ʻUzzā, al-Lāt மற்றும் Hubal ன் மனைவி Manāt ஆகியோரின் சிலைகளை வைத்து வழிபட்டுள்ளனர்.🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚👍

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 14:47


*இன்றைய புதிர் - 01*

இந்த விளையாட்டில், கீழே 9 எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 எழுத்துக்களில் இருந்து, குறைந்தது 5 வார்த்தைகள் வரை கண்டுபிடிக்க வேண்டும்.

*பு ர ல் கை லி வி த தை ய*

*நேற்றைய புதிரின் விடை*

மனத்தோற்றம்

தமிழ்ச்சங்கம்

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 02:03


*📚 இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍️📚*


*1. Capacitor (கெபாசிடர்) - மின்தேக்கி.*

மின்தேக்கி மின் ஆற்றலை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.

The capacitor is used to store electrical energy.

*2. Earthing (எர்திங்) - புவித்தொடுப்பு.*

புவித்தொடுப்பின் முதன்மை நோக்கம் மின்சார ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்பதுதான்.

The primary purpose of earthing is to avoid the danger of electrocution.

*3. Inverter (இன்வெர்டர்) - நேர்மாற்றி.*

நேர்மாற்றி ஒரு மின்னணு சாதனம் ஆகும்.

Inverter is an electronic device.

*4. Multimeter (மல்டிமீட்டர்) - பல்பயன் அளவி.*

ஓர் எண்முறை பல்பயன் அளவி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் மதிப்புகளை அளவிட பயன்படுத்தப்படும் ஒரு சோதனை கருவியாகும்.

A digital multimeter is a test tool used to measure two or more electrical values.

*5. Generator (ஜெனரேட்டர்) - மின்னியற்றி.*

மின்னியற்றி மின் விணையாற்றலை மின்னாற்றலாக மாற்றுகிற சாதனம் ஆகும்.

Generator is a device that converts mechanical energy into electrical energy.

*6. Amplifier (ஆம்பிலிஃபையர்) - மிகைப்பி.*

மிகைப்பி மின்னழுத்தத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு சாதனம் ஆகும்.

Amplifier is an electronic device that increases the voltage.

*7. Voltage (வோல்டேஜ்) - மின்னழுத்தம்.*

மின்னழுத்தம் நிலையான மின் புலங்களால் ஏற்படுகிறது.

Voltage can be caused by static electric fields.

*8. Rectifier (ரெக்டிஃபையர்) - அலைத்திருத்தி.*

அலைத்திருத்தி மாறுதிசை மின்னோட்டத்தை மாற்றுகிற ஒரு மின்சார சாதனம் ஆகும்.

A rectifier is an electrical device that converts alternating current.

*9. Rheostat (ரியோஸ்டாட்) - மின்னியக்கக் கட்டுப்பாட்டுப் பொறி.*

மின்னியக்கக் கட்டுப்பாட்டுப் பொறி எதிர்ப்பாற்றலை கட்டுப்படுத்த பயன்படுகிறது.

Rheostat is used to control the resistance.

*10. Waveform (வேவ்ஃபார்ம்) - அலைவடிவம்.*

நான்கு வகை அலைவடிவம் உள்ளன.

There are four types of waveform.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 02:03


*பொது அறிவு*

*பகிர்வு:அறிவு பரவல் 🌍📚*


1. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

2. உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

3. பொரி வல்லூறு ஒரு மணி நேரத்திற்கு 389 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

4. இறாலுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.

5. சோகம் மகிழ்ச்சி மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் கண்ணீரை தனித்தனியாக நுண்ணோக்கியில் பார்க்கும்போது வித்தியாசமாக தெரிகிறது.

6. கொமோடோ டிராகன் இந்தோனேஷியாவின் தேசிய விலங்காகும்.

7. கடலின் சராசரி ஆழம் 2.5 மைல்கள் (4 கி.மீ.) ஆகும்.

8. மலேசியாவின் கரன்சி ரிங்கிட்.

9. உலகத்தின் மிகப்பெரிய வைரம் குல்லீனியன்.

10. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு 1963


*Knowledge Spread 🌍📚*

1. The country, which has two prime ministers is San Marino.

2. The hottest place in the world is Azizia (Libya).

3. Peregrine falcon can fly at a speed of 389km per hour.

4. A shrimps heart is in its head.

5. Tears caused by sadness, happiness, and onions look different under the microscope.

6. The Komodo dragon is the national animal of Indonesia.

7. The average ocean depth is 2.5 miles (4 km).

8. The currency of Malaysia is Ringgit.

9. The worlds largest diamond is Cullinan Diamond.

10. India declared peacock as the national bird in 1963.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 02:03


🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️

*Good morning friends*

*Word of The Day ✍️*

*Word:-*
*Considerable*
*அதிகமான*

Definition:-
Great in amount or size.
எண்ணிக்கையில் அல்லது அளவில் பெரியதான.

Synonyms:-
Plentiful
மிகுதியான

Antonyms:-
Little
சிறிய

Sentence:-
I admired his considerable mental agility.
அவருடைய அதிகமான மன சுறுசுறுப்பை நான் பாராட்டினேன்.

Grammar:-
Adjective
உரிச்சொல்

🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 02:03


*●The Hindu Vocabulary For All Competitive Exams.*

*Knowledge Spread ✍️📚*


*1. ABDICATE* (VERB): (सत्ता त्यागना):  resign
Synonyms: retire, quit
Antonyms: keep
Example Sentence:In 1918 Kaiser Wilhelm abdicated as German emperor.

*2. SCATHING* (ADJECTIVE): (हानि पहुंचाने वाला):  devastating
Synonyms: withering, blistering
Antonyms: mild
Example Sentence:She launched a scathing attack on the PM.

*3. REMORSE* (NOUN): (पछतावा):  contrition
Synonyms: repentance, penitence
Antonyms: indifference
Example Sentence:They all were filled with remorse and shame.

*4. NOVEL* (ADJECTIVE): (नया):  new
Synonyms: original unusual
Antonyms: old
Example Sentence:He hit on a novel idea to solve his financial problems.

*5. ABROGATE* (VERB): (अभिनिषेध करना):  repudiate
Synonyms: revoke, repeal
Antonyms: institute
Example Sentence:It has been proposed to temporarily abrogate the right to strike.

*6. INDUCE* (VERB): (मनाना):  persuade
Synonyms: convince, get
Antonyms: dissuade
Example Sentence:The pickets induced many workers to stay away.

*7.GROSS* (ADJECTIVE) (ज़ाहिर):  flagrant
Synonyms: blatant, glaring
Antonyms: minor
Example Sentence:They faced gross human rights abuses.

*8. BIAS* (NOUN): (पक्षपात):  prejudice
Synonyms: partiality, partisanship
Antonyms: objectivity
Example Sentence:There was evidence of bias against foreign applicants.

*9. CONVOLUTED* (ADJECTIVE): (जटिल):  complicated
Synonyms: complex, involved
Antonyms: simple
Example Sentence:The film is let down by a convoluted plot in which nothing really happens.

*10 CONCUR* (VERB) (सहमत होना):  agree
Synonyms: accord, go along
Antonyms: disagree
Example Sentence:The authors concurred with the majority.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 02:03


*🌍📚THIS DAY THAT YEAR *

1. The UN Headquarters officially opened in New York on 9 January, 1951.

2. NASAs Space Shuttle Columbia was launched on 9 January, 1990.

1. ஐ.நா. தலைமையகம் நியூயார்க்கில் 1951ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

2. 1990ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நாசாவின் கொலம்பியா விண்கலம் ஏவப்பட்டது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:54


*பிறப்புகள்*

1554 – பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1623)

1843 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (இ. 1914)

1868 – சோரென்சென், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1939)

1879 – ஜான் பி வாட்சன், அமெரிக்க மருத்துவர் (இ. 1958)

1902 – ஓசேமரிய எஸ்கிரிவா, எசுப்பானிய மதகுரு, புனிதர் (இ. 1975)

1908 – சிமோன் த பொவார், பிரான்சிய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1986)

1913 – ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (இ. 1994)

1917 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1990)

1922 – ஹர் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 2011)

1927 – சுந்தர்லால் பகுகுணா, இந்திய சூழலியலாளர்

1927 – துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)

1928 – பாலக்காடு ஆர். ரகு, தென்னிந்திய மிருதங்க கலைஞர் (இ. 2009)

1933 – குறமகள், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)

1933 – வில்பர் ஸ்மித், சாம்பிய-ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர்

1934 – மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)

1951 – ஒய். ஜி. மகேந்திரன், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்

1952 – கௌசிக் பாசு, இந்தியப் பொருளியலாளர்

1959 – இரிகொபெர்த்தா மெஞ்சூ, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குவாத்தமாலா செயற்பாட்டாளர்

1976 – ராகவா லாரன்ஸ், இந்திய நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர்

1980 – நிதின் சத்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்

1982 – கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி

1989 – நீனா டோப்ரேவ், பல்கேரிய-கனடிய நடிகை

*இறப்புகள்*

1848 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1750)

1873 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் (பி. 1808)

1924 – பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1853)

1961 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1867)

1979 – கு. கோதண்டபாணி, தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)

1992 – பில் நாக்டன், ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1910)

1998 – கெனிச்சி புகுயி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர் (பி. 1918)

2004 – நிசீம் எசெக்கியேல், இந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1924)

2013 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1919)

2013 – ரிசானா நபீக், சவூதி அரேபியாவில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் (பி. 1988)

2014 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1939)

2021 – நவரத்தினம் கேசவராஜன், ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1962)

2024 – இரசீத் கான், இந்துத்தானி இசைக்கலைஞர் (பி. 1968)

*சிறப்பு நாட்கள்*

தியாகிகள் நாள் (பனாமா)

வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

அமைதி உடன்பாடு நாள் (தெற்கு சூடான்)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:54


*வரலாற்றில் இன்று – 09.01.2025*

சனவரி 9 (January 9) கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார்.

1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால்,  பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

1707 – இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

1760 – அகமது ஷா துரானி தலைமையிலான  ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1788 – கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது.

1792 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1799 – பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியப் போர்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

1816 – ஹம்பிரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

1822 – போர்த்துக்கீச மன்னர் ஆறாம் யோவானின் கட்டளைக்கு மாறாக போர்த்துக்கீச இளவரசர் முதலாம் பெத்ரோ பிரேசிலில் தங்கியிருக்க முடிவு செய்தார். பிரேசில் விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

1857 – கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1858 – டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

1878 – இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்.

1905 – உருசியத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றன. (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 உருசியப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

1909 – தென் முனைக்கு சென்ற எர்னஸ்டு சாக்கில்டன் தலைமையிலான குழு தென் முனையில் இருந்து 97 கடல் மைல் தொலைவில் பிரித்தானியக் கொடியை நாட்டியது.

1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி  தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1916 – முதலாம் உலகப் போர்:  உதுமானியர்களின் வெற்றியுடன் கலிப்பொலி போர்த்தொடர் முடிவுக்கு வந்தது.

1921 – புனித ஜார்ஜ் கோட்டையில்  சென்னை  சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

1927 – கனடா, மொண்ட்ரியால் நகரில் நாடக அரங்கு ஒன்றில் தீ பரவியதில் 78 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1957 – சூயசு கால்வாயை எகிப்திடம் இருந்து மீலப்பெறத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் சர் அந்தோனி ஏடென் பதவி துறந்தார்.

1964 – மாவீரர் நாள்: பனாமா கால்வாயில்  பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர்  அமெரிக்கப்  படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

1972 – ஆங்காங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

1990 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1991 – ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பு குறித்து சுமுகமான தீர்வு காண்பதற்காக அமெரிக்க,  ஈராக்கியப்  பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.

1991 – லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியஸ் நகரை முற்றுகையிட்டது.

1992 – யுகோசுலாவியாவில் சிறுப்ஸ்கா குடியரசு என்ற புதிய குடியரசு நிறுவப்பட்டது.

1992 – முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2001 – சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

2004 – சட்டவிரோத அல்பேனியக்  குடியேறிகளை இத்தாலிக்குஏற்றிச் சென்ற படகு ஒன்று கரபுருன் குடாவில் மூழ்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

2005 – பலத்தீன தேசிய ஆணையத்தின்  தலைவராக மகுமுது அப்பாசு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2005 – சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.

2007 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்  ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில்  அறிமுகப்படுத்தினார்.

2011 – ஈரான் விமானம் ஒன்று ஊர்மியா  நகருக்கருகில் வீழ்ந்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:52


*மூலிகை வளம்*

ஆசிரியர்: க.பொ.குப்புசாமி

பகிர்வு : அ. கந்தன்

🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷

*ஆடாதோடை*

1) *வேறு பெயர்கள்*: ஆடாதொடை

2) *தாவரப் பெயர்கள்*: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) *வளரும் தன்மை*: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) *பயன்படும் உறுப்புகள்*: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) *பயன்கள்*: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு.

இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும்.

இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும்.

ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும்.

இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும்.

ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

*(அடுத்த மூலிகை தொடரும்)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:52


*இன்றைய தலைப்பு செய்திகள்*
09.01.25

*பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்!

* ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

* டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.

* இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.

*Today's Headlines*

* Pongal gift set ready... Distribution in ration shops from Today!

* Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.

* Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.

* ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.

* ISL Football Series: FC Goa - Hyderabad FC match 'Draw'.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:51


*ஜனவரி 09*

( *09 ஜனவரி 1921*)

புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும்.

பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ம் ஆண்டில் கரையோர நகரான மதராஸில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது.

வெறுமனே கிடந்த
இப்பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக்கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.

இந்த கோட்டையில் தான் தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர்.

இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் 1921ம் ஆண்டு ஜனவரி 09ந் தேதி கூடியது.
கன்னாட் கோமகன் (Duke of Connaught) இதை தொடங்கி வைத்தார்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:50


*ஜனவரி 09*

*வெளிநாடுவாழ் இந்தியர் நாள்.*

2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:50


🌹09.01.2025
*🟣திருக்குறள்:*
💥💥💥💥💥💥💥💥

பால் :பொருட்பால்

அதிகாரம்:மருந்து

*குறள் எண்:947*

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.

*பொருள்:* செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.

*🟣பழமொழி* :
💥💥💥💥💥💥💥💥

அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.

Authority shows the man


*🟣பொன்மொழி* :
💥💥💥💥💥💥💥💥

இளமையில் கல்வியை புறக்கனித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இழந்தவன் ஆகிறான்

*🟣பொது அறிவு* :
💥💥💥💥💥💥💥💥

1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது?

ஆர்க்டிக் என்னும் கடற்பறவை.

2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ?

சொர்க்கப் பறவை.

*🟣English words & meanings :*
💥💥💥💥💥💥💥💥

Martial arts. - தற்காப்புக் கலை

Running. - ஓடுதல்

*🟣வேளாண்மையும் வாழ்வும்* :
💥💥💥💥💥💥💥💥

நிலத்தடி நீரை எடுத்து உபயோகப் படுத்திய அளவுக்கு நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக செலவழிக்க முன்வரவில்லை. விளைவு உலக அளவில் பரவலாக நீர் தட்டுப் பாரடு ஏற்பட்டது.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

09 Jan, 01:48




🤔   *நாளும் ஒரு சிந்தனை*

நினைவு வலியது!
அது, மனிதனை அமைதி
கொள்ளவும் செய்கிறது...
நிம்மதியற்று அலைக்கழிக்கவும்
செய்கிறது!!

🏚️    *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     கைப்பிடியளவு வெந்தயத்தை இரவில்  ஊறவைத்து, மறுநாள் அரைத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரத்திற்குப் பின் குளித்தால் பொடுகு தீரும். முடி உதிர்வதும் நின்றுவிடும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     சாகும் வரை வளர்ச்சியடையும் உயிரினம் *'மீன்'* ஆகும்.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     நன்கு ஊறவைத்த வெள்ளைக் காராமணியுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரைத்து, வடை தட்டினால் சுவையான, வித்தியாசமான வடை தயார்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

     நல்ல நூல்களை சொந்தமாக வாங்கிப் படிக்க வேண்டும்.

              *-கிருபானந்த வாரியார்*

📆  *இன்று சனவரி 9-*
  
   ▪️ *உலக இரும்பு நாள்.*

   ▪️ *வெளிநாடு வாழ் இந்தியர் நாள்.*

   ▪️   *1921-இல் "புனித ஜார்ஜ் கோட்டையில்"            சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.*



*(பகிர்வு)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Jan, 14:43


*இன்றைய புதிர் - 01*

இங்குள்ள கலைந்த எழுத்துக்களை சரி படுத்தினால் வரும் சொல்லை கண்டுபிடியுங்கள்.

*மற்னத்றம்தோ*

*புத்றுதம்னம்கு*

நேற்றைய புதிரின் விடை

*ஆலம் கட்டி*

ஆ/ஆடி/கடி/ஆம்/ஆலம்/கலம்/கட்டி/ஆட்டி/ஆகம்/

*சொல் புதிர்*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Jan, 11:19


*தென்காசி சந்திப்பு இரயில் நிலைய 2025ம் ஆண்டு கால-அட்டவணை (புதியது/மேம்படுத்தப்பட்டது).*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Jan, 10:38


தமிழ் வழி, ஆங்கில வழி என்று இல்லாமல் உழைத்தாலும் யார் வேண்டுமென்றாலும் உயரலாம்.

இவ்வாறு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Jan, 10:38


இஸ்ரோ தலைவராக நாராயணன்!

கூரையில்லாத பள்ளியில், தமிழ் மீடியத்தில் கல்வி கற்று இஸ்ரோ தலைவராக நாராயணன் உயர்ந்துள்ளார்.

அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் நாராயணன்.

இவர் ஏழை குடும்பத்தில், மறைந்த வன்னியபெருமாள், எஸ்.தங்கம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.

இவருக்கு, கோபாலகிருஷ்ணன், பத்மநாபபெருமாள், கிருஷ்ணமணி ஆகிய மூன்று சகோதரர்களும், நாகலட்சுமி மற்றும் ருக்மணி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர்.

இவரது தந்தை விவசாயி. இவர், குழந்தைகளை கஷ்டப்பட்டு, படிப்பில் சேர்த்தார். நன்றாக படிக்குமாறு ஊக்கப்படுத்தினார்.

இவரும், இவரது உடன்பிறந்தவர்களும் கூரையில்லாத பள்ளியில், தமிழ் மீடியத்தில் கல்வி பயின்றனர்.

1969ம் ஆண்டு முதலாம் வகுப்பு படிக்கும் போது, அவரது ஆசிரியர்கள் ஒரு நாள் நிலவில் மனிதன் வெற்றிகரமாக இறங்கியதை கூறியதை இன்றும், நாராயணன் நினைவு கூறுகிறார். இவர் நன்றாக படிக்க கூடியவர்.

இவர் முதல் ரேங்குடன், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

அவருக்கு வேலை கிடைப்பதற்கான ஆரம்ப வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, அவரது தந்தை அவரை அரசு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பில் சேர்த்தார்.

இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவரது வீட்டிற்கு மின்சாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி அவரும் அவரது சகோதரர்களும் படித்தனர்.

1984ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ளார்.

தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.

இவரது படிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக, அவர் ஐ.ஐ.டி., கோரக்பூரில் முதல் ரேங்குடன் ஏ.எம்.ஐ.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.டெக் கிரையோஜெனிக் இன்ஜினியரிங், ஐ.ஐ.டி., கோரக்பூரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.எச்டி., முடித்தார்.

பேராசிரியர் கலைசராஜின் இரண்டாவது மகளான கவிதாராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நாராயணனின் மூத்த மகள் மிஸ் திவ்யா, BTech, PGDM பட்டப்படிப்பை முடித்து தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளைய மகன் காலேஷ் கணினி பொறியியலில் பி.டெக் படித்து வருகிறார்.

அவரது இரண்டாவது சகோதரர் கோபாலகிருஷ்ணன் தற்போது குடிநீர்வடிகால் வாரியத்தில் செயல் பொறியாளர் ஆவார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகள் எப்போதும் அவருக்கு பெரிய பலமாக இருந்து வந்தனர்.

சி 25 என்று அழைக்கப்படும் அதிசக்தி கொண்ட கிரையோஜெனிக் இன்ஜின் திட்ட இயக்குனராக இருந்து அதனை வெற்றிகரமாக்கியவர் நாராயணன்.

இவரது ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவும், அற்புதமான நிர்வாக ஆற்றலுமே வெற்றிக்கு உதவியது. எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த கிரையோஜெனிக் இன்ஜின் முழுக்க நம் நாட்டில் உருவாக்கப்பட்டது.

பூமியில் இருந்து நிலவுக்கு சந்திராயன் 3 ஐ கொண்டு செல்லவும், நிலவை சுற்றவும் மென்மையாக தரையிறங்கவும் நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணம்.

சந்திரயான் 2 விண்கலம் மென்மையாக தரையிறங்குவதில் சில சவால்களை சந்தித்தது.

அத்திட்டம் வெற்றிபெறாத நிலையில், அதற்கான காரணம் என்ன;
எங்கு தவறுகள் நிகழ்ந்தன என கண்டறியும் குழுவின் தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்டார்.

இந்த குழு மிகக்குறுகிய காலத்தில் பிரச்னைகளை கண்டறிந்து சந்திராயன் 3ல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் வழிகாட்டியது.

நாராயணனுக்குக் கிடைத்த விருதுகளும், வெகுமதிகளும்!

இந்திய விண்வெளித் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றிவரும் நாராயணனை பாராட்டி 25 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

* கிரயோஜனிக் உந்துவியல் கருவியை வடிவமைத்தமைக்காக குழும விருது (Team Award)

* இந்திய விண்வெளித்துறையில் சிறந்த பங்களிப்பிற்கான விருது.

* High Energy material Society அளித்த விருது

* Aeronautical Society of India ஏவூர்தி மற்றும் அது தொடர்பான தொழில் நுட்பத்திற்கான விருது.

* High Energy material Society அளித்த விருது.

* Aeronautical Society of India வழங்கிய தேசிய அளவிலான விருது.

* Aeronautical Society of India, சார்பில் சந்திரயான் - 3,ஆதித்யா எல் -1,டிவி டி1வெற்றிகளைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

*வெற்றிக்கான ரகசியம்!*

உழைத்தால் உயரலாம். எனக்கு முக்கியமான பொறுப்பை பிரதமர் வழங்கியுள்ளார்; இஸ்ரோவை நானும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முயல்வேன்.

இது என் தனிப்பட்ட பணி அல்ல. வளர்ச்சிக்காக குழுவாக இணைந்து உழைக்கிறோம்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Jan, 05:51


*⛳️The Vocab Master For All Competitive Exams*

*Knowledge Spread ✍️📚*


*1. BURGEON* (VERB): (फैलाना): expand

Synonyms: shoot up, swell

Antonyms: shrink

Example Sentence:

The city's suburbs have burgeoned, sprawling out from the centre.

*2. RADICAL* (ADJECTIVE): (पूर्ण): thorough

Synonyms: thoroughgoing, complete

Antonyms: superficial

Example Sentence:

A radical overhaul of the existing regulatory framework is needed.

*3. ABRASIVE* (ADJECTIVE): (अपघर्षक): caustic


Synonyms: cutting, grating

Antonyms: kind

Example Sentence:

Her abrasive and arrogant personal style won her few friends.

*4. ANNIHILATE* (VERB): (मिटा देना): destroy

Synonyms: wipe out, obliterate

Antonyms: create

Example Sentence:

A simple bomb of this type could annihilate them all.


*5. COMPATIBLE* (ADJECTIVE): (संगत): consistent

Synonyms: reconcilable consonant

Antonyms: inconsistent

Example Sentence:

The symptoms were compatible with gastritis or a peptic ulcer.

*6. UNFETTER* :(VERB): (छुड़ा देना): untie

Synonyms: unchain, unbind

Antonyms: bind

Example Sentence:

The guards unfetter the prisoners.


*7. PROVOCATIVE* (ADJECTIVE): (उत्तेजक): annoying

Synonyms: irritating, exasperating

Antonyms: soothing

Example Sentence:

He got offended by a provocative article.

*8. IMPAIR* (VERB): (क्षीण करना): damage

Synonyms: harm, diminish

Antonyms: improve

Example Sentence:

A noisy job could permanently impair their hearing.


*9. EXPLICABLE* (ADJECTIVE): (बोधगम्य): comprehensible

Synonyms: understandable, definable

Antonyms: inexplicable

Example Sentence:

Differences in schools were not explicable in terms of differences in intake.


*10. DREADFUL* (ADJECTIVE): (भयानक): terrible

Synonyms: frightful, horrible

Antonyms: mild

Example Sentence:

He survived a dreadful accident.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Jan, 05:50


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*WINSOME*

*(கவர்ச்சிகரமான, மிகவும் ஈர்க்கும் விதமாக)*

meaning..... appealing in an innocent manner....


1. Even though the model is in her forties, she still uses her *winsome* looks to grace the covers of teen magazines.


2. If Kate and Mark do not punish their son soon, he will believe he can avoid consequences by displaying a *winsome* smile.

*However the meaning may vary depending on the context in which the word is used.*

Happy learning.
English vocabulary.

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:09


*இன்றைய தலைப்பு செய்திகள்*
05.01.25

○ கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடக்கம். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் வரும் புதன்கிழமை நடைபெறும் என எதிர்பார்ப்பு.


○ தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல். 23 லட்சம் விண்ணப்பங்களை பரிசீலித்து பட்டியல் தயாரிப்பு.


○ சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதியாக மின்சார ரயில்கள் ரத்து. பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு.


○ அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில் போலீஸ் சோதனை. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள்.


○ ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியீடு.


○ சாதி அரசியலின் பெயரால், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.


○ தரமான கல்வியை கொடுப்பதே ஒன்றிய அரசின் கடமை. தனியார் மயமாக்கிவிட்டு நிதி அளிப்பதால் மட்டும் கல்வியின் தரம் மேம்படாது என ராகுல் காந்தி காட்டம்.


○ விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி பஞ்சாப்- அரியானா எல்லையில் 40-வது நாளாக விவசாயிகள் போராட்டம். மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்க பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி.


○ சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம். முக்கிய குற்றவாளி, பத்திரிகையாளரின் உறவினர் என போலீஸார் தகவல்.


○ தென் கொரிய விமான விபத்தில் இறந்த 179 பேரின் அடையாளமும் தெரிந்ததாக அதிகாரிகள் தகவல். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு.


○ புதிய வகை வைரஸால் சீனாவில் அசாதாரண சூழல் நிலவவில்லை என ஒன்றிய அரசு விளக்கம். இந்தியாவில் மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் அறிவுறுத்தல்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:07


1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (இ. 1979)

1928 – தில்லைச் சிவன், இலங்கை எழுத்தாளர்

1931 – சாருஹாசன், இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர்

1932 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய மெய்யியலாளர் (இ. 2016)

1934 – முரளி மனோகர் ஜோஷி, இந்திய அரசியல்வாதி

1937 – சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)

1938 – முதலாம் வான் கார்லோஸ், எசுப்பானிய அரசர்

1938 – நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்

1939 – எம். ஈ. எச். மகரூப், இலங்கை அரசியல்வாதி (இ. 1997)

1941 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)

1953 – ஆனந்த் சர்மா, இந்திய அரசியல்வாதி

1955 – மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்

1956 – பிராங் வால்டர் சென்மர், செருமனியின் 14-ஆவது அரசுத்தலைவர்

1959 – பாண்டியன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2008)

1968 – கனிமொழி, இந்திய அரசியல்வாதி

1969 – மர்லின் மேன்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர்

1975 – பிராட்லி கூப்பர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1976 – கஞ்சா கறுப்பு, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்

1986 – தீபிகா படுகோண், இந்தியத் திரைப்பட ந‌டிகை

1993 – லலித் பாபு, இந்திய சதுரங்க வீரர்

*இறப்புகள்*

1625 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573)

1762 – எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியப் பேரரசி (பி. 1709)

1913 – லூயி பால் கையேட்டே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1832)

1933 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (பி. 1872)

1939 – ஓட்டோ க்லேம், தெருமானிய உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1884)

1943 – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1864)

1952 – விக்டர் ஹோப், இசுக்கொட்டிய அரசியல்வாதி, இந்தியாவின் 46வது தலைமை ஆளுநர் (பி. 1887)

1970 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)

1973 – வெ. துரையனார், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட தென்னாப்பிரிக்கர் (பி. 1891)

1975 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1905)

1981 – அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)

2000 – குமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1938)

2014 – எய்சேபியோ, மொசாம்பிக்-போர்த்துக்கீச கால்பந்து வீரர் (பி. 1942)

2018 – யோன் யங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)

2018 – தாமசு பாப், அமெரிக்க வானியலாளர், ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தவர் (பி. 1949)

2021 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (பி. 1934)

2022 – காமகோடியன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்

2024 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1937)

*சிறப்பு நாட்கள்*

தேசிய பறவை நாள் (ஐக்கிய அமெரிக்கா)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:07


*வரலாற்றில் இன்று – 05.01.2025*

சனவரி 5 (January 5) கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

1066 – இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது.

1477 – பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது.

1554 – நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன.

1664 – பேரரசர் சிவாஜி  தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர்.

1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.

1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: வர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பெனடிக்ட் ஆர்னோல்டு  தலைமையிலான பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.

1840 – இலங்கையில் மீன் வரி அறவிடுவது நிறுத்தப்பட்டது.

1846 – ஒரிகன் பிராந்தியத்தை  ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்காவின்  கீழவை எதிர்த்து வாக்களித்தது.

1854 – சான் பிரான்சிஸ்கோவில்  நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.

1882 – அமெரிக்க அரசுத்தலைவர்  யேம்சு கார்பீல்டைக் கொலை செய்த குற்றத்திற்காக சார்லசு கிட்டோ என்பவனுக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.

1900 – அயர்லாந்துத் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட்  பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.

1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.

1918 – செருமன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது.

1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள்  சான் பிரான்சிஸ்கோவில்  ஆரம்பித்தது.

1940 – பண்பலை வானொலி  முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.

1945 – போலந்தின் புதிய சோவியத்-சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.

1950 – சோவியத் ஒன்றியத்தில்  சிவெர்திலோவ்சுக் நகரில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த சோவியத் வான் படையின் தேசிய பனி வளைதடியாட்டக்  குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உட்பட அனைத்து 19 பேரும் உயிரிழந்தனர்.

1967 – இலங்கை வானொலி  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1970 – சீனாவின்  யுன்னான்  மாகாணத்தில் 7.1 Mw  நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.

1971 – உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.

1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.

1974 – பெருவின் தலைநகரான  லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் உயிரிழந்தனர்.

1975 – ஆத்திரேலியா,  தாசுமேனியாவில் தாசுமான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1976 – கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.

1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன்  குனூ  இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.

1991 – சியார்சியப் படைகள் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் தரையிறங்கின. 1991–92 Sதெற்கு ஒசேத்தியப் போர் ஆரம்பமானது.

1997 – உருசியப் படைகள்  செச்சினியாவில் இருந்து வெளியேறின.

2000 – ஈழப்போர்:  இலங்கையின்  தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

2005 – சூரியக் குடும்பத்தின்  மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு கண்டுபிடிக்கப்பட்டது.

2007 – ஈழப்போர்:  கொழும்பிலிருந்து  36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற  பேருந்துக்  குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.

2014 – இந்திய கடுங்குளிர் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட  ஜிசாட்-14 தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

*பிறப்புகள்*

1592 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666)

1876 – கொன்ராடு அடேனார், மேற்கு செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1967)

1893 – பரமஹம்ச யோகானந்தர், இந்திய-அமெரிக்க குரு (இ. 1952)

1902 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)

1926 – ஆர். முத்துசாமி, இலங்கைத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1988)

1926 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)

1927 – சிவாய சுப்ரமணியசுவாமி, இறைவன் கோவிய நிறுவிய அமெரிக்கர், யோக சுவாமிகளின் சீடர் (இ. 2001)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:04


*ஜனவரி 05*

*தேசிய 🐦பறவைகள் தினம்* .

2002ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 அன்று கொண்டாடப்படுகிறது.

வருடாந்திர "கிறிஸ்துமஸ் பறவைகளின் எண்ணிக்கை" ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுவதால், இந்த தேதி குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த வருடாந்திர கணக்கெடுப்பு அமெரிக்காவில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

முடிவுகள் அமெரிக்கா முழுவதும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பற்றிய தகவல்களை வழங்குகின்றன

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:04


*ஜனவரி 05*

முற்றிலும் இந்திய உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்திய தினம் இன்று (2014).

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன க்ரையோஜினிக் என்ஜின் பொருத்தப்பட்ட GSLV-D5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்டு 17 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த ராக்கெட் ஜி-சாட்-14 தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை  விண்ணில் செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவர் கே இராதாகிருஷ்ணன், தங்கள் குழுவின் அர்ப்பணிப்பிற்கு மேலுமொரு வெற்றி இது என்றார்.

இஸ்ரோவின் வெற்றி பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல் கல் என்று கருதப்படுகிறது.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:03


*05.01.2025*
*திருக்குறள்*

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

*குறள்:330*

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

*விளக்கம்:*

 வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

*பழமொழி :*

Least said, sooner mended

யாகாவாராயினும் நாகாக்க

*பொன்மொழி :*

இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’

- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)

*பொது அறிவு :*

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?

பத்மினி ஜேசுதுரை

*English words & meanings :**

 drabbing - pulling இழுத்தல்.dreadful - horrible அச்சமூட்டுகின்ற.

*ஆரோக்ய வாழ்வு :*

 சிறுகீரை பயன்கள் :உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், இதய நோயாளிகள், என அனைவருக்கும் ஏற்ற கீரை இந்த சிறுகீரையாகும்..

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

05 Jan, 02:02




🤔  *நாளும் ஒரு சிந்தனை*

சினம் நேசிப்பவர்களைக் கூட
வெறுக்க வைக்கும்!
அன்பு வெறுப்பவர்களைக் கூட
நேசிக்க வைக்கும்..!!!

🏚️  *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

📰   *நாளும் ஒரு செய்தி*

     சனி கோளுக்கு மொத்தம் *'21 துணைக்கோள்கள்'* உள்ளன.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

    பாயாசம் நீர்த்து இருந்தால் வாழைப்பழத்தை பிசைந்து சேர்த்து, சிறிது தேனும் கலந்தால் சுவைமிகுந்த கெட்டிப் பாயாசம் தயார்.

💰   *நாளும் ஒரு பொன்மொழி*

     நேர்மையான துணிவுக்கு இறைவனே துணை செய்வான்.

                    *-மெனாண்டர்*

📆. *இன்று சனவரி 5-*
  
   ▪️ *உலக டீசல் எந்திர நாள்.*

          🌸 *பிறந்த நாள்* 🌸

1592- *ஷாஜகான்* (முகலாயப் பேரரசர்)

1955 - *மம்தா பானர்ஜி* (மேற்கு வங்க முதலமைச்சர்)


( *பகிர்வு)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 14:50


*இன்றைய புதிர் - 01*

3 எழுத்து சொல்

1, 2, 3 இணைந்தால் ஆண்டியானவர்

1, 3  இணைந்தால் மார்கழியில் இது இல்லாமல் இருக்குமா?

*நேற்றைய புதிரின் விடை*
     
1. *வி* க்கிரவாண்டி
2. க *ரு* ங்குழி
3. தூத் *து* க்குடி
4. கடைய *ந* ல் னலூர்
5. சூலமங் *க* லம்
6. பெரம்பலூ *ர்*

*விருதுநகர்*

*சொல் புதிர்*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 12:01


*ஜனவரி 04, 1994*

திருக்குறளார் என்றழைக்கப்பட்ட திருக்குறள் முனுசாமி நினைவு நாள் இன்று.

திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் உலகப் பொதுமறை திருக்குறளுக்காகப் பணி செய்தவர்.

திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

1935 ம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.

1941 ம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார்.

தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

திருக்குறளாரின் பணியை "குறட்பயன் கொள்ள நம்
திருக்குறள் முனுசாமி சொல் கொள்வது போதுமே" என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 12:01


*ஜனவரி 04, 1994*

இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு அவர்களின் நினைவு நாள் இன்று.

ஜி.டி. நாயுடு என்று அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர்.

இவர் பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி என பல பொருட்களை உருவாக்கினார்.
ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3ஆவது பரிசுகள் கிடைத்தன.

இவற்றை தயாரிக்கும் உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார். இவரது அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.

தன்னுடைய சுய முயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கினார். இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை கோவையில் அமைந்ததற்கான பெருமை நாயுடுவையே சாரும்.

நாயுடுவின் திறமைகளுக்கு அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தால் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர், உலகம் முழுவதும் எடிசனுக்கு நிகராக போற்றப்பட்டிருப்பார். ஆயினும் இவருடைய வாழ்க்கை இப்போதும் இந்திய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கிறது என்பதே உண்மை.

கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அது இவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 06:25


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*STEVEDORE*

*(கப்பலில் சரக்குகளை ஏற்றி, இறக்குபவர்)*

meaning..... someone employed to load/unload cargo, specifically for ships....


1. In Iceland, fishermen heavily depend on a skilled *stevedore* to load and unload the catch of the day.


2. After the last cargo hauler was fire for stealing from the ship stores, a new *stevedore* was hired.

*However the meaning may vary depending on the context in which the word is used.*

Happy learning.
English vocabulary.

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 06:25


*⛳️The Vocab Master For All Competitive Exams*

*Knowledge Spread ✍️📚*


*1. ANTIPATHY* (NOUN): (विरोधभाव): hostility
Synonyms: antagonism, animosity

Antonyms: liking

Example Sentence:

He certainly had antipathy to capitalism.

*2. OSTRACISE* (VERB): (अलग करना): exclude

Synonyms: shun, spurn

Antonyms: welcome

Example Sentence:

She was declared a witch and ostracized by the villagers.

*3. POISED* (ADJECTIVE): (शांतचित्त): self-possessed

Synonyms: self-assured, composed

Antonyms: excited

Example Sentence:

Not every day you saw that poised, competent kid distressed.

*4. EQUILIBRIUM* (NOUN): (शांति): calm

Synonyms: calmness, composure

Antonyms: agitation

Example Sentence:

His intense behavior could unsettle his equilibrium.

*5. CAPITULATE* (VERB): (आत्मसमर्पण करना): surrender

Synonyms: give in, yield

Antonyms: resist

Example Sentence:

The patriots had to capitulate to the enemy forces.

*6. INTENSIFY* (VERB): (बढ़ाना): escalate

Synonyms: step up, boost

Antonyms: lessen

Example Sentence:

The dispute began to intensify.

*7. DELIBERATE* (ADJECTIVE): (सविचार): careful

Synonyms: cautious, unhurried

Antonyms: hasty

Example Sentence:

I have always been a conscientious and deliberate worker.

*8. PROLIFERATE* (VERB): (संख्या में बढ़ना): multiply

Synonyms: mushroom, snowball

Antonyms: decrease

Example Sentence:

The science fiction magazines which proliferated in the 1920 s.

*9. INHIBIT* (VERB): (रोकना): impede

Synonyms: hinder, hamper

Antonyms: assist

Example Sentence:

Cold inhibits plant growth.

*10. BOAST* (VERB): (डींग मारना): brag

Synonyms: crow, swagger

Antonyms: deprecate

Example Sentence:

She boasted about her many conquests

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:16


*இன்றைய தலைப்பு செய்திகள்*
04.01.25

• அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு. வீட்டில் இருந்து பணம் மற்றும் ஆவணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தகவல்.

• ஜனவரி 12 முதல் நெல்லை, குமரி, நாகர்கோவில், ராமநாதபுரத்துக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள். கால அட்டவணையை வெளியிட்டது தென்னக ரயில்வே.

• இந்துத்துவ அரசியலை தமிழ்நாட்டில் பரப்ப நினைக்கிறது பாஜக. விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு.

• ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் அதிகாரிகள். மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குப்பதிவுகளை நீக்க நடவடிக்கை.

•18 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடக கணக்கு தொடங்க நிபந்தனை. பெற்றோரின் ஒப்புதல் தேவை என வரைவு விதி வெளியிட்டது ஒன்றிய அரசு.

• தென்கொரியாவின் சியோங்னம் நகரில் பயங்கர தீ விபத்து. 8 மாடிகள் வணிக நிறுவன கட்டடத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் மீட்பு.

• சீனாவில் கொரோனாவைப் போல் வேகமாகப் பரவும் புதிய வைரஸ். இந்தியாவில் அச்சம் தேவையில்லை என ஒன்றிய அரசு விளக்கம்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:14


1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்

*இறப்புகள்*

1904 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (பி. 1857)

1908 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்க வானியலாளர் (பி. 1834)

1929 – சேசாத்திரி சுவாமிகள், தமிழக சித்தர் (பி. 1870)

1941 – என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1859)

1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

1961 – எர்வின் சுரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர் (பி. 1887)

1965 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (பி. 1888)

1974 – அண்ணல் தங்கோ, தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1904)

1974 – ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)

1976 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1895)

1994 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழகத் தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1913)

1994 – ஆர். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1939)

2004 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1917)

2005 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கை சட்டத்தரணி, தமிழ் ஆர்வலர், தொழிற்சங்கவாதி (பி. 1920)

2010 – சுடோமு யாமகுச்சி, சப்பானியப் பொறியியலாளர் (பி. 1916)

2017 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (பி. 1927)

*சிறப்பு நாட்கள்*

தியாகிகள் நாள் (காங்கோ சனநாயகக் குடியரசு)

விடுதலை நாள் (மியான்மர், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)

குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாள் (அங்கோலா)

உலக பிரெயில் நாள்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:14


*வரலாற்றில் இன்று – 04.01.2025*

சனவரி 4 (January 4) கிரிகோரியன் ஆண்டின் நான்காம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார்.

1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.

1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.

1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.

1649 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.

1717 – நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் உத்ரெக்ட் உடன்பாட்டைத் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.

1762 – எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.

1798 – உதுமானியர்களினால் வலாச்சியாவின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்ட கான்சுடன்டைன் அங்கெர்லி புக்கரெஸ்ட் வந்து சேர்ந்தார்.

1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விற்றார்.

1854 – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

1878 – சோஃபியா நகரம் உதுமானியரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 1879 இல் விடுதலை பெற்ற பல்காரியாவின் தலைநகரானது.

1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.

1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1912 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் சாரணர் இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1918 – பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.

1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.

1951 – கொரியப் போர்: சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.

1958 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.

1958 – முதலாவது செயற்கைக் கோள் இசுப்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

1959 – சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.

1966 – பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1976 – வட அயர்லாந்தில் ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1987 – அமெரிக்காவில் பாஸ்டன் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

1989 – லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1990 – பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.

1998 – அல்சீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – இசுப்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

2010 – உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

2018 – தென்னாப்பிரிக்காவில் பயணிகள் தொடருந்து ஒன்று பாரவுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

*பிறப்புகள்*

1643 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/27)

1785 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர், மொழியியலாளர் (இ. 1863)

1809 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1852)

1813 – ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1897)

1889 – பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (இ. 1963)

1892 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியலாளர் (இ. 1960)

1904 – எஸ். எஸ். வாசன், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 1969)

1940 – பிறையன் ஜோசப்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்

1941 – க. துரைரத்தினசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2021)

1944 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர், ஓவியர் (இ. 2020)

1954 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (இ. 2018)

1963 – மே-பிரிட் மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்

1964 – பிரபா கணேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:12


*ஜனவரி 04*

*லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்*

லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர்.

பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.

பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

*உலக பிரெயில் நாள்*

புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும்.

ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.

பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது.

பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:12


*ஜனவரி 04*

*ஜி.டி. நாயுடு*
(கோபால்சாமி துரைசாமி நாயுடு
23 மார்ச் 1893 - *04 டிசம்பர் 1974)*

தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:11


*04.01.2025*
*திருக்குறள்*

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

*குறள்:329*

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

*விளக்கம்:*

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய்
எண்ணப்படுவார்.

*பழமொழி :*

Learn ever from an enemy

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்

*பொன்மொழி :*

புத்தாண்டு தினம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்தநாள்.’’

- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)

*பொது அறிவு :*

1. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?

கன்னியாகுமரி

2. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?

பாத்திமா பீபி

*English words & meanings :*

 cordial - politely warm and friendly நட்பு, உள்ளன்புடைய. controversy - argument வாக்குவாதம்

*ஆரோக்ய வாழ்வு :*

சிறுகீரை பயன்கள் : உடம்பில் ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை இந்த சிறுகீரைக்கு உண்டு. அத்துடன், காயங்களில் தொற்றுக்களை ஏற்படாமலும், தடுக்க உதவுகிறது. அதனால்தான், சிறுகீரையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு, காயங்கள் உள்ள இடங்களில் தடவுவார்கள். இதனால், புண்கள் விரைவில் ஆறும்

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

04 Jan, 02:10




🤔    *நாளும் ஒரு சிந்தனை*

இந்த பிரபஞ்சம்
நமக்கானவர்களையும், நமக்கான பொருளையும்
சரியான நேரத்தில்
நம்மிடம் கொண்டுவந்து
சேர்க்கும் ..!!!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     இரும்புச்சத்து அதிகம் நிறைந்த "கறிவேப்பிலையை" உணவில் எடுத்துக் கொண்டால் தலைமுடி நன்கு வளரும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     முதன்முதலில் மின்சார ரயிலை அறிமுகம் செய்த நாடு *'அமெரிக்கா'* ஆகும்.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     கைக்குத்தல் அரிசியை   பயன்படுத்துவதால் சுவை கூடுவதோடு நல்ல உடல்நலன் கிடைக்கிறது.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

     உள்ளத்தில் அன்பிருந்தால் அதில் உலகமே குடியிருக்கும்.

                  *-பெர்னாட்ஷா*

📆  *இன்று சனவரி 4-*
   
   ▪️ *உலக பிரெயில் நாள்.*

          🌸 *பிறந்த நாள்* 🌸

1643- *ஐசக் நியூட்டன்* (ஆங்கிலேய இயற்பியலாளர்)

1809- *லூயி பிரெயில்* (பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்தை கண்டறிந்தவர்)

         💐 *நினைவு நாள்* 💐

1974-  *ஜி.டி.நாயுடு* (இந்திய அறிவியலாளர்)

1994- *திருக்குறள் வீ.முனுசாமி* (தமிழறிஞர்)


*(பகிர்வு)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

03 Jan, 14:46


*இன்றைய புதிர் - 01*

தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,
2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால்,

தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர்க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    கருங்குழி
2.     தூத்துக்குடி     
3.     விக்கிரவாண்டி    
4.     சூலமங்கலம்     
5.     பெரம்பலூர்
6.      கடையநல்லூர்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

*நேற்றைய புதிரின் விடை*

*எ வ ழு ண் ஆ ரு க இ ழி*

ஆ/ஆக/ஆழி/இழி/இழு/எழு/வழு/கழு/வழி/கழி /கண்/ஆண்
எழுக/வருக/ஆருக/எழுவண்

ஊர்ப் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 14:49


*இன்றைய புதிர்*

3 எழுத்து சொல்

1, 2, 3 இணைந்தால் வயலாகும்

1, 3  இணைந்தால் பழமாகும்

*நேற்றைய புதிரின் விடை*
     
*கொ* டுமுடி
உ *டை*  யார் பாளையம்
நில *க்*  கோட்டை
அலங் *கா* நல்லூர்
திண்டிவ *ன* ம்
நாகர் கோவி‌ *ல்*

*விடை: கொடைக்கானல்*

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:31


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*PENCHANT*

*(ஆர்வம், விருப்பம்)*

meaning..... a strong liking...


1. Recently, Henry discovered he had a *penchant* for baking so he opened a café downtown.


2. As you can tell by the big feathers on her head, my Aunt Liza has a *penchant* for unusual hats!

*However the meaning may vary depending on the context in which the word is used.*

Happy learning.
English vocabulary.

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:31


*🌎📚TODAY'S G.K.*

*Knowledge Spread 🌎📚*


*🤔 Do you know?*

1. India is the first country to extract sugar from sugarcane.

2. The first book printed in India is in Tamil language.

3. An electric bulb is capable of burning up to 750 to 1000 hours.

4. India's first general election was held on 1951.

5. The first practice of applying kohl in eye was done by Egyptians.

6. India found the first oil well under the ground in 1867, Assam.

7. In 1946, the first Indian film institute was set up in Chennai.

8. In India Space Research centre was first established in 1963.

9. The first hospital for elephants was started in 1993, Thailand.

10. The first country in the world to telecast Live on TV is Japan.


*பகிர்வு: அறிவு பரவல் 🌎📚*


*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா.

2. இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூலின் மொழி தமிழ்.

3. ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.

4. இந்தியாவில் முதன் முதலில் பொது தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடந்தது.

5. கண்மைபூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள் தான் ஏற்படுத்தினார்கள்.

6. இந்தியாவில் முதன் முதலில் அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

7. 1946 இல், முதல் இந்திய திரைப்பட நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்டது.

8. இந்தியாவில் முதன் முதலில் 1963-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.

9. யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.

10. உலகில் முதன் முதலில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:30


*📚 இன்றைய 10 சொற்கள்!*

*பகிர்வு: அறிவு பரவல் ✍️📚*


*1. Lieu (லியூ) - பதிலாக.*

மட்டைப்பந்து விளையாடுவதற்கு பதிலாக, நான் எனது வீட்டுப்பாடங்களை செய்ய முடிவு செய்துள்ளேன்.

In lieu of playing cricket, I have decided to do my homework.

*2. Repayable (ரீபேயபில்) - திருப்பி செலுத்தக்கூடிய.*

இந்த கடன் தொகையானது மூன்று வருடங்களில் திருப்பி செலுத்தக்கூடியதாகும்.

This loan amount is repayable over three years.

*3. Reparation (ரிபரேஷன்) - நஷ்ட ஈடு*

கடையில் பொருள் உடைந்ததற்கு நஷ்ட ஈடு எங்களுக்கு வேண்டும்.

We need reparation for the item broken in store.

*4. Sinful (சின்ஃபுல்) - பாவம் செய்த.*

எப்போதும் கதையில் நல்ல பெண்கள் பாவம் செய்த ஆண்களை காப்பாற்றுவார்கள்.

Good women have always saved sinful men in story.

*5. Sieve (சீவ்) - சல்லடை.*

ஜப்பான் நாட்டில் மூங்கில் சல்லடைகள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

In Japan, Bamboo sieves are used in cooking.

*6. Blameworthy (ப்லேம்வொர்த்தி) - கண்டிக்கத்தக்க.*

எனது வாழ்க்கை கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என நான் ஒப்புக் கொள்கிறேன்.

I confess it, my life has been blameworthy.

*7. Pillage (பில்லேஜ்) - கொள்ளை.*

கொள்ளைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

There were no signs of pillage.

*8. Nullify (நல்லிஃபை) - செல்லத்தகாததாகச் செய்.*

நீதிபதிகள் அரசாங்கத்தின் முடிவுகளை செல்லத்தகாததாகச் செய்ய விரும்பவில்லை.

Judges were unwilling to nullify government decisions.

*9. Overt (ஓவர்ட்) - வெளிப்படையாக.*

திட்டத்திற்கு சிறிய வெளிப்படையான ஆதரவு இருந்தது.

There was little overt support for the project.

*10. Ordinance (ஆர்டினன்ஸ்) - அவசரச் சட்டம்.*

அவசரச் சட்டம் நகரங்களில் அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்வதை தடை செய்கிறது.

The ordinance prohibits the city from cleaning the contaminated areas.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:30


*⛳️The Vocab Master For All Competitive Exams*

*Knowledge Spread ✍️📚*


*1. COMPATIBLE* (ADJECTIVE): (संगत): consistent

Synonyms: reconcilable consonant

Antonyms: inconsistent

Example Sentence:

The symptoms were compatible with gastritis or a peptic ulcer.

*2. RECURRENT* (ADJECTIVE) (आवर्तक): repeated

Synonyms: recurring, repetitive

Antonyms: isolated

Example Sentence:

She had a recurrent dream about falling.

*3. DETRIMENT* (NOUN): (हानि): harm

Synonyms: damage, injury

Antonyms: benefit

Example Sentence:

Hurried tests are a detriment to good education.

*4. TRENCHANT* (ADJECTIVE): (तीव्र): incisive

Synonyms: cutting, pointed

Antonyms: woolly, vague

Example Sentence:

The White Paper makes trenchant criticisms of health authorities.


*5. REINFORCE* (VERB): (सुदृढ बनाना): strengthen

Synonyms: fortify, buttress

Antonyms: weaken

Example Sentence:

The captain sent out another squad to reinforce the troops.

*6. SPORADIC* (ADJECTIVE): (छिटपुट): occasional

Synonyms: infrequent, irregular

Antonyms: frequent

Example Sentence:

Sporadic fighting broke out.

*7. PSYCHE* (NOUN): (मानस): soul

Synonyms: spirit, life force

Antonyms: body

Example Sentence:

Her work touches something profound in the human psyche.

*8. WHITTLE* (VERB): (काटना): erode

Synonyms: wear away, eat away

Antonyms: increase

Example Sentence:

The list of five was whittled down to two.

*9. IMPAIR* (VERB): (क्षीण करना): damage

Synonyms: harm, diminish

Antonyms: improve

Example Sentence:

A noisy job could permanently impair their hearing.

*10. FLURRY* (NOUN): (लहर): spate

Synonyms: wave, flood

Antonyms: dearth

Example Sentence:

A flurry of editorials that were hostile to the government were published

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


அருண் ஜெட்லி
(Arun Jaitley
*28 டிசம்பர் 1952*-
24 ஆகஸ்ட் 2019)

இந்திய அரசியல்வாதியும், பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


ச. கனகரத்தினம்
(Sathasivam Kanagaratnam
பிறப்பு :
*28 டிசம்பர் 1946*)

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


டென்செல் வாஷிங்டன்
(Denzel Hayes Washington
பிறப்பு :
*28 டிசம்பர் 1954*)

தலைசிறந்த அமெரிக்க நடிகரும், இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


லியூ சியாபோ
(Liu Xiaobo
*28 டிசம்பர் 1955*-
13 ஜூலை 2017)

சீன எழுத்தாளர், அரசியல் விமர்சகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார்.

2010ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


ஜி. கே. வாசன்
(பிறப்பு :
*28 டிசம்பர் 1964*)

தமிழ்நாட்டு அரசியல்வாதி.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர்.

தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


பிரான்சிஸ் டி சேலஸ்
(Saint François de Sales
21 ஆகஸ்ட் 1567-
*28 டிசம்பர் 1622*)

ஜெனீவா நகரின் முன்னாள் ஆயரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

சீர்திருத்தத் திருச்சபையினரை மீண்டும் கத்தோலிக்க திருச்சபையோடு சேர்க்க அரும்பாடுபட்டார். இவர் ஒரு சிறந்த மறை சொற்பொழிவாளர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி
(Francesco Maria Grimaldi
02 ஏப்ரல் 1618-
*28 டிசம்பர் 1663*)

இத்தாலியக் கிறிஸ்துவ மதபோதகரும் அறிவியலறிஞரும் கணிவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


சியென்னா மில்லர்
(Sienna Miller
பிறப்பு :
*28 டிசம்பர் 1981*)

ஆங்கிலத் திரைப்பட நடிகையும், ஆடை வடிவமைப்பாளரும், விளம்பர நடிகையும் ஆவார்.

இவர் ஜி. ஐ. ஜோ,
அன்பினிஷ்டு பிசினஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் "டாப் கியர்" போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


இரண்டாம் மேரி
(Mary II
30 ஏப்ரல் 1662-
*28 டிசம்பர் 1694*)

இங்கிலாந்து,
ஸ்காட்லாந்து,
அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார்.

இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணிக்கப்படுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


ஜோசப் பிட்டன் டீ டொர்னபோர்ட்
(Joseph Pitton de Tournefort
95 ஜூன் 1656-
*28 டிசம்பர் 1708*)

தாவரவியல் பேரறிஞர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

தாவரவியல் வகைப் பாட்டியல் அலகான பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


பத்தாம் சாமராச உடையார்
(22 பிப்ரவரி 1863-
*28 டிசம்பர் 1894*)

மைசூரின் மன்னராக 1868 தொடக்கம் 1894 வரை திகழ்ந்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


கோபாலசாமி மகேந்திரராஜா
(இயக்கப்பெயர் : மாத்தையா
1956-
*28 டிசம்பர் 1994*)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

இவர் 1978 ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து 1987 ம் ஆண்டு அதன் உப தலைவராக உயர்ந்தார்.

1989 ல் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் 
(Sarathambal Saravanbavanantha kurukkal
1970-
*28 டிசம்பர் 1999*)

பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட 
இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். 

யாழ்ப்பாண மாவட்டம், 
புங்குடுதீவில் 
சரவணபவானந்தக் குருக்கள் என்பவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான 29 வயது சாரதாம்பாளின் இறந்த உடல் சருகுகளுக்கும் இலைகளுக்கும் கீழ் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கிடந்ததை ஊர்மக்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிகழ்வு 
இலங்கை இனப்பிரச்சனையில் ஒரு முக்கிய நிகழ்வாக உலகளாவிய அளவில் பேசப்பட்டது.

(புகைப்படம் :
தந்தை மற்றும் 3 வயது மகள் கொழும்பில் 
இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்றபோது எடுக்கப் பட்டது)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


குஷபாவு தாக்கரே
(15 ஆகஸ்ட் 1922-
*28 டிசம்பர் 2003*)

இந்திய அரசியல் தலைவர் ஆவார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஆர்எஸ்எஸ்,
பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி உருவான போது அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1998-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்று ஆகஸ்ட் 2000 வரை அப்பதவியில் இருந்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Dec, 06:21


அமர்நாத் சேகல்
(Amarnath Sehgal
05 பிப்ரவரி 1922-
*28 டிசம்பர் 2007*)

இந்திய சிற்பக்கலைஞர், ஓவியர் கவிஞர் மற்றும் கலை ஆசிரியர் ஆவார்.

இவர் இறந்த பின்னர் இந்திய அரசு 2008 ம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கியது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

30 Nov, 00:54


*நவம்பர் 30*

*வாணி ஜெயராம்*
(பிறப்பு : *30 நவம்பர் 1945*)
திரைப்படப் பின்னணிப் பாடகி.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

இவரின் இசைப்பயணம் 1971 ம் ஆண்டு குட்டி ௭ன்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார்.

இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

இவர் "ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என்று அழைக்கப்படுகிறார்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

30 Nov, 00:52


*நவம்பர் 30*

கோவைக்கிழார் என அறியப்படும்
கோ. ம. ராமச்சந்திரன் செட்டியார்
( *30 நவம்பர் 1888*-
03 டிசம்பர் 1969)
வழக்குரைஞராய் இருந்து தமிழறிஞரானவர்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு, கல்வெட்டு, கவிதை, உரைநடை, நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார்.

இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத கொங்குநாட்டு வரலாற்றை எழுதினார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

30 Nov, 00:49


*30.11.2024*
*திருக்குறள் :*

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை

*குறள்:310*

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

*விளக்கம்:*

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்.

*பழமொழி :*

Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.

*பொன்மொழி :*

துருப்பிடித்து தேய்வதை
விட உழைத்து தேய்வது
சிறந்தது.. நீ நினைத்தால்
விண் மீனையும் விழுங்கி
விட முடியும்.. இதுவே உன்
உண்மை பலம்.. மூட
நம்பிக்கைகளை
உதரித் தள்ளிவிட்டு
தைரியமாக செயல்படு

*பொது அறிவு :*

1. ஆதார் அட்டை முதலில் பெற்றவர் யார்?

விடை:  ரஞ்சனா சோனாவனே

2.. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?

விடை: டீனியா (Taenia)

*English words & meanings :*

 gut(n) - the elementary canal குடல், நரம்பு.
gymnast (n) - expert in gymnastics உடற்பயிற்சி வல்லுநர்

*ஆரோக்ய வாழ்வு :*

*பூசணிப் பூ:*

பூசணி பூக்களில் ஏராளமான வைட்டமின் A தாது சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்-A கண்பார்வையை மேம்படுத்த உதவும்.

ஒளியினால் உண்டாகும் மாற்றங்களை சமாளிக்க கண்களுக்கு போதுமான சக்தியை தருகிறது மற்றும் கண்களை ஈரத்தன்மையுடன் வைத்திருக்க கூடியது.

அதுமட்டுமல்ல, வைட்டமின்-A இரவு பார்வையையும் மேம்படுத்துகிறது.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

30 Nov, 00:46




🤔   *நாளும் ஒரு சிந்தனை*

நம் மதிப்பு நம்மை மட்டும்
சார்ந்ததல்ல..!
நாம் சேரும் இடத்தையும்,
நாம் நடந்து கொள்ளும்
விதத்தையும் சார்ந்ததே.!!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     வாய்ப்புண் மீது பப்பாளிப் பாலை தடவினால் புண் குணமாகும்.

📰   *நாளும் ஒரு செய்தி*

     இரு பெரிய நிலப்பகுதிகளை இணைக்கும் குறுகலான பூமிக்கு *'இஸ்துமஸ்'* என்று பெயர்.

🥘.  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     பொரித்த அப்பளம் காகிதம் போல் ஆகிவிட்டால், அதனை மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்தால் அப்பளம் மொறு மொறுவென ஆகி விடும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரும் வெற்றியை அடைய முடியாது.

                  *-அப்துல் கலாம்*

📆. *இன்று நவம்பர் 30-*
  
          🌸 *பிறந்த நாள்* 🌸

1858- *ஜெகதீஸ் சந்திர போஸ்* (இந்திய இயற்பியலாளர்)

1874- *வின்ஸ்டன் சர்ச்சில்* (ஐக்கிய இராச்சிய பிரதமர், நோபல் பரிசு பெற்றவர்)


( பகிர்வு)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 15:00


*இன்றைய புதிர்*

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லில்  விடுபட்ட எழுத்துக்களை சேர்த்து முழு சொல்லை கண்டுபிடியுங்கள்.

*உ _ யா _ ல்*

*கை _ _ ளை*

*நேற்றைய புதிரின் விடை*

*க ப ர ல் ம் வி டி த ய*

கல்/கடி/படி/வில்/கவி/தவி/ரம்/பல் தடி/கயல்/கபம்/கரம்/கல்வி/பகல் பதவி/கரடி/பயம்/பயல்/விரல்/ரதம் பதம்/பரம்/தரம்/விதம்/கடிதம்
விடியல்/விபரம்/விகல்பம்

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 14:01


_*உலகமெங்கும் சக்கைபோடு போடும் 'கருப்பு வெள்ளிக்கிழமை' விற்பனை! என்னங்க இது?*_


_நவம்பர் 29 - Black Friday Sales!_

☘️☘️☘️

வட அமெரிக்காவில் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ வியாழக்கிழமைக்கு (Thanksgiving Thursday) அடுத்த நாள் ‘கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை’ (Black Friday Sales) நாள்.

இந்த நாளில் பொருட்களை அதிகப்படியான தள்ளுபடியில் விற்பனை செய்வார்கள். இந்த விற்பனை, திங்கள்கிழமை வரை நீடிக்கும். விற்பனையின் தன்மை பொறுத்து, சில வணிக நிறுவனங்கள் இதை கிறிஸ்துமஸ் வரை நீட்டிப்பது உண்டு. நன்றி தெரிவிக்கும் நாளில் தொடங்கி வருடக் கடைசி வரை நடக்கும் விற்பனைகளை ‘விடுமுறை விற்பனை’ என்று சொல்வதுண்டு. *வட அமெரிக்காவில் ஆரம்பித்த Black Friday Sales இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.*

*இதற்கு ஏன் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்று பெயர்?*

1869ஆம் வருடம், நியூயார்க் வால் ஸ்ட்ரீட் நிதியாளர்கள் இருவர், நியூயார்க் தங்க பரிமாற்றத்திலுள்ள, தங்கச் சந்தையிலிருந்த தங்கங்களை முடிந்த அளவில் வாங்க முயற்சித்தனர். இதனால், தங்கம் விலை ஏறி இலாபம் சம்பாதிப்பது அவர்கள் திட்டம். இதனையறிந்த அன்றைய அதிபர் க்ராண்ட், அரசின் கையிருப்பில் உள்ள தங்கத்தை பொதுச் சந்தையில் இறக்கினார். இதனால் பங்குச் சந்தை சரிய, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது நடந்தது செப்டம்பர் 24, வெள்ளிக்கிழமை. இதனால் அந்த நாளை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்ற குறிப்பிட ஆரம்பித்தனர்.


1950 வருடம் பிலடெல்பியா நகரில், நன்றி தெரிவிக்கும் நாளிற்கு அடுத்த நாள் பொருட்கள் வாங்கக் குவிந்த கூட்டத்தால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனால் சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்த காவல்துறைக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. காவல்துறை, இந்த நாளை 'கருப்பு வெள்ளிக்கிழமை' என்று குறிப்பிட ஆரம்பித்தது. இந்த பெயர் அமெரிக்கா முழுவதும் பரவி, 1980 முதல் இந்த நாளுக்கு 'கருப்பு வெள்ளிக்கிழமை’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. விற்பனை விவரங்களை அதற்கான நோட்டுப் புத்தகத்தில் பதிவிடும் போது, வியாபாரம் நஷ்டம் என்றால் சிகப்பு மையினாலும், இலாபம் என்றால் கருப்பு மையினாலும் எழுதுவார்கள். வருடம் முழுவதும் நஷ்டத்தில் இயங்கும் பெரும்பான்மையான வர்த்தக நிறுவனங்கள், இந்த நாளில் அதிகமான அளவில் பொருட்களை விற்று இலாபம் அடைவதால், விற்பனை விவரங்களை கருப்பு மையில் எழுதத் தொடங்கினார்கள். இந்தக் காரணத்தாலும், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

*கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு முதலே பெரிய வணிக வளாகங்களின் வாசலில் மக்கள் குவிந்து நிற்பார்கள். இந்த நாளில், பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடி அதிகமாக இருப்பதால், விலை குறைவாக இருக்கும்.*

இந்த நாளிற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பே, இந்த வருடம் வாங்க விரும்பும் விலையுயர்ந்த பொருட்களை குறித்து வைத்துக் கொண்டு, இந்தத் தருணத்தில் வாங்குவார்கள். பெரும்பாலான வணிக வளாகங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை விற்பனை நடக்கும்.

*தற்போது ‘ஆன் லைன்’ வர்த்தகத்திலும் இந்த விசேஷ விற்பனை நடைபெறுகிறது.*

வட அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த 'கருப்பு வெள்ளிக்கிழமை' விற்பனை தற்போது பாகுபாடின்றி உலகின் எல்லா கண்டங்களிலும் பரவியுள்ளது. நம் நாட்டிலும் பெரிய வணிக நிறுவனங்களும், ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களும், கருப்பு வெள்ளிகிழமை விற்பனைக்காகத் தள்ளுபடி விவரங்களை அறிவித்துள்ளார்கள்.

*2023ஆம் வருடம் அமெரிக்காவில் கருப்பு வெள்ளிக்கிழமை அன்று மட்டும் விற்பனை 9.8 பில்லியன் டாலர், (980 கோடி டாலர்). 166.8 மில்லியன் மக்கள், (16.8 கோடி) அந்த ஒரு நாளில் பொருட்கள் வாங்கியுள்ளார்கள். இந்த வருடம், கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை 10.8 பில்லியன் டாலராக (1080 கோடி) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*


☘️☘️☘️

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 01:03


*வரலாற்றில் இன்று* - 29.11.24

நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.

1549 – திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.

1612 – சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.

1732 – தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

1781 – கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.

1830 – போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1877 – தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.

1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.

1929 – ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

1945 – யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 – பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.

1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).

1963 – 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.

1982 – ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1987 – கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

*பிறப்புகள்*

1803 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1853)

1835 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (இ. 1908).

1889 – எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)

1901 – சோபா சிங், இந்திய ஓவியர் (இ. 1986)

1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988)

1924 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக்கலைஞர் (இ. 2021)

1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (இ. 2019)

1936 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)

1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1987)

1963 – லலித் மோடி, இந்தியத் தொழிலதிபர்

1977 – யூனுஸ் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1982 – ரம்யா, இந்திய நடிகை, அரசியல்வாதி

*இறப்புகள்*

1989 – மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)

1993 – ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)

2008 – ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)

2010 – எஸ். சிவநாயகம், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1930)

2011 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1942)

2011 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)

2013 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி. 1921)

2023 – என்றி கிசிஞ்சர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க அரசியல்வாதி (பி. 1923)

*சிறப்பு நாள்*

பலத்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான பன்னாட்டு நாள்

விடுதலை நாள் (அல்பேனியா)

குடியரசு நாள் (யுகோசுலாவியா)

ஒற்றுமை நாள் (வனுவாட்டு

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 01:00


*இன்றைய தலைப்பு செய்திகள்*
29.11.24

* புதுச்சேரிக்கு 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.

* 3 ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்.

* தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடம் மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

* அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

* தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு.

* சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி.

* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

*Today's Headlines*

* Puducherry was on a 'red alert' for 2 days, and precautionary measures intensified.

* 1.69 lakh free agricultural power connections in 3 years: Minister Senthil Balaji is proud of this achievement.

* Home Secretary Dheeraj Kumar has ordered the transfer of 5 IPS officers in Tamil Nadu.

* Kalam 4 missile, capable of carrying out nuclear weapons, was successfully tested from a submarine.

* Earthquake in Tajikistan; recorded at 4.6 on the Richter scale.

* International badminton: Sindhu and Lakshya Sen win in the first round.

* Junior Asia Cup hockey: India won a huge victory by defeating Thailand.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 01:00


சொந்த ஊருக்கே திரும்பிச் சென்ற மருதகாசி மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 01:00


*நவம்பர் 29*

*கவிஞர் அ. மருதகாசி நினைவு தினம்.*

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்த தவறாத கவிஞர் மருதகாசி ‘கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே’ என்று காதலின் ஆரம்பத்தையும்

‘எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே’ என்று காதலின் முடிவையும் எழுதிக் காட்டியவர்தான் கவிஞர் மருதகாசி.

பிறப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார்.

தந்தை: அய்யம்பெருமாள் உடையார்

தாய்: மிளகாயி அம்மாள்:

கல்வி: உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.

திருமணம்: 1940 இல் தனக்கோடியை மணந்தார். இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

*நாடகப் பணி:*

அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புகளுக்குப் பிறகு குடந்தையில் தேவி நாடக சபையின் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். மு.கருணாநிதி எழுதிய மந்திரகுமாரி போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

*திரைப்படப்பாடல்கள்:*

தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.

1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல்.

அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.

மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால்,

இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.

1950 இல் வெளிவந்த பொன்முடி படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன.

தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன.

இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார்.

இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர்.

மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.

""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம்.

வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.

1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர்,

எம்.ஜி.ஆரால் மீண்டும் திரையுலகில் மருதகாசி:

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 01:00


*நவம்பர் 29*

*என்.எஸ்.கிருஷ்ணன்*

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார்.

இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார்.

இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்கு குறையவில்லை. இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் 'சதிலீலாவதி'. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, 'சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்' என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு 'கலைவாணர்' பட்டம் வழங்கப்பட்டது.

நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் தனது 48வது வயதில் (1957) மறைந்தார்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 01:00


*29.11.2024*
*திருக்குறள் :*

பால்: பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை

*குறள் எண்: 844*

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

*பொருள்:*

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே' மதித்துக் கொள்ளும் செருக்காகும்.

*பழமொழி :*

சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும். அதுபோல , நல்லவர்ககுச் செய்த உதவி நிலை நிற்கும்.

A raindrop that falls on an oyster shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.

*பொன்மொழி :*

உடல்நலத்தை பாதுகாப்பது போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்- ஜவஹர்லால் நேரு

*பொது அறிவு :*

1. ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

விடை : ஹாக்கி.

2.கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?

விடை: 5

*English words & meanings :*

Jolly   -    மகிழ்ச்சியான

Excitement     -    உற்சாகம்

*வேளாண்மையும் வாழ்வும் :*

பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ் பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

29 Nov, 00:59


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔  *நாளும் ஒரு சிந்தனை*

தீதும் நன்றும் பிறந்தர வாரா. நல்லதே நினையுங்கள், நல்லதே செய்யுங்கள்..!!

🏚️. *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரப்பதுடன், குந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

  📰  *நாளும் ஒரு செய்தி*

     இந்தியாவில் மொத்தம் *'10 பெரிய துறைமுகங்கள்'* உள்ளன.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது அதில்  எலுமிச்சை, தக்காளிச் சாற்றை கொஞ்சம் பிழிந்தால் சீக்கிரம் வெந்து விடும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     அன்பில்லாத மொழி வெறும் இரைச்சலே.

             *-பைபிள்(திருமறை)*

📆. *இன்று நவம்பர் 29-*
  
          🌸 *பிறந்த நாள்* 🌸

1908- *என்.எஸ்.கிருஷ்ணன்* (மனித நேய மாந்தர், தமிழ் நடிகர்)

         💐 *நினைவு நாள்* 💐

1989- *அ.மருதகாசி* (கவிஞர்,தமிழ் பாடலாசிரியர்)

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
(பகிர்வு)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Nov, 16:32


வரலாற்றில் இன்று நவம்பர் 28

ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) இறந்த தினம் இன்று (நவம்பர் 28).

மகாராஷ்டிர சமூக சீர்திருத்தவாதி

இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) இறந்த தினம் இன்று (நவம்பர் 28).

l மகாராஷ்டிர மாநிலம் புனேயில் (1827) பிறந்தார். பூ வியாபாரம் செய்துவந்தவர்கள் என்பதால் ‘புலே’ (பூக்காரர்) என்பது குடும்பப் பெயராகவே ஆகிவிட்டது. ஒரு வயதில் தாயை இழந்தார். தொடக்கக் கல்வியோடு நிறுத்திவிட்டு தந்தையின் கடைக்கு வேலைக்கு சென்றார். 13 வயதில் திருமணமும் ஆனது.

l தந்தையின் நண்பர்களது உதவியுடன் மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஜார்ஜ் வாஷிங்டன், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, கபீர், துக்காராம், தியானேஷ்வர் உள்ளிட்ட ஞானிகளின் கவிதைகள், மார்ட்டின் லூதர், புத்தர், பசவண்ணாவின் நூல்கள் என பலவிதமான புத்தகங்களையும் படித்தார். தாமஸ் பெய்னின் ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ போன்ற நூல்கள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

l சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டு மனம் நொந்தார். தனிநபர் சுதந்திரம், சமத்துவம் எங்கும் பரவ வேண்டும் என்பதே இவரது லட்சியமாக மாறியது. சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார்.

l இவர் சிறந்த எழுத்தாளர், கவிஞரும்கூட. ‘த்ருதிய ரத்னா’, ‘குலாம்கிரி’, ‘இஷாரா’ என இவரது பல நூல்கள் வெளிவந்தன. தனது படைப்புகளில் இலக்கிய நடை அல்லாமல் பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தினார்.

l கல்விதான் அனைத்துக்கும் தீர்வு என்பதை உணர்ந்தார். கல்வியைப் பரப்பும் பணியை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு கல்வி கற்பித்தார். 1851-ல் மகளிருக்கான பள்ளியைத் தொடங்கி, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பள்ளியை நடத்தினர். இவரது முனைப்புகளால் அரசுப் பள்ளிகள் அதிகம் தொடங்கப்பட்டன.

l ‘தாய்மொழிக் கல்வி, 12 வயது வரை ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். கல்வி அமைப்பு முழுவதும் அரசின் வசம் இருக்க வேண்டும். எண், எழுத்து, கணக்கு, பொது வரலாறு, புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவை அனைவரும் பெற வேண்டும்’ என வலியுறுத்தினார்.

l தீண்டாமை, பாலின பாகுபாட்டை கடுமையாக எதிர்த்தார். பாகுபாடுகளுக்கு எதிரான இயக்கம், தலித் இயக்கம், பெண் கல்வி இயக்கம், விவசாயிகளின் இயக்கம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களைத் தொடங்கினார்.

l ‘சத்ய ஷோதக் சமாஜ்’ என்ற அமைப்பை 1873-ல் தொடங்கினார். சமூகநீதி, சமத்துவம், தனிநபர் சுதந்திரம், சகோதரத்துவம், அனைவருக்கும் கல்வி, சிறப்பு இடஒதுக்கீடுகளுக்காக இந்த அமைப்பு போராடியது.

l டாக்டர் அம்பேத்கர், ராஜா ராம்மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாகத் திகழ்ந்தவர். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது.

l இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாகப் போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 63-வது வயதில் (1890) மறைந்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Nov, 16:32


வரலாற்றில் இன்று நவம்பர் 28

(பொ. ம. ராசமணி
P. M. Rasamani, பிப்ரவரி 1, 1936 - நவம்பர் 28, 2009) இறந்தினம்.

ஒரு தமிழறிஞர்.

பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றவர்.

79 தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.

ஓவியர்.

தென் தமிழக மக்களால் "நகைச்சுவைத் தென்றல்", "இரண்டாம் கலைவாணர்", "இலக்கிய வித்தகர்" என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் நாள் திருநெல்வேலிமாவட்டம் சங்கரன்கோயிலை அடுத்த மலையடிகுறிச்சி என்ற சிற்றூரில் பிறந்தார். அவரது தந்தை பெயர் மரிய கனகப்பன்; தாயார் மரிய செல்லம்மாள். சிறு வயது முதலே தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது 12ஆம் வயதில் தனது முதல் சிறுகதையை பிரசுரித்தார்; தனது 16ஆம் வயதில் பொது மேடைகளில் பேச ஆரம்பித்தார். 1952 ஆம் ஆண்டு முதல் இளைஞர் காங்கிரஸ் இயக்க பேச்சாளராகத் தனது சொற்பொழிவுகளை தொடங்கிய இவர், விரைவில் தனது அரசியல் தளைகளை உதறிவிட்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ்ப் பணிகளை தொடர்ந்தார். கணிதம் மற்றும் ஆங்கில துறைகளிலும் விருப்பம் கொண்டிருந்த இவர், பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளநிலை கணிதம் மற்றும் இளநிலை ஆசிரியப் பயிற்சி கற்றுத் தேர்ந்தார். பாளையம்கோட்டை தூய சவேரியார் மேநிலைப் பள்ளியில் 35 ஆண்டு காலம் (1959 -1994) கணித ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் ஆசிரிய பணியின் போதும் பணி ஓய்வுக்கு பின்னும் தனது மேடைப் பேச்சுக்களையும் எழுத்துப் பணிகளையும் தொடர்ந்து வந்தார்.

தமிழ்ப் பணி

தமிழ் இலக்கியங்களையும் சமூக மற்றும் சமய சீர்திருத்த சிந்தனைகளையும் பாமர மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகமாக இவர் நகைச்சுவையை கண்டார். இவரது நகைச்சுவை நிறைந்த இலக்கியப் பேச்சுக்கள், 1960களின் தொடக்கத்தில், படித்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமென கருதப்பட்ட தமிழ் இலக்கிய மன்றங்களை, பெருந்திரளான மக்கள் கூட்டம் காண வர செய்தன. துவக்கத்தில், ரா. பி. சேதுப்பிள்ளை, குன்றக்குடி அடிகளார் மற்றும் கி. வா. ஜகந்நாதன் போன்ற தமிழறிஞர்களின் தலைமையில் பேசி வந்த இவர், பிறகு தனக்கென்று தனியொரு பாணியில் நகைச்சுவை பட்டிமன்றங்களையும், வழக்காடு மன்றங்களையும், விசாரணை மன்றங்களையும் படைத்தார். இவரை நடுவராகக் கொண்டு, இவரது தலைமையில் 60 தமிழ் பேச்சாளர்கள் அடங்கிய ஒரு குழு இலக்கிய, சமூக மற்றும் சமய தலைப்புகளில் இத்தகைய விவாத மன்றங்களை தமிழகமெங்கும் ஏறக்குறைய 40 ஆண்டு காலம் (1967 -2006) நடத்தி வந்தது. இக்குழுவின் களம் பெரும்பாலும் தென் தமிழக மாவட்டங்களாக இருந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், சில முறை கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், ஒரு முறை ஐக்கிய அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரத்திலும் (2002 ஆம் ஆண்டு) இக்குழு தமது விவாத மன்றங்களை அரங்கேற்றி உள்ளது. பொ. ம. ராசமணி, தனது பாணி பட்டிமன்ற முறைமைகளை இளைய தலைமுறை பேச்சாளர்கள் கற்றுக்கொள்வதற்காக, "நகைச்சுவை பட்டிமன்றங்கள் 41" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 2001) என்ற நூலாக வெளியீட்டு உள்ளார்.

பொ. ம. ராசமணி மரபு கவிதைகளையும் சந்த பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது "அறிவு பசி" (சாமி செல்வ வெளியீடு, சங்கரன் கோயில், 1963) என்ற சந்தப் பாடல் திரட்டு சமூக சீர்திருத்த சிந்தனைகளைப் போதிக்கிறது. இவரது கிறித்தவப் புதினமான "சாவின் தோல்வி" (கௌசானல் பதிப்பகம், திருநெல்வேலி, 1960), மரணப்படுக்கையில் இருக்கும் தனது மகளை காப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் உணர்வு போராட்டங்களை நம் கண் முன்னே படைக்கிறது. தமிழ் வர்ணனைகளை இவர் எடுத்தாளும் திறனுக்கு எடுத்துக்காட்டு இவரது "பேசாத பேச்சு" (கௌசானல் பதிப்பகம், திருநெல்வேலி, 1961) எனும் நூல். இவரது நகைச்சுவை கதைகளின் தொகுப்பான "சிரிப்பு தரும் சிந்தனைகள்" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 1991) என்ற நூல் மூன்றாம் பதிப்புகளை கடந்து இன்னும் பல இளைய தலைமுறை நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை அகராதியாக உதவுகிறது. இவரது இலக்கிய ஆராய்ச்சிக்கு உதாரணம் இவரது "வள்ளுவர் ஏன் வளர்ந்து கொண்டே இருக்கிறார்?" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 2004) என்ற நூல். இவரது 61 ஆண்டு கால (1948 -2009) எழுத்து பணிக்கு சான்றாக இன்று இவரது 79 நூல்கள் வாழ்ந்து கொண்டுள்ளன.

சிறப்புகள்

இந்தியக் கத்தோலிக்க எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக 1972 ஆம் ஆண்டு பதவி வகித்தார். 2000 ஆம் ஆண்டு திருச்சி "கலை காவேரி" அமைப்பின் சிறப்பு விருது பெற்றார். 2002 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டு ஹூஸ்டன் நகர பாரதி இலக்கிய மன்றத்தின் "சிந்தனை செல்வர்" விருது பெற்றார். பாளையம்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட பத்திரிகையான "புதிய பார்வை" க்கு பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். தமிழக தொல்லியல் ஆய்வு துறையின் கௌரவ உறுப்பினராக பணி புரிந்தவர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Nov, 16:32


வரலாற்றில் இன்று நவம்பர் 28

முதல் அணுக்கரு உலையை உருவாக்கிய இத்தாலிய இயற்பியல் அறிஞர்-என்ரிக்கோ பெர்மி மறைந்த தினம்.

நவம்பர்-28.

முதல் அணுக்கரு உலையை உருவாக்கிய இத்தாலிய இயற்பியல் அறிஞர்-என்ரிக்கோ பெர்மி மறைந்த தினம்.

பிறப்பு:-

என்ரிகோ பெர்மி 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்-29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார்.

சிறு வயதிலேயே இயற்பியலில்
மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் வயதில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக்கொள்கையைத் தோற்றுவித்தார்.

ஆராய்ச்சிகள்:-

எலக்ட்ரான் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் ஃபெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் எலக்ட்ரானில் ஆரம்பித்த ஃபெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே சென்றார். மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார். இதைப் படித்த ஃபெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார்.
தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னர் ஃபெர்மி. அணு உலைகளில்
பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூட்ரான் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

முதல் அணுக்கரு உலை:-

மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார்.

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். மேலும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார்.

விருதுகள்:-

1926 ஆம் ஆண்டில் மேட்டியூக்சி பதக்கம், 1938 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1942 இல் இயூசு பதக்கம், 1947 ஆம் ஆண்டில் ஃபிராங்க்லின் பதக்கம் மற்றும் 1953 இல் ரம்ஃபோர்ட் பரிசு 1950 ஆம் ஆண்டு இராயல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைவு:-

நவம்பர்-28, 1954 ஆம் ஆண்டு
சிக்காகோ, இலினோய், அமெரிக்காவில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக ஃபெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.

நினைவுச்சின்னம்:-

முக்கியத்துவம் மிக்க பிரமுகர்கள் பட்டியலில் பெர்மியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்காக இத்தாலிய பேரிடர் ஆலயங்களாக அறியப்படும் சாண்டா குரோசின் பசிலிக்காவில் அமைக்கப்பட்டுள்ள தகடு பெர்மிக்கு ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

28 Nov, 16:32


வரலாற்றில் இன்று நவம்பர் 28

1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்ட விளையாட்டைக் கண்டுபிடித்த கனடியர் (பி. 1861) இறந்த நாள் நவம்பர் 28

ஜேம்ஸ் நெய்ஸ்மித்:

கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.

இவர் கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். இவர் 1861ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார்.



1891ஆம் ஆண்டு இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்.

இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன. 1898ஆம் ஆண்டு நெய்ஸ்மித், கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், முதல் கூடைப்பந்து பயிற்றுனராகவும் பணியாற்றினார்.

பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு கொண்டுவரப்பட்டது. இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மறைந்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:48


*வரலாற்றில் இன்று* - 22.11.24

*நிகழ்வுகள்*

498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார்.

1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.

1873 – பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.

1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.

1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.

1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.

1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.

1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.

1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து எசுப்பானியாவின் அரசராக யுவான் கார்லொசு எசுப்பானியாவின் அரசரானார்.

1977 – மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.

1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1989 – மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.

1995 – உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.

1995 – சினாய் தீபகற்பம், சவூதி அரேபியா பகுதிகளில் 7.3 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில், 8 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.

2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2003 – ஜோர்ஜியாவில் அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அரசுத்தலைவரைப் பதவி விலகுமாறு கோரினர்.

2005 – செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக அங்கிலா மெர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.

2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

2012 – எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில் அமாசிற்கும் இசுரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

*பிறப்புகள்*

1830 – ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858)

1839 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசை அறிஞர் (இ. 1898)

1890 – சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (இ. 1970)

1898 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியல் அறிஞர் (இ. 1984)

1904 – மரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (இ. 1986)

1904 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 2000)

1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி

1943 – பில்லி ஜீன் கிங், அமெரிக்க டென்னிசு வீராங்கனை

1958 – ஜேமி லீ குர்திஸ், அமெரிக்க நடிகை

1967 – பொறிஸ் பெக்கர், செருமானிய-சுவிசு டென்னிசு வீரர்

1967 – மார்க் ருஃப்பால்லோ, அமெரிக்க நடிகர்

1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப், பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்

1969 – மர்ஜானே சத்ரபி, ஈரானிய எழுத்தாளர்

1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கைத் துடுப்பாளர்

1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன், அமெரிக்க நடிகை

1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ், தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்

*இறப்புகள்*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:48


1718 – பிளாக்பியர்ட், ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680)

1774 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)

1907 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (பி. 1829)

1944 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1882)

1963 – ஆல்டசு அக்சுலி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1894)

1963 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர் (பி. 1917)

1967 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)

1967 – தாரா சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1885)

1974 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1908)

1988 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதைபடிவ ஆய்வாளர் (பி. 1893)

1997 – தி. சதாசிவம், தமிழகப் பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1902)

2011 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)

2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1938)

2012 – பி. கோவிந்த பிள்ளை, இந்திய அரசியல்வாதி (பி. 1926)

2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949)

2016 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1930)

2016 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (பி. 1928)

*சிறப்பு நாள்*

விடுதலை நாள் (லெபனான், பிரான்சிடம் இருந்து 1943)

ஆசிரியர் நாள் (கோஸ்ட்டா ரிக்கா)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:45


*இன்றைய செய்திகள்*
22.11.24

* ராமேசுவரத்தில் ஒரேநாளில் 41 செ.மீ. மழை: நவம்பர் 25, 26-ல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* சுற்றுலா மேம்பாட்டில் சிறந்த மாவட்டமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டு சென்னையில் ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டது.

* இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பிரிவு சார்பில், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, நாடு தழுவிய கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியான சி-விஜில்' நேற்று தொடங்கியது.

* காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரிய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

* உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் - 1,000+ நாட்களில் இதுவே முதல் முறை.

* இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில்  வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் தொடங்கி நடைபெறுகிறது.

*Today's Headlines*

* 41 cm rain in one day in Rameswaram. Rain: Chances of heavy rain in Delta and Southern districts on November 25, 26.

* Trichy was selected as the best district in tourism development and the collector was awarded in Chennai.

* On behalf of the Tamil Nadu and Puducherry Naval Divisions of the Indian Navy, `
C-Vigil'', a nationwide maritime security exercise, started yesterday to strengthen the country's maritime security.

* Delhi government has ordered 50 percent of the government employees to work from home as a precautionary measure after the air pollution level crossed the dangerous level.

* Russia strikes Ukraine with ICBM - first time in 1,000+ days.

* The first Test match between India and Australia teams will be held in Perth from today (November 22)

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:44


*நவம்பர் 22*

*எம்.பாலமுரளிகிருஷ்ணா*
(Mangalampalli Balamuralikrishna
06 ஜூலை 1930-
*22 நவம்பர் 2016*)

இந்திய கர்நாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:44


*நவம்பர் 22*

*போரிஸ் பெக்கர் (Boris Franz Becker பிறப்பு : 22 நவம்பர் 1967*)

முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனும் ஆவார்.

6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர்.
3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர்.

தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர்.

உலக டென்னிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர்.

தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை டென்னிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:43


*22.11.2024*
*திருக்குறள் :*

பால் :பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு

*குறள் எண்: 819*

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

*பொருள்:*

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும்  உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் களவிலும் துன்பம் தருவதாகும்."

*பழமொழி :*

சத்துருக்களையும் சித்தமாய் நேசி.

  Love even your enemies heartily.

*பொன்மொழி :*

முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல,  நீ நினைத்ததை முடிக்கும் வரை.

*பொது அறிவு :*

1. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்

   விடை: பெரம்பூர்
            
2.தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்

விடை:  நெய்வேலி

*English words & meanings :*

Energetic. -   துடிப்புள்ள,

Envy.    -     பொறாமை

*வேளாண்மையும் வாழ்வும் :*

மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவரங்களையும் நட்டு அவற்றின் மூலம் நோயைக் கட்டுப் படுத்தலாம்

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

22 Nov, 00:42




🤔   *நாளும் ஒரு சிந்தனை*

நம்மை அதிகம்
நேசிப்பவர்கள்
பெரும்பாலும் நம்
அருகில் இருப்பதில்லை..!!

🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள் மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     நெல்லிக்காயில் *'அஸ்காரிக் அமிலம்'* நிறைந்துள்ளது.

🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     இட்லிக்கு பொடி அரைக்கும்போது, முழு பொட்டுக்கடலை கால் தம்ளர் சேர்த்துக் கிளறினால் எண்ணெய் இருக்காது. அரைப்பதும் எளிது.

📆  *நாளும்ஒரு பொன்மொழி*

     அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை.

                     *-வள்ளலார்*

*இன்று நவம்பர் 22-*
  
         💐 *நினைவு நாள்* 💐

2016- *எம்.பாலமுரளி கிருஷ்ணா* (கருநாடக இசைப் பாடகர்)


*(பகிர்வு)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 15:03


*இன்றைய புதிர்*

இந்த விளையாட்டில், கீழே 9 எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 எழுத்துக்களில் இருந்து, குறைந்தது 5 வார்த்தைகள் வரை கண்டுபிடிக்க வேண்டும்.

*உ நீ ன் ச் தீ ற ம ம் ச*

*நேற்றைய புதிரின் விடை*

உபதேசம்
தொந்தரவு

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 08:35


வரலாற்றில் இன்று நவம்பர் 21

எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்ட நாள் (2005)

Officially released Xbox 360 video game machine (2005)

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 08:35


வரலாற்றில் இன்று நவம்பர் 21

தி. சு. அவிநாசிலிங்கம் இறந்த நாள் நவம்பர் 21

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் (T.S. Avinashilingam Chettiar) இறந்த தினம் இன்று (நவம்பர் 21).

l அன்றைய கோவை மாவட்டத்தின் திருப் பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார் (1903). தந்தை பிரபல வணிகர். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1925-ல் பட்டம் பெற்றார்.

l  ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், திருமணம் செய்துகொள்ளாமல் இறுதிவரை, ஏறக்குறைய துறவி போலவே எளிமையாக வாழ்ந்து வந்தார். தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்தவர்.

l 1930-ல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அந்தப் பள்ளியை மாற்றினார். கோவையில் ஒரு ஹோம் சயின்ஸ் கல்லூரியையும் தொடங்கினார்.

l இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்டப் போராட்டங்களில் பங்கேற்றார். 1930 முதல் 1942 வரையிலான காலகட்டங்களில் நான்கு முறை சிறை சென்றார். காங்கிரசில் இணைந்து பணியாற்றினார்.

l கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டார். 1934-ம் ஆண்டு ஹரிஜன நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்டத் தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். விதவைகள் மறுமணத்துக்காகவும் போராடி வந்தார்.

l கல்வி நிலையங்களிலும் ஜாதிப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், தனது பள்ளியில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர் களையும் சேர்த்துக்கொண்டார். 1957-ல் பெண் கல்விக்காக கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். அது தற்போது அவிநாசிலிங்கம் மனை யியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது. இவர் எழுதிய திருக்கேதாரம் என்ற பயண நூல் மிகவும் பிரசித்தம். மேலும் பொருளா தாரம், காந்தியின் கல்விக் கொள்கை குறித்தும் எழுதியுள்ளார்.

l 1946-ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். டி. பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் சென்னை மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். 1946-ல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். இந்த அமைப்பு, தமிழில் முதன் முறையாக பத்து அதிகாரங்கள் கொண்ட என்சைக்ளோபீடியாவை வெளியிட்டது.

l நூலகங்களை சீரமைத்தார். பாரதியார் பாடல்களை தேசிய மயமாக்கினார். ஆறாம் வகுப்பிலிருந்து திருக்குறளைப் பாடத்திட்டத் தின் ஓர் அங்கமாக அறிமுகம் செய்தார். 1952-ல் திருப்பூர் நாடாளு மன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

l 1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1975-ல் இவரது தலைமையிலான ஒரு குழு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது. சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நம்பினார்.

l 1970-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது, ஜி.டி. பிர்லா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், 1991-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 88-வது வயதில் காலமானார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 08:35


வரலாற்றில் இன்று நவம்பர் 21

தமிழறிஞர் ஒளவை நடராசன் இறந்த நாள்

- தமிழ் இலக்கிய உலகில் மிகவும் மதிக்கப்பட்டவர்
அவ்வை நடராசன்

ஒளவை நடராசன்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் இறந்த நாள்

1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒளவை துரைசாமி - லோகாம்பாள் இணையருக்கு மகனாக நடராசன் பிறந்தார். புகழ்பெற்ற தமிழறிஞரான இவருடைய தந்தையார் செய்யாறில் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தபோது இவர் பிறந்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற நடராசன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

பிறகு மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தார். பிறகு அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்த நடராசனை, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணை இயக்குநராக நியமித்தார்.
செயலர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அல்லாத முதல் நியமனம்

இதற்குப் பிறகு, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலராக நடராசன் நியமிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் இப்படி செயலர் பணியில் நியமிக்கப்பட்டது அதுவே முதல்முறை.

1992இல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார் நடராசன்.

2014ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட அவர், நவம்பர் மாதமே அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர்

வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள் உள்ளிட்ட பல நூல்களை நடராசன் எழுதியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட ஔவை நடராசன், மதுரையில் 1982ல் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார்.

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது, இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம ஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

இவருடைய பெயருக்குப் முன்னால் உள்ள 'ஔவை' என்பது இவருடைய தந்தையார் பிறந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பத்தைக் குறிக்கும்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 08:35


வரலாற்றில் இன்று நவம்பர் 21,

கல்வியாளர் மால்கம் ஆதிசேஷையா நினைவு தினம் இன்று.

மால்கம் ஆதிசேஷையா (ஏப்ரல் 18 , 1910 -
நவம்பர் 21 , 1994) என்பவர் கல்வியாளர், பொருளியல் மேதை,
யுனெஸ்கோ இயக்குநர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.
1971இல்
தமிழ்நாட்டில் , தன் சொந்த செலவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி நடத்தியவர்.மால்கம் ஆதிசேசையா தமிழ் நாட்டின் வேலுரில் பிறந்தார். தந்தையார் தத்துவவியல் பேராசிரியர். தாயார் வேலூர் நகராட்சி உறுப்பினராகவும் மகளிர் மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஆதிசேசையா வேலூர் ஊரிசுப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றார் பின்னர் சென்னை இலயோலா கல்லூரியில் பொருளியல் கல்வியில் இளங்கலை(ஆனர்சு) பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிச்சு கிங்க்ஸ் கல்லூரியில் எம்.ஏ . பட்டம் பெற்றார். 1937-1940 ஆண்டுகளில் இலண்டன் பொருளியல் பள்ளியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.948இல் யுனஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு அமைப்பில் சேர்ந்தார். யுனஸ்கோ பொது உதவி இயக்குநராக இருந்து 1970 இல் ஒய்வு பெற்றார். அக்காலத்தில் பதவியில் இருந்தபோது மூன்றாம் உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குத் தொழில் நுட்ப உதவிகள் புரிந்தார். யுனஸ்கோ பதவியில் இருந்தபோது பழந் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்ப்புக்கும், ராஜாஜியின் கம்பராமாயண அயோத்தியா காண்டம் மொழி பெயர்ப்புக்கும், ஏ கே இராமனுஜம் என்பவரின் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்கும் உதவி செய்தார். யுனஸ்கோ அமைப்பிலிருந்து வெளிவந்த கூரியர் என்னும் இதழ் தமிழ் மொழியிலும் இந்தியிலும் வெளிவருவதற்கு இவருடைய முயற்சிகளே காரணம். 1966 இல் பாரீசு நகரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடு சிறப்புற நடைபெற யுனஸ்கோ மற்றும் பிரஞ்சு அரசு உதவிகளைப் பெற்றார்.தமிழ் நாடு அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்று 1971-76 ஆண்டுகளில் துணைத் தலைவராகப் பணியாற்றினார். கல்வி பொருளியல் முதலான திட்டங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தது. வறுமை நீங்கவும் செல்வம் பெருகவும் மக்கள் கல்வி அறிவு பெறுதல் மிக இன்றியமையாதது என வலியுறுத்தினார்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 08:35


வரலாற்றில் இன்று நவம்பர் 21

1916 டைட்டானிக்கின் சகோதரக் கப்பலான ப்ரிட்டானிக் மூழ்கிய நாள்

டைட்டானிக் கப்பல், அந்த ரகத்தின் முதல் கப்பலான ஒலிம்ப்பிக்கின் பெயரில் ஒலிம்ப்பிக் ரகம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒலிம்ப்பிக், டைட்டானிக், ப்ரிட்டானிக் ஆகிய மூன்று மட்டும்தான் ஒலிம்ப்பிக் ரகத்தில் தயாரிக்கப்பட்ட கப்பல்கள். உண்மையில், முதலிரண்டு கப்பல்கள் மட்டுமே தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்து, பின்னாளில்தான் இக்கப்பல் சேர்க்கப்பட்டது. அதனால், முந்தைய இரண்டு கப்பல்களைவிடப் பெரிதாகவும், சொகுசாகவும் உருவாக்கப்பட்ட இக்கப்பல் பற்றிய முதல் அறிவிப்புகளில் ஜைஜாண்ட்டிக் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அப்பெயர்தான் சூட்டப்படுவதாக இருந்து, பின்னாளில் உலகப்போர்க்கால தேசிய உணர்வுகளால் ப்ரிட்டானிக் என்று மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. டைட்டானிக் மூழ்கியதில் கற்ற பாடங்களைக்கொண்டு, கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்வதற்கு, அட்லாண்ட்டிக் கடற்பயணத்துக்கான பயணிகள் கப்பலாக உருவாக்கப்பட்ட இதன் தயாரிப்புப் பணிகள் நிறைவுறுவதற்கு முன்பே, (முதலாம்) உலகப்போர் தொடங்கிவிட, போரில் காயமடைந்த வீரர்களுக்கான மருத்துவமனைக் கப்பலாகவே இது 1915 டிசம்பரில் பணியைத் தொடங்க நேரிட்டது. போர்ப் பணியிலிருந்து 1916 ஜூனில் விடுவிக்கப்பட்டு, பயணிகள் கப்பலுக்கான மாற்றங்களைச் செய்யத் தொடங்கினாலும், அவ்வாண்டு ஆகஸ்ட்டில் மீண்டும் போர்க்களத்திற்கு அழைக்கப்பட்டது ப்ரிட்டானிக். ஐந்து வெற்றிகரமான பயணங்களை மத்தியக்கிழக்குப் பகுதியில் முடித்திருந்த ப்ரிட்டானிக், ஆறாவது பயணமாக காயமுற்றவர்களை ஏற்றிக்கொண்டு, சவுதாம்டனிலிருந்து நவம்பர் 12இல் புறப்பட்டு, நவம்பர் 21இல் தாக்குதலுக்குள்ளாகியது. ஜெர்மென் நீர்மூழ்கியால் டார்ப்பீடோ தாக்குதலுக்குள்ளானதாக முதலில் கருதப்பட்டாலும், ஜெர்மானிய கடற்படையின் கடல் கண்ணிவெடியில் சிக்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலிருந்த கிரேக்கத் தீவான கியாவில் தரைதட்டி நிறுத்த, கப்பலின் தளபதி எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் முதல் உலகப்போரில் மூழ்கிய மிகப்பெரிய கப்பலாகவும், வரலாற்றில் மூழ்கியவற்றிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பலாகவும் ஆனது ப்ரிட்டானிக். டைட்டானிக் மூழ்க 2 மணி 40 நிமிடங்களாகிருந்தாலும், ப்ரிட்டானிக் 55 நிமிடங்களில் மூழ்கிப்போனது. அதற்குள்ளாகவே, கப்பலிலிருந்த 1065 பேரில் 1035 பேர் காப்பாற்றப்பட்டனர். (டைட்டானிக்கில் 1500க்கும் அதிகமான உயிரிழப்பு நேரிட்டிருந்தது!) இந்த வரிசையில் ஒலிம்ப்பிக் மட்டும் 1911இலிருந்து 1935வரை, 24 ஆண்டுகள் பயணிகள் கப்பலாகவும், படைவீரர்கள் கப்பலாகவும் பணியாற்றியபின்னும் செயல்பாட்டிலேயே இருந்து, புதிய கப்பல்களின் வருகையால் லாபகரமாக இல்லாமற்போனதாலேயே 1935இல் நிறுத்தப்பட்டு, 1937இல் உடைக்கப்பட்டது!

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

21 Nov, 08:35


வரலாற்றில் இன்று நவம்பர் 21

முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர், மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்த, முகமது அப்துஸ் சலாம் நினைவு தினம் இன்று (நவம்பர் 21, 1996).

முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) ஜனவரி 29, 1926ல், பிரிக்கப்படாத இந்தியாவில் சாஹிவால் மாவட்டத்தில் சாண்டோக்தாஸ் எனும் ஊரில் சவுத்ரி முகமது ஹுசைன் மற்றும் ஹாஜிரா ஹுசைன் தம்பதியருக்கு பிறந்தார். இளம் வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த இவரை ஆசிரியர்கள், பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் எடுத்து ஆசிரியராக ஆகச் சொன்னார்கள். இவரோ தனக்குக் கணிதத்தில் ஆர்வம் என்று சொல்லி கணிதத்தைப் பாடமாக தேர்வு செய்தார். தனது 14 வயதில், சலாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார். அப்துஸ் சலாம் பல்துறை வல்லுநராகவும் உருது மற்றும் ஆங்கிலப் புலமை பெற்றவராகவும் இருந்தார்.

1994ல் கணிதத்தில் பி.ஏ படித்தார். அவர் ஸ்ரீநிவாஸ ராமானுஜத்தின் கணக்குகளையொட்டிப் பல ஆராய்ச்சிகள் செய்தார். அவர் 1946 ல் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் கணிதவியல் தனது எம்.ஏ. பட்டத்தை பெற்றார். அதே ஆண்டில் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ், பி.ஏ. (ஹானர்ஸ்) படிக்க உதவித்தொகை வழங்கியது. 1949ல் அவர் இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். 1950ல் அவர் இயற்பியலில் மிகச் சிறந்த முன் முனைவர் பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்மித் பரிசு பெற்றார். 1951ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வறிக்கையில் முதுநிலை பட்டம் பெற்றார்.

முகமது அப்துஸ் சலாம், ஷெல்டன் கிளாஷோ, ஸ்டீவன் வெய்ன்பெர்க் (Sheldon Glashow, Steven Weinberg) ஆகிய மூவருக்கும் 1979ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. மின்காந்த மற்றும் கதிரியக்கச் சக்திகளின் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. 1960 முதல் 1974 வரை பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து பாகிஸ்தானின் அறிவியல் ஆலோசகராக இருந்தார் சலாம். செப்டம்பர் 16, 1961ல் நிர்வாக ஆணை மூலம், விண்வெளி மற்றும் உயர் வளிமண்டலம் ஆராய்ச்சி ஆணையம் நிறுவப்பட்டது. அதில் அப்துஸ் சலாம் முதல் இயக்குநராகப் பணியாற்றினார். 1964ல், அப்துஸ் சலாம் பாக்கிஸ்தான் நாட்டின் IAEA குழு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.

1972ஆம் ஆண்டில் ஆயுதங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வையும் சலாம் வழி நடத்தினார். Copley பதக்கம் (1990), ஸ்மித் விருது(Smith), ஆடம்ஸ் விருது(Adams), நிசான் இ இம்தியாஸ் (Nishan-e-Imtiaz) (1979), சித்தரா-இ-பாகிஸ்தான் Sitara-e-Pakistan (1959), இயற்பியலில் சிறந்த பங்களிப்புக்கான தங்க பதக்கம் (அறிவியல் Czechoslovak அகாடமி, பராகுவே) (1981) போன்ற பரிசுகளை பெற்றுள்ளார். 1998ம் ஆண்டில் அந்நாடு அணுப் பரிசோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அவருக்கு நினைவு தபால் தலைகளை 1998ம் ஆண்டில் வெளியிட்டது. அப்துஸ் சலாம் விருது (சலாம் பரிசு) இயற்பியல் மற்றும் இயற்கை அறிவியல் உயர் சாதனைகள் மற்றும் பங்களிப்புக்கான விருது நிறுவப்பட்டது.



முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் முகமது அப்துஸ் சலாம் நவம்பர் 21, 1996ல் பிராக்ரஸிவ் மிகையணுக்கரு வாதத்தால் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்தில் தனது 70வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பின்னர் அவரது உடல் பாகிஸ்தான் கொண்டு வரப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமியரும் இவரே.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 15:00


*இன்றைய புதிர்*

இந்த விளையாட்டில், கீழே 9 எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 எழுத்துக்களில் இருந்து, குறைந்தது 5 வார்த்தைகள் வரை கண்டுபிடிக்க வேண்டும்.

*ப ன க ட் பா ம் டி க் ர*

*நேற்றைய புதிரின் விடை*

செஞ்சிக்கோட்டை

வெள்ளித்தட்டு

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 12:14


*இனிய மாலை வணக்கம்🙏*
---------------------------------------------
08.11.2024 *தெரிந்து கொள்வோம்! இன்றைய பொது அறிவு!!!*
---------------------------------------------
தகவல் உதவி: *அறிவு பரவல் குழு*
___________
1) ஆராய்ச்சிகள் கொசுக்கள் "ஓ" வகை இரத்தத்தை விரும்புகின்றன என்று காட்டுகின்றன.......
2) ஒரு நடுத்தர வயது மனிதனுக்கு சுமார் 1,00,000 மைல்கள் இரத்த நாளங்கள் இருக்கும்......
3) மனித இரத்தத்தில் 83 சதவிதம் நீர் உள்ளது......
4) கருவிழியில் இரத்த நாளங்கள் இல்லை......
5) புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் 1 கப் இரத்தம் மட்டுமே இருக்கும்.....
********
நேர்மையுடன் செயல்படுவோம்👍🏽
பிரியமுடன் உங்கள் மதி❤️✍🏾👍🏽
********

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 07:31


*🌎📚TODAY'S G.K.*

*Knowledge Spread 🌎📚*


*🤔 Do you know?*

1. The human umbilical cord contains 3 blood vessels.

2. In France, it is legal to marry a dead person.

3. People are naturally more happy when they are busy.

4. Penguins can stay underwater for 10-15 minutes without breathing.

5. During hibernation a hedgehogs heartbeat will fall from 190 to 20 beats per minute.

6. You have no sense of smell when you are asleep.

7. The initial and final letter of all continent is same.

8. Chinese are the world's largest bicyclist.

9. A hardboiled egg will spin, but a soft-boiled egg will not.

10. Music has the ability to repair brain damage and return lost memories.


*பகிர்வு அறிவு பரவல் 🌎📚*


*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. மனித தொப்புள் கொடியில் 3 ரத்த நாளங்கள் உண்டு.

2. பிரான்சிலில் இறந்த நபரை திருமணம் செய்து கொள்ள சட்டம் உள்ளது.

3. மக்கள் மும்முரமாக இருக்கும் போது இயல்பாகவே மகிழ்ச்சி அடைகின்றனர்.

4. பெங்குவின்களால் மூச்சு விடாமல் 10-15 நிமிடங்கள் வரை நீருக்கடியில் இருக்க முடியும்.

5. நிதானமாக இருக்கும் போது ஒரு முள்ளெலியின் இதயத் துடிப்பு 190ல் இருந்து 20 வரை குறையும்.

6. நீங்கள் தூங்கும் போது உங்களுக்கு வாசனை உணர்வு இருக்காது.

7. அனைத்துக் கண்டங்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றேதான்.

8. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.

9. கடினமாக வேகவைத்த முட்டை சுழலும், ஆனால் லேசாக வேகவைத்த முட்டை சுழலாது.

10. இசை மூளையின் பாதிப்பை சரிசெய்து, இழந்த நினைவுகளை மீட்கும்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 07:31


*📚இன்றைய 10 சொற்கள்!*

*அறிவு பரவல் ✍️📚*


*1. Left (லெப்ஃட்) - வெளியேறுதல், இடது.*

அவர் அலுவலகத்தை விட்டு மாலை 6.00 மணியளவில் வெளியேறினார்.

He left the office at 6.00 p.m.

*2. Park (பார்க்) - பூங்கா, நிறுத்துதல்.*

நாங்கள் பூங்காவிற்கு விளையாட சென்றோம்.

We went to the park to play.

*3. Bat (பேட்) - வெளவால், மட்டை.*

வெளவால் ஒரு பறவை அல்ல, அது ஒரு பாலூட்டியாகும்.

A bat is not a bird, it is a mammal.

*4. Bear (பியர்) - கரடி, தாங்கிக்கொள்.*

கரடிகளால் மரங்களில் ஏற முடியும்.

Bears can climb trees.

*5. Tear (டியர்) - கிழித்தல், கண்ணீர்.*

நான் இந்த காகிதத்தை கிழிக்கப் போகிறேன்.

I′m going to tear this paper.

*6. Crane (க்ரேன்) - கொக்கு, பாரந்தூக்கி.*

கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும்.

Crane is a bird with a long neck and legs.

*7. Right (ரைட்) - சரி, வலது.*

உங்களுடைய விடை சரியாக உள்ளது.

Your answer is right.

*8. Bark (பார்க்) - மரப்பட்டை, குரை.*

இந்த மரத்தின் மரப்பட்டை மிகவும் சொற சொறப்பாக உள்ளது.

The bark of this tree is very rough.

*9. Nail (நெய்ல்) - ஆணி, நகம்.*

ஆணிகள் கட்டுமான பணியில் பயன்படுத்தப்படுகின்றன.

Nails are used in construction work.

*10. Squash (ஸ்குவாஷ்) - சுவர்ப்பந்து, நசுக்கு.*

அவர் ஒரு சுவர்ப்பந்து விளையாட்டு வீரர்.

He is a squash player.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 07:30


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*SCRAWNY*

*(மெலிந்த, ஒரளவு, வளைந்த)*

meaning..... extremely thin and frail...


1. After going without food for a long time, the man looked pale and *scrawny*.


2. Military life and rich food transformed my *scrawny* nephew into a muscular giant.

*However the meaning may vary depending on the context in which the word is used.*

*Happy learning.*
*English vocabulary.*


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 07:30


*⛳️The Vocab Master For All Competitive Exams*

*Knowledge Spread ✍️📚*


*1. REVITALIZE* (VERB): (पुन: जीवित करना): reinvigorate
Synonyms: re-energize, brace

Antonyms: depress

Example Sentence:

A package of spending cuts has been introduced to revitalize the economy.

*2. DISSENSION* (NOUN): (कलह): disagreement

Synonyms: difference of opinion, dispute

Antonyms: agreement

Example Sentence:

The issues caused bitter dissension in the party.

*3. EUPHEMISM* (NOUN): (प्रेयोक्ति): substitute

Synonyms: understatement, underplaying

Antonyms: dysphemism

Example Sentence:

The jargon has given us ‘downsizing’ as a euphemism for cuts.

*4. HEDONISTIC* (ADJECTIVE): (सुखवादी): self-indulgent

Synonyms: indulgent, pleasure-seeking

Antonyms: ascetic

Example Sentence:

He accepted bodily without farther questioning the hedonistic psychology.

*5. EPITOMIZE* (VERB): (संक्षिप्त करना): summarize

Synonyms: abstract, precis

Antonyms: elaborate

Example Sentence:

For the benefit of our readers, we will epitomize the pamphlet.

*6. DEMOBILIZE* (VERB): (वियोजन करना): disband

Synonyms: decommission, discharge

Antonyms: conscript

Example Sentence:

Both sides have agreed to demobilize 70% of their armies.

*7. DOGMA* (NOUN): (शिक्षण): teaching

Synonyms: belief, conviction

Antonyms: doubt

Example Sentence:

In place of dogma, the elements of religion were alone to be taught.

*8. SORE* (ADJECTIVE): (पीड़ादायक): painful

Synonyms: hurting, hurt

Antonyms: healthy

Example Sentence:

He couldn’t speak as he had a sore throat.

*9. PANDEMONIUM* (NOUN): (हंगामा): bedlam

Synonyms: chaos, mayhem

Antonyms: silence

Example Sentence:

There was complete pandemonium here.

*10. ASSUAGE* (VERB): (राहत देना): relieve

Synonyms: ease, alleviate

Antonyms: Aggravate

Example Sentence:

The letter assuaged the fears of most members

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 07:30


*🌎📚THIS DAY THAT YEAR *

1. The World Town Planning Day is observed, on November 8.

2. Wilhelm Rontgen discovered X-rays on 8 November 1895.

1. உலக நகர திட்டமிடல் தினம், நவம்பர் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

2. வில்லெம் ரோண்ட்கன், எக்ஸ் கதிர்களை, 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கண்டுபிடித்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:38


*வரலாற்றில் இன்று* - 08.11.24

நவம்பர் 8 (November 8) கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும்.  நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.

*நிகழ்வுகள்*

1519 – எசுப்பானியத் தேடல் வீரர்  எர்னான் கோட்டெஸ்  தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார்.

1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1576 – எண்பதாண்டுப் போர்:  நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.

1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.

1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின்  படைகள் வெற்றி பெற்றன.

1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து  சிங் ஆட்சி தொடங்கியது.

1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று  கொழும்பில்  பிரதம நீதியரசரின் நீதிமன்றமும்,  யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பிரித்தானியாவின் டிரெண்ட் என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் 'சான் யெசிண்டோ கப்பல் இரண்டு கூட்டமைப்பு தூதர்களைக் கைது செய்தது.

1889 – மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1892 – கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத்  தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.

1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1901 – ஏதென்சு நகரில் கத்தோலிக்க  நற்செய்திகளின் கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

1917 – உருசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சியை  அடுத்து  லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரை உள்ளடக்கிய மக்கள் பேரவை அமைக்கப்பட்டது.

1923 – மியூனிக் நகரில் இட்லர் தலைமையில் நாட்சிகள் செருமனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது.

1939 – மியூனிக் நகரில் இட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலி கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்:  அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.

1950 – கொரியப் போர்: அமெரிக்க  வான்படை வட கொரிய  மிக்-15 விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது.

1957 – அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவுக்கும் ஒனலூலுவிற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

1957 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.

1965 – சாகோஸ் தீவுக்கூட்டம்,  அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய  பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1965 – பிரித்தானியாவில்  மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1977 – வெர்ஜினாவில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

1987 – வடக்கு அயர்லாந்தில்  பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – சதாம் உசேன்  உடனடியாக  ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது.

2006 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றனர்.[2]

2006 – வாகரை குண்டுத்தாக்குதல்:  மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 – பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2011 – 2005 யூ55 என்ற  சிறுகோள்  பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.

2013 – சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:38


2016 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.

*பிறப்புகள்*

1656 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1742)

1680 – வீரமா முனிவர்,  இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)

1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30வதுஷபிரித்தானிய ஆளுநர்(இ.1880)

1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907)

1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு, ஆந்திர வயலின் இசைக் கலைஞர் (இ: 1964)

1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)

1903 – அல்பிரட் தம்பிஐயா, இலங்கைத் தொழிலதிபர், அரசியல்வாதி

1910 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழக தவில் கலைஞர் (இ. 1964)

1912 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர் (இ. 2005)

1908 – ராஜா ராவ், இந்திய எழுத்தாளர் (இ. 2006)

1920 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. 2014)

1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)

1926 – டார்லீன் சி. ஆப்மேன், அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்

1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி

1937 – ராண்டார் கை, இந்தியத் தமிழ் திரைப்பட, சட்ட எழுத்தாளர் (இ. 2023)

1943 – ரிச்சர்ட் பென்சன், அமெரிக்க நிழற்படக்காரர், அச்சுத் தொழிலாளி, கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2017)

1947 – உஷா உதூப், இந்திய நடிகை, பாடகர்

1954 – கசுவோ இசுகுரோ, சப்பானிய-பிரித்தானிய புதின எழுத்தாளர்

1957 – சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி

1966 – சீமான், தமிழக அரசியல்வாதி, திரைப்பட இயக்குனர், நடிகர்

1969 – உபேந்திரா லிமாயி, இந்தியத் திரைப்பட நடிகர்

1976 – பிறெட் லீ, ஆத்திரேலியத் துடுப்பாளர்

1981 – நியல் ஓ'பிறையன், அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர்

1986 – ஏரன் சுவோற்சு, அமெரிக்க கணினியியலாளர் (இ. 2013)

1989 – அசோக் செல்வன், தமிழ்த் திரைப்பட நடிகர்

*இறப்புகள்*

397 – மார்ட்டின், பிரான்சிய ஆயர், புனிதர்

955 – இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)

1240 – இப்னு அரபி, அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. 1165)

1605 – இராபர்ட்டு கேட்சுபி, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத் தலைவர் (பி. 1573)

1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1608)

1958 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1878)

1969 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (பி. 1875)

1970 – நெப்போலியன் ஹில், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1883)

1987 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913)

2000 – சோ. சிவபாதசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)

2006 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1942)

2009 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1916)

2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964)

2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)

2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக மோர்சிங் இசைக் கலைஞர் (பி. 1930)

2015 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த துறவி, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1942)

*சிறப்பு நாள்*

உலக நகர்ப்புறவியம் நாள்

பன்னாட்டுக் கதிரியல் நாள்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:37


*இன்றைய செய்திகள்*
08.11.2024

மலைப் பகுதி மக்களுக்காக ரூ.1.60 கோடியில் 25 பைக் ஆம்புலன்ஸ் வாங்க தமிழக அரசு உத்தரவு.

* அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்.

* கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் வணிக போக்குவரத்து வாகனம் இயக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் தகவல்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்றைய ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி சீன வீராங்கனை கின்வென் ஜெங் வெற்றி.

* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வங்காளதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி.

*Today's Headlines*

* Tamil Nadu government orders to buy 25 bike ambulances for hilly people at Rs 1.60 crore.

* Action on absentee teachers in government schools: School Education Department plans to intensify monitoring.

* Car driving license holders can drive commercial vehicles: Supreme Court judgement.

* Australia's prime minister has announced that a new law will be introduced to ban accessing social media of children under the age of 16  .

* China's Qinwen Zheng wins today's Women's Tennis Championship by beating Jasmine Piolini.

* First ODI: Afghanistan beat Bangladesh
Prepared by

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:37


*நவம்பர் 8*

*உலக நகர திட்டமிடல் தினம்.*

உலக நகர திட்டமிடல் தினம் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போது, எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் Carlos Maria della Paolera என்பவரால் நிறுவப்பட்டது.

திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது, என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம்;

அது போல, ஒரு நகரத்தை உருவாக்கும் போது, எதிர்காலத்துக்கு ஏற்ப, திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவ., 8ம் தேதி, "உலக நகர திட்டமிடல் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

*என்ன வித்தியாசம்:*

திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.

இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது.

ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய விரிவாக்கம், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது,

லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பது, ஆக்கிரமிப்பு போன்றவை, நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. மக்களும், நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

*திட்டமிட்ட தலைநகரங்கள்:*

உலக நாடுகளின் தலைநகரங்களில்,

கான்பெரா (ஆஸ்திரேலியா), வாஷிங்டன் (அமெரிக்கா),

பிரேசில்லா (பிரேசில்),
புதுடில்லி (இந்தியா),
அபுஜா (நைஜீரியா),

அஸ்டானா (கஜகஸ்தான்), இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) ஆகியவை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை.

*இந்தியாவில்*...:

இந்தியாவில் முதன் முதலில் திட்டமிடப்பட்ட நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு பொது தலைநகர்.

உலகின் பெரிய திட்டமிடப்பட்ட நகரம் நவி மும்பை. இது 1972ம் ஆண்டு, மும்பை மாநகர் விரிவாக்கத் திட்டத்தின் படி உருவாக்கப்பட்டது. நொய்டா, ஜெய்ப்பூர், காந்திநகர் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்ட நகரங்கள்.

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:37


*நவம்பர் 8*

*வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்*

வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார்.

இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.

காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம்

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:37


*08.11.2024*
*திருக்குறள் :*

பால்: பொருட்பால்
அதிகாரம்: பழைமை

*குறள் எண்:808*

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.

*பொருள்:*

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்."

*பழமொழி :*

கருணை உள்ளமே கடவுள் வாழும் அமைதி இல்லம்.  

Where mercy lives that mind itself where GOD lives peacefully.

*பொன்மொழி :*

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும்.

உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. .

--ஹார்வி மேக்கே

*பொது அறிவு :*

"1. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் என்ன?

விடை: வேலைவாய்ப்பை உருவாக்குவது.      

  2.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது?

விடை:  இந்திராகாந்தி"

*English words & meanings :*

Coriander - கொத்துமல்லி

*வேளாண்மையும் வாழ்வும் :*

உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)

By Covai women ICT_போதிமரம்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

08 Nov, 03:37




🤔   *நாளும் ஒரு சிந்தனை*

புரிந்து கொள்ளாத யாருக்கும், எதையும்
நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. காலம் முழுதும் நிரூபித்துக் கொண்டே இருந்தால் ...
அது நிறைவான வாழ்க்கை இல்லை!!

🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*

     கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டால், மருதாணி பத்து போட்டால் வெடிப்பு சரியாகும்.

📰  *நாளும் ஒரு செய்தி*

     இந்தியாவின் கருப்பு மாவட்டம் என்றழைக்கப்படுவது *'வேலூர்'* ஆகும்.

  🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     பச்சைப் பட்டாணி வாடாமல் இருக்க, பட்டாணி உப்பு சேர்த்த வெந்நீரில் போட்டு, உடனே வெளியே எடுத்து உலர்த்தி காற்றுப் புகாமல் வைத்தால் ஆறு மாதங்கள் நன்றாக இருக்கும்.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     சினம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.

                          *-மகாவீரர்*

📆  *இன்று நவம்பர் 8-*
  
   ▪️ *உலக நகர்புறவியம் நாள்.*

   ▪️ *பன்னாட்டுக் கதிரியல் நாள்.*

   ▪️ *2016-இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ₹500 ₹1000 தாள்களை செல்லுபடி அற்றதாக அறிவித்தார்.*

          🌸 *பிறந்த நாள்* 🌸

1680- *வீரமாமுனிவர்* (இத்தாலிய தமிழறிஞர்)


*(பகிர்வு)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

07 Nov, 15:08


*இன்றைய புதிர்*

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லில்  விடுபட்ட எழுத்துக்களை சேர்த்து முழு சொல்லை கண்டுபிடியுங்கள்.

*செ _ _  க் _ _ டை*

*வெ _ _ த் _ _ டு*

*நேற்றைய புதிரின் விடை*

நிலத்தோற்றம்
சவப்பெட்டி

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

07 Nov, 06:49


களத்தூர் கண்ணம்மா 1960 செல்வம் தமிழ் ஏ. பீம்சிங் குழந்தை நட்சத்திரம்

பார்த்தால் பசி தீரும் 1962 பாபு, குமார் தமிழ் ஏ. பீம்சிங் குழந்தை நட்சத்திரம்

பாத காணிக்கை 1962 தமிழ் கே. சங்கர் குழந்தை நட்சத்திரம்

கண்ணும் கரளும் 1962 மலையாளம் கே. எஸ். சேதுமாதவன் குழந்தை நட்சத்திரம்

வானம்பாடி 1963 தமிழ் ஜி. ஆர். நாதன் குழந்தை நட்சத்திரம்

ஆனந்த ஜோதி 1963 தமிழ் வி. என். ரெட்டி குழந்தை நட்சத்திரம்

மாணவன் 1970 தமிழ் எம். ஏ. திருமுகம் குறிப்பிடப்படாத வேடம்

அன்னை வேளாங்கண்ணி 1971 இயேசு தமிழ் தங்கப்பன் குறிப்பிடப்படாத வேடம்

குறத்தி மகன் 1972 தமிழ் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

அரங்கேற்றம் 1973 தியாகு தமிழ் கே. பாலச்சந்தர்

சொல்லத்தான் நினைக்கிறேன் 1973 கமல் தமிழ் கே. பாலச்சந்தர்

பருவ காலம் 1974 சந்திரன் தமிழ் ஜாஸ். ஏ. என். பெர்னான்டோ

குமாஸ்தாவின் மகள் 1974 மணி தமிழ் ஏ. பி. நாகராசன்

நான் அவனில்லை 1974 தமிழ் கே. பாலச்சந்தர்

கன்னியாகுமரி 1974 சங்கரன் மலையாளம் கே. எஸ். சேதுமாதவன்

அன்புத்தங்கை 1974 தமிழ் எசு. பி. முத்துராமன் சிறப்புத் தோற்றம்

விஷ்ணு விஜயம் 1974 மலையாளம் என். சங்கரன் ஐயர்

அவள் ஒரு தொடர்கதை 1974 பிரசாத் தமிழ் கே. பாலச்சந்தர்

பணத்துக்காக 1974 குமார் தமிழ் எம். எஸ். செந்தில்

சினிமா பைத்தியம் 1975 நடராஜன் தமிழ் முக்தா சீனிவாசன்

பட்டாம்பூச்சி 1975 'சண்டியர்' சிவா தமிழ் பிரகாசம்

ஆயிரத்தில் ஒருத்தி 1975 கமல் தமிழ் அவினாசி மணி

தேன்சிந்துதே வானம் 1975 தமிழ் ஆர். ஏ. சங்கரன்

மேல்நாட்டு மருமகள் 1975 ராஜா தமிழ் ஏ. பி. நாகராஜன்

தங்கத்திலே வைரம் 1975 குமார் தமிழ் கே. சொர்ணம்

பட்டிக்காட்டு ராஜா 1975 மகேஷ் தமிழ் கே. சண்முகம்

ஞாண் நிந்நே பிரேமிக்குன்னு 1975 மலையாளம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

மாலை சூடவா 1975 தமிழ் சி. வி. இராசேந்திரன்

அபூர்வ ராகங்கள் 1975 பிரசன்னா தமிழ் கே. பாலச்சந்தர்

திருவோணம் 1975 மலையாளம் ஸ்ரீகுமரண் தம்பி

மாட்டொரு சீதா 1975 மலையாளம் பி. பாஸ்கரன்

ராசலீலா 1975 மலையாளம் என். சங்கரன் நாயர்

அந்தரங்கம் 1975 கந்தன் தமிழ் முக்தா சீனிவாசன்

அப்பூப்பன் 1976 பாபு மலையாளம் பி. பாஸ்கரன்

அக்னி புஷ்பம் 1976 மலையாளம் ஜெஸ்ஸி

மன்மத லீலை 1976 மது தமிழ் கே. பாலச்சந்தர்

அந்துலேனி கதா 1976 அருண் தெலுங்கு கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

சமஸ்ஸியா 1976 மலையாளம் கே. தங்கப்பன்

ஸ்விம்மிங் பூல் 1976 மலையாளம் ஜெ. சசிகுமார்

அருத்து 1976 மலையாளம் ரவி

சத்யம் 1976 குமரன் தமிழ் எஸ். ஏ. கண்ணன்

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 1976 ரவி தமிழ் எசு. பி. முத்துராமன்

உணர்ச்சிகள் 1976 செல்வம் தமிழ் ஆர். சி. சக்தி

குட்டவும் சிக்ஸயும் 1976 மலையாளம் எம். மஸ்தான்

குமார விஜயம் 1976 குமார் தமிழ் ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்)

இதயமலர் 1976 மோகன் தமிழ் ஜெமினி கணேசன்

பொண்ணி 1976 மாரண் மலையாளம் தோப்பில் பாசி

நீ என்டி லகாரி 1976 மலையாளம் பி. ஜி. விஸ்வம்பரன்

மூன்று முடிச்சு 1976 பாலாஜி தமிழ் கே. பாலச்சந்தர்

மோகம் முப்பது வருஷம் 1976 ரமேஷ் தமிழ் எசு. பி. முத்துராமன்

லலிதா 1976 பாலு தமிழ் வலம்புரி சோமநாதன்

ஆய்ணா 1977 பிரேம் கபூர் இந்தி கே. பாலச்சந்தர் சிறு வேட சிறப்புத் தோற்றம் (இந்தி மொழி அறிமுகம்)

உயர்ந்தவர்கள் 1977 ஆருமுகம் தமிழ் டி. என். பாலு

சிவ தாண்டவும் 1977 மலையாளம் என். சங்கரன் நாயர்

ஆஸீர்வாதம் 1977 மலையாளம் ஐ. வி. சசி

அவர்கள் 1977 ஜனார்த்தன் (ஜானி) தமிழ் கே. பாலச்சந்தர்

மதுராசுவப்ணம் 1977 மலையாளம் எம். கிருஷ்ணன் நாயர்

ஸ்ரீதேவி 1977 வேணுகோபால் மலையாளம் என். சங்கரன் நாயர்

உன்னை சுற்றும் உலகம் 1977 ராஜா தமிழ் ஜி. சுப்பிரமணிய ரெட்டியார்

கபிடா 1977 கோபால் பெங்காலி பாரத் ஸாமஸெர்

அஷ்டமங்கல்யம் 1977 மலையாளம் பி. கோபிகுமார்

நிரகுடம் 1977 தேவன் மலையாளம் ஏ. பீம்சிங்

ஒர்மகல் மரிக்குமொ 1977 சந்திரசேகரன் மலையாளம் கே. எஸ். சேதுமாதவன்

16 வயதினிலே 1977 கோபாலகிருஹ்ணன் (சப்பாணி) தமிழ் பாரதிராஜா

ஆடு புலி ஆட்டம் 1977 மதன் தமிழ் எசு. பி. முத்துராமன்

ஆனந்தம் பரமாணந்தம் 1977 பாபு / சேகரன்குட்டி மலையாளம் ஐ. வி. சசி

நாம் பிறந்த மண் 1977 ரஞ்சித் தமிழ் அ. வின்சென்ட்

கோகிலா 1977 விஜயகுமார் கன்னடம் பாலு மகேந்திரா

சத்யவான் சாவித்திரி 1977 சத்தியவான் மலையாளம் பி. ஜி. விஷ்வாம்பரன்

ஆதய பாடம் 1977 மலையாளம் அடூர் பாசி

அவளுடெ ரவுகெள் 1978 மலையாளம் ஐ. வி. சசி சிறப்புத் தோற்றம்

நிழல் நிஜமாகிறது 1978 சஞ்சீவி தமிழ் கே. பாலச்சந்தர்

சக்கைப்போடு போடு ராஜா 1978 தமிழ் எசு. பி. முத்துராமன் சிறப்புத் தோற்றம்

பருவ மழை (மடணோல்சவம்) 1978 ராஜூ மலையாளம் என். சங்கரன் நாயர் தமிழில் பருவ மழை எனும் பெயரில் வெளியிடப்பட்டது

காத்திருண்ண நிமிஷம் 1978 ராஜு மலையாளம் பேபி

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

07 Nov, 06:49


அவள் விஸ்வாஸதாயிருண்ணு 1978 மலையாளம் ஜெஸ்ஸி சிறப்புத் தோற்றம்

அனுமோதணம் 1978 மலையாளம் ஐ. வி. சசி

மரோ சரித்திரா 1978 பாலு தெலுங்கு கே. பாலச்சந்தர்

இளமை ஊஞ்சலாடுகிறது 1978 பிரபு தமிழ் ஸ்ரீதர் (இயக்குநர்)

சட்டம் என் கையில் 1978 பாபு, ரத்தினம் தமிழ் டி. என். பாலு

வயசு பிலிசிண்டி 1978 ராஜா தெலுங்கு ஸ்ரீதர் (இயக்குநர்) இளமை ஊஞ்சலாடுகிறது படம் தெலுங்கில் மீண்டும் எடுக்கப்பட்டது.

தப்பிட்த தள 1978 அமிர்ட் லால் கன்னடம் கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

படகுதிர 1978 மலையாளம் பி. ஜி வாசுதேவன்

வயணடன் தம்பண் 1978 வயணடன் தம்பண் மலையாளம் ஏ. வின்சென்ட்

அவள் அப்படித்தான் 1978 அருண் தமிழ் சி. ருத்ரைய்யா

சிகப்பு ரோஜாக்கள் 1978 திலீப் (முத்து) தமிழ் பாரதிராஜா

மனிதரில் இத்தனை நிறங்களா 1978 வேலு தமிழ் ஆர். சி. சக்தி

தப்பு தாளங்கள் 1978 அமிர்ட் லால் தமிழ் கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

ஈட்டா 1978 ராமு மலையாளம் ஐ. வி. சசி

இரு நிலவுகள் (சொம்மொகடிதை சொக்கடிதை) 1979 ரங்கடு, சேகர் தெலுங்கு சிங்கீதம் சீனிவாசராவ் தமிழில் இரு நிலவுகள் எனும் பெயரில் வெளியிடப்பட்டது

சிகப்புக்கல் மூக்குத்தி 1979 தமிழ் வலம்புரி சோமநாதன்

நீயா 1979 கமல் தமிழ் துரை
அலூவுதீனும் அல்புத விலக்கும் 1979 அலாவுதீன் மலையாளம் / தமிழ் ஐ. வி. சசி ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் எடுக்கப்பட்டது (தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும் என பெயர் வைக்கப்பட்டது.)

தாயில்லாமல் நானில்லை 1979 ராஜா தமிழ் ஆர். தியாகராஜன்

நினைத்தாலே இனிக்கும் 1979 சந்துரு தமிழ் கே. பாலச்சந்தர்

அந்தமைண அனுபவம் 1979 சந்துரு தெலுங்கு கே. பாலச்சந்தர்

இதி கத காடு 1979 Janardhan தெலுங்கு கே. பாலச்சந்தர்

நூல் வேலி 1979 தமிழ் கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

குப்பெடு மனசு 1979 கமல் தெலுங்கு கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

கல்யாணராமன் 1979 கல்யாணம், ராமன் தமிழ் ஜி. என். ரங்கராஜன்

பசி 1979 கமல் தமிழ் துரை சிறப்புத் தோற்றம்

மங்களவாத்தியம் 1979 தமிழ் கே. சங்கர்

நீலமலர்கள் 1979 டாக்டர் சந்திரன் தமிழ் கிருஷ்ணன் பஞ்சு

அழியாத கோலங்கள் 1979 கௌரிசங்கர் தமிழ் பாலு மகேந்திரா சிறப்புத் தோற்றம்

உல்லாசப்பறவைகள் 1980 ரவி (எ) ரஜினிகாந்த் தமிழ் சி. வி. இராசேந்திரன்

குரு 1980 அசோக் (குரு) தமிழ் ஐ. வி. சசி

வறுமையின் நிறம் சிவப்பு 1980 ரங்கன் தமிழ் கே. பாலச்சந்தர் தெலுங்கில் ஆகாலி ராச்சியம்

மரியா மை டார்லிங் (கன்னடம்) 1980 ரகு கன்னடம் துரை தமிழ் கன்னடம் என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது

மரியா மை டார்லிங் 1980 ரகு தமிழ் துரை

சரணம் ஐயப்பா 1980 தமிழ் தசரதன் சிறப்புத் தோற்றம்

நட்சத்திரம் 1980 கமல் தமிழ் தசரி நாராயணராவ் சிறப்புத் தோற்றம்

தில்லு முல்லு 1981 சாருஷாஸன் தமிழ் கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

அகாலி ராஜ்யம் 1981 ஜெ. ரங்கராவ் தெலுங்கு கே. பாலச்சந்தர் தமிழில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது

மீண்டும் கோகிலா 1981 மணியன் தமிழ் ஜி. என். ரங்கராஜன்

ராம் லட்சுமண் 1981 ராம் தமிழ் ஆர். தியாகராஜன்

ராஜ பார்வை 1981 ரகு தமிழ் சிங்கீதம் சீனிவாசராவ்

ஏக் தூஜே கே லியே 1981 வாசு இந்தி கே. பாலச்சந்தர்

கடல் மீன்கள் 1981 செல்வநாயகம், ராஜன் தமிழ் ஜி. என். ரங்கராஜன்

சவால் 1981 'பிக்பாக்கெட்' ராஜா தமிழ் ஆர். கிருஷ்ணமூர்த்தி

சங்கர்லால் 1981 தர்மலிங்கம், மோகன் தமிழ் டி. என். பாலு

டிக் டிக் டிக் 1981 திலீப் தமிழ் பாரதிராஜா

எல்லாம் இன்பமயம் 1981 வேலு தமிழ் ஜி. என். ரங்கராஜன்

வாழ்வே மாயம் 1982 ராஜா தமிழ் ஆர். கிருஷ்ணமூர்த்தி

அந்திவெய்யிலிலே பொண்ணு 1982 மலையாளம் இராதாகிருஷ்ணன்

மூன்றாம் பிறை 1982 சீனிவாசன் (சீனு) தமிழ் பாலு மகேந்திரா

நீதி தேவன் மயக்கம் 1982 ராணுவ வீரர் தமிழ் பாப்பு

மாட்டுவின் சட்டங்களே 1982 மலையாளம் கே. ஜி. ராஜசேகரன் சிறப்புத் தோற்றம்

சிம்லா ஸ்பெஷல் 1982 கோபு தமிழ் முக்தா சீனிவாசன்

சனம் தெரி கசம் 1982 சுனில் சர்மா இந்தி நரேந்திரா பேடி

சகலகலா வல்லவன் 1982 வேலு தமிழ் எசு. பி. முத்துராமன்

ஏழாம் ராத்திரி 1982 மலையாளம் கிருஷ்ணகுமார்

ராணி தேனி 1982 மில்லர் தமிழ் ஜி. என். ரங்கராஜன் சிறப்புத் தோற்றம்

ஏ தோ கமால் ஹோகயா 1982 ரத்தன் சந்தர், ரஜய் சாக்சனா இந்தி தத்திநேரி ராம ராவ்

பகடை பனிரெண்டு 1982 ஆனந்த் தமிழ் என். தாமோதரன்

அக்னி சாட்சி 1982 கமல்காசன் தமிழ் கே. பாலச்சந்தர் சிறப்புத் தோற்றம்

சாரா சி சிந்தகி 1983 ராகேசு குமார் சாத்திரி இந்தி கே. பாலச்சந்தர்

உருவங்கள் மாறலாம் 1983 கமல்காசன் தமிழ் எஸ். வி. ரமணன் சிறப்புத் தோற்றம்

சட்டம் 1983 ராஜா (காவல் ஆய்வாளர்) தமிழ் கே. விசயன்

சலங்கை ஒலி 1983 பாலகிருஷ்ணா தெலுங்கு கே. விஸ்வநாத்

சத்மா 1983 சோமு இந்தி பாலு மகேந்திரா

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

07 Nov, 06:49


2019 கடாரம் கொண்டான் ராஜேஸ் எம்.செல்வா தமிழ் தெலுங்கில் மிஸ்டர் கே.கே. எனும் பெயரில் திரையிடப்பட்டது.
குறிப்பு:கமல்ஹாசன் அவர்களின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் கமல் தயாரித்த மற்றும் தயாரிக்காத பல படங்கள் விநியோகமும் செய்துள்ளது.

தயாரித்த திரைப்படங்கள்..

லேடீஸ் ஒன்லி (இந்தி) (1997)
மருதநாயகம் (1997)
சபாஷ் நாயுடு (2017)

எழுதிய திரைக்கதைகள்..

1980 – குரு
1981 – ராஜ பார்வை (திரைக்கதை)
1986 – விக்ரம் (திரைக்கதை)
1989 – இந்திரன் சந்திரன் (தெலுங்கு)
1989 – அபூர்வ சகோதரர்கள்
1990 – மைக்கேல் மதன காமராஜன்
1992 – தேவர் மகன்
1994 – மகாநதி
1994 – மகளிர் மட்டும்
1995 – குருதிப்புனல் (திரைக்கதை)
1999 – பீவி நெ.1 (இந்தி)
1997 – விராசாத் (இந்தி)
1998 – காதலா! காதலா!
2000 – ஹே ராம்
2001 – ஆளவந்தான்
2002 – பஞ்சதந்திரம்
2003 – அன்பே சிவம்
2003 – நள தமயந்தி
2004 – விருமாண்டி
2005 – மும்பை எக்ஸ்பிரஸ்
2005 – ராம்ஜி லண்டன்வாலே (இந்தி)
2008 – தசாவதாரம்
2009 – உன்னைப்போல் ஒருவன் (திரைக்கதை)
2009 – ஈநாடு (தெலுங்கு) (திரைக்கதை)
2010 – மன்மதன் அம்பு
2013 – விஸ்வரூபம்
2015 – உத்தம வில்லன்
2015 – தூங்காவனம் (திரைக்கதை)
2018 – விஸ்வரூபம் - 2
இயக்கிய திரைப்படங்கள்

இயக்கிய திரைப்படங்கள்...

1998 – சாச்சி 420

2000 – ஹே ராம்

2004 – விருமாண்டி

2013 – விஸ்வரூபம்

2018 – விஸ்வரூபம் - 2

1: 1997 – மருதநாயகம் (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது)

2: 2017 – சபாஷ் நாயுடு (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது)

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்..

2010 – நீல வானம் – மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)

( பாடலாசிரியர்)

2006 – புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)

2004 – மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)

2004 – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)

2003 – அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)

2003 – நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)

2000 – ஹே ராம் (சிகையலங்காரம்)

1999 – சிப்பிக்குள்ளே முத்தை – தி பிளாச்ட் இசைக் கொத்து - (பின்னணிக் குரல்)[33][34]

1998 – சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)

1996 – உல்லாசம் (பின்னணிப் பாடகர்)

1996 – அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)

1995 – சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)

1992 – தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)

1987 – நாயகன் (பின்னணிப் பாடகர்)

1985 – ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)

1978 - சிகப்பு ரோஜாக்கள்(பின்னணிப் பாடகர்)

1975 – அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)

1974 – ஆய்னா (நடனங்கள்)

1985 – ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)

#விருதுகள்..

மார்ச் 31, 2014 அன்று புதுடில்லியில் ராகுபிரதி பவனில் உள்ள ஒரு பொதுப்பணித்துறை விழாவில் ஸ்ரீ கமல் ஹாசனுக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)

18 பிலிம்பேர் விருதுகள்.

பத்மசிறீ விருது (1990)

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)

பத்ம பூசன் விருது (2014)

தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
உலக நாயகனே.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

07 Nov, 06:49


வரலாற்றில் இன்று நவம்பர் 7

அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நவம்பர் 7

தமிழகத்து நேரு மாமா’ குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நவம்பர் 7

கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம். குழந்தைகள் உலகம்தான் அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம். அதில் வண்டாகச் சுற்றிவந்து, தேன் கவிதைகளைக் குழந்தைகள் நெஞ்சில் தெளித்தவர்; அழகழகான கவிதைகள், பாடல்களுக்குச் சொந்தக்காரர் அழ.வள்ளியப்பா. அதுவும் இன்று பல குழந்தைகள் தொலைக்காட்சியே கதி எனக் கிடக்கும் நிலையில் இவரை நினைவுகூர்வது முக்கியம்.

இவர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் என்ற ஊரில், 1922-ம் ஆண்டு நவம்பர் ஏழாம் நாள் பிறந்தவர். இவரது பெற்றோர், அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி. தன் ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுதான் கல்வி கற்றுவந்தார். பள்ளிக்குப் போகும் வழியெல்லாம் பறந்து திரிந்த பறவைகளோடு பாடிப் பரவசம் அடைந்தவர். தனது 13-ம் வயதிலேயே கவிதை இயற்றும் திறன் கைவசப்பெற்றார்.

லட்டும் தட்டும்

வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.

எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில், பிட்டு.

கிட்டு நான்கு லட்டு;
பட்டு நான்கு லட்டு;
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு!

என்ற பாடலில் வரும் லட்டின் இனிப்பும் தங்கையின் அன்பையும் அழகாகச் சொல்கிறது.

அணிலே, அணிலே ஓடி வா
அழகு அணிலே, ஓடி வா.

கொய்யா மரம் ஏறி வா.
குண்டுப் பழம் கொண்டு வா.

பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;

கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்!

என, அணிலை நண்பனாகப் பாவிக்கும் லாகவம் குழந்தைக் கவிஞருக்கு மட்டுமே சாத்தியமானது.

1940-ல் சென்னப்பட்டணம் வந்த கவிஞர், சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளர் பணியில் சேர்ந்து, பிறகு சக்தியில் எழுத ஆரம்பித்தார். இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். 1941-ல் இந்தியன் வங்கியில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்க, அதில் இருந்துகொண்டே கவிதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். வங்கிப் பணி ஓய்வுக்குப் பின்,1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், 1983ல் இருந்து 1987 வரை கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் 'குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் குழந்தைகளுக்கான தரமான நூல்கள் வெளிவர வள்ளியப்பாவே காரணம்.

1981-ல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் அதே தலைப்பில் சொற்பொழிவாற்றினார். குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்டவர், 1982-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினால் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்று கௌரவிக்கப்பட்டார். குழந்தைகளுக்காக இவர் 50-க்கும் மேலான நூல்களையும், ஆயிரத்துக்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். 'நம் நதிகள்' என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது பெமைக்குரியது.

ரோஜாச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம்' எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள்' எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.

குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். இந்தச் சாதனையை குழந்தைகள் உலகம் என்றும் கொண்டாடும்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 15:09


*இன்றைய புதிர்*

இந்த விளையாட்டில், கீழே 9 எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 எழுத்துக்களில் இருந்து, குறைந்தது 5 வார்த்தைகள் வரை கண்டுபிடிக்க வேண்டும்.

*கோ றை டை பா ழி க றி டி தை*

*நேற்றைய புதிரின் விடை*

ஊட்டச்சத்து

நீர்த்தேக்கம்

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 14:54


*இனிய மாலை வணக்கம்🙏*
---------------------------------------------
01.11.2024 *இன்றைய பொது அறிவு* *தெரிந்து கொள்வோம்*
---------------------------------------------
தகவல் உதவி: *அறிவு பரவல் குழு*
_______
___
1) ஜெய்ப்பூர் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப் படுகிறது.

2) மனித உடலின் வளர்ச்சி 21 வயதுக்கு மேல் செல்வதில்லை.

3) மண்புழுக்களில் ஆணும் பெண்ணும் தனித்துவம் இல்லை.

4) பகல் நேரத்தை விட இரவில் மேகம் வேகமாக நகரும்.

5) கருணை கொலையை சட்ட பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாந்து.

********
நேர்மையுடன் செயல்படுவோம்👍🏽
பிரியமுடன் உங்கள் மதி❤️✍🏾👍🏽
********

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1

தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1

நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் கூறியுள்ளது என்ற போதிலும், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு முழுதாக எப்போதாவது ஒரே தமிழ் அரசனின் கீழ் ஆளப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். ஏனெனில், இது சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆண்ட பூமியாகும். அன்னியப் படையெடுப்புகளால் இந்த நிலப்பரப்பு கூறுபோடப்பட்டு, சிலகாலங்கள் சிலரால் ஆளப்பட்ட போதிலும் கூட, வேற்று மொழியினரான தெலுங்கர்கள், மராட்டியர்கள், சவுராஷ்டிரத்தினர் என பலர் வந்து குடியேறி ஆட்சி அதிகாரம் செய்த காலத்திலும் கூட, இந்த மண்ணில் வாழும் பூர்வகுடிகள் ‘தமிழ்நாடு’ என்ற உணர்வை ஒரு போதும் இழக்கவில்லை.

சென்னை ராஜதானி என்று ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி செய்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார். அன்றே அவர் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்கு உணர்த்தும் வண்ணம் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!

ஆக, நாம் அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த காலத்திலும், ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்கான சுதந்திர போராட்டம் நடந்த போதிலும் கூட, தமிழ்நாடு என்ற கருத்தாக்கம் பாரதியார் போன்ற மிகப்பெரிய தேசியவாதிகளிடமே இருந்தது என்பது மறுக்கமுடியாததாகும். அதனால்தான் அன்று ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்ற பெயர்தான் இருந்ததே தவிர ‘மதராஸ் காங்கிரஸ் கமிட்டி’ என்பதாக அழைக்கப்படவில்லை!

அப்படியிருந்தும் கூட, தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உருவாவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டமும், சில உயிரிழப்புகளும், தியாகங்களும் தேவைப்பட்டன என்பதே வரலாறு நமக்கு சொல்லும் உண்மையாகும்.

மொழிவாரி மாநிலங்கள் தேவையா? என்பதற்கு முதன் முதலாக எஸ்.கே.தார் கமிட்டி ஜூன் 1948-ல் அமைக்கப்பட்டது. அது தன் அறிக்கையை அதே ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. அதில், “மொழிவாரி மாநிலம் அவசியமில்லை. நிர்வாக வசதிக்கு ஏற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அது பரிந்துரைத்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இதற்காக உருவாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா என்ற மூவர் கமிட்டியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியது.

“இந்திய சுதந்திரத்திற்காக நாம் ஒன்றுபட்டு போராடினோம். அப்படி ஒன்றுபட்ட நாம் மொழிவாரியாக நம்மை ஏன் பிரித்துக் கொள்ளவேண்டும். மொழி உணர்வும், பிராந்திய உணர்வும் நம் ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது. ஆகவே, இந்தியாவை நிர்வாக வசதி கருதி பிரித்து, அனைத்து பிரிவினரும் சமஉரிமை பெறும் வகையில் மாநிலங்களை உருவாக்கலாம்” என்றார் ஜவகர்லால் நேரு.

இந்த விஷயத்தில், சட்டமேதை அம்பேத்கரோ, “மொழிவாரி மாநிலம் என்பது தவிர்க்கமுடியாது. ஆனால், அதை முரட்டுத்தனமாகவோ, நிர்ப்பந்தமாகவோ உருவாக்கக் கூடாது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதில் சில ஆபத்துகளும் உள்ளன. மொழி உணர்வை கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பிரிவினை உணர்வை தவிர்ப்பதற்கும், மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் ஒரு தேசிய மொழியை ஆட்சி மொழியாக்க வாய்ப்புள்ளதா..? என்று பார்க்கவேண்டும்.” என்றார்.

தேசத் தலைவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து தார் கமிட்டி பரிந்துரையும் தெலுங்கு பேசும் மக்களை கொந்தளிக்க வைத்தது. போட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1952 ஜூன் 9-ல் ஆரம்பித்து செப்டம்பர் 15-ல் அவர் தன் உயிரை நீத்தார். அவரது உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்த மரணமும் தெலுங்கு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, பல கலவரங்களுக்கு வித்திட்டது. கட்டுப்படுத்தவியலாத கலவரங்களையடுத்து, 1953 அக்டோபர் 1-ந்தேதி ஆந்திரா சுதந்திர இந்தியாவின் முதல் மாநிலமாக உண்டானது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பசல்அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு கமிட்டியை பிரதமர் நேரு ஏற்படுத்தினார். இச்சூழலில், “மதராஸ் மனதே” என்ற கோஷத்தை எழுப்பி, “சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும்” என்றனர், தெலுங்கு மக்கள்!

தந்தை பெரியார்

ஆந்திரா கோரிக்கைக்கும் முன்பே 1938-லேயே சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தரபாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி இருந்தனர். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ் மாநிலம் வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார். ஆந்திரா உருவானதையடுத்து தமிழ்நாடு கோரிக்கையோடு சென்னையை காப்பாற்ற வேண்டிய அவசர அவசியமும் உண்டானது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


முழக்கத்தை ம.பொ.சி. பிரபலப்படுத்தினார். ராஜாஜியோ, “சென்னையை ஆந்திராவிற்கு தந்துவிட்டால், அதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கில்லை. நான் ராஜினாமா செய்துவிடுவேன். நீங்கள் வேறு முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று நேருவிடம் கூறிவிட்டார். இதையடுத்து “சென்னையை ஆந்திராவிற்கு தரப்போவதில்லை” என நேரு பகிரங்கமாக அறிவித்தார்.

மொழிவாரி மாநில போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் கேட்டுப் போராடினர். மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவானது. மற்ற மாநிலத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் விரும்பிய பெயரே அந்தந்த மாநிலங்களுக்கு சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமின்றி தொடரும் என்றானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. இந்த வகையில் தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது தமிழ் போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அவரது தியாகம் வீண்போகவில்லை. அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்று 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

தமிழ்பேசும் மக்களுக்கான மாநிலம் என்பது உறுதியானாலும், தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு மிகக்கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் அங்கமாகவிருந்த கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்ஷல் நேசமணி தலைமையில் தெற்கு எல்லை போராட்டம் வெகு உக்கிரமாக நடந்தது. அவருடன் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்றோரும் களத்தில் இறங்கி போராடினர். கடையடைப்பு போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. மக்கள் எழுச்சியுடன் போராடியதையடுத்து துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.

இதே போல வடக்கு எல்லைகளை மீட்க ம.பொ.சி. தலைமையில் திருமலைப்பிள்ளை,கே.விநாயகம், மங்கலக்கிழார், சித்தூர் அரங்கநாதன், ந.சுப்பிரமணியன் போன்ற தளபதிகள் போராடி சிறை சென்றனர். இந்த போராட்டத்தில் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்ற இரு தமிழர்கள் சிறையில் உயிர் நீத்தனர். இந்த போராட்டத்தால் 290 கிராமங்களை உள்ளடக்கிய திருத்தணியும், சித்தூர் மற்றும் புத்தூர் மாவட்டங்களின் சிறுபகுதியும் தமிழகத்திற்கு கிடைத்தது. இந்த போராட்டங்களுக்கு அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க.வும், கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரவு தந்தன.

எல்லைகளைப் பிரிப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க படாஸ்கர் எல்லை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஆணையம் தமிழகத்திற்கு சேரவேண்டிய திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களை ஆந்திராவிற்கு உறுதிபடுத்தியது.

தேவிகுளம், பீர்மேடு,நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை கேரளாவிற்கு உறுதிபடுத்தியது.

ஓசூரின் சில பகுதிகள், கொள்ளேகால், கோலார் தங்கவயல் ஆகியவை கர்நாடகத்திற்கு உறுதிபடுத்தியது. இழந்த இந்த நிலப்பரப்புகள் தொடர்பான அதிருப்திகளும், சர்ச்சைகளும் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


இன்று (நவம்பர் 1) உலக சைவ தினம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந்தேதி உலக சைவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்கள் உலக சைவ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த சைவ தினம், இறைச்சி, முட்டை அல்லது பிற விலங்கு பொருட்களை மட்டும் தவிர்க்கும் சைவர்களுக்கு (Vegetarian) இல்லை. பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களையும் தவிர்த்து முழு பச்சை உணவை மட்டும் சாப்பிடும் சைவர்களுக்கானது (Vegan).

1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட சைவ சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா 1994-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இங்கிலாந்தில் வைத்து நடந்தது. இந்த பொன்விழாவைக் குறிக்கும் வகையிலேயே நவம்பர் 1-ந்தேதி உலக சைவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சைவ உணவினை எடுத்துக்கொள்வதால் மேம்படும் ஆரோக்கியம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை மேம்படுத்தவும் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைவ உணவு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் புரிந்துகொள்ளும் போது சைவ உணவை பின்பற்ற அது உதவியாக இருக்கும்.

உலக சைவ தினம் சிறிய அளவிலான திருவிழாக்கள், சமையல் திருவிழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் என உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சைவ வாழ்க்கை முறை மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, விலங்குகளின் வாழ்வைப் பாதுகாக்கிறது மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று இலங்கை வன்னியை ஆட்சிசெய்த கடைசி
தமிழ் வன்னிய மன்னனான
பண்டார வன்னியன்,
கற்சிலைமடு என்ற இடத்தில்
ஆங்கிலேய கமாண்டர் Lt. von Driberg ல்
கொல்லப்பட்ட தினம் இன்று
( 31 அக்டோபர் 1803 )

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு வன்னி ஆகும்.

“பாயும் புலி பண்டாரவன்னியன்” என்ற காவியம் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியால் எழுதப்பட்டு முல்லைமணி வே.சுப்பிரமணியத்தினால் வடிவமைக்கப்பட்டு இன்றுவரை நாடகமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

பண்டார வன்னியன் வரலாறு;-

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள சுமார் 2000 சதுர மைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தார். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தார்.

இவரது ஒரே சகோதரி பெயர் நல்லநாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவைப் புலவன் அவள் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னி நிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னனான காக்கைவன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் மன்னர் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்கக் கண்ட காக்கைவன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு அனுப்புகிறான். இந்தச் சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை மன்னர் அறிந்து அவர்களின் காதலுக்கு சம்மதிக்கிறார்.

வன்னியில் பண்டாரவன்னியன் திறை(வரி) செலுத்த மறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் ஆங்கிலேயர்கள் புறமுதுகாட்டிப்பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து ஆங்கிலேயர்கள் தோல்வி அடைகின்றனர்.

அத்தருணத்தில் காக்கைவன்னியன் பண்டரவன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, தான் திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் மன்னர் அவனை சேர்த்துக் கொள்கிறார். மன்னனைத் தனியாக கூட்டிவந்து கற்சிலைமடு என்னுமிடத்தில் வைத்து ஆங்கிலேயர்களிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் காக்கைவன்னியன். அங்கு வைத்து Lt. von Driberg ல் மன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிகழ்வினை வைத்து நம்பி துரோகம் செய்பவர்களை இலங்கை வன்னிப்பகுதியில் "நீ காக்கை வன்னியன் பரம்பரையோ" என்று இன்றும் கேட்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


நவம்பர் 1,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் பிறந்த தினம் இன்று.

நரேந்திர தபோல்கர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார்.

கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா தபோல்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.

இவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார். காலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமியார்களையும் தந்திரக்காரர்களையும் இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மராத்தி இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.
20 ஆகத்து 2013 அன்று, தபோல்கர் தனது காலை நடைக்கா வெளியே சென்று இருந்தார். அப்பொழுது ஒரு அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் Omkareshwar கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் சுட்டுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.
மூட
நம்பிக்கைக்கெதிராக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கரின் மகளும் தன் தந்தையின் மரணத்திற்குப் பின் பல மடங்கு வீரியத்துடன் மூடநம்பிக்கைகு எதிராய் மும்பையில் போராடி வரும் முக்தா தபோல்கர்
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.

எந்த மூடநம்பிக்கைக்கெதிராய் 25 ஆண்டு காலம் போராடி என் தந்தை உயிரிழந்தாரோ அந்த மூடநம்பிக்கைக் கெதிரான சட்டம் அவரது படுகொலைக்குப் பின்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டம் வந்த பின் சாதி மதம் சார்ந்த 300 வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கெதிரான போராட்டங்களை அனைவரும் முன்னெடுப்போம் என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், பெற்ற சிசுவையே பலி கொடுக்குமளவுக்கு மூடநம்பிக்கை பழக்கங்கள் இன்னமும்கூட நீடிக்கின்றன. ஏவல் , பில்லி, சூனியம் உள்ளிட்ட பகுத்தறிவுக்கு சவால்விடும் சமாச்சாரங்களை எதிர்த்து அங்கேயும் ஒரு பெரியார் குரல் கொடுத்தார். அவர்தான் நரேந்திர தபோல்கர்.

மூடநம்பிக்கைகளை வேரறுக்க கடுமையான சட்டம் தேவை என தபோல்கர் 15 ஆண்டுகளாக போராடினார். அவர் காலத்தில் அது நடக்கவில்லை. அவரது படுகொலைக்குப் பிறகு அத்தகையச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அவசரச் சட்டம், பில்லி சூனியம், நரபலி மற்றும் பிற மனிதநேயமற்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 768 பேர் மூடநம்பிக்கைகளுக்கு தங்களின் இன்னுயிரை இழந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு கள ஆய்வு!.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று.நவம்பர். 1

கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956).

1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் "குமரித் தந்தை " என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று.நவம்பர். 1

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரும் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை முறையை மேம்படுத்தியவருமான ஜான் ஜோலி (John Joly) பிறந்த தினம் இன்று.

* அயர்லாந்தின் பிராக்நாக் மாவட்டத்தில் பிறந்தார் (1857). தந்தை, மதகுரு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் டப்ளினுக்கு இடம் பெயர்ந்தது. ராத்மைன்ஸ் பள்ளியில் பயின்றார். அப்போதே சோதனைக் கூட சாதனங்கள், கருவிகளை பழுதுநீக்குவதில் வல்லவராக இருந்தார். 1875-ல் டப்ளினில் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.

* பொறியியல், சோதனை இயற்பியல், கனிமவியல், வேதியியல் பாடங்கள் பயின்று 1882-ல் பட்டம் பெற்றார். அதே சமயத்தில் நவீன இலக்கியத்திலும் முதல் வகுப்பில் தேறினார். மாணவப் பருவத்திலேயே 1881-ல் ராயல் டப்ளின் சொசைட்டியில் இணைந்தார். அப்போது ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதி வந்தார்.

* தன் நண்பர் ஹென்றி டிக்சனுடன் இணைந்து ஒட்டும்தன்மை-இழுவிசை (cohesion-tension) கோட்பாடு குறித்து விளக்கினார். இதன் மூலம், மரம், செடிகளில் வேரிலிருந்து திரவம், கனிமங்கள் ஏறிச் செல்வதை (ascent of sap) குறித்து முதல் முறையாக விளக்கினார். டிரினிட்டி கல்லூரியில் ஆசிரியராகவும் ஆராய்ச்சிப் பொறியாளர் ஒருவரின் உதவியாளராகவும் சேர்ந்தார்.

* தனியாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒளியின் அடர்த்தியைக் கண்டறியும் ஃபோட்டோமீட்டர் என்ற கருவி, கனிமங்களின் உருகுநிலையைக் கணக்கிடும் மெல்டோமீட்டர் சாதனம், கனிமங்களின் குறிப்பிட்ட வெப்பநிலையை அளவிடும் கலோரிமீட்டர் ஆகியவற்றை கண்டுபிடித்து தமது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்.

* ட்ரினிட்டி கல்லூரியில் 1897-ல் புவி அமைப்பியல் மற்றும் கனிமப் பொருளியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இயற்கை வண்ணங்களில் போட்டோகிராபிக் இமேஜ்களை உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார். இது ‘ஜோலி பிராசஸ் ஆஃப் கலர் ஃபோட்டோகிராஃபி’ எனக் குறிப்பிடப்பட்டது. 1899-ல் ‘பூமியின் புவியியல் வயது குறித்த தனது புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரையை ராயல் டப்ளின் சொசைட்டியில் சமர்ப்பித்தார்.

* கடல் நீரில் உள்ள சோடியம் உப்பின் அடிப்படையில் பூமியின் வயதைக் கண்டறியலாம் என்று இதில் கூறியுள்ளார். பின்னர் இது துல்லியமானது இல்லை எனக் கருதப்பட்டாலும் இதைப் போன்ற ஆராய்ச்சிகளின் போக்கை சீரமைத்தது. ‘பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மன்ட் ஆஃப் சயின்ஸ்’ அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். ராயல் டப்ளின் சொசைட்டியில் டாக்டர் வால்டர் ஸ்டீவன்சனுடன் இணைந்து ரேடியம் இன்ஸ்டிடியூட்டை தொடங்கினார்.

* கதிரியக்கத்தைப் பிரித்தெடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு அதைப் பயன்படுத்தும் கதிரியக்க தெரபி முறையைக் கண்டறிந்தார். இதற்காக ஆழமாக-வேரூன்றிய தேடியோதெரபிக்காக உள்ளீடற்ற ஊசியைக் கண்டறிந்தார். இந்த சிகிச்சை முறை ‘டப்ளின் மெத்தட்’ என்று குறிப்பிடப்பட்டது. இது பின்னர் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தது.

* ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனிமங்களில் காணப்படும் கதிரியக்க அம்சங்களைக் கொண்டு, புவியியல் காலகட்டத்தைக் கணக்கிடும் முறையையும் வகுத்தார். 1903-ல் இது தொடர்பாக மற்றொரு கட்டுரையை வெளியிட்டார்.

* ஏறக்குறைய 300 கட்டுரைகளையும் ‘ஆன் தி ஸ்பெசிஃபிக் ஹீட்ஸ் ஆஃப் காசஸ் அட் கான்ஸ்டன்ட் வால்யூம்’, ‘தி பர்த் டைம் ஆஃப் தி வேல்ட் அன்ட் அதர் சயின்டிஃபிக் எஸேஸ்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். பாய்லி பதக்கம், ராயல் சொசைட்டியின் ராயல் பதக்கம், லண்டன் ஜியாலஜிகல் சொசைட்டியின் மர்ச்சிசன் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றார்.

* அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மிச்சிகன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. ஜான் ஜோலி, 1933 டிசம்பர் 8ஆம் தேதி தமது 76ஆவது வயதில் காலமானார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று.நவம்பர்.1

தன் வசீகரக் குரலால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் நினைவு தினம் இன்று.

*மாயவரத்தில் (1910) பிறந்தவர். தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரது சிறு வயதிலேயே குடும்பம் திருச்சியில் குடியேறியது. இவருக்கு இசையில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது.

*10 வயதில் திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். இவரது குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தந்தார். நாடக ஆசான் நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றார்.

* 6 ஆண்டுக்குப் பிறகு, எம்.கே.டி.யின் மேடைக் கச்சேரி அரங்கேறியது. 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

*‘‘தியாகராஜன் ஒரு பாகவதர்’’ என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.

*1926இல் திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். 1934இல் இந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக வந்தது.

*படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். படம் 9 மாதங்கள் ஓடியது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

*இவரது வெற்றிப் பயணத்தில் 1944இல் ஒரு தடங்கல் ஏற்பட்டது. லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் எம்.கே.டி.க்கும் அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

*நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

*1948இல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இவரது பாடல்கள் பிரபலமடைந்தன.

*எம்.கே.டி. மனித நேயம், தயாள குணம் கொண்டவர். மற்றவர்களின் உதவியை விரும்பாத அவர், வாழ்க்கையின் நெருக்கடிகளை கம்பீரமாக எதிர்கொண்டார்.

*அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன. இவரது சிகையலங்காரம் ‘பாகவதர் கிராப்’ என்று புகழ்பெற்றது.

*தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டாராக’ பாகவதர் கருதப்படுகிறார். 1944இல் வெளிவந்த இவரது ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்ற சாதனையைப் படைத்தது.

*தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வயதில் உடல்நலக் குறைவால் (1959) காலமானார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1

1956 - இந்தியாவின் மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. வரலாறு முழுவதும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த, ஏராளமான அரசர்களாலும், சிற்றரசர்களாலும் ஆளப்படுவதாவே இந்தியத் துணைக்கண்டம் இருந்துவந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் இவை பெரும்பாலும் மாற்றியமைக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்மூலம் இணைந்திருந்த மன்னராட்சிப் பகுதிகள், பிற நாடுகளுடனான உறவைத் தவிர மற்றவற்றில் தன்னாட்சியுடன் இருந்தன. நேரடியாக ஆங்கிலேயரின் ஆளுகையின்கீழிருந்த பகுதிகள் மாநிலங்களாக(பிரெசிடென்சி) பிரிக்கப்பட்டிருந்தன. ஒரிசாவில் 1895இல் ஏற்பட்டதே முதல் மொழி அடிப்படையிலான மாநிலத்துக்கான கோரிக்கையாகும். 1912இல் வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பிகார்-ஒரிசா மாநிலம் உருவாக்கப்பட்டதுடன், 1936இல் தனி ஒரிசா மாநிலமே உருவாக்கப்பட்டது. 1947இல் விடுதலைக்குப்பின், இந்திய ஒன்றியத்துடன் இணையத் தொடங்கிய மன்னராட்சிப் பகுதிகள் பெரும்பாலும் மாநிலங்களுடன் இணைக்கப்பட்டாலும், சில பகுதிகள் தனியாக, ராஜ்பிரமுக் என்ற பதவியுடன் பழைய அரசர்களாலும், மத்திய அரசு நியமித்த தலைமை ஆணையர்களாலும் நிர்வகிக்கப்பட்டன. அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மட்டும் துணைநிலை ஆளுனரால் நிர்வகிக்கப்பட்டது. 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டம், நாடுகளின்(மாநிலங்களின்) ஒன்றியமே இந்திய அரசு என்று வரையறுத்தது. மெட்ராஸ் மாநிலத்திலிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளைப் பிரித்து, ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரமிருந்து, பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பரில் உயிரிழக்க, அம்மாநிலத்தை 3 நாட்களில் அறிவித்தார் நேரு. மொழிவாரி மாநிலங்களுக்கான ஆணையம் 1948இலேயே அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1953இல் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 அக்டோபர் 31இல் நிறைவேற்றப்பட்டு, நவம்பர் 1இல் நடைமுறைக்கு வந்தது. மெட்ராஸ் மாநிலத்திலிருந்து மலபார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் திருவாங்கூர்-கொச்சியுடன் இணைக்கப்பட்டு, கேரளா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. திருவாங்கூர்-கொச்சியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு மெட்ராசுடன் இணைக்கப்பட்டது. குடகு உள்ளிட்ட கன்னடம் பேசும் பகுதிகள் மெட்ராசிலிருந்து பிரித்து மைசூருடன் இணைக்கப்பட்டு மைசூர் மாநிலமாகியது. ஹைதராபாத் இணைக்கப்பட்டு, ஆந்திரா, ஆந்திரப் பிரதேசமாகியது. மத்திய பாரதம் என்பதுடன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு மத்தியப்பிரதேசம் உருவாக்கப்பட்டதுடன், அசாம், பம்பாய் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பலமுறை முயற்சித்து, தோல்வியுற்ற தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், பேரறிஞர் அண்ணாத்துரை முதலமைச்சரானபின் தமிழ்நாட்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1969 பொங்கலன்று நடைமுறைக்குவந்தது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1

1954 - புதுச்சேரியிலிருந்து, ஃப்ரான்ஸ் முறைப்படி வெளியேறியது. இந்தியாவில் கடைசியாக நுழைந்த பெரிய ஐரோப்பிய நாடு ஃப்ரான்ஸ்தான். 1498இல் முதல் ஆளாக வாஸ்கோ-ட-காமா தொடங்கி போர்ச்சுகீசியர்களும், அதன்பின், 1605இல் நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களும், 1611இல் ஆங்கிலேயர்களும், 1620இல் டென்மார்க்கின் டேனிஷ்காரர்களும் இந்தியாவுக்கு வந்து காலூன்றியிருந்த நிலையில், 1674இல்தான் ஃப்ரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் காலூன்றினர். இவர்களில் சோழமண்டலக் கடற்கரை, கேரளம் ஆகியவற்றில் சில பகுதிகள், சூரத் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய டச்சுக்காரர்கள், திருவனந்தபுரத்தின் அரசர் மார்த்தாண்ட வர்மாவிடம் 1741இல் தோற்றதோடு படிப்படியாக வெளியேறத் தொடங்கி, 1825இல் முழுமையாக வெளியேறிவிட்டனர். தரங்கம்பாடி, வங்கத்தில் ஸ்ரீராம்பூர், நிக்கோபார் தீவுகள் ஆகிவற்றில் ஆதிக்கம் செலுத்திய டேனிஷ்காரர்கள், நெப்போலியப் போர்களின்போது ஏற்பட்ட நெருக்கடிகளால், 1869இல் வெளியேறினர். 1839இல் ஸ்ரீராம்பூரை ஆங்கிலேயர்களுக்கு விற்பனை செய்த, டேனிஷ்காரர்களிடமிருந்து நிக்கோபார் தீவுகளை 1845இல் விலைக்கு வாங்க இத்தாலி முயற்சித்து, பாதியில் நின்றுபோனது. பின்னர் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இவர்களது பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன. புதுச்சேரி, காரைக்கால், சோழமண்டலக் கடற்கரையில் யேனாம், கேரளக் கடற்கரையில் மாஹே, வங்கத்தில் சந்தன்நகர் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஃப்ரெஞ்சுக்காரர்களும், கோவா, டையூ, டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த போர்ச்சுகீசியர்களும், ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது இந்தியாவைவிட்டு வெளியேறவில்லை. 1961இல் ராணுவ நடவடிக்கைக்குப்பின்னர்தான் போர்ச்சுகீசியர்கள் வெளியேறினர். (விளக்கமாக டிசம்பர் 19 அன்று பார்க்கலாம்!) ஃப்ரான்சிடமிருந்த மசூலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகியவை 1947இலேயே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், 1948இல் ஓர் ஒப்பந்தமும் எட்டப்பட்டது. அதன்படி, 1950 மே 2இல் சந்தன்நகரும், 1954 நவம்பர் 1இல் புதுச்சேரி, காரைக்கால், யேனாம், மாஹே ஆகியவையும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நான்கும் சேர்ந்தது புதுச்சேரியானது. ஃப்ரெஞ்சுப் பாராளுமன்றம் இதற்கான ஏற்பளிப்பு செய்த 1962 ஆகஸ்ட் 16, புதுச்சேரியின் விடுதலை நாளானது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர்.1

ஆராய்ச்சியாளரும், கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்தவருமான ஆல்ஃபிரெட் வெக்னர் பிறந்த தினம் இன்று.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் (1880) பிறந்தார். தந்தை மொழி ஆசிரியர், பாதிரியாராக இருந்தவர். ஆதரவற்றோர் விடுதியும் நடத்தி வந்தார். செல்வச் செழிப்பான குடும்பம் என்பதால், இவருக்கு தரமான கல்வி கிடைத்தது. பெர்லினில் ஆரம்பக் கல்வி கற்றார்.

அறிவுக்கூர்மை உடைய மாணவரா கத் திகழ்ந்தார். இயற்பியல், புவி அறிவியலில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியப் பல்கலைக்கழகங்களில் இந்த பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் 1905-ல் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

# வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வு களில் அதிக ஆர்வம் காட்டினார். இதுதொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பயனுள்ள கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்க முடியும் என்று ஆரம்பகாலத்திலேயே மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார்.

துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906 முதல் 2 ஆண்டுகாலத்துக்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

முனைவர் பட்டம் பெற்றதும், ஜெர்மனியில் உள்ள மார்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது, பூமியின் கண்டங்கள் குறித்த வரலாற்றில் ஆர்வம் பிறந்தது. அதுபற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினார். தென் அமெரிக்க கிழக்கு கடற்கரையும், ஆப்பிரிக்காவின் வடமேற்கு கடற்கரையும் ஒருகாலத்தில் இணைந்திருந்ததுபோல தோற்றமளிப்பதைக் கண்டறிந்தார். ‘கண்டங்களின் இடப்பெயர்ச்சி’ என்ற தனது கோட்பாட்டை 1912-ல் வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் ‘கண்டப் பெயர்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டது.

முதல் உலகப் போரின்போது 1914-ல் ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். 2 முறை காயமடைந்ததால், ராணுவ வானிலை முன்னறிவிப்பு சேவையில் பணியமர்த்தப்பட்டார். ‘தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ்’ என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915-ல் வெளியிட்டார். கண்டங்கள் ஒருகாலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார்.

ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தில் வானியல், புவி இயற்பியல் பேராசிரியராக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஜெர்மனி யில் ‘ஒட்டுமொத்த நிலப்பரப்பு’ என்று பொருள்படும் பாங்கியா (Pangaea) என்ற சொல்லை, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மகா கண்டத்தை (Super Continent) விவரிக்கப் பயன்படுத்தினார்.

கண்டப் பெயர்ச்சி, மகா கண்டம் குறித்த கோட்பாடுகளை வரையறுப்பதிலேயே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார்.

வாழ்நாளின் இறுதிக்காலம் வரை ஏறக்குறைய இவரது அனைத்து கோட்பாடுகளும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டே வந்தன. 1960-களில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்தான் உரிய அங்கீகாரம் பெற்றன. இவரது ஆய்வு முடிவுகளை அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டது. இவரும் புகழ்பெறத் தொடங்கினார்.

கிரீன்லாந்தில் 1930-ல் ஆய்வு நிலையம் அமைப்பதற்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் இவரும் இடம்பெற்றார். அங்கிருந்து திரும்பி வந்தபோது, இவர் மாயமானதாகவும், 50-வது வயதில் அங்கேயே மரணமடைந்ததாகவும் நம்பப்படுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1

1922 - 1299இலிருந்து ஆறு நூற்றாண்டுகளுக்கும் அதிமாக ஆதிக்கம் செலுத்திய ஒட்டோமான் பேரரசு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, கடைசி சுல்தானான, ஆறாம் மெஹ்மெத், நவம்பர் 17 அன்று ஒட்டோமான் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளைவிட்டு வெளியேறினார். அனடோலியா என்றும், ஆசியா மைனர் என்றும் அழைக்கப்பட்ட, தற்போதைய துருக்கி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இணைந்ததன் வடமேற்குப் பகுதியில், 1299இல், துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே (ஒட்டோமான்) என்ற சுல்தானால் இந்த அரசு உருவாக்கப்பட்டது. 1453இல் ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் முகம்மத், கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றி, இதனைப் பேரரசு ஆக்கினார். இப்பேரரசு உச்சத்திலிருந்த 15, 16 நூற்றாண்டுகளில், ஐரோப்பியக் கண்டத்தின் மிகக் கணிசமான பகுதிகளுடன், ஆசியா, ஆப்ரிக்கா என்று மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. தனது வரலாறு முழுவதும் விரிவாக்கத்தையும், பின்னர் சுருக்கத்தையும் சந்தித்துவந்ததுடன், ஏராளமான படுகொலைகளுக்கும் காரணமாக இருந்தது ஒட்டோமான் பேரரசு. 1876ல் பல்கேரிய எழுச்சியை ஒடுக்கிய, பாசி பசூக் என்னும் முறைப்படுத்தப்படாத ஒட்டோமான் படைகள், சுமார் ஒரு லட்சம் பேரைக் கொலை செய்தன. 1894-96ல் நடைபெற்ற ஹமீதியப் படுகொலைகளில் சுமார் 3 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். 1915ல் ஆர்மீனியாவுக்குள் ரஷ்யப் படைகள் நுழைய ஒத்துழைப்பு அளித்ததால், சுமார் 23 லட்சம் ஆர்மீனியர்களை ஒட்டோமான் பேரரசு கொலை செய்தது. ஒட்டோமான் தற்கால துருக்கியாக மாறியபின், இதை இனப்படுகொலை என்று அழைப்பதை ஏற்காவிட்டாலும், சுமார் 20 நாடுகள் அவ்வாறே குறிப்பிடுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை என்று போப் ஃபிரான்சிஸ் இதைக் குறிப்பிட்டார். ஒட்டோமான் பேரரசின் ஆட்சியில், 1821-1922 காலத்தில், பால்கன் பகுதியில் மட்டும் பல பத்து லட்சம் முஸ்லிம்கள் பலியானதாக அமெரிக்க வரலாற்றாளர் ஜஸ்டின் மெக்-கார்த்தி குறிப்பிடுகிறார். 1908இல் துவங்கிய இளம் துருக்கியர் புரட்சி, ஒட்டோமான் பேரரசின் கலைப்புக்கு இட்டுச் சென்றது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1

1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்ட நாள்: நவம்பர் 1

கருநாடகம் (கர்நாடகா) (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கருநாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கருநாடக மாநிலமானது மேற்கில் அரபுக் கடல், வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மராட்டிய மாநிலத்தையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.

கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.

பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1
1848 - ரயில் நிலையங்களில் புத்தகக்கடைகள் உருவாகக் காரணமான டபிள்யூ.எச்.ஸ்மித் நிறுவனம், முதல் கடையை லண்டனின் யூஸ்ட்டன் ரயில் நிலையத்தில் தொடங்கியது. இன்றைய நூல்களின் தனிப்பட்ட அடையாளமாகக் குறிப்பிடும் ஐஎஸ்பிஎன்(இண்ட்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் நம்பர்) உருவாவதற்கும் இந்த நிறுவனமே காரணமாக அமைந்தது. இந்நிறுவனத்தைத் தொடங்கிய வில்லியம் ஹென்றி ஸ்மித் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்புதான், அவர் தந்தை ஹென்றி வால்ட்டன் ஸ்மித், லண்டனில் ஒரு செய்தித்தாள் விற்பனையகத்தைத் தொடங்கியிருந்தார். தந்தையின் மறைவுக்குப்பின் அதே தொழிலைத் தொடர்ந்த ஸ்மித், வளர்ந்துகொண்டிருந்த ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி, பல நகரங்களுக்கும் செய்தித்தாள்களை அனுப்பத் தொடங்கினார். (அக்காலத்திய செய்தித்தாள்கள் வெளியாகிற ஊரில் மட்டுமே கிடைப்பவையாக இருந்தன!) தொடர்வண்டியின் பயன்பாடு அதிகரித்த நிலையில், வயதாலும், (ரயில் விபத்துகளால்!) ஊனமுற்றதாலும் ரயில்வே பணியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டவர்கள், பழைய நூல்களை ரயில் பயணிகளிடம் விற்பதைக் கண்டார் ஸ்மித். (அக்காலத்தில் ஓய்வூதியமெல்லாம் இல்லை!) அக்காலத்திய வாகனங்களான குதிரை வண்டிகளைவிட, தொடர்வண்டியில் படிப்பது சிரமமின்றி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மித், அன்றைய நாளிதழ்கள், புதிய நூல்கள் ஆகியவற்றை பயணிகளுக்கு விற்பதற்காக இந்தக் கடையைத் தொடங்கினார். அடுத்த பத்தாண்டுகளில், இங்கிலாந்தின் எல்லா பெரிய ரயில் நிலையங்களிலும் ஸ்மித்தின் கடைகள் இருந்தன. இவற்றின்மூலம் புகழ்பெற்ற ஸ்மித் 1868இல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதுடன், இங்கிலாந்தின் அமைச்சராகவும் ஆனார். விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்று எல்லா பயணிக்கும் இடங்களிலும் டபிள்யூ.எச்.ஸ்மித் கடைகள் திறக்கப்பட்டு, மிகப்பெரிய வளர்ச்சியேற்பட்டபின், ஒரே மாதிரியான தலைப்புகளால் குழப்பங்கள் உருவாயின. 1965இல் இந்நிறுவனம் வேண்டியதால், அயர்லாந்திலுள்ள ட்ரினிட்டி கல்லூரியின் புள்ளியியல் துறைப் பேராசிரியர் கார்டான் ஃபாஸ்ட்டர், எஸ்பிஎன்(ஸ்டேண்டர்ட் புக் நம்பர்) என்ற ஒன்பது இலக்கக் குறியீட்டை உருவாக்கினார். இது இங்கிலாந்தில் மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதைப் பின்பற்றி, உலகம் முழுவதற்குமான 10 இலக்க ஐஎஸ்பிஎன் குறியீட்டை 1970இல் ஐஎஸ்ஓ நிறுவனம் உருவாக்கியது. இவ்வளவும் இருந்தாலும் உலகின் மிகப்பெரிய நூல் விற்பனை நிலையம் இதுவல்ல! உலகின் மிகப்பெரிய நூல் விற்பனை நிலையமாக இருந்த பார்ன்ஸ் அண்ட் நோபிள்-கூட இன்று மூன்றாமிடத்திற்குச் சென்றுவிட, முதலிடத்தில் அமேசானும், இரண்டாமிடத்தில் (இந்தியாவின்) ஃப்ளிப்கார்ட்டும் உள்ளன. பதினோராமிடத்தில் டபிள்யூ.எச்.ஸ்மித் உள்ளது!

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று- நவம்பர் 1

01.11.1956: ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட தினம் இன்று!

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவாக 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி (மொழிவாரி மாநிலங்களை பிரிக்கும் சட்டம்) தெலுங்கு பேசும் முன்னாள் ஐதராபாத் சமஸ்தானம், சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலேயே மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. ஆந்திராவின் வடகிழக்கில் ஒரிசாவும் மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கர்நாடகாவுக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் இந்தியாவில் சிறந்து விளங்குகிறது.

தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் பகுதிகள் ஐதராபாத் சமஸ்தானத்தின் பகுதியாகவே இருந்தது, அதேபோல இராயலசீமா, கடற்கரை ஆந்திரா போன்றவை சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் -1.

சேலம் தினம் ( ஆங்கிலேயர்களால் சேலம் நகரம் உருவாக்கபட்ட நாள்)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹#சேலம்_தினம் (நவம்பர் 1)

1866 ஆம் ஆண்டு சேலம் நகரம் உருவாக்கப்பட்டது. இன்று ( 1.11.2019 ) சேலம் நகரம் உருவாக்கப்பட்டு 154 ஆண்டுகள் ஆகிறது . அதை ஒட்டி #சேலம்_தினம் கடைபிடிக்கபடுகிறது .

சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் பின் மைசூர் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. (அதாவது இபோது உள்ள கர்நாடகம்) போரில் தோற்ற திப்புசுல்தானிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சேலம் மாவட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அதன் பின்னரான சேலத்தின் வளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ..

இன்றளவும் ஆங்கிலேயர்களின் பெயரிலேயே உள்ள சேலம் பகுதிகளின் வரலாறு இதோ...

➨ 1853 முதல் 1862 வரை சேலம் கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என பெயரிடப் பட்டது.

➨ 1870 முதல் 1881 வரை கலெக்டராக இருந்த C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என பெயரிடப் பட்டது.

➨ சேலத்தின் மொத்த வியாபார பகுதி இட நெருக்கடியான இடத்தில் செயல் பட்டு வந்தது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அதற்க்கு அவர் பெயரே லீ பஜார் என சூட்டப்பட்டது.

➨ 1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டது.

➨ காய்கறி , பால் வியாபாரம் செய்யும் மக்களுக்காக அப்போது கலெக்டராக இருந்த பால் (PAUL ) ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அவரின் பெயரிலேயே இன்றும் பால் மார்கெட் என்றே அழைக்கப் படுகிறது.

➨ இன்றைய கருவாட்டுப் பாலம் பகுதியில் வசித்துவந்த கீழ்தட்டு மக்களின் குடிசைகள் வெள்ளம் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்பட்டன. அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான்சன் (JOHNSON) என்பவர் அந்த மக்களுக்காக ஒரு பேட்டையை (குடியிருப்பு ) உருவாக்கினார் . அது இன்றும் அவர் பெயரால் ஜான்சன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

➨ தமிழகத்தின் பழமையான சோடா கம்பெனி சேலத்தில் ஆங்கிலேய வியாபாரி வின்சென்ட் (VINCENT) என்பவர் உருவாக்கிய வின்சென்ட் சோடா கம்பெனி . பின் இந்தியர் வசம் வந்தது. இன்றும் அந்த கம்பெனி இருந்த பகுதி வின்சென்ட் என்றே அழைக்கிறோம். அதே நேரம் வின்சென்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் பெயர் என்றும் சொல்லப் படுகிறது.

இவை மற்றும் அன்றி இன்று உள்ள லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ், கன் பயரிங் ஸ்ட்ரீட் (குண்டு போடும் தெரு) போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வைத்தவை .

சேலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரிகள் பலர் ஓய்வுக்கு பிறகும் சேலத்திலேயே வாழ்ந்து மறைந்தனர். அவர்களின் கல்லறைகள் இன்றும் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே மாட்டு ஆஸ்பத்ரி அருகிலும், ஏற்காட்டிலும் உள்ளன.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 08:16


வரலாற்றில் இன்று நவம்பர் 1

2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்ட நாள் நவம்பர் 1

பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதல்முதல் குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாய் இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் யுத்தம் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-உரு, அதாவது ஹலெகன்னடாவில் (பழைய கன்னடம்) "காவலர்களின் நகரம்" என்று அழைக்கப்பட்டது.[5] தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:[6]

கிபி 890 காலத்தியதாக இருக்கும் ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 வருடங்களுக்கும் பழமையானது என்று காண்பிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பெகுரில் பார்வதி நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது...ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர்.நரசிம்மச்சார் தனது கர்நாடிகா கல்லெழுத்துவியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவு கூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழை கிழவியை அவர் சந்தித்தார். அந்த கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பென்ட-கால்-உரு" (கன்னடம்: ಬೆಂದಕಾಳೂರು) (வார்த்தை அர்த்தத்தில், "அவித்த பீன்ஸ்களின் நகரம்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.[7][8]

11, டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ.ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது.[9] 27, செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது.[10] கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

01 Nov, 00:56




🤔    *நாளும் ஒரு சிந்தனை*

உண்மையான உறவுகள் கிடைப்பது
மிக மிகக் கடினம்!
அற்ப காரணங்களுக்காக
அதை இழந்து விடாதீர்கள்!!

🏚️  *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     தேனை வெந்நீருடன் கலந்து பருகி வந்தால் உடல் மெலிந்து உறுதியடையும்.

📰   *நாளும் ஒரு செய்தி*

     இந்தியாவின் நந்தவனம் என்றழைக்கப்படுவது *'காஷ்மீர்'* ஆகும்.

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     உப்பு ஜாடியில் எலுமிச்சம் பழத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     அன்பு ஒன்றே அழகானது, ஆழமானது, மாறாதது.

          - *அலெக்சாண்டர்*

📆  *இன்று நவம்பர் 1-*
  
   ▪️ *உலக வேக நாள்.*

   ▪️ *1973-இல் மைசூர் மாநிலம் "கர்நாடகா" என பெயர் மாற்றப்பட்டது.*

         💐 *நினைவு நாள்* 💐

1675- *குரு தேக் பகதூர்* (9-ஆவது சீக்கிய குரு)


( *பகிர்வு)*

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 15:07


*இன்றைய புதிர்*

இந்த விளையாட்டில், கீழே 9 எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 எழுத்துக்களில் இருந்து, குறைந்தது 5 வார்த்தைகள் வரை கண்டுபிடிக்க வேண்டும்.

*ம ரு தி பு ழா னை து வி கு*

*நேற்றைய புதிரின் விடை*

இசைக்கருவி

தீர்த்தம்

சொல் புதிர்

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 14:52


*இனிய மாலை வணக்கம்🙏*
---------------------------------------------
25.10.2024 *இன்றைய பொது அறிவு* *தெரிந்து கொள்வோம்*
---------------------------------------------
தகவல் உதவி: *அறிவு பரவல் குழு*
_________

1) பாதரசம் இரும்பு பாத்திரத்தில் சேமிக்கப்படுகிறது.

2) முட்டை உணவில் வெள்ளி கரண்டி பயன் படுத்தக்கூடாது.

3) அயர்ன் பைரைட்ஸ் முட்டாள்களின் தங்கம் என அறியப்படுகிறது.

4) துத்தநாககுளோரைடு மரச்சாமான்களில் கரையான்களை தடுக்க பூசுவதற்கு பயன் படுத்தப்படுகிறது.

********
நேர்மையுடன் செயல்படுவோம்👍🏽
பிரியமுடன் உங்கள் மதி❤️✍🏾👍🏽
********

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 13:43


*பொது தகவல்*

இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே 15 நாட்கள் பயணிக்கும் ரயில் உண்டு.

ஆனால் அது பயணிக்கும் போது சுமார் 500 பேரை தொழில் செய்து இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்கிறது.

மும்பையைச் சேர்ந்த ஜக்ரிதி சேவா சன்ஸ்தான் என்ற NGO நடத்தும் இந்த ரயில் 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் பயணம் செய்து வருகிறது,

இதில் 23 நாடுகளைச் சேர்ந்த 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த ரயிலின் பயணிகளில் பெரும்பாலானோர் இளம் தொழில் முனைவோர்கள்.

பயணத்தின் ஒரே நோக்கம் அதில் ஈடுபட்டுள்ள இளம் தொழில் முனைவோரை இணைத்து, நெட்வொர்க் மற்றும் வழிகாட்ட வேண்டும்.

15 நாள் பயணத்தில், விவசாயம், கல்வி, ஆற்றல், ஆரோக்கியம், உற்பத்தி, நீர் மற்றும் தூய்மை, கலை இலக்கியம், கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் 100 குருக்கள் இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் தீர்வுகளையும் பரிந்துரைக்கிறார்கள்.

மொத்த 8000 கி.மீ பயணத்தின் போது, இந்தியாவில் 10 முதல் 12 நகரங்களுக்கு செல்கிறது,

500 பயணிகள் ரயிலில் ஏறுகிறார்கள். இந்த ஆண்டு நவம்பர் 16-ல் தொடங்கும் ஜாக்ருதி யாத்ராவின் பயணம் மும்பையில் இருந்து தொடங்கி,

ஹூப்ளி, பெங்களூரு, மதுரை, சென்னை, விசாகப்பட்டினம், டெல்லி உள்ளிட்ட நகரங்கள் வழியாக கடந்து, டிசம்பர் 1-ல் அகமதாபாத்தில் முடிகிறது.

உலகின் மிக சிறப்பான மற்றும் நீண்ட பயணங்களில் இதுவும் ஒன்று.

பகிர்வு

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 11:10


*🌎📚TODAY'S G.K.*

*Knowledge Spread 🌎📚*


*🤔 Do you know?*

1. The world's smallest poisonous frog is less than a centimeter long.

2. The ancient Greeks have already produced more than 80 types of bread in 2500 B.C.

3. A duck has more neck bones than a giraffe.

4. In Fiji, a tiny heart shaped island is found.

5. Cheese is the most stolen food in the world.

6. The lemon fragrance is refreshing and energetic.

7. A chameleon's tongue is twice the length of its body.

8. Two bananas provide sufficient power to work for 90 minutes for the average person.

9. The First Indian to reach Antarctica was Lt. Ram Charan.

10. William Gilbert drew up the first picture of the moon.

*பகிர்வு அறிவு பரவல்*


*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. உலகின் மிகச் சிறிய விஷ தவளை ஒரு சென்டிமீட்டர் நீளத்திற்கு குறைவாக இருக்கும்.

2. பழங்கால கிரேக்கர்கள் ஏற்கனவே 8000 த்திற்கு மேற்பட்ட வகையான ரொட்டிகளை 2500 பி.சியில் உற்பத்தி செய்தனர்.

3. ஒட்டகத்தை விட வாத்துக்கு கழுத்து எலும்புகள் அதிகம்.

4. பிஜியில், ஒரு சிறிய இதய வடிவ தீவு உள்ளது.

5. உலகிலேயே மிகவும் திருடப்பட்ட உணவு பாலாடைக்கட்டியாகும்.

6. எலுமிச்சையின் நறுமணம் புத்துணர்ச்சியும், ஆற்றலையும் தரும்.

7. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

8. இரண்டு வாழைப்பழங்கள் ஒரு சராசரி மனிதன் 90 நிமிடங்கள் உழைப்பதற்கு போதுமான சக்தியை தருகின்றது.

9. அண்டார்டிகாவை அடைந்த முதல் இந்தியர் லெப். ராம் சரண்.

10. நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 11:10


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍️*


*DESULTORY*

*(சோம்பேறியான, தகவலற்ற, உணர்வற்ற, உற்சாகமற்ற, மேலோட்டமான)*

meaning..... not having a plan or purpose.....


1. The students were confused by the teacher’s *desultory* lecture which seemed to have no real focus.


2. The couple’s divorce came as no surprise because everyone knew their marriage was only a *desultory* arrangement.

*However the meaning may vary depending on the context in which the word is used.*

*Happy learning.*
*English vocabulary.*

🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 11:10


*⛳️The Hindu Editorial VOCAB*

*Knowledge Spread ✍️📚*


*1. Forgery* (noun)
Meaning: the action of forging or producing a copy of a document, signature, banknote, or work of art. (जालसाजी)
Synonyms: counterfeiting, fraudulent copying, fraudulent imitation
Antonyms: original
Sentence: He spent 5 years in prison for forgery.

*2. Malfeasance* (noun)
Meaning: wrongdoing, especially by a public official. (दुराचार)
Synonyms: misdoing, wrongdoing, crime
Sentence: In almost every section of his speech, malfeasance or illegal practices were mentioned.

*3. Discretionary* (adj.)
Meaning: available for use at the discretion of the user. (वैकल्पिक)
Synonyms: optional, non-compulsory, voluntary
Antonyms: compulsory, mandatory, nonelective
Sentence: The company used to give discretionary bonus payments.

*4. Relegate* (verb)
Meaning: consign or dismiss to an inferior rank or position. (बाहर निकाल देना)
Synonyms: downgrade, lower in rank, put down
Antonyms: ascent, rise, upswing
Sentence: They aim to prevent women from being relegated to a secondary role.

*5. Turncoat* (noun)
Meaning: a person who deserts one party or cause in order to join an opposing one. (विश्वासघाती)
Synonyms: traitor, apostate, backstabber
Sentence: He was publicly criticized as a turncoat and a traitor.

*6. Adherent* (noun)
Meaning: someone who supports a particular party, person, or set of ideas. (समर्थक)
Synonyms: supporter, upholder, votary
Antonyms: coryphaeus, leader
Sentence: She has long been an adherent of the Communist Party.

*7. Glimmer* (verb)
Meaning: shine faintly with a wavering light. (जगमगाना)
Synonyms: gleam, shine, glint
Sentence: A glimmer of amusement showed in her eyes.

*8. Anachronistic* (adj.)
Meaning: belonging to a period other than that being portrayed. (कालभ्रमित)
Synonyms: anachronous, antiquated, moldy
Antonyms: fresh, new, modern
Sentence: His painting style was seen as outdated and anachronistic.

*9. Remittance* (noun)
Meaning: a sum of money sent, especially by mail, in payment for goods or services or as a gift. (भुगतान)
Synonyms: payment, settlement, money
Antonyms: nonpayment
Sentence: Your last month’s salary will be paid by remittance.

*10. Gesticulate* (verb)
Meaning: use gestures, especially dramatic ones, instead of speaking or to emphasize one’s words. (इशारा करना)
Synonyms: signal, gesture, pantomime
Sentence: He tried to gesticulate a message.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 11:09


*🌎📚THIS DAY THAT YEAR *

1. Windows XP was released On 2001, October 25.

2. On 1760 october 25th George III became King of Great Britain.

3. Indian poet, Sahir Ludhianvi, surnamed as Abdul hayee, died on October 25, 1980.

4. Pablo Picasso, the greatest painter of the 20th century, was born on October 25, 1881 in Malaga, Spain.

5. Evariste Galois, who made a great achievement in mathematics at the age of 19, was born on October 25, 1811 in France.

1. 2001ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

2. 1760ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி மூன்றாம் ஜார்ஜ், பிரிட்டனுக்கு மன்னராக முடிசூட்டப்பட்டார்.

3.1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அப்துல் ஹயீ என்ற புனைபெயர் கொண்ட இந்திய கவிஞர் ஷகிர் லுதியன்வி காலமானார்.

4. 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.

5. தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் 1811ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

தகவல் அறியும் உரிமை சட்ட தினம் அக்டோபர் 25

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் பார்லிமென்ட்டில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறலாம்:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. பார்லிமென்ட், சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

நடவடிக்கை:

குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று.அக்டோபர் 25

குறுகிய காலமே வாழ்ந்தாலும், கணிதத்தில் மாபெரும் சாதனைகளைப் படைத்த பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளர் எவரிஸ்ட் காலோயிஸ் (Evariste Galois) பிறந்த தினம் இன்று.

# பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே உள்ள போர்க்லா ரெய்ன் என்ற இடத்தில் (1811) பிறந்தார். பெற்றோர் இலக்கியம், மதம், தத்துவத் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். தந்தை அரசியல்வாதி, அப்பகுதி மேயர். காலோயிஸ் 12 வயது வரை தாயிடம் பண்டைய இலக்கியங்களைக் கற்றான்.

# பாரீஸ் நகரப் பள்ளியில் பயின்றான். இந்தப் பிறவி மேதையின் ஆர்வம் கணிதத்தின் மேல் குவிந்தது. கணித மேதை லுஜாண்டரின் வடிவியல் புத்தகம், லாக்ரான்ஸின் இயற்கணித புத்தகம் ஆகியவற்றை நாவல்போல அநாயாசமாகப் படித்து முடித்தான்.

# 15 வயதுகூட நிரம்பாத சிறுவன், அடுத்தடுத்த பல கணித மேதைகளின் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தான். சிக்கலான, பெரிய கணக்குகளைக்கூட மனக்கணக்காகப் போட்டான். தன் வகுப்பு பாடங்கள் அவனுக்கு துரும்பாகப் பட்டன.

# 17ஆவது வயதில் ரிட்டர்ட் என்ற கணித ஆசிரியர் இவரது கணிதத் திறமையை உணர்ந்து ஊக்கப்படுத்தினார். தனிப்பட்ட முறையில் கணித சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தொடரும் பின்னங்கள் பற்றிய தனது முதல் ஆய்வுக் கட்டுரையை 1829இல் வெளியிட்டார்.

எகோல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர தேர்வு எழுதினார். இவரது அபாரத் திறனை கணிக்கும் அளவுக்கு தேர்வாளர்களுக்கு திறன் இல்லாததால், வெற்றி வாய்ப்பை இழந்தார்.

# அரசியல் அவதூறு புகார் காரணமாக தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதனால் விரக்தியடைந்த போதிலும், கணித ஆராய்ச்சிகளை மட்டும் இவர் நிறுத்தவே இல்லை.

# தனது கண்டுபிடிப்புகளை பிரெஞ்ச் கணித அகாடமிக்கு அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டுரைகள் பார்க்கப்படவில்லை. இயற்கணிதச் சமன்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் தொலைந்துபோயின. இதனால் சுணக்கம் அடைந்தவர், கணித ஆய்வுகளை நிறுத்திவிட்டு அரசியலில் இறங்கினார்.

# அரசியலில் விரோதங்களை சம்பாதித்ததால், மீண்டும் கணிதத்தின் பக்கம் நாட்டம் செலுத்தினார். பல்லுறுப்பு சமன்பாட்டை விடுவிக்க துல்லியமான இயற்கணித தீர்வுகளைக் கண்டறிந்தார். இதற்கிடையே அரசியல் மோதல் காரணமாக 2 முறை கைது செய்யப்பட்டார்.

# 1832ஆம் ஆண்டில் ஒருநாள் இரவு மணிக்கணக்காக அமர்ந்து தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தொகுத்து 60 பக்க கட்டுரையாக எழுதினார். அது பத்திரமாக தனது நண்பரிடம் போய்ச் சேர்வதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். ‘காலோயிஸ் கணித உயில்’ என அழைக்கப்படும் இந்த குறிப்புகளை எழுதிய அடுத்த நாள் காலை, முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு 21 வயது.

# காலோயிஸின் கண்டுபிடிப்புகள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்பட்டு கணித உலகில் பரபரப்பை ஏற்படுத்தின. 20ஆம் நூற்றாண்டில் காலோயிஸ் சமன்பாடு, காலோயிஸ் குழு சமன்பாடு, நுண் இயற்கணிதம், காலோயிஸ் தொடர்புகள், காலோயிஸ் கோட்பாடு எனக் குறிப்பிடப்பட்ட பல கணிதத் தீர்வுகளுக்கு இவரது ஆய்வுகள் அடித்தளம்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று.அக்டோபர் 25

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பிறந்த தினம் இன்று(1955).

சுப்ரபாரதிமணியன் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல தளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடாத்திவருபவர். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.

இவர் தனது 93-வது வயதில் காலமானார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குவர்னிகா: இது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இது வரையப்பட்டது. கொலாச் சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்திருந்தார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

சடாகோ சசாகி இறந்த தினம்

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான்.

ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி. பதறிப்போன அவளது அம்மா, ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால், அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.

அவளுக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே அவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. அவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி. அவளைக் காண வந்த அவளது தோழிகளில் ஒருத்தியான சிசுக்கோ ஹமாமாட்டோ, தங்க நிறத் தாள் ஒன்றை மடித்து, (ஜப்பானின் பண்டைய கலையான ஓரிகாமி முறையில்) கொக்கு ஒன்றை உருவாக்கினாள்.

1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. அதன்படி, நோய் பாதிப்புக்கு இடையிலும், 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கும் வேலையில் இறங்கினாள் சசாகி. எனினும், அவளால் 644 கொக்குகளைத்தான் உருவாக்க முடிந்தது. 1955 அக்டோபர் 25-ல் ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி. அதன்பின்னர், அவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன. அவளது நினைவாக, 1958-ல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவை:

இதுதான் எங்கள் கூப்பாடு,

இதுதான் எங்கள் பிரார்த்தனை,

உலகில் அமைதி வேண்டும்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

1971 - ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராகச் சீனா அனுமதிக்கப்பட்ட நாள்

1949இலேயே மக்கள் சீனக் குடியரசு உருவாகிவிட்டாலும், சீனாவிலிருந்து தப்போயோடிய சியாங் கை-ஷேக், தைவானிலிருந்துகொண்டு, அதனை சீனக் குடியரசு என்று அழைத்துக்கொண்டார். ஐநாவில் இணைவதற்கான மக்கள் சீனத்தின் முயற்சிகள், ஒற்றைச் சீனக் கொள்கையின்படி தோற்கடிக்கப்பட்டன. ஒற்றைச் சீனக் கொள்கை என்பது சீனா என்ற பெயரில் இறையாண்மைகொண்ட ஒரேயொரு நாடுதான் இருக்க முடியும் என்துதான் என்றாலும்கூட, பல்வேறு நாடுகளாலும் மாறுபட்ட விதங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் சீனக்குடியரசு, சீனக்குடியரசு(தைவான்) ஆகிய இரண்டுமே ஏற்றுக்கொண்டுள்ள ஒற்றைச் சீனக் கருத்தாக்கம் என்பது, தைவானும் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சீனா என்பதாகும். தைவானிலிருந்துகொண்டு, சியாங் கை-ஷேக் சீனக்குடியரசு என்று அழைத்துக்கொண்டதாலேயே, 'சீனாவின் முதன்மை நிலப்பரப்பு(மெயின்லேண்ட் சைனா)' என்ற சொற்றொடர் உருவாகி, 1990களுக்குப்பின், மக்கள்சீனத்தைக் குறிப்பதாக நிலைபெற்றுவிட்டது. ஒற்றைச் சீனாவாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்டவை தைவானையும், இடதுசாரி அரசுகளைக்கொண்ட நாடுகள் மக்கள்சீனத்தையும் ஒப்புக்கொண்டன. இதனால், உலகில் மக்கள்தொகையில் முதலிடமும், பரப்பளவில் மூன்றாமிடமும் வகித்த மிகப்பெரிய நாடான சீனா, ஐநாவின் அங்கமாக ஆகமுடியவில்லை. எதிர்த்த நாடுகளில் பல 1960களில் மக்கள்சீனத்தை ஆதரிக்கத் தொடங்கினாலும், ஒவ்வொரு முறையும் எதிர்ப்பினைத் திரட்டி முறியடித்தது அமெரிக்கா. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் சில ஆகியவை ஆதரவாக மாறி (பாதிக்கும் அதிமான)பெரும்பான்மை உருவானபோதும், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு தேவை என்று, சீனக்குடியரசுக்கு(தைவான்) பதிலாக மக்கள்சீனத்தை இணைக்கும் அல்பேனியாவின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 1971 ஃபிப்ரவரியில், ஐநா பாதுகாப்பு அவையில் சீனக்குடியரசு(தைவான்) இருப்பது முறையற்றது என்று சோமாலியா கண்டித்தது. 1971 அக்டோபர் 25இல் அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைத்ததுடன், ஐநாவில் சட்டவிரோதமாக அங்கம் வகிக்கும் சியாங் கை-ஷேக்கின் பிரதிநிதிகள் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்காவும் ஆதரித்தது. ஐநாவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின், வீட்டோ உரிமையுடன் கூடிய பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடம் மக்கள்சீனத்திற்கு மாற்றப்பட, சீனக்குடியரசு என்று அழைத்துக்கொள்ளும் தைவான், இன்றுவரை ஐநாவில் உறுப்பினராகவே இல்லை. ஒலிம்ப்பிக் உள்ளிட்ட பன்னாட்டு நிகழ்வுகளிலும், அமைப்புகளிலும் வேறுபடுத்திக்காட்ட, சைனீஸ் தாய்ப்பேய் என்று தைவான் குறிப்பிடப்படுகிறது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

1944 - இரண்டாம் உலகப் போரின்போது, டேங் என்னும் அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், தான் ஏவிய டார்ப்பீடோ-வாலேயே தாக்கப்பட்டு மூழ்கிய நாள்

1943 அக்டோபர் 15 அன்றுதான் கடற்படைப் பணிக்கு வந்த இந்தக் கப்பல், குறுகிய காலத்திலேயே 33 எதிரிக் கப்பல்களை மூழ்கடித்தது. இதற்காக, இதன் தளபதி ரிச்சர்ட் ஓ-கேன்-னுக்கு, அமெரிக்கப் படைகளின் மிக உயரிய விருதான 'மெடல் ஆஃப் ஆனர்' வழங்கப்பட்டது. 1944 அக்டோபர் 25 அன்று அதிகாலை 2.30 மணியளில், எதிரிகளை நோக்கி இந்த நீர்மூழ்கி ஏவிய டார்ப்பீடோ ஒன்று திரும்பி வந்து, இதனைத் தாக்கியது. இதில் 78 வீரர்கள் பலியாயினர். மாம்சென் நுரையீரல் என்னும், நீருக்கடியில் சுவாசிக்க உதவும் கருவியைக் கொண்டு 13 வீரர்கள் தப்பினர். 1962 வரை பயன்படுத்தப்பட்டுவந்த, சுண்ணாம்பு நீரைக்கொண்டு, சுவாசிக்கும் காற்றிலிருக்கும் கரியமில வாயுவை நீக்கி மறுசுழற்சி செய்யக்கூடியதான இக்கருவியைப் பயன்படுத்திய ஒரே நிகழ்வு இதுதான். 8 மணி நேரத்துக்கும் அதிமாக நீந்தியபின் 4 பேர் காப்பற்றப்பட்டனர். தளபதி ஓ-கேன் உட்பட மீதமிருந்த 9 பேர், ஜப்பானியக் கப்பல் ஒன்றால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஏற்கெனவே டேங் நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களிலிருந்து தப்பிய பலரும், அக்கப்பலில் இருந்ததால், 9 பேரும் மோசமாகத் தாக்கப்பட்டு, போர்க் கைதிகளாக்கப்பட்டனர். இந்த நீர்மூழ்கி மட்டுமின்றி, அமெரிக்கக் கடற்படையின் துல்லிபீ, ஜெர்மென் கடற்படையின் யு-869, யு-377, யு-972 ஆகிய நீர்மூழ்கிகளும், இங்கிலாந்துக் கடற்படையின் ட்ரினிடாட் என்ற கப்பலும் தாங்கள் ஏவிய டார்ப்பீடோக்களாலேயே தாக்கப்பட்டு மூழ்கிப் போயின. இலக்கைத் தொடருவதற்கு அக்காலத்திய டார்ப்பீடோக்களில் ஒலியியல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கிலிருந்து வரும் ஒலி அல்லது, டார்ப்பீடோ எழுப்பும் ஒலி இலக்கில் பட்டு எதிரொலிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கிய இவை, இலக்கைத் தவறவிடும்போது, தங்களை ஏவிய கலத்தின் ஒலியால் திசைதிரும்பி தாக்கிவிட்டதாக அமெரிக்கா விளக்கமளித்தது.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவரும் மனநல சிகிச்சைகளில் மனிதாபிமான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்துக்கு வழிகாட்டியவருமான பிலிப் பீனல் (Philippe Pinel) இறந்த தினம் இன்று (1745).

பிலிப் பினெல் ( பிரெஞ்சு: [pinɛl] ; 20 ஏப்ரல் 1745 - 25 அக்டோபர் 1826) ஒரு பிரெஞ்சு மருத்துவர், மனநல மருத்துவத்தின் முன்னோடி மற்றும் தற்செயலாக ஒரு விலங்கியல் நிபுணர். இன்று தார்மீக சிகிச்சை என்று குறிப்பிடப்படும் மனநோயாளிகளின் காவலில் மற்றும் பராமரிப்பில் மிகவும் மனிதாபிமான உளவியல் அணுகுமுறையை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் .

l பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் (1745) பிறந்தார். தந்தை போலவே இவரும் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். மான்ட்பெல்லியர் மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகள் மருத்துவ மேற்படிப்பு படித்தார். 1778-ல் பாரீஸ் வந்தார்.

l சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத பீனல் சுமார் 15 ஆண்டுகாலம் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பல்வேறு வேலைகளைப் பார்த்தார். கணிதம் பயின்றார். மருத்துவக் கட்டுரைகளை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்தார்.

l மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் நோய் முற்றி தற்கொலை செய்துகொண்டது இவரை வெகுவாக பாதித்தது. மன நோய் குறித்த ஆய்வில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது.

l மனநோய் விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைபாடுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று கருதினார். பாரீஸில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது மனநோயின் இயல்புகள், சிகிச்சை குறித்த தனது கருத்துகளை முறைப்படுத்தத் தொடங்கினார்.

l பழம்பெரும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸை முன்மாதிரியாகக் கொண்டார். பிரெஞ்சு புரட்சி முடிவுக்கு வந்த பிறகு, இவரது நண்பர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். பீஸெட் மருத்துவமனையில் மருத்துவராக 1793-ல் நியமிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை 2 ஆண்டுகள் தொடர்ந்து தினமும் பலமுறை சந்தித்தார். அவர்களைப் பற்றிய குறிப்புகளை தொகுத்தார்.

l ‘மெமோர் ஆன் மேட்னஸ்’ என்ற கட்டுரையை 1794-ல் வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப் புத்தகமாக உள்ளது.

l ஹாஸ்பிக் டி லா சல்பேட்ரயர் என்ற மருத்துவமனையில் தலைமை மருத்துவராக 1795-ல் நியமிக்கப்பட்டார். இறுதி வரை அங்கு பணிபுரிந்தார். மனநோய் குறித்த ஒரு அதிகாரப்பூர்வமான வகைப்பாடு புத்தகத்தை 1798-ல் வெளியிட்டார்.

l மனநோய் என்பது தொடர்ச்சியான நோய் அல்ல. மனநோயாளிகளை குணப்படுத்த மனிதநேயம்தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். கட்டப்பட்டிருந்த சங்கிலிகளில் இருந்து மன நோயாளிகளை விடுவித்தார். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு, சிகிச்சையில் மனிதாபிமான, மனோதத்துவ அணுகுமுறையை மேம்படுத்தினார்.

l எல்லா மன நோய்களும் ஒன்றல்ல. மனச்சோர்வு, பித்து, புத்தி மாறாட்டம், பாமரத்தனம் என்று அதில் 4 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக கையாளப்பட வேண்டியவை என்று விளக்கினார். 1801-ல் எழுதிய ட்ரீட்டஸ் ஆன் இன்சானிட்டி என்ற நூலில் தனது உளவியல் ரீதியான அணுகுமுறை பற்றி விவரித்துள்ளார்.

l 19-ம் நூற்றாண்டின் பிரெஞ்ச், ஆங்கிலோ, அமெரிக்க மனநல நிபுணர்களிடம் இந்த நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘நவீன மனநல மருத்துவத்தின் தந்தை’ என போற்றப்படும் பிலிப் பீனல் 81ஆவது வயதில் (1826) காலமானார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று.அக்டோபர் 25,

புகழ்பெற்ற ஜெர்மன் நாட்டின் தத்துவ மேதையும், இருத்தலியல் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவருமான மாக்ஸ் ஸ்டிர்னர் (Max Stirner) பிறந்த தினம் இன்று.

* ஜெர்மனியின் பெய்ரூட் நகரில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் (1806). இவரது இயற்பெயர், யோஹான் காஷ்பர் ஷ்மிட். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிக் கல்வி முடித்ததும், இறையியல், மொழி இயல், வரலாறு மற்றும் தத்துவம் பயின்றார்.

* 1842இல் பல்வேறு இதழ்களில் எழுதத் தொடங்கினார். செல்லப் பெயரான ‘ஸ்டிர்னர்’ என்பதற்கு முன்பாக ‘மாக்ஸ்’ என்ற பெயரையும் சேர்த்து, புனைப்பெயராகச் சூட்டிக்கொண்டார்.

* ‘தி ஃபால்ஸ் பிரின்சிபல் ஆஃப் அவர் எஜுகேஷன்’, ‘ஆர்ட் அன்ட் ரிலிஜியன்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் இவரது சிந்தனைகளின் சிறப்பை வெளிப்படுத்தின. தனிநபர்தான் உலகின் மையம், அவரது சிந்தனை, உணர்வுகள்தான் சமூகம் மற்றும் தார்மீக மதிப்பீடுகளின் அளவீடு என்று வலியுறுத்தினார்.

* 1844இல் ‘தி இன்டிவிஜுவல் அன்ட் ஹிஸ் ஓன்’ என்ற நூலை வெளியிட்டார். இவரது தத்துவம் ஐரோப்பிய உலகின் அகநிலைவாத தத்துவத்தின் உச்சமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரசு, சமயம், சட்டம், கல்வி, பொருளாதார முறை என அனைத்து விதமான சமூக மரபுகளையும் எதிர்த்தார்.

* தனது காலகட்டத்தில் நிலவிய ஜெர்மனியின் கருத்து முதல்வாதம், பிரான்ஸின் பொருள் முதல்வாதம், பிரிட்டனின் அனுபவவாதம், சர்வதேச சோஷலிசம் என அனைத்துத் தத்துவங்களையும் எதிர்த்தார். நீலிசம், இருத்தலியல், உளவியல் பகுப்பாய்வு கோட்பாடு, பின்நவீனத்துவம், நவீன அரசின்மை anarchy - (அரசு, சமயம், நிறுவனம் உள்ளிட்ட அதிகார மையங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கோட்பாடு) ஆகியவற்றின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.

* குறிப்பாக, ‘தனிநபர்வாத அரசின்மைக் கோட்பாட்டின் தந்தை’ எனப் போற்றப்பட்டார். 1846இல் ‘தி ஈகோ அன்ட் இட்ஸ் ஓன்’ என்ற நூலை வெளியிட்டார். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலில், அனைத்து மதங்களும், சித்தாந்தங்களும் வெற்று கருத்துகளின் அடிப்படையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

* அரசாங்கம், சர்ச் அல்லது பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து சமூக நிறுவனங்களும் தனி நபரின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றார். தனது தத்துவங்களைத் தெளிவாக விளக்கும் வகையில், ‘ஸ்டிர்னர்ஸ் கிரிட்டிக்ஸ்’, ‘தி ஃபிலாசபிகலி ரியாக்ஷ்னரி’ உள்ளிட்ட கட்டுரைகளை எழுதினார்.

* 1851இல் ‘தி ஹிஸ்டரி ஆஃப் ரியாக்ஷ்ன்’ என்ற இவரது நூல் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. பொருளாதார வல்லுநர்களான ஆடம் ஸ்மித்தின் ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ மற்றும் ஜீன் பாப்டிஸ்ட்டின் ‘டிரையட் டி’எகனாமி பொலிட்டிக்’ உள்ளிட்ட நூல்களை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.

* இவரது மனைவி பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பணத்தை தன் படைப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டார். கூட்டுறவு அடிப்படையில் பால் வியாபாரம் தொடங்கினார். ஆனால், மிடுக்காக உடையணிந்து கனவான் தோற்றத்தில் காணப்பட்ட இவரை விவசாயிகளும் பால் வாங்கும் வாடிக்கையாளர்களும் அந்நிய நபராக நினைத்து ஒதுங்கினர்.

* வியாபாரம் நஷ்டமடைந்தது, இறுதியில் தாய்வழி சொத்து வந்து சேர்ந்த தால், சுமாரான வாழ்க்கை நடத்த முடிந்தது. 19ஆம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் எனப் போற்றப்பட்ட மாக்ஸ் ஸ்டிர்னர் 1856அம் ஆண்டில் 50ஆவது வயதில் காலமானார்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று - அக்டோபர் 25, 1924

இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட நாள் அக்டோபர் 25.

தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவது 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அவரது ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டார். அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்....

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25-

டாம் & ஜெரி முதலாம் கார்ட்டூன் படம் வெளியானது இன்று

- 1940 ம் ஆண்டு அக்டோபர் 25 ம் நாள் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பரா என்ற இரண்டு அமெரிக்கர்களால் உருவாக்கப் பட்டு வெளியிடப்பட்டது. வால்ட் டிஸ்னி தயாரித்த மிக்கி மவுஸ் கார்டூன் படத்துடன் போட்டியிட்டு இப்படம் கார்டூன் படத்துக்கான ஆஸ்கார் பரிசினை வென்றது. இன்றளவும் உலகம் முழுவதும் குழந்தைகளும் மற்றும் குழந்தை உள்ளம் கொண்ட பெரியவர்களும் பார்த்து சிரித்து மகிழ்வது இந்த கார்டூன் படங்களைத்தான்.

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

ஸேடி ஸ்மித் (Zadie Smith) பிறந்த நாள்

(அக்டோபர் 25 பிறப்பு: 1975)

ஸேடி ஸ்மித் என்பவர் ஒரு ஆங்கில பெண் எழுத்தாளர் ஆவார்.

இவரது 24ம் வயதில் வெளிவந்த இவரது முதல் நாவலான வைட் டீத்' (White Teeth, 2000) பரவலான வாசக கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டையும், சல்மான் ருஷ்டி போன்ற மூத்த எழுத்தாளர்களின் வரவேற்பையும் பெற்றது. அதிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள், புனைவு கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது மூன்றாம் புதினமான 'ஆன் பியூட்டி' (On Beauty, 2005) புக்கர் பரிசு இறுதிப் பட்டியலுக்கு தேர்வானது. பல கலாச்சாரங்கள் புழங்கும் தொட்டிலான லண்டன் மாநகரத்தை தொடர்ந்து தன்னுடைய புனைவுகளின் களமாக கொள்ளும் இவர், ஜமைக்காவைச் சேர்ந்த தாய்க்கும், இங்கிலாந்து தந்தைக்கும் லண்டனில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது சமீபத்திய புதினம் ஸ்விங் டைம் (Swing Time, 2006) என்பதாகும்.

#விருதுகள்

ஸேடி ஸ்மித் 2002 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி ஆப் லிட்டரிச்சரின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு பிபிசி கலாச்சார ஆராய்ச்சியாளர்களின் கருத்துக் கணிப்பில் பிரித்தானிய கலாச்சாரத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க முதல் இருபது நபர்களில் இடம் பிடித்தார். 2003, 2013 ஆண்டிகளில் கிராண்டாவின் 20 சிறந்த இளம் ஆசிரியர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்து திட்டத்தில் பணிபுரிந்தார். புனைக்கதைக்கான ஆரஞ்சு பரிசு மற்றும் 2006 ஆம் ஆண்டில் அனிஸ்பீல்ட்- வுல்வ் புக் விருதுகளை பெற்றார். டைம் பத்திரிகையில் இவரது புதினமாகிய வைட் டீத் 1923 முதல் 2005 வரையிலான சிறந்த ஆங்கில புதினங்களின் பட்டியலில் இடம்பெற்றது.

வைட் டீத் - விட்பிரட் முதல் புதின விருது, கார்டியன் முதல் புத்தக விருது, ஜேம்ஸ் டைட் கருப்பு நினைவு பரிசு, காமன்வெல்த் எழுத்தாளர்களின் முதல் புத்தக விருது ஆகியவற்றை வென்றது.
தி ஆட்டோகிராப் மேன் - ஜூவிஸ் கார்டர்லி விங்கேட் இலக்கிய பரிசு
ஒன் பியூட்டி - காமன்வெல்த் எழுத்தாளர்களின் சிறந்த புத்தக விருது (யூரேசியா பிரிவு), புனைகதைக்கான ஆரஞ்சு பரிசையும் வென்றது. மேன் புக்கர் பரிசிற்கு பட்டியலிடப்பட்டது.
ஸ்விங் டைம் - மேன் புக்கர் பரிசிற்கு இறுதி பட்டியலுக்கு தேர்வானது.
என்.டபிள்யூ - ராயல் சொசைட்டி ஆப் லிட்டரிச்சர் ஒண்டாட்சி பரிசு, புனைக்கதைக்கான பெண்கள் பரிசு
2003, 2013 - கிரண்டாவின் சிறந்த பிரித்தானிய நாவலாசிரியர்
2016 - வெல்ட் லிடெரடூர்பிரைஸ்
2017 - லாங்ஸ்டன் ஹியூஸ் பதக்கம்
2019 - முடிவிலி விருது

பொது அறிவு, புதிர்கள், விடுகதைகள்

25 Oct, 03:36


வரலாற்றில் இன்று அக்டோபர் 25

புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ பிறந்த தினம்: 1881 அக்டோபர் 25-ந்தேதி

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாப்லோ பிக்காசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார்.

பாப்லோ பிக்காசோ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20-ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக ‘கியூபிசம்’ என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உலகின் தலை சிறந்த ஓவியர்கள் ஆவார்கள். ஓவியம், சிற்பம், அச்செடுத்தல் மற்றும் செராமிக் ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள். அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் பிக்காசோ ஆவார். இவர் தனது 93-வது வயதில் காலமானார்.


1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில் ஜோச் ரூயிசு பால்சுகா - மரியா பிக்காசோ தம்பதியருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.

பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார்.

1891-ல் பிக்காசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தை அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.

பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.

நீலக் காலம் (1901-1904): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. ஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.

ரோஜா நிறக் காலப்பகுதி (1904-1906): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோஜா நிறச் (pink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.

ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909): ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.

பிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் ‘த மிஸ்டரி ஆஃப் பிக்காசோ’ ஆகும். இது 1955-ம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது.

1996-ல் சுர்வைவிங் பிக்காசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார். ‘த மான் அண்ட் ஹிஸ் வோர்க்’ என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது.
பப்லோ பிக்காசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை. அந்த 90-வது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்த எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினாராம் பிகாசோ. தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ.

1,515

subscribers

968

photos

1

videos