"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

@ourbodyitselfadoctorvideos


உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள நான் பகிர்ந்துகொண்ட வீடியோ பதிவுகளை இந்த சேனலில் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

01 Oct, 02:27


சிறு சிறு பணிகளைக் கற்றுக் கொடுப்பது குழந்தைகள் வலுவாகவும் நம்பிக்கையுடனும் வளர உதவுகிறது. சீக்கிரம் தொடங்குங்கள், அவர்கள் பிரகாசிப்பதைப் பாருங்கள்!

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

18 Sep, 06:21


ஆபரேஷன் என்ற பெயரில் நடந்த சோகம்!

27.05.2012-ல் நடந்த ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் ஒரு அப்பாவையும் மகளையும் அவர் பேட்டி காண்பார். அன்பு மனைவியை ஆபரேஷன் என்ற பெயரில் நடந்த கொலைக்குப் பலி கொடுத்த குடும்பம் அது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி அவர் மனைவியை ‘அட்மிட்’ செய்து ஆபரேஷனுக்கு முதல் நாள், உங்கள் மனைவிக்கு பாங்க்ரியாஸைக்கூட (கணையம்) மாற்றிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்! ஏனென்றால், அவர்களிடம் ஒரு எக்ஸ்ட்ரா கணையம் இருந்திருக்கிறது!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளால் யாருடைய வாழ்க்கையையும் மாற்றிவிட முடியாது என்பதும், அவ்வாறு மாற்று உறுப்பு பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ முடிந்ததாக சரித்திரம் கிடையாது என்பதே எதார்த்தம்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

05 Sep, 01:12


பேசின் டெஸ்ட் அல்லது சிங்க் டெஸ்ட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

அது என்ன பேசின் டெஸ்ட்? ‘டெஸ்ட்’ என்ற பெயர் இருந்தாலும் அது ஒரு ‘டெஸ்ட்’டே அல்ல. ஆமிர்கான் சொல்வதுபோல, உங்களது ரத்தம் அல்லது சிறுநீர் இவற்றைப் பரிசோதனைக்காக எடுத்து வாங்கி, அப்படியே எடுத்துக் கொண்டுபோய் கைகழுவும் வாஷ் பேசினில் கொட்டிவிடுவார்கள்! அல்லது ‘சிங்க்’கில் கொட்டிவிடுவார்கள்! ஆனால், எல்லாம் நார்மலாக இருப்பதாக அறிக்கை கொடுப்பார்கள்! ஏனெனில், அந்த நோயாளியை ஏற்கெனவே பரிசோதித்த மருத்துவர், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டுதான் அவரை ஏகப்பட்ட ‘டெஸ்ட்’டுகள் எடுத்துவரும்படி அனுப்புவார்! இதுதான் ‘பேசின் டெஸ்ட்’ அல்லது ‘சிங்க் டெஸ்ட்’.

இதுபற்றி 27.05.2012-ல் நடந்த ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியிலும் சொல்லப்பட்டது. மேலும் பேசின் டெஸ்ட் அல்லது சிங்க் டெஸ்ட், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வுக்கூடங்களிடம் 40 - 50% கமிசன் கேட்கும் மருத்துவர்கள்,... போன்ற தகவல்களைக் காண இந்த 👆 காணொளியைப் பாருங்கள்.

நன்றி - நாகூர் ரூமி

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

26 Aug, 07:39


உள்ளூர் / வெளிநாட்டு குளிர்பானங்களை உடலிற்கு நல்லது என்று அடிக்கடி வாங்கி குடிப்பவர்கள் கவனத்திற்கு!

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

05 Jul, 08:53


உணவை உடல் எப்படி செரிக்கிறது? How our Digestive System Works?

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

07 Jun, 01:23


குழந்தைகள் சாப்பிடுவதற்காக கையில் செல்போன் கொடுக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு!

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

28 May, 03:17


திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதை முயற்சித்துப் பாருங்கள்!

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

22 May, 01:19


Relief for leg cramps

உங்களுக்கு இரவு தூங்கி எழும்போது தசை பிடிப்பு, கால் இலுப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறதென்றால் இந்த முறையை பின்பற்றுங்கள்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

03 Apr, 14:39


குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உணர அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த எளிய கப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையைப் பிடித்துக் கொள்வதன் மூலம், கார்டிசோல் (அழுத்த ஹார்மோன்கள்) மற்றும் பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவுவீர்கள். இது அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உணர உதவும் மென்மையான முறையாகும்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

27 Mar, 03:19


நம் உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகள் குணமாக சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

22 Mar, 11:37


டீக்கு மாற்றாக இந்த பானத்தை அருந்தலாம்!

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

02 Feb, 03:27


காரில் பயனிக்கும்போதே யாரது உதவியுமின்றி பிறந்த குழந்தை!

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

27 Dec, 02:37


திருக்குறள் கூறும் மருத்துவம்

மருந்து அதிகாரத்தின் விளக்கம்


மருந்து என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மருந்தை பற்றி எதுவுமே கூறவில்லையே என்று சிலருக்கு சந்தேகம் உண்டாகலாம். திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினால் எந்த நோயும் அண்டாது என்பதனால் தான், அவர் எந்த மருத்துவமும் கூறவில்லை. ஒருவேளை நோய்கள் தோன்றினால் அதை எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறியுள்ளார்.

நோய் கண்டவர்களும் பசி உண்டாக்கும் வரையில் உணவின்றி பட்டினியாக இருந்து அல்லது உணவை குறைத்துக் கொண்டு, இரவில் நன்றாக உறங்கினால், எல்லா நோய்களும் தானாக குணமாகும். மருத்துவத்தின் பெயரால் வருந்திச் சேர்த்த பணத்தை வீணாக்காமல், உடலையும் மனதையும் நோகடிக்காமல், வாழ்க்கை முறைகளை மாற்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

“வாழ்க வளமுடன்”

நன்றி - ராஜா முகமது காசிம்

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

26 Dec, 03:30


திருக்குறள் கூறும் மருத்துவம் - 10

குறள் எண் 950- நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்?


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,
அப்பால் நாற்கூற்றே மருந்து.

குறளின் உரை

நோயாளி, அந்த நோயை குணபடுத்தக் கூடிய மருத்துவர், நோயாளியின் நோய்க்குத் தக்க தரமான மருந்து, நோயாளியின் அருகில் இருந்து பரிவுடன் கவனித்துக் கொள்பவர், இவை நான்கும் சேறுவதே முறையான மருத்துவமாகும்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

24 Dec, 11:44


திருக்குறள் கூறும் மருத்துவம் - 09

குறள் எண் 949 - மருத்துவம் செய்யவேண்டிய வழிமுறைகள்?


உற்றான் அளவும் பிணியளவும் காலமும்,
கற்றான் கருதிச் செயல்.

குறளின் உரை

மருத்துவம் பயின்றவர்கள் நோயை முறையாக குணப்படுத்த நோய்வாய்ப்பட்டவரின் உடல் நிலையை, நோயின் தன்மையை, நோயின் அளவை, நோயின் வீரியத்தை அறிந்து அந்த நோயை குணப்படுத்த தகுந்த நேரம் காலம் பார்த்து முறையாக மருத்துவம் செய்ய வேண்டும்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

23 Dec, 02:49


திருக்குறள் கூறும் மருத்துவம் - 08

குறள் எண் 948 - நோய்களை குணப்படுத்துவது எப்படி?


நோய்நாடி நோய்முதல் நாடி, அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறளின் உரை

ஒருவரின் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தையும் அறிந்து. அந்த மருத்துவத்தை பிழையில்லாமல் முறையாக செய்ய வேண்டும்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

22 Dec, 02:20


திருக்குறள் கூறும் மருத்துவம் - 07

குறள் எண் 947- உணவை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?


தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்,
நோயள வின்றிப் படும்.

குறளின் உரை

தன் உடலுக்கு எந்த உணவு தேவை, எந்த அளவு தேவை என்பதை அறியாமல். அளவுக்கு அதிகமாக உண்பவருக்கு அளவில்லா நோய்கள் உண்டாகும்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

19 Dec, 06:35


திருக்குறள் கூறும் மருத்துவம் - 06

குறள் எண் 946 - எவருக்கு அதிகபடியான நோய்கள் உண்டாகும்?


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்,
கழிபேர் இரையான்கண் நோய்.

குறளின் உரை

உணவை பசியின் அளவுக்கு குறைவாக உண்பவனிடத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்பதைப் போலவே, பசியின் அளவுக்கும் மிகுதியாக உண்பவனிடத்தில் நோய்கள் நிலைத்து நிற்கும்.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

17 Dec, 04:17


திருக்குறள் கூறும் மருத்துவம் - 05

குறள் எண் 945 - எவ்வாறான உணவுகளை உண்ணக்கூடாது?


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்,
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

குறளின் உரை

வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை விளக்கி. உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டால் இந்த உடலில் வாழும் உயிர் நோய்களினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது.

"நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" வீடியோ பதிவுகள்

14 Dec, 02:27


திருக்குறள் கூறும் மருத்துவம் - 04

குறள் எண் 944 - உணவை எவ்வாறு உண்ண வேண்டும்?


அற்றது அறிந்து கடைப்பிடித்து, மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

குறளின் உரை

ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு ஜீரணமாகி, நன்றாக பசிக்கும்போது உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவுகளை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும்.

3,814

subscribers

39

photos

155

videos