Mr.GK Official

@mrgkgroup


YouTube.com/MrGkTamil

Mr.GK Official

19 Oct, 17:18


https://youtu.be/cTqhvPYpA_M

Mr.GK Official

19 Oct, 10:38


https://youtu.be/310f3E7K2iM

திக்.. திக்.. நொடிகள்.. 🤯 ராக்கெட்டை லாவகமாக Catch பிடித்த SpaceX | Mr.GK

Mr.GK Official

15 Oct, 14:49


https://youtu.be/ddFMaDfQRig

🔴 RED Alert vs 🟠Orange Alert ⛈️என்ன வித்தியாசம்? 😱 என்ன செய்ய வேண்டும்? | Mr.GK

Mr.GK Official

15 Oct, 06:02


COMET  1 

அடுத்த 10 ஆண்டுகளின் மிக பிரகாசமான C/2023 A3 என்கிற வால் நட்சத்திரம் (comet) இந்த ஆண்டு October 12 ஆம் தேதி முதல் தெரிய ஆரம்பித்திருக்கிறது. 

மழை, மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்குமெனில் October 20 வரை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு (6:45 pm to 7pm) இந்தியாவில் எங்கிருப்பவர்களாலும் இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களாலேயே கண்டு களிக்கலாம்.

COMET 2

Oct 28 லிருந்து  அடுத்த 10 நாட்களுக்கு,  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட C/2024 S1 எனும் வால் நட்சத்திரம் (comet) சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெள்ளிக்கு (Venus) அருகில் பிரகாசமாக காணப்படும்.

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது அளவில் -5 முதல் -7 magnitude இருப்பதால் வெள்ளியை  (Venus 4.4 magnitude)  விட பிரகாசமாக காட்சியளிக்கும்.

இந்த வால் நட்சத்திரங்களை காண C/2023 A3 மற்றும் C/2024 S1 என Sky Tonight App இல் டைப் செய்து பார்க்கலாம்.

Mr.GK Official

13 Oct, 02:17


https://youtu.be/fTey8K78fpU

Mr.GK Official

12 Oct, 03:00


https://youtu.be/kISkpqagrkg?si=qp07W1EvqX4hqTJV

Here is my new channel for Movies 🍿

Mr.GK Official

10 Oct, 07:22


https://youtu.be/nTp7lp9t2tc

🤯 கடவுளின் செயலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! 😱 Nobel Prize 2024 | Mr.GK

Mr.GK Official

08 Oct, 03:10


அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology Of Money புத்தகத்தையும் இளைஞர்கள் எல்லோரும் வாங்கிப் படியுங்க என்று சொல்லியிருப்பார். நீங்க இதுவரை புத்தகமே படிக்காதவரா இருந்தாக்கூட இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க. இதுக்கு மேலேயும் புத்தகங்கள் படியுங்க என்று சொல்லியிருப்பார்.

மார்கன் ஹௌஸ்ஸல் எழுதிய இந்தப் புத்தகம், பணம்சார் உளவியல் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்கு முன்னர் பலரும் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருந்தாலும், அரவிந்த்சாமி சொன்னபிறகு, இப்பொழுது பலரும் தேடிப் படிக்கும் புத்தகமாக மாறிவிட்டது.

"ஒரு நடிகர் சொன்னதும் இந்தப் புத்தகத்துக்கு ஏன் இவ்வளவு கேள்வி? படிச்சு பணக்காரரா ஆகவா போறீங்க? தீவிர இலக்கியங்கள் படியுங்க. மனித மனங்களைப் படியுங்க" என்றெல்லாம் இலக்கியவாதிகள் என்று தம்மை நினைப்பவர்கள் இளைஞர்களுக்குச் சொல்கிறார்கள்.

உண்மையில் தீவிர இலக்கியங்கள் *பெரும்பாலும் உங்களுக்கு Rational thinking, அதாவது எதையும் பகுத்தறிந்து பாருங்கள், எதையும் வருமுன் முன்னோக்கிச் சிந்தியுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்காது. அது வாழ்வியல். அவை பெரும்பாலும் உணர்வுகள் சார்ந்தவை. சிலது, அந்த மாதச் செலவையே சமாளிக்க முடியாதவர்களைப் பற்றியும், சிலது காதுகுத்தை பெருமையாக ஊர் மெச்ச செலவழித்துச் செய்யமுடியவில்லை என்று கலங்குபவர்களைப் பற்றியும், கடன் வாங்கி திருமணம் செய்துகொடுத்துவிட்டு வீட்டையும் நிலத்தையும் வித்து கடன் அடைப்பவர்களைப் பற்றியும், பிறர் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாழ்பவர்களைப் பற்றியும் பேசும்.

ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க பணம் குறித்து பகுத்தறிந்து சிந்திப்பது எப்படி என்று பேசுகிற புத்தகம். சிறுகச் சேர்க்கிறது என்னாகும்? Compounding effect பற்றி பேசுகிற புத்தகம். எப்பிடி சம்பாதிக்கிற பணத்துக்கு safety net போட்டு வெச்சுக்கிறது என்று பேசும் புத்தகம். Wealth என்றால் என்ன Rich என்றால் என்ன? Sustainable Financial Security னா என்ன என்றெல்லாம் பேசும் புத்தகம்.

இந்தப் புத்தகம் பணம் குறித்த உங்களின் உளவியலைப் பேசுகிறது. எல்லா விதமான புத்தகங்களையும் படிப்பது நல்லதொரு பார்வையைக் கொடுக்கும். படியுங்கள். நல்ல இலக்கியங்களையும் படியுங்கள். இதையும் படியுங்கள். உங்களை வாசிப்புக்குள் இந்தப் புத்தகம் கூட்டிவருகிறது என்றால் வாருங்கள். Peter Lynch ஐ படியுங்கள். பெஞ்சமின் கிரஹாம் எழுதிய தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டரை படியுங்கள். விஞ்ஞானத்தைப் படியுங்கள். க. நா. சு, தி. ஜா, பத்மநாபன், பாரதியார், நகுலன் எல்லோரையும் படியுங்கள்.

இந்தப் பணம்சார் உளவியல் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டால் நாளையே பில்கேட்ஸ் என்றில்லை. ஆனால் சம்பாதிக்கிற பணத்தை, இருக்கிற பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காகவேனும் வாங்கிப் படியுங்கள்.

Rule No. 1 : Never lose money. Rule No. 2 : Never forget Rule No. 1. - Warren Buffett ❤️

#thepsychologyofmoney #பணம்சார்உளவியல்

Mr.GK Official

07 Oct, 11:36


https://youtube.com/shorts/uRZTrt8N0eQ?si=VXKm7eaQn_8guYoV