தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும், ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.
இந்தப் பதிவை Youtube இல் பார்க்க விரும்பினால் இந்த👇 முகவரிக்குச் செல்லுங்கள்
https://youtu.be/CO59GARDEl4
2. தூக்கத்தின் தரம்
தூக்கத்தோட தரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் தூங்குவதுக்கு ஏற்ற மாதிரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று இப்போது பார்க்கலாம். நம் மனது எப்போதுமே நாம் பார்ப்பதை, நம்மை சுற்றி இருக்குற விஷயங்களை வைத்துதான் முதலில் யோசிக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ரொம்ப ஆரோக்கியமாக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும்போது ஒருவித பயம் தானாகவே உருவாகும். அது பயம்ன்னு கிடையாது அங்கு இருக்கிற சூழல் உங்கள் மனதை கையாள ஆரம்பிக்கும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கூடவே இருக்கும் ஒருவர் சோகமாக இருந்தாரென்றால் தானாகவே நீங்களும் சோகமாக மாறிடுவிடுவீர்கள். அப்படித்தான் நம் பெட்ரூமும், தூங்குவதற்கு ஒரு நல்ல சூழலில் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.
பெட்ரூமில் ஜன்னல்
குறிப்பாக பெட்ரூமில் ஜன்னல் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்று. ஏனென்றால் வெளிக்காற்று உள்ளே வரும்போதுதான் உள்ள இருக்கும் இறுக்கம் கொஞ்சம் குறையும். முடிந்த அளவிக்கு உங்கள் பெட்ரூமை உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு பிடித்த கலரில் பெயின்ட் பண்ணுறதுல ஆரம்பித்து மனதிற்கு அமைதியை கொடுக்கின்ற வார்த்தைகளை, படங்களை அங்கு வைக்கலாம். குறிப்பாக உங்கள் மனதை தொந்தரவு செய்கிற எந்தவொரு விஷயத்தையும் உங்கள் பெட்ரூமில் வைக்காதீர்கள். எவ்வளவு மன அழுத்தத்தோடு உங்கள் வீட்டிற்கு வந்தாலும் பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் உங்கள் மனது ஓய்வாக உணரவேண்டும். அதுக்கு பெட்ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் கண்ட இடத்தில் தூக்கி போடக்கூடாது. எது எது எந்த இடத்தில் இருக்குமோ அது அது அந்த இடத்தில் வைக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மெத்தை தலையணை
இரவு நன்றாக தூங்க வேண்டுமென்றால் உங்கள் மெத்தை தலையணை எல்லாம் வசதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உடம்பிக்கு என்ன தேவையென்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னும் சில பேருக்கு தரையில் படுத்தால் தான் தூக்கமே வரும். சில பேருக்கு மெத்தை எல்லாம் மென்மையானதாக சுத்தமாக இருக்க வேண்டும். சூடாக இருக்க கூடாது. இப்படி எல்லாம் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நம் தலையணையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் ரொம்ப பெரிய தலையணையை பயன்படுத்தினால் சிலருக்கு கழுத்து வலி ஏற்படும். சிலருக்கு முதுகு வலி ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. அதனால் நம் உடலிற்கு தேவையான ஒரு படுக்கை அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சுத்தம்
அடுத்து சுத்தம். சுத்தம்கறது ஒரு முக்கியமான விஷயம். சுத்தம் அப்படிங்கிறதிலேயே வெளிச்சம் காற்றோட்டம் வெப்பநிலை இவை எல்லாமே வந்துவிடும். சிலர் வீட்டை குப்பை மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் அதிலேயே படுத்தும் பழகி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களது தூக்கத்தை ரொம்ப தொந்தரவு செய்யும். தூங்குறதால அவர்களுக்கு அது தெரியாது அவ்வளவுதான். மற்றபடி சுத்தமில்லாத இடத்தில் தூங்குகிறபோது நாம் சுத்தம் இல்லாத காற்றை சுவாசிக்கிற நிலைக்கு தள்ளப்படுவோம். என்னதான் தூங்கிட்டு இருந்தாலும் அங்க நாம் சுவாசித்து கொண்டுதானே இருப்போம். அதனால் பெட்ரூம் சுத்தமாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.
இரைச்சல்
அடுத்து இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கனும். அதாவது டிவி பாத்துகிட்டே தூங்குறது பாட்டு கேட்டுட்டு தூங்குறது இதெல்லாம் சில பேருக்கு பழக்கமா இருக்கும். இனிமையான இசையை கேட்டுக்கொண்டே தூங்குவது நல்ல விஷயம் தான் ஆனால் டிவி பாத்துக்கொண்டே தூங்குவது ரொம்ப தப்பு. நீங்கள் தூங்கினாலும் வெளியில் இருந்து கேட்கிற சதம் உங்கள் மூளைய விழிப்புடனே வைத்திருக்கும். அதனால் உங்கள் மூளைக்கு போதிய ஓய்வெடுப்பதற்கான நேரம் கிடைக்காமல் போய்விடும். தேவையில்லாத சிந்தனை, கனவு இதெல்லாம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
வெப்பநிலை
அடுத்தது ரூமோட வெப்பநிலை நார்மலாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ரொம்ப குளிரா இருந்தாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கும். ரொம்ப வெப்பமா இருந்தாலும் நம்ம தூக்கத்தை பாதிக்கும்.