நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் (@ourbodyitselfadoctorebooks)の最新投稿

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் のテレグラム投稿

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
4,493 人の購読者
471 枚の写真
3 本の動画
最終更新日 05.03.2025 19:47

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் によってTelegramで共有された最新のコンテンツ

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

09 Jan, 02:28

1,856

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)

தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும், ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.

இந்தப் பதிவை Youtube இல் பார்க்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://youtu.be/CO59GARDEl4

2. தூக்கத்தின் தரம்

தூக்கத்தோட தரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் தூங்குவதுக்கு ஏற்ற மாதிரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று இப்போது பார்க்கலாம். நம் மனது எப்போதுமே நாம் பார்ப்பதை, நம்மை சுற்றி இருக்குற விஷயங்களை வைத்துதான் முதலில் யோசிக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ரொம்ப ஆரோக்கியமாக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும்போது ஒருவித பயம் தானாகவே உருவாகும். அது பயம்ன்னு கிடையாது அங்கு இருக்கிற சூழல் உங்கள் மனதை கையாள ஆரம்பிக்கும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கூடவே இருக்கும் ஒருவர் சோகமாக இருந்தாரென்றால் தானாகவே நீங்களும் சோகமாக மாறிடுவிடுவீர்கள். அப்படித்தான் நம் பெட்ரூமும், தூங்குவதற்கு ஒரு நல்ல சூழலில் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

பெட்ரூமில் ஜன்னல்

குறிப்பாக பெட்ரூமில் ஜன்னல் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்று. ஏனென்றால் வெளிக்காற்று உள்ளே வரும்போதுதான் உள்ள இருக்கும் இறுக்கம் கொஞ்சம் குறையும். முடிந்த அளவிக்கு உங்கள் பெட்ரூமை உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு பிடித்த கலரில் பெயின்ட் பண்ணுறதுல ஆரம்பித்து மனதிற்கு அமைதியை கொடுக்கின்ற வார்த்தைகளை, படங்களை அங்கு வைக்கலாம். குறிப்பாக உங்கள் மனதை தொந்தரவு செய்கிற எந்தவொரு விஷயத்தையும் உங்கள் பெட்ரூமில் வைக்காதீர்கள். எவ்வளவு மன அழுத்தத்தோடு உங்கள் வீட்டிற்கு வந்தாலும் பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் உங்கள் மனது ஓய்வாக உணரவேண்டும். அதுக்கு பெட்ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் கண்ட இடத்தில் தூக்கி போடக்கூடாது. எது எது எந்த இடத்தில் இருக்குமோ அது அது அந்த இடத்தில் வைக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மெத்தை தலையணை

இரவு நன்றாக தூங்க வேண்டுமென்றால் உங்கள் மெத்தை தலையணை எல்லாம் வசதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உடம்பிக்கு என்ன தேவையென்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னும் சில பேருக்கு தரையில் படுத்தால் தான் தூக்கமே வரும். சில பேருக்கு மெத்தை எல்லாம் மென்மையானதாக சுத்தமாக இருக்க வேண்டும். சூடாக இருக்க கூடாது. இப்படி எல்லாம் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நம் தலையணையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் ரொம்ப பெரிய தலையணையை பயன்படுத்தினால் சிலருக்கு கழுத்து வலி ஏற்படும். சிலருக்கு முதுகு வலி ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. அதனால் நம் உடலிற்கு தேவையான ஒரு படுக்கை அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சுத்தம்

அடுத்து சுத்தம். சுத்தம்கறது ஒரு முக்கியமான விஷயம். சுத்தம் அப்படிங்கிறதிலேயே வெளிச்சம் காற்றோட்டம் வெப்பநிலை இவை எல்லாமே வந்துவிடும். சிலர் வீட்டை குப்பை மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் அதிலேயே படுத்தும் பழகி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களது தூக்கத்தை ரொம்ப தொந்தரவு செய்யும். தூங்குறதால அவர்களுக்கு அது தெரியாது அவ்வளவுதான். மற்றபடி சுத்தமில்லாத இடத்தில் தூங்குகிறபோது நாம் சுத்தம் இல்லாத காற்றை சுவாசிக்கிற நிலைக்கு தள்ளப்படுவோம். என்னதான் தூங்கிட்டு இருந்தாலும் அங்க நாம் சுவாசித்து கொண்டுதானே இருப்போம். அதனால் பெட்ரூம் சுத்தமாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

இரைச்சல்

அடுத்து இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கனும். அதாவது டிவி பாத்துகிட்டே தூங்குறது பாட்டு கேட்டுட்டு தூங்குறது இதெல்லாம் சில பேருக்கு பழக்கமா இருக்கும். இனிமையான இசையை கேட்டுக்கொண்டே தூங்குவது நல்ல விஷயம் தான் ஆனால் டிவி பாத்துக்கொண்டே தூங்குவது ரொம்ப தப்பு. நீங்கள் தூங்கினாலும் வெளியில் இருந்து கேட்கிற சதம் உங்கள் மூளைய விழிப்புடனே வைத்திருக்கும். அதனால் உங்கள் மூளைக்கு போதிய ஓய்வெடுப்பதற்கான நேரம் கிடைக்காமல் போய்விடும். தேவையில்லாத சிந்தனை, கனவு இதெல்லாம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

வெப்பநிலை

அடுத்தது ரூமோட வெப்பநிலை நார்மலாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ரொம்ப குளிரா இருந்தாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கும். ரொம்ப வெப்பமா இருந்தாலும் நம்ம தூக்கத்தை பாதிக்கும்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

09 Jan, 02:25

1,433

பெட்ரூம்ல டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்கு அனுமதியே கொடுக்கக் கூடாது. அது உங்கள் தூக்கத்தை கண்டிப்பா கெடுக்கும். குறைந்தது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி அவற்றையெல்லாம் நம்மை விட்டு தள்ளி வைத்துவிட வேண்டும். மொபைல்ல முகத்திற்கு நேராக வைத்துக்கொண்டுதான் பெட்ரூமிற்கே வருவோம். அப்படியே படம் பார்த்துட்டு தூங்குவோம். ஆனால் இதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம்.

இந்தப் பதிவை Youtube இல் பார்க்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://youtu.be/CO59GARDEl4
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

04 Jan, 00:25

2,192

உதாரணத்துக்கு மருந்து சாப்பிட்டு தூங்குனா தான் அது ஒழுங்கா வேலை செய்யும். அதனால்தான் மாத்திரை சாப்பிட்டால் குறைந்தது 2 மணி நேரமாவது தூங்கணும்னு டாக்டர் சொல்றாங்க. நம்முடைய ஒட்டு மொத்த ஆயுளையும் நிர்ணயிக்கிற சக்தி தூக்கத்துக்கு இருக்கு. அடுத்து நம்ம ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம். ஏன்னா தூக்கம் என்பது நமது செயலற்ற நிலை மட்டும் கிடையாது. நம்மளோட ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமான செயல்பாடு உடைய ஒரு செயல்முறை. ரொம்ப நாளா தூங்காம இருக்க இருகிறதோட விளைவா நாள்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. குறிப்பா அறிவாற்றல் குறைபாடு மனநல கோளாறு மாதிரியான சில விஷயங்கள் கூட வர வாய்ப்பு இருக்கு. போதுமான தூக்கம் இல்லாம இருந்தா என்னெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுகிட்டா தான் நமக்கு தூக்கத்தை விட அவசியம் இன்னும் ஆழமா புரியும்.

இப்ப பல பேர் தூங்குறதே கிடையாது. அதுலயும் இப்ப வீட்டுக்கு ஒருத்தர் விடிய விடிய ஸ்மார்ட் போன பாத்துட்டு தூங்காம தான் இருக்காங்க. யாரும் சரியா தூங்குறதே இல்லை. ஒரு மனுஷனுக்கு குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குறது நம்ம எல்லாருக்குமே தெரியும். அப்படி நீங்க தூங்காதப்ப உங்க மூளையிலிருந்து இதயம் வரைக்கும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கு. சரியா தூங்கலைன்னா உங்களால புதுசா ஒரு விஷயத்தை கத்துக்கவே முடியாது. ஏன்னா கவனம் இல்லாம நம்மளால எதையுமே கத்துக்க முடியாது. ஒரு நாள் முழுக்க நீங்க தூங்கலைன்னா உங்க மூளை தூக்கத்துக்காக மட்டும் தான் போராடும் ஏங்கும். அப்படி இருக்குறப்ப நீங்க ஏதாவது செய்ய முயற்சி பண்ணாலும் அதில உங்களால முழு மனசா செயல்பட முடியாது. தூக்கத்துக்கு பின்னாடி உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல மன ரீதியான மாற்றங்களும் இருக்கு.

எல்லாருக்கும் ஒரு ஸ்லீப்பிங் பேட்டர்ன் இருக்கும் இல்லையா அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். ஏன்னா எல்லாராலையும் நைட் 9 மணிக்கு படுத்து காலைல நாலு மணிக்கு எந்திரிக்க முடியாது. சில பேருக்கு வேலை முடியறதுக்கு நைட்டு பத்து மணி ஆகும். சிலருக்கு நைட்டு தான் வேலையேஇருக்கும். உங்க வாழ்க்கையில என்ன மாதிரியான வளக்கத்தை பாலோ பண்றீங்க அப்படிங்கறதை நீங்க முதல்ல பாக்கணும். அதுவே உங்களுக்கு போதுமானதாக இருக்கா? இல்ல அந்த வழக்கத்தை இன்னும் கொஞ்சம் மாத்தணுமான்னு முதல்ல உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. அது சரியா இல்லைன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா அத மாத்த ட்ரை பண்ணனும்.

இன்னும் தூக்கத்தை பத்தி நிறைய விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.

தொடரும்...

நன்றி - மீனா கணேசன்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

04 Jan, 00:25

1,738

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)

தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும், ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.

இந்தப் பதிவை Youtube இல் பார்க்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://youtu.be/OIWHSGMzVYk

1. அடிப்படைத் தேவை

ஒரு மனிதனோட அடிப்படைத் தேவையில் மிக முக்கியமான ஒன்று தூக்கம். படுத்ததுமே தூக்கம் வர்றதெல்லாம் ஒரு வரம்னு சொல்ற அளவுக்கு தற்போதைய உலகம் மாறிவிட்டது. ஏன்னா இப்ப பாதி பேரோட பெரிய பிரச்சனையே தூக்கமா தான் இருக்கு. தூக்கத்துக்கு பின்னால இருக்குற ரகசியத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கண்டிப்பா அத நீங்க ஃபாலோ பண்ணுவீங்க. உதாரணத்துக்கு நாள் ஃபுல்லா ரொம்ப டயர்டாகிற அளவிற்கு வேலை பார்த்தாலும் தூங்கி எழுந்ததுக்கு அப்புறம் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்குற மாதிரி நாம் பீல் பண்ணுவோம். டயர்டா இருந்தா நமக்கு ஆட்டோமேட்டிக்கா நமக்கு தூக்கம் நல்லா வரும். தூங்கி எந்திரிச்சா ஒரு புது உற்சாகம் கிடைக்குது. இதுக்கு பின்னால இருக்குற அறிவியலைப் பத்தி கண்டிப்பா நாம தெரிஞ்சுக்கணும். அப்ப தான் நம்ம உடலும் மனசும் தூங்குறப்ப என்ன மாதிரி நிலைக்கு போகுதுங்கறத புரிஞ்சுக்க முடியும். அப்படி நாம புரிஞ்சுக்கிறப்ப நம்மளுடைய நல்வாழ்க்கைக்கும் செயல்பாட்டிற்கும் தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்வுபூர்வமா உணர முடியும்.

உங்க தூக்கத்தோட தரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கு. நிலையான தூக்க அட்டவனையை உருவாக்குவதில் ஆரம்பித்து இருந்து உங்க வாழ்க்கையில் அன்றாட வழக்கமா கொண்டு வர வரைக்கும் உங்க அன்றாட வாழ்க்கையில ஈஸியா நுழையக்கூடிய சில உதவி குறிப்ப இப்ப நாம பார்க்கலாம்.

முதல்ல தூங்குறதுக்கு தகுந்த சூழலை உருவாக்கணும். சில பேருக்கு கொஞ்சம் சத்தம் கேட்டா கூட தூக்கமே வராது. சில பேருக்கு வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது. இன்னும் சில பேருக்கு இருட்டா இருந்தா தூக்கம் வராது. அதனால முதல்ல உங்களுக்கு என்ன மாதிரியான இடம் இருந்தா தூங்க முடியும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கனும். அப்பத்தான் உங்க தூக்கத்தை கெடுக்கிற விஷயங்கள எப்படி சமாளிக்கிறது என்பதை உங்களால் தெரிஞ்சுக்க முடியும். அதிலும் குறிப்பாக தூங்க போறதுக்கு முன்னாடி மனச எப்படி லேசா வச்சிக்கிறது அப்படின்னு தெரிஞ்சிக்க முடியும். ஏன்னா சும்மா கண்ண மூடிட்டு படுத்து இருந்தா மட்டும் அது தூங்குறதோட சேராது இல்லையா? ரிலாக்ஸா இருக்குறப்ப மட்டும் தான் நம்மளால நிம்மதியா தூங்க முடியும்.

அடுத்து மனசு ரிலாக்ஸா இருக்குறப்ப உங்க உடம்பும் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் புத்துணர்ச்சியா இருக்குறத தாண்டி நல்லா ரெஸ்ட் எடுக்கிறப்ப நம்ம மனசும் உடம்பும் ஆரோக்கியமாக பீல் பண்ணும். குறிப்பா நம்ம அறிவாற்றல் சிறப்பா இருக்கும். அதாவது தெளிவா யோசிக்க முடியும். ரொம்ப தெளிவா பேச முடியும். தூக்கம் இல்லாதப்ப உங்களோட நினைவாற்றல் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கும். அதுவே நல்ல தூக்கம் உங்க நினைவாற்றலை பலப்படுத்தும். உங்களுடைய கற்பனை திறனையும் அதிகப்படுத்தலாம். நம்ம மனச கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா நம்ம வாழ்க்கையில பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில தப்பான முடிவுகள நாம எடுத்துவிடுகிறோம் இல்லையா? இது எல்லாத்துக்கும் கூட தூக்கம் ஒரு காரணமா இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதுக்கும் தூக்கம் முக்கியமான காரணம்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

04 Jan, 00:24

1,577

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)

1. அடிப்படைத் தேவை

தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும், ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.

இந்தப் பதிவை Youtube இல் பார்க்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்

https://youtu.be/OIWHSGMzVYk
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

28 Dec, 03:16

2,050

ஒருவருக்குத் தோட்டத்தில் வேலை செய்யும்பொழுது பாம்பு கடித்து விட்டது. அவர் அதைப் பார்க்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் காலைப் பார்த்து, "பாம்பு கடித்தது போல் இருக்கிறதே" என்று கேட்டார். அதைப் பார்த்தவுடன் அவரும், 'ஆமாம்! இது பாம்பு கடித்த தடயம் போல் இருக்கிறதே' என்று நினைத்து, உடனே மயங்கிக் கீழே விழுந்து இறந்து விட்டார்! இது போல நிறையக் கதைகள் உள்ளன. பாம்பு கடித்த விஷம் அவரைக் கொல்லவில்லை. பாம்பு கடித்து விட்டது என்று அவருக்கு எப்பொழுது புரிந்ததோ அவர் மனம் பயத்தை உண்டு செய்து, பயம் சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீரகம் வேலையை நிறுத்தியதும் உயிர் பிரிந்து விட்டது.

எந்த விஷப்பூச்சி கடித்தாலும் நம் உடம்பிற்கே அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது நாக்கு எந்தச் சுவையைக் கேட்கிறதோ அதை உடனே தாராளமாகக் கொடுப்பதும், அதன் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நம்புவதும்தான்.

அதற்காகப் பாம்பு கடித்தவுடன் வேப்பிலையும், பாகற்காயும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டாம்! இது ஒரு தற்காப்பு வைத்தியம் மட்டுமே! மனதில் தீர்க்கமான துணிச்சலுடன் கசப்பைச் சாப்பிட்டால் கண்டிப்பாகப் பாம்பு விஷத்தை முறியடிக்கலாம். இருந்தாலும், பாம்பு கடித்தால் பாகற்காயைச் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கும் செல்லுங்கள்! ஏனென்றால், சில பாம்புகளின் விஷம் இந்தக் கசப்புக்கும் மீறி வேலை செய்ய வாய்ப்புள்ளது.

கோவில்களில் திருவிழாவின்போது முதுகில் கொக்கி போட்டுத் தேரை இழுப்பது, வாயில் அலகு குத்துவது, நாக்கில் அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது போன்றவற்றைச் செய்பவர்கள் முழு எலுமிச்சம்பழத்தை வாயில் வைத்துச் சாப்பிடுவார்கள். வேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். ஏன் அவ்வாறு சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் உடலுக்குக் காயம் ஏற்படும்பொழுது அந்த உறுப்புகளிலுள்ள செல்கள் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்பொழுது உடலில் நெருப்பு சக்தி தீர்ந்து போகும். நெருப்புச் சக்தி மீண்டும் நம் உடலுக்குத் தேவைப்படும் என்பதால் நாக்கு கசப்பைக் கேட்கிறது. எனவே அவர்கள் கசப்பான பொருட்களை மென்று சாப்பிடும்பொழுது அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

அதே நபர்கள் அடுத்த நாள் வீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது வேப்பிலையைக் கொடுத்துப் பாருங்கள். அவருக்கு அது கசக்கும்!

எனவே, கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொடர்புகளைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே உங்கள் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருந்துவர்கள்தான் ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து காலத்துக்கும் மருந்து, மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

பாகற்காய்,
சுண்டக்காய்,
கத்தரிக்காய்,
வெந்தயம்,
பூண்டு,
எள்ளு,
வேப்பம்பூ,
ஓமம்
போன்றவற்றில் இந்த கசப்புச் சுவை மிகுதியாய் உள்ளது. தேங்காய் மற்றும் தேன் இவற்றை நம் உடல் கசப்பு சுவையாக எடுத்துக்கொள்ளும்.

பாக்கு,
வாழைப்பூ,
வாழைக்காய்,
நெல்லிக்காய்,
மாதுளை,
மாவடு,
மஞ்சள்,
அவரை,
அத்திக்காய்
போன்ற காய் வகைகளில் துவர்ப்புச் சுவை மிகுதியாய் உள்ளது.

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

28 Dec, 03:15

1,415

சுவை மருத்துவம்

5. கசப்பு, துவர்ப்பு சிகிச்சை

நன்றி - பாஸ்கர்


'கசப்பு, துவர்ப்பு சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

http://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_17.html

பாம்பு மட்டுமில்லை, எந்த விஷப்பூச்சி கடித்தாலும் முதலில் நாம், நம் உடல் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்! அப்பொழுதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுக்கள் அவற்றை நெருப்புப் பிராணனாக (சக்தி) மாற்றி உடல் முழுவதும் அனுப்பி வைக்கின்றன.

நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இதயம், இதயத்தின் மேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு ஆகியவை. இதற்கான வெளி உறுப்பு நாக்கு. இதற்கான உணர்ச்சி மகிழ்ச்சி.

நம்மில் பலருக்குத் திடீரென மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே நெஞ்சு படபடக்கும்; வியர்வை வரும். இது எதனால் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி உடலிலுள்ள நெருப்பு சக்தியைச் சாப்பிட்டு விடுகிறது. உடலில் நெருப்பு சக்தி குறைவதால் இதயத்திற்குத் தேவையான சக்தி கிடைக்காமல் அது படபடக்க ஆரம்பிக்கிறது.

திடீரென நம்மை யாராவது மேடையில் ஏறிப் பேசச் சொன்னாலோ, அனைவர் மத்தியிலும் நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும்பொழுதோ, பள்ளிகளில் கல்லூரிகளில் திடீரென மேடை ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ இந்தப் படபடப்பு ஏற்படும். ஆக, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

நாக்கும் இதயமும் ஒரே வடிவத்தில் இருக்கும். இதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும்.

இக்காலத்தில் நம்மில் பலருக்குத் துணிவு கிடையாது. நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம். பல விஷயங்களில் நாம் துணிந்து எந்த வேலையும் செய்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்ளாததுதான். கசப்பான பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் துணிவுடையவர்களாக இருப்பதைப் பாருங்கள்!

இன்றைய குழந்தைகள் கோழைத்தனமாக இருக்கிறார்கள். யாருக்கும் துணிச்சல் இல்லை. காரணம், குழந்தைகள் யாரும் கசப்பு, துவர்ப்புச் சாப்பிடுவதே கிடையாது.

எனவே, நமது நாக்கு எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான, துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் முலமாக இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். துணிவும் பெற முடியும்.

பாம்பு கடித்தால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவும். உடலிலுள்ள அனைத்து செல்களும் பாம்பு விஷத்தை வெளியேற்றுவதற்காக இதயத்திடம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் சொல்லும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்பொழுது உடலிலுள்ள நெருப்பு சக்தி குறையும். எப்பொழுது நெருப்பு சக்தி குறைகிறதோ நாக்கு என்ற மருத்துவர் கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளைக் கேட்பார்.

பாம்பு கடித்தால் கொடுக்கும் மூலிகைகளின் பெயர் சிறியா நங்கை, பெரியா நங்கை. இந்த மூலிகைகள் மிகவும் கசப்பாக இருக்கும். அவற்றில் மருந்து இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றிலுள்ள கசப்புச் சுவையே நாக்குக்கு நெருப்பு சக்தி கொடுத்து, அதை இதயத்திற்குக் கடத்துவதன் மூலமாக இதயத்தை நன்றாக வேலை செய்ய வைத்து, உடலிலுள்ள விஷத்தை வெளியேற்றப் போதுமானவை.

எனவே, யாருக்காவது பாம்பு கடித்தால், சிறியாநங்கை, பெரியாநங்கை போன்ற மூலிகைகளோ இன்ன பிற விஷ முறிவு மருந்துகளோ அருகில் இல்லாவிட்டால், பாகற்காய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுங்கள். பாம்பின் விஷம் உடலில் இருக்கும்பொழுது பாகற்காய் சாப்பிட்டால் கசக்காது. பாகற்காயும், வேப்பிலையையும் நிறையச் சாப்பிட வேண்டும். எப்பொழுது நாக்கில் கசப்புத் தெரிகிறதோ, மகிழுங்கள்; உடலில் உள்ள விஷம் வெளியேறி விட்டது என்று.

நாக்குக்குத் தெரியும் எப்பொழுது எந்தச் சுவை வேண்டுமென்று. விஷம் வெளியேறிய பிறகு கசப்புச் சுவையின் தேவை தீர்ந்து விடவே பாகற்காய் கசக்க ஆரம்பிக்கிறது. எனவே, பாம்பு கடித்தால் முதலில் நமக்குத் தேவைப்படுவது தைரியம். இரண்டாவது, கசப்பு.

பாம்பு விஷத்தால் இறப்பவர்களை விட, பாம்பு கடித்துவிட்டதே என்கிற பயத்தால் இறப்பவர்களே உலகில் அதிகம். பாம்பு கடித்து விட்டது என்ற எண்ணம் மனதில் பயத்தை ஏற்படுத்தி, பயம் சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீரகம் வேலையை நிறுத்தி விட்டால், அதன் பின் விஷத்தை வெளியேற்ற முடியாது. ஏனென்றால், பாம்பின் விஷத்தை வெளியேற்றுவது சிறுநீரகம்.

எனவே, பாம்பு மட்டுமில்லை, எந்த விஷப்பூச்சி கடித்தாலும் முதலில் நாம், நம் உடல் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்! அப்பொழுதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

28 Dec, 03:15

1,412

நம்மில் பலருக்குத் துணிவு கிடையாது. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்ளாததுதான். கசப்பான பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் துணிவுடையவர்களாக இருப்பார்கள்! எனவே, நமது நாக்கு எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான, துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் முலமாக இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். துணிவும் பெற முடியும்.

'கசப்பு, துவர்ப்பு சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

http://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_17.html
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

27 Dec, 02:17

1,387

சுவை மருத்துவம்

4. புளிப்புச் சிகிச்சை

நன்றி - பாஸ்கர்


'புளிப்புச் சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

http://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_98.html

புளிப்பு என்கிற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அந்தச் சுவையை 'ஆகாயம்' எனும் பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். இந்த சக்திக்குக் கல்லீரல், கண்கள், பித்தப்பை - இவை மூன்றும் வேலை செய்யும்.

கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்புச் சுவைக்கும் கூட சம்பந்தம் உண்டு.

புளியம்பழத்தை நாக்கில் வைத்தால் நம் கண்கள் கூசுகின்றன. கண்களை மூடுகிறோம். ஏன்? அதில் உள்ள புளிப்புச் சுவை நாக்கில் பட்டு ஆகாய சக்தியாக மாறி உடல் முழுவதும் பரவுகிறது. ஆகாய சக்தியால் வேலை செய்யும் கண்கள் அதிக சக்தி கிடைப்பதால் கூசுகின்றன.

சாராயம் போன்ற போதைப் பொருட்களைச் சாப்பிட்டவருக்கு அடுத்த நாள் காலை கண்கள் சிவப்பாக இருக்கும். ஏன்? ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள் இரத்தத்தில் கலந்தவுடன் அந்தக் கெட்ட பொருட்களைப் பிரிப்பதற்காகக் கல்லீரல் இரவு முழுவதும் அதிகமாக வேலை செய்திருக்கும். நச்சுப் பொருட்களை வெளியேற்றக் கல்லீரல் உடலில் உள்ள ஆகாய சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கும். இதனால், உடலில் ஆகாய சக்தி குறைந்து போயிருக்கும்.

காலையில் கண்கள் சிவந்திருக்கிறது என்றால் அது கண் சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. உடம்பில் ஆகாய சக்தி குறைவு என்பதே உண்மை.

கோபம் வந்தால் கண்கள் சிவப்பாகும். காரணம், கோபத்துக்கும் ஆகாய சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதால், அந்த உணர்ச்சி மனதில் எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது உடலில் உள்ள ஆகாய சக்தி முழுவதையும் சாப்பிட்டு விடும். இப்படி, உடலில் ஆகாய சக்தி குறைந்து விடுவதால் கண்கள் சிவந்து விடுகின்றன.

மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் கெட்டுப் போய்விடும் என்று கூறுவார்கள். கல்லீரல் கெட்டுப் போய்விட்டால் கோபம் அதிகமாக வரும். கோபம் அதிகமாக வந்தால் கல்லீரல் கெட்டுப் போகும். இப்படி புளிப்புக்கும் ஆகாயத்திற்கும், கல்லீரலுக்கும் பித்தப்பைக்கும், கண்ணுக்கும் கோபத்திற்கும் தொடர்பு உண்டு. இப்படித் தொடர்பு உண்டு என்று அறிந்த மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகளில் உள்ள நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கண்ணில் நோய் என்று ஒரு மருத்துவரைச் சந்தித்தால் அவர் கண்ணில் மட்டுமே ஆராய்ச்சி செய்கிறார், ஸ்கேன் செய்கிறார். அங்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இது சரியான சிகிச்சை அல்ல! ஒருவேளை அந்த நோயாளிக்குக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புளிப்பு அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிட்டிருக்கலாம். பித்தப்பையில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அல்லது, அடிக்கடி கோபப்படும் நபராக இருக்கலாம். அல்லது, மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படிப் பல வகையான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே நம் உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? குழந்தை உண்டாகும் முன்பு சாப்பிடுவதில்லை; குழந்தை பெற்ற பிறகும் சாப்பிடுவதில்லை. அது என்ன, கர்ப்ப காலத்தில் மட்டும் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால், கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தையை முழுக் குழந்தையாக மாற்றுவது கல்லீரலின் முக்கியமான வேலை. எப்பொழுது கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறதோ அப்பொழுது மருந்து, சத்துபானம் போன்றவற்றை நம் உடம்பு கேட்காது. கல்லீரலுக்கு அதிக வேலை ஏற்பட்டால் உடலில் ஆகாய சக்தி தீர்ந்து விடுவதால் நாக்கு என்ற மருத்துவர் நம்மிடம் புளிப்பு என்ற மருந்தைத்தான் கேட்பார். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் புளிப்பு கொடுக்காமல் இருந்தால் குழந்தைக்கு, குழந்தை வளாச்சிக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, நாக்குதான் மருத்துவர், சுவைதான் மருந்து! எனவே, எப்பொழுது புளிப்பு சாப்பிட வேண்டும் என்று நாக்கு கேட்கிறதோ அப்பொழுது அதைச் சாப்பிடுவதன் மூலம் ஆகாய சக்தியை என்றுமே சீராக வைத்துக் கொள்ள முடியும். அதைச் சார்ந்த கண், கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளையும் நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியும்!

எலுமிச்சை,
புளிச்ச கீரை,
இட்லி,
தோசை,
அரிசி,
தக்காளி,
புளி,
மாங்காய்,
தயிர்,
மோர்,
நார்த்தங்காய்

போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் உள்ளது.

நன்றி - பாஸ்கர்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

27 Dec, 02:17

1,338

கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்புச் சுவைக்கும் கூட சம்பந்தம் உண்டு!

'புளிப்புச் சிகிச்சை' பதிவை இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

http://reghahealthcare.blogspot.com/2014/12/blog-post_98.html